சூர்யா ஹரிணியை அடித்துவிட்டான். இதை சற்றும் எதிர்பார்க்காத ஹரிணி கன்னத்தில் கை வைத்து சில நிமிடம் நின்றாள். பின் சுதாரித்துக்கொண்டு சூர்யாவை அடிக்க கை ஓங்கினாள். அதற்க்குள் சூர்யா ஹரிணியின் கையை பிடித்து மீண்டும் அவளின் கன்னத்தில் அறைந்தான். அறைந்த வேகத்தில் ஹாரிணி கீழே விழுந்து விட்டாள். அவளின் கன்னமோ நன்றாக வீங்கிவிட்டது.
சூர்யாவிற்க்கோ ஒரு பெண்ணை அடிப்பது தவறு என்று தெரிந்தாலும், மாதவியின் காலில் அடிப்பட்டு அவள் வலியில் துடிப்பது மட்டுமே அவனின் கவனதில் இருந்தது.
அதற்க்குள் அங்கு கூட்டம் கூடியது. அதற்குள் மாதவி, சுவேத, நிவேதா மூவரும் வந்தனர். மாதவி சூர்யாவை பிடித்துக்கொண்டாள்.
இவர்களை நோக்கி வந்த கல்லூரி முதல்வர் “என்ன சூர்யா இது, என்ன பண்ணார” என்று விசரித்தார்.
சூர்யாவோ “இவ தான் சார் மாதவி கீழவிழ காரணம்” என்றான்.
முதல்வரோ நம்பாமல் சூர்யாவை பார்த்தார். உடனே சூர்யா ஹரிணி செய்த செய்யலை தனது போனில் ஏற்றி இருந்ததாள். அதை principal போட்டுக்காட்டினான். அதை பார்த்த முதல்வர் ஹாரிணியை பார்த்து இது என்ன ஹாரிணி உங்கிட்ட இத நா எதிர் பார்க்கல” என்று கூறி திட்டினார். அனைவரும் முன் திட்டியதில் ஹாரிணி அவமானத்தில் முகம் கறுக்க நின்றாள். அவள் வாங்கின award டை அவளிடம் இருந்து திரும்ப பெற்றார். பின் ஹரிணியை 5 நாட்களுக்கு suspend செய்தார்.
பின் சூர்யாவிடம் திரும்பிய “சூர்யா உனக்கும் 5 நாட்கள் suspend செய்யர” என்றார்.
இதை பார்த்த மாதவி “ஏன் sir எதுக்கு suspend பண்ணறைங்க” என்று கேட்டாள்.
அதற்க்கு principal “இவன் பொண்ண கை நீட்டி அடிச்சுருக்க அதுக்கு தான்”.
“ஆனா அந்த பொண்ணுதா தப்பு பண்ணிருக்கு” என்றாள் மாதவி.
“அந்த பொண்ணு தப்பு பண்ணுனா எங்கிட்டதா சொல்லனும், அத விட்டுடு அந்த பொண்ண அடிக்கறது தப்பு” என்று கோபமாக கூறி விட்டு சென்றார்.
அதற்க்குள் ஹரிணி அனைவர் முன்பும் அடி வாங்கினா கோபத்திலும் அவமானதிலும் அந்த இடத்தை விட்டு சென்று விட்டு இருந்தாள். ஹரிணி மிகவும் கோபமாக வீடு நோக்கிச் சென்றாள். அவள் வருகைக்காக அவர் அவனின் அம்மா அப்பாவும் காத்திருந்தனர். அவள் வந்தவுடன் அவள் தந்தை அவள் அருகில் சென்றார்.ஆனால் அவள் அதை மதிக்காமல் அவள் அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் அவளின் தோளில் ரம்யா அங்கு வந்தால் வந்தவுடன்
“ என்ன ஆச்சு அங்கிள்” என்று கேட்டாள்.
“என்னனு தெரியல பங்க்ஷன் முடிஞ்சு வந்த உடனே கோபமாக room குள்ள போய் கதவ சாத்திட்டு ஓபன் பண்ண மாட்டீங்கிறா” என்றார் ஹரிணியின் தந்தை.
ஹரிணியின் தந்தை தொழிலதிபர். தந்தை யின் செல்ல பிள்ளை ஹரிணி சிறு வயது முதலே அவள் கேட்டது அனைத்தையும் வாங்கி குடுத்து விடுவர்.அதனாலே அவளின் பிடிவாத குணமும் அவளிற்க்கு அதிகரித்து உள்ளது.
ரம்யா அவளின் அறைக்குச் சென்று தட்டினார் “ஹரிணி நான் தான் ஓபன் பண்ணு” என்று கூறினாள் உடனே கதவு திறக்கப்பட்டது.
ரம்யா உள்ளே சென்றாள்.அங்கு அவளின் அறையில் இருந்த அனைத்து பொருளும் எறிந்து கடந்தது.
இதைப் பார்த்த ரம்யா “என்ன ஆச்சு ஹரிணி” என்று கேட்டாள்.
ஹரிணியோ அங்கு நடந்த அனைத்தையும் கூறினாள்.இதை கேட்ட ரம்யா அவளை சமதானம் செய்தாள்.ஆனால் ஹரிணியோ சமதானம் ஆகவில்லை. “என்னையே அடிச்சுட்டான்” என்று மட்டுமே கூறிக்கொண்டு இருந்தாள்.ரம்யாவிற்க்கு ஹரிணியை சமாதனம் செய்ய போதும் போதும் என்று ஆகிவிட்டது.
இங்கு,
சூர்யா suspend செய்ததை கண்டு கொள்ளாமல் மாதவியை அங்கு இருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றான். திரும்பவும் அவள் கால் ஊன்றியதாள் மறுபடியும் அவளிற்க்கு வலி ஏற்ப்பட்டு விடுமோ என்று நினைத்துக்கொண்டு .
மருத்துவர் பரிசோதித்து விட்டு எந்த வித பிரச்சனையும் இல்லை என்று கூறிவிட்டார். வலி வந்தா மட்டும் இந்த மாத்திரை போடுங்க என்றார்.மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தா மாதவியும் சூர்யாவும் மாதவியின் காரில் மாதவியின் வீடு நோக்கி சென்றுக் கொண்டு இருந்தனர்.மாதவி எதுவும் பேசாமல் வந்தாள்.
இதை பார்த்த சூர்யா “அம்மு” என்று அழைத்தான்.
ஆனால் மாதவியோ சூர்யாவை பார்க்காமல் திரும்பிக்கொண்டாள்.
சூர்யா “அம்மு என்ன பாரு என் மேல என்ன கோபம்” என்றான்.
ஆனால் மாதவியோ எதுவும் பேசாமல் அமர்ந்து இருந்தாள்.
மாதவி பேசாமல் அமர்ந்து இருந்தது சூர்யாவிற்க்கு கோபம் அதிகரித்தது அதனால் காரை அப்படியே நிறுத்திவிட்டான்.அவன் காரை அப்படியே நிறுத்துவான் என்று எதிர்ப்பார்க்காத பின்னால் வந்த வண்டிக்காரன் கடைசி நிமிடத்தில் சுதாரித்து நிறுத்தினான்.அவர்களை கடந்துப்போகும் போது நன்றாக திட்டிவிட்டு சென்றான்.
இதை பார்த்த மாதவி “ஏண்டா இப்படி வண்டி நிறுத்திறுக்க” என்றாள்
சூர்யா எந்த வித பதிலும் தராமல் வண்டியையும் எடுக்காமல் அமர்ந்து இருந்தான்.
“மாதவியோ சரி நா பேசரே நீ கொஞ்சம் வண்டி எடு” என்றாள்.
அங்கு இருந்து வண்டி எடுத்த சூர்யா மாதவியின் வீட்டில் சென்று விட்டான். இவர்களின் வருகைக்காக மாதவியின் பெற்றோர் மற்றும் சூர்யாவின் தாயரும் காத்திருந்தனர்.
மாதவி மருத்துவமனையில் பரிசோதிக்கும் போதே அனைத்து விசியத்தையும் சூர்யா மாதவியின் தந்தைக்கு கால் செய்து சொல்லிவிட்டான்.
சூர்யா போர்ட்டிகோவில் வண்டி நிறுத்தியதும் அனைவரும் மாதவி பக்கம் வந்தனர். மெதுவாக அவளை கீழே இறக்கி விட்டனர்.
சூர்யா அவளின் அருகில் வந்து அவளை கையில் தூக்கிக்கொண்டான். நேராக அவளின் அறைக்கு சென்றுவிட்டான்.
மாதவியின் தந்தை சதாசிவமோ மாதவியின் அருகில் அமர்ந்து அவளின் காலை வருடிவிட்டார். குட்டிமா ரொம்ப வலிக்குதா என்று கேட்டார்.
மாதவிக்கும் காலில் அடி பட்டதால் கல்லூரிக்கு செல்லவில்லை. சூர்யாவுக்கு கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்ததால் அவனும் வீட்டிலேயே இருந்தான். அன்று சூரியா மாதவியை பார்ப்பதற்காக வீட்டிற்குச் சென்றான். மாதவியோ அவளின் அறையில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து தனது போனை நோண்டிக்கொண்டு இருந்தாள்.
“மாதவி இப்போ வலி எப்படி இருக்கு” என்று கேட்டுக்கொண்டே அவளின் அருகில் அமர்ந்தான் .
“நல்ல இருக்கு சூர்யா, ஆனா ரொம்ப போர் அடிக்குது” என்று கூறினாள்.
அப்போது அங்க வந்த அவளின் அம்மா, இருவருக்கும் காபி கொடுத்துதார்.
காலைல இருந்து இதேதா சொல்லிட்டு இருக்க சூர்யா, காலையிலே இவங்க அப்பா வெளிய கிளம்பிட்டாரு, அப்போ இருந்து இதேத சொல்லிட்டு இருக்க என்றார்.
சிறிது நேரம் இருவரும் செஸ் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது யாரோ மாதவியை பார்க்க வந்துள்ளதாக மாதவியின் வீட்டு வேலையாள் கூறினாள்.
“யார் வந்துருக்காங்க” என்று கேட்டாள் மாதவி.
வேலையாலோ “அவங்க உங்க கூட படிக்கரவங்கனு சொன்னாங்க” என்றார்.
“சரி இருங்க நா வரேன்” என்று எழ முற்ப்பட்டாள்.
அதற்க்குள் சூர்யா அவளின் தோளை பற்றி “இரு ஏன் எழுந்திரிக்கர” என்றான்.
“அப்பறம் யார் வந்துருக்குனு பார்க்க வேண்டாமா” என்றாள்
“அவங்கல உள்ள கூப்பிடலாம் என்று கூறிவிட்டு வேலையாளிடம் திரும்பி அவங்கல உள்ள வர சொல்லுங்க” என்றான் சூர்யா.
மாதவி அவளின் படுக்கை அறை வரை யாரையும் அனுமதிக்க மாட்டாள். அவளின் வீட்டு ஆட்கள் மற்றும் சூர்யாவை மட்டுமே அனுமதிப்பாள்.
ஆனால் இன்று அவளின் கால் சற்று அதிகமாக வலி எடுப்பதால் சூர்யா எப்படி கூறினான். மாதவி வீட்டில் இருந்ததால் அவள் முட்டிங்கால் வரை உள்ள சார்ட்ஸ் அணிந்து இருந்தாள். வேலையால் வெளியே சென்றதும் சூர்யா எழுந்து போர்வையை எடுத்து போர்த்திவிட்டான்.அப்போதுதான் மாதவியை பார்க்க வந்தவங்களும் உள்ளே வந்தார். அது வேறு யாரும் அல்ல நம் ஹரிணி தான்.
ஹரிணி யை பார்த்த சூர்யாவிற்கு மிகவும் கோபம் வந்தது.
“எதுக்கு இங்க வந்த" என்று கோபமாக கேட்டான் சூர்யா.
“அது.... அது..... நா....நா... சாரி கேட்க வந்த” என்று ஒரு வித பதட்டதுடன் கூறிக்கொண்டு மாதவியின் அருகில் அமர்ந்து அவளின் கையை பிடித்து “என்ன மன்னிச்சுரு மாதவி நா..... நா.....நா பண்ணது தப்பு தான்” என்றாள்.
மாதவிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் சூர்யாவின் முகத்தை பார்த்தாள். சூர்யாவோ கோபமாக அவளை பார்த்துக்கொண்டே “என்ன நாடகம் இது” என்று கேட்டுக்கொண்டே மாதவியின் அருகில் வந்து அவளின் கையை தட்டி விட்டான்.
ஹரிணியோ சூர்யாவை பார்த்து “நா அன்னைக்கு பண்ணது தப்பு தான்..... என்ன மன்னிச்சுரு சூர்யா.... அன்னைக்கு நா ஜெய்க்கனும் ஏதேதோ பண்ணிட்ட...... அதோட செப்பல பேலன்ஸ் பண்ணி நின்றுவானு நினைசன்.... ஆனா எப்படி அவ கீழே விழுந்து அடி படுணு எதிர்பார்க்கல” என்றாள் தலை குனிந்துக்கொண்டு.
இதை கேட்ட சூர்யா கோவத்தோடு மாதவியை பார்த்து முறைத்தான். மாதவியோ கண்களால் சரி விடு என்பது போல் தலையசைத்தாள். சூர்யாவும் சரி என்பது போல் அமைதியாக அமர்ந்து விட்டான்.
பிறகு, ஹரிணியோ “சரி நீ இப்ப எப்படி இருக்கு உன்னோட கால் எப்படி இருக்கு” என்று கேட்டுக்கொண்டு அவளின் கால்களை பார்த்தாள். காலில் மருந்து தடவி அதில் பேண்டேஜ் போட்டு விட பட்டு இருந்தது.
“இப்ப பரவாயில்ல நடக்க ஆரம்பிச்சாசு அவ்வளவு பெரிய அடி இல்லை” என்று கூறினாள் மாதவி.
ஹரிணி பேசிக்கொண்டிருக்கும் போதே மாதவியின் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி குடிப்பதற்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள்.
அதை வாங்கி குடித்து முடித்து விட்டு, “சரி டைம் ஆயிடுச்சு நான் கிளம்பறேன்” என்று எழுந்தாள் மாதவி.
“சாரி ஹரிணி அன்னைக்கு சூர்யா அடிச்சது தப்புதான் என்ன இருந்தாலும் உன்னை அடித்து இருக்கக் கூடாது தான் அதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்று கூறினாள் மாதவி.
சூர்யாவிற்கோ மாதவி இப்போ எதற்கு மன்னிப்பு கேட்கிறாள் என்று நினைத்துக்கொண்டு அவளை பார்த்தான்.
ஹரிணியோ “பரவாயில்லை மாதவி” என்று கூறினாள்.
“சரி மாதவி நான் கிளம்புகிறேன் என்று கூறினாள் ஹரிணி.
“சரி பார்த்து போயிட்டு வா” என்று கூறிவிட்டு சூர்யாவை பார்த்தால் ஹரிணியை வழியனுப்பிவிட்டு வா சூர்யா என்றாள் மாதவி.
ஹரிணியுடன் சூர்யாவும் வெளியே வந்தான். வெளியே வந்த பிறகு ஹரிணி சூர்யாவை பார்த்து “அன்னைக்கு நான் பண்ணது தப்புதான்” என்று மறுபடியும் மன்னிப்பு கேட்டாள்.
சூர்யாவும் “பரவாயில்லை பார்த்து போ” என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டான்.
அவன் உள்ளே செல்வதை இரண்டு நிமிடம் நின்று பார்த்துவிட்டு தனது காரை எடுத்துக்கொண்டு ஹரிணி அவர்களிடம் வீடு நோக்கி சென்றாள். ஒருவாரம் சென்றது அனைவரும் கல்லூரிக்கு திரும்பினர்.
சூர்யா மாதவியை அவளின் வகுப்பில் அமரவைத்து விட்டு சென்றான். நிவேதா மற்றும் சுவேதா விடம் மாதவியை நன்றாக பார்த்துக்கொள்ளும் படி கூறிவிட்டு சென்றான்.
மாதவிடம் வந்து அனைவரும் விசாரித்தனர்.
பிறகு உணவு இடைவேளையின் பொழுது சூர்யாவுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டுஇருக்கும் பொழுது அங்கு ஹரிணி வந்தாள்.
“இப்பதான் ரெண்டு பேரும் சாப்பிட ஆரம்பிச்சிடிங்கலா நான் உங்களோட சாப்பிடற “என்றாள்.
இதை கேட்ட மாதவி உடனே “ம்ம் சரி வா” என்று கூறிக்கொண்டே தன் அருகில் அமர வைத்தாள். இதை கேட்ட சூர்யாவும் எதுவும் கூறாமல் இருந்தான்.
ஹரிணி பேசிக்கொண்டே சூர்யாவை ஓர கண்ணால் அவனை பார்த்தாள். இது எதையும் கவனிக்காமல் மாதவி பேசிக்கொண்டு இருந்தாள். இதை கவனிக்க வேண்டிய சூர்யாவும் கவனிக்காமல் சாப்பிட்டு கொண்டு இருந்தான்.
ஹரிணி ஏன் சூர்யாவ அப்படி பார்க்கிறான் ஏதோ இருக்கு என்னானு நாளைக்கு சொல்ற.............
சூர்யா மற்றும் மாதவி எங்கு சென்றாளும் ஏதாவது காரணம் கூறி ஹரிணியும் அவர்களுடன் சேர்ந்துக்கொண்டாள்.அன்று மாலை ஹரிணி தன் வண்டி எடுக்க செல்லும் போதுதான் பார்த்தாள். சூர்யா தனியாக அவனுடைய வாகனத்தை எடுப்பது,
“ஒ ஒ அப்படியா சரி நீங்க பேசிட்டு வாங்க... எனக்கு பிரோஜெட் ல டைப் பண்ணற வேலை இருக்கு, நா அப்பா கூட போய்யார நீ சிக்கரம் பேசிட்டு வாடா” என்றாள் மாதவி.
“hey இருடி அம்மு நா கிளம்பிட்ட வந்தர” என்றான்.
“இல்லடா நீ வர இன்னும் 30 mits ஆவது ஆகும்.
இங்க தனியா நிற்க்க ஒரு மாதிரி இருக்கு எல்லாரும் கிளம்பிட்டாங்க. அதோட காலைல அப்பா இங்கதா யாரயோ பக்க வரைனாரு” என்று கூறினாள் மாதவி.
சூர்யாவிற்க்கு முன்பே தெரியும் அவளிற்க்கு தனியாக வெளியே இருக்கமாட்டாள். யாரேனும் உடன் இருக்க வேண்டும் என்று நினைப்பாள். அதனாலயே சூர்யா உடன் இருப்பாள்.
அதற்க்கு ஏற்றார் போல் மாதவியும் தன் பள்ளி படிப்பை முடித்தவுடன் சூர்யா இருக்கும் கல்லூரியில் சேர்ந்துவிட்டாள்.
அவள் எடுத்த மதிப்பெணிற்க்கு பல கல்லூரியில் இடம் கிடைத்தது. அதோடு மாதவியின் தந்தை இவளிற்க்காக லண்டனில் உள்ள கல்லூரியில் சீட் வாங்கினார்.
அந்த கல்லூரியில் இடம் கிடைப்பது அரிது. ஆனால் மாதவி, சூர்யா படிக்கும் கல்லூரியில் படிப்பதற்க்கு ஆசைப்பட்டாள். அவளின் தந்தையும் தன் மகளின் ஆசை என்பதாள் ஒப்பிகொண்டார்.
அதே போல் சூர்யாவும் மாதவியை நன்றாக பார்த்துக்கொண்டான். மாதவியும் எப்போதும் சூர்யாவுடன் இருப்பாள்.
மாதவி அந்த கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து சூர்யா அவளுடன் சேர்ந்து சுத்துவதை பார்த்த அனைவரும் ஒரு மாதிரியாக பார்த்தனர். இதில் அங்கு இருந்த பெண்களிற்க்கு வெறுப்பாக இருந்தது. சூர்யா மிகவும் அழகு (ஒரு மாடல் போல் நீங்கலே கற்பனை பண்ணிக்கங்க frds) அவன் நடை பேச்சு குணம் அனைத்திலும் ஒரு கம்மிரம் இருந்தது அதனாலே இவனிடம் அனைத்து பெண்களும் பேச விரும்புவார். எப்போதும் மாதவி உடன் இருப்பதாள். அவனிடம் இருந்து தள்ளியே இருப்பார்கள்.
மாதவி, சூர்யாவின் call cut செய்த உடன் அவளின் தந்தைக்கு அழைதாள்.
“hello அப்பா.... எங்க இருக்கிங்க...... நா பிரஜெட் பண்ணரதுக்காக வெளிய வந்த..... என் வண்டி சூர்யா கிட்ட இருக்கு...... அவன் எங்க பிரண்டு கூட ஏதோ பேசிட்டு இருக்கனாம்........ நீங்க என்ன பிக்கப் பண்ணிக்கங்க” என்று அவரை பேச விடாமல் இவளே பேசிக்கொண்டு இருந்தாள்.
“குட்டிமா இப்போ எங்கடா இருக்க” என்றார்.
அவள் இருக்கும் இடத்தை கூறியதும். அவளின் தந்தை 5 mits வந்துவிட்டார்.
மாதவி சூர்யாவிற்கு தன் தந்தை வந்ததை மெசெஜ் செய்துவிட்டாள். அதன் பிறகுதான் சூர்யா நிம்மதியானான்.
அதை பார்த்துக்கொண்டு நின்றுக் கொண்டு இருந்தா ஹரினி தன் மனதில் உள்ள எரிச்சலை மறைத்துக்கொண்டு வெளியே சிரித்துக்கொண்டு
“இப்போதும் போலாமா சூர்யா” என்றாள். “ம் ம் சரி போலாம்” என்றான்.
“நா cafe coffee shop la wait பண்ணர நீ அங்க வந்துரு” என்றான் சூர்யா.
“ம் ம் சரி” என்று கூறி விட்டு தன் வாகனத்தை எடுத்தாள் ஹரிணி.
இருவரும் ஒரு காபி ஷாபிற்க்கு வந்தனர். உள்ளே சென்று இருவருக்கும் ஒரு இடத்தில் அமர்ந்தனர். சூர்யா இருவருக்கும் காபி கூறி விட்டு ஹரிணியை பார்த்தான்.
“சொல்லு ஹரிணி, என்ன பேசனும்” என்றான் சூர்யா.
“சூர்யா அது வந்து அது வந்து சூர்யா” என்று இழுத்தாள் ஹரிணி.
சூர்யாவோ புருவம் முடிச்சிட “என்ன” என்றான்.
சூர்யா அன்னைக்கு மாதவியை விழுந்தப்ப “நீ என்ன அடிச்சதும் உன் மேல அதிகமா கோபம் வந்தது.....அப்பறம் யோசிச்சு பார்த்த தப்பு என் மேலனு புரிச்சுது....அந்த தப்ப சரி பண்ணத உங்க கிட்ட வந்து மன்னிப்பு கேட்டேன்.....அதுக்கு அப்புறம் உன்கூடவும் மாதவி கூடவும் பழகும் போதுதான் உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சது “i love you சூர்யா என்றாள்.
இதை கேட்டா சூர்யாவிற்க்கு ஒன்னும் புரியவில்லை
“என்ன..... என்ன..... சொன்ன” என்றான் சூர்யா இதை அவன் எதிர்ப்பாக்கவில்லை.
சூர்யாவின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து “நா உன்ன ரொம்ப காதலிக்கர சூர்யா நீ இல்லாத வாழ்க்கையை நினைச்சுக்கூட பார்க்க முடியலா” என்றாள்.
“இல்ல ஹரிணி இது ஒத்துவராது” என்றான் தன் கையை விலக்கிக்கொண்டே.
சூர்யா என்று ஏதோ சொல்ல வந்தாள்.
ஆனால் சூர்யாவோ “போதும் ஹரிணி எனக்கு இப்போதிக்கு என்னோட careerரும் மாதவியோட career ரும் தா முக்கியம் சாரி” என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.
ஹரிணி போகிறா சூர்யாவையே பார்த்துக்கொண்டு இருந்தாள். அதன்பின் ஒரு முடிவோடு அந்த இடத்தை விட்டு அவளும் சென்றாள். சூர்யா எல்லா விசியத்தையும் மாதவியிடம் கூறிவிடுவான். இந்த விசியத்தை மாதவிடம் கூற கால் செய்தான் ஆனால் அவளின் தந்தை தான் கால் எடுத்தார்.
“Hello சொல்லு சூர்யா” என்றார்.“Uncle மாதவி இல்லையா” என்றான்.
“அவளும் அவ அம்மாவும் சேர்ந்து கோவிலுக்கு போய்ருக்காங்க” என்றார்.
“என்ன கோவிலுக்கா ஆனா நாளைக்கு அவ project type பண்ணி முடிக்கனுமே இப்போ கோவிலுக்கு போய்ட்டு வந்து எப்போ type பண்ணுவா” என்றான் சூர்யா.
“அத ஏன் கேட்கற சூர்யா நாந்தா டைப் பண்ணிட்டு இருக்க” என்றார் சோகமாக.
சூர்யாவிற்க்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. திரும்பவும் தற்கொலை முயற்ச்சி செய்வாளோ என்ற பயம் வேறு இருந்தது.
பக்கத்தில் நின்று இருந்த மாயாவோ சரினு சொல்லு சூர்யா என்று வற்புறுத்தினாள்.
வேறு வழியில்லாமல் “சரி” என்றான்.
ஹரிணி மிகவும் மகிழ்ச்சியாக சூர்யாவை கட்டிப்பிடிக்க சென்றாள். ஆனால் சூர்யாவோ அதை நாசுக்காக நகர்ந்து
“நா போய் ஹாஸ்பிடல் பில் கட்டிடு வரேன்” என்று சென்றுவிட்டான்.
அவன் வெளியே சென்றதும் ஹரிணி எழுந்து அமர்ந்தாள்.
ஹரிணி எழுந்து அமர்ந்து,
“இவன் சரினு சொல்ல வைக்க என்னமா நடிக்க வேண்டி இருக்கு” என்றாள்.
“இவ்ளோ சிரம்மப்பட்டு நீ இவன காதலிற்க்கனுமா” என்றாள் மாயா.
உடனே ஹரிணி, மாயாவ பார்த்து முறைத்தாள்.
“சரி சரி உன் லவ்வ பத்தி நா எதுவும் சொல்லல போதுமா” என்றாள் மாயா.
அதற்க்குள் சூர்யா ஹாஸ்பிடல் bill கட்டிவிட்டு வந்தான்.
ஹரிணியின் தாய் மற்றும் தந்தை ஒரு கல்யாணத்திற்க்கு சென்றுவிட்டார்கள். அதனால் இரவு சூர்யா தங்குவதாக சொன்னான்.
ஆனால் ஹரிணியோ “இல்ல வேண்டாம் சூர்யா மாயாதா கூட இருக்கா அல்ல நாங்க சமளிச்சுக்கிறோம்” என்றாள்.
“இல்ல ஹரிணி நீங்க இரண்டு பொண்ணுக எப்படி சமாளிப்பிங்க நா இருக்க” என்றான் சூர்யா.
“இல்ல சூர்யா நாங்க பாத்துக்கிறோம். அம்மா வீட்டுல தனியா இருப்பாங்க நீ போய் அவங்கல பாரு” என்று கூறி அனுப்பி வைத்தாள்.
ஹாஸ்பிடலில் இருந்து வெளியே வந்த சூர்யாவிற்க்கு மனது மிகவும் பாரமாக இருந்தது.
அதற்க்கு காரணம் மாதவியிடம் கேட்காமல் முடிவு எடுத்ததா, இல்லை ஹரிணியை பற்றி எதுவும் தெரியாமல் ஏதோ ஒரு குற்றணர்ச்சியில் “சரி” என்று கூறியதா என்று அவனிற்க்கு தெரியவில்லை. மிகவும் குழப்பதுடன் வீடு நோக்கி சென்றான்.
வீட்டிற்க்குள் வந்ததும், அவனின் அம்மா மணி 12 ஆகிறது சூர்யா இன்னும் வரவில்லை தவிப்போடு காத்துக்கொண்டிருந்தார்.
சூர்யா உள்ளே வந்ததும்,
அவனின் அம்மா “ஏன்பா ரொம்ப நேரம் ஆகிருச்சு சாப்பிடலாம் வா” என்றார்.
தற்போது அவன் இருக்கும் மனநிலைக்கு “இல்ல அம்மா எனக்கு சாப்பாடு வேண்டாம்” என்று கூறிவிட்டு
அவன் அறைக்கு சென்று படுத்துக்கொண்டான் ஆனால் உறங்கவில்லை.
மாதவிடம் இதை பற்றி கூறி வேண்டும். ஆனால் அவள் நன்றாக தூங்கிக்கொண்டு இருப்பாள்.
சரி நாளைக்கு காலைல இதப்பத்தி மாதவி கிட்ட சொல்லி இதுக்கு ஏதாவது முடிவு எடுக்கலாம் என்று எண்ணிக்கொண்டே உறங்க முற்ப்பட்டான் .
சூர்யா இரவு உறக்கம் வராமல் விடிய காலை 3 மணிக்குத்தான் உறங்க ஆரம்பித்தான்.
ஆனால் ஆறு மணிப்போல் அவன் கைப்பேசி சிணுங்கியது. மாதவிதான் அழைக்கிறாள் என்று நினைத்துக்கொண்டு,
“ஹலோ.. அம்மு.... நா late தா தூங்கினேன்டி...... கொஞ்ச நேரம் தூங்கற” என்று உளறினான்.
“ஹலோ நா ஹரிணி பேசறா” என்றாள் கடுப்பாக.
“எந்த ஹரிணி சாரி தப்பான நம்பருக்கு கால் பண்ணிருக்கிங்க” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் உறங்கிவிட்டான்.
இதில் எரிச்சல் அடைந்த ஹரிணி மீண்டும் கால் செய்து “என்ன சூர்யா உளறிட்டு இருக்க” என்று சற்று கத்திக்கேட்டாள்.
அப்போது தான் அவனிற்க்கு நியாபகம் வந்த்தது.
“சாரி சாரி ஹரிணி” என்றான் சூர்யா.
“மாயா வீட்டுல அவளுக்கு போன் பண்ணிட்டே இருக்காங்க நா தனியா சமாளிக்க முடியாது அதனால நீ ஹெல்ப் பண்ண கொஞ்சம் வரயா” என்றாள் ஹரிணி.
“சரி நா வரன்” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
மாதவிக்கு கால் செய்து சொல்லுவோமா வேண்டாமா..... அவள் இப்போது யோக பண்ணிட்டு இருப்ப இப்போ தொந்தரவு பண்ண வேண்டாம் ஹாஸ்பிடல் போய் சொல்லிக்கலாம் என்று எண்ணிக்கொண்டு ரெடி ஆகி ஹாஸ்பிடல் சென்றான்.
ஹாஸ்பிடல் போய் மாதவிக்கு கால் செய்யலாம்னு பார்த்தான். அங்கு ஹரிணி பேசுவதை கேட்ப்பதற்க்கு நேரம் சரியாக இருந்தது.
மாதவி எப்போதும் போல் சூர்யாவின் வீட்டிற்க்கு சென்றாள். ஆனால் சூர்யா வீட்டில் இல்லை.
“Aunty எங்க சூர்யாவ இன்னும் தூங்கரான, அங்கு இருந்த மேடையில் அமர்ந்துக்கொண்டாள்.
அவன் கிளப்பிட்டான்மா ஏன் உங்கிட்ட சொல்லலயா என்றுக்கேட்டார்.
இல்லையே என்று சொன்னாள். எப்போதும் இருவரும் ஒன்றாகத்தான் கிளம்புவார்கள் ஆனால் இன்று.....
எப்போதும் இருவரும் ஒன்றாகத்தான் கிளம்புவார்கள் ஆனால் இன்று.....
"சரி ஆன்டி...... நா கிளம்பர" என்றாள் மாதவி.
"இரு மாதவி சாப்பிட்டு போ" என்கிறார் சாராதாமா.
"இல்ல ஆன்டி பரவால்ல" என்று கூறிவிட்டு கிளம்ப முற்பட்டாள்.
ஆனால் சாரதா அம்மாவோ அவளை அங்கு இருந்த சமையல் மேடையில் அமரவைத்தார். அவருக்கு நன்கு தெரியும் இருவரும் எப்போதும் அன்றில் பறவை போல் ஒன்றாகவே இருப்பர். ஆனால் இன்று சூர்யா இல்லாமல் இருக்கவும் அவளிற்கு மிகவும் கஷ்டமாக போகிவிட்டது.
சிறிது நேரம் கழித்து "சூர்யா எங்க குட்டிமா" என்றார்.
“அவன் காலைலயே வெளிய கிளம்பிட்டேன் பா” என்கிறார்.
பிறகு அவர் எதுவும் கூறாவில்லை. ஆனால் மாதவி ஏதோ சோகமாக இருப்பதை கூறித்துக்கொண்டார். ஆனால் அவளிடம் இதை பற்றி எதுவும் கூறவில்லை. அவளை கல்லூரில் கொண்டு சென்று விட்டு ஆப்பிஸ் செல்லாமல் வீட்டிற்க்கு சென்றார்.
வீட்டுக்கு சென்ற உடன் லக்ஷ்மி “என்னங்க...... இப்போதா கிளம்புனைங்க..... அதுக்குள்ள வந்துட்டைங்க...... உடம்பு சரியில்லையா......” என்றார்.
“இல்லமா...... அது எல்லாம் ஒன்னும் இல்ல...... நம்ம குட்டிமா இன்னைக்கு சூர்யா வீட்டுல இருந்து கால் பண்ணா........ அவல கல்லூரியில விடசொல்லி” என்றார்.
“என்ன ஒரு அதிசியமா இருக்கு....... நீங்களே கொண்டு போய்விடரனு சொன்னாலும் எப்பவும் சூர்யா கூடதா போவனு சொல்லுவ...... ஆனா இன்னைக்கு என்ன” என்றார் ஆச்சிரியமாக.
“சூர்யாவுக்கு எதாவது உடம்பு சரியில்லையா” என்றார் மாதவியின் தாய் லக்ஷ்மி.
இதை கேட்ட லக்ஷ்மிக்கும் ஆச்சிரியமாக இருந்தது கிட்டதட்ட 10 வருடமாக சூர்யா மாதவியுடன் தான் செல்வான் ஆனால் இன்று......
தன்னை சமாளித்துக்கொண்டு,
“ஏதாவது முக்கியமான விசியமா இருக்கும்..... அதான் போய்ருப்பான்..... நீங்க கவலைபடதிங்க” என்றார் லக்ஷ்மி.
“ம்ம் சரி” என்று கூறிவிட்டு சிறிது நேரம் இருந்துவிட்டு அவர் company கிளம்பினார்.
.........................................
சூர்யா ஹரிணியுடம் hospital இருந்தாள். அவன் வந்ததில் இருந்து ஹரிணி பேசி கொண்டே இருந்தாள்.அவளிற்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தாள்.
சூர்யாவிற்கு எப்போது இவள் பேசறதை நிறுத்துவா என்று எண்ணிக்கொண்டு அமர்ந்து இருந்தான்
டைம் பார்த்தான் மணி 8 என்று காட்டியது. அப்போதுதான் மாதவி வீட்டுக்கு வந்திருப்பாள் எங்கின்றா நியாபகம் வந்தது.
உடனே,
“ஹரிணி நா மாதவிக்கு கால் பண்ணிட்டு வரேன்” என்றான்.
அவன் வெளியே செல்வதற்க்கு “சூர்யா எனக்கு ரொம்ப தல வலிக்குது என்று கூறிக்கொண்டெ தலையை பிடித்துக்கொண்டாள்.
சூர்யா உடனே அருகில் வந்து “என்ன ஆச்சு ஹரிணி நா டாக்டர வர சொல்லறேன்” என்றான்.
“இல்ல சூர்யா நீ என் பக்கதுலயே இரு” என்றாள்
சூர்யாவிற்க்கு வேறு வழி இல்லாமல் அவளுடனே அமர்ந்து இருந்தான்.
சூர்யா எங்கவது நகர்ந்தான் என்றால் ஹரிணியோ தல வலிக்குது இல்ல கால் வலிக்குது என்று கூறிக்கொண்டே பக்கத்தில் அமர வைத்து விடுவாள்.
மாலை 4 மணி வரைக்கும் இது தொடர்ந்தது.
அதற்க்கு மேல் சூர்யாவினால் முடியவில்லை, சூர்யா ஹரிணியிடம் சென்று
“ஹரிணி மாயா தான் உன் கூட இருக்கா அல்ல நா கிளம்பரேன்” என்றான் .
அதற்க்கு மாயா, “என்ன சூர்யா உனக்காக தான் இவ இப்படி இருக்க... ஆனா நீ பாட்டுக்கு போறனு சொல்லற” என்றாள்.
சூர்யாவோ காலைல இருந்து இவ கிட்ட நாய் படதபாடு பட்டுடு இருக்க இவ எப்போ வந்துட்டு நம்மல குறை சொல்லரா என்று எண்ணிக்கொண்டு,
“இல்ல மாயா கொஞ்சம் அவரச வேலை.... அதனால நா போய்யாகனும்” என்றான்.
அப்பறம் இன்னைக்கு ஹரிணிய வீட்டுக்கு கூட்டிட்டுப் போலானு சொல்லிட்டங்க. நா ஹரிணி வீடு வரைக்கும் வந்த நல்ல இருக்காது. அதனால நீயே அவள வீட்டுரு என்று கூறிவிட்டு
“சரி பை ஹரிணி” என்று கூறிவிட்டு, விட்டால் போதும் என்பது போல் சென்று விட்டான்.
அவன் வெளியே சென்றதும் “என்ன ஹரிணி எப்படி சொல்லிட்டு போறான்” என்றாள் மாயா.
“ஒ ஒ... அவ அங்க இருக்கால..... சரி அங்கில் நா பார்த்துக்கிறேன்” என்று கூறிக்கொண்டு அழைப்பை துண்டித்து விட்டான்.
நேராக சூர்யா வீட்டிற்க்குள் சென்றான். அங்கு மாதவியும் சாரதாஅம்மாவும் சிரித்து சிரித்து பேசிக்கொண்டனர். இதை பார்த்த சூர்யா அவர்களின் அருகில் சென்று அமர்ந்தான். ஆனால் அவனை இருவரும் கண்டு கொள்ளவே இல்லை .
“அம்மா பசிக்குது காபி போட்டு தாங்க” என்றான்
அவனின் அம்மாவோ அதை கவனித்தும் கவனிக்காது போல் மாதவியிடம் பேசிக்கொண்டு இருந்தார்.
மாதவியிடம் சென்று,
“ஹாய் அம்மு இன்னைக்கு காலேஜ் எப்படி இருந்தது” என்றான்.
ஆனால் இருவரும் கண்டுகொள்ளவில்லை. இவனும் அரை மணி நேரமாக இருவர் இடத்திலும் கெஞ்சிக்கொண்டு இருந்தான். ஆனால் இருவரும் இவனை கண்டுக்கொள்ளவில்லை.
இதில் கடுப்பான சூர்யா “இப்போ நா என்ன பண்ணுன நீங்க என் கிட்ட பேசுவிங்க” என்றான்
அதற்க்கு மாதவி “20 தோப்புக்காரணம் போடு” என்றாள்.
இதை கேட்ட சூர்யா ஏதுவும் பேசாமல் தோப்புக்காரணம் போட துவங்கி விட்டான்.