Shayini Hamsha
Active member
டுவிஸ்ட் 21
நாவல் போட்டி
கதை இல • 11
? "விழியோரம் சிறையானன்" ?
நாவல் போட்டி
கதை இல • 11
? "விழியோரம் சிறையானன்" ?
கதையின் விமர்சனம் வாசகியாக எனது பார்வையில்
#shayini review#
சினிமா இயக்குநராக , சிங்கப் பெண்ணாகவும் இக் கதையில் வலம் வரும் பிரதான நாயகியாக ஆர்யா , தன் மனம் கவர்ந்த நாயகனிற்காக , அவளின் மனதை சிறையெடுத்த
நாயகனின் நண்பான , திரைப்பட கதாநாயகன் நெடுமாறனை அவள் இயக்கும் படத்தில் நாயகனாக்கி ஒரு சில படங்களிலேயே இயக்குனர் சிகரமென பெரும் பேரும் புகழும் பெறுகிறாள் . அவளின் வளர்ச்சிக்கு துணையாக அவளின் மனங்கவர்ந்த நாயகன் மனதிலும் அவனின் சகோதரி பிரகதி அவளுடன் கூடவேயிருக்க ..
இன்னொரு கதை களத்தில் பெற்றோர் இருந்தும் அநாதையாக அநாதரவாக
எழிலரசி ; அவளை துயரத்திலிருந்து காப்பாற்றி , அவளை விழியோரம் சிறையெடுக்க நாயகன் தேவ் அவனின் உற்ற நண்பனாக , தன் உயிரையே நண்பனின் காதலுக்காக இழக்கும் சாம்சன்..
நாயகன் நாயகியை.. பெயர் சொல்லாமல் அவனின் மனதிற்கு நருக்கமாக அவளுக்கு செல்லப் பெயராக ஸ்பார்க்கிள் என அழைப்பது மிக அருமை...
ஆர்யாவிடம் உதவி இயக்குநராக கலையரசன், அவனின் நண்பனாக சூர்யா. பிடிக்காத திருமணத்திற்காக துரத்தும் பொறுக்கிகளிடமிருந்து தப்பித்து கலையரசனிடம் அடைக்கலமாகும் குழலி அவளிடம் காதலை வளர்க்கும் கலையரசன். அவனின் காதலை புரிந்து கொள்வாளா குழலி ?
குழலியானவள் , தனது வாழ்க்கை அழியாதிருக்க உதவியதற்காக ஒருவருக்கு நன்றி சொல்ல செல்லும் போது அங்கு...யாரைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள்? குழலியின் குற்ற உணர்ச்சிக்கு காரணமென்ன? ...
இவர்களுடன் பிரகதி மற்றும் நெடுமாறன்..
இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் மனமார்ந்த நேசம் இருந்தாலும் பிரகதியை நெடுமாறன் தவிர்க்க காரணமென்ன?
இரு வேறுபட்ட கதைகளத்தில் பயணிக்கும் விழியோரம் சிறையானேன் எனும் டுவிஸ்ட் 21 நாவல் போட்டிக்கதை கதைவிறுவிறு திருப்பங்களுடனும் சுவாரஸ்யத்துடனும் ஒரே நேர் கோட்டில் எவ்வாறு விறுவிறுப்பாக வாசகர்களை கதையின் மாந்தர்கள்
ஆர்யா தேவ் எழிலரசி நெடுமாறன் கலையரசன் பிரகதி தேன் குழலி சாம்சன் சூர்யா
விழியோரங்களை எவ்வாறு அவர்களின் குண இயல்புகளுடன் மனதோடு சிறையெடுக்கின்றனர் என்பதனை நீங்களே படித்து தெரிந்து கொள்ள...
"விழியோரம் சிறையானேன்"
படித்து மகிழுங்கள்.
மிக அருமையான உணர்வுபூர்வமிக்க கதை..
டுவிஸ்ட் 21 நாவல் போட்டியில் வெற்றிபெற கதையாசிரியருக்கு ஷாயினியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
என்றும் அன்புடன் #ஷாயினி#
25/6/ 2021 8.45 pm
Attachments
Last edited: