மாதவி அவளின் ஊருக்கு வருகிறாள். ஏர்போட் டில் அவளிற்காக அவளின் குடும்பத்தினர் காத்துக்கொண்டு இருந்தானர். மாதவி வந்தது அவளின் தாய் தந்தையை பார்த்து அவர்களிடம் ஓடி சென்று கட்டியணைத்துக்கொண்டாள்.
“எப்படி குட்டிமா இருக்க.......” என்று அவளின் தலையை வருடிவிட்டார்.
“நல்ல இருக்கான் அப்பா......” என்றாள்.
அவளின் தாயோ “என்ன நல்ல இருக்க..... எப்படி இளச்சுட்ட..........” என்றார்
“இல்ல குட்டிமா........ நீ கொஞ்சம் இளச்சுட்ட....” என்றாள் அவளின் தாய்
அவள் எதுவும் பேசாமல் நின்றாள்.
“சரி..... வா மா...... கிளம்பலாம்........ எவ்ளோ நேரம் தான்....... எங்கயே நின்னு பேசறது........” என்கிறார் அவளின் தாய்.
மாதவியோ சுற்றி முற்றி பார்த்தாள். சூர்யா வந்துருக்கான என்று, பிறகு அவளின் தந்தையை பார்த்து
“அப்பா...... சூர்யா வரலையா.....” என்கிறாள்.
அவர் எதுவும் பேசாமல் முன்னாள் சென்றார். பிறகு மாதவி அவளின் தாய்யிடம் திரும்பி “ஏன் மா....... சூர்யா வரல...... நா லண்டன் போனதுக்கு அப்பறம்....... அவன் எனக்கு கால் பண்ணவே இல்லை.....” என்றாள்
அவளின் தாய் லக்ஷ்மியோ “ஏதாவது வேலையா இருக்கும்...... குட்டிமா......” என்றார்.
“சரி” என்பது போல் தலையசைத்தாள்.
வீட்டிற்க்கு வந்து அவளின் அறையில் சிறிது நேரம் ஓய்வேடுத்தாள். மாலை எழுந்ததும் அவள் வாங்கிவந்த பரிசு பொருட்களை எல்லாம் அவளின் தாய் தந்தையருக்கு குடுத்தாள். பிறகு நண்பர்களுக்கு வாங்கி வந்த பொருட்களை தனியாக பிரித்து வைத்தாள். அதில் பாதி சூர்யாவிற்க்கு வாங்கிருந்தாள்.
இதை அனைத்தும் பார்த்த சதாசிவம் மற்றும் லக்ஷ்மி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டர்.
லக்ஷ்மியோ அவளிற்க்கு பிடித்த இரவு உணவு தயாரித்தார். மாதவி அனைத்தையும் சாப்பிட்டு விட்டு உறங்கச்சென்றாள். மதியம் உறங்கியதால் என்னவோ அவளிற்க்கு உறக்கம் வரவில்லை.
இரண்டு வருடம் முன் இந்தியாவை விட்டு லண்டன் சென்றாள்.
முதல் முறையாக அவளின் தனியான பயணம். லண்டன் சென்று அங்கு உள்ள பழக்கத்தை பழக சிறிது நாட்கள் தேவைப்பட்டது.
அங்கு அவளிற்க்கு சிறிது நண்பர்கள் கிடைத்தனர். அதிலும் மித்ரா என்ற பெண் மிகவும் பழக்கமானால் அவளும் தமிழ் என்பதாள் என்னவோ இருவரும் நெருங்கிப்பழகினர். மாதவி பேசும்போது எல்லாம் சூர்யாவை பற்றிதான் இருக்கும் அவள் சூர்யாவை எப்போதும் கூறுவதால் மித்ராவுக்கும் சூர்யாவை பார்க்கவேண்டும் என்று கூறுவாள்.
அவள் லண்டன் சென்று இரண்டு வருடமும் சூர்யா மாதவிக்கு தொடர்பு கொள்ளமுடியவில்லை. மாதவி அவர்களின் தாய் தந்தையிடம் கேட்டாலும் சூர்யாவைப் பற்றி யாரும் எதுவும் கூறவில்லை.
அவனை பற்றி கேட்கும்போதேல்லாம் ஏதேனும் கூறி மறுத்துக் கொண்டே இருந்தனர். ஓரிருமுறை தருண் மாதவி கால் செய்தான். அப்போதும் மாதவியை சூர்யாவைப் பற்றி கேட்டாள். அவனும் அதற்கான பதில் சரியாக கூறவில்லை.
அவள் லண்டனில் இருந்து இந்தியா வந்து இதோடு இரண்டு நாட்கள் ஆகி விட்டன. ஆனால் சூர்யாவை பற்றி எந்த தகவலும் இல்லை. மாதவி பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு சூர்யாவை பார்ப்பதற்கு அவன் வீட்டுக்குச் சென்றாள்.
ஆனால் அங்கு அவன் வீட்டில் இல்லை அவர்கள் வீட்டில் வேறு யாரும் குடியிருந்தனர். கேட்டதற்க்கு அவர்கள் வேறு பக்கம் குடிமாறி போகிவிட்டதாக கூறினர். இதை கேட்ட மாதவிக்கு பகிர் என்று இருந்தது
“தன்னிடம் எதுவும் கூறாமல் அவன் வேறு எங்கோ சென்று விட்டான்.... எங்கு சென்று இருப்பான்....” என்று யோசித்துக்கொண்டே அவளின் வீட்டுக்கு வந்தாள்.
அவள் வீட்டில் தருண் இவளிற்க்காக காத்திருந்தான். இவள் வந்தவுடன்
“ஹாய் மாதவி..... எப்படி இருக்க..... உன் ஸ்டுடியஸ் எல்லாம் எப்படி போகுது........ PG யும் அங்கதா பண்ண போறாய.......” என்று கேட்டுக்கொண்டே போனான்.
அதற்க்குள் மாதவி “சூர்யா எங்க தருண்” என்றாள்
“என்ன......” என்று சற்று திக்கி “என்ன....... மாதவி” கேட்ட என்றான்
“நீ லண்டன் பிளைட் ஏறுனதுக்கு அப்பறம் சூர்யா வந்தான....... அதற்க்குள் நீ போய்ட்டா...... அவன் ஏர்போர்ட்லயே கொஞ்ச நேரம் அமைதியா...... உட்காருந்து இருந்தான்.... நா அவன் பக்கத்துல போன..... அப்போ
...........
“சூர்யா..... என்ன ஆச்......சு ஏன் வர இவ்ளோ ......லேட்......” என்றான்.
சூர்யா எதுவும் பேசவில்லை
“சரி சூர்யா...... அவ ரீச் ஆனதும்...... நம்ம அவகிட்ட பேசலாம்........ என்று கூறிக்கொண்டே சூர்யாவின் அருகில் அமர்ந்தான்
அப்போது தான் பார்த்தான் சூர்யாவின் கை முட்டியில் இரத்தம் வந்துக்கொண்டு இருந்தது. அவனின் உடையும் சிறிது கசங்கி இருந்தது.
“சூர்யா...... என்ன ஆச்சு......” என்று கூறிக்கொண்டே அவனின் கையில் அடிப்பட்ட இடத்தை தூக்கி பிடித்துக்கொண்டு
“அது ஒன்னும் இல்ல....... வரும் போது ஒரு சின்ன அக்சிடன்ட்........ கிழ விழுந்துட்ட......” என்றான்.
“என்ன அச்சு...... வா ஹாஸ்பிடல் போலம்....” என்றான் தருண்.
சூர்யாவும் ஹாஸ்பிடல் சென்று கட்டு போட்டான்.
அதன் பின் தருண் “அக்சிடன்ட் எப்படி நடந்தது” கேட்டான்.
“இல்ல மாதவி கிளம்பரதுனால...... அவள பார்க்க சீக்கிரம் வந்துட்டு இருந்த...... அப்போ ஒரு நாய் கூறுக்கால போய்ருச்சு...... அத கடைசி நிமிசத்துல நடந்துனால..... என்ன சமளிச்சு....... வண்டிய நிறுத்த முடியல.....” என்றான்.
“தருணோ கொஞ்சம் கேர்புல்லா வந்துருக்கலாம் அல்ல சூர்யா.....” என்றான்.
தருண் சூர்யாவை வீட்டில் விட்டு விட்டு அவனின் விட்டுக்கு சென்றான்.
இது நடந்து இரண்டு நாட்களில் சூர்யா ஒரு பார் க்குள் சென்றான். அப்போது ஹரிணி வேறு ஒரு ஆணூடன் கொஞ்சம் நெருக்கமாக அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்தாள். இதை பார்த்த சூர்யா திகைத்து நின்றான். சூர்யா உடனே அங்கு செல்ல போனான் ஆனால் யாரோ அவனின் தோளில் கை வைத்தனர்.
யார் என்று திரும்பி பார்த்தான். அங்கு தருண் நின்று கொண்டு இருந்தான். தருண் சூர்யாவை பார்த்து அமைதியாக தன் பின் வரும் படி சைகை செய்த்தான். சூர்யாவும் அவனின் பின்னால் சென்றான். அங்கு ஒரு மேஜையில் சூர்யாவை அமர வைத்து குடிக்க தண்ணீர் எடுத்துக்கொடுத்தான். அதை வாங்கி பருகியா சூர்யா சற்று நிதானித்தான்.
தருண் தான் சூர்யாவிற்க்கு கால் செய்து இந்த பார்க்கு வர சொல்லிருந்தான். அதனால் தான் சூர்யா அங்கு வந்தான். அங்கு நடந்தையும் பார்த்தான்.பிறகு தருண் சில புகை படத்தை அவனிடன் தந்தான். இதை அனைத்தும் பார்த்தா சூர்யாவிற்க்கு மிகவும் அதிச்சியாக இருந்தது. அதில் இருந்த ஹரிணி தற்ப்போது பார்த்த ஆணுடன் சற்று நெருங்கி இருந்தாள். சில புகைப்படம் அவனால் பார்க்க கூட முடியவில்லை.
“சூர்யா.... இந்த விசியம் எனக்கும் இரண்டு நாட்களுக்கு முன் தான் தெரியும்....... நா சொன்ன நம்புவயா..... இல்லயானு..... தெரியல..... அதனாலத ஏஜேன்சி கிட்ட சொல்லி ஹரிணிய பத்தி புல் டீடைலும் கலெக்ட் பண்ண சொன்ன..... அவங்கதா இந்த போட்டோஸ்.... எல்லாம் தந்தாங்க..... என்றான்
சூர்யாவால் இதை நம்பாமல் இருக்க முடியவில்லை ஏன்னேன்றால் எப்போது அவன் பார்த்தக் காட்சி அப்படி சூர்யா உடனே தன் போனை எடுத்து ஹரிணிக்கு கால் செய்தான் அவளை பார்த்துக்கொண்டே ஹரிணி அவனின் கால் செய்ததை பார்த்துக்கொண்டு அவனின் ஆண் தோழனிடம் ஏதோ சைகை காண்பித்தாள்.
பிறகு சூர்யாவின் அழைப்பை ஏற்றாள். அவளின் குரல் கொஞ்சுவது போல் வைத்துக்கொண்டு
“ஹலோ சூர்யா” என்றாள்.
“என்ன பண்ணிட்டு இருக்க ஹரிணி.....” என்றான் முயன்று தன் கோவத்தை குறைத்துக்கொண்டு
“சொல்லு ஹரிணி.....” என்று கையை கட்டிக்கொண்டு நின்றான்
“இது.... இது...... என் நண்பன்...... அதா...... பார்த்துட்டு..... போலனு......வந்த.....” என்று திக்கிதிக்கி கூறினாள்
சூர்யா எதுவும் பேசாமல் தருண் சூர்யாவிடம் குடுத்த புகைப்படத்தை அவளிடம் காட்டினான் இதை பார்த்த ஹரிணி “சூர்யா..... இது நான் இல்லை..... யாரோ மார்பில் பண்ணிருக்கங்க....... தயவு செய்து என்ன நம்பு.....” என்றாள்.
“ஆதாரத்தோட இருக்கு...... இதை எப்படி நம்பாம இருக்கறது....” என்றான்.
அனைத்து உண்மையும் தெரிந்தப்பின் எதற்க்கு பயப்படவேண்டும் என்று நினைத்த ஹரிணி.
“ஆமா....... சூர்யா....... இது என்னோட பாய் பிரெண்டு..... நானும் இவனும் லிவிங்ல இருக்கோம்..... போதுமா.......”
“அப்பறம் எதுக்கு..... என்ன லவ் பண்ணரனு...... சொன்ன..... “என்றாள் அடக்கப்பட்ட கோவத்துடன் .
“என்ன.... எங்கல...... ஏன்.... நீ பிரிக்கனும்....” என்றான்
“மறந்துட்டயா...... இது எல்லாம் எங்க இருந்து தொடங்குனதுனு..... அந்த பேசன் டீசைனிங் ஷோல இருந்து.....அனைவருக்கும் முன் என்ன அடிச்ச அல்ல... அதுக்கு பழிவாங்க தான்.... முதல உங்கல பிரிக்கனும்னு.... என்னோட தோணல இல்ல...”
சூர்யா தன் கண்களை சுருக்கிக்கொண்டே “அன்னைக்கு நீ தூக்க மாத்திரை சாப்பிடது.....”
“ஓ..... அதை நீ நம்பரயா.....” என்றாள் ஏளனமாக சிரித்தாள்
“அன்னைக்கு நா தூக்க மாத்திரை சாப்பிடவே இல்லை..... அது என் நண்பனோட ஹாஸ்பிடல்..... அப்பறம் உன் மாதவி இருக்கால்ல..... அவளோட போன் கால்ஸ்..... எல்லாமே நான் தா அவைட் பண்ண..... அதோட அவள உனக்கு கால் பண்ணக்கூடாது..... மிரட்டுன..... அதுல இருந்து தான் மாதவி..... அவ்ளோவ உனக்கு கால் பண்ண கிடையாது.......”
இதை அனைத்தையும் கேட்ட சூர்யா தான் எவ்ளோ பெரிய முட்டாலா இருந்திருக்க என்று புரிந்தது. அதோடு அனைத்திற்க்கும் என்னையெ தேடும் மாதவியை எவ்ளோ கஷ்டபடுத்திருக்க என்று அவனிற்க்கு புரிந்தது.
“அப்பறம்...... சூர்யா என்னோரு சின்ன விசியம் இருக்கு....” என்றாள் சின்ன பிடிகையோடு
இதற்க்கு மேல் என்ன என்பது போல் அவளை பார்த்தான்.
“எப்படியோ உன்னையும் அவளையும் பேசவிடாம பண்ணுன....... ஆனா மாதவி அந்த மாடலின் வாய்ப்பு வைச்சு..... திரும்ப உங்கிட்ட பேச ஆரமிச்சுட்ட..... அதனாலதா அன்னைக்கு..... நா கிழவிழுந்துட்டனு..... பொய் சொல்லி..... உன்ன வர சொன்ன...... அதுக்கு அப்பறம்..... என் ஆளுக கிட்ட சொல்லி.... அவள ஃபலோ பண்ணி.... யாரும் இல்லாத இடத்துல... அவள நாசம் பண்ண சொன்னா...... ஆனா இந்த தருண் வந்து இடையில அவள காப்பாத்திட்டான்.....” என்று முடிப்பதற்க்குள்
அவளின் கன்னத்தை பிடித்துக்கொண்டு கீழே விழுந்தாள். திரும்ப அடிக்க போவதற்க்குள் தருண் சென்று அவனை பிடித்துக்கொண்டான்.
இதை கேட்ட தருணிற்க்குமே கோவம் ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நின்று இருந்தான். திரும்பவும் அனைவர் முன் சூர்யாவிடம் அடிவாங்கி கொண்டு நின்று இருந்தாள் ஹரிணி
“என்ன அடிச்சுட்ட அல்ல...... இதுக்கு உன்ன பழிவாங்காமல் விட மாட்டன்..... சூர்யா......” என்றாள்
தருண் சூர்யாவை இழுத்துக்கொண்டு வந்தான்
நாளைக்கு மீதி கதைய நாளைக்கு பார்க்கலாம் frds ..............................
ஹரிணி அனைவரும் முன் அடி வாங்கியது, அவளிற்கு மீண்டும் அவமானமாக இருந்தது. அருகிலிருந்த அவளின் ஆண் தோழன் சந்தோஷ் பார்த்து அவனிடம் சில விசியத்தைக் கூறினாள்.
இதைக் கேட்ட சந்தோஷ் “சரி..... நா இத பண்ணறேன்.....” என்றான்.
ஹரிணி ஒரு வெற்றி சிரிப்புடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். தருண் சூர்யாவை பிடித்து வெளியே இழுத்துவந்தான்.
“என்ன சூர்யா.... எதுக்கு அவள அடிச்ச....” என்றான்
“பின்ன அடிக்காம...... என்ன பண்ண சொல்லறா........ எல்லாம் இவளால வந்தது....... நா இல்லாம என் அம்மு ரொம்ப கஷ்டப்பட்டுருப்ப......” என்றான் வருத்தமாக,
“பீல் பண்ணாத சூர்யா.......” என்று சூர்யாவை சமாதனம் செய்து, சூர்யாவை சூர்யாவின் வீட்டில் விட்டு விட்டு வந்தான்.
இரண்டு நாட்கள் சென்றது, சூர்யா ஒரளவு தேறிவந்தான்.
அன்று சூர்யா MBA எக்ஸாம் க்கு ஹால் டிக்கேட் வாங்க வந்தான். அனைத்து வேலையையும் முடித்து விட்டு சூர்யா கேன்டீன் சென்று அமர்ந்தான் தருண் வருவதாக கூறியதால். அவன் அமர்ந்து இருந்த சிறிது நேரத்தில் ஹரிணி அவனை பார்ப்பதற்க்கு அங்கு வந்தாள். சூர்யா ஹரிணியை பார்த்ததும் அமைதியாக எழுந்து செல்ல முயற்ச்சித்தான்
ஆனால் சூர்யாவின் அருகில் சென்று
“ சாரி சூர்யா......... நா பண்ணது தப்புதான்......... . என்ன மன்னிச்சுரு.....” என்றாள்
சூர்யாவோ ஏன் நேத்து வாங்குனது போதலயா என்றான் கோபமாக
இதை கேட்ட ஹரிணிக்கோ தன்னிச்சையாக அவளின் கை அவளின் கன்னத்திற்க்கு சென்றது. அதற்க்குள் சூர்யாவிற்க்கு தருணிடம் இருந்து call வந்தது.
தருண் பேசுவது அவளிற்க்கு நன்றாக கேட்கவில்லை, அதனால் சூர்யா எழுந்து வெளியே சென்றான்,
சூர்யா வருவதற்க்குள் ஹரிணி சூர்யாவின் பையில் ஏதோ வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்து இருந்தாள், சூர்யா வந்ததும் சரி சூர்யா நீ என்ன மன்னிக்க மாட்டனு தெரியும் நா கிளம்பர என்று கூறிக்கொண்டு அங்கு இருந்து சென்றாள்.
சூர்யாவிற்க்கோ “எதுக்கு இப்போ வந்தா..... எதுக்கு எப்போ போறா......” என்று எண்ணிக்கொண்டு சூர்யா வெளியே வந்தான்.
தருண் இடையில் “ஏதோ முக்கியமான வேலையிருப்பதால் அவனால் வரமுடியவில்லை” என்று கூறிவிட்டான்.
அதனால் சூர்யாவும் நேராக அவனின் வீட்டுக்கு சென்றான். சூர்யாவின் அம்மாவோ இவனிற்க்காக காத்திருந்தார். இவன் வந்ததும்
“வா சூர்யா....... கைகால் கழுவி விட்டு வா........ சாப்பிடலாம்.......” என்றார்.
சூர்யாவும் ஃப்ரெஷ் ஆகிவிட்டு உணவு உண்ண வந்தான்,
இருவரும் பேசிக்கொண்டே உணவு அருந்தினர்.
அப்போது அவனின் தாயார் சூர்யா மாதவி கிட்ட பேசுனயா.... அங்க எல்லாம் அவளுக்கும் செட் ஆகிருச்சானு....... கேட்டயா........ எங்கயும் எப்போவும் தனியா போனதே இல்லை...... எப்படிதா சமளிக்க போறாளோ.......” என்றார் மிகவும் வருத்ததுடன்
இதை கேட்ட சூர்யாவிற்க்கு தன்னோட குற்றணர்ச்சியால் மாதவியுடன் பேசாமல் இருந்தது புரிந்தது
“சரி....... எப்படி இருந்தாலும் பேசனு........ இப்போவே பேசலாம்.......” என்று எண்ணிக்கொண்டு
“இன்னும் பேசல அம்மா......” என்றான்
“என்னபா......... இப்படி பொறுப்பில்லாம இருக்க...... முதல அவகிட்ட பேசு......” என்றார்
“ம்..ம்.... சரி மா...... நா எப்பவே பேசற.....” என்று கூறிக்கொண்டு அவனின் கைப்பேசியை எடுத்தான் அதற்க்குள்
அதற்க்குள் போலீஸ் சூர்யாவின் வீட்டில் அதிரடியாக நுழைந்தனர்.
அதை இதையும் காதில் வாங்காமல் அவனின் வீட்டை சோதனை போட ஆரம்பித்தனர்.
அனைத்து இடத்திலும் தேடிப் பார்த்தனர் அப்படி எதுவும் அவர்களுக்குச் சிக்கவில்லை. ஆனால் கடைசியாக சூர்யாவின் கல்லூரி பையில் சோதனை போட்ட போதுதான், அவளின் பையிலிருந்து இரண்டு கிலோ போதை மருந்து கிடைத்தது
அதை எடுத்தவுடன் “சூர்யா சார்....... இது...... எப்படி வந்துததுனு...... எனக்கு தெரியவில்லை......” என்று கூறினான்.
இதைக் கேட்ட காவல்துறை “எல்லாம் எங்களுக்குத் தெரியும்” என்று கூறிக்கொண்டு அவனை இழுத்துக்கொண்டே வெளியே சென்றனர்.
சாரதாம்மாவோ “என் பையன் எந்த தப்பு பண்ணிருக்க மாட்டான்..... விட்டுடுங்க........” என்று காலில் விழுந்து கெஞ்சினார்.
ஆனால் இதைக் கேட்ட போலிஸார் அவரை மதிக்காமல் சூர்யாவை இழுத்துச்சென்றனர் இவர்களின் வீட்டின் முன் காவல்துறை வண்டி வந்து நின்றது அங்கு இருந்தவர்கள் எல்லோரும் கூடிவிட்டனர். காவல்துறை சூர்யாவை இழுத்துச் சென்றதை அனைவரும் பார்த்துக் கண்ணு மூக்கு அனைத்தையும் வைத்துப் பேசத்துவங்கினர்.
கல்லூரியின் பிரச்சனை என்பதால் தருணிக்கு இந்த விசயம் தெரிந்து விட்டது. அவன் உடனே மாதவியின் தந்தைக்குக் கூறிவிட்டான். சதாசிவமும் லக்ஷ்மியும் உடனே கிளம்பி சூர்யாவின் வீட்டிற்குச் சென்றனர். அங்கு சூர்யாவின் அம்மாவோ என்ன செய்வது என்பது தெரியாமல் அழுதுகொண்டு இருந்தார்.
சதாசிவமும் லக்ஷ்மியும் உள்ளே சென்றது கூட கவனிக்காமல் சாரதம்மா அழுது கொண்டு இருந்தார்.
மாதவியின் அம்மா அவரின் அருகில் சென்று ஆறுதல் கூறினர்.
தருண் அப்போதுதான் அடித்து பிடித்து வந்து சேர்ந்தான் வந்தவுடன் சதாசிவனிடம் சென்று
“என்ன ஆச்சு அங்கில்..... இது எப்படி நடந்ததுனு விசரிச்சைங்கல.....” என்றான்
“எப்படியென்று எனக்கும் புரியவில்லை தருண்.......ஆனா நா வழக்குரைஞர் கிட்ட இப்போத பேசின...... அவர் நேர காவல்துறை நிலையத்துக்கே வரனு சொல்லிட்டங்க.... நா போய் என்னனு பார்த்துட்டு வந்தர.....” என்றார்.
“ நானும் வரன் அங்கில்......” என்றான்
சற்று யோசித்துவிட்டு “சரி வா.......” என்றார்
இருவரும் காவல்துறை சென்றனர். சூர்யாவை அழைத்துச்சென்று இரண்டு மணி நேரம் மட்டுமே இருக்கும். அதற்குள் சூர்யாவை நன்றாக அடித்து இருந்தனர். அங்குச் சென்று பார்த்த தருணிற்க்கு சதாசிவத்திற்க்குமே பயந்து விட்டனர் ஏன் என்றால் அந்த அளவு அவனை அடித்துப்போட்டு இருந்தனர்.
அனைத்து பர்மாலிடிஸ் முடித்தவுடன் சூர்யாவை அவனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
சூர்யாவை இந்த கோலத்தில் பார்த்தா சாரதாம்மாவிற்க்கு மயக்கமே வந்து விட்டதுலக்ஷ்மி அவரை அமரவைத்து சிறிது தண்ணீர் குடுத்தார்.
பின் சூர்யாவை அழைத்துச்சென்று அவனைத் தலை முழுவதும் நீர் ஊற்றி அவனை உள்ளே அழைத்துச்சென்றார்.
“எப்படி நடந்தது....” என்று கேட்ட போது
சூர்யா “எனக்கும் தெரியலா அங்கில்.....” என்றான்
தருண் அவனிற்குத் தெரிந்த மருத்துவரை அழைத்து சூர்யாவின் காயங்களுக்கு மருந்திடச் செய்தான்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் “என்ன ஆச்சு.....” என்று விசரிக்கும் சாக்கில் அனைவரும் சூர்யாவை வார்த்தையால் சாகடித்தனர்.
இதை அனைத்தும் கேட்ட சூர்யா முகத்தில் எந்த வித மாறுதல் இல்லாமல் அமர்ந்து இருந்தான்.
இதை அனைத்தையும் கவனித்த தருண் யாரையும் சூர்யாவின் அருகில் வராமல் பார்த்துக்கொண்டான். சூர்யா இந்த விசயத்தைப் பற்றி மாதவியிடம் கூறவேண்டாம் என்று கூறிவிட்டான் அதனால் இதை பற்றி மாதவியிடம் யாரும் கூறவில்லை. அந்த போதைப் பொருள் எப்படி வந்தது என்று தெரியாமல் இருந்தான் சூர்யா
அன்று இரவு சூர்யாவிற்கு உறக்க வரவில்லை மாதவிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் வந்தது
ஆனால் இதை அனைத்தை ம் கேட்டாள் உடனே அவள் இந்தியா வந்து விடுவாள். இப்போதுதான் மாதவி அங்கு சென்றுள்ளாள் திரும்பவும் அவளை அழைக்களிக்க சூர்யாவிற்க்கு எண்ணமில்லை
அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை சூர்யா.
மறுநாள் சூர்யாவிற்கு அவனின் கல்லூரியில் இருந்து கடிதம் வந்தது
“இந்த வருட எக்ஸாம் அவன் எழுதக் கூடாது” என்று
அந்த கடிதத்தைப் படித்த சூர்யாவிற்கு அடுத்து என்ன என்பது கேள்வி கூறியாகிவிட்டத.
தருண் இதைப் பற்றி அவனின் கல்லூரியில் பேசிப்பார்த்தான். ஆனால் அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிந்தது. மாதவியின் அப்பாவும் அவருக்குத் தெரிந்தவர்களை வைத்து முயன்றார் ஆனால் பலன் பூஜ்ஜியமே
அதோடு அக்கம்பக்கத்தினரின் பேச்சு நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டு சென்றது
அதனால் சூர்யாவும் அவனின் அம்மாவும் அந்த வீட்டை மாற்றி வேறு வீட்டிற்குச் சென்றனர்.
இதைக் கேட்ட மாதவிக்குப் புரிந்தது அவன் கோவையில் உள்ள அவர்களின் வீட்டில் உள்ளான் என்று "நம்ம இன்றைக்குப் போய் பார்க்கலாமா.........." என்று கேட்டால் தருண்
"சரி மாதவி....... நீ அங்கில் க்கு கால் செய்து சொல்லு" என்றான்
"சரி சூர்யா........" என்று சொல்லி விட்டு தன் தந்தைக்கு அழைத்துக் கூறினாள்.
"அவரும் சரிமா......... பார்த்து போய்விட்டு வா........." என்று கூறினான்.
இவர்களும் கிளம்பி சூர்யாவின் ஊருக்குச் சென்றனர். தருண் ஒரு அலுவலகத்தின் முன் வாகனத்தை நிறுத்தினான். மாதவி குழப்பத்தோடு ஏன் தருண் இங்க வண்டியை நிறுத்தின என்றாள்.
அதற்கு தருண், "சூர்யா இந்த வேலை செய்கிறான்........" என்றான்.
அதைக் கேட்ட மாதவிக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. தருண் முன் செல்ல மாதவி அவனின் பின் சென்றாள்
மாதவி அலுவலகத்தில் வரவேற்பு அறையில் அமர்ந்து காத்துக்கொண்டு இருந்தான்.
தருண் உள்ளே சென்று தாங்கள் சூர்யாவைப் பார்க்க வந்து உள்ளதா கூறிவிட்டு வந்தான்.
மாதவி அமர்ந்து இருக்கும் இடத்தில் பார்த்தால் அங்கு வேலை செய்பவர்கள் அனைவரும் தெரிவார்.
அதனால் மாதவி அங்கு நின்று எட்டி எட்டி பார்த்துக்கொண்டு இருந்தாள்.
தருண் அருகில் வந்ததும் "என்ன பார்க்கற மாதவி......." என்றான்.
"சூர்யா இங்க இருக்கானு.... இங்க இல்ல போல தருண்....... நானும் எல்லா இடத்திலும் பார்த்த....... ஆனால் அவன் இங்க இல்ல......." என்றாள்.
அப்போது அங்கு சூர்யா வந்தான். அவனைப் பார்த்த மாதவிக்கு இது சூர்யா என்று கண்டு பிடிப்பதற்கே சில வினாடிகள் தேவைப்பட்டது.
அவனிடம் ஓடிச் சென்று அவனை அணைத்துக்கொண்டு அழுதாள் மாதவி. சூர்யாவும் அவளை இருக்கக் கட்டிக்கொண்டு அழுதான்.
சூர்யா வை விட்டு சிறிது நகர்ந்து அவனை பார்த்தாள் மாதவி. சூர்யா எப்போதும் அவனின் உருவத்திற்கு முக்கியத்துவம் தருவான். ஆனால் இன்று அவனின் முகம் போலிவு இழந்து கண்களை சுற்றி கருவளையம் வந்து 3 மாதத்திற்கு மேல் எடுக்கப்படாத தாடியும். அவனின் உடை அவனிற்குச் சற்றும் பொருத்தம் இல்லாமல் இருந்தது
இதை கூட மாதவியால் சிறிதே சிறிது ஏற்க முடிந்தது. ஆனால் அவனுடைய தொப்பையைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 6 PACK வைத்து இருந்த வயிறு இப்போது 1 PACK இருப்பதைப் பார்த்த மாதவிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
"ஏன்டா...... இப்படி ஆகிடா......" என்றாள் மிகவும் வருத்தத்துடன்
"ஏன்..... நா நல்லதா இருக்க அம்மு........ நீ எப்போது ஊரிலே இருந்து வந்த......" என்றான்
மாதவி அதற்குப் பதில் கூறாமல் அவளின் அருகில் சென்று அவனின் தாடியைப் பிடித்து இழுத்து இது உண்மையான தாடி என்று பார்த்தாள்.
"ஆ......... ஏண்டி தாடி இழுக்கர........ வலிக்கிறது........." என்று கத்தினான்
"அப்போ...... இது உன் உண்மையான தாடியா......." என்றாள்.
மாதவியை பொறுத்தளவு மீண்டும் ஹரிணியைப் பற்றிப் பேச விருப்பம் இல்லை. அதனால் அதை முற்றிலும் தவிர்த்துவிட்டுப் பேச துவங்கினாள்
"அப்போ... இது என்ன பொய்யான தாடியா......." என்றான்.
மாதவி ஹரிணியைப் பற்றிக் கேட்காததால் அவனும் சற்று சகஜமானான்.
அவன் உள்ளே சென்று வரும் வரையில் இருவரும் காத்திருந்தனர். அவன் வந்த பிறகு மூன்று பேரும் வெளியே வந்தனர்.
சூர்யாவின் வீட்டுக்குச் சென்றதும், அவரிம் அம்மா சூர்யாவின் வண்டி சத்தத்தில் வெளியே வந்தார்.
மாதவியை பார்த்ததும் அவருக்கும் அழுகையே வந்து விட்டது. மாதவி ஓடிச் சென்று அவரை அணைத்துக்கொண்டாள். மாதவியும் சாரதம்மாவும் அவர்களின் உலகத்திற்கு சென்று விட்டனர்.
சூர்யாவும் தருணும் இவர்கள் இருவரையும் மாற்றி மாத்தி பார்த்துவிட்டு, பின் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து, வீடு நேராகச் சமையல் அறைக்குச் சென்று காபி கலக்கினர்.
அதைக் கொண்டு வந்து மாதவிக்கும் சாரதாம்மாவிற்க்கும் கொடுத்தனர். அப்போது கூட அவனின் முகம் பார்க்காமல் அதை வாங்கி பருக துவங்கினர்.
இதைப் பார்த்த சூர்யா அவர்களின் இடையில் சென்று நின்று கொண்டான். அப்போதும் அவர்களின் பேச்சு நிற்கவில்லை. இருவரும் ஒரு சேர அவனைத் தள்ளி விட்டுப் பேசிக்கொண்டு இருந்தனர்.
அவன் கீழே விழாமல் தருண் அவனைப் பிடித்துக்கொண்டான். அப்போது சரியாக tv யில்
தென்பாண்டி சீமையில
தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே
யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
இதை பார்த்த தருணிற்க்கு சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தான்.
"அம்மா....... நீ தள்ளிவிட்டதுல.... உன் புள்ள இந்நேரத்திற்குக் கீழா விழுந்துருப்பன்....."என்றான் சூர்யா.
"அதுதா....... கீழ விழலை அல்ல....... அப்பறம் என்ன....... போய் மாதவிக்கு பிடித்த விரால் மீன் வாங்கிட்டு வா......." என்றார்.
"ஒரு மனுசன் கீழ விழுக போனேனே..... என்ன அச்சு...... ஏது ஆச்சுனு...... கேட்காமல் இப்போது மீன் ரொம்ப முக்கியம்......." என்றான்
அதை சாரதம்ம கண்டுகொள்ளாமல், "நீ..... இன்னும் போகலையா......" என்பது போல் பார்த்தார்.
தருணோ விழுந்து விழுந்து சிரித்தான். சூர்யா செல்லும் போது அவனையும் இழுத்துக்கொண்டு சென்று விட்டான்.
வெளியே வந்ததும், சூர்யா “இப்போத என் அம்மா ரொம்ப நாள் கழித்து சிரிக்கறாங்க....... மாதவி பார்க்க வித்தியாசமா இருக்க........ ஆனால் எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்கிறது....... அவளுக்கு ஒவ்வொரு தடவையும்........ பிரச்சனை வரும் போதும்...... நா அவ கூட இல்ல....... அவ எதிர் பார்த்த போதும்...... கூட நா அவ கூட இல்ல......." என்றான் வருத்தமாக
சூர்யா எல்லா விசயமும் மாதவிக்குத் தெரியும் என்றான்.
இதை கேட்ட சூர்யா "அந்த போதை விசயம்..... சிறைக்குப் போனது....." என்றான்.
"எல்லாமே தெரியும்....." இதை கேட்ட சூர்யா மிகவும் அவமானமாக இருந்தது.
அனைத்தையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றனர். இவர்கள் வந்த உடன் சாரதாம்மா அனைத்தையும் தாயார் செய்யத் துவங்கினார்.
தருண் மற்றும் சூர்யா அவருக்கு உதவி செய்யத் துவங்கினர். மாதவிக்கு சமையல் அப்படியென்றால் என்ன என்று கேட்பாள்.
சரி எல்லாரும் சமைக்கரங்கலே நம்மளும் போய் எதாவது செய்வோம் என்று உள்ளே சென்றாள்.
"நா எதாவது HELP பண்ணவா....." என்றாள்.
சூர்யாவிற்கும் சாரதாம்மவிற்க்கு மாதவியைப் பற்றி அனைத்தும் தெரியும் என்பதால் இருவரும் வேண்டாம் என்று கூறிவிட்டனர். ஆனால் நமது தருணுக்கு தான் மாதவியில் கை வண்ணம் தெரியாதே,
"ஆமா மாதவி...... இந்த பூண்டு கொஞ்சம் உரிச்சுக்குடு....." என்றான்
இதை கேட்ட மாதவி, "பூண்டு அப்படியே போடக் கூடாத..... உரிச்சுதா போடனுமா....." என்றாள்.
இதை கேட்ட தருண் அவளின் புறம் திரும்பி ஒரு பார்வை மட்டும் பார்த்தான்.
அதில் "இனிமே சமையல் செய்ய வரனு சொல்லிவிட்டு இந்த பக்கம் வந்த" என்று இருந்தது .
மாதவியோ தருணின் பார்வை பார்த்து அமைதியாக வெளியே சென்று விட்டாள்.
இதை பார்த்துச் சிரிப்பது சாரதாம்மாவின் முறை ஆகிவிட்டது
ஆனால் இதை எதையும் கவனிக்காமல் சூர்யா எதோ யோசனையிலிருந்தான்.
அனைவரும் உணவு சாப்பிட்ட பின் ஹாலில் அமர்ந்தனர். சாரதாம்மாவோ இவர்கள் மூன்று பேரும் பேசட்டும் என்று நினைத்து விட்டு ஏதோ ஒரு வேலையாக வெளியே சென்று விட்டார்.
சூர்யா மிகவும் அமைதியாக இருந்தான்.
மாதவி அவனின் அருகில் சென்று "என்ன ஆச்சு சூர்யா......" என்றாள்
"செய்யாத தப்புக்கு....... எல்லாத்து முன்னால அவமானப் பட்டு....... தெரிந்தவன் தெரியாதவன் கிட்ட எல்லாம் அவமானப் பட்டு......... கடைசி வருச படிப்ப கூட முடிக்க முடியாம ..........என்னுடைய கனவுவ தொலைச்சுட்டு......... ஊரவிட்டு வந்து....... இப்போ 10000 சம்பளத்துக்கு........ ஒருதர்கிட்ட வேலை பார்க்கரன்....." என்றான் ஆதங்கத்துடம்
"சூர்யா நீ திருப்ப ஊருக்கு அழைச்சுட்டு போகத்தா...... நாங்க வந்திருக்கிறோம்......" என்றாள் மாதவி
இதை கேட்ட சூர்யா, "திரும்பவும் எல்லாரும் முன்னாலையும்....... அசிங்க பட முடியாது......" என்று மறுத்து விட்டான்
மாதவியும் தருணும் எவ்வளவோ கூறினர். ஆனால் அவன் சம்மதிக்கவில்லை,
மாதவியும் தருணும் மட்டும் சூர்யாவிடமும் அவனின் அம்மாவிடம் கூறிவிட்டு அங்கு கிளம்பினர்.
மாதவி சூர்யாவின் அருகில் வந்து அவனின் தொப்பையில் கை வைத்து, சூர்யா இத எப்படியாவது கம்மிபண்ணுட என்று அவனைக் கேலி செய்து சிரிக்க வைத்த பின் தான் கிளம்பினாள்.
செல்லும் வழியில் தருண், "மாதவி....... இன்னும் எவ்ளோ நாள் இருப்ப......" என்று கேட்டான்
தருணும் மாதவியும் சூர்யாவை இந்த பிரச்சனையில் இருந்து எப்படி வெளியே கொண்டு வருவது என்று யோசித்துக்கொண்டு இருந்தனர்.
இதை பற்றி சூர்யாவிடம் அவர்களால் கேட்க முடியவில்லை.
“சூர்யா bag ல எப்படி போதை பொருள் வந்தது........” என்று கேட்டாள்.
“மாதவி அது தெரிஞ்சுதுனா...... நா என் உன்கிட்ட கேட்கற சூர்யாவ இந்தப் பிரச்சையில் இருந்து வெளியக் கொண்டு வந்துருக்க மாட்டேனா......” என்றான்
“ஆமால்ல.....” என்றாள்
மாதவி அதை பற்றி யோசித்துக்கொண்டே உறங்கி விட்டாள்.
தருண் அவளை அவள் வீட்டில் விட்டு விட்டு அவனின் வீட்டிற்கு சென்றான்.
கார் ஓட்டி வந்ததில் தருண் tried ஆக இருந்தது. அதனால நேரமாக உறங்கச்சென்றான்.
நடு இரவு 2.30 மணிக்கு தருணின் போன் அடித்தது,
தருண் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தான். மாதவியின் எண்ணை பார்த்து
“என்ன ஆச்சு மாதவி.....” என்றான்.
“இல்ல....... அன்னைக்கு சூர்யா நம்ம காலேஜ்க்கு தான போன அங்க போய் பார்த்த ஏதாவது தெரியும் அல்ல.......” என்றாள்.
அதற்க்கு தருண் “நாங்க அங்கேயும் போய் பார்த்தடோம் மாதவி..... ஆனா அவன் காலேஜ் போகிட்டு நேரா வீட்டுக்கு தான் போயிருக்கன்.... வேற எங்கயும் போகாலா......” என்றான் கொட்டாவி விட்ட படி
“எதுக்கும்...... நாளைக்கு நம்ம அங்க போய் பார்க்கலாமா.......” என்றாள்
“ம்..ம்.. போகலாம் மாதவி......” என்றான்.
“அப்பறம்.....” என்று அவள் பேசுவதற்கும் இங்கு தருணின் குறையிட்டை சத்தம் கேட்டது.
இதை கேட்ட மாதவி தலையில் அடித்துக்கொண்டு போனை அனைத்து விட்டு
அவள் வீட்டு பால்கனியில் நின்று இரவு முழு நேர நிலவை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.
இரண்டு வருடத்திற்கு முன் நடந்ததை நினைத்துக்கொண்டு இருந்தாள்.
ஹரிணி சூர்யாவை காதலிப்பதாகக்குரியதும் மாதவி மிகவும் சந்தோசமாக தான் இருந்தாள்.ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஹரிணியே சூர்யாவுடன் அதிகம் இருந்ததாள்.
அதனால் மாதவிக்கு ஒரு தனிமை உணர்வு ஏற்பட்டது தன்னிடம் இருக்கும் பொம்மையை யாரோ அவளிடம் இருந்து பறிப்பது போல் இருந்தது.
இதுதான் காதல் என்றால், ஆம் மாதவி சூர்யாவை காதலிக்க துவங்கிவிட்டாள்.
இந்த காதல் எப்போது தோற்றியது என்று மாதவி தெரியவில்லை.
மாதவி சிறு வயதாக இருந்த போது அவளின் வீட்டிற்கு வரும் போது ஒரு நாய் அவளை பார்த்து கடிக்க வந்த போது அந்த நாயிடம் இருந்து இவளை காப்பாற்றிய போது வந்ததா....
மழையில் நனைய பயந்துக்கொண்டு, மழையில் நனையாமல் வேடிக்கை பார்த்து நின்ற போது இவளின் கையை பிடித்து இழுத்துச்சென்று அவளை மழையில் விளையாடும் போது வந்த காதலா......
அவளின் உடையில் பின்புறம் எதனால் கறை ஏற்ப்பட்டது என்று கூட தெரியாமல் விளையாடி கொண்டு இருந்த போது சூர்யா அவனின் சட்டைய போட்டு வீட்டிற்க்கு அழைத்து சென்று மாதவியின் அம்மாவிடம் ஒப்படைத்த போது வந்த காதலா....
அவளின் பள்ளி தோழன் அவளிடம் அவனின் காதலை கூறிய போது என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிய போது சூர்யா அவளின் பருவ மாற்றத்தை பற்றி கூறி அவளை teenage வழி நடத்திச்சென்ற போது ஏற்ப்பட்ட காதலா.....
மாதவி அந்த பையனின் காதலை ஏற்றுக்கொள்ளததால் அவன் மாதவியை தப்பாக புகைப்படம் எடுத்து மாதவியை மிரட்டிய போது சூர்யா சென்று அத்தனை புகைப்படத்தையும் அழித்து அந்த பையனை அடித்த போது வந்த காதலா....
அதனால் பள்ளியில் ஐந்து நாட்கள் பள்ளி இடை நீக்கம் செய்த போதும் கூட மாதவியின் பெயரை வெளியே சொல்லாமல் இருந்த போது வந்த காதலா.....
ஒரு நாள் பௌர்னமியின் போது இருவரும் இரவில் நிலவை ரசித்துக்கொண்டு ICE CREAM சாப்பிட்ட போது வந்த காதலா....
கடைசியாக ஹரிணி மாதவியை அந்த ஈவென்டில் தள்ளிவிட்ட போது சூர்யா ஹரிணியை அடித்த போது வந்த காதலா...... என்று தெரியவில்லை
ஆனால் ஹரிணி இவர்களுக்கு இடையில் வந்த போதுதான் மாதவி உணர்ந்தாள். ஹரிணியுடன் சூர்யா சந்தோசமாக இருப்பதை பார்த்த மாதவி அமைதியாக தள்ளி நின்றாள். ஆனால் சூர்யாவை அப்படி தள்ளி வைத்து அவளால் பார்க்க முடியாமல்தான் லண்டனை நோக்கிச்சென்றாள். மாதவி
இப்போ திரும்பி வந்து பார்த்தாள். அனைத்தும் தலைகீழாக மாறி இருந்தது.
மறுநாள் மாதவியும் தருணும் கல்லூரி நோக்கி சென்றனர்.
“ஆமா மாதவி.... நம்ம ஏன் எங்க வந்துருக்கோம்......” என்றான் கல்லூரியைம் சுற்றிப்பார்த்துக்கொண்டே,
“எனக்கே தெரியால..... எங்க வந்தா நமக்கு எதாவது செய்தி கிடைக்கும்..... என்ற நம்பிக்கையில் வந்தோம்......” என்றாள்
இதை கேட்ட தருண் மாதவியை முறைத்தான், அதை இதையும் கண்டுக் கொள்ளாமல் மாதவி பாட்டுக்கு சென்றாள்.
தருணோ “நல்ல பைத்தியதுகிட்ட...... வந்து மாட்டிக்கிட......” என்று எண்ணிக் கொண்டே சென்றான்.
கிட்டதட்ட இரண்டு மணி நேரமாக... அந்த கல்லூரியை சுற்றி சுற்றி வந்தனர்.
இருவரும் களைப்படைந்ததாள். நேராக கேன்டீன் நோக்கி சென்றனர்.
அங்கு “என்ன..... மாதவிகுட்டி..... நல்ல இருக்கையா.....” என்றார் ஒருவர்.
“என்னடா..... தெரிஞ்ச குரலா.... இருக்கே........” என்று எண்ணிக்கொண்டு திரும்பினாள் மாதவி.
அங்கு டீ போடும் மாஸ்டர் இருந்தார்.
“நா...... நல்ல இருக்க..... அண்ணா...... நீங்க எப்படி..... இருக்கைங்க......” என்றாள்.
“நா..... நல்ல இருக்க மாதவி...... உங்கிட்ட கொஞ்சம்...... தனியா பேசனும்....” என்றார்.
இதை கேட்ட தருண், “சரி...... நீங்க பேசுங்க...... நா வெளிய இருக்க.......” என்று நகர துடங்கினான்.
ஆனால் மாதவி தருணின் கைப்பிடித்து “நில்லு தருண்......” என்று கூறிக் கொண்டு,
பரவல்ல அண்ணா..... நீங்க சொல்லுங்க.....” என்றாள்.
அந்த அண்ணாவோ, “சூர்யா தம்பிய..... பத்திமா......” என்றார்.
இதை கேட்ட தருணும் மாதவியும் “என்ன அண்ணா...... சொல்லுங்க.......” என்றனர் ஒரு சேர,
“அன்னைக்கு சூர்யா....... தம்பி கடைசியாக...... வந்த...... அப்போ நான் தா இருந்த....... சூர்யா தம்பி எப்பொதும் போல....... டீ சொல்லிட்டு காத்திருந்துச்சு.... அப்போ அந்த ஹரிணி பொண்ணு வந்துச்சு...... இரெண்டு பேரும்..... ஏதோ பேசிக்கிட்டு இருந்தாங்க..... சூர்யா தம்பி ரொம்ப கோவமா இருந்தது..... கொஞ்ச நேரத்துல சூர்யா தம்பிக்கு ஏதோ கால் வந்துருக்கும் போல..... அதனால போன் எடுத்துட்டு வெளிய போய்ருச்சு..... அப்போ அந்த ஹரிணி பொண்ணு....... நம்ம தம்பி bag ல ஏதோ வைச்சுது...... அப்பறம் சூர்யா தம்பி வந்து bag எடுத்துட்டு போய்ருச்சு......
அப்பறம் கொஞ்ச நேரத்துல..... எங்க வீட்டுல இருந்து கால் வந்தது எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லனு..... நானும் உடனே கிளம்ப வேண்டிதா போய்ருச்சு....... அதுக்கு அப்பறம் 4 மாசம் கழிச்சுதான்...... நா திரும்ப எங்க வந்தான்...... அப்பறம் தா புரிஞ்சது சூர்யா தம்பி....... ஏதோ போதை விற்றதா சொல்லி..... சூர்யா தம்பியை கைது செஞ்சதுனு......
இந்த விசியத்த இங்க கேட்டதும் மாதவிக்கும் தருணிற்க்கு புரிந்தது.
இது அனைத்தையும் செய்தது அந்த ஹரிணிதான் என்று
இதை கேட்ட மாதவிக்கு மிகவும் கோவம் தான் வந்தது.
அந்த ஹரிணிய எதாவது செய்ய வேண்டும் என்ற கோவத்துல் மாதவி கிளம்பினாள்.
ஆனால் தருண் அவளை தடுத்து “இப்போ கோவபட்ட...... ஹரிணிய நம்மலால ஏதுவும் செய்ய முடியாது மாதவி.....” என்றான்.
“அப்பறம் என்ன செய்ய சொல்லர தருண்........ எல்லாத்தையும் கேட்டுட்டு எப்படி அமைதியாக இருக்க சொல்லர.......” என்றாள்.
“கொஞ்சம் பொறுமையா இரு.0000” என்றான்.
இது முடிந்து ஒரு வாரம் சென்றது.
சூர்யா காலையில் வேகமாக அலுவலகத்திற்க்கு கிளம்பிக்கொண்டு இருந்தான். அப்போது தொலைக்காட்சியில் செய்தி ஓடிக்கொண்டு இருந்தது.
“சென்னையில் போதைப்பொருள் கடத்தி அதை பள்ளி மற்றும் கல்லூரி மாணவருக்கு விற்றதாகவும், போலிஸ்க்கு கிடைத்த தகவலின் பேரில் போதைப்பொருள் விற்ற கும்பலை கைது செய்தனர். அதில் உடை வடிவமைப்பாளராக இருந்த ஹரிணி என்ற பெண் தப்பி செல்ல முயற்ச்சிதார். விமான நிலையத்தில் அதிரடியாக போலிஸார் சென்று அந்த பெண்ணை கைது செய்தனர்.
அந்த பெண்ணிடம் விசாரனை நடத்திய போது சில திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் சூர்யா என்ற மாணவனை கல்லூரியில் போதை பொருள் விற்றதாக கைது செய்தனர். ஆனா அந்த மாணவனை அதே கல்லூரியில் படித்த இந்த பெண் தான் பழிவாங்க அவனின் கல்லூரி பையில் போதை பொருட்களை வைத்ததாக விசாரனையில் தெரியவந்தது.
மாதவி மற்றும் தருண் என்ற இருவர் இந்த கும்பலை பிடிப்பதற்க்கு மிகவும் உதவியாக இருந்ததனர். இவர்களுக்கு முதல்வர் நன்றி தெரிவித்தார்”
இதை கேட்ட சூர்யாவிற்க்கு தான் எப்படி உணர்கிறான் என்பதே தெரியவில்லை.
இதை அனைத்தையும் பார்த்த சாரதம்மாவோ சந்தோசத்தில் அழுகவே தொடங்கிவிட்டார்.
அப்போது அவர்களின் வீட்டின் முன் ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்து மாதவியும் தருணும் இறங்கினர்.
சூர்யா மாதவிடம் சென்று அவளை அணைத்துக்கொண்டு “நன்றி” கூறினான்.
இதை பார்த்த தருண் சூர்யாவின் அருகில் சென்று அவளின் தோளை சுரண்டினான்.
சூர்யா அவனை நிமிர்ந்து பார்த்தான்.
“மாதவி மட்டும் இத பண்ணல..... நானும் உதவி செய்ஞ்ச..... என்னையும் கட்டிப்பிடிகலாம்.....” என்றான் விளையாட்டாக,
சூர்யா தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு அவனையும் அனைத்து,
“thanks டா” என்றான் சூர்யா,
“நா.... விளையாட்டுக்கு தான் சொன்னன் டா...... இதுல மாதவி அதிகமா கஷ்டப்பட்ட...... நா அவ கூட இருந்த அவ்ளோதான்.....” என்றான்.
மாதவி இவர்களின் இடையில் வந்து நின்று கொண்டு,
“சரி.... சரி..... இரண்டு பேரும் அப்பறம் கொஞ்சிக்கங்க...... இப்போ சூர்யா..... எனக்காக...... நீ இரண்டு விசியம் செய்யானும்.......” என்றாள்.
சூர்யா என்ன என்பது போல் பார்த்தான்
“ஒன்னு உன்னோட final exam எழுதனும்.....” என்றாள்.
இதை கேட்ட சூர்யா “இல்ல மாதவி.......” என்று இழுத்தான்.
“சூர்யா நீ exam எழுதர..... அவ்ளோதான்.......” என்றாள் பிடிவாதமாக அவளின் கையில் இருந்த பேப்பர்ரை சூர்யாவின் கையில் கொடுத்தாள்.
சூர்யாவோ அது என்ன என்று பிரித்துப் பார்த்தான்.
அது அவனின் கல்லூரியில் இருந்து சூர்யா, அவனுடைய எக்ஸாம் எழுத தரப்பட்ட கடிதம் இதை பார்த்த சூர்யா சரி என்பது போல் தலையசைத்தான்.