ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் -‌ கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 4

அன்றைய தினம் மூன்று காரில் மகாபலிபுரம் நோக்கி சென்றனர் ..தேவ் மற்றும் அருந்ததியினைத் தன்னுடனேயே காரில் அழைத்துச் சென்றான் சசிதரன். அவர்களுடன் ஹாசினியும் காரில் ஏறிக் கொண்டாள். அனிதாவும் ,தனுஷூன் காதலர்கள் என்பதால் அவர்கள் தனி காரிலும் மற்றவர்கள் இன்னொரு காரிலும் மகாபலிபுரம் நோக்கி பயணமானார்கள்.



அருந்ததிக்கு சொல்ல முடியாத அளவு சந்தோஷம் .அவள் காதலனுடன் முதல் முதல் பயணம் .அடிக்கடி அவனைப் பார்த்தபடியே தான் வந்தாள் அவள் .பின் இருக்கையில் ஹாசினி உடன் தான் அமர்ந்து வந்தாள் அருந்ததி .
ஹாசினியும் சசிதரனை தான் பார்த்துக் கொண்டே இருந்தாள். ஆனால் அவனோ கருமமே கண்ணாக கார் ஓட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்தினான்.


‌ மகாபலிபுரம் சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்லும் இடங்களில் ஒன்று ..அங்கு ஆயிரம் ஆண்டு பழமையான சிற்பங்களும் ,கற் கோயில்களும் உண்டு. ஆனால் அதில் சில கடலில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது ..ஒரு மணி நேரத்தில் மகாபலிபுரத்தை அடைந்து விட்டனர் அவர்கள். முதலில் அவர்கள் சென்றது கடற்கரை கோயில்..



அதில் வைத்து தனது காமராவினால் அனைவரையும் புகைப்படம் எடுத்து தள்ளி விட்டாள் அருந்ததி .அது அவளுக்குப் பிடித்தமான செயல் வேறு.சொல்லவும் வேண்டுமா ?தனித்தனியாகவும் மற்றும் குழுவாகவும் அந்த நண்பர்களை நிற்க வைத்து புகைப்படம் எடுத்தாள் அவள்.


அடுத்து கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து,பஞ்சபாண்டவர்கள் ரதம்,அர்ஜுன தபசு ,ராயகோபுரம்,கலங்கரை விளக்கம் என்று அனைத்து இடங்களுக்கும் சென்றனர். மதிய உணவையும் ஒரு உணவகத்தில் முடித்து விட்டு மாலை மங்கும் நேரம் மகாபலிபுரம் கடற்கரை நோக்கி சென்றனர்..


சூரியன் மறையும் நேரம் என்பதால் பார்க்கவே ரம்மியமாக இருந்தது அந்தக் கடற்கரை காட்சி. அங்கு இருக்கும் கடைகளில் தேவுடன் சென்று நொறுக்குத் தீனிகளை கை நிறைய வாங்கி குவித்த படி வந்து அனைவருக்கும் வழங்கினாள் அருந்ததி.



நன்றி சொல்லிய படி எல்லோரும் வாங்க ஹாசினி மட்டும் முகத்தை உம் என்று வைத்த படியே வாங்கினாள். அவளை யோசனையாக பார்த்தாலும் எதுவும் பேசாமல் தேவ் பக்கத்தில் போய் அமர்ந்து அவனுடன் கதையைளக்கத் தொடங்கி விட்டாள் அருந்ததி.



சிறு பிள்ளை போல் கைகளை ஆட்டி ஆட்டி அவள் பேசுவதை பார்த்த படி இருந்தான் சசிதரன் .
அவள் அருகில் தான் ஹாசினியும் அமர்ந்து இருந்தாள். அவளுக்கு உள்ளுக்குள் எறிந்தது அவனது பார்வை அருந்ததி மீது படிவதைக் கண்டு .இருந்தும் அமைதி காத்தாள் அவள்.. ஆனால் அதைக் கண்டு கொண்டான் சசிதரன். அவளைப் பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு தனது பார்வையை அருந்ததி பக்கமே செலுத்தினான் ..



நொறுக்குத் தீனி உண்டு முடித்தவள் தேவினை அழைத்துக் கொண்டு கடற்கரையில் விளையாட சென்று விட்டாள்.ஷியாம்
இடம் வந்து "அண்ணா ப்ளீஸ் ..என்னை விதவிதமா போட்டோ எடுங்க .."என்று தனது காமராவை அவனிடம் கொடுத்து விட்டு ஓடி விட்டாள். அவனும் அவள் தேவுடன் விளையாடுவது மற்றும் தனியே நிற்பது போல் நிறைய புகைப்படங்களை எடுத்தான்.



திரும்பி வந்து அவனிடம் இருந்த காமராவை வாங்கி சூரியன் மறையும் காட்சி முன் நிற்க வைத்து ஒவ்வொருவரையும் தனித்தனியாக புகைப்படம் எடுத்தாள். பிறகு அனிதா மற்றும் தனுஷினை ஜோடியாக நிற்க வைத்து எடுத்து விட்டு திரும்பி சசிதரனை பார்க்க அவனோ நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தான். அவளுக்கு தன்னுடன் சேர்ந்து அவனும் ஒரு போட்டோவில் இருக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும் எப்படி அவனிடம் கேட்கலாம் என யோசித்துக் கொண்டு இருக்கையிலேயே அவளிடம் வந்தாள் ஹாசினி.



என்னவென்று கேள்வியாக பார்க்கையில் "அருந்ததி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு ப்ளீஸ்.. சசி கூட வச்சு என்னை ஒரு போட்டோ எடுப்பியா ?"என்றாள் அவள். அவனுடன் மட்டுமா எடுக்க வேண்டும் என்ற கேள்வி வாய் வரை வந்தாலும் அவளால் கேட்க முடியாத சூழல். சசிதரன் அவளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாட்டான் என்று மனதில் உடனே கணக்கு போட்டவள் சரி என்று தலை அசைத்தாள்.


ஹாசினி அவனுடன் சென்று பேசி எப்படி சம்மதம் வாங்கினாளோ தெரியவில்லை.. இருவரும் ஜோடியாக நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.
வாய்க்குள் அவர்களை திட்டிக் கொண்டாலும் வெளியில் எதுவும் சொல்லாமல் புகைப்படம் எடுத்தாள் அருந்ததி.

இப்படியே அன்றைய தினத்தை அனைவரும் இனிமையாக கழித்து விட்டு வரும் வழியில் ஒரு உணவகம் முன் காரை இறங்கினர் இரவு உணவிற்காக. அருந்ததி காரை விட்டு இறங்கும் சமயம்
" அதி.." என்றான் சசிதரன் ..உணவு என்றதும் முன்பே ஓடி விட்டு இருந்தான் தேவ்.


அங்கு நின்ற ஹாசினிக்கு இது தெளிவாகவே கேட்டது.. அவனைத் திரும்பிப் பார்த்தாள் அவள்."ப்ளீஸ் ஹாசினி
நீ உள்ளே போ.. நான் என்னோட அதி கிட்ட கொஞ்சம் பேசணும் .."
என்றான் அவளிடம்.


அவன் கூறியதில் இரண்டு பெண்களுமே திகைத்து நின்று விட்டனர் ..கோபத்தில் அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள் ஹாசினி..அருந்ததியோ காரில் அமர்ந்த படியே இருந்தாள் .
முன் இருக்கையில் இருந்தவன் காரை விட்டு இறங்கி வந்து மீண்டும் பின் இருக்கை கதவைத் திறந்து அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.. அருந்ததி அவனை திகைப்புடனும், கேள்வியாகவும் பார்த்தாள்..

"என்ன அதி.
அப்படி பார்க்கிறே..?" என்றான்
சசிதரன்.
"இ.. இல்ல... ஒன்னும் இல்ல...."என்று அவனுக்கு பதிலளித்தாள் அருந்ததி.
"சரி சரி டென்ஷன் ஆகாதே சும்மா உன்கிட்ட பேசணும்னு தான்.."என்றவன் அவளது முகத்தை தனது கைகளில் தாங்கி மெல்ல குனிந்து அவளது நெற்றியில் முத்தமிட்டான்..


அவனது செயலில் கண்களை ஏகத்துக்கும் விரித்துப் பார்த்தாள் அவள். இவை எல்லாவற்றையும் ஒரு தூணின் மறைவில் இருந்து பார்த்த படி இருந்தாள் ஹாசினி. இருட்டில் தெளிவாக தெரியாவிட்டாலும் நிழல் உருவமாக அனைத்தும் தெரிந்தது. அவளது மனதில் கோபத்த தீ பற்றிக் கொண்டு எறிந்தது..



மேலும் அவன் நெற்றியில் இருந்தேன்
அவளது கண்ணம் நோக்கி தனது இதழை செலுத்தினான்.அதில் இருந்து அவளது இதழ் நோக்கி அவனது இதழ் பயணிக்க அதை தடுத்தாள் பெண்ணவள் ...
அப்போது தான் அவனுக்கு சுயநினைவு வந்தது எனலாம்.


ஒரு வேகத்தில் அவளை முத்தமிட்டு விட்டான் அவன் .
இப்போது எப்படி அவள் முகத்தை பார்க்க என்று அவனுக்கு தெரியவில்லை.. தனது தலையை கோதியபடி மற்றொரு பக்கம் திரும்பிக் கொண்டான் அவளைப் பார்க்காமல் .. அவளும் வெட்கம் தாங்காமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.


சும்மா பேச வேண்டும் என்று அவள் அருகில் வந்தவன் தன்னை மீறி முத்தமிட்டான் அவளை.. எனவே அவளிடம் திரும்பி
"அதி ஐ அம் சாரி ..நா...நான் ஏதோ தெரியாம.." என கூறி முடிக்க முடியாமல்
" நான் முன்னாடி போறேன்.. நீ வா .."என்று இறங்கி சென்று விட்டான். அவன் சென்ற சிறிது நேரத்தில் அவளும் இறங்கி உள்ளே சென்றாள்.


அப்போது அவளுக்கு பேச்சு சத்தம் கேட்டது. அது சசிதரனின் குறை போலிருக்கவே அதனை கேட்க ஆரம்பித்தாள்.
" இங்க பாரு ஹாசினி.. எனக்கு உன் கூட பேச டைம் இல்ல. உன்கிட்ட நான் எல்லாமே சொன்னேன் தானே..?" என்றான் சசிதரன்..


" ப்ளீஸ் புரிஞ்சுக்கோ சசி. எனக்கு நீ வேணும்.. ஆமா என்னை எதுக்கு நீ அவாய்ட் பண்ற? அந்த அருந்ததிய நீ லவ் பண்றியா என்ன?" என்றாள் கோபமாக ஹாசினி. அதில் தனக்கும் கோபம் வரவே
"ஆமாண்டி நான் அவளை லவ் பண்றேன் .உனக்கு என்ன வந்தது ?"
என்று கூறி விட்டு அவன் உள்ளே சென்று விட்டான்..


இதைக் கேட்டு ஹாசினி கவலைப் பட்டாள் என்றால் அருந்ததியோ மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். அவளால் நம்பவே முடியவில்லை .அவளது எத்தனை வருட தவம் இன்று நிறைவேறியதில் சந்தோசத்தில் துள்ளிக் குதித்தாள் எந்த இடம் என்று கூட பாராமல்..

தொடரும்...
 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 5

அன்று இரவு உணவை முடித்து விட்டு மீண்டும் காரில் ஏறி வீடு நோக்கி பயணம் செய்தனர் அவர்கள்.. தேவ் களைப்பில் தூங்கி விட்டு இருந்தான் இருக்கையில் தலை சாய்த்தபடி.. ஹாசினி மட்டும் முகத்தை தூக்கி வைத்தபடியே காரில் அமர்ந்திருந்தாள்.



சசிதரன் என்ன மன நிலையில் இருக்கிறான் என்று கூற முடியவில்லை ..எப்போதும் போல அவன் முகம் அமைதியாக இருந்தது.ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க அருந்ததி மட்டும் மகிழ்ச்சியாக வந்து கொண்டு இருந்தாள்.



ஆனால் அவள் அதனை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அவன் யாரிடமோ தன்னை காதலிப்பதாக சொன்னதைத் தானே கேட்டாள் அவள் .ஆனால் அவளது ஆசை அவனே வந்து அவளிடம் காதலைச் சொல்ல வேண்டும் என்பதே.


அவள் கார் நின்றதும் இறங்கி செல்கையில் அவளை பார்த்து லேசாய் தலையை அசைத்து அவளுக்கு விடை கொடுத்தான் சசிதரன்..


அப்படியே இரண்டு நாட்கள் அமைதியாக கழிந்து விட மூன்றாம் நாள் நண்பர்கள் ஊட்டி சொல்வதாக திட்டமிட்டு இருந்தனர்.. அவர்கள் தேவையும் அருந்ததியையும் அழைக்க காலேஜ் இருப்பதாக கூறி மறுத்து விட்டான் தேவ்..



அருந்ததியும் தேவ் இல்லாமல் செல்ல விருப்பம் இல்லை என்பதால் தானும் வரவில்லை என்றும் தந்தையின் ஆபீஸ் செல்ல வேண்டும் என்றும் கூறி விட்டாள். அதனை கேட்டு சசிதரன் தான் கோபம் போல் முகத்தை வைத்துக் கொண்டான்.. ஆனால் இங்கு சந்தோஷப் பட்ட ஒரே ஒரு ஜீவன் ஹாசினி மட்டுமே..


நண்பர்களுடன் சசிதரன் 5 நாட்கள் ஊட்டியை சுற்றி விட்டு வந்து இருந்தான்.. அவனை பார்க்க வென்று அவனது இல்லம் சென்றிருந்தாள் அருந்ததி ..
சசிதரனின் முகமோ என்றும் இல்லாமல் அப்படி ஒரு மகிழ்ச்சியில் இருந்தது பார்த்தவுடனேயே அவளுக்கு தெரிந்தது.. அவன் மகிழ்ச்சி அவள் மகிழ்ச்சி அல்லவா.. எனவே அவளது முகமும் பிரகாசத்தை தத்தெடுத்தது..



அன்று அவளுக்கு அவனுடன் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.. சுற்றி அனைவருமே இருந்தனர் ..அவனும் அவளுடன் பேச முயற்சிக்க வில்லை என்பதால் சந்தர்ப்பம் அமையவில்லை என்று கூறலாம். நாளை அவனது பிறந்த நாள் வேறு.தேவ் அவளிடம் பேசிக்கொண்டே இருந்தான் ..


அவன் சொல்லித் தான் நாளை அவனது பிறந்தநாளை ஒரு விழா போல கொண்டாடுவது அவளுக்கு தெரிந்தது..
அவனுக்காகு சிறந்த பரிசு ஒன்றை வழங்க வேண்டும் என அப்போதே முடிவு செய்து கொண்டாள் பெண்ணவள்..



தேவ் அருந்ததி இருவரும் பேசிக் கொண்டு இருந்த இடத்திற்கு வந்த தேவின் அம்மா
"ஆரு கண்ணா... இதைப் போய் சசி பிரண்ட்ஸ் எல்லாருக்கும் கொடுடா.." என்று கூறி அவளது கையில் காபி கப்புகள் அடங்கிய ட்ரேயை திணித்தார்..


அதை எடுத்துக்கொண்டு ஹாலை நோக்கி நடந்தாள் அருந்ததி .அவள் அங்கு வந்தது கூட அறியாது சசிதரன் அவனுடைய நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தான்.


"நாளைக்கு என்னோட பர்த்டேனால அவளுக்கு நாளைக்கு சர்ப்ரைஸ் குடுக்கப் போறேன் மச்சி.." என்று சசிதரன் கூற தனுஷோ "அப்படி என்னடா சர்ப்ரைஸ்?." என்று கேட்க "வேற என்னடா ப்ரொபோஸ் பண்ண போறேன். அம்மா அப்பா முன்னாடி பண்ணும் போது அவ ரொம்ப சந்தோஷப்படுவாடா.." என்று கண்களில் காதல் மின்ன கூறினான்..


அதைக் கேட்ட அவன் நண்பர்களோ கோரசாக
"நீ நடத்து மச்சி.." என்று கூறிய சமயம் தான் அங்கு நின்றிருந்த அருந்ததியை கண்ட சியாம்
" வா அரு.."என்று அழைக்க காபியை அவர்களுக்கு கொடுத்தவள் முகம் புன்னகையில் விரிந்து இருந்தது ...



"ஹே எங்களுக்கும்.. எங்களுக்கும்.." என்றபடி வந்தார்கள் ஹாசினி மற்றும் அனிதா இருவரும்.. எல்லோருக்கும் கொடுத்து விட்டு அங்கிருந்து மலர்ந்த முகத்துடன் சென்றாள் அருந்ததி.


அவளால் இன்னும் நம்பவே முடியவில்லை..அவளுக்கு அவளவன் நாளை காதலை கூற போகிறான் என்பது இன்பம்.. நாளைய தினத்தை நினைத்து கனவு காண ஆரம்பித்தாள் பெண்ணவள்..


அவள் எதிர்பார்த்த படியே அவனது பிறந்தநாள் வந்து சேர்ந்தது.. மாலை நேரம் தான் பார்ட்டி என்பதால் காலையில் அவனுக்கான பரிசை தெரிவு செய்ய வேண்டும் என்று வெளியே சென்றாள்.
கடைக்கு சென்று விலை உயர்ந்த கடிகாரம் மற்றும் ஆண்கள் அணியும் மோதிரம் ஒன்றும் வாங்கி விட்டு அவள் அன்று மகாபலிபுரம் சென்ற போது எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் ஆல்பம் தயாரித்து விட்டே வீட்டிற்கு வந்தாள்..


மாலை நேரம் பார்ட்டிக்கு செல்ல வேண்டி அழகிய சிவப்பு நிற கவுன் அணிந்து கழுத்தில் மெல்லிய செயின் மற்றும் காதில் சிறிய அளவிலான வைரத்தோடு அணிந்து முடியை விரித்து விட்டு தேவதை போல் கிளம்பிச் சென்றாள் அங்கு..



அவள் அங்கு சென்றபோது வீடே விழாக்கோலமாக காட்சி அளித்தது .அவளைக் கண்டதும் தேவ் மயங்குவது போல் நடித்துக் காட்டினான்.
" சீ போடா உனக்கு பொறாமை நான் அழகா இருக்கேன்னு.." என்று அவனை திட்டி விட்டு உள்ளே சென்றாள் அருந்ததி ..


அவள் உள்ளே சென்ற நேரம் கேக் வெட்ட தயாரான நிலையில் இருந்தான் சசிதரன் ..இன்று அவனது 26 ஆவது பிறந்தநாள் ..எனவே கேக்கில் பெரிதாக இருபத்தி ஆறு என்றும் அவனுடைய பெயரும் எழுதப்பட்டிருந்தது..


அவளைக் கண்டு மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினான்.. அருந்ததியும் கேக் வெட்டப் போகும் இடத்தில் போய் நின்று கொண்டாள்.. அங்கு தான் அவன் நண்பர்களும் நின்றிருந்தனர்.



கேக்கினை அனைவரின் வாழ்த்துக்களுக்கு மத்தியில் வெட்டியவன் முதலில் தாய் தந்தை மற்றும் தப்பிக்கும் கேக் ஊட்டி விட்டு அடுத்து அருகில் இருந்த ஹாசினிக்கே ஊட்டி விட்டான் ..அப்போது அவன் முகத்திலும் சரி ஹாசினியின் முகத்திலும் சரி சந்தோஷம் நிரம்பி வழிந்தது ..



அதனை சந்தேகமாக பார்த்தாள் அருந்ததி.. ஏனெனில் சில தினங்களுக்கு முன்பு வரை இருவரும் எலியும் பூனையும் போல முட்டிக் கொண்டு திரிந்தவர்கள் ஆயிற்றே.. இதற்கே இப்படி என்றால் அவன் அடுத்து செய்த காரியத்தில் அருந்ததியின் உலகமே இருண்டு போனது.. கடந்த இரண்டு நாட்களாக கனவுகளுடன் சுற்றித் திரிந்தவள் இன்று இந்த நொடியே இருளுக்குள் தள்ள பட்டு விட்டாள். அதுவும் அவளவனால்..



அவளுக்குக ஊட்டி முடித்தவன் அடுத்து
" ஹாய் பிரண்ட்ஸ்.. இந்த பர்த்டே பார்ட்டிக்கு வந்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ..இன்னைக்கு என் வாழ்க்கையில் முக்கியமான ஒரு நாள்
. அது என்னென்ன என்னோட வருங்கால மனைவியை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த போறேன்.." என்று அவன் கூற கரகோஷம் சத்தம் தான் கேட்டது அந்த இடத்தில்.


அவனது கூற்றில் அவனது பெற்றோர் ஒரு நொடி திகைத்தாலும் அவனுடைய முடிவு சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் அமைதியாக அவன் யாரை அறிமுகப்படுத்தப் போகிறான் என்று காத்துக் கொண்டு இருந்தனர்..


எப்போது அவன் சொல்வான் என அவனையே பார்த்த படி இருந்தாள் இதழில் புன்னகையோடு அருந்ததி. ஆனால் சற்று நேரத்தில் அவள் புன்னகை வாடப் போவது தெரியாமல்.. தேவ் சசிதரனின் அருகே வந்து
"அண்ணா சொல்லவே இல்ல .சீக்கிரமா சொல்லு யார் அவங்க ?"
என்று கேட்க ..



சசிதரன் சத்தமாக
"ஹாசி இங்க வா .."என்று அவளை அவன் அருகில் அழைத்து தனது பாண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு பெட்டியை எடுத்து அதில் இருந்த மோதிரத்தை வெளியே எடுத்தான். அந்த மோதிரத்துடன் அவள் முன் மண்டியிட்டு



"ஹாசி...என்னை கல்யாணம் பண்ணிப்பியா?" என்று கேட்க அவன் இன்று ப்ரபோஸ் செய்வான் என்று அறிந்திராத அவள் சந்தோஷ மிகுதியில் ஆம் என்று தலையை ஆட்டினாள்..


அவள் தலையை ஆட்டியதும் அவள் கைகளில் மோதிரத்தை அணிவித்தான். அதன் பிறகு எழுந்து நின்று தனது பெற்றோரைப் பார்த்து
"அம்மா அப்பா உங்க வருங்கால மருமகள்.." என்று அவர்கள் முன் போய் நிற்க இருவரது தலையையும் வருடி அவர்கள் சம்மதம் என்று தலை அசைத்தனர்..



பிறகு இருவருக்கும் ஒவ்வொருவராக வந்து வாழ்த்து கூற அங்கு கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்த பேதைப் பெண்ணை யாரும் கண்டு கொள்ளவில்லை ...அவன் இப்படி அவளை ஏமாற்றுவான் என்று கனவில் கூட நினைக்கவில்லை அருந்ததி..

தொடரும்...

 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 6

அருந்ததியின் கண்களில் நிற்காமல் கண்ணீர் வந்த வண்ணம் இருந்தது..‌ அவளால் என்ன செய்தும் கண்ணீரை நிறுத்த முடியவில்லை ...இதற்கு மேல் அங்கு நிற்க முடியாது என்று உணர்ந்தவள் அவனுக்கு என்று வாங்கி வைத்திருந்த பரிசுப் பொருளையும் எடுத்து கொண்டே வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள்..


வீட்டிற்கு சென்று பார்க்க அவள் நல்ல நேரமோ என்னவோ யாரும் அங்கு இல்லை.‌ எல்லோரும் சசிதரனின் வீட்டிற்கு சென்றிருந்தனர். அறையில் சென்று அடைந்து கொண்டாள் அவள்.. எத்தனை தடுத்தும் கண்ணீரை அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை ..


அவளுக்கு வருத்தம் என்னவென்றால் அவன் அவளை ஏமாற்றியது தான். எப்போதும் போல் இவள் மட்டுமே ஒரு தலையாக அவனை காதலித்து இருந்தால் இவ்வளவு வழி இருக்காது அவளுக்கு... கவலை இருக்கும் தான் .இல்லை என்று சொல்லிவிட முடியாது .ஆனால் இன்று நிலைமை வேறு அல்லவா..


அவளை அவன் காதலிப்பது போல் நடித்து இருக்கிறான் ‌‌.. ஏன் என்ற கேள்வி அவளது மனதில் ஓடிக்கொண்டே இருந்தது ..அவனிடம் இப்போதே ஏன் என்னை ஏமாற்றினாய் என்று அவனது சட்டையைப் பிடித்து கேட்க வேண்டும் போல இருந்தது அருந்ததிக்கு ..


யாரிடம் போய் சொல்வது அவளது கதையை ..‌அவள் அவனை காதலிப்பது தேவ் உட்பட யாருக்குமே தெரியாது .. தேவ் என்று நினைக்கும் போது தான் அவளுக்கு இன்னொரு விடயம் நினைவுக்கு வந்தது.‌ ஆம் அது என்னவென்றால் சசிதரன் தேவ் இருக்கும் போது அருந்ததியிடம் நெருக்கமாக பழக வில்லை என்பதே ...



அவளுக்கு மனம் ரனமாக வலித்தது. ஹாசினி இருக்கும் போது மட்டும் தான் இவளிடம் நெருக்கமாக பழகினான். ஒருவேளை ஹாசினியின் பொறாமை உணர்வை தூண்ட தான் இப்படி நடந்திருக்க கூடும் என்று நினைக்கையிலேயே அவளால் அவளது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை ..

‌அவனது சுயநலத்திற்காக ஒரு பெண்ணின் உணர்வுகளுடன் விளையாடி இருக்கிறான் என்ற நினைப்பில் அவளை அறியாமலேயே தூங்கிப் போனாள் பெண்ணவள்.


இங்கு தெவ் மற்றும் அருந்ததியின் அன்னையும் அவளைத் தேடிப் பார்க்க எங்கும் காணவில்லை என்றதும் அவளது வீட்டிற்கு சென்றான் தேவ். அங்கு ஹாலில் யாரும் இல்லாமல் இருக்க அவளது அறையை நோக்கி சென்றவன் கண்டது தூங்கிக் கொண்டு இருந்த அவளைத்தான் ..


தலைவலியாக இருக்கும் என்று நினைத்தவன் அவளது அன்னையிடமும் அதைத்தான் தெரிவித்தான்.. அன்று பார்ட்டி முடிந்ததும் அனைவரும் கலைந்து செல்ல அப்போது தான் ஹாஷினி அருந்ததியை தேடினாள்.ஹாஷினிக்கு அருந்ததியை சுத்தமாக பிடிக்கவில்லை..


இப்போது அவள் முன் போய் இருவரும் ஜோடியாக நிற்க வேண்டும் என்று அவளைத் தேட எங்கும் அவள் தென்படாததால் பிறகு பார்க்கலாம் என்று விட்டு விட்டாள்..



அதற்கு அடுத்த நாள் காலையில் எழுந்ததில் இருந்தே அவளது முகம் தெளிவில்லாமல் இருந்ததைக் கண்ட வேதநாயகம் "என்னடா குட்டி முகம் ஒரு மாதிரி இருக்கு ..கண்ணெல்லாம் வேற சிவந்து போய் இருக்கு அழுதியா என்ன ?"
என்று அவளிடம் கேட்க அவசரமாக "அ...அப்படி ஒன்னும் இல்லப்பா ..கொஞ்சம் தலைவலி வேற ஒன்னும் இல்ல.." என்று சமாளித்தாள்..


அன்றில் இருந்து சசிதரனின் வீட்டுப் பக்கம் செல்வது இல்லை
. தேவ் மட்டும் இங்கு வந்து செல்வான். அன்றே சசிதரனின் நண்பர்கள் சென்று விட்டனர் ..பெற்றோரிடம் தங்கள் காதல் விடயத்தைக் கூறி அவர்களை அழைத்து வருவதாகக் கூறிவிட்டு சென்றாள் ஹாசினி.. அவள் ஒரு வட இந்திய தாய்க்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்தவள்.



காதலுக்கு அவர்கள் வீட்டில் எதிர்ப்பு இல்லாததால் உடனே அவர்களும் சரி என்று கூறி விட்டனர் ..விரைவிலேயே திருமணம் எடுப்பதாக பேசியது அருந்ததியின் காதில் கேட்டது..



அந்த நேரம் தான் அவளுடைய கல்லூரித் தோழி சுபாவின் தங்கைக்கு திருமணம் என்று அழைப்பு விடுத்திருந்தாள் அவள்.. சுபாவும் கல்லூரி படிக்கும் போதே திருமணம் செய்து விட்டுத் தான் படிப்பைத் தொடர்ந்தாள். அதே போல அவளது தங்கைக்கும் திருமணம் செய்து வைக்க அவளது பெற்றோர் முடிவு எடுத்து இருந்தனர்.. எனவே தான் உயிர் தோழியான அருந்ததியை திருமணத்திற்கு அழைத்து இருந்தாள்‌. அங்கு சென்றால் மனது இலேசாக கூடும் என்று அங்கு செல்ல முடிவெடுத்தவள் தேவ்விடம் கூறி விட்டு செல்லலாம் என சசிதரன் வீட்டில் இல்லாத நேரம் அங்கு சென்றாள்..



அருந்ததி அங்கு சென்று அவனிடம் விடயத்தைக் கூறி விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள் அவனுடன்.. அந்த நேரம் அவனுக்கு அழைப்பு வர அருந்ததியை இருக்குமாறு கூறி விட்டு அழைப்பை ஏற்று தோட்டப் பக்கம் சென்று விட்டான்..



அப்போது ஏதோ தேவையாக அவசரமாக வீட்டிற்கு வந்து இருந்தான் சசி தரன்.. அவளைக் கண்டதும் ஒரு நொடி தடுமாறியவன் வலுக்கட்டாயமாக புன்னகைத்த படியே அவள் அருகில் வந்து "ஹாய் எப்படி இருக்க?" என்று எதுவும் நடக்காதது போல கேட்க அவளுக்கு கோவம் வந்து விட்டது..


பொறுமையாக இரு என்று மூளை கூறினாலும் மனம் என்னவோ அவனிடம் கேள்வி கேட்கத்தான் சொல்லியது.. தன்னை கட்டுப்படுத்த முடியாமல் "எப்படி நல்லா இருக்க முடியும் ?அது தான் நீங்க என்னோட சந்தோசத்தை முழுசா பறிச்சுட்டீங்களே.." என்று காரமாக கேட்க இப்போது அவனுக்கும் கோபம் வந்து விட்டது ..



"நான் என்னடி பண்ணினேன் உன்னோட சந்தோசம் கெட்டு போற அளவுக்கு?" என்று காட்டமாக கேட்க அவளும் விடாமல்
"நீங்க என்ன பண்ணல.. ம்...சொல்லுங்க என்ன பண்ணல?"என்று கேட்க எதுவும் பேசாமல் மரம் போல நின்று இருந்தான் அவன்..




"பேசுங்க... நான் என்னோட சின்ன வயசுல இருந்தே உங்களை லவ் பண்ணேன். ஆனா உங்க கிட்ட சொல்லனும்னு எனக்கு தோணல. ஒரு வயசுக்கு வந்ததுக்கப்புறம் சொல்லலாம்னு இருந்தேன்.. எதிர்பாராத விதமா அன்னைக்கு நீங்க வந்தீங்க‌‌.. நான் அப்பக்கூட சொல்ல நினைக்கல...அப்புறம் தான் உங்க பிரெண்ட்ஸ் இங்க வந்தாங்க.. அதுக்கு அப்பறம் என்கூட ரொம்ப க்ளோசா நடந்துக்கிடீங்க ..‌அதை நான் எதிர்பார்க்கவே இல்லை..


ஆனால் அதைக் கூட புரிஞ்சிக்க முடியாத அளவு முட்டாளா நான் இருந்து இருக்கேன் பாருங்க.. என்னை சொல்லணும் ..."என்று பேசிக் கொண்டிருந்தவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது ..


அவனுக்கும் அவள் அவனை முன்பிருந்தே காதலிக்கிறாள் என்ற விடயம் புதிது.. எனவே அவளை திகைப்புடன் பார்த்தான்.
" நீங்க ரொம்ப புத்திசாலி தரு.. தேவ் இல்லாத இடத்தில் தான் என்கிட்ட க்ளோசா இருந்து இருக்கீங்க.. உங்க லவ்க்காக என்னை யூஸ் பண்ணி இருக்கீங்க ..ஆனா ஒண்ணு தரு...மனுஷங்க எவ்ளோ சுயநலவாதிகள்னு எனக்கு புரிய வச்சிட்டீங்க.. ரொம்ப ரொம்ப நன்றி ..."என்று தனது இரு கைகளையும் கூப்பி அவனுக்கு பெரிய கும்பிடு போட்டாள் அவள்.


அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.. ஆனாலும் அவளைப் பார்க்கையில் ஒரு முட்டாள் பெண் என்றே தோன்றியது அவனுக்கு ..அவன் நடிக்கிறான் என்பதை கூடவா அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவளை உள்ளுக்குள் திட்டினான். இதில் அவனை வேறு குறை சொல்கிறாள்..


" இங்க பாரு நீ லவ் பண்றது ஓகே.. ஆனா நான் லவ் பண்ணது என்னோட ஹாசினியை தான்.. நானும் அவளும் ரெண்டு வருஷமா லவ் பண்றோம்.. இடையில நான் இந்தியா வர்றது அவளுக்கு பிடிக்கல.. சோ கொஞ்சம் சண்டை.. அவளுக்கு அங்கேயே செட்டில் ஆக ஆசை..


அதனால தான் இங்க அவ வர்றான்னு தெரிஞ்சி உன் கூட நெருக்கமாக பழகினேன்.. அவளுக்கு கோவம் வந்து நான் மட்டும் தான் முக்கியம்னு சொல்லி என் கூடவே இருப்பான்னு தான் இப்படி நடிச்சேன்.. இதுல என் தப்பு எதுவும் இல்லை.. நீதான் நான் நடிக்கிறேன்னு கண்டுபிடிச்சு இருக்கணும் ..அது உன்னோட தப்பு தானே." என்று அவன் பேச பேச அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது..



எப்படி அவனால் இப்படி பேச முடகிறது. ஒரு பெண்ணின் மனதை காயப்படுத்தி விட்டு ஏதும் நடவாதது போல் உன் குற்றம் என்று அவளையே சாடுகிறான் என மனதால் நினைத்தாள். அவனிடம் சொல்ல விரும்பவில்லை அவள்..ஏனெனில் அவன் கேட்கும் ரகம் இல்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள் அவனது பேச்சிலேயே.


தனது கண்களை துடைத்துக் கொண்டாள் அவனுக்காக இனி அழவே கூடாது என்ற முடிவோடு..



தொடரும்...

 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
poojahegde11620987649.jpg



அத்தியாயம் 7



அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் இடத்தை நோக்கி யாரோ வரும் சத்தம் கேட்கவே சட்டென்று தனது கண்களை துடைத்துக் கொண்டாள் அருந்ததி..
சசிதரனும் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டான்..



சற்று நேரத்தில் அங்கு வந்த தேவ் "அரு இன்னைக்கு நாம வெளியே போலாம்.. ரொம்ப நாள் ஆச்சு சேர்ந்து போய் .."என்று அவளிடம் கேட்க
"அது ..அது வந்து இன்னைக்கு என்னால வர முடியாது.." என்று அவனிடம் மறுத்துக் கூறினாள் அவள் ...


வெளியே செல்லும் அளவிற்கு எல்லாம் அவளது மனநிலை சரியாக இல்லை ...எனவே தான் அவனிடம் முடியாது என்று கூறிவிட்டான்..
" நீ என்கூட வர்ற அவ்ளோ தான்.. நாளைக்கு நீ ஊருக்கு போயிடுவ..சோ இன்னைக்கே போகலாம்.." என்று அங்கிருந்து அவளை விரட்டாத குறையாக அனுப்பி வைத்து விட்டு அங்கிருந்த தனது அண்ணனைக் கண்டு கொள்ளாமல் சென்று விட்டான் ...


அவன் அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டு விட்டான் ...அருந்ததிக்காக அவன் மனம் வருந்தியது.. இப்போது அவளிடம் இதைப்பற்றி கேட்க முடியாது.. கேட்டால் அவளது மனம் இன்னும் வலிக்கத் தான் செய்யும் என்று அறிந்து அவளது மனதை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்து அவளை வெளியே அழைத்து செல்ல முடிவெடுத்து விட்டான்.


அவன் நன்கு அறிவான் அருந்ததியால் சசிதரனை மறக்க முடியாது என்பதை.. அவளது கண்ணீரே கூறியதே அவளது காதலின் ஆழத்தை ...அவளது காதலுக்கு அவனது அண்ணன் தகுதி இல்லாதவன் என்று சசிதரனின் வார்த்தை பிரயோகத்திலேயே அறிந்து கொண்டான் தேவ்..



அவனது காதலுக்காக இன்னொரு பெண்ணின் காதலை பயன்படுத்தி இருக்கிறானே என நினைக்கையில் அண்ணனை நினைத்து மனம் வெறுத்துப் போனது அவனுக்கு ..இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் தான் எதற்காக வீட்டுக்கு வந்தானோ அந்த வேலையை முடித்து விட்டு சென்றான் சசிதரன்..


அன்று முழுவதும் தேவ் அருந்ததியை அழைத்துக் கொண்டு எல்லா இடங்களுக்கும் சென்றான். அதில் சற்று தனது கவலைகளை மறந்து தான் போனாள் அவள். அது தானே அவனுக்கு வேண்டும் .எனவே வேண்டுமென்றே அவளை சிரிக்க வைத்தான்.. ஆனால் தேவிற்க்கு அனைத்தும் தெரியும் என்பது அருந்ததிகு தெரியாது..
தேவ் சிறிதளவேனும் கூட காட்டிக் கொள்ளவில்லை தெரிந்ததை போல்..


அடுத்த நாளே வீட்டில் சொல்லிக் கொண்டு சுபாவின் தாய் வீட்டிற்கு சென்றாள் அருந்ததி.. சுபாவின் கணவன் வீடு இருப்பது காஞ்சிபுரம்.. ஆனால் அவளது தாய் வீடு இருப்பது மதுரையில் ...திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் தான் அங்கு சென்றாள்.. அங்கு சென்று தோழியுடன் இருக்கும் நேரம் கவலை மறந்தாலும் இரவில் தனிமையில் அவளுக்கு அவளது கண்ணீர் மட்டுமே துணை..


இதை இரண்டு நாட்களாக கண்ட சுபா இன்று அவளிடம் பேச முடிவெடுத்து தோழியிடம் வந்து கேட்டும் விட்டாள்.யாரிடமாவது சொன்னால் பாரம் குறையும் என்பதால் அனைத்தினையும் சுபாவிடம் கூறி விட்டு அவளை கட்டி அணைத்து அழுது தீர்த்து விட்டாள் அருந்ததி..


சுபாவும் ஆறுதல் கூறி அவளை தூங்க வைத்தாள்.. அவளால் என்ன செய்துவிட முடியும்.. அவளுக்கும் அருந்ததியின் காதல் விடயம் முன்பே தெரியும் ..சில நேரம் அவளும் கிண்டல் செய்வதுண்டு தோழியை.." அவனுடன் நெறுக்கமாக இல்லாமல் ...அவனை பற்றி எதுவும் தெரியாமல் எப்படி காதலிக்கிறாய்.."என்று ..


இன்று அவளை அவன் எவ்வாறு ஏமாற்றியிருக்கின்றானே அவன் மேல் கோபமாக வந்தது ..


சுபாவின் ஊர் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாதது..அந்த நேரம்தான் அந்த ஊருக்கு வந்து சேர்ந்தான் ஆதித்தியன்.. அவனது தந்தை ஒரு செல்வந்தர்.. தந்தையின் பணத்தில் இன்னும் ஊர் சுற்றித் திரியும் ஊதாரி என்று அவனை கூறலாம்.. சுபாவின் தந்தையின் தூரத்து உறவு தான் ஆதித்யனின் தாய்..


திருமணத்திற்கு இவர்கள் அழைப்பு விடுக்க அவர்களால் வர முடியாத காரணத்தால் ஆதித்யனை அனுப்பி வைத்திருந்தனர் அவனுடைய பெற்றோர்.. வேண்டா வெறுப்பாகத் தான் வந்திருந்தான் அவன்.. அவனுடைய தந்தைக்கு கோபம் வந்தால் அவனுடைய சுதந்திரத்தில் கை வைத்து விடுவார் என பயந்து தான் தாய் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இங்கு வந்து இருந்தான்..



வந்த முதல் நாளே அவனது பார்வையில் பட்டாள் அருந்ததி.. அதன் பிறகு அவளது பின்னாலேயே சுற்றி திரிந்தான்.
இதனைக் கண்டு கொண்டவள் அவனிடம் இது எல்லாம் வேண்டாம் எனக்கு பிடிக்காது என்று கூற நல்ல நண்பர்களாக இருப்போம் என்று கூறி அவளுடன் நட்புக்கரம் கோர்த்தான் அவன்..

அவளும் அதற்கு மேல் என்ன தான் சொல்ல முடியும். எனவே அந்த இரண்டு மூன்று நாட்களும் அவனுடன் இயல்பாகவே பேசினாள் அவள். சுபாவும் இதனை அவதானித்த படித் தான் இருந்தாள். அவளுக்கு அவனை முன்பே தெரியும். அவன் சென்னையை சேர்ந்தவன் தான் ஆனாலும் குடும்ப விழாக்களில் அவனை கண்டு இருக்கிறாள் அவள் .. பெண்கள் பின்னாலேயே சுற்றி தெரிவது தான் அவனது வேலை.. அவனைப் பார்த்தால் நல்லவன் போல் தோன்றாத காரணத்தால் தோழியிடம் அவனைப் பற்றி கூறி வைத்தாள்..


தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி விட்டாள் அருந்ததி.. இப்படி திருமணம் முடிந்த பிறகு வீடு வந்து சேர்ந்தாள் அருந்ததி ஒரு வாரத்திற்குப் பிறகு.. ஆதித்யன் அவளது தொலைபேசி எண்ணை வாங்கி கொண்டான்.. அவள் அதிகம் பயன்படுத்தாத எண்ணையே அவனுக்கு தந்து இருந்தாள்..


அதன் பிறகு இடையிடையே வெளியிலும் அவளை சந்தித்து பேசினான்.
அருந்ததியும் அவனுடன் ஒரு தோழியாகவே நடந்து கொண்டாள். ‌ இதற்கிடையே ஹாசினியின் வீட்டினர் சசிதரனின் வீட்டிற்கு வந்து திருமணத்தை உறுதி செய்து விட்டு சென்றனர்..


இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்று பேசி வைத்து இருந்தனர் அவர்கள்‌. இப்போதெல்லாம் தேவ் சசிதரன் இடம் பேசுவதே இல்லை.. ஆனால் அதைக் கண்டு கொள்ளும் மனநிலையில் சசிதரன் இல்லை.. அவனுக்கு வேலை ஒரு பக்கமும் ஹாஷினியுடன் அலைபேசியில் பேசுவது மறுபக்கமும் என்று தனது நாட்களை கடத்தி வந்தான்..


அருந்ததியை பற்றிய அவனுக்கு யோசிக்கக் கூட நேரமில்லை.. எந்தவிதமான குற்ற உணர்வும் இல்லாமல் அவனது வேலைகளை செய்து கொண்டிருந்தான் அவன் ..


உள்ளுக்குள் சோகம் இருந்தாலும் வெளியே தனது குடும்பத்திற்காக சிரித்தவாறு நடமாடினாள் அருந்ததி..
ஆனால் தேவ்விற்க்கு நன்கு தெரியும் அவளுக்குள் இருக்கும் சோகம் ..திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு நிச்சயம் வைத்துக் கொள்ளலாம் என்று பேசி முடிவெடுத்து இருந்தனர் பெரியவர்கள்..


அருந்ததியிடம் திருமண வேலைகளை ஒப்படைத்து இருந்தார் தேவகி..சிறிய சிறிய வேலைகளை தேவுடன் சேர்ந்து செய்தாள்.. பெண்ணிற்கு உடை எடுப்பது... வீட்டு அலங்காரம்... நகை எடுப்பது ....திருமணத்திற்கு தேவையான மெனு என்று தேவ்வுடன் சேர்ந்து தான் செய்தாள் அவள்..



தேவ்விற்கு தனது தாயின் மேல் அத்தனை கோபம் வந்தது.. இருந்தும் அதனைக் கட்டுப் படுத்திக் கொண்டான்.. ஏனெனில் தேவகிக்கு தான் அருந்ததியின் காதல் விடயம் தெரியாது என்ற காரணத்தால்..


சில நேரம் அருந்ததியின் முன்னால் வைத்து ஹாசினியுடன் தொலைபேசியில் கொஞ்சிப் பேசுவான் சசிதரன்‌‌... அந்த நேரங்களில் எத்தனை முயன்றும் அவளது கண்ணீரை அவளால் நிறுத்த முடியாமல் போகும்..


இவ்வாறு நாட்கள் வேகமாக செல்ல அன்று நிச்சயம் என்ற நிலையில் வந்து நின்றது... அன்று முழுவதும் ஓடியாடி வேலை செய்தாள் பெண்ணவள் தன்னவன் நிச்சயத்திற்காக.. அதுவும் வேறொரு பெண்ணுடன்.. அவள் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்..


ஹாசினிக்கு மோதிரம் அணிவித்து விட்டவன் அவளுடைய விரல்களில் முத்தமிட்டான்.. அந்தத் தருணம் செத்து விடலாம் என்று தோன்றியது அருந்ததிக்கு.. எந்தப் பெண்ணால் தான் தாங்க முடியும் தனது காதலன் இன்னொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை.. யாருக்கும் தன்னுடைய கண்ணீர் தெரியக் கூடாது என்று வெளியே வந்து விட்டாள் அவள்.


அப்போது அவளது அலைபேசி அலறியது.. இந்த நேரம் யாராக இருக்கும் என்று யோசித்தாலும் அதனை ஏற்று காதில் வைத்தாள்..
" அரு நான் ஆதித்யன் பேசறேன் ...உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் ...நாளைக்கு மீட் பண்ணலாமா?" என்று கேட்டான் அவன்.. அவளும் சரி என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்தாள்..


தொடரும்..

 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 8



ஆதித்தியன் கூறியதற்கு இணங்க அன்று காலை 10 மணி போல் அவனுக்காக அருகில் உள்ள பூங்காவில் காத்துக் கொண்டு இருந்தாள் அருந்ததி.. அவளை அதிக நேரம் காக்க வைக்காமல் சிறிது நேரத்திலேயே அங்கு வந்து சேர்ந்தான் ஆதித்தியன்..
" ஹாய் அரு.. வந்து ரொம்ப நேரம் ஆச்சா..சாரி ..."என்று கேட்ட படியே அவள் அமர்ந்திருந்த இருக்கையில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டான்..



அவனை பார்த்து மெல்லிய புன்னகையை பதிலாக தந்தவள் "அப்படி எல்லாம் இல்ல .. ஜஸ்ட் இப்பதான் வந்தேன் .."என்று கூறினாள்.
"அரு...உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.." என்றான் சிறிது தயங்கிய படியே..


" என்ன விஷயம் சொல்லுங்க ..."என்று இவளும் கூற
" அது ..அது ..ஐ லவ் யூ .."என்று கூறி விட்டான் அவன் ..
"என்ன ?"என்றவாறு எழுந்து நின்று விட்டாள் அருந்ததி அவனது கூற்றில்..
"எதுக்கு இவ்வளவு சாக் ஆகுற லவ் தானே சொன்னேன் .."என்றான் அளது அதிர்ச்சியை யோசனையாக பார்த்தபடியே..

"ஐயம் சாரி ஆதித்யன்.. நான் உங்க கூட ஃப்ரண்டாத் தான் பழகினேன்.. உங்க மனசுல ஆசை வர நான் காரணமா இருந்தா என்னை அதுக்காக மன்னிச்சுடுங்க.."என மனம் வருந்தி மண்ணிப்பு கேட்டாள்..


ஆனால் அதற்கு மாறாக நிதானமாக எழுந்து நின்ற ஆதித்யனோ "என்னங்கடி லவ் சொன்னா கூட பெரிய இவளாட்டம் நான் அப்படி பழகலன்னு சொல்றீங்க..நீ என்னவேனா பண்ணு..ஆனா எனக்கு ஓகே சொல்லிட்டு கொஞ்ச நாள் என் கூட ஜாலியா இருந்துட்டு அப்பறம் நீ சொன்னதை சொல்லு.. ஓகே.." என்று அந்த ஜாலியில் அழுத்தம் கொடுத்து கூறியவனின் பார்வை அவளது உடலை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தது..


அவனது அந்த பார்வையில் உடல் கூசிப் போனாள் பெண்ணவள்.. அவன் இப்படி கேவலமானவன் என்று அவள் நினைக்கவில்லை.. அவளுடன் பழகிய இத்தனை நாட்களில் அவளிடம் நல்லவன் வேஷமே போட்டான் அவன்.

அவனுக்கு இது எல்லாம் கை வந்த கலை அல்லவா.. இன்று அவளிடம் காதல் சொல்லியதும் அவள் ஏற்றுக் கொண்டு இருந்தால் இப்படி பேசி இருக்க மாட்டான்.அவள் வேண்டாம் என்று சொன்னதும் அவனது உண்மை குணம் வெளிப் பட்டு விட்டது.


"ப்ளீஸ் ஆதித்யன் புரிஞ்சுக்கோங்க.."என்று கூறுகையிலே "என்ன புரிஞ்சுக்க... நான் வலை விரிச்ச பொண்ணுங்கள்ள இது வரை எனக்கு மயங்காத பொண்ணுங்களே இல்லை.நீ மட்டும் என்னடி?"என்று கூறிய படி அவளருகில் நெருங்க அவனை விட்டு சற்று விலகி நின்றவள் இப்போது கோவமாக "நான் மத்த பொண்ணுங்க மாதிரி இல்லை.. உன் வலையில ஈசியா வந்து விழறதுக்கு.. நீ எவ்ளோ முயற்சி பண்ணாலும் என்னை உன் வலையில் விழ வைக்க முடியாது..""என்று கூறி விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.


போகும் அவளை குரோதத்துடன் பார்த்தபடி நின்று இருந்தான் ஆதித்யன்.. அவனது வாழ்க்கையில் அவன் காதல் சொல்லி முதல் முதலில் மறுத்த பெண் அருந்ததியே.. அவனுக்கு சிறு வயதில் இருந்தே ஆசைப்பட்டதை அடைந்தே பழக்கம்..


அவனது திட்டமான ஆசைகளை அவனுடைய பெற்றோர் நிறைவேற்றி வைப்பது உண்டு.. ஆனால் இப்படியான செயல்கள் அவன் தந்தைக்கு தெரிந்தால் அவனுடைய கதி அதோ கதி தான்.. அவனது தந்தைக்கு தெரியாமல் அவளை ஏதாவது செய்ய வேண்டும் என்று அக் கணம் அவன் முடிவெடுத்து விட்டான்.


அன்று முழுவதும் யோசித்து யோசித்து கடைசியில் அவளை கடத்தியாவது அடைய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டான்.அவனுடைய நண்பன் ஒருவனின் உதவியுடன் இரண்டு அடியாட்களை வைத்து அவளை கடத்த ஆயத்தமானான்.


வீட்டிற்கு வந்த அருந்ததியால் தாங்க முடியவில்லை.. அவளை சுற்றி எத்தனை பிரச்சினைகள் .. அவளால் எப்படித்தான் அத்தனையும் தங்க முடியும் என்ற எண்ணமே அவள் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது ..அறைக்கு சென்று நாளை திருமணத்திற்கு கொடுக்க வேண்டும் என முடிவெடுத்த பரிசுப் பொருளைக் கையில் எடுத்துக் கொண்டு சசிதரனின் வீடு நோக்கி சென்றாள்.


செல்லும் வழியில்லாம் அவள் யோசனை செய்தது ஒன்றைப் பற்றித்தான்.." நாளைக்கு நான் இங்க இருக்கவே கூடாது.. எனக்கு அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்றத பார்க்க முடியாது.. இன்னைக்கு ஈவ்னிங்கே இங்க இருந்து கிளம்பிடனும்.. அம்மா அப்பா தேவ் மூனு பேரையும் சமாளிக்கிற எனக்கு கொடு கடவுளே.." என்று தான் அவளது சிந்தனை ஓடியது..



எங்கு செல்வது என அடுத்த பிரச்சினை அவளுக்கு.. தந்தைக்கு இவ்வளவு சொத்து இருக்கும் போது வெளியே எங்கும் வேலைக்கு அனுப்ப மாட்டார்கள் அவளை.. எனவேதான் அந்த நொடியே சுபா வீட்டுக்கு செல்வது என முடிவெடுத்தாள். அந்த வீட்டில் அவளும் அவளது கணவனுக்கு மட்டுமே.. சுபாவின் கனவன் விஷால் தனியாக பிசினஸ் செய்பவன்.. நல்லவன் வேறு..அருந்ததியை சொந்த தங்கை போலவே பார்ப்பான்..



எனவே அங்கு செல்கிறேன் என்றால் வீட்டில் எதுவும் சொல்ல மாட்டார்கள் என மனதில் கணக்குப் போட்டவள் சசிதரனின் வீட்டை அடைந்தாள்.


வீட்டில் ஆங்காங்கே ஒவ்வொருவர் திருமண வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.. அதனை பார்க்கையில் மனம் வலித்தாலும் புன்னகை முகமாக உள்ளே சென்றாள். அவளை கண்டு அங்கே வந்தான் தேவ்...." உன் கையில என்ன இருக்கு?" என்று அவளது கையிலிருந்ததைக் காட்டிக் கேட்க "ஓ இதுவா உங்க அண்ணனுக்கு என்னோட கிப்ட்.." என்றாள் சாதாரணமாக தன்னை அவனிடம் காட்டி கொண்டு..



அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தவன்
"ஏய் நாளைக்கு தான் கல்யாணம் .. நீ இன்னைக்கே கிஃப்ட் கொடுக்க பார்க்கிற?" என்று கேட்டான்.
" அது.. அது வந்து நாளைக்கு டைம் இருக்காதுடா.. வேலை ஜாஸ்தியா இருக்குமே.. அதான் இன்னைக்கு கொடுக்கலாம்னு.." என்று அவனுக்கு பதில் அளித்தாள்.." ஆமா உங்க அண்ணன் எங்க இருக்காரு.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. நான் சீக்கிரமே போனும்.."என்றாள் மீண்டும் அவனிடம்..


அவள் தன்னிடம் இயல்பாக இருப்பது போல் நடிக்கிறாள் என உணர்ந்து கொண்டவன் அவளை போலவே தானும் இயல்பாகவே "அவனோட ரூம்ல இருப்பான்.. போய் பாரு எனக்கு கொஞ்சம் வெளியில வேலை இருக்கு.." என்று விட்டு அங்கிருந்து சென்றான்.


அவன் கூறியது போலவே சசிதரனின் அறைக்கு சென்று கதவை தட்ட "வாங்க.." என்ற குரல் கேட்டது.. அக் குரலுக்கு கட்டு பட்டு உள்ளே சென்றாள் அருந்ததி ..அவளை அங்கு அந்த நேரம் எதிர்பார்க்காதவன்
" நீ என்ன இங்க?" என்றான் அவளிடம் கேள்வியாக..


" ஐ அம் சாரி. உங்கள டிஸ்டர்ப் பண்ணதுக்கு. இந்த கிப்ட் உங்களுக்கு கொடுக்கலாம்னு எடுத்துட்டு வந்தேன்.." என்று மெல்லிய குரலில் கூறினாள் அவள் ..அவளை சந்தேகமாக பார்த்தவன் "கொடு.."என்றான் கைகளை நீட்டி...


அதனை அவனிடம் கொடுத்தவாறு "ரியலி சாரி எல்லாத்துக்கும்.. நீங்க ஹா..ஹாசினி கூட ஹாப்பியா இருங்க .. இனி உங்க லைஃப்ல நான் குறுக்கே வரவே மாட்டேன் .."
என்று கூறியவள் நில்லாமல் வெளியே வந்து விட்டாள்.. அவன் அந்தப் பரிசுப் பொருளை ஒரு பக்கம் வைத்து விட்டு தனது வேலைகளை பார்க்க தொடங்கி விட்டான்.



அந்த வீட்டில் இருந்து வந்தவள் அடுத்து சென்றது தனது தந்தையிடம் தான்.. அவரிடம் தான் சுபா வீட்டுக்கு போவதாகவும் அங்கு சில காலம் தங்கி விஷாலிடம் தொழில் கற்றுக் கொள்ளப் போவதாகவும் கூறவே அவரும் தனது செல்ல மகளின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவரா என்ன? உடனே சரி என்று சொல்லி விட்டார்
ஏன் என்று கூட காரணம் கேட்காமல் ..


ஆனால் அவர் சசிதரன் திருமணம் முடிந்து போகலாம் என்று சொன்னதை மறுத்தவள் அன்றே செல்லப் போவதாகக் கூறி விட்டாள். அவரும் சரி என்று கூறி விட்டு தனது மனைவியை அழைத்து விஷயத்தைக் கூறி மகளுக்கு ஆதரவாக பேசவும் வேறு வழியில்லாமல் அவரும் சம்மதம் சொன்னதும் ஒரு கடிதம் எழுதி தனது கட்டி வைத்தாள்..அதில் இது தேவிற்கானது.. என கவரில் பெரிதாக எழுதி வைத்துவிட்டு அன்றே அங்கிருந்து சென்று விட்டாள்..



அவள் இத்தனை பார்த்து பார்த்து செய்தும் அவளுக்கு தெரியாமல் அவளைப் பின் தொடர்ந்து சென்றான் ஆதித்தனின் அடியாள் ஒருவன் ...வீட்டில் அத்தனை கார் இருந்தும் பஸ்ஸில் தான் செல்வேன் அதுதான் எனக்கு பிடித்திருக்கிறது என அடம்பிடித்து சென்றாள் அருந்ததி..

தொடரும்..

 
Status
Not open for further replies.
Top