ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

'விழி தீயிலொரு தவம்' - கதைத் திரி

Status
Not open for further replies.

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 09









"இத்தனை நாட்கள் வெளியில் இளவரசியோடு வந்திருக்கிறாய், உன் உயிர் தோழியை அழைத்துச் செல்ல உனக்கு தோன்றவே இல்லை. புரிந்துவிட்டது. அனைத்தும் புரிந்துவிட்டது" என்று ராதா தோழியின் இடையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு குத்தலாக சொல்ல, குதிரையை ஓட்டிக்கொண்டிருந்த யாழ்மொழியோ சலிப்பாக விழிகளை உருட்டினாள்.



"அய்யோ ராதா! நான் ஒன்றும் இளவரசியை அழைத்துக்கொண்டு வெளியில் வருவதில்லை, அவர்கள்தான் என்னை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு செல்வார்கள். இதையெல்லாம் உனக்கு சொன்னால் புரியாது" என வெடுக்கென்று சொன்னவள் சந்தையின் முன்னே குதிரையை நிறுத்திவிட்டு இறங்கிக்கொண்டு ராதாவையும் இறக்கிவிட்டாள்.



"சந்தைக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, அரண்மனையிலேயே நம் காலமும் நேரமும் செல்கிறது யாழ்" என்றுக்கொண்டே சந்தைக்குள் நுழைந்த ராதா விழிகள் மின்ன ஒவ்வொன்றையும் பார்த்தவாறு முன்னே செல்ல, யாழ்மொழியும் தோழியோடு நடக்க, சரியாக தூரத்தில் வைத்து யாழ்மொழியைக் கண்டுகொண்டான் அங்கு வரி வசூலிக்க வந்திருந்த வில்லியம்.



யாழ்மொழியைப் பார்த்ததும் அதிர்ந்து விழித்தவன், பின் விஷமப் புன்னகையோடு "வாவ்! பறவை நம்ம வலையில தானா வந்து சிக்குது, டேஸ்ட் பண்ணி பார்க்கணும்னு இப்போவே ஆசையா இருக்கே..." என்று உள்ளுக்குள் நினைத்தவன் அவளை நோக்கிச் செல்ல, இந்த காமுகனைப் பற்றி அறியாமல் தோழியோடு அங்கு விற்றுக்கொண்டிருந்த பழங்களை பேரம் பேசிக்கொண்டிருந்தாள் பெண்ணவள்.



"என்ன இது, அரண்மனையில் நாங்கள் சாதாரண பணிப்பெண்கள்தான். இளவரசி அல்ல. இந்த மூன்று பழங்களுக்கு இத்தனை காசுகளா? பெண்கள் என்றதால் ஏமாற்றப் பார்க்குறீர்களா?" என்று யாழ்மொழி சொல்ல, "இங்க பாருங்கம்மா, இதுதான் விலை. வாங்குறதுன்னா வாங்குங்க, இல்லன்னா இடத்தை காலி பண்ணுங்க" என்று முடிவாக சொன்னார் அந்த பழ வியாபாரி.



அவரை பாவமாகப் பார்த்தவள், "சரி அப்போது இந்த பழம்..." என்று ஏதோ சொல்ல வர, சட்டென அவளுடைய தோளில் உணர்ந்த தொடுகையில் வெடுக்கென்று திரும்பிப் பார்த்தாள்.



அங்கு நின்றிருந்த வில்லியம்தான் அவளுடைய தோளில் கையை வைத்திருக்க, பயத்தில் வெடவெடத்துப் போய் அவனை விட்டுத் தள்ளி பாய்ந்து விலகி நின்றவள், மூச்சு வாங்கியபடி அவனைப் பார்த்தாள்.



"ஹேய் காம் டவுன், ஏன் என்னை பார்த்து இப்படி பயப்படுற?" என்று அவன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே அவளின் அருகே வர, அவன் பேசுவது புரியாமல் விழித்தவளைப் பார்த்து ஏளனமாக சிரித்தான் வில்லியம்.



"உனக்கு இங்லீஷ் தெரியாதுல்ல, ஓ ஐ அம் சாரி! எனக்கு தமிழ் அவ்வளவா தெரியாது. பட் தட் இஸ் நொட் அ பிக் டீல், எனக்கு தேவையானத நீ பண்ணுறதுக்கு லேங்குவேஜ் தேவையே இல்ல" என்று அரைகுறை தமிழில் பேசிக்கொண்டே அவளை மேலிருந்து கீழ் அவன் ஒரு மாதிரியாகப் பார்க்க, அந்த பார்வையில் கூசிப் போனாள் யாழ்மொழி.



"யார் நீ, உன் பார்வையே சரியில்லை. வா யாழ், நாம் இங்கேயிருந்து சென்று விடலாம்" என்று ராதா அவனைத் தள்ளிக்கொண்டு செல்லப் போக, கோபத்தில் ராதாவின் கன்னத்தில் அறைந்தவன் அவளை தரையில் தள்ளி விட்டான்.



"ராதா..." என்று யாழ்மொழி பயத்தில் கத்திக்கொண்டு தோழியை நோக்கி செல்லப் போக, அவள் கரத்தைப் பற்றியிழுத்தவன் பற்களைக் கடித்தபடி அவளைப் பார்த்தான்.



"உன்னை அழைச்சுட்டு வர சொல்லி சார் ரெனேல்ட் ஆர்டர் போட்டிருக்காரு. எங்க ஆர்டர மீறுற அளவுக்கு உனக்கு தைரியம் இருக்காதுன்னு நினைக்கிறேன்" என்று அவன் ஆங்கிலத்தில் கத்த, சுற்றியிருந்த மக்களோ பயந்துப் போய் அவனை தடுக்கக் கூட முன்வரவில்லை.



"என்னை விடு, தயவு செய்து விடு..." என்று யாழ்மொழி கிட்டத்தட்ட அழுதேவிட, அவளை நெருங்கி மூச்சை இழுத்து வாசம் பிடித்தான் வில்லியம்.



"வாவ்! வாசமே மயக்குது" என்று முணுமுணுத்தவாறு யாழின் கரத்தைப் பற்றி அவன் செல்லப் போக, சட்டென அவனை வழி மறைப்பது போல் வந்து நின்றான் வீரா.



"டேய் வீரா, வேணாம்டா..." என்று அவனின் நண்பன் பாலா கத்த, "சும்மா இருடா, நம்ம வீட்டு பொண்ணுன்னா நாம பார்த்துக்கிட்டு நிப்போமா என்ன..." என்று நண்பனைப் பார்த்து கத்தியவன், "துரை, யாரும் கேக்க மாட்டாங்கன்னு நினைச்சீங்களா, அந்த பொண்ண விடுங்க!" என்று வில்லியமைப் பார்த்து நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சொன்னான்.



"வாட்! வூ ஆர் யூ டூ சே தட்? தள்ளி போ, இல்லன்னா ஷூட் பண்ணிருவேன்" என்று சொல்லி கேலியாக சிரித்த அந்த வெள்ளைக்காரன் வீராவை தள்ளிவிட்டு செல்லப் போக, வில்லியமைப் பிடித்து தள்ளிவிட்டவன் யாழியை தன் பக்கம் இழுத்துக்கொண்டான்.



"டேய் பாலா, கயிற கொண்டு வா!" என்று வீரா கத்த, "ஹவ் டேர் யூ..." என்று முகம் சிவக்க கோபத்தில் கத்திக்கொண்டு எழுந்தவன், பக்கத்திலிருந்த தன் அதிகாரி ஒருவனின் கையிலிருந்த துப்பாக்கியை பிடுங்கி வீராவை சுடப் போக, அவனையும் அவனுடைய ஆட்களையும் பின்னாலிருந்து பிடித்துக்கொண்டனர் வீராவின் ஆட்கள்.



"லீவ் மீ! ஐ சேட் லீவ் மீ... இதுக்கு நீ கண்டிப்பா ரிக்ரெட் பண்ணுவ" என்று வில்லியம் அடித்தொண்டையிலிருந்து கத்த, "யாழ், இங்கயிருந்து போயிரு, இவங்கள நாங்க கவனிச்சிக்கிறோம்" என்றான் வீரா அழுத்தமாக.



"என்.. என்னால் யாருக்கும் சிரமம் தேவையில்லை அண்ணா" என்று அவள் தழுதழுத்த குரலில் சொல்ல, "அண்ணான்னு சொல்லிட்ட, அதுக்கு மேல எதையும் பேசாத! இதுக்கெல்லாம் கைமாறா நீ நிறையவே போராட வேண்டியிருக்கு" என்று சொல்லி அவன் ஒற்றைக் கண்ணை சிமிட்ட, அதற்கான அர்த்தத்தை புரிந்துக்கொண்டவளோ அதிர்ந்து விழித்தாள்.



"யாழ், அவர்தான் சொல்கிறார் அல்லவா! முதலில் நாம் அரண்மனைக்கு செல்வோம். இன்னும் ஒருகணம் நான் இங்கு நின்றால் கூட மயக்கம் போட்டு விழுந்தே விடுவேன்" என்று ராதா தோழிய இழுத்துக்கொண்டு செல்ல, திரும்பி வில்லியமைப் பார்த்தவளுக்கு அவனின் பார்வையில் தெரியும் கோபத்தை பார்த்ததும் பகீரென்று இருந்தது.



உடனே அவள் திரும்பி ராதாவோடு குதிரையை நோக்கி ஓட, வீராவின் ஆட்களோ வில்லியமையும் அவனோடு வந்த அதிகாரிகளையும் கைக் கால்களைக் கட்டி தூக்கிக்கொண்டு சென்று சந்தையிலிருந்து சற்று தொலைவிலுள்ள ஒரு மரத்திற்கு கீழ் போட்டு விட்டு வந்தனர்.



நால்வரும் எவ்வளவோ முயற்சித்தும் எதுவும் செய்ய முடியாமல் சோர்ந்துப் போய் அப்படியே இருக்க, அதேநேரம் இங்கு ராதாவோடு வேகமாக குதிரையில் சென்றுக்கொண்டிருந்தவளை வழி மறைப்பது போல் வந்து நின்றது ஒரு கார்.



"மீண்டும் யாரடா?" என்று இரு பெண்களும் உடனே எட்டிப் பார்க்க, கார் ஜன்னல் வழியே யாழ்மொழியைப் பார்த்தான் லியோ ஜார்ஜ்.



"அய்யய்யோ இவனா! இன்று என் நிலை அவ்வளவுதான்" என்றவளுக்கு அன்று நடந்ததை எண்ணி இப்போது முகம் குப்பென்று சிவக்க, அவளுடைய வெட்கத்தில் சிவந்த முகத்தையே பார்த்தவாறு காரிலிருந்து இறங்கி அவர்களுக்கு பக்கத்தில் வந்து நின்றான் அவன்.



"யாழ்மொழி" என்று அவள் பெயரை அழுத்தி நிதானமாக உச்சரித்தவன் அவள் கரத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுக்க, "கடவுளே!" என்று கத்திக்கொண்டு அப்படியே சரிந்து விழப் போனவளை தாங்கிப் பிடித்துக்கொண்டான் அவன்.



யாழ்மொழியோ பயத்தில் விழிகளை மூடிக்கொண்டிருந்தவள் மெல்ல ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்துப் பார்க்க, லியோவோ அவள் பார்த்ததுமே பட்டென அவளை தரையில் போட்டான்.



"அய்யோ அம்மா... ஏன் தங்களுக்கு இத்தனை வஞ்சகம் என் மேல்? நான் அப்படி என்ன தவறு செய்துவிட்டேன் அதிகாரி?" என்று இடையைப் பிடித்து வலியில் முணங்கியவாறு தரையில் அமர்ந்த நிலையில் அவள் கேட்க, "யாழ், இந்த அதிகாரியையும் உனக்கு தெரியுமா என்ன? அதுவும் நம் மொழியில் பேசினால் அவருக்கு எப்படி புரியும்?" என்று பதற்றமாகக் கேட்டாள் ராதா.



தோழியை முறைத்துப் பார்த்தவள், எழுந்து "உனக்கு இவனைப் பற்றி எதுவுமே தெரியாது ராதா, அமைதியாக இரு!" என்றுவிட்டு லியோவின் புறம் திரும்ப, "மரியாதை ரொம்ப குறையுதே!" என்றுக்கொண்டே கையிலிருந்த துப்பாக்கியை அவன் தரையில் சுட்டதும், அந்த குதிரையோ கால்களைத் தூக்கி கனைத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தது.



"யாழ் என்னைக் காப்பாற்று!" என்று ராதா கத்தும் சத்தம் காதில் விழ, "அய்யோ ராதா..." என்று நெஞ்சிலேயே கை வைத்துக்கொண்டவள், லியோவின் புறம் வேகமாகத் திரும்பி கோப மூச்சுக்களை விட்டவாறு முறைத்துப் பார்த்தாள்.



"ஏன் இப்படி? நான் என்ன பரிகாரம் செய்தால் என் வழியில் குறுக்கிடாமல் இருப்பீர்கள்?" என்று யாழ்மொழி கோபமாக கத்த, ஏதோ ஒரு கோழிக்குஞ்சு சிறு குரலில் கீச்சிடுவது போல்தான் தோன்றியது அந்த ஆறடி ஆண்மகனுக்கு.



"அம்மணி ரொம்பதான் கத்துறீங்க, சரி அரசர்கிட்ட நான் போய் எல்லா உண்மையையும் சொல்லிடுறேன். கூடவே, நீ அன்னைக்கு எனக்கு முத்தம் கொடுத்தல்ல அதையும்தான்" என்று லியோ ஏளனப் புன்னகையோடு மிரட்ட, திகைத்துப் போய் வாயில் கை வைத்துக்கொண்டவளுக்கு இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது என்றே தெரியவில்லை.



அவனோ அலட்சியமாக தோளைக் குலுக்கியவாறு காரை நோக்கிச் செல்ல, வேகமாக வந்து அவனின் எதிரே வழி மறைப்பது போல் நின்றுக்கொண்டாள் அவள்.



"தயவு செய்து சற்று பொறுங்கள், அரசரிடம் சொல்லும் அளவிற்கு அப்படி என்ன நான் குற்றம் செய்துவிட்டேன்? சரி அரசருக்கு தெரியாமல் இளவரசியை அழைத்துக்கொண்டு வந்தது குற்றம்தான். அதற்காக இப்படியா?" என்று அவள் படபடவென பொரிந்துக்கொண்டே செல்ல, மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவாறு அவளை உற்றுப் பார்த்தான் லியோ.



"இதே இடத்துக்கு நாளைக்கு வா, என்ன பண்ணணும்னு சொல்றேன்" என்றுவிட்டு அவன் பாட்டுக்கு காரில் ஏறிக்கொள்ள, "அது... நாளை அரண்மனையில் முக்கியமான வேலை இருக்கிறது, என்னால் அப்படி எல்லாம் வெளியில் அடிக்கடி வர முடியாது" என்று சமாளிக்க முயற்சித்தாள் அவள்.



ஆனால், யாழ் பேசியது எதுவும் அவன் காதில் விழவே இல்லை.



அவளின் வார்த்தைகளை கண்டுகொள்ளாதவன் போல் லியோ காரில் அமர்ந்திருக்க, ஓட்டுனர் சீட்டில் அமர்ந்திருந்த ஜேம்ஸ்ஸோ பக்கத்திலிருந்தவனை வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான்.



"சார், ஐ திங் யூ ஆ இன்ட்ரஸ்டட் இன் ஹெர் ரைட்?" என்று அவன் சந்தேகமாகக் கேட்க, "வாட் ரப்பிஷ்! சும்மா உளறாத ஜேம்ஸ், அப்படியெல்லாம் எனக்கு தோனவே இல்ல. என்னோட தகுதிக்கு அவளை எல்லாம் பக்கத்துல கூட வைக்க முடியாது. என்னை பார்த்து அவ பயப்படுறது பிடிச்சிருக்கு, அதான் சும்மா மிரட்டி பார்த்தேன். என்ட், அன்னைக்கு என்னை ரொம்ப டென்ஷன் பண்ணா, அதுக்கு பனிஷ்மென்ட் கொடுக்க வேணா! இதுக்கப்பறம் அவ அரண்மனையோட வேலைக்காரி மட்டுமில்ல, எனக்கும்தான்" என்று சொல்லி கேலியாக சிரித்தான் அவன்.



அன்றிரவு,



அறையிலிருந்த மொத்த பொருட்களையும் தூக்கிப் போட்டு உடைத்துக்கொண்டிருந்தான் வில்லியம்.



இன்று நடந்ததை அவனால் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியல. அவமானத்தில் முகம் கறுக்க, கையிலிருந்த பொருளை தன் விம்பம் தெரியும் கண்ணாடியில் விட்டெறிந்தான் அவன்.



"ஹவ் டேர் இஸ் ஹீ! என்னை கட்டிப் போட்டு மரத்துக்கு கீழ தரையில ஏதோ குப்பைய போடுற மாதிரி போட்டிருந்தான். அவன சும்மாவே விட மாட்டேன், ஐ வோன்ட் டூ கில் ஹிம்..என்ட் அந்த யாழ்மொழி... அவள மொத்தமா அனுபவிப்பேன். கவுன்ட் யூவர் டேய்ஸ் யூ போத்" என்று விழிகள் சிவக்க பற்களை அவன் கடித்துக்கொள்ள, அதேநேரம் தனதறையிலிருந்த லியோவோ அந்த சிறு விளக்கு வெளிச்சத்தில் கையிலிருந்த சில காகிதங்களை பார்த்துக்கொண்டிருந்தான்.



"அரசர் கொடுத்த அளவ விட அதிகமா இங்கயிருந்து காட்டனும் (Cotton) டீயும் நம்ம கன்ட்ரீக்கு எக்ஸ்பார்ட் பண்ணியிருக்காங்க. ஹவ் இஸ் தட் பாஸிபள்! சார் ரொனேல்டோட கையெழுத்துதான் இதுல இருக்கு. அப்போ இது அவர் வேலைதானா... வாட் த ஹெல் இஸ் ஹேப்பனிங் ஹியர்?"



என்று தனக்குள்ளேயே யோசித்துக்கொண்டவன் அந்த காகிதங்களை மூடி வைத்துவிட்டு விழிகளை மூடி தலையை பின்னே சாய்த்தான்.



அவனையும் மீறி அவனுடைய மனக்கண் முன் அன்று அத்தனை அலங்காரத்தோடு பார்த்த யாழ்மொழியின் முகமும் அவளுடைய இதழில் முத்தமிட்டதுமே விம்பங்களாக வந்து போக, பட்டென்று விழிகளைத் திறந்துக்கொண்டான் லியோ.



"ஓ காட்! ஷீ இஸ் சோ டேன்ஜரஸ்" என்று விழிகளை சலிப்பாக உருட்டிக்கொண்டவன், கட்டிலுக்கு சென்று வராத தூக்கத்தை வரவழைத்து உறங்க, அடுத்தநாளும் விடிந்தது.



அன்று யாழ்மொழியோ நேரத்திற்கு செல்லவென வேகவேகமாக ஆக வேண்டிய வேலைகளை செய்து முடிக்க, "என்ன யாழ், வேலைகள் பரபரப்பாக இருக்கிறது. எந்த ரயிலை பிடிக்க இத்தனை அவசரம்?" என்று கேலியாகக் கேட்டாள் இந்திரா.



"அது... நான்... அப்படி ஒன்றுமில்லை இளவரசி. சில பொருட்கள் வாங்க சந்தைக்கு செல்கிறேன். அவ்வளவுதான்" என்று அவள் வாய்க்கு வந்த பொய்யை சொல்ல, "சந்தைக்கா செல்கிறாய்! எனக்கும் வர ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் தந்தை என்னை ஏதோ வளங்கள் பற்றிய கலந்துரையாடலுக்காக வரச் சொல்லியிருக்கிறாரே!" என்று மற்றவள் சொல்ல, நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டாள் யாழ்மொழி.



"ஆனால் எனக்காக ஒரே ஒரு உதவி மட்டும் செய்வாயா யாழ், இதை வீராவிடம் கொடுக்க முடியுமா?" என்று தான் பார்த்துப் பார்த்து தன்னவனின் பெயரை நூலினால் பூ அலங்காரம் செய்த ஒரு துணியை இந்திரா நீட்ட, அதை வாங்கிக்கொண்டவள் குதிரையை எடுத்துக்கொண்டு சந்தையை நோக்கித்தான் சென்றாள்.



நேற்று நடந்த சம்பவத்தை நினைக்கையில் சிறு பயம் மனதைக் கவ்வினாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சந்தைக்குள் நுழைந்தவள் அங்கு பாலாவோடு காய்கறிகளை விற்றுக்கொண்டிருந்த வீராவின் அருகில் சென்றாள்.



"ஹ்ர்ம் ஹ்ர்ம்..." என்ற செருமல் சத்தத்தில் திரும்பிய வீரா, அங்கு யாழ்மொழியைப் பார்த்ததும் புன்னகையோடு, "அட நீயா! பரவாயில்லையே, ரொம்பதான் தைரியம் உனக்கு. ஆமா... உங்க இளவரசி என்ன பண்றா, இந்த வீரா அவளையே நினைச்சுக்கிட்டு இருக்கான்னு அவகிட்ட போய் சொல்றியா?" என்று கேட்டு சிரிக்க, சிரித்தவாறு தலையிலடித்துக்கொண்டாள் யாழ்.



"இளவரசியும் தங்களைதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் போல, அதனால்தான் இதை உங்களிடம் கொடுக்க சொன்னார்கள்" என்று இந்திரா கொடுத்ததை அவள் நீட்ட, அதை ஆர்வமாக வாங்கிப் பார்த்தவனுக்கு தன்னவளைப் நினைத்து விழிகள் காதலில் மிதந்தன.



"இந்திரா..." தன்னவளின் பெயரை மெல்ல முணுமுணுத்தவாறு நூலினால் அந்த துணியில் தைத்திருந்த அவனின் பெயரை விரல்களால் வருட, "இது சாத்தியமா அண்ணா, அந்த அரண்மனையில் பணிப்பெண்ணாக இருக்கும் எனக்கே எந்த மதிப்பும் இல்லை. தங்களுக்கு..." என்று தயக்கமாக இழுத்தாள் அவள்.



சட்டென நிமிர்ந்துப் பார்த்தவனின் விழிகளில் அதே வலி அப்பட்டமாகத் தெரிய, பின் உடனே முகபாவனையை மாற்றியவன், "இந்திராவுக்காக எதையும் பொறுத்துக்க தயாரா இருக்கேன், காதலிச்சு பாரு புரியும்" என்றவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் யாழ்மொழி.



"இதைதான் இளவரசியும் கூறினார்கள்" என்று ஆச்சரியம் குறையாத குரலில் அவள் சொல்ல, வீராவோ பக்கென்று சிரித்தான்.



ஆனால், இருவர் பேசிக்கொள்வதை தூரத்திலிருந்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன லியோவின் விழிகள்.



**************

'காலமெல்லாம் உன்னைத் தேடி' என்னோட டிரெக்ட் புக் இப்போ அமேசன் கிண்டல்ல yazhini mithra அப்படிங்குற பேருல Available ஆ இருக்கு.. மறக்காம ரீட் பண்ணிக்கோங்க.. >>>

India link 👇
https://www.amazon.in/dp/B0FLYRBNZG

Usa link 👇https://www.amazon.com/dp/B0FLYRBNZG



 

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 10









வீராவோடு பேசிவிட்டு யாழ்மொழி சந்தையிலிருந்து வெளியேறப் போக, சில பேரின் கத்தல்களைக் கேட்டு வேகமாகத் திரும்பிப் பார்த்தாள்.



அங்கு சில ஆங்கிலேய அதிகாரிகள் வலுக்கட்டாயமாக சில பேரை இழுத்துக்கொண்டு போக, அதை புரியாமல் பார்த்துக்கொண்டு நின்றிருந்தவளுக்கு ஒரு பக்கம் கோபம் கூட எகிறியது.



"எங்க நிலமை எப்போ மாறுமோ தெரியலம்மா, அந்த வெள்ளைக்காரனுங்களோட அராஜகம் அதிகரிச்சுட்டே போகுது. அவனுங்களோட கட்டுமான வேலைக்காக எங்க மக்கள துன்புறுத்தி காசு கூட கொடுக்காம வேலை வாங்குறாங்க. இதையெல்லாம் அரசராலேயே எதிர்த்து கேள்வி கேக்க முடியாம இருக்கும் போது சாதாரண மக்கள் எங்களால என்னதான் பண்ண முடியும்?" என்று ஒரு பெண்மணி பக்கத்திலிருந்து சொல்ல, அவரை பரிதாபமாகப் பார்த்தாள் யாழ்.



அந்த ஆங்கிலேயர்களோ வர மறுத்தவர்களை மிரட்டி அடித்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல, அதைப் பார்த்தவாறு அங்கிருந்து நகர்ந்தவள் அதே யோசனையோடு வீதியோரமாக நடந்துச் சென்றாள்.



திடீரென அவள் பின்னால், "ஹ்ர்ம் ஹ்ர்ம்..." என்ற செருமல் சத்தம் கேட்க, பட்டென்று திரும்பிப் பார்த்தவளின் விழிகள் பிதுங்கி விடுமளவிற்கு விரிந்தன.



அவளெதிரே மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவாறு லியோ நின்றிருக்க, உடனே அதிர்ச்சியிலிருந்து சாதாரண முகபாவனைக்கு மாறி, "அட தாங்கள் இங்கேயே வந்துவிட்டீர்களா, நல்லது நல்லது" என்றாள் யாழ்மொழி புன்னகையோடு.



அவனோ அவளை உறுத்து விழித்தவன், "ஆமா... யார் அது, ஒருவேள அதுதான் நீ சொன்ன உன்னோட காதலனா?" என்று கேட்க, "என்ன?" என்று புரியாமல் கேட்டாள் அவள்.



"அதான் சந்தையில ஒருத்தன் கூட பேசிக்கிட்டு இருந்தியே, அவன்தான் உன் காதலனா?" என்று லியோ மீண்டும் கேட்க, சில கணங்கள் அவனை விழிகளை சுருக்கி குழப்பமாகப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அப்போதுதான் மூளைக்கு உரைத்தது.



சுதாகரித்த அடுத்தகணம், "இல்லை இல்லை, அவர் என் காதலன் கிடையாது" என்று யாழ்மொழி பதற்றமாகச் சொல்ல, "இல்லையா! நான் கூட அவன்தான் உன் காதலன்னு நினைச்சேன். அப்போ அவன் இல்லன்னா வேற யாரு?" என்று கூரிய பார்வையோடுக் கேட்டான் லியோ.



யாழ்மொழிக்கு என்ன பதில் சொல்லி சமாளிப்பதென்றே தெரியவில்லை.



"ஹிஹிஹி... அது.. அவரை நீங்கள் சாதாரணமாக பார்த்து விட முடியாது. அவரின் அழகைக் காண இரு கண்கள் போதாது அதிகாரி" என்று வாய்க்கு வந்த பொய்யை அவள் சொல்லி சமாளிக்கப் பார்க்க, "ரெண்டு கண்ணே போதாதா! அப்போ... அவ்வளவு பெரிய உருவமா என்ன?" என்று கைகளை விரித்து அவன் செய்து காட்டிய விதத்தில் அவனை முறைத்துப் பார்த்தாள் யாழ்மொழி.



"தங்களின் பேச்சு எல்லை மீறி செல்கிறது, என் காதலனைப் பற்றிய பேச்சை விடுங்கள். என்னை எதற்காக வரச் சொன்னீர்கள்? முதலில் அதை கூறுங்கள்" என்று அவள் கடுப்பாகக் கேட்க, "என் பின்னாலயே வா..." என்று சொன்னவாறு பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு முன்னே நடக்க ஆரம்பித்தான் லியோ.



"அரண்மனையிலிருந்து வெளியில் வர நான் எத்தனை போராட்டம் செய்ய வேண்டி இருக்கிறது என்று தங்களுக்கு தெரியாது. அதையெல்லாம் தங்களுக்கு சொல்லி புரிய வைக்கவும் என்னால் முடியாது. என் அவல நிலையை யார்தான் அறிவார்? சாதாரண பணிப்பெண் என்னை, இப்படி துன்புறுத்துவது நியாயமா?" என்று புலம்பிக்கொண்டே அவள் நடந்து வர, ஆடவனுக்கு அதைக் கேக்கவே எரிச்சலாக இருந்தது.



"ஷட் அப்! ஒரு வார்த்தை பேசினேன்னா நான் உன்னை ஷூட் பண்ணிருவேன்" என்று லியோ கத்தியதும், பயத்திலேயே அவள் வாயை இறுக மூடிக்கொள்ள, இருவரும் அவனின் காருக்கு அருகே வந்து நின்றனர்.



லியோவோ காருக்குள்ளிருந்து பெரிய அழுக்கு துணிகள் கொண்ட ஒரு மூட்டையை கையிலெடுத்தவன், அவள் கைகளில் திணிக்க, அதை அதிர்ச்சியாகப் பார்த்தாள் யாழ்மொழி.



"என்ன இது?" என்று அதிர்ச்சி குறையாத குரலில் பதற்றமாக அவள் கேட்க, "என்னோட ட்ரெஸ்தான், இதை நல்லா துவைச்சு இன்னும் டூ டேய்ஸ்ல.. ஐ மீன் ரெண்டே நாள்ல கொண்டு வந்து கொடு. கொட் இட்!" என்று கட்டளையாகச் சொன்னான் அவன்.



சில கணங்கள் அவன் சொன்னதை சுதாகரிக்க கூட முடியாமல் சிலை போல் நின்றிருந்தவள், உணர்ந்த மறுகணம் அழாத குறையாக அவனை ஒரு பார்வைப் பார்த்தாள்.



"ஏற்கனவே எனக்கு அரண்மனையில் ஏகப்பட்ட வேலைகள் குவிந்து கிடக்கின்றன. இளவரசியை பாதுகாப்பதிலேயே எனக்கு நேரம் போய்விடும். இதில் இது வேறா, என்னைப் பார்த்தால் பாவமாக இல்லையா? இல்லை, அத்தனை பெரிய ஆங்கில அரண்மனையில் உடைகளை கழுவுவதற்கு கூட ஆட்கள் இல்லையா?" என்று அவள் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு கேட்க, "அதெல்லாம் ஆளுங்க இருக்காங்க, ஆனா எனக்கு அவங்களோட வேலை பிடிக்கல. நான் சொன்ன மாதிரி நீ எனக்கு துவைச்சு கொடுக்குற" என்றான் அவன் அழுத்தமாக.



யாழ்மொழிக்கு பிபி ஏகத்துக்கும் எகிறியிருந்தது.



"இதற்கெல்லாம் கடவுள் தங்களை தண்டிக்காமல் விட மாட்டார். ஒரு சிறு பெண்ணை போய் இத்தனை கொடுமை செய்ய இந்த ஆங்கிலேய அதிகாரிக்கு எப்படிதான் மனம் வருகிறதோ?" என்று திட்டிக்கொண்டே அவள் முன்னே நடந்துச் செல்ல, "சின்ன பொண்ணு மாதிரியா நீ நடந்துக்குற, பண்றது பூரா திருட்டுத்தனம்" என்று பதிலுக்கு கத்தினான் லியோ.



திரும்பி அவனை மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க முறைத்துப் பார்த்தவள் விறுவிறுவென்று முன்னே நடந்துச் செல்ல, கண்ணிலிருந்து மறையும் பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை இட்டவாறு அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த லியோ காரிலேறி அமர்ந்துக்கொண்டான்.



"ஊஃப்...." என்று அவன் பெருமூச்சு விட்டவாறு ஜேம்ஸை பார்க்க, "கேட்டா எதுவுமே இல்லன்னுதான் சொல்ல போறீங்க. சோ, நான் எதையும் கேக்க மாட்டேன் சார்" என்றுவிட்டு திரும்பிக்கொண்டான் ஜேம்ஸ்.



சரியாக வேலைக்கென மக்களை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு வந்த அதிகாரிகள், "சார், நீங்க சொன்னத பண்ணியாச்சு. நம்ம இடத்துக்கு இவங்கள அழைச்சுட்டு போறோம். நாளைக்கே இந்த கூட்டத்த வச்சு வேலைய ஆரம்பிச்சிரலாம்" என்று சொல்ல, லியோவின் இதழ்களோ ஏளனமாக வளைந்தன.



"கோ அஹெட்..." என்று அதிகாரமாக அவன் சொல்ல, அதேநேரம் அவனைக் கடந்து மின்னல் வேகத்தில் சென்றது வில்லியமின் கார்.



அதை புருவ முடிச்சுகளோடு பார்த்தவன், "ஜேம்ஸ் அந்த கார ஃபாலோவ் பண்ணு" என்று உடனே சொல்ல, ஜேம்ஸ் காரை உயிர்ப்பிக்க அதுவோ ஆரம்பித்த பாடில்லை.



"சார், ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது" என்று அவன் முயற்சித்தவாறு சொல்ல, "ஷீட்! இந்த கார விட அந்த குதிரை வண்டியே பரவாயில்ல" என்றான் லியோ கடுப்பாக.



இவனின் கோபத்தை தாங்காததினாலோ என்னவோ உடனே வண்டி ஆரம்பித்து விட, "தேங்க் காட்! ஸ்டார்ட் ஆகிருச்சு" என்று பெருமூச்சு விட்ட ஜேம்ஸ் உடனே வில்லியமின் கார் சென்ற திசைக்கு வண்டியை பறக்க விட்டான்.



போகும் வழியில் தெருவோரமாக கிடந்த மூட்டையை கவனித்த லியோ, "ஸ்டாப் த கார்!" என்று வேகமாக வண்டியிலிருந்து இறங்கி அந்த மூட்டையினருகே சென்றான்.



அது யாழ்மொழிக்கு லியோ கொடுத்த உடைகள் அடங்கிய மூட்டைதான். தெருவோராமாக அனாதையாக அது கிடக்க, ஏதோ ஒன்று அவனுக்கு புலப்படுவது போலிருந்தது.



"ஜேம்ஸ் நம்ம பேளஸ்க்கு வண்டிய விடு!" என்று சொல்லிக்கொண்டே அவன் காரில் ஏறிய மறுகணம் முழு வேகத்தில் காரை செலுத்தினான் மற்றவன்.



ஆங்கிலேய அரண்மனை வாசலில் காரை நிறுத்தியதுமே அவனின் விழிகள் சுற்றி நோட்டமிட, அங்கு வில்லியமின் கார் வந்ததற்கான அடையாளமே இல்லை.



அதை யோசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தவன் மற்ற அதிகாரிகளின் முன் சென்று நிற்க, இவனைப் பார்த்ததுமே மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றனர் அவர்கள்.



"வெயார் இஸ் வில்லியம்?" என்று அவன் அழுத்தமான குரலில் கேட்க, சில பேரோ தெரியாது என்பது போல் தலையசைத்தார்கள் என்றால், "அவரு ஆஃபீசர் ரொனேல்டோட குவாட்டஸுக்கு போனதா தகவல் வந்துச்சு" என்றான் ஒருவன் மாத்திரம்.



'ஆஃபீசர் ரொனெல்டோட குவாட்டஸா!' என்று தனக்குள்ளேயே கேள்வியைக் கேட்டவாறு சில கணங்கள் அப்படியே நின்றிருந்தவனுக்கு அப்போதுதான் எல்லாமே புரிய, நெற்றி நரம்புகள் புடைத்தெழுந்தன அவனுக்கு.



விழிகள் சிவக்க, கை முஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்தியவன், "ஜேம்ஸ் கெட் டவுன், இதுக்கப்பறம் நான் பார்த்துக்குறேன்" என்று அழுத்தமாக சொல்ல, அவனின் கோபத்தில் சிவந்த முகத்தை அதிர்ச்சியாகப் பார்த்தவாறு காரிலிருந்து இறங்கினான் மற்றவன்.



லியோவோ ஓட்டுனர் சீட்டில் அமர்ந்துக்கொண்டவன் மின்னல் வேகத்தில் காரை செலுத்த, அடுத்த பத்தே நிமிடங்களில் புழுதி பறக்க ரொலேட்டின் குவாட்டஸின் முன் நின்றது அவனின் கார்.



தடாலடியாக உள்ளே நுழைந்தவனை ஹாலில் அமர்ந்திருந்த வில்லியம் புரியாமல் பார்க்க, லியோவோ அவனை எல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் உள்ளே இருந்த அறையொன்றிற்குள் நுழைந்தான்.



அங்கு கையில் மதுபான குவளையோடு தான் வரைந்திருந்த ஓவியத்தை ரொனேல்ட் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்க, அதைக் கவனித்தவனின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.



அங்கு அந்த ஓவியப் பலகையில் யாழ்மொழியின் உருவம்தான் அத்தனை அழகாக வரையப்பட்டிருக்க, "ஆஃபீசர் ரொனேல்ட்" என்ற லியோவின் குரலில் சட்டெனத் திரும்பிப் பார்த்தார்.



"வெல்கம் லியோ, என்ன திடீர்னு வந்திருக்க. டூ யூ சீ தட், ரொம்ப அழகா இருக்கால்ல லைக் ப்ரின்ஸஸ்! பட் யூ நோ வாட், ஷீ இஸ் ஜஸ்ட் அ செர்வன்ட்" என்று சொல்லி அவர் சிரிக்க, "ஓ..." என்று மட்டும் சொன்னவனின் காதில் சட்டென அந்த சத்தம் கேட்டது.



"என்னை தயவு செய்து விட்டு விடுங்கள், நான் போக வேண்டும்" என்ற யாழின் கத்தல்கள் காதில் விழுந்ததும் உடனே திரும்பிப் பார்த்தான் லியோ.



"இன்னும் இவ கத்துறத விடல்லையா? பார்க்க அழகா இருக்கா ஆனா ரொம்ப அடமன்ட். என்ட் வாட்ஸ் ரோங் வித் யூ லியோ, இஸ் தெயார் எனிதிங் இம்பார்டென்ட்?" என்று ரொனேல்ட் கேட்க, ஒருகணம் யாழ்மொழி அடைக்கப்பட்டிருக்கும் அறை இருக்கும் திசையைப் பார்த்தவன், மேலும் கீழும் இறுகிய முகமாக தலையசைத்தான்.



"யெஸ் சார், இந்த கன்ட்ரீலயிருந்து நாம ரீசன்ட்டா நிறைய பொருட்கள எக்ஸ்பார்ட் பண்ணியிருக்கோம். ஆனா, அரசர் சொன்ன வீதத்த விட நாம எக்ஸ்பார்ட் பண்ணியிருக்குற வீதம் ரொம்ப அதிகமா இருக்கு. இது பத்தி அரசர் வேந்தனுக்கு தெரிஞ்சா நமக்குதான் பிரச்சனை" என்று லியோ வேறு ஏதோ ஒன்றைப் பற்றி பேசி திசைத் திருப்ப, அலட்சியமாக தோளைக் குலுக்கியவாறு அந்த அறையிலிருந்து வெளியேறிவர் வில்லியமுக்கு எதிரே அமர்ந்துக்கொண்டார்.



"தட்ஸ் ஆல் மை ப்ளேன் லியோ, இதை பத்தி முன்னாடியே உன்கிட்ட நான் இன்ஃபார்ம் பண்ணியிருக்கணும். அரசர் சொன்ன அந்த பர்சென்டேஜ் எல்லாம் நமக்கு பத்தாது, அதான் நாமளே எடுத்துக்க வேண்டியதா போச்சு. ஒருவேள அரசருக்கு தெரிஞ்சா வீ ஹேவ் டூ அட்டேக் த பேளஸ். இல்லன்னா, நாம பொழைக்க முடியாதுல்ல" என்று அவர் சொல்வி வில்லியமுக்கும் மதுவை ஊற்றிக் கொடுக்க, "கரெக்டா சொன்னீங்க சார்" என்று அதை வாங்கி விஷம புன்னகையோடு குடித்தான் மற்றவன்.



"ஐ கான்ட் வெயிட் வில்லியம், கத்தி கத்தி அவளே களைச்சு போய் அடங்கிருவா, அப்போதான் நம்ம வேலைய ஆரம்பிக்கணும்" என்று அவர் சொல்லி ஒற்றைக் கண்ணை சிமிட்ட, வில்லியமுக்கும் அவளை ருசித்துப் பார்க்கும் வெறி அதிகரித்துக்கொண்டே சென்றது.



ஆனால், லியோவுக்கு ஒரு பக்கம் தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் இன்னொரு பக்கம் ஏனென்று தெரியாத ஒரு பதட்டம் அவனை சூழ்ந்துக்கொண்டது.



தினமும் இங்கு ஒரு பெண் சித்திரவதை செய்யப்படுவது அவன் அறியாமலில்லை. ஆனால், இன்று அதே இடத்தில் யாழ்மொழியைப் பார்த்ததும் அவனால் நிலைக்கொள்ள முடியவில்லை.



இந்த உணர்வுக்கான அர்த்தம் அவனுக்கே தெரியவில்லை. கேட்டால் காதல் இல்லை என்பான்!



ரொனெல்டும் வில்லியமும் அனுபவிக்கப் போகும் சுகத்திற்காக இப்போதே மதுவை அருந்தி இன்பத்தில் மூழ்கியிருக்க, "அப்போ நான் கெளம்புறேன் சார்" என்று விட்டு அங்கிருந்து வெளியேறிய லியோ காருக்கே அருகே நின்று சுற்றி முற்றி நோட்டமிட்டான்.



குவாட்டஸின் வாசலில் மூன்று அதிகாரிகள் நின்றுக்கொண்டிருக்க, தனக்குள் ஒரு திட்டத்தை தீட்டியவாறு அவர்களுக்கு அருகே சென்றவன், "நீங்க எல்லாம் வேலையில கவனமாதான் இருக்கீங்களா, உங்கள பார்த்தா நம்ம பிரிட்டிஷுக்கு நேர்மையா இருக்குற மாதிரி தெரியலயே" என்று கோபமாகப் பேச, அந்த அதிகாரிகளோ பதறிவிட்டனர்.



"என்னாச்சு சார், நா.. நாங்க என்ன பண்ணோம்?" என்று அவர்கள் பதற்றமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, "இப்போ நான் காருக்கு பக்கத்துல வரும் போது யாரோ அந்த பக்கமா ஓடுறத பார்த்தேன், ஆனா நீங்க மூனு பேரும் ஏதோ டூருக்கு வந்த மாதிரி ஜாலியா பேசிக்கிட்டு இருக்கீங்க. மொதல்ல போய் அது யாருன்னு பாருங்க, அவன பிடிச்சிட்டு வரலன்னா ஐ வில் கில் யூ!" என்று அடித்தொண்டையிருந்து கத்தினான்.



உயரதிகாரியான அவனின் பேச்சை மறுக்க முடியாமல் அவர்களும் துப்பாக்கியை தயார் நிலையில் வைத்தவாறு அவன் காட்டிய திசைக்கு ஓட, அடுத்தகணம் மின்னல் வேகத்தில் செயற்பட்டான் லியோ.



அந்த குவாட்டஸின் பின் வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்தவன் அழைத்து வரும் பெண்களை அடைத்து வைக்கும் ரொனேல்டின் அறையை நோக்கி வேகமாகச் செல்ல, அதேநேரம் அந்த அறைக்குள் உதவிக்காக கத்தி கத்தி களைத்துப் போய் தரையில் அமர்ந்திருந்தாள் யாழ்மொழி.



அழுது சிவந்த முகத்தோடு கால்களைக் கட்டிக்கொண்டு எப்படி தப்பிப்பதென்று கூட தெரியாமல் பயத்தோடு அமர்ந்திருந்தவளுக்கு எந்த ராஜகுமாரனாவது தன்னை காப்பாற்றி செல்ல மாட்டானா என்ற ஏக்கம் மேலோங்கி இருந்தது.



'ஒவ்வொரு கதைகளிலும் இளவரசியை காப்பாற்ற ராஜகுமாரன் குதிரையில் வருவான். ஆனால், அனைத்தும் கட்டுக்கதைகளே! என்னை காப்பாற்ற எந்த இளவரசனும் வரப் போவதில்லை, இவர்களின் பசிக்கு இரையாகப் போகிறேன். இப்போது என்னாசெய்வது, கடவுளே'



என்று மானசீகமாக அவள் தனக்குள் பேசிக்கொள்ள, அவளுடைய உடலோ பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தது.



சரியாக அவளிருக்கும் அறைக் கதவு திறக்கப்பட, திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தவளின் விழிகள் கலங்கியிருந்ததாலோ என்னவோ வாசலில் நின்றிருந்த உருவமும் சற்று கலங்கிப் போய் தெரிய, விழிகளைக் கசக்கிவிட்டு மீண்டும் உற்றுப் பார்த்தாள்.



அது சாட்சாத் லியோவேதான்.



அவனைப் பார்த்ததுமே அவளுடைய கோபம் ஏகத்துக்கும் எகிற, வேகமாக எழுந்து வந்தவள் அவனின் சட்டையை கொத்தாகப் பற்றிக்கொள்ள, திகைத்துப் போய்விட்டான் ஆடவன்.



**************

மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க.. 😍😍😍

https://aadvikapommunovels.com/threads/விழி-தீயிலொரு-தவம்-கருத்துத்-திரி.2588/
 

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 11




யாழ்மொழியோ அத்தனை கோபத்தோடு அவனின் சட்டையைப் பிடித்திருக்க, அவளின் இந்த எதிர்வினையை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை லியோ.



"ச்சீ... உனக்கு எல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா? என்னை இந்த நிலமைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டாயே பாவி! நான் உனக்கு என்ன பாவம் செய்தேன், என்னை அழைத்தது இதற்குதானா, நீ எல்லாம் ராட்சசன், கல் நெஞ்சக்காரன், பெண்களை வதைக்கும்..." என்று கத்திக்கொண்டே சென்றவளின் வாயைப் பொத்தி சுவற்றில் சாய்த்தவனோ அவளுடைய வார்த்தைகளில் உண்டான கோபத்தை அடக்க விழிகளை அழுந்த மூடித் திறந்தான்.



"உன்னை இங்கயிருந்து அழைச்சுட்டு போகத்தான் நான் வந்தேனே, ஆனா இப்போ எனக்கே உன்னை விட்டுட்டு போனாதான் நல்லதுன்னு தோனுது" என்று இறுகிய குரலில் அவன் சொல்ல, அவளோ அதிர்ச்சியாகப் பார்த்தாள்.



அவன் தன்னை காப்பாற்றத்தான் வந்திருக்கிறான் என்பதை அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.



"சத்தம் போடாத, அவங்க காதுல விழுந்துச்சுன்னா என்னாலயே உன்னை காப்பாத்த முடியாது. புரியுதா? இன்னும் கொஞ்ச நேரத்துல ரெண்டு பேரும் வந்துடுவாங்க அதுக்கு முன்னால நான் உன்னை இங்கயிருந்து வெளியில அழைச்சுட்டு போகணும்" என்ற லியோ மெல்ல அவளின் வாயைப் பொத்தியிருந்த கரத்தை விலக்க, சிலை போல் அவனையே பார்த்தவாறு நின்றிருந்தாள் யாழ்மொழி.



அவள் கரத்தைப் பற்றியவன் சுற்றி முற்றி யாராவது வருகிறார்களா என பார்த்துக்கொண்டே தான் வந்த வழியை நோக்கி அழைத்துச் செல்ல, சரியாக அவன் திரும்பும் வழியில் நின்றிருந்தனர் ரொனெல்ட் மற்றும் வில்லியம்.



லியோ அங்கு இருவரையும் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. யாழ்மொழிக்கு அவர்களைப் பார்த்ததும் பயத்தில் முதுகுத்தண்டு சில்லிட்டது.



"வில்லியம் சொன்னது கரெக்டாதான் இருக்கு, சொன்ன மாதிரி நீ அவள அழைச்சுக்கிட்டு வந்திருக்க. வாவ்! ஆனா, எனக்கு ஒன்னுதான் புரியல, எந்த தைரியத்துல இவள அழைச்சுட்டு போகலாம்னு நினைச்ச?" என்று ரொனெல்ட் பற்களைக் கடித்தவாறு யாழ்மொழியைப் பார்க்க, அவளோ தன்னவனின் பின்னால் பயத்தோடு ஒளிந்துக்கொண்டாள்.



"சார், நான்தான் சொன்னேனே, ஆஃபீசர் லியோ இங்க திடீர்னு வந்திருக்காருன்னா அதுக்கு காரணம் இல்லாம இருக்காதுன்னு" என்று வில்லியம் சொல்லி சிரிக்க, அவருக்கோ கோபம் எகிறியது.



"ஹவ் டேர் யூ லியோ, நான் ஒன்னு ஆசைப்பட்டா எனக்கு அது வேணும். என்கிட்டயிருந்து அது பறிக்குற அளவுக்கு உனக்கு எங்கயிருந்து தைரியம் வந்துச்சு? நான் நினைச்சா இந்த நாட்டை விட்டே உன்னை அனுப்ப முடியும்" என்று அவர் விழிகள் சிவக்கப் பேசிக்கொண்டே வில்லியமின் கரத்திலிருந்த துப்பாக்கியை பிடுங்கி அவனை நோக்கி குறி வைக்க, முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அவரை வெறித்துப் பார்த்தான் லியோ.



"நீங்க கோபப்படுறதுல நியாயம் இருக்கு, ஐ கென் அன்டர்ஸ்டேன்ட். பட், நான் உங்கள காப்பாத்தியிருக்கேன். அதுவும் இவளால வரப் போற ஆபத்துலயிருந்து" என்று யாழ்மொழியை சுட்டிக்காட்டி சொல்ல, மற்ற இரு அதிகாரிகளும் புரியாமல் விழிகளை சுருக்கினர்.



யாழ்மொழிக்கு அவர்கள் ஆங்கிலத்தில் பேசிக்கொள்வதால் அந்த கலந்துரையாடல் எதுவும் சுத்தமாகப் புரியவில்லை.



"என்ன சொல்ற புரியல" என்று ரொனெல்ட் புருவங்களை நெறிக்க, "இத்தனை நாள் நிறைய பொண்ணுங்கள இங்க அழைச்சுட்டு வந்திருக்கீங்க, அதை எதிர்த்து நான் எதுவுமே சொல்லல. ஏன்னா, அவங்க எல்லாரும் சாதாரண மக்கள், நாம என்ன பண்ணாலும் அதை எதிர்த்து கேக்க அவங்களால முடியாது. பட் இவளோட விஷயத்துல அப்படி கிடையாது, அரண்மனையில இருக்குறவ.



இவ ஜஸ்ட் சேர்வன்ட் மட்டும் கிடையாது அங்கேயே வளர்ந்து இளவரசி கூட ரொம்ப நெருக்கமான தொடர்புல இருக்குறவ. எனக்கு கேள்விப்பட்ட வரைக்கும் ஏதோ ஒரு வகையில அரசருக்கு இவ தூரத்து சொந்தமா கூட இருக்கலாம். இப்போ நடந்தது அவருக்கு கேள்விப்பட்டிச்சுன்னா அவ்வளவுதான், நம்ம ப்ளான் எல்லாமே சொதப்பிடும்" என்று மூச்சு விடாமல் பேசிக்கொண்டே போனான் லியோ.



அவனின் வார்த்தைகளில் அந்த இருவரோ ஒருவர் முகத்தை ஒருவர் புரியாமல் பார்த்துக்கொண்டனர்.



"அரசருக்கு தெரிஞ்சா எங்களுக்கு என்ன, எங்கள எதிர்த்து அவரால கூட நிக்க முடியாது. அதனாலதானே இந்த நாட்டு வளங்கள கூட நாம அதிகமா சூரையாடுறோம்" என்ற ரொனேல்டின் இதழ்கள் ஏளனமாக வளைந்தன.



"அரசரோடு சேர்ந்து மக்களும் புரட்சி பண்ணாங்கன்னா நம்மளால கண்டிப்பா எதிர்க்க முடியாது சார், இவளுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா கண்டிப்பா அரசர் நமக்கு எதிரா திரும்புவாரு, அப்போ நாம இல்லீகல்லா பண்ண இம்பார்ட் பத்தியும் அவருக்கு தெரிய வரலாம். ஏற்கனவே மக்கள் நம்ம மேல ரொம்ப கோபத்துல இருக்காங்க.



அரசர் எதிர்க்க ஆரம்பிச்சா மொத்த மக்களும் தைரியமா நம்மள எதிர்த்து நிப்பாங்க. அதுமட்டும் இல்லாம அன்னைக்கு பேளஸ்ல நடந்த ஃபங்ஷன் அப்போதான் கவனிச்சேன், அரசருக்கு பக்கத்து குறுநில மன்னர்களோட கூட ஹெல்த்தி ரிலேஷன்சிப் இருக்கு. சோ, எல்லாமே நமக்கெதிரா திரும்பிரும். இந்த சின்ன பொண்ணால இத்தனை பெரிய பிரச்சனைய நாம ஃபேஸ் பண்ணணுமா, அதனால இவள விட்டுரலாம். ஐ ஹோப் யூ அன்டர்ஸ்ட் வாட் ஐ அம் ட்ரையிங் டூ சே சார் ரொனேல்ட்"



என்று வாய்க்கு வந்த பொய்களை அடுக்கடுக்காய் செதுக்கி அவன் ஒரு கதையை அடித்து விட, ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர் அந்த இருவரும்.



"இதை நீங்க முன்னாடியே சொல்லியிருக்கலாமே, எதுக்காக திருட்டுத்தனமா பின்னாடி வழியா வந்து இவள காப்பாத்தி போகணும்னு நினைச்சீங்க? சம்திங் ஃபிஷி" என்று வில்லியம் சந்தேகப் பார்வையோடுக் கேட்க, ஒருகணம் அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் லியோவே திணறிவிட்டான்.



"அது... அது வந்து.. நீங்க ரெண்டு பேரும் போதையில இருந்தீங்க. உங்ககிட்ட எக்ஸ்ப்ளைன் பண்ணி புரிய வைக்க முடியாதுன்னு நான் தப்பா நினைச்சுட்டேன். அரசருக்கு நாம கடத்தின விஷயம் தெரியுறதுக்குள்ள இவள எப்படியாச்சும் அவளோட இடத்துக்கு அனுப்பிரணும்னு தோனுச்சு. என்ட், திருட்டுத்தனம் பண்றது எல்லாம் உங்க புத்தி ஆஃபீசர் வில்லியம், நான் உங்க ஹையர் ஆஃபீசர். மைன்ட் இட்!" என்று அடக்கப்பட்ட கோபத்தோடு அழுத்தமான குரலில் சொன்னான் அவன்.



கை முஷ்டியை இறுக்கி கோபத்தை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டு வில்லியம் பின்னால் நகர, யாழ்மொழியோ மூவரையும் மாறி மாறி பயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.



ஆனால் ரொனேல்டிற்கு யாழ்மொழியைப் பார்க்கப் பார்க்க அவளை விட மனமே இல்லை.



"பழம் கையில இருந்தும் அதை டேஸ்ட் பண்ண முடியாத சிட்டுவேஷன்ல இருக்கேன், இருந்தாலும் நீ சொல்றத என்னால முழுசா ஏத்துக்க முடியாம இருக்கே ஆஃபீசர் லியோ" என்று ரொனேல்ட் அவளையே காமப் பார்வை பார்த்தவாறு ஒரு அடி முன்னே வைக்க, லியோவோ அவளை தன் பின்னே மறைத்துக்கொண்டான்.



"சார், இதை நான் பண்றது நம்ம நல்லதுக்குதான். இந்த நாட்டோட வளங்களுக்கு நம்ம நாட்டுல பெரிய விலை போகுது, அவ்வளவு ஈஸியா இதை விட்டுர முடியாது. நம்ம வேலைக்கு எதுவும் தடையா இருக்க கூடாது. இங்க நடந்தத பத்தி யாருக்கும் எதுவும் தெரியாம நான் பார்த்துக்குறேன். சின்ன பொண்ணு, மிரட்டினா பயந்துடுவா" என்று அவன் கேலியாக சொல்லி சிரித்தவாறு யாழ்மொழியைப் பார்க்க, அவளோ எதுவும் புரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தாள்.



"ஊஃப்ப்... ஓகே ஆஃபீசர் லியோ, இதை பத்தி அரசருக்கு தெரியக் கூடாது. அது உங்க பொறுப்பு" என்று அவளை அடைய முடியாத கோபத்தில் எரிச்சலாக சொல்லி விட்டு ரொனேல்ட் நகர்ந்துவிட, வில்லியமோ அவரின் பின்னே வேகமாக சென்றான்.



"சீக்கிரம் வா!" என்று லியோ அதற்குமேல் அங்கு நிற்காமல் அவளை அழைத்துக்கொண்டு தன் காரில் ஏறிக்கொள்ள, அவனை நோக்கி வேகமாக வந்தனர் வாசலில் நின்றிருந்த அதிகாரிகள் மூவரும்.



"சாரி சார், எங்களால அது யாருன்னு கண்டுபிடிக்க முடியல" என்று பயத்தோடு அந்த அதிகாரிகளில் ஒருவன் சொல்ல, "ஓஹோ... ஐ டூ சாரி ஆஃபீசர்ஸ். ஐ திங் அது ஹியூமனே கிடையாது. இட்ஸ் லைக் சம்திங் ஃபாரெஸ்ட் எனிமெல். இப்போதான் தெரிஞ்சது" என்றுவிட்டு அந்த உயரதிகாரியோ அவன் பாட்டிற்கு சென்றுவிட்டான்.



அந்த மூவரும் வாயைப் பிளந்துக்கொண்டு நின்றிருக்க, உள்ளே ரொனேல்ட்டின் முன் பதற்றமாக நின்றிருந்தான் வில்லியம்.



"சார், எனக்கு ஆஃபீசர் லியோ மேல சந்தேகமா இருக்கு. நீங்க எப்படி அந்த பொண்ண அழைச்சுட்டு போக விட்டீங்க?" என்று அவன் கேட்டதும், ரொனேல்ட்டின் இதழ்கள் கேலியாக வளைந்தன.



"அவன் சொன்னத நான் முழுசா நம்பினேன்னு நினைச்சியா, புல்ஷீட்! லியோவ நமக்கு எதிரியாக்குறது நமக்குதான் ஆபத்து. அவனுக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்தி. எப்போவும் நம்ம பக்கத்துல அவன வச்சிருக்கணும். இந்த முறை விட்டுடேன், பட் அவ்வளவு சீக்கிரம் அந்த பூவர் இந்தியன் கேர்ள விட்டுர மாட்டேன். சரியான சந்தர்ப்பம் வரும் போது நமக்கு தேவையானத நாம எடுத்துக்கணும்" என்று அவர் சொல்ல, வன்மப் புன்னகைப் புரிந்தான் வில்லியம்.



அதேநேரம் மின்னல் வேகத்தில் காரை செலுத்திக்கொண்டு வந்த லியோ சந்தைக்கு அருகே காரை நிறுத்திவிட்டு அவளைப் பார்க்க, பெண்ணவளோ கைகளைப் பிசைந்தவாறு தயக்கமாக அவனைப் பார்த்தாள்.



"இங்கயிருந்து அரண்மனைக்கு போயிருவேன்னு நினைக்கிறேன். இதுக்கப்பறம் அவங்க உன்னை தொல்லை பண்ண மாட்டாங்க" என்று அவன் உணர்ச்சிகளற்ற முகத்தோடு சொல்ல, "மிக்க நன்றி அதிகாரி, தாங்கள் தன்னை காப்பாற்ற வந்திருக்கிறீர்கள் என்பதை அறியாமல் ஏதேதோ தவறாக பேசிவிட்டேன். என்னை மன்னிப்பீர்களா?" என்று விழிகளை சுருக்கி கெஞ்சலாகக் கேட்டாள் அவள்.



அவனோ அவளை கூரிய பார்வைப் பார்த்தவன், "என் கார்லயிருந்து மொதல்ல இறங்குறியா, உன்கிட்ட பேச எனக்கு நேரமில்ல" என்று வழக்கம் போல் வெடுக்கென்று பதிலளித்தான்.



ஆனால், வழக்கத்திற்கு மாறாக அவனின் வார்த்தைளால் கோபப்படவில்லை அவள்.



தன்னை அறியாத ஒரு புன்னகை அவளுடைய இதழ்களில் தவழ, "எனக்கு இத்தனை பெரிய உதவியை செய்திருக்கிறீர்கள், என்றும் மறக்க மாட்டேன்" என்று சொல்லிவிட்டு காரிலிருந்து யாழ் இறங்க, "உன்னை காப்பாத்தினதுக்காக என்னை நல்லவன்னு நினைச்சிராத, அவ்வளவு எல்லாம் நான் நல்லவன் கிடையாது" என்று லியோ எங்கோ பார்த்துக்கொண்டு பதில் சொன்னான்.



அவனின் பேச்சுக்கு மீண்டும் புன்னகையையே பதிலாக கொடுத்தவளுக்கு அப்போதுதான் அந்த ஒரு விடயம் ஞாபகத்திற்கு வர, "நான் ஒன்று கேட்கலாமா? அப்படி என்ன கூறினீர்கள் என்று அந்த இரு அதிகாரிகளும் என்னை தங்களுடன் வெளியேற சம்மதித்தார்கள்? தங்களின் மொழி புரியவில்லை அதனால்தான் கேட்கிறேன்" என்று ஆர்வமாகக் கேட்க, நெற்றியை நீவி விட்டவாறு அவளை பார்த்தான் அவன்.



"நீ அரசருக்கு உறவுக்கார பொண்ணு, உனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா அரசர் எங்கள எதிர்த்து போர் புரிவாருன்னு பொய் சொன்னேன்" என்று அவன் இதழுக்குள் அடக்கப்பட்ட சிரிப்போடு சொல்ல, ஒருகணம் அவன் சொன்னதைக் கேட்டு அவளுக்கே அதிர்ச்சியாக இருந்தது.



சுற்றி முற்றி பார்த்தவள், "அப்பாடா! யாருடைய காதிலும் விழவில்லை. தங்களுக்கு எதிராக போர் புரிவாரோ இல்லையோ இந்த விடயம் மட்டும் அரசர் காதிற்கு சென்றால் எனக்கு எதிராக போருக்கு தயாராகுவார்" என்று கேலியாக சொல்ல, தன்னை மீறி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டான் ஆடவன்.



அவனுடைய இதழ்கள் விரிந்திருந்ததை பார்த்தவளுக்கு, 'சிரிக்கின்றானோ?' என்று கூட தோன்ற, அவள் தன்னை உற்று பார்ப்பதை கவனித்தவன் உடனே காரை உயிர்ப்பித்து மின்னல் வேகத்தில் பறந்து விட்டான்.



போகும் அவனையே வெறித்துப் பார்த்திருந்தவளுக்கு என்றும் இல்லாத ஒரு சந்தோஷம்.



அந்த இதமான உணர்வோடு அவள் அரண்மனைக்கு செல்ல, அங்கு பணிப்பெண்களின் அறையே பதட்டமாக இருந்தது.



"அய்யோ கடவுளே! இந்த யாழ்மொழி அரண்மனையிலிருந்து வெளியே சென்று வெகுநேரமாகி விட்டது. இத்தனை நேரமாகியும் அவள் வராமல் இருக்கிறாள் என்றால் நிச்சயமாக ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கியிருப்பாள் போலும்! இது மட்டும் அரசருக்கு தெரிந்தால், கடவுளே!" என்று பதற்றமாக ராதா அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்துக்கொண்டிருக்க, மற்ற பெண்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.



"ஏன் இந்த விபரீதம் ராதா, இதெல்லாம் நமக்கு தேவைதானா! இளவரசியை கூட பல தடவை வெளியே அழைத்துச் சென்றிருக்கிறாள், இதையெல்லாம் எவரும் அறியவில்லை என நினைத்துக்கொண்டு இருக்கிறாளா? முட்டாள்தனம்" என்று அவர்களில் ஒருத்தி கோபமாகப் பேச, "இளவரசி..." என்று ஏதோ ஞாபகம் வந்தவளாக அதிர்ச்சியோடு சொல்லிக்கொண்டாள் ராதா.



மற்ற பெண்களோ அவளை புரியாமல் பார்க்க, "இளவரசியை விட்டால் இப்போது நமக்கு வேறு வழியே இல்லை. இதைப் பற்றி அவர்களுக்கு தெரியப்படுத்தலாம், அவர்கள் நிச்சயமாக ஏதாவது ஒரு வழியை கண்டுபிடிப்பார்கள்" என்றவள் வேகமாக அறையிலிருந்து வெளியேறப் போனாள்.



ஆனால் அடுத்தகணம், அவளுடைய கால்கள் சட்டென நிற்க, தன்னெதிரே நின்றிருப்பவளைப் பார்த்து "யாழ்..." என்று முணுமுணுத்தன ராதாவின் இதழ்கள்.



ஆம்.. அவளெதிரே யாழ்மொழி புன்னகையோடு நின்றுக்கொண்டிருக்க, சில கணங்கள் அவளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவள் தன்னை சுதாகரித்த மறுகணம் தோழியை தாவி அணைத்திருந்தாள்.



"பயந்தே போய்விட்டேன் யாழ், உனக்கு எதுவும் ஆகவில்லையே?" என்று ராதா பதற்றமாகக் கேட்க, "எனக்கு என்ன நேர்ந்து விட்டதென்று இத்தனை பதற்றமாக இருக்கிறாய் நீ! அரண்மனைக்குத் திரும்ப சற்று தாமதமாகி விட்டது. அவ்வளவுதான்" என்றாள் மற்றவள் சாதாரணமாக.



அவளின் தோழிக்கு அப்போதுதான் போன உயிரே திரும்பி வந்தது போலிருந்தது.



மற்ற பெண்களோ யாழ்மொழியை முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட, தோழியை இழுத்துக்கொண்டு அறை ஜன்னலின் அருகே சென்று நின்றுக்கொண்டாள் ராதா.



"யாழ், ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. என்னிடம் மறைக்க முயற்சி செய்யாதே!" என்று கேட்ட ராதா, "இல்லை அது..." என்று பேச வந்த தோழியை தடுத்து அதிகாரிகள் இழுத்துச் செல்லும் போது கிழிக்கப்பட்ட அவளின் ஆடையில் ஒரு பகுதியை சுட்டிக்காட்டினாள்.



அதைப் பார்த்த யாழ்மொழியோ தலையில் வெளிப்படையாக அடித்துக்கொள்ள, தோழியை ஆர்வமாகப் பார்த்தாள் மற்றவள்.



**********

என்னோட மற்ற கதைகளை படிக்க 👇 (kobo app)

India link >>
https://www.kobo.com/in/en/search?q...or=sheha+zaki&sort=Temperature&fclanguages=ta

Usa link >>>
https://www.kobo.com/ww/en/search?q...or=sheha+zaki&sort=Temperature&fclanguages=ta


'காலமெல்லாம் உன்னைத் தேடி' என்னோட டிரெக்ட் புக் இப்போ அமேசன் கிண்டல்ல yazhini mithra அப்படிங்குறா Available ஆ இருக்கு.. மறக்காம ரீட் பண்ணிக்கோங்க.. >>>

India link 👇
https://www.amazon.in/dp/B0FLYRBNZG


Usa link 👇
https://www.amazon.com/dp/B0FLYRBNZG


என்ட், மையவிழிப் பார்வையிலே நாவலும் இப்போ Agni tamil novels அப்படிங்குற பேருல Available ஆ இருக்கு... >>>

INDIA link👇
https://www.amazon.in/dp/B0FL2S9LYC

USA link 👇
https://www.amazon.com/dp/B0FL2S9LYC





 

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 12








யாழ்மொழி நடந்தது அத்தனையையும் சொல்லி முடிக்க, ராதாவோ அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டாள்.



"என்ன சொல்கிறாய் யாழ், ஆங்கிலேய அதிகாரிகள் உன்னை கடத்தினார்களா.. அய்யோ! கேட்கும் போதே என் மனம் பதறுகிறது. அந்த நிலைமையில் உன் மனநிலை எப்படி இருந்திருக்குமென்று யோசிக்கும் போதே என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த கடவுள்தான் உன்னை காப்பாற்றி இருக்கிறார்" என்று ராதா தலைக்கு மேல் கையெடுத்துக் கும்பிட, யாழ்மொழிக்கு லியோவின் ஞாபகம்தான் வந்தது.



"ஆம் ராதா, என் உயிருக்கும் மேலான கற்பை பாதுகாத்தவர் கடவுள்தானே ராதா! ஆனால், இளவரசி கதைகளில் வரும் ராஜகுமாரனைப் போல வருவார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை" என்று அவள் உணர்ச்சி பூர்வமாக சொல்ல, ராதாவோ தோழியை குறும்புப் புன்னகையோடு உற்றுப் பார்த்தாள்.



"ராஜகுமாரனா, இல்லை உன் ராஜகுமாரன் என்று சொல்கிறாயா?" என்று அவள் அர்த்தப் புன்னகைப் புரிந்தவாறுக் கேட்க, அவளை அதிர்ச்சியாகப் பார்த்த யாழ்மொழிக்கு முகம் குப்பென்று சிவந்தது.



"அது... அது நான் அப்படி சொல்லவே இல்லையே! என்னை காப்பாற்றினார் அவ்வளவுதான், எங்களுக்கு இடையில் வேறெதுவும் இல்லை" என்று அவள் பதற்றமாக சொல்ல, "இப்போது நான் எதுவுமே சொல்லவில்லையே யாழ், ஆமாம்... ஏன் உன் முகம் இப்படி சிவந்திருக்கிறது? இருந்தாலும் அவர் ஒரு ஆங்கிலேயன், காதல் எனும் வலையில் விழுந்துவிடாதே! ஜாக்கிரதை" என்ற தோழியை முறைத்துப் பார்த்தாள் யாழ்.



"நீயாக எதையும் கற்பனை செய்துக்கொள்ளாதே! போய் உறங்கு, நீண்ட நேரம் விழித்திருந்தால் இப்படிதான் சிந்திக்கத் தோன்றும்" என்று போலி முறைப்போடு சொல்லிவிட்டு தன் படுக்கையில் விழுந்த யாழ்மொழியின் நினைவுகள் முழுக்க லியோவின் முகம்தான் விம்பங்களாக வந்து சென்றன.



"என் ராஜகுமாரனா!" என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்டவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்திருக்க, அன்றைய இரவு அவளுக்கு தூங்கா இரவாகவே கழிந்தது.



அன்றைய நாள் கழிந்து அடுத்த நாளும் விடிந்தது.



இந்திரசேனாவோ தோட்டத்தில் அமர்ந்து புத்தகமொன்றை படித்துக்கொண்டிருக்க, அவளுக்கு பக்கத்தில் பூக்களை வைத்து மாலை செய்துக்கொண்டிருந்த யாழ்மொழியோ ஏதோ சொல்ல வருவதும் பின் தயங்குவதுமாக தடுமாறிக்கொண்டிருந்தாள்.



விழிகளை மட்டும் உயர்த்தி தோழியைப் பார்த்த இந்திரா, "ஏதோ சொல்ல முயல்கிறாய், ஆனால் என்னவென்றுதான் தெரியவில்லை" என்று கூரிய பார்வையோடு சொல்ல, "அது... அதெல்லாம் ஒன்றும் இல்லை இளவரசி. வழக்கமாக என்னை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு சந்தைக்கு செல்வீர்கள், ஆனால் இப்போதெல்லாம் வெளியில் செல்வதையே வெகுவாக குறைத்து விட்டீர்களே, என்ன திடீர் மாற்றம்?" என்றாள் மற்றவள்.



அவளின் கேள்வியில் விரக்தியாகப் புன்னகைத்தவள், "என்னால் வீராவுக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது என்று நினைக்கிறேன் யாழ். ஏனென்று தெரியவில்லை, பயமாக இருக்கிறது. தந்தைக்கு தெரிந்தால் அவனை ஏதாவது..." என்று அதற்குமேல் பேச முடியாமல் வார்த்தைகளை நிறுத்தினாள்.



அவளையும் மீறி விழிகள் கலங்க, அழுகை தொண்டையை அடைத்தது.



"போராடினால்தானே காதல் கைக்கூடும், தாங்கள் விருப்பப்பட்டவரோடு இணைய முடியும் இளவரசி. இப்போதே பயந்தால் எப்படி? தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையென்றால் யாருக்கும் தெரியாமல் வெளியில் செல்லலாம். என்ன சொல்கிறீர்கள்?" என்று அவள் கேட்டு இரு புருவங்களை ஏற்றி இறக்க, அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள் இந்திரா.



வேகமாக விழிகளைத் துடைத்தவாறு, "யாழ், நிஜமாகவே இது நீதானா? நானே அழைத்தாலும் வர முடியாதென்று அத்தனை அலுச்சாட்டியம் செய்வாய், ஆனால் இப்போது நீயாக அழைக்கிறாய். என்ன காரணம்?" என்று ஆச்சரியம் குறையாத குரலில் அவள் கேட்க, "அது... நான்... சந்தைக்கு..." என்று என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறினாள் மற்றவள்.



இந்திராவோ விழிகளை சுருக்கி அவளை புரியாமல் பார்த்துக்கொண்டிருக்க, "அது... ஆங் தங்களின் காதலுக்காகத்தான் இளவரசி. என்னை விட்டால் தங்களுக்கு வேறு யார் இருக்கிறார்கள்? நான்தானே அனைத்துமாக இருந்து தங்களின் மனதைக் கவர்ந்தவரோடு சேர்த்து வைக்க வேண்டும்" என்று விழிகளை உருட்டி கைகளை அசைத்து அவள் பேசிய விதத்தில் மற்றவளுக்கு பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது.



"ஏதோ சொல்கிறாய், நம்புகிறேன் உன்னை" என்று சிரித்தவாறு சொன்ன இந்திரா, "வா வா, விரைவாக செல்லலாம்" என்று அழைத்துக்கொண்டு செல்ல, யாழ்மொழிக்கு லியோவைக் காண மனம் துடித்தது.



இந்திராவை விடவும் ஆர்வமாக தயாராகியவள் வழக்கத்திற்கு மாறாக கண்ணாடியில் பல தடவை தன்னை பார்ப்பதும் அலங்கரிப்பதுமாக இருக்க, மற்ற பணிப்பெண்களோ இதை கவனிக்காமல் இல்லை.



தங்களுக்குள் அவர்கள் கிசுகிசுத்துக்கொள்ள, அதைக் கவனித்தவளோ, "பொறாமை!" என்று உதட்டை சுழித்தவாறு சொல்லிவிட்டு இளவரசியைத் தேடிச் சென்றாள்.



இந்திராவும் மாற்றுடையில் தயாராக இருக்க, அடுத்த பத்து நிமிடங்களில் அரண்மனையிலிருந்து வெளியேறிய இரு பெண்களும் சந்தையை நோக்கி நடந்துச் செல்ல, யாழ்மொழியின் விழிகளோ அலைப் பாய்ந்துக்கொண்டே இருந்தன.



அவளுடைய விழிகள் சுற்றி முற்றி எதையோ தேடிக்கொண்டே வர, சந்தைக்குள் நுழைந்ததுமே தன் நண்பர்களோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்த வீராவை கவனித்ததும் இந்திராவின் இதழ்கள் மெல்ல புன்னகைத்தன.



"வீரா..." என்று அவளிதழ்கள் மெல்ல முணுமுணுக்க, மன உந்துதலில் அவளிருக்கும் திசைக்கு யோசனையோடு திரும்பிப் பார்த்தான் வீரா.



தன்னவளைப் பார்த்ததுமே அவனுடைய விழிகள் ஆச்சரியத்தில் விரிய, கால்கள் தானாக நகர்ந்து அவளை நோக்கி வந்தன.



அப்போதுதான் சுற்றியிருக்கும் மக்கள் கூட்டத்தை உணர்ந்தவன், சட்டென நின்று விழிகளால் ஒரு திசையை காண்பித்து வருமாறு சொல்லிவிட்டு வேகமாக செல்ல, "யாழ், இங்கேயே காத்திரு, விரைவில் வந்துவிடுவேன்" என்றுவிட்டு இந்திரா அவன் காட்டிய திசைக்கு ஓடினாள்.



"எங்கு சென்றான், இந்த பக்கமாகத்தானே வரச் சொன்னான்! இப்போது... இங்கு வெறும் குடிசைகளாக இருக்கிறது. அவனை எங்கு சென்று நான் தேடுவது?" என்று நெற்றியை நீவி விட்டுக்கொண்டவாறு அவள் சுற்றிமுற்றி தன்னவனைத் தேட, திடீரென குடிசைக்குள்ளிருந்து ஒரு வலிய கரம் அவளைப் பிடித்து குடிசைக்குள் இழுத்தெடுத்தது.



இந்திரசேனாவோ பயத்தில் உறைந்துப் போய் சிலையாகி விட, அதேநேரம் யாழ்மொழியோ சந்தையிலிருந்து வெளியே வந்து லியோவைதான் தேட ஆரம்பித்தாள்.



'யாழ், உன் போக்கே சரியில்லை. போயும் போயும் அந்த ஆங்கிலேய அதிகாரியை போய் தேடிக்கொண்டிருக்கிறாய். ராதா சொல்வது போல் இது நல்லதிற்கில்லைதான்' என்று மூளை எச்சரிக்க, 'அது.. ஆங் அவர் என்னை காப்பாற்றினார் அல்லவா! அதற்காகத்தான் வேறெதுவும் இல்லை' என்று சமாளிக்க முயன்றது மனம்.



ஆனால், தான் என்ன உணர்கிறோம் என யாழ்மொழி அறியாமல் இல்லை. அதன் விளைவுதான் அவளாகவே லியோவைத் தேடி சந்தைக்கு வந்தது.



இடுப்பில் கைக்குற்றி தேடியவளின் மனம், அவன் இல்லை என்று அறிந்ததுமே வெறுமையாக உணர, சோர்ந்த முகத்தோடு திரும்பியவளின் காதில் லியோவின் குரல் கேட்டது.



"ஜேம்ஸ், ஸ்டார்ட் த கார், வீ ஹேவ் டூ கோ அவர் பேளஸ் சூன்" என்று லியோ சொல்லிக்கொண்டே காருக்கு அருகே செல்ல, உடனே சத்தம் கேட்ட திசைக்கு திரும்பிப் பார்த்த யாழ்மொழியோ வேகமாக அவனை நோக்கி ஓடினாள்.



ஜேம்ஸ் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்ததும் லியோ கார் கதவைத் திறக்கப் போக, வேகமாக வந்து அந்த கதவை மூடிவிட்டு மூச்சு வாங்க நின்றிருந்தாள் பெண்ணவள்.



"நீயா..." என்று சிறு அதிர்ச்சியோடு லியோ அவளைப் பார்க்க, "தங்க.. தங்களை சந்திக்கதான் ஓடி வந்தேன். இத்தனை நேரம் இங்குதான் இருந்தீர்களா, இது தெரியாமல் நான் உங்களை..." என்று பேசிக்கொண்டே சென்றவளை குறுக்கிட்டான் ஆடவன்.



"ஹேய் வெயிட்! வாட்... நீ என்னை எதுக்காக பார்க்கணும்? ஆமா... இப்போ உனக்கு என்ன வேணும்?" என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்திய வண்ணம் அவன் கேட்க, அசடுவழிந்தவாறு திருதிருவென விழித்தவளுக்கே அதற்கான பதில் தெரியவில்லை.



"முன்பெல்லாம் தங்களை தவறாக எண்ணியிருந்தேன். ஆனால் என்னை நீங்கள் காப்பாற்றியதிலிருந்து தங்களை பற்றிய என் எண்ணமே மாறி விட்டது" என்று புன்னகையோடு யாழ் சொல்லிக்கொண்டே போக, "தெரியாம உன்னை காப்பாத்திட்டேன், இதுக்கப்பறம் இந்த மாதிரியான நல்ல காரியம்லாம் பண்ண மாட்டேன். என் முன்னாடி இப்படி இழிச்சிட்டு நிக்காம போயிரு. இட்ஸ் இர்ரிடேட்டிங்" என்று பற்களைக் கடித்தான் லியோ.



அவளோ பாவமாக முகத்தை வைத்துக்கொள்ள, அவன் பாட்டிற்கு காரில் ஏறி கதவை அடித்துச் சாத்தினான்.



உடனே ஏதோ ஒன்று ஞாபகம் வந்தவளாக, "பொறுங்கள் அதிகாரி, தாங்கள் உதவி செய்ததற்கு நான் ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டுமல்லவா! கொடுப்பதற்கு என்னிடக் பொற்காசுகளோ விலையுயர்ந்த பொருட்களோ கிடையாது. ஆனால், நான் வேண்டுமானால் உங்களுக்கு ஊரை சுற்றி காண்பிக்கட்டுமா?" என்று விழிகள் மின்ன கேட்க, அவளை விழிகளை கூர்மையாக்கிப் பார்த்தான் அவன்.



யாழ்மொழிக்கு அவனின் பூனை விழிகளைப் பார்க்கப் பார்க்க திகட்டவில்லை. தன்னை மீறி அவள் அவனை ரசிக்க ஆரம்பிக்க, அவளின் பார்வையிலிருந்த ஏதோ ஒன்று லியோவின் மனதை சற்று அசைத்துப் பார்த்தது.



உடனே அவளின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் அவன் முகத்தை திருப்பிக்கொள்ள, இருவரையும் மாறி மாறி புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான் ஜேம்ஸ்.



"ஜேம்ஸ், காரை எடு!" என்று அவன் கத்தியதும், உடனே ஜேம்ஸ்ஸும் காரை உயிர்ப்பித்து செல்ல ஆரம்பிக்க, பதறிவிட்டாள் யாழ்மொழி.



"அதிகாரி நாளை இதே இடத்தில் உங்களுக்காக காத்திருப்பேன், மறுக்காமல் வந்து விடுங்கள்" என்று அவள் சத்தமாகக் கத்த, கார் ஜன்னல் வழியே அவளை எட்டிப் பார்த்த லியோ அவளை முறைத்து விட்டு திரும்பிக்கொண்டான்.



"இடியட்!" என்று அவன் பற்களைக் கடிக்க, ஜேம்ஸ்ஸிற்கு யாழ்மொழியின் புன்னகையும் லியோவின் விழிகளில் தெரிந்த பதட்டமும் எதையோ ஒன்றை உணர்த்துவது போலிருந்தது.



இங்கு இவ்வாறு இருக்க, திடீரென தன் கரத்தைப் பற்றி இழுத்ததில் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற இந்திரசேனாவுக்கு தன்னை சுதாகரிக்கவே சில நிமிடங்கள் தேவைப்பட்டன.



"வீரா, என்ன விளையாட்டு இது? என் உயிரே போய்விட்டது" என்று பதற்றமாக சொன்னவள் அப்போதுதான் அந்த சிறிய குடிசையை சுற்றி முற்றி பார்த்துவிட்டு, "கடவுளே, யாராவது நம்மை இந்த நிலையில் பார்த்தால் அவ்வளவுதான், முதலில் இங்கேயிருந்து வெளியில் செல்லலாம்" என்று அவனை விட்டு விலகப் போக, ஆடவன் விட்டால்தானே!



அவளிடையை வளைத்து தன்னோடு நெருக்கிக்கொண்டவன், "பயப்படாத இந்திரா! யாரும் வர மாட்டாங்க, ஆமா... கொஞ்சநாளா என்னை பத்தி யோசிக்காத இளவரசி இப்போ என்ன திடீர்னு இந்த சாதாரண வியாபாரிய பார்க்க வந்திருக்கீங்க? இப்போதான் என் நியாபகமே வந்துச்சா?" என்று பாதி வலி பாதி கோபம் என கலந்துக் கேட்க, பெண்ணவளின் முகமே அவனுடைய வார்த்தைகளில் இருண்டுவிட்டது.



"ஏன் இப்படி வார்த்தைகளால் என்னை காயப்படுத்துகிறாய்? என் நிலைமையில் இருந்திருந்தால் உனக்கு புரிந்திருக்கும்" என்று அவள் முகத்தைத் திருப்பிக்கொள்ள, அவள் நாடியைப் பிடித்து தன் முகம் நோக்கித் திருப்பினான் வீரா.



"உன்னை புரிஞ்சுக்காம இல்லை இந்திரா, ஆனா எத்தனை நாளைக்கு இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம்னு தெரியல. நான் ஒன்னு மட்டும் கேக்குறேன் சொல்லு, ஒருவேள அரசர் என்னை வேணாம்னு சொல்லிட்டா நீ என்ன பண்ணுவ?" என்று அவன் தன் சந்தேகத்தைக் கேட்க, "என்னால் உன்னைத் தவிர வேறு எவரையும் மணக்க இயலாது வீரா, எத்தனை இளவரசர்கள் வந்தாலும் நான் உன்னுடையவள்" என்றவளின் வார்த்தைகளில் அத்தனை உறுதி.



"ஆனா... அரசரா தன்னோட இளவரசிக்கு என்னை மாதிரி ஒருத்தன கட்டிக்கொடுக்க அவர் விரும்ப மாட்டாரு. ஒருவேள உண்மை தெரிஞ்சா என்னை கொலை கூட பண்ணலாம்" என்று வலி நிறைந்த பார்வையோடு அவன் சொல்ல, அவனை அதிர்ந்துப் பார்த்தவளின் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது.



"நாம இணைவோமா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை. இந்த ஜென்மத்தில் இளவரசி இந்திரசேனா சாதாரண சந்தை வியாபாரியான வீராவிடம் மனதை பறிகொடுத்து விட்டாள். அவ்வளவுதான்" என்று இந்திரா அழுத்தமாக சொல்ல, அவளை விழிகளில் காதல் மிதக்கப் பார்த்தவன் அடுத்தகணம் அவளிதழை கவ்வியிருந்தான்.



அவளும் பிடிமானத்திற்காக அவனின் பின்னந்தலை முடியைப் பற்றி வருட ஆரம்பிக்க, நடப்பை மறந்து அவளுக்குள் மூழ்கிக்கொண்டே சென்றவனின் கரங்கள் மெல்ல அவள் மேனியில் எல்லையை மீறத் தொடங்கியது.



புதிய சுகத்தில் உண்டான களிப்பில் விழிகளை மூடி மேலும் அவனோடு அவள் நெருங்கிக்கொள்ள, அவளிதழலிலிருந்து மெல்ல அவள் கழுத்தில் முகத்தைப் புதைத்தான் வீரா.



அவனுடைய இதழ் தேகத்தில் பட அவளோ கூச்சத்தில் நெளிய, இருவருக்கும் உடல் சூடாக உணர்ச்சிகள் கிளர்ந்தெழுந்தன.



உணர்ச்சிகள் தாறுமாறாக சுரக்க, தங்களை மறந்த நிலையில் பிணைந்திருந்தவர்கள் திடீரென கேட்ட யாழ்மொழியின் குரலில் பதறிக்கொண்டு விலகி நின்றனர்.



இருவரின் இதயமும் படுவேகமாகத் துடிக்க, மூச்சு வாங்கியவாறு நின்றிருந்தவர்களை எச்சிலை விழுங்கியவாறு பார்த்துக்கொண்டிருந்தாள் யாழ்மொழி.



"யாழ்..." என்ற இந்திராவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்ன, "எவரிடமும் நான் பார்த்ததை சொல்ல மாட்டேன்" என்றவளோ முகத்தை மூடிக்கொண்டு வெளியே ஓடியேவிட்டாள்.



"அய்யோ! பார்த்துட்டாளே, மானமே போச்சு" என்று வீரா தலையை சொரிந்தவாறு சிறு தயக்கத்தோடு தன்னவளைப் பார்க்க, முகம் சிவக்க நின்றிருந்தவளை அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.



மீண்டும் அவனுடைய பார்வை மாற அவளை நோக்கி ஒரு அடி வைத்ததும், இரண்டடி பின்னால் நகர்ந்தவள், "கடவுளே போதும், அவள் பார்த்தது போதாதென்று ஊரே பார்க்க வேண்டுமா?" என்று ஆடையை சரி செய்தவாறு முறைப்போடுக் கேட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.



வீராவோ பின்னந்தலையில் அடித்து சிரித்துக்கொள்ள, அன்றிரவு, விட்டத்தை வெறித்தவாறு உறங்கிக்கொண்டிருந்த யாழ்மொழிக்கு தன்னவன் வருவானா இல்லையா என்ற கேள்விதான் மூளைக்குள் சுழன்றுக்கொண்டிருந்தது.



அவள் பக்கத்திலிருந்த ராதாவோ, "என்ன யாழ், தூங்காமல் எதைப் பற்றி இத்தனை தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்க, "அந்த வெள்ளையனைப் பற்றிதான் ராதா, நாளை ஊரை சுற்றிக் காண்பிக்க நான் சந்தைக்கு அருகே வரச் சொன்னேன், வருவாரா இல்லையா என்று தெரியவில்லை" என்று சாதாரணமாக சொல்லிவிட்டு திரும்பிப் படுத்துக்கொண்டாள் மற்றவள்.



ஆனால், ராதாவுக்குதான் தோழி சொன்னதைக் கேட்டு இதயமே நின்றுவிட்டது.



***********

மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க ஃப்ரென்ட்ஸ்..
https://aadvikapommunovels.com/threads/விழி-தீயிலொரு-தவம்-கருத்துத்-திரி.2588/
 

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 13









யாழ்மொழி தன் தோழியோடு இவ்வாறு பேசிக்கொண்டிருக்க, அதேநேரம் ஆங்கிலேய அரண்மனையிலுள்ள பார் வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் மதுக்குவளையை கையில் வைத்து சுழற்றியவாறு யோசனையோடு அமர்ந்திருந்தான் லியோ.



"அவ கூப்பிட்டா நான் போகணுமா, இந்த ஊரை சுத்தி பார்க்கணும்னு நான் கேட்டேனா என்ன! நான் போக போறதில்ல" என்று தனக்குத்தானே அவன் சொல்லிக்கொள்ள, ஆனால் மனம் விடியலை எதிர்பார்த்து துடித்தது.



"என்னாலயே என்னை புரிஞ்சுக்க முடியலையே! சரியான இம்சை" என்று கடுப்பாக விழிகளை அழுந்த மூடித் திறந்தவன், கையிலிருந்த மதுவை வாயில் சரிக்க, சரியாக அவனெதிரே வந்து அமர்ந்தான் வில்லியம்.



போத்தலிலிருந்த மதுவை க்ளாஸில் ஊற்றியவாறு, "ஆஃபீசர் லியோ, என்ன இன்னைக்கு பார்ல இருக்கீங்க. உங்க பழைய காதலியோட நினைப்பா?" என்று கேலியாகக் கேட்க, மற்றவனோ அவனை உறுத்து விழித்தான்.



"தட் இஸ் நொன் ஆஃப் யூவர் பிஸ்னஸ் வில்லியம்" என்று லியோ அலட்சியமாக சொல்லிவிட்டு எழப் போக, "க்ரிஸ்டிய பத்தி ரீசன்ட்டா நான் ஒன்னு கேள்விப்பட்டேன். அவங்களுக்கு சார் மைக்கேலோட ஏற்பாடு பண்ணியிருந்த என்கேஜ்மென்ட்ட நிறுத்திட்டாங்களாம், ஐ டோன்ட் நோ வை, உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா சார்?" என்று வேண்டுமென்றே அவனின் பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டான் அவன்.



லியோவுக்கு பழைய சம்பவங்கள் மீண்டும் உள்ளுக்குள் தோன்றி மறைய, கை முஷ்டியை இறுக்கி கோபத்தைக் கட்டுப்படுத்தியவன், "எனக்கு சம்பந்தமே இல்லாத ஆளுங்கள பத்தி நான் யோசிக்கவும் மாட்டேன், கெயார் பண்ணவும் மாட்டேன். தட் இஸ் நொட் மை பிஸ்னஸ் கொட் இட்!" என்று சொல்லிவிட்டு நகர, அடுத்து வில்லியமின் கேள்வியில் அவனுடைய கால்கள் சட்டென நின்றன.



"உங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஆளுங்கள பத்தி உங்களுக்கு எந்த கவலையும் இல்லன்னா, தென் வை டிட் யூ வொர்ரி அபௌட் தட் இந்தியன் கேர்ள்? அது உங்களுக்கு தேவையே இல்லாததுதானே ஆஃபீசர் லியோ" என்று அவன் கேட்ட விதத்தில், விழிகளை கூர்மையாக்கிப் பார்த்தான் மற்றவன்.



"இதுக்கான ரீசன் ஆஃபீசர் ரொனேல்ட் கிட்ட நான் அப்போவே சொல்லிட்டேன். மறுபடியும் நீ என்ன தெரிஞ்சுக்கணும்?" என்று கேட்டுக்கொண்டே ஒவ்வொரு அடியாக முன் வைக்க, "என்னால அதை நம்ப முடியல சார், நீங்க எங்க பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரா நடந்துக்குறதா எனக்கு சந்தேகமா இருக்கு. ஐ கென் ப்ரூவ் இட்" என்றான் வில்லியம் வன்மத்தோடு.



அடுத்தகணம் அவனே எதிர்பார்க்காதது போல் உச்சகட்ட கோபத்தில் அவனின் குரல் வளையைப் பிடித்த லியோ, அவனின் தலையை அங்கு மதுபானங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி மேசையில் சாற்றி, "ஹவ் டேர் யூ... உன்னால முடிஞ்சா பண்ணு, வில் சீ" என்று சொல்ல, அவனின் பிடியிலிருந்து விலக முடியாமல் மூச்சுக்கு சிரமப்பட ஆரம்பித்தான் வில்லியம்.



போதையிலிருந்த லியோவிற்கு எதுவுமே புரியவில்லை. நிதானமில்லாததில் அவனின் கோபமும் கை மீறிப்போக, சரியாக அவனைப் பார்க்க வந்த ஜேம்ஸிற்கு அதைப் பார்த்ததும் திக்கென்று இருந்தது.



"சார்... ஸ்டாப் திஸ்!" என்று கத்தியவாறு ஓடிச் சென்றவன் வில்லியமிடமிருந்து லியோவை பிரித்தெடுத்து இழுத்துக்கொண்டு செல்ல, மூச்சை இழுத்துவிட்டு இருமியவாறு விழிகளில் கோபம் கொப்பளிக்க லியோவைப் பார்த்தான் வில்லியம்.



ஜேம்ஸ் அவனின் அறைக்கு இழுத்து வந்து கட்டிலில் படுக்க வைத்தவன், தான் கொண்டு வந்த கடிதத்தை அங்கிருந்த டீபாயின் மேல் வைத்துவிட்டு செல்லப் போக, எதேர்ச்சையாக அவனின் விழிகளில் சிக்கியது அந்த முந்தானை.



அதைப் பார்த்ததும் சில கணங்கள் யோசித்தவனுக்கு அப்போதுதான் அது யாருடையது என்று மூளைக்கு உரைக்க, "அடப்பாவி!" என்று வாயில் கை வைத்தவாறு லியோவைப் பார்த்தவன் பின் அடக்கப்பட்ட சிரிப்போடு அங்கிருந்து வெளியேறிருந்தான்.



"யாழ்... யாழ்மொழி... உன்னை அவ பக்கத்துல கூட நெருங்க விட மாட்டேன்டா" என்று போதையில் குளறியபடி அவன் அப்படியே உறங்கிப் போக, அடுத்த நாளும் விடிந்தது.



காலையில் எழுந்ததும் ஹேங்கோவரில் தலை பயங்கரமா வலிக்க, "ஸ்ஸ்.. ஆஆ..." என்று முணங்கிக்கொண்டே எழுந்தமர்ந்தவனின் விழிகளில் டீபாயின் மேல் காற்றுக்கு ஆடிக்கொண்டிருந்த கடிதம் தென்பட்டது.



சோம்பல் முறித்தவாறு எழுந்துச் சென்று அந்த கடிதத்தைப் பார்த்தவனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிய, "க்ரிஸ்டி..." என்று அதே ஆச்சரியக் குரலில் அவளுடைய பெயரை முணுமுணுத்தன அவனுடைய இதழ்கள்.



உடனே கடிதத்தைப் பிரித்து வாசித்துப் பார்த்தவனின் புருவங்கள் முடிச்சிட, சில கணங்கள் தரையை வெறித்தவாறு நின்றிருந்த லியோ திடீரென என்ன நினைத்தானோ!



அவளுக்கான பதில் கடிதத்தை எழுதிவிட்டு அதை புன்னகையோடுப் பார்த்தான். அவனுடைய நினைவலைகள் மூன்று வருடங்களுக்கு முன் அவளுடனான சந்திப்பை நினைத்துப் பார்த்தன.



பிரிட்டிஷ் அரசாங்கத்தில் இவன் வேலையிலிந்த அதேவேளை புதிதாக அரசாங்க செயலாளராக சேர்ந்தவள்தான் க்ரிஸ்டி. யாருடனும் அதிகமாக பழகாத லியோ போகப் போக அவள் மேல் காதல் வயப்பட்டிருக்க, க்ரிஸ்டியும் அவனுடன் நெருங்கி பழக ஆரம்பித்தாள்.



ஒரே வீட்டில் ஒன்றாய் திருமணம் செய்யாமலேயே ஆரம்பித்த அவர்களுடைய காதல் வாழ்க்கை வருடங்கள் செல்ல அவளுக்கு சலிப்பு தட்டியது போலும்!



கொஞ்சம் கொஞ்சமாக அவனிடமிருந்து விலக ஆரம்பித்தவள் அதே அரசாங்கத்தில் பணி புரியும் மைக்கேலோடு பழக ஆரம்பிக்க, லியோவுக்கும் அந்த விடயம் தெரிய வந்தது.



பிரிவின் வலியில் மனமுடைந்துப் போனவனுக்கு சரியாக இந்த நாட்டுக்கு உயரதிகாரியாக வருவதற்கான வாய்ப்பு கிடைக்க, உடனே அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டான்.



ஆனால், அந்த நொடி அவனின் மொத்த வாழ்க்கையும் இங்கிருக்கும் சாதாரண இந்தியப் பெண்ணால் தலை கீழாக மாறப் போவதை அவன் அப்போது உணர்ந்திருக்கவில்லை.



அத்தனையும் நினைத்துப் பார்த்தவன், தலைமுடியை அழுந்தக் கோதி உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியவாறு அடுத்த பத்தே நிமிடங்களில் குளித்து முடித்து தயாராகி கடிதத்தை எடுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியேறினான்.



ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்த ஜேம்ஸ் லியோவைக் கண்டதுமே மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று, "சார் எங்கேயாச்சும் போகணுமா, கார ஸ்டார்ட் பண்ணவா?" என்று கேட்க, அவனின் கரத்தில் கடிதத்தை வைத்தான் லியோ.



"இந்த லெட்டர அனுப்பி விடு! என்ட்... ஒரு முக்கியமான வர்க் இருக்கு. அதை நானே பார்த்துக்குறேன், நீ வேற வேலை இருந்தா பாரு" என்றுவிட்டு வேகமாக வெளியேறி காரை எடுத்துக்கொண்டு சென்று விட, ஜேம்ஸ்ஸிற்கு எதுவுமே புரியவில்லை.



போகும் அவனை குழப்பத்தோடு பார்த்தவாறு நிற்க, அதேநேரம் தான் சொன்ன இடத்தில் குதிரையோடு காத்திருந்தாள் யாழ்மொழி.



'வருவாரா இல்லையா என்றே தெரியவில்லையே, ஒருவேளை நான்தான் வீணாக கற்பனை செய்துக்கொண்டு இருக்கிறேனா! ம்ஹூம்... அவர் வருவதற்கு வாய்ப்பே இல்லை, அரண்மனைக்கு திரும்ப வேண்டியதுதான்'



என்று மானசீகமாக புலம்பியவாறு அவள் அங்கிருந்து நகர்ந்துச் செல்ல, திடீரென பின்னால் கேட்ட சத்தத்தில் விருட்டென திரும்பிப் பார்த்தாள் அவள்.



லியோவோ முழு வேகத்தோடு காரில் வந்தவன் அவள் திரும்பிய மறுகணம் அவளை மோதுவது போல் கொண்டு சென்று காரை நிறுத்த, யாழ்மொழிக்கு இதயம் பயத்தில் உறைந்தே விட்டது.



எச்சிலை விழுங்கியவாறு சிலை போல் நின்றிருந்தவளின் விழிகள் பிதுங்கி விடுமளவிற்கு விரிந்திருக்க, அவளின் முகபாவனைகளை உள்ளுக்குள் ரசித்தவாறு காரிலிருந்து இறங்கினான் அவன்.



"ஊஃப்ப்..." பெருமூச்சொன்றை விட்டு நெஞ்சை நீவி விட்டவாறு அவள் தன்னை ஆசுவாசப்படுத்த முயற்சிக்க, "என்ன பயந்துட்டியா! வாய் மட்டும்தான்" என்று கேலியாக வந்தன அவனின் வார்த்தைகள்.



அதில் போலியாக முறைத்துப் பார்த்தவள், "அடுத்தவர்களை துன்புறுத்தி சுகம் காணுவதில் இந்த ஆங்கிலேயர்களுக்கு அலாதி பிரியம் போல" என்று சட்டென சொல்லிவிட, "அன்னைக்கு உன்னை அவங்ககிட்ட இருந்து காப்பாத்தினதே நீ சொல்ற அதே ஆங்கிலேயன்தான்" என்றான் லியோ பதிலுக்கு.



அதை நினைத்துப் பார்த்தவளின் இதழ்கள் புன்னகையில் விரிய, "அது என்னவோ உண்மைதான். சரி செல்லலாமா?" என்றுக்கொண்டே குதிரையில் ஏறிக்கொண்டாள் யாழ்மொழி.



"நான் உன் கூட வரேன்னு சொல்லவே இல்லையே, வர மாட்டேன்னு சொல்லதான் வந்தேன்" என்று காரில் ஒற்றைக் காலை மடக்கி சாய்ந்தவாறு அவன் சொல்ல, "அதை சொல்லதான் இத்தனை தூரம் வந்தீர்களா! என்ன ஒரு புத்திசாலித்தனம். சரி வந்துவிட்டீர்கள் தாங்கள் செய்த உதவிக்கான பரிகாரத்தையும் செய்து விடுகிறேன். வேண்டாம் என்று மட்டும் மறுக்காதீர்கள் அதிகாரி" என்று விழிகளை சுருக்கி கெஞ்சலாகக் கேட்டாள் அவள்.



மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவாறு சில கணங்கள் அவளைப் பார்த்திருந்தவன், பின் காரிலேறி அமர்ந்து "நீ முன்னாடி போ, நான் வரேன்" என்று சொல்லி காரை உயிர்ப்பிக்க, அவளுக்கு இதுவே போதுமென்றுதான் தோன்றியது.



புன்னகையோடு குதிரையை முன்னோக்கி செலுத்தி அவள் வேகமாகச் செல்ல, அவளை பின்தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தவனுக்கு காற்றில் பறக்கும் அவளின் நீண்ட சுருள் கூந்தலின் அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.



திடீரென லியோ வந்துக்கொண்டிருந்த கார் சட்டென நிற்க, அவன் வருகிறானா என திரும்பிப் பார்த்த யாழ்மொழியின் விழிகள் கார் நிற்பதைப் பார்த்து சந்தேகத்தில் சுருங்கின.



குதிரையோடு மீண்டும் காரை நோக்கி அவள் வர, "ஷீட்!" என்று ஸ்டீயரிங்கை ஓங்கிக் குத்தியவன் காரிலிருந்து இறங்கி கார் கதவை கோபமாக காலால் உதைத்தான்.



"என்ன அதிகாரி, தங்களின் வாகனத்திற்கு என்னவாகி விட்டது? அய்யோ பாவம்! எங்களின் மாட்டு வண்டி இல்லை குதிரைகளின் மீது சவாரி செய்வது போல வருமா?" என்று கேலியாகக் கேட்டு அவள் சிரிக்க, மூக்கு விடைக்க அவளை முறைத்துப் பார்த்தான் லியோ.



"அதுக்கு என்னை இப்போ என்ன பண்ண சொல்ற, உன் கூட உன் குதிரையில சவாரி பண்ண சொல்றியா?" என்று அவன் கடுப்பாகக் கேட்க, "அதற்கென்ன, தாராளமாக சவாரி செய்யலாமே!" என்றவளின் இதழ்கள் குறும்பாக புன்னகைத்தன.



லியோவோ அவள் சொன்னதைக் கேட்டு ஒருகணம் அதிர்ந்து விழித்தான். பின் தன் முகபாவனையை மாற்றி தலையை சரித்து அவளைப் பார்த்தவாறு, "உனக்கு பிரச்சனை எதுவும் இல்லன்னா எனக்கு சம்மதம்தான்" என்று சொல்ல, வேகமாக இல்லை எனும் விதமாக தலையசைத்தாள் யாழ்மொழி.



அவனும் அவளை நோக்கி வந்து குதிரையில் ஏறிக்கொள்ள, இருவரின் உடல்களும் தாராளமாக உரசிக்கொண்டது.



காற்றிலாடும் அவளின் கூந்தல் அவனின் முகத்தை வருட, யாழ்மொழிக்கு பெயரறியாத உணர்வுகள் எல்லாம் உள்ளுக்குள் கிளற ஆரம்பித்தன. ஒருவித கூச்சத்தில் நெளிந்தவளின் முகம் செந்தாமரையாய் வெட்கத்தில் சிவந்திருக்க, லியோவிற்கும் கிட்டத்தட்ட அதே நிலைதான்.



குதிரையும் மெல்ல நகர ஆரம்பிக்க, "இப்படி ஒரு பொண்ணு கூட ஹோர்ஸ் ரைடிங் ஐ மீன் குதிரை சவாரி பண்றது மொதல் தடவை, என் கூட இருக்குற மத்த ஆஃபீசர்ஸ்க்கு இது தெரியவே கூடாது, என் மானமே போயிரும். என்ட், நான் ஒன்னும் ஆசைப்பட்டு இப்படி உன் கூட வரல. ஊரை சுத்தி காட்டுறேன்னு சொன்ன அதனாலதான்..." என்று அப்போதும் வீராப்பாக பேசிக்கொண்டிருந்தான் லியோ.



அவனைத் திரும்பிப் பார்த்து அவள் புன்னகைக்க, சிறு இடைவெளியில் தெரியும் அவளின் மை தீட்டிய மீன் விழிகளின் அழகில் சொக்கித்தான் போனான் ஆடவன்.



ஏனெற்று தெரியாத தடுமாற்றத்தோடு அவன் பார்வையைத் திருப்பிக்கொள்ள, "தாங்கள் எம் மொழியை நன்றாக பேசுகிறீர்கள், மொழிகளை கற்பதில் அத்தனை ஆர்வமோ?" என்று கேட்டாள் யாழ்மொழி.



"ம்ம்..." என்று எங்கோ பார்த்தபடி அவன் சொல்ல, "அப்படியானால் என்னைப் பற்றியும் தெரிந்துக்கொள்ளலாமே. நானும் ஒரு மொழிதான், யாழ்மொழி" என்ற அவளின் வார்த்தைகளில் அர்த்தம் பொதிந்திருந்தது.



சட்டென அவளைத் திரும்பிப் பார்த்தவனுக்கு அவள் விழிகளில் தெரியும் குறும்பில் சிரிப்பு வர, போலியாக அவளை முறைத்தவாறு, "எங்க போறோம்?" என்று ஒரு கேள்வியை கேட்டு வைத்தான்.



உடனே குதிரையை நிறுத்தியவள், "அதானே! நாம் எங்கு செல்கிறோம். சிறு வயதிலிருந்து அரண்மனைக்குள்ளேயே இருந்து விட்டேன். அவ்வளவாக வழிகள் எதுவும் தெரியாது" என்று பாவம் போல் சொல்ல, "என்ன, நீதானே ஊரை சுத்தி காட்டுறேன்னு கூப்பிட்ட. இப்போ தெரியாதுன்னா என்ன அர்த்தம்?" என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கக் கத்தினான் லியோ.



"அது... நான்... ஹிஹிஹி..." என்று என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் அசடுவழிய, "உன்னை.." என்று அவன் பற்களைக் கடித்துக்கொள்ள, சரியாக காலுக்கு குறுக்கே ஓடிய பூனைக்கு பயந்து தன் இரு கால்களைத் தூக்கி கனைக்க ஆரம்பித்தது குதிரை.



"அதிகாரி, ஜாக்கிரதை!" என்று யாழ் கத்த, அவனோ பிடிமானத்திற்கு பின்னாலிருந்து அவளை அணைத்துக்கொண்டான்.



குதிரை நிதானத்திற்கு வந்தும் அவனின் ஸ்பரிசத்திலும் நெருக்கத்திலும் யாழ்மொழியால் நிதானத்திற்கு வரவே முடியவில்லை.



அவளிடையை வளைத்து அவன் அணைத்திருந்த விதத்தில் அவளுக்கு பயத்தில் வேகமாக மூச்சு வாங்க, "ஊஃப்ப்..." என்று நிம்மதி பெருமூச்சு விட்டவாறு அவளை கவனித்தவனுக்கு ஆரம்பத்தில் எதுவுமே புரியவில்லை.



சில கணங்களில் நிதர்சனம் புரிய, உடனே அவளிடையைப் பற்றியிருந்த கரத்தை அவன் விலக்க, மெல்ல அவனை நோக்கித் திரும்பிப் பார்த்தாள் யாழ்.



இருவரின் முகங்களும் அருகருகே இருக்க, இருவரின் இதழ்களுக்கும் நூலிடைவெளிதான்.



"ஐ கான்ட் கன்ட்ரோல் மை செல்ஃப்" என்று உடல் சூடேற சொன்னவனின் மூச்சுக்காற்று அவளுடைய நெற்றியில் பட்டுத் தெறிக்க, "அப்படியென்றால் என்ன?" என்று அடுத்து யாழ் கேட்ட கேள்வியில் அவனின் மொத்த உடல் சூடும் தணிந்துவிட்டது.



தலையை அழுந்தக் கோதி உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியவன், "அது... ஒன்னுஇல்ல" என்று விட்டு எதேர்ச்சையாகத் திரும்ப, அவனுடைய விழிகளில் பட்டது அந்த அழகிய காட்சி.



"அந்த இடத்துக்கு போ யாழ்" என்று அவன் சொன்னதும், யாழ்மொழியின் பார்வையும் அந்த திசைக்குத் திரும்ப, குதிரையின் கால்கள் அந்த திசையை நோக்கி நகர்ந்தன.



***********

என்னோட மற்ற கதைகளை படிக்க 👇 (kobo app)

India link >>

https://www.kobo.com/in/en/search?q...or=sheha+zaki&sort=Temperature&fclanguages=ta


Usa link >>>

https://www.kobo.com/ww/en/search?q...or=sheha+zaki&sort=Temperature&fclanguages=ta

 
Status
Not open for further replies.
Top