Thank youகாந்தாரி சபதம், மிக ,மிக அருமையான கதை , வாழ்த்துக்கள்
Thank youகாந்தாரி சபதம், மிக ,மிக அருமையான கதை , வாழ்த்துக்கள்
Thank you#பொம்முநாவல்ஸ்குறுநாவல்போட்டி
#T22விதையில்இருந்துவிருட்சம்வரை
#காந்தாரிசபதம் #antihero_story
#கதைஇல15
#ஷாயினிகதைவிமர்சனம் 14
இன்றைய சமூகத்தில் இருக்கும் பல
பெண்களின் பிரதிபலிப்பாக, நமது மனக் கண்முன்னே காட்சிபடுத்தபடும் பெண்ணவள் தான் இக் கதை நாயகி #காந்தர்வி அந்த ஒருவனுக்கு மட்டும் #காந்தாரி . அந்த ஒருவனே கதையில் எதிர்மறை நாயகனான விளங்கும் #நவிலன் தியாகராயன்..
எதிர்மறை நாயகனான நவிலனை
மையப்படுத்திய கதையாக இந்த கதையை #antihero_story என்று நாம் சொல்லிக் கொண்டாலும் கூட இது முற்றிலும் காந்தர்வ இலக்கணமாய் மென்மை , அழகின் அடையாளமாய் இருக்கும் பெண்ணவள் , அவளின் சபதத்திற்கு காரணம் எது? எதனால்? யார் மீது? என்பவற்றை தெளிவாக, அருமையான வாசகர்களை கவரும் எழுத்து நடையில் நடையில் , மிகவும் அழுத்தமானதும் சில இடங்களில் மென்மையானதுமாக உயிரோட்ட கதை களம் விருட்சம் காந்தாரி கை வவண்ணத்தில் இக் #காந்தாரிசபதம் அருமையாக படைக்கபட்டுள்ளது .
முதலில், போட்டிக் கதையில் எந்தவித தயக்கமில்லாது இவ்வாறான கதைக் களத்தில் கதையில் எந்தவிதமான தொய்வுமின்றி எழுதி வெற்றிகரமாக
நிறைவு செய்ததற்கு பாராட்டுக்கள்.
இனி காந்தாரியின் சபதம் கதையை பற்றி,
பூவிலும் மென்மையான பெண்ணான
#காந்தாரி தனது திருமண வாழ்க்கை பற்றிய கனவுகளுடன், ஆபூர்வனுடன்
திருமணத்தில் இணைய காத்திருக்க,
மணமகனோ, தாலி கட்டும் நேரத்தில்
மூர்ச்சையற்று விழ, அதை காரணம்
காட்டி அபலை பெண்ணவளுக்கு
ராசி கெட்டவள், அதிஷ்டம் இல்லாத
பேதை , கொலைகாரி என்ற இலவச
பட்டங்கள் காரணமின்றி சுமக்கப்பட,
தன்னை சுற்றி நடக்கும் சதி வேலை,
குடும்பத்தினரின் வசவுகளுக்கு துளி
காரணமும் தெரியாது தவிப்பவள், தன்னை மீட்டெடுக்க வந்த ரட்சிப்பான் ஆபாந்தவனாக #நவிலனை எண்ணி
பெற்றோர் விருப்பத்துடன் திருமண
பந்தத்தில் இணைகிறாள். முன்னைய
நாள்வரை உலகில் தான் ஒருத்திக்கு
அதிஷ்டமான வாழ்க்கை அருமையில் அருமையான குடும்பம் என்ற பூரிப்பு கலந்த இறுமாப்பில் சுற்றி வந்த இவ் அபலை பெண்ணவள், கண்கண்ட கணவன் என்று என்னுபவன் மற்றும் சுற்றியுள்ளோர் சுயரூபம் தெரியும்
போது பெண்ணவள் நிலை?
அக் குடும்பத்தில், கார்தர்வி அன்பின் இலக்கணமாய் தப்பி பிறந்த ஒருத்தி இவளின் சகோதரி #திவ்யபாரதி
மட்டுமே! அவளும் இல்லையெனில்
பெண்ணவளின் கதி!
நட்புக்கு இலக்கணமாய் #சத்ருகன்
இக் கதையில் என்னை மிகவும் தன்
குணத்தில் இரண்டென கட்டிப்போட்ட கதாபாத்திரம்.!
வெளிவேஷத்தில் ஆபத்தனவனாக
சொல்லப்படும் இவனின் உள்ளமோ
விலை மதிப்பற்றது!
வெளி உலகில் இவர்கள் தான் நல்ல
பண்பானவர்கள் என்று எண்ணும்
அளவிற்கு இருப்பவர்கள் #ஆபூர்வன்
#அகர்ணன் #குணவாளன் ஆனால்
இவர்களை பற்றிய நிஜமோ?
வினை விதைத்தவன் வினை அறுக்க
வேண்டும் என்பது எத்தனை காலம்
சென்றாலும் நடக்கும் என்பது உறுதி! நாம் செய்யும் வினைகள் எல்லாம்
நன்மையாகவோ! , தீமையாகவோ !
இறுதியில் எம்மையே சேரும் என்ற
உண்மையை இக் கதை தெளிவாக
சுட்டிக் காட்டிவிட்டது!.
ஒரு கதை வாசகர்களை கட்டிப்போட
காதல் ரொமான்ஸ் காட்சிகள் எதுவும்
தேவையில்லை! நம்மை சுற்றி கதை
களமே போதும் என்றதை இக்கதை மூலம் நிரூபித்த #விருட்சம்காந்திரி கதையாசியர்க்கு மனம் நிறைந்த நிறைந்த பாராட்டுக்கள்..
T22 குறுநாவல் போட்டி கதைகளில், என்னை தனிப்பட்ட ரீதியில் கவர்ந்த கதை! இன்னும் கதை பற்றி சொல்லி சுவாரஸ்யம் கெட்டு விட கூடாது என்ற பயத்தில்வாசகர்களுக்கு சிறந்த கதை சேர வேண்டும் என்ற அவாவில்
இதோ! #காந்தாரிசபதம் கதை திரி
காந்தாரி சபதம் - கதைத் திரி
காந்தாரி சபதம் கதையின் அத்தியாயங்கள் இவ்விடம் பகிர்ந்துக் கொள்ளப்படும்www.pommutamilnovels.com
கதை பற்றிய கருத்துக்கள் பகிர
View attachment 1517காந்தாரி சபதம் - கருத்து திரி
Very nice story. Sad for both of them. Ending is very good. Thank u so muchwww.pommutamilnovels.com
Thank you#கௌரிவிமர்சனம்
#videoediting
#காந்தாரிசபதம்
இதுவும் ஆன்டி ஹீரோ கதை தான்,ஆன பக்கா ஆன்டி ஹீரோ
காந்தர்வி - இந்த பேரு ரொம்ப நல்ல இருக்கு
ரொம்ப மென்மையான குணம் கொண்ட பெண்
மண மேடை வரை வந்த கல்யாணம் நின்னு போக, அங்க ஆரமிக்குது அவள் சோதனை காலம்
இதை தொடர்ந்து ஊர் தப்பா பேச, மறுபடியும் அவசர கல்யாணம்….
அதுவும் வில்லத்தனம் மொத்தமா குத்தகைக்கு எடுத்த நவிலன் கூட……
முன்னாடி கல்யாணம் நின்னது கூட தலைவர் கைய்கரியம் தான்
கல்யாணத்துக்கு முன்னாடியே அவன் பண்றது எல்லாம் பதரா வைக்குது
கல்யாணத்துக்கு அப்பறம்
காந்து ரொம்ப பாவம், கணவன் தான் அப்படினா அவள் குடும்பம்
கடைசி வரை போராட்டம் தான் அவளுக்கு
அதுவும் குட்டியா இருப்பா, நிறையா முடி இருக்கும்னு தேடும் போது…..
அவளுக்கு நீங்க நியாயம் செய்யவே இல்ல ஜீ
நவிலன் - எல்லா ஆன்டி ஹீரோ போலவும் ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கு இவன் ஏன் இப்படி செய்யரான் அப்படிக்கரதுக்கு
பாவம் தான் இவன் கடந்த காலம் எல்லாம், ஆன அதுக்குனு மனைவியா இருந்தா கூட அவளை என்ன எல்லாம் செய்து வெச்சி இருக்கான் பக்கி பய
என்ன காரணங்கள் சொன்னாலும் காந்து விசயத்தில் இவன் நடந்துகிட்டது
சரவண தியாகராஜன் - நவி அப்பா, இவர் கொஞ்சம் அவனை பார்த்து வளர்த்து இருக்கலாம், இவர் மனைவி பண்ணினா அதே தப்பை தான் இவரும் பண்ணி இருக்கார்
குணவாளன் - பேருல மட்டும் தான் குணம் இருக்கு, மத்த படி நோ கமென்ட்ஸ்
காந்து அப்பா - இவர் அதுக்கும் மேல, ஒன்னும் சொல்றதுக்கு இல்ல…..அண்ணன் பேச்சை கேட்கலாம் அதுக்குனு
ருகன் - இப்படி ஒரே கேட்ட பயபுள்ளைகளுக்கு நடுவில் நல்லவனா இருக்கான்
உயிர் நண்பன் கெட்டவனா இருந்தாலும் அவனை மனைவி கிட்ட கூட விட்டு கொடுக்கல
அதே போல மனைவியையும்
நல்ல நண்பன், ரொம்ப நல்ல காதலன் & ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல கணவன்
திவி - சுயமா யோசிச்சி பேசற பொண்ணு அந்த குடும்பத்திலே, கோவபடற இடத்தில் கோபப்பட்டு, பேச வேண்டிய இடத்தில் பேசி எல்லாமே சூப்பர்
ருகன் மேல இருக்கும் காதல் ரொம்ப கியூட்
அகர்ணன் & அபூ
கோதை - நல்ல மனைவியாகவும் இல்ல அது கூட ஓகேனு விட்டரலாம் ஆன அம்மாவாவும் இல்ல…….
காந்துக்கு இன்னும் நியாயம் செய்து இருக்கலாம்னு தோணுச்சு
அவனை விட்டு பிரிந்து வந்தும் அவள் கண்டது எல்லாம் துரோகம் தான் அதனால எவளோ வலிகள் அவளுக்கு
ரொம்ப நல்ல அம்மாவா இருக்கற காந்துக்கு இவளோ சோகம் வாழ்க்கையில் , இவளுக்கும் தான் அவள் கனவுகள் எல்லாம் கலைந்து போச்சி கல்யாணத்துக்கு அப்பறம் இவ என்ன கோதை மாதிரியா நடந்துகிட்ட இல்ல தானே……
இந்த கதையில் தப்பே செய்யாமல் தண்டனை மட்டுமே வாழ்க்கையா அமைந்தது காந்துக்கு மட்டும் தான்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ
Thank u#காந்தாரி_சபதம்
காந்தர்வி - நவீன காந்தாரி துன்பத்தில் இருந்தும் மீட்கும் ரட்சகனாய் தெரிந்தவன் ராட்சசனாய் மாறும் போது பூவும் புயலாகும்...!! புயல் அவனை சேதப்படுத்துமா....?? இல்லை நீர் தெளித்த பால் போல அடங்குமா...???
நவிலன் பெண்கள் அடிமை அல்ல என்றில்லாது அது இயல்பு என்பது போன்ற சூழலில் வளரும், வளர்க்கப்படும் ஆண்களின் பிரதிபலிப்பு... தாயின் செயலால் கூடவே சேரும் முரட்டுத்தனம் அவளை ரொம்பவே படுத்தி எடுக்கிறான் தவறு என்ன என்றே தெரியாது இருப்பவன் தவறை உணர்வானா....? உணர்த்துவாளா....?? அவன் தாயின் செயல் என்ன எல்லாம் கதையில்....
காந்தர்வி - நவிலனுக்கு மட்டும் காந்தாரி.... இந்த பெயர் காரணம் எதிர்பார்க்கல
பச்சை களிமண்ணாக கையில் கிடைத்தவளை உண்மைகளை சொல்லி, அவன் நிலை புரிய வைத்து இருந்தான் என்றால் அவன் மீது கொண்ட நேசத்துக்கு அவனுக்கு ஈஸியாக வசப்பட்டு வசந்தமாகி இருக்கும் வாழ்வு
மொத்தமா எல்லாத்தையும் அவனின் செயலால், நியாயத்தால் ஊத்தி மூடிட்டான்
பாசமாய் வளர்க்கப்பட்ட பெண், தாங்கவியலா துன்பங்களை சரிபாதியிடம் அனுபவிக்க, தாங்க வேண்டிய தாய் வீடோ வேறு முகம் காட்டுவதன் பின்னணியும் எதிர்ப்பார்க்கல
பாவம் காந்து எதிலுமே அவளுக்கு ஒரு நிம்மதி இல்ல... அவனின் பிடிவாதத்தையே உடைக்க வைக்கும் கண்ணீர் அப்போ தான் அவன் தீவிரம் புரிஞ்சுது...
குழந்தையை தேடும் போது
அவன் உணரும் இடங்கள் வலித்து தான் வாழ வழி கிடைக்கும் என்றால் வலிக்கட்டும்
குணவாளன் பெயரில் மட்டும் தான் குணம் இருக்கு... மனுஷனா யா நீர்
கோதை ஆயிரம் காரணம் சொன்னாலும் இவர் செய்தது தப்பு... சரவணனுக்கு இவர் செய்ததும் துரோகம் தான்... அவனுக்கு செய்ததும் துரோகம் தான்... ஏன்னா தப்பு இவர்கிட்ட இருந்து தான் ஆரம்பம்
நவநீதன் கொஞ்சமாவது பேசணும்... அண்ணன் சொல்லுறது எல்லாம் கேட்கணும் என்று அவசியம் இல்ல...
சத்ருகன் இவன் மீதான நட்பு எனக்கு பிடிச்சது ருகனும் நட்பிற்கு கொடுக்கும் அன்பில் அக்கறையில் உயர்ந்து தான் இருக்கான்... இவனின் காதலும் நட்பை போல அழகு... அவளுக்காக வர நினைக்கும் அவன் காதல்
திவ்யா பாரதி புதுமை பெண் தான்... தந்தையே எதிர்த்து நிற்கும் போதும், தங்கைக்காக செய்ய நினைக்கும் ஒவ்வொன்றும், காதலும், கடைசியில் அவளின் இளக்கமும் nice
அகர்னன் அண்ட் அபூ எதிர்பார்க்கல அவங்களோட மாற்றம் என்னவோ மாதிரி இருந்தது....
நவி அப்பா என்ன சொல்ல தெரியலை... ஆனால் பிடிக்கவே இல்லனு சொல்ல முடியாது...
கலா இவங்க மாதிரி தான் நிறைய பேர்... பேச வார்த்தை இருந்தும், வாய் இருந்தும் முடியாது பாவம்...
பார்வதி & ஃபேமிலி பிடிச்ச characters
யாரோ ஒருவரின் செயல் சம்பந்தம் இல்லாத ஒருத்தரை எந்த அளவு பாதிக்குது அதன் பின்னும் தொடரும் வேதனைகள் எல்லாம் காந்து மூலம் ...
வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர்
Thank you#Uma_View
#T22பொம்முநாவல்ஸ்குறுநாவல்
போட்டி
#விதையில்இருந்துவிருட்சம்வரை
காந்தாரி சபதம்
ஆன்டி ஹீரோ கதை
முதலில் இதை சொல்லணும் கதை பேரு சூப்பரா செலக்ட் பண்ணி இருக்கீங்க ரொம்ப பவர் ஃபுல் நேம் .
அடுத்து கதையா நகர்த்தி கொண்டு போற கதாபாத்திரம் எல்லாம் அருமையா வடிவமைத்து இருந்தீங்க.
காந்தாரி
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணவள். மலரினும் மெல்லிய மனம் கொண்டவள். இவளுக்கு தான் எத்தனை எத்தனை துன்பங்கள் .
கல்யாண கனவுகள் கானல் நீராக மாறும் போதும் சரி.
ராசி கெட்டவள், அதிர்ஷ்டம் இல்லாதவள் என ஊரார் தூற்றும் போதும் சரி.
தன்னால் தான் அனைத்து பிரச்சனையும் தன்னை சார்ந்த அனைவரும் தன்னால் தான் துன்பம் நேருகிறது என கலங்கி தவிக்கும் போதும் சரி.
குடும்ப நிம்மதிகாகவும் எதிர்பார்ப்பு தாங்க தந்தை முகத்துகாகவும் மறுபடியும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லும் போது சரி.
உறவினர்கள் மகிழ்ச்சிய மனதில் நிறுத்தி மண மேடையில் தன் மன கலக்கத்தை விரட்டும் போதும் சரி
இப்படி காந்தாரி உடைய நிலைமைய படிக்கும் போது ஒரு பொண்ணா ரொம்பவே பாவமா இருந்துச்சு.
அதே சமயம் எதார்த்தமான பொண்ணா கண்ணுக்கு தெரிஞ்சா.
அதுக்கு பிறகாவது இவளுக்கு நிம்மதி கிட்டியதா இல்லை இது வரைக்கும் நீ
அனுபவித்தது எல்லாம் ஒன்றுமே இல்லைங்கிற மாதிரி
அந்த இருபத்தியோரு வயசு இளம்மொட்டு முட்கள் நிரம்பிய அவளவனின் கைகளாலேயே வதைபடுவது எல்லாம் ரொம்பவே கொடுமையான விஷயம்.
ஒவ்வரு முறையும் இந்த மெல்லியவள்
அந்த அரக்கனின் கரங்களில் கசங்கும் காட்சிகள் எல்லாம் ரொம்பவே அழுத்தமா கணமா இருந்தது .
கடும் பாலைவனத்தின் நடுவே தண்ணீர்க்கு தவிப்பவனின் கைகளில் கிடைக்கும் நீரை போல தான் இக் கதையில் சத்ருகன் வருகையும்.
காந்தாரியின் நிலை கண்டு கலங்கும் வேளையில், நவிலனின் செயல் கண்டு கொதிக்கும் நேரத்தில் நம் இதழ் ஓரம் புன்னகையில் வளைய காரணமாய் இருப்பவன் இந்த ருகன்.
இவளவனின் ரௌடி சாராய் இவன்
இவனவளின் ராணி மங்கமாவாய் இவள்
சத்ருகன் திவ்யபாரதி இவங்க காதலை பற்றி என்ன சொல்ல அழகை பார்த்து இன கவர்ச்சியில் வந்ததது அல்ல இவர்கள் காதல். இது பக்குவப்பட்ட காதல்.
இரு மனங்கள் இணையும் திருமண வாழ்வு கடைசி நொடி வரை உயிர்ப்புடன் இருக்க நேசம் மட்டும் அல்ல நம்பிக்கையும் அவசியம் தான்.
அந்த நம்பிக்கையை அவளவனின் மேல் மிச்ச மீதி இல்லாமல் முழுவதுமாக வைத்தவள் தான் இந்த திவி.
தன்னவள் தன் மேல் வைத்த நம்பிக்கையில் மொத்தமாக தொலைந்து விழியோரம் ஒரு துளி கண்ணீர் உதிர்த்தவன் தான் இந்த ருகன் .
திவ்ய பாரதி கிட்ட ரொம்ப பிடிச்ச விசயம் இவள் தன் தங்கைகாக ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை போராடினாள். தனக்கு என்ன இன்னல்கள் வந்த போதும் அதை மாற்றி கொள்ளவும் இல்லை குறைத்து கொள்ளவும் இல்லை.
நவிலன்
காந்தாரி - நவிலன் திருமணத்துக்கு முன்பு காந்தாரி மீதான நவிலன் ஈர்ப்பை பார்க்கும் போது இவன் சரி இல்லை ரொம்ப பயங்கரமானவன் என்ற உணர்வை குடுதீங்க. அது சரி தான் என்பது போல தான் அடுத்த அடுத்த அவன் நடவடிக்கை இருந்தது
எனக்கு ஒண்ணே ஒண்ணு தான் இந்த கதைல வேற மாதிரி கொண்டு போய் இருக்கலாம் தோணுச்சு.
அது நவிலன் கடந்த காலம்.
பெற்றோர்கள் அரவணைப்பு இல்லாமல் வளர்வது.
ஆணாதிக்க சூழலில் இருப்பது.
கடைசியாக தனக்கு அன்பு காட்டிய உறவை குடும்பத்தை இழப்பது.
இது தான் நவிலன் அரக்க குணதுக்கு காரணம். எல்லாம் சரியான காரணங்கள் தான் ஏற்று கொள்ள வேண்டிய விசயம் தான். ஆனால் அதில் ஒரு அழுத்தம் இல்லை காட்சி அமைப்பில் அந்த கணம் இல்லை.
சிறு வயசு நவிலனின் மன நிலை இன்னும் கொஞ்சம் தெளிவா அழுத்தமா பதிவு பண்ணி இருக்கலாம்.
கதை முழுக்க இவனின் குணத்தால் காந்தாரி பாத்திக்க பட்டு இருக்கா. அதுகான பின்னணியை இன்னும் கொஞ்சம் வலுவா சொல்லி இருக்கலாம்.
இதை ஏன் இவ்ளோ சொல்கிறேன் என்றால் கதை A to Z மொத்தமாவே பிடிச்சு இருக்கு கதையின் மற்ற பகுதிகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இது சாதாரணமா சொல்லிய ஃபீல்.
அது மட்டுமில்லாமல்
தன் நெஞ்சோடு தஞ்சமானவளின் தவிப்பை போக்க வழி அறியாது
' எனக்கு ஏன் குடும்பம் இல்லை இருந்திருந்தால் அரவணைக்க கற்றிருப்பேனோ என்ற அவன் கலக்கம்
எனக்கு ரொம்பவே பிடிச்சா வரிகள் ரசிச்ச வரிகளும் கூட
அவ குட்டியா இருப்பா அடர்த்தியா முடி இருக்கும். என் குழந்தைய யாராவது பார்த்தீங்களா என்ற அந்த தாயின் துடிப்பு
அதே போல
நோய்வாய்பட்ட கணவனை கூடையில் சுமந்து சென்றவள் அக்கால நளாயினி என்றால் தன்னவன் தனக்கு தந்த ரணங்களையும், காயங்களையும், வலிகளையும் தன் உடம்பிலும் மனதிலும் சுமந்த காந்தாரி இக்கால நளாயினியே.
தன் கணவன் காணாத உலகை தான் மட்டும் காண்பதா. என்னவனுக்கு இல்லாத பார்வை தனக்கு மட்டுமா என்று அதை துறந்து தன்னவன் உடனான உலகுக்குள் அடி எடுத்து வைத்தவள் அக்கால காந்தாரி என்றால்.
மனதில் ஆயிரம் கவலை, பயம், குழப்பம், இருந்தும் உறவினர் நலனுக்காக அவர்களே துறந்து தனக்கு வந்த அவ சொல்லை நீக்கியவன் என்ற ஒன்றில் மணம் கனிந்து அவளவனின் கரம் பற்றியவள் நவீன கந்தாரியே.
என்ன தான் தன் கணவன் தனக்கு துரோகம் இழைத்திருந்தாகும் கையில் சிலம்பு ஏந்தி கண்ணில் கனல் ஏந்தி அவன் சாவுக்கு நீதி கேட்டு மதுரையை எரித்தவள் அக்கால கண்ணகி என்றால்
தன்னவன் தனக்கு தந்த எல்லையில்லா வலிகள் , ரணங்கள் இழைத்த கொடுமைகள் எல்லாவற்றையும் தான் பெற்ற இரு முத்துக்களின் மகிழ்ச்சிகாக எரித்து தன்னவன் உடனான வாழ்கையோடு தன் வாழ்வை இனைத்த
காந்தாரி ஒரு நவீன கண்ணகியே
ஆக மொத்தத்தில் காந்தாரி சபதம் என்றால் மனதுக்கு வருவது
காந்தாரியின் கண்ணீரும், காயங்களும்
ருகனின் காதலும் தான்.
இக்கதைக்கு உயிர் குடுத்தவை
அவற்றை அவ்ளோ அழகா செதுக்கி இருக்கீங்க.
போட்டியில் வெற்றி பெற் வாழ்த்துகள் காந்து பாப்பா