ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அசுரவேந்தனின் அஸ்தமனமும் நீ!! உதயமும் நீ!! கதை திரி

T22

Well-known member
Wonderland writer


அசுரன் 9

துளசிக்கு வந்த போன் காலில் அடித்துப் பிடித்து ஓடியவர்.. வேகமாக ‌இறங்கியது பெருமாளை சேர்த்திருக்கும் ஹாஸ்பிட்டலுக்கு தான். அவர் மயங்கி விழுந்ததை ஏதோ பெரிய விஷயமா எண்ணி உள்ளூர் மீடியாவிலிருந்து டிவி வரை போக்கஸ் ‌எடுத்துப் போட்டுக் கொண்டிருக்க.. இவ்வளவு மக்கள் கூட்டத்திலும்‌ பெருமாளின் மனைவி என்ற அடையாளத்துடன் உள்ளே நுழைந்தார்..

உள்ளே நுழைந்தவருக்கு எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்த ‌பெருமாளை பார்த்ததும் மனம் ஒருபுறம் நிம்மதி அடைந்தாலும்.. அவர் செய்த காரியம் இவரை ஆத்திரத்தின் மிகுதியில் நிற்க வைத்தது..

வேகமாக அவர் அருகில் சென்றவர்.. கையில் ஏறிக் கொண்டிருந்த ஷெலானை வேகமாக பிய்த்து எறிந்தார்.. அவர் எறிந்த வேகத்தில் ‌ரத்தம்‌ பீச்சிட.. தடுக்க நினைத்த கட்சி ஆட்களை முறைத்தவர்.‌ "வெளியே போங்கடா" என கர்ஜித்தவரின் குரலில் அனைவரும் வெளியே சென்று விட.. பெருமாளை முறைப்பதை மட்டும் நிறுத்தவேயில்லை‌ துளசி..

"உனக்கென்ன பைத்தியமாடி??" என சீறியவரை கண்டு முறைத்தவர்.‌

"ஆமாய்யா.. பைத்தியம் தான்.. ச்சீ நீயெல்லாம் ஒரு மனுஷனா.. பெத்த பொண்ணை கொலை செய்ய ஆள் அனுப்புற நீயெல்லாம் ‌மனுஷன் இல்லை மிருகத்துக்கு சமானம்.. உன்னோட நிழல் கூட அவ மேல படக்கூடாதுன்னு தான்.. அவளை நான் ஹாஸ்டல்ல படிக்க வைக்கிறேன்.. ஆனா நீ அங்கேயும்‌ அவளை தொல்லை பண்ணுற" என்றவரின் வார்த்தையெல்லாம் துச்சமாக எண்ணியவர்.‌

"என்னடி வார்த்தையெல்லாம் ரொம்ப நீளுது.. உன் அண்ணனை பார்த்துட்டு வந்த தைரியமா???" என எரிந்து விழுந்தவரின் வார்த்தையிலேயே சிறு பயம் தெரிந்தது..

"ஆமாய்யா.. என் அண்ணனை பார்த்துட்டு வந்த தைரியம்‌‌.. சும்மா இல்லை.. நான் அவரை தேடி போகலைன்னாலும்.‌ அவரே என்னைத் தேடி வர்ற மாதிரி ஒரு க்ளூ கொடுத்துட்டு தான் வந்திருக்கேன்.‌ கண்டிப்பா எனக்கு ஏதாவது ஆச்சின்னு வச்சிக்கோயேன்.. மொத டெட்பாடி நீதான்" என ஆத்திரத்தில் கத்தியவர் வேகமாக வெளியேற..

துளசி ‌சொல்லிவிட்டு போன வார்த்தையில் இரவெல்லாம் தூக்கமில்லாமல் கிடந்தார் பெருமாள்.. அவரால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. பல ‌பாவங்கள் சென்று, பணம், பதவி ‌அடைந்தவரால்‌ சிறு தூக்கத்தை ‌வாங்க முடியவில்லை.. ஓவர் பீபி என்பதால் இரண்டு நாட்கள் ரெஸ்ட் எடுக்க வேண்டும்.. எந்த வித சிந்தனையும் வேண்டாம்"‌ என டாக்டர் சொல்லிவிட்டு செல்ல.‌ இவருக்கு ‌கண்ணை மூடினால் சூரியா கழுத்தை நெறிப்பது போல் தோன்ற.. இன்னும் அவஸ்தையாகி போனவர்.. வெறித்து ‌அமர்ந்திருந்தார்.. இதுவரை தடுமாறாத தன் மனம் ஏன் இப்பொழுதெல்லாம் தடுமாறுகிறது என நினைத்தவருக்கு கடந்த காலம் அனைத்தும் கண் ‌முன்னால் தோன்றியது..

துளசி சொல்லிய வார்த்தையில் இருந்து மீளமுடியாமல் தவித்தார் மஹி.. அவரால் இந்த நொடி கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.. தன் கையாலேயே இறந்த குழந்தையை தூக்கி ஈமச்சடங்கு செய்து ‌மண்ணில் புதைத்த ஒரு‌ ஜீவன் உயிரோடு இருப்பதாய் சொல்வதை ‌நம்ப முடியாமல், அதே சமயம் துளசியின் வார்த்தையை புறந்தள்ள முடியாமல் தவித்தார்..

இன்றும் சாப்பிடாமல் ‌மணி மண்டபத்தில் அமர்ந்திருந்தவரை ஆழமாக பார்த்தபடி அருகில் அமர்ந்தாள் ப்ரஜா..

தன்னருகில் அமர்ந்த ப்ரஜாவை திரும்பி கூட பார்க்க முடியாமல் தீவிர சிந்தனையில் அமர்ந்திருந்தவரின் புருவம் சுருங்கியது.. தன் பெண் உயிருடன் இருக்கிறாள் என்றால் தான் புதைத்த குழந்தை யாருடையது?? அந்த கேள்விக்கான விடை துளசி மட்டுமே அறிவார் என்பதை அறிந்தவருக்கு இந்த நொடி துளசியை பார்க்க வேண்டுமென தோன்றியது..

ஆனால் அது‌ முடியாத ‌காரியம் துளசியை பார்க்க வேண்டுமென்றால் பெருமாளின் வீட்டிற்குள் நுழைய வேண்டும்.. பெருமாளை பார்க்கும் பொழுதெல்லாம் அவரின் ஜாதிவெறியும், சூரியாவின் சிறு வயது வாழ்க்கையும் தான் நினைவில் வந்து மோதிக் கொண்டன..

சிறு வயது சூரியாவை பார்த்ததை நினைத்துக்கூட ‌பார்க்க முடியவில்லை. அப்படியொரு நிலைமையில் ‌உயிரை மட்டும் கையில் வைத்து கொண்டு அவன் வந்து சேர்ந்தது தான் மஹேந்திரனிடம்.‌.

தன் மனம் போன போக்கில் யோசித்துக் கொண்டிருந்தவருக்கு மடியில் ‌யாரோ படுப்பதை போல் உணர்ந்ததும் தான் தன்னுணர்வுக்கே வந்தார்.‌.

தலையை மட்டும் தாழ்த்தி கீழே பார்க்க.. ப்ரஜா தான் மடியில் படுத்திருந்தாள்.. அவளின் தலையை மெல்ல ‌கோதிவிட்டவரின் மனதில் இனம் புரியா நிம்மதி தோன்றியது.. வாழ்க்கையில் இனியொரு பிறவியெடுத்தால் இவளே என் மகளாய் வர வேண்டுமென எண்ணும் அளவிற்கு ப்ரஜாவின் மேல் அளவு கடந்த அன்பு தோன்றியது..

"என்னாச்சிப்பா ஏதாவது பிரச்சனையா??" என்றவளை ஆழ்ந்து பார்த்தவர்.. "அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா.. ரொம்ப நாள் கழிச்சு ஊருக்கு வந்திருக்கேன்ல ‌அதுனால‌ திலகா நியாபகம் வேற ஒன்னுமில்லை" என அவள் நம்பும்படியாக ஒரு பதிலை சொன்னவர் நிமிர்ந்து பார்க்க சூரியாதான் இருவரையும் முறைத்துக் கொண்டு நின்றான்..

"என்னாச்சி டா??" என்றவரை மேலும் முறைத்தவன்..

"ஹேய்ய். எந்திரிடி அவரு எனக்குத்தான் ஆங்கிள்.. அவர்கிட்ட இவ்ளோ உரிமையெல்லாம் யாரும் எடுத்துக்கிட்டா எனக்குப் புடிக்காது" என முகம் சுழித்தபடி சொல்லியவனை ஆழ்ந்து பார்த்தவள்.‌‌

"அதெல்லாம் எந்திரிக்க முடியாதுன்னு சொல்லுங்கப்பா.. அப்பாக்கு அப்புறம் தான் ஆங்கிள்னு சொல்லுங்க. என்னால உங்களை யார்க்கிட்டையும் விட்டுக்கொடுக்க முடியாது‌‌.. அவனை வேணும்னா வேற ஆங்கிள் வாங்கிக்க சொல்லுங்க" என‌ பதிலுக்கு பதில் பேசியவனை கண்டு மஹேந்திரன் சிரிக்க.. அவரையும் அவளையும் பார்த்து ‌முறைத்தவாறே படுத்திருந்நதவளின் கைகளைப் பிடித்து இழுத்தவன்.. அவளை இடித்துக் கொண்டு‌ படுக்க.. "ஹேய்ய். உன்னையே" என அவள் நெஞ்சில் ‌அடிக்க போனவளின் கரங்கள் அப்படியே அந்தரத்தில் நின்றது.. இருவரும் போட்ட சண்டையில் சட்டை பட்டன் கழன்றிருந்ததால்‌ அவன் நெஞ்சில் வரைந்திருந்த டாட்டூவைப் பார்த்து அசையாமல் நின்றாள்..

. "ப்ச்.. சூரியா.. அவதான் சின்னப் பொண்ணு நீயாவது விட்டுக் கொடுக்கலாம்ல"

"யாரு இவ சின்னப் பொண்ணா??.. பத்து மாசம் முன்னாடி கல்யாணமாகியிருந்தா இந்நேரம் ஒரு குழந்தையே இவ கையில இருந்திருக்கும்"‌ என சிரிப்புடன் சொல்லியவனை மெல்லிய புன்னகையுடன் பார்த்தார்..

அவன் சொல்லிய வார்த்தையில் வெடுக்கென திரும்பியவள் விறுவிறுவென வீட்டை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்..

"பாரு கோவிச்சிட்டு போறா" என்றவரின் பேச்சை ‌காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் காலின் மேல் கால் போட்டு சாய்ந்து ஆடியவன் சிறிது நேரத்தில் தன்னையும் மீறி உறங்கியிருந்தான்…

அவன் தலையை கோதிவிட்டவாறே, "இன்னும் நீ அடம் பிடிக்கிற சின்னக்குழந்தையா தான் என் கண்ணுக்குத் தெரியுற??" என்றவரின் கைகள் தலையை கோதிவிட.. நாளைக்கு எப்படியாவது துளசியை பார்க்க வேண்டுமென தீர்மானமாக முடிவெடுத்திருந்தார்..

வீட்டிற்குள் நுழைந்தவளுக்கு மனதை பயம் முழுவதுமாக ஆட்கொள்ள.. இதயத் துடிப்போ வேகமாக அடித்துக் கொண்டது.. தான் நினைத்தது போல் இருக்கக்கூடாது ‌என‌வேண்டிக் கொண்டவள். தன் போனை எடுத்து முதலில் அழைத்தது ஹர்ஸாவிற்கு தான்..

"ஹலோ" என திடமான குரலில் ஒரு நிமிடம் கண்ணீர் விழிகளை தாண்டி வழிந்தது..

……..

"ப்ரஜூ.. லைன்ல இருக்கீயா??" என்றவனுக்கு அழுகையுடன் "ம்ம்" என்ற பதிலே ‌வந்தது..

"என்னாச்சி ப்ரஜு.. வாய்ஸ் வேற மாதிரி கேட்குது அழுறீயா??" என்றவனிடத்தில் தன் மனபாரம் தீரும் மட்டும் அழ வேண்டுமென தோன்றியது.. அவள் தேடிய ஆறுதல் அவனிடத்தில்.. அவனவனோ மனதளவில் வெகு தொலைவில்..

"நாளைக்கு நான் உன்னை பார்க்கணும் ஹர்ஸா.. ஹாஸ்பிட்டல் ‌வர்றேன்" என அழுகுரலில் சொல்லியவள் போனை வைத்துவிட்டு.. வெறித்த பார்வையில் ‌சுவற்றை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்..

"நீ இன்னும் தூங்கலையா??" என‌ புன்னகை முகத்துடன் உள்ளே வந்தவனை வெறித்துப் பார்த்தவள் எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டாள்..

அவளை உற்றுப் பார்த்தவனுக்கு அவளின் சிவந்த கண்கள் அழுதிருக்கிறாள் என்பதை அப்பட்டமாக காட்டிக் கொடுத்தது..

"திடீரென்று அழ வேண்டிய அவசியம் என்ன?? சண்முகத்தை பற்றி நினைத்து வருந்துகிறாளோ??" என நினைத்தவன்..

"ப்ரஜா" என்றவனை ஏறிட்டுப் பார்த்தவள்.. "நான் தூங்கணும்" என்றவள் தலை ‌முழுவதும்‌ பெட்ஷீட்டை இழுத்து மூடியபடி தூங்குவதை போல் நடிக்க ஆரம்பிக்க.. அவளின் செய்கைகைள் அனைத்தையும் சிறு புருவ முடிச்சுடன் பார்த்தவனுக்கு "இன்னும் இரண்டே நாள் அதற்குள் எல்லாம் முடிந்து விடும்.. ப்ரஜாவிடம் எல்லா உண்மையும் சொல்லிவிட்டு தன் வாழ்க்கையின் அடுத்த கட்டம் நோக்கி செல்ல வேண்டுமென எண்ணினான்"

விதியின் விளையாட்டை அறியாமல் அவன் ஒரு திட்டம் போட.. விதியோ வேறொரு திட்டம் போட்டது..

காலையில் பத்து ‌மணிக்கே வீட்டை விட்டு வெளியே சென்றவள்.. திருநெல்வேலியில் உள்ள "துளசி ஹாஸ்பிட்டல்" என பெரியதாக போர்ட் வைத்திருந்ததை ‌பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தவளை ‌எதிர்கொண்டான் ஹர்ஸா..

அவனை ‌பார்த்ததும் இதுவரை‌ தன் மனதில் தோன்றிய பதட்டம் நீங்கி மென்மையாக புன்னகைத்தவள்.. "ஹர்ஸா" என குரல் தழுதழுக்க அழைத்தவளின் எதிரே தண்ணீர் பாட்டில் ஒன்றை நீட்டியவன்.. "நீ முதல்ல தண்ணீ குடி.. அப்புறம் பேசலாம்" என்றதும் கைகள் நடுங்க வாங்கியவள் வாயினுள் பாதி, தன் மேல் பாதி என கொட்டிக் கொண்டே தண்ணீர் குடித்தாள்..

ஐந்து ‌நிமிடங்கள் கடந்தும் இருவரும் எதுவும்‌ பேசிக் கொள்ளவில்லை.. ப்ரஜாவால் பேசவே ‌முடியவில்லை என்பது தான் உண்மை.. அவள் இருந்த பதட்டமும், பயமும் பேசவிடவில்லை..

"இப்போ சொல்லு.. என்னாச்சி ஏன் இவ்ளோ‌ பதட்டம்??" என்றவனை கலங்கிய விழிகளுடன் ஏறிட்டவள்.. "நான் ப்ரெக்னன்ட் ‌டெஸ்ட் எடுக்கணும்" என்றதும் ஒரு நொடி முகம் ‌மலர.. கைகளை நீட்டி "காங்கிராட்ஸ்" என சொல்ல வந்தவனை பார்த்து முறைத்தவள்..

"ப்ளீஸ்.. நான் ப்ரெக்னன்டா இருக்கக்கூடாதுன்னு வேண்டிக் கிட்டு வந்திருக்கேன்" என்றவளை புரியாமல் பார்த்தவன்..

"வேண்டிக்கிட்டு வந்தீயா?? ஏன்??" என்றவனுக்கு ‌பதில் சொல்ல தோன்றாமல் அமைதியாக இருந்தவளை ஆழ்ந்து பார்த்தவன்..

"நீ பெருமாளை பார்த்து ‌பயப்புடுறீயா?? உன் குழந்தையை ஏதாவது ‌பண்ணிடுவாங்கன்னு அச்சமா இருக்கா??" என்றவனை அழுத்தமாக பார்த்தவள்.

"இல்லை.. அவரை பார்த்து‌ எனக்கு எந்த ‌பயமும் இல்ல"

‌. "அப்புறம் ஏன் இவ்வளோ நெவர்ஸா ‌இருக்க?? உனக்கு என்னதான் பிரச்சனை??" என்றவனிடம் ஏனோ உண்மையையும் சொல்ல தோன்றவில்லை.. அவள் அமைதி ஏனோ இவனுக்கு கோபத்தை தான் கொடுத்தது..

"இப்படி அமைதியா இருக்கிறதுல‌ ப்ரோஜனமே இல்லை.‌ நான் சூரியாவுக்கு போன் பண்றேன்.. அவன் பார்த்துப்பான்" என போனை எடுத்தவனின் கைகளில் இருந்து போனை பிடுங்கியவன்..

"நீ ‌போன் பண்ணா சூரியா என் குழந்தையை கொன்னுடுவான்" என இதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தையெல்லாம் ஒன்று சேர கத்தியவளின் வார்த்தையில் ‌அதிர்ந்தது ஹர்ஸா மட்டுமல்ல.. வெளியில் ‌நின்று கொண்டிருந்த மஹேந்திரனும் தான்..




 

T22

Well-known member
Wonderland writer


அசுரன் 10

ப்ரஜா இப்படியொரு வார்த்தை சொல்வாள் என யாருமே எதிர்பார்க்கவில்லை.. ஹர்ஸாவிற்கு சூரியாவை பற்றி எதுவுமே தெரியவில்லை என்றாலும் ஏனோ பெருமாளை எதிர்த்து நிற்கும் சூரியாவை மனதளவில் ரசிக்கத் தான் செய்தான்.‌.

மஹேந்திரனுக்கு சூரியாவை ஒரு கொலைக்காரனாய், குழந்தையை கொல்லும் அளவிற்கு நினைத்ததை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.. சூரியாவின் சகலமும் அறிந்தவனுக்கு அவனின் இம்மையும் தெரியும்.. மறுமையும் தெரியும்.. அவன் செய்யும் ஒவ்வொரு செய்கைக்கும் பின்னால் ஆழமான காரணம் இருக்கும் என்பதை ஆணித்தரமாக நம்பினார் ‌‌..

அவரவர் அவர்கள் சூழ்நிலையில் இருந்து யோசித்தனரே தவிர.. யாருமே ப்ரஜாவின் இடத்திலிருந்து யோசிக்கவில்லை.. அவளின் காயம் பட்ட மனதிற்கு அவன் தன்னை பாதுகாத்ததை விட.. மனதளவில் அதிகம் காயப்படுத்தியது தான் மூளையில் பதிந்தது..

மனதிற்கும் மூளைக்கும் இடையில் நடக்கும் போரில் மூளை தான் வென்றது.. காதல் கொண்ட ‌மனது அவனை புறக்கணித்தது..

‌. அதிர்ந்து நின்ற ஹர்ஸாவை ஆழமாக பார்த்தவள்.. "எனக்கு ‌டெஸ்ட் எடுக்க ‌முடியுமா?? முடியாதா??" என சீறியவளின் வார்த்தையில் ஒரு நிமிடம் அவளை ‌உற்றுப் பார்த்தவன்..

டெஸ்ட் எடுப்பதற்கான எல்லா வேலைகளையும் முடித்தான்.. இருவரும் முடிவிற்காக காத்திருந்தான்..

அரைமணி நேரத்திற்கு பிறகே ரிப்போர்ட் வர, ஒரு வித ‌பதட்டத்துடன் அமர்ந்திருந்தவளுக்கு "குழந்தை இருக்கக்கூடாது" என மறுபடி மறுபடி மனதளவில் உருப்போட்டு கொண்டிருந்தவளுக்கு‌ ஹர்ஸாவின் ‌முகம் நொடியில் காட்டிக் கொடுத்தது‌‌.‌ தான் நினைத்ததற்கு நேர் எதிராக நடந்திருக்கிறது என்பதை..

"ஹர்ஸா" என கலங்கிய குரலில் அழைத்தவளை பார்த்து பெருமூச்சு விட்டவன்.. "பாஸிட்டிவ் ப்ரஜா.. நீ ‌ப்ரெக்னெட்டா இருக்க" என்ற வார்த்தையில் சோர்ந்து போய் அமர்ந்து விட்டாள்.. அடுத்து என்ன என யோசிப்பதை கூட மறந்தவளுக்கு கண்களில் கண்ணீர் வற்ற.. வெறித்துப் பார்வையில் அங்கிருந்து வெளியேற, கதவை திறந்தவளுக்கு கோபத்துடன் நின்றிருந்த மஹேந்திரனை பார்த்ததுமே புரிந்து விட்டது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றதும்..

தலைகவிழ்ந்த படி அங்கிருந்து வெளியேற முயன்றவளிடம் எதுவும் பேசாமல் வண்டியில் அழைத்துச் சென்றவர்.‌ அங்கிருந்த கருவேலம் காட்டுப் பகுதியில் வண்டியை நிறுத்தினார்..

வண்டி நின்றதும் அனைத்துமே புரிந்து விட்டது.. தன்னிடம் ஏதோ பேசவிரும்புகிறார் என்பதை உணர்ந்தவள்..

"அப்பா"

"அப்படிக் கூப்பிடாதே.. என் சூரியாவை தப்பா நினைச்ச நீ.. அப்பான்னு என்னை கூப்பிடாதே" என சீறியவரின் கோபத்தில் ஆழ்ந்து பார்த்தவள்.‌ முதல் முறை வாயை திறந்தாள். தனக்காக மட்டுமல்ல தன் வயிற்றில் வளரும் ஜீவனுக்காக போராடினாள்..

"ஆமாப்பா.. இல்லை.. இல்லை.. அப்பான்னு கூப்பிட்டா உங்களுக்கு பிடிக்காதுல்ல.. மிஸ்டர் மஹேந்திர குமார்.. உங்களுக்கு உங்க சூரியா பெருசு தான்.. ஆனா எனக்கு என் வாழ்க்கையில எதுவுமே பெருசுமில்லை.. நிரந்தரமும் இல்லைன்னு உணர்ந்துட்டேன்.. போலியான ‌மனிதர்களோட அன்புல வாழ்ந்த எனக்கு எல்லாருமே போலியா தான் தெரியுறீங்க.. எல்லாருக்குமே அவுங்க சூழ்நிலைகள் தான் தீர்மானிக்குது நல்லவனா கெட்டவனான்னு.. ஆனா எனக்கு "சூழ்நிலைகளை நீங்களே உருவாக்கி என் உயிரை காவு கொடுக்க நினைச்ச சூரியா நல்லவன் நான்கெட்டவ.. அப்படித்தானே" என விரக்தியாக சொல்லியவள்.

"உங்க சூரியாவை கொலைக்காரன்னு சொன்னதுக்கே கோபம் வருதே.. ஆனா என் கண் முன்னால் என் அப்பா அம்மாவை கொன்னவனை கொலைக்காரன்னு தான் சொல்லணும்" என சீறினாள்..

"அவுங்க உன்னை பெத்தவங்க இல்லை. உன்னோட அப்பா பெருமாள் தான்" என்றவரை பார்த்து கசந்த புன்னகை ஒன்றை வெளியீட்டவள்…

"இப்போ ஒரு மாசத்துக்கு முன்னாடி தான் தெரியும்‌.. என்னோட அப்பா அம்மா இவுங்க இல்லைன்னு. அது வரைக்கும் என்னை பெத்தவங்க அவுங்கன்னு தானே நினைச்சிட்டு இருந்தேன்.. இப்போ வந்து இவுங்க உன்னோட அப்பா அம்மா இல்லை ‌.. அவுங்க தான் அப்பா அம்மான்னு சொன்னா எந்த பொண்ணாலை ஏத்துக்க முடியும்.. சொல்லுங்க.. நான் ஒன்னும் எல்லாரும் கையில் வைச்சி விளையாடுற பொம்மை இல்லை.. எனக்கும் உணர்வுகள் இருக்கு.. எனக்கும்‌ அன்பு, பாசம், காதல் எல்லாமே இருக்கு" என அழுதவளின் கேவலில் சட்டென திரும்பி பார்க்க.. ப்ரஜாவோ அழுத கண்ணீருடன் ஏறிட்டுப் பார்த்தவள்.

"இப்பவும் சூரியா சொன்ன அந்த வார்த்தை எனக்குள்ளே எதிரொலிச்சிட்டே இருக்கு.. எனக்குள்ளே கரு உருவாகவே கூடாதுன்னு நினைச்சவரு.. அந்த கருவை அழிக்க மாட்டாருன்னு என்ன கியாரண்டி.. என் வாழ்க்கையில போலியான மனிதர்களை மட்டுமே பார்த்த நான்… இப்போ போலியே இல்லாத என் குழந்தைக்காக வாழப்போறேன்.. எனக்கு யாரும் வேண்டாம்.. நீங்க வேண்டாம்.. இந்த பகட்டான வாழ்க்கை வேண்டாம்.. வாழ்வா?? சாவான்னு?? போராடுற வாழ்க்கை வேண்டாம்.. விட்டுருங்க.. என்னை விட்டுருங்க.. என்னை நிம்மதியா வாழ விடுங்க" என இரு கை கூப்பி கூம்பிட்டவள்.. தன் கால் போன போக்கில் ‌நடக்க ஆரம்பித்தாள்..

அவள் செல்வதை பார்த்தவருக்கு இனம் புரியாத வலி ஒன்று நெஞ்சில் எழுந்தது.‌ சூரியாவை பற்றி அனைத்து ‌உண்மைகளையும்‌ சொன்னால் போதும் அவளே சூரியாவை முழு மனதாய் ஏற்றுக் கொள்வாள்.. ஆனால் அதை‌ சூரியா ஏற்றுக் கொள்ள வேண்டுமே.. எக்காரணம் கொண்டும் தன்னைப் பற்றிய உண்மை யாருக்கும் தெரிய வேண்டாமென சத்தியம் வாங்கிக் கொண்டானே என வருந்தியவருக்கு போன் அடிக்கும் சத்தத்தில் கலைந்தவர்..

புதிதாக வந்த எண்ணை பார்த்தவர் புருவ ‌முடிச்சுடன் எடுத்தவர். "ஹலோ" என்பதற்குள்..

‌. "அண்ணா நான் துளசி பேசுறேன்.. நாளைக்கு நான் உங்களை தனியா மீட்‌ பண்ணனும்.. நாளைக்கு நான் மாலினியோட சமாதிக்கு வர்றேன்" என்றவளின் வார்த்தையில் விதிர்விதிர்த்து போய் நின்றிருந்தார்..

"என்னம்மா சொல்ற??" என்பதற்குள் போன் கட்டாகி விட்டது..

கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் நடந்தே வந்தவளுக்கு கால் அசதியில் ‌வலித்தது… அடிக்கும்‌ வெயிலின் ‌தாக்கம் தலைசுற்றல் மிகுதியில் அறைக்குள் சென்றவள் தண்ணீர்‌ மட்டுமே அருந்திக் கொண்டு படுத்து விட்டாள்..

உடலின்‌ அசதியா? இல்லை மனதின்‌ அசதியா‌? தன்னையும் மீறி கண்கள் சொருகியது.. எழுந்தவளின் மிக மிக அருகாமையில் இருந்தான் சூரியா…

அவனின் சிரிப்பான முகத்திற்கு பதிலாக இறுகிய ‌முகம் தான் தெரிந்தது.. அவளின் முகத்திற்கு நேராக தன் கைகளை கொண்டு சென்றவனின் கையில் கத்தி ஒன்று இருந்தது.. ப்ரஜாவின் முகத்திற்கு முன்னால் கத்தி எடுத்து‌ நீட்ட.. உச்சகட்ட பேரதிர்ச்சியில் திகைத்து உறைந்து நின்றாள்.. தன் முன்னால்‌ இருந்த கத்திய பயப்பார்வையுடன் பார்த்தவளுக்கு கத்தியை விட சூரியாவின் பார்வை அவளை கொல்லாமல்‌ விடாது என்பது நன்றாக ‌புரிந்தது‌‌..

தன் கையில் இருந்த கத்தியை நீட்டியவனின் கை மெல்ல மெல்ல கீழிறங்க.. கத்தி சென்ற திசைக்கே தன் பார்வையை செலுத்தியவளுக்கு அது நின்ற இடத்தை பார்த்ததும்‌மன மூச்சடைத்து போனாள்.. கத்தி நின்றதோ வயிற்றுப் பகுதியில்.. ப்ரஜாவிற்கு பயத்தில் பெருமூச்சு வாங்க.. சத்தம் போட்டு யாரையாவது கூப்பிட கூட‌ பயந்து போனாள்.. அவன் கையிலிருந்த ‌கத்தியின் மேல் உள்ள பயத்தால்..

"நான் உன்கிட்ட அன்னைக்கு என்ன சொன்னேன்?? என் கரு உனக்குள்ளே வளரக்கூடாதுன்னு சொன்னேனா இல்லையா??" என மிரட்டும் பார்வையில் கணீரென்ற குரலில் கேட்டவனின் வார்த்தையில் நடுநடுங்கி போனவளுக்கு வார்த்தைகள் பஞ்சமாகி விட..

"ஆனா‌‌ அதையெல்லாம்‌ மீறி நீ குழந்தை உண்டாகி இருக்கேன்னா.. அது தப்பாச்சே.. என் குழந்தை உனக்குள்ளே வளராது.. வளரவும் விடமாட்டேன் டி" என ஆத்திரத்தில் ‌கத்தியவன் கத்தியை எடுத்து‌ ப்ரஜாவின் வயிற்றில் ஓங்கி குத்த.. ரத்தம் ‌ப்ரஜாவின் முகமெங்கும் பீறிட்டது…

"ஆஆஆஆஆஆ.. அம்ம்ம்மமாஆஆஆ.. ரத்தம் ரத்தம்" என வேகமாக எழுந்து அமர்ந்தவளுக்கு தொப்பலாக வேர்த்து விறுவிறுத்தது..

நடந்ததெல்லாம் கனவு என நினைக்கக்கூட‌ முடியவில்லை.. ஏனோ மனமெல்லாம் பயம் படர்ந்து ‌மூளை, மனது இரண்டையும் பயம் மட்டுமே ஆட்சி செய்தது..

தன் நடுங்கிய கைகளை வயிற்றை மெல்ல அழுத்திப் பார்த்தவளுக்கு தன் குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை என சந்தோஷப்பட தான் முடியவில்லை.. இன்னும்‌ அசுரனின் கையில் சிக்கி இருக்கும் தனக்கு வாழ்க்கையின் ஒளியாய் இருக்கும் குழந்தையை இழக்க விரும்பாமல் அவனை விட்டுப் பிரிந்து விடும் முடிவை எடுத்தாள்..

ஆனால் எங்கே செல்வது?? யாரிடம் செல்வது?? தன் பாதுகாப்பு எங்கிருக்கிறது?? என பரந்த உலகத்தின்‌ மேல் ‌உள்ள பயத்தால் எவ்வளவு யோசித்தாலும் அவளால் ஒரு முடிவுக்கு‌ வரமுடியவில்லை..

அந்த ‌நேரம் போன் அடிக்கும் சத்தத்தில் மெல்ல கலைந்தவள் போனை எடுத்துப் பார்க்க.. அவளின் காலேஜ் மேட் மேக்னா தான் அழைத்திருந்தாள்..

"ஹாய்" என ஸ்ருதி இறங்கிய குரலில் சொல்லியவளுக்கு நேர்மாறாக.. எதிரில் இருந்தவள் சந்தோஷமாக ‌‌ "ப்ரஜா நம்ம ரெண்டு பேரும் ப்ர்ஸ்ட்‌ க்ளாஸ்ல பாஸாகிட்டோம்டி" என சந்தோஷமாக கத்தினாள்..

"ம்ம்.. சரி" என்றவளின் வார்த்தையில்‌ அதுவரை சந்தோஷ மிகுதியில் கத்தியவளின் வார்த்தை கூட நின்று போனது..

‌‌. "ப்ரஜா என்ன ஆச்சுடி.. உன் வாய்ஸே சரியில்ல"

"அதெல்லாம்‌ ஒன்னுமில்லை பா.. நான் நல்லா இருக்கேன்.. தூங்கி முழிச்சேன்னா அதான் வாய்ஸ் அப்படியிருக்கு"

"ஓஹ்ஹ்.. வேற எதுவும் பிரச்சனையில்லையே.. உன் ஹப்பி உன்னை நல்லா வச்சிருக்காருல்ல" என்றவளின் வார்த்தையில் அதுவரை‌ அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் தொண்டையடைக்க தன்னைமும் மீறி கேவல் ஒன்று வெளிவந்தது..

"அழுறீயா ப்ரஜா" என்றவளிடம் ஏனோ உண்மையை மறைக்க தோன்றவில்லை..

"மேக்னா.. மேக்" என ஒரு மூச்சு அழுது ‌மட்டுமே தீர்த்தாள்.. அவள் மனப்பாரம் அழும் வரை அவளை அமைதியாக விட்டவள்..
"உனக்கு என்ன பிரச்சினைன்னு மட்டும் சொல்லு.. என்னால முடிஞ்சதுன்னா கண்டிப்பா நான் ஹெல்ப் ‌பண்றேன்"

ஏனோ சூரியாவை பற்றி குறை சொல்ல தோன்றவில்லை.. "எனக்கு பாதுகாப்பான ஒரு இடம் வேணும் மேக்னா.. நான் ரொம்ப ரொம்ப பாதுகாப்பான இடத்துல அமைதியா வாழணும்.. இயற்கை மட்டுமே பிரதானமாக இருக்கணும்" என்றவளின் வார்த்தையில் புருவ முடிச்சுடன் யோசித்தாள் மேக்னா..

"திரிச்சூர் போறீயா??"

"திரிச்சூர் எங்கேடி இருக்கு??"


"திரிச்சூர் எங்க பாட்டி வீடு ‌.. கேரளாவுல இருக்கு.. அங்கே ஹோட்டல் மேனேஜ்மென்ட் வேலைக்கு ஆள் தேவை‌‌.. நீ அங்கே போறீயா.. அது எங்க ஹோட்டல் தான்ப்பா.. டூரிஸ்ட் பிளேஸ் சோ எப்பவும் ரஷ் ஹவர்ஸா தான் இருக்கும்.. மனசை போட்டு குழப்பிக்க நேரமிருக்காது.. சோ அதான் உனக்கு பெட்டர்னு தோணுது.. முடிஞ்சா போறீயா??" என்றவளின் வார்த்தையில் ஏதோ தன் வாழ்க்கைக்கான பாதை என நினைத்தவள். அடுத்த நாளே அசுரனின் கட்டுக்காவலில் இருந்து வெளியேறியவள் திரிச்சூர் பஸ் ஏறி சென்றாள்..
 

T22

Well-known member
Wonderland writer


அசுரன் 11

திரிச்சூர் பஸ்ஸில் ஏறியமர்ந்தவளுக்கு அவள் சூரியாவின் கட்டுக்காவலை ‌மீறியதே பேரதிர்ச்சி தான்… அவனை அவ்வளவு எளிதில் ஏமாற்றுவது என்பது இலகுவான காரியமல்ல..

தன் தோழியின் ஒற்றை சொல்லிலும்‌ அவள் கொடுத்த அட்ரஸிலும் அவளின் வழிகாட்டுதலின் படி தான் திருநெல்வேலியை தாண்ட‌ முடிந்தது..

நேற்று முழுவதும் அவள் கடந்து வந்த பாதையை நினைத்தவளுக்கு பிரமிப்பு மட்டுமல்ல ஆச்சர்யமாகவும் இருந்தது.. பெருமாளை பற்றிய யோசனையில் இருந்த சூரியா ப்ரஜாவை பற்றி நினைக்க தவறியதே அனைத்திற்கும் காரணமாகி போனது..

தான் சொல்வதை தான் கேட்பாள்.. சுயமாக எந்த முடிவும் எடுக்க தெரியாது என நினைத்தே சூரியா அவன் போக்கில் ப்ரஜாவை இழுக்க.. அவளோ மனைவி என்ற ஸ்தானத்தில் இருந்து எப்பொழுது'அம்மா' என்ற ஸ்தானத்தை அடைந்தாளோ?? அப்பொழுதே அவள் தனக்காக மட்டுமல்ல தன் வயிற்றில் வளரும் ஜீவனுக்காக போராட ஆரம்பித்து விட்டாள்..

தான் கண்ட கனவில் இருந்து நிஜவுலகுக்கு வரமுடியாமல் தவித்தாள்.. அவள் கண்ட கனவினை போல் சூரியாவினால் தன் குழந்தைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்றெண்ணியவள் ‌. அன்று முழுவதும் அதைப் பற்றிய யோசனையிலேயே இருந்தவளுக்கு தன் தோழியின் மூலம் விடிவுகாலம் பிறந்து விட்டது என்று நினைத்து எப்படி சூரியாவிடம் இருந்து தப்பிப்பது என்று மட்டுமே நினைத்தாள்‌‌..

இரவில் படுத்துறங்கும் பொழுது தன்னை மீறி கண்கள் சொருக.. மெல்ல தூங்கிக் கொண்டிருந்தவளின் வயிற்றில் ஏதோ ஒன்று அழுத்துவதை போல் இருந்தது.. சிறு வெளிச்சத்தில் கீழே குனிந்து பார்த்தவளுக்கு ஐந்து விரல்களை வயிற்றை அழுத்துவதை போல் இருந்தது..

தூக்க கலக்கத்தில் சூரியா கைப்போட்டதை பார்த்த ப்ரஜாவிற்கு தன் குழந்தையை கொல்லத்தான் கை போட்டிருக்கிறான் என நினைத்தவள்..‌ சட்டென அவன் கையை உதறியபடி எழுந்தவள்.. "என் குழந்தையை விட்டுரு.. என் குழந்தையை விட்ரு", என கத்தியபடி எழுந்தமர.. சூரியாவும் அவளின் சத்தத்தில் எழுந்தமர்ந்தான்..

சட்டென எழுந்து லைட்டை ஆன் பண்ணியவன் அவளை திரும்பி பார்க்க.. பயத்தில் அஞ்சி நடுங்கியபடி இருந்தாள்.. "ப்ரஜா ‌. வாணிம்மா.. என்னாச்சி??" என்ற குரலில் பட்டென திரும்பியவளுக்கு சூரியாவை பார்த்ததும் பேச்சே வர மறுத்தது..

"என்னாச்சி குழந்தை? குழந்தைன்னு கத்துற?" என கணீரென்ற குரலில் கேட்டவனை பயப்பார்வை பார்த்தவள்.. "இல்லை சூரியா கெட்ட கனவு.. குழந்தை எல்லாம் இல்ல" என திக்கி திணறி சொல்லி ‌முடித்தாள்..

எங்கே அவன் குழந்தையை பற்றி வேறு ஏதாவது கேட்பானோ?? என நினைத்தே பெட்ஷீட்டை தலைக்கு மேல் போர்த்தியபடி தூங்குவதை போல் நடிக்க ஆரம்பித்தாள்.. அவளின் செய்கை அனைத்தையும் வித்தியாசமாக பார்த்தவன்.. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.. இன்னும் ரெண்டே நாளில் அவன் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளையும் ஓய்ந்து விடும்.. ப்ரஜாவிடம் அனைத்து உண்மையையும் கூறி அவளுடன் காதலுடன் வாழ வேண்டும் என நினைத்தவன் கண்களை மூடினான்..

அருகில் படுத்திருந்தவள் கண்களை மூடினாலும் மனம் ஓயாமல் பயத்தில் கூச்சலிட்டுக் கொண்டேயிருந்தது‌… இரவு முழுவதும் தூங்காமல் திரிந்தவள்.. காலையில் திலகாவின் சமாதி முன்பு தான் நின்றிருந்தாள்..

விளக்கேற்றியவள் கண்கள் கலங்க "நீங்க யாருன்னு கூட எனக்கு தெரியாது.. ஏதோ ஒரு பந்தம் என்னை உங்க கூட பிணைக்க வைக்குது.. நான் போறேன் சூரியாவை விட்டு.. அப்பாவை விட்டு.. போறேன்.. என்னால முடியலை.. எந்நேரம் என் குழந்தைக்கு ஆபத்து வருமோன்னு?? பயந்து பயந்து வாழ முடியலை.. என்னோட காதல் தோத்துப் போனாலும் ஒரு அம்மாவா நான் தோத்துப் போக விரும்பலை.. என் குழந்தைக்காக நான் போறேன்" என கண்ணீருடன் மனதில் பேசியவள் சமாதியை தாண்டி செல்ல முயன்றவளுக்கு காலில் கல் ஒன்று இடறி விட.. "ஸ்ஸ்ஸ்" என காலை தேய்த்தபடி அறைக்குள் நுழைந்தாள்.. பரபரப்பாய் எங்கோ கிளம்பியிருந்த சூரியாவை பார்த்தவளுக்கு ஒரு புறம் நிம்மதியாக இருந்தாலும்.. "எங்கே செல்கிறான்" என தெரிந்து கொள்ள வேண்டும் போல இருந்தது..

"எங்கே‌ போற??" என்றவளின் கேள்வியில் சட்டென திரும்பியவன்.. "எனக்கு முக்கியமான வேலை இருக்கு.. ரெண்டு நாள் நான் பிசியா தான் இருப்பேன்.. அப்புறம் உன்கிட்ட நான் மனசு விட்டு பேசுறேன்" என காதலுடன் ‌சொல்லியவன்.. அவள் அருகில் நெருங்கி வந்தாலும், முத்தமிட தோன்றிய உதடுகளை கட்டுப்படுத்தியபடி வெளியே சென்றான்..

"நீங்க வரும் போது நான் இருக்க மாட்டேன் சூரியா" என மனதில் நினைத்தவள்.. சூரியா வீட்டை விட்டு செல்லவும் மெல்ல வெளியே வந்தவளின் கண்ணில் விழுந்தார் மஹேந்திரன்.. நேருக்கு நேராக பார்த்தாலும் ‌எதுவும் பேசாமல் அமைதியாக சென்றவரை பார்த்தவளுக்கு இதயத்தில் சுருக்கென வலி தோன்ற.. கண்கள் கலங்கியது..

"அப்பா" என்ற வார்த்தையில் மஹேந்திரனின் நடையும் சட்டென்று நின்றது..

"நேத்து நான் பேசினது தப்பா?? சரியான்னு கூட சொல்லத் தெரியலை.. உங்களோட கோப முகம் என்னை ரொம்ப பாதிக்குது‌.. சாரிப்பா" என கண்கள் கலங்க சொல்லியவள்.. மெல்ல சென்று விட.. அவள் போகும் திசையையே பார்த்து நின்றிருந்தார் மஹேந்திரன்..

சில மணி நேரத்தில் சூரியா எங்கேயோ கிளம்பி சென்று விட.. மஹேந்திரனும் கிளம்பி வெளியே செல்வதை பார்த்தவள்.. இதுதான் சரியான சமயம் என்றெண்ணியவள்.. அவன் காவலுக்கு வைத்திருந்த ஆட்களை அழைத்தவள்..

"நான் மெடிக்கல் போகணும்??" என சற்று தைரியத்துடன் திக்காமல் திணறாமல் கூறினாள்..

"என்ன வேணும்னு சொல்லுங்க மேடம். நாங்களே வாங்கிட்டு வர்றோம்" என பணிவுடன் கேட்டவனை கண்டு திகைத்தவள்..

"இல்லை.. இல்லை.. அதெல்லாம் நான் தான் வாங்க‌ முடியும்.. நீயெல்லாம் ஒன்னும் வாங்க வேண்டாம்" என்றவள் பொடிநடையாக நடக்க ஆரம்பிக்க..

"மேடம்.. மேடம்.. நாங்க கார்ல கூப்பிட்டு போறோம்.. நீங்க வாங்க" என்றவள் "ம்ம்ம்" என தலையாட்டியவாறே, வீட்டிற்குள் நுழைந்தவள் கையில் ஒரு கவர் மற்றும் பர்ஸுடன் வந்தாள்..

காரில் ‌ஏறியமர்ந்ததும்‌ சிறிது தொலைவில் இருந்த மெடிக்கல் எல்லாம்‌ வாங்கமாட்டேன் என அடம்பிடித்தவள்.. திருநெல்வேலி சந்திப்பில் வந்து நின்றாள்…

பஸ் ஸ்டாண்டில் உள்ள மெடிக்கலில் விஷ்பர் வாங்கியவள்.. நேராக அங்கிருந்த பொது கழிப்பிடத்தில் நுழைந்தாள்.. காவலுக்கு வந்தவர்களால் மெடிக்கல் ‌வரை வர முடிந்தது..

பொது கழிப்பிடத்தின் வெளியே வந்து காத்து நின்றவர்களுக்கு நீண்ட நேரமாகியும் ப்ரஜா வந்தபாடில்லை.. நேரம் செல்ல செல்ல பயம் தொத்திக் கொண்டது..

"என்னாச்சி?? என செக் பண்ண அனைவரும் உள்ளே செல்ல.. பெண்கள் கழிப்பிடத்தில் உள்ளே நுழைந்ததால் அக்கம் பக்கத்தினர் அனைவரும் பிடித்து போலீஸில் பிடித்து கொடுத்து விட, பெரிய கலவரமாகி கொண்டிருந்த வேளையில்.. யாருக்கும் தெரியாமல் தான் கவரில் கொண்டு வந்த பர்தாவை எடுத்து ‌மாட்டியவள் நிமிடத்தில் அங்கிருந்த திருச்செந்தூர் செல்லும் பேருந்தில் ஏறியமர்ந்தாள்.. திருச்செந்தூர் பஸ்ஸில் ஏறியவள் பல‌ மணி நேர பயணத்திற்கு பிறகே நாகர்கோவில் வந்தடைந்தாள்.. நாகர்கோவிலில் இருந்து திரிச்சூரில் பேருந்தில் ஏறினாள்..

திரிச்சூரில் வந்து‌ இறங்கியவளுக்கு அந்த ஊரின் இயற்கையும் எழில் கொஞ்சும் அழகும் ‌மனதிற்கு இதமாக இருந்தாலும் தன்னையும் மீறி சிறு வலி தோன்றியது..

"என்னாச்சி டி இங்கேயே பார்த்ததுட்டு இருக்க?? வா வீட்டுக்கு போகலாம்" என்றவளின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு போனவளுக்கு ஏனோ மனதில் நிலைப்பாடு இல்லை. அலைக்கழிப்புடன் இருந்தது. மேக்னாவின் வீட்டில் யாருமில்லை.. தாய் தந்தை, அண்ணன், என எல்லாரும் உறவினர்களின் கல்யாணத்திற்கு சென்றிருப்பதாக சொன்னாள்..

"என்னாச்சி டி ஏன் வீட்டுல யாருமில்லை.. எல்லாரும் எங்கே போனாங்க??

"எல்லாரும் சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போயிருக்காங்க.. அப்புறம் நீ எப்படியிருக்க?? கல்யாணம் ஆனதுக்கப்புறம் அப்படியே ஜொலிக்கிற??" என்றவளின் வார்த்தையில் மௌனமாக இருந்தாளே தவிர வேறெதுவும் பேசவில்லை.. ஏனோ பேசவும் தோன்றவில்லை ‌.

"சரி.‌ சரி..‌ டயர்டா இருப்ப.. போய் ரெஸ்ட் எடு" என்றவளின் வார்த்தையில் அவள் காட்டிய அறைக்கு சென்றவள்.‌ மெல்ல கண்களை மூட.. கண்ணிமைக்குள் வந்து சிரித்தான் சூரியா.. சட்டென எழுந்தமர்ந்தாள்.. ஏனோ மனமெல்லாம் அவனின் நினைவாக மட்டுமே இருந்தது.. மெல்ல அந்த ‌வீட்டினை சுற்றிப் பார்த்தவளுக்கு கேரள அமைப்புடன் இருந்த வீடு.. மனதிற்கு இதம் அளித்தது..

தூரத்தில் தெரிந்த ஒரு ஓட்டு வீட்டினை பார்த்தவள்.. சிறிது தூரம் நடப்போம் என அங்கிருந்து நடக்க ஆரம்பித்தாள்..

வெளியே வந்து தன் ப்ரெண்ட் மேக்னாவை தேட அவள் எங்குமே இல்லை.. நேராக கால் செல்லும் திசைக்கு நடந்தவளுக்கு அந்த ஓட்டு வீட்டினை பார்த்ததும் சற்று திகில் கொடுத்தது..

"சரி வந்த வழியே சென்று விடுவோம்" என திரும்பி செல்ல முயன்றவளுக்கு.. "ஆஆஆஆ… அம்மாஆஆஆஆ" என்ற பெண்ணின் அலறல் சத்தம் கேட்கவும் வேகமாக அந்த வீட்டினை நெருங்கியவள்.. அங்கிருந்த ஜன்னலை மெல்ல நெருங்கியவள்.. திறப்பதற்கு முயற்சி செய்ய.. ஜன்னல் உள்பக்கமாக தாழிட்டிருந்தது.. அந்த வீட்டையே சுற்றியவளுக்கு எலிப்பொந்து ஒன்று இருப்பதை கண்டாள்..

உள்ளே யார் கத்தியது??" என யோசனையுடன் பொந்தின் வழியாக எட்டிப் பார்த்தவளுக்கு ஷாக் அடித்ததை போன்ற உணர்வு.. மேக்னா தான் ஒரு பெண்ணை போட்டு அடித்துக் கொண்டிருந்தாள்..

"கையெழுத்து போட போறீயா?? இல்லையா??" என்றவளின் கைகளோ அந்த பெண்ணின் கன்னத்தை பதம் பார்த்தது.. வலியில் துடித்து அழுதவரின் இரு கைகளும் சங்கிலியில் கட்டப்பட்டிருந்ததால் எதிர்த்து போராட கூட முடியவில்லை..

அத்தோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை என்பதை போல்.. அவர் கையெழுத்து போடாத கோபத்தில் தன் ஷு காலால் வயிற்றில் ஓங்கி மிதிக்க. 'அம்மா' என அலறியபடி சுருண்டு விழுவதை பார்த்தவளுக்கு நெஞ்சை அடைப்பது போல் இருந்தது..

தன் தோழியின் சுயரூபம் கண்டவளுக்கு சூரியா பிரிந்து தான் வந்தது மிகப்பெரிய தப்பு என்பது நெற்றிப்பொட்டில் அறைய.. அந்த இடத்தை விட்டு உடனடியாக வெளியே செல்ல வேண்டும் போல தோன்றியது..
 

T22

Well-known member
Wonderland writer



ஆனாலும்‌ தன் கண் முன்னால் கொடுமைகளை அனுபவிக்கும் அந்த பெண்ணை அப்படியே விட்டுவிடவும் மனமில்லை..

அந்தப் பெண்ணிற்காகவே ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்தாள்.. தான் வந்த வழியே எந்தவித சத்தமும் எழுப்பாமல் ‌வேகமாக நடந்தவள் தன்னறைக்கு நுழைந்து கொண்டாள்..

அரை மணி நேரத்திற்கு பிறகு கதவு தட்டும் சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பியவள்.. கதவை மெல்ல திறந்தவளுக்கு எதிரில் சிரித்த முகத்துடன் சாப்பாட்டுத் தட்டுடன் நின்றிருந்த மேக்னாவை பார்த்ததும் உள்ளூர தோன்றிய பயத்தை மறைத்தவள்.. வெளியே புன்னகைக்க முயன்றாள்..

"என்னாச்சி ப்ரஜா?? முகமெல்லாம் ரொம்ப வாடியிருக்கு?? ஏதாவது ப்ராப்ளமா??" என்றவளை பார்த்து 'இல்லை' எனும் விதமாய் தலையாட்டியவள்..

"அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. நான் நல்லா தான் இருக்கேன்… சூரியா நியாபகம் வேறொன்னுமில்லை" என மழுப்பலாக பதில் சொல்லியவள் அவள் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டவள் இரவு நேரத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தாள்..

துளசி வர சொன்ன இடத்திற்கு வந்து நின்றார் மஹேந்திரன்.. அதுவும் அங்கிருந்த மாலினியின் கல்லறையை பார்த்தவருக்கு இதயத்தில் சுருக்கென வலி தோன்றியது. இவளின் இந்த நிலைமைக்கு தானும் ஒரு காரணமோ?? என நினைத்தவரால் ஏனோ பழையதை எல்லாம் நினைக்காமல் இருக்க முடியவில்லை..

மனம் முழுவதும் வேதனையுடன் அங்கிருந்த இரு கல்லறையையும் பார்த்தார். மாலினி, ஆகாஷ் என்ற பெயருடன் இருந்தது..

நீண்ட நேர காத்திருப்பிற்கு பின்பே வந்து நின்றார் துளசி.. "சாரிண்ணா டைம் ஆகிடுச்சி" என்றவரின் பதட்டமும் பயமும் புருவ முடிச்சுடன் கவனித்தார் மஹேந்திரன்..

*என்னாச்சி துளசி?? ஏன் என்னை இங்கே வர சொன்ன?" என்றவரை கண்ணீருடன் ஏறிட்டவர்..

"நான் ஒரு உண்மையை சொல்லணும்ணா.. நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி ப்ரஜா என் பொண்ணு இல்லை" என்ற‌ வார்த்தையில் விலுக்கென நிமிர்ந்தவருக்கு துளசி சொல்வதை ஏனோ ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..

"ப்ரஜா உன் பொண்ணு இல்லையா??" என நம்பாத குரலில் கேட்ட குரலில் கேட்டவரை
ஆழ்ந்து பார்த்தவர்..

"நான் சொல்றது எல்லாம் உண்மை தான்.. ப்ரஜா என் பொண்ணு இல்லை.. உங்க பொண்ணு.. உங்களுக்கும் திலகாவுக்கும் பொறந்த பொண்ணு" என்றவரின் வார்த்தையில் உச்சக்கட்ட பேரதிர்ச்சியில் உறைந்து நின்றார்..

இதயம் படபடவென வேகமாக துடிக்க ஆரம்பித்தது.. முகமெல்லாம் குப்பென வியர்த்து போக.. "என்ன சொல்ற??" என உச்சக்கட்ட பேரதிர்ச்சியில் உறைந்து நின்றவருக்கு,

"ஆமாண்ணா.. ப்ரஜா என் பொண்ணு இல்லை.. உங்க பொண்ணு.. உங்களுக்கும் திலகாவுக்கும் பொறந்த பொண்ணு தான்" என்ற துளசியை ஆழமாக பார்த்தவருக்கு.. சிரிப்பதா?? இல்லை அழுவதா என்று தெரியவில்லை.‌

தன் குழந்தை உயிரோடு இருப்பதை நினைத்து சிரிக்க தோன்றிய அதே உதடுகள்.. அவளை 'அப்பா' என அழைக்காதே என சொல்லியதை நினைத்து அழவும் தோன்றியது.. தன் வாழ்க்கையின் இந்த நிகழ்விற்காக தான் இதுவரை திருநெல்வேலிக்கே வராத தன்னை வரவழைத்தாயா?? என கத்தி கேட்க வேண்டும் என தோன்றியது.. ப்ரஜா தன் பெண் என்பதே மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்க.. சூரியாவிடம் சென்று சொல்ல வேண்டும் என்று தான் நினைத்தார்..

போன் அடிக்கும் சத்தத்தில் கலைந்தவர்.. போனை எடுத்து வைத்தவருக்கு.. "ஆங்கிள் ப்ரஜா வீட்டை விட்டுப் போயிட்டா" என்ற வார்த்தையில் உறைந்து நின்றார்..

"என்ன சொல்ற சூரியா??"

"ஆமா ஆங்கிள்.. அவளுக்கு என் கூட வாழ பிடிக்கலையாம்.. லெட்டர் எழுதி வச்சிட்டு போயிட்டு" என்றவனின் குரலில் எந்த பேதமும்‌ இல்லாமல் இருந்தது.. கோபத்தில் கத்தவும் இல்லை.. பதட்டத்தில் குழறவும் இல்லை.. ஆனால் மனமோ அதற்கு நேர்மாறாக துடித்தது..

இரவு வேளையில் மேக்னா உறங்கிவிட்டாளா?? என செக் பண்ணியவள்.. தான் காலில் மாட்டியிருந்த கொலுசை கூட கழட்டி வைத்து விட்டாள்.. எந்தவித சத்தமும் இல்லாமல்.. பின்னால் இருந்த வீட்டின் பக்கம் சென்றவள்.. கையில் இருந்த சுத்தியலை கொண்டு பூட்டை உடைத்தாள்..

அறைக்குள் நுழைந்தவளுக்கு குப்பென்று நாத்தம் அடிக்க.. மூக்கை பொத்தியபடி நுழைந்தவள் அங்கிருந்த பெண்ணின் சங்கிலியை அடித்து உடைத்தாள்.. தன்னருகில் கேட்ட சத்தத்தில் சட்டென எழுந்தவர்.. ப்ரஜாவை கண்டு அஞ்சி நடுங்க.. "ப்ளீஸ்.. பயப்படாதிங்க" என்ற குரலில் சற்று நிதானமானவரை வெளியே கைத்தாங்கலாக அழைத்து வந்தாள்..

இருவரும் கஷ்டப்பட்டு வெளியே வர அவர்களின் எதிரில் துப்பாக்கியுடன் வந்து நின்றாள் மேக்னா.‌.

அவளின் உயிரானவனோ, பெருமாளின் நெற்றியில் துப்பாக்கியை வைத்தபடி நின்று கொண்டிருந்தான் ரௌத்திரத்துடன்…

"சொல்லு என்‌ வாணிம்மா எங்கே??" என கத்தியவனை கண்டு அஞ்சியவர்..

"டேய்.. அவளை எங்கேன்னு என்னை கேட்கிற?? நீதானே அவளை கங்காருகுட்டி மாதிரி பாதுகாத்து வச்சிருந்தீயே.. எங்கே நீ இறக்கி விட்டீயோ?? அங்கேயோ போய் தேடு" என எரிச்சல் மிகுதியில் ஆத்திரத்துடன் கத்தியவர்.. "இல்லைன்னா எவன் கூடயாவது ஓடிப் போயிருப்பா போய் ஒழுங்க தேடு" என்றவரின் நெஞ்சில் ஓங்கி ஒரு மிதி மிதித்து விட்டான்..

அவன் மிதித்த மிதியில் பின்னால் இருந்த சுவற்றில் முட்டி மோதியவன்.. "ஆஆஆஆ* என அலறியபடி கீழே விழுந்தார்..

அவரின் ஆட்கள் சூரியாவை தடுக்க வர அவரின் ஆட்களையெல்லாம் பந்தாடிக் கொண்டிருந்தவனின் பின்தலையில் ஒருவன் அடித்து விட.. "அம்ம்மாஆஆஆஆ" என்ற அலறலுடன் விழுந்தான் சூரியா.‌

அவன் மிதித்த மிதியில் எழ முடியாமல் எழுந்தவர். "டேய்ய். இவனை பின்னாடி தோட்டத்துல உயிரோடே புதைங்கடா.. செத்து தொலையட்டும்" என்றவரின் வார்த்தைக்கிணங்க அடியாட்கள் நால்வர் குழி தோண்டிக் கொண்டிருந்தனர்..

அவர்கள் தோண்டிய குழியில் தொப்பென விழுந்தார் பெருமாள்..

"அய்யா.. ஐயா" என திரும்பி பார்த்தவருக்கு ருத்ரமூர்த்தியாக நின்றிருந்த மஹேந்திரனை தான் பார்க்க முடிந்தது..


 

T22

Well-known member
Wonderland writer
தன்னை யார் மிதித்தது என திரும்பி பார்த்த பெருமாளிற்கு பேரதிர்ச்சி தான்.. 'இவனா' என உள்ளுக்குள் தோன்றிய அச்சத்தை மறைத்தவாறே, "மஹேந்திரா.. நீ எங்கே இங்கே??" என்ற குரலில் சட்டென திரும்பியவர்..


"ஓஹ். நான் திருநெல்வேலி வந்தது உனக்குத் தெரியாது அப்படித்தானே.. ஏன்டா இப்படி கொலைவெறி பிடிச்சி சுத்துற??" என ஆத்திரத்தில் கத்தியவர் அருகில் மண்ணில் ‌படுத்திருந்த சூரியாவை பார்த்ததும் உயிர் போகும் வலியை தான் அனுபவித்தார்..


அவன் அருகில் ‌மண்டியிட்டு‌ அமர்ந்தவர்.. "சூரியா.. சூரியா.. சூரியா" என்றவர் அவன் தலையை தன் கரங்களால் சற்று உயர்த்திப் பிடிக்க.. கை முழுவதும் ரத்தத்தால் நனைந்து கையிடுக்கின் வழியே ரத்தம் சொட்ட ஆரம்பித்தது..


"சூரியா.. சூரியா.. சூரியாஆஆஆ" என்றவரை பெருமாளின் அடியாட்கள் இரண்டு பேர் பிடித்து வைத்துக் கொண்டனர்..


அவர்களின் பிடியில் இருந்தவருக்கு சூரியாவுக்கு என்னவானதோ?? என்ற பதட்டமும் துளசி சொன்ன விஷயமும் மாறி மாறி மூளையில் பதிவு செய்ய.. தன் கைகளை பிடித்திருந்தவர்களை ஒரே தள்ளில் தள்ளிவிட்டவர்.. "ச்சீ.. விடுங்கடா.. இவனெல்லாம் ஒரு மனுஷன்.. இவனுக்கு அல்லக்கைங்க வேற.. த்தூ" என பெருமாள் முகத்தில் காறி உமிழ ‌.. அதுவரை தன் கோர முகத்தை மஹேந்திரனிடம் மறைத்தே வைத்தவர்..




"என்னல ரொம்ப பேசிக்கிட்டு சுத்துற.. ஆமா… நீ வந்ததும் எனக்குத் தெரியும்.. இதோ இந்த நாய் வந்ததும் எனக்குத் தெரியும்" என்றவரின் காலை பிடித்து யாரோ இழுத்து விட.. தொப்பென நிலத்தில் வீழ்ந்தார் பெருமாள்..


விழுந்த வேகத்தில் முதுகுத்தண்டில் அடிபட.. எழுந்து கொள்ளவே சிறிது நேரம் பிடித்தது.. "டேய்ய்யய.. இவனுங்க ரெண்டு பேரும் இந்த ஜில்லாவை விட்டு தாண்டக்கூடாது… வெட்டிப் போடுங்கடா" என்றவரின் தொண்டையை அழுத்தமாக பிடித்திருந்தான் சூரியா..


மயக்கமுற்ற நிலையிலும்‌ மஹேந்திரன் வந்தது என அனைத்துமே அவனுக்கு நினைவில் இருந்தது.. சிறிதாக தன் உடலை அசைத்துப் பார்த்தவனுக்கு.. கட்டுக்கோப்பான உடலமைப்பை கொண்டதால் அவனால் எழுந்து நிற்க முடிந்தது…



கால்கள் தள்ளாடினாலும் அவனின் பிடி அழுத்தமாக இருந்தது.. தொண்டை வலியெடுக்க சூரியாவின் கைகளில் தன்னைப் பிரித்தெடுக்க முயன்றார்.. சிறிது கூட அசையவில்லை சூரியா..


"சூரியா.. விடு அவனை.. அவனை விடுன்னு சொல்றேன்ல" என அவன் கைகளிலிருந்து பெருமாளை பிரித்தெடுத்தவர்..


"ஏன் சூரியா இவனை கொன்னுட்டு ஜெயிலுக்கு போக போறீயா??.. நீ இப்பவரைக்கும் சூட் பண்ண எல்லாருமே மோஸ்ட் வான்ட்டட் கிரிமினல்.. அதுனால தான் உன்மேல எந்த கேஸும் பைல் ஆகலை.. ஆனா இவனை கொன்னா.. கண்டிப்பா இது பொலிட்டிக்கல் இஸ்யூ மாற வாய்ப்பு இருக்கு.. சோ.. நீ இவனை கொல்றதே நான் அனுமதிக்க மாட்டேன்..


. "என்ன ஆங்கிள்.. உங்க ப்ரெண்டுன்னு ஹெல்ப் பண்ண பாக்குறீங்களா??" என சீறியவனின் தோளில் கை வைத்தவர்..


"சூரியா.. உனக்கு இருக்கிற கோபமும் ஆத்திரமும் எனக்கு பல‌மடங்கு இருக்கு.. ஆனா இவன் சாவு கண்டிப்பா உன் கையால நடக்கக்கூடாது.. நடக்கவும் நான் விடமாட்டேன்" என தீர்மானமாக சொல்லியவர்.. பெருமாளை ஆழ்ந்த பார்வை பார்க்க.. அவர் பார்வையில் கிலி பிடித்தது பெருமாளிற்கு..


மஹேந்திரனை பற்றி நன்கு அறிந்தவருக்கு.. "உன்னை சிக்கீரம் சாகடித்தால் என் வலி எப்படி தீரும்??" என கேட்பதை போல் இருந்தது.. திரும்பி சூரியாவை பார்க்க.. அவனோ கோபத்தின் உச்சியில் இருந்தான்.. பின் தலையில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.. சட்டென தான் அணிந்திருந்த சட்டையை கழட்டியவர்.. சூரியாவின் பின்தலையில் வைக்க.. நெஞ்சம் நெகிழ்ந்து போனான் சூரியா..


அவனைப் பொறுத்தவரை மஹேந்திரன் குருவை போன்றவர்… அவனுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தவரும் அவரே..


வாழ்க்கையின் பல சிக்கல்கள் வந்தபோதும் அதற்கு தீர்வு காண வழிவகுத்தவர் அவரே.. நல்ல ஆசானயாய்.‌ நல்ல நண்பனாய், பாசமிகு மனிதராய் சூரியாவின் வாழ்வில் நுழைந்தார்.. வாழ்க்கை மொத்தமும் போராட்டக்களமாக இருந்ததால் சிறு வயதில் அனுபவிக்க வேண்டிய எந்தவித ஆசாபாசங்களையும் அனுபவிக்காமல் இரும்பு இதயம் கொண்டவனாய் மெஷின் வாழ்க்கை வாழ்ந்தாலும்.. தனக்கென யாருமில்லை என என்றுமே அவன் நினைத்ததில்லை.. அதற்கு முழுக்காரணம்.. ஒன்று மஹேந்திரன்.. இன்னொன்று ப்ரஜா.. இவர்கள் இருவர் மட்டுமே அசுரனாய் இருந்தவனின் இதயத்தில் நுழைந்தவர்கள்..




"வா சூரியா ஹாஸ்பிடல் போகலாம்" என்றவரின் கையை அழுத்தமாக பற்றியவன்.. "வாணிம்மா வீட்டை விட்டுப் போகுறதுக்கு இவன் தான் ஆங்கிள் காரணம்.. என்னோட காதலை அவகிட்ட சொல்ல முடியாம நான் தவிச்ச தவிப்பு.. குழந்தையை உருவாக்க விடமாட்டேன்னு நான் சொன்ன வார்த்தை தானே அவளோட ஆழ்மனதை பாதிச்சிருக்கு.. அப்போ எவ்வளவு வலி அனுபவிச்சிருப்பா.. என்னை பார்த்தாலே பயந்து ‌ஓடியிருக்காளே தவிர.. அன்பா பாசமா என்னை அரவணைச்சதே இல்லை ஆங்கிள்… இப்போ நான் எங்கே போய் அவளைத் தேடுவேன்.. எங்கே இருக்காளோ?? யார்க்கிட்ட போராடுறாளோ?? எனக்கு தெரியலை ஆங்கிள்" என வலியுடன் சொல்லியவனுக்கு நேர் எதிராக. ஒருத்தியை புரட்டி எடுத்துக் கொண்டிருந்தாள் ப்ரஜா..


எந்தப் பெண்ணாலும் எதையும் சகித்துக் கொள்ள இயலும்.. தன் குழந்தைக்கு ஒரு ஆபத்து என்றால் எந்தத்தாயாலும் தாங்கிக் கொள்ள இயலாது.. அப்படியொரு நிலையில் தான் ப்ரஜாவும் இருந்தாள்..


தன்னெதிரில் துப்பாக்கியோடு நின்றிருந்த மேக்னாவை வெறுப்பாக பார்த்தவள்.. "ச்சீ.. நீயெல்லாம் ஒரு பொண்ணாடி.. எப்படி உன்னால இன்னொரு பொண்ணை கஷ்டபடுத்த முடிஞ்சது.. உன்னைப் போய் நல்லவன்னு நம்பி வந்தேன் பாரு.. என் புத்தியை செருப்பால அடிக்கணும்" என சீறியவள் முகத்தை தனக்கு நேராக திருப்பினாள் மேக்னா..


*என்னடி ச்சீங்குற.. உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா புருஷன் கிட்ட சண்டை போட்டு ஆதரவு கேட்டா.. நாங்க உடனே அடைக்கலம் கொடுத்திரணுமா.. லூசு.. உன்னை இங்கே கூப்பிட்டு வந்ததுக்கு முழுக்காரணமே உன்னை ஹோட்டல்ல கால் கேர்ளா வச்சிக்கிறதுக்குத்தான்" என்றவளின் வார்த்தையில் விழி விரித்து அவளை பார்த்த பார்வையில் சற்று பயமே வந்தது மேக்னாவிற்கு..


"என்னடி அப்படி மொறைச்சி பாக்குற.. இந்தம்மா கண்ணகி பரம்பரை கண்ணாலேயே என்னை எரிச்சிருவாங்க.. காலேஜ் படிக்கும் போதே.. உன் அழகு என்னை அவ்ளோ டிஸ்டபென்ஸ் பண்ணிடுச்சி.. உன்னை மாதிரி ஆட்களுக்குத் தான் இப்போ எல்லாம்‌ டிமெண்ட் ஜாஸ்தி.. அதுனாலேயே நானும் ஹாஸ்டல் வார்டனும் சேர்ந்து உன்னை கடத்தலாம்னு ப்ளான் பண்ணி.. நீ சாப்பிட்ட சாப்பாட்டுல மயக்க மருந்து கலந்து கொடுத்து உன்னை கேட்டுக்கு வெளியே தூக்கிட்டு வந்தா.. எங்கிருந்தோ ஒரு கார் வந்து என்னை அடிச்சிப் போட்டு.. உன்னை தூக்கிட்டுப் போயிட்டான்.. எங்கே போலீஸ் கேஸ் ஆகிடுமோன்னு பயந்து நானும் வார்டனும் சொந்த ஊருக்கே கிளம்பிட்டோம்..


சரி ‌எக்ஸாம் முடிஞ்சிடுச்சேன்னு வந்து பார்த்தா.. வார்டனை யாரோ கொன்னுப் போட்டுருக்காங்க.. உனக்கு கல்யாணமாகி ஹனிமூன்க்கு போயிருக்கேன்னு நியூஸ் வருது...‌ கொதிச்சு போயிட்டேன் டி நான்.. உன்னை மாதிரி ஒருத்தியை மிஸ் பண்ணது கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் மனசை தேத்திக்கிட்டேன்.. அப்புறம் ரிசல்ட் வந்த அன்னைக்கு போன் பண்ணா.. நீயே வந்து மாட்டிக்கிட்ட" என்றவளின் வார்த்தையில் உறைந்து போய் நின்றாள்..


இத்தனை பெரிய சதி தனக்குப் பின்னால் நடந்திருப்பதை கூட அறியாமல் இருந்திருக்கிறோமே?? என நினைத்தவளுக்கு தன்னுள் பல கேள்விகள் எழுந்தது.. விடையறியா கேள்வியின் பதில் ஒருவன் மட்டுமே…


"என்னடி ஷாக்கா இருக்கா?? இதே ஷாக்கோட ‌வாடி உள்ளே" என கையைப் பிடித்திழுக்க.. வேகமாக அவள் கையை உதறியவள்..


"ச்சீ தொடாதே.. உன் கையால என்னைத் தொட்ட" என அருவெறுப்பாக முகத்தை சுழித்தவள்.. தன் பார்வையை நாலாபக்கமும் சுழற்றியவளுக்கு தோப்பிற்கு மண்வெட்டியின் கட்டை மட்டும் தான் கண்ணுக்கு அகப்பட்டது..


"ஓஹ்.. நான் தொட்டதே அறுவெறுப்பா இருக்கா.. இன்னும் உன்னை எத்தனை நாசமாக்கப் போறாங்கன்னு பாருடி" என்றவள் தன் போனை எடுத்து யாருக்கோ போன் பண்ண டயல் செய்வவதற்குள்.. "அம்மாஆஆஆ" என்ற அலறலுடன் கீழே விழுந்து கிடந்தாள்..


"என்னடி சொன்ன என்னை நாசமாக்கப் போறாங்களா?? பார்த்துடலாம் அதையும்" என்றவள் கட்டையால் அடித்து துவைத்துக் கொண்டிருந்தாள்..


"ஆஆஹஹ்.. அம்மா" என அலறியவளுக்கு சிறிது கூட பாவம் பார்க்காமல் ‌அடித்தவள்.. அங்கிருந்த பெண்மணியின் கையைப் பிடித்தவள் வேகமாக வெளியேறினாள்‌‌.. அந்த வீட்டிற்கு காவலுக்கு யாரும் இல்லை என்பதால் அவளால் எளிதாக வெளியே வர முடிந்தது.. வேகமாக வந்து விட்டாலே தவிர எந்த திசைக்கு செல்வது என்று தெரியாமல் முழித்தவள்.. கும்மிருட்டில் நடக்க ஆரம்பித்தாள்.. சிறிது தூரம் நடந்த பெண்மணிக்கு நடக்க முடியாமல் நடுரோட்டில் அமர்ந்து விட.. அவரின் அருகில் அமர்ந்தவளுக்கு தன்னையும் மீறி கண்களில் நீர் கோர்த்தது..


தூரத்தில் ஒரு லாரி ரிப்பேராக இருப்பதை பார்த்தவள்.. வண்டியின் எண்ணை பார்க்க.. TN என்ற போர்டை பார்த்ததுமே ஒருவித புத்துணர்வு வர.. அந்தப் பெண்மணியின் கையைப் பிடித்தவள்.. வேகமாக லாரிக்கு செல்ல.. லாரியோ மூட்டை மூட்டையாக தேங்காய் மூடை ஏற்றி வைத்திருந்தார்கள்..


அவர்களிடம் தாயும் பெண்ணும்‌ என அறிமுகப்படுத்தியவள்… "அண்ணா எங்களை தமிழ்நாட்டுல கொண்டு போய்‌ இறக்கி விடுவீர்களா??" என அழுகுரலில் கேட்டவளை பாவமாக பார்த்த டிரைவர்..


"யம்மா. இது தூத்துக்குடி வரைக்கும் தான் போகும்" என்றவரின் வார்த்தையில் முகம் மலர்ந்து பார்த்தவள்.. "அது போதும்ணா எங்களுக்கு.. நாங்க திருநெல்வேலி தான்"


"அப்போ சரிம்மா.. வண்டியில ஏறுங்க.. ஆனா வண்டிச் செலவுக்கு காசு கொடுத்திடணும்மா" என்றவரிடம் கையில் சற்றும் யோசிக்காமல் தான் அணிந்திருந்த வளையலை கழற்றி கொடுத்தவள்.. "அண்ணா இது ப்யூர் கோல்டு.. நீங்களே வச்சிக்கோங்க.. எங்களை கொண்டு‌போய் விட்டுடுங்க" என்றவளின் கையில் திருப்பி வளையலை கொடுத்தவர்..


"என்னம்மா பாக்குற.. நான் பஞ்சத்துக்கு அடிபட்டவன் தான்.. ஆனா ஊரான் வூட்டு நகையில வாழுறவன் இல்ல" என்றவன் வண்டியில் ஏறி.. இவர்களின் பயணம் அங்குமிங்கும் அலைந்து திரிந்த பல சரிவு பாதைகளை கடந்து தூத்துக்குடியில் வந்து நின்றது..


தூத்துக்குடியில் வந்திறங்கியவள் நேராக ஒரு காரை வாடகைக்கு எடுத்தவள்.. கல்லிடைக்குறிச்சியை நோக்கி சென்றாள்.. அங்கு வந்து தோப்பில் இறங்கியவளுக்கு இடியாக விழுந்தது சூரியாவை ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணியிருக்கும் செய்தி..


நேராக அந்த ஹாஸ்பிட்டலை நோக்கி சென்றாள்..‌ செல்லும் வழியெல்லாம் சூரியாவை பற்றிய சிந்தனை மட்டுமே..


"என்னை மன்னிச்சிடுங்க சூரியா" என மனதோடு பேசியவள்.. மருத்துவமனையில் நுழைந்து அங்குமிங்கும் தேடினாள்.. அறைக்கு வெளியே நின்றிருந்த மஹேந்திரனை கண்டு பிடித்து அவர் அருகில் சென்றவள். "அப்பாஆஆஆ" என்பதற்குள்.. "மஹிஇஇஇஇ" என்ற அலறலுடன் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் ப்ரஜாவின் உடனிருந்த பெண்மணி..



 
Top