ஆரம்பமே திகிலாய்!!!.. அவசரகதியில் அவனிடம் அடைக்கலம் வேண்டி நிற்கும் அவளை அடைகாக்கிறான் அவன் ஆபத்து என்னது என்பதை அறியாமல்!!!.. கண்ட நொடியினில் அவள் மீது ஈர்ப்பு கொள்கிறான்!!!.. அடுத்தடுத்த நிகழ்வுகளாலும், சம்பவங்களினாலும் அழகாய் செல்லும் அவர்கள் வாழ்வு சீர்குலைகிறது!!!.. தனியாளாய் நிற்கும் மங்கையவளின் கண்ணீர்க்கும், இறுக்கத்திற்கும் காரணம் என்ன?!!!.. அவளை பாதுகாக்க நினைக்கும் அவனின் எண்ணம் என்ன??!!.. யார் அந்த அவள்?!!.. அவன்??!!.. கதையின் போக்கில் சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார் எழுத்தாளர்!!!.. பல இயல்பான கண்ணீர் கதைகளையும், தேவையான தன்னம்பிக்கையையும் கொடுத்த விதமும், இடமும் அசத்தல்!!!.. கண் முன்னே கொடூரத்தை உங்கள் வார்த்தைகளால் படிக்கும் போது காட்சிகளை உணர முடிந்தது!!!.. இறுதியில் இணைத்த ஆக்சன் காட்சிகளும் அசத்தல்!!!.. காதல், நட்பு, குடும்பம், தன்னம்பிக்கை என்னும் பல பரிமாணங்களை விவரித்த விதம் சூப்பர்!!!.. யாருக்கு என்ன ஆச்சுன்னு பயப்பட வச்சதை மறக்கவே முடியாது!!!.. அருமையான எழுத்துநடை!!!.. விறுவிறுப்பான கதைக்களம்!!!.. கொஞ்சம் கூட கெஸ் பன்ன முடியாத ட்விஸ்ட்!!!.. அசத்தலான கதை!!!.. வெற்றி பெற வாழ்த்துகள்?