Romilarobert
Member
கலியாணசந்தையில் விலை போகமாட்டாள் என்றால் அவள் மகள் இல்லையா? என்ன அப்படியொரு பாரம் அவர்களுக்கு? வேலைக்கு போய் சம்பாதிக்கின்ற பெண்ணவள்,திருமணம் மட்டும் தான் வாழ்க்கையா, ஏன் தான் இந்த பெற்றோரும் சமுதாயமும் இப்படி பெண்ணவளை வதைக்கின்றனர். இதில் மாப்பிள்ளையை பற்றி ஒரு விசாரனையில்லை, வெளியூரில் வேலைக்குப் போனால் அது அவர்களுக்கு கேவலம் , யார் என்று தெரியாதவன் தலையில் கட்டியனுப்புவது மட்டும் கேவலம் இல்லையா? எந்த ஊர் என்ன விலாசம் என்று கூட பார்க்கமாட்டார்களா? இறந்து போனால் கூட இந்த இடத்தில் புதைத்தார்கள் எரித்தார்கள் என்றவொரு அடையாளம் இருக்கும். ஆனால் தாங்கள் பெற்ற மகளை விலாசமே தெரியாமல் அனுப்பிவிட்டாரகளே! இதற்கு தான் சொல்வார்களோ பிள்ளையைப் பெற்று காண்டாமிருகம் என்று வைப்பது என்று