#priyareviews
கதை எண் 42
Mr. Mrs அர்ஜுன்
அர்ஜுன் மனதில் ஒரு பெண் இருக்க அவனின் வாழ்க்கை துணையாக வேறு ஒருத்தி வர மனதில் இருப்பவளை மறக்கவும் முடியாமல் நிகழ்வில் இருப்பவளை ஏற்கவும் முடியாமல் மருகும் நிலையில் தெளிவான ஒரு முடிவு எடுக்க நினைக்கையில் அவனை மீறி பல விஷயங்கள் அரங்கேறும் நிலையில் அர்ஜுனின் நிலை??
அர்ஜுன் முதலில் இவனை பார்க்கும் போது எல்லாம் அவ்வளவு கோபம் வந்தது
அதுவும் இவன் செய்யும் சில விஷயம் சுத்தமாக ஏற்று கொள்ளவே முடியல
காதல் வந்து விட்டால் மாறி தானே ஆகணும் எதுவுமே கையில் இருக்கும் போது அதன் மதிப்பு தெரியாது என்பது இவன் விஷயத்தில் உண்மை ஆகிறது தொலைத்து விட்டு தேடி அலைய கிடைக்குமா? அர்ஜுனின் கோபம், ஆக்ரோஷம், வெறி, காதல், வஞ்சம், வலி, வேதனை, பாசம் எல்லாமே எக்ஸ்ட்ரீம் லெவல் தான்
ரசிக்கவும் வைக்கிறான் கோபம் கொள்ளவும் வைக்கிறான் கொஞ்சம் ஆன்டி ஹீரோ மெட்டிரீயல் தான் இவன்
நந்தினி இது பொண்ணா பேயா
மனித ஜென்மமே இல்ல அதுவும் சில விஷயம் எல்லாம்
இன்னும் ரெண்டு இருக்குதுங்க ஒர்ஸ்ட் பீஸ்
அதுவும் அதுல ஒண்ணு உண்மையான காதல் என்றால் என்னவென்றே தெரியாது போல ரெண்டுக்கும் சரியான முடிவு தான்
அருணாச்சலம் & கார்த்திகேயன் இருவரும் அருமையான கேரக்டர் இவர்கள் இருவரின் பாசமும், தவிப்பும் சூப்பர்
அருண் இவனை செகண்ட் ஹீரோ என்றே சொல்லலாம்
அவ்வளவு சூப்பர் அதுவும் முக்கியமான இடத்தில் உறுதுணையாக இருப்பதும் ஆருஷ் கிட்ட மாட்டி கொண்டு முழிப்பது பாஸ் பாஸ் என்று பம்முவது
தீக்ஷி என்ன பொண்ணு மா நீ எவ்வளவு கஷ்டம் இவளுக்கு ஒருத்தருக்கு ஒரு பிரச்சனைனா பரவாயில்ல திரும்பும் பக்கம் எல்லாம் கன்னி வெடி என்றால் என்ன தான் செய்வது
விரும்பியது கிடைக்கவில்லை கிடைத்ததும் சரி இல்ல விதி அமைத்து கொடுத்ததும் சரி இல்ல
இவளின் காதலும், வலியும், தவிப்பும், உள்ளே வைத்து மருகுவதும், அவனுக்கு ஒன்று என்றால் எதையும் செய்ய தயாராவதும் இவளின் அந்த காதல் கொஞ்சம் எதிர்பாராத விஷயம் தான்
ஆனாலும் செம
எல்லாம் வலிகளை உள்ளே போட்டு வைத்து அது வெடித்து கிளம்பும் போது அவனின் நிலை? சரி செய்வானா தன் சரி பாதியை?
காதல், ஆக்ஷன், அடாவடி, அதிரடி எல்லாம் கலந்து என்டேர்டைன்மெண்ட் ஸ்டோரி
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
லிங்க்
கதை திரி
pommutamilnovels.com