Thank u maவணக்கம் சகோதரிகளே ..
#பவாவிமர்சனம்
#காந்தாரிசபதம்
#விருட்சம்15
மனதால் காதல் கொண்டு வல்லின செய்கை உடலால்
மணம் புரிந்த நிலையில்..
காதலை தக்க வைக்க இதுவும் சதியோ இல்லை விதியோ..
சிறுவயது பாசம் பசுமரத்தாணி வகையில்
காதலாய் உருகொண்டு காய்ந்திட
வடு களையுமா.. நிலைமாறுமா இங்கே..
காந்தாரி சபதம் கண் திறந்த சாபமோ இல்லை
கண்கட்டு வித்தையோ..
நவிலன் தியாகராயர்: அருமையான பெயர். ஆனாலும் அந்த அருமை பெயரில் காணோம் .
வேறோருவன் மனைவியாக போகிறவளை சிலபல சதிசெய்து மணந்து இவள் என்னவள் எனும் போது இவனின் இறுமாப்பு அசத்தல் உச்சமே,❤❤
மனைவியானவளிடம் இவன் காட்டும் உரிமைபாசம் அத்துமீறல்.
அந்த அத்து மீறலே இவன் வாழ்வில் வினையாகி போக அந்தோ பரிதாபம் இவன் பால் எனக்கு.
திடீர் திடீர் என இவன் மாறும் செயல்களால் குழம்பி போவது நாமாகினும். இவனின் சுயம் கண்ட பின்னே ஏனோ வலி எனக்கு இவனிடம் .நல்லவன் மாறிட பாசமே வேஷமாக களைத்த சாபமோ என நினைக்கத் தோன்றியது .
இவனின் சிறுவயது நிலையின் போது கண்ணீரே எனக்கு .
காந்தருவி: சிறுபெண் அமைதி அழகு என மணமாலை சூடி மணவரை வர. ராசி இல்லாதவள் என முத்திரையோடு. மீண்டும் ஒரு மலர்மாலை இவளின் கழுத்தில். அது சுருக்கா..!?? சுகமா..!!? என
இவளின் வாழ்வை கேள்வி குறியோடு நிதர்சனப்படுத்துவது வலியே.
கண்ணை கட்டி கணவனோடு வாழ்ந்த காந்தாரி பெண்ணுக்கும் இவளுக்கும் சிறு ஒற்றுமை. அங்கே காதலால் கண்ணை கட்டினாள் .இங்கே கண் இருந்தும் பயாமே மட்டுமே நிலையாக இருக்கிறது .
தன் கணவனை புரிந்து கொள்ள முடியாது தவிக்கும் போது வலியே. ஆயினும் இதான் வாழ்க்கை என மருகி வெளியேறிய போது இவளின் வாழ்வையே புரட்டி போட்ட பல பரிதாப நிலைகள் ஹப்பா..
இந்த சிறுபெண்ணுக்குள் இவ்வளவு போராட்டமா என வியக்கத்தோன்றியது.
காதலிருந்தும் மாயநிலை தொடரும் பாவமான தம்பதிகள் இவர்களே.
சத்ருகன்: நட்பு நிலைகளின் கர்ணன் . காதலுக்கு நம்பிக்கை நாணயன் .நேர்மையின் உச்சம் இவனே.இவனின் செயல்களில் பெருமிதம் கொண்டேன்.
திவ்யபாரதி : பாரதி யே தான் புரட்சி பெண் .துணிச்சலின் மறுவுருவம். அதே மாதிரி மணவாழ்விலும் புரட்சி பண்ணியது அசத்தலே.
குணவாளன்: முதலில் பிடித்தாளும். என்ன மனிதர் இவர் என கோபமே வந்தது. இவரை புரிந்து வைத்த ஒரே உயிர் திவி மட்டுமே.
அகர்ணன் மற்றும் அபூர்வன் ஏதோ நினைக்க ஏதோ நிலைத்த நிலை.
ஆசிரிய தோழியே. ஒரு மாறுபட்ட கதையை தந்ததிற்கு சபாஷ்.
நெஞ்சை தொட்ட பல நிகழ்வுகள் வலியாகவும், காதலாகவும், உணர்வு சூழ் நிலையாகவும் இருந்தது.
ருகன் திவி திருமண மேடையில் பேசும் நிகழ்வுகள் மனதை தொட்டு சென்றது. அதே போல் நவியின் சிறுபாராய நிகழ்வுகள் எல்லாம் வலிநிறைந்த செயலே.❤
பிறக்கும் பிள்ளைகள் யாரும் தீயவர்களே அல்ல. அதை வளர்க்கும் நம்மிடமும், நமை சூழ்ந்த சுற்றாடலில் தான் உண்டு என்பதை அழகாக நாயகனின் பாத்திரத்தில் புகுத்தி சென்றது அருமைமா.
ஒரு வசனம் மனதை தொட்டு சென்றது என்றால் மிகையில்லை
"எனக்கு ஏன் குடும்பம் இல்லை இருந்திருந்தால் அரவனைக்க கற்றிருப்பேனோ, ; என்பதும் , காந்துவிடம் நவி மனதோடு பேசும் காட்சிகளும் மனதை அள்ளி சென்றதுமா.
கண்டதும் காதல் இல்லை நம்பிக்கை ஒன்றிலே காதல் என்பதை அங்கேயும், மனதோட பதிந்த காதலும் அதை காட்டத்தெரியாது அதிரடியிலும் சதியிலேயும் காதலை இருவேறு நிலையில் காட்டியிருப்பது பாராட்டக் கூடியது அருமை.
காந்தாரி கண்கட்டி வாழ்ந்தால் அது காதல் கொண்டு. இவளோ தன் ராசியில்லா நிலையை போக்கிவன் என்பதாலோ தன் கண்ணிருந்தும் உறவுகளை அவனுக்காக தூரமாக்கி வாழ்ந்தாள் என்பதே சிறப்பு நிலை.
காந்தாரி சபதம் என்பது கதைக்கு பொருத்தம் .அன்றும் பிள்ளைகளுக்காக போர். இன்றும் பிள்ளைக்காக சபதம்.
காந்தாரி சபதம் அன்று திருதராஷ்டினனின் கையில் சதிவலையில்
பல சதிகளை புரிந்தது என்றால்.இந்த காந்தாரியின் நவியின் கையில் பல சதிகளை கொண்டு சிதைத்தது என்றே கூறலாம்.
அன்றும் அண்ணன் சகுனியாக காந்தாரிக்கு இன்றும் அண்ணன் சகுனியா இங்கே மாறியது சூதே.
வாழ்த்துக்கள் மா.
போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.