ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நினைவெல்லாம் நீ(யே)யா? _ கதை திரி

Status
Not open for further replies.

Dhruv Aathavi

Active member
Wonderland writer
அத்யாயம்_13

ஆதவ், சிவா, துருவன் மூவரும் நகை கடைக்கு சென்று அங்கிருந்த ஊழியரிடம் ஆதவ் தாளி காட்டுங்க என்க. அவர் எந்த வகையின தாளி சார். நாட்டார், செட்டியார், என அடுக்கிக்கொண்டே போக மூவருக்கும் இது முதல் அனுபவம் என்பதால் ஒருவரை ஒருவர் பார்த்தபடி எதடா வாங்கனும் என்றான்? ஆதவ்.

மச்சா எனக்கெண்ண அனுபவமா இருக்கு எதயாவது வாங்குடா? என்றான் சிவா.

சார் என்ன திருட்ட கல்யாணமா? என ஊழியர் கேட்க.

இல்லங்க வீட்டார் முன்னாடிதா நடக்கபோகுது. கல்யாணத்துக்கு வரிங்களா? என துருவன் கடுப்புடன் முரைத்தபடி கேட்க.

இல்ல சார், என ஊழியர் அரண்டுகூற.எதாவது குடுங்க மனது ஒத்துபோனா பேதும் எல்லா தாளியும் ஒண்ணுதா என ஆதவ் ,அவனுக்கு பிடித்த ஒன்றை எடுத்துக்கொண்டு கூடவே ருத்ராவிற்கு மோதிரமும், கொலுசும் வாங்கிகொண்டு பணசெலுத்த சென்றனான்.



அப்பொழுது உள்ளே நுழைந்த விஷ்ணு துருவன் கண்ணில்பட தப்பவில்லை.

இவன் எங்க இங்கே என எண்ணியபடி விஷ்ணுவை மறைந்திருந்து கவனித்தான்.

நேரே ஊழியரிடம் சென்ற விஷ்ணு, கடைகாரிடம் ஏதோ பேசிவிட்டு அவர் கொடுத்த பொருளை வாங்கிக்கொண்டு சட்டென கிளம்பிவிட்டான்.

இதனை பார்த்த துருவன் என்னத்த கொண்டு போறா? வீட்ல இருந்து ஏதாவது வாங்கிட்டு வர சொல்லிருப்பாங்க போல உடனே வந்து உடனே போயிட்டான். நல்லவேள நம்மல இங்க பாக்கல போலிசா இருந்தாலும் யாருக்கெல்லா பயபட வேண்டியதா இருக்ககு உஸ்..ஸ்ஸ் ?என பெருமூச்சை விட்டான்.

வீட்டில் ருத்ராவிற்கும் துருவனுக்கும் நலங்கு வைக்க துருவனை தேட, அவன் அங்கு அவன் இல்லாததால், கயல் துருவனுக்கு அழைத்தார்.

ஹலோ, சொல்லுங்க மா என துருவன் கேட்க.

எங்கடா இருக்க நலங்கு வைக்கனும்னு தெரியும்ல எங்க போன? என கயல் படபடவென கேட்க.

அம்மா ஒரு வேல விஷயமா வெளிய வந்திருக்க. கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்திடுவேன் மா.

சீக்கிர வா தாத்தாகிட்ட என்னால பேச்சு வாங்க முடியாது என பேனை வைத்தார்.

மச்சா முடிஞ்சிதா. போலமா என துருவன் சிவாவின் மேல் கைப்போட்டுக்கேட்க.

ஆதவன், முக்கியமான பொருள வாங்கிட்டோம் ஆனா முக்கியமான ஆள எப்படி சமாளிக்கிறது. அவள நெனச்சா. எனக்கு, இப்பவே கண்ண கட்டுதுடா என சோகமாக கூற.

காலேஜ்ல எத்தன பொண்ணுங்க உன் பின்னாடி சுத்தனாங்க. அதல யாரோட சாபம்னு தெரியலையே கோபால் தெரியலையே..என சரோஜா தேவிபோல் சிவா சொல்ல.

எல்லா நேரம்டா நேரம். என கையை தூக்கி மேலே பார்த்தான்.

டேய் , நலங்கு வைக்கனும்மா வீட்ல இருந்து போன் வந்திடுச்சி வாங்கடா போகலாம் என துருவன் அவர்களை அழைத்துக்கொண்டு தனது ஜுப்பை வீட்டை நோக்கி செலுத்தினான்.

வீட்டிற்கு செல்ல அங்கு வீடே கல்யாண கோலம் பூண்டிருந்தது. வாயிலை வாழைமரங்களும், தென்ன பாளைகளும் அழகு சேர்க்க, சூரியன் வாழை இலைகளுக்குள் தன்னுடைய கதிர்களை மறையநினைத்து தோற்றுப்போனது. வீடுகள் முழுவதும் வண்ண விளக்குகள் பகலிலே ஒளிர ,மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

என்னடா மச்சா நம்ப வீடா இது இப்படி மாறிபோய் இருக்கு? என வியந்தபடி சிவா துருவனிடம் கூறியபடி உள்ளே சென்றான்.

துருவன் உள்ளே வந்தவுடன் பலர் ராட்டினங்களாய் சுற்றி கட்டளையிட சோர்ந்து போனவன். கயலின் விளிப்பில் அறையின் உள் சென்றான்.

சுற்றங்கள் சூழ பெண் வீட்டார் மாப்பிளை வீட்டார் என தங்களுக்குள் போட்டி இட்டுக்கொண்டு இரு பிரிவாக அமர்ந்தனர். ருத்ரா துருவனின் குடும்பத்தினர்.

மீனாட்சி வேலைப்பாடுடைய நாற்காலாயில் இருவரையும் அருகருகே அமர செய்து நலங்கை முதலில் துடங்கி வைத்தார். பின்பு ஒவ்வொருவராக நலங்கு வைத்து முடிக்க. ஐயர் நிச்சய பத்திரம் வாசிக்க கயல்- கார்திகேயனும்,
விருதாசலம் - மீனாட்சியும் நிச்சய தட்டை மாற்றிக்கொண்டனர்.இனிதே நிச்சயம் முடிய.

"யாரோ யாரோடி உன்னோட புருச
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்..."

என பாடல் முழங்க ஹரிணியும் தேன் மொழியும் பாடலுக்கேற்ப ஆடத்தொடங்கினர். அவர்களுடன் இணைந்து இன்னும் பல தோழிகளும் ஆட விழாவில் மகிழ்ச்சிக்கு குறையில்லாமல் போனது.

துருவனின் காதில் ருத்ரா, நீ சொன்னப்படிதானே எல்லா நடக்கும்? எனக்கு காலையில இருந்து மனசு ஒரே படபடப்பா இருக்கு என கூற. அங்கிருந்த ருத்ராவின் அத்தைமார் ஒருவர் ருத்ரா மாப்பிளகிட்ட அப்பறம் பேசிக்கலாம் இதுகப்பறம் உன் கூடதான இருக்கபோறாரு. இப்ப கொஞ்ச வெக்கப்பட்டு உட்காருமா என கூற.

ருத்ரா முகத்தை விருப்பத்தின் பொருட்டு சிரித்து விட்டு அமர்ந்திருந்தாள்.

கடவுளே இவளுக்கு மட்டும் எங்களோட பிளான் தெரிஞ்சிது நா அவ்வளதா என துருவன் மனதோடு கூறிக்ககொண்டான்.

கடைசி பாடலுக்கு ஹரிணி ருத்ராவை அழைக்க, தேன் துருவனை அழைத்து ஆட சொல்ல இருவரும் அமைதியாக நின்றதால், இவர்களே அவர்களை சுற்றிவந்து ஆடி முடித்தனர். நிச்சய கலாட்டாக்கள் இனிதே முடிய அனைவரும் விருந்திற்கு சென்றனர்.

வெளிஆட்கள் சாப்பிட்டு செல்ல, வீட்டினர் அனைவரும் சாப்பிட தொடங்கினர்.ஹரிணியும், தேனும் அவர்களுக்கு பரிமாற. மீனாட்சி விஷ்ணு எங்க கவிதா என மருமகளை கேட்டார்.

தெரியல அத்த, காலையில இருந்து பாக்கவே இல்ல. என கூற.

சிவா அவனுக்கு போன் போடு காலயில சாப்பிடாமகூட எங்க போனா? என மீனாட்சி வருத்தபட.

என்ன காலையில இருந்து வீட்ல இல்லையா நா கடையில பாத்தனே என துருவன் சந்தேகப்பட, அப்பதா அவ மொபைல் ஆப்ல இருக்கு, ஒருவேல காலேஜ் போயிருப்பானு நினைக்குற என சிவா கூற.

துருவனுக்கு விஷ்ணுவின் மேல் முதல் முதலில் சந்தேகம் கிளர்ந்தது.


படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க...

நீ(யே)யா....?
 

Dhruv Aathavi

Active member
Wonderland writer
அத்யாயம் 14

கல்யாண வேலையில் வீடே பிசியாக இருக்க. இரவு தாமதமாகவே வீடு வந்து சேர்ந்தான் விஷ்ணு.


வாயிலிலே அவனை பார்த்த மீனாட்சி. ஏய் இங்க வாடா என அழைக்க. விஷ்ணு வண்டியை நிறுத்திவிட்டு அவரிடம் சென்றான்.


காலையில போனவ இப்ப நேரம் என்ன ஆகுது என மீனாட்சி கேட்க.


இல்ல , அப்பத்தா கொஞ்ச வேல இருந்தது அதா, என அவர் முகத்தை பார்க்காது தரையை பார்த்தபடி கூறினான்.


சரி, எதாவது சாப்பிட்டியா என விஷ்ணுவின் தலையை வருடியபடி கேட்க.


அப்பொழுதுதான் அவனுக்கு பசியின் ஞாபகமே வந்து வயிற்றில் எலி உருள. இல்ல பாட்டி என்றான்.


என்னடா நீ, என்ன வேலையா இருந்தாலும் சாப்பிட்டு பாக்கமாட்டியா. என வருந்தியபடி. சரி வா நா சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என உள்ளே சென்றார்.


என்ன அப்பதா, எதுக்கு சாப்பாடு எடுத்து வைக்கறிங்க என ஹரிணிக் கேட்க,


விஷ்ணு இன்னும் சாப்பிடலடி மா , அதா எடுத்து வைக்குறேன், என மீனாட்சி கூறியபடி, உணவுகளை மேசையின்மீது அடுக்க தொடங்கினார்.


விஷ்ணு தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு.சாப்பிட வந்து அமர்ந்தான். அவனை பார்த்த ஹரிணி, வாங்க பிசி மேன். சாப்பிடாத அளவுக்கு அப்படி என்ன வேல உங்களுக்கு என நக்கல் பொதிந்த குறலில் கூற. தேன்மொழி என்ன வேல இருக்கபோகுது, உங்க அண்ணணுக்கு. எந்த பொண்ணுபின்னாடி சுத்தினானோ என கையில் நெயில் பாலிஷை ஊதியபடி கூற.


விஷ்ணு இருந்த கடுப்பில் கையில் டம்ளரை எடுத்தபடி, இருவரையும் திரும்பி ஒருமுறை முரைக்க. அடி ஆத்தி இவ ஏ இப்ப முரைக்கிறா மண்ட பத்திரம் ஹரிணி ஓடிடு என மூளை எச்சரிக்கை கொடுக்க ஓடிவிட்டாள். தேன் தன் பணியை மேற்கொள்ள. விஷ்ணு சாப்பிட்டு சென்றுவிட்டான்.


புலர்ந்த காலைபொழுதில் கல்யாணவீட்டிற்கே உரிய சத்தத்துடன் வேலையில் ஈடுபட்டிருந்தனர் குடும்பத்தினர்.


என்ன கவிதா இன்னும் ரெடியாகாம இருக்க என உமையாள் கேட்க.


இதோ ரெடியாகிற அண்ணி, அந்த பார்லர் பொண்ணு பூ கேட்டுச்சி கொடுத்துட்டு வந்திடுறேன் என கூறி, ருத்ராவின் அறைக்குள் சென்றார் கவிதா. அங்கு ருத்ராவை பார்த்தவர் அசந்து நின்றார்.


சிகப்பு நிற பட்டுபுடவையில் "ஆதிமுதல் அந்தம் ஆபரணம் பூட்டி" எனும் வரிக்கு ஏற்ப. தங்கத்தால் அலங்காரம் செய்து பாவைப்போல் உள்ள ருத்ராவை பார்த கவிதா மேசையின் மீதிருந்த காஜலை எடுத்து காதுக்கு பின்னால் மையால் திருஷ்டி பொட்டிட்டு, அழாகா இருக்க யாரு கண்ணும் படக்கூடாது என நெட்டிமுறிக்க. கவிதா என்னும் உமையாளின் அழைப்பில் வெளியே சென்றுவிட்டார்.


வீட்டில் உள்ள அனைவரும் கிளம்பி ஹாலுக்கு ஒவ்வொருவரும் வர ஆண்கள் அனைவரும் ஒன்றாக பட்டு வேட்டி சட்டையில் இருக்க. பெண்கள் அனைவரும் மஞ்சள்_ பிங்க் நிற பட்டு புடவையில் வந்தனர்.


ருத்ராவைப்போல் சிவப்புற நிற புடவையில் தயாராகி வந்தனர் ஹரிணியும், தேன்மொழியும்.


இவர்களை பார்த்த கார்திகேயன், அடடா, கல்யாண பொண்ணு ருத்ராவா இல்ல ஹரிணியா? என கேட்க.


மாமா, ஓட்டாதிங்க என்றாள் கையை காலை ஆட்டியபடி.


ஓட்டலடா அம்மு, அவ்ளோ அழகா இருக்க என கண்ணத்தை பிடித்து ஆட்டிக்கொண்டிருக்க. அங்கு வந்து சேர்ந்தனர் சிவா, ஆதவ், துருவன், விஷ்ணு.


கிளம்பலாம் தாத்தா வண்டி வந்திடுச்சி என சிவா கூற.


எல்லாரும் வாங்க புறப்படலாம். இப்பவே மணி ஏழறை ஆச்சி, ஐயர் கோவிலுக்கு வந்துட்டனு அப்பவே போன் பண்ணிணார். வாங்க போகலாம் என விருதாசலம் கூற, அனைவரும் காரில் கோவிலை நோக்கி சென்றனர்.


திருவிழா என்பதால் கோவிலில் கூட்டத்தை பற்றி சொல்லவே வேண்டாம்.அதிலும் அம்மன் வாக்குபடி விருதாசலம் வீட்டு கல்யாணம் என்பதால் ஊரே கோவிலின் முன் கூடியிருந்தது.


கல்யாணம் முடிந்தவுடன் ஊருக்கே விருந்திற்கு ஏற்பாடு பண்ணியிருக்க,ஊரில் உள்ள சிறுவர் முதல் வயதானவர் வரை அனைவரும் கோவிலின் முன்பு கூடியிருந்தனர்.


விருதாசலம் வந்தவுடன் ஊர் பெரியவர்கள் ஒன்றுகூடி பேசிவிட்டு. அம்மனுக்கு அலங்காரம் செய்ய சென்றனர்.


விருதாசலமத்தை பார்த்த மாணிக்கம் , கல்யாணம் முடிஞ்சவுடனே அம்மன நகர்உலாக்கு கொண்டுசெல்லலாம் என கூற.


சரி மாணிக்கம் நானும் அததா சொல்ல வந்தேன் என்றார் விருதாசலம்.


என்னயா விருதாசலம் கல்யாணத்துக்கு உங்க சொந்தம் பலர காணோம் என்றபடி வந்தார் சுப்பு.


அதுவா சுப்பு, தீடிர் கல்யாணம்னு அம்மன் சொன்னதால பலருக்கு சொல்லல. கல்யாணம் முடிஞ்சதும் எல்லாருக்கு சொல்லி ஒரு விருந்து வச்சிடலானு விட்டுட்ட என கூற. அதுவும் சரிதா என்படி சுப்பு கூற. இருவரும் ஐயரிடம் சொன்றனர்.


கோவிலில் உள்ள ஒரு தனி அறையில் ருத்ரா, ஹரிணி, தேன்மொழி மூவரும் அரட்டை அடித்து கொண்டு இருக்க, வீட்டு மற்ற பொண்கள் வேலையில் இருந்தனர்.


விருதாசலத்தை பார்த்த ஐயர், வாங்க ஐயா என வணங்கி, நாழி ஆகுறது நானே உங்கள அழைக்கலானு இருந்த பொண்ணையும் மாப்பிள்ளையும் அழைச்சிட்டு வாங்க என்க.


விருதாசலம் அருகில் இருந்த மீனாட்சியை பார்க்க, உமையாள் நா அழைச்சிட்டு வரேன் அத்தை என சொல்லி சென்றார்.


துருவை அழைத்து வந்த சிவாவும் ஆதவும் அவன் அருகே இருக்க.
துருவன் ஆதவை பார்த்து ஒற்றைபுருவம் உயர்த்தி எல்லா ஓகே தானே என்றபடி தலையை ஆட்ட.


ஆதவும் எல்லா ஓகே என்றபடி இரு கண்களையும் மூடிதிறந்தான்.


இருவரும் கண்களால் பேசிக்கொண்டிருக்க, உமையாள் ருத்ராவை மண்டபத்திற்கு அழைத்துவந்திருந்தார்.


விருதாசலம் ருத்ராவை பார்த்து சிரித்தபடி, வாங்க எல்லாரும் என்படி கருவறையை நோக்கி நடக்க. அவர் பின்னாலே அனைவரும் சென்றனர்.


கருவறையின் வெளியே அனைவரும் வரிசையாக நிற்க. ருத்ராவின் வலப்புறம் ஹரிணியும் தேன்மொழியும் நிற்க இடபுறம் மீனாட்சி பார்வதியும் நின்றிருந்தனர்.


துருவனின் வலப்புறம் ஆதவும், இடப்புறம் விஷ்ணுவும் சிவாவும் நின்றிருந்தனர்.


ஐயர் இருவர் கையிலும் காப்பு கட்டிவிட்டு, அம்மனிடம் மாங்கல்யத்தை வைத்து பூஜை செய்த தட்டை உமையாளிடம் கொடுக்க, அவர் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வந்து ஐயரிடம் கொடுக்க, ஐயர் கெட்டி மேளம் கெட்டி மேளம் என கூறி கையை அசைக்க, வாத்தியங்கள் முழங்க கையில் மாங்கல்யத்தை எடுத்த துருவனின் நெற்றியிலிருந்து புருவத்தின் வழியே வியர்வை வழிய ஒரு பெருமூச்சை விட்டபடி எதிரே இருந்த ருத்ராவை பார்க்க. அவளும் அவனையே பார்க்க.


கண்களை மூடி திறந்தவன் ருத்ரா அருகே இருந்த ஹரிணியின் கழுத்தில் தாளியை கட்ட, அனைவரும் அதிர்ந்த நேரத்தில் ஆதவ் ருத்ரா கழுத்திலும், விஷ்ணு தேன்மொழி கழுத்திலும் தாளியை கட்டினர்.


துருவனை கவனித்தவர்கள் ஆதவ் விஷ்ணுவின் செயலால் மேலும் அதிர்ந்து நிற்க.


தேன்மொழி கழுத்தில் தாளி கட்டிய விஷ்ணுவோ யாரையும் பார்க்காமல் சட்டென வெளியேற. பெண்கள் மூவரும் எதிர்பாராத திருமணத்தில் சற்று அதிர்ந்துதான் நின்றனர்.
 

Dhruv Aathavi

Active member
Wonderland writer
Hii Friends,
என்னுடைய கதையை படித்து லைக் செய்யும் அனைத்து தோழிகளுக்கும் மிக்க நன்றி.

அப்படியே கதை எப்படி செல்கிறது என்றும் ஏதேனும் நிறை குறைகள் இருப்பின் கமெண்ட் செய்து என்னை ஊக்கப்படுத்துங்கள்....

நன்றி.....?


அத்யாயம்_15


அனைவரும் அதிர்ச்சியில் இருக்க, அதிலிருந்து முதலில் மீண்ட கார்திகேயனோ துருவா என்ன பண்ணியிருக்க என்றபடி கோவில் என்றும் பாராமல் கையை ஓங்கி செல்ல.


கார்திகேயா...என தனது சிம்ம குரலில் கர்ஜித்தார் விருதாசலம்.


என்னபா புதுசா கைய ஓங்குற பழக்கமெல்லாம். என்ன இது பொது இடத்துல என கோபமாக கேட்க.அமைதியாக வெளியேறினார் கார்திகேயன்.


துருவனின் திட்டம்படி ஹரிணியின் கல்யாணத்தை அறிந்திருந்த ருத்ரா,


ஆதவ், துருவ், சிவா மூவரும் இட்ட திட்டபடி ஆதவின் தன்னுடனான திருமணத்தை அறியாததால் அங்கிருந்த ஆதவை கண்ணகள் சிவக்க முரைத்து கொண்டு இருக்க.


ஹரிணியே நடந்தது இந்த மாறுபட்ட திருமணத்தால் கயல் விழியின் மீது சாய்ந்து அழுதுக்கொண்டிருக்க.


தேன் மொழிக்கே தாலி கட்டிவிட்டு ஒருநிமிடம் கூட நிற்காமல் வெளியேறிய விஷ்ணு சென்ற வழியை பார்த்து சிலையென நின்றாள்.


வேலாயுதமோ ஆதவின் செயலைப் பார்த்து அதிர்ந்து இருக்க, பெண்களோ என்ன செய்வதென்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க,


வீட்டாரை சுய நினைவிற்கு கொண்டுவந்ததென்னவே விருதாசலம் கார்திகேயனை அழைத்த சிம்ம குரலே.


கூட்டத்திலிருந்த ஒருவனோ அதா கல்யாணம் முடிஞ்சிடுச்சிலே பந்தி ஆரம்பிக்காம என்னத பேசிகிட்டு இருக்காங்க என சலிப்பாக சொல்ல,


அருகிலிருந்த பெரியவரோ ஊருக்கு புதுசா, என கேட்க


ஆமா ஐயா, எங்க ஊருக்கு போயிகிட்டு இருந்த அப்ப , நா போகிற வழியில கல்யாணம்னு பேசிகிட்டாங்க அதா சாப்பிட்டு போகலானு வந்த பசியோட எப்படி போறது, என அந்த புதியவன் கூற.


அவனை ஒரு மார்க்கமாக பார்த்த பெரியவரோ, இங்க கல்யாணமே மாறி போயிடுச்சினு கவலையில இருக்காங்க உனக்கு சோறுதா முக்கியமா என கேட்க.


என்ன ஐயா நீங்க, மாறி நடந்தா என்ன? மாறாம நடந்தா என்ன? அதா கல்யாணம் நடந்திடுச்சில பந்தி ஆரம்பிச்சா சாப்பிட்டு போயிட்டே இருப்ப என வருத்தபடாத வாலிபர் சங்கம் சிவகார்திகேயன் போல சொல்ல.


வெளிப்படையாகவே தலையில் அடித்துக்கொண்ட பெரியவர், பந்தி ஆரம்பிக்க போறாங்க போப்பா என கூற


மொத பந்தில உக்காந்தா எல்லா கிடைக்கும் அப்றமா போனா பாயாசம் இல்ல வட இல்லனு சொல்லுவாங்க ஐயா நா போறேன் என வழியில் இருந்தவர்களை முந்திக்கொண்டு சென்றான்.


விருதாசலம் பூசாரியை பார்த்து வாங்க பூசாரி நம்ப அம்மன நகர் வலத்துக்கு அழைச்சிட்டு போக ஏற்பாடு பண்ணலாம் என கூறி, சுப்பு மாணிக்கம் இரண்டு போரும் கொஞ்சம் பந்திய பாருங்க வந்தவங்க எல்லாரும் சாப்பிட்டு போகனும் என கூற, சரி விருதாசலம் நாங்க போறோம் என இருவரும் பந்தியை நோக்கி சென்றனர்.


விருதாசலம். மீனாட்சி, பரஞ்ஜோதி, வேலாயுதத்தை பார்த்து எல்லாரும் வீட்டுக்கு போங்க நா அம்மனுக்கு பூஜையை முடிச்சிட்டு வீட்டுக்கு வரேன் என கூற. அனைவரும் ஆமோதித்தபடி தலையசைத்து வண்டியில் ஏறி புறப்பட்டனர்.


வீட்டிற்கு வந்த அனைவரும் ஏதும் பேசாமல் ஹாலில் அமர, ருத்ரா கோபத்தில் அறைக்குள் சென்று கதவை தாழிட, ஹரிணியோ அழுதபடியே இருக்க கயல்விழி அவளின் தலையை கோதி அழாதடா என கூற, தேன் மொழிக்கு அழுகை கோபம் என எந்த உணர்வும் இல்லாமல் அதிர்ந்து சிலையென கட்டில் அமர்ந்திருந்தாள்.


சிவா,ஆதவ்,துருவன் மூவரும் தோப்பில் அடுத்து என்ன நடக்க போகுதோ என யோசனையில் இருக்க, சிவாவோ மச்சா ஆதவ் ருத்ராவ கல்யாணம் பண்ண போற விஷயம் நம்ப போட்ட திட்டபடி நடந்திடுச்சி.ஆனா இந்த விஷ்ணு பைய எதுக்குடா தேன கல்யாணம் பண்ணா நம்பகிட்ட கூட ஒருவார்த்தையும் சொல்லல என குறைபட.


துருவனோ, நானு அதபத்திதா மாப்ள யோசிச்சிட்டு இருக்க. அவன நா நகைகடையில பாக்கும் போதே ஏதோ தப்பு பண்ணுறானேனு யோசிச்ச அப்புறம் உடனே ஏதோ வாங்கிட்டு போகவே வீட்டுல இருந்த அனுப்சியிருக்காங்கனு அமைதியாயிட்ட என கூற.


டேய், என்ன பத்தி கொஞ்சம் யோசிங்கடா ருத்ரா என்ன என்ன பண்ணபோறானு தெரியல என ஆதவ் குறைபட. அவனை கண்டு சிரித்த சிவாவோ பெட்டர்மேக்ஸ் லைட்டுதா வேணும்னு சொன்ன இப்ப நாங்க என்ன செய்ய முடியும் அனுபவி ராஜா அனுபவி என ஆசி வழங்க.


எல்லா நேரம்டா என ஆதவ் கூற, பாத்துகலா ஆதவ் எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டோமா என என்படி துருவன் ஆதவின் தோளை தட்டினான்.


இவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஜுப் சத்தம் கேட்ட சிவா தாத்தா வந்துட்டாருடா இனி என்ன நடக்க போகுதோ என சிவா கூறி முடிக்க.
வீட்டின் வேலையாள் தம்பி ஐயா வரசொன்னாரு என சொல்லிவிட்டு சென்றார்.


வாங்கடா பஞ்சாயத்து கூடிடுச்சி போகலாம் என கூறியபடி சிவா இருவரின் தோள் மீதும் கையை போட்டபடி நடந்து சென்றான்.


வீட்டின் கூடத்தில் ஆண்கள் அனைவரும் அமர்ந்திருக்க, பெண்கள் ஒருபுறமாக நிற்க. சிவா ஆதவ் துருவ் ஒருபுறமாக நின்றனர்.


தன் தொண்டையை கனைத்த விருதாசலம், என்னபா துருவா போலிசா இருந்திட்டு நீயே இப்படி செய்யலாமா என கேட்க.


தலையை குனிந்தபடி இருந்த துருவனை பார்த்த கார்திகேயனோ மாமா இவ கிட்ட எல்லா பேசகூடாது நாலு அரையனும் என கூறியபடி எழுந்து செல்ல.


கார்திகேயா என்ன இது , தோளுக்கு மேல வந்தவன அடிக்கிறது. அதுவும் அவ போலிஸ் அதுகாவது அமைதியா இருஎன கூற, மாமா போலிஸ் பண்ணுற வேலையா இது என்றபடி அமர்ந்தார்.


துருவா உனக்கு ருத்ராவுக்கும் தானே பேசினோம் அப்புறம் ஏ நீ ஹரிணிய கல்யாணம் பண்ண என கேட்க.


தாதா, ருத்ராவும் நானும் ஒரு நல்ல பிரண்டாதா பழகுனோம், இரண்டு பேருக்குமே இதல விருப்பம் இல்ல, என கூற.


விருப்பம் இல்லனா முதல்லயே சொல்ல வேண்டியது தானே, இப்ப நீ இரண்டு பெண்ணோட வாழ்கை என்ன பதில் சொல்ல போற என கேட்க.


தாத்தா நா ஹரிணி மேல தா ஆசபட்டேன் அதா ஹரிணிய சந்தோஷமா கல்யாணம் பண்ண எனக் கூற.


அடேய், நீ ஆசப்பட்ட சரி , அந்த புள்ள உன்மேல ஆசை பட வேண்டாமா என கார்த்திகேயன் கேட்க.


துருவன் அமைதியாக இருக்க, சிவாவோ அவன் அருகில் இருந்து சொல்ல மாப்ள பதில சொல்லு நீதா பெரியாளாச்சே. என கவுண்டர் அடிக்க.


கடுப்பான துருவன் அப்பா ஹரிணிய கல்யாணம் பண்ண எனக்கு சிவா தா உதவி செய்தான் என கூற. அடப்பாவி போட்டுக்கொடுத்துட்டானே என கார்த்திகேயனை பயந்தபடி பார்த்தான் சிவா.


அப்ப இங்க பெரிய திட்டம் நடந்து இருக்கு எங்களுக்குதா ஒண்ணும் தெரியல என கார்திகேயன் கேட்க.


மூவரும் தரையை பார்த்தபடி நின்றனர்.


ஆழ்ந்த யோசனையில் இருந்த விருதாசலம், உமையாளை பார்த்து ஹரிணிய அழைச்சிட்டு வாமா என கூற. அவரும் சரி என்றபடி சென்றார்.


கயலுடன் அழுதபடி வீங்கிய முகத்தோடு வந்த ஹரிணியை பார்த்த விருதாசலம்.
ஹரிணிமா, துருவன் உன் மேல ஆசப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டா. நீ என்ன சொல்லுற என விருதாசலம் கேட்க.


ஹரிணி துருவனை முரைக்க, சிவாவோ மாப்ள தங்கச்சி உன்ன ரொமாண்டிகா லுக் விடுரா பாருடா என கூற. அவனோ இது உங்க ஊர்ல ரொமாண்டிக் லுக் என பல்லை கடித்தபடி கேட்க.


ஹரிணியோ தாத்தா நீங்க என்ன சொல்லுறிங்க என கம்மிய குரலில் கேட்க.


துருவன் மாதிரி பைய தேடினாலும் கிடைக்காது என கூற. மீனாட்சியே எங்களுக்கு துருவனை பிடிச்சியிருக்குமா இருந்தாலும் வாழ போறவ நீ அதனால உனக்கு சரினு படுறத சொல்லு என கேட்க.


கார்திகேயனோ, அம்மு பிடிக்கலனு சொல்லுமா பொறுக்கி வேல பாத்தவ கூடஎல்லா நீ வாழ வேண்டாம். நீ என் கூட வாடாமா போலிஸ்ல ஒரு கம்பிளைன் கொடுக்கலாம் என கூற.


மாப்ள உன் லைப்கு வில்லனே மாமாதாடா என சிவா கூறி அமைதியாக சிரிக்க.


உமையாளோ, அண்ணா என்ன பேசிறிங்க துருவ் நம்ப பைய அவன போய் கம்பிளைன் அது இது சொல்லிக்கிட்டு என கூற.


கயலோ, ஹரிணியை பார்த்து நீ என்னமா சொல்லுற என தலையை வருட. உங்களுக்கு சம்மதம்னா எனக்கு சம்மதம்.
இவ்வளவு வருஷம் வளத்தவங்களுக்கு தெரியாதா என் வாழ்க்கை எங்க இருந்தா நல்லா இருக்கும்னு என மறைமுகமாக சம்மதம் தெரிவிக்க.
கயலோ மகிழ்ச்சியில் அவளை அணைத்துக்கொண்டார்.பிறகு ஆசையானவளே மருமகளாக வந்தால் எந்த மாமியாருக்குதான் பிடிக்காமல் போகும்.


சிவாவோ, மாப்ள உன் ரூட் கிளியர். ஆதவ் என்ன ஆக போறானோ என கிசுகிசுக்க.


பெண்கள் அனைவரும் ஹரிணி சம்மதம் சொன்னதில் சற்று மனம் தேறியிருக்க.ஆனால் ருத்ரா தேன் மொழியை நினைத்து பயந்துதான் இருந்தனர்.


நீ(யே)யா......?
 

Dhruv Aathavi

Active member
Wonderland writer
ஹாய் பிரண்ஸ்,


?✨ அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபஒளியை போல் நம் வாழ்விலும் துன்பங்கள் அகன்று, ஒளியாகிய? இன்பம் என்றும் ஒளிரட்டும்



***************

அத்யாயம்_16

ஹரிணி துருவன் பிரச்சனை முடிய ஆதவை பார்த்த விருதாசலமோ தம்பி நா உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசலாமா என கேட்க. சரிங்க தாத்தா ஆனா சிவாவும் என கூட வரட்டுமே என ஆதவ் கேட்க சரி என்றபடி தன் அறைக்குள் நுழைந்தார் விருதாசலம் அவருடனே உள்ளே நுழைந்தனர் சிவாவும் ஆதவும்.



தம்பி நா என்ன கேட்க போறேனு உங்களுக்கு தெரியும். முதல்ல பார்ட்னரா என் வீட்டுக்குள் வந்திங்க, அப்பறம் வேலாயுதம் மகனா வந்திங்க, இப்ப என அமைதியாக நிற்க.


தாத்தா நா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லுறேன் என தன்னுடனான ருத்ராவின் கல்லூரி வாழ்க்கையும் பிறகு அதில் ஏற்பட்ட பிரிவினையும், அவளை பிரிந்துஅவன் பட்ட கஷ்டங்களையும் கூறியவன். இப்ப சொல்லுங்க தாத்தா நா பண்ணது தப்பா என ஆதவ் கேட்க.


சிவாவோ ரொம்ப கஷ்ட பட்டுட்டா தாத்தா, ருத்ராகிட்ட மன்னிப்பு கேட்டு கல்யாணம் பண்ணிக்கதா ஊருக்கே வந்தான் என கூற.


என் பேத்திய நீ அப்படி பேசினதுக்கு உன்ன சும்மா விடகூடாதுனுதா இருந்த ஆனா அதுக்கு ஆண்டவனே தண்டணை கொடுத்திட்ட போது கொஞ்சம் நிம்மதியா இருக்கு. ஆனா ருத்ரா உன்கூட வாழ விருப்பம் இல்லனு சொல்லிட்டா என்னால ஒண்ணும் செய்ய முடியாது என விருதாசலம் கூற. அவ என் கூட வாழுறத நீங்க பாக்கதானே போறிங்க என ஆதவ் கூற. எப்படியோ சந்தோஷமா வாழ்ந்தா சரிதா என வெளியே சென்றனர்.


வேலாயுதமோ, அப்பா அவ தப்புக்கு நா மன்னிப்பு கேட்டுக்குறேன். அவ ஏன் இப்படி பண்ணானு எங்களுக்கு தெரியல என விருதாசலத்தின் அருகே நின்று பேச.


அட என்னடா மன்னிப்பு எல்லா கேட்டுகிட்டு, ருத்ராவுக்கு இந்த கல்யாணம் சம்மதம்னா நம்ப மேல
பேசலாம் என விருதாசலம் கூற.


தாத்தா நா ருத்ராகிட்ட பேசிலாமா? என ஆதவ் கேட்க. சாந்தியோ டேய் என்ன பேச போற பண்ண வேல போதாதா என கேட்க.


அம்மா என ஆதவ் அழைக்க, விருதாசலமோ, சாந்தி அவ போய் பேசட்டும் என ஆதவை நோக்கி போகும் படி தலையசைக்க ஆதவ் ருத்ரா இருக்கும் அறையின் கதவை தட்டினான்.


கதவை திறந்த ருத்ரா ஆதவை கண்டு முரைத்தபடி நிற்க. தள்ளுடி என்றபடி உள்ளே சென்று கதவை தாழிட்டான்.


ஏய், எதுக்கு தாழ் போடுற வெளிய போ என கத்த, சாவகாசமாக கட்டில் அமர்ந்த ஆதவ் சுண்டு விரலை காதில் விட்டு தலையை ஆட்டி கத்தாதடி காது வலிக்குது என கூற.


உன்ன வெளிய போக சொன்ன என ருத்ரா கூற.


போறேன் ஆனா அதுக்கு முன்னாடி ஒரு விஷயம், வெளிய வந்து என் கூட வாழுறேனு சொல்லு என கூற


உன் கூட எல்லா என்னால வாழ முடியாது வெளிய போ.


திரும்ப திரும்ப ஓட்ட ரெக்காடு மாதிரி பாடாத. நீ என் கூட வாழ மாட்டேனு எனக்கு தெரியும். ஏன்னா நீ பெரிய கோழ, உனக்கு தெரியம் இருந்தா நீ இப்படி அறைக்குள்ள இருந்திருக்கு மாட்ட,
என்ன, என்ன பண்ணலானு இந்நேரத்துக்கு யோசிச்சிட்டு இருந்திருப்ப என ஆதவ் ருத்ராவை பார்த்து நக்கலாக சிரித்தபடி
,
எனக்கு தெரியும் டி உன்கிட்ட எப்படி பேசினா வேலையாகும்னு என எண்ணியபடி வெளியே சென்றான்.


ஆதவ் வெளியேறியவுடன் அவன் கூறி சென்றதை யோசித்த ருத்ரா இருடா உன்ன என்ன பண்ணுறேனு பாரு, உன்ன பழிவாங்காம விடமாட்டேன் என எண்ணியபடி வெளியே வந்தாள்.


ருத்ரா வந்ததை பார்த்த விருதாசலம் . வாம்மா ஆதவ் உன்ன கல்யாணம் பண்ணிட்டான் அவன் உன் கூட வாழ ஆசப்படுறான் நீ என்ன சொல்லுற என கேட்க.


தாத்தா, நா அவங்க கூட வாழுறேன் என கூற. அவளின் பேச்சை கேட்டு அதிர்ந்தனர் மொத்த குடும்பமும்.


தெரியாதவர்களிடம் பேசவே யோசிக்கும் அவளின் சுபாவம் அறிந்த குடும்பத்தினர்கள் எப்படி யாரோ தெரியாத ஒருத்தர் கூட உடனே எதையும் யோசிக்காம வாழுறனு சொல்லுறா என எண்ணிக்கொண்டிருக்க. ருத்ரா என அழைத்தார் பரஞ்ஜோதி.


அப்பா இதுக்கு மேல நா எதுவும் சொல்ல விரும்பல . சாந்தியை பார்த்த ருத்ரா அத்த உங்க மருமகளா நா உங்க வீட்டுக்கு வரலாமா என கேட்க. ருத்ராவின் கையை பிடித்து நீ மருமகளா வர நா குடுத்துவச்சியிருக்கனும்மா என கூறினார்.


ருத்ராவின் இந்த பேச்சில் குடும்பத்தினர்கள் சற்று அதிர்ந்துதான் இருந்தனர்.


துருவனோ ஆதவின் தோளை யாரும் அறியா வண்ணம் தட்டி சிரிக்க. ஆதவும் புருவம் உயர்த்தி ருத்ராவை பார்த்தான்.


இருவரின் பிரச்சணையும் தீர பெருமூச்சுவிட்ட விருதாசலம். விஷ்ணு எங்க என கேட்டார். அப்பொழுதுதான் அனைவருக்கும் விஷ்ணுவின் நினைவு வர நா பாக்கல என ஒவ்வொருவரும் கூறினர்.


சிவா அவனுக்கு போன் போடு என விருதாசலம் கூற. சிவாவும் விஷாணுவிற்கு அழைக்க அங்கிருந்த தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் என்பதே திரும்ப திரும்ப வர கடுப்பான சிவா தாத்தா போன் போகல என கூற. எங்க போனான் என்ன நினச்சிட்டு இருக்கா அவ என விருதாசலம் குரல் உயர்த்த. மீனாட்சியோ வருவா அமைதியா இருங்க என கூற.


கவிதா எல்லாருக்கும் மோர் கொடுக்க அனைவரின் இவ்வளவு நேர பஞ்சாயத்து தாகத்தை மோர் தீர்த்து வைத்தது.


சிவாவோ கவிதாவை பார்த்து அம்மா நா கூட பஞ்சாயத்து மதியமும் தாண்டி போகுதே இன்னக்கு சோறு இல்லனு நெனச்ச நீங்க மோர் கொண்டு வந்திட்டிங்க என கூற,
நானு அதேதா நினைத்தேன் அத்தை என மோரை எடுத்தான் துருவன்.


உமையாளோ மீனாட்சியை பார்த்து அத்தை காலையில இருந்தே யாரும் சாப்பிடல மதியமாவது சாப்பிடட்டும் மாமா கூப்பிடுங்க என கூற.


மீனாட்சி வாங்கையா எல்லாரும் சாப்பாட்டுக்கு என கூற. அனைவருக்கும் பசியால் அமைதியாக சென்றனர்.


ஆண்கள் அனைவரும் சாப்பிட்டு செல்ல பெண்கள் அமர்ந்தனர். ஹரிணியும் ருத்ராவும் கடமையே என சாப்பிட தேன்மொழி சாப்பிட வரவே இல்லை.


கவிதா சாப்பாட்டை தேன் மொழியின் அறைக்கு எடுத்து சென்று ஊட்ட . அவளோ வாய்கூட திறக்காமல் சிலை போல இருக்க. என்னமா இப்படியே இருக்க எதுனாலும் அழுதிடு இல்லனா கத்திடு என கவிதா பயந்தபடி சொல்ல. அப்பொழுதும் பாவை போலவே இருந்தாள்.


வீட்டினர் அனைவரும் வந்து பேசியும் வாய்திறக்காமல் இருக்க அனைவரும் பயந்து போயினர். ஹரிணியோ தேன்மொழியிடம் பேச அவளுக்கும் அது தோல்வியிலே முடியந்தது.


சிவா தேன்மொழியின் நிலையால் விஷ்ணுவிற்கு அழைக்க அங்கிருந்து பதில் வராததால், சிவாவும் துருவும் அவனை தேடி அலைந்தனர்.


மாப்ள எங்கதான்டா போனா என சிவா கேட்க.


அததான்டா நானும் யோசிக்கிறேன், பிரண்ஸ் கூடவும் இல்ல, அவ வழக்கமா போகிற இடமும் இல்லனா, ஒரு வேளை காலேஜுக்கு போயிருப்பானோ என துருவன் கூற.


வாடா நாம அங்க போகலாம் என வண்டியை காலேஜை நோக்கி விட்டனர்.


கடைசியாக அவன் வேலை செய்யும் இடத்திற்கு சென்ற இருவரும் ஒரு மாணவனிடம் விஷ்ணு சார் எங்க என கேட்க? அவனோ சார் கம்பியூட்டர் லேப்ல இருக்கார் என கூற. கடுப்பான துருவன் அவன என கூறியபடி முன்னே செல்ல. சிவாவோ இது காலேஜ்டா வீட்டுக்கு போய் பாத்துக்கலாம் என கூற. இருவரும் லேப்பிற்கு சென்று அங்கிருந்த வேலையாளிடம் விஷ்ணுசார் என கேட்க. அவரோ இதோ அழைச்சிட்டு வரேன் என உள்ளே சென்றார்.



லேபில் கம்பியூட்டரில் டைப் செய்துக்கொண்டிருந்த விஷ்ணுவை பார்த்து, சார் உங்கள பார்க்க ரெண்டுபேர் வந்திருக்காங்க என கூற.


யாருனு கேட்டிங்களா? அண்ணா என கேட்க.


இல்ல சார் நீங்க வந்து பாருங்க என கூறிவிட்டு செல்ல.


யாரு என்றபடி வெளியே வந்தான். அங்கிருந்த சிவா துருவனை பார்த்து என்ன அண்ணா இங்க வந்திருக்கிங்க என கேட்க.


கடுப்பான துருவன் ஓங்கி அரைய, யாரும் இல்லாத இடம் என்பதால் கன்னத்தை பிடித்தபடி நின்றான் விஷ்ணு.


சிவா உடனே டேய் அமைதியா இரு என கையை பிடிக்க. விஷ்ணுவை நோக்கி என்னடா, அங்க அவ்வளவு பெரிய வேல பண்ணிட்டு இங்க வந்திருக்க இதுல போனையும் ஆப் பண்ணியிருக்க. ஒழுங்கா வீட்டுக்கு இப்பவே கிளம்பு என கூற.


அண்ணா டைப் பண்ணிட்டு இருந்தத பாதில விட்டு இருக்க அத முடிச்சிட்டு வருவா என கேட்க.


கடுப்பான துருவன் அடிங், அங்க என் தங்கச்சி பைதியகாரி மாதிரி இருக்கா இவனுக்கு டைப்பிங் வேலதா முக்கியமா என பல்லை கடித்தபடி கூற.


ஏய் என்னடா விளையாடுறியா ஒழுங்கா கிளம்பிவர வழிய பாரு இல்ல என்ன நடக்கும்னு தெரியாது என சிவா கோபமாக கூற.


அமைதியாக முதல்வர் அறையை நோக்கி சென்றவன் சிறிது நேரத்தில் வெளியே வந்து அவர்களுடன் கிளம்பினான்.


சிவா, விஷ்ணு முதல்வர் அறைநோக்கி சென்றவுடன் வீட்டினற்கு தகவல் சொல்ல.வீட்டினர் விஷ்ணுவின் வருகைக்கு காத்திருந்தனர்.


கதை எப்படி இருக்குனு கமெண்ட் பண்ணுங்க பிரண்ஸ்....


நீ(யே)யா.......?
 

Dhruv Aathavi

Active member
Wonderland writer
அத்யாயம்_17

விஷ்ணு கல்லூரியில் இருப்பதாக செய்தி கேட்டவுடன் அனைவரும் கோபமாகவே வாசலையே பார்த்துக்கொண்டிருந்தனர் அவன் வருகைக்காக.



வீட்டிற்கு வந்த விஷ்ணு வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய, அவனை கண்ட விஷ்ணு தந்தையான அருண்குமார் அவன் கன்னத்தில் இரண்டு அரை விட, துருவன் விட்ட அரையுடன் இவையும் சேர்ந்து வலிக்க கண்களை மூடி நின்றான்.


வீட்டினர் அனைவரும் அமைதியாக இருக்க. மீனாட்சியோ விடுடா அவன என்றபடி விஷ்ணுவின் அருகே வந்தார்.


அம்மா இவ பண்ண வேலைக்கு... இதுவே கம்மி என கூற. மீனாட்சியோ விஷ்ணுவை பார்த்து ஏன்டா இப்படி பண்ண தேனு நிலைமையை போய் பாரு என அவனை உள்ளே அழைத்து செல்ல.


கட்டிலில் பாவை போல் அமர்ந்திருந்த தேனை பார்த்தவுடன் அதிர்ந்த விஷ்ணு.தரையில் மண்டியிட்டு மொழி மொழி என அழைக்க, அவளோ உணர்வின்றி இருந்தாள்.


மீனாட்சியோ அவளின் தோள் மீது கை வைத்து ஆட்டி பேசுமா என்னனாலும் சொல்லு இப்படியே இருக்காத என அவர் பயந்தே கூற.அப்பொழுதும் அவள் அப்படியே இருக்க, பயந்த விஷ்ணு மொழி..மொழி.. என கன்னம் தட்ட.


கைய எடு என கத்தினாள் தேன்மொழி,
அவள் பேசியதில் சற்று தெளிந்த குடும்பத்தினர், அனைவரும் அறையின் வாசலில் நிற்க.


அவளோ, தாத்தா எதுக்கு இவ எனக்கு தாலி கட்டினா, கட்டினவ ஒரு நிமிஷம் கூட அங்க இருக்காம எங்க போனா என அவள் கத்த. எவ்வளவு கோபத்திலும் மென்மையாக பேசும் சுபாவம் உடையவள் இன்று கத்துவதை பார்த்தவர்கள் மிரண்டு நிற்றனர்.


விருதாசலமோ, எதுக்குடா இப்படி பண்ண என விஷ்ணுவை பார்த்து கேட்க.


தாத்தாஅவ என்ன பாத்து பொம்பள பொறுக்கினு கேட்டா அப்ப அத்தை தவிர எல்லாரும் அமைதியாதானே இருந்திங்க.
ஏன் யாருமே விஷ்ணு அப்படிபட்டவ இல்லனு சொல்லல. அப்ப எல்லாரும் அவ சொன்னத உண்மைனு நம்பிட்டிங்கதானே.


நீங்க அப்படிதா என்ன வளத்திங்களா உங்க வளப்ப நீங்களே அமோதிச்சா மாதிரி ஏன் தாத்தா அமைதியா இருந்திங்க.நீங்க எல்லாரும் அமைதியா இருந்தது தா எனக்கு கோபம் அதானால அவள பழி வாங்க கல்யாணம் பண்ண என ஆதங்கமாக விஷ்ணு கூற.


மீனாட்சியோ, விஷ்ணு நாங்க அமைதியா இருந்துக்கு காரணம் குடும்பத்தில பிரச்சன வரகூடாதுனுபா. உன் மேல சந்தேகபட்டு இல்ல.


அப்ப அவள அந்த வார்த்த கேட்கும் போது விஷ்ணுவ பத்தி எங்களுக்கு தெரியும்னு ஏன் நீங்க சொல்லல? என மீனாட்சியை பார்த்து கேட்க.


அவன் கேட்பது சரி என்று பட மீனாட்சியோ, அவ ஏதோ விளையாட்டா பேசுறானு நெனச்சி அமைதியாய இருந்திட்டன்டா. என வருத்தமாக கூற.


எது பாட்டி விளையிட்டு, விளையாட்டா பேசுற வார்த்தையா அது. என தேனை பார்த்தபடி கூற.


வீட்டினர் அனைவரும் தங்கள் தவறை உணர்ந்து அமைதியாக நிற்க. தேன்மொழி விருவிருவென அறையிலிருந்து வெளியேறினாள்.


அவள் வெளியேறியதும் அவள் பின்னே கவிதா செல்ல. தேன் மொழி தன் வீட்டில் உள்ள முன் தோட்டத்தில் உள்ள பென்சில் அமர. அவளை கண்ட கவிதா.


தேனு, அவன் ஏதோ முட்டாள் தனமா பண்ணிட்டாமா அவனுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். என கூற.


கவிதா கூறியதை கேட்டு அதிர்ந்த தேன் அத்த, அவ பண்ணிணதுக்கு நீங்க ஏன் மன்னிப்பு கேட்கனும். அவன் தா கேட்கனும் நா கேட்க வைப்பேன் என கூற.


தேன் பேசியதை கேட்ட கவிதா, இவ்வளவு நேரமும் பாவை போல் இருந்தவளா இவள். என்று எண்ணிக்கொண்டார்.


சரிமா, அவன மன்னிப்பு கேட்க வைக்கிறேன். நீ வா முதல்ல சாப்பிடு என கையை பிடித்து அழைக்க.


வேணா அத்த, என்ன கொஞ்சம் தனியா விடுங்க நா சரி ஆகிடுவேன் என வேடிக்கை பார்த்தபடி கூற. அதுவே சரி என பட்டது கவிதாவிற்கும்.


கூட்டு குடும்பம் என்றாலே தங்கள் குழந்தையை யாரேரும் தவறாக ஒரு வார்த்தை கூறினாலும் அவரின் தாய்க்கு முன் முதலில் கேட்பது அவரின் பெரியம்மா சித்தி தாத்தா பாட்டி தந்தையர்களே. அதையே தான் இங்கு விஷ்ணுவும் எதிர்பார்க்க ஆனால் அவனின் அத்தையை தவிர யாரும் தேன் பேசியதை எதிர்த்து கேட்காததே அவனுக்குள் ஏதோ வலி தோன்ற அதுவே அவனை யாரையிடம் கேட்காமல் பெரிய தவறை செய்ய வைத்தது.


உமையாளோ விஷ்ணுவிடம் சென்று. அவ சொன்னானு நீ தப்பு பண்ணிட்டேயேபா, எங்க பிள்ளைய பத்தி எங்களுக்கு தெரியாதா. அவ சொன்னா அத அப்படி நம்புற அளவுக்கு நாங்க என்ன முட்டாளா என கேட்க.


விஷ்ணு, உமையாளை ஒரு அடிப்பட்ட பார்வை பார்க்க. அவன் பார்வை ஏதோ செய்ய அவர் அங்கிருந்து சென்றார்.


வேலுவும் சாந்தியும் விருதாசலத்திடம் சென்று. அப்பா நாங்க வீட்டுக்கு கிளம்புறேம் என கூற.


ஏன்பா ஒருவாரம் இருந்திட்ட போலாமே என விருதாசலம் கூற.


இல்ல பா வேலை எல்லாம் பாதியிலே நிக்குது நாங்க போனாதா மேல பாக்கமுடியும்.


சரிபா போய்டுவாங்க என கூற.


சாந்தியோ மாமா, இப்ப பொழுது போயிடுச்சி நாங்க ஒரு நல்ல நாளா பாத்து ருத்ராவ வீட்டுக்கு அழைச்சிட்டு போறோம் என கூற.


அதுவே அனைவருக்கும் சரி என பட அனைவரும் அதையே ஆமோதித்தனர்.


சாந்தி ருத்ராவிடம் புறப்படும் விஷயத்தை கூற. அவளும் சரி என்று அவர்களை வழியனுப்ப வெளியே வந்தாள்.


அனைவரிடம் சொல்லிவிட்டு ஆதவ் குடும்பத்தினர் செல்ல. ஆதவின் பார்வை ருத்ராவிடமே இருக்க. சிவாவோ ரொம்ப வழியிது என கூற. அவனை பார்த்து சிரித்தபடி அனைவரிடமும் ஒரு தலையசைப்புடனே புறப்பட்டான்.


கார்திகேயனை பார்த்து மீனாட்சி, மாப்பிளை நாங்க நாள் பாத்து தேன்மொழிய எங்க வீட்டுக்கு அழைச்சிக்கிறோம். அப்பவே ஹரிணிய அழைச்சிட்டு போங்க என கூற. அவரும் சரின ஆமோதித்தார்.


இரவு உணவை அனைவரும் கடமையே என்று உண்ண. எவ்வளவு சொல்லும் உண்ணாவிரதம் இருந்தனர் தேன்மொழியும்_ விஷ்ணுவும்.


யாருக்கும் காத்திருக்காமல் சூரியன் கிழக்கில் உதிக்க அனைவரும் தங்கள் வேலை நோக்கி பயணிக்க தொடங்கினர்.


மலேஷியா செல்வதால் சிவாவும் ருத்ராவும் காலையிலே மால் கட்டும் நிலத்தின் அளவை கணக்கிட சென்றுவிட்டனர்.


விஷ்ணுவும் விரைவாகவே கல்லூரிக்கு சென்றுவிட. ஹரிணி மருத்துவமனை செல்வதற்காக தயாராகி வெளியே வந்தாள்.


அம்மா அக்கா எங்க? என கேட்டபடி உள்ளே சமையல் அறையினுள் செல்ல. கவிதாவோ அவள் காலையிலே மால் வேலையா கிளம்பிட்டா என சொல்ல.


சரி விஷ்ணு எங்க என கேட்க?


அவ என கவிதா யோசிக்க. உள்ளே வந்த கயல், இப்பதா வெளிய போனா என வரும் பொழுது தான் கண்டதை கூறினார்.


அம்மா இன்னைக்கு காலையில வர டாக்டர் வரல, நா சீக்கிறம் போகனும் இப்ப எப்படி என சோகமாக கேட்க.


சரிடி கவலப்படாத நம்ப வேலு கார்ல கூட்டிபோக சொல்லுற என கூற. அய்யோ அம்மா அவர் இப்பதா தாத்தா ஏதோ வேலை சொல்ல கிளம்பினார். அப்பா மில்லுக்கு போயிட்டார் என மொழிய.


நா துருவ அழைச்சிட்டு போக சொல்லவா என கயல் கேட்க.


இல்ல அத்த வேணா நா ஆட்டோல போறேன்.


ஏய் எதுக்கு ஆட்டோல போற துருவ் கூட போ உங்க அப்பாவுக்கு தெரிஞ்சிது நா அவ்வளவு தா என கவிதா குறைபட.


இரு நா துருவ அனுப்பிவிடுறேன் என கயல் வீட்டை நோக்கி சென்றார்.


அப்பொழுதுதான் உடற்பயிற்சி முடித்து தன்னை சுத்தபடித்திக்கொண்டு பேப்பர் படித்துக் கொண்டிருந்தவன் அருகே வந்த கயல்.


துருவ், ஹரிணி இன்னைக்கு சீக்கிறமா ஹாஸ்பெட்டல் போகனும்மா வீட்ல யாரும் இல்ல. நீ கொஞ்சம் அவளை விட்டுறியா என கேட்க.


துருவோ. கண்ணா லட்டு தின்ன ஆசையா என்பது போல், சரி மா போகலாம் என பைக் கீயுடன் வெளியே சென்றான்.


கயல் ஹரிணியிடம் வாமா துருவ் வந்திட்டான் என அழைக்க, தயங்கிய ஹரிணியை பார்த்த கவிதா போடி டைம் ஆகுது என கூற வேறு வழியின்றி வெளியே வந்தாள்.


அங்கு வாசலில் தன் ராயல் புல்லட்டில் துருவ் காத்துக்கொண்டிருக்க. அவனை பார்த்து முரைத்தபடி வண்டியின் அருகே செல்ல. துருவ் தா என்றபடி கையை நீட்டினான். என்ன என்பது போல் அவள் பார்க்க, அவன் கண்களால் பையை சுட்டி காட்டினான்.


இல்ல நானே வச்சிகிறேன் என்றபடி வண்டியில் ஏறினாள். அவனும் வண்டியை கிளப்ப அமைதியாகவே சென்றனர் இருவரும். அவர்களின் அமைதியை களைக்கும் வண்ணம் ஹரிணியின் மொபைல் ஒலிக்க. அவளோ இதோ இன்னும் டென்மினிட்ஸ்ல அங்க இருப்ப என கூறி கால் கட் செய்ய.


துருவ் சாப்பிட்டியா? என கேட்டான்.


அவள் அமைதியாகவே இருக்க. உன்னதா சாப்பிட்டியா என மீண்டும் கேட்க. அப்பொழுதும் அவள் அமைதியாகவே இருக்க. இருடி உன்ன என்ன பண்ணுறனு பாரு என்றபடி வண்டியை நிறுத்தினான்.


அவளோ எதுக்கு நிறுத்துறாங்க டைம் ஆச்சி என்றபடி ஏன் நிறுத்தினிங்க என கேட்க.


அப்பாடி பேசிட்டியா என எண்ணியவன் அமைதியாக இருக்க. கீழே இறங்கிய ஹரிணி டைம் ஆச்சி போலாமா என கேட்க. அவனோ சாப்பிட்டியா என்றான் மீண்டும்.


விடமாட்டாங்க போல என எண்ணியபடி சாப்பிட்டேன் என்றாள் எங்கோ பார்த்தபடி. அவள் கூறியதே அவனுக்கு சந்தோஷம் அளிக்க வண்டியை செலுத்தினான்.


ஹாஸ்பெட்டலில் இறங்கிய ஹரிணி அவனை பார்த்து தேங்ஸ் என கூற. அவனோ ஒற்றை கண்ணை அடித்து சிரித்தான்.


அவளோ அவன் சிரித்ததை பார்த்து அமைதியாக உள்ளே சென்றுவிட்டாள்.

நீ(யே)யா.....?
 
Status
Not open for further replies.
Top