ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நினைவெல்லாம் நீ(யே)யா? _ கதை திரி

Status
Not open for further replies.

Dhruv Aathavi

Active member
Wonderland writer
அத்யாயம்_18

காலையிலே மால் கட்டும் இடத்திற்கு சென்ற ருத்ராவும் சிவாவும் அங்கு எழுப்பப்படும் கட்டிடம் பற்றியும் பீம்கள் பொருத்தும் இடம் பற்றியும் பேசிக்கொண்டு குறிப்பெடுத்து அங்கிருந்த இன்சினியரிடம் கொடுத்தனர். அப்பொழுது அங்கு வந்த ஆதவ் ருத்ராவை பார்த்து கண்ணடித்துவிட்டு, சிவாவின் தோளை தட்டி தன் கண்ணகுழி சிரிப்பை உதிர்த்தான்.


என்னடா இவ்வளவு சீக்கிறமா இங்க வந்திருக்க என சிவா கேட்க.


வேல நடக்க வேண்டாமாடா என்றான் ருத்ராவை பார்த்தபடியே.


இங்க என்ன வேல நடக்குதுனு எனக்கு புரியுதுடா.. புரியுது. என சிவா ஒரு மார்க்கமான குறலில் சொல்ல.


ருத்ரா, அண்ணா எல்லா ஓகே இனி நீ மலேஷியா கிளம்புற வேலைய பாரு இங்க மத்த வேலைய நா பாத்துகிறேன். இன்னும் இரண்டு நாள்ள நீ கிளம்பனும்ல போய் உன்னுடைய பெட்டிய பேக் பண்ணு நா மத்த வேலைய முடிச்சிட்டு வரேன் என்று கூற சிவாவும் இருவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினான்.


ஆதவ் ருத்ராவின் அருகில் வந்து "ஆரா" என விளிக்க. அவளின் இதயம் படபடக்க கண்கள் சிவந்து ஒரு சொட்டுகண்ணீர் உடனே அவனை பார்த்தாள்.


அவன் ஆரா எனும் அவனுக்கே உரித்தான பெயரை அழைத்தஉடன் தங்களுடைய கல்லூரி வாழ்க்கை நினைவுவர கூடவே அவன் இவளை பற்றி கூறியதும் நினைவுவர படபடப்புடன் கண்ணீரும் எட்டி பார்த்தது ருத்ராவிற்கு.


அவள் கண்ணீரை கண்டவனுக்கு கல்லூரியில் அவளை இழிவாக பேசியபோதும் வராத கண்ணீரை இன்று ஆரா என்ற அழைப்பிற்கு வந்தை பார்த்தவனுக்கு மனம் சற்று பாரம் ஏற எதுவும் பேசாமல் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டான்.


அவனைஅவ்விடத்தை விட்டு சென்றதும் ஒரிரு நிமிடத்தில் தன்னை ஆழ்ந்த மூச்சுடன் சமன்படுத்திக்கொண்டவள். மற்ற வேலைகளை பற்றி இன்சினியரிடம் பேசியபடி மால் கட்டும் ஆரம்ப கட்ட வேலையை நோட்டமிட்டாள்.


எப்பொழுதும் துருதுருவென இருக்கும் தேன்மொழி இன்று அமைதியாக அமர்ந்திருப்பதை பார்த்த கயலுக்கு மனம் சற்று வலிக்க அவள் அருகில் சென்று. என்னமா காலேஜ் போகலயா என கேட்க


போகனும்மா கொஞ்சம் டயாடா இருக்க அதா உட்காஞ்சிட்டு இருக்கேன்.


மோர் குடிக்கிறியா


இல்லமா வேணா நா கிளம்புறேன். என்றபடி உள்ளே சென்றவள் தன்னை சுத்தபடுத்திக்கொண்டு கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள். அவள் வெளியே செல்லும்போது உள்ளே நுழைந்த துருவன் அவளை பார்த்து சிரிக்க அவளும் சிரித்தபடியே கடந்து சென்றாள்.


ஹாலுக்கு வந்த கயல் தேன்மொழியை தேட. என்னமா யார தேடுறிங்க என கேட்டபடி உள்ளே வந்தான் துருவ்


தேனதான்டா...


இப்பதா காலேஜூக்கு போனா ஏ நீங்க பாக்கலையா


என்னடா சொல்லுற காலேஜ் போயிட்டாளா.. என சோகமாக கேட்க


என்னமா என்ன ஆச்சி


நேத்தையில இருந்து சாப்பிடலடா, காலையிலயே டயாடா இருக்குனு சொன்னா. மோர் கொடுக்கிறனு சொன்னப்பவும் வேணானு சொல்லிட்டா அதா வருத்தமா இருக்கு.


விடு மா அவ ஒண்ணும் சின்ன பிள்ள இல்ல காலேஜ்பிரபசர் அவள அவளுக்கு பாத்துக்க தெரியும். என்றபடி வேலைக்கு செல்ல ஆயத்தமானான்.


கல்லூரியில் வண்டியை நிறுத்திய தேன்மொழியின் அருகே விஷ்ணுவும் வண்டியை நிறுத்த ஒருவரை ஒருவர் பார்க்காது அமைதியாக உள்ளே சென்றனர்.


அலுவலகஅறையில் கையெழுத்திட்ட தேன்மொழியை பார்த்த வேலையாளர்கள் என்ன மேடம் கல்யாணம் ஆகிடுச்சா என்று கேட்க அமைதியாகவே ஆமா என்றபடி தலையாட்டிவிட்டு சென்றாள். உடனே வேலையாட்கள் எப்படி உடனே கல்யாணம் என்றபடி குழம்பி நிற்க. விஷ்ணு அமைதியாக கையெழுத்திட்டு சென்றுவிட்டான்.


ஸ்டாப் ரூமில் நுழைந்த தேன்மொழியை பார்த்த அனைவரும் அதிர்ந்து எப்ப கல்யாணம் ஆச்சி என கேட்க. அவளும் நேற்று என்றாள்.


பைய என்ன பண்ணுறா, எப்படி தீடிரென்று ,பெயர் என்ன , என பல கேள்விகள் அவளை வட்டமடிக்க.


தேன்மொழிக்கு அவன் பெயரை சொல்லவும் விருப்பம் இல்லை. கணவன் என்று ஏதோ ஒரு பேரையும் சொல்ல மனம் இல்லாமல் "விணு" என்று மட்டும் சொல்லிவிட்டு பையை டேபிலின் மேல் வைத்துவிட்டு வெளியே சென்றாள்.


அந்த குறைந்த நேரத்தில் தேன்மொழியின் திருமணவிஷயம் கல்லூரிக்கு பிரேக்கிங் நியுஸாக பரவியது.


அனைத்து ஆசிரியரும் வகுப்பிற்கு செல்ல, ஸ்டாப் ரூமில் HODயும் விஷ்ணு மட்டுமே இருந்தனர். அப்பொழுது உள்ளே வந்தாள் ஸ்வாதி.


ஸ்வாதி தேன்மொழியின் உயிர் தோழி. தன் அண்ணன் திருமணத்திற்கு விடுப்பிற்கு சென்ற கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியை இவர் விடுப்பில் செல்லவே இவருக்கு பதிலாக வேலைக்கு வந்தான் விஷ்ணு.


HODயிடம் பேசிய ஸ்வாதி தன்னுடைய பணியை உறுதிசெய்துக்கொண்டார். HOD அவ்விடத்தைவிட்டு சென்றவுடன் விஷ்ணுவிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில் ஸ்டாப்ரூமை நோக்கி ஓடிவந்த மாணவி, மேம்.. தேன்மொழி மேம் மயங்கிட்டாங்க என கூற. விஷ்ணுவும் ஸ்வாதியும் ஒருரவரை ஒருவர் பார்த்துக்கொண்டு வகுப்பறையை நோக்கி ஓடினர்.


நேற்றையிலிருந்து சாப்பிடாததால் சோர்வாக இருந்த தேன்மொழிக்கு பாடம் எடுக்கும் போது மயக்கம் தள்ள அதை பொருட்படுத்தாமல் மேலும் பாடம் எடுத்துக்கொண்டிருக்க. இதற்குமேல் ஒத்துழைக்க முடியாது என மூளை கட்டளையிட உடலின் அனைத்து பகுதிகளும் செயல்இழந்து அவளை கீழே தள்ளியது.


ஓடிவந்த ஸ்வாதி அவளை தன் மடிமேல் வைத்து கன்னம் தட்ட. விஷ்ணு தண்ணீரை முகத்தில் அடித்தான்.


தண்ணீர் முகத்தில் பட்டதும் கண்ணளை திறந்து சோர்வுடனே சுற்றி பார்த்தாள்.


ஸ்வாதி தேன்மொழியை தூக்கிநிற்க செய்ய. அவளும் அப்படியே ஸ்வாதியுடன் நடந்து சென்றாள்.


விஷ்ணு மாணவர்களுக்கு வேலை கொடுத்துவிட்டு, லமன் ஜூசுடன் ஸ்டாப் ரூமை நோக்கி செல்ல.


ஸ்வாதியின் தோள் மேல் சாய்ந்தபடி தேன்மொழி கண்களை மூடி இருக்க. உள்ளே நுழைந்த விஷ்ணு ஸ்வாதியிடம் ஜூசை கொடுத்து குடிக்க சொல்லுங்க என கூற.


அவன் குரலில் கண்விழித்த தேன்மொழி விஷ்ணுவை பார்த்து முரைத்த வண்ணம் வேண்டாம் என கோபத்தில் கூறினாள்.


ஏய் என்ன வேண்டாம், முதல்ல குடி . மயங்கி விழற அளவுக்கு என்ன உனக்கு காலையில சாப்பிட்டியா இல்லையா என பதில் கூறவிடாமல் ஸ்வாதி கேள்வியாய் அடுக்க. சோர்வாக இருந்த தேன்மொழி அவள் மீதே சாய்ந்துக்கொள்ள.


அவளின் நிலையைப்பார்த்த விஷ்ணுவிற்கு குற்றஉணர்ச்சி மேலிட, ஸ்வாதியை பார்த்து அவங்க நேற்றையிலிருந்து சாப்பிடல கொஞ்சம் சாப்பிட வையுங்க என சொல்லகவிட்டு வெளியே சென்றுவிட்டான்.


விஷ்ணுவையும் தேன்மொழியையும் மாறிமாறி புரியாதபார்வை பார்த்துவிட்டு, ஏய் இத குடி என ஜுஸை வாயின் அருகே எடுத்துசெல்ல.


பிளிஸ் வேண்டாம் டி.


ஏன் வேண்டா குடி என அதட்ட.


எனக்கு அந்த ஜுஸ் வேண்டாம்.


எதுக்கு வேண்டாம்? என குழம்பியவளாக கேட்க.


அவங்க வாங்கிகொடுத்தத நா குடிக்க மாட்ட,என எங்கோ பார்த்தபடி கூற.


அவங்க வாங்கி கொடுத்தா குடிக்கமாட்டியா என புரியாமல் விழித்தபடி ஏன் டி என்ன ஆச்சி உன்னோட பிகேவியரோ சரியில்ல. என்ன பிராபளம் சொல்லு என கேட்க.


தனக்கு விஷ்ணுவிற்கும் நடந்த பிரச்சணையையும் அதனால் ஏற்பட்ட திருமணத்தையும் பற்றி தேன்மொழி கூறியதை கேட்ட ஸ்வேதா கோபமாக அவள் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவள்.


அறிவிருக்காடி உனக்கு . அவங்க எத்தன பொண்ணு பின்னாடி சுத்தினத நீ பாத்த, இல்ல அவங்க யார் பின்னாடி சுத்தினா உனக்கு என்ன? அதுக்காக அந்த வார்த்த கேட்கலாமா. உன்ன அந்த மாதிரி கேட்டா நீ சும்மா இருப்பியா. வார்த்தைய விடபொழுது பாத்துவிடனும் நாக்குக்கு நரம்பில்லனு இஷ்டத்துக்கும் பேசக்கூடாது. என்ன பொருத்தவரைக்கும் நீ பண்ணதுதா தப்பு என பேசிக்கொண்டே போக. தேன்மொழி தலைகுனிந்து அமர்ந்திருப்பதை பார்த்தவளுக்கு மனம் வலிக்க சரி நடந்தது நடந்திடுச்சி அதபத்தி அப்பறமா பேசிகலாம். முதல்ல இதகுடி என ஜுஸை மீண்டும் நீட்ட.


தேன்மொழி நிமிராமல் தரையை வெறித்தபடி பார்த்துக்கொண்டே இருக்க.ஸ்வேதாவோ இங்க பாரு நீ எப்பவும் சொல்லுறதயே இப்ப நானும் சொல்லுறேன், இந்த ஜுஸ்கூட இப்ப பசிக்கு இல்லாம பலர் இருக்கும்பொழுது கிடைக்கிறத வீணாக்காம சாப்பிட பழகனும்னு யாரோ சொன்னதா ஞாபகம் என தேனை பார்த்தபடி சொல்ல.


கண்களை மூடி திறந்தவள். சரி குடிக்கிறேன் ஆனா இதுக்கான காசு முதல்ல அவங்ககிட்ட கொடு அப்புறம் குடிக்கிறேன் என பிடிவாதம் பிடிக்க. வேறுவழியின்றி வெளியே வந்து விஷ்ணுவை தேட அவன் எங்கும் இல்லாததால் ஸ்வேதா ஏய், அவங்க எங்கனு எனக்கு தெரியல நீ முதல்ல குடி நா அவங்களுக்கு காசு கொடுத்திடுறேன் என குழைந்து கூற.


நீ கொடுத்திட்டு வா நா குடிக்கிறேன் என பிடிவாதமாக கூறியபடி மேசையின் மீது கவிழ்ந்தாள்.


பிடிவாதகாரி என சொல்லியபடி வேறுவழியின்றி விஷ்ணுவை தேடிசெல்ல, எதிரே தன்னை நோக்கிவரும் விஷ்ணுவை கண்ட ஸ்வேதா. சார் என அழைக்க. விஷ்ணுவோ மேம் என கூறவும் சரியாக இருக்க ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடி சொல்லுங்க என்றான்.


கையில் வைத்திருந்த காசை அவனிடம் நீட்ட. எதற்கு என புரியாத பார்வையை வீசினான் அவன்.


ஜுஸூக்கான காசு இத நீங்க வாங்கினாதா அவ அத குடிப்பணு பிடிவாதம் பிடிக்கிறா அதா என தயங்கியபடி கூற.


உணர்வற்ற சிரிப்பை சிந்திய விஷ்ணு ஸ்வேதாவை நோக்கி அத அவ சொல்லலனாதா அதிசயம். இதையாவது உங்ககிட்ட சொல்லியிருக்காளே.


இரண்டு நாளா யார்கிட்டயும் பேசாமா சாப்பிடாம இருக்கா உங்கிட்யாவது பேசியிருக்காளே இதுவே ரொம்ப சந்தோஷம். நா காசு வாங்கிடனு அவங்க கிட்ட சொல்லிடுங்க.அப்பறம் உங்கள பாக்கதா வந்தேன் நீங்களே எதிரே வந்திட்டிங்க இன்னக்கு அவங்களோட கிளாஸ் எல்லாம் நம்ம ரொண்டு போரும் எடுத்துக்கலாம் அவங்க ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க நான் சொன்னனு சொல்லாதிங்க சொன்னிங்கனா வீம்புக்காகவே உடம்பகூட பாக்காம கிளாஸ் எடுப்பாங்க. நா HOD கிட்ட பேசிட்ட வீட்டுக்கு போகனும்னு சொன்னாலும் நீங்க கூடபோய் விட்டுட்டு வாங்க. மதியம் அவங்க சாப்பாடு எடுத்திட்டு வரல நீங்க கொஞ்ச சாப்பிடவையுங்க என கட்டளைகளை மிரட்டாமல் நிதானமாக சொன்ன தன்மை ஸ்வேதாவிற்கு மிகவும் பிடித்துவிட இவர போய் எப்படி தப்பா பேசி இவளுக்கு தோணுச்சோ என எண்ணியபடி சரி என்னும் தலையசைப்புடன் காசை நீட்ட.


விஷ்ணு அதை பார்த்து சிரித்தபடி சென்றுவிட்டான்.


ஸ்வேதா மதியம் எவ்வளவு சொல்லியும் தேன் சாப்பிடாமல் இருக்க ஏதும் சொய்யமுடியாமல் விஷ்ணுவை பாவமாக பார்த்தால். அவளுடைய வகுப்புகளை இருவரும் எடுத்துக்கொள்ள மாலை ஸ்வேதாவே அவளை வீட்டில் விட்டு கயலிடம் பேசிவிட்டு கல்லூரி நிகழ்வையும் கூறிவிட்டே சென்றாள்


நீ(யே)யா....?
 

Dhruv Aathavi

Active member
Wonderland writer
அத்யாயம்_19

மாலை வீட்டிற்கு வந்த தேன்மொழி உடைக்கூட மாற்றாமல் கட்டிலில் சரிந்து தூங்க ஸ்வேதாவிடம் பேசிவிட்டு உள்ளே நுழைந்த கயல் அவள் தூங்குவதை பார்த்துவிட்டு தன் அன்னை வீட்டிற்கு சென்றுவிட்டார்.


கயல் வருவதை பார்த்த உமையாள். வா கயலு இப்பதா உன்ன இன்னும் காணலனு கவிதா சொன்னா உடனே வந்துட்ட என்றபடி ஏலம் சுக்கு மணம்வீசும் காபியை கொடுக்க.


வேண்டா மதனி என்றார் வருத்தமாக.


ஏன் என்ன ஆச்சி உங்களுக்கு பிடிகுமேனு கருப்பட்டி எல்லாபோட்டு செய்தேன் என சங்கரி கூற.


இல்ல மதனி தேனு நேத்தையில இருந்து சாப்பிடல காலேஜூல மயங்கிட்டாலா அவ பிரண்டு வந்து சொல்லி விட்டுட்டு போனா அதா மனசு ஒரு மாதிரி இருக்கு.


இப்ப என்ன பண்ணுறா என உமையாள் கேட்க


துங்குறா மதனி


சரி நீ இத குடி அவள சாப்பிட வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு என கவிதா அவர் கையில் காபியை திணிக்க.
பொண்கள் அனைவரும் சேர்ந்து இரவு உணவை தயாரிக்க தொடங்கினர்.


ருத்ரா தன் தந்தையர்களுடன் அமர்ந்து மில் கணக்கு பார்த்துக்கொண்டிருக்க, அன்னையர்களோ சிவா மலேசியா கிளம்புவதற்கான உதவிகளை செய்ய.


ஹாலில் உள்ள சோபாவில் டிவிக்கு சண்டை பிடித்துக்கொண்டிருந்த விஷ்ணு ஹரிணியை பார்த்தபடி சமையல் அறையினுள் நுழைந்தான் துருவன்.


அத்தை செமயா பசிகுது என்றபடி, அம்மா அப்பா எங்க காணும் என சமையல் திண்ணையின் மீது அமர்ந்தான்.


அப்பாவும் பெரியமாமாவும் மில்விஷயமா தஞ்சாவூர் போயிருக்காங்க, ஆமா காலையில லேட்டாகும்னு சொன்ன சீக்கிறமே வந்திட்ட என கயல் கேட்க.


வேல சீக்கிறம் முடிஞ்சிடுச்சி அதா. சரி நா வெளிய இருக்கேன் என்றபடி ஹாலுக்கு சென்று விஷ்ணு அருகில் அமர்ந்தவன், ஹரிணியை பாந்த்தபடி என்னடா மச்சான் இங்க சண்ட என கேட்க.


நா மேட்ச் வைக்க சொல்லுறேன், இவளுக்கு பாட்டு வேணுமா அதா என விஷ்ணு ரிமோட்டை பிடிங்க முயற்ச்சித்தபடி கூற.


மச்சா இன்னைக்கு பாட்டு கேட்களாம், நாளைக்கு பேப்பர்ல மேட்ச் ஸ்கோர் பாத்துகலாம் விடுடா என கூற.


துருவனை விஷ்ணு இடபுறம் தலைசாய்த்து புருவம் உயர்த்து ஒரு மார்கமாக பார்த்தவன் அது சரி என்றபடி. நீ பாட்டையே வைமா என கையை எடுத்துக்கொண்டான்.


ஹரிணி மகிழ்ச்சியுடன் பாட்டு சேனலை வைக்க முதல் பாடலாக ஒலித்தது


"ஒண்றா இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா...."


பாடலை கேட்ட துருவன் மச்சா செம பாட்டுடா என குதுகலமாக கூற.ஹரிணி சங்கடமாக வேறு சேனலை மாற்றினாள்.அதில்


"மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்" என டிவியில் ஒலிக்க துருவனோ "உன்னை பார்த்துக்கொண்டு நின்றாளே போதும் என்றே தோண்றும்" என துருவன் கோரஸ் பாட கடுப்பான ஹரிணி சேனல் மாற்ற அதில்..


"இணையே என் உயிர் துணையேஉன் இனிமையிலே நான் கரைவது ஏனடா யுகமாய் கை விரல் பிடித்து நாம் நடப்பது போல்நான் உணர்வது ஏனடா இணையே" என பாட அதிர்ந்த ஹரிணி நமக்கு நேரமே சரியில்ல என்று முனுமுனுதுதபடி ரிமோட்டை விஷ்ணுவிடம் கொடுத்துவிட்டு ஓடிவிட்டாள்.


விஷ்ணு துருவனை பார்த்து டேய் நா அவளுக்கு அண்ணண்டா பாத்து பாடு கோரஸ் கேட்க நாராசமா இருக்கு என்றபடி ஸ்கோரை பார்க்க.


மச்சா அவள இங்கிருந்து ஓடவிடதான்டா பாடின அப்பதானே நம்ப மேடச் பார்க்க முடியும். அதா, நீ ஒன்னும் தப்பா எடுத்துகாத என்றபடி தோள் மேல் கைப்போட,


அது அவள ஓடவிடப் பாடினா மாதிரி தெரியல, என்ன ஓட வைக்க பாடினாமாதிரி தெரிஞ்சது என திரும்பி புருவம் உயர்த்தி பார்க்க.


ஹிஹிஹிஇஇஇ... தெரிஞ்சிடுச்சா என அசடு வழிய


போதும்டா வழிஞ்சது எல்லாரையும் நீந்தவிட்டுடாத, மேட்ச பாரு என தோள்களை தட்டி ஆட்டத்தை பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர்.


இரவு உணவிற்கு அனைவரும் அமர விருதாசலமோ கயலு தேனு எங்க என கேட்க.


அப்பா அவ வீட்ல இருக்கா


எங்க என்னதா பண்ணுறா சாப்பிட அழைச்சிட்டுவா என கூற கயல் கவிதாவை பார்த்த பார்வை நீங்க போங்க என்றபடி இருக்க அதை அறிந்த விஷ்ணு அம்மா போனா அவ சாப்பிட வர மாட்டா அவள சாப்பிடவைக்க நம்பதா ஏதாவது செய்யனும் என எண்ணியபடி, அத்தை நா மொழிய அழைச்சிட்டு வர என்றபடி சென்றுவிட்டான்.


கல்லூரியிலிருந்து வந்து உடை கூடமாற்றாமல் தூங்கி எழுந்த ஊதிய முகமும் உதட்டில் பேனாவை கடித்தபடி கண்கள் இரண்டும் புத்தகத்தை அலச இடது கை நகத்தை குறிப்பேட்டில் தாளம் தட்டியபடி அமர்ந்திருந்த மொழியை பார்த்த விஷ்ணு அவளை ரசிக்க தவரவில்லை அந்த சிறு நேரத்தில் அதை அவள் அறியும் முன் தன் தொண்டையை க்கும்..க்கும்..க்குகும் என அழைக்க.


நிமிர்ந்து விஷ்ணுவை பார்த்தவள் மீண்டும் தன் வேலையை தொடங்க


ஹலோ மேடம் உங்களதா என குரல் உயர்த்தி கூற.


என்ன என்றபடி புருவம் உயர்த்தி கேட்டாள்.


சாப்பிடலையா


எனக்கு வேண்டாம்.


ஏன் நாளைக்கும் காலேஜ்ல சீன் கிரியேட் பண்ணவா என நக்கலாக கேட்க.


சீன் கிரியேட்டர் யாருனு அவங்க அவங்களுக்கு தெரியும் என விஷ்ணுவை பார்க்க.


சரி, நானே சீன் கிரியேட்டரா இருக்க. ஏன் நீ இன்னும் சாப்பிடல? ஓ..ஓஓ.. பந்தில என்னோட சாப்பிடலனு வருத்தமா அதா இன்னும் சாப்பிடாம இருக்கியா வா இப்ப ஒன்னா சாப்பிடலாம் என அழைக்க.


அய்யடா ஆசைய பாரு, உன்கூட நா பந்தில ஹஹா..., என சிரித்தபடி வேற ஆள் இருந்தா பாரு இவருக்காக நம்ப சாப்பிடாம இருக்கோமா என குரலில் சற்று நக்கலை ஏற்றிகூற.


அப்ப சாப்பிட வேண்டியது தானே ஏன் நேற்றிலிருந்து சாப்பிடல என கையை மார்பிற்கு குறுக்கே கட்டியபடி கேட்க.


ஆமா சாப்பிட்டு இருக்கலாமே ஏன் நம்ப சாப்பிடல, இவன் பண்ண தப்புக்கு இவனே சாப்பிட்டு சந்தோஷமா இருக்கும்போது, நம்ப ஏன் சாப்பிடாம இருக்கனும் எதுக்கு மயங்கி விழனும் என எண்ணியபடி தேன்மொழி,


வயித்துல ரொம்ப ஆசிட் ஃபாம் ஆயிடுச்சி(அமிலம் சுரத்தல்) சாப்பிட்டா வாமிட் வரும் அதா சாப்பிடல, உனக்காக எல்லா இங்க யாரு சாப்பிடாம காத்திருக்கல என்றபடி நாற்காலியிலிருந்து எழுந்து நின்றாள்.


அப்ப போய் சாப்பிடு ஏன் இங்க இருக்க


சாப்பிடதா போறேன் வேணும்னா நீயும் வந்து பாரு என்றபடி பேனாவை மேசையின் மீது வைத்துவிட்டு முன்னே செல்ல, அப்படி வா வழிக்கு என சிரித்தபடி பின்னே சென்றான் விஷ்ணு.


இருவரும் ஒன்றாக உள்ளே வருவதை பார்த்தவர்கள் தங்களுக்குள் சிரித்துக்கொள்ள, தேன்மொழியோ அத்தை பசிக்குது என்ன சாப்பாடு போடாம அங்க சிரிப்பு என கேட்க.


கவிதாவோ இதோ போடுறேன்டா என தட்டில் சாப்பாடு இட அனைவரும் அமைதியாக சாப்பிட்டு எழுந்தனர்.


மீனாட்சி விருதாசலத்திடம் பிள்ளைங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி குலதெய்வம் கோவில் பொங்கல் வைக்கனும் தீடிர்னு கல்யாணம் நடந்திடுச்சி சிவாவும் ஊருக்கு போறான் அதால நாளைக்கு கோவில்ல பொங்கல் வைச்சிடலாமுங்க,
நீங்க ருத்ரா வீட்டுக்கும் சொல்லிடுங்க வேலாயுதத்தை காலையில வீட்டுக்கு வந்திட சொல்லுங்க என சொல்லிவிட்டு,
மருகள்களை பார்த்து வாங்க நம்ம தேவையானதை எடுத்து வைக்கலாம் என அழைக்க அனைவரும் சென்றனர்.


துருவன் மாடியில் மதில் மேல் சாய்ந்தபடி காதில் இயர்போன் வழியாக பாடல் கேட்டுக்கொண்டிருக்க அங்கு வந்த விஷ்ணு என்ன பாட்டு என்றபடி ஒன்றை எடுத்து காதில் வைக்க அதில்


தென்றல் என்னை தீண்டினால் சேலைதீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்..
என ஒலிக்க விஷ்ணுவோ மச்சா உன் நினைப்பே சரியில்ல பாத்து அவ கொஞ்சம் டேஞ்சர். ஸ்கூல் படிக்கும் போதே ஊக்கால குத்தினவ மறந்திட்டியா இப்ப டாக்டர் வேற எம்டி ஊசி போட்டுட போறா பாத்து வால கொஞ்சம் சுருட்டிவை என அட்வைஸ் கொடுக்க.


அது சரி எல்லாரும் உன்ன மாதிரி இருக்க முடியுமா யாரு சொல்லியும் கேட்காதவ என்னதா பேசினனு தெரியல உன் பொண்டாட்டி உன் பின்னாடியே சாப்பிட வந்திட்டா. ஆனா, உன் தங்கச்சி பாட்டு பாக்குறேனு என்ன இப்படி பொலம்ப விட்டுட்டா என நொடிந்துக்கொள்ள.


போடா மயங்கிட்டாலேனு ஜூஸ் கொடுத்தா காசு வாங்கினாதா குடிப்பேனு குடிக்கவே இல்ல, இதுல கூப்பிட்ட உடனே பின்னாடி வந்திட்டாளா அவ வந்ததுக்கு பின்னாடி பெரிய பாரத கதையே இருக்கு நீ வேற என அலுத்துக்கொள்ள.


மச்சி நீ தேன பழிவாங்க கல்யாணம் பண்ணியிருத்தா அந்த எண்ணத்த மாத்திக்கடா அவ பேசினதுக்கு நா மன்னிப்பு கேட்டுகிறேன் என குரல் தாழ்த்து சொல்ல.


டேய் என அதிர்ந்து கத்திவிட்டான் விஷ்ணு. எதுக்குடா மன்னிப்பு வாய ஒடச்சிடுவ சொல்லிட்ட, உன்கிட்ட சொல்லியிருக்கனும் இப்ப சொல்லுறேன் நான் லவ் பண்ணது உன் தங்கச்சி மொழியதா என கூற அதிர்ந்த துருவன்.


டேய் உண்மையாவா, உன் கூடவே தானடா இருந்த எப்போ எப்படி சொல்லவே இல்ல என கேள்விகளை அடுக்க.


நா லவ் பண்ணத உன் தங்கச்சிகிட்டையே சொல்லல அப்புறம் எப்படி உன்கிட்ட சொல்லுறது.


அப்ப ஆசபட்டுதா கல்யாணம் பண்ண அப்படிதானே, பழிக்காக இல்லையே அப்பாடா இப்ப தான்டா நிம்மதியா இருக்கு என கையை மார்பில் வைத்து தேய்க்க.


ஆசபட்டது உண்மைதா, அவகிட்ட காதல சொல்லி அவ அதுக்கு ஓகே சொல்லி, வீட்ல எல்லார் ஆசிர்வாதத்தோட கல்யாணம்பண்ணி பல கனவுகளோட சந்தோஷமா வாழனும்னு ஆசப்பட்டேன் ஆனா உன் தங்கச்சி வாய் இருக்குபாரு எல்லாத்தையும் தலகீழாக்கிடுச்சி


என் தங்கச்சிகூட வாழுவதானே என சந்தேகமாக துருவன் கேட்க.


கல்யாணம்தான் எதிர்பாக்காம நடந்திடுச்சி வாழ்க்கையலாவது அவ ஆசை பட்டாமாதிரி வாழட்டும். அவ என்னோட இருக்கான ஓகே, இல்லனா அவங்க அவங்க வழிய பாத்து போக வேண்டியதுதான்.


வா காலையில கோவில் போகனும் இப்ப படுத்தாதான் எழும்ப முடியும் போகலாம் என படி இறங்கிவிட்டான்.


துருவன் அவன் செல்லும் வழியை பார்த்தபடி நின்றிருந்தான்.


நீ(யே)யா....?
 

Dhruv Aathavi

Active member
Wonderland writer
அத்யாயம்_20

இரவு விருதாசலம் வேலாயுதத்திற்கு அழைத்து காலை கோவிலுக்கு செல்லவேண்டும் வீட்டிற்கு வரும்படி கூற, அவரும் சரி என்றபடி அழைப்பை துன்டித்தார்.


இரவு உணவு வேலையில் தந்தைக்கும் மகனுக்கும் சாந்தி உணவு பரிமாறிக்கொண்டிருக்க,


வேலாயுதம் ஆதவ் நாளைக்கு எதாவது வேலை இருந்தா நேரம் மாத்திவச்சிடு. சாந்தி நம்ப காலையில சீக்கிரம் கிளம்பனும் ஏற்பாடு பண்ணிடு என உண்டபடி கூற.


எங்க போகிறோம் பா என ஆதவ் நிமிர்ந்து அவரை பார்த்து கேட்டான்.


பரஞ்ஜோதி வீட்ல இருந்து அப்பா போன் பண்ணி காலையில குலதெய்வ கோவிலுக்கு போகனும்னு சொன்னார்.
கல்யாண சடங்கு செய்யனுமா, அதனால காலையில சீக்கிரம் அவங்க வீட்டுக்கு போகனும் ரெடியா இருங்க என கூறிவிட்டு போன் அடிக்க அழைப்பை ஏற்றபடி சென்றுவிட்டார்.


ஆதவ் தட்டை கைகளால் அலைத்தபடி கண்கள் விரிப்புடன் முகம் முழுவதும் புன்னகை பூரிக்க அமர்ந்திருந்தவனை பார்த்த சாந்தி முகத்தில் ஆச்சரியம் தெள்ள தெளிவாக தெரிந்தது.


அன்று மருத்துவமனையில் அவன் கூறிய ஒவ்வொரு ஆராவின் உச்சரிப்பும், அதன் பின் தன் தவறை உணர்ந்தவனையும் எண்ணிய தாயுக்கு, மூன்று வருடத்திற்கு முன்னாள் இருந்த ஆதவை, இன்று கண்டவருக்கு மனம் பூரிக்க, தன் தோள் மேல் கைவைத்த அன்னையை பார்த்தவன்.


உன் ஆரா நாளைக்கு உன்கூடதா இருக்க போகிறாள். நீ பண்ண தப்ப ஒரு நாள் மன்னிச்சி கண்டிபா உன்ன ஏத்துக்குவா, கவலை படாம உன் காதல அவளுக்கு புரிய வை. இப்ப போய் தூங்கு அப்பதா நாளைக்கு முகம் பளிச்சின்னு இருக்கும் என தாடையை பற்றி ஆட்டியபடி சிரிக்க.


அவனும் சிரித்தபடி தலையை மேலும் கீழும் ஆட்டிவிட்டு சென்றுவிட்டான்.


கருங்கல் பொழுதில் சூரியனே துயில் கொண்டிருக்கும் வேலையில் வாசலில் சங்கரி கோலம் போட்டுக்கொண்டிருக்க, பூஜைக்கு பூக்களை எடுத்து சென்ற கவிதாவோ என்ன அக்கா இன்னுமா ஹரிணி வரல அப்பவோ எழுப்பிட்டேனே என்றபடி உள்ளே செல்ல. சங்கரி வேண்டாம் கவிதா அவ கொஞ்சம் நாழி தூங்கட்டும் விடு என அவன் கூறியது காதில் விழும் முன் அங்கு ஹரிணிக்கு அர்ச்சனை நடந்துக்கொண்டிருந்தது.


ஏய், எழும்புடி இன்னும் என்ன உனக்கு தூக்கம் எப்போ எழுப்பிட விட்டேன். போய் கோலம் போடு அக்கா தனியா கோலம் போடுறாங்க போய் என விரட்ட, அம்மா என்ற சினுங்கலுடன் முகம் மட்டும் தெரியும்படி தலை முதல் பாதம் வரை போர்வையால் மூடியபடி திண்ணையில் வந்து அமர்ந்தாள்.


அப்பொழுது அங்கு வந்த வண்டியின் சத்தத்தில் இருவரும் நிமிர்ந்து பார்க்க, வண்டியை நிறுத்தியபடி இறங்கினான் ஆதவ்.


குட் மார்னிங் அத்தை, மார்னிங் ஹரிணி என்று கூறிய ஆதவை பார்த்தவர்கள் குழம்பியபடி விழிக்க.


என்ன மாமா வீட்ல தூங்கனிங்களா? இவ்வளவு காலையில வந்துட்டிங்க என ஹரிணி சந்தேகமாக கேட்க.


அதன் பொருளை அறிந்த ஆதவ் சிரித்தபடி. மார்கழி மாசம் காலையில சீக்கிரம் எழுந்தா சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும் அது உடல்ல நமக்கு ஏற்படுகின்ற பல நோயை கட்டுபடுத்தும் அதா சீக்கிறம் எழும்பிட்ட, நீ என்ன கோலம் போடாமா உட்காந்தே தூங்கிட்டு இருக்க என கேட்க.


ஐயோ, சத்தமா பேசாதிங்க அம்மாக்கு கேட்டுச்சி நா அவ்வளவு தா. ஆமா மாமா, நீங்க இன்சினியர் தானே அப்பறம் என் டாக்டர் மாதிரி பேசுறிச்க என கேட்க.


ஒரு டாக்டருக்கு தெரியலனா இன்சினியர் சொல்லுறது ஒன்னும் தப்பில்லையே என்றவன். சங்கரியின் அருகே இருந்த கலர் பவுடரை எடுத்து கோலத்தில் போட தொடங்க.


மாப்ள, என அதிர்ந்து கூறியவர். கொடுங்க என பிடுங்க.


அத்த கொடுங்க நா போடுறேன். அம்மா தனியா போடும் பொழுது நான்தா ஹெல்ப் பண்ணுவேன் விடுங்க என பிடுங்க.


மாப்பள புரிஞ்சிக்கங்க, இங்க எல்லா நீங்க போடகூடாது என எவ்வளவு கூறியும் கேட்காமல் கோலத்திற்கு வண்ணம் அடிக்க. அவர்களுடன் ஹரிணியும் இணைந்துக்கொண்டாள்.


கோலம் முடிய அதில் இருந்த சாணத்தில் ஹரிணி பூவை வைக்க போக, சங்கரி பூ வைக்காத மா. வீட்ல கல்யாணம் பண்ண பொண்ணு இருந்தாதா பூவைக்கனும் என கூறிவிட்டு செல்ல.


பூ வைக்கறதுல கூடாவா விஷயம் இருக்கு, தமிழன் எப்படி எல்லா சொல்லி வைத்திருக்கா பாருங்களே என ஆதவுடன் கதையளந்துக் கொண்டிருந்தவளை தேடி வந்த ருத்ரா அங்க கருப்பு சட்டையில் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவனை பார்த்தவளுக்கு,


தன் பழைய கல்லூரி நினைவுகள் வட்டம் அடித்தது. எனக்கு பிளாக் கலர்னா ரொம்ப பிடிக்கும், உனக்கு பிளாக் கலர் செமயா இருக்கும். ஒரு நாள் எனக்காக பிளாக் ஷர்ட் போட்டுட்டுவா என அவள் கூறியது நினைவு வர. பல முறை மூளை எச்சரித்தும் மனம் சற்றும் கேளாமல் அவனை ரசித்துக்கொண்டிருந்தது.


தன்னை யாரோ பார்க்கும் உணர்வு தோன்ற திரும்பிய ஆதவ். அவள் தன்னை பார்ப்பதை பார்த்து மகிழ்ந்து சிரித்தான்.


அவள் சட்டென்று தன்னை சமன்படுத்திக்கொண்டு, ஹரிணி அம்மா கூப்பிட்டாங்க போய் குளி என கூற.


அக்கா குளுர்து அம்மா எங்க இருக்காங்க என கேட்டுவிட்டு சென்றுவிட்டாள்.


ஆரா , எப்படி இருக்கு என தன் சட்டையை சமன்படுத்தியபடி அவள் முன் நின்று கேட்க.


அவனை மேல் இருந்து கீழ் பார்த்தவள் ஹோட்டல் சர்வர் மாதிரி இருக்கு பிளாக் ஷர்ட். என பிளாக் ஷர்டில் ஒரு அழுத்தம் கொடுத்தபடி உள்ளே சென்று விட்டாள்.


காலையில் சாமான்களை வேலுவுடன் வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தனர் சிவாவும் ஆதவும்.


துருவன் டிரைவரிடம் வழியை கூறிக்கொண்டிருக்க. விஷ்ணு பூக்கார் அம்மாவிடம் இருந்து பூ வாங்கிக்கொண்டு உள்ளே சென்றான்.


அனைவரும் வேகமாக கிளம்பி வண்டியில் ஏற. சாந்தி ஆதவை பார்த்து தம்பி சட்டைய மாத்திக்க என்றபடி துணியை கையில் கொடுக்க, ஆண்கள் நால்வரும் பட்டு வேட்டி சட்டைக்கு மாறி இருந்தனர்.


பெண்கள் மூவரும் ஆரஞ்சும் சிவப்பும் கலந்த பச்சை வண்ண பார்டரில் ஆரணி பட்டை அணிந்து வெளியே வர அனைவரும் சற்று ஆடித்தான் போயினர்.


மீனாட்சி மூவருக்கும் கைகளால் திருஷ்டி முறிக்க, ஒவ்வொருவராக வண்டியில் ஏறினர்.


ஹரிணி தாத்தாவின் அருகே அமர்ந்து வாய்யடித்துக்கொண்டிருக்க, விஷ்ணு அவளுக்கு அருகே இருந்த இருக்கையில் அன்னையர்களுடன் அமர்ந்து அவளை வம்பிழுத்துக் கொண்டிருக்க. ருத்ராவும் தேனும் ஒரே இருக்கையில் அமர்ந்து பேசியபடி வந்தனர்.


ஆதவ் சிவாவை நோக்கி, மச்சா உன் தங்கச்சிக்கு ரொம்ப கொழுப்புடா, இங்க நா இருக்க, அவ தேனுகூட பேசிட்டு வரா என குற்றம் வாசிக்க.


அடேய் நீ பண்ண வேலைக்கு அவ உன்ன சும்மா விட்டதே அதிசயம் அமைதியா இரு என கூற . அவர்களுக்கு முன் இருக்கையில் இருந்த துருவன் இவங்க குடும்பமே அப்படிதா ஆதவ்.அங்க பாருங்க நா இங்க தனியா புலம்பிட்டு வர இவன் தங்கச்சி வயசானவங்க கூட வாயடிசிக்கிட்டு வரா என நொந்தபடி கூற.


மாப்ள நீயும் இந்த குடும்பம் தான் மறந்திடாத என்று. பின்னால் இருந்த சமையல் பொருளில் ஒன்றிரண்டை எடுத்தவன் இப்ப அவள இங்க வர வைக்கனும் அவ்வளவு தானே என்றவன். எழுந்து இருக்கை மாறி அமர்ந்தவன்.


வண்டியில் அனைவரும் சுவாரசியமாக பேசிக்கொண்டிருப்பதை பார்த்து, ஹரிணி என விளித்து கையில் இருந்த பொருளை காட்டி மறைத்தான்.


அவன் காட்டிய பொருளை பார்தவளின் கண்களில் பல்ப் எரிய உடனே எழுந்து பின் சென்றாள்.


அவளை சன்னல் இருக்கை அமர்த்தியவன் தன் கையிலிருந்த புளியையும் , மிளகாய் உப்பையும் நீட்டினான்.


அதை வாங்கியவள் புளியை மிளகாய் உப்பில் பிடித்து அழுத்த, அங்கிருந்து எழுந்த சிவா துருவனை அவள் அருகில் அமரும்படி கண்களாள் சைகை செய்தான் அதை அறிந்தவன் அவள் அருகில் சென்று அமர்ந்துக்கொண்டான்.


அவள் அவன் அமர்ந்ததைகூட அறியாமல் புளியை மிளகாய் உப்பில் குளிப்பாட்ட, அவள் சட்டென எழுந்து சென்றது விஷ்ணுவிற்கு குழப்பத்தை தர அமைதியாக பின்னே சென்று பார்த்தான்.


அவள் செய்யும் வேலையை பார்த்தவன் அம்மா புளி என கத்த அதிர்ந்த ஹரிணி புளியை கைகுட்டையில் மூடி துருவனின் கையில் வைத்து அழுத்த.


கவிதா என்னடா என திரும்பி கேட்டார்.


இங்க வாங்க இவ என்ன வேல பண்ணுறானு பாருங்க. இருடி உனக்கு இருக்கு என முணுமுணுத்தவன் இடுப்பில் கைவைத்தபடி கூற.


அவனை பார்த்து சிரித்தாள் ஹரிணி.


என்னடா என கவிதா வந்தபடி கேட்க.


புளி சாப்பிடுறா என அவன் கூற.


ஏய் என்றபடி அவள் காதை திருகியவர். சாப்பிட்டியா என்றபடி கன்னத்தை பிடித்து அழுத்தி கேட்க.


இல்லை என்றபடி தலையசைத்தாள்.


புளி எங்க என்றபடி கையை நீட்ட.


இல்ல மா என சோகமாக கூற.


அம்மா அவ புருஷனும் இதுக்கு உடந்தை என விஷ்ணு துருவனையும் கோர்த்துவிட. அதுவரை சிவா என்று ஓட்டி இருந்தவள் விஷ்ணு சொன்னதை கேட்டு துருவனை பார்த்து சற்று தள்ளி அமர்ந்தாள்.


என்ன துருவா நீயும் துணையா? இன்னைக்கு அவ பொங்கல் வச்சிட்டுதா சாப்பிடனும் உண்மைய சொல்லுங்க என கேட்க, விஷ்ணு அவன் கையில் இருந்த கைக்குட்டையை வாங்கி பார்க்க அதில் இருந்ததை தன் அன்னையிடம் காட்ட.


சொல்லுடி சாப்பிடியா என மீண்டும் கேட்க


இல்ல மா இப்பதா எடுத்தேன் உண்ணமையா சாப்பிடல என கூற.


துருவா அவ சாப்பிட்டாளா என மகளை நம்பாது மீண்டும் கேட்க.


இல்ல அத்த இப்ப தா எடுத்தா என கூற


விஷ்ணுவிடம் இருந்து கைக்குட்டையை வாங்கியவர் மீனாட்சியிடம் சென்றுவிட்டார்.


ஹரிணி சிவாவை பார்த்து எல்லா உன்னால தா என்றபடி எழுந்து செல்ல முயல துருவன் நகராமல் போனை ஆராய்ந்தபடி இருக்க, நகருங்க என கூறியும் அசையாமல் இருக்க, இவனிடம் பேசி வேலையாவது என்றபடி வேடிக்கைப்பார்த்தபடி அமர்ந்துவிட்டாள்.


ஆதவன் அமைதியாக சிரிக்க, சிவா துருவனின் தோளை தட்டிக்கொடுத்தான்.


நீ(யே)யா.....?
 
Status
Not open for further replies.
Top