ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

42. Mr & Mrs அர்ஜுன் நாவலுக்கான விமர்சனங்கள்

வாவ் டா ரொம்ப அருமையா முடிச்சிட்ட வாழ்த்துக்கள் 😍😍

ரொம்ப ரொம்ப நன்றி கா. உங்க விமர்சனம் பாத்ததில் மகிழ்ச்சி 😘
 
வணக்கம் சகோதரிகளே ..

#பவாவிமர்சனம்

#மிஸ்டர்_அண்ட்_மிஸஸ்_அர்ஜுன்

#விருட்சம்_கலாட்டா

சுயவரமில்லா சுயாதீன விவாக நேமித்தம்
சுயநலமாய் தென்றலாய் வீசிட..
புயலை செந்தணலாய் காவிட
விருப்பு வெறுப்பு இடைவெளி கேள்வி கணைகள்
யாதோ இங்கே...!!

மனதோடு தோன்றிய நேசயலை ஒன்று
தன் கைவந்தபோது தாவியணைத்திருக்க

கைநழுவிய நேசமலாரை நுகரா மூடி மறைக்க
இடைவெளி குறைந்ததோ காதலுக்கு..

காதல் உணர்ந்தே உணர்த்தப்பட
மூடிய வெண்பனியாய் உறைந்த நிலையோ..!!

அர்ஜூன் பெயருக்கேற்ற விறுவிறுப்பான காண்டிபனே தான்.
தன் காதலை துறந்து தன்னிலை மறுகுவது கவலையே..😐

உணர்ந்த காதலே உண்மை என உணர்ந்தே வாழும் இவனின் காதலுக்கு ஏதிங்கே காலவரையறை. அழகு ஆத்மார்த்தம் இவனின் சுயநலமில்லா மகி காதல். அதோடு இவனின் காதல் வில்லத்தனங்களும் ரசனையே.😘🌺🌺

திஷீ சுயநிலையே இல்லாத பெண்ணோ என நினைக்க தோன்றியது . இவளின் போக்கு எல்லாமே ஆரம்பம் முதல் இறுதிவரை கடுப்பாக இருந்தது. 😗

தன்னிலையை தன் தந்தையிடத்திலே கூறி இருக்கலாமோ என எண்ண தோன்றியது. இவளின் மறைத்த காதலால் விதியே இவளை மீண்டும் கட்டிபோடுவது கவலையும் தருகிறது .😐😐

அருண் நல்ல நேயன் நண்பன் சகோதரன் மாமன் என சொன்னால் மிகையாகாது .💖💖💖

சுபத்ரா காதலோடு வந்தாலும் கவலைப்பட வைத்த பெண். ஆனாலும் இவளின் காதலும் வலியோடு போராடி காற்றாகி போனது வலியே.😐😐😐

ஆசிரியதோழியே..கதைக்கும் பெயருக்கும் மிகவும் பொருத்தம். அதை இடைக்கிடை சொல்லி சென்றது அருமை அழகும் கூட.😘🌺

திருமணம் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் மாற்றத்தை தருவதை அழகாக கையாண்டு இருப்பது அழகுமா. மஞ்சள் கயிறு மேஜிக் இங்கே திருவாளர் அர்ஜூனுக்கே சாலப்பொருந்தும்.🌹🌹

" என்ன மிஸஸ் அர்ஜூன் மிஸ்டர் அர்ஜூனை லவ் பண்றிங்களா என்பதும் ,சொல்லுங்க மிஸஸ் அர்ஜூன்; என கூறி அடிக்கடி நான் உன் கணவன் என நினைக்க வைப்பது அழகு இந்த நாயகனுக்கு.
சில இடத்தில் இவனின் உயர்வை காணும் பொழுது அருமை.👌👏🌹

இரண்டு நிலை காதலை ஒன்றை போராட்டமாகவும், ஒன்றை மறைத்து பின் மறுகி பின் தக்கவைத்து கொள்ள போராடுவது அருமையான கதைக்கரு, இதில் எது ஜெயித்தது என்பது தான் மிகுதி வடிவம்.❤❤

ஆனாலும் மிஸ்டர் அர்ஜூனை இப்படி வதைத்து கதை நகர்த்தி வைத்தது வலி தோழியே. இவனின் ஒழுக்கம் உயிரின் ஓம்பல் தான்
அதற்கு என் தலைசாய்ப்பு👏🌹🌹🌹🌹🌹

அழகான குடும்ப உறவுகளை மையமிட்ட கதை வாழ்த்துக்கள் மா.👏👏

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.👏👏🌹
உங்க விமர்சனமும் கவிதையும் எனக்கு பிடித்த ஒன்று. மிக்க மிக்க நன்றிகள் அம்மா. 😘😍
 
#கௌரிவிமர்சனம்

#videoediting

#மிஸ்டர்_அண்ட்_மிஸஸ்_அர்ஜுன்

அர்ஜுன், திக்ஷியா மிஸஸ் அர்ஜுன்னு கடுப்பா
கூப்பிறது எப்படி காதலா மாறுது அப்படிகறது தான் கதை😁😁😁

அர்ஜுன் - உண்மையாவே ரொம்ப பாவப்பட்ட ஹீரோ, அம்மாக்காக காதலை துறந்து, அவங்க கடைசி ஆசைனு திக்ஷியா கல்யாணம் பண்ணி அந்த வாழ்க்கையிலும் அவனால் ஒட்ட முடியாம சில கொடுமைக்கள் அவளுக்கு செய்தாலும்😒😒😒

மஞ்சள் கயிறு மேஜிக் அவனுக்கும் சீக்கரமாவே வேலை செய்யுது🤩🤩🤩. திக்ஷி மேல அவனை அறியாமல் வரும் காதல், சின்ன விசயத்தில் கூட இருக்கும் அக்கறை, உரிமை உணர்வு எல்லாமே அவளோ அழகு🥰🥰🥰🥰

தன்னிலை இழந்து அவன் அறியாமல் செய்யும் தவறு, அவளை இழந்தோட அவனோட காதலையும் அவனுக்கு அழகா உணர்த்தி விட்டது😍😍😍

இப்ப உணர்த்தி என்ன, சொலமுத்தா போச்சே தான்😅😅😅😅

அவ கிட்ட கூட அவன் அவளை விட்டு கொடுக்காதது….

நீ என் இறந்த காலம் சுபி, அவ என் நிகழ் காலம் & எதிர் காலம்னு சொல்றது…இதில் என்ன பியூட்டினா இப்ப அவன் அவன் காதலை உணர்வே இல்ல❤️❤️❤️❤️

பிரிவுக்கு பிறகு அவன் சொல்லும் முதல் வார்த்தை, நீ இல்லாம, உன் வாசம் இல்லாம என்னால தூங்க முடியல டி அழுகும் போது, ச்சை இந்த ரைட்டர்க்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லனு தான் இருந்தது🙄🙄🙄🙄

அப்ப அப்ப இவன் சொல்லும் "இந்த அர்ஜுனை லவ் பண்றியா" இப்படி கேட்கும் போது எல்லாம் ஒரு ஜில் ஃபீல்😁😁😁😁

இவனை போய் இப்படி செய்ய எப்படி தான் மனசு வந்துச்சோ🤧🤧🤧🤧

அருண் - ஆரம்பத்தில் இவன் ஒரு சைடு கேரக்டர் போல இருந்தாலும், இவன் வேற லெவல்🤩🤩🤩🤩.. இவன் மாதிரி ஒரு ஆள் ரொம்ப பிரிஷியஸ்🥰🥰🥰🥰

திக்ஷி - இவளா எனக்கு லைட்டா பிடிக்கல🤷🏻🤷🏻🤷🏻….

அவன் இன்னொருத்தி காதலிச்சான் தான், அதே போல தான் உண்மையா இவளையும்…..ஆன இவ😒😒😒😒

ஒருத்தனை தான் லவ் பண்ணினா
அதுவும் ரொம்ப வருஷமா, அந்த காதலுக்கு எந்த நியாயமும் செய்யல, அதுக்காக ஒரு சின்ன போராட்டம் கூட இல்ல, அவளோ ஏன் அவ அப்பா கிட்ட கூட அதை வெளி படுத்துல….

இது எதயும் செய்யாம, சும்மா அவன் மேல பழி போட்டு வைக்கரா😏😏😏😏

சுபி - இவளா கூட ஒரு வகையில் சேர்த்துக்கலாம், இவ இவளோட காதலுக்கு போராடின, அது தப்பான வழியில் இருந்தாலும் கூட, ஆன இந்த திக்ஷி🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

அருணாச்சலம் - திக்ஷி அப்பா, இவர் என்ன டிசைன், நன்றி கடனா விட பொண்ணு வாழ்க்கை முக்கியம் இல்லையா சார்🤷🏻🤷🏻🤷🏻🤷🏻….

கார்த்திகேயன் - சூப்பர் அப்பா அர்ஜுன்க்கு & செம்ம மாமனார்🥰🥰🥰🥰

நந்தினி - 🤐🤐🤐🤐

விநாயக் -🤬🤬🤬🤬

ஸ்டோரி கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையல🥰🥰🥰🥰

இந்த ரைட்டர் மேல கொஞ்சம் கோவம், ஒண்ணுமே பண்ணாம இந்த திக்ஷி பிள்ளைக்கு ஓவர் சப்போட்😏😏😏😏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ 💐💐💐💐
மிக்க நன்றிங்க சிஸ். உங்க ஆதரவுக்கும் அன்புக்கும். மிக்க மகிழ்ச்சி 😍
 
😍😍😍😍Mr&Mrs. அர்ஜுன் 😍😍😍😍

#yagnithaavideoediting #yagnithaareview
#விருட்சம்_42
#விருட்சம்_கலாட்டா
#மிஸ்டர்_அண்ட்_மிஸஸ்_அர்ஜுன்

அர்ஜுன் தன் காதலியை விட்டு, தாயின் ஆசைக்காக வேறு ஒருவனின் குழந்தையை சுமக்கும் பெண் அவளை மணக்க நேருகிறது.... விதியோ இல்லை சதியோ அர்ஜுன் விலகி செல்லாமல் கூடவே இருந்து அணுவணுவாக சோதிக்கிறவனே அவளின் உயிர்மூச்சாக ஒவ்வொரு அணுவிலும் இருக்கிறான் என்று தெரியவந்தால் !!!!!

விருப்புக்கும் வெறுப்புக்கும் ஒரு நூல் இடைவெளி மட்டுமே... அந்த வெறுப்பின் உச்சரிப்பே மிஸஸ் அர்ஜுன்.....

அனைத்து தடைகளையும் மீறி மஞ்சள் கயிறு மாயத்தினல் இருவரும் நெருங்கும் வேளை இடியென சிலரின் சதியால் இவரின் வாழ்க்கையும் திசை மாறுகிறது....

இவர்கள் இருவரும் எப்படி இணைத்தார்கள் அர்ஜுன் குழந்தையை ஏற்றுக் கொண்டன என்று மிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் ஆசிரியர் கதையை நகர்த்துகிறார்.....

அர்ஜுன் திஷி ரெண்டு பேரோட காதலும் ரொம்ப அழகு 😍😍😍 அதுவும் குறிப்பா அர்ஜுன் ஓட காதல் நிறைய இடத்துல ரசிக்க வைத்தது...... அதுவும் கேட்கிற டயலாக் ""இந்த அர்ஜுன லவ் பண்றீங்களா மிஸஸ் அர்ஜுன் "" சோ லவ்லி😍😍😍😍 அர்ஜுன் அவன் எதையும் மறைக்காம ஓபனா பேசுறது செம, எல்லா விஷயத்திலும் 😍 திஷி இன்னும் கொஞ்சம் போல் டா எல்லாத்தையும் பேஸ் பண்ணி இருக்கலாம்....என்னதான் அவளுடைய அம்மா தலையிட்டு இருந்தாலும் இவ எதிர்ப்பை காட்டி இருக்கணும்.....

நந்தினி இவங்க என்ன கேரக்டர் பணம்தான் எல்லாமே வா... பெத்த பெண்ணோட லைஃப் எப்படி போனாலும் கவலை இல்லை தனக்கு தான் சுயநலமும் தான் முக்கியம்😤😤😤😤.......

இந்த அர்ஜுனுடைய அம்மாவும் அப்படித்தான் பையனோட ஆசையை கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம அப்படி என்ன சொந்தம் 😤😤...

சுபி இவளை சொல்லி தப்பே கிடையாது இவள ரியலா எனக்கு பிடிச்சு இருந்துச்சு, அப்படியே காதல தக்க வெச்சுக்க அவ போராடினால் அவ்வளவுதான், இதில் அவ அந்த வீணாப்போனவன் கூட சேர்ந்து பண்ணது தான் கொஞ்சம் ஓவர் 😤😤

விநாயக் இவன் எல்லாம் மனுஷ ஜென்மமே கிடையாது 🤬🤬🤬🤬🤬 இவன பத்தி பேச விரும்பல......

கார்த்திகேயன் என்னதான் பையனுக்கு சப்போட்டா இருந்தாலும், மனைவி உடைய ஆசைதான் முதலாவதா இருந்துச்சு.... நீங்களும் காதல் கல்யாணம் பண்ண அவங்க தானே, கொஞ்ச அர்ஜுனுக்கு இன்னும் சப்போர்ட் பண்ணி இருக்கலாம்...... ஆனா திஷி விஷயத்தில் இருந்த சப்போர்ட் சூப்பர் 😍😍

அருண் இதுல ரொம்ப முக்கியமான கேரக்டர்.. இந்த மாதிரி ஆட்கள் நம்ம லைப்ல கிடைக்கிறது மிகப் பெரிய வரம்.... 😘😘😘😘😘😘

அருணாச்சலம் சத்தியமா இவரு பொறுமை யாருக்கும் வராது பா சாமி 😔

ரொம்ப அழகான கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் மேடம்.... 😍😍😍😍😍😍👏👏👏👏👏👏👏
https://pommutamilnovels.com/index.php?threads/mr-mrs-அர்ஜுன்-கதை-திரி.949/post-24235
மிக்க நன்றி சிஸ். உங்க ஆதரவுக்கு. கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி 😘😘😘
 
Top