அத்தியாயம்_5
முதல்வரிடம் பேசிவிட்டு அங்கிருந்த காவலரின் உதவியுடன் தன் டிப்பார்ட்மெண்ட் ஸ்டாப்ரூமை நோக்கி சென்றான் விஷ்ணு. அங்கிருந்த HOD யிடம் தன்னுடைய பணிநியமன பேப்பரை காட்டி தன்னுடைய வேலையை உறுதி செய்துக்கொண்டான்.
HOD விஷ்ணுவிடம் சில சுயவிவரங்களை பற்றி பேசிவிட்டு, வகுப்பறைகளுக்கு அழைத்து சென்று அறிமுகப்படுத்தினார்.
கடைசி வகுப்பறைக்குள் நுழைந்தபோது மாணவர்கள் அனைவரின் சலசலப்பும் எழுந்து நிற்கும் ஓசையும் கேட்டு எழுதிக்கொண்டிருப்பதை விட்டு வாயில் பக்கம் திரும்பினாள் தேன்மொழி.
HOD உடன் விஷ்ணு நின்றிருப்பதைப்பார்த்து அதிர்ந்தவள்.
பின் HOD கூறியதைக்கேட்டு விரைத்து நின்றாள்.
குட் மார்னிங், ஸ்டுடென்ஸ், இது நம்முடைய நியு ஸ்டாப் மிஸ். விஷ்ணு.
இன்னயில இருந்து உங்களுக்கு வகுப்பு எடுக்க தொடங்குவார்.என HOD கூறிக்கொண்டிருந்த போது அங்கு வந்த பியுன், மேம் உங்கள பிரின்சிபல் சார் வர சொன்னார் . என கூறி சென்றான்
ஓகே, விஷ்ணு நீங்க உங்கள அறிமுகப்படுத்திக்கோங்க. என கூறிவிட்டு , தேன்ழொழி கொஞ்சம் வெளியே வாங்க என கூறியபடி வெளியே சென்றார்.
மாணவர்களுக்கு முதுகை காட்டியபடி, வாயிலை நோக்கி சென்றுக்கொண்டிருந்த தேன்மொழியை பார்த்து கண்ணடித்தான் விஷ்ணு.
விஷ்ணுவை முரைத்தபடி, அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் பொறுக்கி என்று சொல்லி சென்றாள்.
HOD , தேன்மொழியிடம் இனி நீங்களும் விஷ்ணுவும் சப்ஜெட் ஷேர் பண்ணிக்கொங்க. இன்னிக்கு மட்டும் அவரோட கோ_ ஆடினேட் பண்ணுங்க என கூறி சென்றுவிட்டார்.
தனியே வெளியே நின்ற தேன்மொழி, கடவுளே, இவ கூடயொல்லா சேர்ந்து வேல செய்யனுங்கிறது என் தலை எழுத்து என புலம்பியப்படி வகுப்பறையுனுள் சென்றாள்.
ஹலோ சார் , ஐம் தேன்மொழி, இனி நீங்களும் நானும் சப்ஜெக்ட் ஷேரர்.
இன்னிக்கு உங்க கூட
கோ_ ஆடினேட் பண்ண சொன்னாங்க.
நீங்க கிளாஸ் எடுங்க நா பின்னாடி இருக்கேன் என பின் பென்ஜில் அமர்ந்துக் கொண்டாள்.
ஹாய் ஸ்டுடெண்ஸ், நா விஷ்வா உங்க தேன்ழொழி மேம் என்ன பாடம் எடுக்கறாங்களோ இனி நா அத கோ_ ஆடினேட் பண்ணுவேன். முதல்ல நமக்குள்ள ஸ்டுடெண் ,டிச்சர்னு பாண்டிங் இல்லாம ஒரு நல்ல பிரண்டா இருக்கலாம். ஏன்னா என்ன பொருத்தவர ஒரு நல்ல பிரண்டாலதா, நல்ல ஸ்டுடண்டையும், டிச்சரையும் உருவாக்கமுடியும் சோ வீ ஆர் பிரண்ஸ்( so we are friends) என கூறியபடி பெண்களிடம் சென்று தங்களைப் பற்றி சொல்லும் படி
கூறினான்.
இதை கவனித்த தேன்மொழி, எல்லாரையும் பேசியே கவுத்திடுவா.பொறுக்கி,அது என்ன முதல்ல பொண்ணுங்க பேரதா கேக்கனுமா , பசங்க பேர முதல்ல கேட்டா என்னவா என நொடிந்துக்கொண்டாள்.
அன்றைய நாள் இருவருக்கும் டாம் அன் ஜெரி சண்டை சத்தமில்லாம தொடர தேன்மொழி மாலை சீக்கிரமே வீட்டிற்கு சென்றாள்.
மாலை நேரம் , கையில் ரத்தம் சொட்ட சொட்ட வீட்டிற்குள் நுழைந்தான் துருவன்.
அவனை முதலில் பார்த்து அதிர்ந்த மீனாட்சி, ஏய்யா பேராண்டி என்னயா ஆச்சி, கைய்யெல்லா ரத்தமா இருக்கே என மீனாட்சியின் குரலைக்கேட்டு சமையல் அறையில் இருந்த கயல்விழி, உமையாள், ஹரிணி மூவரும் ஹாலை நோக்கி வந்தனர்.
அதெல்லா ஒண்ணும்இல்ல அம்மாச்சி, என கையை உருவ முயன்றுக்கொண்டிருந்தான்.
என்னடா ஒண்ணும்இல்ல கைல ரத்த வழியுது என்ன ஆச்சு வா ஆஸ்பெட்டல் போகலாம் என துருவனின் கையை திருப்பி திருப்பி பார்த்த படி கூறினார் கயல்விழி.
அம்மா அதெல்லா ஒண்ணும் வேணாம், கழுவிட்டு ஆயில்மெண்ட் போட்டா சரியாகிடும் என்றபடி தன் கையை உருவ முயன்று கொண்டிருந்தான்.
ஹரிணி, ஓடிச்சென்று அலமாரியில் இருந்த முதலுதவி பெட்டியுடன் துருவனின் கையை பிடித்து சோபாவில் அமரவைத்து பச்சுக்களைக்கொண்டு கையில் உள்ள ரத்தத்தை துடைத்து எடுத்து சில மருந்துகளை வைத்து கட்டு கட்டினாள். பிறகு வீட்டு வேலையாளிடம் சில மருந்துகளை வாங்கிவர சொன்னாள். மருந்துகள் வந்ததும் காயம் செப்டிக்ஆகாமல் இருக்க துருவனின் திரண்ட புஜத்தில் மெல்லிய சிரஞ்சியை செலுத்தினாள்.
ஹரிணி சிகிச்சை அளிக்கும் போது அவள் கவனத்தை சிதைக்காதவண்ணம்
அமைதியாக அவள் முகத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தவன் சிரஞ்சியின் உதவியுடனே சுயநினைவிற்கு வந்தான்.
உடனே மீனாட்சி, பக்கத்திலயே டாக்டரவச்சிக்கிட்டு வச்சிகிட்டு நம்ப புலம்பிக்கிட்டு இருக்கிறோம் கயலு, என மகளின் கையை பிடித்துக் கூறினார்.
தன் அத்தையிடம் சென்ற ஹரிணி, மாத்திரைகளைப் பற்றி கூறிக்கொண்டிருந்த போது, என்ன வழியெல்லா ரத்தமா இருக்கு என எண்ணியபடி உள்ளே நுழைந்த தேன்மொழியின் கண்ணில் முதலில் பட்டது கையில் கட்டுடன் இருந்த துருவன் தான்.
ஓடிச்சென்று, என்னடா என்ன கையில கட்டு? என கையை பிடித்து பார்த்தாள்.
லூசாடா நீ கம்பி இருக்கறது கூடவா தெரியல? என்றாள் கோபமாக.
நான் என்ன உன்ன மாதிரியாடி எல்லா மெதுவா செய்ய கொஞ்ச விட்டிருந்த அந்த ரவுடி மிஸ் ஆகியிருப்பா. அதா சரியா கவனிக்காம ஓடிட்ட என்றபடி.
என்ன அம்மாச்சி எல்லாரும் ஒண்ணாவந்திருக்கிங்க என்ன விஷயம்? என பேச்சை மாற்றினான்.
அவனின் பேச்சால் அனைவரையும் கவனித்த தேன்மொழி சிரித்தபடி ஹரிணியிடம் சென்றாள்.
அதுவந்து பேராண்டி, நாளைக்கு நம்ப புதுசா கட்டபோற மாலுக்கு பூஜ போடுறோம் அத சொலுலிட்டு போலானு வந்த. நீயும் வந்திடுடா என பேரணின் கையை பிடித்துக் கூறினார்.
அதற்கு பிறகு அனைவரும் சற்று நேரம் பேசிவிட்டு புறப்பட்டனர்.
நாளை பூமி பூஜையில் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்விற்கு காத்திருப்போம்.
படித்து விட்டு கதை எப்படி உள்ளது என கமாண்ட் பண்துங்க பிரண்ஸ்.....
இல்ல அக்கா நேத்து காலேஜ்விட்டு வரும் போது சிவில் சினியர் ஆதவ் அண்ணாவ பாத்த அவங்க கூட பேசலானு போனப்ப
அவர் நம்ப சிவா அண்ணாகூட பேசினத நான் கேட்டுட்டு அமைதியா வந்திட்ட என்றான் ருத்ராவின் முகத்தை பார்த்து.
அப்படி என்ன பேசினாங்க இரண்டு பேரும்?
நீங்களும் ஆதவ் சினியரும் லவ் பண்ணிங்களாம். ஆனா அவரு விஐய்ய பழிவாங்க உங்கள யூஸ் பண்ணிகிட்டாராம். உங்கள அவர் உண்மையா லவ் பண்ணத டெல்லிக்கு போன இரண்டு வருஷத்துல புரிஞ்சிகிட்டாராம். இப்ப உங்ககிட்ட மன்னிப்பு கேட்டு கல்யாணம் பண்ணிக்கதா ஊருக்கு வந்திருக்காருனு சொன்ன உடனே, சிவா அண்ணா அவர் கன்னத்தில இரண்டு அறவிட்டுட்டு எழுந்து போயிடுச்சி, நானும் அமைதியா வந்துட்ட. என நடந்ததை சுருக்கமாக கூறி கைகளை கட்டிக்கொண்டு ஒருகாலை மடக்கியும் மற்றொரு காலை நிலத்தில் ஊணியபடி பைக்கில் அமர்ந்தான்.
துருவன் தன்னுடைய ஜீப்பில் பூஜைக்கு சென்றுக்கொண்டிருந்த போது, சாலையின் ஓரம் இருந்த மரத்தடியில் விஷ்ணுவும் ருத்ராவும் நின்றுக்கொண்டிருந்ததை பார்த்து ஜீப்பை அவர்களுக்கு பின் நிறுத்திசென்று. அவர்களிடம் நடந்து சென்ற போது, ருத்ரா அமைதியாக நிலத்தை பார்த்தபடி இருக்க, விஷ்ணு கூறிய அனைத்தையும் கேட்டு அதிர்ந்து ருத்ராவிடம் சென்றான்.
என்ன ருத்ரா இது இவ சொல்லுரதெல்லாம் உண்மையா?என்றபடி ருத்ராவின் தோளில் கைவைத்தான்.
பிறந்ததிலிருந்தே ருத்ராவும் துருவனும் தோழமையுடன் அனைத்தையும் பகிர்ந்துக்கொள்ளும் மனபான்மையுடையவர்களாக இருந்ததால். ருத்ராவிற்கு முதல் தோழன் எப்பொழுதும் துருவன் தான். இப்படிபட்ட விஷயத்தை துருவனிடம் சொல்லாதது அவனுக்கு மேலும் கோபமூட்ட.
என்ன ருத்ரா நா கேட்டுக்கிட்டு இருக்க நீ அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? என ஆள்நடமாட்டம் இல்லா சாலை என்பதால் கோபமாக கத்தினான்.
அவன் கத்தியதில் அரண்ட ருத்ரா, பின் தன் கல்லூரியில் தனக்கும் ஆதவிற்கும் நடந்த அனைத்து விஷயங்களை கூறி அவன் மார்பில் சாய்ந்து அழுதாள்.
ருத்ராவின் தலையை வருடியபடி, சரி இப்பபவும் நீ அவன லவ் பண்ணுரியா?
அந்த தப்ப ஏன் செஞ்சேனு இப்பவரைக்கும் எனக்கு தோணிக்கிட்டு இருக்கு. என்றாள் சாய்ந்த படியே.
உன் லைப்ல(life) ஆதவ் இஸ் எ பாஸிங் கிளவுட்( is a possing cloud ) அந்த கிளவுட் போயிடுச்சி திரும்ப அதபத்தி நினைக்காத. அப்பறம் அந்த வேஸ்ட் ஆதவ்காக இன்னொரு முறை அழாத.
அவனுக்காக நா அழல, அவன் சொன்ன வார்த்தைக்காகதா அழற, அந்த அளவுக்கா நா கேவலமானவ துருவ்.
என ஏக்கமாக, முகத்தை தூக்கி துருவனின் முகத்தை பார்த்தாள்.
அவன் சொன்னா நீ அந்த மாதிரி ஆகிடுவியா என்ன? "கண்டவ பேசுறத காது கொடுத்து கேட்ககூடாது."
இத எனக்கு சொன்னவளே நீதா. நீயே இப்படி அழலாமா? என்றபடி அவள் தலையை வருடினான்.
அப்பொழுது விஷ்ணு மொபைல் ஒலிக்க அனைவரும் நிகழ்விற்கு வந்து பூஜை நடக்கும் இடத்திற்கு செல்ல தொடங்கினர்.
ருத்ரா துருவனின் மேல் சாய்ந்தபடி பேசிக்கொண்டிருந்ததை தன் காரின் ஜன்னல் வழியாக கண்ட ஆதவ்.
நரம்புகள் புடைக்க கோபத்துடனே வண்டியை விரைவாக பூஜை நடக்கும் இடத்திற்கு செலுத்தினான்..