ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் -‌ கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 9

அவள் வெளியே சென்றதில் இருந்து அவளையே ஒருவன் பின்தொடர்வதை கவனிக்கவில்லை அருந்ததி ...
மனப்பாரம் குறைய வேண்டும் என்பதற்காக மெல்ல மெல்ல பாதையில் நடந்து சென்றவள் அருகே வந்த ஒருவன்
"ஏங்க உங்களை ஈவரு கூப்பிடுறார்.." என்று ஒரு பக்கம் கையை நீட்டி காட்ட இவளும் யாராக இருக்கும் என்று திரும்பிப் பார்த்தாள் அந்த திசையை..




அங்கு அவளை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான் ஆதித்தியன்.. அவனைக் கண்டு கோபம் வரவே அவள் இடத்தை விட்டு நகர்ந்து செல்ல போக
"அரு உன் கிட்ட சாரி கேக்கத்தான் வந்தேன் .."என்று கூறியபடியே ஆதித்யன் வர அவளும் நின்று விட்டாள். அந்த சாலை ஆள் அரவமற்று இருந்தது ..


இவளும் ஆதித்யனும் அவளுடன் சற்று முன்னர் பேசியவனும் மட்டுமே இருந்தனர்.. மன்னிப்பு தானே கேட்க போகிறான் கேட்டு விட்டுப் போகட்டும் என்று அமைதியாக நின்று கொண்டாள் ..


அவனருகில் வந்த ஆதித்யன் அவளுடைய கைகளை பிடித்துக் கொண்டு
"அரு.."என்று அழைத்தவன் முகம் இப்போது கோபமாக மாறியது.. அவள் புரியாமல் அவனை பார்க்க "என்னடி என் வலையில் விழ மாட்டேன்னு சொன்ன.. இவ்ளோ சீக்கிரமா விழுந்துட்ட ..நான் மன்னிப்பு கேட்க தான் வந்து இருக்கேன்னு நினைச்சியா ? ம்ஹூம்.."என்று இல்லை என்பது போல் தலையை அசைத்தவன் மேலும் "உன்னை கடத்தியாவது அனுபவிக்கனும்.." என்று கூறி அவளது கைகளை இருக்கமாக பிடித்துக் கொண்டான்.



அருந்ததி திகைத்து நின்றது ஒரு நொடி தான்.. பின் தனக்கு வரப்போகும் ஆபத்தை உணர்ந்தவள் அவனிடம் இருந்து கைகளை விலக்க போராட அவனது பிடியில் இருந்து விலக முடியவில்லை.. அந்நேரம் பின்னால் நின்றவனுக்கு ஆதித்யன் கண்ணை காட்ட அவனோ மயக்க மருந்து தெளித்த ஒரு துணியை அவளது மூக்கில் வைத்தான்..


அவ்வளவு தான் அவளுக்கு தெரியும். அதன் பிறகு விழித்துப் பார்க்க அடுத்த நாள் விடிந்து இருந்தது.. நல்ல வேலை அவள் மயக்கத்தில் இருந்ததால் மயக்கம் தெளிந்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான் ஆதித்யன்.


இப்போது சீட்டில் தலை சாய்த்தபடி கண் மூடியிருந்தவளது எண்ணம் அனைத்துமே சசிதரன் இடம் தான்.. இந்நேரம் திருமணம் நடந்து இருக்கும் என நினைக்கையில் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது..


ஆதித்யனிடம் இருந்து எந்தவித சேதாரமும் இல்லாமல் வந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்வதா இல்லை தன்னவன் இன்று வேறு ஒருத்திக்கு சொந்தமானதை நினைத்து கடவுளிடம் முறையிடுவதா என தெரியாமல் இருந்தவள் இனிமேல் வாழ்க்கை போகும் போக்கில் வாழ முடிவெடுத்து விட்டாள்..


இன்பம் துன்பம் எது வந்தாலும் அதை அனுபவிக்க நான் தயார் என்று இருக்கையில் இருந்து நிமிர்ந்து நின்றவள் மனதில் உறுதி எடுத்துக் கொண்டாள்.



ஒருவழியாக காஞ்சிபுரம் வந்து சேர்ந்தவளை அழைத்து செல்ல வந்து இருந்தான் விஷால் ..
"ஹாய் அண்ணா.." என்று கூறியவளிடம் உயிர்ப்பே இல்லாமல் இருப்பதை பார்த்தவன் மனம் அவளுக்காக வருந்தியது.. அவளிடம் அவன் காரில் வைத்து எதுவும் பேசவில்லை.. அவனுக்கு அனைத்தும் தெரியும்.. ஆதித்தன் அவளை கடத்தியது உட்பட ..



அவனிடம் தான் சுபா சொல்லி இருந்தாள் அல்லவா ..அவனது வீடு இருப்பது செல்வந்தர்கள் வசிக்கும் இடம் ..வீட்டின் முன் காரை நிறுத்தியதும் சுபா ஓடிவந்து தோழியை அணைத்துக் கொண்டாள்.இவளும் அனைத்துக் கொண்டாள்.. சுபாவின் கண்களிலிருந்து தோழிக்காக இரண்டு சொட்டுக் கண்ணீர் வந்தது ...ஆனால் அருந்ததி அழவில்லை..




இப்போது பழைய சிரிப்பு, துள்ளல் எதுவும் இல்லை அவளிடம் ..ஏதோ இழந்ததைப் போல் முகம் இருந்தது ...வெறும் காதல் தோல்வி என்றால் கூட பரவாயில்லை ..ஆனால் அவள் காதல் என்ற பெயரில் ஏமாற்றப் பட்டு இருக்கிறாள்.. அவளுடைய காதலை ஒருவன் அவனுக்காக பயன்படுத்தி இருக்கிறான். இப்போது அவளுக்கு அழக்கூட தோன்றவில்லை என்பதே உன்மை.



அவளது நிலைமையை புரிந்து கொண்ட சுபா உள்ளே அழைத்துச் சென்றாள் அருந்ததியை ...அருந்ததியின் பெற்றோருக்கு அழைத்து அவள் பத்திரமாக வந்து விட்டதாக கூறினாள்..



அதன் பிறகு அவளுக்கு தானே ஊட்டி விட்ட சுபா அவளுக்கு என்று தயார் செய்து வைத்து இருந்த அறைக்கு ஓய்வெடுக்க அனுப்பி வைத்தாள். மனதில் அதிக அளவு தூக்கம் , உடற்சோர்வு ,மயக்கத்தின் வீரியம் இன்னும் சிறிதளவு இருக்கவே என்று சிறிது நேரத்திலேயே நன்றாக உறங்கி விட்டாள்.


அருந்ததி மாலை நேரம் போல் எழுந்து வந்தவள் முதலில் செய்தது விஷாலிடம் கூறி தனக்கு புதிய சிம்கார்டு வாங்கியது தான்... அதன் பிறகு இரவு வீட்டிற்கு அழைத்து தனது புதிய எண்ணையும் வழங்கி விட்டு சிறிது நேரம் பேசிய பின்பே அழைப்பை துண்டித்தாள்.


இப்படியே நாட்கள் யாருக்கும் காத்திருக்காமல் வேகமாக சென்றது.. இப்போது அவள் சசிதரனை நினைத்து அழுவதில்லை.. ஆனால் முன்பு போல் சிரித்து பேசுவது குறைந்து தான் போனது அவளிடம்‌‌... சுபாவிடம் கூட தேவைக்கு மட்டுமே பேசுவாள்..



இரவில் வீட்டினரோடு வீடியோ கால் பேசுவது உண்டு.. விஷாலுடன் அலுவலகம் சென்று விடுவாள்..சில நேரங்களில் போர் அடிப்பது போல இருந்தால் வீட்டுக்கு வந்து சுபாவுடன் வெளியே செல்வாள் ...
கடமையே என வாழ்க்கையை கழிக்கிறாள்..



தேவ் தந்தையிடம் தனது தொலைபேசி எண்ணை வாங்கி தனக்கு அழைப்பான் என ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பாள்.ஆனால் அவன் அழைப்பதாக இல்லை.. இவளும் இது நாள் வரை தானாக அவனை அழைக்கவில்லை.. அவன் கடிதத்தை படித்து இருப்பான் போல.. எனவே தான் கோபமாக இருக்கிறான் என்று நினைத்து தன்னையே தேற்றிக் கொண்டாள்.



அவள் இங்கு வந்து ஒரு மாதம் கடந்து நிலையில் கூட வீட்டில் உள்ளவர்கள் அழைத்தும் சென்னை செல்ல மறுத்து விட்டாள்.. அவர்களை ஒரு நாள் இங்கு வரும்படி அழைக்கவே அவர்களும் வந்து விட்டனர் அவளைப் பார்க்க ..



வந்தவர்கள் அவளுடன் ஒரு நாள் தங்கி விட்டே சென்றனர் ...அவர்கள் முன் தான் கொஞ்சமாவது சிரித்துப் பேசினாள் அவள்.. அப்போதும் அவர்கள் அவளுடைய வித்தியாசத்தை உணர்ந்து
" ஏன் ஒரு மாதிரி இருக்க அரு.." என்று கேட்டனர்..




ஏனேனில் அவள் இப்படி அமைதியாக இருக்கும் ஆள் இல்லையே.. அதற்கு தலைவலி என்று ஒரு காரணத்தை வேறு சொன்னாள் அவள்.. அதன் பிறகு வந்த நாட்களில் அக்கா குழந்தைகளோடு வீடியோ கால் பேசுகையில் மட்டுமே மெல்ல மெல்ல சிரித்து பேச ஆரம்பித்திருந்தாள்..

*******************************


அந்த அலுவலகம் காலை வேளையிலேயே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது‌‌. அது ஒரு ஆடை தொழிற்சாலை. காஞ்சிபுரப் பட்டு அங்கு இருந்து ஏற்றுமதி செய்யப்படும்... மேலும் ஏனைய ஆடைகளும் அந்த இடத்திலேயே நிறைய வேலையாட்களை வைத்து தைத்து ஏற்றுமதி செய்யப்படுவதும் உண்டு..



அதே போல சில நிறுவனங்களில் ஊழியர்களின் உடைகளை இவர்களே டிசைன் செய்து தைத்து கொடுப்பார்கள்.. அதன் முதலாளி தான் விஷால்.. பெரிய அளவிலேயே தொழிற்சாலையை நடத்தி வருகிறான்.. அவனிடம் தான் தொழில் கற்று வருகிறாள் அருந்ததி...



அவளது தந்தைக்கும் ஆடை தொழிற்சாலை ஒன்று இருக்கிறது.. ஆனால் இந்த அளவு பெரிதாக எல்லாம் இல்லை.. அவரின் பல தொழில்களில் இதுவும் ஒன்று.. எனவே அதனை பெரிதாக மாற்ற வேண்டும் என்ற யோசனையுடன் விஷாலிடம் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுக் கொள்கிறாள்..அவளும் ஆர்வமாக கற்றுக் கொள்வதால் எல்லாவற்றையும் அவளுக்கு சொல்லிக் கொடுத்தான் விளக்கமாக.



விஷாலுடன் தான் அன்று காலை ஆஃபீஸுக்கு வந்து இருந்தாள் அவள்.. அந்த தொழிற்சாலை இரண்டாகப் பிரிக்கப்பட்டு இருக்கும்.. ஒன்று ஆடைகள் தைக்கும் இடம் மற்றும் குடோனும் ...அடுத்தது கணக்கு வழக்குகளை பார்க்கும் அலுவலகமும்...



முதலில் வேலை நடக்கும் இடத்திற்கு சென்றாள்.. அனைத்தினையும் பார்வையிட்டு விட்டு வந்து விஷாலின் அறைக்குள் நுழைந்தாள்."
அண்ணா எல்லா வேலையும் கரெக்டா போகுது ..அப்புறம் அந்த வேலை முடியப் போகுது.. வேற ஏதாவது ஆர்டர் இருக்கா?" என்று கேட்க .




"ஐயோ சாரிடா.. சொல்ல மறந்துட்டேன்.. புது ஆர்டர் ஒன்று வந்து இருக்கு.. அதுவும் இது சின்ன ஆர்டர் எல்லாம் இல்லை.. ரொம்ப பெருசு.. சென்னையில இருக்கிற அவங்களோட கடைக்கு நம்ம கிட்ட இருந்து மாசம் மாசம் ஆர்டர் கேட்கிறாங்க.." என்று புன்னகையுடன் கூற அவளையும் தொற்றிக் கொண்டது அந்த புண்ணகை..


தொடரும்...


 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 10

விஷாலிடம் பேசிவிட்டு மகிழ்ச்சியாக வந்து தனது இடத்தில் அமர்ந்தாள் அருந்ததி.. அவளருகே முக்கியமான ஒரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அமுதா தலையை உயர்த்தி அருந்ததியை பார்த்தாள்..
இங்கு வந்ததில் இருந்து அமுதாவிடம் மட்டும் சற்று சகஜமாக பேசுவாள் அருந்ததி.. அலுவலகத்தில் வேறு யாருடனும் அவ்வளவாக அவள் பேசுவதில்லை ...



பழைய அருந்ததி ஆக இருந்து இருந்தால் அந்த இடமே இரண்டு பட்டிருக்கும் அவளது சேட்டைகளினால்‌..... இவள் அவளுடன் பேச காரணமே அமுதா தான் ..அருந்ததியை பார்த்ததுமே ஏதோ ஒருவகையில் அவளை பிடித்துப் போக அவளிடம் பேச்சுக் கொடுத்தாள் அமுதா..ஆனால் அருந்ததி அதிகம் பேசாமல் இருந்தும் அவள் கண்டு கொள்வதாக இல்லை.. அவளிடம் தானாகவே சென்று பேசுவாள் ..நாளாக நாளாக அருந்ததியும் அவளுடன் சற்று இயல்பாக பேச ஆரம்பித்து விட்டாள் என்றே சொல்லலாம்..


அருகே வந்து அமர்ந்த அருந்ததியை பார்த்த அமுதா "என்னடி இன்னைக்கு சந்தோசமா இருக்கிற மாதிரி இருக்கு ?"என்று கேட்க
"ஐயோ அப்படி எல்லாம் இல்லைடி ..புதுசா ஒரு பெரிய ஆர்டர் கிடைச்சு இருக்கு.. அண்ணா சொன்னார்
.அது தான் கொஞ்சம் சந்தோஷம் .."
என்று தனது கைகளால் கொஞ்சம் என்பதைச் செய்து காட்டினாள்..



"புதிய ஆர்டர்னா ஓகே தான் ..பட் ஹெவி வர்க்கா இருக்கும் போல.. ஓ...நோ..." என்று கவலையோடு அமுதா கூற அவளது முகம் போன போக்கை கண்டு சிரித்து விட்டாள் அருந்ததி.. அவளுடைய சிரிப்பை கண்வெட்டாமல் பார்த்த அமுதா "அரு நீ சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்க ..இப்படியே சிரிச்சுக்கிட்டே இருந்தா சூப்பரா இருக்குடி.." என்று கூறியும் விட்டாள்.




அவள் கூறியதை கேட்டதும் தனது சிரிப்பை நிறுத்தி விட்டாள் அருந்ததி.. அவளுக்கு பழைய நினைவுகள் எல்லாம் வந்து இதயம் ரணமாக வலித்தது.. சசிதரனின் சிரித்த முகம் அவள் கண் முன்னே வரவும் திடுக்கிட்டு தான் போனாள் பெண்ணவள்..


" அவன் வேறொரு பெண்ணுக்கு சொந்தமானவன்.. அவனை நினைக்காதே மனமே.." என்று அவளது மூளை எச்சரிக்கை செய்தது அவளுடைய மனதிற்கு..


அவளது சிரிப்பு நின்றதைக் கண்ட அமுதா
" ஐ அம் சாரி அரு.. நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா.. மன்னிச்சுக்கோ டி என்னை."
என்று உண்மையான வருத்தத்தோடு மன்னிப்பு கேட்க "அய்யோ அப்படிலாம் இல்லைடி.. சும்மா தான் ...சரி வேலைய பாரு .."
என்று கூறிவிட்டு தன் வேலையைப் பார்க்கத் தொடங்கி விட்டாள் அருந்ததி.. அதற்கு மேல் அவளிடம் பதில் வராது என்பதை உணர்ந்த அமுதாவும் வேளையில் தனது கவனத்தை செலுத்தினாள்..

**************************


அடுத்து வந்த இரண்டு நாட்களும் எப்போதும் போலவே செல்ல மூன்றாம் நாள் காலை விஷால் அருந்ததியை அலுவலகம் செல்வதற்கு அழைக்கவும்
அங்கு வந்த சுபா
"இன்னைக்கு நானும் அருவும் கோயிலுக்கு போகப் போறோம்..கோயில் போயிட்டு வந்ததிற்கு அப்புறம் அவ ஆபீஸ் வருவா.." என்று விஷாலிடம் கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டு கூற "என்னடி
இவ்வளோ சூடா இருக்க.. நான் உன்கூட கோயிலுக்கு வரலைன்னு கோவமா ..."என்று தனது மனைவியிடம் கேட்க "க்கும்.." என்று தனது முகத்தை வேறு பக்கம் திருப்பினாள் அவள்..



"ப்ளீஸ் டி.. சுபு குட்டி ..இன்னொரு நாள் கூட்டிட்டு போறேன்.. சாரி.. சாரி.. ரியலி சாரி ..கொஞ்சம் வர்க் டா.."என்று தனது காதுகளைப் பிடித்து அவளிடம் மன்னிப்பு வேண்ட அதற்கு மேல் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து விட்டாள் சுபா .. விஷாலும் மென்மையாக அவளை அணைத்து விடுவித்தான்... இருவரின் காதலையும் பார்த்திருந்த அருந்ததி இதமாக புன்னகைத்தாள்.


" அரு‌‌... நீ சுபா கூட போயிட்டு அப்பறமா ஆபீஸ் வந்தா சரி‌... அப்போ நான் போயிட்டு வரேன் ..""
என்று இருவரிடமும் விடை பெற்று சென்றான் விஷால்.. அவன் சென்ற பிறகு இவர்கள் இருவரும் வீட்டை பூட்டி விட்டு கோயிலுக்கு சென்றனர்.. கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு அப்படியே ஆபீஸுக்கு புறப்பட்டுச் சென்றாள் அருந்ததி...


அருந்ததி வருவதை பார்த்த அமுதா " ஏய் என்னடி ..இன்னிக்கு இவ்வளோ லேட்..?" என்று கேட்க
"அதுவா நானும் சுபாவும் கோவிலுக்கு போனோம்.. அதனால தான் ..இப்படி கேட்கிறியே என்ன விசேஷம்?" என்றாள் அருந்ததி அமுதாவிடம் ..



"ஆமா பெரிய விசேஷம் தான் ..அந்த சென்னை பார்ட்டி வந்து இருக்காங்க.."என்று அமுதா கூறவும் "எந்த சென்னை பார்ட்டி?"என்றாள் அருந்ததி புரியாமல்..
"ஐயோ .. அதுதான் ரெண்டு நாளைக்கு முன்னாடி நீ கூட வந்து சொன்னியே.. ஏதோ புது ஆர்டர்னு... அவங்க ரொம்ப ஹான்ட்ஸம்மா இருக்காங்கடி.."என்றாள் அமுதா கனவில் மிதந்த படி ..


அவளை கேவலமான ஒரு பார்வை பார்த்த அருந்ததி "ச்சீ ரொம்ப வடியுது தொடைச்சுக்கோ... பேசாம வேலைய பாருடி.." என்று கூறிய அருந்ததி வேலையில் கவனம் ஆனாள்.. அவள் வேலையை ஆரம்பித்த சற்று நேரத்திலேயே அவளது அலைபேசிக்கு அழைத்தான் விஷால்.. அழைப்பை ஏற்று காதில் வைத்ததும்
" அரு... கொஞ்சம் உள்ளே வாம்மா.." என்று கூறி வைத்து விட அவளும் அவனின் சொல்லிற்கினங்க விஷாலின் அறையை நோக்கி சென்றாள்..


உள்ளே சென்றவள் முதலில் கண்டது விஷாலுடன் சிரித்துப் பேசும் சசிதரனை தான்.. அவனைக் கண்ட நொடி அவளது உலகம் இயங்க மறுத்தது போல் ஒரு பிரம்மை அவளிற்கு..என்ன ரியாக்ஷன் கொடுப்பது என்றே அவளுக்கு தெரியவில்லை.. அதற்குள் அவளைக் கண்ட விஷால் " ஹே வா அருந்ததி.. இவர் மிஸ்டர்.சசிதரன் .. நான் உன்கிட்ட சொன்னேனே..நம்ம கிட்ட பெரிய ஆர்டர் ஒன்னு கேட்டு இருக்காங்கன்னு .. அது இவர் தான்.."என்று அவளுக்கு அறிமுகப் படுத்தி வைக்க.. அப்போது தான் அவள் உணர்ந்தாள் விஷாலிற்கு சசிதரனை தெரியாது என்ற உண்மையை..




அவனுக்கு அவள் காதலித்த விடயம் தெரியும்.. ஆனால் அவன் பெயரோ அவனையோ விஷாலுக்கு தெரியாது.. விஷாலுக்கு மட்டும் அல்ல சுபாவிற்கும் கூட தெரியாது..
தரு என்ற பெயர் மட்டுமே சுபாவிற்கு தெரியும்.. ஏனெனில் எப்போது பார்த்தாலும் அவள் தரு என்றே குறிப்பிடுவாள்.


விஷால் பேசியதில் தன்னை சமாளித்து கொண்டவள் இயல்பாக தனது முகத்தை வைத்து கொண்டு "ஹாய்.." என்றாள்.
சசிதரனோ அருந்ததியை புரியாமல் பார்த்திருந்தான்.
"அப்பறம் மிஸ்டர்.சசிதரன் இது அருந்ததி.எனக்கு தங்கச்சி மாதிரி.
என்னோட மனைவியோட ஃபிரண்ட். இங்கதான் பிஸ்னஸ் பத்தி தெரிஞ்சுக்க வந்து இருக்கா.." என்று சொல்ல
" ஹாய் .."என்று புன்னகை முகமாக அவளிடம் பேசினான் சசி தரன். அவனும் தன்னை முன்பே தெரியும் என்பதை காட்டிக் கொள்ளவே இல்லை என்பதால் இவளும் எதையும் வெளிக் காட்டாமல் அவனைப் பார்த்து சிரித்து வைத்தாள் பதிலுக்கு..


" ஹான்...அப்புறம் இவருக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்காம்..காஞ்சிபுரத்தில் வேற பிஸினஸ் ஆரம்பிக்க போறார் போல .. அவர் இங்கு தங்குவதற்கு வீடு பார்த்து தர சொல்லி கேட்டார்.. நம்ம வீட்டு பக்கத்திலேயே ஒரு வீடு காலியா தான் இருக்கு.. அதை பேசி முடிச்சிட்டேன் நான்.. அவரோட திங்ஸ் எல்லாம் அறேஞ்ச் பண்ண கொஞ்சம் ஹெல்ப் பண்ணும்மா..சுபாவையும் கூட்டிகிட்டு போ.." என்று பேசி முடித்தான் விஷால்..


தலை சுற்றுவது போல் இருந்தது அருந்ததிக்கு.. அவனை விட்டு விலக அவள் நினைத்திருக்க இந்த விதி இப்படி பண்ணுகிறதே என்று தனது விதியை திட்டி தீர்த்தாள் மனதில் தான்..


" அ...அது வந்து அண்ணா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. வேற யாரையாவது.." என்று அவள் கூறி முடிக்கும் முன்னே சசிதரன் இருக்கையை விட்டு எழுந்து விட்டான்.." ஐ அம் சாரி மிஸ்டர். விஷால்.. உங்க தங்கச்சிக்கு எனக்கு ஹெல்ப் பண்றது ரொம்ப கஷ்டம் போல .விடுங்க நான் வேற யார்கிட்டயாவது சொல்லி ஹெல்ப் கேட்கிறேன் ..."என்றான் ஓரக்கண்ணால் அருந்ததியை பார்த்தவாறே..



விஷாலும் இருக்கையை விட்டு எழுந்தவன் "ஐயோ அப்படி இல்லை மிஸ்டர் சசிதரன்.. அவ வேலை இருக்கிறதால தான் அப்படி சொன்னா.. அவ கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவா.." என்று அவனிடம் கூறி விட்டு மீண்டும் அவள் பக்கம் திரும்பியவன் " அரு உன்னோட வேலைய அப்பறம் பாத்துக்கலாம்.. ஒருத்தர் ஹெல்ப் கேட்டா நாம ஹெல்ப் பண்ணனும் ஓகே..." என்று சிறு பிள்ளை போல் எடுத்துச் சொல்ல அன்பாக பேசும் அவனின் சொல்லை தட்ட முடியாத காரணத்தால் வேறு வழியில்லாமல் "ஓகே அப்போ எப்போ போகனும்?" என்று தனது சம்மதத்தை மறைமுகமாக கூறினாள் அவள்..



அதற்கு விஷால் பதிலளிக்கும் முன் சசிதரனே "இன்னைக்கு ஈவினிங்கே வந்து அரேஞ்ச் பண்ணித் தந்தா ரொம்ப ஹெல்ப்பா இருக்கும் ..."என்று அவளை பார்த்தபடியே கூற
அவனை கண்டு கொள்ளாமல் விஷாலிடம் "கொஞ்சம் வேலை இருக்கு ..முடிச்சிட்டு நேரமே வீட்டுக்கு போய் ஹெல்ப் பண்றேன் .."
என்று கூறியவள் அறையை விட்டு வெளியே சென்று விட்டாள்..


அவள் அங்கிருந்து சென்ற பிறகு விஷாலிடம்..
" ரொம்ப தாங்ஸ்.. இந்த ஹெல்பை நான் மறக்கவே மாட்டேன் .."என்று புன்சிரிப்புடன் கூற
"இது எல்லாம் என்ன ஹெல்ப்..தங்குறதுக்கு வீடு தானே பார்த்து தந்தேன்..அப்றம் மிஸ்டர் எல்லாம் வேணாம். பேர் சொல்லியே கூப்பிடுங்க.." என்று விஷாலும் சொல்ல சசிதரனின் தலை சரி என்று ஆடியது ..ஆனால் அவனின் முகத்தில் இருந்த சிரிப்பு மாறவே இல்லை.. அதன் பிறகு சிறிது நேரம் பிஸ்னஸ் விஷயமாக பேசி விட்டு அங்கிருந்து சென்றான் சசிதரன்.

இங்கு அருந்ததியோ அவளது வேலைகளை அவசர அவசரமாக
முடித்துவிட்டு மாலை 4 மணி போல் விஷாலிடம் கூறி விட்டு வீட்டிற்கு சென்றாள்.. வீட்டில் சுபாவிடம் அனைத்தினையும் கூறினாள். ஆனால் அவன் தான் தனது முன்னாள் காதலன் தரு என்பதை மட்டும் கூறவில்லை..



அவளையும் அங்கு செல்வதற்காக அழைக்க "தனக்கு தலை வலிப்பதாகவும் நாளை அங்கு போய் அவற்றை எல்லாம் செய்து விட்டு வரலாம் .."என்று சுபா கூறவே என்ன செய்வது என தெரியாமல் விசாலிற்க்கு மீண்டும் அழைத்தாள் அருந்ததி.. அவனும் "வேறு வழி இல்லை.. நீ மட்டுமாவது சென்று அவனுக்கு உதவி செய்.. பெண்கள் விடயத்தில் அவன் மிக நல்லவன்.." என்று அவனுக்கு நற்சான்றிதழ் வழங்கி அவளை செல்லும்படி கூற மனதுக்குள் அனைவரையும் திட்டி தீர்த்து விட்டு பக்கத்து வீட்டிற்கு சென்றாள்..


போகும் வழியெல்லாம்
" அந்த நாசினி இங்கே வந்திருப்பாளோ ..அவளுக்கு எல்லாம் என்னால் வேலை செய்ய முடியாது..
" என்று தனக்குள் பேசியபடியே சென்றாள்..


அவளால் ஹாசினியின்
நக்கல் பார்வையைத் தான் சகித்துக் கொள்ள முடியவில்லை ..
அவள் இங்கு இருக்கக் கூடாது கடவுளே ..என்று வேண்டிக் கொண்டு சென்றாள்


தொடரும்..




 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 11


ஹாசினி இருக்கக்கூடாது என்று கடவுளை வேண்டி படியே சென்றாள் அருந்ததி.. அவன் வீட்டு வாசலில் நின்று அழைப்பு மணியை அழுத்தலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தவளின் பின்னால் வந்து நின்ற சசிதரன் "கதவு திறந்துதான் இருக்கு.. தாராளமா உள்ளே போகலாம்.." என்று அவளின் காதருகே மெல்லிய குரலில் சொல்ல திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் அவள் ..



பின்னாலிருந்து அவன் பேசுவான் என்பதை அறிந்திராத அவள் அவனின் செய்கையில் பயந்துதான் போனாள்...அவள் திரும்பியதும் அவளைப் பார்த்து புன்னகைத்தவாறு
"நீ வரமாட்டேன்னு நினைச்சேன் ..ஆனா பரவாயில்ல அண்ணன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்குற தங்கச்சியா தான் இருக்க.." என்று வேறு சொல்ல உள்ளுக்குள் கொதித்துப் போனாள் அருந்ததி..


அவளது முகத்தை வைத்தே கோபமாக இருக்கிறாள் என புரிந்து கொண்டவன்
"சரி சரி வா உள்ளே போகலாம் .."
என்று அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்..


அவனுடன் உள்ளே சென்றவளின் கண்கள் வீட்டை சுற்றி நாலாபுறமும் சல்லடை போட்டுத் தேடியது ஹாசினியை தான். ஆனால் எங்கும் அவள் தென்படுவதாக இல்லை ‌.ஆனால் அவளின் தேடுதலை கண்டு கொண்டான் சசி தரன்‌‌..
" ஆமா நீ வந்ததில் இருந்து அப்படி என்னதான் இந்த வீட்டுக்குள்ள தேடுற ?"
என்று அவளை கூர்ந்து பார்த்தபடி கேட்க
" நான்.. நான் என்ன தேடினேன்.. ஒண்ணுமே இல்லையே ..."என்று அவசரமாக சமாளித்தாள்..


"சரி ..சரி நம்பிட்டேன் போதுமா.. இப்ப வீட்ட அரேஞ்ச் பண்ணலாமா?" என்று அவன் கேட்க
"அப்பாடா நாம சொன்ன பொய்யை நம்பிட்டான் ..."என்று பெருமூச்சு விட்டவள் அவனுடன் இணைந்து வேலைகளில் ஈடுபட்டாள்.



அனைத்து பொருட்களும் புதியவையாக இருந்தன.. எல்லாவற்றையும் அதற்கென உள்ள இடங்களில் பார்த்து பார்த்து வைத்தாள் அருந்ததி.. அவள் சொல்வதைக் கேட்டு அவனும் அவளுடன் சேர்ந்து வேலைகளை செய்தான். திடீரென அவளுக்கு ஒரு சந்தேகம் தோன்ற அவனிடம் அதை கேட்டும் விட்டாள்.


"ஆமா இவ்வளோ திங்ஸ் ..அதுவும் எல்லாம் புதுசு வேற..இந்த வீட்டை சொந்தமாகவே வாங்கிட்டீங்களா என்ன?" என்று அவனை பாராமலே எங்கோ பார்த்தபடி கேட்க அவனோ வேலைகளை நிறுத்தி விட்டு அவள் அருகே வந்தான். என்ன சொல்லப் போகிறான் என்று அவனை கேள்வியாக அவள் பார்க்க
"எனக்கு இங்க கொஞ்சம் முக்கியமான வேலைகள் இருக்கு.. அதனால கண்டிப்பா சொந்த வீடு தேவை.. எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல ன்னு தான் இந்த வீட்டை வாங்கி விட்டேன்.."
என்று அவன் கூறி முடிக்க அவளது புருவங்கள் சபாஷ் என்பது போல் வளைந்தது ..



‌ அவளை பார்த்து புன்னகைத்தவன் கிச்சனுக்குள் சென்று காபி தயாரித்து எடுத்து வந்து அவளுகும் ஒன்றை கொடுத்தான்.
அவனிடம் அதனை வாங்கியவள் மறந்தும் கூட அவனுக்கு நன்றி சொல்லவில்லை.


முக்கால்வாசி வேலைகள் முடிந்த நிலையில் தற்போது எஞ்சி இருப்பது அவனது அறையை ஒழுங்கு படுத்தும் வேலை மட்டுமே.. அப்போது இரவு 7 மணிக்கு போல் இருக்கும்.. இடையில் சுபா, விஷால் இருவரும் அவளுக்கு அழைத்து "வேலை எப்படி செல்கிறது ,உனக்கு கஷ்டமாக இருக்கிறதா?" என்று கேட்டனர் ..



அதை எல்லாம் பார்த்தபடி இருந்த சசிதரனோ
" உனக்கு எங்க போனாலும் ரொம்ப நல்லவங்களாவே கிடைக்கிறாங்களே
. அது எப்படி?" என்று கேட்டு விட்டான்..



அவன் நாக்கில் அன்று சனி போலும்..
" நல்லவங்களை சுத்தி நல்லவங்க மட்டும் தான் இருப்பாங்க ..ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு சில நம்பிக்கை துரோகிகளும் வாழ்க்கையில வந்து தான் போறாங்க.. என்னோட வாழ்க்கைலயும் அப்படி ஒரு நம்பிக்கை துரோக, ஏமாற்றுக் காரன் ஒருத்தன் வந்தான்.. ஆனால் கடவுள் என்னை அவன் கிட்ட இருந்து காப்பாத்திட்டார்.


உங்களுக்கு நல்லாவே தெரியும் ..நான் சொல்லத் தேவையில்லை தானே. உங்களுக்கு அவனை நல்லாவே தெரியும். நான் சொல்லத் தேவையில்லை தானே.. புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்.." என்று அவள் பேச பேச
"ஏன்டா அவளிடம் வாயை கொடுத்தோம் என்றானது சசிதரனுக்கு.



என்ன பேசுவது என்று தெரியாமல் தனது அறையை நோக்கி சென்று விட்டான் அதை ஒழுங்கு படுத்த வேண்டி ...அவள் பேசியதற்கு எதுவும் பேசாமல் சென்றவனின் முதுகை வெரித்து பார்த்தவள் அவன் பின்னாலேயே சென்றாள் அவன் அறையை நோக்கி..


அங்கும் இருவரும் எதுவும் பேசாமல் வேலை செய்தனர்.. அவளது மனம்
"ஹாசினி எங்கே என்று கேள்" என சொல்லிக் கொண்டே இருந்தது.. ஆனால் மூளையோ
" வேண்டாம் கேட்காதே. அவன் அவளைப் பற்றி பேசுவதைக் கேட்டால் நீ தாங்க மாட்டாய்.." என்று அவளுக்கு எச்சரிக்கை செய்தது..



அவளது யோசனை படிந்த முகத்தை பார்த்தவன்
"என்கிட்ட ஏதாவது கேட்கணும்னா தாராளமாக கேட்கலாம்.." என்று கூறிவிட அவளும் கேட்டுவிடலாம் என்று முடிவெடுத்தாள்.
"அது... அது ..ஹாசினி.. அது...தான் உங்க வைஃப் .எங்கே? இங்க வரலையா? தனியாகவா இங்க இருக்க போறீங்க?" என்று கேட்டு விட்டாள்.


"நான் ஏன் தனியா இருக்க போறேன் ..அது தான் பக்கத்திலேயே நீ இருக்கியே..." என்று கூற அவனை விழுக்கென நிமிர்ந்து பார்த்தாள்..
" அப்படின்னா பக்கத்து வீட்டில் தான் நீங்க எல்லாரும் இருக்கீங்களே... அதை சொன்னேன் . ஆ அப்புறம் என்னோட வைஃப் இப்ப என் கூட இல்லை.. கொஞ்ச நாள்ல அவளுக்கு பிடிச்ச இடத்துல இருந்துட்டு வரேனு போய் இருக்கா.. அவ சந்தோஷம் தான் என் சந்தோஷம்..


சோ அவளுக்கு பிடித்த இடத்திற்கு அனுப்பி வச்சு இருக்கிறேன்.." என்று அவன் பாட்டுக்கு கூறிக் கொண்டே போக அருந்ததியின் கண்களிலிருந்து அவளது அனுமதி இல்லாமலேயே ஒரு சொட்டு கண்ணீர் வந்தது ...



அதனை அவனுக்கு காட்டாமல் மற்றைய பக்கம் திரும்பிக் கொண்டாள் அவள்..
" அவள் லண்டன் சென்றிருப்பாள் போல.. அவளுக்கு பிடித்த இடம் அது தானே.." என அவள் மனதில் நினைத்துக் கொண்டாள்.


அச்சமயம் கீழே யாரோ அழைக்கும் சத்தம் கேட்க சசிதரன் அறையை விட்டு வெளியே சென்றான் யாரென்று பார்க்க.. அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனது கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டாள் ..
"இதற்குத் தான் நான் கேட்கவேண்டாம் என்று சொன்னேன்.." என அவளது மூளை அவளுக்காக பரிதாபப் பட்டது ..



அவன் சென்ற பிறகு அவளும் அங்கு நிற்காமல் வெளியே சென்றாள். வெளியே சசிதரன் உடன் விஷால் பேசிக் கொண்டு இருந்தான்.. அருந்ததியும் அவர்களின் அருகே சென்று நிற்க "என்னடா ரொம்ப வேலையா?" என்று மென்மையாக அவளிடம் விசாரித்தான் விஷால்..


" அப்படி எல்லாம் இல்லை அண்ணா... நீங்க எங்க?" என்று இழுக்க
"உன்னை கூட்டிட்டு போக தான்.. வேலை எல்லாம் முடிஞ்சதா?" என்று கேட்க
"முடிந்தது.." என்றாள் அருந்ததி..
" ஓகே சசிதரன் நாங்க வீட்டுக்கு போறோம்.." என்று விஷால் கூற





"ரொம்ப நன்றி மிஸ்.அருந்ததி உங்க ஹெல்ப்புக்கு.. ஓகே அப்புறம் பார்க்கலாம் ..."என்று முதலில் அருந்திருக்கு நன்றி கூறியவன் விஷாலை நோக்கி கையை நீட்டினான் ..அவனது கை பற்றி குலுக்கியவன் அவனிடம் விடை பெற்று சென்றான் அருந்ததியையும் உடன் அழைத்துக் கொண்டு..



அவர்கள் அங்கிருந்து சென்ற பிறகு தனது வேலைகளை கவனிக்க தொடங்கி விட்டான் சசிதரன் ..ஆனால் அவனது முகத்தில் இருந்த புன்னகை மாறவே இல்லை.


**********************

அன்று அலுவலகத்தில் மும்முரமாக வேலை செய்து கொண்டு இருந்தவள் முன் வந்து நின்றான் சசிதரன்.. தன் முன் நிழலாட நிமிர்ந்து பார்த்தாள் அருந்ததி..
"ஹாய் மிஸ் அருந்ததி.." என்று அவன் கூற
"ஹாய்.." என்று சொல்லி விட்டு மீண்டும் தனது வேலைகளைப் பார்க்கத் தொடங்கி விட்டாள் அவள் ..



அவளுடைய பக்கத்தில் அமர்ந்திருந்த அமுதா
"ஹாய் சார் என்ன இந்த பக்கம் ?"
என்று ஆர்வமாக அவனுடன் பேச "வேற என்ன வேலை இருக்கப் போகுது .. பிஸ்னஸ் பத்தி பேசத்தான்.." என்று அமுதாவிற்கு கூறியவன் மீண்டும் அருந்ததியின் பக்கம் திரும்பி




"மிஸ் .அருந்ததி கொஞ்சம் வேலை விஷயமா உங்ககிட்ட பேசினும்.. விஷால்க்கு போன் பண்ணேன்.. அவர் இங்கே இல்லையாம்.. சோ உங்க கிட்ட பேசச் சொன்னார் .."என்று கூறிவிட்டு முன்னே நடந்தான்..


அவனது மிஸ். அருந்ததி என்ற அழைப்பு அவளை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.. முன்பு அரு என அழைத்தான்... அதன் பிறகு என்னவென்றால் அதி என்று அழைத்தான்.. ஆனால் இன்று மிஸ்.அருந்ததி என்று அழைக்கிறான்.... என அவனை உள்ளுக்குள் திட்டித் தீர்த்தாள் அருந்ததி..



அவள் அவனிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை..
" அவன் வேறு ஒரு பெண்ணின் கணவன்.. அவளை நினைக்காதே மனமே..."என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள் அவன் பின்னால் சென்றாள்.


‌‌ அவனோ விஷாலின் அறைக் கதவை திறந்து உள்ளே சென்றான்.
ஆனாலும்ஆனாலும் அவன் பின்னே சென்று அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து அவனையும் அமரச் சொன்னாள்.. அதன் பிறகு பிஸ்னஸ் மட்டுமே பேசினாள் அருந்ததி..அவள் அவனது முகத்தைப் பார்த்து நேரடியாக பேசவே இல்லை. அதை அவன் உணர்ந்து கொண்டான் தான்..ஆகவே அவனும் வேறு எதுவும் பேசாமல் தொழிலைப் பற்றி மட்டுமே பேசினான்.


சிறிது நேரத்தின் பின் அவனுடைய மனம் கேளாமல்
"இங்கே எதுக்காக வந்து இருக்க.... எல்லாரையும் விட்டுட்டு இங்க வரதுக்கு அப்படி என்ன காரணம் இருக்கு உன்கிட்ட?"என்று கேட்டான் என்று கேட்டு விட்டான்..


அதில் அவளுக்கும் கோபம் வந்து விட்டது.. அவனால் தான் அவள் இங்கு வந்திருக்கிறாள்.. இத்தனை கஷ்டப் படுகிறாள் ..இது அவனுக்கும் தெரியும்.. தெரிந்தும் இப்படி இருக்கிறானே என அவனை பார்த்து முறைத்தவள்
"ஏன் உங்களுக்கு நான் எதுக்கு வந்து இருக்கேன்னு தெரியாதா ?"என்று கேட்டு வைக்க தெரியாது என தலை அசைத்தான்..


"நிஜமாவே தெரியாதா? இல்லை என் வாயால கேட்க ஆசை படுறிங்களா? அப்படின்னா சொல்றேன் கேட்டுக்கோங்க... எனக்கு நீங்களும் அந்த ஹாசினியும் ஒன்னா வாழறதை பார்க்க முடியல.. ரொம்ப கஷ்டமா இருக்கு.. உண்மையை சொல்லனும்னா வலிக்குது... நானும் சாதாரண மனிதப் பிறவிதானே.. எங்கிருந்தாலும் வாழ்கன்னு சொல்லிட்டு போக முடியாது..



அதனால தான் இங்க வந்து இருக்கேன்.... போதுமா ..."என்று கண்கள் கலங்க ஆக்ரோஷமாக பேசினாள் அருந்ததி... அவன் அவளையே அழுத்தமாக பார்த்தபடி அமர்ந்திருந்தான்.. அவளோ அவனுக்கு முன்னால் கண்ணீர் சிந்தக் கூடாது என்ற உறுதியுடன் கண்ணீரை உள் இழுத்துக் கொண்டாள்..

தொடரும்..


 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 12


அவன் முன்னால் அழக் கூடாது என்பதற்காகவே தனது கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் உள்ளே இழுத்துக் கொண்டாள் அருந்ததி..ஆனால் அவனோ வேறு எங்கும் தனது பார்வையை சிதற விடாது அவளையே தான் பார்த்துக் கொண்டு இருந்ததால் அவளுடைய கண்ணீரையும் கண்டு கொண்டான்.. அதை அவள் தனக்கு தெரியாமல் மறைத்ததையும் கண்டு கொண்டான்..



அவன் ஏதோ பேச வாய் எடுக்க அந்நேரம் கதவை லேசாக தட்டியபடி உள்ளே வந்தான் விஷால் ..அவனைக் கண்டதும் புன்னகையை முகத்தில் படர விட்ட படி "வாங்கண்ணா ..."என்று எழுந்து நின்று அவனை வரவேற்றாள் அருந்ததி.. அவள் தன்னை நொடி நேரத்தில் மாற்றியதையும் கண்டு கொண்டான் சசி தரன்... இருந்தும் அதைக் காட்டிக் கொள்ளாமல் "ஹாய் விஷால் வேலை எல்லாம் முடிஞ்சதா.." என்று அவனிடம் பேச அவர்களது பேச்சு நீண்டு கொண்டே போனது ..


சற்று நேரம் அங்கே நின்றிருந்தவள் விஷாலிடம் வேலை இருப்பதாக கூறி விட்டு சசிதரனை திரும்பியும் கூட பாராது சென்று விட்டாள்.. அதை உணர்ந்தவனும் திரும்பிப் பார்க்காமலேயே விஷாலுடன் பேசியபடியே இருந்தான்.


அங்கிருந்து வந்தவளுக்கு தலை வலிப்பது போல் இருக்கவே கேண்டீன் நோக்கி சென்றாள் காபி குடிக்க எண்ணி... அவளது சோர்ந்த முகத்தைக் கண்டு அவள் பின்னாலேயே அமுதாவும் சென்றாள்.. அமுதா கேண்டீனில் சென்று பார்க்க அங்கு ஓரமாக உள்ள ஒரு இருக்கையில் அமர்ந்து தலையில் கையை வைத்தவாறு இருந்தாள் அருந்ததி..



அமுதாவிற்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது.. அவள் முன்பே யூகித்து இருந்தாள் அருந்ததிக்கு ஏதாவது பிரச்சினை இருக்கும் என்று ...ஆனால் இவள் கேட்டதில்லை ..அத்தனை நெருக்கம் இன்னும் இருவருக்கும் இடையில் வரவும் இல்லை..



அவள் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்த அமுதா "அரு.."என்று மெல்லிய குரலில் அழைத்தாள்.. அவளது குரலில் விழுக்கென நிமிர்ந்து பார்த்தாள் அருந்ததி ...
"நான் கேட்க கூடாது தான் .ஆனா உன்னை பார்க்கும் போது கேட்காமல் இருக்கவும் முடியல.. ஏன் ஒரு மாதிரியா இருக்கே?" என்று தயங்கிய படியே கேட்டாள்.. அதற்கு எந்த பதிலும் அவளிடம் இருந்து வரவில்லை ...அதை உணர்ந்து கொண்டவளோ



" இங்க பாரு அரு நீ என்கிட்ட என்ன பிரச்சினை என்று சொல்ல வேண்டாம்.. ஆனா இப்போ நீ ரொம்ப டிப்ரஷன் ல இருக்கே..என்ன பிரச்சினையா இருந்தாலும் தூக்கி தூர போட்டுட்டு உனக்கு புடிச்ச ஒரு விஷயத்தில் உன்னோட கவனத்தை திருப்பு.. கண்டிப்பா உன்னோட மைண்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்.." என்று கூறி விட்டு அருந்ததிக்கு தனிமை கொடுத்தவள் அங்கிருந்து நகர்ந்து விட்டாள் ..



அவள் சென்ற பின்னும் அவள் கூறிய வார்த்தைகளே அருந்ததியின் காதில் ஒலித்த வண்ணம் இருந்தது .
"தனக்குப் பிடித்த வேலை ஏதாவது செய்ய வேண்டும் "என மனதில் நினைத்தாள் பெண்ணவள்.. அவளுக்கு பிடித்த வேலை என்றால் அது புகைப்படம் எடுப்பது மட்டுமே..



அவள் சில மாதங்களுக்கு முன்பே நினைத்திருந்தாள் ஏதாவது ஒரு காட்டிற்கு அல்லது அழகிய பசுமையான ஒரு இடத்திற்கு சென்று புகைப்படம் எடுக்க வேண்டுமென.. ஆனால் இப்போது எங்கும் செல்ல முடியாத சூழ்நிலை. புதிதாக நிறைய ஆர்டர்கள் வந்திருப்பதால் வேலைகள் அதிகமாக இருந்தன.. எனவே தற்போது வேலைகளில் முழு கவனத்தையும் செலுத்தி விட்டு இன்னும் சில தினங்களில் ஓய்வு எடுத்துக் கொண்டு எங்கேயாவது சென்று வரலாம் என உறுதியாக முடிவெடுத்தாள் அவள்.



" அவனை நினைக்கவே கூடாது ..அவன் முன்னால் கண்ணீர் சிந்த கூடாது ...அது என்னை பலவீனமாக காட்டும்.." என மீண்டும் மீண்டும் தனக்குள் கூறியவள் காபியை பருகி விட்டு அமுதாவின் அருகே வந்து அமர்ந்தவள்
" ரொம்ப நன்றி..." என்று மட்டுமே கூறினாள் கீற்றுப் புன்னகையூடு.


அதனைக் கேட்ட அமுதாவும் பதிலுக்கு புன்னகைத்தாள் அருந்ததியைப் பார்த்து.. இப்போது அவள் முகம் சற்று தெளிந்து இருப்பதைக் கண்டதும் தான் சற்று நிம்மதியாக இருந்தது அமுதாவுக்கு..


இவ்வாறு சில நாட்கள் அருந்ததியின் வாழ்வில் நிம்மதியாக சென்றது. ஏனெனில் சில நாட்களாக சசிதரனை அவள் சந்திக்கவே இல்லை ..ஒருவேளை சென்னை சென்று இருப்பான் போல என்று மனதில் அவள் நினைப்பது உண்டு ..ஆனால் பாலாய் போன காதல் மனம் அவனை தேடுகிறதே.. அதை அடக்கத் தான் அவளுக்கு வழி தெரியவில்லை. அவளே அவளை திட்டிக் கொள்வாள் சில நேரங்களில் அவனை நினைக்காதே என்று..



அன்று மாலை நேரம் போல் சுபாவின் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்தபடி ஹெட்போன் மாட்டிக் கொண்டு பாடல்களைக் கேட்ட வண்ணம் அமர்ந்து இருந்தாள் அருந்ததி.. சுபாவம் விஷாலும் அவனது நண்பன் ஒருவனின் பர்த்டே பார்ட்டிக்கு சென்று இருந்தமையால் தனியாக இருக்க பிடிக்காமல் மொட்டை மாடியில் வந்து அமர்ந்து கொண்டாள் அவள்.


கண்ணை மூடி பாடலின் வரிகளை முணுமுணுத்துக் கொண்டே இருந்தவள் முன் ஏதோ நிலழாட கண்ணை திறந்து பார்த்தாள் அருந்ததி.. அவளின் முன்னால் வசீகரப் புன்னகையுடன் நின்றிருந்தான் அவளின் தரு.. அதாவது சசிதரன்.. தான் கனவுதான் காண்கிறோமா என்று தனது கண்களைத் துடைத்து விட்டு மீண்டும் பார்த்தாள் அவள்.. ஆனால் மாறா புன்னகையோடு அவனே தான் நின்றிருந்தான் அவள் முன்னால்..


ஒரு நிமிடம் அவள் குழம்பிப் போய் விட்டாள்.. அவள் சுபா வீட்டில் தான் இருக்கிறாளா இல்லையா என்று..எனவே இப்போது அவள் தான் இருக்கும் இடத்தை சுற்றிப் பார்த்தாள் அது சுபா வீடு தானா என்று..அது அவள் வீடு தான் என்று உறுதி செய்து கொண்டு தன் முன்னால் நின்றவனை இப்போது கேல்வியாக பார்த்தாள்.


அவளது சிறுபிள்ளைத் தனமான செய்கையைக் கண்டு சத்தமாக சிரித்தான் சசி தரன் ..அவனது சிரிப்பை ரசனையாக ஒரு நொடி பார்த்தவள் உடனே சுதாரித்துக் கொண்டு அவனை முறைத்துப் பார்த்தாள்.அவரது முறைப்பில் தனது சிரிப்பை நிறுத்திக் கொண்டவன்
" என்ன தனியா இருக்கியா?" என்று கேட்டபடி அவள் அமர்ந்திருந்த இருக்கையின் அருகிலுள்ள மற்றொரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்..



அவளோ இருக்கையை விட்டு எழுந்து விட்டாள் இப்போது.. அவளை கேள்வியாக பார்த்தவன் "பக்கத்துல கூட இருக்க பிடிக்கலையா என்ன ?"
என்று கேட்க அவனை வெட்டவா குத்தவா என பார்த்தாள் பெண்ணவள்.. இருந்தும் அவனுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என எண்ணி


‌‌"புடிச்சிருந்தா இருக்க மாட்டேனா ..என்ன புடிக்கல என்றதால தானே விலகி போறேன்.. அப்பறம் இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் பாருங்க ..அடுத்தவ புருஷன் பக்கத்துல உட்கார எனக்கு ஆசை எல்லாம் இல்லை .."என்று படு நக்கலாக பதில் வந்தது அவளிடம் இருந்து..


அவளது பதிலில் கோபம் வருவதற்குப் பதிலாக அவனுக்கு சிரிப்பு தான் வந்தது ..ஆனால் அதை அவளுக்கு தெரியாமல் மறைத்துக் கொண்டான்..
" நீ ஏன் என்னை அடுத்தவ புருஷனா பாக்குற? உன்னோட..." என்று அவன் அவளை பார்த்துக் கண் சிமிட்டியபடி கூற அவள் திரும்பி அவனை முறைத்துப் பார்க்கவும் தனது தலையை கோதியவாறு



"அதுதான்மா உன்னோட ஃபிரண்டா நினைச்சு பக்கத்துல இருக்கலாமே" என்றான் அவன் ..
"எனக்கு உங்களை மாதிரி ஒரு ஃப்ரண்ட் தேவை இல்லை.
" என்றாள் அவளும் சூடாக..
" சரி நான் உன் ஃப்ரண்ட் இல்லை தான் ஒத்துகிறேன் ...ஆனா உன்னோட லவ்வரா கூடவா என்னை பார்க்கக் கூடாது? என்கிட்ட பேச கூடாது?" என்று அவனும் பதிலுக்கு பதில் கேட்டு வைக்க அவளுக்கு தற்போது பேச முடியாத நிலை தான்..


அவன் கூறிய பழைய லவ்வர் என்ற வார்த்தை அவளுல் பல மாற்றங்களை ஏற்படுத்தியது ..
அவன் கூறிய தொணி வேறு அவளை காயப் படுத்தியது.. பழைய லவ்வர் என்றால் இப்போது இல்லை என்பது தான் அதன் அர்த்தம்.. அது அவளை அத்தனை வேதனைக்கு உள்ளாக்கியது ..




அவளது காதல் இடையிலே அர்த்தம் இல்லாமல் போகும் என அவள் கனவா கண்டாள்.. அவனுக்கே ஒரு நிமிடம் தான் சொன்னது தவறோ என்று தோன்றியது அவளது முகத்தை கண்டு.. அப்படி இருந்தது அவளது முகம்..



" ஐ அம் சாரி..."என்று மன்னிப்பும் கேட்டு விட்டான் அவன்.. நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் கண்களில் அத்தனை வழி தென்பட்டது.. அதனை உடனே மறைத்தவள்
" சரி சொல்லுங்க எதுக்காக இந்த டைம்ல இங்க வந்து இருக்கீங்க? அப்புறம் எப்ப வந்தீங்க??"
என்று அவனைப் பார்த்துக் கேட்டாள்...


"சும்மா அதோ அந்த இடத்தில இருந்து பார்த்தேன்..இங்க நீ மட்டும் தான் தனியா உட்கார்ந்து இருந்தே... அதான் அப்படியே குதிச்சு இங்க வந்துட்டேன்.." என்று அவனது வீட்டு மொட்டை மாடியை காட்டினான்..
" ஒரு பொண்ணு தனியா இருந்தா வந்துடுவீங்களா ...அதுவும் இப்படி குதிச்சு ...பாக்குறவங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க?.."
என்று கவலை மறந்து இப்போது அவனிடம் மல்லுக்கு நின்றாள் பழைய அருந்ததியாக மாறி அவனிடம்..



அவள் இப்படி அவனிடம் பேசியதில்லை தான். ஆனால் மற்றவர்களுடன் மல்லுக்கு நிற்பதைக் கண்டு இருக்கிறான் தானே ...எனவே சிரிப்புடன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.. அவனுடைய சிரிப்பு மேலும் அவளது கோபத்தை தூண்டியது ..


"இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க ?நான் என்ன ஜோக்கா சொல்றேன்?" என்று கோவமாக அவனை முறைத்த படி கேட்டாள் ..
"சரி சிரிக்கலை.."என்று அவன் தனது கைகளால் வாயைப் பொத்திக் கொண்டான்.


அவனது அச்செயல் அவளது கோபத்தை இன்னும் அதிகப் படுத்தியது குறைப்பதற்கு பதில்..
அதனால் அவனை திட்டி தீர்த்தாள் .."
நீங்க இங்க இப்படி குரங்கு மாதிரி தாவி வந்தத யாராவது பார்த்தா என்னை பற்றி தான் தப்பா பேசுவாங்க.." என்று கூற
"அப்படி என்ன நான் பண்ணிட்டேன் உன்னை பத்தி தப்பா நினைக்கிற அளவுக்கு?" என்று கூறிய படியே அவள் அருகில் வர அவளோ பின் நோக்கி நடந்தாள்..


"இப்படி கிட்ட கிட்ட வந்தேனா..இல்லை இப்படி உன்னை தொட்டுப் பேசினேனா?" என்று கேட்டவன் அவன் வார்த்தையால் சொன்ன அனைத்தையும் செய்கையால் செய்தான் ..அவளோ அவன் முன்னோக்கி வரவர பின் நோக்கித் தான் சென்றாள்..


ஒரு கட்டத்தில் சுவற்றில் மோதி அப்படியே நின்று விட்டாள்.. அவளது இரு பக்கமும் கையை அரணாக வைத்தவன்
"இதோ இப்படி கிஸ் பண்ணினேனா?"
என்று அவளது கண்ணத்தில் முத்தம் வைக்க தனது இரு கண்களையும் முடிந்த மட்டும் அகல விரித்தாள் அருந்ததி..



அவளது நிலை கண்டு உதடுகள் புன்னகையை மறைத்தவன் மேலும் அவளது உதட்டை நோக்கி குனிந்து "இதோ இப்படி உன்னுடைய இந்த அழகான உதட்டுல கிஸ் பண்ணினேனா..?" என்று கேட்ட படியே முன்னேற சுயம் வந்தவள் தன்னிடமிருந்து அவனை பிரித்து விட்டாள் அவனது கண்ணத்தில் ஒரு அரை....

தொடரும்.....


 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 13


அவள் அவனைத் தள்ளிவிட்டு அறைந்த பின்னர் தான் அவனுக்கு தான் செய்த காரியம் புரிந்தது.. எனவே கண்ணத்தில் கைவைத்த படி அமைதியாக நின்று கொண்டான் அவன் ..அவனை அடித்தும் அருந்ததிக்கு ஆத்திரம் தீரவில்லை.. அவனை நோக்கி சென்று அவனுடைய சட்டை காலரை இரு கைகளாலும் பற்றிக் கொண்டவள்



"ஏன் இப்படி பண்றீங்க.. உங்களுக்கு வெட்கமா இல்லையா? தனியா இருக்கிற பொண்ணு கிட்ட இப்படி நடந்துக்கிறீங்களே..ச்சீ.."என்று நிறுத்தியவள் கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சி வாங்கினாள்..



மீண்டும் அவளே தொடர்ந்தாள்..
" ஒரு பொண்ணு கிட்ட இருக்கிற மனசை பார்க்கவே மாட்டீங்களா எப்பவுமே அவ உடம்பு மேல தானே உங்க எல்லோருக்கும் கண்.
இன்னொருத்தி புருஷனா இருந்துட்டு ...அதுவும் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்பவும் இப்படி நடந்திருக்கிறது அசிங்கமா இருக்கு கேட்கவே... என் கண் முன்னாடி நிக்காம போங்க ...."என்று கத்தினாள் அருந்ததி.


அவள் தன்னை நேரடியாக பொறுக்கி என்று சொல்லாமல் மறைமுகமாகக் குறிப்பிடுகிறாள் என்பதை உணர்ந்தவனுக்கும் கோபம் வந்து விட்டது..
" ஏய் என்னடி விட்டா பேசிட்டே போற.. ஒரு கிஸ் தானே பண்ணேன்.. அதுக்கு இப்படி ஓவரா குதிக்கிற.. நீயும் தானே பேசாம இருந்த.. அப்போ ரசிச்சுகிட்டு இருந்துட்டு இப்போ என்னமோ கற்பே போன மாதிரி துள்ளுற.. நீ என்ன லவ் பண்ற தானே ..அப்புறம் என்ன.." என்றான் கடுப்பாக அவனும்.


"என்ன சொன்ன...லவ் பண்றேனா.. எப்போ உன்கிட்ட நான் சொன்னேன் ..நான் லவ் பண்ணேன் தான் ஆனா இப்போ இல்லை ..உன்னை மாதிரி ஒரு சுயநலமான ஒருத்தன லவ் பண்ணதுக்கு நான் இப்போ வெட்கப்படுறேன்... "என்று கூறக் கூற அவனுடைய கோவம் பல மடங்காக உயர்ந்து கொண்டே போனது..



"நீ ரொம்ப ஓவரா பேசுற ..என்னை லவ் பண்றதுக்கு அடையாளமா தான் இப்படி இருக்க .."என்று அவளை நோக்கி அவன் கையை நீட்டி காட்ட எப்படி என்று அவள் வாய் கேட்காவிடினும் கண்கள் அவனிடம் கேள்வி கேட்டது.. அவன் அதைக் கண்டு கொண்டவன் போல் அதை சொல்லத் தொடங்கினான்.


"எப்பவுமே சோகமாவே சுத்திகிட்டு.. தனியாவே உக்காந்து யோசிச்சு கிட்டு.. அங்க இருக்கிற உன் ஃப்ரண்ட் உட்பட யார் கிட்டயும் பேசாம முன்ன மாதிரி கலகலப்பாய் இல்லாம ஏனோ தானோன்னு தானே இருக்கிற... அதைவிட ஒரு முக்கியமான விஷயம்.. கல்யாணம் வேண்டாம்னு சொல்லி இருக்கே... இது எல்லாம் என் மேல இருக்க லவ்னால தானே .." என்று அவன் கூற அவளது வாய் பூட்டு போட்டது போல் மூடிக் கொண்டது..


அவன் சொல்வதெல்லாம் உண்மை தானே ..அவனிடம் அவனால் என்ன சொல்லி மறுக்க முடியும்.. எனவே அமைதியாக நின்று கொண்டாள் அவள்.


ஆனால் அவள் மனதில் வேறொரு எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது . அவள் திருமணத்திற்கு மறுத்தது அவனக்கு எப்படித் தெரியும் என்பது தான் அவளது யோசனை.. அன்று அவளது பெற்றோர் இங்கு அவளை பார்க்க வந்த போது திருமணம் செய்து கொள்ளும் படி அவளிடம் கேட்க இப்போது எனக்கு எந்த ஐடியாவும் இல்லை என்று மறுத்தாள் அல்லவா அதைத் தான் அவன் சொல்கிறான்..



ஆனால் அவனுக்கு எப்படி ...என்று யோசனையாக இருக்கும் போதே அவனது குரல் அவளது யோசனையை இடை நிறுத்தியது ..அவன் என்ன கூறினான் என அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் அருந்ததி.
" என்ன பேச மாட்டேங்குற ..நான் சொல்றதெல்லாம் உண்மை தானே ..முடிஞ்சா ஒண்ணு செய் ..சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா என் கண் முன்னே வாழ்ந்து காட்டு ..அப்படி நீ செஞ்சிட்டா நீ என்னை லவ் பண்ணலன்னு நான் நம்புறேன்.."
என்று சசிதரன் கூற அவன் கூறிய வார்த்தை அவளை அனலில் இட்டது போல் இருந்தது.



வேறு ஒருவனை திருமணம் செய்ய வேண்டுமா இவனை நினைத்த மனதால் இன்னொருவனை எப்படி நினைப்பது.. நினைக்கையிலேயே உடல் கூசுகியது அருந்ததிக்கு.. நிதர்சனம் அதுதானே.. காலம் முழுக்க இப்படி இருக்க முடியுமா என்ன..



என்றேனும் ஒருவனை மணந்தே ஆக வேண்டும்.. அது எல்லாம் சத்தியமா ..திருமணம் முடிக்காமல் கடைசிவரை இருக்க முடியாதா என்றெல்லாம் அவளது மனம் பலவற்றையும் நினைத்தது.
ஆனால் பெற்றோருக்காக செய்தே ஆக வேண்டும்.. அவனும் திருமணம் முடித்துக் கொண்டு மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழும் போது தான் மட்டும் ஏன் அவனை நினைத்து வாழ்க்கையை தொலைக்க வேண்டும் என்று மனதுடன் சண்டை போட்டவள் உறுதியான முடிவுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்..




அவனோ நக்கல் புன்னகையுடன் அவளையே தான் பார்த்தபடி இருந்தான். அவனது பார்வை அவளை கேலி செய்வதுபோல் இருக்கவே
"நீங்களே சந்தோஷமா இருக்கும் போது உங்களை உண்மையா காதலிச்ச நான் ஏன் இன்னொரு வாழ்க்கை தேடக் கூடாது.. இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க நானும் கல்யாணம் பண்ணி உங்க முன்னாடி சந்தோசமா இருந்து காட்றே.. அப்போ இந்த முகத்தை எங்க கொண்டு போய் வைக்குறீங்கன்னு நானும் பார்க்கிறேன்.." என்று கூறியவள் அவனது முகத்தை பார்க்க அவனுடைய முகம் மாறிய விதத்திலேயே அவளுடைய இதழில் ஒரு வெற்றிப் புன்னகை தோன்றியது...


அதற்கு மேல் அங்கு நிற்காமல் கீழே சென்று விட்டாள் அருந்ததி.
அவள் அங்கிருந்து சென்ற பின்னர் யாருக்கோ அழைத்து சிறிது நேரம் பேசி விட்டு அந்த இடத்தை விட்டு தானும் அகன்றன்
சசிதரன்..
கீழே சென்றவளும் தனக்கு இருந்த கோபத்தில் அப்போதே தந்தைக்கு அழைத்து திருமணத்திற்கு தயார் என்று கூறி விட்டாள்.. அவளுடைய பெற்றோருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை ..பின்னே இருக்காதா அவளது 20 வயதிலிருந்தே அவளுடைய திருமணம் பற்றி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள் அல்லவா ...


இன்று திடீரென சரி என்று சொல்லவும் அவர்களுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை ..பெற்றோருக்காவேனும் திருமணம் செய்ய தான் எடுத்த முடிவு எவ்வளவு சிறந்தது என்று இப்போது உணர்ந்து கொண்டாள் அவள்.


அன்று தலைவலி என்று கூறியவள் அறைக்குள் அடைந்து கொண்டாள். சுபாவும் அதற்கு மேல் அவளை வற்புறுத்த வில்லை.. அவள் திருமணத்திற்கு சம்மதித்த செய்தியை அன்று இரவே சுபாவிற்கு அருந்ததியின் அன்னை அழைத்து கூறியிருந்தார்..


ஆனால் சுபாவிற்கு என்ன சொல்வது என்று தான் தெரியவில்லை.. அவள் தானாக சரி என்று கூறி இருப்பாள் என சுபாவிற்கு தோன்றவே இல்லை.. என்ன நடந்திருக்கும் என்று அருந்ததியிடம் விசாரிக்க முடிவு செய்து கொண்டாள்.. பின் அருந்ததியின் தாயோ சீக்கிரமே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வேறு சுபாவிடம் கூற அவளுக்கோ திக்கென்றானது.. இருக்கின்றன.



அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தவள் அனைத்தையும் விஷாலிடம் கூற அவனும் யோசனையானான்..


அதற்குப் பிறகு வந்த நாட்களில் சசிதரன் வேலை விஷயமாக அலுவலகம் வந்தாலும் அருந்ததி அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை ..அவனை விட்டு சிறிது சிறிதாக விலகி போனாள் அவள்.. அவனோ அவளுடன் பேசா விட்டாலும் அவளை பார்வையாலே தொடர்வதையும் அறிந்திருந்தாலும் எப்போதும் போல இயல்பாகவே நடந்து விடுவாள் அவள்..



இப்போதெல்லாம் வேண்டுமென்றே அவன் முன்னிலையில் அலுவலகத்தில் உள்ளொருடன் சிரித்து பேசுவாள் அவள் . அமுதாவிற்கு தான் அதில் அத்தனை மகிழ்ச்சி...




அவள் அப்படி இருக்க வேண்டும் என எதிர் பார்த்தவள் அவள் தானே..
சசிதரனோ அதைக் கண்டும் காணாமல் சென்று விடுவான். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக பழைய அருந்ததியாக மாறி இருந்தாள்.



சுபாவும் அவளிடம் திருமணம் பற்றி எதுவும் விசாரிக்கவில்லை.. இப்போது அவள் பழையபடி மாறிக் கொண்டு வருவதே பெரிது என நினைத்து எதையும் கேட்டு அவள் மனதை குழப்ப வேண்டாம் என விட்டு விட்டாள்.


இப்படியாக ஒரு மாதம் கடந்து இருந்த நிலையில் ஒரு நாள் அவளுடைய தாய் தந்தை இருவரும் அவளை பார்க்க வேண்டி சுபா வீட்டிற்கு வந்து இருந்தனர்.. இப்போது அவளுடைய திருமண பேச்சை ஆரம்பித்து வைத்தார் அவளது அன்னை பவித்ரா ..
"அம்மாடி அரு.. நீ கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொன்னதும் நாங்க உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து இருக்கும்டா ..தானா தேடி வந்த சம்பந்தம் அவங்களும் பணக்காரங்க தான்.. வீட்டுக்கு ஒரே பையன் ..ரொம்ப குணமான குடும்பம்.. நீ என்னடா சொல்ற .."என்று நேரடியாக அவர் கேட்டு விட ஒரு நொடி அருந்ததி யின் முகம் மாறியது..



பிறகு அவர்களுக்காக முகத்தை சாதாரணமாக வைத்தவள்
"அம்மா நீங்க யாரை பார்த்தாலும் எனக்கு ஓகே.. எனக்கு ஒரு அடிமை சிக்கினா போதும்.." என்று அவள் தான் இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொள்ள பேசினாள்..
அவள் கூறியதை கேட்டு எல்லோரும் சிரிக்க சுபா மட்டும் அருந்ததியை பார்த்தபடி இருந்தாள்.



"பையன் யார்னு நீ பாக்க வேண்டாமடா ?"என்று அவளுடைய தந்தை வேதநாயகம் கேட்க "தேவையே இல்லை.. நீங்க மெரேஜ் எப்போண்ணு சொல்லுங்க நான் வந்து தாலி கட்டிக்கிறேன்.." என்று அவள் கூற அவருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி மகளின் கூற்றில் ..அவர் தான் பார்த்த மணமகன் தனது மகளுக்கு பொருத்தமானவன் என்று மனதில் நினைத்து கொண்டார்..



அவளும் பெற்றோரிடம் யார் மணமகன் , எங்கு இருக்கிறான் ,என்ன செய்கிறான் என்றெல்லாம் கேட்கவில்லை ..அது அவளைப் பொறுத்த வரை தேவையற்ற விடயமும் கூட.. அவர்களும் திருமணம் விரைவிலேயே எடுக்க வேண்டும் என்றெல்லாம் பேசி விட்டு சென்று விட்டனர்..



அடுத்து வந்த இரண்டு நாட்களின் பின் ஒரு நாள் வேலை விஷயமாக அலுவலகம் வந்தான் சசி தரன் ..அன்று அருந்ததிக்கு அவனை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது ..ஏனெனில் விஷால் ஆபீஸில் இருக்கவில்லை.. வேறு வழியில்லாமல் அவன் முன் போய் நின்றாள் அருந்ததி. அவளைக் கண்டதும் மெல்லியதாக புன்னகை செய்து விட்டு தொழில் பற்றி பேச ஆரம்பித்தான்...

தொடரும்..


 
Status
Not open for further replies.
Top