#அனலுக்குள்_தகித்தேனே
முதலில் இந்த தலைப்பு கவர்ந்து தான் வாசிச்சேன்... பொருத்தமான தலைப்பு...
மிருது இவளை வைத்து தான் மொத்த கதையும்...
அப்பா இல்லாது, அம்மாவின் வளர்ப்பில் அருமையான பிள்ளையாக மருத்துவம் படிக்கும் மாணவி... ராம் இவளை காதலிக்க காத்திருந்து பொறுத்து அவனுக்கு ஓகே சொல்றா... அது தான் அவ வாழ்வின் தப்பு....
அவனோ அண்ணன் இந்தரின் கட்டளைகளை மீற முடியாது(!?) அத்தை மகளை கட்டுறான்
தாயின் வார்த்தையை விட தந்தையின் வாக்கு பெரிதென இந்தர் மிருது காதலை கொண்ணுட்டான்...
அனைத்தையும் மீறி அவள் வாழ்வை வாழ முற்படும் போது விடாது கருப்பாக இந்த அண்ணன் தம்பியால் அவள் வாழ்வில் மீண்டும் புயல்
அறிவுகெட்ட கிறுக்கியின் பேச்சால் அவள் கழுத்தில் இந்தரின் தாலி
சிறுவயதில் இருந்து அவள் மேல் நேசம் கொண்டு, நடந்த எதுவும் தெரியாது அவளை கல்யாணம் பண்ண அவளின் அத்தை பையன் விக்கி வரான்...
இந்தரின நண்பன், இந்தரும் அதையே விரும்ப, மிருது மனமோ அவனை தண்டிக்காது விட்டோமே, விக்கியிடம் உண்மை சொல்லாது விட்டோமே என தள்ளாடுது
இந்தர் அப்பா, அம்மா வாக்கு n விருப்பம் என்ன.....!?
திருமணமாகி குழந்தையோடு இருப்பவன் ஏன் அவள் கழுத்தில் தாலி கட்டினான்...!? யார் காரணம்...!?
அவன் மனைவி எங்கே....!?
ராம் ஏன் காதலியை கைவிட்டான்....!? அப்படி என்ன காரணம்....!?
விக்கியிடம் சொன்னால் என்ன நடக்கும் ..... !?
இந்தரை அவள் பழிவாங்குவது நடக்குமா......!?
யாருடன் அவள் வாழ்வு....!?
ஒரு அண்ணன் தங்கையின் இத்து போன பாசம் வேற இருக்கு, எல்லாரையும் நிம்மதி இல்லாம பண்ண... என்னனு எல்லாம் கதையில் வாசிங்க.....
மிருது
பாவம் இவள்... எவ்வளவு கஷ்டம்.. அத்தனையும் கடந்து வந்தும் இவனுங்க அவளை நிம்மதியா வாழ விடலை
பாவம் கௌசி பிள்ளையை வளர்த்து இப்படி எல்லாம் கஸ்டபடனும் அப்படினு இருக்கு
கௌசி அக்கா என்னிலையிலும் தங்கை உடன் நிற்கும் குணம்
ஒரு கட்டத்தில் இவ புளி வாங்க போறேன் பழி வாங்க போறேன் கிளம்பு போது கடுப்பு வந்துச்சு... தேவையா இது அப்படினு...
அவள் மனநிலை பாவம்... அவளின் மாற்றங்கள் சூப்பர்... பொறாமை
அடியே நீயா இது
அவசரகுடுக்கை
ராம்... மனுஷனே இல்ல தெரியுமா நீ எல்லாம்
யாருக்கு தான் டா உண்மையா இருப்ப நீ... லூசே
பெரிய இவன் போல பேச வந்துட்டான்...
இந்தர் இவனே எல்லாம் முடிவு பண்ணி எல்லாம் பண்ணுவான்
♀
♀
♀ கழுத்தை அறுத்துட்டு மருந்து போட்டு இருக்கான்.... உண்மையை சொல்லி இருந்தா அவளே போய் இருப்பா...
தாலியை கட்ட, அறுக்க என்று இவன் கடுப்பின் உச்சியில் தான் நம்மை வச்சு இருக்கான்
என்ன நல்லது பண்ணி என்ன கொஞ்சம் கூட யோசனை இல்ல... எதையும் இவன் இஷ்டத்துக்கு ஆராயாமல் செஞ்சு
♀
♀
♀ நேசத்தை கூட சொல்லல முடியாது தவிப்பது
♀
♀
♀
இவனோட சொல்லாத உணர்வுகள் எல்லாம்
செயல்களுக்கான காரணங்கள் நல்லா தான் நினைச்சு இருக்கான்.... Cute ஃபேமிலி
விக்கி
எதிர்பார்க்கவே இல்லை... எத்தனை வருட காதல்
பாவம் ல அவனும்...
விவரிகா ஏம்மா தாயே நீயெல்லாம் எப்போவுமே தெளிவு இல்ல, சுத்தி என்ன நடக்குதுன்னு ஒழுங்கா பார்க்கிறது இல்ல... இவ இஷ்டத்துக்கு முடிவு பண்ணி கடுப்படிக்கிரா
.. அப்பறம் எல்லாம் பண்ணிட்டு ரோஷம் வேற வரும்
♀
♀
♀ சரியான அவசரகுடுக்கை...
திலோ
nice girl
விருது
வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர் ஜி