ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விக்ரமாதித்யன் - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
விக்ரமாதித்யன்Screenshot_2022-02-19-09-27-13-64.png



அத்தியாயம் - 1


விக்ரம்…. விக்ரம்... விக்ரம்... என அந்த அரங்கமே சத்தத்தால் அலறிக் கொண்டிருக்க... தன் கையிலுள்ள பந்தினை தரையில் தட்டி தட்டி எதிரணியின் கையில் சிக்காமல்... லாவகமாக கொண்டு சென்றவன், ஒரே தாவலில் கூடையில் போட்டு தன் அணிக்கு ஒரு கோலை பெற்றுத் தந்தான். அனைவரின் நம்பிக்கைக்கு உரியவன்.


இன்னும் போட்டி முடிய ஒரே நிமிடம் இருக்கும் பட்சத்தில் இரு அணிகளும் சமமான புள்ளிகளுடன் நிலைத்திருக்க, ஒட்டுமொத்த அரங்கமும் அடுத்தது என்ன…? யார் வெற்றி பெறுவார்கள்..? என்ற பெரும் கேள்வியுடனும் பதட்டத்துடனும் காணப்பட்டது.


பந்து இப்போது எதிரணியிரிடம் இருக்க... அவனோ விக்ரமை பார்த்து 'நக்கலான சிரிப்போடு பந்தை தட்டி கொண்டே வலையை நோக்கி செல்ல'... கண்ணிமைக்கும் நொடியில் பந்தை அவனிடம் இருந்து கைப்பற்றிய விக்ரம்…அரை வட்ட கோட்டிற்கு வெளியே நின்றே பந்தை வீச... அதுவோ சரியாக சென்று வலையில் விழுந்து, அவன் அணிக்கு வெற்றியை தேடி தந்தது.


தங்கள் அணி வெற்றி பெற்ற சந்தோஷத்தில் அனைவரும் விக்ரமை தூக்கி கொண்டாட…விக்ரமோ அங்கு நின்றிருந்த அசோக்கை நக்கலாக பார்த்து புருவங்களை உயர்த்த...அவனோ தோல்வியடைந்த அவமானத்தில் பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக நின்றான்.


அவனை நோக்கி சென்ற விக்ரம் "வெற்றி தோல்வி வாழ்க்கைல சகஜம் தான், ஆனா என்னை தோற்கடிக்க இன்னும் எவனும் பிறக்கவில்லை" என கொஞ்சமும் அடங்காத திமிருடனும் கர்வத்துடனும் கூறியவன்.. தன் நண்பர்களுடன் இணைந்து கொண்டான்.


"மச்சி சூப்பர்டா...அதுவும் லாஸ்ட் கோல் இருக்கே செம்ம. இன்னைக்கு கண்டிப்பா நீ ட்ரீட் கொடுத்தே ஆகணும்" என்ற நண்பர்களை பார்த்து மெலிதாக சிரித்தவன் …"கண்டிப்பாடா லஞ்சுக்கு வெளியே போகலாம் எங்கன்னு முடிவு பண்ணுங்க" என்றவன்... தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்து அதனை அப்படியே தலையில் கவிழ்க்க...முகத்தில் பட்ட குளுமையில் தலையை சிலுப்பியவனின் செய்கையில் அவனின் அடங்காத சிகையும் அசைந்தாட.அதன் அழகை தூரத்திலிருந்து ரசித்த சக கல்லூரி மாணவிகள் பெருமூச்சை வெளியிட்டனர்.


அவர்களால் தூரத்திலிருந்து மட்டுமே அவனை ரசிக்க முடியும் ... ஏனென்றால் அவன் நண்பர்களை தவிர மற்றவர்களை அவன் நிழலைக் கூட நெருங்க அனுமதிக்க மாட்டான். சிலர் அது அவனின் திமிர், ஆணவம், கர்வம் என எண்ணினாலும்...இது மூன்றும் இல்லை என்றால் அது விக்ரமே இல்லை என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை.


விக்ரம் சென்னையில் உள்ள பிரபலமான கல்லூரியில் எம்.பி.ஏ படிக்கும் முதலாம் ஆண்டு மாணவன்…படிப்பு, ஸ்போர்ட்ஸ் எல்லாவற்றிலும் எப்போதும் முதலிடம் தான். அவனின் நண்பர்கள் வட்டாரமும் மிகக் குறைவே விரலை விட்டு எண்ணிவிடும் அளவிற்கு...அதிலும் பெண்கள் அந்த லிஸ்டில் ஒருவர் கூட இல்லை.பெண்களை வெறுக்கும் ரகம் இல்லை, அதேநேரம் அவர்களோடு நட்பு பாராட்டும் அளவுக்கு நெருங்க விடுபவனும் இல்லை.


அதேநேரம் சென்னையில் மற்றொரு மூலையில் உள்ள மருத்துவக் கல்லூரியிலும் ஸ்போர்ட்ஸ் டே கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. கலை கல்லூரிகளுக்கு நிகராக இங்கேயும் மாணவர்களின் அலறல்களும் விசில் சத்தமும் பட்டையை கிளப்பியது.


ஆனால் அங்கு நடந்ததற்கு மாறாக இங்கே... ஆதி...ஆதி.. என்ற பெயரும் பெண்களின் சத்தமுமே அதிகமாக இருந்தது. சிறுத்தையின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் பாய்ந்து பாய்ந்து பந்தை உதைத்து தங்கள் அணியை வெற்றியடைய செய்தான் ஆதித்யா.


வெற்றி பெற்றதற்கு வாழ்த்த வந்த அவன் நண்பர்களையும் முந்திக்கொண்டு பெண்கள் கூட்டம் அவனைச் சுற்றிக் கொள்ள ... முத்துப்பற்கள் தெரிய சிரித்தவன் "தேங்க்யூ கேர்ள்ஸ், தேங்க்யூ" என அனைவரின் வாழ்த்திற்கும் நன்றி சொல்லியவன் தன் நண்பர்களை காண வந்தான்.


"டேய்... ஆதி நீ சரியான மச்சக்காரன்டா, நாங்களே தேடிப் போனாலும் எந்த பொண்ணும் எங்களை திரும்பி கூட பார்க்கமாட்டேன் என்கிறது….ஆனா உன்னோட ஒரு பார்வைக்கே தவம் இருப்பாங்க போல" என நண்பனை எப்போதும்போல சீண்டியவன்….சரி மச்சி இன்னிக்கு உன்னோட ட்ரீட் தான்" என்க ... ' டன் ' என கட்டைவிரலை உயர்த்திக் காட்டியவன்... "லஞ்ச்க்கு வெளியே போலாம்" என்றான்.


ஆதி எம்.பி.பி.எஸ் பைனல் இயர் ஸ்டுடென்ட்... எப்போதுமே முகத்தில் உறைந்திருக்கும் புன்னகை… ஆண் பெண் என வித்தியாசம் இல்லாமல் அனைவரிடமும் பழகும் குணமுடையவன். பெண்களின் கண்களை மட்டுமே பார்த்து பேசும் நல்லவன்… தன்னிடம் நட்பாக பழகும் பெண்களிடம் மிக கண்ணியமாக நடந்து கொள்ளும் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவன். இந்த குணமே பெண்களை அவனை நோக்கி மேலும் ஈர்த்தது.


அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் முன் காரை நிறுத்திய விக்ரம் தன் நண்பர்களை நோக்கி... "நீங்க உள்ள போங்க டா. நான் காரை பார்க் பண்ணிட்டு வரேன்" என்றவன் பார்கிங்கை நோக்கி வண்டியை செலுத்தினான்.பின் நண்பர்களோடு இணைந்து தேவையான உணவு வகைகளை ஆர்டர் செய்தவர்கள், உணவுக்காக காத்திருக்கும் போது….


தன் நண்பர்கள் சூழ உள்ளே நுழைந்தான் ஆதி... தங்களுக்கு என இருக்கைகளை தேர்ந்தெடுத்து அமர்ந்தவன்…. எதிரில் அடுத்த டேபிளில் அமர்ந்திருந்த விக்ரமை கண்கள் சிவக்க பார்த்தவன் தன் நண்பர்களை முறைக்க…. அவன் முகம் மாற்றத்தை அதுவரை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், அவன் பார்வை சென்ற திசையை நோக்க...அங்கே விக்ரமை கண்டவர்கள் 'சொந்த காசிலேயே சூனியம் வைத்தவர்கள் நாமளா தான் இருப்போம்' என மனதில் நினைத்தவர்களுக்கு தெரியும் இன்னைக்கு மதியம் விரதம் என்று…ஏனென்றால் அவன் வேறு ஹோட்டலின் பெயரை சொல்லியும், கேட்காமல் இந்த ஹோட்டலுக்கு அழைத்து வந்த தங்கள் முட்டாள்தனத்தை எண்ணி தலையிலேயே அடித்து கொண்டனர்.


இருக்கையிலிருந்து கோபமாக எழுந்த ஆதி "லெட்ஸ் கோ" என்றவன் விடுவிடுவென ஹோட்டலை விட்டு வெளியேறினான். அவனை தொடர்ந்து வந்த நண்பர்கள் "சாரிடா
.. நாம வேற எங்கயாவது போகலாம்" என்க,

சற்று நேரம் அமைதியாக நின்று இருந்தவன், தன்னுடைய தனிப்பட்ட கோபத்தால் நண்பர்கள் வருத்தப்படுவதை விரும்பாமல் "சரி" என தலையசைக்க... அவர்களுக்கு அப்போதுதான் மூச்சே வந்தது.


உள்ளே விக்ரமோ போகும் ஆதியின் முதுகை வெறித்தவன், பின் தனக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை என்பதுபோல் உணவில் கவனமாக...அவன் நண்பர்களோ "என்னடா நம்மளை பார்த்து பயந்துட்டு போறாங்க" என்க,

மற்றொருவனோ "உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல, நம்மள பாத்து அவனுங்க பயப்படுறாங்க..? நல்லவேளை நம்ம ஒரு பத்து நிமிஷம் முன்னாடி வந்தோம் இல்லனா...நமக்கும் இதே கதிதான்" என்றான்.

ஒருவழியாக எல்லாம் முடிய அனைவரும் விடைபெற்று சென்றனர்.

இங்கு ஆதியோ உணவினை முடித்தவன் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் தன் நண்பர்களை இறக்கிவிட மீண்டும் கல்லூரியை நோக்கி சென்றான். "ஆமா ஆதி கேட்கனும்னு நினைச்சேன், நந்து எங்கே... இந்நேரம் ட்ரீட் கேட்டு தொல்லை பண்ணியிருப்பாள் ஆளையே காணோம்" என்க, அவனோ "தெரியலைடா போய் பார்க்கணும்" என்றவன் நண்பர்களிடம் விடைபெற்று விட்டு கல்லூரிக்குள் நுழைந்தான்.


எப்போதும் அவள் அமர்ந்திருக்கும் மரத்தடிக்கு செல்ல…. அங்கே கைகளை தலையில் தாங்கி அமர்ந்திருந்தவளை நெருங்கியவன்…"ஏய் எந்த கப்பல் கவிழ்ந்திடுச்சின்னு இப்படி உட்கார்ந்திருக்க" என்க….அவனை பார்த்துவிட்டு எழுந்து இடுப்பில் கை வைத்து முறைத்தவள்...அவன் தோளில் ஓங்கி அடித்து "உன்னை யாரு இந்த போட்டியில் ஜெயிக்க சொன்னது..? நீ தோற்த்து போகனும்னு எவ்ளோ வேண்டினேன் தெரியுமா..?" என்க..


அவனோ அவள் தலையில் ஓங்கி கொட்டியவன்…."எல்லோரும் அவங்க ஃப்ரெண்ட்ஸ் ஜெயிக்கணும்னு நினைப்பாங்க...ஆனால் நீ என்னன்னா நான் தோற்றுப் போக வேண்டினேன்னு என்கிட்டயே சொல்றியா"..? என்றவன் அங்குள்ள இருக்கையில் அமர்ந்து அவளையும் அமர வைத்தவன்.. உனக்கு என்னதான்டி பிரச்சனை..? என்க...


அவளோ முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு "எல்லா பிரச்சனையும் நீதான். என்றாள். ஆல்ரெடி என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் உன் புராணம்தான் பாடிட்டு இருக்காங்க..? இப்போ பெரிய ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் வேற. என்னால இந்த கொடுமையெல்லாம் தாங்க முடியல" என சீரியஸான முகபாவத்துடன் சொல்ல...அவளின் கழுத்தை நெறிக்க வந்தவன் "லூசு.. லூசு.. நான் கூட என்னவோ ஏதோவென்று பயந்து விட்டேன் என்றவன், கிளம்பு வீட்டுக்கு போகலாம் டைம் ஆகிடுச்சு" என்றான்.


உதட்டை சுழித்தவள் திரும்பி அமர….அவனோ "அப்போ இங்கிருந்து பஸ் பிடித்து வீடுவந்து சேர்" என்றவன் தன் காரை நோக்கி செல்ல,

அவளோ அவனுக்கு முன் காரில் ஏரியிருந்தாள். அவளின் செய்கையில் "ஹா ஹா" என
வாய்விட்டு சிரித்தவன் காரை கிளப்பினான். சிறிது தூரம் அமைதியாக வந்தவள்…"எனக்கு எங்க டிரீ்ட்" என்க,

"நான் ஜெயிக்க கூடாது என்று நினைத்தவர்களுக்கு எல்லாம் என்னால் ட்ரீட் கொடுக்க முடியாது" என்றான், காரை ஓட்டிக்கொண்டே…


" உன் ஃப்ரெண்ட்ஸ்க்கு மட்டும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல ட்ரீட் கொடுத்த தானே... எனக்கு இப்போ ஐஸ்க்ரீம் வாங்கி கொடு".. என்றவள் காரின் ஸ்டைரிங்கில் கைவைக்க ...அவள் கையை தட்டி விட்டவன், காரை ஒரு ஐஸ்க்ரீம் பார்லரில் நிறுத்தினான்.


விக்ரமின் கார் அந்த ஐந்து மாடி கட்டிடத்தின் முன் நின்றது... கே.ஆர் குரூப் ஆஃப் கம்பெனிஸ் என்று பொன்னிற எழுத்துக்களால் செதுக்கப்பட்டு அழகாக காட்சியளித்தது. விக்ரம் தனது கம்பீரமான நடையுடன் ஒரு கையால் தனது அடங்காத தலைமுடியை கோதியவாறு உள்ளே நுழைய...எதிரில் வந்தவர்களின் மரியாதையை சிறு தலையசைப்போடு ஏற்றவன், கண்ணன் மேனேஜிங் டைரக்டர் என்றிந்த அறைக்குள் நுழைந்தான்.


உள்ளே நுழைந்த தனது மகனைப் பார்த்த கண்ணன்.. அவனின் ஆளுமையான அழகில் "என் மகன்" என்று கர்வம் கொண்டார்.எப்போதும் அவனால் அவருக்கு பெருமை மட்டுமே... பொறியியல் படிப்பை முடித்தவன்,இப்போது எம்.பி.ஏ படித்து கொண்டே தன் தந்தைக்கு தொழிலிலும் உதவியாக இருக்கிறான்.


"ஹாய் டாட்" என்றவன்,அவருக்கு எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

"உன்கிட்ட நிறைய தடவை சொல்லிட்டேன், ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதிங்க ப்பா. மற்றவர்களிடம் வேலையை பிரித்துக் கொடுத்துவிட்டு அதை மேற்பார்வை மட்டும் பாருங்கண்ணு… நீங்க கேட்கிற மாதிரி தெரியவில்லை என்றவன்,

"பிஸினஸை விட உங்களோட ஹெல்த் தான் ரொம்ப முக்கியம்" என்றவன்...நீங்க வீட்டுக்கு கிளம்புங்க மத்த வேலையை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றான்.


அவனை கண்களில் பெருமைப்பொங்க பார்த்தவர் .. "சரி" என தலையசைத்துவிட்டு, செய்ய வேண்டிய வேலையை மட்டும் சுருக்கமாக சொல்லியவர், வீட்டிற்கு கிளம்பினார். கடந்த ஒரு வருடங்களாக தன் தந்தைக்கு உதவியாக இருப்பதால், இப்பொழுது எல்லா விவரங்களையும் அவன் விரல் நுனியில் வைத்திருந்தான். இயற்கையிலேயே அதிபுத்திசாலி என்பதால் தொழிலின் நெளிவு சுளிவுகளை தெரிந்து கொள்வதற்கு இந்த ஒரு வருடமே அவனுக்கு மிகவும் அதிகம் தான்.அதன்பின் தன் முன்பிருந்த ஃபைலை எடுத்து,தனது வேலையை தொங்கியவன் அதிலேயே மூழ்கிப் போனான்.


தன் முன்பிருந்த நாற்காலியில் அமர்ந்து... மூன்றாவது ஐஸ்கிரீமை நிதானமாக சாப்பிட்டுக்கொண்டிருந்த நந்தினியை பார்த்து.. தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான் ஆதி. அவளோ அவனை ஏறிட்டு பார்த்தவள் "உனக்கும் வேணும்னா ஆர்டர் பண்ணி சாப்பிடு அதவிட்டுட்டு,இப்படி என்னையே கோபமா பார்க்காத...அப்பறம் எனக்கு தான் வயிறு வலிக்கும்" என்றாள்.


அதுவரை இருந்த கோபம் காணாமல் போக….மென்மையாக சிரித்தவன்…"நீ ஒரு மாஸ்டர் பீஸ் நந்து. உன்னையெல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களான்னு எனக்கு இன்னும் புரியல" என்றவன்...

பின் "விளையாடியது போதும் நந்து, இட்ஸ் கெட்டிங் லேட் ... லேட்ஸ் கோ" என்றான் பாவமாக.

அவளோ 'அப்படி வா வழிக்கு... இவரு முறைச்சா நாங்க பயந்துடுவோமா' என மனதில் நினைத்தவள், வெளியே "ம்ம்" என தலையாட்டினாள்.


ஒருவழியாக அவளை காரில் ஏற்றியவன்... வீட்டை நோக்கி காரை செலுத்தினான். அப்பொழுதும் சும்மா இருக்காமல் காரில் உள்ள ரேடியோ பிளேயரை ஆன் செய்தவள், ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டே இருக்க..."கொஞ்ச நேரம் கையை வைத்துக்கொண்டு சும்மா இரு….இல்லனா எங்கயாவது போய் மோதிடுவேன்" என எரிச்சலாக சொல்ல…. அவளோ சட்டென்று முகம் வாடியவள்,ப்ளேயரை ஆஃப் செய்துவிட்டு ஜன்னல் புறமாக திரும்பி அமர்ந்து கொண்டாள்.


வண்டியை செல்லுத்தியவனுக்கு அவள் அமைதி மனதை ஏதோ செய்ய…"நந்து சாரி" என்றான்.

அவளிடம் பதில்லாமல் போக... அவள் கையை பிடித்தவன் "சாரிமா.. பின்னால் வர வண்டியோட ஹாரன் கூட கேட்கலை அதான் கொஞ்சம் கோபம் வந்திடுச்சு" என்றான்.

அவளோ அப்போதும் முறுக்கிக்கொள்ள, "நந்து பிளீஸ் பேசு,நீ பேசாம இருப்பது கஷ்டமா இருக்கு" என்றான்.


"அழுது தொலையாத ... பேசுறேன். பட் ஒன் கண்டிஷன்" என அவள் இழுக்க…"சொல்லுங்க மேடம் என்ன கண்டிஷன்...?" என்றான் சிரித்துக்கொண்டே ....

"நாளைக்கும் எனக்கு ஐஸ்க்ரீம் வாங்கி தரனும்" என்றவளை பார்த்து "நந்து... நந்து.. யூ ஆர் சோ ஸ்வீட்"என்றவனின் மனம் அவளின் குழந்தைத்தனத்தில் நிறைந்துப்போனது.
 
Last edited:

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 2


அதன்பின் கார் பயணம் முழுவதும், அவள் செய்யும் சிறுசிறு சேட்டைகளை ரசித்துக் கொண்டே காரை செலுத்தினான் ஆதி. வீட்டை நெருங்கும் வேளையில் அவன் புறம் திரும்பியவள், ஆதி... "கொஞ்சம் ஸ்லோவா போ எதுக்கு இவ்வளவு ஸ்பீடா போற" என்க, அவனோ "இவளோ நேரம் மாட்டுவண்டி மாதிரி உருட்டிட்டு இருக்குறேன்னு சொன்ன...சரின்னு நானும் கொஞ்சம் வேகமா போனால்... இப்போ ஸ்லோவா போக சொல்ற…என்ன பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி இருக்குதா?... என்னதாண்டி உன் மனசுல நினைச்சிட்டு இருக்க?.." என்றான் அதுவரை இருந்த பொறுமையிழந்து சத்தமாக.


"வீட்டு கிட்ட வந்ததுக்கப்புறம் ஸ்லோவா போகணுமாம்" என தனக்குள் முனகியவன், அப்போதுதான் எதிரில் வரும் காரை பார்த்தான். திரும்பி நந்துவை முறைக்க...அவளோ ஒன்னும் தெரியாத குழந்தைபோல் ஜன்னல் புறம் திரும்பி வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட்டாள்.


காரின் வேகம் அதிகரிப்பதை உணர்ந்தவள்... "நந்து சீட் பெல்ட் போட்டுக்கோ அதுதான் உனக்கு சேஃப், ரேஸ் ஸ்டார்ட் ஆயிடுச்சு" என தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள் அவசரமாக சீட் பெல்ட்டை எடுத்து மாட்டினாள்.


இவனின் வேகத்திற்கு குறையாத வேகத்துடன் எதிரில் வந்து கொண்டிருந்தது வேறு யாருமில்லை நம் விக்ரம் தான். இரு கார்களும் ஒன்றை ஒன்று மோதிக் கொள்வது போல் வந்து கொண்டிருக்க…. அதனை பார்த்த நந்து,பயத்தில் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு எல்லா கடவுளையும் வேண்ட தொடங்கினாள்.


சீறிப்பாய்ந்த இரு வாகனமும், உரசி விடும் தூரத்தில் நெருங்கி... ஒரே நேரத்தில் திரும்பியது. அந்த பிரம்மாண்டமான மாளிகையின் அகலமான நுழைவாயிலில் .இரு கார்களும் சீரான வேகத்தில் சென்று, ஒரே நேரத்தில் போர்டிகோவில் நின்றது.


கார் நின்றதும் ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து பார்த்த நந்து…"சேஃப் லேண்டிங்" என்றவள், இறங்காமல் தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் ஆதியைப் பார்த்து " ஹி ஹி " என அசடு சிரிப்பை உதிர்க்க,அவனின் கோபத்தைக் கண்டு வாயை மூடிக்கொண்டாள்.


" இவன் வருகிறான் என்பதற்காக தான் என்னை ஸ்லோவாக வர சொன்னியா..? அவனை நான் முந்திவிடக்கூடாது என்பதற்கு தானே இப்படி பண்ண..?" என்றான் ரெளத்திரமா. அவளோ "லூசு மாதிரி பேசாத ஆதி. வீணா எதற்கு பிரச்சினைன்னு தான் இப்படி பண்ணினேன்" என்றாள், அது தான் உண்மை என்ற உறுதியான குரலில்.



பின் காரைவிட்டு இறங்கியவன்… உள்ளே செல்கையில், அதுவரை முக்கியமான தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த விக்ரம் ஃபோனை அணைத்துவிட்டு உள்ளே நுழைந்தான். இருவரும் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய….அதனை சோஃபாவில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த அவர்களின் பெற்றோர்க்கு எட்டாவது உலக அதியத்தை பார்ப்பது போல் தான் இருந்தது.


"ராது…. என் கையை கொஞ்சம் கிள்ளேன்" என்றார் கண்ணன். எதற்கு இந்த மனிதன் இப்படி சொல்கிறார் என்பது போல் ராதா பார்க்க…"அது ஒன்னும் இல்லடி இந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையா வருதே... அதான் ஒருவேளை கனவா இருக்குமோனு சந்தேகம் " என்றார் கண்களில் உண்மையான வியப்போடு…


"ராது மா... எதுக்கும் மாடியில் காய்ந்து கொண்டிருக்கும் துணிகளை எல்லாம் எடுத்துட்டு வந்திடு கண்டிப்பா இன்னைக்கு மழை வரும்" என்றார் சீரியஸாக. அவரை கண்களாலேயே எரித்துவிடுவது போல் பார்த்த ராதா… "நீங்களே கண்ணு வைக்காதிங்க..? எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..? இப்படி ஒரு நாள் வராதா என்று தான் காத்துக் கொண்டிருந்தேன்" என்றார் மகிழ்ச்சியாக.


இருவரின் மகிழ்ச்சியைப் பார்த்திருந்த நந்துக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. "அய்யோ அத்தை... நீங்க சந்தோஷப்படுற மாதிரி எதுவும் நடக்கலை என்றவள், நடந்தவற்றை கூறி...நானே மயிரிழையில் உயிர் பிழைத்து வந்திருக்கிறேன் என்றாள் . அவர்களோ 'இந்த பழம் புளிக்கும்' என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.. "ஒன்றா இரண்டா " மொத்தமாக பத்து வருடங்கள் ஆகிறது இருவரும் பேசி….அதுமட்டுமில்லாமல் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தான்...ஒருவன் வேண்டும் என்றால், மற்றொருவன் வேண்டுமென்றே வேண்டாம் என்பான். இப்படியே பல வருடங்கள் ஓடிவிட்டது…" இரு துருவங்களாக" பிரிந்து.


இரு துருவங்கள் சேரவேண்டும் என்பதே மொத்த குடும்பத்தின் வேண்டுதல்…. ஆனால் அது நிறைவேறுமா இல்லையா என்பது கடவுளுக்கு தான் தெரியும். என்னதான் வெளியே ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டும் முட்டிக்கொண்டும் இருந்தாலும் வீட்டிற்குள் வந்தவுடன்...தங்கள் குடும்பத்திற்காக நேரடியாக மோதிக் கொள்ளாமல், ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதை தவிர்த்து ஒதுங்கிக் கொள்வார்கள். 'நீ யாரோ நான் யாரோ...உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை' என்பது போல் தான் வீட்டில் இருப்பார்கள்.


கண்ணன் ராதா தம்பதியினருக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள்...விக்ரம் ஆதித்யா இருவரும் "நோன் ஐடெண்டிகல் டிவின்ஸ்" உருவத்தில் மட்டுமல்ல கேரக்டர், விருப்பம், வெறுப்பு எல்லாவற்றிலும் இருவேறு துருவங்கள் தான். பெற்றவர்களுக்கே இருவரும் புரியாத புதிர்தான்..இருவரையும் புரிந்துகொள்வது என்பது முடியாத காரியம். இவர்களுக்கு அடுத்து பிறந்தவள் சந்தியா முதலாமாண்டு பொறியியல் மாணவி. அண்ணன்கள் இருவருக்குமே செல்ல தங்கை,இந்த வீட்டின் இளவரசி.


"நந்து என்கின்ற நந்தினி" கண்ணனின் தங்கை கீர்த்தனாவின் மகள்...நந்துவின் தந்தை அவளின் சிறுவயதிலேயே இறந்துவிட...அதன் பின் அண்ணன் அண்ணியின் விருப்பத்திற்கேற்ப அவர்களுடனே தங்கிவிட்டனர்.நந்தினியும் இந்த வீட்டில் செல்லம் தான். அதுவும் ஆதிக்கு எப்போதும் நந்து என்றால் கொஞ்சம் ஸ்பெஷல் தான். அவளின் தேவைகளையும் விருப்பத்தையும் அவள் சொல்லும் முன்பே,விழியசைவிலேயே நிறைவேற்றி விடுவான்.


உள்ளே நுழைந்த விக்ரம் சிறிது நேரம் தன் தந்தையிடம் பிசினஸ்ஸை பற்றி பேசியவன், பின் தன் அறைக்கு சென்றுவிட்டான். ஆதியோ நேராக சென்று தன் தாயின் மடியில் படுத்துக்கொள்ள....அவன் தலையை மெதுவாக அவர் கோதிவிட...அவனோ தன் அன்னையின் மடியில் முகம் புதைத்துக் உறங்கத்தொடங்கினான்.


"நம்மகிட்ட மட்டும் குழந்தைபோல் நடந்துக்குறான்...விக்ரமை பார்த்தால் மட்டும் எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வருதுதோ தெரியலை" என புலம்பியவாறு அமர்ந்திருந்தார் ராதா.

இருவருமே பெற்றோரை எல்லாவிதத்திலும் பெருமைப்பட வைக்கும் பிள்ளைகள் தான் தனித்தனியா இருக்கையில்.




மறுநாள் காலை யாருக்கும் காத்திருக்காமல் விடிய….விக்ரம் தனது ஜாகிங்கை முடித்துவிட்டு உடற்பயிற்சி அறைக்குள் நுழைந்தான். விக்ரம் ஆறடி உயரம், தினமும் உடற்பயிற்சி செய்வதால் முறுக்கேறிய படிக்கட்டு தேகம்,சிரிப்பு என்றால் என்ன விலை..? என கேட்கும் எப்போதுமே இருகியிருக்கும் முகம், தனக்கு நெருக்கமானவர்களை தவிர அனைவரிடமும் ஒரு அலட்சியம் இதுதான் அவன். உடல் மொத்தமும் வேர்த்து வழிய... தன் உடற்பயிற்சியை முடித்தவன் எழுந்து குளிக்க சென்றான்.



ஆதியோ கடுப்பின் உச்சியில் இருந்தான், "ஏய் நந்து கதவைத் திற, தினமும் எனக்கு இதே வேலையா போச்சு" என புலம்பியவாறு கதவை தட்டிக் கொண்டிருக்க...அவளோ போர்வையை இழுத்து தலைவரை மூடியவள் மீண்டும் உறக்கத்திற்கு சென்றாள்.


தட...தட...என கதவை தட்டும் சத்தம் மீண்டும் மீண்டும் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்க, மெல்ல துயில் கலைந்தவள் "நிம்மதியா தூங்க கூட விட மாட்டேங்கிறான்" என அவனை சரமாரியாக திட்டியவாறே கதவை திறக்க...அவளை பார்த்து முறைத்தவன்,இன்னும் கண்களை மூடியவறே நின்றவளின் முகத்தை நோக்கி தான் கொண்டுவந்த தண்ணீரை ஊற்ற...தூக்கம் மொத்தமும் பறந்தோடி சென்றிருக்க, அவனை துரத்த தொடங்கினாள்.


பின்னர் எப்படியோ அவளை சமாதான படுத்தியவன் அவளையும் கிளப்ப, இருவரும் டிராக்சூட் மற்றும் ஷூவுடன் ஜாகிங் செல்ல ஆயத்தமாயினர்.

வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சிக்கேன அறை இருந்தாலும், இருவரும் எப்போதும் செல்வது என்னவோ அருகில் உள்ள பூங்காவிற்கு தான். அங்கே நண்பர்களுடன் இணைந்து அந்த காலைப் பொழுதை அழகாக அனுபவிக்க ரொம்ப பிடிக்கும். நந்து கொஞ்சம் பூசினார் போன்ற தேகம் உடையவள்,அதுதான் அவளுக்கு அழகும் கூட,இருந்தாலும் அவளின் நலனிற்காக ஆதி அவளை தினமும் வலுக்கட்டாயமாக ஜாகிங்க்கு அழைத்து செல்வான்.


ஒருவாறு அனைவரும் தங்கள் கல்லூரிக்கு கிளம்பி டைனிங் டேபிள் வந்தடைந்தனர். விக்ரம் அமர்ந்த நாற்காலிக்கு நேரேதிரில் உள்ள நாற்காலியில் அமர்ந்தான் ஆதி.

விக்ரம் தட்டில் இட்லியை எடுத்துவைத்து சாப்பிட தொடங்க... ஆதியோ அம்மா எனக்கு பூரி வேண்டும் என்றான்.


இது எப்போதும் நடப்பது தான் என்பதுபோல் அனைவரும் அமைதியாக இருந்தனர்.விக்ரம் இட்லியில் வைக்கும் போதே தெரியும் இவன் அதில் கைவைக்க மாட்டான் என…."இந்த வீட்டில் மட்டும் தான் இந்த கொடுமையெல்லாம் நடக்கும், ஒவ்வொரு வேளையும் இருவகையான சமையல். எங்களை பார்த்தா பாவமா தெரியலையா கடவுளே"...? என தினமும் இரு சமையல் செய்யும் கடுப்பில் மனதுக்குள்ளேயே திட்டித் தீர்த்தார் அவர்களின் அன்னை.

சத்தமாக சொன்னால் இருவருமே உண்ணாமல் சென்று விடுவார்கள் என்பது அவருக்கு தெரியும். "விடுங்க அண்ணி பசங்களுக்கு செய்வதில் என்ன சிரமம்" என சிரித்துக்கொண்டே பூரியை எண்ணெயில் போட்டு எடுத்தார் கீர்த்தனா.


அவன் தட்டில் சூடாக பூரியை வைத்த தனது அத்தையை பார்த்து மெலிதாக சிரித்தவன் சாப்பிடத் தொடங்கினான். அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரம் உள்ளே ஆஜரானான் மதன்.


இவன் மட்டுமே விக்ரம் ஆதி இருவருக்கும் பொதுவான நண்பன்.இருவரின் கோபமும் இவனிடம் மட்டும் செல்லுபடியாகாது. எல்.கே.ஜி இருந்து பிளஸ் டூ வரை ஒன்றாக படித்தவர்கள், விக்ரம் ஆதி இருவரும் சண்டையால் பிரிந்தாலும்…மதனின் மீதான நட்பு மட்டும் மாறாமல் இருந்தது.


மதனின் காலை உணவு எப்போதும் இங்கே தான்.அவன் முன் தட்டை வைத்த கீர்த்தனா "என்னடா வைக்க" என்க,

அவனோ ஆதி மற்றும் விக்ரமின் தட்டை நோட்டம் விட்டவன் " ஒரு இட்லி ஒரு பூரி" என்றான்.
சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவு புரையேற சிரிக்கத் தொடங்கினர் நந்தும் சந்தியாவும்.

"அண்ணா உன் ஃப்ரெண்ட்ஷிப்க்கு ஒரு அளவே இல்லாம போச்சு" என நந்து சிரிக்க,சந்தியவோ அவனை ஒரு நக்கல் பார்வை பார்த்துவிட்டு சாப்பிட தொடங்கினாள்.


சந்தியாவை பார்த்து முறைத்தவன்,பின் அவள் புறம் திரும்பாமல் மற்றவர்களிடம் பேசி சிரித்த படியே உணவை முடித்தான். பின் அனைவரும் தங்கள் கல்லூரிக்கு கிளம்பினர்.


வெளியே வந்த நந்து காரில் சாய்ந்து நின்று"எங்க என்னோட டிரைவரை இன்னும் காணும்"என சொல்லியபடி திரும்ப… விக்ரம் கண்களில் அனல் தெறிக்க முறைத்தபடி அவளை நெருங்கி மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி நிற்க, "அய்யய்யோ" எதுக்கு இப்படி முறைக்கிறார் என மனதில் நினைத்தவள்,வெளியே ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு "என்ன அத்தான்..?" என்க,

அவனோ புருவத்தை உயர்த்தி பின்னால் பார்க்கும் படி கண்ணசைக்க… திரும்பி பார்த்தவளுக்கு அப்போதுதான் தெரிந்தது தான் இவ்வளவு நேரம் சாய்ந்திருந்தது விக்ரமின் கார் என்று. "இல்ல தெரியாம சா...சாரி அத்தான்" என திக்கித் திணறி பதிலளித்தவள்,அவனுக்கு வழிவிட்டு நின்றாள்.


விக்ரமின் கார் சீறிக்கொண்டு செல்ல...அப்போது கையில் கார் சாவியை சுழற்றியவாறு,ஸ்டைலாக சன் கிளாஸ்ஸை எடுத்து மாட்டியபடி வந்து கொண்டிருந்தான் ஆதித்யா. சும்மாவே இவன் பின்னாடி பொண்ணுங்க சுத்துறாங்க,இதுல இவன் வேற..வரவர ரொம்ப அழகா ஆகிட்டே இருக்கான் என சலித்துக் கொண்டவள்…"என்னதாண்டா பண்ணுவ இவ்ளோ நேரம், வண்டியை எடு" என கத்த, "உனக்கு டிரைவர் வேலை பார்க்கிறேன் இல்ல, எனக்கு இது தேவைதான்" என்றவன், முறைப்புடன் காரை கிளப்பினான்.





மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கே சொல்லிட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்??

 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 3

கல்லூரியை அடையும்வரை அமைதியை கடைபிடித்தவள், அவனிடம் சொல்லிக்கொள்ளாமல் முறைப்புடன் இறங்கி சென்றாள்."

ஹாய் நந்து.... எங்க நேத்து ஆளையே காணோம், எங்களுக்கெல்லாம் செம்ம ட்ரீட், நீ தான் மிஸ் பண்ணிட்ட" என ஆதியின் நண்பர்கள் எப்போதும் போல் அவளிடம் பேச ...அவளோ ஆல்ரெடி ஆதி லேட்டாக வந்ததால் தான் விக்ரமின் கோபத்திற்கு ஆளானோம் என்ற கடுப்பில் இருந்தவள், "போடா லூசு,எருமை "என ...அந்த கோபத்தை எல்லாம் அவன் நண்பர்களிடம் காட்டிவிட்டு சென்றுவிட்டாள்.


"டேய் ஆதி உன் முகத்திற்கான தான் அமைதியா இருக்கோம்,இதே வார்த்தையை வேற யாராவது சொல்லிருந்தா நடக்குறதே வேற,கொஞ்சம் கூட சீனியர் என்கின்ற மரியாதை இல்லாம எப்படி பேசுறா பார்" என்றான் அவன் நண்பன்.


"இல்லனா என்ன பண்றதா இருக்க..?" என கைகளை கட்டிக்கொண்டு நிதானமாக ஆதி கேட்க…


அவன் கேட்கும் தோரணையிலேயே, கோபத்தை அறிந்தவர்கள்...அமைதியாக நிற்க,அவனோ "நீங்க தேவையில்லாம அவகிட்ட பேசுறதை நிறுத்துங்க,அவளும் உங்ககிட்ட இப்படி பேசமாட்டா" என்றவனும் கோபத்துடன் வகுப்பை நோக்கி சென்றான்.

"ஏண்டா, அவன் நந்துவை யாராவது கிண்டல் பண்ணலே சும்மா விடமாட்டான். அவன் முன்னாடியே இப்படி பேசினா கோபப்படாமல் கொஞ்சுவான... ? போய் மரியாதையா சாரி சொல்லு இல்லனா வச்சு செய்வான்" என்றுவிட்டு, வாங்கடா போகலாம் என கலைந்து சென்றனர்.

சிறிய மெரூன் நிற பொட்டை எடுத்து நெற்றியில் வைத்து,கண்ணாடியில் தன்னை பார்த்து திருப்தியுற்றவளாக ஷாலை எடுத்து இருப்பக்க தோளில் போட்டுவிட்டு தன் அறையைவிட்டு வெளியே வந்தாள் தர்ஷினி.

ஆகாய வண்ணத்தில் சுடிதார் அணிந்து,தலைக்கு குளித்து இருந்ததால் இடைவரை தாண்டிய முடியை, உச்சியில் முடி எடுத்து கிளிப் போட்டு,தளர பின்னலிட்டிருந்தாள் திவ்யதர்ஷினி. மெழுகில் செய்த சிலைப்போல், ஐந்தடி உயரத்தில் அழகும் அமைதியும் முகத்தில் தவழ...குழந்தைத்தனம் மாறாத முகத்தை பார்த்தாலே சினம் கொண்ட சிங்கம் கூட அடங்கிவிடும்.

"அம்மா சீக்கிரம் அவளை ரெடி பண்ணுங்க,எனக்கு ஆல்ரெடி டைம் ஆகிடுச்சு" என்றவள்,தன் தங்கைக்காக காத்திருந்தாள். சிறிது நேரத்தில் "அக்கா நான் ரெடி வா போகலாம் " என தன் ஸ்கூல் பேகை தோளில் மாட்டியபடி வந்து நின்ற பிரியதர்ஷினியை பார்த்து "தினமும் கிளம்ப லேட் பண்ணிட்டு ஸ்கூல் பஸ்ஸை விடவேண்டியது, நாளையிலிருந்து இப்படி பண்ணிப்பாரு..? நான் கூட்டிட்டு போகமாட்டேன்" என முகம் திருப்பியவளை பார்த்து….வாயை மூடிக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள் பிரியா.


"அக்கா... பிளீஸ் என்னால சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியல,இனிமே கோபமா பேசுறதுக்கு முன்னாடி, நான் கோபமா இருக்கேன்னு சொல்லிட்டு பேசு. அப்போதான் எங்களால புரிஞ்சிக்க முடியும் என்றவள், அக்கா நீ கோபமா பேசுறது கூட கொஞ்சுற மாதிரி இருக்கு" சோ ஸ்வீட் என்றாள்.


ரொம்ப கலாய்க்காதடி.. வண்டில ஏறு என்றவள் தன் ஆக்டிவாவை கிளப்பினான்...போகும் வழி முழுவதும் பேசிக்கொண்டே வந்த பிரியா தனது பள்ளியில் இறங்கி சுற்றும் முற்றும் பார்க்க…."யாரை தேடுற" என திவ்யா கேட்க,

"அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது ஃபை" என சொல்லிவிட்டு சிட்டாக பறந்துவிட்டாள்.பின் இவளும் தன் கல்லூரியை நோக்கி சென்றாள். விக்ரம் படிக்கும் அதே கல்லூரயில் தான் பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள்.


தன்னருகில் யாரோ அமர்வதை உணர்ந்த நந்து திரும்பிப்பார்க்க...அங்கு ஆதியை கண்டவள் "இப்போ எதுக்கு இங்க வந்த போடா" என்க,

அவனோ "ஏய் லூசு அவன் உன்னை முறைச்சதுக்கு என்கிட்ட எதுக்கு கோபப்படுற" என்றான்.


"உங்கிட்ட தான் என் கோபத்தை காட்டமுடியும்,விக்ரம் ஆத்தான் கிட்டயா காட்ட முடியும்.அவங்களை சாதாரணமா பார்த்தாலே படபடன்னு இருக்கு. இதுல இன்னைக்கு அப்படியே எரிக்கிற மாதிரி பார்த்தாங்க தெரியுமா..? எனக்கு ஒரு நிமிஷம் மூச்சே நின்னமாதிரி ஆகிடுச்சு" என்றாள் கண்ணில் பயத்துடன்.

"அவனை பத்தி பேசினாலே எனக்கு பிடிக்காது,இதுல அவனுக்கு ஓவர் பில்டப் வேற….முதல்ல அவனை அத்தான்னு கூப்பிடுறதை நிறுத்து. எப்போ பார்த்தாலும் அத்தான் அத்தான் கேட்கவே கடுப்பா இருக்கு" என்றான் எரிச்சலான குரலில்.


"உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை ஆதி…? எங்கிட்ட கூட சொல்லமாட்டேன்" என்கிறாய், ரெண்டு பேரும் எவ்ளோ ஒற்றுமையா இருந்தீங்க" என கேட்க...

அவனோ " மப்ச் ... அதைவிடு நந்து, வேற பேசு டென்ஷன் பண்ணாத" என்றான் இறுகிய குரலில்.


"ஓகே ஓகே ரொம்ப டென்ஷன் ஆகாத" என்றவள் அவன் மனதை மாற்றும் பொருட்டு "ஆதி இன்னைக்கு உன் ஆள பார்க்க போகலையா" என கேட்க,

அவனோ நந்துவை பார்த்து முறைத்தவன் "எங்கடி பார்க்க விட்ட..? நீ பண்ண டென்ஷன்ல எங்கிருந்து அவளை போய் பார்க்கிறது என்றவன், எல்லாம் அந்த விக்ரமால் வந்தது,அவனால் தான் இன்னைக்கு என் பேபியை பார்க்க முடியலை" என பழியைத் தூக்கி விக்ரம் மேல் போட்டான்.

"அடப்பாவி நீ போகாததுக்கு பழியை தூக்கி அங்க போடுறியா"…? என்க...அவனோ "எல்லாத்துக்கும் அவன் தான் காரணம்" என்றவன்...


"ம்ம்.. என பெருமூச்சு விட்டு, ஈவ்னிங் தான் போகணும்" என்றான் தன்னவளை பார்க்க முடியாத ஏக்கம் நிறைந்த மனதோடு. அதேநேரம் விக்ரமின் முன் கைகளை பிசைந்தவாறு நின்றிருந்தாள் திவ்யதர்ஷினி.


விக்ரமை தெரியாதவர்கள் அந்த கல்லூரியில் யாருமே இல்லை, அதனால் இவளுக்கும் அவனை நன்றாக தெரியும்.அவனை பற்றி அறிந்திருந்த காரணத்தினாலேயே இப்போது கண்களில் பயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.


அவனோ கோபத்தின் உச்சிக்கே சென்றிருக்க...இவளின் சாரி என்ற வார்த்தையை காதில் வாங்காமல் அழுத்தமாக நின்றுகொண்டிருந்தான்.


கல்லூரிக்குள் நுழைந்த திவ்யா தனது ஸ்கூட்டியை நிறுத்த பார்க்கிங் நோக்கி செல்ல.. அப்போது தன்னை யாரோ கூப்பிடுவது போல் இருக்க,திரும்பி பார்த்தவள் தன் தோழியை பார்த்து கையாட்டிவிட்டு திரும்புகையில் எதிரில் நின்ற காரில் பலமாக மோதிவிட்டாள்.


அப்போதுதான் காரை நிறுத்தியவன் கீழே இறங்கும் நேரம்,பெரும் சத்தத்துடன் கார் குலுங்க..கண்கள் சிவக்க காரை விட்டு இறங்கியவன்,அங்கு நின்ற திவ்யாவை பார்த்து ஒரு நிமிடம் அமைதியாக நின்றவன், பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு கத்த தொடங்கிவிட்டான்.


அவளோ என்ன செய்வது..? என தெரியாமல் நின்று கொண்டிருந்தவள்,அவனின் ரௌத்திரத்தில் கண்கள் தானாக கலங்க...அதுவரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் கண் கலங்கவும் ஒரே வார்த்தையில் "போ" என்றான்.


என்ன சொன்னான் என புரியாமல் திரும்பவும் அவன் முகம் பார்க்க…" போ " என்றான் அழுத்தமாக.

அவளும் விட்டாள் போதுமென திரும்பவும் சாரி என சொல்லிவிட்டு நிற்காமல் ஓடிவிட்டாள்.

போகும் அவளை பார்த்துவிட்டு தலையை ஆடியவன் தன் டிபார்ட்மெண்ட் நோக்கி சென்றான்.


சரியாக மாலை நான்கு மணிக்கு அந்த ஸ்கூலுக்கு எதிரில் உள்ள மரத்தடியில் வண்டியை நிறுத்தினான் ஆதி.

"ஏன்டா எல்லா பசங்களும் சைட் அடிக்க காலேஜ் வாசல்ல நிப்பாங்க.. ஆனா நீ இப்படி ஸ்கூல்ல வந்து நிற்கிறியே" என நந்து ஆதியை நக்கலடிக்க...

அவனோ
"எல்லாம் என் தலையெழுத்து,ஊர்ல வேற காலேஜே இல்லாத மாதிரி அந்த காலேஜ்ல சேர்ந்து படிக்கிறா வேற வழி" என்றான் வெறுப்பாக.

தன்னவளை பார்ப்பதற்காக கூட விக்ரம் படிக்கும் அந்த கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லாமல்,எப்போதும் மாலை அவளின் தங்கையை அழைத்து செல்வது அவள்தான் என அறிந்தது முதல் ஸ்கூல் வாசலில் காலையிலும் மாலையிலும் காத்திருந்து ஃபாலோ பண்ண தொடங்கிவிட்டான்.


சிறிது நேரத்தில் திவ்யாவின் ஸ்கூட்டி வந்து நிற்க...ஒரு காலை தரையில் ஊன்றி நின்றிருந்தவளின் அழகில் கண்ணிமைக்க மறந்து நின்றான். காலையில் எப்படி கல்லூரிக்கு சென்றாலோ அதே நிலையில் அன்றலர்ந்த மலர் போல் புத்தம் புது ஓவியமாக நின்றிருந்தவளை பார்க்க பார்க்க தெவிட்டவே இல்லை அவனுக்கு.


"சும்மாவே அவளை பார்த்து வழியுவான்… இதுல இவ வேற இப்படி வந்து நின்னா பையன் என்ன ஆவான்..?இன்னைக்கு ஆதி தூங்கினமாதிரி தான்" என முணுமுணுத்து கொண்டாள் நந்து.



சிறிது நேரத்தில் பிரியா வர...காலையில் பார்த்த மாதிரி இப்பவும் சுற்றி சுற்றி பார்க்க…."யாரை தாண்டி தேடுற" என்ற திவ்யாவின் கேள்விக்கு "அதெல்லாம் ஒன்னும் இல்லை" என்றவள்,இருபுறமும் காலைப்போட்டு வண்டியில் உட்கார ,அப்போது தான் எதிரில் நின்ற ஆதியை பார்த்தாள்.


பிரியா ஆதியை பார்த்து புன்னகைத்தவள், ஸ்கூட்டி கிளம்பவும், தன் அக்காவிற்கு தெரியாமல் ஆதிக்கு கையசைத்து விட்டு சென்றாள். அவனும் புன்னகையுடன் கையசைத்தவன் தன் காரில் ஏறி புறப்பட்டான். "லவ்வரை கரெக்ட் பண்ண தெரியல,அவளோட தங்கச்சிக்கு ஃபை சொல்ற அளவுக்கு கரெக்ட் பண்ணி வச்சிருக்க விளங்கிடும்" என்றவள் எப்போதும் போல தன் சேட்டையை தொடங்கி விட்டாள்.

இரவு தன் படுக்கையில் படுத்து விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தான் விக்ரம். அவன் நினைவு முழுவதும் தன்னவளின் முகமே...இன்று விழிகளில் பயத்துடன் திக்கித் திணறி நின்றவளின் மதிமுகமே உலா வந்து கொண்டிருந்தது.

உதடு தானாக அவன் வைத்த,அவன் மட்டுமே அறிந்த செல்ல பெயரை உச்சரித்தது. அந்த இரு எழுத்துக்கள் உயிர்வரை சென்று தித்தித்தது. அந்த பெயரை நினைக்கையில் இதுவரை உணராத ஏதோ ஒன்று மனம் முழுவதும் பரவி,உடல் சிலிர்க்க வைத்தது.


தன்னவளை நினைக்கையிலேயே உதட்டில் தானாக புன்னகை வர,அவனுக்கே தன்னை நினைத்து சிரிப்பு தான் வந்தது.இவனுக்கு சிரிக்கவே தெரியாது என அனைவரும் நினைக்க..அவனோ தன்னவளை நினைத்து தன்னந்தனியே கிறுக்கன் போல் சிரித்துக் கொண்டிருந்தான் .


அங்கு ஆதியும் இதே நிலையில் தன்னவளின் நினைவில் மூழ்கியிருந்தான்.இங்கு இருவரும் இப்படி இருக்க,இதற்கு காரணமானவளோ போர்வையின் கதகதப்பில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.


இப்படியே நாட்கள் போக...இன்னும் இரு நாட்களில் விக்ரம் ஆதிக்கு பிறந்தநாள்...அவர்களின் சிறு வயதில் இருவரும் ஒரே போல உடையணிந்து ஒரே கேக்கை வெட்டி ஒற்றுமையாக கொண்டாடினர். ஆனால் என்று இருவரும் பிரிந்தார்களோ அன்றிலிருந்து ஏதோ கடமைக்கு தங்கள் பெற்றோர்களுக்காக மட்டுமே,அதுவும் தனி தனி கேக்.


இவர்கள் இருவருக்கும் உடை எடுக்க சந்தியா, நந்து இருவரும் மென்ஸ் வேர் ஷோரூமில் நுழைந்தனர். நந்து "ஆதி விக்ரம்" இருவருக்கும் பரிசளிக்க….ஆதிக்கு அவன் எப்போதும் போடுவது போல் ஒரு ஷர்ட் எடுத்தவள்,விக்ரமிற்கு பார்மல் பிளைன் ஷர்ட் எடுத்தாள். விக்ரம் எப்போதும் போடுவது போல...பின்னர் இருவருக்கும் பிராண்டட் வாட்ச் எடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.


ஆசையாக இருவருக்கும் பார்த்து பார்த்து வாங்கியதை கிஃப்ட் பேக் பண்ணியவளுக்கு தெரியவில்லை, ஒருவன் அதை பிரித்து கூட பார்க்காமல் தூக்கி எறியப் போகிறான் என்று…!!!


பிறந்தநாள் அன்று நள்ளிரவில்... ஹாலில் இரு கேக்கை வைத்துவிட்டு,நந்து ஆதியையும் சந்தியா விக்ரமையும் எழுப்பி வெளியே அழைத்துவர... வீட்டில் உள்ள அனைவரும் ஹாலில் காத்திருந்தனர். ஒவ்வொரு வருஷமும் நடப்பது தான் என்பது இருவரும் அமைதியாக நிற்க...மொத்த குடும்பமும் சேர்ந்து இருவருக்கும் வாழ்த்தை தெரிவித்தனர்.


பின்னர் இருவரும் தனி தனியாக கேக்கை வெட்டி கொடுக்க...கடமை முடிந்தது என்பது போல் தூங்க சென்றுவிட்டான் விக்ரம். சிறிது நேரத்தில் ஆதியும் தூங்க செல்ல….அவனின் வழியை மறித்து நின்றாள் நந்து.


முகத்தில் புன்னகை பூக்க தன் பரிசினை கொடுத்து "ஹாப்பி பர்த்டே ஆதி" என வாழ்த்தியவள்,தூங்க செல்ல...கையை பிடித்தவன் "அது என்ன" என்று அடுத்த கையில் உள்ள கவரை பார்த்து கேட்க...அவளோ விக்ரம் அத்தானுக்கு என்றாள்.


அவன் முறைக்க...அவளோ "ரெண்டு பேருக்கும் பர்த்டே உனக்கு மட்டும் கொடுத்துட்டு விக்ரம் அத்தானுக்கு கொடுக்காம இருக்க முடியாது புரியுதா..இதுகெல்லாம் கோபப்பட கூடாது" என்று சொல்லிவிட்டு மேலே சென்றாள்.


விக்ரம் அறை மூடியிருக்க...காலையில் கொடுக்கலாம் என்று நினைத்து உறங்க சென்றாள்.


எப்போதும் ஆதி வந்து ஒரு மணிநேரம் போராடிய பின்பே எழுபவள்...இன்று ஆதிக்கு முன்பே எழுந்து விக்ரம் வெளியே வருவதற்காக காத்திருந்தாள்.


இந்த பரிசை கொடுத்தால் விக்ரம் அத்தான் வாங்குவாங்களா என்றெல்லாம் அவள் நினைக்கவில்லை...
கண்டிப்பா வாங்கிப்பாங்க எல்லாரும் கொடுப்பது போல தானே நாமளும் தருகிறோம் என்றே நினைத்தாள்.அதுவும் பிறந்தநாள் அன்று கொடுக்கும் பரிசை யாரும் தவிர்க்கமாட்டார்கள் என பலவாறு யோசித்தபடி அவன் அறைக்கதவு திறப்பதற்காக காத்திருந்தாள்.



தங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் டியர்ஸ்

 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 4


காலையில் எழுந்ததும் எப்போதும் போல் ஜாகிங் செல்ல கிளம்பி வெளியே வந்த விக்ரமின் கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தது. 'உலக அதியமா இருக்கு, இவ்வளவு சீக்கிரம் எழுந்து உட்கார்ந்திருக்கா..?' என நினைத்தவன்,பின் ஒரு அலட்சிய பார்வையை செலுத்திவிட்டு படியில் இறங்க அடியெடுத்து வைக்க…அவன் அறையிலிருந்து வெளியே வந்தலிருந்து அவனையே பார்த்திருந்த நந்து முகம் மலர "அத்தான்" என்க,


இறங்க முயன்றவன் திரும்பாமல் அப்படியே நின்றான்.அவன் எதிரில் வந்து நின்றவள்,தனது பரிசினை அவன் முன் நீட்டி "ஹாப்பி பர்த்டே அத்தான். நைட்டே உங்ககிட்ட கொடுக்கணும்னு நினைத்தேன், ஆனா நீங்க அதுக்குள்ள உங்க ரூம்க்கு போய்ட்டீங்க" என்றவள்,பரிசினை நீட்டியப்படியே நிற்க...அவனோ அவளையும் கையிலுள்ள பரிசினையும் மாறிமாறி பார்த்தவன்,அவள் என்ன நடந்தது என உணரும் முன்பே அதனை அவளிடமிருந்து பறித்தவன் தூக்கி எறிந்திருந்தான்.அவள் ஆசையாக வாங்கியவை மூலைக்கு ஒன்றாக பறந்து சென்று விழுந்தது.


அவளோ அதிர்ச்சியுடன் அவனின் முகம்ப்பார்க்க...அவனோ கோபமும் ஆத்திரமும் நிறைந்த அலட்சிய பார்வையோடு அவளை நெருங்கியவன்.."நான் உன்கிட்ட கேட்டேனா..? எனக்கு விஷ் பண்ணு கிஃப்ட் கொடுண்ணு.நீ யாருடி எனக்கு கிஃப்ட் கொடுக்க, உனக்கு என்ன உரிமை இருக்கு என்றவன், தயவு செஞ்சி என் முகத்தில் முழிக்காத உன்ன பார்த்தாலே வெறுப்பா இருக்கு" என்று சொல்லிவிட்டு தடதடவென படிகளில் இறங்கி சென்றுவிட்டான்.


அதுவரை அதிர்ச்சியில் உறைந்திருந்தவள் விழிகள் கலங்க..போகும் அவனையே வெறித்துக் கொண்டிருந்தாள். அப்போ உங்களுக்கு நான் யாருமே இல்லையா அத்தான்..? என நினைத்தவள், அப்படியே மடிந்து அழத்தொடங்கினாள்.எனக்கு எந்த உரிமையும் இல்லையா என அவன் சிந்திய வார்த்தைகளை நினைத்து கதறியவள்,தன் அறைக்கு சென்று கதவடைத்துக்கொண்டாள்.


மெத்தையில் சென்று விழுந்தவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை.என்னை பார்க்கவே பிடிக்கலையா அத்தான் என மருகியவள் தலையணைக்கு அடியில் உள்ள விக்ரமின் புகைப்படத்தை எடுத்து அதனிடம் பேச தொடங்கினாள்.

"உங்களுக்கு ஏன் என்னை பிடிக்கலை, ஆனா எனக்கு உங்களை எவ்ளோ பிடிக்கும் தெரியுமா…? சின்ன வயதில் இருந்தே உங்களை ரொம்ப பிடிக்கும்..உங்களோட கோபத்தை பார்த்தா தான் பயமா இருக்கும்.அதனால் தான் உங்ககிட்ட பேச தைரியம் இல்லாம தினமும் உங்க ஃபோட்டோ கூட பேசிட்டு இருக்கேன்.


உங்களுக்கும் என்னை பிடிக்கும்னு நினைத்தேன், ஆனா இப்போ தான் தெரியுது உங்க மனுசுல எனக்கு இடமில்லைன்னு..." என ஏதேதோ நினைத்தவள் அழுகையில் கரைந்தாள்.


கதவை தட்டும் சத்தத்தில் தெளிந்தவள்,வெளியே ஆதியின் குரல் கேட்க..எழுந்து குளியலறை சென்று,முகம் கழுவி கண்ணாடியை பார்க்க, அழுததால் முகம் சிவந்து வீங்கி இருக்க எதையாவது சொல்லி சமாளிக்கணும் என நினைத்தபடியே கதவைதிறந்தாள்.


எதிரில் நின்றவளை பார்த்து திகைத்தவன், "நந்து அழுத்தியா..? ஏன் முகம் இப்படி இருக்கு" என்றபடி நெற்றியில் கைவைத்து பார்க்க...இல்லை என தலையாட்டியவள் தலைவலி என்றாள். அவனோ நம்பாத பார்வையை அவள்மேல் செலுத்தியவன் "என்கிட்ட எதாவது பொய் சொல்றியா நந்து..?" என்றான்,

"அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆதி உண்மையிலேயே தலைவலி தான், ரொம்ப நேரமா வலிக்குதா அதான் அழுதுட்டேன்" என்றாள் சமாளிக்கும் வகையில்.


"சரி நீ படு, நான் அப்பறம் வந்து உன்னை எழுப்புறேன்" என்றவன் யோசனையோடு வெளியே சென்றான். அப்போது தான் ஜாகிங் முடித்துவிட்டு உள்ளே நுழைந்த விக்ரம் ஆதியையும் மூடியிருந்த நந்துவின் அறையையும் பார்த்தவன்,தோள்களை குலுக்கியவாறு தன் அறைக்குள் சென்று மறைந்தான்.


அனைவரும் டைன்னிங் டேபிளில் காலை உணவுக்காக அமர்ந்திருக்க...அப்போது தான் அங்கு நந்து இல்லாததை கண்ட ஆதி, அவளை பிடிவாதமாக அழைத்து வந்து அமரவைத்தவன்… தட்டில் உணவை எடுத்து வைத்து சாப்பிட சொல்ல, அவளோ "எனக்கு பசியில்லை" என எழ முயல அவளை இழுத்து அமர்த்தினான் கோபமாக.


"சாப்பிடாம இருந்தா இன்னும் தலைவலிக்க தான் செய்யும்,சாப்பிட்டு மாத்திரை போடு சரியாகிடும்" என்றான்.அவளும் தலையாட்டிவிட்டு,

சாப்பிடுவது போல் உணவை அளந்தவள் "போதும் ஆதி எனக்கு வாமிட் வர மாதிரி இருக்கு" என்றவள், கைகழுவி விட்டு எழுந்து தனது அறைக்கு சென்றுவிட்டாள்.


அதுவரை நடந்ததை கவனித்துக் கொண்டிருந்த விக்ரம்,நிதானமாக தனது உணவை உண்ணத் தொடங்கினான்.


ஆதியோ நந்து சென்றபின்,அவனும் எழுந்தவன் ஒரு கிளாஸில் சூடாக பாலை எடுத்துகொண்டு நந்தினி அறைக்கு சென்றான்.எப்படியோ அவளை சமாதானப்படுத்தி பாலை குடிக்க வைத்தவன்,அதன் பின்பே கல்லூரிக்கு கிளம்பினான்.


எப்போதும் போல பிறந்தநாள் அன்றும் தன்னவளை காண அவள் தங்கையின் பள்ளிக்கு சென்றான். சிறிது நேரத்தில் அவளும் வரவே...அவளை தன்னை மறந்து ரசித்தவன், அவளின் ஒவ்வொரு விழியசைவையும் தன்னுள் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான். பின்னர் அவளுக்கு தெரியாமல் பிரியாவை பார்த்து வரும்படி சைகை செய்ய அவளும் தர்ஷினி சென்றவுடன் அவன் அருகில் நின்றாள்.


"ஹாய் மாம்ஸ், என்ன தூரத்திலிருந்து எங்க அக்காவை சைட் அடிக்கிறிங்களா..?" என்க,

அவனோ "உன்னை பக்கத்தில் வச்சிக்கிட்டு அதை செய்ய முடியுமா மேடம்,நீதான் சரியான கேடி ஆச்சே...ஒரே நாள்ல உங்க அக்காவை ஃபாலோ பண்ணதை கண்டுபிடிச்சி என்னை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினாயே…? அதை எப்படி மறக்க முடியும் . அம்மாடியோ என்ன வாய் உனக்கு" என்றான் சத்தமாக சிரித்தபடி.


"சிரிச்சது போதும் எதுக்கு வர சொன்னிங்க…? சீக்கிரம் சொல்லுங்க கிளாஸ்க்கு டைம் ஆகிவிட்டது" என்றாள் இடுப்பில் ஒரு கையை வைத்துக்கொண்டு.

அவள் நிற்கும் தோரணையில் வந்த சிரிப்பை கட்டுப்படுத்தியவன் அவள் முன் ஒரு டைரி மில்க் சாக்லேட்டை நீட்ட...அவளோ "எதுக்கு சாக்லேட்" என்றாள் அதனை வாங்காமல்.


"இன்னைக்கு என்னோட பர்த்டே மேடம் இப்போவாவது வாங்குவிங்களா" என்க,

"ஹாப்பி பர்த்டே மாம்ஸ்" என்றவள் சாக்லேட்டை அவனிடமிருந்து பெற்றுக்கொண்டாள்.


பின்னர் அவளிடம் இன்னொரு சாக்லேட்டை கொடுத்தவன் "இதை உங்க அக்கா கிட்ட கொடுத்துடு" என்றான்.அவளும் சரி என்றவள்,அவனிடமிருந்து நடுவில் ஹார்ட் வடிவில் இருக்கும் சாக்லேட்டை பெற்றுக்கொண்டு விடைப்பெற்றாள்.


"ரொம்ப படுத்துறடி திவி பேபி" திரும்பவும் உன் முன்னாடி வந்து உன்னை கஷ்டப்படுத்த எனக்கு விருப்பமில்லை அதான் உன் படிப்பு முடியும்வரை இந்த கண்ணாமூச்சி ஆட்டம். உன்னை நேரில் பார்த்து வாழ்த்து பெறவேண்டும் என்று என்னோட உடம்பிலுள்ள ஒவ்வொரு செல்லும் துடிக்குதுடி.. எப்போ தான் என்னோட காதலை உணர்வாய்" என தன்னவளோடு மானசீகமாக உரையாடியவன் காரை கிளப்பினான்.


அதன்பின் விக்ரம் ஆதி இருவருக்கும் அன்றைய நாள் நண்பர்களுடன் ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியாக சென்றது. இரவு எப்போதும் போல ஃபேமிலி டின்னர்….இப்போதும் நந்து முகம் தெளியாமல் எதையோ பறிக்கொடுத்தவள் போல் இருக்க,ஆதி கண்டுக்கொண்டான்.
"தலைவலி இல்ல வேற என்னவோ நடந்திருக்கு எனக்கு தெரிய கூடாதுன்னு மறைகிறா" என்று நினைத்தவன் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தான்.


அப்பொழுது உள்ளே நுழைந்தான் மதன்.எல்லா இருக்கையிலும் ஆட்கள் அமர்ந்திருக்க,சந்தியா எதிரில் உள்ள நாற்காலி மட்டுமே காலியாக இருந்தது... வேறு வழியில்லாமல் அதில் அமார்ந்தவன் சாப்பிட்டு முடியும் வரை மறந்தும் அவள் முகம் பார்க்கவில்லை.

சந்தியாவும் அவன் வந்ததிலிருந்து
அவனையே தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் பார்ப்பது தெரிந்தாலும், அப்படி ஒருத்தி அங்கு இருப்பதையே கண்டுகொள்ளாமல் விக்ரம், ஆதி, நந்து என மூவரிடமும் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தான்.


சந்தியாவிற்கு அவனது விலகல், உதாசீனத்தில் அழுகை வரும் போல் இருந்தது. இருக்குமிடம் கருதி அதனை அடக்கியவளுக்கு இப்போது கோபமும் சேர்ந்துக்கொள்ள…..யாருக்கும் தெரியாமல் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு "தனது ஹீல்ஸ் காலினால் அவன் பாதத்தில் மிதிக்க"...வலியில் கத்த நினைத்தவன், தன்னை சமன் செய்துக்கொண்டு அவளை பார்த்து முறைத்தான்.


அவளோ நக்கல் சிரிப்பை உதிர்த்தவள் 'எப்படி உன்னை பார்க்க வைத்தேன் பார்' என்பதுபோல் பார்த்தாள். மதன் பல்லை கடித்து கோபத்தை அடக்கியவன் அமைதியாக அமர்த்திருந்தான், இருக்கும் சூழ்நிலையில் எதுவும் செய்யமுடியாத இயலாமையில்.


இவர்களுக்குள் இப்படி யாருக்கும் தெரியாமல் ஒரு பனிப்போர் நிகழ்ந்துக் கொண்டிருக்க…. ஆதியோ நந்துவை தான் கவனித்துக் கொண்டிருந்தான்.


"நந்து சாப்பிட பிடிக்கலை என்றால் விடு" என்றவன், வெயிட்டரை அழைத்து அவளுக்கு பிடித்த ஐஸ்கிரீமை எடுத்து வர சொன்னான். ஐஸ்கிரீமை அவள்முன் வைத்தவன் சாப்பிடு என்பதாய் தலையசைக்க,அவளும் காலையிலிருந்து அவன் தனக்காக வருந்துவது பிடிக்காமல் சாப்பிட தொடங்கினாள்.


அவள் மனநிலையை மாற்றும் பொருட்டு "அடிப்பாவி ஐஸ்கிரீம் தான் வேணும்னா காலைலயே கேட்டிருக்கலாம் இல்ல, காலையிலிருந்து எல்லாரையும் படுத்தி எடுத்துட்டு இப்போ ஐஸ்கிரீமை பார்த்தவுடன் தலைவலி பறந்துப்போய் சாப்பிட ஸ்டார்ட் பண்ணிட்ட" என்றான் சிரித்துக்கொண்டு.


அவளும் சிரித்துக்கொண்டே அவனுக்கு இரண்டு அடிப் போட்டவள்,சாப்பிட தொடங்கினாள்.


இவ்வளவு நடந்தும் எதுவும் நடக்காதது போல் இருந்த ஒரே ஆள் நம்ம விக்ரம் மட்டும்தான். எல்லாவற்றையும் கவனித்தாலும் தலையை நிமிர்த்தாமல்,யாராவது தன் உணவை பிடுங்கி தின்றுவிடுவார்கள் என்பது போல் தட்டில் மட்டுமே பார்வையை செலுத்திக்கொண்டிருந்தான்.


அன்றைய நாள் அப்படியே முடிய...இன்றும் விக்ரமும் ஆதியும் தன்னவள் நினைவில் மூழ்கிவிட...நந்து விக்ரமின் புகைப்படத்தை கண்டு தூங்காமல் கண்ணீர் வடிக்கத்தொடங்கினாள்.


பிரியா தன் அக்காவிடம் சாக்லேட்டை கொடுக்க…. "ஏதுடி இவளோ பெரிய சாக்லேட்" என திவ்யா கேட்க, அவளோ "இன்னைக்கு என் ஃப்ரெண்டோட பர்த்டே" என்றாள்.

"அதுக்கு எல்லாருக்கும் இவளோ பெரிய சாக்லேட்டா கொடுத்தாள்" என ஆச்சர்யமாக கேட்க,

பிரியாவுக்கு கோபம் வந்துவிட்டது "எதுகெல்லாம் கேள்வி கேட்கணுமோ அதுகெல்லாம் கேட்க மாட்டாள்,ஒரு சாக்லேட்க்கு எத்தனை கேள்வி என கடுப்பானவள் "எல்லாருக்கும் இந்த மாதிரி வாங்கிக்கொடுத்தா அவளோட சொத்தை தான் விற்கணும்,சாக்லேட் கொடுத்தா சாப்பிடு அதை விட்டுட்டு நூறு கேள்வி கேட்க்காத,உனக்கு பிடிக்கும்னு கொடுத்தேன் பார் என்னை சொல்லணும்" என சிணுங்கியவாறு சென்றுவிட்டாள்.


ரொம்ப தான் பண்றா என நினைத்தவள்,பின்னர் தனக்கு பிடித்த டைரி மில்க்கை ரசித்து உண்டவள்,உறங்க சென்றாள்.


அடுத்தநாள் தன் முன் கோபமாக நின்றிருந்த மதனை பார்த்து..."என்ன பேபி காலைலயே இவளோ கோபமா இருக்க" என கேட்க

அவனோ "தேர் இஸ் தி லிமிட் ஃபார் எவ்ரிதிங் சந்தியா...உன் மனசுல என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறாய் என சீறியவன்,இதுக்கு மேல் என்னை டிஸ்டர்ப் பண்ணா... நீ வேற மதனை பார்க்க வேண்டியிருக்கும்" என்றவன்,தனது வகுப்பை நோக்கி நடையை கிளப்பினான்.


அவளோ போகும் அவன் முதுகையே வெறிக்க.. இதழ்களோ ஒரு ரகசிய புன்னகையை சிந்தியது.


நாட்கள் உருண்டோட நான்கு வருடங்கள் கழித்து….


விக்ரம் எம்.பி.ஏ முடித்தவன்,தன் தந்தைக்கு முழுதாக ஓய்வு கொடுத்துவிட்டு தங்கள் பிசினஸை கையில் எடுத்தான். அவனின் கடின உழைப்பினாலும் திறமையினாலும் தங்கள் பிசினஸை பலமடங்கு உயரத்தில் கொண்டுவந்தான். இந்த இளம் வயதிலேயே பெரிய பிசினஸ்மேன் கண்களில் விரலைவிட்டு ஆட்டுபவன்.இவனை பார்த்தாலே தொழில் வட்டாரத்தில் ஒரு பயம் நிறைந்த ஆச்சிரியம். எல்லாவற்றிலும் இவனே முதன்மை,இவன் வேண்டாம் என நினைக்கும் ப்ராஜெக்ட் மட்டுமே மற்றவர்கள் கையில் கிடைக்கும். அதனாலேயே அவனுக்கு கண்ணுக்கு தெரியாத எதிரிகளும் அதிகம் என்றும் சொல்லலாம், ஏன்னென்றால் அவனை நேராக எதிர்ப்பவர்களுக்கு அவன் தண்டனை என்ன என்பது அனைவருக்கும் தெரியும் அதனாலேயே அவன் முன்பு அடங்கி, புன்னகையுடன் பேசுபவர்கள் பின்னால் அவனுக்கு எதிராக காய்களை நகர்த்துகிறார்கள். ஆனால் இது எதுவும் அவனையும் அவன் தொழிலையும் பாதிக்காத வண்ணம் திறம்ப்பட தன் ஒவ்வொரு செயலையும் ஒரு நேர்த்தியுடன் செய்தான். அதுவே அவனின் அசுர வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது.


அவனிடம் இன்னும் மாறாமல் இருப்பது அவனின் கோபம் மட்டுமே...சற்றும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.


ஆதி தனது எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தவன்,மாஸ்டர் டிகிரியை முடித்துவிட்டு,புகழ்பெற்ற மருத்துவமனையில் கார்டியோ தோரசிக் சர்ஜனாக இருக்கிறான். அவனும் அதே கலகலப்புடன் இருந்தாலும் விக்ரம்க்கும் அவனுக்கும் நடுவில் இருக்கும் பிரிவு இன்றும் அதே நிலையில் தான் உள்ளது.


நந்துவும் மெடிஸன் படித்து முடித்தவள்,இப்போது ஆதி பணிபுரியும் அதே மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டே மேற்படிப்பிற்கான என்ரன்ஸ் எக்ஸாமிற்கு படித்துக்கொண்டிருந்தாள்.

அன்று போல் இன்றும் ஆதி தான் அவளின் ஒவ்வொரு தேவையையும் பார்த்து பார்த்து செய்துகொண்டிருந்தான்.. ஆனால் அந்த பர்த்டே அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு விக்ரமின் கண் எதிரில் கூட நிற்க மாட்டாள். அவன் இருக்கும் தருணங்களிலும் முகத்தை கூட நிமிர்த்த மாட்டாள்,எப்போது தன் முகத்தை பார்க்கவே வெறுப்பாக இருக்கிறது என்றானோ அன்று முதல் இன்று வரை ஒரே வீட்டிலிருந்து கொண்டு ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறாள்.



மதன் தன் நண்பன் விக்ரம் கம்பெனியிலேயே சேர்ந்து பணிபுரிகிறான்.சந்தியா இப்போது தான் படிப்பை முடித்திருக்க…தன் அண்ணனிடம் கெஞ்சி கூத்தாடி அவளும் அங்கேயே வேலையை கற்றுக்கொள்கிறேன் என்ற பெயரில் மதனை படுத்தி எடுத்துக்கொண்டிருந்தாள்.




உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் டியர்ஸ்.
 
Status
Not open for further replies.
Top