ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அசுரவேந்தனின் அஸ்தமனமும் நீ!! உதயமும் நீ!! கதை திரி

T22

Well-known member
Wonderland writer
அசுரன் 13

தீடிரென்று தன்னை அணைத்த பெண்மணியை விலக்கிப் பார்த்த மஹேந்திரனுக்கு பேரதிர்ச்சி தான்.. காலங்கள் கடந்தோடினாலும் சிலர்‌ முகம் தன் மனதில் ஆணித்தரமாக பதிந்திருக்கும்.. அதே போன்ற‌ பால் முகம் மாறா முகம் அவளுடையது.. "அச்சுக்குட்டி" என்ற அழைப்பில் கண்களில் கண்ணீருடன் ஏறிட்ட பெண்மணி..

"என்னை நியாபகம் இருக்கா மஹி" என்றவர் மறுபடியும் அணைத்துக் கொள்ள.. திகைத்து நின்றது என்னவோ ப்ரஜா தான்.. "என்னடா நடக்குது இங்கே??" என நினைத்தவள்.. வேகமாக மஹேந்திரவிடம் இருந்து அந்த பெண்மணியை பிரித்தெடுத்தவள்.. "யார் நீங்க?? எதுக்கு அப்பாவை கட்டிப்புடிக்கிறீங்க??" என்றவளை வாஞ்சையுடன் பார்த்தவர்..

"நீ ‌மஹி பொண்ணா.. அழகா இருக்க" என்றவரை எரிச்சல் மீதூற பார்த்தவள்..

"நான் உங்களை கேள்வி கேட்டா?? நீங்க என்னையே கேள்வி கேட்குறீங்களா?? நீங்க யாரு முதல்ல?? உங்க பேரு கூட நான் இதுவரைக்கும் கேட்கலை"..

"அஞ்சனா" என்ற வார்த்தைகள் வந்து விழுந்தது என்னவோ மஹேந்திரனிடம் இருந்து..

அதிர்ச்சியுடன் மஹியை நோக்கி திரும்பியவள்.. "உங்களுக்கு இவுங்களை முன்னாடியே தெரியுமாப்பா??" என்றவளுக்கு 'ம்ம்ம்' எனும் விதமாய் தலையசைத்தவர்..

"ம்ம்ம்.. நல்லா தெரியும்.. என்னோட‌ காலேஜ் மேட்.. அஞ்சனா.. என்னை ஒன் சைடா லவ் பண்ணா??" என்ற வார்த்தையில் தான் அஞ்சனாவிற்கு நிதர்சனம் புரிய.. சட்டென அவரை விட்டு விலகினார்.. "சாரி மஹி..‌ ரொம்ப நாள் கழிச்சு எனக்குத் தெரிஞ்சவங்களை பார்த்ததும் எமோசனலாகி கட்டிப் பிடிச்சிட்டேன்.. சாரி" என்றவள் மெல்லியதாக விலகி நடக்க‌ முயன்றவளின் கைகளை அழுத்தமாக பிடித்தது ஒரு வலிமையான கரம்..

"என்னாச்சி அச்சுக்குட்டி உனக்கு?? படிப்பு முடிஞ்சதும் கல்யாணம்னு சொல்லிட்டுத் தானே போன.. அப்புறம் ஏன் இப்படி ஒரு நிலைமையில இருக்க" என்றவரை பார்த்தவருக்கு தன் நிலைமையை சொன்னால் பரிதாபமே மிஞ்சும் என்பதை அறிந்தவர்..

"வாழ்க்கை சிலருக்கு நல்ல பாடத்தைக் கொடுக்கும்.. எனக்கும் கொடுத்திருச்சி.. நான் போறேன்" என விலகி நடக்க முயன்றவர்.. தள்ளாடி கீழே விழுவதற்குள் அஞ்சனாவை தாங்கிப் பிடித்திருந்தார் மஹேந்திரன்..

தன்னருகில் நின்றிருந்த ப்ரஜாவை பார்த்தவர். "அப்படியே பார்த்ததுட்டு நிக்கிற.. போய் டாக்டரை கூப்பிடு" என அதட்டியவரின் அதட்டலில் அங்கிருந்த டாக்டர் ஒருவர் வேகமாக வர.. டாக்டரை கூப்பிடலாம் என ஈரடி எடுத்து வைத்தவளின் நடையும் சட்டென்று நின்றது.. அறைக்கு வெளியே தெரிந்த கண்ணாடியூடே பார்த்தவளுக்கு இதயத்தில் யாரோ ஊசியை வைத்து தைத்தாற் போன்ற உணர்வு ஏற்பட. மெல்ல கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்.. தலை முழுவதும் கட்டுடன் கண்கள் மூடிய நிலையில் இருந்த சூரியாவை பார்த்ததும் தன்னையும்‌ மீறி அழுகை தான் வந்தது..

உன்னை நான் பிரிய நினைத்ததற்கு கடவுள் எவ்வளவு பெரிய தண்டனையை தனக்கு அளிக்க பார்த்தார்" என நினைத்தவளின் கரங்கள் அவனின் தலைக்கட்டை வருடிவிட.. கண்களோ அவன் உடல் மொத்தத்தையும் ஆராய்ச்சியாய் பார்த்தது.. "வேறெங்கும் அடிபட்டிருக்கிறதா??‌ என்று"..

"தான் இங்கிருந்து செல்லும்‌வரை நன்றாக இருந்தவனுக்கு ஒரே‌ நாளில் அப்படி என்ன நேர்ந்திருக்கும்‌" என யோசித்தவளின் சிந்தனையை கலைக்கும் விதமாய் விழிகள் மெல்ல அசைய.. "சூரியா.. சூரியா" என்றவாறே அவனை அணைத்துக் கொள்ள.. சட்டென அவளை தள்ளி விட்டான் சூரியா‌..

"சாரி சூரியா. நான் பண்ணதெல்லாம் தப்பு தான். உன்னை விட்டுப் பிரியணும்னு நினைச்சது.. உன்கூட வாழ முடியாதுன்னு லெட்டர் எழுதி வச்சது எல்லாமே தப்பு தான்.. ஐயம் ரியலி சாரி சூரியா" என அழுது கொண்டே பேசியவளை அவன் கேட்ட ஒற்றை வார்த்தை‌ வாயடைக்க வைத்தது..

அவளால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.. சூரியாவா இது?? இப்படி ஒரு வார்த்தை தன்னைப் பார்த்து கேட்டான்??" என மனதளவில் நொருங்கி போனாள்..

"ஹலோ.. எஸ்க்யூஸ்மி யாருங்க நீங்க?? நான் திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்கேன். பதிலே சொல்லாம இருக்கீங்க. ஆங்கிள்.. ஆங்கிள்" என்ற சத்தத்தில் மெல்ல உள்ளே நுழைந்தார் மஹேந்திரன்..

"யாரு ஆங்கிள்.. இந்த பொண்ணு.. லூசு மாதிரி என்னவெல்லாமோ பேசுது.. தப்பு பண்ணிட்டேன்னு சொல்லுறா.. விட்டு ஓடிட்டேன்னு சொல்லுறா.. இவ பேசுறது ஒன்னுமே புரியல ஆங்கிள்" என தலையை பிடித்து அமர‌. இப்பொழுதே தலையே வெடித்து விடும் நிலையில் இருந்தது என்னவோ ப்ரஜா தான்..

"சூரியா.. நான் பண்ணது தப்புதான். ஆனா இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்காதிங்க.. என்ன தண்டனை கொடுக்கிறதா இருந்தாலும் உங்க கூடவே இருந்துக்கிறேன்" என்றவளின் வார்த்தையில் சுட்டெரிக்கும் சூரியனாய் தகித்து நின்றான்..‌

"நீ யாருன்னே தெரியாதுன்னு சொல்றேன்.. வெளியே போடி" என்றவனின் சீற்றத்தில் மங்கையவள் உள்ளமோ வெகுவாக வலிக்க.. அடிபட்ட பார்வை ஒன்றை பார்த்தவள் சூரியாவின் உடல்நிலை கருதி மெல்ல அந்த அறையை விட்டு வெளியேற முயல.. மஹேந்திரனும் அவள் பின்னாடியே வெளியேறினார்..

"இடியட்" என வாய்க்குள் முணுமுணுத்தபடி கட்டிலில் சாய்வாக அமர்ந்தான் சூரியா.‌.

வெளியே வந்தவளுக்கு அழுகை பீறிட்டு வந்தது.. அழுகையே தவிர அவளிடம் எதுவுமில்லையே.. பிறந்ததில் இருந்து அவளின் மனவலி தீரும் ஒரே மருந்து கண்ணீர் மட்டுமே..

"ப்ரஜா" என்ற வார்த்தையில் வழிந்து கொண்டிருந்த கண்களை துடைத்தவாறே, "சொல்லுங்கப்பா.. சூரியா கிட்ட என்னை மன்னிச்சிட சொல்லுங்கப்பா" என உடையும் குரலில் கேட்டவளை பாவமாக பார்த்தவர்..

"சூரியாவுக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்திடுச்சி.. அதனால தான் உன்னை அவனுக்கு அடையாளம் தெரியலை" என்றவரின் வார்த்தையில் விக்கித்து நின்றாள் பேதையவள்..

"சூரியாவுக்கு பழைய நினைவுகளெல்லாம் மறந்திடுச்சா?? என்னை யாருன்னே அவருக்குத் தெரியலையா??" உயிரை உருக்கும் குரலில் கேட்டவளை பாவமாக பார்த்தவர் ‌‌..

"ஆமா ப்ரஜா.. இப்போ நீ வீட்டுக்குப் போ.. அப்புறம் எல்லாம் பேசிக்கலாம்" என்றவரிடம் "இல்லை" எனும் விதமாய் தலையசைத்தவள்.. "எனக்கு சூரியா கூட இருக்கணும்பா‌. ப்ளீஸ்பா" என்றவளின் கண்ணீர் மனதை சுட..

"சரி நான் அவன்கிட்ட பேசிட்டு வர்றேன்" என உள்ளே நுழைந்தவர்.. என்ன பேசினார்?? என்று புரியாவிடிலும்‌ சூரியா சம்மதித்து விட்டான் என்பது மட்டும் புரிந்தது..

மஹேந்திரன் சிறிது நேரம் இருந்தவர் பின் வெளியே சென்று விட.. அறைக்குள் தனித்து விடப்பட்டது என்னவோ ப்ரஜாவும், வாணியும் தான்.. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும். இருவரின் விழிகளும் அடிக்கடி மோதி கொண்டது.. சூரியாவின் விழிகளில் அனல் தெரிந்தாலும்.. ப்ரஜாவின் விழிகளில் காதல் தான் தெரிந்தது..

சிறு நேர அமைதிக்குப் பிறகு.. "நீ என்னோட ஒய்ஃப் னு ஆங்கிள் சொன்னாரு.. ஆனா உன் கழுத்துல தாலி இல்லை.. நான் எப்படி உன்னை நம்புறது" என்றவனின் வார்த்தையில் விழி விரித்து பார்த்தவள்.. "என்ன சொல்வாள்?? நீதான் என் மாங்கல்யத்தை பறித்தாய் என்றா?? இல்லை என்னை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தாய் என்றா?? எதை அவளால் சொல்ல ‌முடியும்.. சொல்லும் நிலையில் அவளும் இல்லை. கேட்கும் நிலையில் அவனுமில்லை.. அமைதி மட்டுமே பதிலாக கிடைக்க.. ஒரு கணம் அவளை உற்றுப் பார்த்தவனின் முகம் இறுகி நின்றது..

"சரி தாலியை விடு.. நம்ம ஹஸ்பெண்ட் ஒய்ஃப் தானே.. ஏதாவது ஒரு சம்பவம் சொல்லு.. மனதோடு ஒன்றிப் போற மாதிரி நமக்குள்ள நடந்திருக்கும்ல" என்றவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு, இப்பொழுதும் பதிலறியா கேள்வி தான்.. அவர்கள் வாழ்ந்த பத்து நாட்கள் மட்டுமே அவளறிந்து மனதோடு ஒன்றிய நாட்கள்.. அதில் அவன் காட்டியதோ மோகம் மட்டுமே.‌ அதில் என்ன சொல்வாள்.. என நினைத்தவளுக்கு சட்டென மின்னல் போல் மூளையில் தோன்றி மறைய.. மெதுவாக அவன் கைகளை பிடிக்க.. சட்டென்று உதறிவிட முயன்றவனின் கைகளை இறுக்கமாக பிடித்தவள்..

அவன் கைகளை பிடித்து தன் வயிற்றில் வைத்தவாறே, "நாம் சந்தோஷமா வாழ்ந்த நாட்களுக்கு சாட்சி சூரியா.. நீங்க அப்பாவாக போறீங்க.. நான் கர்ப்பமா இருக்கேன்" என்றவளின் விழிகளை அதிர்வுடன் பார்த்தவனுக்கு அவளின் விழிகள் தெரிந்த காதலும், பரிதவிப்பும் இவனை மௌனமாக்க.. தன்னையும் மீறி வயிற்றில் அழுத்தமாக கரங்களை வைத்தவனின் கைகளில் எதுவோ தட்டுப்பட.. மெல்ல அவளை ஏறிட்டுப் பார்த்தான்..

அவன் பார்வையில் வெட்கம் மேலிட.. "சூரியா" என்றவளின் குரலை ஒரு வித போதை ஏற்ற. மெல்ல அவள் அணிந்திருந்த ஆடையை விலக்கிப் பார்த்தவனுக்கு உச்சகட்ட பேரதிர்ச்சி.. அதில் இருந்தது அவன் அணிவித்த ஹிப் செயின் தான்.. சூரியவாணி என்ற பெயரை பார்த்ததும் புருவம் முடிச்சிட அவனை பார்க்க.. அவளுக்கோ அவன் அணிவித்த நினைவுகள் தான் அவள் மனதில் ஓடியது.. என்றுமே அவள் அதை கழட்ட நினைத்தது இல்லை..

தாலி இல்லையென்றாலும் இந்த செயின் அவளை உயிர்ப்புடன் வைத்தது.. "இந்த செயின் நீங்க போட்டுவிட்டது சூரியா.. நீங்க கேட்ட தாலிக்கு என்கிட்ட பதிலில்லை.. ஆனா இந்த செயின் எப்பவும் என்னை விட்டு போனதில்லை.. இனிமேலும் போகாது.. நீங்க கேட்ட இனிமையான காதலை நாம உணர்ந்த நேரம் போட்டு விட்டது" என்றவாறே அவன் நெற்றியில் இதழ் பதிக்க… ஆடவனின் கண்களோ அவளின் விழிகளை மட்டுமே பார்த்தது.. அதில் தெரிந்த காதலில் பொய்மையில்லை..

கதவு தட்டும் சத்தத்தில் இருவரும் கலைந்தனர்.‌ நர்ஸ் சூரியாவிற்கு டிரெஸ்ஸிங் பண்ணியவர் வெளியேற‌‌ அதுவரை அவன் பார்வை ப்ரஜாவை விட்டு எங்கும் அகலவில்லை. நர்ஸ் உள்ளே வந்ததில் இருந்தது.. அவர் செய்வது ஒவ்வொன்றையும் உற்று நோக்கியவள்.. காயம்பட்ட இடத்தை பார்த்ததும் அழுகை வந்து உதட்டை கடித்து தடுத்து நிறுத்தியவளையும் அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான்..

நர்ஸ் கொடுத்த மாத்திரைகளை கொடுத்தவள்.. அவனுக்கு சாப்பாட்டை ஒரு பிளேட்டில் வைத்து பரிமாற.. அவனோ அதை வாங்காமல் அவளை தான் பார்த்தான்.. அவன் பார்வையின் அர்த்தம் புரியாமல் இவள் குழப்பமாக அவனை பார்க்க.. "நீ என் ஒய்ஃப் தானே.. அப்போ சாப்பாடு ஊட்டிவிட வேண்டியது தானே" என்றவனின் வார்த்தையில் அதிர்ந்து தான் போனாள்..

இதுவரை என்றுமே அவள் ஊட்டிவிட்டதெல்லாம் இல்லை.. அவன் வேலையை அவனே பார்த்துக் கொள்வதால் இது போன்ற வேலைகள் அவள் செய்ததே இல்லை.. அவன் சொல்லை தட்ட முடியாமல் இட்லியை பிய்த்து அவன் இதழில் வைக்கும் பொழுது.. அவள் கரங்களும், ஷேவ் பண்ணாத ‌தாடியும் உரசிக் கொண்டது.. அவன் எச்சில் விரல்களில் பதிய.. புது வித உணர்வு ஆட்கொள்ள.. கண்களோ அவனை விட்டு பிரிய மறுத்தது.. அவனை பார்த்துக் கொண்டே இட்லியை ஊட்டியவள் கழுவுவதற்கு எடுத்து செல்ல முயன்றவளின் கரங்களை பற்றியவள்.. "எனக்குப் பசிக்குது" என்றவனின் வார்த்தையில் சட்டென எழ முயன்றவனின் கரங்களை அழுத்தமாக பற்றியவன்.

"விடுங்க சூரியா நான் இட்லி எடுத்துட்டு வர்றேன்" என்றவளை பார்த்து "இல்லை" எனும் விதமாய் தலையாட்டியவன்.. "எனக்கு இட்லி வேண்டாம்" என்றவனின் பார்வையோ நிலைத்து நின்றது என்னவோ ப்ரஜாவின் இதழ்களில்..

பழங்களை கண்டு மொய்க்கும் ஈயாய்.. அவள் இதழ்களை மொய்க்கும் பார்வை பார்த்தவன்.. அவள் இதழ்களில் அழுத்தமாக தன் இதழ்களை பதிக்க முயன்றவன்.. என்ன நினைத்தானோ?? மெல்ல விலகிட.. அவனின் விலகலில் உயிர்போகும் வலியை அனுபவித்தவள்.. அவன் இதழ்களை தன்னிதழ்களால் பற்றி கொண்டாள் சற்று அழுத்தமாக.. ஆனால் காதலுடன்..

T22

Well-known member
Wonderland writer
அசுரன் 15:

அன்று இரவு முழுவதும் சூரியாவின் அருகிலேயே அமர்ந்தவளுக்கு சோர்வும்,‌ உடல் வலியும்‌ உண்டாகினாலும் ஏனோ அவனை விட்டு‌ செல்ல வேண்டுமென தோன்றவில்லை.. அவன் அருகிலேயே அமர்ந்திருந்தவள்.. அவன் விரலோடு தன் விரல்களை பின்னியவாறே சேரில் அமர்ந்திருந்தவாறே தலைசாய்த்து படுத்திருந்தாள்..

உடல் அயர்வில் அவள் கண்களை மூட.. மெல்ல கண்களை திறந்தான் சூரியா.. அவசர தேவைக்காக எழுந்தவனின் கைகள் எதனாலோ இழுபட.. சட்டென திரும்பி பார்த்தவனுக்கு.. தன்னையும் மீறி இதழ்கள் புன்னகைக்க.. அவள் கைகளை தன்னிடமிருந்து மெல்ல விலக்கியவன்.. தன் தேவையை முடித்து விட்டு வெளியே வர. சேரில் சரியாக தூங்க முடியாமல் தள்ளாடி உறங்கி கொண்டிருந்தாள்..

அவள் தள்ளாடுவதை பார்த்தவன் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே, அவளை அப்படியே தூக்கியவன்.. தான் ‌படுத்திருந்த பெட்டில் படுக்க வைத்தான்.. சிறிது நேரம் தூங்குபவளையே உற்றுப் பார்த்தவனுக்கு.. அவள் முகத்தின் அழகை மறைக்கும் கார்கூந்தலை‌ ஒதுக்கிவிட.. அவளின் கூந்தலின்‌ மென்மை அவன் கைகளில் உணர்ந்தான்... "சோ சாஃப்ட்" என்றவாறே நெற்றியைப் பார்க்க.. அதில் சிறிதான பொட்டு ஒன்று‌ மட்டுமே இருந்தது. கீழே வந்தவனின்‌ பார்வைகள் அவளின் மூடியிருந்த கண்களை பார்த்தான்.. தன் விரல்களால் வருடிவிட்டவனின் கைகளோ, மூக்கில் பயணித்து இதழ்களில் முடிய.. அவள் தன்னை முத்தமிட்டது மீண்டும் நினைவில் வர.. மெல்ல ‌அவளை நோக்கி குனிந்தவன்.. இதழ்களில் பட்டும் படாமலும் மென்முத்தம் ஒன்றை வைத்தவனின் கரங்கள் கழுத்தை நோக்கி பயணிக்க.. தன் ‌உடம்பில் நடக்கும் மாறுதல்கள் மெல்ல புரிய.. சட்டென்று எழுந்தமர்ந்தாள் ப்ரஜா..

அவள் எழுந்து அமர்ந்த விதத்தில் சூரியாவிற்கே ஒரு‌ நிமிடம் திக்கென்றானது.. "என்னாச்சி??" என்றவனின் பக்கம் திரும்பாமலே தன் உடலை ஆராய்ச்சியாய் பார்த்தவள்.. "இல்லை ஏதோ‌ ஊறுற மாதிரி இருந்திச்சி.. கம்பளிப்பூச்சியா இருக்குமோ?? கொஞ்சம் பாருங்களேன். கழுத்துக்கிட்டே வந்திச்சி" என கழுத்தை அவனிடம் நீட்ட.. அப்படியே டிராகுல்லா போல் அவள் கழுத்தை கடித்தாள் என்ன என்று தான் தோன்றியது சூரியாவிற்கு..

"அதெல்லாம் ஒன்றுமில்லை படு போ" என்றவனின் வார்த்தையில்..

"ம்ம்ம்"எனும் விதமாய் தலையாட்டியவள் மெல்ல சரிந்து ‌படுக்க.. அப்பொழுது தான் உணரவே செய்தாள்.. ஹாஸ்பிடல் பெட்டில் படுத்திருக்கிறோம் என்பதை..

சட்டென கீழே இறங்கியவள். "என்ன சூரியா நீங்க?? ப்ச்… என்னை இங்கே படுக்க வச்சிருக்கீங்க?? நீங்க தூங்குங்க.. நான் தரையில கூட படுத்துப்பேன்".. என்றவள் தரையில் ‌படுக்க‌ முயல.. வேகமாக அவளை பிடித்து நிறுத்தியவனின் பிடியோ இறுக்கமாக இருந்தது.. "சூரியா" என்றவளை முறைத்தவன்.. வலுக்கட்டாயமாக இழுத்து‌ தன் பெட்டில் படுக்க வைத்தவன்.. அவனும் அவளை அணைத்துக் கொண்டு படுக்க..

அவனின் அணைப்பில் இருந்தே விடுபட முயன்றவளை அழுத்தமாக கட்டியணைத்தவன்.. "எப்போ பார்த்தாலும் என்னை விட்டு ஓடிப் போறதே உனக்கு பொழைப்பா போச்சி.. மரியாதையா படு.. இல்லை அப்புறம் நடக்குற எதுக்கும் நான் பொறுப்பில்லை" என சீறியவனை கண்டு வாயடைத்துப் போனாள்..

"இதற்கு மேல் பேசினால் தானே" என நினைத்தவள் விழிகள் சொருக.. இருவரும் அணைத்தபடியே உறங்கினர்.. இருவருக்குமே மற்றவரின் அருகாமை தேவைப்பட்டது.. அவனின் அருகாமையில் அவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை உணராமல் போனாள்..

இரண்டு நாட்கள் கழித்து சூரியாவை டிஸ்சார்ஜ் செய்ய.. அஞ்சனாவை தன் ப்ரெண்ட் என அறிமுகம் செய்த மஹேந்திரன் அவரையும் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்… திலகாவின் இறப்பு செய்தியையும், திலகாவின் சமாதியை பார்த்ததில் இருந்தே மனமெல்லாம்‌ பாரமாகிய உணர்வு அஞ்சனாவிற்கு.. அவளின் மரணத்தை ‌ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. தன்னாலே ஏற்றுக் கொள்ள முடியவில்லையே எப்படி மஹேந்திரன் ஏற்றுக் கொண்டு வாழ்கிறார் என்பதே அவளுக்கு மிகப்பெரிய வலியை கொடுத்தது..‌ அவர்களின் காதலை பற்றி முழுதாக அறிந்தவளில் அவளும்‌ ஒருத்தி..

வீட்டிற்கு வந்த பொழுதில் இருந்து வாந்தி எடுத்தே டயர்டாகி இருந்தாள் ப்ரஜா.. அவளும் எழுந்து கொள்ள முயற்சி செய்ய.. தன்னையும் மீறி ஒரு அயர்வு தோன்றிட.. சோபாவில் உட்கார்ந்தால் அங்கேயே சரிந்து விழுந்தாள்.. மஹேந்திரன் உட்கார்ந்திருந்தாள் அவர் மடியில் படுத்திருப்பாள்.. அஞ்சனா அருகில் இருந்தால் அவர் மடியிலும் படுப்பாள்.. அவள் உரிமை எடுத்துக் கொள்ளாத ஒரே நபர்.. அவளுக்கே உரிமையான சூரியாவிடம் மட்டுமே.. அதுவே அவனின் கோபத்திற்கு தூபம் போட..

வீட்டிற்கு வந்தவனுக்கு வெறுப்பை விட ப்ரஜாவின் மேல் கோபம் தான் வந்தது. ஹாஸ்பிடலில் தன்னை சேயாய்‌ நினைத்து அன்பாய் அரவணைத்து பார்த்துக் கொண்டவள் இங்கே தவிர்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவள் எத்தனை சோர்வாக இருந்தாலும் அவனை கவனித்துக் கொள்ள தவறவில்லை.. அவனுக்கான மாத்திரையில் இருந்து சரியாக சாப்பிட்டானா?? என்பதை வரை சரியாக செய்தாள்… தன்னை பார்த்து கொள்பவள் தன்னிடம் உரிமை ஏன் காட்ட மாட்ட தயங்குகிறாள் என்ற கோபம் வர.. அவளை முறைத்துக் கொண்டு நின்றான்..

மஹேந்திரனும்‌ கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.. இருவரின் நடவடிக்கையும்.. "என்னாச்சி மஹி ஏதாவது பிரச்சனையா??" என்ற அஞ்சனாவை பார்த்து "இல்லை" எனும் விதமாய் தலையசைத்தவர்..

"ப்ரஜாவுக்கு சூரியா மேல் அளவு கடந்த அன்பு இருக்கு.. ஆனா காட்ட மாட்டேங்குறா. அவனுக்கு எல்லாமே செய்யுறா?? ஆனா உரிமை எடுத்துக்க மாட்டேங்குறா?"

"அதான் எனக்கும் புரியலை. அவளோட கடமையை சரியாக செய்யுறா.. ஆனா சூரியா நெருங்குனா தவிர்க்கிறா… நிஜமாவே ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி தானே" என்ற அஞ்சனாவை முறைத்தவர்..

"என்ன நக்கலா??"

"இல்லை ‌மஹி எனக்குத் தெரிஞ்சு அவுங்க ரெண்டு பேருக்கும் ஏதோ ப்ராப்ளம் அதான் இப்டி பண்றாங்க.. நாம அவுங்களுக்குள்ள இருக்கிற இடைவெளியே குறைச்சிட்டா போதும்‌ ரெண்டு பேரும் ராசியாகிடுவாங்க" என்ற அஞ்சனாவின் யோசனைப்படி இருவரும் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே.. "வெளியே போடி" என்ற சூரியாவின் கணீரென்ற குரலில் அதிர்ந்து போயினர் இருவரும்..

கண்கள் கலங்க வெளியே வந்த ப்ரஜாவை பார்த்து அதிர்ந்த மஹேந்திரனுக்கு முதல் ‌முதலாய்‌ சூரியாவின் ‌மேல் கோபம் கூட வந்தது..

"என்னாச்சி ப்பா?? ஒன்னுமில்லை ப்பா என்றவள் நேராக வெளியே சென்று விட.. திலகா வின் மணிமண்டபத்தில் ‌உள்ள படிக்கட்டில் அமர்ந்திருந்தாள். அப்படி என்ன தவறு செய்தோம்?? என யோசித்தவளுக்கு ‌எதுவுமே தோன்றவில்லை..

"சூரியா.. எழுந்திருங்க டைமாகிடுச்சி??" என்றவள்‌ அங்கிருந்த டேபிளை சுத்தம் செய்துக் கொண்டே அவனை எழுப்ப.. காலை விடியலில் ஜன்னல் வழியாக வந்த சூரியக்கதிர்கள் நேராக நின்றிருந்த பெண்ணவளின் மேல் பூரணமாக படர.. காலை விடியலையும் அவளையும் ரசித்துக் கொண்டே எழுந்தவன்.. ப்ரஜாவை பின்னிருந்து அணைத்தான்.‌

"வாணிம்மா" என்ற அழைப்பை கூட அவள் உணரவிவ்லை.. திடீரென்று தன்னை சுற்றிய வலிமையான இரு கரங்களில் தன்னை விடுபட முயற்சித்தவள்.. "சூரியா விடுங்க.. உங்களுக்கு ஹெல்த் இஸ்யூ" என்றவளை தன்னை நோக்கி திருப்பியவன்..

"ஹெல்த் இஸ்யூன்னா.. ஒரு கிஸ் கூடவா பண்ணக்கூடாது.. நீ ஹாஸ்பிடல்ல வச்சி எனக்கு முத்தம் கொடுத்த" என்றவன் அவளின் அதரங்களை சிறையெடுக்க. அவனின் முத்தத்தில் பித்தானாள் பெண்ணவள். மெல்ல அவளை இரு கரங்களில் ஏந்தியவன் மஞ்சத்தில் கிடத்த.. இதயமோ அவளின் பயத்தை அப்பட்டமாக வெளிக்காட்டியது. வீட்டினுள் இருப்பதால் நையிட்டி தான் அணிந்திருந்தாள்.. அதுவே அவனின் தேடலுக்கும், மோகத்திற்கும் வழிவகுக்க.. அவளின் மேல் படர்ந்தவாறே முகம் முழுவதும் முத்தமிட்டவனின் கரங்கள் தானாக வயிற்றை வருடிவிட.. சட்டென ஒருவித பயம் மனதை ஆட்கொள்ள.. இதயமே பலமடங்கு துடிக்க.. வேகமாக கட்டிலை விட்டு இறங்கியவளை கண்டு அதிர்ந்து போனான்..

அவளின் நிராகரிப்பு கோபத்தை பல ‌மடங்கு அதிகரித்தது.. ஒரு கணவனாக மனைவியிடம் எதிர்பார்ப்பதை நிராகரிப்பது உச்சகட்ட அவமானமாக தான் எண்ணினான்..

"என்னாச்சி ப்ரஜா??" என்றவனிடம் என்ன சொல்வாள்.. பழைய நினைவுகள் ஆர்ப்பரிக்கிறதென்று என்றா?? உன் கோபத்தை தாங்கும் ‌என்னால் உன் அன்பையும் அருகாமையும் தாங்க முடியவில்லை என்றா?? கண்கள் கலங்க அவனை ஏறிட்டுப் பார்க்க.. அவளின் கலங்கிய கண்கள் இவனுக்கு ஏதோ வலுக்கட்டாயமாக ஒரு பெண்ணை பலவந்தப்படுத்துவதை போல் தோன்ற.." வெளியே போடி" என அடிக்குரலில் சீறினான். அவனால் இந்த அவமானத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

ப்ரஜாவின் அழுகையை பார்த்தவர் வேகமாக சூரியாவின் அறைக்குள் நுழைந்தார் மஹேந்திரன்.. "இன்னும் எவ்வளவு நாளைக்கு சூரியா நடிக்கப் போற??" என்றவரை பார்த்து அதிர்ச்சியுடன் திரும்பினான்..

"ஆங்கிள்" என இழுத்தவனை கண்டு முறைத்தவர்..

"ப்ரஜாவுக்கு வேணும்னா நீ நடத்துற நாடகம் புரியாம இருக்கலாம்.. ஆனா எனக்கு அப்படியில்லை.. இப்போ சொல்லு ஏன் நடிச்ச??‌ உனக்கு எல்லாம் நியாபகம் இருக்குன்னு ப்ரஜாகிட்ட ஏன் சொல்லலை??" என்றவரை ஆழ்ந்து பார்த்தவன்..

"பிகாஸ் ஐ லவ் ‌வாணிம்மா.. அவ எனக்கு வேணும். என்னைப் பார்த்து பயப்படுற ப்ரஜா எனக்கு வேண்டாம்.. என்னை காதலோடு பார்க்கிற வாணிம்மா போதும்.. இப்பவும் அவ என்கிட்ட உரிமை தான் எடுத்துக்கிறாளே தவிர.. என்னோட உரிமையை கொடுக்க மாட்டேங்கிறா.. கிட்ட வந்தா என்னை தவிர்க்கிறா.. நெருங்கி போனா பயப்படுறா.‌ இதுக்கு மேல நான் என்ன பண்ணனும்.. ஒரு எல்லையை தாண்டி என்னால என் கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியல." என்றவனின் தோளில் கை வைத்தவாறே,

"நீயும் ப்ரஜாவும் ஒன்னு சேரணும்னு தான் நான் அப்பாங்கிற உண்மையை கூட மறைச்சி வச்சிருக்கேன்.‌‌.‌ இப்ப அவளுக்கான எல்லா உறவும் நீ மட்டும் தான் இருக்கணும்" என்றவரை ஆமோதிப்பாக பார்த்தவன்.‌ ப்ரஜாவின் நடவடிக்கையை கண்டு சிரிப்பு தான் வந்தது..

‌ "எத்தனை நாளைக்கு இந்த நாடகம்னு தெரியலை ஆங்கிள்.. உங்க பொண்ணு நடந்திக்கிறதை பொறுத்து இருக்கு.. ஆனாலும் உங்க பொண்ணு மாதிரி தத்திய நான் இந்த உலகத்துல பார்த்ததே இல்லை" என்றவனுக்கு சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டே சிரித்து விட்டான்.. .

"ப்ச்ச்.. சிரிக்காதே டா.. குழந்தைடா அவ" என்றவரை ஓரக்கண்ணால் பார்த்தவன். "குழந்தையா அவ.. இன்னும் ஒன்பது மாசத்துல மேடம் ஒரு குழந்தைக்கு அம்மாவாக போறாங்க.. நீங்க தாத்தாவாக போறீங்க" என்றவனின் வார்த்தையில் மனம் நெகிழ.. "உண்மை தாண்டா.. எனக்கு ‌இப்பவும் பிரமிப்பா இருக்கு.. எந்த ஒரு உறவும் எனக்கில்லைன்னு நினைச்சிட்டு இருந்த நேரத்துல எனக்கு இப்போ பொண்ணு, மாப்பிள்ளை, பேரனோ பேத்தியோ. எதுவோ ஒன்னு என்னை தாத்தான்னு கூப்பிடுறதுக்கு வரப்போறதை நினைச்சுப் பார்த்தா.. சந்தோஷத்துல மூச்சடைக்கிற மாதிரி இருக்கு" என்றவரின் தோளில் சாய்ந்து அமர்ந்தவன்..

"ம்ம்.. யாருமே அனாதை இல்லை ‌ஆங்கிள்.. அனாதரவா ஆத்துல அடிச்சிட்டு வந்த என்னையே பெத்த பையன் மாதிரி பார்த்துக்கிட்ட உங்களை விடவா வேற உறவு எனக்கு தேவைப்பட போகுது.. ப்ரஜா எனக்கு கடல் மாதிரி ஆங்கிள்.. கடலோட ‌அலைகள் கரையை தொடுற மாதிரி எத்தனை தடவை அவளை தொலைச்சாலும் திரும்ப ‌திரும்ப அவ கடைசியா வந்து சேர்றது என்கிட்ட தான்" என்றவனின் குரல் தழுதழுக்க சொல்லியவனின் கண்களில் தன்னையும் மீறி ஒரு துளி கண்ணீர் வடிய.. அதை துடைத்து விட்டவர்..

"ப்ச்ச்.. பீலாகாத‌ சூரியா.. ப்ரஜா எப்பவும் உனக்குத்தான்.. உன்னோட வாணி என்றுமே உனக்கானவள் தான்.. உன் வாழ்க்கையோட அஸ்தமனமும் அவள் தான். உதயமும் அவள் தான்".. என்றவரின் வார்த்தையில் இதழ் பிரிய புன்னகைத்தவன்.. அறைக்கு வெளியே செல்ல.. அங்கு கைகளை பிசைந்தபடி நின்று கொண்டிருந்தாள் ப்ரஜா.

"சாரி சூரியா.. நான் இனி சரியா நடந்துக்கிறேன்" என்றவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன்.. "சோ இனி என் பேச்சை கேட்ப" என்றவனை புரியாமல் பார்த்தவாறே தலையை நாலாபக்கமும் சுழற்றினாள்..

"ம்ம்ம்" என்றவனின் பார்வை அவளில் அழுத்தமாக படித்ததை அவள் உணரவேயில்லை.. தான் நடந்து கொண்ட விதத்தில் தலைகுனிந்து அமர்ந்தவளுக்கு நாளைய விடியல் அவளில் இருக்கும் பல குழப்பங்களுக்கும் வினாக்களுக்கும் விடையளிக்கும் என தெரியாமல்‌ போனாள்..
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
..
அசுரன் 15

அஞ்சனாவிற்கு ‌மஹேந்திரன் தன் அறையை கொடுத்திருப்பதால் அவர் தென்னந்தோப்பில் உள்ள கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொள்வார் ‌..

திலகாவின் அருகில் இருப்பதை உணர்பவருக்கு அவர் மணிமண்டபத்தின் அருகில் உட்கார்ந்தபடி திலகாவின் சமாதியை உற்றுப் பார்த்திருந்தவர் ‌.. திரும்பி படுக்க.. ஜன்னல் வழியாக அஞ்சனாவின் அறையில் வெளிச்சம் தெரிந்தது.. இவ்வளவு நேரம் தூங்காமல் என்ன செய்கிறாள்?? என யோசித்தவர் காலையில் கேட்டுக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டே கண்களை மூட.. சிறிது நேரத்தில் கொலுசு சத்தம் ஒன்று கேட்டது..

இந்நேரத்தில் யார் நடக்கிறார் என அரைக்கண்களால் விழி விரித்துப் பார்க்க.. வீட்டில் இருந்து வெளியே வந்து கிணற்றை நோக்கி ஒரு பெண் செல்கிறாள் என்பது புரிந்தது..

தன் வீட்டில் இருக்கும் பெண்கள் இருவர் மட்டுமே.. சூரியா விடம் சண்டை போட்டு ப்ரஜா ஏதும் தவறான முடிவெடுத்து விட்டாளோ?? என நினைத்தவர்.. வேக வேகமாக தன் அழுத்தமாக காலடியோசையை எடுத்து வைப்பதற்குள் அந்த பெண் கிணற்றிலேயே குதித்து விட்டாள்..

பேரதிர்ச்சியில் உறைந்து நின்றவர்.‌.‌ ஒரு நிமிடமும் தாமதிக்காமல் வேகமாக ஓடியவர் கொஞ்சமும் யோசிக்காமல் கிணற்றில் குதித்தார்.. ஆழமான கிணறு என்பதால் உடனே கண்டுபிடிக்க முடியாமல் திணறியவர்.

பல உள்நீச்சல் போட்டவரின் கையில் சிக்கியது பெண்ணின் முடி‌‌.. அதை கொத்தாக பற்றியவர்.. தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு வேகமாக வெளியே வந்தவர்.. தரையில் பெண்ணவளை கிடத்தி முற்றத்தின் லைட்டை போட்டவர்.. திரும்பி பார்க்க.. பேரதிர்ச்சியில் உறைந்து நின்றார்.. அங்கு நின்றிருந்தது ப்ரஜா அல்ல அஞ்சனா.‌

வந்த கோபத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தார்...‌ "பைத்தியமா டி நீ" என்றவருக்கு இன்னுமே படபடப்பு அடங்க மறுத்தது.. அவர்களின் அரவத்தில் மெல்ல வெளியே வந்தனர் சூரியாவும் ப்ரஜாவும்..

"என்னாச்சி ஆங்கிள்.. என்னாச்சிப்பா"

"சாகப்போயிருக்கா.. நான் மட்டும் இப்போ பார்க்கலை.. நாளைக்கு பொணமா மிதந்திருப்பா" என்றவரின் வார்த்தையில் கோபத்துடன் திரும்பிய ப்ரஜா,

"ஏங்க.. நீங்க சாகுறதுக்கா.. நான் உங்களை போராடி கூட்டிட்டு வந்தேன்.. சொல்லுங்க.. இப்படி ஒரு முடிவு எதுக்கு எடுத்தீங்க.. இவ்வளவு பெரிய முடிவு எடுக்கிற அளவுக்கு என்னங்க உங்க பிரச்சனை??" என எரிந்து விழுந்தவளை கண்டு குற்றவுணர்ச்சியுடன் பார்த்தார்..

மஹேந்திரனும்‌ சூரியாவும் கேள்வியாய் இருவரையும் பார்த்தவர்கள்.. "போராடி கூட்டிட்டு வந்தீயா?? யார் கூட.. என்னாச்சி??" என்ற கடினமான குரலில் கேட்ட சூரியாவை பயப்பார்வை பார்த்தவள்.. அஞ்சனாவிடம் "சொல்லாதே" என்பதை போல் தலையாட்ட..

அஞ்சனாவோ அவள் செய்யும் சமிக்ஞை புரியாமல் ‌சூரியாவிடம் தன்னை அடைத்து வைத்தது, மேக்னா பொய் சொல்லி ப்ரஜாவை அழைத்து வந்தது.. அவளை விபச்சார விடுதியில் தாசியாக ‌மாற்றுவதற்காக காலேஜ் ‌படிக்கும்‌ போதே கடத்தப் பார்த்தது.. என ஒன்று விடாமல் தான் ‌ஊருக்கு வந்தது‌ வரை அனைத்தையும் சொல்லி முடித்தவர்..

"நான் கர்ப்பமாக இருக்கேன்.. இந்த குழந்தையோட அப்பா பேரே எனக்குத் தெரியாதுன்னு சொல்லணுமா?? இல்லை‌ அம்மா ஒரு தாசின்னு சொல்ல முடியுமா??" என்றவரின் வார்த்தையில் மூவருமே பேச்சற்று நின்றனர்.. யாருக்குமே என்ன பேசுவதென்றே தெரியவில்லை..

மூவருமே மௌனம் மட்டுமே பதிலாக கொடுக்க.. அழுதுகொண்டே அவர்களை ஏறிட்டவள்.. "இப்படியொரு அவமானத்தோட‌ என்னை வாழ சொல்றீங்களா??" என்றவர் வேகமாக அங்கிருந்து அழுதுகொண்டே ஓடிவிட… அவர் செல்லும் திசையை அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்த மஹேந்திரனை அணைத்தபடி நின்றாள் ப்ரஜா..

"பயமா இருக்குப்பா.‌ இவுங்க மறுபடி ஏதாவது தப்பா முடிவு எடுத்துருவாங்களா??.. கிணத்துல குதிச்சிருக்காங்க.. குழந்தை ‌சேஃபா இருக்குமா??* என கவலையுடன் கேட்டவளை ஆழ்ந்து பார்த்தவருக்கு அஞ்சனாவின் கலங்கிய விழிகள் ஏதோ செய்தது‌‌..

"நீ கண்டதையும் போட்டு யோசிக்காதே.. போம்மா" என அங்கிருந்து தென்னந்தோப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தார்..

வீட்டிற்குள் செல்லலாம் என‌ திரும்பிய ப்ரஜாவினை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்‌ சூரியா..

"சூரியா" என்றவளின் இதழில் ‌ஆழ்ந்த முத்தமொன்று வைத்தவன்..

"எவ்வளவு பெரிய ஆபத்துல இருந்து மீண்டு வந்திருக்க?? நீ மட்டும் அந்த நேரம் பயந்திருந்தா என்னவாகியிருக்கும் தெரியுமா??" என்றவனின் குரல் கரகரத்து ஒலித்தது..

‌. "எனக்கு ‌ஒன்னுமில்லை சூரியா.. எந்த ‌பிரச்சினையும் இல்லை.. நாளைக்கு ஹாஸ்பிடல் போகணும்" என்றவளை கண்கள் இடுங்க பார்த்தவன்.. "ஏன்??" என்ற ஒற்றை வார்த்தை தான் வந்தது..

"ப்ச்.. சூரியா.. நாளைக்கு செக்கப் இருக்கு.. இன்ஜெக்சன் ஒன்னு போடணும்னு சொல்லியிருக்காங்க" என்றவளின் வார்த்தையில் நிம்மதியானவன்..

"ம்ம்.. சரி போகலாம்"

"சூரியா அஞ்சனா அவுங்களையும் அழைச்சிட்டு போகலாமா??" என தயங்கி கேட்டவளை "ம்ம்" எனும் விதமாய் தலையாட்டினான்..

சிறிது நேரத்தில் அவர்கள் உள்ளே நுழைந்தனர்.. அஞ்சனாவின் அறை பூட்டியிருந்ததால் ஏதும் பேசிக்கொள்ளாமல் இருவரும் அவரவர் அறைக்குள் நுழைய.. மஹேந்திரனுக்கோ கண்களில் ஒரு துளி கண்ணீர் வரவில்லை.. ஏனோ மனமெல்லாம் பிசைந்தது..

தான் காலேஜ் படிக்கும் ‌மலர்ந்து சிரிக்கும் முகம், அவளை சைட்டிக்காத ஆண்களே எனும் விதமாய் காலேஜே திரும்பி பார்க்கும் பியூட்டி அவள்.. அவள் இப்பொழுது இருக்கும் நிலைமையை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பிசைந்தது..

எல்லாருக்குமே அந்த இரவு ஒரு வித மன அழுத்தத்தை கொடுத்தது.. காலை‌ கதிரவன் யாருக்கும் காத்திருக்காமல் தன் வேலையை செவ்வென செய்ய.. காலை புலரும் வேளையில் மெல்ல ‌எழுந்து வந்தார் அஞ்சனா..

அஞ்சனா இங்கு வந்ததில் இருந்தே அவர் தான் சமையல் என்பதால் யாருமே அவரை வேண்டாம் என்று தடுக்கவில்லை.. நேற்று அவரின் கர்ப்பத்தை பற்றி தெரிந்ததும் சமையலுக்கும், வீட்டின் இதர வேலைகளை செய்வதற்கு வேறு ஆள் ஒன்றை நியமித்து விட.. எந்த வேலையும் செய்யாமல் சும்மா வீட்டை சுற்றி வந்தனர் அஞ்சனாவும், ப்ரஜாவும்..

. காலை ‌உணவின் போது கூட யாரும்‌ எதுவும் ‌பேசிக்கொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்க.. "அஞ்சனா"

‌. "ம்ம்" என்றவர் சிறிதும் தலை தலையை நிமிர்த்தி பார்க்கவில்லை.. அவருக்கு இருக்கும் தயக்கம் அவரை நிமிர்ந்த விடவில்லை.. "நாற்பதை வயது கடந்த ‌பின் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறோம்" என்பதே ‌ஒரு வித கலிவிரக்கமாக இருந்தது..

. அதுவும் முதல் குழந்தை. அழிக்கவும்‌ அவர் மனம் ஒப்பவில்லை.. அதனால் தான் முதலில் தன்னை அழித்துக் கொள்ளும் முடிவை எடுத்தார்..

"ஹாஸ்பிடல் போகணும்.. டென் ஓ க்ளாக் ரெடியா இருங்க" என்றவளின் வார்த்தையில் விலுக்கென நிமிர்ந்தவர்.. "என்னால எங்கேயும் வர முடியாது" என அழுத்தமாக சொன்னவருக்கு சாப்பாடு கூட தொண்டைக்குள் சிக்கித் தவித்தது..

"இல்லைங்க அது" என்ற ப்ரஜாவின் கையை அழுத்தமாக பற்றினார் மஹேந்திரன்‌‌ "எதுவும் பேசாதே" எனும் விதமாய்..

மஹேந்திரன் சொல்லுக்கிணங்க அமைதியாக இருந்தவள்.. சூரியாவும் ஹாஸ்பிடல் கிளம்ப.. அப்பொழுதும் அஞ்சனா பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை.. பேசவும் முடியவில்லை..

அவர்கள் செல்லும் வரை அமைதியாக இருந்த மஹேந்திரன் "அஞ்சனா" என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பியவளை அழுத்தமாக பார்த்தவர்..

"நான் ‌உன்கிட்ட பேசணும். வெளியே வா" என வெளியே சென்று விட.. பயத்தில் கை நடுங்க.. மெல்ல அவன் பின்னால் சென்றவளின் கால்கள் நடுங்க.. பற்றுதலாக அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தாள்.. அவள் அருகிலேயே‌ அமர்ந்த மஹேந்திரன்.

நீண்ட நேரம் மௌனம் மட்டுமே ஆட்சி செய்ய.. "மஹி நீ என்கிட்ட கேட்க நினைக்கிறதை.. தாராளமா கேளு.. மௌனமா மட்டும் இருக்காதே??" என்றவளை ஆழ்ந்து பார்த்தவர்..

"என் கேள்விக்கான பதிலை சொல்லு??" என கேள்வி கேட்காமலே ‌புதிர் போட்டவரை பார்க்க முடியாமல் முகத்தை திருப்பியவர்..

திருநெல்வேலி பாட்டி வீட்டுல இருந்து தான் காலேஜ் படிச்சேன்.. காலேஜ் ‌முடிக்கும்‌ பொழுது சில வித மனக்கஷ்டங்கள் இருந்தாலும்.. நல்லவிதமா என் வாழ்க்கை அமையணும் வேலைக்கா போகலாம்னு நினைச்சிட்டு இருந்தப்போ.. பாட்டியோட உடம்பு ரொம்ப மோசமாகிடுச்சி..

அதனால‌ எல்லாரும் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க..‌ என்னால ‌மறுக்கவும் முடியலை.. அவசர அவசரமா கேரளாவை சேர்ந்த ‌கேசவன் கூட கல்யாணம் முடிஞ்சது.. ஹனிமூன் ஊட்டி போயிட்டு.. அதுக்கப்புறம் தான்‌ கேரளாவுக்குப் போனேன்..

முதல்ல வாழ்க்கையில எல்லாமே சந்தோஷமா தான் போச்சி.. அப்போ எல்லாம் உன்னோட நினைப்பு கூட எனக்கு வர்றதில்லை..

"ஒரு நாள் அவர் ‌பிரெண்ட்னு ஒருத்தரை கூப்பிட்டு வந்தான்.. நானும் ‌ப்ரெண்ட் தானேன்னு எதுவும் ‌சொல்லலை.. விருந்து சமைக்க சொன்னான்.. நானும் சமைச்சேன்.‌ ஆனா அப்போ எனக்கு தெரியலை மஹி.. நான் தான் விருந்துன்னு" என்றவருக்கு கேவல் அதிகமாக..

"வேண்டாம்னு விட்ருடா" என எழ முயன்றவரின் கைகளை பிடித்து நிறுத்தியவர்..

"இல்லை‌ மஹி.. ரொம்ப பாரமா சொல்லி அழுதா மனபாரமாவது கொஞ்சம் தீரும்" என்றவளை பார்க்கவே ‌பரிதாபமாக இருந்தது..

அன்னைக்கு ராத்திரி நான் சாப்பிட்ட கூல்ட்ரிங்க்ஸ்‌ல மயக்க மருந்து கலந்து கொடுத்து.. என்னை நிர்வாணமா ‌படமாக்கி.. இரண்டு பேரும் என்னை அனுபவிச்சி தூக்கி வீசிட்டாங்க..

‌. காலையில எழுந்து பார்க்கும் போது ரெண்டு பேரும் என்னை அணைச்சி.. எனக்கு அந்த நிமிடம் உயிரே போயிடுச்சி ‌மஹி.. ஏன் வாழணும்னு நினைச்சி சாகப் போறதுக்குள்ள கேசவ் என்னை வந்து ‌பிடிச்சி.. ரொம்ப கொடூரமா சூடு எல்லாம் வச்சி" என்றவளுக்கு ஏனோ‌ பேச முடியாமல் வார்த்தைகள் திணற..

"அதுக்கப்புறம் எத்தனையோ ராத்திரி.. எத்தனையோ பேர். என்னை குப்பைத்தொட்டி மாதிரி தூக்கி வீசுனாங்க.. பொண்ணுங்கனாலே உடம்பு மட்டும்தான் நினைக்கிற மிருகங்கள் என்னை வேட்டையாடி தூக்கி வீசும் போது.. ஒவ்வொரு இரவும் நான் சாகுறதுக்காக தான்‌ போராடுவேன் ‌..

‌‌. ஆனா கடவுள் ஏன் என்னை காப்பாத்துனாருனு புரியலை.. இப்பவும் சாக மாட்டேனான்னு தோணுது.. ஹாஸ்பிடல் போனா குழந்தையோட அப்பா பேர் கேட்டா.. நான் யார் பேரை கொடுப்பேன்" என்றவரை கூர்மையாக பார்த்தவர்.‌ அந்த நொடியே சில ‌முடிவுகளையும் எடுத்திருந்தார்…

ஹாஸ்பிடல் சென்று விட்டு வந்த சூரியாவுடன் ப்ரஜாவையும் அழைத்து கொண்டு அடுத்த நாள் காலை கோவிலுக்குள் நுழைந்தார்..‌ அஞ்சனா கோவிலுக்குள் நுழைந்ததில் இருந்தே ஏதோ ஒரு வித‌படபடப்பு அடங்காமல் வர.. மஹேந்திரன் கொடுத்த பட்டுப்புடவையும் நகையும் போட்டு தான் வந்தார்.. மிதமான மேக்கப்பில் அழகாக இருந்தவரை இப்பொழுதும் சில ஆண்கள் திரும்பி பார்க்க.. அதையெல்லாம் வெறுப்புடன் பார்த்தவர்.. சாமி சன்னதி முன்பாக நின்றிருந்தார்..

சாமி சன்னதி முன்பு கண்கள் ‌மூடி சாமி கும்பிட்டு கொண்டிருந்த அஞ்சனாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்ட மஹேந்திரன் அவரை தன்னில் சரிபாதியாக்கினார்..

அதிர்ச்சியுடன் திரும்பிய அஞ்சனா, தன் கழுத்தில் தொங்கிய மாங்கல்யத்தையும், மஹியையும் மாறி மாறி பார்த்தவருக்கு.. ஏறிய தாலி ஒரு வித நிம்மதியை தான் அளித்தது..

"நேத்து நீ கேட்ட கேள்விக்கு பதில் இது தான்.. குழந்தைக்கு அப்பா யாருன்னு கேட்டா.. மஹேந்திரன்‌ அப்படின்னு தைரியமா சொல்லு" என்றவரை நன்றி மல்க பார்த்தவர்.. காதல் நதி அவர் மீது ‌பாய தயாராக இருக்கிறது என்பதை யாரும் அறியவில்லை..
 
Yamunakarthi

New member

எப்ப வருவீங்க ரொம்ப மாதம் ஆகிவிட்டது சகி
 
Top