S. Sivagnanalakshmi
Active member
கதை சூப்பர். மிதுவை ராம் தொரத்தி லவ் பண்ணுகிறான். இந்தர் ராம் அண்ணா. ராம் அப்பா அம்மா இறந்து விட அவர்களின் கடைசி ஆசை நிறைவேற்ற மிதுவை கடத்தி வைத்து தம்பிக்கும் தனக்கும் அத்தை பொண்ணை கல்யாணம் செய்கிறான். இந்தர் கல்யாணம் செய்தாலும் உறவு இல்லாமல் பின்னர் கடமைக்கு சேர்கிறான். அவள் பிரையன் ட்யூமர் இருப்பதால் இறந்து விடுகிறாள்.இந்தர் மூன்று வயதில் வருண் இருக்கிறான். இந்தர் மிருதுவை தம்பியை காதலித்தவள் என்று உதவி மற்றும் தொழிலில் ஊக்கம் அளிக்கிறான். தம்பிக்காக அவளை கல்யாணம் செய்கிறான். அவள் அவனை பொறுக்கி என்று திட்டுகிறாள்.ராம் விவரிகா கருத்து வேறுபாடு ஆகி பிரியும் போது திருந்தி இணைகிறார்கள். இந்தர் மிருதுவிடம் காதலை சொல்லுகிறான். இருந்தும் அவள் அவனை பிடிக்காமல் இருக்கிறாள் விக்ரம் அத்தை பையன் வந்து இருவரையும் இணைப்பது செம. அவனுடைய காதல் அழகு. அவளும் புரிந்து கொள்ள திலோ வந்துதன்னவன் உரிமை உணர்வு வருவது சூப்பர். கதை சூப்பர். மிருது இந்தர் இணைவது சூப்பர். மிருது இந்தர் குழந்தை பிறப்பதும் செம. இந்தர் எல்லோருக்கும் உதவுவது செம. நெருப்பாக இருந்தாலும் மிருது விடம் அன்பாக இருப்பது செம. மொத்தத்தில் கதை சூப்பர். வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன் ❤❤