ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகும் சூரியன் நானடி-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 49



பனிமலரின் திருமணத்தில் பார்த்துக்கொண்டவர்கள் அதன் பின் இன்று தான் பனிமலரும் தமிழும் பார்க்கிறார்கள். ஒருவரையருவர் கட்டிப்பிடித்து தங்கள் அன்பை பகிர்ந்தவர்கள் பின் அங்கு ப்ராஜெக்ட் பண்ண வந்த மற்ற கல்லூரி தோழிகளும் அங்கு பணிபுரிபவர்கள் என்று ஒவ்வொருவராக வந்து திருமணவாழ்த்து சொல்லிவிட்டு சென்றனர். அதிலே ஒரு மணி நேரத்திற்கு மேல் சென்று இருந்தது.

அதன் பிறகு ஏற்கனவே திட்டமிட்டபடி பனிமலர், தமிழ் இருவரும் மேலாளரிடம் விடுப்பு சொல்லிவிட்டு கால் டாக்சி புக் செய்து கார் வந்ததும் கம்பெனியின் கேட் அருகே வந்த போது இருவர் பனிமலர், தமிழை வழிமறித்தனர்.

யார் என்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியே சூர்யாவின் பாடிகார்ட்ஸ்சில் இருவர் நின்று இருந்தனர்.

"மேடம் எங்க போகனும் என்று சொன்னால் பாஸ் கிட்ட சொல்லிட்டு போகலாம் கார் ரெடியாக இருக்கு" என்று கார் இருக்கும் திசையை காட்ட அங்கு புத்தம் புதிய விலை உயர்ந்த ஆடிகார் ஒன்று இருக்க அங்கும் இரண்டு பாடிகார்ட்ஸ் நின்று இருந்தனர்.

"நீங்க உங்க பாஸ்சுக்கு பாதுகாப்பு கொடுக்காமல் இங்க எதுக்கு இருக்கிங்க" என்றாள் பனிமலர்.

" பாஸ் தான் உங்கள் பாதுகாப்புக்கு எங்க ஆறு பேரை அனுப்பி இருக்கார் மேடம்" என்றான் ஒரு பாடிகார்ட்.

"ஆறு பேரா?..." என்றாள் தமிழ் வியந்த குரலில்

"எஸ் மேடம்" என்று கேட்டுக்கு வெளியே நின்றிருந்த கால் டாக்சி டிரைவரிடம் பேசிக்கொண்டு இருவர் நிற்பதை காட்டினான்.

" எங்க போகனும் மேடம்" என்று போனை பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்துக்கொண்டே கேட்க

" எங்கேயும் போகலை" என்று பனிமலரின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே சென்றாள் தமிழ்.

"ஏன்டி மலர் ஆறு பேர் பாதுகாப்புக்கு வர அளவுக்கு அவ்வளவு பெரிய விஐபியா நீ இதெல்லாம் ஓவர் டி" என்றாள் தமிழ் கிண்டலாக

அவள் முதுகில் ஒர் அடியை போட்டவள் "நானே வெளியே போகமுடியலையே என்று இருக்கேன் நீ கிண்டல் பண்ணிட்டு இருக்கியேடி" என்றாள் பனிமலர்.

" அடியேய் இந்த அடியை அந்த ராட்சசனுக்கு கொடுத்து கேளு அவன் மேல இருக்கிற கோபத்தை என்கிட்ட காட்டுறடி" என்று கூறிய தமிழ் பனிமலரை தோளோடு அணைத்து "இப்ப என்ன எழில்நிலா பத்தி விசாரிக்கனும் நீதானே வெளியே போகமுடியாது நான் போகமுடியும் இல்ல?...." என்றதும் பனிமலரின் முகம் புன்னகை பூத்தது.

" ஆமாம் இல்ல அப்ப இப்பவே கிளம்புடி" என்றாள் பனிமலர்.

" இப்பவே வேண்டாம் மலர் நான் இப்ப வெளியே போனால் அவங்களுக்கு சந்தேகம் வந்து அந்த ராட்சசனுக்கு சொல்லிட்டா என்ன பண்ணுறது."

" ஆமாம் இல்ல" என்றாள் பனிமலர் சோகமாக

"இன்னைக்கு வேண்டாம் நாளைக்கு நான் கிரிஜாவை கூட்டிட்டு ஹாஸ்டலில் இருந்து நேராக போறேன்" என்றாள் தமிழ்.

பனிமலருக்கு தமிழ் கூறியது சரியாகப்பட " ஓகே" என்றாள். பின் இருவரும் விடுமுறை வேண்டாம் என்று கூறி உள்ளே சென்று தங்கள் பணிகளை செய்ய ஆரம்பித்து விட்டனர்.

மதிய உணவின் போது புதிதாக வந்த படம் ஒன்றைப்பற்றி பேசிக்கொண்டு இருந்த போது அந்த படத்தின் ஹீரோவின் சிக்ஸ் பேக் பற்றி பேசினார்கள். உணவு வேளை முடிந்து வந்தபோது பனிமலரின் எண்ணம் அந்த சிக்ஸ் பேக் பற்றியே ஓடிக்கொண்டு இருந்தது.

சூரியன் சிக்ஸ் பேக் வச்சு இருக்கானா இல்லை எயிட் பேக் வச்சிருக்கானா என்று தோன்றவும் தன் நினைவடுக்கில் சூரியனுடன் இருந்த நேரங்களில் தேட ஒரு முறை கூட அவனை டீசர்ட் இல்லாமல் பார்க்கவில்லை என்பது தெரிந்தது. ஏன் என்ற கேள்வி அவளுக்கு எழுந்த நேரம் அவளின் தோளை தட்டிய நதியா

"என்னடி மலர் உன் ஆள் கூட எந்த நாட்டில் டூயட் பாடிட்டு இருக்க?..." என்றாள்.

நீ வேற நதி இங்க அவன் சிக்ஸ் பேக் வச்சு இருக்கானா எயிட் பேக் வச்சு இருக்கானா என்று தெரியாமல் யோசித்திட்டு இருக்கேன் இதில் எங்க பாரினில் டூயட் பாடுறது" என்றாள் சலிப்பான குரலில்

"என்னடி சொல்லுற மலர் கல்யாணம் ஆகி பத்து நாள் ஆச்சு இன்னும் அவர் என்ன பேக் வச்சிருக்கார் என்று தெரியாது என்று சொல்லுற" என்றாள் நதியா.

அந்நேரம் தமிழ் அவர்கள் அருகில் வந்து என்னடி பேசிட்டு இருக்கிங்க என்றாள்.

"அதுவா இந்த சினிமாவில் எல்லாம் ஹீரோவை காட்டும் போது அவரின் சிக்ஸ் பேக் உடம்பை தானே முதலில் காட்டுவாங்க. ஆனால் நம்ப ரியல் லைப் ஹீரோ சூர்யா சிக்ஸ் பேக் வச்சு இருக்காரா எயிட் பேக் வச்சுயிருக்காரா என்று மலர் பார்க்கவேயில்லையாம்" என்று சோகமாக நதியா சொல்லவும்

" நங்கென்று நதியாவின் தலையில் கொட்டு வைத்த தமிழ் யாருடைய ஹீரோ?... "என்றாள்.

" அய்யோ..." என்று வலியில் அலறிய நதியா தலையை தேய்த்துக்கொண்டே" நம்ப ஹீரோ" என்றாள்.

மீண்டும் அவள் தலையில் கொட்டு வைத்து " இப்ப சொல்லு யாருடைய ஹீரோ" என்றாள் தமிழ்.

தலையை தேய்த்துக்கொண்டே "மலருடைய ஹீரோ" என்றாள் நதியா.

நதியாவின் கல்யாணம் ஆகி பத்து நாள் ஆச்சு என்றதும் பனிமலருக்கு நேற்று இரவு நியாபகம் வந்தது. சூர்யாவின் பேச்சு செய்கை அனைத்தும் நினைவு வர கன்னங்கள் சிவக்க கனவுலகில் அமர்ந்து இருந்தாள் பனிமலர்.

பனிமலர் தலையிலும் கொட்டு ஒன்றை வைத்த தமிழ் "வேலையை நேரத்தில் வம்பு பேசுறது இல்லைனா கனவு காண்பது எவ்வளவு வேலை இருக்கு வாடி" என்று கைபிடித்து அழைத்து சென்றாள்.

தலையை தேய்த்துக்கொண்டே அவள் பின் சென்றாள் பனிமலர். அதன் பிறகு வேலையில் மூழ்கி போயினர். மாலை பனிமலர் பாடிகார்ட்ஸ் சூழ காரில் ஏறிச்சென்றாள். பனிமலர் சென்றதும் தமிழ் ஹாஸ்டல் சொல்ல நதியா, கிரிஜா உடன் பஸ் நிலையம் செல்ல கம்பெனி கேட் தாண்டிய நேரம் அவள் முன் கார் ஒன்று வந்து நின்றது.

தோழிகள் மூவரும் யார் என்று பார்க்க கார் கதவை திறந்து கொண்டு மாதவன் இறங்கி வந்தான். இவன் அந்த ராட்சசன் பிஏ தானே இவன் எதுக்கு இங்க வந்தான். ஒரு வேளை பனிமலரை பார்க்க வந்து இருப்பானே என்று சிந்திக்கும் போதே பின்புற கார் கதவை திறந்தவன் "மேடம் வாங்க" என்று தமிழை அழைத்தான் மாதவன்

"என்னையா?..." என்று வியப்பாக தமிழ் மாதவனை பார்த்து கேட்கவும்

"ஆமாம் தமிழ் மேடம் உங்களை ஹாஸ்டலில் கூட்டிட்டு போய் விடச்சொன்னார் சூர்யா சார்" என்றான்.

"என்னது.... அந்த ராட்சசனா?..." என்று வாய்விட்டே கேட்டு இருந்தாள் தமிழ்.

மாதவன் புரியாமல் *என்ன மேடம் சொன்னிங்க?... "என்று கேட்க தமிழின் அருகில் இருந்த நதியா அவளின் கையை கிள்ளினாள்.

"ஆஆ..." என்று கையை உதறி ஏன்டி என்று நதியாவை பார்த்தபோது தான் அவர்கள் அருகில் பாடிகார்ட்ஸ் இருவர் இருப்பதை கண்ட தமிழ் சட்டென்று பேசுவதை நிறுத்திவிட்டு அமைதியாக காரில் ஏறியமர்ந்தாள்.

கிரிஜா நதியா அங்கிருந்து நகரப்போக "நீங்களும் அதே ஹாஸ்டல் தானே போறீங்க வாங்க" என்று அழைத்தான் மாதவன்.

தமிழும் கண்ணால் வாங்கடி என்று அழைக்கவும் அவர்களும் காரில் ஏறி அமர்ந்தனர்.

தன் போனை எடுத்த தமிழ் வாட்ஸ்அப்பில் பனிமலருக்கு நடந்ததை மெசேஜ் மூலம் டைப் செய்து அனுப்பினாள்.

பனிமலர் போன் கையில் இருந்ததால் மெசேஜ் வந்ததும் ஓபன் செய்து படித்தவளுக்கு அதிர்ச்சியே எதுக்காக இந்த சூர்யா இப்படி செய்யுறான் என்று புரியாமல் குழம்பியவள் நாளை பேசலாம் என்று பதில் அனுப்பி விட்டு போனை ஆப் செய்தவளுக்கு கோபத்தை விட குழப்பம் அதிகமாக இருந்தது.

இதற்கு முன்பு என்றாள் அவன் மீது சந்தேகம் ஏற்பட்டு இருக்கும் ஆனால் இப்போது அவன் அவளை உருகி உருகி காதலிக்கிறான் என்று தெரிந்ததால் அவன் மீது சந்தேகம் வரவில்லை. அவனின் தொழில் முறை எதிரிகள் என்னை தாக்கக்கூடும் என்று தனக்கு பாதுகாப்பு கொடுத்து இருக்கான். ஆனால் தமிழுக்கு எதற்கு பாதுகாப்பு என்பது அவளுக்கு என்ன யோசித்தும் எதுவும் தோன்றவில்லை.

வீடு வந்ததும் அதே சிந்தனையுடன் வீட்டிற்குள் வந்தவளை

"மலர் வா வா எல்லோரும் உன்னை தான் எதிர்பார்த்திட்டு இருக்கோம் என்னமா வரைந்து இருக்க" என்று பனிமலரின் கை பிடித்து பாட்டி மாமியார் அமர்ந்து இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றாள் சாருமதி.

"வா மலருமா நல்லா வரைந்து இருக்க அப்படியே அச்சாக இருக்கு" என்று கூறி கன்னம் வழித்து நெட்டி முறித்தார் பாட்டி.

" ஆமாம் மலர் தத்ரூபமாக வரைந்து இருக்க என்று அம்பிகாவும் புகழ்ந்து கொண்டு இருந்த நேரம் மாடிப்படியில் வேகமாக ஏறும் ஓசை கேட்கவே அனைவரும் திரும்பி பார்க்க சூர்யா ஏறிக்கொண்டு இருந்தான்.

வந்துட்டான் ஆன்ட்டி ஹீரோ இன்னைக்கு இருக்குடா உனக்கு இன்னைக்கு நீ எப்படி முழிக்கப்போற பாரு அதுக்கு தான் இந்த டிராயிங் பிரேம் போட கொடுத்து இருந்தேன் இதோ வரேன்டா என்று மனதில் அவனை வறுத்தொடுத்தவள் சிறிது நேரம் பாட்டி, மாமியார், சாருமதி இடம் பேசியவள் பிரேம் செய்து விட்டு வந்த படத்தை எடுத்துக்கொண்டு அறைக்கு சென்றாள்.

சூர்யா குளியல் அறையில் இருப்பதை அறிந்து வேகமாக அங்கு மாட்டியிருந்த ஓவியம் ஒன்றை எடுத்துவிட்டு தன் ஓவியத்தை மாட்டிவிட்டவளுப்கு சிரிப்பு பீறிட்டது. வாய்ப்பொத்தி நின்றவள் குளியல் அறை கதவு திறக்கும் ஓசை கேட்டதும் சூர்யாவிற்கு முதுகு காட்டி நின்றவள். அவன் அருகில் வந்ததும் வேகமாக சென்று குளியல் அறை புகுந்தாள்.

கதவை தாளிடாமல் மெல்ல திறந்து வெளியே இருந்த சூர்யாவை பார்த்தாள். அவன் அந்த ஓவியத்தை பார்த்து திகைத்து நின்று இருந்தான்.

தன் சிரிப்பு அவனுக்கு கேட்டு விடக்கூடாது என்று குளியல் அறை கதவை தாளிட்டு விட்டு டிரஸ்ஸிங் அறைக்கு உள்ளே சென்று வாய் விட்டு சிரித்தாள் பனிமலர்.

சூர்யா பனிமலர் வந்த அதே நேரத்தில் வீட்டிற்கு வந்து இருந்தான். பனிமலரை வாசல் வரை வந்து சாருமதி அழைத்து சொல்லவே என்னவாக இருக்கும் என்று யோசித்தவன் ஓசையெழுப்பாமல் கதவு வரை வந்த போது பாட்டி, தாய் பாராட்டியதை கேட்ட பிறகே என்ன வரைந்து இருப்பா என்ற யோசனையுடன் வேகமாக மேலே வந்திருந்தான்.

சில நிமிடங்கள் பனிமலர் மேலே வருவாள் என்று குளிக்க சொல்லாமல் இருந்தவன் அவள் வராது போகவும் நாமே கீழே போகலாம் என்று வேகமாக சென்று குளித்துவிட்டு வந்த போது பனிமலர் வந்திருந்தாள். அவள் குளியல் அறை சென்றதும் சுவற்றில் இருந்த ஓவியம் கண்ணில் படவும் திகைத்து நின்றுவிட்டான்.

இந்த ஓவியத்தையா பாட்டி, அம்மா, சாருமதி மூன்று பேரும் புகழ்ந்தார்கள். அப்படி என்ன இந்த ஓவியத்தில் இருக்கு என்று புகழ்ந்தார்கள் என்று குழப்பத்துடன் நின்று இருந்தான் சூர்யபிரகாஷ்.


 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 50



எப்படி பார்த்தாலும் அந்த ஓவியத்தில் சூர்யாவிற்கு வித்தியாசமாக தெரியவில்லை. ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் படம் வரையச்சொன்னால் கூட இதை வரைவார்கள். அதை எப்படி பாராட்டினார்கள் என்று புரியாமல் குழம்பினான்.

சூர்யா குழம்பி நிற்க காரணம் அந்த ஓவியம் பள்ளியில் டீச்சர் வரையச்சொன்னால் வரைவோம் இல்லையா மலை அதன் பின்னால் சூரியன் மலையில் இருந்து வரும் ஆறு ஆற்றோரம் சிறு குடிசை பக்கத்தில் தென்னை மரம் அங்கு ஒரு ஆண் வேலை செய்வது போலவும் ஒரு பெண் நிற்பது போல வரைந்து இருந்தது. அதுவும் நேர்த்தியாக வரையப்படவில்லை. பள்ளி பிள்ளைகள் வரைவது போல தான் இருந்தது.

அதை கண்டு தான் குழம்பி நின்றிருந்தான் சூர்யா.

உள்ளே சென்று சிரித்துக்கொண்டு இருந்தவளுக்கு அன்று அவர்கள் இருவரையும் ஓவியமாக வரைந்த தினம் ஓடியது. அப்போது சூர்யாவை தன்னை காதலிக்க வைத்த பிறகே அந்த ஓவியத்தை அவனுக்கு காட்ட வேண்டும் என்று நினைத்திருந்த நேரத்தில் தான் சாருமதி போன் செய்து அகிலேஷ், ஹரி, விஷால் வந்து இருப்பதை சொன்னதும் அவளுக்கு சட்டென்று அந்த ஐடியா மனதில் உதித்தது.

சில சமயங்களில் எதாவது வரையலாம் என்று நினைக்கும் போது மனதில் என்ன வரைவது என்ற குழப்பம் தோன்றும் அதுபோன்ற நேரங்களில் பள்ளி பிள்ளைகள் போல எதாவது கிறுக்குவாள். மலை காடு வயல் ஆறு என்று கிறுக்கி வைப்பாள்.

அழகான ஓவியங்கள் வரைந்து கிஃப்ட்டாக கொடுப்பது அவளின் பழக்கம். அதேபோல் இதுமாதிரி ஓவியங்களையும் சில சமயங்களில் கொடுப்பாள். அதுவும் இதில் அதிகம் ஏமாறுவது ஆகாஷ், ஹரி தான் ஆசையாக கிஃப்ட்டை பிரித்து பார்க்கும் போது அவர்கள் முகம் காட்டு பாவனையை பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பாள்.

அதுமாதிரி சூர்யாவை செய்ய நினைத்து அவள் வரைந்ததை அகிலேஷ் இடம் கொடுத்து பிரேம் போடும் கடையில் கொடுக்கச்சொன்னவள் கடைக்காரருக்கு போன் செய்து இரண்டு பக்கமும் ஓவியம் வருவது போல் பிரேம் செய்யச்சொல்லி இருந்தாள். பாட்டி, மாமியார், சாருமதி பார்த்தது சூர்யாவையும் இவளையும் வரைந்த ஓவியம்.

அவர்கள் பின் பக்கம் இருந்ததை பார்க்கவில்லை. பின் பக்கம் தான் இந்த ஓவியம் இருந்தது. அதை தான் மாட்டியிருந்தாள் பனிமலர். அவர்கள் இருவரையும் வரைந்த ஓவியம் இப்போது சுவர் பக்கம் இருந்தது. எப்போது அவன் காதல் சொல்லுகிறானோ அப்போது அவனுக்கு அவர்கள் ஓவியத்தை காட்ட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தாள்.

பனிமலர் குளித்து முடித்து வந்த போது அவன் கட்டிலில் அமர்ந்து சிந்தனையில் இருந்தான். அவன் முன் சென்று இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள்.

பனிமலர் வந்து நிற்கவே சிந்தனை கலைந்தவன் அவளை அவனும் முறைப்புடன் ஏறிட்டான். அவன் கோபம் பாட்டி, அம்மா, சாருமதி பனிமலர் நால்வரும் வேண்டுமென்றே தன்னை ஏமாற்ற பிளான் செய்து பேசி இருக்கிறார்கள் என்று முடிவு செய்து இருந்தான் எனவே அவனும் முறைப்புடன் அவளை ஏறிட்டான்.

"எதுக்கு பாடிகார்ட்ஸ் எனக்கு வச்சு இருக்கிங்க?..." என்றாள்.

சூர்யா பதில் சொல்லமல் போனை எடுத்து பார்க்க ஆரம்பித்தான்.

"கேட்கிறேன் இல்ல எதுக்கு எனக்கு பாடிகார்ட்ஸ்" என்றாள் பனிமலர் சற்று கோபத்துடன்.

"அது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை உனக்கே தெரிந்து இருக்கும் நீ இப்போ மிஸஸ் சூர்யபிரகாஷ்" என்றான்.

ராத்திரியில் பனி பனி என்று உருகுறது இப்ப என் பேர் கூடச்சொல்லாமல் மிஸஸ் சூர்யபிரகாஷா உனக்கு ஒரு நாள் இருக்குடா ஆன்டி ஹீரோ என்று மனதில் திட்டிக்கொண்டு இருந்தாள்.

" நான் உங்க மிஸஸ் ஓகே ஆனால் தமிழுக்கு எதற்கு பாடிகார்ட்ஸ்?... "என்றாள்.

"உன்னை தேவையில்லாமல் குழப்பறதும் இல்லாமல் ஏதாவது பிராடு தனம் செய்து உன்னை ஊர் சுத்த கூட்டிட்டு போக சான்ஸ் இருக்கு அதை தடுக்கத்தான் அவளுக்கு பாடிகார்ட்ஸ் போட்டு இருக்கேன். அவங்க கண்ணில் இருந்து தப்ப முடியாது. அப்படியே தப்பினாலும் உன் பாடிகார்ட்ஸ்ச்சுக்கு உடனே இன்பார்ம் பண்ணி உன்னை பாதுகாத்திடுவாங்க" என்றான் சூர்யா.

" உன்னை" என்று ஆத்திரத்துடன் அருகில் இருந்த தலையணையை எடுத்து சூர்யாவை அடிக்க ஆரம்பித்தாள்.

" உனக்கு எவ்வளவு கொழுப்புடா தமிழை தீவிரவாதி ரேஞ்சுக்கு பேசுற அவள் என் பிரண்டுடா அவளுக்கு அப்புறம் தான்" என்று பேசிக்கொண்டு இருந்தவள் அடுத்த வினாடி கட்டிலில் இருந்தாள் பனிமலர் அவளின் அருகில் கோபத்துடன் நின்றிருந்தான் சூர்யா.

"நான் உன்னோட புருஷன்டி எனக்கு பிறகு தான் மத்தவங்க இருக்கனும். இன்னொரு முறை என்னை தவிர வேற யாரும் முக்கியம் என்று இந்த வாய் சொல்லக்கூடாது. நான் மட்டும் தான் உனக்கு எல்லாம் என்று உன்னை உணரவைக்கிறேன்" என்றவன் அவளின் உதட்டை சிறை செய்து இருந்தான்.

சூர்யாவின் இந்த அதிரடியை பனிமலர் எதிர்ப்பார்க்கவில்லை. அவள் கூறிவந்தது தமிழ் வந்த பிறகு தான் நீ வந்தாய் என்று சொல்ல வந்தாள். ஆனால் அதை தவறாக நினைத்து அவன் கோபப்படுவதை கண்டவளுக்கு இதற்கு முன்பு தமிழ், ஆகாஷ் உடன் இருக்கும் போது எல்லாம் அவன் முகம் இப்படி தான் கோபத்தாலும் வார்த்தைகளாலும் அவளை வதைத்து இருக்கிறான்.

அப்படி என்றால் என் மீது இவனுக்கு அதிகமான பொஸசிவ் இருக்கிறது. இவனை தவிர வேறு யாரும் என்னுடன் நெருக்கமாக இருக்கக்கூடாது என்று நினைக்கிறான். காதலுக்கு நட்புக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் இருக்கிறானே இவனை என்ன செய்வது என்று சிந்தனையில் இருந்தவளின் உதட்டை அதிரடியாக சிறை செய்திருந்தான் முதலில் அதிர்ந்தாலும் அவனுக்கு எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை பனிமலர்.

அவளிடம் எதிர்ப்பை எதிர்பார்த்தவனுக்கு அவளின் அமைதி என்னவோ செய்தது. நீ என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள் என்பது போல் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருந்ததால் அவளிடம் இருந்து விலகி வேகமாக அறையை விட்டு வெளியே சென்றவனுக்கு தன் மீதே கோபம் வந்தது. திகட்ட திகட்ட காதலோடு வாழ்க்கை தொடங்கனும் என்று காத்திருக்கிறவன் செய்யுற செயலா இது என்று தன்னையே திட்டிக்கொண்டு மாடியில் இருந்த ஜிம் அறையில் நுழைந்த இருந்தான் சூர்யா.

இங்கே பனிமலர் அவன் விட்டு சென்ற நிலையிலே அப்படியே கண்மூடி இருந்தவளுக்கு சூர்யா ஏன் இப்படி இருக்கிறான் என்று குழப்பத்தில் இருந்தாள்.

நான் விரும்புறது அவனுக்கு நிச்சயதார்த்தம் அப்ப நடந்துகிட்டதிலேயே தெரிந்து இருக்கும். அவனுக்கும் என் மீது காதல் இருக்கு அதை ஏன் சொல்லாமல் இருக்கிறான். அவன் காதலை சொன்னால் எல்லா பிரச்சினைகளும் சரியாகிவிடும். சீக்கிரம் நானே இவனிடம் பேசவேண்டும் அதற்கு முன் எழில்நிலா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தவள் தன்னை சரி செய்து கொண்டு கீழே சென்றாள்.

இரவு உணவுக்கு சூர்யா வரவில்லை பனிமலர் சாப்பிட்டுவிட்டு வந்து படுத்த நீண்ட நேரம் கழித்து வந்தவன் பனிமலர் பக்கத்தில் படுத்து அவள் உறக்கத்தில் இருக்கிறாள் என்று முந்தைய இரவுகள் போல பேசினான். "சாரிடி சாரி" என்றவன் பனிமலர் நினைத்ததை தான் கூறிக்கொண்டு இருந்தான். தன்னை விட ஆகாஷ், தமிழ் அவளுடன் நெருக்கமாக இருப்பது பொறாமையாக இருக்கு என்று அவனும் கூறிக்கொண்டு இருந்தான் பனிமலர் கண்மூடி கேட்டுக்கொண்டு இருந்தாள்.

மறுநாள் முந்தைய தினம் போல அவளை கண்டு கொள்ளவில்லை. இன்று அவளுடன் காரில் வரவில்லை. கம்பெனி சென்றவள் வேலையில் மூழ்கி மதிய உணவு நேரத்தில் உணவை வேகமாக முடித்தவர்கள் பனிமலர், தமிழ், கிரிஜா, நதியா நால்வரும் எழில்நிலா பணிபுரிந்த கம்பெனி சென்று விசாரிக்க என்ன செய்யலாம் என்று பேசிக்கொண்டு இருந்தனர்.

கிரிஜா, நதியாவிற்கு இவர்கள் முழுவதும் கூறியிருக்கவில்லை. எழில்நிலா, அரவிந்த் எங்கு சென்று இருக்கிறார்கள் என்று விசாரிக்க என்று மட்டும் சொல்லியிருந்தார்கள். இப்போது என்ன செய்யலாம் என்று பேசிக்கொண்டு இருத்த போது நதியா தான் முதலில் சொன்னாள்.

"ஏய் இந்த வெள்ளிக்கிழமை நம்ப காலேஜ் போய் நம்ப இந்த மாதம் செய்த ப்ராஜெக்ட் சமிட் பண்ணனும் இல்ல அப்ப நீங்க வெளியே போகலாம்" என்றாள்.

அதை கேட்ட பனிமலர் "ஏய் அங்கயும் இந்த பாடிகார்ட்ஸ் வருவாங்கடி எப்படி வெளியே போகமுடுயும்" என்றாள்.

"நீங்க இப்படியே போனால் தானே உங்களை விட மாட்டாங்க நீங்க கெட்டப் சேஞ்ச் பண்ணிட்டு போனால் எப்படி கண்டு பிடிப்பாங்க" என்றாள் கிரிஜா.

"ஏய் சூப்பர் ஐடியா" என்று நதியா கிரிஜாவுடன் ஐபை கொடுத்து விட்டு பனிமலர், தமிழை பார்த்தாள். அவர்கள் யோசனையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

" என்னடி இரண்டு பேரும் அமைதியாக இருக்கிங்க" என்றாள் நதியா.

" என்ன கெட்டப்பில் போகறது என்று யோசிக்கிறேன்" என்றாள் தமிழ்.

"இதில் என்ன யோசிக்க இருக்கு இருக்கவே இருக்கு பர்தா அதை வாங்கி போட்டுட்டு போங்கடி" என்றாள் கிரிஜா.

"திடீரென பர்தா போட்டால் கண்டுபிடிக்க மாட்டாங்களா?..." என்று பனிமலர் கேட்கவும் சிறிது நேரம் அமைதியாக இருந்தது அந்த இடம். பின் பனிமலரே அதற்கு ஒரு தீர்வை சொன்னாள்.

" ஏய் நம்ப காலேஜில் மூன்றாவது வருடம் ட்வின்ஸ் இரண்டு பேர் பர்தா போட்டுட்டு வருவாங்களே என்றதும் மற்ற மூவரும் ஒரே நேரத்தில் ஹே.... என கத்தி இருந்தனர்.

அதன் பிறகு வேகமாக பிளான் போடப்பட்டது. அதன் படி நாளை கிரிஜாவும் நதியாவும் விடுமுறை எடுத்துக்கொண்டு ஹாஸ்டலில் இருந்து காலேஜ் சென்று அந்த இருவரிடமும் பேசி மறுநாள் இரண்டு பர்தா எடுத்துக்கொண்டு வரவேண்டும் பின் அவர்கள் ஸ்கூட்டியையும் கொடுக்க வேண்டும். பனிமலர், தமிழ் இருவரும் வெளியே சென்று திரும்பி வரும் வரை அவர்கள் வகுப்புக்கு வெளியே வரக்கூடாது என அவர்களிடம் சொல்லி சம்மதிக்க வைக்க வேண்டும். முக்கியமாக அவர்கள் இருவர் தவிர வேறு யாருக்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என முழுமையான திட்டங்களை தீட்டி மிகவும் சந்தோஷமாக அன்றைய வேலை முடித்து தங்கள் இருப்பிடம் சென்றனர்.

அன்றைய இரவும் சூர்யா மற்றைய நாள் போல கழிய மறுதினம் கம்பெனி வந்தவர்கள் கிரிஜா , நதியா போனுக்காக காத்திருந்தனர். அவர்களும் விரைவிலேயே போன் செய்து எல்லாம் ஓகே என்று கூறியிருந்தனர்.

அன்றைய பொழுது வேலையிலும் சிந்தனையிலும் கழித்தவர்கள் மறுநாள் திட்டமிட்டபடி எல்லாம் நடக்கவேண்டும் என்று பல கடவுளிடம் அப்ளிக்கேஷன் போட்டு தூக்கமும் விழிப்புமாக இரவை கழித்து அதிகாலையில் நன்றாக உறங்கியிருந்தனர்.

தமிழை நதியா வந்து அறைக்கதவை தட்டி எழுப்பி இருக்க பனிமலரை அலாரம் அடித்து எழுப்பி இருந்தது. வேகமாக கிளம்பி கீழே வந்து காலேஜ் போக வேண்டும் என்று கூறி சீக்கிரம் கிளம்பியிருந்தாள் பனிமலர்.

பனிமலர் தமிழ் இருவருக்கும் இன்றைய நாள் அவர்கள் நினைத்து செல்லும் காரியம் வெற்றி அடையுமா இல்லை அவர்கள் நினைக்காத பல நிகழ்வுகளை சந்திப்பார்களா?????.....
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 51


பனிமலர் சீக்கிரமே கல்லூரி வந்துவிட்டாள். காரில் வரும்போதே தமிழுக்கு போன் செய்து காலேஜ் கிளம்பியதை மட்டும் கூறி வைத்திருந்தாள்.

பனிமலர் வந்த நேரம் மூன்று நண்பிகளும் வந்திருக்க நேராக வகுப்புக்கு சென்று விட்டனர். அந்த பர்தா பெண்கள் இருவரும் கல்லூரி வந்ததும் போன் செய்தனர்.

நதியாவும் கிரிஜாவும் அந்த பெண்களின் வகுப்பறைக்கு சென்று அனைத்தையும் வாங்கிக்கொண்டு வகுப்பை விட்டு வெளியே வரக்கூடாது என்று சொல்லிவிட்டு வந்தனர்.

பேராசிரியர் வந்ததும் முதல் ஆளாக சென்று தங்கள் ப்ராஜெக்ட் சமிட் செய்தவர்கள் யாரும் அறியாமல் ஒவ்வொருவராக நால்வரும் வெளியே வந்து அங்கிருந்த காலியாக இருந்த அறைக்கு சென்று வேகமாக உடை மாற்றி மேலே பர்தா அணிந்து அந்த பெண்களின் காலணியை போல வாங்கி வந்திருந்ததை நதியா கொடுக்க அதையும் அணிந்தவர்கள் எல்லாம் சரியாக இருக்கா என்று பார்த்து விட்டு இரண்டு புதிய பேகை ஆளுக்கு ஒன்றாக மாட்டிக்கொண்டு ஸ்கூட்டி இருக்கும் இடத்திற்கு பனிமலர், தமிழ் மட்டும் சென்றனர்.

பாடிகார்ட்ஸ் கல்லூரிக்கு வெளியே இரண்டு கேட்டின் அருகிலும் இருப்பார்கள் அதனால் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு மெதுவாக ஓட்டிச் சென்றவர்கள் கல்லூரியை தாண்டி நீண்ட தூரம் சென்ற பிறகே நன்றாக மூச்சை விட்டனர். பனிமலர் ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு இருக்க பின்னால் தமிழ் அமர்ந்து இருந்தாள்.

நீண்ட தூரம் வந்த போதும் இருவரும் முகத்தை மூடிய துணியை விலக்கவில்லை. வண்டி ஒரு சிக்னலில் நிற்கவும் அருகில் விலையுயர்ந்த கார் ஒன்று வந்து நின்றது. சிக்னலில் வண்டி நிற்கும் போது பொருட்களை விற்பனை செய்ய சிலர் வந்து ஒவ்வொரு வண்டியாக தட்டி பொருட்களை வாங்க வற்புறுத்துவர் அதுமாதிரி ஒரு சிறு பெண் அந்த காரை தட்டவும் கதவில் இருந்த கண்ணாடியை திறந்த அந்த கார்க்காரன் போனில் பேசிக்கொண்டே சைகையில் வேண்டாம் என்று கூறி மீண்டும் கண்ணாடியை மேலேற்றினான். அதை கண்ட இரண்டு பெண்களும் "ஆகாஷ்" என்று முனுமுனுத்தனர்.

தமிழ் காரை தட்டப்போக சிக்னல் விழுந்து வாகனங்கள் நகர ஆரம்பித்தன. ஆகாஷ் காரும் நகர்ந்து விட்டது பனிமலரும் ஸ்கூட்டியை ஓட்டிச் சொல்ல ஆகாஷ் கார் பின்னே சென்றது இவர்கள் ஸ்கூட்டி.

"தமிழ் ஆகாஷுக்கு போன் பண்ணி வண்டியை நிறுத்த சொல்லு" என்றாள் பனிமலர்.

தமிழும் போனை எடுத்து ஆகாஷுக்கு போன் செய்ய சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.

"போன் சுவிட்ச் ஆஃப் என்று வருதுடி" என்றாள்.

ஸ்கூட்டியை கிளை சாலையில் திருப்பாமல் ஆகாஷ் வண்டி பின்னே சென்றாள் பனிமலர்.

" ஏய் மலர் என்னடி எழில்நிலா கம்பெனிக்கு அந்த பக்கம் திருப்பாமல் நேராக போகிறாய்" என்றாள் தமிழ்.

"ஆகாஷ் போனில் பேசிக்கொண்டே தான் கண்ணாடியை திறந்து மூடினான். வெளிநாட்டில் இருந்து வந்ததும் எப்போதும் என்னிடம் பேசுவான் இன்னைக்கு பேசவும் இல்லை. அதைவிட அவன் காருக்கு முன்னாள் பாரு" என்றாள் பனிமலர்.

தமிழும் ஆகாஷ் காருக்கு முன்னாள் சென்ற காரை பார்த்தவளுக்கு அந்த கார் சில கோடிகள் கொண்ட மிக உயரக கார் என்பதை தவிர வேறு எதுவும் தெரியவில்லை அதனால் பனிமலரிடமே யாருடைய கார் மலர்" என்று கேட்டாள்.

" அது சூர்யன் பர்சனல் கார்" என்றாள்.

"வாட்?...." என்று அதிர்ந்தாள் தமிழ்.

"ஆமாம் அந்த காரை ரொம்ப ரேராகத்தான் யூஸ் பண்ணுவான் என்று சாருமதி அக்கா சொல்லுவாங்க. அதுவும் அந்த காரை அவன் மட்டும் தான் ஓட்டுவானாம்" என்றாள் பனிமலர்.

"அவன் பாடிகார்ட்ஸ் கூட இல்லாமல் எங்கடி போறான்" என்றாள் தமிழ்.

"எனக்கும் அந்த சந்தேகம் தாண்டி அதனால் தான் அவன் பின்னாடி போறேன் " என்றாள் பனிமலர்.

" ஆனால் இந்த ஆகாஷ் எதுக்கு அவன் பின்னாடி போயிட்டு இருக்கான். ஒரு வேளை அவனும் அந்த காரை பாலோ பண்ணுறானா?..." என்றாள் தமிழ்.

" இல்லை சூரியனுக்கு ஆகாஷ் கார் நல்லா தெரியும். அதனால் ஆகாஷ் அவனை பாலோ பண்ணலை வேற எதுவோ இருக்கு. அவங்க காரை நம்ப பாலோ பண்ணால் தெரிந்திடும்" என்று பேசிக்கொண்டே அந்த கார்களை பின் தொடர்ந்தனர்.

கார் ஈசியார் சாலையில் சென்று கொண்டு இருந்தது. அதிகமான வாகனங்கள் அந்த சாலையில் சென்று கொண்டு இருந்ததால் வாகனங்கள் சீரான வேகத்தில் போய்க்கொண்டு இருந்தன. அதனால் ஸ்கூட்டியில் இவர்களால் அந்த கார்களை தொடர முடிந்தது.

நீண்ட நேரம் சென்ற கார்கள் இரண்டும் ஒரு பெரிய கடற்கரை பங்களாவினுள் நுழைந்தன. அந்த பங்களாவை தாண்டி அடுத்த பங்களாவின் முன் இருந்த மரநிழலில் ஸ்கூட்டியை நிறுத்தினாள் பனிமலர்.

"என்னடி நடக்குது ரெண்டு பேரும் ஒரே வீட்டுக்குள் போறானுங்க" என்று வியப்புடன் தமிழ் கேட்டாள்.

"அதே சந்தேகம் தான் எனக்கும்" என்றவள் அந்த இடத்தை சுற்றி பார்த்தாள் பனிமலர்.

அங்கிருந்த பங்களாக்கள் அனைத்தும் உயரமான மதில் சுவர்கள் கொண்டு இருந்தன. அதில் ஏறமுடியுமா என்று பார்த்தவளுக்கு அவர்கள் நின்று இருந்த மரம் படர்ந்து விரிந்து இரண்டு பங்களாவின் மதில் சுவர்களுக்கு மேல் வளர்ந்து இருந்தது.

தமிழிடம் கண்ணால் காட்டினாள் பனிமலர்.

"ஏய் இவ்வளவு வண்டிங்க ரோட்டில் போயிட்டு இருக்கும் போது எப்படி ஏறுவது?..." என்றாள் தமிழ்.

மரத்தின் பின் புறம்பாக சென்று நின்ற பனிமலர் "இப்ப அங்கிருந்து பார்த்தாள் நான் நிற்பது தெரியுதாடி தமிழ்" என்றாள்.

அந்த மரம் பெரியதாக இருந்ததால் பனிமலர் நிற்பது தெரியவில்லை.

" தெரியலைடி" என்றாள் தமிழ்.

பனிமலர் முன்னாள் வந்து தான் அணிந்திருந்த பர்தாவை கழட்டி பேக்கில் வைக்க அதே போல் தமிழும் பர்தாவை தான் கொண்டு வந்த பேக்கில் வைக்கவும் இரண்டு பேக்கையும் ஸ்கூட்டியின் உள் வைத்தவர்கள் ஸ்கூட்டியை மரத்தின் பின் நிறுத்தி பூட்டி சாவியை தன் ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டாள் தமிழ்.

பின் கண்ணிமைக்கும் நேரத்தில் மரத்தில் ஏறியிருந்தனர் இருவரும். சிறுவயதில் இருந்து இருவருக்கும் பழகிய விஷயம் என்பதால் எளிதாக அந்த பெரிய மரத்தில் ஏறி சூர்யாவின் காம்பவுண்ட் சுவர் தாண்டி மிக லாவகமாக குதித்து இருந்தனர்.

சிறிது நேரம் அசையாமல் அமர்ந்து இருந்தனர். ஆட்களோ இல்லை நாய்கள் எதாவது வருகிறதா என்று காத்திருந்தவர்களுக்கு யாரும் வரவில்லை என்றதும் எழுந்து அங்கு வளர்ந்திருந்த செடிகள் ஊடே மெதுவாக பங்களாவின் பக்கவாட்டில் வந்தவர்கள் எங்காவது உள்ளே போக வழியிருக்கா என்று நோட்டம் விட்டுக்கொண்டு இருந்த நேரம் கலகலவென சிரிக்கும் ஓசை கேட்டது.

இருவரும் ஓசை கேட்கும் பங்களாவின் பின்புறம் நோக்கி சென்று சுவரோரமாக நின்று எட்டிப்பார்த்தவர்களுக்கு கனவிலும் நினைக்காத காட்சியைக்கண்டனர். பார்க்கும் போதெல்லாம் துரோகி எதிரி என்று சொல்லும் சூர்யாவின் கை ஆகாஷ் தோளில் போட்டுக்கொண்டு நீச்சல் குளம் நோக்கி எதையோ பேசி சிரித்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தனர்.

அதை கண்ட நண்பிகள் இருவருக்கும் பெரிய அதிர்ச்சியை தந்தது. இவ்வளவு நாட்கள் ஆகாஷை பழிவாங்க பனிமலரை திருமணம் செய்து கொண்டான் என்ன செய்வானே என்று அனுதினமும் பயந்து கொண்டு இருந்த தழிழும் அதே சந்தேகம் சில நாட்களுக்கு முன்பு வரை பனிமலருக்கும் இருந்ததோடு அதற்காக எழில்நிலாவை கடத்தி இருப்பான் என்ற எண்ணம் அல்லவா இருந்தது.

அவன் தன்னை காதலிக்கிறான் என்று தெரிந்ததும் அவன் எதையோ மறைக்கிறான் என்பதால் தான் இதுவரை அவனுடன் ஒன்றமுடியாமல் இருக்கிறாள். அதுமட்டுமல்லாமல் ஆகாஷ் தன்னிடம் உண்மையான நட்பு கொண்டவன் என்று நினைத்து இருந்தவள் இதுவரை தங்களிடம் நடித்து இருக்கிறான் என்ற எண்ணமும் இரு பெண்களுக்கும் கண்கள் கலங்கச்செய்தன.

சூர்யாவும் ஆகாஷும் நீச்சல் குளத்தின் அருகில் இருந்த இருக்கையில் கால் நீட்டி அமர்ந்தவர்கள் கையில் இருந்த குளிர்பானத்தை குடித்துக்கொண்டே பேசிக்கொண்டு இருந்தனர்.

சற்று தூரத்தில் இருந்ததால் அவர்கள் பேசுவது பெண்கள் இருவருக்கும் தெளிவாக கேட்கவில்லை. ஆண்கள் இருவரும் முதுகு காட்டி அமர்ந்து இருந்ததால் மெல்ல நடந்து அங்கிருந்த பெரிய பூச்செடியின் பின் சென்று நின்றனர். இப்போது அவர்கள் பேசுவது தெளிவாக கேட்டது.

"ஏன்டா மச்சி நீ வந்தது உன் பாப்பு டாலுக்கும் உன் ஆளுக்கும் சொல்லிட்டியா" என்று சிரிப்புடன் கேட்டான் சூர்யா.

"அடேய் நான் நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலையா அவளுங்க கிட்ட பேசியிருந்தா இன்னேரம் என்னை ஒரு வழி செய்து இருப்பாளுங்க. அதனால் தான் இன்னும் போனைக்கூட ஆன் பண்ணாமல் இன்னொரு போனில் பேசிட்டு இருக்கேன்" என்றான் ஆகாஷ்.

"ஏன்டா இப்படி பயப்படுகிறாய் அவங்களை சமாளிக்க வேண்டியது தானே?... "என்றான் சூர்யா.

" சொல்லுவடா சொல்லுவ நண்பன் என்று உனக்கு உதவப்போய் எப்ப அவளுங்க கிட்ட மாட்டப்போறேனோ என்று பயந்துட்டு இருக்கேன். பாப்பு கூட சமாளிச்சிடுவேன் நான் லவ் பண்ணுறேனே அவளை சமாளிக்க முடியாதுடா மச்சி. உன் கல்யாணம் அப்பவே அவளுக்கு உன் மேல் டவுட் வந்திடுச்சிடா" என்று ஆகாஷ் கூறியதும்

" என்ன டவுட் மச்சி?... " என்றான் சூர்யா.

" பாப்புவை கல்யாணம் பண்ணுவதற்காக நீ எழில்நிலாவை கடத்தி இருப்பாய் என்று என்னிடம் வந்து சொன்னாள் டா."என்றான்.

குளிர்பானம் குடித்துக்கொண்டு இருந்த சூர்யாவிற்கு புரையேறியது. தன் தலையை தட்டி சமாதானம் செய்தவன்

" என்னடா சொல்லுற அப்பவோ அவளுக்கு சந்தேகம் வந்திடுச்சா?... " என்றான் சூர்யா.

" ஆமாம்டா இப்படித்தான் திகைச்சிப்போய் சில வினாடியில் என்னை சமாளிச்சி அவகிட்ட வேற பேசி திசை திருப்பினேன்" என்றான்.

கேட்டுக்கொண்டு இருந்த நண்பிகளுக்கு அதிர்ச்சியும் கூடவே ஆகாஷ் மீது எல்லையில்லாத கோபமும் வந்தது. இருந்தும் எழில்நிலாவை பற்றிய விஷயம் அவர்களுக்கு தெரிந்து இருக்கிறது அது வெளியே வரட்டும் என்று அமைதியாக இருந்தனர் நண்பிகள் இருவரும்.

" இங்க இருந்தா எழில்நிலா, அரவிந்த் பற்றி விசாரிக்க என்னை கண்டிப்பாக கூப்பிடுவாங்க என்று தெரிந்து தான் நீ லண்டன் போறியா என்றதும் கிளம்பிட்டேன். நான் திரும்பி வருவதற்குள் நீ பாப்பு கிட்ட எல்லாம் சொல்லி இருப்ப என்று பார்த்தால் நீ இன்னும் சொல்லலை என்று சொல்லுகிறாய் இது தெரிந்து இருந்தா நான் இன்னும் கொஞ்சம் நாள் லண்டனில் சுத்திட்டு வந்திருப்பேன். அரவிந்த் கூட இன்னும் ஒரு வாரம் இருடா என்று சொன்னான் நான் தான் புதுசா கல்யாணம் ஆனவர்களுக்கு இடையில் எதுக்கு இருக்கனும் என்று தான் வந்துட்டேன்" என்றான் ஆகாஷ்.

பெண்கள் இருவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். எழில்நிலா அரவிந்த் நல்லா இருக்காங்க அதுவும் லண்டனில் என்று சந்தோஷப்பட்டவர்களின் முகம் இப்போது மாறியது.

ஆக பிளான் போட்டு அவங்களை லண்டன் அனுப்பி இருக்காங்க. இவன் பேசுறதை பார்த்தால் அரவிந்த் இவனுங்க பிரண்ட் என்று தோன்றுது. இந்த சூரியா கூட சேர்ந்து எல்லாம் செய்திட்டு ஒன்று தெரியாதது போல் தங்களுடன் இருந்து இருக்கான் என்று தோன்றவும் பனிமலர், தமிழின் முகங்கள் கோபத்தில் சிவந்தன.

எழில்நிலா பற்றிய தகவல் அவர்களுக்கு தெரிந்து விட்டதால் அமைதியாக இருக்கமுடியாமல் வேகமாக சூர்யா, ஆகாஷ் முன் சென்று நின்று இருந்தனர் பனிமலர், தமிழ்.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 52



பேசிக்கொண்டு இருந்தவர்கள் முன் பனிமலர், தமிழ் வந்து நின்றதும் திகைத்து போயினர்.

இருவரும் வார்த்தைகள் வராமல் திக்கி

"ப....னி...." என்று சூர்யாவும்

"பா.... ப்... பு....
" த.... மி...ழ்...." என்று ஆகாஷ் திக்கி கூறவும்

அடுத்த வினாடி ஆகாஷ் தரையில் விழுந்து இருக்க பனிமலர், தமிழ் இருவரும் அவனை புரட்டி எடுத்தனர்.

"அய்யோ.... ஏய் விடுங்க விடுங்க" என்று ஆகாஷ் கத்தியபோதும் இரு பெண்களும் அடிப்பதை நிறுத்தவில்லை.

"அடேய் என்னடா நின்னுட்டு இருக்க என்னை காப்பாத்துடா உனக்காகத்தானே எல்லாம் செய்தேன் கடைசியில் என்னை அடிவாங்க வச்சிட்டு வேடிக்கை பார்த்திட்டு இருக்கிறாய்" என்று சூர்யாவை பார்த்து கத்தினான்.

"அய்யோ...." என்று கத்தியவன் பின் "ஏய் ராட்சசிகளா இரண்டு பேரும் என்னை மட்டும் அடிக்கிறீங்க இதுக்கெல்லாம் காரணம் அவன் தான் அவனை போய் அடிங்க" என்று கத்தினான்.

" அவனை எதுக்கு அடிக்கனும் அவனா பிரண்டு போல நடிச்சி எங்களை ஏமாத்தினான் நீ தானே ஏமத்தின அதுக்கு தான் இந்த அடி" என்றாள் தமிழ்.

" அடியேய் நான் பண்ணது எல்லாம் என் பாப்புக்காகத்தான் அவள் சந்தோஷமாக இருக்கனும் என்று தான் செய்தேன்" என்றான் ஆகாஷ்.

"அவளுக்காக செய்தவன் அவள் கிட்ட சொல்லிவிட்டு செய்து இருக்கலாம் இல்லையா?.... " என்றாள் தமிழ்.

" ஏய் அவன் தான் என்னை சொல்ல விடாமல் செய்தான்" என்று தமிழிடம் கூறியவன் பின் சூர்யாவை பார்த்து

" அடேய் உனக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா எப்படி என்னை அடிச்சிட்டு இருக்காளுங்க என்னை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்திட்டு இருக்கியே நீயெல்லாம் ஒரு நண்பனா?.... "என்றான்.

" ஏன்டா வலிச்சா எழுந்து ஓடியிருக்கனும் இல்லை வலியில் கத்தியிருக்கனும் ஆனால் நீ என்ன பண்ணிட்டு இருக்க உன் ஆளுகிட்ட கடலை போட்டுட்டு இருக்க பத்தாதற்கு நீ படுத்து இருக்கிறதை பார்த்தா இவங்க ரெண்டு பேரும் அடிக்கிறது உனக்கு மசாஜ் பண்ணுறது போல் இருக்கு என்று நினைக்கிறேன்" என்று சூர்யா சொன்னதும் பனிமலர், தமிழ் இருவரும் அடிப்பதை நிறுத்திவிட்டு ஆகாஷை பார்க்கவும்

" ஹீஹீ...." என்று சிரித்து வைக்க பெண்கள் இருவரும் அடிப்பதற்கு வேறு பொருள் கிடைக்கிறதா என்று சுற்றியும் தேடியவர்கள் கண்ணில் அங்கு சிறிய மண் தொட்டியில் சில பூச்செடிகள் இருப்பதை பார்த்ததும் அதை நோக்கி ஓடியவர்கள் ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டு ஆகாஷ் நோக்கி வந்தனர்.

"அடேய் படுபாவி என்னை கொல்லுறதுக்கு நீயே ஐடியா கொடுக்கிறியா?..." என்று கூறியவன் அங்கிருந்து எழுந்து ஒட ஆரம்பித்தான்.

"அடேய் நில்லுடா" என்று இரண்டு பெண்களும் அவன் பின் தொட்டியை தூக்கிக்கொண்டு ஓடினர்.

தமிழ் முன்னாள் ஒட பின்னால் ஓடிய பனிமலரை கைபிடித்து நிறுத்தியவன் அவள் கையில் இருந்த தொட்டியை வாங்கி கீழே வைத்து விட்டு அவளை தூக்கி தோள் மீது போட்டுக்கொண்டவன் வீட்டை நோக்கி சென்றான் அவளின் சூரியன்.

"ஏய் என்ன பண்ணுற என்னை கீழே விடுடா" என்றாள் பனிமலர்.

"கொஞ்ச நேரம் வாயைமூடிட்டு வாடி" என்றான் சூர்யா.

அவள் திமிரத்திமிர தூக்கிக்கொண்டு மாடியேறியவன் அங்கிருந்த ஓர் அறையினை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

இங்கே பனிமலர் பின் வருகிறாளா என்பதை கூட அறியாமல் ஆகாஷ் பின் ஓடிக்கொண்டு இருந்தாள் தமிழ். சிறிது நேரம் அவளுக்கு ஆட்டம் காட்டிய ஆகாஷ் சமாதானக்கொடியை பறக்கவிடுவது போல் ஓடுவதை நிறுத்தி விட்டு கையை மேலே தூக்கிக்கொண்டு சரண்டர் என்றான்.

தமிழ் ஆகாஷ் செய்வதை கண்டு ஒன்று புரியாமல் திகைத்த வினாடி நேரத்தில் அவளின் கையில் இருந்த தொட்டியை பறித்திருந்தான்.

அதை உணர்ந்த தமிழ் "டேய்" என்று அவனை அடிக்க சென்ற நேரம் அவளை புல்வெளியில் சாய்த்து அவளின் அருகில் அவனும் படுத்து வினாடியில் அவளின் உதட்டை சிறைச்செய்து இருந்தான் ஆகாஷ்.

முதலில் திகைத்து அவனை விலக்க போராடியவள் நேரம் சொல்லச்சொல்ல அவனின் முத்தத்தில் ஆய்ந்து போனாள். நீண்ட நேரத்திற்கு பின் விலகியவன் அவளின் முகம் பார்க்க அவள் கண்மூடி இன்னும் அந்த முத்தத்தில் இருந்து வெளிவர முடியாமல் இருந்தாள்.

மீண்டும் அவளின் உதட்டை பூட்டியவன் சிறிது நேரத்தில் விலகி அவளின் சிவந்த கன்னத்தை ஒரு விரலால் வருடியவன் மிக மென்மையான குரலில் "ஹனி" என்றான்.

பட்டென கண்ணைத்திறந்தவள் "ஹனியா" என்றாள்.

"ம்ம்ம்..... பாரதிதாசன் பாடியிருக்காரே
"தமிழுக்கும் அமுதென்று பேர்"

அமுதம் என்றால் அமிர்தம் தானே அந்த அமிர்தத்திற்கு தானே தேவர்களும் அசுரர்களும் சண்டை போட்டாங்க. அமிர்தம் குடிச்சா சாகா வரம் கிடைக்கும் என்று போட்டி போட்டவர்களுக்கு அந்த அமிர்தம் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை " என்று கூறியவனின் விரல்கள் தமிழின் உதட்டில் இருந்தது.

" அதுவும் இந்த அமிர்தம் எவ்வளவு ஸ்வீட்டா இருக்கு வாழ்நாள் முழுவதும் இந்த அமிர்தம் குடிச்சிட்டு இருந்த பசிக்கவே பசிக்காது" என்றவன் மீண்டும் தமிழின் உதட்டில் அமிர்தத்தை எடுக்கலானான்.

மூச்சுக்காற்றுக்காக அவனை தள்ளி விட்டவள். "ஹனி என்று கூப்பிட்டதற்கு அர்த்தம் சொல்லலை" என்றாள் தமிழ்.

" ஏய் அதான் சொன்னேன் இல்லை அமிர்தம் தேனைப்போல் இனிப்பாக இருக்கு அதான் தேன் என்பதை ஆங்கிலத்தில் ஹனி என்று சொன்னேன். இப்ப எதுக்குடி இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டுட்டு இருக்க எனக்கு எவ்வளவு வேலையிருக்கு அதை பார்க்க விடுடி" என்று மீண்டும் அவள் உதடு நோக்கி குனிந்தவனை தள்ளி விட்டு எழுந்து அமர்ந்தாள் தமிழ்.

"ஹனி" என்று மீண்டும் தன்னை நோக்கி இழுத்தவனின் கையை தட்டிவிட்டு " எனக்கு முதலில் நீ பண்ண பிராடு தனத்தை எல்லாம் சொல்லுடா. இன்னும் எவ்வளவு விஷயத்தை நீ மறைத்து இருக்க" என்றவளின் குரலில் கோபம் இருந்தது.

"ஏய் நான் எந்த பிராடு தனமும் பண்ணலைடி" என்றான்.

"எதிரி துரோகி என்று எங்க எதிரில் நடிச்சிட்டு இங்க வந்து கொஞ்சிட்டு இருக்கிங்களே இதுக்கு பேர் என்ன?... " என்றாள்

" நான் எப்ப அவனை என் எதிரி துரோகி என்று சொன்னேன் அவன் தான் அப்படி சொல்லிட்டு இருந்தான். நான் அவனை பிரண்ட் என்று தான் சொல்லியிருக்கேன்" என்றவனை முறைத்துக்கொண்டு இருந்தாள் தமிழ்.

" இப்படி முறைக்காத நான் சொல்லுறதை கேள் அப்ப உனக்கு புரியும்" என்றவன்

" சூர்யா பாப்புவை லவ் பண்ணுறான் அதுவும் ரொம்ப வருஷமாக" என்றான்.

தமிழ் நம்பாத பார்வையை பார்க்க

" அவன் முதல் முதலில் பாப்புவை எங்க பார்த்திருக்கான் தெரியுமா" என்று அந்த இடத்தின் பெயரை சொன்னதும்

" வாட்" என்று அதிர்ச்சியாகி போனாள் தமிழ்.

தனக்கு தெரிந்த அனைத்தையும் ஆகாஷ் கூற ஆரம்பித்தான். அதே நேரத்தில் அறைக்குள் சென்று அவளை கீழே இறக்கிவிட்டதும் அறையை விட்டு வெளியேற நினைத்து கதவை திறக்க அது பூட்டி இருந்தது அதை கூட உணராமல் கதவை திறக்க முயன்று கொண்டு இருந்தவளின் காதில் அந்த குரல் கேட்டது.

"சித்துமா ஓடக்கூடாது மெல்ல போங்க" என்ற குரல் அவளின் உடல் முழுவதும் சிலிர்க்க வைக்க

"அப்பா..." என்று திரும்பியவள் கண்ணில் பட்டார் அவளின் தந்தை அவர் பின்னே தாயும் "மலர் ஓடாதடி" என்று சொல்லிக்கொண்டு நடந்து கொண்டு இருந்தனர்.

ஓடிச்சென்றவள் "அப்பா அம்மாவினை தொட்டு தடவியவள் அப்பா.. அம்மா.. என்று கண்ணீர் விட்டு அவர்களுக்கு கணக்கிட முடியாது முத்தங்களை கொடுத்துக்கொண்டு இருந்தாள் பனிமலர்.

அவள் பின் சென்று அவளின் தோளில் கை போட்டு "பனி" என்றான் கலங்கிய குரலில்

அவன் தொடுகையில் திரும்பி அவனை பார்த்தவள் "அத்தான் அப்பா.... அம்மா....." என்றாள் அழுகையுடனே

"ம்... உன் அப்பா அம்மா தான்டா அவங்க உன் கூடவே தான் இருக்காங்க அழக்கூடாது" என்று அவளின் கண்ணீரை துடைத்தவன் "நீ நினைக்கிற நேரம் எல்லாம் அப்பா அம்மாவை பார்க்கலாம்" என்று சொல்லிக்கொண்டே அவளை அழைத்து சென்று சோபவில் அமரவைத்தவன் அவளின் அருகில் அமர்ந்து தன் தோளில் சாய்த்துக்கொண்டான். அங்கு இருந்த ரிமேட் எடுத்து அதுவரை நிறுத்தி வைத்து இருந்ததை ஓடவைத்தான்.

அதில் மீண்டும்" சித்துமா" என்று தந்தையும்," ஏன்டி ஒரு முறை சொன்னால் கேட்க மாட்டியா இப்ப நிற்கலை என்றால் நாளைக்கு உன்னை ரூமில் வைத்து பூட்டி விட்டு நாங்க மட்டும் சுத்தி பார்க்க கிளம்பிடுவோம்" என்றார் பரிமளா.

வேகமாக சென்று கொண்டு இருந்தவள் நின்று இடுப்பில் கை வைத்து " என் அப்பா உங்களை வேண்டும் என்றாள் ரூமில் வச்சு பூட்ட சம்பதிப்பார் என்னை அப்படி செய்ய மாட்டார் அம்மா" என்று தாயிடம் கூறியவள் தந்தையிடம் "அப்படித்தானே அப்பா" என்று கேட்க அவரும் "ஆமாம்டா சித்துமா" என்றார் கேசவன்.

" கேட்டிங்களா அப்பா நான் சொல்லுறதை தான் கேட்பார். நீங்க சொல்லுறதை கேட்கவே மாட்டார்" என்று தாயிடம் பழிப்பு காட்டியவள் அருகில் வந்திருந்த தந்தையை குனிய செய்து அவரின் கன்னங்களில் முத்தம் பதித்தாள்.

"வர வர உனக்கு கொழுப்பு அதிகமாகிடுச்சி அதை குறைச்சா சரியா போகிடும்" என்றார் பரிமளா.

" எனக்கு இல்லைம்மா உங்களுக்கு தான் உடம்பில் கொழுப்பு அதிகமாகி இப்படி குண்டாகி நடக்க முடியாமல் மூச்சு வாங்குது" என்றவள் தாயின் அருகில் சென்று தன் கையில் இருந்த நீரை கொடுத்து "குடிச்சிட்டு உட்காருங்க நான் எங்கேயும் போகாமல் இந்த பூச்செடிகளை சுத்தி பார்த்திட்டு வரேன். மம்மி, டாடி, தாத்தா, பாட்டி, நிலா, அகி எல்லோரும் வந்த பிறகு போகலாம் என்று பெரிய மனுஷியாக பேசிய மகளை கண்ட கேசவன் பரிமளா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர்.

"அடியேய் வாயாடி தூரமாக போகாமல் இங்கேயே சுத்தி பார்க்கனும் எங்க கண்ணெதிரேயே இருக்கிற இடத்தில் மட்டும் சுத்தி பாரு" என்றார் பரிமளா.

"சித்துமா பத்திரம்" என்று கூறியவர் மனைவியின் புறம் திரும்பி "உடம்பு என்ன பண்ணுது பரி இப்படி சோர்வாக இருக்க" என்றவர் மனைவியின் நெற்றி, கழுத்து வளைவில் பூத்திருந்த வியர்வையை கர்ச்சீப் கொண்டு துடைத்து விட்டார்.

" அய்யோ என்ன பண்ணுறீங்க மாமா ஆட்கள் நடமாட்டம் இருக்கும் இடத்தில்" என்று வெட்கப்பட்டார் பரிமளா.

" நான் என் பொண்டாட்டிக்கு துடைச்சு விடுறேன் அடுத்தவன் பொண்டாட்டிக்கா செய்யுறேன்" என்றவரை செல்லமாக அடித்தார் பரிமளா.

அத்துடன் அங்கு தனக்கு வேலை இல்லை என்று கேமிரா ஆப்பாகிவிட்டது. ஒவ்வொரு ரோஜாவையும் பார்த்துக்கொண்டு இருந்த பதினோரு வயது பனிமலர் திரையில் வந்தாள். கண்கள் விரிய பூக்களை ரசித்துக்கொண்டு இருந்தவளின் பார்வை ஏதோ உள்ளுணர்வு தோன்ற பக்கவாட்டில் திரும்பியதும் கண்கள் மேலும் விரித்தது.

"வீடியோ கேமராவா அங்கிள்" என்றாள் பனிமலர்.

"வாட் அங்கிளா" என்றது ஒரு இளமையான ஆண் குரல்
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 53



"ஆமாம் இவ்வளவு உயரமாக இருக்கிங்களே அப்ப நீங்க பெரியவங்க தானே அதான் அங்கிள் என்று சொன்னேன்" என்றாள்.

முகத்தை மறைத்த கேமிராவை நகர்த்தி விட்டு "நான் இப்ப தான் ஸ்கூல் முடிச்சி காலேஜ் போகப்போறேன்" என்றான்.

"ஓஓ... இப்ப தான் காலேஜ் போகப்போறிங்களா நீங்க உயரமாக இருக்கிறதால் உங்களை பெரியவங்க என்று நினைச்சேன். உங்க முகம் வேற இந்த கேமரா மறைச்சிட்டு இருந்ததால் அங்கிள் என்று சொல்லிட்டேன். அப்ப அண்ணா என்று சொல்லுறேன்" என்றாள் பனிமலர்.

"நோ... நோ..." என்று வேகமாக குரல் வந்தது அவனிடமிருந்து

" ஏன் உங்களை அண்ணா என்று கூப்பிடறது பிடிக்கலையா?... " என்றாள்.

" ஆமாம் பிரண்டை அண்ணா" என்றா கூப்பிடுவாய்" என்றான்.

" இல்லை பெயர் சொல்லிதான் கூப்பிடுவேன் உங்க பேர் சொல்லுங்க" என்றாள்.

"என் பெயர் சூரியபிரகாஷ்"

அதுவரை டிவியை ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருந்த பனிமலர் சூர்யபிரகாஷ் என்றதும் திரும்பி அவனை பார்த்தவள்

" அப்ப நீங்க என்னை முன்னாடியே பார்த்து இருக்கிங்களா எனக்கு ஏன் அது நியாபகம் வரலை" என்றாள்.

வாட் அப்ப அன்னைக்கு என்னை கோவிலில் பார்த்த அப்ப உனக்கு என்னை அடையாளம் தெரியலை என்று நினைத்தேன். அப்புறம் அடையாளம் தெரிந்ததும் வந்து பேசுவாய் என்று தான் உன்னையே திரும்பி திரும்பி பார்த்தேன் ஆனால் உனக்கு சுத்தமாக என்னை பார்த்த நியாபகம் வரலையா?... " என்றான்.

"இல்லை உங்களை பார்த்ததும் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு வந்தது. அதுதான் உங்க பின்னால் வரவைத்தது. அடுத்து அந்த குழந்தையை காப்பாற்றி அந்த குழந்தையோட அப்பாவை அடிச்சிங்க இல்லையா அதே மாதிரி கடைசியா இந்த கோவிலுக்கு அப்பா அம்மா உடன் வந்த போது அப்பாவும் குழந்தையோட அப்பாவை அடிச்சார்."

"அப்படியே திரும்ப நடந்ததா அந்த இடத்தில் என் அப்பாவையே பார்த்தது போல் இருந்தது. அதுவரை என் மனதில் இருந்த தனிமை உணர்வு நீங்கி அப்பாவே உங்க உருவில் என்னை பாதுகாக்க வந்துட்டார் என்று தோன்றியது. அதுவும் அன்னைக்கு அப்பா அம்மா என்னை விட்டு போன நாள் என்னையும் அறியாமல் அந்த கோயிலுக்கு வந்து இருந்தேன். உங்களை என் கண்ணில் காட்டத்தான் அப்பா அம்மா என்னை அங்க கூட்டிட்டு வந்தாங்க போல அதுவரை அப்பா அம்மா இல்லையே என்று இருந்த எனக்கு உங்களை காட்டி இவன் தான் இனி உனக்கு அப்பா அம்மா எல்லாம் என்று சொன்னது போல் இருந்தது". என்றாள் கண்ணீருடன்

" அவளை இறுக்கமாக அணைத்தவன் சாரிடி அப்ப உனக்கு நடந்தது எதுவும் தெரியாது. நீ என்னை பார்த்ததும் ஓடிவந்து பேசுவாய் என்று எவ்வளவு ஆவலாக இருந்தேன் தெரியுமா ஆனால் நீ வரவே இல்லை" என்றான் வருத்தமான குரலில்

" நான் வரலை என்றால் நீங்க வந்து பேசியிருக்கலாம் இல்லையா?...." என்றாள்.

" அதை செய்ய முடியாமல் நீதான் கண்டிஷன் போட்டு பிராமிஸ் வாங்கி இருந்தியே அதை எப்படி மீறுவது" என்றான்.

" பிராமிஸா என்ன பிராமிஸ்?..." என்றாள்.

"அதை நீயே பாரு" என்று கூறியவன் மீண்டும் வீடியோவை ஓடவைத்தான்.

" வாவ் சூப்பர் நீங்க சூரியனா நான் பனி" என்றாள் புன்னகையுடன்

" பனி" என்று மென்குரலில் சொன்னான்.

" ஆமாம் என் பெயர் பனிமலர்" என்றாள்.

"பொருத்தமான பெயர்" என்றான்.

"சூரியன் எனக்கு இந்த கேமராவில் நீங்க படம் பிடிச்சதை காட்டுங்க" என்றாள்.

" இந்த பக்கம் வா "என்றதும் மீண்டும் கேமரா ஆப்பாகி சில வினாடிகளில் உயிர் பெற்றது.

"எல்லாமே சூப்பரா எடுத்து இருக்கிங்க அடுத்த முறை நான் இங்க வரும் போது அப்பாகிட்ட ஒரு கேமரா வாங்க சொல்லனும் இப்படி வீடியோ எடுத்தா நினைச்ச நேரம் ஊட்டியை பார்க்கலாம்" என்று குதூகலித்தாள் பனிமலர்.

"சரி ஓகே இப்ப நம்ப ரெண்டு பேரும் சேர்ந்து நின்று வீடியோ எடுத்துக்கலாம்" என்று சொல்லும்போதே கேமிராவில் சூர்யாவின் முகம் தெரிந்தது. சிறுவனில் இருந்து இளைஞனாக மாறிக்கொண்டு இருக்கும் பதினேழு வயது சூர்யா உதட்டிற்கு மேல் இப்போது தான் ஓரிரண்டு ரோமங்கள் வளர ஆரம்பித்து இருந்தது. அடர்ந்த புருவங்களும் அழகாக சிரிக்கும் கண்கள் காற்றில் அசைந்தாடிய அடர்ந்த கேசம் அவனை அழகனாக காட்டியது.

"ஹேய் என்று தன்னை மீறி சொல்லியிருந்தாள்" பனிமலர்.

"என்னடி ஹேய் உன் அத்தான் ரொம்ப அழகாக இருக்கேனா?..." என்றான் அவளின் காதோரம் உரசி

"அழகாக இருக்குனா வாவ் சொல்லி இருப்பேன் நான் சொன்னது ஹேய்" என்றாள் அவளின் காதோரம் உரசிக்கொண்டு இருந்த அவனின் முகத்தை நகர்த்தி விட்டு.

"எதுக்கு ஹேய் என்று சொன்னாய்" என்றான்.

" இல்ல இந்த முகத்தை பார்த்து அங்கிள் சொல்லியிருக்கேன் இல்லையா அதை நினைத்து சொன்னேன்" என்றாள்.

" என் முகத்தை கேமரா மறைத்து இருந்ததால் உயரத்தை பார்த்து சொன்னேன் என்று நீயே சொல்லியிருக்கியே" என்று சொன்னவன் மீண்டும் வீடியோவை ஓடவிட்டான்.

"அச்சச்சோ வேண்டாம்" என்று முகத்தை மூடிக்கொண்டாள் பனிமலர்.

" ஏன் பனி நம்பதான் பிரண்ட்ஸ் ஆகிட்டோமே எடுத்தால் என்ன?... "என்று கேட்டான்.

" பிரண்ட்ஸா நான் உங்களை இன்னும் பிரண்டாக ஏற்று கொள்ளவே இல்லையே" என்றாள்.

"ஏன்?..." என்றான் குரலில் கோபம் எட்டிப்பார்த்தது.

"முதல் முறையாக இப்பதான் பார்த்து இருக்கேன் அதுக்குள்ள எப்படி பிரண்ட்ஸாகறது உங்களை பத்தி எனக்கு எதுவும் தெரியாது" என்றாள்.

" என்னை பற்றி தெரிந்தால் நீ என்னை பிரண்டாக்கிப்பாயா?... என் பேர் சூர்யபிரகாஷ், பிளஸ் டூ தேர்வு எழுதி இருக்கேன். இன்னும் இரண்டு மாசத்தில் காலேஜ் போகப்போறேன். சென்னையில் எங்க வீடு இருக்கு" என்று சொல்லிக்கொண்டு இருந்தவனை அவளின் குரல் இடைமறித்தது.

"ஏய் நாங்களும் சென்னை தான்" என்று சொல்லிய பிறகே தாய் தந்தையின் அறிவுரை நினைவில் வந்து தன் வாயை கை கொண்டு மூடினாள் பனிமலர்.

அவளின் செய்கையை கண்டவனுக்கு புன்னகை பூத்தது சூர்யாவிற்கு அப்ப நம்ப ஒரே ஊரில் இருக்கோம் அப்ப பிரண்ட்ஸ் ஆகிக்கலாம் இல்லையா?... " என்றான்.

இல்லை என்று தலையாட்டியவள் "ஒரு முறை பார்த்தவங்க கூடவெல்லாம் பிரண்டாக கூடாது என்று அப்பாவும் அம்மாவும் சொல்லி இருக்காங்க" என்றாள்.

" அப்ப உன் கூட பிரண்டாகனும் என்றால் அடிக்கடி மீட் பண்ணனும் அவ்வளவு தானே அப்ப உன் வீட்டு அட்ரஸ் போன் நம்பர் கொடு நாம மீட் பண்ணலாம்" என்றான்.

" அச்சச்சோ வீட்டு அட்ரஸ் போன் நம்பர் யார் கேட்டாலும் கொடுக்கக்கூடாது என்று சொல்லிஇருக்காங்க" என்று அவள் கூறியதும்

" அப்ப உன் கூட பிரண்டாகனும் என்றால் என்ன தான் செய்யனும்" என்று வருத்தமான குரலில் கேட்டான்.

" அதுவா" என்று சிறிது நேரம் யோசித்தவள் " ஆங்....." என்று நியாபகம் வந்தவளாக பேச ஆரம்பித்தாள்.

" நீங்களும் சென்னை நானும் சென்னை தான் அப்பா அம்மா லீவு நாளில் என்னை பீச் கோவில் பார்க் ஐஸ்கிரீம் கடை இப்படி கூட்டிட்டு போவாங்க அப்படி போகும் போது எப்பவாவது நாம மீட் பண்ண வாய்ப்பு இருக்கு அப்படி பார்த்தா நான் உங்களை பிரண்டாக ஏத்துக்கிறேன்" என்றாள்.

"ஏய் பனி அவ்வளவு பெரிய சென்னையில் எப்படி மீட் பண்ணமுடியும் அட்லீஸ்ட் நீங்க சென்னையில் இருக்க ஊர் பேராவது சொல்லு" என்றான்.

" நோ... நோ.. நான் சொல்ல மாட்டேன் அப்பா அம்மா புது ஆட்கள் கிட்ட பேசக்கூடாது என்று சொல்லியிருக்காங்க அவங்க பேச்சை மீறி உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன். ஏன்னா உங்களை பார்த்தா நல்லவர் என்று எனக்கு தோன்றுது. ஆனால் உடனே பிரண்டாகிக்க முடியாது."

"நிஜமாகவே நீங்க என்னை பிரண்டாகிக்க நினைச்சிங்கனா கட்டிப்பா நம்மலை கடவுள் மீட் பண்ண வைப்பார். அப்ப நான் வந்து உங்களை பிரண்டாக்கிக்கிறேன் ஆனால் ஒரு கண்டிஷன்" என்றாள் பனிமலர்.

" ஷ்ஷ்ஷ்..." என்ற பெருமூச்சு விட்டவன் " என்ன கண்டிஷன்?... " என்றான்.

" நீங்க என்னை பார்த்தால் கூட வந்து பேசக்கூடாது. நான் தான் முதலில் உங்களை பார்த்து பேசனும் அதுவரை நீங்களா எங்கிட்ட பேச முயற்சிக்க கூடாது ஓகே வா" என்றாள்.

"ஏய் இது என்ன விளையாட்டா நான் தான் பஸ்ட் வரனும் நீ வரக்கூடாது என்பது போல கண்டிஷன் போடுற பனி" என்றான்.

" விளையாட்டு தான் என் பிரண்ட்ஸ் எல்லாரும் எனக்குத்தான் விட்டு தருவாங்க. இப்ப நீங்களும் என் பிரண்டாகத்தானே நினைக்கிறீங்க அப்ப நீங்க விட்டு கொடுத்தா தான் நான் உங்க கூட பிரண்டாக இருப்பேன் இல்லை என்றால் அதுக்கு பிறகு எப்பவும் நீங்க என் பிரண்டாக முடியாது. நீங்கள் என்னை கம்பெல் பண்ணாலும் என் பிரண்ட்ஸிப் உங்களுக்கு எப்பவும் கிடைக்காது."

" இந்த கண்டிஷனுக்கு ஓகே என்றால் எனக்கு பிராமிஸ பண்ணுங்க" என்று கைநீட்டினாள் பனிமலர்.

அவன் கையும் சிறு தயக்கத்துடன் அவளுக்கு பிராமிஸ் வைத்தது.

" ஹாஹா.... ஹாஹா...." என்று வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தாள் பனிமலர்.

" ஏய் எதுக்குடி சிரிக்கிற அதான் கண்டிஷன் போட்டு என்னை பைத்தியம் மாதிரி ரோடு ரோடாக சுத்த வச்சதும் இல்லாமல் என்னை பார்த்ததும் வந்து பேசாமல் உன்னை என்கிட்ட வரவைக்க என்னென்னவோ வேலைகளை செய்ய வச்சதானே" என்றான் கோபமாக

"இந்த பேச்சுக்காகவா நீங்க என்னை பார்த்ததும் வந்து பேசலை" என்று மீண்டும் வாய்விட்டு சிரித்தாள்.

அவளின் சிரிப்பைக்கண்டு பல்லை கடித்தவன் அவளை இழுத்து அவளின் சிரிப்பை நிறுத்த அவளின் உதட்டை தன் உதட்டால் மூடியிருந்தான். நீண்ட முத்தம் பதித்து விலகியவனின் மார்பில் குத்தியவள்

" சரியான ஆன்டி ஹீரோ" என்றாள்.

"அது என்னடி ஆன்டி ஹீரோ" என்றான்.

"அதுவா வெளிய டெர்ரரா காட்டிப்பாங்க உள்ள போய் பார்த்தா பேபி மாதிரி இருப்பாங்க" என்றாள்.

"நானா பேபி?..." என்றான்.

"ஆமாம் பேபி தான் அதனால் தான் சின்ன வயதில் விளையாட்டாக பேசியதை மனதில் வச்சிட்டு இவ்வளவு வருஷத்தை வேஸ்ட் பண்ணி இருக்கிங்க. சின்ன வயதில் இருந்தே அம்மா அப்பா குட் டச் பேட் டச் என்று சொல்லிக்கொடுப்பாங்க. புதுசா யாராவது பேச வந்தால் நம்பலை பத்தி எதுவும் சொல்லக்கூடாது. நல்லா பழகனவங்க கிட்ட மட்டும் தான் பிரண்ட்ஸிப் இருக்கனும். புதுசா வந்து பழக நினைச்சா அவங்களை உடனே பிரண்டாக்க கூடாது என்று நிறைய சொல்லி கொடுப்பாங்க."

" அதை நினைச்சு தான் அப்படி பேசியிருப்பேன். நீங்க திரும்ப வந்து பிரண்டாகலாம் என்று சொல்வதை அவாய்ட் பண்ண தான் அப்படி நானே வந்து உங்க கிட்ட பேசுவேன் நீங்க பார்த்தா கூட பேசக்கூடாது சொல்லியிருக்கேன்" என்று மீண்டும் மீண்டும் சிரித்தவளை

" அடிப்பாவி நீ சின்னப்பெண் என்று நினைத்து உன் மனசை வறுத்தக்கூடாது உனக்கு கொடுத்த பிராமிஸை காப்பாத்தனும் என்று நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த ஆறு வருசமாக நீயே வந்து பேசுவாய் என்று காத்திருந்தால் என்னை அவாய்ட் பண்ண தான் அப்படி பேசியிருப்பேன் சொல்லுற" என்றான்.

 
Status
Not open for further replies.
Top