அந்த அமைதியை கெடுப்பது போல், காதை அடைப்பதுப் போல்
"சூர்யா டேய் சூர்யா " என்று கத்திக்கொண்டே உள்ளே வந்தாள் மாதவிதேவி.
"ஏன்டி இப்படி கத்தார நீ கத்தர கத்துல என் காதுல இருக்கற சவ்வு கிழிந்துரும் போல" என்று கூறிக்கொண்டு தன் காதை தன் கை கொண்டு தேய்த்துக்கொண்டான் சூர்யா.
“போடா” என்று கூறிக்கொண்டே அவனை தள்ளிவிட்டு உள்ளேச் சென்றாள்.
அங்கு அவனின் தாய் சாரதா உள்ளே இட்லி சுட்டுக்கொண்டு இருந்தார். நேராக உள்ளே சென்று சமையல் மேடையின் மேல் அமர்ந்துக்கொண்டு அங்கு உள்ள இட்லியை போட்டுச் சாப்பிட தொடங்கிவிட்டாள்.
அத்தை சூப்பரா இருக்கு என்று ருசித்துக்கொண்டே கூறினாள்.
சூர்யா ரெடியாகிக்கொண்டு நேராக சமையல் அறைக்குச் சென்றான்.
“அம்மா டிப்பன் ரெடியா” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் சூர்யா.
“கொஞ்சம் இருப்பா இட்லி ஆகிட்டு இருக்கு” என்றார்.
“பசிக்குது அம்மா” என்றான்.
மாதவியோ அங்கு இருந்த இட்லியை வெட்டிக்கொண்டு இருந்தாள். அதை பார்த்த சூர்யா அவள் அருகில் சென்று
“டைனின் டேபில் எதுக்கு இருக்கு அங்க சாப்பிடலாம் அல்ல, எப்போ பார்த்தாலும் இந்த சமையல் மேடையிலே சாப்டரா” என்று கூறிக்கொண்டே அவளின் தட்டில் இருந்த உணவை எடுத்து சாப்பிட துவங்கினான்.
சூர்யாதேவ் MBA படித்துக்கொண்டு இருக்கிறான் அதோடு MODELING துறையில் சேர்வதற்கு முயற்ச்சித்து கொண்டுள்ளான். இவனுடைய உயரமும் அதற்க்கு ஏற்ப அவனுடைய உடல் வாகும் அனைத்து பெண்களையும் ஈர்க்கும் அதுவும் அவன் கண்ணில் உள்ள வசீகர பார்வை அனைத்தும் பெண்களை கட்டிப்போடும்.
ஆனால் நம் நாயகன் அதற்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டான். யாராவது வந்து பேசுனா கூட ஓரிரு வார்த்தைகயோடு முடித்துக் கொள்வான். அவன் அதிகம் பேசும் பெண் மாதவி மட்டுமே.
மாதவிதேவி 22 வயது பார்த்தவுடன் அனைவரையும் திரும்பி பார்க்கும் அழகு fashion technology படித்துக்கொண்டு இருக்கிறாள். இவளுக்கு மிகவும் பிடித்த விசியம் பேசுவது மட்டுமே. சூர்யாக்கு பல முறை தோன்றி உள்ளது. இவள் உறங்கும் போதாவது அமைதியாக இருப்பாளா என்பது,
சூர்யாவும் மாதவியும் சிறு வயது முதல் நண்பர்கள். அவளின் தந்தை சதா சிவம் ஒரு தொழில் அதிபர். பணக்கர வரிசையில் எப்பொதும் முதல் ஐந்து இடத்தில் இருப்பவர். கடந்த 20 ஆண்டுகளாக தன் இடத்தை தக்க வைத்துக்கொண்டு உள்ளார். அவருக்கு தன் மகள் என்றால் உயிர். அவளுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்ய கூடியவர். தாய் லட்சுமி இல்லத்தரசி. லட்சுமிக்கு மகள் மற்றும் கணவன் மட்டும் தான் உலகம் என்று வாழ்பவர்.
இருவரும் ஒரே கல்லுரியில் தான் படிக்கின்றனர்.
இருவரும் ஒன்றாக கல்லூரிக்குள் நுழைந்தனர்.
மாதவி அவளின் வகுப்புக்குள் சென்றாள்.
“ஹாய் நிவி” என்று கூறிக்கொண்டே அவளின் இடத்தில் அமர்ந்தாள் மாதவி.
“ஹாய் மாது நேத்து உனக்கு ரொம்ப நேரம் கால் பண்ண ஆனா கால் ரீச் ஆகல” என்றாள் நிவேதா.
“நேத்து நான் சூர்யா கூட வெளிய போய்ருந்த அங்க சுத்தமா டவர் இல்லடி அதன்” என்றாள் மாதவி.
“யாரெல்லாம் கலந்துக்க போறாங்க, எத்தன காலேஜ் வராங்க” என்று கேட்டாள்.
அதை பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு வகுப்பை கவனிக்க தொடங்கிவிட்டனர் இருவரும்.
மாலை சூர்யா மற்றும் மாதவி இருவரும் வீடு திரும்பும்போது இதை பற்றி மாதவி சூர்யாவிடம் கூறினாள்.
இதை பற்றி கேட்ட சூர்யா “ ம்ம் இது உன் CAREER க்கு நல்லதுனு நினைக்கற அம்மு TRY பார்க்கலாம்” என்றான் சூர்யா.
இதை பற்றி பேசிக்கொண்டே இருவரும் அவர்களின் வீடு நோக்கி சென்றனர்.
( ஹாய் நண்பர்களே, நான் உங்க MathiRathi. இந்த நாவலா ஏற்கனவே ATM site ல எழுதி இருந்த, ஆனா என்னோட தனிப்பட்ட காரணத்தால் இந்த நாவல தொடர முடியல, எல்லாரும் என்ன மன்னிச்சுருங்க. இனிமே தினமும் இந்த site ல உங்கள பார்க்க நான் வருவேன். தினமும் உங்களுக்கு ஒரு epi காத்துட்டு இருக்கு )
மறுநாள் மாதவி அந்த ஈவன்டில் சேர்வதற்காக நிவேதாவிடம் கேட்டாள்.
ஆனால் நிவேதா “இல்லடி சந்தோஷ்க்கு pair இல்லனு சொன்ன அதனால நான் அவன் கூட ஜாயின் பண்ணிட்டேன் டி” என்றாள்.
“ம்ம் சரி நிவி” என்றாள்.
பிறகு யார் கூட சேர்ந்து இந்த ஈவன்ட பண்ணலாம் என்று சிந்திக்க தொடங்கினாள் மாதவி. யார் கூட join பண்ணலாம், என்ன ஒரு யோசனையும் வர மாட்டிங்குது சரி எப்பவும் போல சூர்யா கிட்டவே கேட்போம். நமக்கு வாய்த்த அடிமை மிகவும் புத்திசாளி என்ன பையன் ரொம்ப நல்லவன இருக்கான். அவனே எதுக்கு ஏதாவது idea குடுப்பான் நம்ம என் இந்த சின்ன மூளைய வேஸ்ட் பண்ணுவான் என்று மனதிற்க்குள் நினைத்து சிரித்துக் கொண்டாள் மாதவி.
சிறிது நேரத்தில் உணவு இடை வேளைக்கான பெல் அடித்தது. மாதவி நேராக candeen சென்றால் எப்போதும் போல் சூர்யா மாதவிக்காக காத்துக்கொண்டு இருந்தான்.
மாதவு நேராக சென்று சூர்யாவிடம் நடந்த அனைத்தையும் கூறினாள்.
பின் “என்ன பண்ணலாம் சூர்யா” என்று கேட்டாள் மாதவி.
“எனக்கும் தெரியல அம்மு” என்றான்.
அப்போது அவள் வகுப்பு தோழி சுவேதா வந்தாள்.
“ஹாய் மாதவி எனக்கு ******** ஈவன்ட்க்கு உன் கூட join பண்ணிக்கவா” என்று கேட்டாள் சுவேதா.
“ம்ம்ம் சரி சுவேதா நானும் யாரும் இல்லனு நினைச்சுடு இருந்த” என்று கூறினாள் மாதவி.
“நீ நிவேதா கூட சேர்ந்து பண்ணுவனு நினைச்ச” என்றாள்.
“இல்ல அவ சந்தோஷ் கூட சேர்ந்து பண்ணராத சொன்னா நிவி” என்றாள் மாதவி.
உடனே சுவேதா “ஓ ஓ அப்போ நம்ம யாரும் கண்ணுக்கு தெரிய மாட்டோம்” என்று கூறி சிரித்தாள் அவளுடன் சேர்ந்து சூர்யாவும் மாதவியும் சிரித்தனர்.
பிறகு மூவரும் அந்த எவென்ட்க்கு என்ன என்ன செய்யவேண்டும் என்று பேசிக்கொண்டே உணவு அருந்தினர்.
அடுத்த ஒரு வாரம் முழுவதும் ஈவன்டிற்க்கு ஆன உடையை வடிவமைப்பதில் மூவரும் மிகவும் busy யாக இருந்தனர்.
மாதவி ஒரு அழகான உடையை வடிவமைத்தாள். சூர்யா சில திருத்தங்கள் செய்தான். அந்த உடை மிகவும் அழகாக இருந்தது. அந்த உடை சுவேதாக்கு மிகவும் பிடித்தது.
“சரி மாதவி ட்ரெஸ் ரெடி ஆனால் model யாரு” என்றாள் சுவேதா.
உடனே சூர்யா தனது கைப்பேசியை எடுத்து சில புகைப்படத்தை காட்டினான்.
“இப்போது இவங்க எல்லாரும் தான் famous model ஆக இருக்காங்க, இவங்க யாரையாவது நம்ம பார்த்து பேசலாம்” என்று சூர்யா கூறினான்.
மாதவியும் சுவேதாவும் அந்த புகைப்படங்களை பார்த்தனர் அதில் இருவரும் சேர்ந்து மூன்று பேரை select செய்தனர்.உடனே மூவரும் அவர்கள் மேனேஜருக்கு கால் செய்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினர். ஆனால் அதில் ஸ்ரேயா மட்டுமே ஒப்புக்கொண்டாள்.
மாதவி சூர்யாவைப் பார்த்து
“ஸ்ரேயா மட்டும் தான் availableலா இருக்காங்க என்ன பண்ணலாம்” என்று கேட்டாள்.
நம்ம செலெக்ட் பண்ணுன dressக்கு அவங்க அழகா இருப்பாங்க அடுத்த வேலையை பார்க்கலாம் என்றான் சூர்யா. இந்த வித பிரச்சனையும் இல்லாமல் ஈவன்டிற்க்கு ஆனா அனைத்தையும் தாயார் செய்துக்கொண்டு இருந்தனர்.
ஒருநாள் ஸ்ரேயா மாதவிக்கு கால் செய்து அவளிற்க்கு ஆனா உடையை பார்க்க வேண்டும் என்று கூறி அன்று மாலை பார்ப்பதற்க்காக மாதவி வீட்டிற்க்கு வந்தாள். அந்த உடையை பார்த்ததும் ஸ்ரேயாவிற்க்கு மிகவும் பிடித்து விட்டது.
“Wow ! இந்த டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு மாதவி இத நீதா தயாரித்தாயா? என்று கேட்டாள் ஸ்ரேயா.
“ஆமா மேம்” என்றாள் சிறிய வெட்கத்துடன். ஆனால் ஸ்ரேயாவோ மாதவியை பார்த்து ஒரு மர்மமான முறையில் சிரித்தாள்.
Event நாளும் வந்தது,
காலையில் சூர்யாவும் மாதவியும் கிளம்பினர் அவர்களுடன் சுவேதாவும் கலந்துக்கொண்டாள்.
அவர்கள் ஈவன்டி நடக்கும் hotel க்கு சென்று ஸ்ரேயாவிற்க்கு கால் செய்தாள் மாதவி.
“வந்துட்டு இருக்க மாதவி என்னும் 10 mits ல வந்துருவேன்” என்றார் ஸ்ரேயா.
“Ok மேம்” என்று கூறிவிட்டு போனை வைத்தாள்.
அனைவரிடமும் “இன்னும் 10 mits ல வந்துருவாங்க” என்று கூறினாள் மாதவி.
ஆனால் 10 நிமிடம் கடந்தது 20 நிமிடம் ஆனது ஆனால் ஸ்ரேயா வரவில்லை. ஸ்ரேயாவின் எண்ணிற்க்கு அழைத்தாள் phone எடுக்கப்படவில்லை. மாதவிக்கும் சுவேதாவிற்க்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.
மாதவியோ சூர்யாவின் கைகளை பிடித்துக் கொண்டு “சூர்யா இப்போ என்ன செய்யறது ஸ்ரேயா என்னும் வரல எனக்கு பயமா” இருக்கு என்றாள். அவள் இரு கண்களிலும் நீர் கோர்த்து அழுவதற்க்கு தாயராக இருந்தாள்.
அதை கவனித்த சூர்யா “பொறுமையா இரு அம்மு, வேற யாரவது கிடைக்கறாங்களானு பார்க்கலாம்” என்றான் அவளிடம் கூறிக்கொண்டு வேறு மாடல்களை தேட தொடங்கினான் சூர்யா.
ஆனால் அந்த சிறிது நேரத்தில் அவர்களுக்கு எந்த மாடலூம் கிடைக்கவில்லை.
“இப்போ என்ன பண்றது சூர்யா, யாருமே நமக்கு கிடைக்கலா, என்ன பண்றது” என்றாள் மாதவி.
“இவ்ளோ நாள் ஒர்க் பண்ணது எல்லாம் வேஸ்டா போயிருச்சு” என்று தலையில் கை வைத்து புலம்பினாள் சுவேதா.
“ரெண்டு பேரும் புலம்பா கொஞ்ச நேரம் அமைதியா இருங்க என்ன பண்ணலாம் னு யோசிக்கலாம்...” என்றான் சூர்யா.
ஆனால் மாதவி பதட்டத்தோடு கைளை பிசைந்து கொண்டு இருந்தாள்.
மாதவியை பார்த்த சூர்யா “ஏன் மாதவி நீயே மாடலா இருக்க கூடாது... உனக்கு தான் மாடலிங் தெரியும் தான ட்ரை பண்ணு” என்றான்.
“என்ன.. நா.. நா.. நானா..” என்று பதட்டது உடன் கேட்டாள்.
“ஆமா நீதான் ” என்று கூறினான்.
இதைக்கேட்ட சுவேதாவும் “ஆமா மாதவி நீ பண்ணு” என்றாள் அவளும் அவனுடன் சேர்ந்து கொண்டு,
ஆனால் மாதவிக்கு மிகவும் பயமாக இருந்தது.
“நான் எப்படி பண்றது இப்ப வரைக்கும் பண்ணதே இல்ல எதாவது தப்பு ஆயிடுச்சுனா எல்லாமே வேஸ்டா போய்டும் எனக்கு ரொம்ப பயம இருக்கு” என்று இருவரையும் பார்த்து பயந்து கொண்டே கூறினாள் மாதவி.
“வேற எந்த வாய்ப்பும் நமக்கு இல்லா மாதவி நீதான் பண்ணணும்” என்றான் சூர்யா.
“டிரை பண்ணு மாதவி நமக்கு வேற மாடல் இல்ல” என்றாள் சுவேதா
அவளும் சரி என்று அரை மனதாக ஒப்புக் கொண்டாள்
இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கும் நிலையில் அவள் மேக்கப் போடுவதற்காக சென்றாள், சுவேதாவும் அவளுக்கு உதவியாக உள்ளே சென்றாள். இவர்களுக்கு உதவியாக ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் வந்திருந்தார். மாதவியுடைய முடியும் சருமம் மிகவும் மென்மையாக இருந்ததால் மேக்கப் போடுவதற்கு சிரமமாக இல்லை.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மாதவி வெளியே வந்தாள்.
அந்த உடை பீச் கலரில் sleevelessல் அதிக வேலைப்பாடுகள் இருந்தது. அதற்க்கு ஏற்ப அவளின் நீண்ட முடியை அழகாக சுருல் செய்து இருந்தாள். அந்த உடைக்கு ஏற்ப அவளின் காலணி சற்று உயரமாக இருந்தது. அவள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தாள்.
அந்த உடையில் மாதவியை பார்த்த சூர்யாவிற்கே மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
மாதவி சூர்யாவிடம் சென்று “சூர்யா நா எப்படி இருக்க” என்று தயங்கிக் கொண்டே கேட்டாள்.
“இந்த ட்ரெஸ்லா நீ ரொம்ப அழகா இருக்க மாதவி, யூ லுக்கிங் கார்ஜியஸ்” என்று கூறி அணைத்தான் சூர்யா.
அனைத்து மாடல்களையும் அழைத்தனர். மாதவியின் கைகள் லேசாக நடுங்கியது. அவளிம் கையை சூர்யா பிடித்துக்கொண்டு இருந்ததால் அவனால் அவளின் கை நடுக்கம் புரிந்தது.
‘சூர்யா கண் சிமிட்டி நான் இருக்கிறேன்’ என்று கண்களின் சைகை செய்தான். அதில் சற்று தெளிந்தாள் மாதவி.
மாதவியை ஸ்டேஜ்க்கு அனுப்பிவிட்டு சூர்யா அவனின் இடத்திருக்கு வந்து அமர்ந்தான்.
அந்த ஸ்டேஜில் மாதவி நடக்கும் போது ஹரிணி சற்று பொறாமையுடன் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
ஹரிணியும் மாதவியும் ஒரே வகுப்பில் தான் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஹரிணிக்கு தன் அழகில் மிகவும் கர்வம் உண்டு. அதோடு அனைத்திலும் முதலில் வரவேண்டும் என்ற பிடிவாதம் உண்டு. ஹரிணி நேற்றுதான் மாதவியின் dress design பார்த்தாள். அந்த dress மிகவும் அழகா இருந்தது. இதை பார்த்ததும் அவளிற்க்கு தன்னுடய dress design னை விட மிகவும் அழகாக இருந்தது. அதை பார்த்த ஹரிணிக்கு பொறாமையாக இருந்தது.
ஹரிணி சற்று யோசித்தாள் எப்படியாவது நாளை மாதவியை தோற்க்கடிக்க வேண்டும் என்று நினைத்தாள். அவளுடைய model யார் என்று விசாரித்தாள். அப்போதான் தெரிந்தது இந்த மாடல் ஸ்ரேயா என்று, ஸ்ரேயாவை நன்றாகவே தெரியும். அதனால் உடனே தன் மொபைலை எடுத்து ஹரிணி ஸ்ரேயாவிக்கு அழைத்தாள்.
Hlo frds story eppadi erukkunu sollunga frds.........
சற்று யோசித்த ஸ்ரேயா “ம்ம்... சரி நாளைக்கு நா வரல சொல்லிறேன்” என்றாள் ஸ்ரேயா அரை மனதாக. ஸ்ரேயாவிற்க்கு பணம் கிடைத்தால் போதும் என்று எண்ணுபவள்.
“ இப்போ சொல்ல வேண்டாம்..... நா சொல்லற படி பண்ணு..” என்றாள்.
அதை கேட்ட ஸ்ரேயாவோ “ம்ம் சரி, ஆனா எனக்கு இதனால எந்த பிரச்சனையும் வராது அல்ல” என்று சந்தேகமாக கேட்டாள்
அப்படி எதுவும் நடக்காது என்று உறுதியாக கூறினாள் ஹரிணி.
அதே போல் மறுநாள் வரேன் என்று கூறினாள். பின் கடைசி நிமிடத்தில் சூர்யாவின் கால் எடுக்கவில்லை.
நேற்று நடந்ததை எண்ணிக்கொண்டு, இங்கு மாதவி stage நடப்பதை பார்த்து சற்று எரிச்சலாகவும் கோவத்துடனும் இருந்தாள் ஹரிணி.
ஹரிணியின் அருகில் இருந்தா அவளின் தோழி மாயா,
“என்ன ஹரிணி இவளோட மாடல் வரலனா, இவ தோத்துருவானு நினைச்சோம். ஆனா இவ என்னடான இவளே மாடலா வந்து நிக்கறா, இப்போ என்ன பண்ணறத்து... சீப்பு ஒளிச்சுவெச்ச கல்யாண்மே நின்றும் ஆன கதையாவல்ல இருக்கு இது. இப்போ என்ன பண்ணது” என்று நக்கலாக ஸ்ரேயாவை பார்த்து கேட்டாள் மாயா.
“ஏய் நீ கொஞ்சம் வாய மூடிட்டு இருக்கயா” என்று கத்தினாள் ஹரிணி.
“உன் கூட சேர்ந்தா பாவத்துக்கு அப்படிதான இருக்க, எப்போ என்ன பேச விட்ட இப்ப பேச” என்று மாயா நொடித்துக் கொண்டாள்.
“எப்போவும் அப்படியே இரு” என்றாள் ஹரிணி.
ம்க்கு என்று சலித்துக்கொண்டே நின்றாள் மாயா.
ஹரிணி அங்கு ஸ்டேஜில் நடந்துக்கொண்டு இருந்த மாதவியை பார்த்தாள்
அவர்கள் பிளான் செய்து அனைத்தும் சொதப்பிவிட்டது.
இப்பொழுது ஸ்ரேயாவுக்கு பதிலாக மாதவி ஸ்டேஜில் நடந்துவிட்டாள். அதுவும் அந்த உடையில் அவள் மிகவும் அழகாக இருந்தாள்.
ஹரிணி உடைய மாடலும் அவள் டிசைன் செய்த உடையை அணிந்து நடந்து வந்தால் அது ஒரு சிவப்பு நிற கவுன் அது மிகவும் அழகாக இருந்தது.
ஆனால் மாதவியில் உடை அவளின் உடையை விட அழகாக இருந்தது. அதுவும் அவளின் நிறத்திற்க்கு ஏற்ப்ப அவளின் உடையின் நிறமும் அமைந்தது.
Ramp walk முடிந்ததும் மாதவி அவளின் makeup அறைக்கு சென்றாள்.
அதன் பிறகு சூர்யா மற்றும் சுவேதா இருவரும் மாதவியின் மேக்கப் அறைக்கு சென்றனர் .
“மாதவி ரொம்ப அழகா இருக்க, அருமையா பண்ணுன” என்று கூறினாள் சுவேதா.
ஆனால் மாதவியோ சூர்யாவை பார்த்தாள்
சூர்யா மாதவிவின் அருகில் வந்து அவளை அணைத்து “நீ ரொம்ப அருமையா பண்ண அம்மு ரொம்ப அழகா இருந்துச்சு உன் டிரஸ் செமையா இருந்துச்சு” என்று கட்டி அணைத்தான்
அவர்கள் பேசிட்டு இருந்த சிறிது நேரத்திலேயே winner அறிவித்தனர்
அதில் மாதவியும் இருந்தாள்.
இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றாள்.
மாதவி இரண்டாவது சுற்றுக்கு தயாரானாள்.
அந்த உடையும் மாதவி தான் தயாரித்தாள். ஆனால் அதில் சில திருத்தங்களை சூர்யா செய்தான்.
அந்த உடையில் மாதவி ஸ்டேஜில் நடக்கும் பொழுது அனைவரும் கண்ணும் மாதவின் மேலே இருந்தது.
அது ஒரு gown ஆக இருந்தது. மேலே கருப்பு நிறத்திலும் கீழே பேபி பிங்க் நிறத்திலும் அந்த விளக்கு ஒளியில் அவளின் உடை மின்னி கொண்டு அழகாக இருந்தது.
இதில் அனைவரும் நினைத்தது போல் மாதவி முதலிடத்தையும், ஹரிணி இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.
பிறகு இன்னும் சிலர் மூன்று நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தையும் பிடித்தனர்
இந்த அனைவரும் இறுதி சுற்றுக்கு தகுதி ஆனார்கள்
Story எப்படி போகுதுனு comment பண்ணுங்க சகோஸ்...................
அவளுடைய அலங்காரம் அனைத்தும் முடிந்த பின் உடை மாற்ற உள் அறைக்கு சென்றாள். அவளுடன் சுவேதாவும் சென்று விட்டாள்.
அப்பொழுது சூர்யாவிற்க்கு அவனின் அம்மாவிடம் இருந்து கால் வந்தது. அதனால் அதை பேசிக்கொண்டே வெளியே சென்றுவிட்டான்.
அப்பொழுது ஹரிணி மாதவியின் அறைக்கு சென்றாள். சிறிது நேரம் கழித்து வெற்றி புன்னைகையுடன் வெளியே வந்தாள்.
மாதவியின் அறிவிப்பு வந்ததும் அவள் மேடை ஏறினாள்.
அவளின் உடை கடல் நீல நிறத்தில் அவளின் உடல் வடிவத்திற்க்கு ஏற்ப்ப அழகாக வடிவமைத்து இருந்தது. அந்த உடையில் மாதவி பார்ப்பதற்க்கு கடல்கன்னி போல் இருந்தாள்.
அவள் நடக்கும் போது அவளின் உடைக்கு பின் சிறிது உடை தரையில் படர்ந்த்தது. அனைவருமே அவளின் உடை தான் வெற்றிப் பேறும் என்று எதிர்ப்பார்த்தனர்.
ஆனால் அவள் அந்த ramp walk ல் சிறிது தூரம் நடந்து வந்ததும், அவளிம் கால் இடறியது.
அதை சமாளித்துக்கொண்டு நடந்தாள். ஆனால் இரண்டு அடிதான் எடுத்து வைத்தாள் மறுபடியும் கால் இடறியது. இப்போது அவளால் சமாளிக்க முடியாமல் கீழே சரிந்தாள்.
அவள் முதலில் தடுமாறிய போதே சூர்யா கவனித்தான். சூர்யா சுதாரிப்பதற்க்குள் மீண்டும் அவள் தடுமாறி கீழே விழுந்து விட்டாள்.
கீழே விழுந்த மாதவியின் உடையில் இருந்த முன் பக்க இரண்டு ஊக்கு அறுந்து விட்டது. இதை கவனித்த மாதவி அதை பிடித்துக்கொண்டு எழ முயன்றாள். ஆனால் எழ முடியவில்லை
அதற்க்குள் சூர்யா ஸ்டேஜ் ஏற முயன்றான். ஆனால் அங்கு இருந்த ஆட்கள் அவனை இற அனுமதிக்கவில்லை. அவர்களை தள்ளி விட்டு மாதவியின் அருகில் வந்து அவளை மறைப்பது போல் நின்று விட்டான் . பின் சூர்யா தனது கோர்டை கழட்டி அவளிற்க்கு போர்த்தி விட்டு தூக்கினான்.
மாதவி சூர்யாவின் தோளில் கை வைத்துக்கொண்டு “சூர்யா கால் ரொம்ப வலிக்கிறது” என்று அழுதாள்.
“கால் இடறிறுச்சு போல நடக்க கஷ்டப் படரா” என்று கூறிக்கொண்டே அவளை தூக்கிக்கொண்டே நடந்தான்.
இந்த நிகழ்வின் போது சிறிது நேரம் நின்ற நிகழ்ச்சி மீண்டும் துவங்கியது.
மாதவியின் அறைக்கு தூக்கி வந்த சூர்யா அங்கு இருந்த படுக்கையில் அவளை படுக்க வைத்து அருகில் அமர்ந்து அவளின் காலை பரிசோதித்தான் அவளின் கால் நன்றாக வீங்கிவிட்டது. இதை பார்த்த சூர்யாவிற்க்கு மனத்திற்க்கு சொல்லமுடியாத வலி ஏற்ப்பட்டது. எப்போதும் மாதவியின் சிரித்த முகத்துடன் பார்த்து விட்டு அவளின் கண்ணீரை பார்க்க்ட் முடியாமல் வேறுபுறம் திருப்பிக்கொண்டு
“ஒன்னும் இல்ல அம்மு, கொஞ்சமா வீங்கிருக்கு சிக்கிரன் சரி ஆகிரும்” என்று அவளிடம் கூறிக்கொண்டு தன்னையும் சமாதனம் செய்த்துகொண்டான்.
அப்போது அங்கு நியம்பிக்கப்பட்டு இருந்த மருத்துவர் உள்ளே வந்தார். அவளின் காலை பரிசோதி மருத்துவர் ஒரு வாரத்தில் சரி ஆகிவிடும் என்றார்.
மருத்துவரை அனுப்பி விட்டு வந்த சூர்யா மாதவியின் நோக்கி நடந்து சென்றான். அவளின் அருகில் அமர்ந்து அவளின் தலையை தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.
மாதவி சூர்யாவின் தோழில் சாய்ந்து “நம்ம இதுல வின் பண்ண முடியாது” என்றாள்.
“பரவால அம்மு நம்ம இது வரைக்கும் வந்ததே சந்தோசம்” என்று கூறிக்கொண்டே அவளின் தலையை தடவி கொடுத்தான். சூர்யாவிற்க்கும் சிறிது வருத்தமாக இருந்தது. இந்த ஈவென்டில் மாதவி வெற்றி பெறுவாள் என்று எண்ணிக்கொண்டு இருந்தான். ஆனால் கடைசி நிமிடத்தில் இப்படி ஆகிவிட்டது என்று வருத்தப்பட்டான்.
“ஏன் அம்மு உன் கால் தடுக்கிருசா”.
“இல்ல சூர்யா என் செப்பல்தா இதோ பிரச்சன போல அதுனாலதா நா விழுந்தேன்”
செப்பலயா என்று சூர்யா சந்தேகமாக கேட்டுக்கொண்டே அவளின் செருப்பை பரிசோதிதான். ஆனால் அவளின் செருப்பில் எந்த வித பிரச்சனையும் இல்லது போல் இருந்து.
“இல்ல அம்மு, செப்பல் எந்த வித பிரச்சனையும் இல்ல” என்று கூறிக்கொண்டே செருப்பின் அடிப்பகுதியை சோதித்தான். அதில் ஏதோ வித்தியாசம் தோன்றியது. அவளின் செருப்பில் ஏதோ திரவம் இருந்தது. அதில் கை வைத்தால் வழுக்கி கொண்டு சென்றது.
என்ன சூர்யா... என்ன ஆச்சு... என்று கேட்டுக்கொண்டு மற்றொரு செருப்பை எடுத்து சூர்யா சோதித்த இடத்தை பார்த்தாள்
“என்னடா எப்படி வழு வழுனு இருக்கு”
“யாரோ உன் செப்பல் ல இத தடவிருக்காங்க போல அம்மு”
அப்போது அங்க இருந்த நிவேதா “ஹரிணிதான் உன் room ல இருந்து வெளியே வந்தாள்” என்று கூறினாள்.
“ஹரிணியா” என்றாள் சுவேதா.
“ஆமா மாதவி ஹரிணி உன் room லா இருந்து வெளிய போறது நான் பார்த்தேன்” என்ற நிவேதா. சிறிது சோசித்து “நா உள்ளே வரும் போது ஹரிணி உன் செப்பலதா பாத்துடு வெளியே போனாள். அப்போ நா என்ன ஹரிணி ,என்ன ஆச்சு ஹரிணி” என்று கேட்டேன்
உடனே சூரியா சிசிடிவி கேமரா இருக்கும் அறைக்கு சென்றான். அவனுடன் நிவேதா சுவேதா மற்றும் மாதவியும் சென்றனர். மாதவி நடக்க முடியாத காரணத்தால் சுவேதா கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு அந்த அறையை நோக்கி சென்றனர்.
அங்கு சென்ற சூர்யா காவலாளிகளிடம் ஏதோ பேசிவிட்டு மாதவியின் மேக்கப் அறையில் உள்ள கேமராவை ஆன் செய்ய சொன்னான். அங்கு மாதவி மேக்கப் போட்டுக்கொண்டு இருப்பது தெரிந்தது.
சிறிது நேரம் கழித்து மாதவி உடை மாற்றும் அறைக்கு சென்றபின் ஹரிணி உள்ளே வருவது தெரிந்தது. நன்றாக zoom செய்து உற்றுப் பார்த்தான் சூர்யா.
அப்பொழுது ஹரிணி உள்ளே வந்து மாதவியின் செப்பலை எடுத்து தன் கையில் கொண்டு வந்திருந்த பாட்டில் உள்ள ஏதோ ஒன்றை அந்த செருப்பில் தடவுவது தெரிந்தது.பின் அதை சரிபார்த்து உள்ளே வைத்து விட்டு அவள் வெளியே செல்லும் பொழுது நிவேதா உள்ளே வருவது தெரிந்தது.
இதைப்பார்த்த சூர்யாவுக்கு மிகவும் கோபம் கொண்டான்.
“அந்த ஹரிணிக்கு என்ன தைரியம் இருந்த எப்படி பண்ணிருப்ப” என்று கூறிக்கொண்டே வெளியெ செல்ல முயன்றான்.
ஆனால் அதை கேட்கும் நிலைமையில் சூர்யா இல்லை. அவளை தள்ளி விட்டு போக முயன்றான். மாதவியோ சூர்யாவின் பின் பக்க சட்டையை இருக்கமாக பிடித்துக்கொண்டாள்.
மாதவிக்கோ சூர்யா ஏதாவது பிரச்சனை செய்த்து விடுவானோ, அதனால் சூர்யாவிற்று ஏதவது பிரச்சனை நடந்து விடுமோ என்ற பயம் இருந்தது.
“சூர்யா PLEASE அமைதியா இரு, என்ன பாரு “என்று கூறிக்கொண்டு அவனின் முகத்தை தன்னை நோக்கி கட்டய படுத்தி திருப்பினாள்.
“எங்க நீ எந்த வித பிரச்சையும் செய்ய கூடாது” என்று கட்டளையாக கூறினாள்.
மாதவியின் பேச்சை கேட்ட சூர்யா. அமைதியாக அங்கு இருந்து போட்டி நடக்கும் இடத்திற்க்கு நடந்தான். அவனுடன் மற்றவர்களும் சென்றனர்.
மாதவிக்கு அடிப்பட்டு விட்டதால் அவரால் அந்த போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. ஹரிணியின் மாடல் ஹரிணி வடிவமைத்த உடையை அணிந்து கொண்டு வந்தாள். அந்த உடை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது சிவப்பு நிறத்தில் கற்கள் பதித்து தரையில் புரண்டு கொண்டு இருந்து. அதை அணிந்து வந்த மாடலும் அழகாக இருந்தாள். ஹரிணி நினைத்தது போலவே அவளுடைய உடை மிகவும் அழகாக அமைந்தது. போட்டி முடிவுகளை அறிவித்தனர்.
அதில் ஹரிணி வெற்றி பெற்றாள்.
ஹரிணி மிகவும் சந்தோஷமாக சென்று அதற்கான பரிசை வாங்கிக் கொண்டு திரும்பினாள். அப்போது சூர்யா மிகவும் கோபதுடன் வந்து அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டான்.