ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகும் சூரியன் நானடி-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 54


சூர்யாவின் மார்பில் சாய்ந்தவள் "எனக்கு சரியா தெரியலை அப்போது எல்லாம் இப்படி தான் ஏதாவது பேசி குழப்பி விட்டு பின்னாடி போய் சிரிச்சுட்டு இருப்போன். ரொம்ப வால்தனம் பண்ணிட்டே இருப்பேன் அதனாலே என் பின்னாடியே தாத்தா, அம்மா கண்காணிச்சுட்டே இருப்பாங்க" என்றவளின் கண்கள் கலங்கின.

" அவளின் உச்சியில் முத்தம் பதித்தவன் பின் அவளின் கண்களை துடைத்து அவளை திசை திருப்பும் பொருட்டு "அப்ப பணிரெண்டு வருஷமா நிஜமாகவே பைத்தியமா நீ சொன்னதை நினைச்சுட்டு இருந்தேனா?... " என்றான் அப்பாவியாக

பனிமலரின் முகத்தில் புன்னகை பூக்க " அதான் சொன்னேன் இல்ல நீங்க பேபி தான் என்று இல்லைனா சின்ன பெண் விளையாட்டாக சொல்லுறா என்று கூட தெரியாமல் நீங்களும் கஷ்டப்பட்டு என்னை கஷட்டபட வைத்து அந்த ஆக்கு கூட சேர்ந்து என்னென்னவே செய்து இருக்கிங்க" என்றவள் நியாபகம் வந்தவளாக "அந்த ஆக்கு கூட திரும்ப எப்படி பிரண்ட்ஸ் ஆகினிங்க?... " என்றாள்.

" அதுவா காலேஜில் நடந்ததை உனக்கு சொல்லியிருப்பான் இல்லையா?... " என்றான்.

ஆமாம் என்று தலையாட்டினாள்.

" காலேஜில் சேர்ந்ததில் இருந்து அரவிந்த் இன்னும் மூன்று பேர் அப்புறம் ஆகாஷ் ஆறு பேரும் பிரண்ட்ஸ். அவனுங்க எதிரில் ஆகாஷ் அப்படி பேசவும் யாரும் எனக்கு சப்போர்ட் பண்ணாமல் ஆகாஷுக்கு சப்போர்ட் பண்ணியது என்னை அவமானம் செய்தது போல் ஆகிடுச்சு."

"கோபத்தில் அங்கிருந்து வந்து வீட்டுக்கு கூட போகாமல் இந்த ரூமில் தான் வந்து இரண்டு நாள் உன் போட்டோவிடம் புலம்பிட்டு இருந்தேன்."

" இரண்டு நாளுக்கு பிறகு ஆகாஷ் என்னை தேடி வந்தான். நான் அவன்கிட்ட பேச மறுத்தேன் அவன் போகாமல் இங்கேயே இருந்து என்னை வற்புறுத்தி பேச வைத்தான். அப்பவும் உன்னை பற்றி சொல்லி தான் என்னை சமாதானம் செய்தான்".

" என்னை பற்றியா என்ன?..." என்றாள்.

அவளின் இடையை தன்னோடு சேர்த்து இறுக்கியவன் தயக்கமான குரலில் " அதை சொன்னால் நீ வருத்தபடுவடி வேண்டாம்" என்றான்.

" இல்ல நான் வருத்தப்படமாட்டேன் சொல்லுங்க" என்றாள்.

" தயக்கமாக அப்போ எனக்கு பாப்பு டால் என்ற பேர் மட்டும் தான் தெரியும் அது நீ தான் என்று தெரியாது" என்றவன் மீண்டும் தயங்க

"ஊம்... சொல்லுங்க" என்றாள் பனிமலர்.

" அத்தை மாமா இறந்த பிறகு அவங்க உருவாக்கிய கம்பெனியை விற்கக்கூடாது நான் நடத்துறேன் என்று பதினோரு வயதில் நீ பேசியதையும் அப்புறம் நான் வளர்ந்து பிறகு அந்த கம்பெனியை வாங்கி நடத்துவேன் என்று சொன்னதையும் அதனால் தான் அந்த கம்பெனியை ஆகாஷ் வாங்கினது எல்லாம் சொல்லிட்டு அவ குழந்தை அவளுக்கு அப்பா அம்மா உருவாக்கியதை பாதுகாக்கனும் நினைக்கிறாள் ஆனால் நீ தாத்தா அப்பா அண்ணன் என்று உருவாக்கி வச்சிருக்கிறதை அலட்சியம் செய்திட்டு வெளிநாட்டில் போய் எவன் கம்பெனியையோ வளர்க்க நினைக்கிறாயே என்றான் பனிமா."

" அவன் உன்னை பத்தி சொன்னதும் சின்ன பெண் உனக்கு இருக்கிற அறிவு கூட எனக்கு இல்லையே என்று என் மேலேயே கோபம் வந்தது. அதன் பிறகு தான் எங்கள் கம்பெனியை முன்னேற்றி காட்டனும் என்ற வெறி வந்தது. அதனால் அப்போதில் இருந்து அந்த தொழிலை பற்றிய விசயங்களை கத்துக்க ஆரம்பித்தேன். ஆகாஷ் நிறைய ஹெல்ப் பண்ணான்" என்று பேசிக்கொண்டு இருந்தவன் பனிமலரின் விசம்பலில்

" நான் தான் சொன்னேன் இல்லையா அழக்கூடாது என்று மாமாவும் அத்தையும் நம்ப கூடதான் இருக்காங்க எங்கேயும் போகலை அவங்க தான் நம்ப இரண்டு பேரையும் சேர்த்து வச்சு இருக்காங்க" என்று பேசி அவளின் அழுகையை நிறுத்தினான்.

"வீடியோவை போடுங்க அப்பாவையும் அம்மாவையும் பார்க்கனும்" என்றாள்.

வீடியோவை ஓடிவிட்டான் சூர்யா.

சூர்யாவிடம் பேசிக்கொண்டு இருந்தவளை கேசவன் குரல் கலைத்தது.

" சித்துமா எங்க இருக்கடா" என்ற குரல் கேட்டதும்

"அப்பா கூப்பிடுறார் நான் வரேன் சூரியன் பிராமிஸ் பண்ணியதை மறக்கக்கூடாது" என்று அங்கிருந்து துள்ளலுடன் ஓடினாள்.

அதை பார்த்துக்கொண்டு இருந்தவளின் முகம் புன்னகை செய்ய அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவன் சிரித்த இதழ்களை சிறை செய்தான். சிறிது நேரத்தில் விடுவித்தவனை முறைத்தாள் பனிமலர்.

" என்னை கோமாளியாக்கியதற்கு தண்டனை தரவேண்டாமா" என்று கண் சிமிட்டினான்.

"சரியான பிராடு" என்றவள் மீண்டும் வீடியோவை பார்த்தாள். அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பது பிள்ளைகள் மூவரும் விளைடுவது என்று வந்து கொண்டிருந்தது.

" ஊட்டியை சுற்றி பார்க்க வந்திட்டு புல்லா எங்க ஃபேமிலியை தான் கவர் பண்ணி இருக்கிங்க" என்று கேட்டாள்.

"உன்னை பார்க்கறதுக்கு முன்னாடி வரை இயற்கை காட்சிகளைத்தான் எடுத்திட்டு இருந்தேன். எப்ப உன் சிரிப்பு குரல் என் காதில் கேட்டதோ அப்போதில் இருந்து உன்னை தான் சுற்றி சுற்றி எடுத்திட்டு இருந்தேன். அந்த கோமிரா ரொம்ப சின்னதா இருந்ததா அதனால் அது என் கையில் இருக்கிறது பெரும்பாலும் தெரியாது. சுற்றி பார்க்க வந்தது போல் உங்க பின்னாடியே சுற்றி எடுத்திட்டு இருந்தேன்."

" அப்புறம் நாங்க தங்கின ஹோட்டலில் தான் நீங்களும் இருந்ததால் மறுநாளும் நீங்க கிளம்புபோது உங்க பின்னாடியே வந்தேன். அன்னைக்கு ஈவினிங் ஹோட்டல் திரும்பும் போது பின்னாடி வந்தேன் அப்ப தான் அத்தை ஒரு மாதிரி நடந்து விழப்போனாங்க நான் சட்டென்று பிடிச்சுக்கிட்டேன் என்று சொன்னவனின் கண்களிலும் கண்ணீர் கேட்டவளின் கண்களிலும் கண்ணீர்.

அவனின் மார்பில் புதைந்து கதறினாள் பனிமலர்.

அவளின் முதுகை தட்டிக்கொடுத்து ஆறுதல் படுத்தியவனின் கண்களில் வழிந்த கண்ணீரையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

"அன்னைக்கு.... எவ்வளவு.... சந்தோஷமாக... இருந்தோம்... தெரியுமா ரொம்ப வருஷமாக நான் தம்பி பாப்பா தங்கச்சி பாப்பா வேணும் என்று கேட்டுட்டு இருந்தேன். அன்னைக்கு அப்பா உனக்கு தம்பியே தங்கச்சியே வரப்போறாங்க என்றதும் எவ்வளவு சந்தோஷப்பட்டேன்" என்று அவன் மார்பில் சாய்ந்து கொண்டு இருந்தவளை நிமிர்த்தியவன்

" பனி உனக்கு அதெல்லாம் நியாபகம் இருக்கா?... " என்று ஆவலாக சூர்யா கேட்டதும்

" ஊம்... எனக்கு இதெல்லாம் நியாபகம் இருக்கு. ஆனால் முன்னாடி நீங்க காட்டினது தான் நியாபகம் இல்லை" என்றாள் கண்ணீருடன்

"அப்ப ஊட்டிக்கு வந்த பிறகு நடந்தது சிலது மட்டும் மறந்திருக்கா இல்லை அதுக்கு முன்னாடி நடந்ததும் மறந்து போச்சா" என்று கேட்டான்.

"இல்லை வீட்டில் இருந்த கிளம்பி வந்தது நியாபகம் இருக்கு அதுக்கு பிறகு அம்மா மயங்கி விழுப்போனது நியாபகம் இருக்கு அப்ப நான் உங்களை பார்க்கலை அம்மாக்கு என்ன ஆகிடுச்சு என்று பார்த்திட்டு இருந்ததால் உங்களை கவனிக்கவில்லை. அதான் உங்க முகம் நியாபகம் வரலை" என்றாள்.

" சரி நம்ப நாளைக்கு டாக்டர் கிட்ட போய் கன்சல் பண்ணலாம்" என்றவன் எழுந்து சென்று அறையின் ஓரமாக இருந்த மின்சார அடுப்பில் பால் பவுடரில் காப்பி போட்டு எடுத்து வந்து இருவரும் அருந்தினர்.

பின் மீண்டும் ஊட்டியில் நடந்த அனைத்தையும் கண்ணிருடன் கூறியவள். தாய் தந்தை தாத்தா இறப்பிற்கு பின் வீட்டில் நடந்தவைகள் வற்புறுத்தி ஹாஸ்டல் சென்றது தமிழின் நட்பு அனைத்தும் கூறியவளின் பேச்சு அன்று கோயிலில் பார்த்தில் வந்து நின்றது.

அவள் கோயில் சந்திப்பில் நடந்தவைகள் அனைத்தும் கூற இடையிடையே சூர்யாவும் நடந்ததை பகிர்ந்து கொண்டான்.

கல்லூரி பங்கஷனில் அவன் நடந்து கொண்டதற்கு மன்னிப்பு வேண்டியவனுக்கு சில பல அடிகளை கொடுத்து இருந்தாள் பனிமலர்.

அன்று இரவு சூர்யாவுக்கும் ஆகாஷுக்கும் நடந்த பேச்சுகளை சொல்ல ஆரம்பித்தான்.

அன்று இரவும் இங்கு வந்து பனிமலரின் போட்டோவை பார்த்து புலம்பிக்கொண்டு இருந்தான் சூர்யா. நீ தான் ஆகாஷ் சொல்லும் பாப்புவாடி அப்ப என்னோட பனி இல்லையா அவன் என்னோட பாப்பு டால் என்று சொல்லும் போதெல்லாம் எனக்கு கோபமாக வரும். அவன் உன்னை பற்றி பேசும்போது எல்லாம் அவனை பேசவிடாமல் செய்வேன்.

அவன் மேல் எனக்கு அந்த ஒரு விஷயத்தில் எப்பவும் பொறாமை வரும்டி அவனுக்கு மட்டும் இப்படி ஒரு பிரண்டு இருக்கா எனக்கு அது மாதிரி பிரண்டு வேண்டும் அவளை கூட்டிட்டு வந்து பாருடா உனக்கு பாப்பு பிரண்ட் என்றால் எனக்கும் ஒரு பிரண்டு இருக்கா என்று காட்டனும் நினைப்பேன்.

உன்னை ஊட்டியில் பார்த்ததும் பிரண்டாக்கி ஆகாஷ் கிட்ட காட்டி பாருடா எவ்வளவு க்யூட்டாக இருக்கா என் பிரண்ட் என்று சொல்லனும் என்று தான் உன் பேச்சுக்கெல்லாம் தலையாட்டினேன். அப்புறம் ஊட்டியில் இருந்து வந்ததும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் நீ சொன்ன இடம் எல்லாம் சுத்திட்டு இருப்பேன். காலேஜ் இல்லாத நாட்களில் பிரண்ட்ஸ்சை கூட்டிட்டு ஊர் சுற்றுவது போல் உன்னை தேடுவேன். இதுவரை நான் உன்னை பற்றி யார்கிட்டையும் சொன்னது இல்லை.

இந்த ரூமில் இப்படி உன் போட்டோவும் உன் வீடியோவும் இருப்பது யாருக்கும் தெரியாது. இந்த ரூமை சுத்தம் செய்யக்கூட யாரையும் விட்டது இல்லை. இதே மாதிரி அந்த வீட்டிலும் ஒரு அறை இருக்கு அங்கயும் யாரும் வந்தது இல்லை. உன்னை பொத்தி பொத்தி வச்சு இருக்கேன்டி இதுவரை இந்த போட்டோவிலும் வீடியோவிலும் எத்தனை ஆயிரம் முறை உன்னை பார்த்தேன் எனக்கு தெரியாது.

உன்னை நட்பாக்கி ஆகாஷ் கிட்ட காட்டனும் என்று நினைத்திருந்த எண்ணம் எப்ப காதலாக மாறிச்சு என்று எனக்கு தெரியாதுடி ஆனால் அன்னைக்கு கோயிலில் பார்த்ததும் என் உயிர் என்னை தேடி வந்துட்டா என்ற நிம்மதி தோன்றியது. அப்புறம் யோசிச்ச போது தான் நான் உன்னை காதலிக்கிறேன் என்று புரிந்தது.

இவ்வளவு நாள் தேடியும் கண்ணில் படாதவள் இப்ப கண்ணில் பட்டுவிட்டாய் அதே போல என் காதலும் உன்னை என்னிடம் சேர்க்கும் என்று நம்பிக்கை வந்தது. எனக்கு உன் மீது காதல் வந்தது போல உனக்கும் காதல் இருக்கு என்று அன்றைக்கு எனக்கு அடிபட்ட போது தெரிந்தது. ஆகாஷ் கிட்ட பிரண்டாக இல்லாமல் காதலியாக அறிமுகம் படுத்தனும் என்று நினைச்சேன் ஆனால் இப்பே நீ தான் அந்த பாப்பு என்று அவன் சொன்னது எப்படி இருக்கு தெரியுமா எதிலோ தேற்றுவிட்ட வலி தான் வருது ஏன் என்று தெரியலை என்று புலம்பிக்கொண்டு இருந்தவனின் போன் ஒலித்தது.

ஆகாஷ் என்று இருந்தது ஆன் செய்து காதில் வைத்த போது "கீழே வாடா" என்ற ஆகாஷின் கோபமான குரல் கேட்டது.

கீழே வந்தவனின் சட்டையை பிடித்து இருந்தான் ஆகாஷ். அதற்கு எந்த எதிர்வினையும் இல்லாமல் அமைதியாக நின்றான் சூர்யா.

"எதுக்குடா என் பாப்புவை அழவச்ச?..." என்று கோபத்துடன் கேட்டான் ஆகாஷ்.

அப்போதும் சூர்யா அமைதியாக இருக்கவே ஆகாஷுக்கு கோபம் அதிகமாகியது.

"கேட்கிறேன் இல்லையா என் பாப்புவை எதுக்குடா அழவச்ச?..." என்றான்.

ஆகாஷின் கையை தன் சட்டையில் இருந்து எடுத்தவன் பொறுமையாக " அவள் உன்னோட பாப்பு இல்லை என்னுடைய பனி இந்த சூரியனின் பனி என்றான்.

சூர்யாவின் பேச்சில் அதிர்ந்த ஆகாஷ் "வாட் உன்னுடைய பனியா?..." என்றான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 55



சூர்யா ஆமாம் என்று தலையாட்டினான்.

"டேய் என்ன உளறுகிற உனக்கு எப்படி பாப்புவை தெரியும். அப்படியே உனக்கு அவளை தெரிந்தாலும் அவளுக்கு உன்னை தெரியுமா?... அப்புறம் உன் பனி என்று சொன்னியே அது அவளுக்கு தெரியுமா?..." என்றவனின் குரலில் சற்று ஏளனம் இருந்தது.

சூர்யா இப்போது ஆகாஷை முறைத்தவன் " அவள் என்னோட பனி நான் அவளோட சூரியன் என்று எங்க இரண்டு பேருக்கு தெரிந்தால் போதும்" என்றான்.

" ஹாஹாஹா... ஹாஹா..". என்று வாய்விட்டு சிரித்தான் ஆகாஷ்.

அதை கண்ட சூர்யா பல்லைகடித்தவன் "எதுக்குடா சிரிக்கிற?..." என்றான்.

"நீ சொன்ன ஜோக்கை கேட்டு தான் சிரிச்சேன். ஏன்டா நீ அவளை பார்த்து காதலிக்கிறேன் சொல்லுறது கூட ஓகே ஆனால் அவள் உன்னை காதலிக்கிறா என்று சொல்லுறியே அது உனக்கே காமெடியாக தெரியலையா?..." என்றான்.

இறுகிய முகத்துடன்" ஏன்?..." என்று கேட்டான் சூர்யா.

" ஏன் என்றால் பாப்பு யாரையாவது காதலித்தால் எனக்கு தெரிந்து இருக்கும். அவள் என்கிட்ட பகிர்ந்து இருப்பாள்" என்றான்.

" அவள் சொல்லாமல் கூட இருந்து இருக்கலாம்" என்றான் சூர்யா.

"அவள் என்கிட்ட சொல்லாமல் இருக்க மாட்டா அப்படி சொல்லலை என்றாளும் எனக்கு தெரிந்து இருக்கும்" என்றான் உறுதியான குரலில் ஆகாஷ்.

" எப்படி தெரிந்து இருக்கும்" என்று கூறிய பார்வையுடன் கேட்டான் சூர்யா.

" அவள் பாதுகாப்புக்கு நான் வைத்து இருக்கும் ஆட்கள். அவளை பற்றிய விஷயம் எல்லாம் தினமும் வந்திடும்" என்றான் ஆகாஷ்.

" இது அவளுக்கு தெரியுமா?..." என்றான் சூர்யா.

"இல்லை அவங்க அவளை நெருங்காமல் கொஞ்சம் இடைவெளியில் தான் இருப்பாங்க. அவளுக்கு எதாவது பிரச்சனை என்றால் தான் நெருங்குவாங்க. இதுவரை அதுமாதிரி எந்த பிரச்சனையும் வரவில்லை."

"அவங்க ஃபேமிலி இருக்கும் போது நீ எதுக்கு அவளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு பண்ணியிருக்க?... " என்று கேட்டான் சூர்யா.

" அவளுக்கு இப்ப இருக்கிறது அவங்க பெரியப்பா ஃபேமிலியும் பாட்டியும் தான் அவங்க அப்பா அம்மா இல்லை". வறுத்தமான குரலில் கூறினான் ஆகாஷ்.

" வாட் அவங்க அப்பா அம்மா இல்லையா?... " என்று அதிர்ச்சியில் எழுந்து நின்றிருந்தான் சூர்யா.

"இல்லை கார் விபத்தில் அவங்க அப்பா அம்மா தாத்தா இறந்திட்டாங்க" என்றான் ஆகாஷ்.

" எப்ப நடந்தது?... " என்றான்.

"பாப்புவோட பதினொன்றாவது வயதில் லீவுக்கு ஊட்டிக்கு போயிட்டு திரும்பும் போது" என்று ஆகாஷ் கூறியதும் மேலும் அதிர்ந்தான் சூர்யா.

" அப்ப நான் கடைசியாக பார்த்த கொஞ்ச நேரத்தில் நடந்து இருக்கு. அதுக்கூடத்தெரியாமல் இருந்து இருக்கேன் என் பனி எவ்வளவு வேதனை பட்டுட்டு இருந்து இருப்பாள் அதுக்கூட உணராமல் நான் ஊர் சுத்திட்டு இருந்து இருக்கேன்."

"அதான் அன்னைக்கு நான் திரும்ப பார்க்கும் போது அந்த குழந்தையை ஏக்கமாக பார்த்திட்டு இருந்தாளா, அப்பா அம்மா இல்லை என்ற ஏக்கத்தில் தான் அன்னைக்கு அப்படி இருந்தாளா அதுக்கூட தெரியாமல் என்னை பார்த்ததும் ஓடி வந்து பேசலை என்று திட்டிட்டு இருந்து இருக்கேன்" என்று புலம்பியவன் அங்கிருந்த கண்ணாடி டீபாயை ஓங்கி குத்தியதில் கண்ணாடி சில்லுசில்லாக உடைந்து அவன் கையை கிழித்து இருந்தது.

அதுவரை சூர்யா பேசியதை நம்பமுடியாமல் கேட்டுக்கொண்டு இருந்தவன் இப்படி செய்வான் எதிர் பார்க்கவில்லை.

" டேய் சூர்யா என்ன இது" என்றவன் ஓடிச்சென்று முதலுதவி பெட்டியை எடுத்து வந்து இரத்தத்தை துடைத்து மருந்திட்டு கட்டு போட்டான் ஆகாஷ். ஆனால் சூர்யாவின் மனதில் அவன்மீதே அவனுக்கு இருந்த கோபம் மீண்டும் கையை அமர்ந்து இருந்த சோபாவில் குத்த திரும்ப ரத்தம் வழிந்தது.

ஆகாஷால் சூர்யாவை சமாளிக்க முடியாமல் செக்யூரிட்டியை அழைத்து அருகில் டாக்டர் இருந்தால் அழைக்குமாறு கூறினான். அடுத்த அரை மணி நேரத்தில் மருத்தவர் வந்தார். அந்த அரைமணி நேரத்தில் அவனை சமாளித்து எப்படி பாப்புவை தெரியும் என்று அறிந்து கொண்டான்.

டாக்டர் வந்து சுத்தம் செய்து மருந்திட்டு சூர்யாவிற்கு தூங்க ஊசியை போட்டுச்சென்றார். ஆகாஷ் பால் காய்ச்சி சூர்யாவை குடிக்கவைத்து மாத்திரையை போடவைத்து தூங்க வைப்பதற்குள் நொந்து போனான்.

இரண்டு செக்யூரிட்டியில் ஒருவரை அழைத்து இடத்தை சுத்தம் செய்து விட்டு அவனும் உறங்கிப்போனான்.

காலையில் எழுந்த ஆகாஷ் சூர்யா நன்றாக உறங்குவதை கண்டு விட்டு சென்று குளித்து சூடாக காபியையும் பிரட் ஆம்லெட் போட்டு எடுத்துச்சென்று சூர்யாவை எழுப்பினான்.

சூர்யாவை குளிக்க்காதே முகம் மட்டும் கழுவி விட்டு வரச்சொன்னான் ஆகாஷ்.

சூர்யாவும் அப்படியே செய்ய அமைதியாக உண்டு முடித்தனர்.

பின் ஆகாஷ் தான் பாப்புவை திரும்ப எப்ப பார்த்தாய் என்று விசாரித்தான். சூர்யாவும் அனைத்தும் சொன்னான்.

"எப்படிடா இதுவரைக்கும் நீயும் காதலை சொல்லலை அவளும் உன்னிடம் காதலை சொல்லவில்லை ஆனால் அவள் விரும்புறா என்று சொல்லுகிறாய்" என்று கேட்டான் ஆகாஷ்.

"அது உனக்கு புரியதுடா அவள் காதலிக்கிறா அதை கூடிய சீக்கிரம் தெரிய வரும். அப்புறம் அந்த பாதுகாப்பு கொடுக்கிறவங்களை வேண்டாம் என்று சொல்லு அவனுங்க வேஸ்ட் இனி நான் வேறு ஆளை ஏற்பாடு செய்கிறேன்" என்றான்.

ஆகாஷ் சிந்தனையில் இருந்ததால் சரி என்றான்.

" அப்புறம் எல்லார் எதிரிலும் எப்படி எதிரிகளாக இருப்போமோ அதே மாதிரி பனி எதிரிலும் இருப்போம்" என்றான் சூர்யா.

" ஏன்டா பாப்புக்கு தெரிந்தால் என்ன?... " என்றான்.

" அவளுக்கு நான் என்ன உறவு என்று அவளாக சொல்லும் வரை நம்ப நட்பு தெரியக்கூடாது" என்றான்.

சூர்யா எதை நினைத்து அப்படி சொல்லுகிறான் என்று புரிந்தது. பனிமலருக்கு ஆகாஷை விட சூர்யா தான் நெருக்கமானவன் என்பதை காட்டவேண்டும் என்று தான் கூறுகிறான் என்பதை புரிந்து கொண்டு சரி என்று தலையாட்டினான்.

அடுத்து சூர்யா சொன்னது போல் வேறு ஆட்களை பாதுகாப்புக்கு மாற்றினர். அவர்கள் மூலம் அவர்கள் விடுமுறை நாட்களில் வெளியே சுற்றுவது எங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்து சில சமயங்களில் பாடிகார்ட்ஸை பார்க்கிங்கிலேயே விட்டு விட்டு மாஸ்க் தொப்பி கண்ணாடி என்று அணிந்து இடைவெளி விட்டு நின்று அவளை ரசிப்பது அதுவும் அந்த ஐஸ்கிரீம் கடையில் அவள் ஐஸ்கிரீமை உண்ணுவதை இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருப்பதுதான் நிறைய முறை நடந்து இருக்கிறது. ஓடிச்சென்று அவளின் இதழில் இருக்கும் ஐஸ்கிரீமை சுவைக்கவேண்டும் என்ற வெறியே வரும் என்று சொல்லிக்கொண்டு இருந்தவனின கையில் பட் பட் என்று அடிகளை வைத்தாள் பனிமலர்.

இவ்வளவு நேரம் அவன் சொல்வதை கண்கலங்க கேட்டுக்கொண்டு இருந்தவள் ஐஸ்கிரீம் பற்றி அவன் சொன்னதும் கோபம் வந்தது. அதனால் அவளின் கைகளில் அடித்துக்கொண்டு இருந்தாள்.

"ஏய் எதுக்குடி அடிக்கிற?..." என்றான்.

"ஐஸ்கிரீம் வேண்டும் என்றால் வாங்கி சாப்பிட்டு இருக்கனும் நான் சாப்பிடுவதை எதுக்கு பார்த்திங்க?..." என்றாள்.

"ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுவதற்கும் இந்த உதடுகளில் இருக்கும் ஐஸ்கிரீமை சாப்பிடுவதற்கும் வித்தியாசம் இல்லையா?..." என்றவனின் உதடுகள் பெண்ணவளின் உதடுகளை சுவைக்க ஆரம்பித்திருந்தது.

பனிமலரே மூச்சுக்காற்றுக்காக அவனை தள்ளும் வரை இதழை சுவைத்து கொண்டு இருந்தான்.

அவனின் வாய் மீது இரண்டு அடிகளை கொடுத்தவள் " முரடன்" என்றவள் மணியை பார்த்து விட்டு "ஏய் மூன்று ஆகுது காலேஜ்க்கு போகனும் ஸ்கூட்டிக்காக அந்தப் பொண்ணுங்க வெயிட் பண்ணுவாங்க" என்றாள்.

சூர்யா யார் என்று விசாரிக்க அவள் வந்த கதையை சொல்ல அவளின் காதை பிடித்து "ஜேம்ஸ் பாண்ட் வேலை எல்லாம் பார்த்து இருக்கிங்க அவ்வளவு பாடிகார்ட்ஸ்சையும் ஏமாத்திட்டு வந்து இருக்கிங்க" என்றவன் பின் "நான் பார்த்துக்கிறேன் நீ போய் பேஸ்வாஸ் பண்ணிட்டு வா" என்று அவளை குளியல் அறையில் விட்டு விட்டு கதவை திறந்து கொண்டு கீழே சென்றவன்

" ஆகாஷ்" என்று குரல் கொடுக்க சமையல் அறையில் இருந்து" இங்கே இருக்கேன் டா" என்று குரல் கொடுத்தான் ஆகாஷ்.

அங்கே சென்றவன் தமிழின் தலையில் கொட்டு வைக்க

" ஆஆ..." வென கத்தினாள்.

"ரெண்டு பேரும் சேர்ந்து அத்தனை பாடிகார்ட்ஸையும் ஏமாத்திட்டு ஜேம்ஸ் பாண்ட் வேலை பார்த்து இருக்கிங்க" என்றான்.

இடுப்பில் கை வைத்து முறைத்தவள் "அதனால் தான் நீங்க பண்ண பிராடு தனத்தை எல்லாம் கண்டுபிடிக்க முடிந்தது" என்றாள்.

"சரி சரி இப்ப பேச நேரம் இல்லை நாளைக்கு உன்னிடம் பேசுறேன்" என்றவன் ஆகாஷிடம் " லன்ச் வாங்கிட்டியா?... " என்றான்.

"இப்பதான் ஆர்டர் பண்ணது வந்தது அதான் எல்லாம் எடுத்து வச்சிட்டு உங்களை கூப்பிட நினைச்சோம்" என்றான்.

" இல்லைடா நான் மேலே எடுத்திட்டு போறேன்" என்றான்.

" ஏன்டா ரொம்ப அழுதாளா?... "என்று கேட்டான் ஆகாஷ்.

" ஊம்..." என்று சூர்யா சொன்னதும்

" நான் போய் மலரை பார்க்கிறேன்" என்று நகர்ந்தவளை கை பிடித்து தடுத்தான் சூர்யா.

"இப்ப அவள் உன்னை பார்த்தா இன்னும் அழுவா அதனால் வேண்டாம் இப்ப சாப்பிட்டு விட்டு நீங்க கிளம்பி போயிட்டு நாளைக்கு வாங்க" என்றான்.

தமிழுக்கு மலரை பார்க்க வேண்டும் போல் இருந்தாலும் இப்போது பார்த்தால் அவளின் அழுகை அதிகமாகும் என்று சரி என்று ஒப்புக்கொண்டாள்.

ஆகாஷிடம் சிலது சொல்லியவன் இருவருக்குமான உணவை எடுத்துக்கொண்டு மாடியேறினான்.

கதவை திறந்து உள்ளே சென்ற போது அறையில் மாட்டப்பட்ட அவளின் போட்டோக்களை பார்த்துக்கொண்டு இருந்தாள் பனிமலர்.

தன் மீது எவ்வளவு அன்பு இருந்தாள் இவ்வளவு வருஷமாக இப்படி என் போட்டோவையும் வீடியோவையும் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறான். நான் விளையாட்டாக சொன்ன வார்த்தைக்காக என்னை நெருங்காமல் இருந்து இருக்கிறான் என்று நினைத்துக்கொண்டு இருந்தவளை பின்னிருந்து அணைத்தவன் நிஜத்தில் இருப்பவளின் கன்னங்களை வருடாமல் நிழலாக புகைப்படத்தில் இருந்த பனிமலரின் கன்னத்தை வருடினான் சூர்யா.

அவனின் கைகளை தட்டிவிட்டாள் பனிமலர்.

"ஏன்டி அதுவும் நீதானே" என்றான்.

"நானே இருக்கும் போது அங்க எதுக்கு" என்றாள்.

"இது தான்டி நீ முதல்முதலாக கண்விரிச்சி என்னை பார்த்தது அது அப்படியே என் மனசில் பதிந்து போச்சுடி" என்றான்.

"இது உங்களை பார்த்து இல்லை நீங்க வச்சு இருந்த கேமராவை பார்த்து விரிந்தது" என்றாள்.

" என்னை பார்த்தா என்ன என் கேமராவை பார்த்தா என்ன" என்றான்.

" உங்களை" என்று அவன் முதுகில் இரண்டு அடிகளை வைத்தவள் " நான் தமிழையும் ஆகாஷையும் பார்க்கனும்" என்றாள்.

" அதெல்லாம் நாளைக்கு பார்க்கலாம் இப்போ சாப்பிடலாம்" என்று அவளை அழைத்து சென்று சோபாவில் அமரவைத்து உணவை அவளுக்கு ஊட்டிக்கொண்டே ஆகாஷ், தமிழ் இருவரும் இப்போது சென்று விட்டு நாளை வரும்படியும் கூடவே செக்யூரிட்டி ஒருவரை ஸ்கூட்டியை எடுத்துச்சென்று காலேஜில் விட்டு விட்டு திரும்பும் போது தங்களுக்கு தேவையானவற்றை கொடுத்து அனுப்புமாறு ஆகாஷிடம் கூறியதை கூறியிருந்தான்.

உணவு முடித்துவிட்டு அங்கிருந்த கட்டிலில் சாய்ந்து கால்களை நீட்டி சூர்யா அமர்ந்து கொள்ள அவன் மேல் சாய்ந்து அமர்ந்து இருந்தால் பனிமலர்.

சூர்யாவின் ஒரு கை பனிமலரின் இடையில் படிந்து இருக்க மறுகையில் பனிமலரின் கையை பிடித்து இருந்தான். அவளின் விரல்களில் சிறு சிறு முத்தங்களை கொடுத்துக்கொண்டு இருந்தான்.

கண்மூடி சாய்ந்து இருந்தவள் திடீரென புன்னகை செய்தாள்.

"என்னடி" என்றான் சூர்யா.

"இல்லை ராத்திரியில் நீங்க செய்யும் கிறுக்குத்தனம் நியாபகம் வந்தது". என்றாள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 56



"என்னது கிறுக்குத்தனமா நானா?..." என்று கேட்டான்.

"நீங்க தான் நான் தூங்கிட்டு இருக்கும் போது ராத்திரியில் ஐயா என்ன செய்விங்களாம்" என்றாள் புன்னகையுடன்

"ஏய் உனக்கு தெரியுமா அப்ப நீ தூங்கலையா தினமும் எல்லாம் கேட்பியா?..." என்றான் ஆவலாக

" எல்லா நாளும் கேட்கலை நான்கு நாளா கேட்டேன்" என்று சொன்னாள். அவன் பேசியதற்கு தான் மனதில் திட்டியதையும் சொல்லி சிரித்தாள் பனிமலர்.

"அடிப்பாவி நான் உருகி உருகி பேசுனது பாடுனது உனக்கு பைத்தியம் மாதிரி தெரிந்ததா?... பைத்தியம் என்ன பண்ணும் தெரியுமா" என்றவன் அவளின் கழுத்தின் பின் பகுதியில் வலிக்கும் படி கடித்து வைத்தான்.

"ஆஆ... வென" கத்தியவள் அவனின் கன்னத்தை வலிக்கும் படி கடித்தாள்.

" ஏய்" என்று கன்னத்தை தேய்த்து விட்டவன் " ராட்சசி இப்படியா கன்னத்தில் கடிக்கிறது" என்றான்.

" நீயும் தானே கடிச்ச" என்றாள்.

"ஏய் நான் எங்க கடிச்சேன் டிரஸ் மறைக்குற இடத்தில் கடிச்சேன் நீ இப்படி கடிச்சது எல்லாருக்கும் தெரியும் இல்ல" என்றான்.

"அச்சச்சோ ஆமாமில்ல" என்றவள் அவன் கன்னத்தை நன்றாக தேய்த்து விட்டாள். அவளின் கையை விலக்கியவன்

" போதும் கொஞ்ச நேரம் தூங்குடா" என்றவன் நன்றாக படுத்து அவளை இழுத்து தன் மார்பில் படுக்கவைத்துக்கொண்டான்.

நீண்ட நேரம் அழுதது பழைய நினைவுகள் பகிர்ந்தது எல்லாம் சேர்ந்து விரைவிலேயே உறங்கியிருந்தனர்.

இரவு ஏழு மணிக்கு செக்யூரிட்டி போன் செய்த போது தான் இருவரும் எழுந்தனர். போன் பேசி வைத்து விட்டு எழுந்து குளியல் அறை சென்று முகம் கழுவி வந்தவன் கீழே சென்று செக்யூரிட்டி கொண்டு வந்ததை வாங்கிக்கொண்டு மேலே வந்து தூக்கம் கலைந்தும் எழாமல் படுத்திருந்தவள் அருகில் சென்று அவளின் போர்வையை விலக்கி "எழுந்திரு பனிமா டிரஸ் வந்திடுச்சி மாத்திக்கோ" என்றான்.

மெல்ல எழுந்து தேவையான உடைகளை எடுத்து சென்றவள் குளித்துவிட்டே வெளியே வந்தாள்.

"கீழே போகலாமாடா நீ இன்னும் வீட்டையும் தோட்டத்தையும் சுற்றி பார்க்கவில்லையே" என்றான்.

சரி என்று தலையாட்டி உடன் சென்றாள். அவளை தன் கைவளைவில் வைத்துக்கொண்டே அனைத்தையும் காட்டிய போதும் அவளுக்கு அதனை ரசித்து பார்க்கும் எண்ணம் இல்லை . வீட்டை பற்றி மேலோட்டமாக சொன்னானோ தவிர அவனுக்கும் இன்னும் சில விளக்கங்களை அவளுக்கு சொல்ல வேண்டியது இருக்கவே சுற்றி பார்க்கும் எண்ணம் இல்லாமல் போக கீழே ஹால் சோபாவில் அமர்ந்து கொண்டனர்.

சிறிது நேரம் அமைதியாக அவரவர் சிந்தனையில் இருந்தனர். சூர்யா தான் முதலில் பேசினான்.

பனிமலரை இழுத்து அணைத்தவன் அவளின் உச்சியில் முத்தமிட்டு "சாரிடி பனி உன்னை ரொம்ப ரொம்ப கஷ்டடுத்திட்டேன் அன்னைக்கு பீச்சில் எப்படி அழுதிட்டு இருந்த அப்பக்கூட நான் இருக்கேன் பனிமா என்று வராமல் ஒளிந்து இருந்தேனே" என்றான் வருத்தமான குரலில்

"ஏய் அப்ப அங்கதான் இருந்திங்களா?..." என்றாள்.

அன்னைக்கு காலேஜ் போறிங்க என்று ஆகாஷ் சொன்னான் அதனால் உன்னை பார்க்க காலையிலே வந்து காரிலேயே இருந்து நீ உள்ள போகறதை பார்த்தேன். உன் முகம் ரொம்ப சோகமாக இருப்பதை பார்த்திட்டு என்னால் போகமுடியலை அதனால் நீ திரும்பி வரும் வரை வெயிட் பண்ணேன்."

" நீங்க வெளியே வந்து பீச் பக்கம் போகறதை பார்த்து பின்னாலே வந்தேன். ஆகாஷுக்கு ஏற்கனவே போன் பண்ணி வரச்சொல்லி இருந்தேன். அவன் முக்கியமான மீட்டிங் போயிட்டு இருக்கு முடிந்ததும் வரேன் மெசேஜ் பண்ணான்."

" நீங்க ரெண்டு பேரும் பேசுவது கேட்கும் தொலைவில் படகுக்கு பின்னாடி தான் இருந்தேன். நீ தமிழ் கிட்ட சொன்ன இல்ல சூரியன் இங்க தான் இருக்கார் என்று அப்பவே உன் முன்னாடி வந்து நிற்கனும் என்று இரண்டு அடி எடுத்து வச்சிட்டேன் ஆனால் ஆகாஷ் வந்து தடுத்து கொஞ்ச தூரம் கூட்டிட்டு போய் திட்டினான். "

" இப்ப உண்மை தெரிந்தால் எழில்நிலாவை வீட்டை விட்டு போவதை தடுக்க நினைப்பாள் அவங்க பெரியப்பா பெரியம்மா பாட்டி மனசு வருந்தினால் இவளால் தாங்கமுடியாது. அதனால் டாடிக்கிட்ட பேசுறேன் என்று போய் எல்லாம் சொன்னால் என்ன ஆகும் எழில்நிலா எதாவது கிறுக்குத்தனமாக பண்ணிக்கிட்டா என்ன பண்ணுறது அதனால் இவ்வளவு நாள் இருந்த மாதிரி இன்னும் இரண்டு நாள் இரு நான் போய் சமாதானம் செய்யுறேன் என்று வந்தான்."

" ஆனால் அவனை பார்த்து நீ அப்பா அம்மா வேணும் என்றதும் என் உயிரே போயிடுச்சி இப்படி நீ அழுவதை பார்த்திட்டு நிற்கிறேனே என் மேலேயே எனக்கு கோபம் வந்தது. அதுக்கு மேல் உன்னை அந்த நினைவில் இருந்து வெளிக்கொண்டு வரனும் என்று தான் நான் வந்து சண்டை போட்டு பிரச்சனையை உண்டாக்கி திசை திருப்பினேன். ஆகாஷ் தமிழ் கிட்ட சண்டை போட்டேன். உன் அணைப்பில் இருந்து விலகக்கூடாது என்று இருந்தேன் ஆனால் நீயே தமிழுக்காக என்னை விலகி போனதும் கோபம் வந்தது அதனால் தான் உனக்கு நான் முக்கியமா அவங்க முக்கியமா என்று கேட்டேன்."

" நீ அவங்க தான் முக்கியம் என்றதும் கோபமாக போனேன் ஆனால் தூரத்தில் இருந்து பார்த்திட்டு தான் இருந்தேன். ஏன்டி அப்படி கட்டி அணைச்சிக்கிட்டவ அவங்களுக்கு ஒன்னு என்றதும் என்னை விட்டு ஓடிட்ட" என்றான் வருத்தமான குரலில்

"நீங்க அன்னைக்கு என்ன சொன்னீங்க அக்காவை கட்டிக்கபோறேன் சொன்னிங்க. அப்படி சொல்லும் போது நான் எப்படி உங்க கூட வரமுடியும். அதுவும் இல்லாமல் நீங்க எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவங்க ரெண்டு பேரும் எனக்கு முக்கியம். அவங்க இல்லை என்றாள் இந்த பனிமலர் இன்னேரம் என்னவாகியிருப்பேனோ ஏன் இல்லாமல் கூட போயிருக்கலாம்" என்றவளின் வாயை கையால் மூடினான் சூர்யா.

" இப்படி எல்லாம் பேசாத பனி" என்றான் கோபமான குரலில்

சற்று நேரம் அமைதியாக இருந்தவள்

" சரி மேலே சொல்லுங்க" என்றாள்.

" அடுத்து உன்னை காலேஜ் பங்கஷன் அப்ப பேசியது" என்றதும் அவளின் உடல் இறுகியது.

"சாரிடி அன்னைக்கு கோபத்தில் தான் சொன்னேன் ஆனால் அடுத்த நீ நம்ம கம்பெனி வந்த போது அதையே சொல்லக்காரணம்" என்றபோது அவனின் அணைப்பில் இருந்து விலக முயன்றாள் ஆனால் சூர்யா இறுக்கமாக அணைத்திருந்தான்.

" நான் சொல்லுறதை கேட்டுட்டு அப்புறம் நீ என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்டி" என்று சொன்னவன் காரணத்தை சொன்னான்.

" நீயும் அந்த கம்பெனியோட முதலாளி" என்று சூர்யா சொன்ன போது

"இல்லை" என்றாள் பனிமலர்.

"நீ முதலாளி தான் அப்படி இருக்கும் போது தொழிலாளியா நீ வந்து வேலை செய்தால் உன்னை எல்லோரும் சக தொழிலாளியா பழகுவாங்க அதை நான் தப்பு என்று சொல்லலை. ஆனால் கல்யாணம் முடிந்து நீ அந்த கம்பெனிக்கு முதலாளியாக வரும்போது எல்லாரும் உனக்கான மரியாதையை பெயரளவில் தான் கொடுப்பாங்க" என்றவனை கேள்வியாக பார்த்தாள் பனிமலர்.

" அவங்க மனசுக்குள்ள என்ன இருக்கும் தெரியுமா நம்பள மாதிரி இவளும் இங்க வேலை செய்தவள் தானே முதலாளியை கல்யாணம் பண்ணதால் மரியாதை கொடுக்க வேண்டியதாக இருக்கு என்று நினைப்பதோடு மற்றவர்களிடமும் அது வம்பு பேச்சாக வரும் அப்படி ஒரு நிலைமை என் மனைவிக்கு வரக்கூடாது எல்லாரும் உன்னை முதலாளியாக மட்டும் தான் பார்க்கனும் என்று நான் நினைத்தேன் இது உனக்கு தவறாக இருந்தால் நீ என்ன தண்டனை வேண்டுமென்றாலும் கொடு" என்று சொன்னான்.

அடுத்த வினாடி பனிமலர் அவன் முகம் எங்கும் தன் முத்திரைகளை பதித்தாள். சிறிது நேரத்தில் அந்த வேலையை சூர்யா எடுத்துக்கொள்ள நீண்ட நேரம் முத்த சத்தம் கேட்டு கொண்டு இருந்தது.

இரவு உணவு உண்டு மேலே அறைக்கு வந்து படுத்ததும் சூர்யா பனிமலரை அணைத்து முத்தமிட நெருங்க இருவர் உதட்டுக்கும் இடையில் கைவைத்து தடுதத்திருந்தாள் பனிமலர்.

"ஏய் கையை எடுடி" என்றான் தாபக்குரலில்

"இன்னும் பேசிமுடியலை" என்றாள் பனிமலர்.

"எல்லாம் தான் சொல்லிட்டனே" என்றான் எரிச்சலாக

"முக்கியமான விஷயம் இன்னும் சொல்லவே இல்லை" என்றாள்.

"ஏய் இப்படி பில்டப் கொடுக்காமல் சீக்கிரம் சொல்லுடி என்ன அது?..." என்றான்.

"அதுவா... அதுவா..." என்று வேண்டும் என்றே தயங்குவது போல சொல்ல

" அடியேய் இப்ப எதுக்கு இப்படி இழுத்து இழுத்து நேரத்தை கடத்துற சொல்லப்போறியா இல்லை நான் என் வேலையை பார்க்கவா" என்றான் கோபமாக

இதுக்கு மேல் அவனை கோபப்படுத்த வேண்டாம் என்று நினைத்தவள் "எழில்நிலா அரவிந்த் பற்றி சொல்லவே இல்லை" என்றாள்.

"ஏன்டி இதை நாளைக்கு கேட்டுயிருக்கலாம் இல்ல இப்ப எவ்வளவு முக்கியமான வேலையிருக்கு உன் அத்தானுக்கு" என்றவனின் பார்வை அவளின் அங்கங்களில் ஊர்வலம் வந்தது.

அவனின் பார்வையில் முகம் சிவந்தவள் அவனின் கையில் அடி ஒன்றை கொடுத்து "எனக்கு இப்ப நிலா அரவிந்த் பற்றி தெரிந்தே ஆகனும்" என்றாள் குரலில் கொஞ்சம் பிடிவாதம் இருந்தது.

அவள் அடித்த இடத்தை தடவியவன் "ராட்சசி" என்றவன்

"என்னால் இப்போதைக்கு மொத்தமா சொல்லமுடியாது முக்கியமானது மட்டும் சொல்லுறேன்" என்றான்.

பனிமலர் சரி என்று தலையாட்டினாள்.

"அரவிந்த் எழில்நிலா காதல் பற்றி உனக்கு தெரியும் தானே" என்றான்.

"ஆம்" என்று பனிமலர் சொல்லவும்

"அரவிந்த் வசதி குறைவான குடும்பத்து பையன் அவன் கூட பிறந்தது மூன்று தங்கைகள் அவன் பீ ஜி படிக்கும் போது திடீரென அவன் அப்பா இறந்திட்டார். படிப்பை நிறுத்திட்டு வேலைக்கு போறேன் என்று சொன்னவனை பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து கம்பெல் பண்ணி படிக்க வச்சோம்."

"விபத்தில் இறந்ததால் கொஞ்சம் பணம் வந்தது. அவங்க அம்மா சின்ன கம்பெனி ஒன்றில் வேலை செய்து குடும்பத்தை பார்த்தாங்க. வந்த பணத்தில் படிப்பு செலவை பார்த்துக்கிட்டான். அவன் தங்கச்சிங்க மூன்று பேரும் கவர்மெண்ட் பள்ளியில் படித்ததால் செலவு இல்லை. "

"படிப்பை முடித்து கேம்பஸ்சில் அவனுக்கு கிடைத்த வேலையில் சேர்ந்த மூன்றாவது வருசம் முதல் தங்கைக்கு தூரத்து உறவில் கல்யாணம் பண்ணி கொடுத்தான். கல்யாணத்திற்காக ஆபிஸில் லேன் போட்டு இருக்கான். லோன் முடியவே இன்னும் ஒரு வருடம் இருக்கு அதுக்குள்ள அடுத்த இரண்டு தங்கைகள் ட்வின்ஸ் இரண்டு பேரையும் முதல் தங்கை கணவர் உறவிலேயே அண்ணன் தம்பிக்கு பெண் கேட்டு இருக்காங்க."

" எப்படி திருமணம் செய்வது என்று தெரியாமல் இருந்த நேரத்தில் உன் அக்காவும் வீட்டில் திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்திட்டாங்க என்று என் போட்டோவை அவனுக்கு அனுப்பி இருக்கா."

" அந்த போட்டோவில் என்னை பார்த்ததும் உடனே ஆகாஷுக்கு போன் செய்து சொல்லியிருக்கான். ஆகாஷ் எனக்கு கால் பண்ணி விஷயத்தை சொன்னான் ஏற்கனவே நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க என்ன பண்ணுறது என்று குழப்பத்தில் இருந்தேன். உன் படிப்பு முடியட்டும் என்று ஆகாஷ் சொல்லிட்டு இருந்தான். அவ்வளவு நாள் வெயிட் பண்ணணுமா என்று இருந்த எனக்கு அரவிந்த் எழில்நிலா விசயம் முடிந்தால் உன்னை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று தோன்றியது. அதனால் மறுநாள் இந்த பீச் ஹவுஸ்க்கு அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வரச்சொன்னேன்."
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 57



"மறுநாள் எழில்நிலா, அரவிந்த் வந்தாங்க நானும் ஆகாஷும் அவங்க வீட்டில் பேசி அரவிந்தை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் வாங்கித்தரோம் என்று சொன்னால் இரண்டு பேரும் ஒத்துக்களை அரவிந்த் தங்கைகள் கல்யாணம் பண்ண பிறகு தான் நான் கல்யாணம் பண்ணுவேன் என்றான்."

"நிலா வசதியான குடும்பத்தில் பெண்ணை கல்யாணம் பண்ணத்தான் அப்பாவும் அம்மாவும்நினைப்பாங்க அரவிந்தை ஏத்துக்கமாட்டாங்க அதனால் வீட்டில் பேசவேண்டாம் அப்பா வேண்டாம் என்று சொல்லிட்டா அவர் பேச்சை மீறமுடியாது என்று சொன்னாள்."

" சரி கல்யாணம் பண்ணிட்டு போய் நின்னா ஏத்துப்பாங்க என்று சொன்னால் அதுக்கும் அரவிந்தை வேண்டாவெறுப்பாக ஏத்துக்கக்கூடாது முழுமனசோட ஏகத்துக்கனும் என்றாள்."

" அவகிட்ட எப்படி எப்படியோ பேசி பார்த்தாலும் அவள் எண்ணத்தை மாத்திக்கலை கடைசியா நீ என்ன பண்ணலாம் என்று நினைக்கிற சொல்லு என்றதற்கு கல்யாணம் பண்ணிட்டு வெளிநாட்டுக்கு போய் வேலை செய்து அரவிந்த் பிரச்சனையை சரி செய்த பிறகு என் வீட்டுக்கு அரவிந்தை கூட்டிட்டு போறேன் என்று சொன்னாள்."

" அதற்கு அரவிந்த் தங்கைகளுக்கு கல்யாணம் பண்ணாமல் நான் கல்யாணமும் பண்ணமாட்டேன் எங்கேயும் போகமாட்டேன் சொல்லிட்டான்."

" அவங்களை சமாதானம் செய்து சம்மதிக்க வைக்க நானும் ஆகாஷும் ரொம்ப கஷ்டப்பட்டு போனோம். நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் அரவிந்த் தங்கைகள் கல்யாணத்திற்கு பணம் கடனாக நாங்க தரோம் அதை வைத்து ஒரு மாதத்தில் அவங்க கல்யாணம் முடித்து அனுப்பிட்டு இவங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு வெளிநாட்டு வேலை கிடைத்தால் அங்கு போவது கிடைக்கவில்லை என்றால் மும்பையில் கொஞ்ச நாள் நம்ப கம்பெனியில் வேலை செய்திட்டு வேலை கிடைத்ததும் அங்கே போக ஏற்படும் பண்ணிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம்."

" அடுத்து கல்யாணப்பேச்சு இப்ப தான் ஆரம்பித்து இருக்காங்க பேசி முடிய எப்படியும் ஆறு மாசம் ஆகும் அதனால் வீட்டில் ஓகே சொல்லிடலாம் என்று முடிவு எடுத்தோம். வீட்டிலும் ஓகே சொன்னால் அந்த வாரத்திலேயே நிச்சயதார்த்தம் என்று சொல்லுறாங்க."

" திரும்ப மறுநாளும் நாலுபேரும் பேசி நிச்சயதார்த்தம் நடக்கட்டும் கல்யாணத்தை தள்ளி வச்சிக்கலாம் அப்ப தான் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்கும் என்று முடிவு செய்து அதன்படி எல்லாம் நடந்தது."

"அடுத்து லண்டனுக்கு பிஸ்னஸ் விஷயமாக போயிட்டு வந்தேன் அந்த ஆர்டர் நம்ப கைக்கு வந்ததால் இப்போ அங்க தங்கி அந்த வேலைகளை செய்ய எனக்கு ஒரு நம்பகமான ஆள் தேவைப்பட்டது. அது பெரிய ஆர்டர் அதில் பிரச்சனை இல்லாமல் இங்கிருந்து அனுப்புவதை பாதுகாப்பாக உரிய இடம் சேர்க்க யாரை வைப்பது என்று நினைத்ததும் எனக்கு அரவிந்த் நியாபகம் தான் வந்தது."

" ஆகாஷுடம் சொன்னதும் அவனும் சரி என்றதும் அரவிந்த் நிலாவுடன் பேசி சில மாதங்கள் இந்த வேலை செய்து பாருங்கள் பிடித்தால் அங்கேயே பணியை தொடரலாம் இல்லை என்றால் அவர்களின் படிப்புக்கு ஏற்ற வேலையை வாங்கிக்கொள்ளலாம் என்று சம்மதம் வாங்கினேன்."

" அதன் பிறகு பாஸ்போர்ட் இரண்டு பேரும் வைத்து இருந்ததால் விசா ஏற்பாடுகளை செய்தோம். அடுத்த ஒரு மாதத்தில் அரவிந்த் தங்கைகளுக்கு திருமணம் முடித்து அனுப்பி விட்டு இவர்கள் திருமணம் ரிஜிஸ்டர் ஆபீஸில் முடித்து வைத்தோம்."

" கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்பே அவர்கள் கிளம்புவதாக சொல்லவும் நான் தான் கல்யாணத்திற்கு முன்தினம் போகுமாறு சொன்னேன். அவர்கள் ஏன் என்று கேட்ட போது தான் அவர்களிடம் என் காதல் பற்றி சொல்லி கல்யாணம் நிற்கக்கூடாது என்று சொல்லி பனிமலரை கல்யாணம் பண்ணி வைப்பார்கள் அதனால் அன்று செல்ல சொன்னேன் அவர்களும் சம்மதம் சொன்னார்கள்."

" திருமணத்திற்கு முன் தினம் எழில்நிலாவை அங்கிருந்து அழைத்து சென்று ஏர்போர்ட்டில் விட்டு வழியனுப்பியது ஆகாஷ் தான். அவர்கள் சென்ற மறுநாளே ஆகாஷும் லண்டன் கிளம்பிப்போய் அவங்களுக்கு என்னென்ன வேலை எப்படி செய்யவேண்டும் என்பதை கற்றுக்கொடுத்திட்டு வந்தான் என்று அணைத்தும் சொல்லி முடித்தான்.

( சாரி பிரண்ட்ஸ் இதை விரிவாக சொல்லி இருந்தால் இரண்டு எபிக்கு மேல் போகும் அதான் இப்படி சுருக்கமாக சொல்லி இருக்கேன். )

சொல்லி முடித்தவன் பனிமலரிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போக குனிந்து பார்த்தவன்.

"அடிப்பாவி இப்பவே சொல்லு என்று அடம்பிடிச்சியே என்று என்னை கண்ட்ரோல் பண்ணிட்டு சொன்னால் நீ நல்லா தூங்கிட்டு இருக்கியா" என்று அவளின் முதுகில் செல்ல அடி ஒன்றை வைத்தான் சூர்யா.

அவளிடம் அசைவுயில்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை கண்டவன் டேய் சூர்யா இன்னைக்கும் எப்பவும் போல புலம்ப வச்சிட்டாடா என்றவன் தினமும் செய்வது போல் இறுக்கி அணைத்துக்கொண்டு

" உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர்
வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே
மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளி
யாவேன்.

நீ இல்லையென்றால்
என்னாவேன் ஓ..
நெறுப்போடு வெந்தே
மண்ணாவேன். "

பாடலை உருகி பாடிக்கொண்டு இருந்தான் சூர்யா.

மறுநாள் காலையிலேயே தமிழும் ஆகாஷும் வந்துவிட அழுகை சிரிப்பு சண்டை மன்னிப்பு கலாட்டா என்று மதியம் வரை கழிந்து விட மதிய உணவுக்கு பின் நால்வரும் கிளம்பி மருத்தவமனை சென்று மருத்துவரை பார்த்துவிட்டு சில டெஸ்ட் எடுத்து எதுவும் பிரச்சனை இல்லை நார்மல் என்றதும் நிம்மதியுடன் வெளியேறினர்.

மாலை ஆகாஷ் தமிழை அழைத்து சென்று விட சூர்யாவும் பனிமலரும் பெரிய தந்தை வீட்டுக்கு சென்றனர். அவர்களுக்கு அனைத்தும் தெரியும் என்று சூர்யா சொல்லியிருந்ததால் சூர்யாவிற்க்காக அனைவரிடமும் மன்னிப்பை வேண்டினாள். பின் வீடியோ காலில் நிலா அரவிந்த் உடன் பேசி முடித்து இரவு உணவு உண்டு முடித்து வீட்டுக்கு சொல்லாமல் மீண்டும் பீச் ஹவுஸ் வந்தனர்.

குளித்து முடித்து வந்தவளை பேசவிடாமல் கட்டிலில் கிடத்தி படர்ந்திருந்தான் சூர்யபிரகாஷ். அவளிடமிருந்து கிடைத்த அடிகள் கிள்ளல்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு தன் வேலையை செவ்வனே செய்து கொண்டு இருந்தான் பனியின் சூரியன்.

சிறிது நேரத்திலேயே சூரியனின் சூட்டில் பனியும் உருக ஆரம்பித்தாள்.

சூரியனின் வெப்பத்தை பனிக்குள் செலுத்தி அவளை உருகவைத்தவன் பனியின் குளிர்ச்சியில் அந்த சூரியனும் உருகிப்போனான்.

காதலும் காமமும் சரிவிகிதத்தில் கலந்து அங்கே இனிமையான கூடல் முடிந்து அவனின் மார்பில் படுத்திருந்தவளின் விரல்களை வருடிக்கொண்டு இருந்தவன் அவளின் கையில் இருந்த நிச்சயதார்த்தம் அன்று அணிந்த மோதிரம் தட்டுப்படவும் அதில் முத்தம் பதித்தவன் அருகில் இருந்த தன் வாலட்டை எடுத்து அதனுள் இருந்த ஒரு மோதிரத்தை எடுத்தவன் பனிமலரிடம் நீட்டி

"இந்த சூரியனின் வெப்பத்தை தணித்து குளிர்விக்க என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருப்பாயா என் பனிமலரே" என்றான்.

அவனுக்கு பதில் சொல்லாமல் "ஏய் இரண்டு மோதிரமும் ஒரே மாதிரி இருக்கு" என்று தன் கையில் போட்டு இருந்த மோதிரத்தையும் அவனிடம் இருந்து மோதிரத்தையும் அருகருகே வைத்து கேட்டாள்.

" பனி நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன பேசிட்டு இருக்க" என்றான்.

"எல்லாம் தெரியும் தெரியும் ப்ரொபோஸ் பண்ணிங்க" என்றாள்.

" ஏய் அப்ப நான் ப்ரொபோஸ் பண்ணுறது தெரிந்தும் பதில் சொல்லாமல் இருக்க" என்றான்.

"என்ன பதில் சொல்லனும்" என்றாள்.

" நீயும் லவ் பண்ணுறேன் சொல்லனும்" என்றான்.

"சொன்னால் அடுத்து என்ன பண்ணுவிங்க திரும்ப கல்யாணம் பண்ணிக்க போறிங்களா" என்றாள்.

" ஏய் என்னடி பேசுற அதான் நமக்கு கல்யாணம் முடிந்து விட்டதே" என்றான்.

" கல்யாணம் மட்டும் இல்லை அதுக்கு அப்புறம் நடக்க வேண்டியதும் நடந்து முடிந்து விட்டது. இப்ப வந்து மோதிரத்தை நீட்டி வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருப்பாயா என்று கேட்கறீங்க" என்றாள்.

" வேற எப்படி ப்ரொபோஸ் பண்ணுறதுடி"

அவன் கையில் இருந்த மோதிரத்தை வாங்கியவள்

"இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை இந்த சூரியனுள் இந்த பனிமலரும் இருப்பாள்". என்று கூறி மோதிரத்தை போட்டு விட்டவள் அவனை பார்த்து நாக்கை துறுத்தி காட்டினாள்

உன்னை என்றவன் சில பல தண்டனைகளை கொடுத்து விலகியவன். "இந்த மோதிரத்தை உன்னிடம் தரும் வாய்ப்பு கிடைக்குமா என்று இருந்தேன். அப்புறம் உனக்கு கொடுத்ததும் போட்டு விடமுடியலையே என்ற வறுத்தம் வந்திடுச்சி. ஆனால் நீ வந்து டிராமா பண்ணி போட்டுக்கிட்ட அப்ப முதலில் என்னையே முட்டாள் ஆக்கிட்டியே என்று கோபம் வந்தது. அப்புறம் எப்படியோ உன் கையில் போட்டாச்சு என்று சந்தோஷபட்டேன்" என்றான்.

" என் பிஸ்னஸ் வட்டாரத்தில் என் பேரை கோட்டாலே நடுங்குவாங்க ஆனால் நீ என்னை எல்லா விஷயத்திலும் முட்டாள் ஆக்கிட்டு இருக்க" என்றவன் அவளின் கன்னத்தை வலிக்காமல் கடித்தான்.

" ஆன்டி ஹீரோவின் பார்மூலாவே அதுதான் சார். வெளியே சிங்கமா இருக்கனும் வீட்டில் பூனையாக இருக்கனும்" என்றாள்.

" இந்த பார்முலாவை யாருடி கண்டுபிடித்தது" என்றான்.

" யார் கண்டுபிடிச்சது என்று தெரியாது எல்லா ஆன்டி ஹீரோ கதையிலும் அப்படி தான் வரும் என்றவள் தன் போனை எடுத்து கேலரியை ஓபன் செய்தவள் "எல்லாத்தையும் விட நான் உங்களுக்கு கொடுத்த பெரிய மொக்கை இதுதான்" என்று சிரித்துக்கொண்டே ஓவியத்தை காட்டினாள்.

அதை பார்த்தவன் காண்டாகி "அடியேய் அன்னைக்கே உன்னை ஒரு வழி செய்யனும் என்று நினைத்தேன். ஒன்னாம் கிளாஸ் படிக்கும் பசங்க கூட இதை விட நல்லா வரைவாங்க அவ்வளவு கேவலமாக இருந்ததை பார்த்து பாட்டி, அம்மா, சாருமதி மூன்று பேரும் பேசினாங்க பாரு அவங்களுக்கு இருக்கு ஒரு நாளைக்கு" என்று பல்லை கடித்தவனை பார்த்து சிரித்தவள்

" அவங்க புகழ்ந்தது இந்த படத்தை பார்த்து" என்று இருவரையும் வரைந்த ஓவியத்தை காட்டினாள்.

" ஏய் நிஜமாகவே நீ வரைந்ததா சூப்பரா இருக்குடி" என்று அவளின் கன்னத்தில் இதழ்பதித்தவன்
"ஆனால் இந்த ஓவியம் நம்ப ரூமில் இல்லையே" என்றான்.

"நம்ப ரூமில் தான் இருக்கு" என்றாள் புன்னகையுடன்

" உன் கபோர்டில் வச்சு இருக்கியா" என்றான்.

"இல்லை சுவற்றில் தான் மாட்டி இருக்கு" என்றாள் குறும்பு சிரிப்புடன்

"எங்கேயும் இல்லையே" என்று மனக்கண்ணில் தங்கள் அறையை ஓட்டி சொன்னான்.

சிரிப்புடன் போனில் வீடியோ ஒன்றை ஓடவிட்டாள் அதில் ஓவியத்தின் இரண்டு பக்கமும் காட்டி இருக்க அதை கண்டவன்

"அடிப்பாவி என்னை எப்படி எல்லாம் முட்டாளாக்கியிருக்க" என்றவன் மீண்டும் தண்டனைகளை கொடுத்துக்கொண்டு இருந்தான்.

அவனின் மார்பில் இளைப்பாரிக்கொண்டு இருந்தவளின் விரல்கள் அவனின் மார்பில் இருந்த அவளின் உருவத்தையும் மை லவ் பனி எழுத்தையும் வருடியவள் புன்னகை செய்ய

"என்னடி" என்று கேட்டான்.

"இதனால் தான் எப்பவுமே குளிச்சிட்டு வரும் போது டீசர்ட் போட்டுட்டு இருந்திங்களா நான் என்று மீண்டும் சிரித்தவளை பார்த்து

" ஏய் என்ன என்று சொல்லிட்டு சிரி" என்றவன் அவளை மேலும் தன்னோடு இறுக்கினான்.

" இல்ல இந்த ஹீரோ எல்லாம் என்னை பார் என் அழகை பார் என்று காட்டிட்டு இருப்பாங்க. ஆனால் அறைக்குள் கூட இப்படி இருக்கிங்களே ஒரு வேளை" என்று தயங்கியவளை

"என்ன நினைத்த சொல்லுடி?... "

" அது... அது... என்று தயங்கியவள் பின் மெல்ல தான் நினைத்ததை சொல்ல

"உன்னை" என்று பல்லை கடித்தவன்

அடுத்த வினாடி அவள் கட்டிலில் கிடக்க அவள் மீது படர்ந்து இருந்தான் அவன்.

இப்படியே காதல் ஊடல் கூடல் என்று அடுத்த நான்கு நாட்களை அங்கேயே கடத்தியிருந்தனர். கம்பெனியின் வேலை குறித்து சந்தேகங்களை கேட்டு வீட்டு ஆண்கள் போன் செய்தபோது தாத்தா அன்று சொன்ன இனி நீ கம்பெனி முடிவுகளை எங்களிடம் கலந்து செய் என்ற வார்த்தைக்கு இப்போது பதில் சொல்லிக்கொண்டு இருந்தான்.

"நீங்களும் முதலாளி தானே நீங்களே முடிவு எடுத்து செய்யுங்கள்" என்றுகூறியவன் இருவர் போனையும் அனைத்து வைத்து விட்டான்.

ஐந்தாவது நாள் ஆகாஷ் நேரில் வந்து பனிமலருக்கு இன்னும் ஒரு வாரத்தில் ப்ராஜெக்ட் முடித்து கல்லூரி செல்லவேண்டும் என்பதை சொல்லி அழைத்து சென்றான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 58



எபிலாக்

மூன்றரை வருடங்களுக்கு பிறகு

குலதெய்வக்கோவிலில் மொட்டை அடித்து காதுகுத்து விழா நடந்து கொண்டு இருந்தது.

இருவர் குடும்பத்து உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து குலதெய்வ கோயிலில் கிராண்டாக நடந்து கொண்டு இருந்தது.

ஆகாஷ் தமிழின் திருமணம் கல்லூரி இறுதி பரிட்சை முடிந்ததும் வைத்துவிட்டனர். அவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பையனும் இரண்டாவது குழந்தை இப்போது தமிழின் வயிற்றில் ஐந்து மாதமாக இருக்கிறது.

எழில்நிலா அரவிந்த் ஆறு மாதம் லண்டனில் இருந்தவர்கள் பின் இந்தியா வந்து விட்டனர். அரவிந்துக்கு சூர்யா காஞ்சீபுரத்தில் ஒரு கார்மெண்ட்ஸ் ஆரம்பித்து கொடுக்க அதை அரவிந்த் எழில்நிலா பார்த்துக்கொள்கின்றனர். அவர்களுக்கு ஒரு வயதில் மகன் இருக்கிறான்.

அகிலேஷ் மருத்துவ படிப்பு முடித்து சென்னையிலேயே பெரிய மருத்துவமனையில் பணிபுரிகிறான்.

ஹரியை போல விஷாலும் ஆகாஷ் கம்பெனியில் வேலை செய்கிறான்.

ஹரியின் பொறுப்பில் பெங்களூர் நிறுவனத்தை கொடுத்து இருந்தார் ஆகாஷின் தந்தை.

நண்பர்களின் கேலி கிண்டல் பேச்சுகளிடையே

குழந்தைகளுக்கு மொட்டை அடித்து குளிக்கவைத்து புதிய ஆடைகள் அணிந்து தயாராகி வந்திருந்தனர். காதுகுத்துபவர் தாய்மாமன்கள் வந்து உட்காருங்கள் என்று சொன்னபோது ஆகாஷ், அகிலேஷ், ஹரி, விஷால் நால்வரும் அமர்ந்தனர்.

ஆகாஷ் மடியில் மூன்று வயது பரிவர்ஷினி சூர்யா பனிமலரின் மூத்தமகள் அமர்ந்து கொண்டாள். அகிலேஷ் மடியில் மூன்று வயது ஆதிகேசவ், ஹரியின் மடியில் ஒன்றரை வயது அதர்வா, விஷால் மடியில் ஒன்றரை வயது ஆரவ் அமர்ந்து கொள்ள அங்கு ஒன்றரை வயது ஆருஷ் உதட்டை பிதுக்கி அழுவதற்கு தயாராக நின்றிருந்தான். அவன் அருகில் வந்த பனிமலர் அவன் காதில் எதுவோ சொல்ல முகம் புன்னகைக்க ஓடிச்சென்றான்.

விழாவிற்கு வந்த விருந்தினர்களை கவனிக்கும் வேலையாட்களை மேற்பார்வை செய்து கொண்டு இருந்த மாதவனின் கையை பிடித்து இழுத்து வந்தான் ஆருஷ்.

விஷால் அருகில் அவனை அமரவைத்து அவன் மீது அமர்ந்து கொண்டான் ஆருஷ்.

மாதவன் தயக்கமாக சூர்யாவை பார்க்க "டேய் அதான் என் பையனே உன்னை மாமன் என்று சொல்லிட்டான் இல்ல சீக்கிரம் அவனுக்கு ஒரு பெண் பெத்து கொடுங்க" என்றவன் அங்கு சிறிதாக மேடிட்ட வயிற்றுடன் நின்று இருந்த மாதவனின் மனைவியை ஒரு பார்வை பார்த்து விட்டு சொன்னான்.

அனைவர் முகத்திலும் புன்னகை பூத்தது.

மூன்றரை வருஷத்தில் ஐந்து பிள்ளைகளா என்று கேட்பிங்க என்று தெரியும் நானே செல்லிடுறேன்.

பனிமலர் இறுதி பரிட்சை முடிந்ததும் ஹனிமூன் செல்ல இருவரும் திட்டமிட்டு இருக்க பரிட்சை எழுதும் போது பனிமலர் வயிற்றில் இரண்டு மாத இரு குழந்தைகளை சுமந்து மசக்கையுடன் பரிட்சை எழுதினாள்.

அதனால் ஹனி மூன் போகமுடியாமல் போனது. பரிட்சை முடிந்த மறுதினமே அவளை அழைத்துக் கொண்டு பனிமலரின் தாய் தந்தை உருவாக்கிய பி எம் சி கார்மெண்ட்ஸ் வந்தான்.

அவர்கள் வரும் முன்னே அவர்களின் இரு குடும்பமும் நட்புகளும் அங்கு இருந்தனர். மேளதாளத்துடன் அவளை வரவேற்றனர் அங்கிருந்தவர்கள். பனிமலர் புரியாமல் சூரியாவை நோக்கினாள் அவளை உள்ளே அழைத்து சென்று அவளின் தந்தை அமர்ந்த இருக்கையில் அமரவைத்தவன் அவளிடம் பத்திரங்களை நீட்ட வாங்கி பார்த்தவள் வியப்புடன் சூர்யாவை பார்த்தாள்.

"இந்த கம்பெனியோட முதலாளி பனிமலர் சித்ரா" என்றான்.

எழுந்து வந்து இறுக்கி அணைத்து கண்ணீருடன் எப்படி?.. என்றாள்.

"அன்னைக்கு சேர்ஸ் மாத்த கையெழுத்து வாங்கினேன் இல்லையா அதில் இந்த பத்திரமும் இருந்தது" என்றான்.

அதன் பிறகு தினமும் மனைவியை அழைத்து வந்து அழைத்து சொல்வது அவனின் முக்கிய வேலை. அவனின் கம்பெனி வேலைகளை தாத்தா, தந்தை, அண்ணனுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டதால் மனைவியுடன் அதிக நேரம் இருந்தான். இரண்டு குழந்தைகள் என்பதால் அவளை வேலைப்பளு இல்லாமல் பார்த்துக்கொண்டான். தமிழும் திருமணம் முடித்து பனிமலர் கம்பெனிக்கு வந்துவிட்டதால் அவளிடமும் பொறுப்புகளை கொடுத்தால் பனிமலர் மாதங்கள் சொல்ல சொல்ல வயிறு பெரிதாக கம்பெனி சொல்லாமல் வீட்டில் இருந்தே முடிந்த வேலைகளை செய்தாள்.

சூர்யாவும் பனிமலருடன் வீட்டில் இருந்தே பணிகளை பார்ப்பான். முக்கியமாக சொல்ல வேண்டும் என்றாள் மட்டுமே செல்வான்.

பாட்டி, அத்தை, சாருமதி அக்கா என்னை நல்லா பார்க்கும் போது நீங்க எதுக்கு வீட்டில் இருக்கிங்க கம்பெனியில் நிறைய வேலை இருக்கும் என்று போகச்சொன்னாலும் போகாமல் அவளின் பின் சுற்றி கொண்டு இருந்தான்.

ஏழாம் மாதம் கிராண்டாக சீமந்தம் செய்தவன் அவளின் பெரிய தந்தையின் வீட்டிற்கு அனுப்ப மறுத்து விட்டான். வீட்டில் உள்ளவர்கள் சொன்னபோது மறுத்தவன் கடைசியாக பனிமலர் நான் போய் கொஞ்ச நாள் இருந்துவிட்டு வரேன் என்று சொன்னதும் மனம் இல்லாமல் அனுப்பியவன் அன்று இரவே அவளின் பெரிய தந்தை வீட்டுக்கு வந்திருந்தான்.

ஒரு வாரம் அவளுடனே மாமனார் வீட்டில் இருந்து விட்டு மனைவியை அழைத்து வந்து விட்டான்.

இரண்டு குழந்தை என்பதால் ஒன்பதாம் மாதம் முதலிலேயே பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்த சில மணி நேரத்தில் நார்மல் டெலிவரியில் பெண் குழந்தை முதலில் பிறக்க அடுத்த ஐந்து நிமிடங்களில் ஆண் குழந்தை பிறந்தது.

அவர்களுக்கு சூர்யா தான் பெயர் வைத்தான். பனிமலரின் தாயின் முதல் இரண்டு எழுத்துக்களுடன் வர்ஷினி என்று சேர்த்து பரிவர்ஷினி என்று மகளுக்கு பெயர் வைத்தவன் மகனுக்கு அவளின் தந்தை பெயருடன் ஆதி என்று சேர்த்து ஆதிகேசவ் என்று வைத்து இருந்தான்.

அம்மாவிற்கு கஷ்டம் இல்லாமல் பிறந்தவர்கள் மற்றவர்களை தங்களின் துருதுரு செயலில் பின்னால் சுற்ற வைத்தனர்.

தவழ ஆரம்பத்தில் இருந்தே அவர்களின் சேட்டை ஆரம்பித்து விட்டது. பால் குடிக்கும் சமயம் மட்டும் தாயிடம் இருப்பவர்கள் மற்ற நேரங்களில் பாட்டிகள் தாத்தா சாருமதி உடன் தான் இருப்பர்.

பத்து மாதத்தில் தத்தி தத்தி நடக்க ஆரம்பிக்க அதன் பின் ஒரு நிமிடம் கூட வீட்டில் உள்ளவர்களுக்கு ஓய்வு இருக்காது. அவர்கள் பின் தான் சுற்றிக்கொண்டு இருப்பர்.

குழந்தைகளின் முதல் பிறந்தநாளில் மீண்டும் இரண்டு மாத குழந்தையை சுமந்து இருந்தாள் பனிமலர்.

விஷயம் அறிந்த வீட்டினர் அதிர்ந்தனர் காரணம் இருக்கும் இரண்டு குழந்தைகளை சமாளிக்க முடியாமல் திண்டாடியவர்களுக்கு அடுத்தும் இரண்டு குழந்தை சுமந்து இருப்பது அறிந்து அதிரத்தானே செய்வர்.

ஆனால் இந்த முறை பிரசவவலி எட்டாம் மாதம் இறுதியிலேயே வந்து விட இரண்டு குழந்தைகளையும் ஆகாஷ் தமிழ் பொறுப்பில் உடன் இரண்டு வேலையாட்களை வைத்து விட்டு மருத்துவமனை வந்தவர்கள் மருத்துவர் சொன்ன சேதியில் இப்போது அனைவரும் சூர்யாவை முறைத்துக்கொண்டு இருந்தனர்.

காரணம் மருத்துவர் சொன்ன சேதி மூன்று குழந்தை என்பதால் வலி சீக்கிரம் வந்து விட்டது என்பது தான்.

இரண்டு என்ற போதே அதிர்ந்தவர்கள் மூன்று என்றதும் முறைக்கத்தான் செய்வார்கள்.

அவனோ யாரையும் சட்டை செய்யாமல் பிரசவ அறையை பார்த்துக்கொண்டு இருந்தான். இந்த முறையும் தாய்க்கு அதிக சிரமம் இல்லாமல் வந்து இருந்தனர். அதர்வா, ஆரவ், ஆருஷ்.

அதன் பின் பனிமலருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வைத்தே வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

ஐந்து பேரையும் சமாளிக்க முடியாமல் குழந்தைகளுக்கு என்றே மூன்று பணியாட்கள் நியமித்தனர். அந்த அளவுக்கு ஐந்து பேரும் சேட்டைகளை செய்தனர்.

ஒன்றாவது நம்ப ஃபேமிலியில் இருக்கற மாதிரி அமைதியான குழந்தையை பெத்து இருக்காங்களா பாருங்க பாட்டி ஐந்தும் அவங்களை போல அறுந்த வாலாக பெத்து இருக்காங்க என்று புலம்புவாள் சாருமதி.

காதுகுத்து விழா முடிந்த மூன்றாம் நாள் சூர்யா பனிமலர் இருவர் மட்டும் வெளிநாடு கிளம்பினர். அவர்களை வழியனுப்ப ஆகாஷ் வந்திருந்தான்.

"ஏன்டா இதெல்லாம் உங்களுக்கு ஓவரா தெரியல யாராவது ஐந்து குழந்தைகள் பெற்று விட்டு ஹனிமூன் போவாங்களா?..." என்றான் ஆகாஷ்.

"ஏன்டா போனால் என்ன நீ கல்யாணம் முடிந்ததும் போனாய் இல்ல . எங்க கல்யாணம் முடிந்து போகமுடியலை இப்ப தான் முடிந்தது அதான் போறோம். சரி நீ கிளம்பு பசங்களை பத்திரமாக பார்த்துக்கங்க" என்றான் சூர்யா.

" அவங்க பத்திரமாக தான் இருப்பாங்க நானும் உன் வீட்டில் இருக்கிறவங்களும் தான் நீங்க திரும்பி வரும் போது எப்படி இருப்போம் தெரியலை குழந்தைகளை பெத்துக்காம எல்லாம் குரங்கு குட்டிகளை பெத்து வச்சிருக்கிங்க" என்று புலம்பியவன் முதுகில் அடியையும் தலையில் குட்டையும் வாங்கினான்.

" அம்மா... " என்று அலறியவன் தன்னை முறைத்துக்கொண்டு நின்ற பனிமலரை பார்த்து " நான் சொன்னதில் என்ன தப்பு இருக்கு பாப்பு டால் எல்லாம் உன்னை போலவே இப்பவே மரம் ஏறுகிறேன் ஒருத்தன் போறான் இன்னொருத்தன் அவனுக்கு முன்னே மரத்தில் ஏறுகிறேன் என்று பெரிசாக வளர்ந்து இருக்க செடி கிளையில் தொங்கிட்டு இருக்கான்."

"அடுத்த இரண்டு சன்னலில் ஏறுவது டேபிள் மேல் ஏறுவது என்று வீட்டில் இருக்கிறவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வரவைச்சுட்டு இருக்குங்க அதுக்கு மேல் பெண் ஒருத்தி இருக்களே இப்பவே படியில் இறங்காமல் படியில் இருக்கும் கைபிடியில் ஏறி வழுக்கி இறங்குறாள். ஆனால் உங்க கூட இருக்கும் போது மட்டும் ஐந்தும் இருக்கிற இடமே தெரியாமல் சேட்டை பண்ணாமல் இருக்குங்க அதான் எனக்கு புரியவில்லை" என்றான் ஆகாஷ்.

" அதுவா மச்சான் அவங்களை விட அதிகமாக சேட்டை பண்ணுறவ இருக்கும் போது அவங்க அடக்கி வாசிக்கிறாங்க அதான் மேட்டர்" என்றான் சூர்யா.

" யூ மீன் பெரிய குரங்கு இருக்கும் போது சின்ன குரங்குகள் அமைதியாக இருக்கு என்று சொல்லுறியா" என்றான் ஆகாஷ்.

அடுத்த வினாடி அது ஏர்போர்ட் என்பதையும் மறந்து அடிவாங்கிக்கொண்டு இருந்தான் அவனின் பாப்பு டாலிடம் ஆகாஷ்.

சோகமான முகத்துடன் நண்பனை ஏறிட்டவன் " ஏன்டா நீ சொன்னதைத்தானே நான் திரும்ப சொன்னேன். உன்னை அடிக்காமல் என்னை அடிக்கிறா" என்றான் ஆகாஷ்.

"அதுவா மச்சி நான் டீசன்டாக சொன்னேன் நீ அதை ஓபனாக பப்ளிக்கில் சொன்னயில்ல அதுக்குத்தான் இனிமே எங்க எப்படி பேசனும் என்று கத்துக்கடா மச்சான்."

"அடப்பாவி உங்க கூடவெல்லாம் பிரண்ட்ஸிப் வச்சதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்" என்றான் ஆகாஷ் சோகக்குரலில்

" இன்னும் தானே வீட்டுக்கு போ நிறைய கிடைக்கும்" என்றான் நக்கல் சிரிப்புடன் சூர்யா.

" என்னடா சொல்லுற" என்று அதிர்வுடன் ஆகாஷ் கேட்க

பனிமலர் கையில் இருந்த போனை காட்டினான் சூர்யா.

அதில் வீடியோ காலில் தமிழ் ஆகாஷை பார்த்து முறைத்துக்கொண்டு இருந்தாள்.

" பத்த வச்சிட்டியே பரட்டை " என்று வடிவேலு பாணியில் சொன்னவன்

"அடப்பாவிகளா நீங்க ஹனிமூன் போகறதுக்கு வழியனுப்ப வந்தவன் வாழ்க்கையை கும்மியடிச்சிட்டிங்களே வீட்டுக்கு போனால் அந்த குரங்கு என் தோலை உறித்து மரத்தில் தொங்க விட்டுடுவாளே" என்று புலம்பியவனை

" அடேய் மைண்ட் வாய்ஸ் என்று சத்தமாக சொல்லிட்டு இருங்கடா" என்றான் சூர்யா.

" கைகூப்பி அப்பா சாமி போதும்டா இந்த பாடி தாங்காது நீங்க நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க நான் போய் வாங்கவேண்டியதை வாங்கிட்டு உன் புள்ளைங்க கிட்ட படவேண்டியதும் பட்டுகிறேன் என்று கூறியவனை அனைத்து இருந்தனர் பனிமலரும் சூர்யாவும்.

விமான அறிவிப்பு வரவும் இருவரும் உள்ளே செல்ல கிளம்பவும்

"பாப்பு டால் பத்திரம்" என்று பனிமலரிடம் சொன்னவன்

" டேய் குளிர் அதிகமாக இருக்கும் பாப்புவை பத்திரமாக கூட்டிட்டு போய் வரனும் எங்கேயும் தனியாக விடாமல் பத்திரம்" என்று நண்பனிடம் சொல்லி விடை பெற்றான் ஆகாஷ்.

சுவிட்சர்லாந்து வந்தவர்கள் பகலில் அழகான அந்த நாட்டின் சுற்றுலா தளங்களில் சுற்றி திரிந்தவர்கள் இரவில் ஒரே கம்பளிக்குள் இறுகிய அணைப்பில் இருந்தனர்.

சூர்யாவின் மார்பில் எப்போதும் போல் படுத்திருந்தவளை இறுக்கி அணைத்தவன் அவளின் உச்சியில் முத்தமிட்டு பாடலை தொடங்கியவனின் வாயில் விரல் வைத்து மூடிய பனிமலர் இன்று பாடலை அவள் பாடினாள்.

" அக்கம் பக்கம் யாருமில்லா...
பூலோகம் வேண்டும்...
அந்திபகல் உன்னருகே..
நான் வாழ வேண்டும்..

என் ஆசை எல்லாம் உன்
இருக்கத்திலே...
என் ஆயுள்வரை உன்
அணைப்பினிலே..
வேறென்ன வேண்டும்
உலகத்திலே..
இந்த இன்பம் போதும்
நெஞ்சினிலே..
ஏழேழு ஜென்மம்
வாழ்ந்துவிட்டேன்.. "

அக்கம் பக்கம் யாருமில்லா..
பூலோகம் வேண்டும்..
அந்திபகல் உன்னருகே..
நான் வாழ வேண்டும்..


முற்றும்.
 
Status
Not open for further replies.
Top