ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூரமே தூரமாய்-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
"நீ அவனை தமிழ்நாட்டுக்கு பேக் பண்ண சொன்னதுக்கான காரணம் எனக்கு தெரிஞ்சிடுச்சு."

தேநீர் கொண்டு வந்து கொடுத்த மனைவியிடம் வேங்கடம் அர்த்தமாகக் கூறினார்.

அம்பிகாவிடம் பிரதிபலிப்பாய் சிறு முறுவல்.

"நீ அவனை அங்கு மாத்துங்கன்னு அடம் பிடித்ததுக்கு பின்னால் இப்படியொரு காரணமிருக்கும் நினைக்கல" என்றார்.

ருதுவின் அனைத்தும் தெரிந்த அம்பிகாவுக்கு அவன் தனியாக இருப்பதில் விருப்பமில்லை.

"எல்லாம் மறந்துவிட்டேன். இனி என் வாழ்வு முழுமைக்கும் தேஷ் ஒருவன் போதும்" என ருது சொன்னாலும், அம்பிகாவால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் பெற்ற மகனாக அவனை அவர் பார்க்கும்போது பிள்ளையின் வாழ்வை தனிமையில் விட்டுவிடுவாரா அந்த தாய்.

மகனை கரை சேர்த்து பார்க்க ஆசை கொண்டு கணவன் மூலம் காரியத்தை நடத்த முயன்றார்.

தொலைத்த இடத்தில் தானே தேட வேண்டுமென்பார்கள். அது பொருளோ? மனமோ? விட்ட இடத்தில் மீட்க முடியும். அதனின் முதல் படியாக ருது சொந்த இருப்பிடம் அனுப்பிட முயற்சித்து, அவனை வேலையை காரணம் வைத்து தமிழ்நாட்டிற்கு அனுப்பிட சொல்லி பல மாதங்களாக கணவனிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

வேங்கடத்திற்கு மனைவியின் சொல்லுக்கான காரணம் விளங்கவில்லை என்றாலும், ஏதாவது அர்த்தமிருக்குமென்கிற புரிதலில் பலமுறை முயன்று பார்க்க... ருது அடமாக மறுத்துவிட்டான்.

தற்போது அவனே அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்க கட்டம் கட்டி தூக்கிவிட்டார்.

ருது அங்குதான் தேஷ்ஷின் அம்மா இருக்கிறாள் என்றதும், தன்னுடைய மனைவியின் எண்ணப்போக்கையும் கண்டுகொண்டார்.

"தாத்தா" என்று ஓடிவந்து கட்டிக்கொண்ட தேஷ்ஷை தூக்கி மடியில் இருத்திக்கொண்ட வேங்கடம், மனைவியை பார்த்தவாறே தேநீரை பருகி முடித்தார்.

"தேஷ் குட்டி ஸ்கூல் போனீங்களா?"

"போயிட்டு எப்பவோ வந்துட்டேன் தாத்தா. வரும்போது பாட்டி ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுத்தாங்க" என்று தேஷ் மழலையில் சொல்லிக்கொண்டிருக்க... வேங்கடத்தின் அலைப்பேசி ஒலித்தது.

எடுத்து யாரென்று பார்த்தவர்,

"அத்தை தான். நீ பேசு" என காணொளி அழைப்பினை ஏற்று, தேஷினை தள்ளிப்போகச் செய்தார்.

"உங்ககிட்ட சொல்லலன்னு வருத்தமா?"

இல்லையென தலையசைத்த வேங்கடம்...

"அவனோட விஷயம். அவனா சொல்றது வேற. அவன் சொல்லிட்டான், உனக்கும் தெரியுமென நீ என்கிட்ட சொல்றது வேற. அடுத்து அவன் அவனோட கஷ்டத்தைக்கூட உன்கிட்ட சொல்ல யோசித்து இருப்பான். என்னைவிட அவன் உன்னை அதிக நம்ப காரணமே அவனோட எல்லாம் தெரிந்தும், நீ என்கிட்ட சொல்லாம அவனை அரவணைத்திட்டு இருக்க பார்த்தியா? அதுதான்" என்றார்.

"இது சரி வரும் உனக்கு தோணுதா அம்பிகா? ஒத்து வராமல் தானே அவன் பிறந்த குழந்தையை தனியா தூக்கிட்டு வந்திருக்கான். திரும்ப எப்படி சேருவான் நினைக்கிற?" என்றார். அவரிடம் ருது நிம்மதியாக இருக்க வேண்டுமே என்கிற எண்ணம்.

"அவனுக்கு இதுதாங்க சரி. அவன் மூலமாகவே உங்களுக்கும் தெரிய வரும்" என்ற அம்பிகா, "உங்களுக்கு எப்போ ரிட்டையர்ட்?" எனக் கேட்டார்.

"இன்னும் ஆறு மாதம் சர்வீஸ் இருக்கு" என்ற கணவனிடம்,

"ஆறு மாதம் இருக்கா?" என்று இழுத்தார் அம்பிகா.

"ம்ம்... நானே அதுக்கு அப்புறம் வீட்டில் வெட்டியா உட்கார்ந்து என்ன பண்றதுன்னு தெரியல... சும்மா இருக்கணும் நினைச்சாலே பயந்து வருது" என்றார்.

கணவர் சொல்வதையெல்லாம் அம்பிகா கேட்கவில்லை. வேறு யோசனையில் இருந்தார்.

"என்ன யோசனை?"

"நானும் ருதுவுடன் இப்போவே போலாமா... இல்லை ஆறு மாதம் கழித்து உங்களோட போலாமான்னு தான் யோசிக்கிறேன்" என்று கணவனின் தலையில் குண்டைப்போட்டார்.

"என்னடி சொல்ற? நாம ஏன் போகணும்? வாழ்க்கையே முடிஞ்சிப்போச்சு. இனி அங்க போயி என்ன பண்ண?" எனக் கேட்டார். சற்று அதிர்வு தான் அவருக்கு.

"பொண்ணு அங்க சென்னையில விடுதியில் தங்கி படிக்கிறாள். பையனும், பேரனும் அங்க போகப்போறாங்க. ஒத்தையில இங்க கிடந்து என்ன பண்ணப்போறீங்க?" என்று அம்பிகா கேட்டுக்கொண்டிருக்க, வீட்டிற்குள் நுழைந்த ருதுவின் கண்கள் சட்டென்று துளிர்த்தது.

லாவகமாக மறைத்துக் கொண்டான்.

அம்பிகாவின் அருகில் வந்து அமர்ந்தவன், அவரின் மடியில் தலை வைத்து படுத்துக்கொள்ள...

'தான் சொல்லியதை கேட்டுவிட்டான்' என புரிந்துகொண்ட அம்பிகா, ஆதுரமாக அவனின் தலை கோதி கொடுத்தார்.

எவ்வளவு பெரிய அர்க்கனாக, மூர்க்கமுள்ளவனாக இருந்தாலும் தாய்மையில் சட்டென்று அடங்கிவிடுவது இயற்கையாயிற்றே! தாய்மைக்கு கட்டுப்படாத உயிரும் உண்டோ?

ருதுவின் கம்பீரத்தை பணியிடங்களில் கண்டு வியந்திருக்கும் வேங்கடத்திற்கு, அன்பிற்கு அடைக்கலம் புகும் ருதுவின் இந்த முகம் புதிது. தன்னுடைய மனைவி, மகளிடம் ருதுவிற்கு தன்னைவிட அதீத நெருக்கமென்று தெரியும். அதனின் ஆழத்தை இன்று தான் காண்கிறார்.

பனித்த நெஞ்சத்தை சமன் செய்துகொண்டார்.

"ஆறு மாதம் தனியா நான் என்னடி பண்ணுவேன்?"

"அது உங்க பாடு. என்னவும் பண்ணுங்க. வேணுன்னா வேலையை விட்டுட்டு எங்கக்கூடவே வந்திடுங்க. என்னால ரெண்டு பேரையும் விட்டு இருக்க முடியாது" என்று திடமாக மொழிந்தார் அம்பிகா.

"ம்மா..." ருதுவின் குரல் கரகரத்து ஒலித்தது.

அவரின் மகள் அங்கு தான் படிப்பேனென்று சென்று போதுகூட அவர் இந்த வார்த்தையை சொல்லவில்லை.

ருது மொத்தமாக நெகிழ்ந்துவிட்டான்.

இனி தனக்கென்று யாருமில்லை என்றிருந்தவனுக்கு, பெற்ற உறவு, ரத்த உறவைவிட மேலாக அன்பு காட்டும் உறவு கிடைத்திருக்கிறதே!

விட்டால் அவரை கட்டிக்கொண்டு அழுதுவிடுவான்.

சடுதியில் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு எழுந்தவன்,

"பேக் பண்ணணும்மா" என்று எதிரே இருக்கும் தன் வீட்டிற்குள் புகுந்துகொண்டான்.

"வாய் திறந்திட மாட்டானே" என்ற வேங்கடம், தேஷ் பேசிக்கொண்டே பின்னிருக்கும் தோட்டத்திற்கு சென்றிருக்க, அவனைத்தேடிச் சென்றார்.

அம்பிகா ருதுவிடம் சென்றார்.

"ருது..."

அறைக்குள்ளிருந்து வேகமாக வந்தவன், அவரை இறுக்கி அணைத்துக்கொண்டான்.

"தேன்க்ஸ் ம்மா. தேன்க்ஸ். தேன்க்ஸ் அ லாட். இட்ஸ் மீன்ஸ் அ லாட்" என்று உணர்ச்சிவசத்தில் அரற்றினான்.

"அம்மாக்கு யாரும் தேன்க்ஸ் சொல்லுவாங்களா?" எனக்கேட்ட அம்பிகா, "போலீஸ்காரன் இப்படி அழலாமாடா? கண்ணத்துடை முதலில்" என்று ருதுவை தன்னிலிருந்து பிரித்து தானே துடைத்தும் விட்டார்.

"எப்போ கிளம்பணும்?"

அவனை இருக்கையில் அமர வைத்து வினவினார்.

"நிஜமாவே வரீங்களா?"

வரவேண்டுமென்கிற தவிப்பு அவனிடம். சரியாக அவனது கண்களில் விளங்கிக்கொண்டார்.

"உனக்காக இல்லை. தேஷ் குட்டிக்காக" என்று சிரித்தவரை முறைத்து வைத்தான்.

"போதும்... போதும்... விட்டுட்டு போலான்னு இருந்தியோ? தொல்லையா வந்து நிக்கிறனா?" என்றார். அவனை மாற்றவே சீண்டினார்.

"நீங்க வரலன்னா தூக்கிட்டுப்போகலான்னு பிளான் பண்ணியிருந்தேன்" என்ற ருதுவின் முகம் இயல்பாய் மாறியிருந்தது.

"அது யாருடா என் பொண்டாட்டியை தூக்கிட்டு போறது?" எனக்கேட்டு, தேஷ்ஷுடன் வேங்கடம் வந்தார்.

"உங்க பொண்டாட்டியை இல்லை. என் அம்மாவை" என்றவன், தேஷ்ஷை தூக்கி கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.

தேஷ் தந்தையின் மீசை முறுக்கி தன் பாலிதழ் தீண்டி விடுத்தான்.

தேஷ் தனது பள்ளியில் நடந்ததை கதையாக அப்பாவிடம் சொல்லிட...

"இவனை அங்க போய் ஸ்கூல் சேர்க்கணும்" என்றான் ருது.

"இப்போ ஏப்ரல் தானே! அங்க ஜூன் எல்.கே.ஜி சேர்த்திடலாம்" என்ற வேங்கடம், "எப்போ கிளம்புற?" எனக் கேட்டார்.

"ஆபீஸில் எல்லாம் ஓவர். எல்லாம் என் கண்ட்ரோலில் இருந்த ஸ்டேஷனில் ஹேண்ட் ஓவர் பண்ணிட்டேன். உங்களுக்கு லீவிங் லெட்டர் மெயில் பண்ணிட்டேன். நீங்க சைன் பண்ணிட்டு, திரான்ஸ்பர் ஆர்டர் அனுப்புனிங்கன்னா... உடனே!" என்றான்.

"ம்ம்ம்" என்ற வேங்கடம், "ரெண்டு நாள் வெயிட் பண்ணு" என்று எழுந்து சென்றார்.

இரண்டு நாட்கள் எல்லாம் எடுத்து வைக்கவே அவர்களுக்கு சரியாக இருந்தது. ஆட்கள் வைத்து எடுத்து வைத்தாலும், முறையாக எல்லாம் எடுத்தாயிற்றா என்று சரி பார்க்கவே மலைப்பாக இருந்தது.

"அங்க போய் எங்கப்பா தங்கப்போறோம். குவார்ட்டர்ஸ் தாம்மா. அரேஞ் பண்ணிட்டேன். சொந்த வீடும் இருக்கு. உங்களுக்கு வேணுன்னா அங்க இருந்துக்கலாம்" என்றான்.

ஆனால் அவன் இரண்டாவதாக சொல்லியதில் விருப்பமில்லை என்று புரிந்துகொண்ட அம்பிகா,

"எதுக்குப்பா தனியா... குவார்ட்டர்ஸ்ன்னா பழக ஆளுங்க இருப்பாங்களே" என்றுவிட்டார்.

வேலை முடித்து வேங்கடம் வர,

"உங்களோட தின்க்ஸ் மட்டும் தான் வச்சிருக்கேன். மத்தது எல்லாம் பேக் பண்ணிட்டேன். பேகம் பேஃட்டிகிட்ட சொல்லியிருக்கேன். தினமும் சமைத்து கொடுத்திடுவாங்க. உங்களுக்கு சுடு தண்ணி வைக்க மட்டும் தான் பாத்திரம் வச்சிருக்கேன். பத்திரமா இருங்க. சீக்கிரம் வந்து சேருங்க" என்றார் அம்பிகா.

"என்னை விட்டுட்டு போறீங்களா? போங்க" என்று வேங்கடம் சொல்லியதில் ருதுவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

இருப்பினும், "நீங்க இப்படி பீல் பண்ணாலும், அம்மாவை நான் கூட்டிடுத்தான் போறேன்" என்றான் ருது.

"அப்போ இந்த அப்பன் வேண்டாமாடா?"

ருது அவரின் கேள்வியில் நொறுங்கிவிட்டான்.

"அப்பா." முதல் முறை விளிக்கிறான். அவரின் முன்பு மண்டியிட்டு, அவரின் கால்களில் கையினை வைத்துக்கொண்டு.

வேங்கடத்தின் கண்களில் நீர் எட்டிப்பார்த்தது.

"எனக்கு இது போதும்டா" என்றவர், ருதுவின் தோளை தட்டியவராக,

"உன் பிள்ளை என்னை அப்பா சொல்ல நாலு வருஷமாகியிருக்கு" என்றார். ஏக்கமான சிரிப்போடு.

அவரின் உணர்வினை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

"சாரிப்பா..."

"விடுடா" என்றவர், "என்னையும் கூப்பிட்டுப்போடா!" என்றார்.

"வேலை?"

"விட்டுட்டேன். சர்வீஸ் இருக்க ஆறு மாதமும், சென்னை செக்ரட்ரிரைட்டில், பிளாக் கார்ட்ஸ் ஹெட்" என்றார்.

"அப்பா..." அதற்குமேல் ருதுவிற்கு வார்த்தை வரவில்லை.

"இப்போ நீங்க இருந்தது எத்தனை பெரிய பதவி?" கேட்ட ருதுவிற்கு தனக்காகவா என்று அவரின் அன்பில் அத்தனை நெகிழ்வு.

"சின்ன பதவியில் இருந்துதானே இதுக்கு வந்தேன். இப்பவும் நான் பெரிய ஆள் தான்டா... சி.எம் என்னை மீறி அசைய முடியாது" என்று சிரித்தார்.

"உடனே மாற்றல், பதவின்னு கேட்டதும் இதுதான் இருக்குன்னு ரிப்போர்ட் வந்துச்சு. ஆறு மாசத்துக்குத்தானே சரின்னு சொல்லிட்டேன். இதுக்கே அந்த கவர்னர் அவ்வளவு யோசிச்சார்" என்று சாதரணமாக பேசியவர், தன்னுடைய பொருட்களை எடுத்து வைக்க எழும்பிட, அம்பிகா அவருக்கு முன்பு எடுத்துக் கொண்டிருந்தார்.

ருதுவிற்கு காலமே முழுக்க அவர்களை தன் நெஞ்சில் தாங்கிக்கொள்ள வேண்டுமென நினைத்தான்.

எவ்வித எதிர்பார்ப்புமற்ற இந்த அன்பிற்கு முன்னால் யாவும் பூஜ்ஜியம் அல்லவா. உண்மையில் ருது வரம் பெற்றவன் தான்.

அடுத்த நாள் விடியல் அவர்களின் புது பயணத்திற்கு ஆரம்பமாகியது.

அங்கு மரித்த ருதுவின் வாழ்வு மீண்டும் உயர்த்தெழுந்திடுமா?

தூரமாய் விலக்கி வைத்த உறவு பக்கம் வந்திடுமா?

____________

உந்தன் மறுபாதி நானாகிறேன் தலைப்பில் வேறு கதை இருப்பதால் கதையின் தலைப்பு மாற்றியிருக்கிறேன்.

'தூரமே தூரமாய்.'
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 5

ஒரு பிரிவு...
பெரிதாய் என்ன செய்துவிடப்போகிறது?

அத்தனை எளிதாக பதில் சொல்லக்கூடிய கேள்வியா இது.

பிரிவு தானே என்று சாதாரணமாக நினைத்திட வேண்டாம்.

பேசிய வார்த்தைகள் மௌனமாய் மனதைக் கொல்லும்.
ஒன்றாக கை கோர்த்து பழகிய நாட்கள் யாவும் ரணமாகும். பசியின்றி உடல் மட்டுமல்ல, அவன்(ள்) இன்றிய நாட்கள் உயிர் வதையாகும். தூக்கங்கள் தூரமாய், இன்பங்கள் இல்லாமல், புன்னகை புதைந்து, நினைவுகளின் காட்சிகளை நினைவுக்கூறும் கண்கள் சிதைந்து, தன்னை தானே வெறுக்க நேரிடும்.

உன்னை நீயே வெறுத்தபின் வாழவும் தோன்றுமோ? சாகவும் முடியாது நாட்கள் யாவும் நடைபிணமாக நகரும்.

மொத்தத்தில் செத்துக்கொண்டே வாழ்ந்து கொண்டிருப்பாய்.

தமிழ்நாட்டின் எல்லையைத் தொட்டது முதல் மனதின் மேலெழும்பும் அலைப்புறுதலை கட்டுக்குள் கொண்டுவர முடியாது தன்மீதே பொங்கும் கோபத்தை காரின் வேகத்தில் காண்பித்தான் ருத்விக்.

"அப்பா... கோ ஸ்லோவ்."

ருதுவிற்கு அருகில் அமர்ந்திருந்த வேங்கடம் பலமுறை சொல்லியும் கேட்காதவன் தேஷ்ஷின் குரலுக்கு உடனே பிரதிபலித்தான்.

தன்னவளின் சுவாசம் பரவிக் கிடக்கும் இடத்தில் இனி தானும் சுவாசிக்க இருக்கிறோம் என்பதே ருதுவின் நிலையின்மைக்கு காரணம்.

அவளைப்பற்றி தெரிந்துகொண்டால், அவளுடன் வாழ நெஞ்சம் ஏங்கிடும். தவிப்புகள் அடங்காது அவளை நாடிச் சென்றிடுவோமோ என பயந்தே, அவளைப்பற்றி தெரிந்துகொள்ள பல வாய்ப்புகள் இருந்தும்... தவிர்த்து நாட்களைக் கடத்தியவனுக்கு, இனி அவள் வாழும் ஊரில் தான் தான் வாழ்வு என்பதிலே மூச்சுமுட்டியது.

சாலையின் ஓரம் வண்டியை நிறுத்தி இறங்கியவன், இடையில் கை குற்றி காற்றினை இழுத்து வாய் வழி இதழ் குவித்து வெளியேற்றியவனாக தன்னை சமன் செய்திட முயன்றான்.

அவனது உணர்வுகளை பெரியவர்களால் உள்வாங்கிட முடிந்தது.

"இதுக்கே இப்படி கஷ்டப்படுறான். அவனை கஷ்டப்படுத்தி அங்க போகனுமா அம்பிகா?"

தேஷ் வேடிக்கை பார்ப்பதை உறுதி செய்துகொண்டு வேங்கடம் அம்பிகாவிடம் கேட்டார்.

"வலிக்கிதுங்கிறதுக்காக காயத்துக்கு மருந்து போடாமல் விட்டுடுவீங்களா?"

சிறு கேள்வி பலவற்றிற்கு புரிய வைத்திட வேங்கடம் அமைதியாகினார்.

'இனி இதுதான் நிதர்சனம். இங்கிருந்துதான் ஆக வேண்டும்.' இரண்டு நாட்களாக மனதில் உருப்போட்ட ஒன்றை மீண்டும் ஆழமாக பதிய வைத்துக்கொண்டு வண்டிக்கு அருகில் வந்தான் ருத்விக்.

"இன்னும் ஒன் ஹவர் டிராவல் தான். நீங்க பன்றீங்களாப்பா?"

ததும்பும் மனதில் வண்டியை செலுத்த அவனால் முடியாது என்று அவனே அறிந்திருக்க... வேங்கடத்திடம் கேட்டான்.

அவருக்கு அவனை புரியுமே! மறுநொடி இறங்கி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தார்.

பக்கத்து இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் கண்களை இறுக மூடிக்கொண்டான்.

உள்ளம் மட்டும் 'லேஷஸ்' என்று ஓயாது முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.

மூடிய கருவிழிகளுக்குள் அவனது உயிரான இமையாள், இமை சிமிட்டிட பட்டென்று விழி திறந்து நிமிர்ந்து அமர்ந்தான்.

ருதுவை ஒரு பார்வை பார்த்த வேங்கடம் வாகனத்தை சீராக இயக்கிட,

"உங்களுக்கு கோட்டர்ஸ் கேட்டிருக்கீங்களா?" எனக் கேட்டான் ருது.

"நான் என் பையன் வீட்டில் தங்கலான்னு வேணாம் சொல்லிட்டேன்" என்றார் அவர்.

"தேன்க்ஸ் ப்பா" என்ற ருது, "எனக்கும் உங்களோடவே இருக்கணும். ஒரே வீட்டில்" என்றான்.

ருதுவின் எல்லாம் தெரிந்த அம்பிகாவுக்கு, அவன் இதையும் கடந்து வர வேண்டுமென்கிற எண்ணம் தான்.

"எல்லாம் சரியாகும் ருது."

முன்னால் கை நீட்டி ருதுவின் தோள் தொட்டு அம்பிகா சொல்ல...

"எதுவும் சரியாக வேண்டாம்மா" என்று தேஷ்ஷை திரும்பி பார்த்தான் ருது. அவன் அம்பிகாவின் மடியில் தலை வைத்து உறங்கியிருந்தான்.

"அப்போவே எளிதா சரி செய்திருக்கக்கூடிய விஷயம் தேஷ்" என்று அம்பிகா வருத்தமாகத் தெரிவித்தார்.

பெற்ற தாய் தந்தையரின் கண்ணீருக்கு முன் ருதுவிற்கு காதல் தெரியாமல் போனது.

'உன்னை நான் பார்த்திடவே கூடாதுடி.' மனம் நினைப்பதெல்லாம் நடந்திடுமா என்ன? வேண்டாமென்பது தானே வேண்டுமென்பதாகவும் இருந்திடும்.

___________________________

இனியன் நோயாளிகளின் சிகிச்சை முடித்து அமைதியாக அமர்ந்திருந்தான். அவனின் மனதில் பலதும் ஓடிக்கொண்டிருந்தது.

தங்கையின் வாழ்வை செம்மை படுத்திட வேண்டும். பெற்றோரின் வருத்தம் போக்கிட வேண்டும். இவ்விரண்டிலுமே பல சவால்கள் அடங்கியிருப்பதை உணர்ந்தே இருந்தான்.

இமையாள் முடிந்த காதலிலிருந்து மீண்டுவிட்டாள் போதும். யாவும் சரி செய்திடலாம். ஆனால், அதுதானே இங்கு நடக்க இயலாத காரியம்.

என்ன செய்து தங்கையை மீட்கப்போகிறேன் என்பதில் மூழ்கிப்போனான்.

இனியனுக்கு கல்லூரி நண்பர்கள் பலர் இருந்தாலும், அவன் மனதால் நெருக்கமாக இருந்தது ருதுவிடம் தான். அவனது நட்பு கிடைத்தப் பின்னர் எதுவொன்றென்றாலும், அது வருத்தமோ, மகிழ்வோ ருதுவிடம் சொல்லியே பழக்கப்பட்டவனுக்கு, ருது காணாமல் போனப்பிறகு அதீத வலி. யாரிடமும் எதையும் வெளிப்படையாக பகிர்ந்துகொள்ள முடியாது, ருதுவின் மின்னஞ்சலிடம் அனைத்தையும் கொட்டிக்கொண்டிருந்தான். தற்போது அதுவும் முடியாமல் எங்காவது முட்டிக்கொள்ளலாம் போல் மனம் அழுத்தம் பெறுவதை சீர் செய்ய முடியாது தனக்கு எதிரே இருக்கும் சுவரை வெறித்தவனாக அமர்ந்திருக்கிறான்.

'இப்படியே உட்கார்ந்திருந்தால் எல்லாம் சரியாகிடுமா?' என்று அங்கேயே அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை பார்வையிட்டு வீட்டுக்கு கிளம்பலாம் என இருக்கையை விட்டு எழுந்திட... முதன்மை மருத்துவர் அவனைத்தேடி வந்தார்.

"ஹாய் இனியன்."

"ஹலோ டாக்டர். எனித்திங் சீரியஸ்?"

"நத்திங் மேன். தேர்ட் இயர்க்கு கிளாஸ் இருக்கு. பீடியாட்ரிக் சிலபஸ். எனக்கு அர்ஜெண்ட் சர்ஜரி ஒன்னு இருக்கு. உன்னோட டிப்பார்ட் தானே! மேனேஜ் பண்ண முடியுமா?" என தன்மையாகவே கேட்டார்.

அவர் ஜோசப். அந்த கல்லூரி மருத்துவமனையின் டீன். சொல்லப்போனால் இனியனும் அவரிடம் படித்த மாணவன். அவரின் உயரத்திற்கு அவர் கட்டளையாகவே சொல்லியிருக்கலாம். அவர் வேண்டுதலாகக் கேட்டிட மறுக்க முடியாது ஒப்புக்கொண்டான்.

"ஓ... தேன்க்ஸ் மேன். தேன்க் யூ." இனியனின் தோளில் தட்டிச் சென்றார்.

இனியனும் இருக்கும் மனநிலையில் இப்படியொரு மாற்றம் மனதிற்கு நன்றாக இருக்குமென்று, கல்லூரி கட்டிடம் இருக்கும் பகுதியை நோக்கிச் சென்றான்.

மருத்துவன் என்பதற்கான அடையாளமான ஸ்டெத் மற்றும் வெண்ணிற கோட் என எதுவுமின்றி, கை முட்டி வரை மடிக்கப்பட்ட சட்டை, கலைந்த முன்னுச்சி கேசம், ஒரே இடத்தில் அமர்ந்து மதியம் வரை வேலை பார்த்த சோர்வென களைந்த தோற்றத்தில் மருத்துவமனை கட்டிடத்திலிருந்து எதிரே இருந்த கல்லூரி பகுதிக்கு மைதானத்தின் வழி நடந்து சென்று கொண்டிருந்தான்.

ஆங்காங்கே மரத்தடியில் மாணவர்கள் நின்று பேசியபடியும், சிரித்து அரட்டை அடித்துக்கொண்டும் இருந்தனர்.

அதனை மென் சிரிப்புடன் பார்த்தபடி வந்த இனியனுக்கு அவனது கல்லூரி நாட்கள், அதுவும் அவனது வகுப்புகள் முடிந்து வரும்வரை அவனுக்காக ருது வந்து காத்திருந்த தருணங்கள் நெஞ்சில் அலை மோதின.

ருது இமையாளை காதலித்த நாட்களில் இமையாளை தினமும் சந்தித்தானோ இல்லையோ நண்பனை காண தினமும் இனியனுக்கு வகுப்பு முடியும் நேரம் வந்திடுவான்.

இங்கெல்லாம் வந்தால் ருதுவின் நினைவு அதிகம் வருமென்பதாலே மருத்துவமனை பகுதியோடு தன் எல்லையை முடித்துக்கொள்வான் இனியன். இன்று தவிர்க்க முடியாது வந்திருக்க... நண்பனின் நினைவுகள் அதிகம் தோன்றியது.

ஒருவித கசந்த முறுவலோடு முன்னேறினான்.

அருகில் கேட்ட பெண்களின் குரல் தன்னைப்போல் அவனது செவிகள் உள்வாங்கியது.

"எவ்வளவு நேரம் ஷிவன்யா. டைம் ஆகுது. டீன் கிளாஸ். பெல் அடிக்கும் முன்ன கிளாஸ் போகணும்" என்ற பெண்ணின் குரலில் அத்திசை நோக்கிட, அப்பெண்ணின் பின் உருவம் மட்டுமே இனியனுக்கு தெரிந்தது.

அப்பெண் ஒரு பெண்ணை மறைத்தபடி நின்றிருந்தாள். அவள் கூறிய ஷிவன்யாவாக இருக்கும்.

"ப்ளீஸ் தியா. திட்டாதே! என் பட்டுக்குட்டில!"

கொஞ்சலாக ஒலித்த இனிய குரலில் இனியனின் நடை நின்று மெல்ல தொடர்ந்தது. அவனுக்கு அக்குரலை மீண்டும் கேட்க வேண்டும் போலிருந்ததோ! முகம் பார்க்கும் சிறு ஆவல் பிறந்ததோ!

"இந்த புக்ஸ் கிளாஸ் முடிந்து லைப்ரரியில் ரிட்டர்ன் கொடுக்கணும் தியா. அல்ரெடி த்ரீ டைம்ஸ் ரிட்டர்ன் பேக் எடுத்துட்டேன். இன்னைக்கு கண்டிப்பா ரிட்டர்ன் பண்ணியே ஆகணும். ஃபைவ் மினிட்ஸ்" என்று தியாவின் கன்னத்தை பிடித்து ஆட்டியபடி அவள் முகம் சுருக்கினாள். இனியனால் அவளின் முகம் காண முடியவில்லை. தியா முழுதாக மறைத்தபடி ஷிவன்யாவின் முன் நின்றிருந்தாள்.

'இனியா என்னதிது? இப்போ நீ எதுக்கு இங்க வந்தாய்? இப்போ என்ன பண்ண நினைக்கிறாய்? இதென்ன புதிதாய்?' தனக்குள்ளே பல கேள்விகள் கேட்டவனாக, தலையை உலுக்கிக்கொண்டு இனியன் நடையை எட்டி வைக்க...

"டைம் ஆச்சு பேபி. நீ ரிட்டர்ன் பண்ணு, நான் என் கார்டில் எடுத்துக் கொடுக்கிறேன்" என்று தியா சொல்வது நன்கு கேட்டது அவனுக்கு.

"ம்க்கும்... நீ பர்ஸ்ட் கார்ட் கொண்டு வந்திருக்கியா?" என ஷிவன்யா சிறு சிரிப்போடு கேட்டதும் அவனின் செவி தீண்டியது.

ஷிவன்யா கேலி செய்ததில் முறைத்த தியா, "போடி... நான் போறேன்" என்று வேகமாக நடந்து இனியனை தாண்டி செல்ல... அவனுக்கு இது தியாவாக இருக்குமென்று கணிக்க முடிந்தது.

"தியா ப்ளீஸ்... நில்லு" என்று நாலைந்து புத்தகங்களையும், கோட், ஸ்டெத், பை என கைகளில் பிடி கொள்ளாது அள்ளிக்கொண்டு ஷிவன்யா ஓடி வரும் அரவம் திரும்பி பார்க்காமலே இனியன் உணர்ந்தான்.

மைதானம் முடிந்து கட்டிடத்திற்குள் நுழைந்த இனியன், முதல் தளத்தில் இருக்கும் வகுப்பிற்கு செல்ல சில படிகளில் முன் ஏறியிருக்க, ஓடி வந்த ஷிவன்யா, இனியனின் தோள் உரசியபடி, அவனைத் தாண்டி இரு படி ஏறியிருக்க, கால் இடறி பின்னால் சரிந்தாள்.

"ஹேய் கேர்ள்... பார்த்து" என்று சடுதியில் இனியன் அவளை பின்பக்கமாக தன் இதயம் தாங்கியிருந்தான்.

அவள் கையில் வைத்திருந்த யாவும் ஆங்காங்கே படிகளில் சிதறியிருந்தன.

விழ இருந்த பயத்தில் கண்களை இறுக மூடியிருந்த ஷிவன்யா, விழவில்லை என்றதும் நிம்மதியாக இமை திறக்க,

"ஆர் யூ ஓகே?" என்றபடி அவளின் முதுகில் கை வைத்து தனக்கு முன்பாக நிமிர்த்தி நிற்க வைத்தான்.

"சாரி... சாரி பாஸ்" என்றவளால் இனியனின் முகம் விடுத்து விழிகளை அகற்றிட முடியவில்லை. ஏதோவொன்று அவளை அம்முகம் கவர்ந்தது. இன்னதென்று அவளால் பிரித்தறிய முடியவில்லை. பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது.

"ஹலோ..." அவளின் அசையா விழிகளில் நொடிப்பொழுது தொலைந்து மீண்டவன், அவளின் முன் கை அசைத்து நிகழ் மீட்டான்.

"சாரி... சாரி... கிளாஸ் டைம் ஆச்சு..." என்றவள் திரும்பி படியேறிட,

"இதெல்லாம் வேண்டாமா?" எனக் கேட்டான் இனியன். படிகளில் கிடந்த அவளின் உடைமைகளைக் காட்டி.

"ம்ப்ச்... சாரி, கவனிக்கல" என்று திரும்பியவள், "சாரி" என விழுந்தவற்றை எடுக்க, இனியன் உதவி செய்தான்.

"தேன்க்ஸ்... தேன்க் யூ" என்றவள், வேகமாக சென்றிட, அவன் நின்றிருந்த படியில் அலைப்பேசி கிடப்பதை அப்போதுதான் கண்டான்.

"என்ன அவசரமோ?" என்று குனிந்து எடுத்தவனின் விரல்களின் தொடுதலால் கடவுச்செயல் இல்லாமல் இருக்க, திரை நீங்கி அலைப்பேசி ஒளிர்ந்தது.

திரையில் மிளிர்ந்த புகைப்படத்தில் இனியனின் விழிகள் அகல விரிந்து, அதிர்ச்சி, ஆச்சரியம், குழப்பம் என பல பாவனைகளை ஒருங்கேக் காட்டியது.

அந்நேரம் சரியாக தகவல் வந்ததற்கு அடையாளமாக மேலே அறிவிப்பு எம்பி குதித்தது.

அறிவிப்பு வந்த எண்ணின் பெயர் கவனிக்க வைத்ததால்...

உள்ளே செல்லாது... விரலால் கீழிறக்கினான். தவறென்று மனம் கூவியபோதும் செய்திருந்தான்.

"ரீச்டு" என்று வந்திருந்தது.

மணியின் ஓசையில் சுயம் பெற்று அலைப்பேசியை சட்டைப் பையில் வைத்தவன் வகுப்பினை நோக்கிச் சென்றான்.

நிச்சயம் இத்தருணத்தை இனியன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதுவரை பெண்களை கவனித்து பார்த்திடாத, தான் இன்று ஒரு பெண்ணின் குரலில் ஈர்க்கப்பட என்ன காரணமென்று நினைத்ததற்கு பதில் அவனது சட்டைப் பையில்.

இங்கு காரண காரியமின்றி எதுவும் நடப்பதில்லை.

யாரென்றே அறிந்திடாத பல மனிதர்களின் வருகை நம் வாழ்வின் பாதையையே மாற்றி அமைத்துவிடும்.

தனக்குரிய வகுப்பிற்குள் இனியன் செல்ல, ஷிவன்யாவின் முகம் அதிர்வைக் காட்டியது.

"இவர் டாக்டரா?" தன்னைப்போல் கேட்டிருந்தாள்.

"லெக்ச்சர் எடுக்க வந்திருக்கார் அப்படின்னா டாக்டர் தானே?" என்று பதில் வழங்கிய தியா, "ஆள் நல்லாயிருக்கார்ல?" என்றாள்.

பார்த்ததும் இனியன் மீது ஏதோவொன்று ஈர்க்கப்பட்டிருந்த ஷிவன்யாவுக்கு தியாவின் இந்தப் பேச்சு ரசிக்கவில்லை.

"ஆமாம்... ஆமாம்..." என்று உதடு சுளித்து, புத்தகத்தில் கவிழ்ந்துவிட்டாள் ஷிவன்யா.

இனியன் சிறு அறிமுகத்திற்கு பின் வகுப்பு எடுத்து முடிக்கும் தருவாயில் தான் தலை குனிந்தே அமர்ந்திருந்த ஷிவன்யாவை கண்டான்.

வகுப்பு முடிந்ததும் வெளியேறுவதற்கு முன், "ஷிவன்யா" என்றழைத்து வெளியில் வருமாறு கை காண்பித்துவிட்டு சென்றான்.

"உனக்கு தெரிந்தவரா பேபி. சொல்லவே இல்லை" என்ற தியாவின் முதுகிலே அடித்துவிட்டு, 'என்னை எதுக்கு கூப்பிடுறாங்க' என்று யோசித்தபடி வெளியில் சென்றாள்.

"சார்..."

அவளுடைய அலைபேசியை எடுத்து நீட்டினான்.

"ஹோ... ஸ்டெப்ஸில் மிஸ் பண்ணிட்டனா? தேன்க் யூ சார்" என்று வாங்கிக்கொண்டாள்.

"நீங்க எங்க இருக்கீங்க?"

முதல் முறை பார்க்கும் பெண்ணிடம், அதுவும் அறிமுகமே இன்றி இப்படி கேட்பது தவறென்று தெரிந்தபோதும் அவனால் கேட்காமல் இருக்க முடியவில்லை. கிடைக்கும் வாய்ப்பை அவன் தவறவிட விரும்பவில்லை.

ஏன் எனும் விதமாக அவனை ஏறிட்ட போதும், ஏதோ ஒன்று அவனிடம் அவளை பதில் சொல்ல வைத்தது.

"ஹாஸ்டல்."

"ஹோ, ஓகே" என்றவன், "யூ கேரியான்" என்று சென்றுவிட்டான்.

செல்லும் அவனையே பார்த்திருந்தவளின் விழிகளில் மென் ரசனை.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 6

சிலரை மறப்பதும், அவரின்றி வாழ்வதும் கடினமானது தான். இருந்தும், பலர்... வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

நினைவுகளோடும்...
வலிகளோடும்...

தூரமே தூரமாய்!

_______________________________

பள்ளி இறுதி மணி ஒலித்திட...

மாணவர்கள் யாவரும் சிறகு விரித்த பட்டாம்பூச்சியாய் வகுப்பறை விட்டு, தரை பட்டு சிதறும் மழைத்துளியாய் வெளியில் தெறித்து ஓடி வரும் காட்சி ஒரு நொடி இதழை நீளச் செய்திடும்.

தனது வகுப்பு முடித்து வெளியில் வந்த இமையாளின் இதழும் சற்று விரிந்தது. மகிழ்வாய்.

அவளின் மகிழ்வு பள்ளி மாணவர்களிடம் தான். முகத்தின் ஒளி கூட பள்ளிக்குள் அடி வைத்திட்டால் கூடிப்போகும்.

அவள் அவளாக இருப்பது அப்பிள்ளைகளிடம் மட்டுமே.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணித ஆசிரியையாக பணிபுரிகிறாள்.

அவ்வவ்போது இலவச நேரங்களில் சிறு பிள்ளைகள் வகுப்பிற்கு செல்வதும் உண்டு. அது அவளின் மனம் தனிமையில் பல சிந்தனைகளை தவிர்ப்பதற்காக எடுத்துக்கொள்வது.

அப்பள்ளியில் வாழ்வியல் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகுப்பு இருப்பதால், அந்நேரம் இலவச நேரங்களில் விருப்பட்ட வகுப்பிற்கு ஆசிரியர்கள் சென்று மாணவர்களுடன் உரையாடலாம். அந்நேரமெல்லாம் இமையாளுக்கு சிறிய வகுப்பு பிள்ளைகளுடன் தான் கழியும்.

சில நேரங்களில் வகுப்புகள் இல்லையென்றால், மைதானத்திற்கு சென்று பிள்ளைகள் விளையாடுவதை பார்த்தபடி அமர்ந்திடுவாள். தனியாக மட்டும் இருந்திடமாட்டாள்.

இரவு நேரங்களில் மனம் வதைக்கொள்(ல்)வதே போதும். அம்மனதிற்கும் ஓய்வு, அமைதியென எல்லாம் வேண்டுமே. எப்போதும் நினைவுகளில் வலி சுமந்திட அது மட்டும் என்ன பாவம் செய்ததாம். அதற்காகவே முடிந்த அளவிற்கு பகலில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள விரும்பமாட்டாள்.

இமையாளின் வலி, கண்ணீர், நினைவுகள், அழுகை, தவிப்பு, ஏக்கம் யாவும் இருளுக்கே உரித்தானவை. அவளின் படுக்கையும், தலையணையும் மட்டுமே முழுதாய் அறிந்திடும் அவளின் சோகத்தை.

கோடை விடுமுறை தொடங்கவுள்ளது. அவளது வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரம். அதன் பின்னர் பள்ளி திறக்கும் வரை... மூச்சு முட்டும் தனிமையில், மறக்க முயன்றிடாத வலி நிறைந்த நினைவுகளோடு நாட்களைக் கடத்திட வேண்டும். வலியையும் விரும்பி சுமப்பவளுக்கு ஏனோ அதன் தாக்கம் அதிகமிருக்கும் தனிமை என்றால் அத்தனை பயம். ஆதலால் பள்ளி சேர்க்கை பிரிவில் இணைந்து கொண்டாள்.

விடுமுறை நாட்களிலும் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான பிரிவில் அவளுக்கு வேலை உண்டு. முழு நேரம் இல்லையென்றாலும், வாரத்தில் சில நாட்களை கழித்துவிடலாம்.

அதற்காகவே வகுப்பினை முடித்துக்கொண்டு பள்ளி முதல்வரை சந்தித்துவிட்டு வருகிறாள்.

இமையாள் இப்பள்ளியில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. அவளது பாடத்தில் இரண்டு வருடங்களாக அனைத்து மாணவர்களும் நன் மதிப்பில் தேர்ச்சி. ஆதலால் முதல்வருக்கு பிடித்த ஆசிரியர்களில் அவளும் ஒருத்தி.

யாரிடமும் அளவாக தன் எல்லைக்குள் நின்று மரியாதையுடன் பழகும் அவளின் பண்பு இன்னும் அதிகமான மரியாதையை அவளுக்கு பெற்றுத் தந்தது.

மாணவர்கள் குவியலாய் வெளியேறும் காட்சியை பார்த்து நின்றிருந்தவள், இனியன் வந்து தொட்டதும் தான் சுயம் மீண்டாள்.

"ஸ்கூலே காலியாகிடுச்சு. இன்னும் கிளம்பாமல் நின்னுட்டு இருக்க?" எனக் கேட்டான்.

"பசங்களை பார்த்துட்டே நின்னுட்டேன் போல" என்றவள், "நீங்க என்ன உள்ள வந்திட்டிங்க?" என்று ஆசிரியர்களுக்கான அறை நோக்கி நடந்தாள்.

"போன் பண்ணால் எடுக்கல. அதான் உள்ளவே வந்துட்டேன்" என தங்கையை தொடர்ந்தான்.

"மேத் எக்ஸாம் முடிஞ்சுதுல?"

"ஹ்ம்ம்... இன்னைக்குத்தான்."

"அப்போ உனக்கு இனி கிளாசஸ் இல்லையா?"

"நைன்த் கிளாஸ்க்கு இருக்குண்ணா. தென் அட்மிஷன் செக்க்ஷனில் என்னை போட்டிருக்காங்க" என்றாள்.

பேசிக்கொண்டே வாகனங்கள் தருப்பிக்குமிடம் வந்திருந்தார்கள்.

"அப்போ இந்த இயரும் உனக்கு லீவ் இல்லை?" என கேள்வியாக ஏறிட்டான்.

"சிலதுல இருந்து ரொம்ப தூரம் ஓடிபோயிடனும் தோணுதுண்ணா. இருந்தாலும் முடியாதே! என்ன பண்ணட்டும்?"

தங்கையை தோளோடு அணைத்து விடுத்தான்.

இமையாள் ஆறுதல் சொல்லி தேற்றும் கணத்தையெல்லாம் எப்போதோ கடந்துவிட்டாள்.

அனைத்து விதமான தெளிவும் உள்ளது. அவள் நினைத்தால் மட்டுமே மீண்டு வர முடியும். முடியாதென அடமாக இருப்பவளிடம் என்ன பேசுவது?

மௌனமாகவே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

"என்னது வீடு ரொம்ப அமைதியா இருக்கு?" என்று கேட்டுக்கொண்டே இனியன் உள்ளே நுழைய, இமையாள் இருக்கையில் தொப்பென்று அமர்ந்தாள்.

அவளுக்கு சட்டென்று நெஞ்செல்லாம் அடைக்கும் உணர்வு.

"அண்ணா..." என்று சத்தமாக அழைக்க முடியாது காற்றாக குரல் ஒலித்தது.

ஏதோ நினைவாக திரும்பிய இனியன், தங்கையின் முகத்தில் தெரிந்த அசௌகரியத்தில் அவளருகில் வந்து அமர்ந்தான்.

"என்ன இமயா... என்ன பண்ணுது?"

மூச்சு விட முடியாது தினறியவளின் நிலை கண்டு...

"சில்... ரிலாக்ஸ் டா. என்னாச்சு?" தங்கையின் நெஞ்சை மெல்ல நீவி விட்டான்.

"அவங்களை நான் சீக்கிரமே பார்க்கப்போறேன்னு தோணுதுண்ணா" என்றாள்.

அவளுக்கு நீரினை எடுக்க திரும்பியவனின் கால்கள் அசையாது நின்றன.

"அவங்க பக்கத்துல இருக்க ஃபீல்" என்று சொன்னவள், இருக்கையின் பின்னால் தலை சாய்த்து கண்களை மூடிக்கொண்டாள்.

"ரீச்ட்டு..." இனியனுக்கு ஷிவன்யாவின் அலைப்பேசியில் பார்த்த தகவல் நினைவில் உதித்தது.

இமையாளின் கண்கள் கண்ணீரை சுரந்திட... அவளின் காதுமடல் ஈரத்தில் நனைந்தது.

"இப்போ அவன் உன் முன்னால் வந்தால்?"

"ஜஸ்ட் ஸ்மைல்... அவ்வளவு தான்" என்றாள்.

"அப்புறம் எதுக்கு இந்த அழுகை?"

தங்கையை விட்டுச் சென்றவன் நன்றாக இருக்கும்போது... இவள் மட்டும் ஏன் வலி சுமக்க வேண்டுமென்கிற ஆதங்கம் இனியனிடத்தில்.

"உயிரில் பொத்தி வச்சிட்டேன் போல. பிடுங்கிப்போட முடியல" என்றாள்.

"அவங்க சந்தோஷமா இருப்பாங்கல? என்ன பேபி பிறந்திருக்கும். அப்போவே அவங்க வைஃப் கன்சீவ்வா இருக்கிறதா சொன்னாங்களே!" என்றாள். அவளை பொறுத்தமட்டில் ருது சொல்லியது பொய் என்கிற எண்ணம் இருந்தபோதும்... அவனே சொல்லியது உண்மையாக இருந்துவிட்டால்? பெரும் கேள்வியும் உள்ளது.

இனியனுக்கு ஆத்திரமாக வந்தது.

இதுவரை ருதுவின் மீது இல்லாத கோபம் இன்று அவனிடம். தங்கையின் கண்ணீர் மட்டும் அதற்கு காரணமில்லை.

ஷிவன்யாவின் அலைப்பேசி திரையில், அவளுடன் தோள் மீது கைபோட்டபடி சிரித்த முகமாக ருது இருந்த நிழற்படம்.

ஷிவன்யாவுக்கு அவன் என்ன உறவென்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் தன் தங்கையை தவிக்கவிட்டுச் சென்றவன், உறவுகளோடு சந்தோஷமாக இருக்கின்றான் எனும் சிறு கோபம்.

அவனாக வந்தான்... காதலை சொன்னான்... காத்திருக்க சொன்னான்... இனி வேண்டாம் என்றான்... மொத்தமாக சென்று விட்டான்.

அவன் பக்க காரணங்கள் நியாயமானவையாகவே இருந்துவிட்டு போகட்டும். அதற்கு பலி தன் தங்கையா? இன்று தான் இப்படி சிந்திக்கிறான். ஏனென்று அவனுக்கேத் தெரியவில்லை.

ஏதோவொரு காரணத்திற்காக பொய் சொல்லிச் சென்றிருக்கிறான். என்றாவது ஒருநாள் நிச்சயம் தங்கையை தேடி தன் நண்பன் வருவானென்ற அவனின் எண்ணம் இன்று ஷிவன்யாவின் அலைப்பேசியில் கண்ட புகைப்படத்தில், அவனிடம் தெரிந்த மகிழ்வில் காணாமல் போயிருந்ததோ?

நிச்சயம் தன் தங்கைப்போல் அவனும் வலியை சுமந்து கொண்டிருப்பான் என்கிற எண்ணம்
பொய்த்துப் போனதாலோ?

"கல்யாணம் ஆகிவிட்டதென அவன் பொய் சொல்வதாகக் கூறினாய். இப்போ இப்படி சொல்ற?"

"இப்பவும் அது பொய் தான்" என்றவள், "அவங்க போனது போனதாகவே இருக்கட்டும் இனியாண்ணா. அவங்க திரும்பி வந்தாலும் எனக்கு வேண்டாம். அவங்க கொடுத்த வலியோட வாழ பழகிட்டேன்" என்றதோடு, "ஒருமுறை பார்க்கணும். அது போதும். நான் இல்லாமல் அவங்க இருக்காங்க தானே? என்னால் அவங்க இல்லாமல் இருக்க முடியாதா என்ன?" என்றாள்.

"உன் மனநிலை என்னன்னு எனக்கு சுத்தமா புரியல இமயா! ஐ தின்க்... உனக்கு கவுன்சிலிங் தேவைப்படுது நினைக்கிறேன்" என்றான்.

"அவங்களுக்கு நான் எவ்வளவு அடிக்ட் ஆகியிருக்கேன்னு தெரியுதா இனியாண்ணா?" எனக் கேட்டவள், கண்களை மெல்ல திறந்து, "நாலு வருஷமாகியும் அவங்களை மறக்க முடியாத அளவுக்கு" என்றாள்.

"அவங்க நினைவு இல்லாமல் ஒருநொடி கடக்கிறது இல்லை இனியாண்ணா."

"இப்போலாம் ரொம்ப புலம்பற இமயா?"

"எனக்குள்ளே வச்சு பைத்தியமாகிடுவனோன்னு பயம் வந்திருச்சுண்ணா" என்றவள், "நீட் அ ஹக்" எனக் கேட்டிருந்தாள்.

அண்ணனாக நொறுங்கிவிட்டான்.

"டேய் இமயா" என்றவன் தந்தையாக தன் தங்கையை நெஞ்சம் தாங்கியிருந்தான்.

"நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க ண்ணா..."

"நான் இதுக்கு பதில் சொல்லிட்டேன்."

இனியனிடமிருந்து பிரிந்தவள், "எனக்காக" என்றாள்.

"கொஞ்சநாள் போகட்டும்" என்றவன், "ருது இங்க வந்திருக்கான் நினைக்கிறேன்" என்றான்.

"நினைக்கிறீங்களா? தோணுது சொல்றீங்களா?"

"இந்த ஊருக்குள் இருந்தால் நிச்சயம் ஒருநாள் கண்ணில் பட்டுதானே ஆகணும். பார்ப்போம்" என்றான்.

ஆனால் அவர்களுக்கான பதில் அன்று இரவே கிடைத்தது.

மாடியில் காய வைத்த துணியை எடுக்கச் சென்ற தீபா கீழே வரவும், இருவரும் இயல்பாய் காட்டிக்கொண்டனர்.

இரவு உணவின் போது நால்வரிடமும் பேச்சில்லை. மிக அமைதியாக அந்நேரம் நகர.

"அந்த டிவியை ஆன் பண்ணு தீபா. மயானத்துல இருக்கிற மாதிரி இத்தனை அமைதி" என்றார். மூவரும் அவரை ஒரு நொடி பார்த்து விலகினர்.

ஓடியாடி உற்சகாமாக, வீட்டை உயிர்ப்போடு வைத்திருந்த தன் பிள்ளைகள் இருவருமே மனதால் ஓய்ந்து போய்விட்டதாக எண்ணிய சுரேந்தருக்கு இந்த அமைதி கடுப்பாக இருந்தது. அதில் என்ன சொல்கிறோம் என்று உணராது சொல்லிவிட்டார்.

"என்ன சேனல் வைக்கட்டும்?"

தொலைக்காட்சியை உயிர்ப்பித்த தீபா கேட்டிட...

"என்னத்தையும் வை. இதைக்கூட சொல்லுவாங்களா?" என்று கடிந்தார்.

"என்ன கோபம் உங்களுக்கு?"

இனியன் கேட்டிட...

"எனக்கென்ன கோபம். எல்லாம் வருத்தம் தான்" என்றவர், "நியூஸ் சேனல் வச்சிட்டு வந்து நீயும் சாப்பிடு" என்றார் மனைவியிடம்.

இமையாள் பெற்றோர் இருவரின் முகத்தையும் பார்க்காது குனிந்தபடி தட்டிலே கவனமாக இருந்தாள்.

தைரியமாக காதலில் சுமக்கும் வலியை பெற்றோரிடம் சொல்லிவிட்டாள். ஏனோ அதன் பின் அவர்களை நேர்கொண்டு பார்த்திட முடியவில்லை.

அவளின் காதல் திருமணத்தில் முடிந்து வாழ்வில் வெற்றி பெற்றிருந்தால் இந்த உணர்வு இருந்திருக்காதோ? இப்போ மகளாக பெற்றவரின் ஆசைகளை கொன்றுவிட்டோமே என்கிற குற்றவுணர்வு அவளிடத்தில்.

தன் காதலை வீட்டில் சொல்லியது முதல் தாய், தந்தையிடம் கண்கொண்டு பேசிட முடியாது தவிப்பவளுக்கு தன்னால் தான் இனியனின் வாழ்வும் தடைபடுகிறதோ என்கிற கவலை.

இனியன் உணவு முடித்து எழ,

"நகரத்தின் புதிய துணை ஆணையராக திரு.ருத்விக் ஐபிஎஸ் அவர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்" என்ற செய்தி ஒலித்திட...

ருத்விக் என்ற ஒலியில் இமையாளின் மொத்தமும் அசைவற்று உறைந்தது.

இனியன் வேகமாக தங்கைக்கு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து அவளின் கரம் பற்றினான்.

"இமயா..."

மொத்த பாசத்தின் குவியலாய் அவ்விளிப்பு.

இமையாளின் இமைகள் அகல விரிந்து பதிந்தது தொலைக்காட்சித் திரையில்.

ருதுவின் தற்போதைய புகைப்படம் காக்கி உடையில் ஒளிர்ந்தது.

முதல் முறை அவனை காக்கி சீருடையில் அவனுக்கான நட்சத்திரங்களுடன் காண்கிறாள்.

அவனது பயிற்சியின் போது, பயிற்சிக்கான காக்கி சீருடையில் பார்த்திருக்கிறாள். ஆனால் இது தனியானதல்லவா?

கண்களில் நீர் திரண்டு வழிய காத்திருக்க... உதடு விரிந்திருந்தது.

இனியனின் கரம் கொடுத்த அழுத்தத்தில் தன்னை நிலைப்படுத்தியவள்...

"அம் ஓகே இனியாண்ணா" என்று கடைசி வாய் உணவை உண்டு முடித்தவளாக எழுந்து சென்றுவிட்டாள்.

இருவரையும் கவனித்த தீபாவும்,சுரேந்தரும் இனியனை அர்த்தமாக ஏறிட...

"ஊப்ப்..." என்று காற்றினை குவித்து ஊதினான்.

"இப்போ சொன்னாலும் சரியிருக்காதுப்பா" என்று சென்றுவிட்டான்.

"அப்படியென்ன அந்த நியூஸில் சொன்னாங்க?" தீபா கேட்டிட சுரேந்தருக்கும் புரியவில்லை.

அந்த செய்தியில் ருதுவுடன் சேர்த்து, அவன் மாற்றம் பெற்றுள்ள துறையின் முந்தைய அதிகாரியின் மாற்றத்திற்கான காரணத்தையும் சொல்லியிருக்க அவர்களுக்கு எதற்கென்று விளங்கவில்லை.

"சீக்கிரம் எல்லாம் சரியாகும் நம்புவோம்" என்ற சுரேந்தருக்கு பிள்ளைகளின் வாழ்வு இப்படியே சென்றுவிடுமோ என்ற கவலை.

வேகமாக தங்கையை தேடி வந்த இனியன், அவள் அறையில் இல்லாததும் மொட்டைமாடி சென்று பார்த்தான்.

மிதமான தூறல்.

மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நிலவினை வெறித்திருந்தாள்.

"இதென்ன சட்டுன்னு மழை. க்ளைமேட் காட்டவேயில்லை" என்றவாறு இமையளின் அருகில் வந்து நின்றான்.

"இமயா..."

"நான் ஓகே தான் இனியாண்ணா" என்றவள், "கோபம் கோபமா வருதுண்ணா" என்றாள்.

"யார் மேல?"

"உங்களுக்குத் தெரியாதா?"

"இத்தனை வருஷமா இல்லாமல் இப்போ என்ன?"

இனியனை பக்கவாட்டாக கருமணிகளை மட்டும் சுழற்றி பார்த்தவள், பார்வையை சடுதியில் விலக்கிக்கொண்டாள்.

கசந்த முறுவல் அவளிடம். உதட்டின் ஓரம்.

"காதல் எல்லாத்தையும் மறக்கும், மன்னிக்கும் சொல்லுவாங்கல? ஆனால் வலி சுமக்கும் காதல், தன்னோட அழுத்தத்தை சின்ன கோபத்தில் கூட காட்டலன்னா மனம் எப்படி அமைதியாகும்?

"நான் கேட்டேனா... அவங்க என் வாழ்க்கையில் வேணுன்னு நான் கேட்டேனா?

"அவங்களா வந்தாங்க. விருப்பத்தை சொன்னாங்க. கவனிக்க வச்சாங்க. உங்கவரை வந்து அவ்வளவு நம்பிக்கை கொடுத்தாங்க.

"இதையெல்லாம் மொத்தமா ஒரே நாளில் ஒன்னுமில்லைன்னு போனவங்க மீது குட்டியா கூட கோபம் இருக்கக்கூடாது சொல்றீங்களா?

"இப்போ அவங்களை நேரில் பார்த்தால் கோபத்தை காட்டுவேனா தெரியாது. ஆனால் அவங்க வேணுன்னு மட்டும் சொல்ல மாட்டேன்.

"எனக்கும் மனசிருக்கு, அதில் உணர்விருக்கு... அந்த உணர்வில் எத்தனை ஆழமா அவங்க நிறைஞ்சிருக்காங்கன்னு தெரிஞ்சும் நான் வேணான்னு போனவங்க எனக்கும் வேணாம்.

"எனக்கு இந்த காதல் மட்டும் போதும். மனசோடு வலி நிரம்பிய ஒரு சுகம். இது போதும்."

முகத்தை வானோக்கி உயர்த்தி காண்பித்தாள்.

முகம் நனைத்த ஈரத்தில் மனம் நனையச் செய்திட்டாளோ?

"அப்புறமும் ஏன் அவனோட பெயருக்கே இத்தனை ரியாக்ட் பன்ற?"

இனியனின் இக்கேள்விக்கு நிச்சயமாக அவளிடம் பதிலில்லை. மனதின் சில உணர்வுகளுக்கு வார்த்தை வடிவம் கொடுத்திட முடியாது.

"உனக்கு மட்டும் தான் தவிப்பு, ஏக்கம் எல்லாம்." இனியனின் கண் முன்னே ஷிவன்யாவுடன் சிரித்தபடி ருது நிற்கும் புகைப்படம் தோன்றி அவனை அவ்வவ்வபோது கடுபடித்துக் கொண்டிருந்தது.

இதுநாள் வரை நண்பனாக இருந்தவன்... தற்போதுதான் ஒரு பெண்ணின் அண்ணாக மாற்றம் கொண்டுள்ளான்.

"உங்க ஃபிரண்டை பார்க்கப்போகலையா?"

"தூறல் மட்டுமல்ல... உறவு கூட தீர்ந்துப்போச்சுன்னா திரும்பாது" என்று சொல்லிய அண்ணனை மெச்சுதலாக பார்த்தாள் இமையாள்.

"அப்போ நட்பிலும் பிரிவு வலியை கொடுக்கும்... ரைட்?" என்றாள்.

இனியனின் தலை மேலும் கீழும் ஆடியது. மௌனமாய் மென் சோகம் அவனது முகம் காட்டியது.

'தீர்ந்துபோன தூறல் திரும்பாதடி!'

காய்ந்துபோன பூவில் மணம் ஏதடி?
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 7

என் காதல் பிறந்ததில்
அவன்(ள்) தாயுமானவன்(ள்).
'எம் காதல் மடிந்ததில்
அவன் காரணமானவன்...'
மறக்க நினைக்கையில்
வேதனையாய் அவன்(ள்).
நினைத்துப் பார்க்கையில்
சுகம் பிணைந்த வலியுமாய் அவன்(ள்)!
______________________

காக்கி உடையில் தயாராகி கண்ணாடி முன் நின்று தன்னுடைய கேசத்தை கையினால் சரி செய்து கொண்டிருந்தான் ருத்விக்.

"அப்பா" என்று ஓடிவந்த தேஷ்...

"எப்போ ஸ்கூல் ஜாயின் பண்ணனும்?" என்று கேட்க,

"தேஷ் குட்டிக்கு அதுக்குள்ள ஸ்கூல் போகனுமா?" என்று மகனை தூக்கி தனக்கு முன்னிருந்த சிறு மேசையில் நிற்க வைத்தான்.

"அங்க போனனே?"

"இங்கையும் பிளே ஸ்கூல் போறீங்களா?" என்றவாறே தொப்பியை கையில் எடுத்தவன், மகனை தூக்கிக்கொண்டு அறையிலிருந்து வெளியில் வந்தான்.

"பிளே ஸ்கூல் விசாரிக்கட்டுமாம்மா?"

சமையலறையில் பொருட்களை பிரித்து அடுக்கிக் கொண்டிருந்த அம்பிகாவிடம் வினவினான்.

"ஸ்கூல் சேர்க்கணும் தான் ருது. ஆனால் பிளே ஸ்கூல் இல்லை. எல்.கே.ஜி. அட்மிஷன் செக் பண்ணு. டூ மன்த்ஸ் தான் இருக்கு. அதுவரை வீட்டிலே ஃபிரியா இருக்கட்டும்" என்றவாறே மளிகைப் பொருட்கள் அடங்கிய டப்பாக்களை தனக்கு ஏற்றவாறு வைத்துக் கொண்டிருந்தார்.

"ஹ்ம்ம்... செக் பன்றேன் ம்மா" என்ற ருது, "ஆளுங்களே கிச்சனையும் செட் பண்ணியிருப்பாங்க. நீங்கதான் உங்களுக்கு வசதிபடுமாறு வைக்கணும் சொல்லி வேண்டாம் சொல்லிட்டிங்க. இப்போ பாருங்க, எவ்வளவு வேலை" என்றான்.

"சும்மா தானே இருக்கேன் ருது. அதுக்கு இதில் நேரம் போகுமே" என்றவர், "இந்த மனுஷன் காலையிலே கிளம்பி போயாச்சு. சாப்பிட்டாரா இல்லையா தெரியல" என்றார்.

"என்னால ரொம்ப கஷ்டம் உங்களுக்கு" என்றான் ருது.

அவனை முறைத்து பார்த்த அம்பிகா,

"எங்க பையனோட இருக்கிறது எங்களுக்கு கஷ்டமா?" எனக் கேட்டார்.

"ம்மா..."

"போடா... ட்யூட்டியில் ஜாயின் பண்ணனும் தானே. அதைப்பாரு" என்று அவனை விரட்டினார்.

அவர்கள் வருவதற்கு முன்பே வீடு ஏற்பாடாகியிருக்க... பொருட்களை கொண்டு வந்த ஆட்களே அனைத்தையும் பொருத்தி வைத்துவிட்டு சென்றிருந்தனர். அதனால் வீடு சில மணி நேரங்களில் தயாராகி இருந்தது. அவர்களுக்கும் வேலைப்பளு இல்லாமல் போனது.

"மார்னிங் ஜாகிங் போகும்போதே குவார்ட்டர்ஸ் ஏரியா சுற்றி பார்த்துட்டேன் ம்மா... பின்னாடியே ஒரு சூப்பர் மார்க்கெட் இருக்கு. பக்கத்துல நல்ல பெருசாவே பார்க் இருக்கு. பிளே கிரவுண்ட் கூட இருக்கு" என்றான்.

"ம்ம்ம்..."

"வேறெங்கும் போகனும்ன்னா சொல்லுங்க. நான் அழைச்சிட்டு போறேன்" என்றவன்,

"பாட்டியை தொல்லை செய்யாம குட் பாஃயா இருக்கணும் தேஷ். சேட்டை பண்ணக்கூடாது" என்று மகனின் கன்னத்தில் முத்தம் வைத்த ருது வாயிலை நோக்கி நகர்ந்தான்.

"வீடு எங்க இருக்கு? எந்த ஏரியா?"

அம்பிகா கேட்ட கேள்வியில் அவனது நடை நின்றது.

"யார் வீடு?"

"யாரை கேட்கிறேன் உனக்குத் தெரியும்."

"அது முடிந்த அத்தியாயம் ம்மா. ப்ளீஸ். மொத்தமா மறந்துட்டேன் நினைத்தேன். இல்லைன்னு இங்க வந்தபிறகு தான் தெரியுது. மறக்க ட்ரை பன்றேன். வேணாமே" என்றான்.

ருது அவனது உணர்வுகளை மறைக்காது வெளிப்படுத்துவது அம்பிகாவிடம் மட்டுமே. அவனது அன்னையிடம் கிடைத்த அன்பு பல மடங்காக தீபாவிடம் எவ்வித எதிர்பார்ப்புமின்றி கிடைப்பதால் இந்த வெளிப்படை நிலை அவரிடம் அவனுக்கு.

"மறந்திடுவியா?"

"ம்மா... ப்ளீஸ்." தழுதழுக்கிறான். ஆனாலும் தொண்டைக்குள் விழுங்க முயல்கிறான். வலி அவனுக்குத்தானே.

"நிஜமா வேணாமா?"

"நான் என்ன சொல்லனும்?"

"திரும்ப ஏத்துக்கமாட்டாங்க நினைக்கிறியா?"

"தேஷ் மட்டும் போதும்மா. நான் இப்படியே இருந்திடறனே!" என்றவன், அடைத்த தொண்டையை சரி செய்து,

"தேஷ்... அவனோட... முடியலம்மா" என்று எதையோ சொல்ல வந்தவன், முடியாது வேகமாக வெளியேறியிருந்தான்.

"அப்போவே சரி செய்திருக்கலாம். பெத்தவங்களுக்காக நீ சிலுவையை சுமக்கணும் இருக்கு" என்று முணுமுணுத்தவராக தேஷ்ஷுடன் சேர்த்து வேலையையும் பார்க்க ஆரம்பித்தார்.

_____________________________

ருது பணியில் சேர்ந்த ஒரு மணி நேரத்தில் தன் அதிரடியை காட்டத் துவங்கியிருந்தான்.

தன்னுடைய அலுவலகம் நுழைந்ததும் எவ்வித அறிமுகமும் வேண்டாமென்று மற்ற பணியாளர்களிடம் சொல்லிவிட்டான்.

முடித்த வழக்குகள் முடிக்காத வழக்குகள் என்று பிரித்து வைக்கக் கூறியவன், முடிக்காத வழக்குகளில் முந்தையது, பின் தங்கியது என பிரிக்கச் செய்தான்.

பின் தங்கிய பல வழக்குகளை யார் விசாரித்தது, இன்னும் ஏன் முடிக்கவில்லையென காரணங்களை கேட்டு துருவி எடுத்துவிட்டான்.

தற்போது சமீபத்தில் நடந்த வழக்குகள் ஒவ்வொன்றையும் அந்தந்த வழக்கு அதிகாரிகளிடம், அவர்களையே சொல்ல வைத்துக் கேட்டுக்கொண்டான்.

"எப்போ முடிப்பீங்க?"

ருதுவின் கேள்வியில் ஆள் மாற்றி ஆள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

"வெல்" என்று இருக்கையிலிருந்து எழுந்தவன், "என்னோட கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையங்களில், முடிக்கப்படாது மூடிய வழக்கென்று எதுவும் இருக்கக்கூடாது. அதற்காக உங்களது கற்பனை வளத்திற்கு தீனிப்போட்டு வழக்கினை முடித்திடக்கூடாது. வித் இன் ஒன் வீக்... எல்லாம் முடிஞ்சிருக்கணும். க்ளோஸ்ட் ஃபைல்ஸ் என் டேபிளுக்கு வந்திருக்கணும்" என்றான்.

ருதுவின் முகத்தில் கடுமையோ, கோபமோ இல்லை. ஆனால் அதீத அழுத்தம் தென்பட்டது.

தனது கூர்மையான பார்வையாலே தான் இப்படித்தான் என்று அனைவரையும் எட்ட நிற்க வைத்திட்டான்.

"கோ அகெய்ட்."

தான் பேசி முடித்தும் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவர்களை பார்த்துக் கூறியவன்,

"நீங்க ஸ்டேஷனில் இருக்கணும் அவசயமில்லை. கேஸ் முடிக்க உங்களோட தீவிரம் எந்த எல்லைக்குள்ளும் இருக்கலாம்" என்றான்.

ருது நினைத்திருந்தால் அந்தந்த வழக்குகளுக்கு ஏற்றவகையில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கலாம். அல்லது அவனே ஆராய்ந்து முடித்திருக்கலாம். அது முதல் நாளே அவர்களுக்கு அவன் மீது விரோதத்தை உண்டாக்கியிருக்கும். அவனது துறையில் நண்பர்களாக பழகாவிட்டாலும், எதிரியாக யாரையும் உருவாக்கிவிடக் கூடாது. அதற்காகவே அவர்கள் வழக்கை மீண்டும் அவர்களிடமே ஒப்படைத்திருக்கிறான்.

புது அதிகாரியிடம் நற்பெயர் எடுக்க வேண்டுமென்பதற்காகவே விரைந்து செயல்படுவர். ருது கணிப்பு என்றும் பொய்த்துப்போனதில்லை.

ஒன்றில் மட்டும் பொய்த்துப்போனது. அவனறியும் நேரம் எப்படி உணர்வான்?

வாகன ஓட்டியை அழைத்தான்.

"நம்ம கண்ட்ரோல் ஏரியா ஒரு ரவுண்ட் போய் வருவோமா?" எனக் கேட்டான்.

"உங்களுக்கு போலாம்ன்னா போலாம் சார்" என்றார் வாகன ஓட்டி மற்றும் டாணாக்காரரான மத்திய வயதுடைய கிருஷ்ணன்.

தொப்பியை அணிந்து வேக எட்டுக்களுடன் வெளியில் வந்த ருது, ஜீப்பில் முன் அமர, கிருஷ்ணன் வண்டியை சாலையில் செலுத்தினார்.

"யாருண்ணா அந்த கைலாஷ்?"

கிருஷ்ணனின் கைகளில் ஒருநொடி வாகனம் தருமாறி சீரானது.

"அரசியல்வாதியா?" அவரின் அமைதியில் அவனே கேட்டிருந்தான்.

"அரசியல்வாதிக்கும் மேல சார்" என்ற கிருஷ்ணன், "கைலாஷ் எந்த கட்சி ஆளும் கிடையாது. ஆனால் எந்தவொரு கட்சியும் அவன் சொல்லை மீறாது. ஆறு வருஷத்துக்கு முன்ன சின்னதா குவாரி ஆரம்பிச்சு தொழில் செய்யத் தொடங்கியவன். இன்னைக்கு சொல்லிக்கொள்ள முடியாத சொத்து. எப்படின்னு அவன் மட்டும் தான் அறிவான். செய்யாத பிஸ்னெஸ் இல்லை" என்றார்.

"ம்ம்ம்... ஆறு வருஷத்துக்கு முன்ன குவாரியில் விபத்து ஏற்பட்டு, ஒன்பது பேர் இறந்து போனது... இந்த கைலாஷ் குவாரியில் தானே?" எனக் கேட்டான். யோசனையாக.

அப்போதுதான் ருது தேர்வு முடிவுகள் வெளிவந்து பயிற்சிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த நேரம். அதுவரையிலான நிகழ்வுகள் மட்டுமே அவ்வூரைப்பற்றி அவனது நினைவுகளில் உள்ளது. அதற்கு பிறகு இரண்டு வருடங்கள் செவி வழியாக அறிந்தவையெல்லாம், கடந்த நான்கு வருடங்களில் அவற்றையும் தவிர்த்து ஒன்றுமே தெரிந்துகொள்ளாது இருந்துவிட்டான்.

"ஆமாம் சார்... அந்த கேஸில் உள்ளே போனவன், அங்கு அரசியல் போராட்டத்துக்காக அடியாள் சப்ளை செய்யும் கந்தனிடம் பழக்கம் ஏற்பட்டு, அவனோடு சேர்ந்து அரசியல்வாதிகளுக்கு திரைக்கு மறைவில் சின்ன சின்ன உதவிகள் செய்து... பெரிய புள்ளியா வளர்ந்து நிக்கிறான். ஆரம்பத்தில் அரசியல்வாதிகள் சொல்வதை செய்து வந்தான். இப்போ இவன் சொல்லுவதை அரசியல்வாதிங்க செய்வாங்க. நினைச்சா ஆட்சியையே மாத்திடுவான் சார்" என்று அனைத்து விவரங்களையும் அவர் சொல்ல அமைதியாகக் கேட்டுக்கொண்டான்.

ருது எதுவும் பேசாதிருக்க...

"அவன் மேல கை வைக்கிறதுக்கு முன்ன பலமுறை யோசிச்சிக்கோங்க சார்" என்றார் கிருஷ்ணன்.

"இப்போதைக்கு அந்த ஐடியா இல்லை. பின்னாடி பார்ப்போம்" என்ற ருது, "முடிக்காமல் பெண்டிங்கில் இருந்தது எல்லாம் அவனோட ஆளுங்க வழக்கா?" என்றான்.

"ஆமாம் சார்... நீங்க எவ்ளோ டைம் கொடுத்தாலும் அந்த கேசெல்லாம் முடிக்கமாட்டாங்க" என்றார்.

"ம்ம்ம்ம்..."

"கல்யாணம் ஆகிருச்சா சார்?"

"நாலு வயசுல பையன் இருக்கான்" என்ற ருது, "குவார்ட்டர்ஸ் பக்கம், நல்ல ஸ்கூல் சொல்லுங்கண்ணா?" எனக் கேட்டான்.

பள்ளியின் பெயரை சொல்லிய கிருஷ்ணா, "என் பொண்ணு கூட அங்க தான் எய்த் படிக்கிறாள் சார். டீச்சிங் நல்லாயிருக்கு" என்றார்.

"அட்மிஷன் டிடெயில்ஸ்?"

"வெப்சைட் தான் செக் பண்ணனும் சார். அதுலே அப்ளை பண்ணிடலாம். செலெக்ட் பண்ணிட்டாங்கன்னா மெயில் வரும். அவங்க கேட்கிற ஆவணங்கள் எல்லாம் வர சொல்லுற தேதியில் எடுத்துட்டு போகணும்" என்றார்.

"ஸ்கூல் சேர்க்கிறதுக்கே இவ்வளவு வழிமுறையா?" என்ற ருது, "இந்த சிஸ்டம் ரொம்ப கஷ்டம் தான்" என்றான்.

இவ்வளவு பேசியபடி வந்தாலும், ருதுவின் கண்கள் சுற்றுப்புறத்தை கவனிக்கத் தவறவில்லை.

"ஆறு வருஷத்தில் நிறைய மாறியிருக்கு" என்றான்.

"நீங்க சென்னையா சார்?"

"ம்ம்ம்... ட்ரைனிங்காக இங்கிருந்து போனேன்" என்று தடுமாறியவன், கண்களை மூடி திறந்து, "இப்போது தான் மீண்டும் வருகிறேன்" என்றான்.

இடையில் நான்கு வருடங்களுக்கு முன் வந்து சென்ற நாள் நினைவில் உதிக்க... உணர்வோடு வலி பரவும் நொடியாய் அமைந்தது.

மறக்கப்பட வேண்டியவை யாவும் நினைவோடு கலந்து உறவாடுவதே ஒரு உறவின் மீது நாம் கொண்ட காதலின்/அன்பின் ஆழம்.

எளிதில் அனைத்தும் துறந்திடுவானா?

மனதை திசை திருப்ப, பார்வையில் கூர்மைக் காட்டினான்.

போக்குவரத்து சமிக்கை பகுதி. அதன் இருபுறமும் பேருந்து நிற்கும் நிழற்குடை இருந்தது.

மாலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு சென்று திரும்போவோர் என பலதரப்பட்ட மனிதர்களோடு பேருந்து நிற்குமிடம் சற்று கூட்டமாகவே காட்சியளித்தது. அதீத பரபரப்போடு.

"ரெட் லைட் எரியுது. சிக்னலில் நிக்கிறோம் அப்படின்னு தெரியுதுதானே! அப்புறம் எதுக்கு அந்த வண்டியை உறுமிக்கிட்டே இருக்கானுங்க தெரியல. இப்போலாம் எட்டாவது படிக்கிறதே பெரிய பைக்கு ஓட்டுது. என்னவோ ராக்கெட் ஓட்டுற சீன். கீழ விழுந்தால் வண்டியை தானா தூக்க முடியுமா?" என்று தங்களுக்கு முன்னால் ஆக்சலேட்டரை சுழற்றிக்கொண்டே நின்றிருந்த இருசக்கர வாகன ஓட்டியை பார்த்து கிருஷ்ணன் புலம்பிட, ருதுவின் கண்கள் தங்களுக்கு பக்கவாட்டில் இருந்த பேருந்து நிறுத்துமிடத்தில் பதிந்தது.

ஏதோ ஒன்று அவனது மூளையை கவனிக்கத் தூண்டியது.

'அங்க என்னவோ தப்பா தெரியுது.' தனக்குத்தானே சொல்லிக்கொண்டவனாக, பார்வையில் கூர்மையை தேக்கி ஆராயந்தான்.

ஒரு இளம் பெண் பேருந்திற்காக காத்திருக்க, அவளுக்கு பின்னால் இளைஞன் ஒருவன் மாஸ்க் அணிந்தபடி அப்பெண்ணையே பார்த்திருந்தான். அவனது விழிகளில் கள்ளத்தனம். சுற்றி இருப்பவரின் மீது பார்வை அலசல். அவனது உடல் மொழியில் தெளிவில்லை. மொத்தத்தில் அவனிடம் நிதானமில்லை.

அவனது கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த அடையாள அட்டையும், மாட்டியிருந்த பையும் மட்டுமே அவனை கல்லூரி மாணவனாக அடையாளப்படுத்தியது. தோற்றம் நிச்சயம் அவன் மாணவன் என்று கூறாது.

ருதுவின் பார்வை அவனது கைகளை ஆராய்ந்தது. கத்தி, பாட்டில் ஏதேனும் வைத்திருக்கிறானா என்று. அதற்கு காரணம் அப்பையனின் கவனம் முழுக்க தனக்கு முன்னிருக்கும் பெண்ணின் மீதே நிலைத்திருந்தது.

இப்போதுதான் பொது இடத்தில் பெண்ணின் மீது... காதலிக்க மறுத்தாள் என்பதற்காக கொலை, ஆசீட் வீசுவதெல்லாம் எளிதாகிவிட்டதே. அந்த எண்ணம் ருதுவிடம்.

அவனது கைகள் வெறுமையாக இருந்தது.

லேசர் விழி கொண்டு போலீசின் ஆராயும் தன்மையில் அவனை ருது பார்வையால் மேலும் ஊடுருவினான். அவனிடன் எவ்வித ஆயுதமும் இல்லையென்பதை உறுதி செய்த ருது, அவனின் மீது சந்தேகம் அதிகமாகவே வண்டியிலிருந்து கீழிறங்கினான்.

"அப்படி ஓரமா நிறுத்துங்கண்ணா" என்றவன் இரண்டு அடிகள் முன் வைக்க, குறுக்கே நுழைந்த பேருந்து... நிறுத்தம் தள்ளி நின்றது.

பேருந்தில் ஆட்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்க... பேருந்து நகரத் தொடங்கிய நொடி அப்பெண்ணின் கழுத்திலிருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு வேகமாக ஓடிச்சென்று பேருந்தில் ஏறியிருந்தான் அவன்.

இமைக்கும் நொடியில் நடந்துவிட்ட நிகழ்வை உள்வாங்கிய ருது, மின்னலென பாய்ந்தோடி பேருந்தில் ஏறினான்.

ருதுவின் காக்கி உடை யாரென அவனை அடையாளப்படுத்திட... அவன் ஏறியதை கண்ணாடி வழி கண்ட ஓட்டுநர் பேருந்தை சட்டென்று நிறுத்தினார்... அந்த இளைஞன் முன்பக்க வழியாக தப்பித்து ஓடினான்.

இரண்டே தாவில் அவனின் சட்டை காலரை பற்றி இழுத்திருந்தான் ருது.

அவனை இழுத்துக்கொண்டு ருது கூட்டம் கூடிய இடத்திற்கு வர,

"நல்ல பலமான அடி சார்" என்றார் கிருஷ்ணா.

"என்ன நடந்தாலும் வேடிக்கை பார்ப்பது மட்டும் நிற்காது" என்று சுற்றி நின்ற கூட்டத்தைப் பார்த்து ருது முணுமுணுத்தவனாக, "நீங்க ஆட்டோ பிடித்து இவனை ஸ்டேஷன் கூட்டிட்டுப்போங்க" என்றதோடு, "பக்கத்தில் ஏதும் ஹாஸ்பிடல் இருக்கா" எனக்கேட்டு தெரிந்தவனாக, சங்கிலியை பிடித்து இழுத்ததில் பின்பக்கமாக விழுந்ததால், அப்பெண்ணிற்கு தலையில் நல்ல அடி. அதோடு கழுத்திலும் சங்கிலி அறுத்த வேகம் வெட்டியிருந்தது.

தானே அப்பெண்ணை ஜீப்பில் ஏற்றியவன்,

"ஸ்டேஷனுக்கு அழைத்து யாரும் லேடி கான்ஸ்டபிள் ஹாஸ்பிடல் வரச்சொல்லுங்க" என்று சாலையில் சீறினான்.

ருது வந்தது இனியன் வேலை செய்யும் கல்லூரி மருத்துவமனை தான். அது அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் பொது மருத்துவமனை.

பெண் காவலர் வரும்வரை அங்கிருந்தவன்...

"அவங்க கண் விழித்ததும் ரிப்போர்ட் எழுதி வாங்கிக்கோங்க. அதுக்கு முன்ன, அவங்க வீட்டை விசாரித்து தகவல் கொடுங்க" என்று வெளியில் வந்தான்.

வாகனம் தருப்பிக்குமிடம் நோக்கி செல்லும் போதுதான், நினைவு வந்தவனாக...

ஷிவன்யாவின் எண்ணுக்கு அழைத்தான்.

முதல் ஒலியிலேயே ஏற்றிருந்தாள்.

"மாஸ் பண்ணிட்டிங்க போங்க. சோஷியல் மீடியா, ரீல்ஸ், ஷார்ட்ஸ்'ன்னு உங்க வீடியோ தான் செம வைரல். அதுவும் பஸ்ஸில் நீங்க தாவி ஏறியது இருக்கே... என் பிரண்ட்ஸ்க்கெல்லாம் நீங்க க்ரஷ் ஆகிட்டிங்க" என்று ருதுவை பேசவே விடாது மூச்சுவிடாது சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவள் சொல்லிய பின்னர் தான் அந்த நிகழ்வு காணொளி எடுக்கப்பட்டிருப்பதையே ருது அறிந்தான்.

'மொபைல் வச்சுக்கிட்டு இவனுங்க பண்ணுற அலும்பு... ஷ்ஷ்ஷ்... வீடியோ எடுத்த எவனுக்கும் அடிபட்டு விழுந்து கிடந்த பொண்ணை காப்பாத்தனும் தோணல போல' என்று விரக்தியாக நினைத்துக் கொண்டான்.

"பேசிட்டியா? நான் இங்கே தான் உன் காலேஜ் பார்க்கிங்கில் இருக்கேன்" என்றான்.

"ஹேய்... வெயிட். இதோ வந்துட்டேன்" என்றவள் கிட்டத்தட்ட ஓடி வந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.

"ஹாய் டார்லிங்..."

ஷிவன்யா அவ்வாறு சொல்லியபடி அங்கு ஜீப்பில் சாய்ந்து நின்றிருந்த ருதுவை பக்கவாட்டாக அணைத்த சமயம் தான்... தன்னுடைய பணி முடிந்து அங்கு வந்தான் இனியன்.

"ருது..." மெல்ல அவனது உதடுகள் உச்சரிக்க, கண்கள் பனித்தது. ஒருநொடி சகலமும் அவனுக்கு நின்று இயங்கியது. ஓடிச்சென்று நண்பனை இறுக அணைத்துக்கொள்ளும் வேகம். உணர்வுகளை அடக்கியவனாக, சட்டென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு பின்னால் தன்னை மறைத்துக் கொண்டான்.

"அடிப்பட்ட பொண்ணை இங்கு தான் அட்மிட் பண்ணியிருக்கீங்களா?" என்று ஷிவன்யா கேட்டிட,

"ம்ம்ம்" என்றவன், "நீயென்ன சாப்பிடுறதே இல்லையா? போனமுறை பார்த்ததுக்கு மெலிஞ்சு தெரியுற" என்றான். அவளின் தோள் மீது கையிட்டு தனக்கருகே நிறுத்திக்கொண்டவனாக.

"அதெல்லாம் இல்லை" என்றவள், "தேஷ் எப்படியிருக்கான்?" எனக் கேட்டாள்.

அவர்கள் பேசுவதெல்லாம் இனியனுக்கு தெளிவாகக் கேட்டது.

இவளே அவனுக்கு என்ன உறவென்று தெரியாதபோது, தேஷ் யாரென்று சிந்தித்தான்.

ருதுவிற்கு ஷிவன்யா மீதான அக்கறை அவனின் பேச்சில் தென்பட, இனியன் என்ன மாதிரி உணர்கிறான் என்று அவனுக்கேத் தெரியவில்லை.

இமையாளின் மீது ருது காட்டிய அக்கறையெல்லாம் கண்முன் தோன்றி கண்களை கரிக்கச் செய்தது.

"குட்" என்ற ருது, "எப்போ ஹாஸ்டல் வெக்கேட் பன்ற? மார்னிங் நீ பதில் சொல்லலையாம்?" என்றான்.

"இந்த வீக்கெண்ட். வந்திடுங்க. ரிஜிஸ்டரில் சைன் பண்ணனும்" என்றாள்.

"ஓகே" என்ற ருது, "ஸ்டேஷனில் வொர்க் இருக்கு. நைட் கால் பன்றேன்" என்று ஜீப்பில் ஏற முற்பட...

"டார்லிங்" என்று இடையில் கைகளை குற்றி, அவனை முறைத்தபடி இழுத்தாள்.

நீண்ட இதழ் விரிப்போடு தன் இரு கரங்களினாலும் அவளின் கன்னம் பற்றி ஆதுரமாக நெற்றி முட்டி விலகியவன்...

"இதைவிடவே மாட்டியா?" என்று வண்டியில் ஏறியிருந்தான்.

"பிடிச்சிருக்கே! நீங்க இப்படி பண்ணும்போது உங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்ன்னு என்னால் பீல் பண்ண முடியுது" என்றாள்.

"சரி... சரி... டேக் கேர்" என்று வண்டியை உயிர்ப்பித்த ருதுவின் மனமெல்லாம் மெல்லிய பாரம் ஏறுவதைப்போல் இருந்தது.

தனக்கு நெருக்கமான உறவு பக்கமிருந்து விலகிச் செல்வதைப்போல் உணர்ந்தான்.

'யாரோ என்னை நோட் பன்றாங்க.' தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
_46a1824c-cfc7-4eb3-86f9-4cb64723a020.jpeg


தூரமே தூரமாய் 8

காவல் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த ருதுவின் எண்ணம் முழுக்க இனியன் தான் விரவியிருந்தான்.

அங்கு ஷிவன்யாவிடம் பேசிக்கொண்டிருந்த தருணம் இனியனின் நினைவு தான்.

'பக்கம் இருக்கின்றானா?' எனும் உள்ளுணர்வு.

ஆனால் தன்னை பார்த்துவிட்டு பக்கமிருந்தும் தன் முன்னால் வராமல் இருந்திடமாட்டானென்று ருது நம்பியதால் மனதின் உணர்வை புறம் ஒதுக்கியிருந்தான்.

தங்கையின் மனதின் வெளிப்படையானப் பேச்சையும், முதல் முறை அவளின் வலி நிறைந்த கண்ணீரையும் காணாமல் இருந்திருந்தால் ருதுவை பார்த்ததும் கோபமேதுமின்று நண்பனை பக்கம் சென்று பார்வையில் நலமறிந்து அணைத்து விடுத்திருப்பானோ?

நட்புக்குள் உரிமையாய் முகிழ்க்கும் கோபமே தனி அழகு. தனியான உணர்வு. வார்த்தைகளற்று உள்ளுக்குள் ஸ்ரீஹரிக்க வேண்டிய ஒன்று.

ருது... இங்கு வந்த கணம் முதல் இனியனை பார்க்க வேண்டுமென துடிக்கும் மனதை, அவனை கண்டால் இமையாளையும் காண நேரிடுமோ அல்லது அவளைப்பற்றி அறிய நேரிடுமோ என்று இந்நொடி வரை நண்பனைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டுமன்ற எண்ணத்தையே தவிர்த்து வருகிறான்.

"கல்யாணம் ஆகியிருக்கும்ல?" கேட்டுக்கொண்டவனின் நெஞ்சோடு தீ மூட்டிச் சென்றது ருதுவின் காதல் கணங்கள்.

'ருது நினைப்பு எங்கப்போகுது உனக்கு?' தன்னையே கடிந்து கொண்டான்.

"உனக்கு தேஷ் இருக்கான். நீ அவள் வேண்டான்னு போயிட்ட... இப்போ அவளுக்கு கல்யாணமாகியிருந்தால் என்ன?" வெளிப்படையாய் கேட்டுக்கொண்டவனுக்கு அவளின் தற்போதைய நிலை தெரிந்தால் போதுமென்று தோன்றியது.

'நிச்சயம் இனியன் அவளை மீட்டு நல்வாழ்வு அமைத்துக் கொடுத்திருப்பான். அவள் சந்தோஷமாக நன்றாக இருந்தால் போதும்.' இந்த நான்கு வருடங்களில் ருது வேண்டுவது இது ஒன்று மட்டுமே!

தான் விட்டு வந்த இடத்திலேயே அவள் தேங்கி நின்றுவிடக் கூடாதென்பது.

அவள் அங்கேயே மரித்துவிட்டாள் என்பதை ருதுவிற்கு யார் சொல்வது?

விட்டுச்செல்வதற்கு அவனுக்கு ஒரு காரணம் இருக்குமேயாயின்... அவனை விடாது பற்றிக்கொள்ள அவளுக்கும் ஒரு காரணம் உள்ளதே. காதல் எனும் ஆகப்பெரும் காரணம்.

உன்னையே சரணாகதி அடைந்துவிட்ட மனம் எளிதில் துறந்திடுமா என்ன?

திருமணம் முடிந்து பிள்ளைக்கு தகப்பன் எனும் நிலையில், அவனாலே முதல் காதலை துறந்திட முடியாத நிலையில், அவளை அவன் விட்டுச்சென்ற நிலையென்ன... அவள் கடந்து வந்த வலிகள் தெரியாது அவனாக எண்ணும் எண்ணங்கள் என்ன?

காலம் அவனைப் பார்த்து முறுவலித்தது.

நினைவுகளின் சுழற்சியில் கண் முன்னே தன் நெஞ்சத்தின் ஆழத்தில் பனியாய் உறைந்திருப்பவளின் பிம்பம் என்றும்போல் இன்றும் உருகத் தயாராக, இதயத்தின் தகிப்பை நொடியில் சீர் செய்து சாலையில் கவனமானான்.

காவல் நிலையத்தின் உள்ளே நுழைந்ததும் கிருஷ்ணனிடம் பார்வையால் வினவினான்.

"வாய் திறக்கமாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்ணுறான் சார்."

"நீங்க என்ன கேட்டு விசாரிச்சீங்க?" என்று கிருஷ்ணனிடம் வினவிய ருது, தரையில் ஒற்றை பாதம் ஊன்ற, அங்கிருந்த மேசையில் குதித்து அமர்ந்தான்.

"எதுக்கு செயின் ஸ்நாச் பண்ண? இது ரெகுலரா... உன் தொழிலா? அப்படின்னு தான் சார்" என்றார் அவர்.

"ம்ம்ம்..."

மற்ற காவலர்களும் ருதுவின் தோரணையில் கொஞ்சம் படபடத்து இருந்தனர்.

"அவன் ட்ரக்ஸ் எடுத்திருக்கான். அதை நோட் பண்ணலையா நீங்க?"

ருது கேட்ட பார்வையில் கிருஷ்ணனுக்கு தன்னைப்போல் கால்களில் சிறு நடுக்கம் வந்தது.

"அது சார்..." என்று அவர் இழுக்க,

"எஸ்.ஐ சார் நோட் பண்ணலையா?" என்று உதவி ஆய்வாளர் வெங்கட்டிடம் கேட்டான் ருது.

"சார்" என்ற வெங்கட், "இது லிக்கர் மாதிரி ஸ்மெல் வைத்து கண்டுபிடிக்க முடியாதே சார். அதோடு, இவன் நல்ல ஸ்டெடியா இருக்கான். அதனால் ட்ரக்ஸ் எடுத்திருக்கான்னு ஃபைண்ட் பண்ண முடியல சார்" என்று நேர்படவேக் கூறினான்.

"வெல்" என்ற ருது,

"அவன் பேக் செக் பண்ணிங்களா?"

"அது.. அது வந்து... சார்..." கிருஷ்ணன், வெங்கட் இருவரும் ஒருசேர திணறினர்.

"ஹாஸ்பிடலில் இருக்க கான்ஸ்டபிள் நேம் என்ன?" தனக்கு பக்கவாட்டாக நின்றிருந்த பெண் காவலரிடம் கேட்டான்.

"ராதிகா சார்."

"அவங்களுக்கு கால் செய்து சிட்டுவேஷன் என்னன்னு கேட்டு, எனக்கு அப்டேட் பண்ணுங்க" என்றான்.

அடுத்த சில நிமிடங்கள் ருதுவிடம் அமைதி.

"சார்..." வெங்கட் அழைக்க, புருவம் உயர்த்தினான் ருது.

"நெக்ஸ்ட் மூவ்...?"

குதித்து இறங்கிய ருது இரு கை விரல்களையும் கோர்த்து தலைக்குமேல் உயர்த்தி சோம்பல் முறித்திட... அவனை வினோதமாக பார்த்தனர் அனைவரும்.

"எல்லாரும் வேலையை பாருங்க" என்றவன், "அவன் ஸ்டெடி மாதிரி தெரிந்தாலும், ட்ரக்ஸ் டாமினேஷனில் தான் இப்போ இருக்கான். கொஞ்சம் தெளிந்ததும் எனக்கு இன்பார்ம் பண்ணுங்க" என்று கிருஷ்ணனிடம் உரைத்தான்.

"கம் வித் மீ வெங்கட்" என்ற ருது தனது அறைக்குள் நுழைய...

"என்னண்ணா... பார்வையாலே தொண்டைக்குழியை அடைக்கிறாரு?" என்றான் வெங்கட்.

"அவரு உங்களை அவரோடவே உள்ளே கூப்பிட்டாரு தம்பி. நீங்க போகாம என்கிட்ட கேள்வி கேட்டுட்டு நிக்கிறீங்க" என்று கிருஷ்ணன் சொல்லிய பின்னரே ருதுவின் ஆளுமையில் சுயம் தொலைத்து நின்றிருக்கிறோம் என்பது உணர்ந்து வேகமாக ருதுவின் அறைக்கு ஓடினான் வெங்கட்.

"யா... வெங்கட்! **** கலந்து ஜூஸ் கொடுங்க. உடனே ரிலீவ் ஆகிடுவான்."

அனுமதி பெற்று உள்ளே வந்த வெங்கட்டிடம், அந்த மாணவனிடம் போதைப்பொருளின் தாக்கம் முற்றிலும் குறைவதற்காக மருந்து ஒன்றை கூறி, பழச்சாற்றுடன் கொடுக்கக் கூறினான் ருது.

"சார் இன்னும் கொஞ்ச நேரம் விட்டால் அவனே தெளிஞ்சிடுவான்" என்று வெங்கட் கூறிட, அவனை பார்வையால் குத்தினான் ருது.

"சார்..."

"டைம்... காலநேரம் டாக்டர்ஸ்க்கு மட்டும் உரித்தானது இல்லை எஸ்.ஐ சார். காவல்துறையைச் சேர்ந்த நம்முடைய நேர விரயமும், கால தாமதமும் கூட ஒரு உயிருக்கு ஆபத்தாக அமையும்.

"நம்முடைய முதல் அலட்சியம்... கால விரயம்" என்றான். அத்தனை அழுத்தமாக.

"சாரி சார்!"

"சொன்னதை செய்யுங்க எஸ்.ஐ சார்."

'ஒரு பத்து நிமிடத்திற்கு முன்னால் வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்.' எத்தனை உண்மையான வார்த்தைகள் இவை. இது மருத்துவர்களுக்கு மட்டும் உரித்தானது இல்லை. காவலர்களுக்கும் பொருந்தும். சாதிக்க துடிக்க ஒவ்வொரு சாதனைக்கு பின்னாக எடுத்து வைக்கும் சிறு அடிகளுக்கும் பொருந்தும்.

ருதுவிற்கு பிடிக்காத ஒன்று. நேரத்தை வீணடிப்பது.

அந்த நேர விரயத்தால் அவன் இழந்தது ஓர் உயிரை. அதனின் தாக்கம் இன்றளவும் ஒவ்வொரு செயலிலும் அவனிடம் தென்படும்.

ஒவ்வொரு மணித்துளியும் மிக முக்கியமானது. அன்று புரிந்துகொண்டது. அவனை வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு காரணமாகிப்போனது.

வெங்கட் நகர்ந்ததும் இருக்கையில் கண்மூடி அமர்ந்த ருதுவின் மனதில் தற்போது பிடிப்பட்டிருக்கும் மாணவனின் எண்ணம் தான். அவனை பேருந்து நிலையத்தில் கண்டது முதல், இந்நொடி இரும்பு கம்பிகளுக்கு பின்னால் அவனை பார்த்தது வரையிலான அவனின் சிறு சிறு அசைவையும் அவதானித்தான்.

"சார்... நவ், ஹீ இஸ் ஓகே!"

பட்டென்று கண்களை திறந்த ருது, எதையோ தேடும் வேகத்தில்... அந்த இளைஞன் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைந்தான்.

நடுங்கியபடி இருக்கையில் அமர்ந்திருந்த மாணவனின் முன்பு சென்று அமர்ந்த ருது,

"எந்த காலேஜ்?" எனக் கேட்டான்.

முதலில் தன்னை விசாரித்த காவலர்கள் போல், இவனும் அடித்து உதைக்கப் போகிறானென பயந்து இருந்தவன், ருதுவின் அமைதியான பேச்சில் நடுக்கம் குறைந்து... தளர்ந்து அமர்ந்தான்.

அவன் சொல்லாது அமைதியாக இருக்க...

அவனது கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் அடையள அட்டையை தூக்கி பார்த்தான்.

"அசோக்... என்னைப் பார்க்கணும்" என்ற ருதுவின் குரலை அவனால் அலட்சியம் செய்திட முடியவில்லை.

தன்னைப்போல் அசோக்கின் கண்கள் ருதுவின் முகத்தில் நிலைத்தது.

"குட்..." என்ற ருது, "யாரது?" எனக் கேட்டான்.

அங்கு நின்றிருந்த கிருஷ்ணா மற்றும் வெங்கட்டிற்கு ருதுவின் இந்த மென்மையான அணுகுமுறை ஆச்சரியமாக இருந்தது.

ருதுவின் பீகார் வழக்குகளை, ருது தங்களுக்கு தலைமையாக வருகிறான் என்றதும் மற்ற காவலர்கள் தேடி அலசி தெரிந்து கொண்டிருந்தனர்.

அங்கு அதிரடியாக சுழட்டி ஆடியவன், இங்கு அமைதியாக செயல்பட்டால் அவர்களுக்கு ஆச்சரியமாகத்தானே இருக்கும்.

"யாருன்னு சொல்லிட்டால் நீங்க வீட்டுக்கு கிளம்பிடலாம்" என்றான் ருது.

"சார் அதெப்படி விட முடியும். ட்ரக்ஸ் கேஸ். அவன் பையினை நீங்க செக் பண்ண சொல்லி ஆராய்ந்ததில் ரெண்டு சின்ன பாக்கெட் பவுடர் கிடைச்சிருக்கு. அத்தனை எளிதில் வெளிவிடும் கேஸ் இல்லை இது" என்று வெங்கட் முன்வந்து கூறினான்.

"ம்ம்ம்... புரிஞ்சுதா?" என்று வெங்கட்டை கைகாட்டி அசோக்கிடம் வினவிய ருது,

"யாரது?" என்றான்.

"அவன்... காலேஜ் பக்கத்து பேட்டையில் இருக்கும் காந்தா சார். என் கிளாஸிலே அவனோட பேட்டை பசங்க இதை ஈஸியா விக்கிறாங்க" என்றான்.

வெங்கட் சொல்லியதில்... இதில் மாட்டினால் ஆயுளுக்கும் சிறை தான் என்பதை புரிந்துகொண்ட அசோக், ருது உண்மையை சொன்னால் விட்டு விடுகிறேன் என்று சொல்லியதில் நம்பிக்கை வைத்து சொல்லிவிட்டான்.

அசோக்கின் அடையாள அட்டையை கழட்டிய ருது, கிருஷ்ணனிடம் நீட்டி,

"இதிலிருக்கும் அவனது அப்பா நெம்பருக்கு போன் போட்டு வரச்சொல்லுங்க" என்றான்.

"சார்..." அசோக் அதிர்ந்திட,

"இப்போ உன்னை நான் சாதாரணமா வெளியில் விட்டால், திரும்பவும் இதை நீ செய்வ... ட்ரக்ஸ் வாங்க பொண்ணோட செயினை ஸ்நாச் பன்ற நீ, நாளைக்கு கொலை செய்யவும் வாய்ப்பிருக்கு இல்லையா?" என்று தன் தாடையை நீவியவாறு கேட்ட ருது...

"காக்கியும், கருப்பு அங்கியும் கொடுக்கும் தண்டனையை விட, பெத்தவங்க கண்ணீருக்கு பவர் அதிகம். அந்த கண்ணீர் என்னவும் செய்யும்" என கடந்த கால அனுபவத்தில் தன்னிலை மறந்து மொழிந்தவன், அழுந்த கண்களை மூடித் திறந்தவனாக...

"இருபது வயதிலே வாழ்க்கையை தொலைத்திட வேண்டான்னு தான் உன்னை விடுறேன். அத்தோடு உன்னை பிடிச்சு உள்ளே போடுவதை விட, இதுக்கு மூலமான ஆணிவேரை பிடிக்கணும். அப்போதான் உன்னை மாதிரி தெரிந்தே சீரழியும் பலபேரை காக்க முடியும்" என்று வெளியேறினான்.

"இவரை புரிஞ்சிக்கவே முடியல சார்."

"அவர் சொன்னதை செய்வோம். வாங்க" என்று கிருஷ்ணனுடன் வெளியில் வந்தான் வெங்கட்.

"வெங்கட்." ருதுவின் சிம்ம குரலுக்கு வெங்கட் பாய்ந்தோடினான் என்று தான் சொல்ல வேண்டும்.

"அசோக் பேரண்ட் வந்ததும், எழுதி வாங்கிட்டு வெளியில் விடுங்க" என்றான் ருது.

"ஓகே சார்."

"தென்... அந்த பேட்டைக்கு போகணுமே!" என்றான்.

வெங்கட்டின் முகத்தில் அப்பட்டமான பீதி.

"கண்டிப்பா போகணுமே!" இருக்கையின் கையில் தன்னுடைய கை முட்டி குற்றி, தாடையை நீவியவனாக ருது சொல்லிய பாவனையில் வெங்கட்டின் தலை தானாக ஆடியது.

"உங்க பயத்துக்கான காரணம்?"

"காந்தா கைலாஷ் ஆளு சார். அவன் மேல் கை வைத்தால், நம்ம ஆபிசையே கொளுத்திடுவானுங்க!"

"ம்ம்ம்... அதையும் பார்த்திடலாம்" என்று தன்னிரு தொடையிலும் உள்ளங்கையால் தட்டியவனாக எழுந்த ருது...

"கிருஷ்ணன்" என்று அலுவலகம் விட்டு வெளியில் சென்றான்.

ருதுவிற்கு பின்னால் கிருஷ்ணன் வேகமாக செல்ல...

தனக்கு கீழ் பணிபுரியும் மற்ற காவலரிடம், அசோக்கின் பெற்றோர் வந்தால் செய்ய வேண்டிய நடைமுறையை செய்ய சொல்லிவிட்டு, வெங்கட் ஓடிச்சென்று ஜீப்பில் ஏறியிருந்தான்.

"நீங்க பயப்படுறீங்க நினைத்தேன்."

ருது வெங்கட்டை பாராது மொழிய,

"அவங்களைப்பற்றி உங்களுக்குத் தெரியாதே சார்" என்றான் வெங்கட்.

சட்டென்று அவனை திரும்பி பார்த்த ருது...

"ஆஹான்... அப்போ எனக்கு காவலா வரேன்னு சொல்லுங்க" என்று இரு புருவத்தையும் ஒருசேர உயர்த்தி இறக்கினான்.

ருதுவின் அதிரடியை கேள்விப்பட்டிருந்தவர்களுக்கு, இந்த ருது புரியாத புதிராகவே காட்சியளித்தான்.

மியூசிக் பிளேயரை ஆன் செய்த ருது,

"சாங்ஸ் பிடிக்குமா ரெண்டு பேருக்கும்?" எனக் கேட்டான்.

'இந்நேரத்தில் பாட்டு அவசியமா?' என்று இருவருக்கும் ஒன்றாகத் தோன்றிட, ஒருவரையொருவர் கண்ணாடி வழி பார்த்துக்க கொண்டனர். கிருஷ்ணன் மற்றும் வெங்கட்.

"பதிலே இல்லை."

"பிடிக்கும் சார்." இணைந்து கூறியிருந்தனர்.

"எனக்கு நல்லா பெப்பியா இருக்க சாங்ஸ் தான் பிடிக்கும். லைக் தலைவன் தனுஷ் சாங்ஸ். கேட்கும்போதே ஃபுல் பாடி வைப் ஆகனும்" என்றான்.

"சார் இந்த சிட்டுவேஷனுக்கு இந்த பேச்சு வேணுமா?" வெங்கட் வாய்விட்டே கேட்டுவிட்டான்.

ருதுவிடம் அட்டகாசமான சிரிப்பு.

"நிஜமாவே பயந்து வருது சார்" என்ற வெங்கட், "நாம் ஸ்டேஷனில் கிளம்பிய அடுத்த செகண்ட், அங்க வரோம்ன்னு தகவல் போயிருக்கும் சார். அந்த காந்தா என்ன செய்வான்னு நினைக்கவே அச்சமா இருக்கு சார்" என்றவனின் தொண்டைக்குழி ஏறியிறங்கியது.

"ரொம்பத்தான் பில்டப் கொடுக்கிறீங்க எஸ்.ஐ சார்" என்ற ருது, "அவனை பார்த்தே ஆகணும்... க்யூரியஸ் அதிகமாகிட்டே இருக்கு" என்றான்.

அந்நேரம் சரியாக,

"நல்லவன் சாவதும்... கெட்டவன் வாழ்வதும் நம்ம கையில இல்லை..." என்று பாடலின் வரிகள் ஒலிக்க...

"ஃபேக்ட்" என்று முறுவலித்தான் ருது.

"அந்த ஏரியா பார்க்கவே... சிட்டியில தனித்தீவு மாதிரி தெரியும் சார். கைலாஷ்'ன் குட்டி ராஜ்ஜியம் அது. அவனுக்கு அடியாள் முதல், பெரிய அறிவாளி வரை அங்கிருந்து தான் உற்பத்தி செய்றானுங்க" என்றார் கிருஷணன்.

"அங்க சின்னதுல இருந்து பெருசுங்க வரை கைலாஷ் மூலமாக, காந்தா சொல்றதைத்தான் செய்வாங்க. சட்டத்துக்கு புறம்பாக அவனுங்க பண்ணாத தொழிலே இல்லை சார். சுண்டல் பீச் விக்கிறதுல இருந்து, முதல்வர் ஆபீஸ் வரை அவனுங்க ஆளுங்க இருக்கானுங்க. பீச்ல கல்லை விக்கிறவன் கம்ப்யூட்டரில் பூந்து விளையாடுவான். அங்கிருக்க ஒவ்வொரு உயிரும் கைலாஷ்க்கு அக்மார்க் விசுவாசிங்க" என்று நீண்டு கூறினான் வெங்கட்.

"இவ்வளவு தெரிந்தும் ஏன் அரேஸ்ட் பண்ணாமல் இருக்கீங்க?" ஓடும் பாடலுக்கு ஏற்றவாறு தனது தொடையில் விரல்களால் தாளம் தட்டியபடி இவர்களின் செய்திகளிலும் கவனம் வைத்து வினவினான்.

"ம்க்கும்... அந்த காந்தாவை தூக்கிட்டா போதும். கைலாஷின் மொத்த சிஸ்டமும் டவுன் ஆகிடும். இந்த நினைப்போட போன பல போலீசுங்க இப்போ அவனுங்க ஆளுங்க. அப்படியும் துள்ளுன போலீஸ் என்ன ஆனாங்கன்னே தெரியல" என்று வெங்கட் சொல்ல, "தெரிஞ்சே யாராவது சாவைத் தேடி போவாங்களா சார்?" என்றார் கிருஷ்ணன்.

ருதுவின் மனதில் ஓடியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்... 'அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி' இதுதான் நிதர்சனம். அரசனை பின்பற்றித்தான் யாவும். ஒரு ராஜ்ஜியத்தை கைப்பற்றிட சிப்பாய்களை தன்னகப்படுத்துவதை விட, ராஜாவை தாக்கி நிலைகுலைய வைத்துவிட்டால் போதும். மொத்த படையும் அடிபணிந்து விடும். இங்கும் காந்தா என்ற ஒருவனை தாக்குவதை விட, கைலாஷ்ஷை ஒழித்திட வேண்டும்... என்பதே!

ருதுவின் மனதில் பல கணக்குகள். அவன் இங்கு வருவதற்கு முன்பே நகரத்தின் நிலவரத்தை ஓரளவு தெரிந்துகொண்டே வந்திருந்தான். அவன் தெரிந்து கொண்டதில் அதிக இடம் பிடித்தது கைலாஷ் மட்டுமே! அவனின் பெயர் அரசியல் வரை நுழைந்திருப்பதே ருதுவிற்கு பெரும் சவால். கைலாஷ் அழிக்கப்பட வேண்டிய கள்ளிச்செடி. ஆனால் அதில் கை வைத்தால் முள்ளாய் பாதுகாப்பது பெரும் பெரும் புள்ளிகள்.

ஆயாசமாக தலையை ஆட்டிக்கொண்டான்.

'பெரிய டாஸ்க் டா ருது.' இதழ் குவித்து ஊதினான்.

ஜீப் காந்தா பேட்டை வளைவுக்குள் நுழைந்தது.

நுழைவு வாயிலின் வளைவினை விழி உயர்த்தி ருது பார்வையிட்ட கணம், ஜீப்பின் முன்பகுதியின் மேல் வந்து விழுந்தது ரத்தத்தில் தோய்ந்த உடல்.

 
Status
Not open for further replies.
Top