Thank u so much sis ??super review....நீங்க சொன்ன விதம் ரொம்ப அழகு???வணக்கம்.
கதை விமர்சனம்
கதை எண்: 9 - இனி என்னென்ன நேர்ந்திடுமோ..!
நாயகன் - சத்யதேவன்
நாயகி - சந்(த்)தியா
சத்யதேவன் - அழுத்தம் - கடுமை - கர்வம் - திமிர் என அனைத்தும் ஒருங்கே கொண்ட அழகன். அன்பை கூட கடினமாய் காட்டும் சுந்தரன். உடையவளுக்கு உயிரான காதல் கணவன். ?
சந்(த்)தியா - மலரெனும் மென்மையான குணம் உடைய அழகி. அச்சம் - சுட்டித் தனம் - துடுக்கு தனம் - பொறுப்பு - அன்பு நிறைந்த மங்கை. குழந்தை மனம் படைத்த சுந்தரி. உடையவனுக்கு யாதுமாகிய காதல் மனைவி.?
அழகான அதிரடி கலந்த காதல் கதை.??
இனி என்னென்ன நேர்ந்திடுமோ!??
அழுத்தமும் - கடினமும் தான் எனது அழகே என்று வலம் வருபவன் அவன்…?
சந்தோஷமும் - அன்பும் தான் எனது அழகு என்று வலம் வருபவள் அவள்…?
நியாயம் - அநியாயம் என பாகுபாடுன்றி தன்னிச்சையாய் தன் வாழ்வில் முன்னெறி செல்பவன் அவன்…?
நியாயம் - அன்பு என தன்னை சார்ந்தவர்களுடன் முன்னெறி செல்பவள் அவள்…?
இரு வேறு குணங்கள் கொண்ட இரு துருவங்கள்…
தங்கள் இயல்பில் தங்கள் வாழ்வை வாழ…??
வந்தது பிரச்சனை
கண்டது வலி
மனதை பிசைந்தது கண்ணீர்…
என இயல்பை மீறிய சிறு சலனம்…?
சலனம் இல்லா வாழ்வில் சலனமாய் வந்தாள் அவள்…?
தன் இயல்பை மாற்றியவளை தன்னுடனே தக்க வைக்க நடந்தேறியது திருமணம்…?
அவள் விரும்பி - விரும்பாமல் என மன்னவனின் கைத்தலம் பற்றினாள் மங்கையவள்…?
கைத்தலம் பற்றியவளின் வாழ்வில் பல ரகசியங்கள் ஒளிந்திருக்க…?
மன்னவனோ அதை களைந்தெறிய முயற்சிகள் மேற்கொள்ள…
முயற்சிகளில் பல விடயங்கள் வெளி வர…?
தீய எண்ணங்கள் மேல் எழ
பசுந்தோல் போர்த்திய புலியின் வேடம் களைய...
களைந்த விடயங்களோ அநேக நல் மனதை பாதிப்புள்ளாக்க…?
நன்மை - தீமை என்று பல சவாலான போராட்டங்கள் நடைபெற…?
இனி என்னென்ன நேர்ந்திடுமோ என எண்ணம் பிறந்து இறுதியில் நன்மை வென்றதா தீமை வென்றதா என்பதே கதை.. ?
இனி என்னென்ன நேர்ந்திடுமோ!??
கண்ணீரின் வலியில் பிறந்தது வஞ்சியவனின் நேயம்..
சுவாரஸ்ய பேச்சில் மலர்ந்தது வஞ்சியவளின் அன்பு..
தனிபெரும் செயல்களை கண்டு மயங்கியது மனங்கள்…
மயங்கிய மனம் பல மாயங்கள் செய்ய…
இருவர் மனதில் காதலெனும் விருட்ச்சம்
பெரிதாய் வேர் ஊண…
இடையில் வந்த கள்ளி செடி விஷமாகும் நேரம் களைந்தெறிய…
அழகிய நெற்கதிர் போல் அழகாய் மிளிர்ந்தது நேசம்…❣❣??
அழகிய கதையை அதிரடி கலந்து சுவாரஸ்யமாய் அழகாய் கொடுத்த ஆசிரியருக்கு என் அன்பு வாழ்த்தும் - நன்றியும்.?????
தலைப்புக்கு வெகு பொருத்தமாய் அமைந்த அழகிய கதை.??
போட்டியில் வெற்றி பெற அன்பு வாழ்த்துக்கள்.??
விரைவில் இவர்களை புத்தக வடிவில் காண ஆவலாய்…??
அன்புடன்
ஸ்ரீராஜ்