ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னை மாற்றும் காதலியே.... கதை திரி

Status
Not open for further replies.

mathirathi12

Member
Wonderland writer

என்னை மாற்றும் காதலியே...!​


அத்தியாயம் – 11​


மாதவி சொன்ன உடன் சூர்யா தோப்புக்காரணம் போட ஆரம்பித்தான். இதை பார்த்த மாதவிக்கு சிரிப்பு வந்து விட்டது. முகத்தை திருப்பிக்கொண்டு சிரித்தாள்.​

சூர்யா அதை பார்த்து, அவள் அருகில் சென்று அவளின் காதை பிடித்து திருகினான்.​

“இவ்ளோ நேரம் பேசம்து போது இரண்டு பெரும் என்கிட்டே பேசாம விளையாட்டு காட்டிட்டு இப்போ மட்டும் சிரி” என்றான் சூர்யா.​

“ஆ...... காது வலிக்குதுடா...... எரும ......நீ மட்டும் காலைல என்கிட்டே சொல்லாம எங்கயோ போன இல்ல.....” என்கிறாள். அவளின் காதை தேய்த்துக்கொண்டே,​

அதற்க்கு அவன் பதில் கூறாமல் அமைதியாக நின்றான்.​

பின் “அதுக்காக நீ என்கிட்ட பேசாம இருப்பையா” என்றான்.​

இப்போது அமைதியாக இருப்பது மாதவியின் முறை என்பது போல் அமைதியாக இருந்தாள்.​

சூர்யா "நா உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் சூர்யா.​

சொல்லு “சூர்யா” என்றாள் மாதவி .​

“இங்க வேணாம் காபி ஷாப்ல பேசலாம்” என்றான்.​

அவளும் சரி என்று கூறிவிட்டு,​

“நா....... போய் அப்பா கிட்ட சொல்லிடு வந்தரன் என்று போன் பேச வெளியே சென்று விட்டாள்.​

சூர்யா பிறகு “இப்போ உனக்கும் ok தனமா”.​

“அவள ஏதாவது சொன்ன பெத்த பையன் கூடவே சண்டை பிடிக்கற” என்று செல்லமாக கோவபட்டான்.​

சாரதம்மாவோ “நீ பாட்டுக்கு சொல்லாம போய்ட்ட மாதவி வந்து கேட்டதும் அவ முகமே மாறி போய்ருசு பா” என்றார் சாரதாம்மா.​

“இனி நீ எங்க போனாலும் மாதவி கிட்ட சொல்லிட்டு போ” என்றார்.​

“சரி மா” என்றான் தூரத்தில் மாதவி போன் பேசுவதை பார்த்துக்கொண்டே. மாதவி போன் பேசிக்கொண்டே உள்ளே வந்தாள்.​

“சூர்யா நா அப்பா கிட்ட சொல்லிட்டேன் போலாமா” என்றாள் மாதவி.​

“ம்ம் கிளம்பலாம் என்று கூறிவிட்டு சாரதாம்மாவிடம் திரும்பி “கிளம்பரோம்மா” என்றான்.​

“சரிபா பாத்துப்போய்ட்டு வாங்க”என்றார்.​

மாதவியும் ஓகே அண்டி பை என்று கூறினாள்.​

சாரதாம்மாவோ மாதவியின் அருகில் சென்று அவள் கன்னத்தை பிடித்துக்கொண்டு “இப்போத பார்க்க நல்ல இருக்க இப்படியே எப்போதும் சிரிச்சுட்டே இரு” என்றார்.​

அவளும் “கண்டிப்பா அண்டி” என்று கூறிக்கொண்டு சூர்யாவுடன் சென்றாள். அவர்கள் செல்வதையே சாரதம்மா பார்த்துக்கொண்டிருந்தார்.​

இவர்கள் இருவரும் காபி சாப் க்கு சென்றனர். அங்கு சென்று சூர்யா இருவருக்கும் காபி சொல்லிவிட்டு மாதவியின் அருகில் அமர்ந்தான். சூர்யா சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.​

“என்ன சொல்லு சூர்யா” என்று கூறினாள்.​

அதற்கு சூர்யா “ஹரிணி என்னை காதலிக்கிறதா சொன்னா” கூறினான்.​

இதை கேட்ட மாதவி “என்ன சொல்றா சூர்யா” என்று கூறினாள்.​

பிறகு அன்று நடந்த அனைத்தையும் மாதவியிடம் சூர்யா கூறினான்.​

இதைக்கேட்ட “மாதவி congrats சூர்யா” என்று கூறினாள்.​

அதற்கு சூர்யா “நீ என்ன விளையாடுறியா” என்று கேட்டான்.​

அதற்கு மாதவி “அவ எவ்ளோ லவ் பண்ணுன தற்கொலை முயற்சி வரைக்கும் போயிருப்பா” என்று கூறினாள்.​

இதைக்கேட்ட சூர்யாவும் அமைதியாக இருந்தான்.​

“ஹரிணியும் நம்ம பிரண்டு தா....... அதனால நம்ம ஒன்றாகவே இருக்கலாம்” என்று மிகவும் சந்தோஷமாக கூறினாள்.​

“ஆனால் ஹரிணி என்கிட்ட சொல்லவே இல்ல” என்று பொய் கோபப்பட்டால் மாதவி.​

“அத நீ அவகிட்டதா...... கேட்கணும்” என்று கூறினான்.​

“மாதவியும் சரி.... நா..... நாளைக்கு அவக்கிட்ட கேட்டுக்கிறேன்” என்றாள்.​

அவள் சந்தோஷமாக இருப்பதை பார்த்த சூர்யாவிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.​

சூர்யாவிற்கு ஒரு பயம் இருந்தது.​

எங்கே மாதவி “இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டாள்” என்ற ஒரு பயம் இருந்தது. சூர்யாவிற்க்கு ஹரிணியில் மேல் சிறியதாக விருப்பம் இருந்தது. அது எதோ ஒரு ஈர்ப்பு போல்.​

மாதவியை சரி என்று கூறியதும் சூர்யாவுக்கு சந்தோஷம். பிறகு சூர்யா, மாதவியை அவள் வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டிற்கு சென்றான். இதைப்பற்றி அவன் தன் தாயிடம் எதுவும் கூறவில்லை. மறுநாள் சூர்யா எப்பொழுதும் போல் கிளம்பினான். மாதவி வந்தவுடன் அவளை அழைத்துக்கொண்டு கல்லூரி நோக்கி இருவரும் சென்றனர்.​

மாதவி ஹரிணி இருந்த இடத்திற்கு சென்று “சூர்யாவை லவ் பண்ணதை ஏன் எங்கிட்ட சொல்லா” என்று கேட்டாள்.​

அதற்கு ஹரிணி “நா உன்கிட்ட ஏன் சொல்லணும்” என்று கேட்டாள்.​

அதைக் கேட்டா மாதவிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.​

இருந்தாலும் மாதவி “congrats” என்று கூறினாள்.​

அதற்கு அவள் ஏனோதனோ வென்று “thanks” என்று கூறிவிட்டு அமர்ந்தாள்.​

ஆனால் சிரித்துக்கொண்டே பரவாயில்லை என்று கூறிவிட்டு அவ இடத்திற்கு சென்று அமர்ந்தாள். இதைப்பற்றி யாரிடமும் கூறவில்லை.​

உணவு இடைவேளையின் பொழுது மாதவிக்கு assignment submit பண்ண வேண்டிய வேலை இருந்ததால்,​

அதை கொண்டு போய் staff room ல் வைத்து விட்டு கேன்டீனில் சூர்யா காத்துக்கொண்டு இருப்பான் என்று நினைத்துக் கொண்டு சென்றாள்.​

ஆனால் அங்கு சூர்யாவுடன் ஹரிணி அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தான்.​

மாதவி அருகில் சென்று நின்றாள்.​

அதற்கு ஹரிணி “வா மாதவி உனக்காகதா வெயிட் பண்ணிட்டு இருக்கோம்” என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.​

அதற்கு சரியான “sorry assignment submitt பண்ணிட்டு வர லேட்டாயிடுச்சு” என்று கூறிக் கொண்டே அவர்கள் எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.​

பிறகு மூவரும் பேசிக்கொண்டு உணவருந்தினர். சூர்யா மாதவியிடம் ஏதேனும் பேச சென்றால் ஹரிணி ஏதேனும் பேசி தன் பக்கத்திக்கு திருப்பிக் கொண்டே இருக்கிறாள். பிறகு எதுவும் கூறாமல் அமைதியாக உணவு அருந்த தொடங்கினாள் மாதவி.​

ஹரிணி சூர்யாவிடம் “இன்று மாலை பீச்சுக்கு போகலமா” என்று கேட்டாள்.​

அதற்கு சூர்யா மாதவியை பார்த்து “போலாமா மாதவி” என்று கேட்டான்.​

மாதவியின் “சரி” என்றாள். அதனால் சூர்யாவும் சரி போலாம் என்று கூறினான்​

இதை கேட்ட ஹரிணி மேலும் கடுப்பானாள்.​

இருந்தது மாலை மூவரும் பீச் நோக்கி சென்றனர்.​

அங்கு மூவரும் அமர்ந்தனார். அன்று மதியம் நடந்தது போலவே சூர்யாவிடம் மாதவி ஏதேனும் பேச வந்தால் ஹரிணி பேச விடவில்லை.​

எதாவது இடையில் பேசிக்கொண்டே இருந்தாள். இதை கவனித்துக் கொண்டு இருந்தா மாதவி அமைதியாக அமர்ந்து விட்டாள். அதோடு இவர்கள் இருவருக்கும் இடையில் தான் இருப்பதாக எண்ணம் தோன்றியது மாதவி. இப்படியே ஒரு வாரம் சென்றது ஒரு வாரத்தில் மாதவி சூர்யாவுடன் பேசுவது மிகவும் குறைந்து விட்டது.​

மாதவி காலையில் சூர்யாவை வீட்டிற்கு சென்றால் ஆனால் சூர்யா இருப்பதில்லை ஏதேனும் காரணம் கூறிக்கொண்டு ஹரிணி அழைத்து கொண்டே இருப்பாள். சரி அவனிடம் போன் செய்து பேசலாம் என்றால் அவனின் எண் எப்போதும் busy க இருந்தாது.​

சாரதாம்மாவும் அவனிடம் “மாதவி உன்ன கேட்டாப்பா” என்பார்.​

“சரிமா நா அவகிட்ட பேசிக்கிறேன்” என்று கூறிவிட்டு செல்வான். அதற்க்குள் ஹரிணி கால் செய்து விடுவாள்.​

மாதவிக்கோ சூர்யாவை பார்க்காமல் மிகவும் சோர்வாக காணப்பட்டாள்.​

இதை பற்றி அவளின் தந்தை அவளிடம் கேட்ட போது “ஒன்னும் இல்லை அப்பா” என்றாள். ஆனால் அவருக்கு அனைத்து விசியமும் தெரியும் சரி எப்போதும் போல்தான் என்று விட்டு விட்டார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல மாதவி சரியாக யாரிடமும் பேசாமல் சரியாக உணவும் உண்ணாமல் இருந்தாள்.​

இதை பார்த்த சதாசிவத்திற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது​

மாதவியிடம் சென்று “நீ லண்டன் university படிக்க apply பண்ணிருந்த அல்ல அதுகிடைச்சுருச்சு என்றார்.​

இதை கேட்ட மாதவிக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. ஆனால் சூர்யாவுக்கு கிடைக்கவில்லை மாதவி என்றார்.​

“ஏன்பா” என்றாள்.​

அதற்க்கு சதாசிவமோ “அவனோட மார்க் பத்தல குட்டிமா” என்றார்.​

அதற்க்கு மாதவியோ “அப்போ நானும் போகல அப்பா” என்றாள்.​

“ஆனா குட்டிமா இது உன்னோட கனவு கரீயர் எல்லாமே இருக்கு” என்றார்.​

அதற்க்கு மாதவியோ “இது எல்லாதையும் விட எனக்கு சூர்யா முக்கியம் அப்பா.... அவன தனியா விட்டுடு நா எப்படி போவேன்” என்றாள்.​

இதை கேட்ட மாதவியின் தாய் “அவன் ஏற்க்கனவே உன்னோரு பொண்ண லவ் பண்ணிட்டு உன்ன நினைக்கரதே இல்ல..... ஆனா நீ அவனுக்காக இந்த offer விட போறயா” என்றார் கோபமாக.​

அவளின் தந்தையும் “ஆமா குட்டிமா அவனுக்குனு வேற பொண்ணு வந்துட்ட........ அதனால நீ அவனுக்கு முக்கியம் இல்ல...... அதே மாறி உனக்கும் ஒரு கல்யாணம் நடந்த நீயும் சூர்யா கிட்ட இப்படிதா நடந்துப்ப” என்றார்.​

“அப்படி எல்லாம் இல்ல” என்றாள் பிடிவாதமாக.​

சதாசிவமோ “சரிட..... நீ யோசிச்சு முடிவு எடு........ இன்னும் ஒரு வாரம் இருக்கு......” என்று கூறிவிட்டு சென்றனர்.​

அவளோ அதை எதுவும் காதில் வாங்கமல், அமர்ந்து இருந்தாள்.​

அப்போது அவளிற்க்கு ஒரு கால் வந்தது அதை attend செய்தாள். அதில் கூறிய விசித்தை கேட்டு அவள் சந்தோசதில் வானத்திற்க்கும் பூமியிற்க்கும் குதித்தாள்.​

இதை சூர்யா விடம் கூற அவன் வீடு நோக்கிச்சென்றாள்.​


அது என்ன சந்தோசமான விசியம்னு நாளைக்கு சொல்லர.....



மீதி கதைய நாளைக்கு பார்க்காலாம்.................................


---MATHIRATHI---
 

mathirathi12

Member
Wonderland writer

என்னை மாற்றும் காதலியே...!​


அத்தியாயம் – 12​


என்னை மாற்றும் காதலே 0.jpeg


மாதவி அந்த சந்தோசமான விசியத்தை கூற சூர்யாவின் வீட்டு நோக்கி சென்றாள்.​

“சூர்யா சூர்யா” என்று கத்திக்கொண்டே வீட்டுக்குள் ஓடினாள்.​

அங்கு இருந்த சாரதாம்மாவோ “சூர்யா வீட்டுல இல்லமா” என்றார்.​

இதை கேட்ட மாதவிக்கு “எங்கதா போறான் இவன்” என்று புலம்பிக்கொண்டே அவனிற்க்கு கால் செய்தாள்.​

கால் முழுவதும் சென்றது ஆனால் எடுக்கவில்லை, மீண்டும் மீண்டும் முயர்ச்சித்தாள் மூன்று முறை சென்றா பின் தான் அழைப்பு எடுக்கப்பட்டது.​

“ஹலோ.... சூர்யா எங்க...” என்று ஆரமிக்கும் போதே​

“ஹலோ.... ஹரிணி பேசறேன்...” என்றாள்.​

மாதவியோ “ஹரிணி, சூர்யா இருக்கானா” என்றாள்.​

அதற்க்கு “இங்கதா இருக்கான்.... ஆனா நீ எப்போ அவன் கிட்ட பேசமுடியாது..... எப்போ பார்த்தாலும்....... ஏன் நாங்க இருவரும் இருக்கும் போதே கால் செய்யற...” என்றாள் கேட்டாள் சற்று கோபமாக​

அதற்க்கு மாதவி ஏதோ கூறவருவதற்க்குள்​

“யார் கிட்ட பேசிட்டு இருக்க ஹரிணி” என்று சூர்யாவின் குரல் கேட்டது.​

“மாதவி கிட்டதான் சூர்யா.... உன் கிட்ட பேசனும் சொன்ன..... அதுதா நீ வண்டி பார்க் பண்ண போய்ருக்க..... போன் என் கிட்ட இருக்குனு சொல்லிட்டு இருந்த....” என்றாள்.​

மாதவியோ ஏன் எப்போ மாத்தி பேசறா என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போதே.​

“ஹலோ.... சொல்லு அம்மு” என்றான் சூர்யா.​

“நீ எங்க இருக்க சூர்யா.... உன் கிட்ட ஒரு முக்கியமான விசியம் சொல்லனும்” என்றாள் மிகவும் சந்தோசமாக.​

“ஹரிணி கூட வெளிய வந்தேன்..... என்ன விசியம். .....எவ்ளோ சந்தோசமா இருக்க.....” என்றான்​

“இந்த விசியத்த கேட்ட..... நீயும் ரொம்ப சந்தோசப்படுவ சூர்யா” என்றாள்.​

“சொல்லு அம்மு.....” என்றான்.​

“இல்ல..... நா.... நேருல பார்த்து தான் சொல்லுவேன்” என்றாள் மாதவி.​

அவன் “ஒரு மால்லின் பெயறை கூறி இங்குதான் இருக்கேன் .....நீயும் வரயா” என்றான்.​

அதற்க்கு “ம்ம்..... சரி.... நா வரேன்” என்றாள்.​

இதை கேட்ட ஹாரிணிக்கு மிகவும் கோபமாக இருந்தது. ஆனால் இதை சூர்யாவிடம் கூற முடியாது. மாதவியை பற்றி ஏதாவது தவறாக கூறினாள். பிறகு சூர்யாவை சமாதனம் படுத்துவது மிகவும் கடினம் என்று பல முறை அனுபவப்பட்டவள்.​

சூர்யா ஹரிணியிடம் திரும்பி “அம்மு..... வந்துட்டு இருக்க வந்ததும் காபி ஷாப் போலாம்” என்றான்.​

ஹரிணியோ “நம்ம காபி ஷாப்ல வைட் பண்ணலாம் சூர்யா..... மாதவி வந்ததும் கால் பண்ணுவ அல்ல..... அப்போ சொல்லிகளாம் ரொம்ப நேரமா..... இங்க வைட் பண்ணிட்டு இருக்கோம்” என்று கூறினாள்.​

“ம்ம்.... அதும் சரிதான்...” என்றான் சூர்யா.​

பிறகு இருவரும் காபி ஷாப் சென்று காத்திருந்தனர். சூர்யா மாதவிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இருந்தான்.​

இதை பார்த்த மாதவியும் நேராக அந்த காபி ஷாப்க்கு சென்றாள்.​

மாதவியோ வேகமாக அந்த மால்க்கு வந்தாள். அங்கோ காபி ஷாப் மூன்றாவது மாடியில் இருந்தாது. லிப்ட் நோக்கி வேகமாக நடந்தாள். அவள் செல்வதற்க்குள் லிப்ட் நோக்கி மேலே சென்றது. அது கீழே வருவதற்க்கு சிறிது நேரம் கூட காத்துருக்காமல் மூன்று மாடிக்கு படிக்களின் அவ்ளோ வேகமாக ஓடி சென்றாள்.​

அங்கு காபி ஷாப்குள் நுழைவதற்க்கு முன்னே “சூர்யா சூர்யா” என்று கத்திக்கொண்டே ஓடினாள்.​

அவள் அவ்ளோ வேகமாக ஓடி வருவதை பார்த்து சூர்யா எழுந்து அவள் அருகில் சென்றான். சூர்யா, மாதவி அருகில் செல்வதற்க்கும் மாதவி கீழே விழுக போவதற்க்கும் சரியாக இருந்தாது. சூர்யாவோ மாதவி கீழே விழுவதற்க்குள் பிடித்துக்கொண்டான். அவளும் சூர்யாவை பிடித்துக்கொண்டு சிறிது நேரம் ரிலக்ஸ் ஆனாள்​

சூர்யாவும் அவளின் முதுகை தடவிக்கொடுத்து “என்ன ஆச்சு அம்மு... என் இவ்ளோ வேகமா ஓடி வர..... எவ்ளோ தடவ சொல்லறது.... மெதுவா வா....” என்று கோவப்பட்டான்.​

ஆனால் இதை எதையும் காதில் வாங்காமல் மாதவி அவனை பார்த்து “சூர்யா உனக்கு உனக்கு” என்றாள் மூச்சுவாங்கிக்கொண்டே.​

“சொல்லுடி” என்றாள்.​

“உனக்கு ********* modelling chance கிடைசுருக்கு” என்றாள்.​

இதை கேட்டா சூர்யாவும் என்ன செய்வது என்று தெரியாமல் அவனும் மாதவியுடன் சேர்ந்து குதிக்க துவங்கினான். அங்கு உள்ள அனைவரும் இவர்கள் இருவரையும் வித்தியாசமாக பார்த்தனர். இதை எதுவும் சூர்யாவும் மாதவியும் கண்டுக் கொள்ளவில்லை. ஆனால் இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தா ஹரிணிக்கு தான் வயிறு எரிந்தது.​

இந்த மாடலிங்கான வாய்ப்பு எத்தனை பேர் காத்துக்கொண்டு உள்ளனர். ஆனா இவனுக்கு எப்படி கிடைச்சுது என்று யோசித்துக்கொண்டு ஒரு வெறுப்புடன் அவர்களையே பார்த்தாள் . ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளாமல் சூர்யாவின் அருகில் சென்று​

“கங்கிராட்ஸ் சூர்யா” என்றாள்.​

சூர்யாவும் “தேங்ஸ் ஹரிணி.... நா ரொம்ப சந்தோசமா இருக்க” என்றான்.​

இந்த மாடலிங் வாய்ப்பிற்க்காக சூர்யாவும் மாதவியும் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டு இருந்தனர். இதற்க்கான ஆடிசன் சென்ற போது சூர்யாவிற்க்கு நம்பிக்கையே இல்லை நம்பிக்கை இல்லாமல் தான் அவன் அதில் சேர்ந்தான்.​

ஆனால் மாதவியோ அவனின் நம்பிகையும் சேர்த்து இவளிடம் இருந்தது. அதற்க்குன பலன் தான் இது. இந்த event யில் மட்டும் சூர்யா வெற்றி பெற்றுவிட்டால் போதும் அவனின் நடிகன் ஆக வேண்டிய கனவில் 25% தாண்டிவிட்டது போல் ஆகிவிடும்.
மூவரும் coffee shop விட்டு வெளியே வந்தனர். சூர்யாவும் மாதவியும் இதை இருவரும் வீட்டில் சென்று கூறினர். சூர்யாவின் வீட்டில் இதை பற்றிக்கூறிய போது சாரதாம்மாவிற்க்கு அதை பற்றி ஒன்னும் புரியவில்லை.​

இது ஏதோ பெரிய விசியம் என்பது மட்டும் புரிந்தது. அதனால் இருவரையும் அழைத்து பூஜை அறையின் முன் நிறுத்தி கடவுளை வணங்க செய்தார்.​

பின் இருவரும் மாதவியின் வீட்டுக்கு சென்று இதை பற்றி மாதவியின் தாய் மற்றும் தந்தையிடம் கூறினர்.​

இதை கேட்டா மாதவியின் தாய், கங்கிராஸ் சூர்யா என்று கூறிவிட்டு “நா போய் இனிப்பு செய்ச்சு எடுத்துட்டு வரன்” என்று கூறி உள்ளே சென்றார்.​

மாதவியின் தந்தையோ “கங்கிராஸ்... வருங்கால சூப்பர் ஹீரோ” என்றார்.​

இதை கேட்ட சூர்யா “thank you uncle” என்று கூறிவிட்டு சிறிதாக வெக்கப்பட்டான்.​

இதை பார்த்த மாதவி அவளின் தந்தையுடன் சேர்ந்து அவனை ஓட்ட ஆரமித்தாள்.​

அப்போது அங்கு இனிப்பு செய்து எடுத்து வந்த மாதவியின் தாய் அனைவரிடத்தில் குடுத்த பின் “ஏன் எல்லாரும் சூர்யாவ கலாய்க்கிறைங்க என்று கேட்ட அவனின் அருகில் அமர்ந்து அவனுடன் கூட்டணி போட்டு மாதவியையும் சதாசிவத்தையும் கலாய்க்க ஆரமித்தார்.​

இந்த ஈவன்ட் க்கு இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே இருந்தாது. அதனால், மறுநாள் அந்த ஆடிசனில் கலந்துக்கொள்வதற்க்கு உடை எடுக்க மாதவி, சூர்யா மற்றும் ஹரிணி அனைவரும் ஒரு டிசைனரிடம் சென்றனர். அங்கு முதலில் அவர்கள் வைத்து இருக்கும் உடையை பார்ப்பதற்க்கு சென்றனர். அப்போது ஹரிணி சூர்யாவின் கையை பிடித்துக்கொண்டு அந்த உடையை பார்க்கவிடாமல் தொல்லை செய்துக்கொண்டு இருந்தாள். சூர்யாவும் அவளை தள்ளி தள்ளி நிறுத்தி டிரஸ் டிசைன் பார்க்க செல்வான். ஆனால் ஹரிணி அதற்க்கு விட வில்லை மாதவியும் ஒவ்வொரு ட்ரஸ் காட்டி எப்படி உள்ளது என்று கேட்பாள்.​

ஆனால் சூர்யா அதற்க்கு பதில் கூறுவதற்க்குள் ஹரிணி தொந்தரவு செய்வாள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சூர்யா அவளை தள்ளி நிறுத்தி கொஞ்ச நேரம் அமைதியா நில்லு என்றான். ஹரிணியோ சிறிது நேரம் யோசித்துவிட்டு “நானுன் செலைக்ட் பண்ணர என்று கூறிவிட்டு மறுபடியும் அவர்களை தொந்தரவு செய்ய துவங்கினாள்.​

மாதவி எடுத்த உடையை ஏதாவது குறைக்கூறிவிட்டு அவள் எடுத்த உடையை காண்பிப்பாள். ஆனால் அந்த உடை நன்றாகவே இருக்காது. இதை அனைத்தையும் சமாளித்து சூர்யா ஒரு design தேர்ந்து எடுப்பான். அது மிகவும் அழகாக இருந்தாது.​

பிறகு designer இடம் சென்று அதில் சிறிது சிறிது மாற்றம் செய்ய கூறினான்.இதே போல் மாதவியும் சூர்யாவும் இந்த Addison க்காக எதாவது செய்தாள். ஹரிணியோ அது நன்றாக இல்லை இது நன்றாக இல்லை என்பாள் அதோடு அதிலே எதாவது மொக்கையாக இருப்பதை தேர்ந்து எடுப்பாள். இதை அனைத்தையும் சமாளிக்கவே சூர்யாவிற்க்கு போது போது என்று ஆனது.​

ஒரு மாதம் ஆனது,​

இன்று 6 மணிக்கு இந்த ஈவன்ட் தொடங்கவுள்ளது. முன்னத்து நாளே மாதவி சூர்யாவிற்க்கு ஆனா அனைத்தையும் ஏற்ப்பாடு செய்துவிட்டாள்.​

மாதவி சூர்யாவிற்க்கு அழைத்து “கிளம்பலாமா சூர்யா” என்று கேட்டாள்.​

“ம்ம் கிளம்பலாம் அம்மு” என்றான்.​

அங்கு சென்று சூர்யா தயார் ஆனான். அவனின் முறை அழைத்ததும் முதல் சுற்றில் பங்கு கொண்டான்.​

அதில் வெற்றியும் பெற்றான்.​

இரண்டாவது சுற்றிற்க்கு காத்துக்கொண்டு இருக்கும் போது சூர்யாவிற்க்கு ஹரிணியிடம் இருந்து கால் வந்தது.​

அதை எடுத்து காதில் வைத்த சூர்யா,​

“ஹலோ ஹரிணி..... எங்க இருக்க..... நீ இன்னும் இங்க வரலயா.....” என்றான்.​

“ஹலோ..... நா..... மாயா பேசற சூர்யா..... ஹரிணி படில இருந்து கீழ விழுந்துட்ட அடி பட்டுருச்சு...... எனக்கு என்ன பண்ணரதுனு தெரியல்ல..... கொஞ்சம் வரயா....” என்றாள்​

சூர்யா எதுவும் யோசிக்காமல் “ஏதோ வரேன்” என்று கூறிவிட்டு கிளம்பினான்.​

“Hey சூர்யா கிளம்பிட்டான்..... நீ இங்க விழுந்தா மாறி நடி......” என்று கூறி விட்டு காலில் அடி பட்டு இரத்தம் வருவது போல் செட் செய்தனர்.​

அவன் புறப்படுவதற்க்கு முன் அங்கு இருந்த ஒரு பெண்ணிடம் சென்று ஹரிணிக்கு அடிப்பட்தாகவும் தான் போய்ட்டு சிக்கிரம் வருவதாக கூறிவிட்டு சென்று விட்டான். மாதவி வந்தவுடன் அந்த பெண் சூர்யா கூறியதை கூறினாள். மாதவி உடனே சூர்யாவிற்க்கு கால் செய்தாள். அவன் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஹரிணிக்கு அடிப்பட்டதை கூறினான்.​

மாதவியோ “இங்க ஈவெட் போய்ட்டு இருக்கு சூர்யா..... நீ இங்க இருந்தாகனும்.... நீ எங்க வா.... நா அப்பாவ போய் என்னனு பார்க்க சொல்லறன்...” என்றாள் மாதவி.​

அப்போது சூர்யாவிற்க்கு சற்று கோபம் வந்தது. ஒரு பொண்ணுக்கு அடிப்பட்டடு இருக்க இவ என்னடானா ஈவெட் ல கலந்துக்க என்கிறாள் என்று கோபம் வந்தது.​

“இல்ல மாதவி..... நா ஹரிணி வீட்டுக்கு பக்கத்துல போய்ட்ட ....நா அவளுக்கு எப்படி இருக்குனு.... பார்த்துட்டு வந்தர..... இன்னும் அரைமணி நேரம் இருக்கு அல்ல..... அதுக்குள்ள வந்தர..... என்றான்.​

“சரி சிக்கிரம் வா” என்றாள்.​

சூர்யாவோ ஹரிணியின் வீட்டுக்கு சென்றாள். அங்கு ஹரிணிக்கு அடிபட்டு இரத்தம் வந்துக்கொண்டு இருந்தது (அது மாறி அவங்க அதுல set பண்ணி வெச்சுருந்தாங்க).​

சூர்யா அவளின் அருகில் சென்று அவளின் காலை பரிசோதிக்க போகும் பொது வலியில் அலறுவது போல் அலறினாள்.​

இதை பார்த்த சூர்யா மாயவின் உதவியோடு அவளை ஹாஸ்பிடல் அழைத்து சென்றான். மாயாவோ அவற்களுக்கு தெரிந்தா ஹாஸ்பிடல் செல்ல சொன்னாள்.​

சூர்யாவும் அங்கயே சென்றான்.​

இவர்கள் முதலிலேயே அவர்களின் தோழியிடம் இதை பற்றிக்கூறிவிட்டனர். அதனால் அவர்களின் நாடகம் அங்கு நிறைவேறியது.​

அதற்க்குள் மாதவி பல முறை கால் செய்தாள். சூர்யாவோ அவள் அழைப்பை எடுக்கவில்லை.​

கடைசியாக அவன் போன் எடுத்தான்.​

“ஹலோ சூர்யா..... எங்க இருக்க...... இன்னும் கொஞ்ச நேரத்துல.... உன்னோட walk....” என்றாள்.​

“hey மாதவி.... கொஞ்சமாவது உனக்கு மனசாட்சி இருக்க.... ஹரிணிக்கு அடிபட்டுருக்கு.... நீ என்னடானா..... அந்த ஈவென்ட்லயே இருக்க...... உனக்கு கொஞ்சமாவது மத்தவங்க மேல பாசம் இருக்கனும்.... அதுத உங்கிட்ட இல்லயே...... ஹரிணி எப்பவும் உன்ன பத்தி நல்லதுதா..... சொல்லுவா..... ஆனா நீ அவளுக்கு அடிப்பட்டுருக்கு...... நீ அதை பத்தி கொஞ்சம் கூட கவல படம இப்படி நடந்துக்கர.... ” என்று அவளை திட்டிவிட்டு போன் வைத்துவிட்டான்​

சூர்யாவை stage க்கு வர சொல்லி அழைப்பு வந்தது, ஆனால் சூர்யா தான் அங்கு இல்லையே​

மாதவிக்கு இதற்க்கு மேலும் இங்கு இருப்பது எந்த வித பயனும் இல்லை என்று தெரிந்து கிளம்பினாள். அவள் செல்லும் போது மணி 9.00 ஆகிவிட்டது. மாதவி அவளின் வண்டியில் சென்றுக்கொண்டு இருந்தாள்.​

இடையில் இவள் வாகனம் நின்றுவிட்டது. அப்போது லேசாக தூறிக்கொண்டு இருந்த மழை நன்றாக பெய்ய துவங்கிவிட்டது. மாதவிக்கு சற்று பயமாக இருந்தது. ஆனாலும் மனதை திட படுத்திக்கொண்டு வண்டி ஓரத்தில் நிறுத்திவிட்டு, அவளின் கை பையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரமித்தாள்.​

செல்லும் வழியேல்லாம் சூர்யாவிற்க்கு போன் செய்துக்கொண்டே சென்றாள்.​

சிறிது நேரத்தில் அவனின் போன் switch off என்று வந்தது. இதை பார்த்த மாதவிக்கு சற்று பயம் வந்தது. அதன் பின் தான் கவனித்தாள் ஏதோ காலடி சத்தம் கேட்பது போல், பின்னால் திரும்பி பார்த்தாள். அங்கு நான்கு ஐந்து பேர் இவளை தொடர்ந்து வந்துக்கொண்டு இருந்தனர்.​

இதை கவனித்த மாதவி வேகமாக நடந்தாள் அவர்களும் வேகமாக நடந்தனர்.அதன் பின் மாதவி அங்கு இருந்து ஓடினாள். அவர்களும் ஓடி சென்று மாதவியை பிடித்தனர்.​

அதில் அனைவரும் மது அருந்திருந்தனர்.அதி ஒருவன் மாதவியின் அருகில் வந்தான்.​

மாதவியோ “pls..... என்ன விட்டுருங்க...” என்று கெஞ்சினாள்.​

“உன்ன விடவ இவ்ளோ தூரம் ஓடிவந்தோம்” என்று கூறிக்கொண்டே அருகில் வந்து அவளின் துப்பிட்டாவை பிடித்து இழுத்தான்.​

அவனை தள்ளிவிட்டு திரும்ப ஓடினாள். நன்றாக மழை பெய்ததாள். அவளின் கால் எங்கோ இடித்து விழுந்தாள் திரும்ப எழுந்து ஓட ஆரமிப்பதற்க்குள் அந்த ஆட்கள் இவளை பிடித்துவிட்டனர்.​

அதில் ஒருவன் மாதவியின் அருகில் வந்து மாதவியின் கண்ணத்தில் ஓங்கி அறைந்தான்.​




மீதி கதைய MONDAY பார்க்காலாம்.................................






----MATHIRATHI----
 

mathirathi12

Member
Wonderland writer

என்னை மாற்றும் காதலியே...!​

அத்தியாயம் – 13​


என்னை மாற்றும் காதலே 0.jpeg

ஒருவன் மாதவியின் காலை பிடித்து இழுத்ததில் மீண்டும் விழுந்தாள். அப்போது அங்கு ஒரு கார் வேகமாக வந்தது, அந்த காரில் வந்த நபர் இவர்களை பார்த்து நின்றது அதில் இருந்து இறங்கி இவர்களை பார்த்து அருகில் வந்தவன்.​

அப்போது அதில் ஒருவன் இவனை பார்த்து பார்த்து “டேய் யாரோ வரங்க” என்றான்.
அனைவரும் அவனை திரும்பி பார்த்தான்.​

பிறகு மாதவியை அங்கையே விட்டு விட்டு ஓடினர். அந்த நபர் கீழே விழுந்த மாதவியின் அருகில் சென்றான். அவள் அருகில் சென்று அவளை உற்றுப்பார்த்தான்.​

“மாதவி.....” என்று அதிர்ச்சியானன்.​

அப்போதுதான் மாதவியும் அவனை பார்த்தாள். தன்னை யாரோ காப்பற்ற வந்து உள்ளதாக நினைத்தாள். ஆனால் அது இவன் என்று அவளிற்க்கு தெரியவில்லை.​

“தருண்” என்றாள் அதிர்ச்சியாக,​

“தருண் நீ இங்க” என்று பேச்சை இழுத்தாள்.​

“அது எல்லாம் அப்பறம் பேசிக்கலாம்” என்று கூறிவிட்டு அவனின் சட்டையை கழட்டி அவளிற்க்கு போர்த்திவிட்டாள்.​

அவளின் உடை சிறிது கிழிந்துவிட்டதாள். மாதவி எழ முற்ப்பட்டாள். ஆனால் முடியவில்லை காலில் நன்றாக அடிப்பட்டது. இதை பார்த்த தருண் மாதவியின் அருகில் சென்று அவளை கை பிடித்து தூக்கிவிட்டான். மெதுவாக அவளை காரின் அருகில் சென்று அவளை உள்ளே அமர வைத்துவிட்டு அவளின் கை பை மற்றும் போன் அனைத்தையும் எடுத்து வந்து அவளிடம் குடுத்தான்.​

பிறகு மருத்துவமனை நோக்கி காரை கிளப்பினான். மாதவியோ மிகவும் பயந்து போய்ருந்தாள். அவளின் உடல் இப்போது வரையிலும் நடுங்கிக்கொண்டு இருந்தாள். தருண் ஆதரவாக அவளின் கையை பிடித்துக்கொண்டான். அப்போதும் அவளின் கை நடுங்கியது. அவன் வேகமாக மருத்துவமனை நோக்கி சென்றான்.​

தருண், சூர்யாவின் வகுப்பில் படிப்பவன். அவனிற்க்கு இவர்களின் நட்பு மிகவும் பிடிக்கும். தருணிற்க்கு சிறிது பொறாமை கூட இருந்தது இவர்களின் நட்பை பார்த்து, பல முறை நினைத்து இருக்கிறான். மாதவி சூர்யாவை போல் நண்பர்கள் அமையவேண்டும் என்று, எப்போதும் அவர்களை அவர்களுக்கு தெரியாமல் பின் தொடர்வான். ஆனால் சிறிது நாட்களாக சூர்யாவுடன் மாதவி இல்லாமல் வேறு ஒரு பெண்ணுடன் சூர்யா சுற்றிக்கொண்டு இருப்பதை பார்த்துக்கொண்டு இருந்தான்.​

அதனால் மாதவி எங்கு சென்றாலும் தருண் அவளிற்க்கு தெரியாமல் பின் தொடர்வான். மாதவியை எந்த விதத்திலும் தொல்லை செய்யமாட்டான். அவனை பொறுத்தளவு மாதவிக்கு எந்த வித பிரச்சைனையும் இல்லாமல் அவள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதே.​

அன்றும் அதே போல் இங்கு மாதவியும் சூர்யாவும் வருவார்கள் என்று தெரிந்துக்கொண்டு இங்கே வந்து இருந்தான். ஆனால் அங்கு சூர்யா இருப்பதால் அவளிற்க்கு எந்த வித பிரச்சைனையும் இல்லாமல் சூர்யா பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் கொஞ்சம் கவனம் இல்லாமல் அங்கு நடக்கும் ஈவேன்டில் கவனம் பதித்தான்.​

முதல் சுற்றில் சூர்யா ஜெய்ச்ச போது அவனின் அருகில் சென்று அவனை தூக்கி சுற்றவேண்டும் என்று நினைத்தான். ஆனால் அவர்களின் அருகில் செல்லவில்லை.​

சூர்யா அங்கு இருந்து போவதை அவன் பார்க்கவில்லை. இரண்டாம் சுற்றில் சூர்யாவை அழைத்த போது அவன் வராமல் இருப்பதை பார்த்த தருண் இவனுக்கு என்ன ஆச்சு இன்னும் வராமல் இருக்கிறான் என்று நினைத்துக்கொண்டு அவனை தேடி சென்றான்.​

அங்கு மாதவி சூர்யாவை வர சொல்லுவதை கேட்டான். அப்போதுதான் தருணிற்க்கு தெரிந்தது சூர்யா இங்கு இருந்து சென்றது. அப்போது தருணின் தங்கை தருணிற்க்கு அழைத்தாள். அந்த அழைப்பை எடுத்து பேசிக்கொண்டு வந்து பார்த்தான்.​

இங்கு மாதவியை காணவில்லை.​

தருண் அனைத்து இடத்திலும் தேடிப்பார்த்து விட்டு அங்கு இருந்த பெண்ணிடம் கேட்டாள். அந்த பெண்ணோ மாதவி எப்பவோ கிளம்பிவிட்டாள் என்று கூறினாள். இதை கேட்ட தருணிற்க்கு அதிர்ச்சியாக இருந்தது சூர்யாவும் எப்போதோ கிளம்பி விட்டான்.​

அப்போ மாதவி தனியாகவே இந்த நேரத்துல கிளம்பி போய்ட்டாளா என்று எண்ணிக்கொண்டு அவளை தேடி சென்றான். அவன் செல்லும் வழியில் ஏதோ பிரச்சனை என்று தெரிந்தது அதனாலதான் தன்னுடைய வண்டியை நிறுத்தினான்.​

பிறகு ஒரு பெண்ணிடம் சில பேர் தகறாரு பண்ணுவதை பார்த்து அவங்களின் அருகில் சென்றான். அந்த பெண்ணின் அருகில் சென்ற பின் தான் தெரிந்தது அது மாதவி என்று தெரிந்தது.​

மாதவியை ஒரு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டாள்.​

அங்கு அவளின் காயத்திற்க்கு மருந்து போட்டுக்கொண்டு இருந்தனர். தருண் மாதவியின் தந்தைக்கு அழைத்து சொல்லிவிட்டான். அவளின் தந்தை தாயும் விரைந்து வந்தனர். மாதவியின் தந்தை தருணின் அருகில் வந்து​

“என்ன ஆச்சுப்பா என் பொண்ணுக்கு” என்று பதற்ட்டத்துடன் கேட்டார்.​

“ஒன்னும் இல்ல அங்கில்...... சின்ன காயம்தா டாக்டர் உள்ள செக் பண்ணிட்டு இருக்காங்க” என்று சமானம் கூறினான்.​

தருண் சூர்யாவிற்க்கும் மெசெஜ் அனுபிருந்தான். அதனால் சூர்யாவும் விரைந்து வந்தான்.​

அங்கு வந்து “என்ன ஆச்சு தருண்..... இப்போ எப்படி இருக்க அம்மு” என்றான்.​

மாதவியின் தந்தைக்கு கூறிய பதிலையே சூர்யாவிற்க்கும் கூறினான். தருண் சூர்யாவின் அருகில் சென்று அவனின் கையை பிடித்துக்கொண்டு ஒன்னும் இல்லை அவளுக்கு என்று ஆறுதல் கூறினான்.​

பிறகு டாக்டர் வெளியே வந்தார்.​

அனைவரும் அவரிடம் சென்று எப்படி இருக்கு என்று கேட்டனர்.​

அதற்க்கு டாக்டர் அடிபட்ட இடத்துல மருந்துபோட்டுருக்கு, கீழ விழுந்து தலைல அடிப்பட்டுருக்குரதுதால, அதுக்கு மட்டும் தையல் போட்டுருக்கு மத்தபடி பெரிய காயம் இல்லை என்று கூறிவிட்டு சென்றார்.​

இதை கேட்ட மாதவியின் தந்தை “என்ன எவ்ளோ அடியா எப்படி நடந்தது” என்று சூர்யாவை பார்த்துக்கேட்டார்.​

ஆனால் சூர்யாவிற்க்குதான் எந்தவித பிரச்சையும் தெரியாது அல்லவ. என்ன சொல்வது என்று அவனிற்க்கு தெரியாமல் நின்றுக்கொண்டு இருந்தான்.​

தருண் மாதவிக்கு எப்படி அடிப்பட்டது என்று அனைத்தையும் கூறிவிட்டான்.​

இதை கேட்ட சதாசிவம் சூர்யாவிடம் திரும்பி “நீ எங்க போன சூர்யா....” என்றார்.​

சூர்யா பதில் சொல்வதற்க்குள் நர்ஸ் வந்து மாதவி உங்கல பார்க்கனும் சொல்லராங்க என்றாள். உடனே அனைவரும் உள்ளே சென்றனர்.​

“குட்டிமா இப்போ உனக்கு எப்படி இருக்கு” என்று கேட்டார் அவளின் தாய்.​

“எனக்கு நல்ல இருக்குமா...” என்றாள்​

“நீ.... ஏன் குட்டிமா தனியா போன சூர்யா தான் கூட இருப்பான் அல்ல.... அவன் கூட போய்ருக்க வேண்டிதான” என்றார்.​

அவருக்கு எப்படி தெடியும் சூர்யா அங்கு இல்லை என்பது,​

“இல்ல அப்பா சூர்யாக்கு கொஞ்சம் வேலை அதிகம இருந்தது.....எனக்கு கொஞ்சம் தலைவலி அதிகமா இருந்ததுனு..... நா தா சூர்யாகிட்ட கூட சொல்லாம வந்துட்டேன்” என்று சூர்யாவை பார்த்துக்கொண்டே கூறினாள்.​

சூர்யாவோ குற்றணர்ச்சியில் தலை கவிழ்ந்து நின்றுக்கொண்டு இருந்தான்.​

“என்னமா நீ.... இந்த தம்பி மட்டும் சரியான நேரத்துக்கு மட்டும் வரலன......என்ன ஆகிருக்கரது.....” என்றார்.​

சதாசிவம் சென்று தருணின் கையை பற்றிக்கொண்டு நன்றிக்கூறினார்.​

சூர்யாவும் தருணிடம் சென்று நன்றிக்கூறினான்.​

தருணோ “ஹேய்..... இதுக்கு எல்லாம் எதுக்கு தங்க்ஸ் சொல்லர.....” என்று கூறி அவனை கட்டியனைத்தான்.​

சிறிது நேரத்தில் மாதவிக்கு உடை மாற்ற உடை வேண்டும் என்பதால் மாதவியின் தாய் மற்றும் தந்தையும் உடை எடுக்க அவர்களி வீட்டிற்க்கு சென்றனர்.​

அவர்கள் சென்றதும் மாதவியை சமாதனம் படுத்த சூர்யா மாதவியின் அருகில் சென்றான் அதற்க்குள் சூர்யாவிற்க்கு ஹரிணியிடம் இருந்து கால் வந்தது அதை எடுத்து பேசினான் சூர்யா.​

“ஹலோ.... ஹரிணி....” என்றான் சூர்யா,​

“சூர்யா..... நீ என் என்ன தனியா விட்டுடு போன....... எனக்கு எங்க இருக்க ஏதோ பயம இருக்கு..... நீ கொஞ்சம் சீக்கிரம் வா.....” என்றாள்​

ஹரிணி “உன் கூட மாயாவ விட்டுடுதான் வந்த.....” என்றான்​

“மாயா..... ஏதோ முக்கியமான வேலை இருக்குனு கிளம்பிட்டா....” என்றாள்.​

“சரி இரு..... நா உடனே வரேன்....” என்று கூறி போன் அனைத்தான்​

“மாதவி....... ஹரிணி ஹாஸ்பிடல..... தனியா இருக்க..... அதனால நா கிளம்பர....” என்று கூறிவிட்டு சென்று விட்டான்.​

சூர்யா என்ன நினைத்தான் என்றால் தருண் தா கூட இருக்கன் அல்ல. அதோட என்னும் கொஞ்சம் நேரத்துல மாதவியின் தாய் தந்தை வந்துவிடுவார்கள். அவளை பார்ப்பதற்க்கு நிறையா பேர் உள்ளனர்​

ஆனால் ஹரிணிக்கு அவர்களின் வீட்டி அனைவரும் வெளியே சென்று இருந்தனர்.​

ஆனால் மாதவிக்கோ அவளின் பெற்றோர்களை விட சூர்யா உடன் இருப்பதை தான் அதிகம் விரும்புவாள் அது சூர்யாவிற்க்கே நன்கு தெரியும் ஆனால் இன்று​

....................​

சூர்யா செல்வதை பார்த்துக்கொண்டு இருந்தாள் எதுவும் பேசாமல்​

தருண் மாதவியின் அருகில் சென்று “சீக்கிரம் வந்துருவான்..... நீ ஃபீல் பண்ணாத மாதவி” என்று கூறினான்.
ஆனால் மாதவி எதுவும் கூறவில்லை. சிறிது நேரத்தில் சதாசிவம் மற்றும் லக்ஷ்மி உள்ளே வந்தனர். வந்தவுடன் சூர்யா எங்கே என்றுதான் கேட்டனர்.​

மாதவி அதற்க்கு பதில் கூறாமல் “அப்பா அன்னைக்கு லண்டன் கல்லூரில படிக்க வாய்ப்பு கிடைச்சுதுனு சொன்னைங்க அல்ல” என்றாள்.​

“அமாம் குட்டிமா..... அங்க போய் படிக்கரதா இருந்தா....... இன்னும் ஒருவாரத்துக்குள்ள அங்க போய் ஜாய்ன் பண்ணணும்......” என்றார்.​

“நா அங்கயே போய் படிக்கிற” என்றாள்​

இதை கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சி..............................​



மீதி கதைய நாளைக்கு பார்க்காலாம்.................................


----MATHIRATHI----
 

mathirathi12

Member
Wonderland writer

என்னை மாற்றும் காதலியே...!​


அத்தியாயம் – 14​



1688019819699.jpeg

மாதவி லண்டன் செல்வதாக கூறியதும் மாதவியின் தாய் மற்றும் தந்தைக்கு ஆச்சிரியமாக இருந்தது. சூர்யாவிற்கு லண்டன் செல்ல வாய்ப்பு இல்லாததால் மாதவியும் செல்லமாட்டாள் என்று எண்ணிக்கொண்டு இருந்தனர். இப்போது அவள் செல்கிறேன் என்று கூறியதும்​

“என்னமா சொல்லற சூர்யாவுக்கு அங்க அட்மிசன் கிடைக்கல...... அங்க நீ தனியா தா போகணும்........ என்கிறார் மாதவியின் தந்தை .​

“மாதவியோ நா போறேன் பா” என்றாள்.​

அவளின் முகத்தாய் பார்த்து “சரி மா...... நா ஏற்பாடு பண்ணற” என்கிறார்.​

இதை கேட்ட லட்சுமி “என்னங்க...... அவதா சொல்லறனா....... நீங்கனும் சரினு சொல்லறாய்ங்க” என்றாள்.​

சதாசிவம் எதுவும் கூறாமல் வெளியே வந்தார். அவருடன் லக்ஷ்மியும் வெளியே வந்தார்.​

இரண்டு நாட்கள் கடந்தது, தருண் காலையில் ஹாஸ்பிடல் வந்தால் இரவு வரையும் பார்த்துக்கொள்வான். மாதவி முதல் நாள் மாதவி தருணிடம் பேசவில்லை. ஆனால் இரண்டாம் நாள் தருண் பேசி பேசியே அவளை பேசவைத்தான்.​

தருணை பொறுத்த அளவு மாதவியும் சூர்யாவும் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே.​

ஆனால் இந்த இரண்டு நாட்கள் சூர்யா மாதவியை பார்க்க வருவான். வந்துதும் சிறிது ஏதாவது பேசுவான் உடனே ஹரிணியிடம் இருந்து கால் வரும் ஏதாவது சொல்லி அவனை அழைத்துக்கொள்வாள்.​

இதை அனைத்தும் பார்த்துக்கொண்டு இருந்த மாதவி அவன் சிரமப்படுவதை பார்த்த்து. “ நீ இங்க வரவேண்டாம் சூர்யா எல்லாரும் இருக்காங்க அவங்க பார்த்துக்குங்க நீ வரவேண்டாம்” என்று கூறிவிட்டாள்.​

இதை கேட்ட சூர்யாவிற்கு கோவம் அதிகரித்தது மாதவியை திட்ட போனபோது மறுபடியம் ஹரிணியிடம் இருந்து கால் வந்தது. அந்த காலையும் மாதவியின் முகத்தையும் பார்த்தான். சூர்யா அதிலே யாருடைய கால் என்பதை கண்டு கொண்டு​

“போ சூர்யா..... ஹரிணி வைட் பண்ணிட்டு இருப்பா.... என்று கூறிக்கொண்டு முகத்தை திருப்பிக்கொண்டாள். சூர்யாவும் எதுவும் கூறாமல் கோவத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அங்கு இருந்து சென்றான். அவன் சென்ற பிறகு மாதவி அவன் மூடிவிட்டு சென்ற கதவையே பார்த்துக்கொண்டு இருந்தாள் .​

அவளை அறியாமல் கண்களின் இருந்து நீர் வந்தது. அதை துடைக்க கூட தோன்றாமல் அமர்ந்து இருந்தாள். இந்த இரண்டு நாட்கள் மாதவி சூர்யாவை மிகவும் மீஸ் செய்தாள். அவன் வந்ததும் செல்வதை பார்த்து வரவேண்டாம் என்று நினைத்துக்கொண்டு தான் அப்படி கூறினாள்.​

சூர்யா ஹரிணி யை பார்க்க போனதும், ஹரிணி அங்கு யார் கூடவோ அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தான்.​

சூர்யா உள்ளே சென்றதும் ஹரிணி “வா சூர்யா..... நா கால் பண்ணும் போது டிரைவிங் ல இருந்தயா” என்றாள்.​

சூர்யா ஹரிணி கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் அமைதியாக அங்கு அமர்ந்து இருந்தவங்களை பார்த்தான். ஹரிணி அவன் கண் போன திசையில் பார்த்து,​

“சொல்ல மறந்துட்ட..... இவங்க என்னோட நண்பர்கள்.....” என்று கூறி அவர்களை அறிமுகப்படுத்தினாள்.​

“Hi bro i’m rocky...... ஹரிணி உங்கல பத்தி நிறையா சொல்லிருக்கா...... உங்கல பார்த்ததுல ரொம்ப சந்தோசம்......” என்றான்.​

சூர்யா எதுவும் கூறாமல் கை மட்டும் குலுக்கினான்.​

Rocky வெளியே சென்றது. சூர்யா ஹரிணியின் அருகில் சென்றூ “எதுக்கு இப்போ வர சொன்ன” என்றான்.​

“ஓ..... அதுவ....... rocky வந்தன் அல்ல....... அவனை உனக்கு அறிமுக படுத்த” என்றாள். சாதரணமாக.​

இதை கேட்டு சூர்யாவிற்க்கு கோபம் அதிகரித்தது ,​

“Hey...... என்ன விளையாடரயா....... நீ கூப்பட உடனே உன் பின்னால வர நா என்ன நாய்க்குட்டியா....” என்று கத்தினான்.​

இதை பார்த்த ஹரிணியோ முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு “அது என்னோட சின்ன வயசு நண்பன்...... அவன் உன்ன பார்க்கனும் சொன்னா........ அதுத உன்ன வர சொன்ன சூர்யா.......​

“ஏன் நா உன்ன ரொம்ப தொந்தரவு பண்ணரனா..........
என்றாள் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு.​

இதை கேட்ட சூர்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். அங்கு மாதவியை வீட்டிற்க்கு அழைத்து செல்ல சொல்லிவிட்டனர். அன்று தருணின் உதவியுடன் மாதவியை வீட்டுக்கு அழைத்துச்சென்றனர்.​

மாதவியின் உடல் நிலை சற்று தேறியது.​

இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருந்தது மாதவி லண்டன் செல்ல. அவளிற்க்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்க தருண் தான் உதவினான்.​

சூர்யாவிற்க்கு மாதவி லண்டன் போகும் விசியத்தை தருண் கூறிவிட்டான்.​

 

mathirathi12

Member
Wonderland writer

என்னை மாற்றும் காதலியே...!​


அத்தியாயம் – 15​


1688019949134.jpeg

சூர்யாவிற்கு மாதவி லண்டன் போகும் விசயத்தை கூறிவிட்டான் தருண். லண்டன் செல்லும் நாளும் வந்தது. அன்று மாலை அவளுக்கு flight காலையில் சூர்யாவின் வீட்டுக்கு சென்றாள். ஆனால் அங்கு சூர்யா இல்லை சூர்யாவின் அம்மா மட்டும்தான் இருந்தார்.​

இவள் உள்ளே சென்றதும் “வா மாதாவி..... என்ன இப்போ எல்லாம் வீட்டுக்கு வராதே இல்லை.....” என்று கேட்டார்.​

அவள் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தால், அவரே “உனக்கும் சூர்யாவுக்கும் எதாவது சண்டையா......” என்றார்.​

“இல்ல.... அன்டி..... அப்படி எதுவும் இல்ல.... கொஞ்சம் வேலைய இருந்த..... அதுத வரமுடியல...” என்றார்.​

“சரி வா சாப்புட்டு..... அப்பறம் பேசலாம்....” என்கிறார்.​

“இல்ல அண்டி...... நா வரும் போது சாப்பிட்டு வந்தா....” என்றாள்.​

இதை கேட்ட சாரதா அம்மா ஆச்சிரியமாக இருந்தது, இப்போதும் “இங்கு வராத இருந்த..... இங்கே வந்துதா சாப்பிடுவ...... ஆனால் இன்று.....”​

அதோட மாதவி சூர்யாவின் அறை எட்டி எட்டி பார்த்துக்கொண்டு இருந்தால் இதை அனைத்தையும் பார்த்த சாரதம்மா,​

“சூர்யா...... வீட்டுல இல்லாம வெளிய போயிருக்க....” என்றார்.​

இதை கேட்ட மாதவிக்கு முகம் தொங்கி விட்டது. பிறகு தான் அவள் லண்டன் போகும் விசயத்தை அவரிடம் கூறினாள். சரதம்மா அதை பற்றி விசாரித்தல் அங்கு எப்படி தங்க போற சாப்பாடு எல்லாம் எப்படி என்னைக்கு கிளம்பர என்று விசாரித்தார்.​

சிறிது நேரம் பேசிவிட்டு அவள் கிளம்பினாள். வீட்டுக்கு சென்றதும் அனைத்தும் பேக் பண்ணிவைத்து இருந்தார் அவரின் குடுப்பத்தினர்.​

மாதவி அவளின் அறைக்கு சென்று சூர்யாவிற்கு கால் செய்தாள்.ஹாஸ்பிடல் இருந்து வந்ததுக்கு அப்பறம் இவளாக இப்போதுக்குத்தான் கால் செய்கிறாள். இவள் லண்டன் செல்வதை கூட தருண் தான் சொல்லித்தான்.​

சூர்யா அதை பற்றி கேட்க ஒருமுறை கால் செய்து கேட்டான்,​

மாதவியும் “ஆமா சூர்யா ஆல்ரெடி அப்ளை பண்ணதுதானா” என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே ஹரிணியின் குரல் கேட்டது​

உடனே மாதவி “சரி.... சூர்யா..... நா.... வைக்கறான்....” என்று கூறிவிட்டு வைத்து விட்டாள்.​

பிறகு இன்று தான் அவளே அழைத்தாள். ஆனால் சூர்யா அவளின் அழைப்பை ஏற்கவில்லை. மாதவி அவளின் அறையில் அழுது தீர்த்தாள். எதற்க்கு அழுகிறால் என்று தெரியவில்லை ஆனால் அழுகிறாள்.​

பின் கண்களை துடைத்துக்கொண்டு சூர்யா ஹரிணியை காதலிக்கிற, அதனால ஹரிணி சூர்யா தன் கூடவே இருக்கனும்னு நினைக்கறதுல என்ன தப்பு, நம்ம தான் தேவையில்லாம அவங்களுக்கு உள்ள போறோம் என்று நினைத்துக்கொண்டாள்.​

பிறகு அவள் கிளம்பி ஹால் க்கு வந்தாள். அங்கு தருண் இருந்தான்,​

“வா தரண்..... எப்போ வந்த .....வந்து ரொம்ப நேரம் ஆகிருசா...”.
என்றாள் கேட்டாள்.​

“இல்ல மாதவி.... இப்போதா வந்தேன்....” என்றான்.​

தருண் அவளின் முகத்தையே பார்த்தால் அவள் அழுதற்கு அறிகுறியாக அவளின் கண் சிவந்து இருந்தது. மாதவியின் அம்மா அவர்கள் இருவருக்கும் குடிக்க ஜூஸ் கொண்டுவந்த குடுத்தார்.​

பின் மாதவியின் முகத்தை பார்த்து “ஏன் மாதவி..... உன் கண்ணு ரொம்ப சிவந்துருக்கு...” என்றார்.​

“ஒன்னும் இல்ல மா..... கண்ணுல தூசு விழுந்துருச்சு” என்றாள்.​

சிறிது நேரத்தில் மாதவியின் தந்தை வந்தார்.​

“என்னமா..... சூர்யா என்னும் வரல....... கால் பண்ணா not reachable னு வருது” என்றார்​

மாதவி பதில் கூறுவதற்க்கு முன் தருண் “சூர்யா நேரா airport க்கு வரனு சொல்லிட்டான் அங்கிள்” என்றான்.​

“ஓ அப்படியா..... எனக்கு கொஞ்சம் சளி பிடிச்சுருக்கு...... என்னால airport க்கு உள்ள வேற போக முடியாது.... (covid issues) என்ன பண்ணரது....” என்றார்.​

தருண் “நா மாதவிக்கு உதவி பண்ணரன் அங்கிள்” என்றான்.​

சதாசிவமோ “இல்ல பா....... பரவல்லை...... உனக்கு எதுக்கு சிரம்மம் மாதவியின் அம்மா கொண்டு போய் விடுவாங்க......” என்றார்​

“இதுல.... என்ன..... சீரமம் அங்கிள் airport வரைக்கு... நா மாதவி கூட போகபோறேன்..... அதுக்கு அப்பறம் சூர்யா வந்து பார்த்துக்க போறான்.... அவ்ளோத....” என்றான்​

அரை மனதாக மாதவியின் பெற்றோர் ஒப்புக்கொண்டனர்.​

மாதவி பெற்றோர்களிடம் கூறிவிட்டு கிளம்பினாள்.​

காரில் செல்லும் போது மாதவி தருணை பார்த்து “சூர்யா airport க்கு வரனு சொன்னான்னா என்றாள்.​

தருண் அவளின் முகத்தை பார்த்து இல்லை என்பது போல் தலையசைத்தான்.​

Airport க்கு சென்று அனைத்து checking வேலையையும் முடித்து விட்டு அமர்ந்தனர்.​

தருண் மாதவியின் அருகில் சென்று அவளின் கையை பிடித்து “ஏதாவது பிரச்சனைனு இருந்தா என்ன கூப்பிடு........ சூர்யா மட்டும் உனக்கு நண்பன்..... இல்ல நானும் இருக்க......” என்றான்.​

“கண்டிப்பா கூப்பிடுற” தருண்.​

நீ ரீச் ஆனாதும் எனக்கு கால் பண்ணு..... அதோட இந்த என்று ஒரு visiting card குடுத்தார். இதாவது எமர்ஜென்சினா ....இவங்களுக்கு கூப்பிடு..... உனக்கு உதவி பண்ணுவாங்க.....” என்றான்​

மாதவி அதை வாங்கி தன் பைக்குள் போட்டுக்கொண்டாள். பிறகு அழைப்பு வந்ததும் அவள் கிளம்பினாள். தருணிடம் கூறிவிட்டு வெளியே எட்டி எட்டி பார்த்தாள் கடைசி நிமிடத்தில் ஆவது சூர்யா வர மாட்டான என்று தருணும் சூர்யா வந்து விடனும் என்று நினைத்துக்கொண்டே அவனும் வெளியவே பார்த்தான். ஆனால் சூர்யா வரவில்லை மாதவிக்கு அழுகையை நிறுத்த முடியைல்லை​

தருண் அவளிற்க்கு ஆறுதல் கூறி அவளை உள்ளே அனுப்பி வைத்தான் மாதவிக்கு சூர்யாவை பார்க்காமல் செல்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. விமானம் புறப்பட்டு விட்டது.​

1688019929179.png

சூர்யாவோ அவரசமாக ஓடி வந்தான். அவன் வருவதை பார்த்த தருண் அவனின் அருகில் சென்று இப்போத கிளம்புனா சூர்யா என்றான் அதை கேட்ட சூர்யா ஏதுவும் பேசாமல் அமர்ந்து விட்டான்​

“உன்ன ரொம்ப தேடுனா........ நீ கடைசி நிமிசத்துலயாவது வந்துருவனு...... வெளியவே பார்த்துட்டு இருந்தா.....” என்றான்.​

1688019909347.png

இதை கேட்ட சூர்யாவிற்க்கு தன்னுடைய நிழல் தன்னை விட்டு போவது போல் உணர்ந்தான் அங்கு மாதவியோ தன்னுடைய நிழலை விட்டு போவது போல் உணர்ந்தாள்.​


இவர்களின் பிரிவு இவர்களின் காதலை உணர்த்துமா இல்லை இந்த பிரிவு நிரந்திரம் ஆக்குமா...................

நாளைக்கு மீதி கதைய நாளைக்கு பார்க்கலாம் frds ..............................



---MATHIRATHI---
 
Status
Not open for further replies.
Top