ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

25. ஏகலைவனின் ஏந்திழையாள்- விமர்சன திரி

pommu

Administrator
Staff member
25. ஏகலைவனின் ஏந்திழையாள்- விமர்சன திரி
 

syedalifathima

New member
ஏகலைவனின் ஏந்திழையாள்

ஸ்டோரி ரொம்பவே நன்றாக இருந்துச்சு. விஜித் விஜயா மேல வைச்ச பாசத்துல ஆன்டி ஹீரோ ஆகிட்டான். கொஞ்சம் யோசிச்சு ஆராய்ச்சி செய்து இருந்தால் செம ரொமான்டிக் ஹீரோ ஆகி இருப்பான் 🙈🙈🙈

விஜயாவோட சுயநலத்தால மான்சி குடும்பமே ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சுட்டாங்க 😰😰😰 எனக்கு இந்த விஜயாவை சுத்தமா பிடிக்கவே இல்ல 😡😡😡 சுயநலத்தின் மறு உருவம் தான் இந்த அம்மா 😷😷😷

பாவம் இதுல அதிகமா பாதிக்கப்பட்டது வெண்பாவும் திலகனும் தான் 🥹😚🥹🥹

மான்சி பற்றி நீங்க கொடுத்து இருந்தது எல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு 🥰🥰🥰

வஞ்சம் கலந்த காதல் எங்கேயும் தொய்வு இல்லாமல் அருமையான எழுத்து தங்களுக்கு 😍😍😍

கடைசியில் அவங்க கூட சேர்ந்து நானும் ஹாப்பி அதுவும் புது வரவு வேற லெவல் 👏👏👏🔥🔥🔥

போட்டியில் வெற்றி அடைய வாழ்த்துகள் 🌷🌷🌷
 
ஏகலைவனின் ஏந்திழையாள் எனது பார்வையில். திலகன் வெண்பா தம்பதிகளின் ஒரே மகள் மான்சி ஏந்திழையாள் திரைப்படங்களில் பாடகியாக பிரபலம் ஆகிறாள். இந்தக் குடும்பத்தை பழிவாங்க எல்லா சொத்துக்களையும் மான்சி பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டு மான்சியை அவள் அப்பாவிற்கு பிரச்சினைகள் வராமல் இருக்க வேண்டும் என்றால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மிரட்டி திருமணம் செய்கிறான். திருமணம் முடிந்ததும் மான்சியை பெற்றோரை விட்டுப் பிரிக்கிறான்.
ஏகலைவன் செயல்களுக்கு மான்சியின் எதிர் நடவடிக்கைகள் என்ன என்பதையும் ஏகலைவன் ஏன் அப்படி நடந்துக் கொள்கிறான் என்பதையும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். ஏகலைவன் எதிர்மறை நாயகனாக நாம் வெறுக்கும் கதாபாத்திரம். மான்சி முதலில் காதல் என்று நம்பி அவனை விரும்புவதும் பிறகு அவனது செயல்களை உணர்ந்து மாற்றம் கொள்வதும் நன்று. வெண்பா அம்மாவாக தன் பெண்ணிற்கு தரும் கவனிப்பு யதார்த்தமாக இருக்கிறது. திலகனின் மனைவி மற்றும் மகளுக்காக மாறுவதும் நன்று.
 
Top