ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

10.அனலுக்குள் தகித்தேனே- நாவலுக்கான விமர்சனங்கள்

T22

Well-known member
Wonderland writer
ரொம்ப நன்றி சிஸ்😍😍😍😍😍😍😍அழகா ரிவ்யூ பண்ணிட்டீங்க...
 
#அனலுக்குள்_தகித்தேனே
#yagnithaavideoediting
#yagnithaareview

இது ஆன்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் என எல்லாரும் சொல்றாங்க ஆனால் என் கண்ணுக்கு மட்டும் பயபுள்ள லவ் பாயய்யா தெரிகிறான் 🙈🙈🙈

அனலுக்குள் தகித்தேனே அருமையான பொருத்தமான தலைப்பு 😍😍

மிருதுளா அவளுடைய சிறு வயது கனவு, இலட்சியம் அனைத்தும் மருத்துவத்துறை, அதில் வெற்றியும் காண்கிறாள் 😍😍
அனைத்தும் சரியாக சென்று கொண்டிருந்த தருணம் ராம் என்கின்ற புயல் அவள் ஒட்டுமொத்த வாழ்வையும் புரட்டிப் போடுகின்றது... 🤬

மதுவை துரத்தி துரத்தி விரும்பும் ராம், தன் அம்மாவிடம் பகிரங்கமாக தன் காதலை கூறியவன்னால்,தன் அண்ணனிடம் கூற முடியாது, தன் அத்தை மகளை மணப்பது ஏனோ 🤬...??

இந்தர் தந்தையின் மீது அளவில்லா பாசம் கொண்டவன், அவருக்கு கொடுத்த சத்தியத்திற்காக, தன் அன்னையின் வார்த்தையை மறந்தது ஏனோ...??

ஒரு புயல் அடித்து ஓய்ந்தது போல் மதுவின் வாழ்க்கை சீரான சமயம், அவள் வாழ்வின் சாபம் என்ன மீண்டும் வருகின்றான் ராம், தம்பிக்கு உபதேசம் செய்யும் இந்தர் தான் ஒரு குழந்தையின் தந்தை என்ற நிலையை மறந்தது ஏனோ....

இதில் புயல்போல் வருகின்றான் விக்கி மிருதுவை சிறுவயதில் இருந்து விரும்பும் அத்தை மகன்... இவன் எடுக்கும் தீர்க்கமான முடிவினால் பல திருப்பங்கள் 😍😍😍😍.....

கௌசல்யா ஒரு தாயாக இவரின் உணர்வுகள் அருமை, பயம் பதட்டம் இதில் இவர் படும்பாடு கொடுமை... கௌசல்யாவின் அக்கா அருமை எல்லா கஷ்டத்திலும் கூடவே இருந்து நம்பிக்கை தருகிறார் 😍😍

விவரிகா உன் பேர்ல இருக்க விவரம் உனக்கு இல்லாம போச்சே மா 🤧 எல்லாத்துக்கும் எடுத்தேன் கொடுத்தேன்னு பண்ணி இரண்டு பேருடைய வாழ்க்கை போயிருக்கும்.... குழந்தையோ உன் சுயநலத்திற்காக யூஸ் பண்ணிப்பேயா🤬.... உன் அக்காவுக்கு தான் புத்தி இல்லாம இப்படி ஒரு துரோகத்தை பண்ணினால்னா நீயும் அதையே தானே செய்யற....

சாரதி சுயநலம் 🤬🤬🤬🤬

திலோத்தமா நம்ப தெலுங்கானா பொண்ணு வாய தொறந்தா தெலுங்குல அருவி கொட்ட, அது நம்ப மிருதுளாவுக்கு கடுப்பேத்த 🤣🤣🤣 ஒரே குதூகலமா இருந்துச்சு 🤣🤣 திலோ விக்கி பயலே துரத்துவது செம 🤣😍😍

என்னதான் நியாயம் சொன்னாலும் இந்தர் பண்ணது தப்புதான் ரைட்டர் ஜீ... ஆனா இதுல அவனுடைய காதலை உணராதது தான் பிராப்ளம், ஆனா ஒரு கட்டத்துல அவனுடைய ஈகோவை விட்டுட்டு அவன் மனதை திறக்குவது அழகு 😍😍 அதை காலப்போக்கில் அம்மு ஏற்றுக்கொள்வது அழகு 😍😍😍

ரொம்ப தெளிவான எழுத்து நடை, ஒரே மூச்சாக படிச்சு முடிச்சுட்டேன் அவ்ளோ இன்ட்ரஸ்டிங்கா இருந்தது போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍😍😍😍

 
#priyareviews

கதை எண் 10

அனலுக்குள் தகித்தேனே

ரைட்டர் யாரு பா நீங்க 🙄🙄🙄 இதுக்கு மேல ஹீரோயின் ஆஹ் கொடுமை படுத்தவே முடியாது

மிருதுளா ரொம்ப பாவம் பா இவ கஷ்டப்படுவதற்கு என்றே பிறந்து இருப்பா போலவே 🤧🤧🤧 வாழ்க்கையில் கஷ்டம் இருக்கலாம் கஷ்டத்தில் தான் வாழ்க்கையே இருக்கு 😔😔😔 பெண்ணாக பிறந்து விட்டு இவளுக்கு வரும் ஆபத்துகளும் இன்னல்களும் முடியல போதும் ரைட்டர் இவளை விட்டுடுங்க ன்னு கெஞ்சும் அளவுக்கு போட்டு பாடாய் படுத்தி இருக்கீங்க 🤧🤧🤧🤧 நல்ல வேளை இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கி கொண்டு அவ எந்த தப்பான முடிவு எடுக்கல 🙏🙏🙏

ராம் இவன் என்ன டிசைன் என்றே தெரியல 😬😬😬 முதலில் இவன் மீது கோபம் மட்டும் தான் இருந்தது சில விஷயம் தெரிஞ்ச பிறகு நீ எல்லாம் ஏன் டா இன்னும் உயிரோட இருக்கு என்று தான் தோணுச்சு 🤬🤬🤬🤬

விவரிகா இது லூசா லூசு மாதிரி நடிக்குதா வேண்டாம் என்று சொன்னவனை பிடித்து தொங்கி கொண்டு தானும் வாழாமல் பிறருக்கும் கஷ்டம் கொடுத்து கொண்டு 😤😤😤 என்ன பிறவியோ

அர்ச்சனா & சாரதி 😷😷😷😷

இந்தர் இவனை பற்றி தெளிவான முடிவு எடுக்கவே முடியல இவன் நல்லவனா கெட்டவனா வில்லனா ஹீரோவா என்று யோசிச்சே மண்டை காயுது 🤨🤨🤨 அதுவும் இவன் என்ன தான் விளக்கம் சொன்னாலும் சில விஷயம் எல்லாம் ஏற்று கொள்ளவே முடியல எதையும் முழுதாய் தெரிந்து கொள்ளாமல் அடுத்தவர் வாழ்க்கையில் முடிவு எடுக்கும் அதிகாரம் இவனுக்கு யாரு கொடுத்தது செய்வதையும் செய்து விட்டு அதற்கு விளக்கம் வேறு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ லூசு மண்டையன் 😡😡😡 வருண் விஷயத்தில் மட்டும் தான் சரியாக இருக்கிறான் மற்றது எல்லாமே 🙃🙃🙃🙃

ஏகப்பட்ட எழுத்து பிழை அதுவும் முக்கியமா சரி (சேரி ) ரெண்டும் வெவ்வேறு வார்த்தைகள் வெவ்வேறு அர்த்தங்கள் கதை முழுவதும் இதே வார்த்தைகள் கொஞ்சம் சலிப்பை தருகிறது 🙏🙏🙏 சில விஷயங்கள் ரொம்பவே முரண்பாடாக இருந்தது 🙄🙄🙄 நிறைய குழப்பங்கள், நிறைய தடுமாற்றங்கள், கதை போக்கு கொஞ்சம் சரி செய்து இருக்கலாம் என்று தோன்றுகிறது 🤔🤔🤔 இது என் மனதில் தோன்றிய விஷயம் தவறாக இருப்பின் மன்னிக்கவும் 🙏🙏🙏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐

லிங்க் 👇👇👇

 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
#priyareviews

கதை எண் 10

அனலுக்குள் தகித்தேனே

ரைட்டர் யாரு பா நீங்க 🙄🙄🙄 இதுக்கு மேல ஹீரோயின் ஆஹ் கொடுமை படுத்தவே முடியாது

மிருதுளா ரொம்ப பாவம் பா இவ கஷ்டப்படுவதற்கு என்றே பிறந்து இருப்பா போலவே 🤧🤧🤧 வாழ்க்கையில் கஷ்டம் இருக்கலாம் கஷ்டத்தில் தான் வாழ்க்கையே இருக்கு 😔😔😔 பெண்ணாக பிறந்து விட்டு இவளுக்கு வரும் ஆபத்துகளும் இன்னல்களும் முடியல போதும் ரைட்டர் இவளை விட்டுடுங்க ன்னு கெஞ்சும் அளவுக்கு போட்டு பாடாய் படுத்தி இருக்கீங்க 🤧🤧🤧🤧 நல்ல வேளை இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கி கொண்டு அவ எந்த தப்பான முடிவு எடுக்கல 🙏🙏🙏

ராம் இவன் என்ன டிசைன் என்றே தெரியல 😬😬😬 முதலில் இவன் மீது கோபம் மட்டும் தான் இருந்தது சில விஷயம் தெரிஞ்ச பிறகு நீ எல்லாம் ஏன் டா இன்னும் உயிரோட இருக்கு என்று தான் தோணுச்சு 🤬🤬🤬🤬

விவரிகா இது லூசா லூசு மாதிரி நடிக்குதா வேண்டாம் என்று சொன்னவனை பிடித்து தொங்கி கொண்டு தானும் வாழாமல் பிறருக்கும் கஷ்டம் கொடுத்து கொண்டு 😤😤😤 என்ன பிறவியோ

அர்ச்சனா & சாரதி 😷😷😷😷

இந்தர் இவனை பற்றி தெளிவான முடிவு எடுக்கவே முடியல இவன் நல்லவனா கெட்டவனா வில்லனா ஹீரோவா என்று யோசிச்சே மண்டை காயுது 🤨🤨🤨 அதுவும் இவன் என்ன தான் விளக்கம் சொன்னாலும் சில விஷயம் எல்லாம் ஏற்று கொள்ளவே முடியல எதையும் முழுதாய் தெரிந்து கொள்ளாமல் அடுத்தவர் வாழ்க்கையில் முடிவு எடுக்கும் அதிகாரம் இவனுக்கு யாரு கொடுத்தது செய்வதையும் செய்து விட்டு அதற்கு விளக்கம் வேறு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ லூசு மண்டையன் 😡😡😡 வருண் விஷயத்தில் மட்டும் தான் சரியாக இருக்கிறான் மற்றது எல்லாமே 🙃🙃🙃🙃

ஏகப்பட்ட எழுத்து பிழை அதுவும் முக்கியமா சரி (சேரி ) ரெண்டும் வெவ்வேறு வார்த்தைகள் வெவ்வேறு அர்த்தங்கள் கதை முழுவதும் இதே வார்த்தைகள் கொஞ்சம் சலிப்பை தருகிறது 🙏🙏🙏 சில விஷயங்கள் ரொம்பவே முரண்பாடாக இருந்தது 🙄🙄🙄 நிறைய குழப்பங்கள், நிறைய தடுமாற்றங்கள், கதை போக்கு கொஞ்சம் சரி செய்து இருக்கலாம் என்று தோன்றுகிறது 🤔🤔🤔 இது என் மனதில் தோன்றிய விஷயம் தவறாக இருப்பின் மன்னிக்கவும் 🙏🙏🙏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐

லிங்க் 👇👇👇

Thank u so much sis for ur review😍😍
 
விமர்சனம்
கதை : அனலுக்குள் தகித்தேனே (போட்டி கதை விருட்சம் பத்து அனல்)
ஹீரோ : இந்தர் ருத்ர தேஜ்
ஹீரோயின் : மிருதுளா

அருமையான விறுவிறுப்பான கதைகளம். கதை ஆரம்பிக்கறதும் தெரியல முடிவதும் தெரியல அவ்ளோ அழகா இயல்பா இருந்துச்சு.

பொதுவா எல்லா பொண்ணுங்களுக்கும் தன் கனவு நாயகன் இப்படி தான் இருக்கனும்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் அப்படிபட்ட ஆள் தான் இந்தர். யப்பா என்ன ஒரு ஆளுமை, அழகு, கண்ணியம் இவன் கிட்ட. அப்பா கொடுத்த வாக்கை நிறைவேற்றி பெருமை கொள்பவன் ஆனால் அதனால் துரோகத்துக்கு ஆளாகி விடுகிறான். பெரிய பொறுப்பில் அனைத்தையும் தன் கட்டுபாட்டிற்குள் வைத்து இருப்பவன். வீட்டிலேயே இருக்கும் விஷமியை அறியாமல் விட்டது தான் விதியோ??? (அதுவும் நன்மைக்கே) ஆனால் தம்பியின் வாழ்க்கையோ இல்லை மிருதுளா வின் வாழ்க்கையோ? எதற்காகவோ எதையும் ஆராயாமல் மிருதுளாவிற்கு செய்யும் ஒவ்வொரு செயலும் கொடுமையின் உச்சம் தான். கொஞ்சமாவது விசாரித்து பிறகு முடிவு செய்து இருக்கலாம் ஆனால் மிருதுளாவிடம் மட்டும் அதிரடியை கையாண்டதும் மிருகினாவிற்கு எதையும் புரிய வைக்காமல் விட்டது தான் வேதனை. (ரொம்ப பொறுமைசாலி தான் ஆனா காதல் தான் மிருதுளா விஷயத்தில் கண்களை மறைத்து விட்டதோ என்னமோ???🤔😳😏). ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவனே அறியாமல் அவள் மீது காதல் வந்து அது காதல் தான் என்று தெரியாமல் அவளுக்காக துடிக்கும் மனதும் ஒரு அழகு தான். விரும்பிய பெண்ணை, அந்த விருப்பத்தை அறியும் முன்னே தவறாக நினைத்து ஏதோ ஒரு வகையில் மனைவியாக்கி அவளை விலக்கி வைத்து வெறுப்பை பொழிந்த போதும் சரி, உண்மை தெரிந்து அவள் மேல் காதல் கொண்ட பின்னும் சரி... மனைவி என்ற முறையில் கட்டாயப்படுத்தாமல் அவளை விட்டு விலகியே இருந்து எந்த ஒரு சூழ்நிலையிலும் வாய்ப்பை ஏற்படுத்தி தான் செய்ததை நியாயப்படுத்தி எந்த விளக்கமும் யாருக்கும் அளிக்காமல் அதன் போக்கிலே விட்டுவிட்டு மிருதுளா காதலை உணரும் வரை பொறுமையாக, கண்ணியத்துடன் நடந்து கொண்ட இவனின் குணமே அவ்வளவு வியப்பு. இதுக்காகவே இந்த இந்தரை மிகவும் பிடித்துவிட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் நமக்கே இவன் செய்தது சரிதான் என்று யோசிக்கும் அளவிற்கு அவ்ளோ பிடித்து விட்டது இந்தரின் குணமும் பெயரும்😁😜😜👍

மிருதுளா சிறு வயதில் தந்தையை இழந்து தாயால் வளர்க்கப்படும் பெண். அழகு, பொறப்பு நிறைந்த பெண். படிப்பிலும் கெட்டிக்காரி எதற்காகவும் படிப்பில் கவனம் சிதறாமல் போராடி ஜெயிக்கிறாள். காதலிக்கிறேன் என்று ஒருவன் வந்தும் தடுமாறாமல் தன் போக்கில் செல்வது சரியே. ஆனாலும் ஒரு கட்டத்தில் தடுமாற்றம் வந்து காதல் கொண்டாலும் அதில் உண்மையாகவும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் நடந்தது இவளின் தனி சிறப்பு. ஆனால் காதலில் ஒருவர் மட்டும் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பது என்பது நல்லது இல்லையே இங்கு அப்படி தான் மிருதுளா மட்டும் காதலில் ஆத்மார்த்தமாக இருந்து காதலன் எப்படி பட்டவன் என்று தெரியாமல் போனது தான் இவளின் விதியோ? காதல் என்பது ஒரு முறை தான் இனி தனக்கென்று யாரும் வேண்டாம் என்று இருக்கும் இவள் வாழ்க்கையில் இவளே அறியாமல் அனைத்தும் நடந்து முடிந்து வாழ்க்கையே பாதை மாறுகிறது. அது ஏன் என்று தெரிந்து கொள்ள இயலாமல் அதற்கு காரணமான இந்தரை அவன் எது செய்தாலும் அதற்கு காரணம் ஒன்று மட்டும் தான்? என்று அதை கண்மூடித்தனமாக நம்பி அவனை வெறுப்பது தான் விதியின் விளையாட்டு போல. ஊருக்கே உத்தமன் இந்தர், ஆனால் மிருதுளாவிற்கு மட்டும் காட்டுமிராண்டி, அவளை கொடுமைபடுத்தும் மிருகம். அப்படியே இருப்பதாலோ என்னவோ உண்மை எல்லாம் தெரிந்தும் அவனை ஏற்க மறுக்கிறது மனம். அவனே காதலை கூறிய பின்பும் அது அவனின் யுத்தி தான் தன்னை அடைய என்று யோசிக்கிறாளே தவிர அவனோட காதல் மட்டும் புரியவே மாட்டேங்கிறது பேதைக்கு. சில இடங்களில் என்ன பெண் இவள் என்று நினைப்பு வந்தாளும் அவள் வாழ்க்கையில் அனுபவத்த விஷயத்திற்காக தான் அப்படி நடந்து கொள்கிறாளே தவிர உண்மையில் மென்மையான குணவதி தான் இவள் அதை எழுத்தாளர் புரிய வைத்த விதம் தான் அற்புதம். மொத்ததில் எதிர்பாராமல் பாதை மாறினாலும் கடைசியில் சரியான இடத்தை சேர்ந்து விட்டாள் காரிகை😊😊😊👍

ராம் விஷ்வ தேஜ் இவன பத்தி என்ன சொல்றதுனே தெரியல இவன் மேல கோவமும், வெறுப்பும் தான் வருது. துணிச்சு முடிவு எடுக்க வேண்டிய இடத்துல கோழை மாதிரி ஒரு முடிவ எடுக்குறான். ஆனாலும் தான் செஞ்ச தப்ப புரிஞ்சுக்காம தன் மனைவியை தள்ளி வைப்பது, மிருதுளாவை தொல்லை பண்ணுவது, மிருதுவை நினைத்து மனைவி கூட இணைவது என இவன் பல இடத்தில் தவறு செய்கிறான். ஆனால் தன்னால் ஓர் உயர் வர போவதை தெரிந்த பின்பு தன் தவறை உணர்ந்து வாழ முயற்சி செய்வது நன்மையே. கடைசியில் மறைமுகமாக மிருதுளா, இந்தர்க்கு இவன் செய்வது அருமையே.

விவரிகா எதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் இவள் எடுக்கும் பெரிய முட்டாள் தனம் இவள் அறியாமல் மிருதுளா வாழ்க்கையை பாதிப்பது தான் கொடுமை. இவளும் பாவம் தான் இந்த மாதிரி ஒரு கணவன் கிடைத்தால் அவளும் என்ன தான் செய்வாள் சராசரி பெண்ணாக இருந்து விட்டாள். ஆனால் இவள் இல்லை என்றால் மிருதுவின் வாழ்க்கை சிக்கல் தான். சரியோ தவறோ இவள் செய்தது நன்மையிலேயே முடிந்து விட்டது. இதை தாண்டி எனக்கு இக்கதையில் பிடித்த ஜோடி இந்தரின் அப்பா அம்மா தான். இவர்களின் காதல் மிகவும் எதார்த்தமாக ரசிக்கும்படி இருந்தது.

மொத்தத்தில் அருமையான சுவரஸ்யமான கதை. ஆரம்பத்தில் படித்த போது பெரியதாக தெரியவில்லை ஆனால் கதையின் போக்கு அருமையாக இருந்ததால் இந்தர் மீது தாக்கம் ஏற்படுகிறது. உண்மையில் இந்தரை மிகவும் பிடித்து விட்டது.😊😜😜😜 காதாபாத்திரங்கள் அனைத்தும் மனதில் படித்து விட்டதோடு எதார்த்தமாகவும், ரசிக்கும்படியாக கதையை எழுதிய எழுத்தாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் பல👍😊

இக்கதை போட்டியில் வெற்ற பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி😊😆😆❤️❤️❤️💐💐💐🙏🙏🙏

லிங்க்
 
Top