ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அசுரவேந்தனின் அஸ்தமனமும் நீ!! உதயமும் நீ!! கதை திரி

T22

Well-known member
Wonderland writer
அசுரன் 4

நடுரோட்டில் மயங்கி கிடந்தவளை தன் வீட்டின் பால்கனியில் நின்று வேடிக்கை பார்ததுக் கொண்டிருந்தான்.‌ திடீரென மயங்கி கிடந்தவளின் அருகே வந்து நின்றது வெள்ளை நிற டொயோட்டா.. அதிலிருந்து இறங்கிய ‌இரண்டு பேர் வேக வேகமாக மயங்கி கிடந்தவளை தூக்கி வண்டியில் கிடத்தியவர்கள் மின்னல் வேகத்தில் காரினை செலுத்த சட்டென மறைந்தது வண்டி... அதனை புருவம் சுருக்கி பார்த்தவனின் கால்களின் வேகம் அதிகரிக்க.. இதயத்துடிப்பு அதிகமாக கடகடவென படிக்கட்டில் இறங்கியவன் சில நொடிகளில் வீட்டை விட்டு வெளியேறினான்..

கார் சென்ற திசையில் இவனும் செல்ல.. கார் நம்பரை நோட் பண்ணி வைத்ததால் ஈசியாக ‌காரை கண்டு பிடித்து விட்டான்.. இறுதியாக கார் நின்றது இரயில்வே ஸ்டேஷனில்.‌

மயங்கி விழுந்தவளை இரண்டு பேர் பிடித்துக் கொள்ள ‌‌ரயில் இருக்கும்‌ பக்கம் செல்லாமல் அவளை சரக்கு ரெயில் செல்லும் ‌தண்டவாளத்தின் அருகில் ‌கொண்டு சென்றனர்..

அவர்களின் பின்னால் தொடர்ந்து வந்தவனுக்கு அவர்களின் செயல் ஒன்றும் புரியவில்லை.. "என்ன‌ பண்ணுகிறார்கள்??" என‌ யோசனையுடன் அவர்களை தொடர்ந்தான்..‌ சரக்கு ‌ரெயில் செல்லும் ‌தண்டவாளத்தில் ப்ரஜாவைப் போட்டவர்கள் முன்னேறி செல்ல..‌ அவர்களின் முன்னால் வந்து நின்றான் சூரியா..

"யாருடா நீங்க?? அவளை ஏன் கடத்துனீங்க??" என சற்று அழுத்தமான‌ குரலில் கேட்டவனை பார்த்து கடத்திய ஐவர் கூட்டமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள.. "டேய்ய்.. இவனையும்‌ போருக்கான" என்ற‌ அலறலில்‌ அதுவரை‌ மயக்கத்தில் இருந்தவள்‌ மெல்ல நினைவுகள். திரும்பி எழுந்து உட்கார.. தண்டவாளத்தில் அமர்ந்தது திகிலாக இருந்தது.. " தான் எப்படி இங்கே??" என சிந்தனையுடன்‌ மெல்ல எழுந்தவளுக்கு சூரியாவின் பின்புற முதுகு தான் தெரிந்தது..

‌ அவனைப் பார்த்த பின்பு தான் அனைத்தும் ஒவ்வொன்றாக நியாபகத்திற்கு வர.. துடித்துப் போனாள்.. தன் கண் முன்னால் பெற்றவர்களை கொன்று, தன்னை அனாதையாக நிற்க வைத்து.. தான் வைத்த நேசத்தை உள்ளுக்குள் கொன்று புதைத்தவனை கண்களில் கண்ணீருடன் ஏறிட.. அவனோ பின்னால் சொருகி வைத்திருந்த துப்பாக்கியை எடுக்க.. பயத்தில் வேர்க்க ஆரம்பித்தது.. "தன்னை சுடுவதற்காகத்தான்‌ வந்திருக்கிறான்" என தப்பாக புரிந்து கொண்டவள்.. அவனிடமிருந்து விலகி ஓட‌ முயல.. தண்டவாளத்தில் போடப்பட்டிருந்த சீனிக்கற்கள் இடறி தொப்பென ‌கீழே விழுந்தாள்.. "அம்மாஆஆஆ" என்ற அலறலுடன்..

அவள் விழுந்த சத்தத்தில் அனைவரின் கவனமும் இவள் புறம் திரும்ப.. கடத்திக் கொண்டு வந்தவர்கள் அவளை கொல்லுவதற்காக சூரியா வை தாண்டி பாய்ந்து கொண்டு செல்ல.. அவர்களின் உருவத்தைப் பார்த்தே பயந்தவள்.. தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள மரண பீதியில் எழுந்தவள் வேகமாக ஓட ஆரம்பிக்க.. கற்களும்‌ தண்டவாளமும் இருக்கும் இடத்தில் மெதுவாக தான் ஓட முடிந்தது.. ஓடியவள் ஒரு ரெயிலின் பின்னால் ஒளிந்து கொண்டாள்..

சரக்கு வண்டியின் பின்னால் அமர்ந்திருந்தவளின்‌ இதயம் ஓடும் ரயிலை விட வேக வேகமாக துடித்தது.. எங்கே தான் மூச்சு வாங்கும் சத்தம் அசுரனின் காதில் விழுந்து விடுவோமோ என அஞ்சியவள்.. தன் வாயை‌ தன் கரம் கொண்டு பொத்தியவாறே மெல்ல எட்டிப் பார்த்து பார்த்தவளுக்கு வலிமையான இரு கால்கள் மட்டுமே தெரிந்தது.. கால்களை பார்த்ததுமே புரிந்தது அது தன்னவன் என்று.. தன்னை கொல்வதற்காக வெறிப்பிடித்த வேங்கையாக சுத்துகிறான் என நினைத்தவளுக்கு கண்களில் ஓரம் ஒரு‌ துளி கண்ணீர்‌ வழிந்தது..

கண்களில் கண்ணீர் மல்க.‌ மெல்ல அங்கிருந்து நகர முயன்றவளுக்கு திடீரென இழுவிசையில் பின்னால் சரிந்தவள்.. தலையை நிமிர்த்து எட்டிப் பார்க்க.. அவளின் சேலை முந்தானையை தன் ஷூ காலால் மிதித்தபடி நின்றிருந்தவனை கண்டு ‌இரத்த நாளங்கள் அனைத்தும் உறைந்து நின்றது.. "ப்ளீஸ் என்னை விட்டுடு.‌ நான் கண்காணாத தூரத்துக்குப் போயிடுவேன்" என்றவளை இளக்காரமாக பார்த்தவனின் கைகளில் இருந்த துப்பாக்கி‌.. அவளின் நெற்றியில் குறிவைக்கப்பட்டு.. "ஐ லவ் யூ ‌வாணிம்மா. சந்தோஷமா செத்துப் போ" என கர்ஜனையுடன் கூறியவன்.‌ நிமிடத்தில் அனைத்து புல்லட்டையும் இறக்கினான்.

அவன்‌ புல்லட்டை இறக்கிய அதிர்வில் தான் இறந்து விட்டதாக நினைத்தவள்.. இரண்டு‌ நிமிடங்கள் கழித்த பின்னர் தான் உணரவே செய்தாள்.. தான் இன்னும் சாகாமல் இருப்பதை.. மெல்ல விழிகளை திறந்தவளின் நேரெதிரில் தெரிந்தது சூரியாவின் முகமே.. அவன் முகத்தைப் பார்த்ததுமே ரத்தநாளங்கள் அனைத்தும் உறைந்து நின்றது..

"என்னாச்சி வாணிம்மா.. இன்னும் சாகலையேன்னு பார்க்குறீயா??.. இப்பவே செத்துட்டா.. இன்னும் எவ்வளவோ இருக்கு.. அதெல்லாம் பார்க்க வேண்டாம்.. போ. நீ எங்கே வேணும்னாலும் போ.. உன் பின்னாடியே நான் வருவேன்" என்றவனின் வார்த்தையில் விலுக்கென நிமிர்ந்தவள்..

"எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை.. நான் எந்ததப்புமே பண்ணலையே.. என்‌ அப்பா அம்மாவை ‌கண்ணு முன்னாடியே கொன்னுட்டீங்களே.. நீங்க எல்லாம் மனுஷனா..‌ மிருகம்... அரக்கன்.. அசுரன்" என அழுகுரலில் சொல்லியவளை ஏளனமாக பார்த்தவன்..

"ஆமா நான் அரக்கன் தான்.. இன்னும் அரக்கனா தான் இருப்பேன்" என கணீர் குரலில் சொல்லியவனை வெறுப்புடன் பார்த்தவள்..

"அன்பு, பாசம் குடும்பத்தை பத்தியெல்லாம் உங்களுக்கு என்ன தெரியும்.. அப்பா சொன்ன மாதிரி அனாதை தானே நீங்க" என தன்னையும் மீறி வார்த்தைகளை வெளிவிட்டவளின் கன்னத்தை‌ அழுத்தமாக பிடித்தவன்.. "என்னடி சொன்ன?? எனக்கு அன்பு, குடும்பம்னா என்னன்னு தெரியாதா?? என்னை அனாதையா ஆக்குனதே உன் அப்பன் தான்டி.. போ.. போய் அவன்கிட்ட கேளு. ஏன் இப்படி பண்ணீங்கன்னு கேளு??" என சொல்லும் போதே அவன் குரல் கரகரத்தது..

*எங்கப்பாவை தான் கொன்னுட்டீங்களே??" என்றவளின் பதிலில் வாய்விட்டு சிரித்தவனை புரியாமல் பார்த்தாள்..

அவன் சிரிப்பே இவளுக்கு கோபத்தை தூண்டிவிட.. "ஏன் இப்படி ‌சிரிக்கிறீங்க??" என குரலை ‌உயர்த்தி கேட்டவளின் கன்னத்தை ‌அழுத்தமாக பிடிக்க.. கன்னத்து தாடைகள் எல்லாம் வலியெடுக்க ஆரம்பித்தது..

"உனக்கு விஷயமே தெரியாதுல்ல.. உன்னோட அப்பா சண்முகம் இல்லை.. சாதாரண ‌டிரைவரோட பொண்ணு இல்லை நீ" என்றவனை புருவம் சுருக்கி பார்த்தாள்..

"என்ன உளறுறீங்க??"

"நான் உளறலை. உன்னோட அப்பா பேரு சரவண பெருமாள்.. அம்மா பேரு துளசி.. நீ பொறந்தது ரெண்டு வயசு வரைக்கும் வளர்ந்தது எல்லாமே திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி" என்றவனின் வார்த்தையை நம்பாத பாவனை பார்த்தவளை இளக்காரமாக பார்த்தவன்..

"நான் சொல்றதை ‌ஏத்துக்க முடியலையா?? இரு வர்றேன்" என்றவன் அவளை விட்டு எழுந்து இறந்து கிடந்தவர்களின் அருகே சென்றவன்.. குப்புற விழுந்து கிடந்த வெள்ளை வேஷ்டி அணிந்த ஒருவனை தன் காலால் திருப்பி போட்டவன்.. அவன் பாக்கெட்டில் இருந்த போனை எடுக்க.. அதுவோ சாதாரண பட்டன் போனாக இருந்தது..

அதிலிருந்து கடைசியாக வந்த நம்பருக்கு போன் பண்ண.. சில ரிங்குக்கு பிறகு போனை எடுத்து "ஹலோ" என்ற கட்டைக்குரல் கேட்டது.. போனை ஸ்பீக்கரில் போட்டவன் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தான்..

எதிரில் ஒருவர் ஹலோ, ஹலோ என கத்துவது தெளிவாக கேட்டது.. "டேய் அவனை முடிச்சீங்களா இல்லையாடா?? ஊதாரி பசங்களா?? ***********" என் வாய்க்கு வந்த கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசினார்..

அவர் பேசிய வார்த்தைக்கு காதை இறுக்கமாக பொத்திக் கொண்டாள் ப்ரஜா..

"முடிச்சிட்டிங்களான்னு கேட்டா செத்துப் போனவங்களா வந்து ‌பதில் சொல்லுவாங்க மாமனாரே??" என்றவனின் எள்ளல் மிகுந்த குரலில் எதிரில் ‌இருந்தவருக்கு சட்டென கோபம் வர, "டேய்யய்யய்.‌ இன்னும் ‌உயிரோடு இருக்கோம்னு திமிர்ல ரொம்ப ஆடாதல்ல.. உன் சங்கை ‌அறுத்து கடல்ல தூக்கி வீசுறேம்ல" என்றவரின் பதிலில் கலகலவென சிரித்தவன்..

"உம் பொண்ணை முதல்ல எங்கிட்ட இருந்து காப்பாத்திட்டு.. என் சங்கை அறுப்பியோ?? இல்லை நீயே கழுத்தை அறுத்துட்டு சாவீயோ?? அதெல்லாம்‌ உன் பிரச்சனை" என்றவன் மட்டும் எதிரில் நின்றிருந்தால் குரல்வளையை கடித்தே கொன்றிருப்பார்.. அவ்வளவு வெறியில் இருந்தார் அவர்..

"உம் பொண்ணு எம் பக்கத்துல தான்‌ இருக்கா பேசுறீயா??" என்றவன் போனை ப்ரஜாவிடம் நீட்ட.‌

"அம்மாடி.. தங்கம்.. அவன் உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டாம்மா?? அந்த *** சாதிப்பய நமக்கு வேண்டாம்" என கம்மிய குரலில் பேசியவருக்கு என்ன பேசுவது என்றே அவளுக்குப் ‌புரியவில்லை.. நடப்பதெல்லாம்‌ கனவாக இருக்கக்கூடாதா என ஒரு மனம் எதிர்பார்க்க.. இன்னொரு மனமோ இதெல்லாம் நிஜத்தில் நடப்பவை என உணர வைத்துக் கொண்டிருந்தது..

இத்தனை வருடம் வளர்த்த தாய் தந்தை பொய் என்றால் தனக்கு அப்பா அம்மா இருந்தும் தான் ‌ஏன் தன் பிறப்பிடத்தை விட்டு வேறொரு இடத்தில் வளர வேண்டும் என்ற கேள்வி மனதை கரையானை அரிக்கத் தொடங்கியது..

அவளுக்கு என்ன பேசுவதென்றே தெரியவுமில்லை‌‌.. பேசவும் முடியவில்லை.. அவளின் மௌனம் புரிந்தாலும்‌ வேண்டுமென்றே "பேசு" என கண்களால் கட்டளையிட.. அவனின் கண்ணசைவுக்கு பெண்ணவளின் இதழ்கள் பிரிந்து "ஹலோ" என்ற வார்த்தையை உதிர்த்தது.‌

"யம்மாடி.. நீ அப்பாக்கிட்ட வந்திருடா" என்றவருக்கு என்ன பதில் சொல்வதென்று அவனை பார்க்க.. அவனோ போனை சட்டென புடுங்கியவன்.. "போதும்.. போதும்.. உம் பொண்ணை கொஞ்சுனது.. இப்போ நான் சொல்றபடி. செய்‌.. நான் சென்னை போற ட்ரெயின்ல உம் பொண்ணை ஏத்தி விடுறேன்.‌ ஆசைதீர ‌உன் ஊருக்கு கூட்டிப் போய் கொஞ்சு" என இளக்காரமாக சொல்லியவன் போனை கட் பண்ணி.. வரமாட்டேன் என அடம்பிடித்த ப்ரஜாவை இழுக்காத குறையாக இழுத்து ட்ரெயினில் அமர வைத்து விட்டு சென்றான்.. அவன் தன்னைத் தாண்டி செல்வதை வலியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரஜா..

தான் போகும் வழியறியாமல் தன் பயணத்தை மேற்கொண்டாள்.. விதி வழி பயணம் அவள் செல்ல.. அவளை ரெயிலில் ஏற்றி விட்டவன் அவளின் பின்னால் தார்ச்சாலையின் வழியாக தன் ‌ஆடி காரில் சென்னை நோக்கி பயணித்தான் சூரியா..‌



‌‌

 

T22

Well-known member
Wonderland writer
அசுரன் 5

இரயிலில் அமர்ந்தவளின் மனம் முழுவதும் அவளவன் கொடுத்த காயங்கள் மட்டுமே.. கண்களில் விழிநீர் அவளின் அனுமதியின்றி வழிந்துக் கொண்டிருந்தது. தான் அணிந்திருந்த துப்பாட்டாவினால் துடைத்தபடி நடந்ததெல்லாம் கனவாக இருக்காதா?? என எதிர்பார்த்தவளுக்கு அவளின் எதிர்பார்ப்புகள் அனைத்துமே கானல் நீராகி போனது.‌ நிதர்சனம் நெற்றி பொட்டில் அறைய மெல்ல விழிகளை மூடியவள் இயற்கை அன்னையின் தென்றல் காற்றால் மெல்ல உறங்கினாள்..

நீண்ட நேர தூக்கத்திற்கு பிறகு மெல்ல விழிகளை திறந்தவளுக்கு தான் எங்கிருக்கிறோம் என்பதே முதலில் பிடிபடவில்லை.. அதன் பின்னே சட்டென அனைத்தும் நினைவில் வர சூரியாவின் மேல் ‌கோபமும், தன்னை தானே நினைத்து அவமானமாகவும் இருந்தது..

பசி என்ற உணர்வே அறவே மறத்துப் போக ரெயிலில் பயணிப்பவர்கள் அனைவரும் சாப்பிட்டாலும் இவளுக்கு சாப்பாடு என்ற உணர்வு வரவேயில்லை.. ரெயிலில் ‌பயணம் மேற்கொள்பவளின் பயணம் அவளையறியாதது.. எங்கு செல்கிறாள்?? தெரியாது.‌. எந்த ஊருக்கு செல்கிறாள்?? தெரியாது.. யாரை பார்க்க செல்கிறாள்?? தெரியாது.. இப்படி எந்தக் கேள்விக்கும் விடையறியா அவளை பல விடை காண ஆபத்தான பாதையில் அனுப்பி வைத்திருக்கிறான் ஒருவன்..

சென்னையில் ரயிலில் ப்ரஜா ஏறி அமர்ந்ததை உறுதிப்படுத்திய சரவண பெருமாளின் இதழ்களில் ஏளனமான புன்னகை ஒன்று வர, "பொடிப்பய நீ என்கிட்ட மோதுறீயால??" என்றவர் ‌கர்வமும் ஆணவமும் நிறைந்த சிரிப்புடன் தன் ‌ஆட்களை அழைத்தார்..

"ஐயா" என பணிவுடன் வந்து நின்றவர்களை பார்த்து கோணலாக ஒரு சிரிப்பு சிரித்தவர் ‌.. "இங்க பாருங்கல.. என்ன பண்ணுவீங்ளோ?? ஏது ‌பண்ணுவீங்களோ?? எனக்குத் தெரியாது.. சென்னையில கால ‌மிதிக்கிற அந்த செகண்ட் தான் அவ வாழ்க்கையில கடைசி நொடியா இருக்கணும்" என்றதும் ‌அடியாட்கள் ஒவ்வொருவரும் ‌ஒருவரையொருவர் புரியாமல் பார்த்துக் கொண்டனர்..

"யாரைய்யா சொல்றீங்க?? எங்களுக்கு விளங்கல??" என கம்மிய குரலில் கேட்டவனை பார்த்து முறைத்தவர்,

"என்னல விளங்கல?? அதான்.. சூரியாவோட பொண்டாட்டி ப்ரஜா.. எம் பொண்ணு அவளைத்தான் சொல்றேன்.. அவ சென்னையில கால் எடுத்து வைச்ச அந்த நொடி.‌ அவ தலை ரெயில்வே ஸ்டேஷன்ல உருளனும்.. அவ தலையை எடுக்கிறவனுக்கு பத்து லட்சம் ரூபா தர்றேன்ல" என்ற பெருமாளின் வார்த்தையில் அனைவரும் ஒன்று சேர அதிர்ந்து நின்றனர்..

"ஐயா அது நம்ம பொண்ணுய்யா??"

"ம்ஹும்.. அவ என் பொண்ணு இல்லை.. அந்த சூரியாவோட பொண்டாட்டி.. அவனோட வாழ்க்கையில சந்தோஷம்னு ஒன்னு நடக்கவே கூடாதுல.. அவனோட கண்ணீர் தான் என்னோட வெற்றியே." என சற்று மிடுக்குடன் சொல்லியவரின் கண்கள் ஒரு நிமிடம் ஆணவத்தில் பளபளத்தது.‌

"சரிங்கய்யா.. நம்ம பொண்ணை அந்தப் பையன் கிட்ட பிரிச்சி கொண்டு வந்திடுறோம்" என்றவனின் கன்னத்தில் ஒங்கி ஒரு அறை அறைந்தார்..

"நீ என்னல பிரிச்சி கொண்டு வர்றது.‌ அவன் வாழவே கூடாதுன்னு நான் சொல்றேன்.. நீ என்னடான்னா பிரிக்கிறீயா?? அவளை மொத்தமா முடிக்கிற. அவளோட ரத்தம் இந்தப் பூமியில விழுந்தா தான்.. நம்ம சாதிப்பொண்ணுங்களுக்கு ஒரு பயம் வரும்.‌. படிக்க அனுப்புனா காதலுங்கிற பேர்ல எவன்கூடயாவது ஊர் மேய வேண்டியது.. அப்புறம் இழுத்துட்டு ஓட வேண்டியது.. நாம ஒவ்வொருத்தரையா தேடிப்பிடிச்சி வெட்டணுமா??.. தடிமாடுங்களா.. நான் சொன்னதை செய்ங்க.. அந்த ப்ரஜா தலையை எவன் வெட்டுறானோ?? அவனுக்கு பத்து லட்சம் ரூபா ரொக்கமா தர்றேன்னு சொல்லுங்கள" என்றவரின் பேச்சில் "சரி" என தலையாட்டியபடி வெளியே சென்றவர்களின் எண்ணமெல்லாம் "நம் சாதிப்பெண் வேறொரு சாதிக்காரனுடன் வாழ்ந்தாள்" என்னும் விஷ விதையை அவர்களுக்குள் பாய்ச்சினார்.. ரத்தத்திலேயே சாதிவெறி ஊறியவர்கள் நல்லது?? கெட்டது?? என எதையும் பகுத்தறிய மாட்டார்கள்.. அவர்களுக்கு அவர்கள் சாதி தான் உசந்து நிற்க வேண்டும்.. அது ஒன்று மட்டுமே மூளையில் ஓடும்‌‌.. அப்படியொரு அடி முட்டாள்களை தான் தேர்ந்தெடுத்து ‌வெட்டுவதற்கும், குத்துவதற்கும் ‌பயன்படுத்தி வந்தார் பெருமாள்.. எவனாவது ‌புத்திசாலித்தனமாக கேள்வி கேட்டாலும் ‌அவர்களையும் மூளைச்சலவை செய்வதில் வல்லவர் வித்தகர் சாதிசங்கத் தலைவர் சரவண பெருமாள்..

அவர் இட்ட கட்டளையில் உடனே திருநெல்வேலியில் காரில் பயணித்தவர்கள் விடிவதற்குள் மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் வந்து இறங்கிவிட்டனர்.. இறங்கியவர்கள் சென்ட்ரல் ஸ்டேஷன் சென்றனர்..

ஒரு கூட்டமே தன்னைக் கொல்ல கொலைவெறியுடன் அலைகிறது என்பதை அறியாது.. காலையில் ‌எழுந்ததும் பசித்த தன் வயிறை அழுத்திப் பிடித்தவளின் எதிரில் டீ கப் ஒன்று நீட்டப்பட்டது..
‌‌
நீட்டிய கரத்தினை நோக்கி‌ முகம் திருப்பியவளுக்கு நாற்பத்து ஐந்து வயது ‌மதிக்கத்தக்க டீ விற்பவர் தான் கைகளை நீட்டிக் கொண்டிருந்தார்.. "இந்தாம்மா டீயும், சமோசாவும்" என சொல்லியவரின் வார்த்தையில் தலையை ஒரு நிமிடம் குனிந்தவள்.. "என்கிட்ட ‌காசு இல்லைங்க" என‌ தாழ்ந்த குரலில் சொல்லியவளின் கண்ணீர் துளிகள் சட்டென வெளியேறியது அவமானத்தால்.. இப்படியொரு சூழ்நிலையை இதுவரை அவள் எதிர்கொண்டதேயில்லை. அவள் பெங்களூரை விட்டு வெளியே சென்றதேயில்லை.‌

"இன்னைக்கு எம் பையனுக்கு பொறந்தநாளும்மா. எல்லாருக்கும் ‌ப்ரீ தான்மா" என்றதும் சிறு புன்னகையுடன் கைகளை நீட்டியவள்.. சூடாக இருந்த டீயை கடகடவென வாயில் ஊற்றியவள்.. ஒரே நேரத்தில் நிமிடத்தில் சமோசாவையும் சாப்பிட்டு முடித்து விட்டாள்..

அவள் சாப்பிடுவதை பார்க்கவே ‌பாவமாக இருந்தாலும்.. எதுவும் சொல்லாமல் ‌சிறிது தூரம் தள்ளிச் சென்ற டீக்காரர் தன் போனை எடுத்து ‌டயல் பண்ணியவரின் ஒரே ரிங்கில் போனை எடுத்தான் சூரியா..

"அவ ‌சாப்பிட்டாளா??" என்ற ஒற்றை வார்த்தை தான் அவன் வார்த்தையில் வந்தது.. "ம்ம்ம்" என்ற பதிலை கேட்டதும் உடனே கட் பண்ணி விட்டான்..

இவனுக்கு அந்தப் பெண்ணின் ‌மேல் இருப்பது அக்கறையா?? இல்லை அன்பா?? இல்லை பழி கொடுப்பதற்கு முன் ஆட்டிற்கு இலை தழைகளை போட்டு நன்றாக கவனித்துக் கொள்வோமே.. அது ‌போலத்தானா??‌ என புரியாமல் டீக்காரராக நடிக்க சென்றவன் தான் மண்டை குழம்பி போய் நின்றான்..

அவனின் வார்த்தையை கேட்டபின் இன்னும் ஸ்பீடாக தன் ஆடிக்காரை செலுத்தினான்.. செல்லும் வழியில் டீக்கடையில் வண்டியை நிறுத்தியவன் ஒரு‌ டீ மட்டும் குடித்தவன் மறுபடி தன் ‌பயணத்தை‌ மேற்கொள்ள.. ப்ரஜா சென்ற ரெயில் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது..

சென்னை ‌சென்ட்ரலில் ரயிலில் ‌இறங்கியதும்‌ எஞ்சியிருந்த மக்கள் அனைவரும் இறங்கினாலும்.. எங்கே செல்வது என அறியாமலே ‌மெதுவாக எழுந்தவள்.. வாசலின் அருகே வந்து நிற்க.. அவளை கொல்வதற்காக அலையும் ஒரு கூட்டமே அங்குமிங்கும் அவளை ஒவ்வொரு பெட்டியாக தேடிக் கொண்டிருந்தது..

மெல்ல ‌இறங்கியவளுக்கு பயத்தை மீறி ஒரு வித அச்சம் மனதை கவ்விக் கொள்ள.. அப்பொழுதும் அந்த நொடியிலும்‌ அவள் எதிர்பார்த்தது சூரியாவின் அணைப்பையும் ‌பாதுகாப்பையும் தான்.. ஏனோ அவன் அருகில் இருந்தாலே போதும் தனக்கு எதுவும் நேராது என ஆழ்மனம் நினைத்தாலும்.. அவளின் கண்முன்னால் சுட்டுக் கொன்றதால் அவனை அரக்கனாய் அசுரனாய் மட்டுமே மூளை எண்ணியது..

"டேய்ய்ய்.. அந்தப் பொண்ணு அங்கே நிக்கா டா" என்றவனின் கணீர் குரலில் ஒட்டு மொத்த ஸ்டேஷனும் அவர்களை நோக்கித் திரும்ப.. ப்ரஜாவோ யாருக்கு வந்த வினையோ?? என்பதை போல் கவலை தோய்ந்த முகத்துடன்.. அடுத்தது என்ன என அறியாமல் சிறு ‌பயத்துடன் நின்றிருந்தாள்...

ஒரு உயிரை எடுக்கப் போகிறோம் என்பதைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் முதுகில் சொருகியிருந்த ஆயுதத்தை கையில் ‌எடுத்தவர்கள்.. கத்தி, அறுவாளுடன் அவளை நெருங்க.. அவர்கள் அவளை நெருங்குவதற்குள்.. நொடி நிமிடத்தில் எங்கிருந்தோ வந்த ஒருவன்.. ப்ரஜாவின் இடுப்பில் கைப்போட்டு அவளை தன் அணைப்பிற்குள் கொண்டு வந்தவன்.. சட்டென கூட்டத்திற்குள் மறைய.. வெட்டுவதற்காக காத்திருந்தவர்களுக்கு பேரதிர்ச்சி.‌ தொப்பி, மாஸ்க் அணிந்திருந்ததால் கொல்ல வந்தவர்களுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை.. ஆனால் ‌அவனுடன் காதலுடன் வாழ்ந்து, அவனை மட்டுமே நேசித்து, அசுரனையும் தன் மனதில் வேந்தனாய் பூஜித்தவளுக்கு‌ அவன் கரம் தன் இடையில் பட்ட நொடி புரிந்து கொண்டாள். அவன் தன்னவன் என்று.. தனக்கானவன் என்று..

கொல்ல வந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான்.. கூட்டத்தில் மறைந்தவனை அங்குமிங்கும் தேடியவர்களுக்கு இறுதியில் தோல்வியே மிஞ்சியது.. உடனடியாக போனை போட்டு பெருமாளிடம் சொல்ல.. அவர் ‌கழுவி கழுவி ஊற்றியது தான் ‌மிச்சம்.. கூட்டத்தின் நடுவில் பாதுகாப்பு அரணாய் அழைத்து வந்தவன்.. சென்ட்ரலுக்கு வெளியே நின்ற காரில் ஏற்றியவன்.‌ சட்டென பாலத்தின் வழியே வண்டியை செலுத்தி.. மின்னலென அவ்வளவு டிராபிக் நிறைந்த இடத்திலும் மறைந்து விட்டான்.. தன்னைத் தான் கொல்ல வந்தார்கள் என்பதை கூட அறிய முடியாமல் தான் போனாள்.. ‌‌

காரில் அமர்ந்தவள் மெல்ல ‌அவனை ஏறிட்டுப் பார்க்க.. முகத்தில் முக்கால் பாகத்தை மாஸ்க் மறைத்திருக்க.. தலையில் அணிந்திருந்த தொப்பியும் தலையில் சற்று இறுக்கமாக இருந்தது போல.. காரை வேகமாக ஓட்டிக் கொண்டே இடது கரத்தினை கொண்டு மாஸ்க் மற்றும் தொப்பியை கழற்றியவனின் ‌முகத்தில் எந்தவித உணர்வுகளும் இல்லை‌.. முத்து முத்தாய் நெற்றியின் ஓரம் வியர்வைத்துளிகள் ‌வழிய.. அதை துடைத்து விட சென்ற கைகளை கண்டு ஒரு நிமிடம் உள்ளுக்குள் அதிர்ந்தாள் ப்ரஜா.. அவன் செய்த காரியத்திற்கு தன் இடத்தில் வேறு எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவனை கொல்ல வேண்டுமென மட்டுமே நினைப்பாள்.. ஆனால் தன்னால் ஏன் அப்படி நினைக்கக்கூட முடியவில்லை.. அவன் முகத்தை சுளித்தால் கூட இவளால் தாங்க முடியவில்லை..

"தான் அவன் மேல் கொண்டது காதலா?? இல்லை அதற்கு மேல் பைத்தியமா??" என இருவேறு பட்ட மனநிலையில் குழம்பி அருகில் அமர்ந்திருந்தவளை ஒரு ஹோட்டலின் முன்பாக காரை நிறுத்தினான்.. யோசனையாக பார்த்தவளின் கைகளைப் பற்றியவன்.‌ "வா ‌ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிட்டு சாப்பிட்டு போகலாம்" என்றவனை முறைத்தவள் "எங்கே போறோம்" என்பதற்கு வாயை திறக்காமல் அமைதியாக இருந்தவனை எரிச்சலுடன் பார்த்தாள்..


வரமாட்டேன் என்றவளை கைப்பிடித்து நேராக அறைக்கு இழுத்து சென்றான்‌.. அவன் கைகளை சட்டென உதறியவள் "நான் ‌ட்ரெஸெல்லாம் மாத்த முடியாது" என்றவளை அழுத்தமாக பார்த்தவன்.. கதவை ‌தாழிட்டு அவளை நெருங்கி வர.. அவனின் நெருக்கமும், விஷமமான பார்வையும் கண்டவள். மெல்ல தலையை தாழ்த்த. அவள் என்ன என உணர்வதற்குள் அவள் அணிந்திருந்த ‌சுடிதாரின் டாப்பினை கழட்டி எடுத்து விட்டான்.. தன் கைகளை கொண்டு தன் மானத்தை மறைக்கக முயன்றவளை சிறு புன்னகையுடன் பார்த்தவன் ‌ "இப்போ நீ ட்ரெஸ்‌ மாத்துறீயா?? இல்லை"‌ என்பதற்குள் அவன் கைகளில் இருந்த ட்ரெஸ்ஸை வெடுக்கென பிடுங்கியவள்.. பாத்ரூமை நோக்கி செல்ல.. அவளின் அங்கங்களை பார்த்த தாப உணர்வில் தலையை குலுக்கி கொண்டவன்.. "இவளை பார்த்தாலே எல்லாம்‌ மறந்திடும் சூரியா‌‌ சரியான மாயக்காரி" என தான் கொண்ட தாபத்திற்கு அவள் மேல் பழியை போட்டவன்.. இளம் புன்னகையுடன் கட்டிலில் அப்படியே சரிந்து படுக்க.. இரவு பகல் பாராது வண்டியோட்டி வந்ததில் அசதியின் மிகுதியில் தன்னையும்‌ மீறி கண்கள் சொருக.. மெல்ல விழிகளை மூடினான்.‌

பாத்ரூமிலிருந்து வெளியே வந்தவளுக்கு கட்டிலில் ‌படுத்திருந்தவனை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவள்.. நினைத்திருந்தால் ‌கதவை திறந்து இவன் இல்லாத திசைக்கு ஓடிவிடலாம்.. ஏனோ மனம் அதற்கு சம்மதிக்காமல் அவன் அருகில் அமர்ந்தவள்.. அன்றைய நியூஸ் பேப்பரை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள்.. அதில் முதல் பக்கத்திலேயே இருந்தது மினிஸ்டர் சரவண பெருமாளின் புகைப்படம்.. சிறிது நேரம்‌ நியூஸ் பேப்பரை பார்த்தவளுக்கு சிறிது நேரத்தில் கண்கள் சொக்க.. அவன் அருகிலேயே படுத்துறங்கினாள்.. எந்த நொடி சூரியாவின் இறுகிய அணைப்புக்குள் சென்றாள் என்பதை இருவரும் அறியவில்லை.. அனலென தகிக்கும் அவன் நெஞ்சமதில் துயிலும் மழலையானாள் மங்கையவள்..

காற்றுப்புகா இடையில்
அல்லி மலரவளின் இடையில் தவழ்ந்தது மன்னவனின் பூங்கரம்‌!!
அவளின் மனதை கொள்ளையிட்டவனும் அவனே!!
அவளின் மனதை கொலை செய்பவனும் அவனே!!
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அசுரன் 6

நான்கு மணி நேர தூக்கத்திற்கு பிறகு மெல்ல கண்களை திறந்தான் சூரியா.‌ வலதுபக்க நெஞ்சில் பாரம்‌ ஏந்தியதை போல ‌வலியை கொடுக்க ‌‌ மெல்ல விழிகளை தாழ்த்திப் பார்த்தவனுக்கு கலைக்கப்பட்ட ஓவியமாய்.‌ கார்கூந்தலினுள் ஒளிந்து கொள்ளும் மேகமாய், தெரிந்தும் தெரியாமலும் ஒப்பனையில்லா அவளின் மதிமுகம் தோன்றிட.. இடது கரத்தால் அவளின்‌ கூந்தலை ஒதுக்கியவனுக்கு முழு பௌர்ணமியாய் அவளின் முகம் பிரகாசிக்க.. இதழோரம் சிறு புன்னகை தோன்றிட.. அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டான்.. மெல்ல அவளை தன்னிடமிருந்து பிரித்து படுக்கையில் சரித்து படுக்க வைத்தவன்‌‌.. அவளின் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்..

சிறு சிறு அசைவுகளை கூட அவளால் ஒளித்து மறைத்து வைத்துக் கொள்ள இயலாது.. அவளின் முகமே காட்டிக் கொடுத்து விடும்.. அழகின்‌ பூரண நிலவாய் ஜொலிப்பவளை ஆழ்ந்து பார்த்தவன்.. அவளின் பட்டு போன்ற மிருதுவான கன்னத்தில் முத்தமிட.. அப்பொழுதும் அசைந்தாளில்லை பெண்ணவள்..

இரு கன்னத்திலும்‌ முத்தமிட்டவனின் கைகளும் ஆங்காங்கே அவளை மேய, அவனின் இதமான வருடலில் சிறு சிணுங்கலுடன் திரும்பி ‌படுத்தவளின் கழுத்தில் ‌முகம் புதைத்தான்.. அவள் போட்டிருந்த சோப்பின் நறுமணமே இவனுக்கு ‌போதையேற்ற.. கைகளோ ஆடை தாண்டி‌ செல்ல ‌முயன்றது..

அவளின் இடையில் நர்த்தனமாடிய கரங்கள் மேடு பள்ளங்களை தாண்டி பயணிக்கும் பொழுதே சட்டென எழுந்து கொண்டாள் ப்ரஜா.. அவனின் அருகாமையா?? இல்லை அவனின் தொடுகையா?? சகித்துக் கொள்ள இயலாமல் அவனை முறைத்தவள் நேராக எழுந்து ஜன்னலின் அருகில் போய் நின்றாள்..

அவன் பக்கத்தில் இருந்தால் பாதுகாப்பு என நினைக்கும் அதே மனது ஏனோ, அவனின் தொடுகையை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தது.. பத்து நாள் அவள் கொண்ட காதலும், ‌தீரா மோகத்தில் கலந்த நாட்களும், அவன் தன்னை ஏமாற்றியதும் அவனின் ஸ்பரீசத்தில் நினைவு வர.. அவனை அரணாக எண்ணியவள்.. அவனின் தொடுகையை அருவெறுப்பாக நினைத்தாள்.. எல்லாவற்றிற்கும் மேலாக மணிமகுடமாய் தன் தாய்மையை தன்னிடமிருந்து பறித்தவனை ஏனோ உடலளவில் ஏற்றுக் கொள்ள மனதில்லை..

அவனை விட்டு பிரியும் பொழுதே சட்டென மூண்ட கோபத்தை தனக்குள் அடக்கியவன்.. அவளை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவன் நினைத்திருந்தால் அவளை படுக்கையில் வீழ்த்த ஒரு நொடி போதும்.. அவளின் பலவீனமான உடலால் தடுக்கவும் இயலாது.. ஒரு பெண்ணை படுக்கையில் வீழ்த்துபவன் ஆண்மகனல்ல என்பதால் தான்.. அவளை முறைப்படி கல்யாணமே முடித்தான்.. அவளுடன் வாழ்ந்த நாட்கள் அவன் நெஞ்சில் ‌பொக்கிஷமாய் சேர்த்து வைத்திருக்கும் நாள் என்பதை அறியும் நாள் எப்பொழுது ‌வரும்?? என இருவரும் அறியவில்லை..

ஜன்னலின் அருகில் நின்றவளை ஆழ்ந்து பார்த்தவன்.. சட்டென எழுந்து வெளியே சென்று விட்டான்.. வெளியே செல்லும் போது கதவை படாரென சாத்தியபடி செல்ல‌‌.. கதவு அடைக்கும் சத்தத்தில் மெல்ல திரும்பினாள் ப்ரஜா.. கண்களில் விழி நீரோடு.

கண்களில் கண்ணீர் வழிய "என்னை ஏன் ஏமாத்துனீங்க சூரியா" என மனதோடு பேசியவளின் காயங்கள் அனைத்தும் ஆறா வடுவாய் மனதை செல்லரித்துக் கொண்டிருந்தது..

அரைமணி நேரத்திற்கு பிறகு உள்ளே நுழைந்தவனின் கைகளில் சாப்பாடு தட்டு இருந்தது.. பழைய சூரியாவாக இறுகிய முகத்துடன் எந்தவித உணர்வுகளும் இல்லாமல் இருந்தான்..

"சாப்பிட்டு வா.. நாம போகலாம்" என்றவனை ஏறிட்டுப் பார்த்தவளின் புருவங்கள் சுருங்கியது..

"எங்கே ‌போறோம்??" என்றவளை அழுத்தமாக பார்த்தவன்..

"உன் அப்பனை பார்க்கப் போறோம்" என்றவனின் ஒருமை விழிப்பில் சட்டென கோபம் வர,

"மரியாதையா பேச பழகுங்க" என்றவளை அனல் தெறிக்க பார்த்தவன்..

"அந்த நாயீக்கு மரியாதை ஒன்னுதான் ‌கேடு.. பேசாம வாடி.‌. இல்லை" என தன் ஒற்றை விரலை காட்டி மிரட்டியவனின் கர்ஜனையில் உடல் நடுங்க.. கண்ணீருடன் அவனை பார்த்தாள்..

சில நிமிடங்களில் அவன் கொடுத்த சாப்பாட்டை கடமைக்கு மென்று முழுங்கினாள்.‌ அவள் சாப்பிடும் வரை அமைதியாக இருந்தவன்.. அடுத்து செய்ததெல்லாம் ‌மின்னல் வேகம் தான்.. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பிளைட் ஏறியவன்.. ஒன்றரை மணி நேர பயணத்தில் வந்திறங்கினான் திருநெல்வேலியில்..

அவன் கையிலிருக்கும் விளையாட்டு பொம்மை போல் ‌அவன் செல்லும் இடத்திற்கெல்லாம் இழுத்துச் செல்லப்பட்டாள் ப்ரஜா…

கல்லிடைக்குறிச்சியில் வந்திறங்கியவனின் கண்களில் அப்படியொரு வலி தெரிந்தது.. ஏக்கம், தவிப்பு, வன்மம் என அனைத்து வித உணர்வுகளிலிருந்தும் வெளிவர முடியாமல் தவித்தான்..

சில நிமிடங்களுக்குப் பிறகு தென்னந்தோப்பின் நடுவே கார் நிறுத்தினான்.. சிலுசிலுவென காற்று தென்றலாய்‌ வீச. ஒரு வித அமைதி மனதெல்லாம் பரவியது.. தென்னந்தோப்பினுள் இறங்கி நடக்க ஆரம்பித்தவனின் பின்னால் ப்ரஜாவும் நடக்க ஆரம்பித்தாள்..

ஆங்காங்கே வேடிக்கை பார்த்தபடி நடந்தவர்கள் சில நிமிடத்தில் தென்னந்தோப்பில் நடுவில் அமைந்திருந்த ஓட்டு வீட்டினை அடைந்தார்கள்..

ஓட்டு வீட்டினை சுத்தம் செய்த இருவர் சாவியை இவனிடம் கொடுத்துவிட்டு புன்னகை ஒன்றை புரிந்தபடி வெளியேறினார்கள்..

சூரியாவின் பெங்களூர் வீட்டை ஒப்பிடும்போது இந்த வீடு ஒன்றுமேயில்லாமல் இருந்தது.. அத்தனை வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்தவன். இந்த ஓட்டு வீட்டில் தங்கப்போகிறானா?? என்றவளின் கண்ணில் விழுந்தது தூரத்தில் தெரிந்த மணிமண்டபம்.. இறந்தவர் ஒருவரின் சமாதிக்கு கூடாரம் போன்ற அமைப்புடன் இருந்தது.. கால்கள் மெல்ல மண்டபத்தை நோக்கி செல்ல.. சூரியாவிடம் எதுவுமே சொல்லாமல் தன் மனம் போல் நடக்க ஆரம்பித்தாள்..

மணிமண்டபத்தை வந்தடைந்தவளுக்கு அங்கிருந்த கல்வெட்டில் இருந்த "திலகவதி" என்ற பெயர் தன்னையும் மீறி அழுத்தமாக மனதில் பதிந்தது.. வாய்விட்டு திலகவதி என வாசித்தவளின் அருகில் வந்து நின்றான் சூரியா..

"இங்கே என்ன பண்ற??" என்றவனை ஏறிட்டுப் பார்த்தவள்.. "இது யாரோட சமாதி??" என்றவளின் குரல் ஏனோ தடுமாறியது..

"என்னோட ஆங்கிளோட ஒய்ஃப் தான் இவுங்க. காதலிச்சு கல்யாணம் பண்ணவங்க இறந்துட்டாங்க.. இவுங்க இறந்ததுக்கப்புறம் இந்த ஊர் எதுவுமே வேண்டாம் அப்படின்னு ஆங்கிள் மிலிட்டரில ஜாயின் பண்ணிட்டாங்க. இப்போ வரைக்கும் ஆங்கிள் இந்த ஊர் பக்கம் வந்ததேயில்லை" என சொல்லி கொண்டே வீட்டிற்குள் அழைத்து வந்தான்..

இரண்டு அறைகள், ஒரு சமையலறை கொண்ட ‌சாதாரண வீடு தான்‌ அது.. ஆனால் ஒரு வித ஈர்ப்பு சக்தி ‌அந்த வீட்டிற்கு இருப்பதை போல் உணர்ந்தாள்.. காலம் காலமாக இந்த வீட்டிலேயே வாழ்ந்த உணர்வு அவளுக்குள் வந்தது.. பிறந்ததில் இருந்தே தமிழ்நாடு பக்கம் வராத ‌ஒருத்திக்கு இந்த வீடு மனதோடு ஒன்றிப்போனதை அதிர்ச்சியுடன் நினைத்துப் பார்த்தாள்..

சமைத்து வைத்ததை சாப்பிட்டவர்கள் ஆளுக்கொரு அறையில் தங்கிக் கொண்டனர்.. இருவரும் எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டனர்..

மாலை வேளையில் ப்ரஜாவை அழைத்துக்கொண்டு சென்றான்‌‌.. காரில் இருந்து இறங்கியவனுக்கு எதிரில் மிகப்பெரிய கட்சிக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.. மேடையில் வெள்ளை வேட்டி அணிந்து சிலர்‌ அமர்ந்திருக்க.. அதில் ஒருவரை புகழ்ந்து தள்ளி மைக்கில் பேசிக்கொண்டிருந்தார் ஒருவர்.. இதையெல்லாம் புதிதாக பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் நின்றவன். "இவர் யார் தெரியுமா??" என மேடையில் இருந்த ஒருவரை சுட்டிக்காட்டி கேட்க,

"ம்ம்.. தெரியும்.. சரவண பெருமாள்" என்றவளின் பதிலில் ‌சற்று அதிர்ச்சியுடன் கண்கள் இடுங்க பார்த்தான்..

"உனக்கு இவனை ‌முன்னாடியே தெரியுமா??" என்றவனை பார்த்து முறைத்தவள்.. "அங்கே பாருங்க" என கை நீட்ட.. சரவண பெருமாளின் புகைப்படத்துடன் ஏகப்பட்ட கட் அவுட் வைத்திருந்தது..

"ஓஹ்.. இதை வச்சித்தான்‌ சொன்னீயா??" என நீண்ட ‌பெருமுச்சு விட்டவன்.. "அவர் தான் உன் அப்பா" என்றவனின் பதிலில் ‌சற்று அதிர்ந்தவள்.. மேடையில் ‌அமர்ந்திருந்தவரை உன்னிப்பாக பார்த்தாள்..

"அப்பொழுது தான் ‌‌ சரவண பெருமாள் எழுந்து பேச ஆரம்பித்தார் ‌.. முதலில் அனைவருக்கும் வணக்கம் சொல்லியவர்.‌ அரைமணி நேர பேச்சுக்குப் பிறகு "ஜாதிகள் ‌இல்லையடி பாப்பா" என்ற பாரதியாரின் வாக்கியபடி நாம் வாழ வேண்டும் என மைக்கே அதிர்வதை போல் ‌பேசியதை‌ கேட்ட ப்ரஜாவிற்கே வியப்பு தான்..

தன்னிடம் போனில் வேற்று சாதி பையன் அது இது என‌ பேசிவிட்டு.. இப்பொழுது மேடையில் ‌வேறு பேச்சு பேசுவதை ஆச்சரியமாக பார்த்தாள்..

அவரின் பேச்சுக்கள் சகிக்க முடியாமல் போக.. கூட்டத்திலிருந்து விலகி தனியாக நடக்க ஆரம்பித்தாள்.. அவளின் பின்னால் நடந்தான் சூரியா.‌

அவளின் சிந்தனை முகத்தை பார்த்தவன்.. "என்னாச்சு?? உங்கப்பனோட நடிப்பை பார்த்து ஆச்சர்யமா இருக்கா" என்றவனை எரிச்சலுடன் பார்த்தாள்..

"இல்லை.. போலியான மனிதர்கள் இருக்கிற இடத்துலே தான் நானும் வாழுறேன் அருவெறுப்பா இருக்கு" என்றவளின் பதிலில் அவள் தோள்பட்டையை அழுத்தமாக பற்றியவன்..

"என்னடி திமிரா?? யாரை போலின்னு சொல்ற??" என அழுத்தமாக கேட்டவனை எரிக்கும் பார்வை பார்த்தவள்..

"உங்களைத்தான் சொல்றேன்.. என்கூட வாழ்ந்ததெல்லாம்‌ போலியான வாழ்க்கை தானே" என நிதானமாக சொல்லியவளின் கண்களில் காதலின் வலி அப்பட்டமாக தெரிந்தது.

"வாணிம்மா" என்றவனை அனல் கக்க பார்த்தவள்,

"தயவு செஞ்சு அப்படி கூப்பிடாதிங்க.. காதுல ஈயத்தை ‌காய்ச்சி ஊத்துற மாதிரி இருக்கு.. மலை உச்சியில நின்னு ஐ லவ் யூ னு சொல்லும் போது என் மனசு முழுக்க காதல் இருந்ததான்னு கேட்டா எனக்கு தெரியாது.‌ ஆனா என்னை வீட்டை விட்டு வெளியே போன்னு சொல்லும் போது என் மனசு முழுக்க காதல் தான் இருந்தது.. காதல் அவ்வளவு வலியை கொடுக்கும்னு நான் நினைச்சு கூட பார்த்ததில்லை.. உங்க கூட வாழணும் பேராசை பட்ட எனக்கு நீங்க கொடுத்தது‌‌.. வலியும் ஏமாற்றமும் மட்டுமே.. போதும் நான் உங்களை நம்புனதும் போதும்.. உங்ககூட நான் வாழ்ந்ததும் போதும்.‌ இன்னொரு தடவை என்னை தொட முயற்சி பண்ணீங்க.. என் உடம்பை நானே கொளுத்திப்பேன்" என தீர்க்கமாக சொல்லியவளின் வார்த்தையில் அதிர்ந்து நின்றான் சூரியா..

"திலகா" என எழுந்து அமர்ந்தவரின் முகமெல்லாய் முத்து முத்தாய் வேர்த்திருக்க.. மனதில் ஒருவித பயம் கவ்விக் கொண்டது.. தன்னறையில் இருந்த தன் மனைவியின் படத்தை பார்த்தவருக்கு மனமெல்லாம் கனத்துப் போனது..

"திலகா.. ஏதோ மனசெல்லாம் பிசையுது.. ஊருக்குப் போன்னு சொல்ற மாதிரியே இருக்கு. ஏன் இப்படி தோணுது?? இத்தனை வருஷத்துல ‌வராத ஊரோட நினைப்பு இப்ப ஏன் செல்லரிக்குது" என‌ மனதோடு பேசியவர்.. அடுத்த நாளே தான் பார்த்துக் கொண்டிருந்த ‌வேலையில் விடுமுறை எடுத்துக் கொண்டு பயணித்தார்.. தன் சொந்த ஊர் கல்லிடைக்குறிச்சியை நோக்கி..

பகை என்னும் வேள்வித் தீயில் குளிர் விட்டு எரிந்தது காதல் என்னும் தீ!!..
 

T22

Well-known member
Wonderland writer


சுரன் 7

சூரியா ஊருக்குள் வந்தது காட்டுத்தீயை விட வேகமாக பரவியது.. அனைவருக்குமே இன்னாரின் மகன் என அறிந்ததில் இருந்து சிலருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும்.. சிலர் நடந்ததை நினைத்து துக்கப்படவும் செய்தனர்..

சூரியாவின் மனதெல்லாம் யோசனையுடன் இரவுணவை தவிர்த்தவன் தன்னறைக்குள் முடங்கிவிட.. ப்ரஜாவோ அவனின் நடவடிக்கையை கவனித்தாலும் அவனுக்கு ஆறுதல் சொல்லகூட தோன்றவில்லை.. இருவருமே இறுக்கமான மனநிலையில் ஆளுக்கொரு புறமாய் திரிந்துக் கொண்டிருந்தனர்.. இரண்டு நாட்கள் ஊரில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாகவே சென்றது.. ‌‌

பெருமாளோ பார்ப்பவரிடம் எல்லாம் எரிந்து விழுந்தார். யார் ஊருக்குள்ளே நுழையக்கூடாது என நினைத்தாரோ?? அவன் இன்று ஊருக்குள் ஒற்றை ஆளாய் நுழைந்து வேந்தனாய் அவரை எதிர்த்து நிற்கவும் காத்திருக்கிறான்.. தேர்தல் நடக்கும் இந்த சமயத்தில் அவனை எதையும் செய்ய முடியாத நிலையில் அவர் இருந்தார்..

தன்னை கழுகாக கொத்தித் தின்க எதிர்க்கட்சிகள் காத்திருக்கும் நிலையில் இப்பொழுது மட்டும் தான் சூரியாவிடம்‌ மோதினோம்.. தன் அரசியல் வாழ்க்கையை இழந்துவிட வேண்டியது தான்.. அப்படியொரு நிலையை அவர் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.. அரசியல் சாணக்கியனாய் இருந்தவருக்கு எதிராக அசுரவேந்தனாய் எழுந்து நின்றான் சூரியா..

அவன் மனதில் கொழுந்து விட்டு எரியும்‌ தீயை அணைக்கும் வல்லமை எவரிடத்திலும்‌ இல்லை.

இரவு வேளையில் கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்தாள் ப்ரஜா.. ப்ரெட் டோஸ்ட் செய்து அதில் சில வெஜிடபிள் கட் பண்ணியவள்.. டோமட்டோ சாஸ் ஊற்றி சாப்பிட ஆரம்பிப்பதற்குள் கதவு ‌தட்டும் சத்தத்தில் ஒரு வித எரிச்சலுடன் கதவை திறப்பதற்கு செல்ல.. படபடவென வேகமாக கதவை தட்டும் சத்தத்தில் அறைக்குள் இருந்து வேகமாக வெளியே வந்த சூரியா ப்ரஜாவை இழுத்து தன் பின்னால் நிறுத்தியவன்.. கதவை திறக்க ‌. கதவை வேகமாக தள்ளியபடி உள்ளே வந்தனர் பெருமாளின் அடியாட்கள்…

"கதவை வேகமாக திறக்க மாட்டியால??" என எரிந்து விழுந்தவர்களை முறைத்துக் கொண்டு நின்றான்..

"என்ன அண்ணேன் நீங்க?? கல்யாணம் முடிஞ்ச இளசுங்க கதவை திறக்க லேட்டாகாதா??" என குலைந்து பேசியவனின் பார்வை முழுவதும் ப்ரஜாவின் மேல் தான் இருந்தது..

அவளை அக்குவேறு ஆணிவேறாக தன் கண்களாலேயே மேய பார்த்தவனை முறைத்து நின்றவன்.. ப்ரஜாவை முழுதாக இழுத்து தன் முதுகிற்கு பின்னால் நிறுத்தினான்..

"என்ன வேணும் உங்களுக்கு??" என்றவனை அளப்பதை ‌போல் மேலும்‌ கீழும் பார்த்தவர்கள். "எங்க ஐயா கிட்ட ரொம்ப வம்பு வச்சுக்கீறியாம்.. என்னல ‌உன்‌ சங்கதி??" என்றதுமே புரிந்து கொண்டான் இவர்கள் பெருமாள் அனுப்பிய அடியாட்கள் என்பதை..

"ஆமா அதுக்கென்ன இப்போ?? உங்க ஐயா பெரிய கொய்யாவா இருந்தா நேரடியா மோத ‌சொல்லு.. ஆள் அனுப்பி பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் இங்கே நடக்காது.. வெளியே போங்கடா" என நிதானமாக சொல்லியவனின் கழுத்தில் நீண்ட கத்தியை எடுத்து வைக்க.. ப்ரஜாவிற்கோ மூச்சே நின்று‌ விட்டது..

அவன் முதுகுப்புற சட்டையை இறுக்கமாக பிடித்தவள். "போகலாம் சூரியா.. நம்மளுக்கு எதுக்கு இந்த வம்பு??" என்றவளை திரும்பி பார்த்தவன்.. அவளை பார்த்துக் கொண்டே தன் கையிலிருந்த கையடக்க துப்பாக்கியின் மூலம் தன் கழுத்தில் கத்தி வைத்திருந்தவனை நிமிடத்தில் சுட்டு வீழ்த்தியிருந்தான்..

மாமிச மலையை போன்று நின்றவன் அப்படியே சரிந்து விழ, சுற்றி நின்ற நால்வருக்கும் ‌பயத்தில் நாக்கு வறண்டது.. ப்ரஜாவின் கண்களோ அகல விரிய.. பேரதிர்ச்சியுடன் சூரியாவை பார்க்க.. அவனோ இறுகிய முகத்துடன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.‌.

"எங்க அண்ணாவையே போட்டுட்டியால??" என எகிறி கொண்டு வந்தவனின் நெற்றியில் துப்பாக்கியை வைத்தவன்.‌.

"என்னடா சின்னப்பையன் மாதிரி இருக்கான்… பட்டுனு போட்டு வர சொல்லி உன் கொய்யா சொன்னாரா??" அவர்கிட்ட
போய் நீ சொல்லு.. பத்து வயசுல உயிரை கையில பிடிச்சிக்கிட்டு அழுதுக்கிட்டே ஓடுன சூரியா இப்போ இல்லை.. அவனை அழிக்க வந்த அசுரன்னு போய் சொல்லு" என ஆத்திரத்தில் ‌பேசியவனின் ஒவ்வொரு வார்த்தையும் நிதானமாக வந்து விழுந்தது.‌

அனைவரும் பயத்தில் ஒருவர் முகத்தை பார்த்தபடி வெளியே செல்ல முயல… கடைசியாக செல்ல முயன்றவனை "ஒரு நிமிஷம்" என அழைத்தவன்.. ப்ரஜாவை பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களை குறிவைத்து சுட்டான்.. "இனி எம்‌பொண்டாட்டி மேல மட்டுமல்ல எந்தப் பொண்ணும் மேலையும் கண்ணு கண்டமேனிக்கு மேயாது" என கர்ஜிக்கும் குரலில் சொல்லியவன் ‌ப்ரஜாவை அணைத்துக் கொண்டு அறைக்குள் செல்ல.. இறந்து கிடந்த இருவரையும் தூக்கிக் கொண்டு ஹாஸ்பிட்டல் ஓடினர் மற்றவர்கள்..

இதைக் கேள்விப்பட்ட பெருமாளோ கோபத்தின் உச்சிக்கே சென்றார்..‌ எதிரியை ‌ஆடவிட்டு வேட்டையாடுவதில் சத்திரியனாய் இருந்தார்.. அவனின் பலம் என்ன?? பலவீனம் என்ன?? என்பதை அறிந்து கொள்ளவே ஆட்களை அனுப்பினார்.. அவனின் ஒட்டுமொத்த பலவீனமும் ப்ரஜா தான் என்பதை ஈசியாக அறிந்து கொண்டார்.. இனி நிதானமாக அடித்தால் ‌மட்டுமே சூரியாவை வீழ்த்த முடியும் என்பதை கண்டுகொண்டவர்.‌ அரசியல் சாணக்கியனாய் இறங்கினார் யுத்தகளத்தில்..

பல வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த மண்ணில் காலை வைத்தார் மஹேந்திர குமார்.. இந்தியன் ஆர்மியில் சீப் கமாண்டோ ஆபீசராக இருக்கிறார்.. காலடி எடுத்து வைத்தவருக்கு வலியுடன் அவர்‌ அனுபவித்த சுகமான நாட்களும் நினைவில் வந்தது.. மெல்ல புன்னகைத்தபடி வந்து சேர்ந்தார் தென்னந்தோப்பிற்கு.. இதுவரை சூரியா சிரித்தோ, சந்தோஷமான தருணத்தை அனுபவித்து வாழ்ந்தோ யாருமே பார்த்ததேயில்லை.. அப்படிப்பட்டவனே மகேந்திரனை பார்த்ததும் ஓடி வந்தவன் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்..

அவனின் இறுகிய அணைப்பு சொல்லியது.. அவன் உறவுக்கும், ஆறுதலுக்கும் ஏங்கும் குழந்தையென.. "சூரியா" என்றவரின் குரலும்‌ சற்று நெகிழ்ந்து தான்‌வந்தது..

"எப்படியிருக்க??"

"பைன் ஆங்கிள்"‌ என்றவனை ஆழ்ந்து பார்த்தவர். "அந்தப் பொண்ணு எங்கே சூரியா??" என்றவரை பார்த்து ‌போலியாக முறைத்தவன்.. கைகளை நீட்ட.. அவன் நீட்டிய திசையில் பார்த்தவருக்கு ஏனோ மனமெல்லாம் நிறைந்த உணர்வு..

திலகவதியின்‌ சமாதியை அழகாக கழுவிவிட்டு விளக்கேற்றிக் கொண்டிருந்தாள் ப்ரஜா.. தான் கொண்டு வந்திருந்த லக்கேஜை அப்படியே வைத்தவரின் கால்கள் தன் போல் பயணித்தது தன்னவளை நோக்கி..

தன்னவளுடன் அவர் வாழ்ந்த வாழ்க்கை மறந்துவிடுமா?? அவ்வளவு எளிதில்.திலகா சிரிப்பது பேசுவது அவளுடன் கொஞ்சி விளையாடியது என அனைத்துமே கண் முன்னே நிகழ்வதைப் போல் தோன்றிட.. மெல்ல விழிகளை மூடி கைகளை கூப்பி நின்றவரின் அருகில் வந்து நின்றாள் ப்ரஜா.. ப்ரஜாவின் அருகில் நின்றான் சூரியா.. விளக்கேற்றி முடித்தவள் மகேந்திரன் அருகில் நின்றதும்.. காற்றிற்கு மரங்கள் பலமாக வீசி.. மூவரின் மேலும் அங்கு இருந்த பன்னீர் பூ மரங்கள் மழையாக பொழிந்தது.

மூவரின் மேல்‌ விழுந்த பூக்களின் நறுமணத்தில் மெல்ல விழிகளை திறந்தவர்களுக்கு ஒருவரை ஒருவர் பார்க்கும் பொழுது இனம்புரியாத பாசம் ஒன்று உருவானது.. அது எதனால் என்று இருவருக்கும் சொல்லத் தெரியவில்லை.. ஆனால் பூர்வ ஜென்ம பந்தமாய் தோன்றியது..

ப்ரஜாவின் அருகாமையில் திலகாவின் நியாபகம் அதிகம் வருவதை ஏனோ தடுக்க முடியவில்லை.. பன்னீர் பூ மரங்களை நட்டு வைத்ததும் திலகா தான்.. இருபது வருடங்களுக்கு ‌முன்பு தன் தாய்மையை எண்ணி பூரித்துப் போனவள் செய்த முதல் காரியமே இந்த மரத்தை நட்டு வைத்தது தான்.. அன்று அவள் பண்ணிய அலப்பறைகள் இன்று தன் மனதில் சுகமான நினைவுகளாய் இருந்தது..

மண்டபத்தில் இருந்த படிக்கட்டில் அமர்ந்து தென்னந்தோப்பை சுற்றிப் பார்த்தவருக்கு " மஹி" என்ற குரல் செவிவழி தீண்டி உயிரை வேரறுத்தது. இந்தக் குரல் இந்தக்குரலுக்காக தான் ஏங்கிய நாட்கள்.. மறுபடியும் இதே குரல் தன்னை அழைக்காதா??" என ஏங்கி தவித்தவருக்கு ஊருக்குள் நுழையும் போது கூட ‌இவ்வளவு வலி தோன்றவில்லை. நேரம் செல்ல செல்ல ஏனோ திலகாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை..

இருபது வருடங்களுக்கு முன் தன் தாயான சந்தோஷத்தில் முகமெல்லாம் பூரிப்புடன் சுற்றிக் கொண்டிருந்தார் திலகா என்னும் திலகவதி.. மஹேந்திர குமாரின் ஆரூயிர் மனைவி..

மஹேந்திர குமார் தென்னந்தோப்பில் தண்ணீர் செல்லும் வழியை மண்வெட்டியால் கொத்தி சரியாக பாத்தி (வழி) அமைத்துக் கொண்டிருந்தார்..

"மஹிஈஈஈஈ" என்ற தோப்பையே அலற வைக்கும் சத்தத்தில் திரும்பி பார்த்தான்..

"ஏன்டி கத்துற??" என அவளுக்கும் மேல் சத்தமாக கத்திய மஹியை பார்த்து முறைத்தவள்..

"அதுக்கு நீ ஏன்டா ஊருக்கே கேட்குற‌ மாதிரி கத்துற??" என திட்டிக் கொண்டே மெதுவாக நடக்க ஆரம்பிக்க. தண்ணீர் செல்லும் பைப் அங்குமிங்கும் வளைந்து நெளிந்து கிடக்க.. கையிலிருந்த மண்வெட்டியை கீழே போட்டவன் வேகமாக ஓடினார் திலகாவை நோக்கி..

"ஒரு சொல்லு சொன்னா கேட்கமாட்டியா?? என்றவரை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் கண்களில் காதலுடன்..

"எத்தனை தடவை சொல்லிருக்கேன்?? இந்த மாதிரி வழுக்குற இடத்துக்கு வராதே.. ஏடாகூடமா ஏதாவது நடந்து பாப்பாவுக்கு ஏதாவது ஆச்சி உன்னை தொலைச்சி கட்டிருவேன் பார்த்துக்கோ??" என அவள் மேல் இருந்த அக்கறையிலும் பாசத்திலும் ‌திட்டிக் கொண்டிருந்தவரை பார்த்து முறைத்தவள்..

"அப்போ பாசம் எம் மேல ‌இல்லை.. உன்ற மக மேல தான்.. போய்யா யோவ்வ். உன்னை போய் காதலிச்சு இல்லாத திருகுத்தாளம் பண்ணி கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துனா.. இவருக்கு பாசமெல்லாம் பத்து மாசம் கழிச்சு பிறக்கப் போற குழந்தை மேல வருதா??.. போய்யா யோவ்வ். " என முறுக்கிக் கொண்டு சென்றவளின் பின்னால் சென்று அணைத்தவர்..

"எம் பொண்டாட்டின்னா.. பொண்டாட்டி தான்.. அழகுக்குட்டி நீ பாட்டுக்கு அங்கேயும் ‌இங்கேயும்‌ ஓடுற.. தாவுற.. என்னைக்காவது ‌வயித்துல குழந்தை இருக்குன்னு நினைக்குறீயா??‌ குட்டிப்போட்ட கங்காரு மாதிரி துள்ளிக்கிட்டு திரியுற.. அதான் நிதானமா நட. ஒரு ஓரமா உட்காருன்னு சொல்றேன்.. கேக்குறீயா?? நீ… எப்போ பார்த்தாலும் ஏட்டிக்குப் போட்டியா பேசிக்கிட்டு" என்றவனை பார்த்து உதட்டை சுழித்தவள்..

"நல்லா வியாக்கியானமா தான் பேசுற" என்றவரின் இதழ்களின் ஓரம் சிறு சிரிப்பு தோன்றிட.. அவளின் கள்ள சிரிப்பை கண்டு கொண்டவர்.. இறுக்கமாக அணைத்துக் கொண்டார்..

"சரி.. சரி.. நான் சொல்ல வந்ததையே மறந்துட்டேன்.. இந்த பன்னீர் பூ மரத்தை அங்கே நட்டு வைக்கணும்" என்றதும் மறுபேச்சி இல்லாமல் மண்வெட்டியை எடுத்தவர் சிறு குழி தோண்டி அதில் செடியை நட்டு வைத்தார்..‌ தண்ணீர் ஊற்றியபடி செடியை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த திலகா.. "நான் செத்தா கூட இந்த மரத்துக்கடியில என்னை ‌புதைச்சிரு மஹி" என்ற வார்த்தையில் சட்டென ஓங்கி அறைந்து விட்டார் மஹி என்ற மஹேந்திர குமார்..


 

T22

Well-known member
Wonderland writer
‌‌

அசுரன் 8

மஹி அறைந்த அறையில் கன்னம் சிவந்து வலிக்க ஆரம்பிக்க.‌. அத்தோடு விட்டாள் அவள்‌ திலகா இல்லையே.. விட்டாள் ஒரு அறை மஹிக்கு.‌ "எருமை.. பேச்சுக்கு ஒரு வார்த்தை சொன்னா உடனே அடிப்பியா?? வாய், தாடை எல்லாம் எப்படி வலிக்குது தெரியுமா?? என எரிந்து விழுந்தவள் அவனை முறைத்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்க.. மஹி தான் திலகா வின் பின்னால் ஓடினான் ‌..

"திலகா.. திலகா" என்றவனை முறைத்துக் கொண்டு சென்றவள்.. அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் அமர.. அவளின் முதுகில் சாய்ந்தவாறே அமர்ந்தான் மஹி..

"நீ அப்படி பேசுனதுனால ‌அடிச்சிட்டேன்டி.. பேசுடி.. என் பட்டுக்குட்டில்ல* என கொஞ்சியவனை ரசித்துக் கொண்டே ‌முதுகில் சாய்ந்து முன்னும் பின்னுமாய் ஆட. மஹியும் அவளுக்கு ‌ஏற்றாற் போல ஆடியவன்.‌ சட்டென விலக மஹியின் மடியில் போய் விழுந்தாள் திலகா..

அவளை ஆழ்ந்து பார்த்தவன் நெற்றியில் முத்தமிட்டவாறே, இதழ்களை நோக்கி ‌குனிந்தவனை மெல்லிய புன்னகையுடன் பார்த்தவள்.. "ஹேய்.‌ வெட்ட வெளியில இருக்கும் போது என்ன காரியம் பண்ற??" என கொஞ்சல் ‌மொழியில் சொன்னவளின் உதட்டில் முத்தமிட்டவன்..

"வெட்டா வெளியா இருந்தா பொண்டாட்டிக்கு முத்தம் கொடுக்க கூடாதா??" போடி என்றவனின் கைகளை பிடித்து அமர வைத்தவள்.. அவன் மடியில் சாய்ந்து படுத்தவள்.. "மஹி நான் ஒன்னு கேட்கட்டுமா??" என சற்று தயக்கத்துடன் கேட்டவளை புருவம் சுருக்கி பார்த்தவன்..

"அடிவாங்காத மாதிரி எதையாவது ‌கேளு" என வேண்டா வெறுப்பாக சொல்லியவனின் தாடையை அழுந்த பற்றியவள்..

"என்னை உனக்கு எவ்ளோ ‌புடிக்கும்‌ மஹி" என்றவளை முறைத்தவன்..

*இப்போ எதுக்கு இந்த கேள்வி??"

"ப்ச்.. கேள்வி கேட்டா பதில் சொல்லணும். திருப்பி என்னையே கேள்வி கேட்பீயா??"

‌"ம்ம்.. புடிக்கும் ரொம்ப புடிக்கும்" என்றவனை அணைத்தவாறே,‌

"அதான் எவ்ளோ புடிக்கும்னு சொல்லு.. ஏன் புடிக்கும்னு சொல்லு" என விடாது ‌கேட்டுக்கொண்டிருந்தவளை முறைத்துக் கொண்டு‌ எழ முயன்றவனின் எழுந்து கொள்ளாமல் உட்கார வைத்தவள்..

"நீ ‌பதில் சொல்லாம‌ இங்கேயிருந்து நழுவ முடியாது.. சொல்லு"‌‌ என்றவளின் பிடிவாதத்தையும்‌ ரசித்தவன்..

"திலகா.. பொண்ணுன்னா இப்படித்தான்‌ இருக்கணும். பேசணும்.. இவ்ளோ தான் சிரிக்கணும்னு.. பிறந்ததுல இருந்து சொல்லி சொல்லியே பொண்ணுங்க இப்படின்னு இவுங்களா ஒரு வரைமுறை வச்சிக்கிறாங்க.. ஆனா எந்த வரைமுறையிலையும் சிக்காம தனிக்காட்டு ராணியா நான் நினைக்கிற மாதிரி நடப்பேன்னு ‌சொல்ற வளந்து நிக்கிற பார்த்தீயா?? அந்த ஆட்டிட்யூட் ரொம்ப புடிக்கும்.. நம்ம ஊர்ல எத்தனை பொண்ணுங்க காலேஜ் வாசல்ல ‌பாத்துருக்காங்க.. ரொம்ப ரொம்ப ரேர்.. ஆனா நீ அசால்ட்டா உள்ளே வந்தே.. பசங்க படிக்கிற காலேஜ்னா என்ன கொம்பா அப்படி திமிரா வாசல்ல நின்ற பார்த்தீயா.. அப்போ விழுந்தேன்டி நான்.. இன்னும் எழலை.. ஐ லவ்யூ ‌டி.. என்னைக்கும் நீ நீயா இரு" என்றவனின்‌ விளக்கத்தில் கண்கள் கலங்க பார்த்தவள்.. "ஐ லவ்யூ டா.. உன்னை மாதிரி பையன் பெத்துக்கணும்" என்றவளை முறைத்தவன்..

"பொண்ணு தான்.. எனக்கு பொண்ணு தான் வேணும்"

"பையன் தான் வேணும்.. என்கூட குளோசா இருக்கனும்னா பையன் தான்"

‌. "பொண்ணு தான். அவ என்னை அப்பான்னு கூப்பிடுறதை நான் எப்போவும் ரசிச்சிக்கிட்டே இருக்கணும்"

"அப்பா" என்ற மெல்லிய குரலில் அதுவரை நினைவுலகத்தில் இருந்தவர் சட்டென திரும்ப அங்கு ப்ரஜா தான் நின்று கொண்டிருந்தாள்…

"நீ என்னை எப்படி கூப்பிட்ட??" என நிதானமாக கேட்டவரை கண்டு அச்சமோ, நடுக்கமோ, தயக்கமோ எதுவுமே தோன்றவில்லை..‌

"அப்பான்னு கூப்பிட்டேன்"..

ஏன் அப்படி கூப்பிட்ட??" என்றவருக்கு ஏனோ "அப்பா"‌ என கூப்பிடாதே என்றிட வாய் வரவில்லை..

"சூரியா உங்களை ஆங்கிள்னு கூப்பிடுறான்.. ரெண்டு பேரும் ஒரே முறை வச்சி கூப்பிட முடியாதுல" என்றவளின் விளக்கத்தில் ‌சட்டென முகம் வாடி.. "ஓஹ்ஹ்" என்றவர் அங்கு நின்றவளை தான் பார்த்துக் கொண்டிருந்தார்..

"சாப்பிடுறீங்களா அப்பா" என்றவளின் வார்த்தையில் மௌனமாக அமர்ந்திருந்தவனின் மௌனத்தையை சம்மதமாக எடுத்தவள்.. வீட்டிற்குள் செல்ல.. ப்ரஜாவின் பின்னாடியே சென்றான் சூரியா..

தோசை ஊற்றிக் கொண்டிருந்தவளின் பின்னால் சென்று நின்றவன்.. "என்ன பண்ற??" என்றவனின் கேள்வியில் திடுக்கிட்டு திரும்பியவள்.

. தன் நெஞ்சில் கை வைத்தவாறே, "அறிவிருக்கா இப்படியா பயமுறுத்துறது??" என சிறு பதட்டத்துடன் திரும்பியவள் தோசை ஊற்றிக் கொண்டிருக்க..

"நீ உன் பெட்டியெல்லாம் எடுத்துட்டு என் ரூமுக்கு வந்திடு" என்றவனை முறைத்தவள்..

"நான் ‌ஏன் உங்க ரூமுக்கு வரணும்??"என சுள்ளென எரிந்து விழுந்தாள்..

"வீட்டுல ‌இருக்கிறது ரெண்டு ரூம்.. நீ ஒரு ரூம்லையும் நான் ஒரு ரூம்லையும் தங்கிட்டா.. அவர் எங்கே ரோட்டுல போய் தூங்குவாறா?? இடியட் மாதிரி பேசாம.. என் ரூமுக்கு ஷிப்ட் ஆகிடு" என்றவனின் வார்த்தையில் அனல் கக்க பார்த்தவள்..

"நான் எந்த ரூமும் ஷிப்ட் ஆக மாட்டேன்.. தேவைப்பட்டா நீங்க என் ரூமுக்கு வாங்க. ஐ டோண்ட் மைண்ட் இட்" என்றவள் தோசையை எடுத்த கொண்டு வெளியே செல்ல. செல்பவளின் முதுகை பார்த்தவனின் இதழ்களில் சிறு புன்னகை தோன்றிட.. வேகமாக அறைக்குச் செல்ல ப்ரஜா சொல்வதற்கு முன்பே அவன் பொருட்கள் அனைத்தையும் அவன் எடுத்துக் கொண்டு வந்து ப்ரஜாவின் ரூமில் ஷிப்ட் ஆகிவிட்டான்..

வீட்டினுள் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த பெருமாளின் மனம் எரிமலையை போல் கொதித்தாலும் எந்தவித உணர்வையும் முகத்தில் காட்டாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார்..

உட்கார்ந்திருந்தவரின் அருகில் செல்வதற்கு அவரின் ஆட்கள் பயந்து கொண்டு அங்குமிங்கும் குசுகுசுவென பேசியபடி நின்றனர்.‌

அவரின் நீண்ட அமைதியை கலைக்கவென உள்ளே நுழைந்தார் துளசி.. பல வருடங்களுக்குப் பிறகு தன் மனைவியை பார்க்கிறார்..

"துளசி" என்றவரை துச்சமாக ஒரு பார்வை பார்த்தவள்.. ஏளன புன்னகையுடன் அவரை கடந்து செல்ல..

"என்னடி திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழைஞ்ச மாதிரி நுழையும்??" என கடுப்பில் கேட்பவரை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவள்..

"டேய்ய்.. இந்த பொட்டியை எடுத்துட்டுப் போய் உங்க ஐயா ரூம்ல வை" என ஆர்டர் போட்டவர்.. அங்கிருந்த சேரில் நிதானமாக அமர்ந்து காலின் மேல் கால் தூக்கிப் போட.. பார்த்துக் கொண்டிருந்த பெருமாளுக்கு பற்றிக் கொண்டு வந்தது..

"ஹான் என்ன கேட்டீங்க??" நாய் மாதிரி.. ஆமா நாய் தான்.. விசுவாசமான நாய் தான்"

"என்னடி இத்தனை வருஷமா இந்த ஊரு வேண்டாம்.. நான் வேண்டாம்னு ஓடிப்போயிட்டு.. இப்போ ரொம்ப தெனாவெட்டா வந்து நிக்கிற??" என்றவரை அழுத்தமாக பார்த்தவள்..

"இவ்ளோ நாள் ஊருக்குள்ள நான் வராததுக்கு காரணம் நீங்க தான்.. உங்க பாவப்பட்ட நிழல் கூட என் மேல் படக்கூடாதுன்னு தான் ஊரை விட்டு போனேன்.. ஆனா இப்போ நான் ஊருக்குள்ள வந்ததுக்கும் நீங்க தான் காரணம்"

"நான் என்னடி பண்ணேன்??" என ஆத்திரத்தில் கத்தியவரை கண்டு‌ ஏளனமாக சிரித்தவள்..

"பின்னே.. நீங்க அழியப்போறதை கட்டின பொண்டாட்டி நான் பார்க்க வேண்டாமா??.. என்ன நீங்க??" என சிணுங்கலுடன் கேட்டவரை கோபத்தில் சிவந்து அவரை அடிக்க ஓங்கிய கை அந்தரத்திலே நின்றது..

தன்னை பிடித்து நிறுத்திய வலிய கரத்தினை பார்த்தவருக்கு யார் என தெரியவில்லை என்றாலும்.. அவனின் உரமேறிய கைகளுக்குள் அவரின் கை சிக்கித் தவித்தது.. "டேய்ய்.‌ டேய் விடுறா என்னை.. தடிமாடுங்களா பார்த்துட்டு சும்மா நிக்குறீங்களே??" என்றவரின் குரலில் அடியாட்கள் எல்லாம் அவனை சூழ, தன்னருகில் வந்தவனை விட்ட ஒரே பஞ்ச்ல் ‌அருகிலிருந்த தூணில் மோதி நின்றான்..

அவன் அடித்த வேகத்தில் அனைவரும் மிரண்டு ஓரெட்டு பின்னால் வைக்க.. "டேய்ய். புடிங்கடா அவனை" என கத்திய பெருமாளைப் பார்ப்பதா?? இல்லை மரண அடி அடிப்பவனை பார்ப்பதா என புரியாமல் குழம்பித் தவித்தனர்..

அவர்களின் பயத்தை பார்த்த துளசி.. "இவன் யாருன்னு தெரியாதுல்ல.. ஹர்ஸா.. ஹர்ஸவர்தன்… நீ ‌அழிச்ச குடும்பத்துல இவனும் ஒருத்தன்.. நீ இவன் வாழ்க்கையை அழிச்ச.. நான் இவனை படிக்க வைச்சி ஒரு டாக்டராக்கிருக்கேன்" என பெருமிதமாக கர்வத்துடன் சொல்லியவர்..

"இதான்.. எனக்கும் உனக்கும் உள்ள வித்தியாசம்.. உனக்கு ‌அழிக்க மட்டுந்தான் தெரியும்.. எனக்கு ஆக்கவும் ‌தெரியும்" என கர்வத்துடன் சொல்லியவர் அங்கிருந்த அகன்று விட்டார்…

"ஹர்ஸா வா கோயிலுக்கு போயிட்டு.. மஹேந்திரன் அண்ணன் வந்திருக்காராம்.. அவரைப் பார்த்துட்டு வருவோம்" என்றவரின் வார்த்தையில் விலுக்கென நிமிர்ந்த பெருமாள்..

. "அவனை ‌ஏன்டி பார்க்கப் போற??"

"பின்னே.. அவர்கிட்ட சொல்ல வேண்டிய உண்மை எவ்ளோ இருக்கு??" என்றவரின் வார்த்தையில் விதிர்விதிர்த்துப் போய் ஹை பிரஸரில் மயக்கம் போட்டு கீழே விழுந்தார் பெருமாள்...

மாலை வேளையில் அங்கிருந்த பெரிய தொட்டியில் நீந்திக் கொண்டிருந்தான் சூரியா. மாலையில் குளிப்பது அவனது வழக்கமாகிட.. குளித்து முடித்துவிட்டு தொப்பலாக உள்ளே நுழைந்தவன்.. பட்டென கதவை திறக்க.. சேலை உடுத்திக் கொண்டிருந்தவளின் கைகள் தடுமாற முந்தானையை நழுவ விட்டாள்.. அவளை பார்த்துக் கொண்டே அவளை நெருங்கி வர.‌ அவனின் ஆளைகொத்தும் பார்வையில் தடுமாறி திரும்பியவளை பார்த்து விஷமமாக புன்னகைத்தவனின் கரங்களோ இடையில் நர்த்தனமாடியபடி.. அவளின் வயிற்றை அழுத்தமாக பற்றியது.. தன்னை நோக்கி அவளை திருப்பி "வாணிம்மா" என தாபத்துடன் அழைத்தவனின் இதழ்களோ அவளின் இதழ் என்னும் மகரந்தத்தேனில் சரணாகதி அடைய.. ஊறிய தேனில் இருந்த கொவ்வை பழமாய் அவளின் இதழ்களை பருகினான்.. அவன் இதழ் செய்த மாயத்தில் இருவரின் இதழ்களுமே சிவந்து போனது.. அவளை இறுக்கமாக ‌அணைத்தபடி நின்றிருந்தவனுக்கு "ப்ரஜா" என கதவு தட்டும் சத்தத்தில் சட்டென இருவரும் சுயநினைவுக்கு வர.. "இதோ வர்றேன் ப்பா" என குரல் கொடுத்தபடி சேலையை ஐந்தே நிமிடத்தில் கட்டி முடித்தவள்.. வெளியேற.. அப்பொழுதும் ஈர உடையுடன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்..

"நீங்களும் கோயிலுக்கு வாங்க"‌ என்றவளின் அமைதியை கெடுக்க விரும்பாமல் அவனும் கிளம்ப.. மூவரும் ஒன்று போல் செல்வதே‌ மூவருக்குமே மனதில் புதுவித அமைதியை கொடுத்தது..

மூவரும் பேசியபடி நடந்தே சென்றனர். அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு.. மகேந்திரனை தெரிந்தவர்கள் அவரிடம் பேசிக் கொண்டே வர.. அனைத்தையும் சிறுபிள்ளை போல் ரசித்துக் கொண்டு வந்தாள் ப்ரஜா..

கோயிலுக்குள் நுழையும் போது கீழே சிந்திக் கிடந்த எண்ணெய்யை பார்க்காமல் கால் வைத்து வழுக்கி விழ முயன்றவரை, இரு வலிமையான கரங்கள் அணைத்துக் கொள்ள.. எதிரில் நின்றிருந்த சூரியா இருவரையும் சுட்டெரிக்கும் பார்வையில் எரித்துக் கொண்டு நின்றான்.

சட்டென ஹர்ஸாவின் கை வளைவுக்குள் இருந்த ‌ப்ரஜாவை தன் புறமாக இழுத்தவன்.. "வா உள்ளே போகலாம்"

"ரொம்ப தாங்க்ஸ் சார்"

*சார் எல்லாம் வேண்டாம். ஒன்லி ஹர்ஸா" என சிறு புன்னகையுடன் கை நீட்ட.. இவளும் பார்மலிட்டிக்காக கையை நீட்டினாள். "ஐயம் ப்ரஜா சூரியவேந்தன்" என்றவளின் வார்த்தையில் முகமெல்லாம் புன்னகையுடன் சூரியா அவள் புறம் திரும்ப‌‌ ஹர்ஸாவும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்,..

அவனின் பார்வையை கண்டு கொண்ட சூரியாவை ஹர்ஸாவை முறைத்துக் கொண்ட ப்ரஜாவை அணைத்துக் கொள்ள.. இருவரின் பார்வையையும் கண்டவளுக்கு சிரிப்புதான் வந்தது..

ஹர்ஸாவின் பார்வையில் கள்ளமில்லை என்பதும் அவளுக்கு புரிந்தது.. சூரியாவின் பார்வையில் உரிமை அதிகம் இருந்ததும் அவளுக்குப் புரிந்தது. அர்ச்சனை கூடை வாங்கிக் கொண்டு மகேந்திரனும் வர.. மூவரும் ஒன்று போல் நின்று சாமி கும்பிட்டனர்..

மூவரும் கோயிலுக்குள் சாமி கும்பிட்டு அங்கிருந்த மரத்தினடியில் அமர.. பழைய நியாபகத்தில் முகம் வாட அமர்ந்திருந்தார் மகேந்திரன்.. "அண்ணா" என்ற குரலில் திரும்பிப் பார்த்தவருக்கு துளசியைப் பார்த்து ‌புன்னகை தோன்றிட.. "எப்படிம்மா இருக்க??"

"நல்லா இருக்கேன் அண்ணா.. நான் உங்ககிட்ட நிறைய உண்மையை சொல்லனும்னு தவிச்சிட்டு இருக்கேன்" என்றவரின் வார்த்தையில் புருவம் சுருக்கி பார்த்தார்..

"என்னம்மா சொல்ற??"

"ஆமாண்ணா" என்றவரின் செல்லுக்கு ஒரு மெசேஜ் வர அதை எடுத்துப் பார்த்தவரின் முகம் ஒரு நிமிடத்தில் மாறிவிட. அங்கிருந்து உடனே செல்ல வேண்டும் என்ற தவிப்பு தான் அதிகமாக இருந்தது..

"ஆமாண்ணா.. இங்கே அதைப் பத்தி பேச முடியாது.. ஆனா ஒரே ஒரு உண்மையை சொல்றேன்.. உங்களுக்கும் திலகாவுக்கும் பொறந்த பொண்ணு இன்னும் உயிரோடு இருக்கா" என்றவர் அங்கிருந்து வேகமாக சென்று விட.. அவர் சொல்லிய வார்த்தையின் தாக்கத்தில் செல்லும் அவரையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்..

அவர் சொல்லிய வார்த்தையில் இரவு முழுவதும் தூங்காமல் விழித்து இருந்தவர்.. காலையில், சூரியாவுடன் தென்னந்தோப்பில் எக்சர்சைஸ் பண்ணிக் கொண்டிருந்தனர்.. ப்ரஜாவோ அமைதியாக கட்டிலில் அமர்ந்து அவர்களை வேடிக்கை பார்த்தபடி மெலடி சாங்கை ஹம்ம் பண்ணியபடி அமர்ந்திருந்தவளுக்கு சாலையின் ‌ஓரத்தில் ஹர்ஸா ஜாகிங் செல்வது தெரிந்தது..

ஏனோ அவனை பார்த்தாலே சூரியாவிற்கு பிடிக்கவில்லை என்பதும் ப்ரஜாவிற்கு தெரியும்.‌‌ சூரியாவை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே "ஹர்ஸா" என சத்தமாக கத்திக் கூப்பிட.. ஹர்ஸா திரும்பினானோ?? இல்லையோ சூரியா பட்டென எழுந்து நின்றான்..

மறுபடியும் 'ஹர்ஸா' என கத்துவதற்குள் ‌அவனே தோட்டத்தை பார்ப்பதற்காக சாலையில் இருந்து இறங்கி தோப்பிற்குள் வர.. அதே சமயம் சூரியாவும் ப்ரஜாவை நெருங்கி வந்தான்..

ப்ரஜா வேண்டுமென்றே சூரியாவை தவிர்த்து.. ஹர்ஸாவிடம் பேசுவதற்காக எழுந்து சென்றாள்.. "ஹாய் டாக்டர்"

"ஹாய் ப்ரஜூ" என்ற வார்த்தையில் வெடுக்கென திரும்பி ப்ரஜாவை முறைக்க.. அவளோ அவன் முறைப்பை எல்லாம் புறம் தள்ளியவள்.. ஹர்ஸாவிடம் பேச ஆரம்பிக்க.. கிட்டத்தட்ட ‌ஒரு மணி நேரமாக பேசினார்கள்..

ஹர்ஸா சென்றதும் ப்ரஜாவை இழுத்து தென்னந்தோப்பில் சாய்த்து நிற்க வைத்தவன்.. "என்ன என்னை வெறுப்பேத்தி பாக்குறீயா??" என்றவனின் மார்பில் கை வைத்து தள்ளியவள்..

"ஆமா அதுக்கென்ன இப்போ?? நாங்க சாதாரணமா தான் பேசுனோம்.. நீ ஏன் வெறுப்பாகுற?? நீ உன் வேலையை மட்டும் பார்க்க வேண்டியது தானே" என சுள்ளென எரிந்து விழுந்தவளை ‌தோள்பட்டையை அழுத்தமாக பற்றியவன் இறுக்கமாக அணைத்து.. தன் கைகளாலேயே அவளுக்கு ‌அணை போட‌..

"ப்ச்ச.. விடு.. விடு என்னை என்றவளின் இதழ்கள் அவனின் தாடியோடு உரசிச் சென்றது.. மெல்லிய தீண்டலில் அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன்.. அவள் ‌இதழ்களை நோக்கி குனிந்தான்..

அவன் தன்னை முத்தமிடுவான் என நினைத்தவளுக்கு நீண்ட நேரம் தன்னை தீண்டாமல் நின்றிருந்தவனின் மூச்சுக்காற்றில் கண்களை திறந்து மெல்லப் பார்க்க.. "எப்போ என்னோட தொடுகை உனக்கு அறுவெறுப்பை கொடுத்ததோ? அப்பவே நான் உன்னை தொடுறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.. இனி நீயா எப்போ உன்னை விரும்பி கொடுக்குறீயோ?? அதுவரைக்கும் நான் உன்னை எடுத்துக்க மாட்டேன்" என்றவனின் முதுகை பார்த்தவளின் கண்கள் கலங்கி முகமெல்லாம் வாடி விட்டது...


 
Top