ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

25. ஏகலைவனின் ஏந்திழையாள்- விமர்சன திரி

santhinagaraj

Active member
ஏகலைவனின் ஏந்திழையாள்

விமர்சனம்

பாசம் காதல் கலந்த ஆன்டி ஹீரோ கதை.

திலகன் வெண்பாவின் மகள் மான்சி திரைப்படத் துறையில் பிரபல பாடகியாக இருப்பவள்.

திரைத்துறையின் பிரபலமான மான்சியை வன்மத்தோடு கடத்துகிறார்கள் அவர்களிடம் இருந்து தப்பி வரும் மான்சி கடத்தியவனிடமே காப்பாற்றும் படி கேட்டு அவனின் மீது காதலில் விழுகிறாள்.

பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக விஜித் கடத்திய தன்னிடமே அடைக்கலம் கேட்பவளை வன்முத்தோடு பார்த்து அவள் காதலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவளை தனக்கு கீழ் கொண்டு வர முயற்சிக்க, மாமியின் மருத்துவ அறிக்கை அவன் கைவசம் வருகிறது.அவன் போடும் கட்டுப்பாடுகளிலும் அதிரடி முயற்சிகளிலும் மான்சி அவன் இன்னொரு முகத்தை தெரிந்து கொண்டு அவன் மீது காதல் இருந்தாலும் விலக முயற்சிக்க அவளின் தந்தையின் ஒரு வீடியோவை காரணம் காட்டி மிரட்டி கல்யாணம் செய்து கொள்கிறான்.

விஜித்துக்கு அப்படி என்ன வன்மம் மான்சி குடும்பத்து மேல?
மான்சிக்கு என்ன பிரச்சனை எதுக்கு அவ மருத்துவ குறிப்புகளை ஆராய்ச்சி பண்றான்?
மான்சியிடம் அப்படி என்ன வீடியோவை காட்டி மிரட்டுகிறான்.? விஜித் கொடுக்கும் குடைச்சல்களையும் மான்சி எப்படி எதிர்கொள்கிறாள் என்று கதை ரொம்ப சுவாரசியமாக கொண்டு போயிருக்காங்க ரைட்டர்..

விஜயாவின் சுயநலத்தால் வெண்பாவின் குடும்பம் அனுபவிக்கும் கொடுமைகள் ரொம்ப அதிகம்..

தாய் மீது இருக்கும் பாசத்தில் விஜித் செய்யும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் உச்சம்.😡😡😡

வெண்பா திலகன் இருவரின் மான்சியின் மீதான பாசம் ரொம்ப நெகிழ வைக்குது. தங்கள் குழந்தையின் குறையை சாபமாக நினைக்காமல் வரமாக நினைத்து அவளின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் பெற்றோர்களின் தியாகமும் உழைப்பும்அருமை.👏👏👏
இப்படி ஒரு இப்படி ஒரு பெற்றோருக்காக தன் காதலையும் விட்டுக் கொடுக்க நினைக்கும் மான்சியின் பாசமும் சூப்பர் 👌👌

வெண்பா ஒவ்வொரு இடத்திலும் மகளுக்கு அரணாகவும் அவளுக்கு தேவையான நேரத்தில் தக்க அறிவுரையும் வழங்குவதும் மான்சிக்கான வெண்பாவின் ஒவ்வொரு செயல்களும் அருமை 👏👏

குழந்தைகளின் பெயர்கள் ரொம்ப அருமையா இருந்தது.

கதை படிக்க சுவாரசியத்தோடு ரொம்ப நல்லா இருந்தது சூப்பர் 👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 
T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஏகலைவனின் ஏந்திழையாள்

ஸ்டோரி ரொம்பவே நன்றாக இருந்துச்சு. விஜித் விஜயா மேல வைச்ச பாசத்துல ஆன்டி ஹீரோ ஆகிட்டான். கொஞ்சம் யோசிச்சு ஆராய்ச்சி செய்து இருந்தால் செம ரொமான்டிக் ஹீரோ ஆகி இருப்பான் 🙈🙈🙈

விஜயாவோட சுயநலத்தால மான்சி குடும்பமே ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சுட்டாங்க 😰😰😰 எனக்கு இந்த விஜயாவை சுத்தமா பிடிக்கவே இல்ல 😡😡😡 சுயநலத்தின் மறு உருவம் தான் இந்த அம்மா 😷😷😷

பாவம் இதுல அதிகமா பாதிக்கப்பட்டது வெண்பாவும் திலகனும் தான் 🥹😚🥹🥹

மான்சி பற்றி நீங்க கொடுத்து இருந்தது எல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு 🥰🥰🥰

வஞ்சம் கலந்த காதல் எங்கேயும் தொய்வு இல்லாமல் அருமையான எழுத்து தங்களுக்கு 😍😍😍

கடைசியில் அவங்க கூட சேர்ந்து நானும் ஹாப்பி அதுவும் புது வரவு வேற லெவல் 👏👏👏🔥🔥🔥

போட்டியில் வெற்றி அடைய வாழ்த்துகள் 🌷🌷🌷
உங்கள் விமர்சனம் ரொம்ப பிடிச்சிருக்கு.
வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.
நானு ஹாப்பி டியர்
 
T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஏகலைவனின் ஏந்திழையாள் எனது பார்வையில். திலகன் வெண்பா தம்பதிகளின் ஒரே மகள் மான்சி ஏந்திழையாள் திரைப்படங்களில் பாடகியாக பிரபலம் ஆகிறாள். இந்தக் குடும்பத்தை பழிவாங்க எல்லா சொத்துக்களையும் மான்சி பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டு மான்சியை அவள் அப்பாவிற்கு பிரச்சினைகள் வராமல் இருக்க வேண்டும் என்றால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மிரட்டி திருமணம் செய்கிறான். திருமணம் முடிந்ததும் மான்சியை பெற்றோரை விட்டுப் பிரிக்கிறான்.
ஏகலைவன் செயல்களுக்கு மான்சியின் எதிர் நடவடிக்கைகள் என்ன என்பதையும் ஏகலைவன் ஏன் அப்படி நடந்துக் கொள்கிறான் என்பதையும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். ஏகலைவன் எதிர்மறை நாயகனாக நாம் வெறுக்கும் கதாபாத்திரம். மான்சி முதலில் காதல் என்று நம்பி அவனை விரும்புவதும் பிறகு அவனது செயல்களை உணர்ந்து மாற்றம் கொள்வதும் நன்று. வெண்பா அம்மாவாக தன் பெண்ணிற்கு தரும் கவனிப்பு யதார்த்தமாக இருக்கிறது. திலகனின் மனைவி மற்றும் மகளுக்காக மாறுவதும் நன்று.
பெயர் சொல்லாமல் எழுதிய போதும் என் கதைக்கு தாங்கள் தரும் விமர்சனத்திற்கு மிக்க நன்றி சித்திரமே.
 
T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஏகலைவனின் ஏந்திழையாள்

விமர்சனம்

பாசம் காதல் கலந்த ஆன்டி ஹீரோ கதை.

திலகன் வெண்பாவின் மகள் மான்சி திரைப்படத் துறையில் பிரபல பாடகியாக இருப்பவள்.

திரைத்துறையின் பிரபலமான மான்சியை வன்மத்தோடு கடத்துகிறார்கள் அவர்களிடம் இருந்து தப்பி வரும் மான்சி கடத்தியவனிடமே காப்பாற்றும் படி கேட்டு அவனின் மீது காதலில் விழுகிறாள்.

பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக விஜித் கடத்திய தன்னிடமே அடைக்கலம் கேட்பவளை வன்முத்தோடு பார்த்து அவள் காதலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவளை தனக்கு கீழ் கொண்டு வர முயற்சிக்க, மாமியின் மருத்துவ அறிக்கை அவன் கைவசம் வருகிறது.அவன் போடும் கட்டுப்பாடுகளிலும் அதிரடி முயற்சிகளிலும் மான்சி அவன் இன்னொரு முகத்தை தெரிந்து கொண்டு அவன் மீது காதல் இருந்தாலும் விலக முயற்சிக்க அவளின் தந்தையின் ஒரு வீடியோவை காரணம் காட்டி மிரட்டி கல்யாணம் செய்து கொள்கிறான்.

விஜித்துக்கு அப்படி என்ன வன்மம் மான்சி குடும்பத்து மேல?
மான்சிக்கு என்ன பிரச்சனை எதுக்கு அவ மருத்துவ குறிப்புகளை ஆராய்ச்சி பண்றான்?
மான்சியிடம் அப்படி என்ன வீடியோவை காட்டி மிரட்டுகிறான்.? விஜித் கொடுக்கும் குடைச்சல்களையும் மான்சி எப்படி எதிர்கொள்கிறாள் என்று கதை ரொம்ப சுவாரசியமாக கொண்டு போயிருக்காங்க ரைட்டர்..

விஜயாவின் சுயநலத்தால் வெண்பாவின் குடும்பம் அனுபவிக்கும் கொடுமைகள் ரொம்ப அதிகம்..

தாய் மீது இருக்கும் பாசத்தில் விஜித் செய்யும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் உச்சம்.😡😡😡

வெண்பா திலகன் இருவரின் மான்சியின் மீதான பாசம் ரொம்ப நெகிழ வைக்குது. தங்கள் குழந்தையின் குறையை சாபமாக நினைக்காமல் வரமாக நினைத்து அவளின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் பெற்றோர்களின் தியாகமும் உழைப்பும்அருமை.👏👏👏
இப்படி ஒரு இப்படி ஒரு பெற்றோருக்காக தன் காதலையும் விட்டுக் கொடுக்க நினைக்கும் மான்சியின் பாசமும் சூப்பர் 👌👌

வெண்பா ஒவ்வொரு இடத்திலும் மகளுக்கு அரணாகவும் அவளுக்கு தேவையான நேரத்தில் தக்க அறிவுரையும் வழங்குவதும் மான்சிக்கான வெண்பாவின் ஒவ்வொரு செயல்களும் அருமை 👏👏

குழந்தைகளின் பெயர்கள் ரொம்ப அருமையா இருந்தது.

கதை படிக்க சுவாரசியத்தோடு ரொம்ப நல்லா இருந்தது சூப்பர் 👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐

தங்கள் விமர்சனம் எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுத்திருக்கின்றது. தொடர்ந்து உங்கள் ஆதரவு எனக்கு வேண்டும் .
வாழ்த்துக்கு நன்றி டியர்
 
Madhusha

Well-known member
Wonderland writer
#ஏகலைவனின்_ஏந்திழையாள்

#Trending_Templates

#Anti_hero

#கதை_விமர்சனம்_1

#மதுஷா_வஞ்சிக்கொடி

PSX_20240819_103238.jpg
தன் பெண்ணே உலகம் என்று வாழ்ந்து வருகின்றனர் திலகன் - வெண்பா தம்பதியினர்.. அவர்களுக்கு ஒரே பெண் மான்சி ஏந்திழையாள்…

இளம் பாடகியாக வலம் வரும் மான்சி ஏந்திழையாள் விருது விழா ஒன்றில் காணாமல் போகிறாள்.. அவளை கடத்தியது யார்? என வலைப் போட்டுத் தேடும் வேளையில் விஜித் ஏகலைவன் அவளை காப்பாற்றி மீட்டுக் கொண்டு வருகிறான்..

தன்னைக் காப்பாற்றிய ஏகலைவன் மீது காதல் கொள்கிறாள் ஏந்திழையாள். விஜித் அவளிடம் தன் காதலை சொல்லுமுன்பே, பெற்றோரிடம் எதையும் மறைக்காத ஏந்திழையாள் தனக்குள் வேரூன்றி முளைத்த காதலை பற்றியும் சொல்லி விடுகிறாள்…

பெற்றோர்களுக்கு பேரதிர்ச்சி தான். இருவருக்குள்ளும் மிகப்பெரிய போராட்டம் ஒன்று நிகழ்கிறது..

போராட்டம் தான்.. தன் பெண் மான்சிக்கு இருக்கும் குறையை உலகிற்கே தெரியாமல் மறைத்து வாழும் அவர்கள் விஜித் ஏகலைவனை சற்றும் நம்ப மறுக்கின்றனர்..

அதற்கும் ஏற்றாற்போன்று விஜித்தின் குணங்கள் இருக்கின்றது.. நிச்சயதார்த்த விழாவில் ஆரம்பித்து கல்யாணம் முடியும் விஜித் ஏகலைவன் அவன் நினைத்ததை மட்டுமே நடத்தி முடிக்கிறான்…

மான்சியை அவளே அறியாமல் அவளின் பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுக்கிறான்…

அவன் மேல் இருக்கும் காதலில் தன் பெற்றோரிடமிருந்து விலகுவதைக்கூட அறியாமல் இருக்கிறாள் மான்சி…

தன் பெண்ணின் மனதுக்குப் பிடித்தவனை கல்யாணம் செய்து கொள்வதற்காக எல்லா விஷயத்திலும் விட்டுக் கொடுத்துச் செல்கின்றனர் திலகன் - வெண்பா தம்பதியினர்..

திருமண வரை மனச்சுணக்கத்தில் இருந்து வரும் திலகன் - வெண்பா தம்பதியினர் விஜித் ஏகலைவனின் தாயை பார்த்து வெகுவாக அதிர்ந்து நிற்கின்றனர்..

ஒரு புறம் அதிர்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் இனி தன் மகளை பற்றிய கவலையில்லை என்ற நிம்மதியுடன் தாங்கள் பலகாலம் வாழ்ந்த மலைப்பகுதிக்கு செல்கின்றனர் திலகன் - வெண்பா தம்பதியினர்..

விஜித்துடன் தன் கல்யாணக் கனவை எண்ணி மனதில் சந்தோஷத்துடன் அடியெடுத்து வைக்கும் மான்சிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியையும், வேதனையையும் மட்டுமே கொடுக்கிறான் விஜித் ஏகலைவன்..

அவளின் குறையை பற்றி அறிந்துக் கொள்ளும் விஜித் ஏகலைவன், அதையே பகடைக்காயாய் எண்ணி அவளை அவமானப்படுத்த எண்ணுகிறான்… அவனின் எண்ணம் நிறைவேறியதா??

தன் தாய் தந்தையை பிரிந்திருந்தாலும் அவர்களின் நினைவில் மான்சி வாழ்வதை நினைக்கும் பொழுதே விஜித்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை…

திட்டம் போட்டு மான்சியின் தந்தை திலகனை ஜெயிலுக்கு அனுப்புகிறான்.. அதுவும் ஒரு பெண்ணை கற்பழிக்கபட்ட குற்றத்தில்.‌‌.. திலகனுக்கு எதிரான அத்தனை ஆதாரங்களையும் மிகவும் ஸ்டாரங்காக வைத்துள்ளான் விஜித்..

தன் தந்தையின் மேலுள்ள பாசத்தில் முக்கிய முடிவு எடுக்கும் மான்சிக்கு காதல் வலியை மட்டுமே கொடுக்கிறது…

விஜித் தன் கர்வத்தில் இருந்து இறங்கி வருவானா? 😡

மான்சி தன் பெற்றோரை காப்பாற்றுவாளா

உலகிற்கே மறைக்கும் மான்சியின் குறை தான் என்ன 🤔🤔🤔🤔

விஜித் ஏன் திலகாவையும் வெண்பாவையும் இப்படி பாடாய்படுத்துகிறான் 🤔🤔🤔🤔

திலகாவும் - வெண்பாவும் விஜித்தின் தாயைப் பார்த்து ஏன் அதிர்ச்சியாகின்றனர் 🤔🤔🤔

இத்தனைக்கு விடை தெரிய வேண்டுமென்றால் கதையை மிஸ் பண்ணாமல் படிக்க ஆரம்பிங்க 🤗🤗🤗😘😘😘

இப்படி பல வினாக்களோடு கதையை மிகவும் சுவாரசியமாக கொண்டு சென்ற ரைட்டருக்கு வாழ்த்துக்கள் 🤝🤝🤝

போட்டியில் வெற்றி பெற மீண்டும் வாழ்த்துக்கள் மா 🤝🤝🤝❤️❤️❤️
 
Top