#hanzwriteup
#Mr_Perfect
இது இதான் நான் படிக்கிற உன்னோட முதல் கதை..
ரொம்பவே யோசிச்சிட்டு தான் படிக்க ஆரம்பிச்சேன்.. ஏன் னா நீ உன் கதைல யாரையாவது கொன்னுட்டே இருப்பா னு உளவு தகவல் வந்திச்சி????? ஆனால் என்னோட நினைப்பை பொய்யாக்கி ரொம்ப அழகான காதல் கதையை கொடுத்துட்டே.. ??????
Opposite poles attract each other மாதிரி நம்ம Mr.Perfect வர்மனும் Miss Imperfect ஸ்ரீயும் சேர்ந்தா எப்படி இருக்கும்??? ????
இந்த வர்மன் பயலோட கெத்தை பார்த்துட்டு நானும் கொஞ்சம் வெரப்பா நிப்பான்னு நினைச்சேன்.. பயபுள்ள crush என்ற ஒரே ஒரு வசனத்துல அப்படியே crush ஆகிட்டான்.. ???
ஸ்ரீயோட அட்டகாசங்கள் எல்லாம் தாறு மாறு... ??? அவளோட innocence தான் அவளோட பலமே..
அவனை தலையால் தண்ணீர் குடிக்க வெச்சதெல்லாம் வேற லெவல்.. ??????
நிதின் மீதான வர்மனோட பொறாமை எல்லாம் சூப்பர்.. பிடிக்கல பிடிக்கல னு சொல்லி அதிரடியா தாலி கட்டிட்டான்... ???
நிதின் தாரா ஜோடியும் சூப்பர்..
ஆனால் நீ அவங்களுக்கு குழந்தை கொடுத்துட்டு நம்ம சுத்தத்துக்கு பெயர் போனவளை deal ல விட்டுட்டா.. ???
குழந்தையும் வந்தால் வர்மன் பாடு திண்டாட்டம் தான்.. ????
சூப்பர் கதையோட்டம் டா..
இனிமேல் இந்த மாதிரி எழுத்து யாரையாச்சும் கொலை பண்ணிட்டு இருக்காம.. ????