நீ எப்போ தர்ஷு கா போட்ட நான் இன்னிக்கு தான் பாக்குறேன்கதை எண் 32
தேடல் தீருமோ
மித்ரா தன் காதலனை தேடி செல்லும் பயணத்தில் அவனை கண்டு கொள்வாளா??
அவனை தேடி செல்லும் சமயம் பல திடிக்கிடும் உண்மைகள் வெளியாக அதை எல்லாம் தாங்கி கொள்வாளா???
விக்கி முதலில் இவனை பார்க்கும் போது அவ்வளவு கோபம் தான் வருது அப்படியே நாலு அப்பு அப்பலாம் போல ???இவன் ஒருவன் யோசிக்காமல் செய்யும் தவறால் எவ்வளவு பேரின் வாழ்வு திசை மாறி விடுகிறது ???
மித்ரா பார்க்க துறு துறு என்று ஜாலியா இருந்தாலும் அவளுக்குள் எவ்வளவு வலிகளை சுமந்து கொண்டு இருக்கிறாள் இதில் இவளின் காதலை வேறு கண்டு பிடிக்கணும் அதையும் கை பற்ற நினைக்கும் போது அவனே அதற்கு முட்டு கட்டையாக நிற்கிறான் ??? அதுவும் அவள் மீது அவ்வளவு காதல் இருந்தும் ஏன் இப்படி இருக்கிறான் ???
அரவிந்த் வாவ் என்ன மனுஷன் டா இவன் எவ்வளவு பாசம் அவள் மீது ஒவ்வொரு வினாடியும் அவளை பற்றி சிந்தித்து கொண்டு அவளுக்காக வாழ்ந்து அவளுக்காக ஒரு துணையை கூட ஏற்று கொள்ளாமல் இவனின் நட்பு மெய் சிலிர்க்க வைக்கிறது ?????
மகாலக்ஷ்மி சூப்பர் தோழி ??அவள் துவளும் போது எல்லாம் கூடவே தாங்கி நின்று அவளுக்கு தைரியம் ஊட்டி ?? அதுவும் அவர்கள் நட்பை பார்த்து பொறாமை கொள்ளும் விதம் சோ ஸ்வீட் ??
அபி ஒரு மனுஷன் எந்த நிலைமையிலும் இப்படி சிரித்து கொண்டே இருக்க முடியுமா ??இவன் ரொம்ப பாவம் அதுவும் எல்லாம் தெரிந்த பிறகு இவனை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு இவனின் மகி பற்றிய எண்ணமும் இவனின் டைரியும் ???
ஜெகன் இவன் எல்லாரையும் விட ரொம்பவே பாவம் ??? அன்புக்கு ஏங்கும் வளர்ந்த குழந்தை மாதிரி தான் தோன்றியது இவனின் உணர்வுகள் எல்லாம் இருந்தும் இல்லாத நிலைமை ?? கண் முன்னே காதல் இருந்தும் கை பற்ற முடியாத இவனின் வலி ரொம்பவே கஷ்டம் தனக்குள்ளே எல்லாம் போட்டு புதைத்து விட்டு இவன் நடமாடும் விதமும் காதலுக்காக ஏங்கி நிற்கும் விதமும், தன் குடும்பத்திற்கு நியாயம் செய்ய நினைப்பதும் செம
வசுந்தரவின் அந்த கடித வரிகள் ??? எவ்வளவு வலி மிகுந்தவை
உங்களின் எழுத்து நடை ரொம்பவே அழகா இருக்கு ??? ட்விஸ்ட் வைக்குறேன் என்று நீங்க செய்தது எனக்கு என்னவோ போலவே இருக்கு வேற ஏதாவது செய்து இருக்கலாம் ????
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ???
லிங்க் ???
நன்றி