ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 71

CRVS2797

Member
உருகும் நிலவே விலகும் ஒளியே !
ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 71)


பின்னே...ஜீவிதனும் தானே அர்ஜூனை நம்பலை... இப்ப கவலைப்பட்டு என்ன பயன்..?


ராகவியை கல்யாணம் பண்ணுன முறை தப்புத்தான்னு
ரொம்ப சிம்பிளா சொல்றியே அர்ஜூன்... அங்க இருந்து தான் உன்னோட தப்புக்களே ஆரம்பிச்சது. இதே உன்னோட அக்கா பல்லவியை யாராவது அப்படி மிரட்டி கல்யாணம் பண்ணியிருந்தா நீ சும்மா விட்டிருப்பியா..? ஆனா, கஜனும் சக்திவேலும் அமைதியா இருந்திருக்காங்கன்னா...
அது உங்கப்பா பார்த்தீபன் மேல வைச்சிருந்த மரியாதை மட்டும் தான் காரணம், நிச்சயமா நீ கிடையாது.


ராகவி, நீ கொடுத்த கஷ்டத்தை மட்டும் தான் சொன்னான்னா...
நீ முதல்ல அவளுக்கு எதை கொடுத்தியோ அது தானே அவ மனசுல ரிஜீஸ்தர் ஆகும்.
ஏன், நீ கூடத்தான் இப்ப அதே தப்பை பண்ணிட்டிருக்க. அப்படி பார்த்தா அவ கூட நீ சொன்னதையே ரிபீட் பண்ணலாம் தானே..? அவளும் நீ கேட்குறப்ப எல்லாம் நோ'ன்னு சொல்லாமலே உனக்கு சந்தோஷத்தையும், சுகத்தையும் தானே அள்ளியள்ளி கொடுத்திருக்கா.
ஸோ... நீ எதை அவளுக்கு கொடுத்ததா நினைச்சியோ அது அவ மனசுல பதியவே இல்லை. அதே மாதிரி அவ உனக்கு எத்தனை சுகத்தை கொடுத்தாலோ அது உன் மனசுலயோ, புத்திக்கோ ஏறலை. ஆனா, அவ சொன்ன வார்த்தைகள் மட்டும் ஆறா வடுவா மனசுக்குள்ள தேங்கிடுச்சு. ஏன்னா, நீ அந்தளவுக்கு அவளை வார்த்தையாலும், உன்னோட பெயராலும் அவளை ஹர்ட்
பண்ணிட்டேயிருந்திருக்க.
உன்னை புரிய வைக்க முயற்சி
பண்ணவேயில்லை. போ, போ
வாழ்க்கை உனக்கு உயிர் வாழ ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்தது போல நீயும் அவளுக்கொரு வாய்ப்பை கொடுத்து பாரு..
உன்னோட அன்பை புரிய வைக்க, உன்னோட காதலை புரிய வைக்க, உன்னோட நேசத்தை புரிய வைக்க...
அதுவும் அவ திரும்பி உன்னோட வாழ விருப்பபட்டா
மட்டுமே... நீயும் ஒரு வாய்ப்பை
கொடுத்து பாரு. உன்னோட காதல் உண்மைன்னா அதை
உயிர்ப்போட கொண்டு வா..!
இல்லை, வேண்டாம்.. அதெல்லாம் ரொம்பவே கஷ்டம், மன்னிக்கவும் மறக்கவும் முடியாதுன்னா...
விட்டு விலகி போயிடு...
தட் ஸ் பெட்டர்.


"உன் குத்தமா, அவ குத்தமா..
யாரை நாங்க குத்தம் சொல்ல.."


அழட்டும், நல்லா அழட்டும்..
அப்பத்தான் எல்லா கசடுகளும்
கரைஞ்சோடிப் போய் தொலையும். அதற்கப்புறம்
தான் சுத்தமான, உண்மையான
நேசம் வெளிப்படும்... அதுவரைக்கும் அழுது ஓயட்டும்.


பட்... அர்ஜூன் இப்பத்தான் தன்னைத்தானே ரொம்ப அழகா ரியலைஸ் பண்ணியிருக்கான்.
நிதானமும், சிந்திக்கிறத் திறனும், சக மனுசனை ஜட்ஜ் பண்ற திறமையும் ரொம்ப தெளிவா வேலை செய்யுது.
இது தான் சிறை கம்பிகள் சொல்லிக் கொடுக்கும் வாழ்க்கை பாடங்களோ.
இந்த அர்ஜூனை ரொம்பவே பிடிக்குது.


கஜன் இஸ் க்ரேட்...! ரொம்ப அழகா ஒவ்வொருத்தரையும்
ஹாண்டில் பண்றான். அந்த முரட்டு, திமிர் பி்டிச்ச, கல் மனசுக்காரன் அர்ஜூனுக்குள்ள இருந்தும் ஈரக்கசிவை கொண்டு
வந்துட்டான். இதோ ராகவி கிட்டேயும் மொத்தமா எறியட்டுமா ? இல்ல
வேணுமா ?ங்கற ரெண்டே வார்த்தையில அவ மனசையும் வெளியே கொண்டு வந்துட்டான். சின்ன வயசுல இருந்து எத்தனையோ கஷ்டத்தை பார்த்ததுலேயும் அனுபவிச்சதுலேயும் இந்த பொறுமையும், நிதானமும், அனுபவமும் எதையும் சுலபமா சமாளிக்கும் திறனும் வந்திடுச்சு போலயிருக்கு.
ஹாட்ஸ் ஆப் டூ யூ கஜன்..!
😆😆😆
CRVS (or) CRVS 2797
 
Top