#கௌரிவிமர்சனம்
#videoediting
#காந்தாரிசபதம்
இதுவும் ஆன்டி ஹீரோ கதை தான்,ஆன பக்கா ஆன்டி ஹீரோ
காந்தர்வி - இந்த பேரு ரொம்ப நல்ல இருக்கு
ரொம்ப மென்மையான குணம் கொண்ட பெண்
மண மேடை வரை வந்த கல்யாணம் நின்னு போக, அங்க ஆரமிக்குது அவள் சோதனை காலம்
இதை தொடர்ந்து ஊர் தப்பா பேச, மறுபடியும் அவசர கல்யாணம்
….
அதுவும் வில்லத்தனம் மொத்தமா குத்தகைக்கு எடுத்த நவிலன் கூட……
முன்னாடி கல்யாணம் நின்னது கூட தலைவர் கைய்கரியம் தான்
கல்யாணத்துக்கு முன்னாடியே அவன் பண்றது எல்லாம் பதரா வைக்குது
கல்யாணத்துக்கு அப்பறம்
காந்து ரொம்ப பாவம், கணவன் தான் அப்படினா அவள் குடும்பம்
கடைசி வரை போராட்டம் தான் அவளுக்கு
அதுவும் குட்டியா இருப்பா, நிறையா முடி இருக்கும்னு தேடும் போது
…..
அவளுக்கு நீங்க நியாயம் செய்யவே இல்ல ஜீ
நவிலன் - எல்லா ஆன்டி ஹீரோ போலவும் ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கு இவன் ஏன் இப்படி செய்யரான் அப்படிக்கரதுக்கு
பாவம் தான் இவன் கடந்த காலம் எல்லாம், ஆன அதுக்குனு மனைவியா இருந்தா கூட அவளை என்ன எல்லாம் செய்து வெச்சி இருக்கான் பக்கி பய
என்ன காரணங்கள் சொன்னாலும் காந்து விசயத்தில் இவன் நடந்துகிட்டது
சரவண தியாகராஜன் - நவி அப்பா, இவர் கொஞ்சம் அவனை பார்த்து வளர்த்து இருக்கலாம், இவர் மனைவி பண்ணினா அதே தப்பை தான் இவரும் பண்ணி இருக்கார்
குணவாளன் - பேருல மட்டும் தான் குணம் இருக்கு, மத்த படி நோ கமென்ட்ஸ்
காந்து அப்பா - இவர் அதுக்கும் மேல, ஒன்னும் சொல்றதுக்கு இல்ல…..அண்ணன் பேச்சை கேட்கலாம் அதுக்குனு
ருகன் - இப்படி ஒரே கேட்ட பயபுள்ளைகளுக்கு நடுவில் நல்லவனா இருக்கான்
உயிர் நண்பன் கெட்டவனா இருந்தாலும் அவனை மனைவி கிட்ட கூட விட்டு கொடுக்கல
அதே போல மனைவியையும்
நல்ல நண்பன், ரொம்ப நல்ல காதலன் & ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல கணவன்
திவி - சுயமா யோசிச்சி பேசற பொண்ணு அந்த குடும்பத்திலே, கோவபடற இடத்தில் கோபப்பட்டு, பேச வேண்டிய இடத்தில் பேசி எல்லாமே சூப்பர்
ருகன் மேல இருக்கும் காதல் ரொம்ப கியூட்
அகர்ணன் & அபூ
கோதை - நல்ல மனைவியாகவும் இல்ல அது கூட ஓகேனு விட்டரலாம் ஆன அம்மாவாவும் இல்ல
…….
காந்துக்கு இன்னும் நியாயம் செய்து இருக்கலாம்னு தோணுச்சு
அவனை விட்டு பிரிந்து வந்தும் அவள் கண்டது எல்லாம் துரோகம் தான் அதனால எவளோ வலிகள் அவளுக்கு
ரொம்ப நல்ல அம்மாவா இருக்கற காந்துக்கு இவளோ சோகம் வாழ்க்கையில் , இவளுக்கும் தான் அவள் கனவுகள் எல்லாம் கலைந்து போச்சி கல்யாணத்துக்கு அப்பறம் இவ என்ன கோதை மாதிரியா நடந்துகிட்ட இல்ல தானே……
இந்த கதையில் தப்பே செய்யாமல் தண்டனை மட்டுமே வாழ்க்கையா அமைந்தது காந்துக்கு மட்டும் தான்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ