ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

32. தேடல் தீருமோ கதைக்கான விமர்சனங்கள்

#Twist21

#No32_தேடல்_தீருமோ

மித்து அவளை முதன் நாள் பார்க்கும் போதே AJ ரத்தம் வர அளவுக்கு காயப்படுத்தி விடுரான்??? ஏன் டா அரக்கா???? மித்துவோ மகாவிடம் இவன் AJ இல்லை என்று சொல்ல, அப்போ இங்கே இருப்பது யார்? AJ எங்கே அப்போது? என்ற கேள்விகளுக்கு விடை தேடி போகும் மித் கண்டு பிடிப்பாளா?

அவங்களை எப்படி மித்துவுக்கு தெரியும்? என்ன சம்பந்தம்? என்ற மகாவின் கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?

அபி??? ப்பா என்ன நடந்த போதும் அவனின் புன்னகை மாறவே இல்லை.. எல்லாம் இரவல் என்று தெரிந்த போதும் மாரலை.. கொடூரம் என்று தெரிந்த போதும் மாரலை.. அவனின் காதல் சூப்பர்??? அவளுக்காக ஒவ்வொண்ணும் ஒவ்வொரு நொடியும் யோசிக்கிறான்??? இருவருக்கும் இடையிலான உரையாடல்கள் செம்ம??❤️❤️

தவறே செய்யாத போதும் அவனின் குற்ற உணர்வு??? நண்பனுக்காக யோசிப்பது???

AJ பாவம் இவன்?? ஒவ்வொருநாளும் எப்படி மனதுக்குள் துடித்து இருப்பான்.. ரொம்ப கஷ்டமா இருந்தது அவன் சொல்லும் போது.. தாயிற்காக அவன் செய்ய நினைப்பது, வள்ளி லக்கி, மகன் விசயத்தில், முன்பும் சரி பின்பும் சரி!!!???

உறவு இல்லாதவனுக்கு தான் அதன் அருமை தெரியும்... அது இவனின் செயல்களில் நல்லா வெளிப்படுது...

அவன் கண்ணம்மாவின் காதலை மீட்டு எடுக்க அவன் முயற்சி எல்லாம்??? I loved that "confirm ஆ பேபி"??

மகா இவளை போல நட்பு எல்லாம் வரம்.. எதுவுமே சொல்லாத போதும் அவளுக்காக நிக்க்கிரா... அர்விந்த் யார் இல்லனாலு நான் இருப்பேன் டைப் நட்பு சூப்பர்ப்.. அவனின் possessive, அவளுக்காக என்ன வேணாலும் செய்ய துணியும் செயல்???

அஜய் இவனின் காதலும் அழகு??? பிடித்தததுக்கும் வெறுப்புக்கும் நூல் அளவு இடைவெளி தான் என்பது சரி தான்! போல???

விக்கி என்ன சொல்ல இவன் மேல கோபம் வந்தாலும், இவனின் நட்பும் காதலும்? சொல்லாது விட்டதால் காதல் கரை சேராமல் போய் விடும்.. இவன் வழியில் முயன்றான் ஆனால் அங்கு விதியும் விளையாடி இவனுக்கு தீராத வலியை குடுத்துடுச்சு?? பாவம் தான் இவனும்!!!

வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே?????
 
தேடல் தீருமோ....
தேடி கிடைப்பதில்லை, இன்று தெரிந்த ஒரு பொருளை
தேடி பார்ப்பதென்று மெய் தேட தொடங்கியதே

தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா
தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா

காதல் மழையே காதல் மழையே
எங்கே விழுந்தாயோ?

இது தான் கதையே.... மகியின் தேடல் அபியை தேடி.....தேடல் வென்றதா??????

மகி - ரொம்ப ஜாலி ஆன பொண்ணு, அவ கூட மகா, இவங்க ரெண்டு பேரும் ????. எவ்ளோ கலகலப்பு அதே அளவு சோகம் அவ வாழ்க்கையில்... அது கதையில்....

அர்வி - எனக்கு ரொம்ப பிடிச்ச கதாபாத்திரம்????. மகி ஓட ப்ரெண்ட், பாதுகாவலன் எல்லாமே.

அபி- ரொம்ப மென்மையானவன், அனைத்தையும் ஒரு சிரிப்பில் கடந்து விடும் வித்தைக்காரன்????.

ஏ ஜே - இவன்????, இவனா பத்தி கதையில் தெரிஞ்சுக்கோங்க???.

மூர்த்தி - அபி ஓட அப்பா, ஆன அவரா பத்தி தெரிஞ்சதுக்கு அப்பறம்?????.

ஒனென் ஒன்னு தான் ரைட்டர் ஜீ, இன்னும் அவர்கள் காதலை ஆழமா சொல்லி இருக்கலாம்னு தோணுது. கண்டிப்பா இது -ve கமென்ட் கிடையாது ஹர்ட் பண்ணி இருந்தா சாரி பா.

ஆன ஆரம்பத்தில் இருந்தே ஒரு பரபரப்பு இருந்துட்டே இருந்தது, அதுக்கு ரைட்டர் ஜீக்கு ????.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ ????.
 
கதை எண் 32

தேடல் தீருமோ

மித்ரா தன் காதலனை தேடி செல்லும் பயணத்தில் அவனை கண்டு கொள்வாளா??

அவனை தேடி செல்லும் சமயம் பல திடிக்கிடும் உண்மைகள் வெளியாக அதை எல்லாம் தாங்கி கொள்வாளா???

விக்கி முதலில் இவனை பார்க்கும் போது அவ்வளவு கோபம் தான் வருது அப்படியே நாலு அப்பு அப்பலாம் போல ???இவன் ஒருவன் யோசிக்காமல் செய்யும் தவறால் எவ்வளவு பேரின் வாழ்வு திசை மாறி விடுகிறது ???

மித்ரா பார்க்க துறு துறு என்று ஜாலியா இருந்தாலும் அவளுக்குள் எவ்வளவு வலிகளை சுமந்து கொண்டு இருக்கிறாள் இதில் இவளின் காதலை வேறு கண்டு பிடிக்கணும் அதையும் கை பற்ற நினைக்கும் போது அவனே அதற்கு முட்டு கட்டையாக நிற்கிறான் ??? அதுவும் அவள் மீது அவ்வளவு காதல் இருந்தும் ஏன் இப்படி இருக்கிறான் ???

அரவிந்த் வாவ் என்ன மனுஷன் டா இவன் எவ்வளவு பாசம் அவள் மீது ஒவ்வொரு வினாடியும் அவளை பற்றி சிந்தித்து கொண்டு அவளுக்காக வாழ்ந்து அவளுக்காக ஒரு துணையை கூட ஏற்று கொள்ளாமல் இவனின் நட்பு மெய் சிலிர்க்க வைக்கிறது ?????

மகாலக்ஷ்மி சூப்பர் தோழி ??அவள் துவளும் போது எல்லாம் கூடவே தாங்கி நின்று அவளுக்கு தைரியம் ஊட்டி ?? அதுவும் அவர்கள் நட்பை பார்த்து பொறாமை கொள்ளும் விதம் சோ ஸ்வீட் ??

அபி ஒரு மனுஷன் எந்த நிலைமையிலும் இப்படி சிரித்து கொண்டே இருக்க முடியுமா ??இவன் ரொம்ப பாவம் அதுவும் எல்லாம் தெரிந்த பிறகு இவனை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு இவனின் மகி பற்றிய எண்ணமும் இவனின் டைரியும் ???

ஜெகன் இவன் எல்லாரையும் விட ரொம்பவே பாவம் ??? அன்புக்கு ஏங்கும் வளர்ந்த குழந்தை மாதிரி தான் தோன்றியது இவனின் உணர்வுகள் எல்லாம் இருந்தும் இல்லாத நிலைமை ?? கண் முன்னே காதல் இருந்தும் கை பற்ற முடியாத இவனின் வலி ரொம்பவே கஷ்டம் தனக்குள்ளே எல்லாம் போட்டு புதைத்து விட்டு இவன் நடமாடும் விதமும் காதலுக்காக ஏங்கி நிற்கும் விதமும், தன் குடும்பத்திற்கு நியாயம் செய்ய நினைப்பதும் செம ☺️☺️

வசுந்தரவின் அந்த கடித வரிகள் ??? எவ்வளவு வலி மிகுந்தவை

உங்களின் எழுத்து நடை ரொம்பவே அழகா இருக்கு ??? ட்விஸ்ட் வைக்குறேன் என்று நீங்க செய்தது எனக்கு என்னவோ போலவே இருக்கு வேற ஏதாவது செய்து இருக்கலாம் ????

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ???

லிங்க் ???

 
Top