#Uma_View
#T22பொம்முநாவல்ஸ்குறுநாவல்
போட்டி
#விதையில்இருந்துவிருட்சம்வரை
காந்தாரி சபதம்
ஆன்டி ஹீரோ கதை
முதலில் இதை சொல்லணும் கதை பேரு சூப்பரா செலக்ட் பண்ணி இருக்கீங்க ரொம்ப பவர் ஃபுல் நேம்
.
அடுத்து கதையா நகர்த்தி கொண்டு போற கதாபாத்திரம் எல்லாம் அருமையா வடிவமைத்து இருந்தீங்க.
காந்தாரி
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணவள். மலரினும் மெல்லிய மனம் கொண்டவள். இவளுக்கு தான் எத்தனை எத்தனை துன்பங்கள்
.
கல்யாண கனவுகள் கானல் நீராக மாறும் போதும் சரி.
ராசி கெட்டவள், அதிர்ஷ்டம் இல்லாதவள் என ஊரார் தூற்றும் போதும் சரி.
தன்னால் தான் அனைத்து பிரச்சனையும் தன்னை சார்ந்த அனைவரும் தன்னால் தான் துன்பம் நேருகிறது என கலங்கி தவிக்கும் போதும் சரி.
குடும்ப நிம்மதிகாகவும் எதிர்பார்ப்பு தாங்க தந்தை முகத்துகாகவும் மறுபடியும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லும் போது சரி.
உறவினர்கள் மகிழ்ச்சிய மனதில் நிறுத்தி மண மேடையில் தன் மன கலக்கத்தை விரட்டும் போதும் சரி
இப்படி காந்தாரி உடைய நிலைமைய படிக்கும் போது ஒரு பொண்ணா ரொம்பவே பாவமா இருந்துச்சு.
அதே சமயம் எதார்த்தமான பொண்ணா கண்ணுக்கு தெரிஞ்சா.
அதுக்கு பிறகாவது இவளுக்கு நிம்மதி கிட்டியதா இல்லை இது வரைக்கும் நீ
அனுபவித்தது எல்லாம் ஒன்றுமே இல்லைங்கிற மாதிரி
அந்த இருபத்தியோரு வயசு இளம்மொட்டு முட்கள் நிரம்பிய அவளவனின் கைகளாலேயே வதைபடுவது எல்லாம் ரொம்பவே கொடுமையான விஷயம்.
ஒவ்வரு முறையும் இந்த மெல்லியவள்
அந்த அரக்கனின் கரங்களில் கசங்கும் காட்சிகள் எல்லாம் ரொம்பவே அழுத்தமா கணமா இருந்தது
.
கடும் பாலைவனத்தின் நடுவே தண்ணீர்க்கு தவிப்பவனின் கைகளில் கிடைக்கும் நீரை போல தான் இக் கதையில் சத்ருகன் வருகையும்.
காந்தாரியின் நிலை கண்டு கலங்கும் வேளையில், நவிலனின் செயல் கண்டு கொதிக்கும் நேரத்தில் நம் இதழ் ஓரம் புன்னகையில் வளைய காரணமாய் இருப்பவன் இந்த ருகன்.
இவளவனின் ரௌடி சாராய் இவன்
இவனவளின் ராணி மங்கமாவாய் இவள்
சத்ருகன்
திவ்யபாரதி இவங்க காதலை பற்றி என்ன சொல்ல அழகை பார்த்து இன கவர்ச்சியில் வந்ததது அல்ல இவர்கள் காதல். இது பக்குவப்பட்ட காதல்.
இரு மனங்கள் இணையும் திருமண வாழ்வு கடைசி நொடி வரை உயிர்ப்புடன் இருக்க நேசம் மட்டும் அல்ல நம்பிக்கையும் அவசியம் தான்.
அந்த நம்பிக்கையை அவளவனின் மேல் மிச்ச மீதி இல்லாமல் முழுவதுமாக வைத்தவள் தான் இந்த திவி.
தன்னவள் தன் மேல் வைத்த நம்பிக்கையில் மொத்தமாக தொலைந்து விழியோரம் ஒரு துளி கண்ணீர் உதிர்த்தவன் தான் இந்த ருகன் .
திவ்ய பாரதி கிட்ட ரொம்ப பிடிச்ச விசயம் இவள் தன் தங்கைகாக ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை போராடினாள். தனக்கு என்ன இன்னல்கள் வந்த போதும் அதை மாற்றி கொள்ளவும் இல்லை குறைத்து கொள்ளவும் இல்லை.
நவிலன்
காந்தாரி - நவிலன் திருமணத்துக்கு முன்பு காந்தாரி மீதான நவிலன் ஈர்ப்பை பார்க்கும் போது இவன் சரி இல்லை ரொம்ப பயங்கரமானவன் என்ற உணர்வை குடுதீங்க. அது சரி தான் என்பது போல தான் அடுத்த அடுத்த அவன் நடவடிக்கை இருந்தது
எனக்கு ஒண்ணே ஒண்ணு தான் இந்த கதைல வேற மாதிரி கொண்டு போய் இருக்கலாம் தோணுச்சு.
அது நவிலன் கடந்த காலம்.
பெற்றோர்கள் அரவணைப்பு இல்லாமல் வளர்வது.
ஆணாதிக்க சூழலில் இருப்பது.
கடைசியாக தனக்கு அன்பு காட்டிய உறவை குடும்பத்தை இழப்பது.
இது தான் நவிலன் அரக்க குணதுக்கு காரணம். எல்லாம் சரியான காரணங்கள் தான் ஏற்று கொள்ள வேண்டிய விசயம் தான். ஆனால் அதில் ஒரு அழுத்தம் இல்லை காட்சி அமைப்பில் அந்த கணம் இல்லை.
சிறு வயசு நவிலனின் மன நிலை இன்னும் கொஞ்சம் தெளிவா அழுத்தமா பதிவு பண்ணி இருக்கலாம்.
கதை முழுக்க இவனின் குணத்தால் காந்தாரி பாத்திக்க பட்டு இருக்கா. அதுகான பின்னணியை இன்னும் கொஞ்சம் வலுவா சொல்லி இருக்கலாம்.
இதை ஏன் இவ்ளோ சொல்கிறேன் என்றால் கதை A to Z மொத்தமாவே பிடிச்சு இருக்கு கதையின் மற்ற பகுதிகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இது சாதாரணமா சொல்லிய ஃபீல்.
அது மட்டுமில்லாமல்
தன் நெஞ்சோடு தஞ்சமானவளின் தவிப்பை போக்க வழி அறியாது
' எனக்கு ஏன் குடும்பம் இல்லை இருந்திருந்தால் அரவணைக்க கற்றிருப்பேனோ என்ற அவன் கலக்கம்
எனக்கு ரொம்பவே பிடிச்சா வரிகள் ரசிச்ச வரிகளும் கூட
அவ குட்டியா இருப்பா அடர்த்தியா முடி இருக்கும். என் குழந்தைய யாராவது பார்த்தீங்களா என்ற அந்த தாயின் துடிப்பு
அதே போல
நோய்வாய்பட்ட கணவனை கூடையில் சுமந்து சென்றவள் அக்கால நளாயினி என்றால் தன்னவன் தனக்கு தந்த ரணங்களையும், காயங்களையும், வலிகளையும் தன் உடம்பிலும் மனதிலும் சுமந்த காந்தாரி இக்கால நளாயினியே.
தன் கணவன் காணாத உலகை தான் மட்டும் காண்பதா. என்னவனுக்கு இல்லாத பார்வை தனக்கு மட்டுமா என்று அதை துறந்து தன்னவன் உடனான உலகுக்குள் அடி எடுத்து வைத்தவள் அக்கால காந்தாரி என்றால்.
மனதில் ஆயிரம் கவலை, பயம், குழப்பம், இருந்தும் உறவினர் நலனுக்காக அவர்களே துறந்து தனக்கு வந்த அவ சொல்லை நீக்கியவன் என்ற ஒன்றில் மணம் கனிந்து அவளவனின் கரம் பற்றியவள் நவீன கந்தாரியே.
என்ன தான் தன் கணவன் தனக்கு துரோகம் இழைத்திருந்தாகும் கையில் சிலம்பு ஏந்தி கண்ணில் கனல் ஏந்தி அவன் சாவுக்கு நீதி கேட்டு மதுரையை எரித்தவள் அக்கால கண்ணகி என்றால்
தன்னவன் தனக்கு தந்த எல்லையில்லா வலிகள் , ரணங்கள் இழைத்த கொடுமைகள் எல்லாவற்றையும் தான் பெற்ற இரு முத்துக்களின் மகிழ்ச்சிகாக எரித்து தன்னவன் உடனான வாழ்கையோடு தன் வாழ்வை இனைத்த
காந்தாரி ஒரு நவீன கண்ணகியே
ஆக மொத்தத்தில் காந்தாரி சபதம் என்றால் மனதுக்கு வருவது
காந்தாரியின் கண்ணீரும், காயங்களும்
ருகனின் காதலும் தான்.
இக்கதைக்கு உயிர் குடுத்தவை
அவற்றை அவ்ளோ அழகா செதுக்கி இருக்கீங்க.
போட்டியில் வெற்றி பெற் வாழ்த்துகள் காந்து பாப்பா