BawaniBala
Member
வணக்கம் சகோதரிகளே ..
பொம்முநாவல்ஸ்சின் போட்டிக் கதை
#விழியோரம் சிறையானேன்..
#கதைஎண் 11
விழிகளால் சிறை எடுத்தவனை தன் நெஞ்சத்தால்
பூஜித்து வாழ்ந்த மங்கை இவள்..
செதுக்கிய சிற்பமாய் ..அவன் உளியாக அவள் சிற்பமாய்
உருமாறி தனைமாற்றி உருகிய இரு உயிர்கள்..
விழியோரம் சிறையானேன் உன் பார்வையில்
நான் வாழ்கின்றபோது..
நானும் உன்னுள் சிறையாகி போகின்றேன்
உன் நேச நினைவுகளால்...
மிகவும் அருமையான கதை ஆசிரிய தோழியே.. எம் விழிகளையும் கட்டிப்போட்டு அழவைத்தும் சென்றீர்கள்..
நாயகன் தேவ் எமை அவனுள்ளே உள்நோக்கி பயணிக்க வைத்து பின்பு மாயமாய் மறைந்தும் போகிறான். அவன் வரும் இடமெல்லாம் காதல் சாமரம் வீசி சென்றது.இவனின் "ஸ்பார்க்கல்"
என்றுமே மறக்க முடியாத ஒன்று..இவனின் காதல் எமையும் அசைத்து சென்றது என்றால் மிகையாகாது.
நாயகி எழில் வேலியே பயிரை மேய விளையும் நேரம் .அதை முறியடித்து எப்படி தப்பித்து தன்னை செதுக்கி தன் உடன் உறையுள் உள்ளவர்களையும் செதுக்கி மீட்டு மீண்டு வருகிறாள் .என்பதை அழகாகவும் ஆழமாகவும் கொண்டு சென்றது அருமையோ அருமை.
நட்பு கட்டாயம் சொல்லவேண்டிய ஒன்று எமை எல்லாம் கண்ணீர் நிலையில் நிறுத்திய நட்பு. சாம் மற்றும் தேவ்.. மீண்டும் வந்த சாம் வருகையிலும் ஆனந்த கண்ணீரே.. அழகாக நட்பை விதைத்து சென்றது அழகு.
ஏனைய அனைத்து பாத்திரங்களும் மிகையில்லா நிலையில் கொண்டு சென்று கதையை அழகாகக்கியது ஆசிரிய தோழியே வாழ்த்துக்கள் மா.
உங்களின் எழுத்தில் ஆழமான அழகான நிலைகளை கண்டேன்.ஆத்மார்த்தமான ஒரு காதல் கதை. இப்படியும் காதல் செய்யலாம் என்பதை கூறி சென்றது மிகவும் அருமை.
போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் ஆசிரிய தோழியே.