பகுதி -1
சுற்றியும் பாறைகள் நிறைந்த வனகாடு அது.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சூழ்ந்திருந்த மரங்கள் காற்றுக்கு இசைந்தாடி கொண்டிருக்க, அருவியில் இருந்து விழும் நீரின் சத்தமும் பறவைகளின் கூக்குரல்களுக்கு இணங்க இசையை மீட்டி கொண்டிருந்தது..
புதுவிதமான சத்தத்தில் கண்ணை சுருக்கியபடி எழுந்த நிகிலன், தன்மேல் காலை போட்டபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன் ஆரூயிர் நண்பன் நகுலனை ஒரு மிதி மிதித்து விட்டு, "எப்பவும் என் ஆத்தாவோட ரேடியோ சத்தம் தானே ஓடும்.. இது என்ன புதுசத்தமாக இருக்கு.." என்று கண்ணை முழுவதும் விரித்தவனுக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை..
அவன் மிதியில் நகுலனும் கண்ணை தேய்த்தவாறு எழுந்தமர,சுற்றியும் சுழல விட்ட அவனின் கண்களும் அதிர்ச்சியில் விரிய, ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்..
தலையை தட்டி நேற்றிரவு என்ன நடந்தது என்று யோசிக்க முயன்றனர்.. எப்போதும் போன்று நகுலன் குடித்து விட்டு, "மச்சி அவ என்னைய வேணாம்னு சொல்றாடா.." என்று குடிபோதையில் புலம்ப, "டேய் அவ உன்னைய எத்தனை தடவை தான்டா வேணாம்னு சொல்லுவா.. அதுக்குனு தினமும் எதுக்குடா உயிரை வாங்கிட்டு இருக்கே?? என்று நொந்து தான் போனான் நிகிலன்..
"அப்ப அப்ப உனக்கும் நான் வேணாமா?? போங்கடா போங்க என்னோட அருமை எவனுக்குமே தெரில.. நா சாக போறேன்.." என்று எழுந்தவன் மாடியில் இருந்து குதிக்க போக, "அய்யய்யோ இவன் உண்மையாவே குதிக்க போறானோ??" என்று பதறியவாறு நகுலனை கீழே இழுத்தான்..
"மச்சி மச்சி நான் உன் ஆரூயிர் நண்பன்டா.. நீ இப்ப செத்தீனா நான் தான்டா கம்பி எண்ணனும்..இன்னும் நானு கன்னிகழியாம இருக்கேன்டா அப்பறம் அந்த பாவம் உன்னைய சும்மா விடாது.." என்று குழந்தையை கொஞ்சுவதை போல் நிகிலன் கொஞ்ச தொடங்க, நகுலனோ, "எப்படி மச்சி கம்பி எண்ணுவாங்க..??" என்று கேட்டான் அதிமுக்கியமான கேள்வியை..
"ம்ம்ம்க்கும் இந்த பரதேசிக்கு இது மட்டும் தான் கேட்டுருக்கும்.. இவனோட சேர்த்த பாவத்துக்கு இன்னும் அதைய மட்டும் தான் பண்ணல அதையும் எண்ணிருவேன் போல.." என்று நிகிலன் புலம்பினான் மனதினுள்..
"ப்ச் மச்சி சொல்லுடா.. ஒன்னு.. ரெண்டு.. மூணு.. நாலு.. இப்படிதானே எண்ணுவே.." - நகுலன்
"ஆமா ஆமா அப்படிதான் எண்ணனும்.." - நிகிலன்
"அப்ப நீநீநீ நான் எவ்ளோஓஓஓ பீல் பண்ணி பேசறதை கேட்காம எண்ணிட்டு இருப்பீயா?? அப்ப அப்ப என் மேல யாருக்குமே பாசமில்ல.. நான் சாக போறேன்.." - நகுலன்
"அடேய் நீ எம்புட்டு வேணாலும் பேசு ராசா.. நான் அத்தனையும் கேட்கறேன்.." - நிகிலன்
"போ போ உனக்கு தான் என் மேல பாசமே இல்ல.." என்று மீண்டும் நகுலன் குதிக்க போக, "அடேய் வேணாம்டா.." என்று அவனை தடுத்த நிகிலனை இழுத்து அணைத்து கொண்டு, "நீ என் உயிர் நண்பன் தான்டா அப்ப வா நம்ம சேர்ந்தே சாவோம்.." என்றவன் சரிய தொடங்கினான்..
இரவு நடந்தது நியாபகத்திற்கு வந்ததும் நிகிலன், "அடேய் அப்ப என்னைய கொன்னுட்டியாடா??" என்று அதிர்ச்சியில் நகுலனின் மேல் பாய, "எதே?? நம்ம செத்துட்டோமா.." என்று நகுலன் வாயை பிளந்தான்..
"ப்ச் அடிக்காதடா.. அப்ப ரெண்டு பேரும் மாடில இருந்து குதிச்சு செத்துட்டோமா??" - நகுலன்
"கொஞ்சம் திருத்தம் குதிக்க போனது நீயு.. என்னையும் சேர்த்து இழுத்துட்டு குதிச்சுட்டே.." - நிகிலன்
"செத்தா சொர்க்கத்துக்கு தானே போவனும் நம்ம என்ன காட்டுக்குள்ள வந்துருக்கோம்.." - நகுலன்
"ம்ம்ம்க்கும் உனக்கு சொர்க்கத்துக்கு போகனும்னு ஆசை இருக்கோ?? அதைய நீ கனவுல கூட நினைச்சு பார்க்க முடியாதுடா.." - நிகிலன்
"உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்காடா எருமை.. இப்ப எங்க இருக்கோம்னு தெரியாம குழம்பிட்டு இருக்கறப்ப கூட உன் வாய் அடங்காதா??" - நகுலன்
"எங்க இருந்தாலும் எனக்கு என்ன கவலை?? என்கூடயே ஒரு பிரச்சனை ஒட்டிக்கிட்டு திரியறப்ப அதைய விடவா வேற பிரச்சனை வர போகுது.." - நிகிலன்
இதில் ஏகப்போக கடுப்பான நகுலன் பல்லை கடித்தவாறு அவனை முறைத்து விட்டு நகர, "நீ என்னைய விட்டுட்டு போனாலும் நானும் உன் பின்னாடி தான் வருவேன்.." என்றான் நிகிலன்..
திரும்பி அவனை முறைத்து "பாத்ரூம் போறேன் ஏன் நீயும் என் கூட வர்றீயா???" என்று அனல் பார்வையில் நகுலன் கேட்க, "ச்சை ச்சை கருமம் கருமம் நீயே போய் தொலை.." என்றவன் இருந்த இடத்தை சுற்றி சுற்றி பார்த்தான்..
எங்கிருந்தோ பெண்ணின் அழுகுரல் கேட்க, "ஆத்தி என்ன அழுகற சத்தம் எல்லாம் கேட்குது??" என்று பயப்பட தொடங்கிய மனதை கட்டுபடுத்திய நிகிலன், "ச்சே ச்சே இங்க யாரு வந்து அழுக போறா??" என்று தன்னை தானே சமாதான படுத்தி கொண்டான்..
மீண்டும் அதே அழுகுரல் கேட்க, பயத்தில் படபடவென அடித்த மனதும், "ஒரு வேளை பேயா இருக்குமோ?? அப்படிதானே படத்துல எல்லாம் காட்டுவாங்க.. அய்யய்யோ பேயோட காட்டுல வந்து மாட்டிக்கிட்டோமா???" என்று பயந்தவன், "அடேய் மச்சி" என்று நகுலனை தேடி ஓடினான்..
விழுந்தடித்து கொண்டு ஓடி வந்த தன் நண்பனை கண்டு, "டேய் ஏன்டா இப்படி ஓடி வர்றே??" என்று நகுலன் வினவ, "மச்சி பேய்டா இது பேயோட காடு போல.. அப்ப நம்ம ரத்தத்தை உறிஞ்சி குடிக்கதான் நம்மளைய இங்க கொண்டு வந்து போட்டுருக்கோ??" என்று நிகிலன் பயத்தில் படபடவென பேசினான்..
"டேய் லூசு மாதிரி எனத்தடா பேசிட்டு இருக்கே??" - நகுலன்
"நான் பயத்துல பேசறது உனக்கு லூசு மாதிரி இருக்காடா?? அங்க ஒரு பேய் அழுதுட்டு இருக்குடா.. வந்து என்னனு கேளு.. ச்சை வந்து என்னனு பாருடா.." - நிகிலன்
"என்னது பேயா??? இப்பதான் அந்த பேயை விட்டுட்டு கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சா.. நேருலயே ஒரு பேய் வந்துருச்சா???" - நகுலன்
"உனக்கு உன் கவலை.. சீக்கிரம் வாடா அது கோவப்பட்டு எந்திரிச்சு வந்து நம்ம ரத்தத்தை குடிக்கறதுக்குள்ள நம்மளே அதுகிட்ட பிரெண்டாகிருவோம்.." - நிகிலன்
இருவரும் அழுகுரல் கேட்கும் இடத்தை நோக்கி செல்ல, "மச்சி பேயே வந்தாலும் என்னைய விட்டராதடா.. மீ பாவம்.." என்று கெஞ்சியவாறு நிகிலன் மிரண்ட விழிகளுடன் நகுலனின் கையை இறுக்கி பிடித்தவாறு நடந்தான்..
பாறையின் பின்னே சத்தம் கேட்க, மெதுவாக எட்டி பார்த்த இருவரும் திகைப்பில் "அடியேய் நீங்க எதுக்குடி இங்க உக்காந்து அழுதுட்டு இருக்கீங்க??" என்று கத்த, திடீரென்று பின்னால் வந்த சத்தத்தில் அங்கு அமர்ந்திருந்த பெண்கள் இருவரும் மிரண்டு மரத்தோடு ஒட்டி கொண்டனர்..
"அடச்சீ இறக்குங்க நாங்கதான்.." என்று நகுலன் முன்னால் வர அவனின் பின்னே நிகிலனும் வந்தான்.. இவர்களை கண்டதும் விழிகளை பெரியதாக்கிய பெண்கள் இருவரும், "எதுக்குடா எங்களைய கடத்துனீங்க??" என்று அவர்களை கீழே தள்ளி விட்டு மொத்த, "எதே நாங்க கடத்துனோமா??" என்று அதிர்ச்சியில் தங்கள் மேல் அமர்ந்திருந்த இருவரையும் தள்ளி விட்டு எழுந்தமர்ந்தனர்..
"மச்சி அப்ப நம்மளையும் கடத்தி தான் காட்டுக்குள்ள விட்டுருப்பாங்களோ??" - நகுலன்
"அப்படி யாருக்குடா நம்ம மேல இவ்ளோ பகை" - நிகிலன்
"இந்த இடம் எங்க இருக்குனே தெரிலடா.. எப்படி மச்சி வெளில போறது??" - நகுலன்
"இது கூட பரவால்லடா.. இப்பதானே ஒரு பேயை விட்டுட்டு நிம்மதியா இருக்கலாம்னு சொன்னே.. அந்த பேயே உன்னைய தேடி வந்துருக்குனா உன்மேல எம்புட்டு லவ்வுவு இருக்கும் யோசிச்சு பாரேன்.." - நிகிலன்
"அப்படியா மச்சி.. அடியேய் மாமு மேல அம்புட்டு காதலாடி செல்லம்.. இவ்ளோ காதலை வெச்சுக்கிட்டு ஏன்டி என்னைய வேணாம் வேணாம்னு சொல்றே.." - நகுலன்
இதை கேட்டு நகுலனின் புலம்பலுக்கு காரணமான ரித்திகா, "பக்கத்துல பெரிய கல்லும் இருக்கு.. பாறையும் இருக்கு அதுக்கு பக்கத்துல பெரிய அருவியும் இருக்கு.. எப்படி வசதி.." என்று கேட்டாள் முறைப்புடன்..
நிகிலனின் வாய் அமைதியாக இல்லாமல், "ஏன்மா நீ வந்தது தான் வந்தே எதுக்கு இந்த குள்ள கத்திரிக்காயை கூட்டிட்டு வந்தே.." என்று ரித்திகாவின் தோழியான ரியாவை கை காட்டி கேட்க, "ம்ம்ம்ம் வேண்டுதல் அதான்.." என்றாள் பல்லை கடித்தவாறு..
"அய்யோ ராமா எதுக்குடா எங்களைய இங்க கடத்திட்டு வந்தீங்க.." - ரிதி
"எது நாங்க கடத்திட்டு வந்தோமா?? அடியேய் நாங்களே இங்க எப்படி வந்தோம்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கோம்.. இதுல நீ வேற.." - நகுலன்
"விளையாடாத நகுல்.. இதுனால பெரிய பிரச்சனையே வரும்" - ரிதி
"அய்யோ தங்கச்சி நான் கும்பிடற கருப்பணசாமி மேல சத்தியமா சொல்றேன் இங்க எப்படி வந்தோம்னு தெரியாம தான் குழம்பிட்டு இருக்கோம்.." - நிகிலன்
"முதல்ல இது என்ன இடம்னு தெரியுமா??" - ரிதி
"பார்த்தா தெரில சுத்தியும் மரமா இருக்கே இது காடுனு.." - நகுலன்
"அய்யய்யோ அப்ப சிங்கம், புலி எல்லாம் இங்கதானே இருக்கும்.." - ரியா
"ம்ம்ம்ம் ஆமா.. அதுக்கு பசிச்சா உன்னைய இரையா தூக்கி குடுத்துட்டு நாங்க தப்பிச்சிருவோம்.." - நிகிலன்
"ஜோக்ஸ் அப்பார்ட் நிகிலன் முதல்ல இங்க இருந்து எப்படி தப்பிக்கறதுனு யோசிங்க.." - ரிதி
"மேடம் சொல்லிட்டா கேட்டு தானே ஆகனும்.. யோசிப்போம் யோசிப்போம்.." - நிகிலன்
நால்வரும் யோசனையில் அமர்ந்திருந்த நேரத்தில் சரசரவென ஏதோ ஒரு சத்தம் காடு முழுவதும் எதிரொலிக்க, திடீரென்று கேட்ட சத்தத்தில் நால்வருக்கும் அந்த குளுமையிலும் வியர்த்து கொட்டியது..
"உண்மையாவே இது பேய் காடா தான் இருக்குமோ??" - நிகிலன்
"உன் வாய்ல நல்ல வார்த்தையே வராதடா எருமை.." - நகுலன்
"என்னது பேய் காடா??" என்று ரியா அழுக தொடங்க, "அடச்சீ வாயை மூடு இல்ல அந்த பேயுக்கு உன்னைய தூக்கி குடுத்துட்டு நாங்க தப்பிச்சுருவோம்.." என்று நகுலன் அதட்டியதும் கப்பென்று வாயை மூடி கொண்டாள் ரியா..
சட்டென்று அந்த சத்தம் நின்று விட, நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு மூச்சை வெளிவிடும் நேரத்தில் அவர்களின் பின்னால் பலத்த ஒளியில் அந்த சத்தம் கேட்க, "அம்மாஆஆஆஆஆ" என்று அவர்கள் கத்திய கத்தலில் காடே அதிர்ந்தது..
தாகம் தீரும்..