ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நினைவெல்லாம் நீ(யே)யா? _ கதை திரி

Status
Not open for further replies.

Dhruv Aathavi

Active member
Wonderland writer
அத்தியாயம்_7

அனைவரும் பூஜை நடக்கும் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க; அங்கு வந்தனர் ஆதவின் குடும்பத்தினர்.


ஆதவ் வண்டியிலிருந்து இறங்கியதும் சிவா ஆதவை முரைக்க, அமைதியாக தன் பெற்றோர்களுடன் நடந்து சிவாவின் குடும்பத்தின் அருகில் சென்றான் ஆதவ்.


அங்கு பரஞ்சோதியையும்அவருடைய குடும்பத்தையும் பார்த்த ஆதவின் தந்தை வேலாயுதம் ஓடிச்சென்று பரஞ்சோதியை தழுவிக்கொண்டார்.


இருவரும் அணைத்துக்கொண்டிருப்பதை பார்த்த குடும்பத்தினர் மகிழ்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் விசாரித்துக்கொண்டனர்.


பரஞ்சோதியும், வேலாயுதமும் பாலிய வயது தோழர்கள். இவர்களின் தோழமையால் பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்த இரு குடும்பமும் நன்குபழகிவந்தனர்.


வேலாயுதத்தின் தந்தையின் வேலைஇடமாற்றத்தால் இருபது வயதில் பிரிந்த தோழர்கள் இன்று பார்த்ததால் வயதுவித்யாசமின்றி ஓடிசென்று தழுவிக்கொண்டனர்.


இவர்கள் குடும்பமாக பேசிக்கொண்டிருக்க அங்கு வந்தனர் துருவன், ருத்ரா, விஷ்ணு. உடனே ஐயர் பூஜைய ஆரம்பிக்கலாமா நாழி ஆகிறது என குரல் கொடுக்க அனைவரும் ஐயரின் அருகே சென்றனர்.


இடத்தோட முதலாளி முன்னே வந்து மனையில உக்காருங்கோ என ஐயர் கூற.


அனைவரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி பார்த்துக் கொள்ள. வேலாயுதம் விருதாசலத்தைப் பார்த்து , அப்பா போய் மனையில உட்காருங்க என அவரின் கையைப்பிடித்து எழுப்பினார்.


இல்ல வேலா , இது என் பேத்தி ருத்ரா ஆசையா கட்டுற மால் அதனால அவள இந்த மனையில உட்கார சொல்லவா?என குழைந்துக் கேட்டார்.


அது எதுக்கு பா என்கிட்ட கேக்குறிங்க உட்கார சொல்லுங்க. என்றார் சிரித்தபடி.


இல்ல வேலா , இது உன்னோட இடம் அதனால நீயும் சேர்ந்து அமருடா.


வேணாமா அப்பா, இந்த மால் கட்டபோற விஷயத்தில என் மகனுக்குதா பங்கு இருக்கு அதனால அவனே உட்காரட்டும்.என ஆதவை பார்த்து கூறினார்.


அவர்களிடம் வேணாம் தாத்தா, பெரியவங்க இருக்கும் போது நாங்க எப்படி உட்கார முடியும் என ருத்ரா கூற அதையே ஆமோதித்தான் ஆதவும்.


நாங்க வாழ்ந்து முடிச்சவங்கடா, நீங்க வாழபோறவங்க அதனால, நீங்கதா உட்காரணும் என ருத்ராவையும் ஆதவையும் பார்த்து விருதாசலம் கட்டளையிட இருவரும் அமைதியாக சென்று மனையில் அமர்ந்து பூஜையை தொடங்கினர்.


ஐயர் மந்திரம் கூறி பூஜையை தொடங்க, அருகே அமர்ந்திருந்த ருத்ராவிற்கு மட்டும் கேட்கும் குரலில் இப்பவே உன்ன கல்யாணம் பண்ணம்னு தோனுது.என்றான் ஆதவ் ஒற்றை கண்ணை அடித்தபடி.


அவன் கூறியதைக்கேட்டு அவனை முரைத்த ருத்ரா, அது இந்த ஜன்மத்தில நடக்காது.


அத நீ பார்க்கதான போற. என்றான் தலையை சிலுப்பியபடி.


அங்க பிளாக் ஷர்ட் போட்டு இருக்கானே, என் அத்தபைய துருவன் அவனதா நா கல்யாணம் பண்ணிக்க போற முடிஞ்சா தடுத்து பாரு. கன்டிப்பா கல்யாணத்துக்கு பத்திர்க்கை தருவேன் மறக்காம வந்திரு. என ஆதவை கடுப்பேற்ற கூறிய வார்த்தைகள் தன் வாழ்க்கையை மாற்றும் என அறிந்திருந்தாள் கூறியிருக்காமல் இருந்திருப்பாளோ? என்னவோ.


அவள் கூறிய பக்கம் பார்த்த ஆதவ். அங்கிருந்த துருவனை பார்ததும் சற்று நேரத்திற்கு முன்பு துருவனின் மார்பில் ருத்ரா சாய்ந்திருந்தது நினைவுவர கோபத்தை கண்களை மூடி கட்டுபடுத்தி அமர்ந்திருந்தான்.


பூஜை முடிந்தவுடன் ருத்ராவும் ஆதவும் கற்களை எடுத்து நிலத்தில் வைத்து வணங்கி எழுந்தனர்.


இனிதே பூமி பூஜை நிறைவடைய, இரு குடும்பத்தினரும் பலநாட்கள் பேசாத பேச்சுகளையெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர்.


விருதாசலம், ஆதவின் குடும்பத்திடம் நாளைக்கு ஊர்ல திருவிழா அதனால குடும்பத்தோட எல்லாரும் வீட்டுக்கு வரனும் என கூற. வேலாயுதமும் சம்மதம் என கூறி சென்றனர்.


நாளையிலிருந்து திருவிழாவை தொடங்களாம்.??


ஹாய் பிரண்ஸ், படிச்சிட்டு எப்படி இருக்குனு கமெண்ட் பண்ணுங்க. பாய்?


நீ(யே)யா.......?
 
Last edited:

Dhruv Aathavi

Active member
Wonderland writer
அத்தியாயம்_8

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா
நாங்க எண்ணிவந்த வரங்களை நீ தாருமம்மா......


என எல்லாரீஸ்வரி குரலில் ஸ்பீக்கர் அலர, தெருவெல்லாம் மாவிலை தோரணங்களும், கலர் கோலங்களும்,
சிறுவர்கள் கூட்டமாக ஓடி விளையாட,
இளைஞர் பட்டாளம் மைக்செட்டிற்க்கு அருகில் அமர்ந்து அடுத்து நடக்கும் நிகழ்வுகளை பட்டியல் போட்டுக்கொண்டிருந்தனர். பெண்கள் வீட்டுவேலையில் ஈடுப்பட. ஆண்கள் கூட்டமாக அமர்ந்து முடிந்த திருவிழாவின் நிகழ்வுகளை மீட்டுக்கொண்டிருந்தனர்.


ருத்ராவின் வீட்டில், மீனாட்சி ருத்ராவிடமும், ஹரிணியிடமும் சேலைகட்ட சொல்லி போராடிக்கொண்டிருந்தார்.அப்பொழுது அங்கு வந்த விஷ்ணு பாட்டி பூசணிகாய்கு எதுக்கு புடவ அது எத போட்டிலும் கேவலமாதா இருக்கபோகுது என்றான் ஹரிணியை பார்த்த படி.


ஏய் பனமரம் நா ஒண்ணு பூசணிகாய் இல்ல, நீதான்டா வெள்ளபன்னி, நெடுமரம், மைதாமாவு எல்லா. என்றாள் ஹரிணி இடுப்பில் கைவைத்து தலையை ஒருபுறம் சாய்த்தபடி.


ஏய், யாரபாத்து வெள்ளபன்னினு சொன்ன, உன்ன என ஹரிணியை துரத்த அவனால் பிடிக்கமுடியாதபடி ஓடி கொண்டிருந்தாள். அப்போது உள்ளே நுழைந்த துருவனை, கவனிக்காத ஹரிணி அவன் மீது மோதி விழப்போக
உடனே இடையில் கைக்கொண்டு அவளை, தன்னை நோக்கிஇழுத்தான். அவன் இழுத்ததில் அதிர்ந்த ஹரிணி தன் கைக்கொண்டு துருவனை தோள் மீது கைவைத்து தள்ளிநிறுத்தினாள்.


அங்கு வந்த விஷ்ணு, மச்சா அவள அப்படியே பிடி என்க.


அதற்குள் உள்ளே நுழைந்த கயல்விழியை பார்த்த ஹரிணி அவர் பின் ஓடி ஒளிந்துக்கொண்டாள்.


இதைக்கண்ட விஷ்ணு துருவனிடம், சும்மாவே ஓட்டுவா அத்த வேற வந்துட்டாங்க இனி சொல்லவா வேணும் நோ கமெண்ஸ் ?என தன்கையை துருவனின் தோள்மேல் போட்டுக்கொண்டு வெளியே சென்றான்.


என்ன மருமகளே இன்னக்கும் இந்த சுடிதாரே போட்டுஇருக்க. போ போய் நல்ல புடவைய கட்டு என்றார் கயல்.


அதயேதா நானும் சொல்லுற கயலு எங்க அக்காளும் தங்கச்சியும் கேட்டாதானே.என்றபடி வந்தார் மீனாட்சி.


கயல் , ருத்ரா ஹரிணியின் கன்னத்தில் கைவைத்தபடி, அத்தைக்காக கட்டமாட்டிங்களா என கொஞ்ச, உடனே
ருத்ராவும் ஹரிணியும் உங்களுக்காக கட்டுறோம் என ஒண்றாக கூறினர்.


பூசாரி, விருதாசலத்திடம். ஐயா காலையில பத்துமணிக்கு காப்பு கட்டிடலாம் நேரம் நல்லாஇருக்கு அதவிட்டா ஆறு மணிக்குதா, பொழுதுபோயிடுது அப்பறம் காப்பு கட்ட முடியாது. என்றார்.


சரி பூசாரி காலையிலயே வச்சிக்கலாம், நா குடும்பத்த அழைச்சிட்டு வந்திடுறேன் என விடைபெற்றார்.


துருவனை அழைத்துக்கொண்டு வெளியே சென்ற விஷ்ணு, என்ன மச்சா உன் ஆளுகிட்ட லவ் சொல்லிட்டியா என்றான்.


இன்னும் இல்ல மச்சா? நா இருந்தா அந்த பக்கமே வரமாட்டிங்கறா அப்பறம் எப்படி சொல்லுறது.


நீ DSP ஆனதாவது தெரியுமா? என்றான் நக்கலுடன்.


அதெல்லா தெரியும், ஆனா என்கிட்ட பேசவே மாட்டங்கிறா? என்ன பண்ணலாம் ஏதாவது ஐடியா கொடு.


முதல்ல உன் ஆளு யாருனு சொல்லு ஐடியா அப்பறம் கொடுக்குறேன்.


சொன்னா அடிக்ககூடாது. சரினா சொல்லுறேன்.என்றான் பொடிவைத்து


விஷ்ணு தலையை இடபக்கம் சாய்த்து துருவனின் முகத்தை பார்தபடி, அப்படி எந்த பொண்ணடா லவ் பண்ணுற நா அடிக்கற அளவுக்கு.


உன் தங்கச்சிய தா என்றான் பட்டென்று.


அதிர்ந்த விஷ்வா, என்னது பூசணியவா? என சத்தமாக கூறினான்.


விஷ்ணுவின் வாயை தன் கைகளால் மூடிய துருவன், கத்தாதடா யாருக்காவது கேட்டக போகுது,


என்னடா இப்படி ஒரு குண்டதூக்கிபோட்டுட்ட உஸ்ஸ்?, சரி பல வருஷமா லவ் பண்ணுற நான் என்ன பண்ணமுடியும். முதல்ல அந்த அடங்காபிடாரிக்கிட்ட உன் லவ்வ சொல்லு அவ என்ன சொல்லுறானு பாரு என்றான் முகத்தை தொங்கபோட்டபடி.


நான் பக்கத்துல போனாலே ஓடிப்போயிடுறா அப்பறம் எங்கிருந்து பேச என நொடிந்துக்கொண்டான்.


என்ன பண்ண சொல்லுற, பூனைக்கு மணிகட்டனும்னா பின்னாடி ஓடிதா ஆகணும். ஓடு போலிஸ் ஓடு, என கிண்டல் அடித்துக்கொண்டிருக்க. அங்கு வந்த வேலு, தம்பிங்களா ஐயா உங்கள வர சொன்னாரு என கூறிவிட்டு சென்றார்.


ஆதவின் வீட்டில் வேலாயுதம் தன் மனைவி சாந்தியிடம். இன்னக்கு காலையில காப்பு கட்டிடுவாங்க நாம ஒரு ஓண்பது மணிக்கா பரஞ்சோதிவீட்டுக்கு போயிட்டு அப்படியே சாமி கும்பிட்டு வந்திடுவோம் என சாந்தியிடமும் ஆதவிடமும் கூறிக்கொண்டு புறப்பட தயார் ஆகினர்.


இனி நடக்கும் நிகழ்வுகளை நாளைதிருவிழா கலாட்டாவில் தொடங்கலாம்...??


நீ(யே)யா......?

 
Last edited:

Dhruv Aathavi

Active member
Wonderland writer
அத்தியாயம்_9

அனைவரும் வீட்டில் ஒன்றுகூட அப்பொழுது அங்கு வந்த ருத்ராவையும், ஹரிணியையும் பார்த்து மீனாட்சி திருஷ்டி சுற்றுபோட, துருவன் விஷ்ணுவின் காதில் மச்சி, சமயா இருக்காடா என்றாம். விஷ்ணுவால் அதை ஆமோதித்து ஆகும்படி ஆகிவிட்டது ஹரிணியின் தோற்றத்தை பார்த்து.


விருதாசலம், பத்து மணிக்கு காப்பு கட்டனும் இப்பவே மணி ஒண்பது இருபது எல்லாரும் ரெடியா கிளம்பலாமா என கேட்க.


எல்லாரும் ரெடி வீட்டபூட்டிட்டு கிளம்பவேண்டியருத்துதா என கூறினார் மீனாட்சி.


துருவன் விஷ்ணுவிடம் மச்சா உன் தங்கச்சிய என் கூட அனுப்புடா.


அதிர்ந்தபடி விஷ்ணு ஏய், நா அவளுக்கு அண்ணாடா.


அடி சீ, என் கூட கோவிலுக்கு அனுப்பசொல்லுறேன் டா.


ருத்ராஅக்கா தானே உன்கூடவருவாங்க அவங்கள எப்படி சமாளிக்கறது.


அத நா பாத்துகிற, நீ உன் தங்கச்சிய மட்டும் கரெக்ட் பண்ணு.


அவ உன்கூட போகசொன்னா வருவாளாடா?


கண்டிபா வர மாட்டா, அவள கடத்திதா கொண்டுபோகனும்.


டேய் நீ போலீஸ் டா, என்ன இப்படி எல்லா பேசுற.


என்ன பண்ண உன் தங்கச்சி என்ன இப்படி ஆகிட்டா.


அப்ப வீட்ல பேசி கல்யாணம் பண்ண வேண்டியது தானே?


யார உன் தங்கச்சிய தானே, பக்கத்திலே போகமுடியல இதுல கல்யாணம் வேற, உருப்படுறாமாரி ஐடியா செல்லுடா.


சரி நா பூசணிகிட்ட பேசுறேன் நீ அக்காகிட்ட பேசு என்றபடி விஷ்ணு ஹரிணியை நோக்கி சென்றான்.


ருத்ராவின் அருகே சென்ற துருவன், ருத்ரா. நீ விஷ்ணுகூட கோவிலுக்கு போறியா?


ஏன் நீ எங்க போற?


வலகையின் சுட்டு விரலால் புருவத்தை நீவியபடி, இல்ல ஹரிணிகூட கோவிலுக்கு போலானு இருக்க.


லவ் சொல்லிட்டியா என்றாள் ஆச்சரியமாக.


இன்னும் இல்ல அதுக்குதா விஷ்ணுகிட்ட ஹெல்ப் கேட்டுயிருக்க.


சரி நா விஷ்ணுகூட போயிடுறேன். சீக்கிரமா லவ்வ சொல்லுற வேலைய பாருங்க போலிஸ்கார் என்றாள் சிரித்தபடி.


அனைவரும் காரில் கிளம்ப விஷ்ணுவும் துருவனும் பைக்கில் காத்துக்கொண்டிருந்தனர்.


விஷ்ணுவின் வண்டியில் ஏறிய ருத்ராவை பார்த்த ஹரிணி, அக்கா நீ எப்பவும் அந்த வண்டிலதானே போவ இன்னக்கு என்ன இந்த வண்டில.


ஏய் உன்னஎல்லா கூட்டிட்டு போகமுடியாது. ரோட்ல போறவங்க வரவங்க எல்லாரும் என்னபாத்து சிரிக்கவா என வண்டியை கிளப்பிக்கொண்டான் விஷ்ணு.


வேறுவழியின்றி துருவனின் வண்டியில் ஏறினாள் ஹரிணி.


டிரைனிங் எல்லா முடிஞ்சிதா என்றபடி வண்டியை செலுத்தினான் துருவன்.


ம்ம்... இந்த மாசத்தோட முடியுது. வேடிக்கை பார்த்தபடி கூறினாள்.


அப்பறம் என்ன பண்ணலானு ஐடியா? பிரண்ட் மிரரை பார்தபடி கேட்க.


MD பண்ணலானு இருக்க, தாத்தாகிட்ட கேட்கனும்.


இப்படி படிச்சிட்டே இருந்தா கல்யாணம் எப்பதா நடக்கும்?


ஹரிணி கோப குரலில் என் கல்யாணத்துக்கு உனக்கெண்ண அவசரம்?


உன்னுக்கு கல்யாணம் ஆனாதா எனக்கும் கல்யாணம் ஆகும் என்றான் தாபகுரலில். அவனை முரைத்த ஹரிணி பேச எழ.


இவர்கள் வருவதைப்பார்த்த வேலாயுதம் வண்டியை நிறுத்தி, தம்பி வீட்ல எல்லாரும் இருக்காங்களா? என்க. இவர்களை பார்த்து சிரித்த துருவன் இல்ல ஐயா எல்லாரும் கோவிலுக்கு போய் இருக்காங்க. வாங்க அங்க போயிடலாம் என வழியில் பேசியபடி கோவிலுக்கு சென்றனர்.


கோவிலுக்கு வெளியே வண்டியை நிறுத்திய துருவனைப்பார்த்த வேலு
தம்பி சீக்கிரம் உங்களுக்காகதா ஐயா காத்திகிட்டு இருக்காரு உள்ள போங்க என கூற.வேலு அண்ணா வேலாயுதம் அங்கிள் வந்திருக்காங்க அவங்கள உள்ள கூட்டிட்டு வாங்க என்றபடி விரைந்து உள்ளே சென்றனர் துருவனும் ஹரிணியும்.


துருவனும் ஹரிணியும் வந்தவுடன் காப்புகட்டிய கொம்பை குடும்பத்தினர் அனைவரும் பிடித்து குழியில் நிற்கவைத்து அதை தொட்டு வணங்கினர்.


மைக்கில் பெரியவர் ஒருவர் ஊர்ல காப்பு கட்டியாச்சி இனி உள்ளூர் ஆளுங்க யாரும் வெளியபோகாதிங்க என தன் கரகரகுரலில் கூறினார்.


வேலாயுதத்தை பார்த்த பரஞ்சோதி வாடா என்ன இவ்வளவு லேட்டா வர சீக்கிரம் வந்திருந்தா காப்புகட்டினத பாத்து இருக்கலாம்ல


காப்பு கட்டிருப்பாங்கனு வந்தா நீங்க இப்பதா காப்பு கட்டுறிங்க, இனி நாங்க எப்படி வீட்டுக்கு போறது. என்றார் கவலையுடன்


என்னபா வேலா எங்க வீட்டில இருக்கமாட்டியா அதுவும் உன் வீடுதானே மூணு நாள் இருந்திட்டு திருவிழாவ பாத்துட்டு போப்பா என தன் காந்தகுரலில் கூறினார் விருதாசலம்.


இல்ல அப்பா என குழைய.


என்னமா சாந்தி நாங்க யாரோ ஆயிட்டோமா உன் புருஷனுக்கு எங்க வீட்டில எல்லா தங்க மாட்டானாமா என்றபடி வந்தார் மீனாட்சி.


இல்லமா , நாங்க இங்கையே தங்கறோம் என வேலாயுதமும் சாந்தியும் சேர்ந்தே கூறினர்.


அதற்குள் கூட்டம் சலசலக்க என்ன என்றபடி பார்க சென்றனர் அனைவரும்.


பூசாரி கையில் வேப்பிலையுடன். என்ன தாயி எதுக்கு இப்ப வந்திருக்க என்ன விஷயம்? சொல்லி என வேப்பிலையை ஆட்டி ஆட்டி கேட்க.


என்னடா, திருவிழா அப்பமட்டுதா நா உங்களுக்கு தெரிவேனா. மத்த நேரத்தில ஒருத்தனாவது வரிங்களாடா..


என்ன தாயி இப்படி சொல்லிட்ட உன்ன வணங்காம நாங்க என்ன செய்திருக்கும். என்றபடி மீனாட்சி முன்வர.


என் இடத்தில கல்யாணம் நடந்து எத்த வருஷம் ஆகுது. ஊரு வழக்கத்த ஏன்டா மிறுணிங்க என ஆடிக்கோண்டே கூற.


மன்னிச்சிரு தாயி, இனி ஊர்ல எல்லார் கல்யாணமும் உன் இடத்திலதா நடக்கும் என மீனாட்சி கைகூப்பி கூற.


இந்த திருவிழா முடியரதுக்குள்ள உன் வீட்ல ஒருத்தருக்கு என் இடத்து கல்யாணம் பண்ணிவை என்றபடி நிலத்தில் சரிந்துவிழுந்தார் அப்பெண்.


ஊரார்கள் சலசலப்புடன் மீனாட்சி என்ன செய்வது என தெரியாதபடி அதிர்ந்து குடும்பத்தினரை பார்த்தார்.


படித்துவிட்டு மட்டும் செல்லாமல் கமெண்ட் பண்ணுங்க நண்பர்களே....


நீ(யே)யா......?
 
Status
Not open for further replies.
Top