ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வான மழை நீ எனக்கு....- கதை திரி

Status
Not open for further replies.

aadrika

Well-known member
Wonderland writer
வான மழை நீ எனக்கு….



அத்தியாயம் -1


"அம்மா கண்ணு முழிக்கிறா அங்க பாரு

அம்மா பொன்னா ஜொலிக்கிறா அங்க பாரு
அம்மா வாரி கொடுக்கிற கைய்ய பாரு

அந்த வானச் செவப்புல கன்னம் பாரு
அம்மம்மா பூஞ்சிரிப்புல புல்லரிக்குதம்மா
உன் சிரிப்புக்கு ஈடேது

அம்மா கண்ணில் தெரியுதே வைர தீபம்
அவ சங்கு கழுத்து தான் பவளமாகும்
எங்க அம்மா எழுந்துட்டா குலவய போடு
பண்ணாரி பாதத்தில் பூஜைய போடு
அம்மா எழுந்து நீ ஆட்டம் போடு

இந்த ஊரு செழித்திட வாக்கு கூறு
தாயே திரிசூலி அங்காள

மாரி ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா "

என்று தெரு முழுக்க கேட்கும் அளவிற்கு மைக்செட்டில் பாட

நன்றாக இழுத்து போத்தி தூங்கிக் கொண்டு இருந்த சத்யப்ரியா பாட்டு சத்தத்தில் கண் விழித்தவள் சோம்பல் முறித்தவாறே எழுந்து அமர்ந்து "ஆடி மாசம் தொடங்கிருச்சா "என்று பாட்டு கேட்டுக் கொண்டே ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள்.

அவள் அறையின் ஜன்னல் வழியாக பார்த்தாலே தெரு முக்கில் இருக்கும் அம்மன் கோவில் தெரியும்.

ஜன்னல் வழியே தெரிந்த கோவில் கோபுரத்தை பார்த்து அம்மனை மனமுருக வேண்டிக் கொண்டவள்
காலேஜ் செல்ல ரெடி ஆனாள்.

குளித்து முடித்து வந்தவள் மைக்செட் பாடிக் கொண்டு இருந்த பாடலை இவளும் முனுமுனுத்தவாறே தலையை காய வைத்தாள்.

சின்ன வயதில் இருந்தே ஆடி மாதம் என்றால் தினமும் கோவிலில் ஒலிக்கும் பாடலை கேட்டு இவளுக்கு அனைத்து அம்மன் பாடலும் நன்றாகவே மனப்பாடம் ஆகி இருந்தது

கண்ணாடி முன் நின்று ரெடி ஆனவள் கீழே வர ஏழு மணி ஆனது.

கீழே சென்றவள் நேராக கிட்சென் சென்று சமையல் செய்துக் கொண்டு இருந்த அவளின் அம்மா செல்விக்கு வணக்கத்தை வைத்தவள்

சமையல் திட்டின் மேல் அமர்ந்து செல்வி கொடுத்த டீயை ரசித்து குடித்தவள் பின் அவளுக்கு தெரிந்த வேலைகளை செய்து செல்விக்கு உதவியவள் வெளியே வர

சரியாக அந்த நேரம் வெளியே ஹாலிற்கு வந்த அவளின் தந்தை பாலகணேஷன் சத்யப்ரியாவை பார்த்து விட்டு வீடே அதிரும்படி "செல்வி "என்று கோபமாக கத்தினார்.

இவர் கத்தியதில் அறக்கபறக்க ஓடி வந்த செல்விக்கு சத்யபிரியா கணேஷன் முன் நின்றதை பார்த்து என்ன நடந்து இருக்கும் என்று உணர்ந்துவர் வேதனையுடன் அவர் முன் வந்து நின்றார்.

"உங்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன் காலையில வெளியே போகும் போது இவளை வந்து என் முன்னாடி நிற்க கூடாதுனு இவ முகத்தை பார்த்துட்டு போன அந்த நாள் வெளங்குமா "என்று வெறுப்புடன் கேட்க

எப்போதும் கேட்பது தான் என்றாலும் சத்யாவிற்கு கணேஷனின் பேச்சு வலியை கொடுத்தது.
அவள் அமைதியாக நிற்க

"அப்படி நல்ல சொல்லுடா நானும் இந்த சனியன் கிட்ட எத்தன தடவ தான் சொல்றது நம்ம நாள் வெளங்கவே கூடாதுனு திமிரேடுத்து இப்படி பண்ற "என்று அங்கு வந்த மரகதம் கணேஷனை இன்னும் ஏற்றி விட

மரகதம் பாலகணேஷனின் தாய் அவரின் கணவர் இறந்து விட மகனின் வீடே கதி என்று இருக்கிறார்.

எப்போது செல்வியையும் சத்யாவையும் திட்டிக் கொண்டே இருப்பார்.

"இனிமேல் இவ என் கண் முன்னாடி வந்தான அப்புறம் இங்க நடக்குற எதுக்கும் நா பொறுப்பாக மாட்டேன் "என்று கணேஷன் எச்சரிக்க

"இந்த தரித்தரம் முகத்துல முழிச்சுட்டு இப்படியே வெளியில போயிறாத பா நாம ரோஷினி முகத்தை பார்த்துட்டு போ நாள் நல்லாத இருக்கும் "என்று சத்யபிரியாவை வெறுப்புடன் பார்த்து விட்டு
தூங்கிக் கொண்டு இருந்தா ரோஷினியை எழுப்பிவிட்டு அழைத்துக் கொண்டு வந்தார்.

ரோஷினியை பார்த்த செல்விக்கே கடுப்பாக இருந்தது.
தலை களைந்து வந்தவளை பார்த்தால் நாள் நன்றாக இருக்கும் குளித்து முடித்து மங்களகரமாக இருக்கும் சத்யபிரியாவை பார்த்தால் நாள் விளங்காது என்று மரகதம் சொல்லுவதை பார்த்தால் செல்விக்கு சொல்லமுடியாத வேதனையாக இருந்தது.

செல்விக்கு மட்டும் தான் அப்படி தோன்றியது போல முகம் கழுவாமல் தலை களைந்து வந்து நின்ற ரோஷினியை பார்த்த கணேஷன் புன்னகையுடன் "இப்போ தான் எழுந்தையா கண்ணம்மா "அவள் தலையை பாசத்துடன் வருடிவிட்டுக் கொண்டே கேட்க

"எஸ் டாடி " என்று சொல்லிவிட்டு செல்வியை பார்த்தவள் " மா நா எப்போ வந்தேன் இப்போ வரைக்கும் நீங்க எனக்கு காபி எடுத்துட்டு வரல "என்று காட்டமாகவே கேட்க

"அதுதானே என் செல்ல பேத்தி எழுந்து வந்தவுடனே அவளுக்கு காபி கொண்டு வரணும்னு உனக்கு அறிவில்ல " என்க
மாமியாரை எதிர்த்துப் பேசாதவள் ரோஷினிக்கு காபி கலக்க சென்றாள்.

ரோஷினியை பார்த்து "உன் முகத்தை பார்த்ததுக்கு அப்புறம் தான் டா நாளே நல்ல இருக்கும் "என்க

கணேஷன் பாசத்துடன் ரோஷினியுடன் பேசுவதை ஏக்கத்துடன் சத்யப்ரியா பார்த்துக் கொண்டு இருக்க

அவளை பார்த்த மரகதம் "இன்னும் எதுக்கு இங்கையே நின்னுகிட்டு இருக்க போ காலேஜ் போறேன்னு சொல்லிக்கிட்டு சுத்த போவையே போ "என்க

எப்போதும் போல அமைதியாக உள்ளே சென்று செல்வி அவளுக்கு வைத்து இருந்தா டிபன்பாக்ஸ் எடுத்துக் கொண்டு செல்வியிடம் மட்டும் சொல்லிக் கொண்டு வெளியே செல்ல

ரோஷினியை பார்த்த மரகதம் "நீ போ கண்ணு பாட்டி உனக்கு காபி ரூம்க்கு எடுத்துட்டு வந்து தரேன் "என்று வாஞ்சையாக சொல்ல
அவளுக்கும் சென்று விட்டாள்.
வெளியே சென்ற சத்யபிரியா முகத்தில் புன்னகையயை கொண்டு வந்தாள்.

இப்போது என்று இல்லை சத்யபிரியா பிறந்ததில் இருந்தே கணேஷனிடமும் மரகதமிடமும் இப்படி திட்டு வாங்கிக் கொண்டு தான் இருக்கிறாள்.

ரோஷினி பிறந்தவுடன் கஷ்டத்தில் இருந்தா கணேஷன் புது துணிக்கடை ஒன்றை வைத்தார்.

எப்போதும் ஜாதகம் மீது அதிக நம்பிக்கை கொண்ட மரகதம் ரோஷினி வந்த நேரம் தான் எல்லாம் என்று கணேஷனிடன் சொல்லிக் கொண்டே இருக்க அதுவே கணேஷன் மனதிலும் பதிந்து விட்டது.

ஆரம்பத்தில் ரோஷினியை கொண்டாடுவதை செல்வி விரும்பவே செய்தார் அவருக்கு சத்யபிரியா பிறக்கும் வரை.

சத்யபிரியா பிறந்த அன்று எப்போதும் போல நைட் துணிகடைக்கு லோட் வந்திருக்க அதற்கு கணேஷன் தான் செல்வதாக இருந்தது.

செல்விக்கு வலி எடுக்கவே வேலையட்களிடம் லோட் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு அவர் செல்வியை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் சென்றார்.

சத்யபிரியா பிறந்த அதே நேரத்தில் துணிக் கடையில் கரண்ட் சர்குலேஷன் ஓவர் ஆகி வெடித்து கடை தீ பிடித்தது.

செல்வியை நார்மல் வார்டில் மாற்றி விட உள்ளே சென்று பார்க்க போன கணேஷனிடம் கடை எரிந்து போனதை தெரிவிக்க
அதை கேட்டு அதிர்த்து போனவர் குழந்தையை தூக்க கை நிட்டியவர் அப்படியே கையை மடக்கி அங்கு இருந்தா சேரில் மனமுடைந்து அமர அவரை பார்த்த மரகதம் பதறி போய் "என்னப்பா ஆச்சு "என்க

நடந்ததை மரகததிடம் சொல்ல
"இவ பிறந்த நேரமே சரி இல்ல தரித்திரம் பிறக்கும் போதே தொழிலை அழிச்சுட்டு பிறந்து இருக்கு "என்று சின்ன சிறு பிஞ்சு என்று கூட பார்க்காமல் வார்த்தையை கக்க

இதை கேட்ட செல்விக்கு பிறந்த குழந்தையை பார்த்து இவர்களுக்கு எல்லாம் எப்படி தான் மனது வந்ததோ என்று கண்ணீர் விட
"பீடயை பெத்து வைச்சுட்டு கண்ணீர் வேற விடரியா வீடு வெளங்கிடும் "என்று வெறுப்புடன் சொல்ல

இதை கேட்ட கணேஷன் மரகதத்தை ஒன்று சொல்லாமல் அமைதியாக இருக்க
இவர்கள் பேசுவது எதுவும் புரியாமல் நின்றுக் கொண்டு இருந்தா ஐந்து வயதான ரோஷினி "பாப்பா " என்று ஆசையாக பார்க்க வர

அவளை தடுத்த மரகதம் "அவ பக்கத்துல கூட போகாத கண்ணு அப்புறம் உனக்கு ஏதாவது ஆகிரும் "என்க

அதை கேட்ட செல்வி உள்ளுக்குள் மறித்தே போனார்

மரகதம் பேசிக் கொண்டு இருந்ததை கேட்ட கணேஷன்க்கு அப்படி தான் இருக்குமோ என்று தோன்ற அதுவே மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

குழந்தை முகத்தை கூட பார்க்காமல் வெறுப்புடன் செல்ல
அதை பார்த்த செல்வி தவிப்புடம் இருக்க

"இதை வீட்டுக்கு கொண்டு வந்துராத "என்று ரோஷினியை அழைத்துக் கொண்டு சென்றார்.

இதை பார்த்த செல்வி வேதனையிடன் அந்த பிஞ்சை கையில் ஏந்தி பார்த்தார்.

ரோஜா பூ போல சிரித்துக் கொண்டு இருந்ததை பார்த்து "உன்னை அப்படி சொல்ல அவங்களுக்கு எப்படி தான் மனசு வந்துச்சோ "என்று துயரத்துடன் சொல்லி மலர்ச்சென்டுக்கு வலிக்காமல் அணைத்துக் கொண்டார்.

எப்போதும் கடைக்கு செல்லும் கணேஷன் இன்று அந்த குழந்தையினால் தான் கடை செல்ல வில்லை இல்லையென்றால் கடையில் தீ பற்றியவுடன் இவரும் கருகி போயிருப்பார்.

இவரின் உயிரை காப்பாற்றியதே அந்த பிஞ்சு தான் என்று புரிந்துக் கொள்ளாமல் அமில வார்த்தைகளை கொட்டிவிட்டு சென்றனர்.

இந்த உலகில் எப்போதும் உயிரை விட பொருளுக்கு தான் மதிப்பு அதிகம் போல

செல்விக்கு சுகபிரசவம் என்பதால் அன்றே வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல

கணேஷன் வராததால் என்ன செய்வது என்று யோசித்தவர் பின் தன் பிறந்த வீட்டுக்கு அழைக்க செல்வியின் தாயும் அண்ணனும் தான் அவரை அழைத்து வந்தனர்.

குழந்தையுடன் வந்தவரை மரகதம் உள்ளே விடாமல் சண்டை போட வேறு வழி இல்லாமல் பஞ்சாயத்து கூடியது.

இந்த அவமானத்திற்கும் சத்யபிரியா தான் காரணம் என்று எல்லார் முன்னாடியும் மரகதம் அந்த மலர் மொட்டை கரிச்சு கொட்ட அதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அறிவுரை கூற
குடும்ப விஷயம் வெளியே செல்வது பிடிக்காமல் கணேஷன் செல்வியையும் குழந்தையையும் உள்ளே வர சொன்னார்.

செல்வியின் பிறந்த குடும்பம் வசதி இல்லாமல் இருந்தது அதுவும் இல்லாமல் அவளின் அண்ணிக்கு செல்வி அங்கு வருவது பிடிக்காம இருக்க வேறு வழி இல்லாமல் செல்வியின் அம்மாவும்
அண்ணனும் அவளை விட்டு சென்றனர்.

அன்று இரவே சத்யப்ரியா பிறந்த நேரத்தை குறித்துக் கொண்டு ஜோசியரிடம் செல்ல
நேரத்தை கணக்கிட்டவர் "இந்த பொண்ணு பிறந்த நேரம் நல்ல தான் இருக்கு ஆனா இந்த பொண்ணோட அப்பா கொஞ்சம் கஷ்டப்படுவார் ஆனால் எதிர்க்காலத்துல இந்த பொண்ணுனால அவங்க அப்பா பெருமை படுவார் "என்றார்.

இதை கேட்ட மரகதம் அந்த பொண்ணோட அப்பா கஷ்டப்படுவார் அப்படிங்கற வார்த்தையை மட்டும் கணேஷனிடம் சொல்ல "அந்த குழந்தையின் முகத்தை பார்க்காமலே அவருக்கு வெறுப்பு வந்துவிட அதன் முகத்தை பார்க்க விரும்பவே இல்லை

அன்றில் இருந்து சத்யபிரியா மரகதத்திடம் வசவு சொல்லு வாங்கிக் கொண்டே இருப்பாள் சிறு வயதில் மரகதம் எதற்காக திட்டுகிறார் என்று தெரியாமல் அழுதுக் கொண்டே இருந்தவள் பின் நாட்கள் செல்ல புரிந்து ஒதுங்கி செல்ல பழகிக் கொண்டாள்.

எப்போதும் ரோஷினிக்கு அனைத்து கிடைத்து விடும் ஆனால் சத்யபிரியாவுக்கு என்று எதுவும் கிடைக்காது.

சிறுவயதில் இருந்தே கிடைத்ததை வைத்து சந்தோசப்பட்டுக் கொண்டாள்.

செல்வி கெஞ்சிக் கேட்டதால் சத்யபிரியாவை கவர்மென்ட் ஸ்கூலில் சேர்த்து விட்டார் கணேஷன்.

ரோஷினி அந்த ஊரில் உள்ள பெரிய ஸ்கூலில் படிக்க இவள் கவர்மென்ட் ஸ்கூல் சென்றாள்.

அதை நினைத்து ஒரு நாளும் சத்யபிரியா வருத்தப்பட்டது கிடையாது எங்கு இருந்தாலும் ஒரே படிப்பு தானே என்று நன்றாகவே படித்தாள்.

வகுப்பில் முதல் மாணவியாக வரும் சத்யப்ரியாவை திட்டிவிட்டு சுமாராக படிக்கும் ரோஷினியை புகழ்ந்து தள்ளுவார் மரகதம்.

சத்யபிரியாவுக்கு இது பழகி விட்டாதல் எதையும் கண்டுக் கொள்ளாமல் தன்னை எப்போதும் புன்னகையுடன் வைத்துக் கொள்வாள் வெளியில்.

மரகதமும் கணேஷனும் அதிகம் செல்லம் கொடுக்க அதே ரோஷினியை பிடிவாதம் ஆகியது.

ரோஷினி எப்போதும் சத்யபிரியாவை பாசமாக பார்க்க மாட்டாள் மரகதம் சொல்லின் படி அவளை கண்டுக் கொள்ளாமல் இருப்பாள்.

சத்யபிரியாவுக்கு தான் ரோஷினியிடம் சிரித்து பேசி விளையாட வேண்டும் சென்று ஆசை இருக்கும்
இவள் ரோஷினியின் அருகில் சென்றாலே மரகதம் இவளை கண்டப்படி திட்ட இவள் ஒதுங்கிக் கொண்டாள்.

சத்யப்ரியவை நடத்துவதை பார்க்கும் செல்விக்கு ஆற்றமையாக இருக்கும் ஆனாள் வெளியில் சொல்ல முடியாது மரகதம் வார்த்தையாலே குதறி எடுத்து விடுவார் எனவே நடக்கும் அனைத்தையும் வேதனையுடன் பார்த்துக் கொண்டு இருப்பார்.

ரோஷினி எப்போதும் எதையாவது செய்து விட்டு சத்யப்ரியாவின் மேல் பழியை தூக்கி போட்டு விடுவாள் அதற்காக நிறைய முறை அடி திட்டு வாங்கி இருக்கிறாள்.

இன்று வரை ரோஷினி அப்படி தான் செய்துக் கொண்டு இருக்கிறாள்.

வீட்டில் நடக்கும் எதையும் சத்யப்ரியா முகத்தில் காட்டிக் கொள்ள மாட்டாள் அவளுக்கென்று தனி படையே இருக்கும் ஸ்கூலில் அது தான் அவளின் உலகம்.

அவளின் நெருங்கிய தோழி நந்தினி அவளுக்கு மட்டும் தான் சத்யப்ரியாவை பற்றி அனைத்து தெரிந்து அவளுக்கு பக்க துணையாக இருப்பவள்.

சத்யபிரியா டுவெல்த் எக்ஸாமில் அதிக மார்க் எடுத்து ஸ்கலர்ஷிப் மூலமாக இன்ஜினியரிங் படித்துக் கொண்டு இருக்கிறாள் நந்தினியும் சத்யபிரியா எடுத்த பிரிவையே எடுத்து அவளுடன் படிக்கிறாள்.

சத்யப்ரியா அதிக மார்க் எடுத்ததில் ரோஷினிக்கு கோவம் அதை மரகதம் மூலம் தீர்த்துக் கொண்டாள்.

வீட்டில் இருந்து வெளியே வந்த சத்யப்ரியா தெருவில் அவளை கடந்து போனவர்களை பார்த்து சிரித்து விட்டு பஸ்காக காத்துக் கொண்டு இருந்தாள்.


நிமிர்வாள்…




என்னோட அடுத்த கதையோட வந்துட்டேன். எல்லாரும் anti hero கதை கேட்டதால எனக்கு தெரிஞ்ச வகைல எழுதறேன் எனக்கு ஆக்ஷன் அவ்ளவா வராது இருந்தாலும் முயற்சி பண்றேன். கண்டிப்பா ஆரம்பத்துல கொஞ்சம் மனதை கஷ்டப்படுத்தும் ஆனா முடிவுல சந்தோசத்தை கொடுக்கும். இந்த கதைக்கு உங்க ஆதரவ தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்


நன்றி ???….
 

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 2

"தாய் முகம் பார்த்த நாள் தாவணி போட்ட நாள்
மறக்குமா மறக்குமா நெஞ்சே
மழைத்துளி ரசித்ததும் பனித்துளி ருசித்ததும்
கரையுமா கரையுமா கண்ணில்
ஹைதர் கால வீரந்தான் குதிரை ஏறி வருவானோ
காவல் தாண்டி என்னை தான் கடத்திக்கொண்டு போவானோ
கண்ணுக்குள் முதல் நெஞ்சுக்குள் வரை ஆசை சேமிக்கிறேன்
யாரவனோ யாரவனோ"



சத்யப்ரியா காலேஜ் வந்தவள் முதலில் அவளுடைய கேங்கை தான் தேடினாள்.

சத்யப்ரியா காலேஜ் வந்துவிட்டால் அவள் உலகம் வேறு இந்த உலகத்தில் அவளை சுற்றி எப்போதும் மகிழ்ச்சியும் கேலியும் வைத்துக் கொள்வாள்.

வெளியே யாராவது சத்யப்ரியாவை பார்த்தால் "இந்த பொண்ணு பேச மாட்டாளா "என்ற கேள்வி வரும்
அதுவே அவள் காலேஜில் இருந்தால் "இந்த பொண்ணு எப்போ தான் வாய மூடும் இவளுக்கு வாயே வலிக்காத "என்று கேட்கும் அளவுக்கு இருப்பாள்.

கிளாஸ்டாப்ர் இவள் தான் ஆனால் பார்த்தால் அப்படி தெரியாது.

சத்யப்ரியா நண்பர்களை தேடிக் கொண்டே வந்தவள் முன்னே வந்தவரை பார்க்காமல் அவர் மீது இடிக்க
சுதரித்தவள் "சாரி தெரியாம இடிச்சுட்டேன் நீங்க வந்தத பார்க்கல "என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டே யார் மீது இடித்தோம் என்று பார்க்க

அங்கு அனல் பார்வையில் இவளை எரித்துக் கொண்டு இருந்தான் மகிழன்.

அவனை பார்த்தவுடன் ஜர்க் ஆனவள் "சார்ர்ர் நா தெரியாம "என்று திக்கிக் கொண்டே சொல்ல

அவள் சொல்ல வருவதை கேட்காதவன் "அறிவில்ல உனக்கு எப்போ பாத்தாலும் யார் மேலயாவது வந்து விழுகறதே உனக்கு வேலைய போச்சு உன்ன மாதிரி பொண்ணுங்க இருக்கறதால தான் எல்லா பொண்ணுகளுக்கும் கெட்ட பேரு கிளாஸ்டாப்ர்ஆ இருந்தா மட்டும் போதாது கொஞ்சவாமது மேனஸ் தெரியணும் "என்று கத்திவிட்டு செல்ல

காலையிலயேவா என்று இருந்தது சத்யப்ரியாவுக்கு
அவன் திட்டியது வலித்தாலும் அவளின் நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல

இவளுக்காக காத்துக் கொண்டு இருந்தனர் நால்வர்
நந்தினி பிரசன்னா நவீன் சரண்.

இவர்கள் ஐவரும் எப்போதும் ஒற்றுமையாக தான் இருப்பார்கள் காலேஜ் ஸ்டுடெண்ட்ஸ் எல்லாரும் இவர்களை பஞ்சபூதம் என்று தான் அழைப்பர்கள்.

ஐவரும் ஒன்று சேர்ந்துதால் அங்கு சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது.
அவர்களை நோக்கி வந்தவள் "எரும மாடுங்களா இங்க தான் இருக்கிங்களா "என்று கடுப்புடன் கேட்க

"அத இன்னொரு எரும மாடு கேட்குது பாரேன் அடடா ஆச்சிரியக் குறி "என்று சரண் அவள் காலை வர

"அடடே இதுக்கு பேர் ஜோக்ஆ நாளைக்கு நியாபகப் படுத்து மறக்காம சிரிக்கிறேன் "என்று சத்ய அவளை கலாய்க்க

"இந்த அசிங்கம் உனக்கு தேவையா "என்று நந்தினி சரணை பார்த்து சிரித்தாள்.

"ஏன் டி வரதுக்கு இவ்ளோ நேரமா " பிரசன்னா சத்யவை கேட்க

அவனை முறைந்தவள் "அத பத்தி
மட்டும் கேட்காத நா செம காண்டாகியிருவேன் "என்க

"அப்போ கண்டிப்பா நா அத கேட்பேன் "நவீன் சொல்ல

"வாடி உனக்கு இன்னைக்கு டெஸ்ட் ல எதுவும் காட்ட மாட்டேன்னு "சத்யா சொன்னது
கப்பென்று வாயை மூடிக் கொண்டான்.

"ரொம்ப பண்ணாம என்ன ஆச்சுனு சொல்லுடி "நந்தினி கேட்ட பின்

"நா உங்களை தேடிகிட்டு வரும் போது தெரியாம அந்த சிடுமூஞ்சி வல்லவராயன் மேல மோதிட்டேன் டி அதுக்கு என்னமோ அவன் கற்பு போன மாதிரி அந்த திட்டு திட்டிட்டு போறான் எரும "என்று அவன் மீது இருந்தா கோவத்தை இங்கு கொட்ட

"அது ஏன் டி அந்த சிடுமூஞ்சி உங்கிட்ட மட்டும் எப்போ பார்த்தாலும் வல்லு வல்லுனு விழுது "என நவீன் சந்தேகத்தை கேட்க

"ஒருவேள போன ஜென்மத்துல அந்த ஆளோட பொருளை ஆட்டைய போட்டுட்டியோ "என சரண் சொல்ல

அங்கு இருந்தா கல்லை எடுத்து அவன் மீது போட்டவள் "அந்த ஆளோட பொருள் எனக்கு எதுக்கு டா"என்று முறைக்க

"சரி விடு டா அவர பத்தி தெரிஞ்சுது தானே இதுக்கு எல்லாம் பீல் பண்ணுவியா "என பிரசன்னா அவளை சமாதானம் செய்ய

"நா முடிவு பண்ணிட்டேன் "என சத்யா சொன்னதும்

"என்னனு?"என்று சரண் ரகமாக இழுக்க

"அந்த சிடுமூஞ்சிக்கு நா சாபம் விட போறேன் "என்று சீரியஸாக சொல்ல
அதை கேட்ட அவர்கள்" வேணாம் டி பாவம் டி அந்த மனுஷன் "என்க

"ஒரு தடவ நா முடிவு பண்ணிட்டா அப்புறம் நானே கேட்க மாட்டேன் "என்று தலைவர் டயலாக் அடிக்க

அவளை பாவமாக பார்க்க அதைக் கண்டுக் கொள்ளாதவள் "சத்யாவாகிய நான் அந்த சிடுமூஞ்சு வல்லவராயனுக்கு சாபம் கொடுக்கறேன் அது என்னனா அவனுக்கு கல்யாணம் ஆகி ஆறு மாசத்துக்கு பஸ்ட்நைட் நடக்கவே கூடாது இதுவே என் கட்டளை என் கட்டளையே சாசனம் "என்று வீரமாக சொல்ல

அவளின் சபத்தை கேட்ட நந்தினி "உனக்கு மட்டும் எப்படி டி இப்படி புதுசா வித்யாசமா யோசிக்க தோணுது "என்று சலித்துக் கொள்ள

"அவ்ளோ அறிவு டி "என்க

"இது எல்லாம் ஒரு சாபமா "என்று சரண் கேட்க

"உலகத்துலயே ரொம்ப கஷ்டமான விஷயம் என்ன தெரியுமா? "என்று கேட்க

நவீன் யோசித்துவிட்டு "என்ன? "என்க

"கண்ணு முன்னாடி குலாப்ஜாமுன் வைச்சுகிட்டு சாப்பிட கூடாதுனா எவ்ளோ கஷ்டம் அதே மாதிரி தான் இதுவும் "என்று சிரிக்க

"அடிப்பாவி சரியான வில்லி "என்றான் பிரசன்னா.

சத்யா எதையும் மனதில் வைத்துக் கொண்டு சொல்ல வில்லை
விளையாட்டாக கூறினாள் .

பேசிக் கொண்டு இருந்தவர்கள் நேரமாகி விட்டது என்று கிளாஸ்க்கு சென்றனர்
நந்தினி சத்யாவும் சென்று அமர அவர்களை பார்த்து அருகில் இருந்த ஆர்த்தி சிரிக்க இவர்கள் சிரித்துக் கொண்டே பிரசன்னாவை பார்த்தனர்.

அவன் இவர்களை கண்டுக் கொள்ளாமல் அருகில் இருந்தவனிடன் பேசிக் கொண்டு இருந்தான்.

அதை பார்த்த சத்யா "இவன் திருந்தாத கேஸ் டி "என

"பாவம் ஆர்த்தி இவனை போய் பாக்குறாளே "என்று நந்தினி சொல்ல
சத்யா தலையாட்டினாள்.

கிளாஸ் பெல் அடிக்க மகிழன் உள்ளே வந்தான்.

அவனை பார்த்த சத்ய இவனா…..
என்று நினைத்து அமைதியாக இருந்தாள்.

உள்ளே வந்த மகிழன் அனைவரின் வணக்கத்தையும் தலையசைப்புடன் ஏற்றுக் கொண்டவன் சத்யாவை பார்த்து முறைத்து விட்டு கிளாஸ் எடுக்க தொடங்கினான்.

நடுவில் நந்தினிக்கு சந்தேகம் வர சத்யாவின் கையை சுரண்ட
அவளை பார்த்து "என்னடி "என்க

அவள் மாட்டுவதற்காகவே காத்துக் கிடந்தவன் போல
சத்யா என்ன என்று கேட்டதை பார்த்தவன்

"சத்யப்ரியா "என்று சத்தமாக அழைக்க

"இன்னைக்குமா "என்று நினைத்துக் கொண்டே எழுந்து நிற்க

"நீங்க எல்லாம் படிக்க காலேஜ் வரிங்களா இல்ல அரட்டை அடிக்க வரிங்களா நா இங்க நின்னு பாடம் நடத்திக்கிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு பக்கத்துல பேசிக் கிட்டு இருக்க கிளாஸ்டாப்ர்னு ஓவர்ஆ ஆடாத "என்க

"எப்போதும் போல அவன் பேச்சை தலை குனிந்து கேட்டுக் கொண்டு இருந்தவள் மனதுக்குள் அவனுக்கு ஏகப்பட்ட சாபம் கொடுத்துக் கொண்டு இருந்தவள்

"நா இங்க கத்திகிட்டு இருக்கேன் நீ தெனாவேட்ட நிற்கற "என்று குற்றம் சுமத்திக் கொண்டே சென்றவன்

"கெட் அவுட் ஒப் மை கிளாஸ் "என்க
இதை தான் சொல்வான் என்று தெரிந்தவள் அவனை எதிர்த்து பேசாமல் வெளியே செல்ல
நந்தினிக்கு கவலையாக இருந்தது உடனே எழுந்தவள்

"சார் நானும் சத்யப்ரியா கூட பேசிக் கிட்டு இருந்தேன் சோ நானும் வெளிய போறேன் "என்று வெளியே செல்ல
இருவரையும் வெறுப்பாக பார்த்தான் மகிழன்.

மகிழன் பேருக்கு ஏத்தது போல ராஜா மாதிரி தான் இருப்பான் இன்ஜினியரிங் முடித்தவனுக்கு லெக்சர் ஆக வேண்டும் என்று தோன்ற எம்இ முடித்துவிட்டு இந்த வேலைக்கு வந்து விட்டான்.

அவன் சொத்தே இன்னும் ஐந்து தலைமுறை அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு இருக்க இவன் விருப்பப் பட்டு லெச்சர் வேலைக்கு வர அவனின் பெற்றோர்க்கும் அவனின் ஆசையே பெரிதாக தெரிய அவன் வழியிலயே விட்டுவிட்டனர்.

காலேஜில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் இவன் தான் ட்ரீம் பாய்.

இவனிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது இவனை பொறுத்த வரை பஸ்ட் இம்ப்ரெஷன் இஸ் பெஸ்ட் இம்ப்ரெஷன் என்று நம்புபவன்.

இவனை பொறுத்த வரை பெண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
அமைதியாக அதிகம் பேசாமல் ஆண்களிடம் ஒதுங்கியே இருக்க வேண்டும் அது தான் நல்ல பெண்களுக்கு அழகு என்று நினைப்பவன்.

காலேஜ் வந்த புதிதில் சத்யப்ரியாவின் பேச்சைய்யும் சட்டையும் பார்த்தவன் அவளை ரவுடி என்று முகம் சுழிக்க பின் பசங்க கூட பேசி சுற்றி திரிவதை பார்த்து தப்பான பெண் என்றே நினைத்து விட்டான்.

அவன் ஒன்று எண்ணி விட்டால் அவ்வளவு சீக்கரம் அதை மாற்றிக் கொள்ளமாட்டான்.

சத்யப்ரியாவை பார்க்கும் போது எல்லாம் அவள் செய்யாத தப்பை அவள் மீது சுமத்தி திட்டிக் கொண்டே இருப்பான்.

அவன் கிளாஸ் டைமில் அவள் எப்போதும் வெளியே தான் இருப்பாள் ஏதாவது ஒரு காரணம் கண்டுப்பிடித்து வெளியே அனுப்பிவிடுவான்.

அவனுக்கு எரிச்சல் தரும் விஷயம் அவள் என்ன செய்தாலும் நன்றாக படிக்கும் பெண் என்று சொல்லி விட அதை சொல்லியே அவளை குத்தி
காட்டிக் கொண்டே இருப்பான்.

ஆரம்பத்தில் இவன் திட்டும் போது காரணம் தெரியாமல் இவன் வார்த்தைகளால் காயப்பட்டவள் பின் பழகி போனது.

இவன் திட்டும் போது அமைதியாக இருப்பவள் இவன் போன பின் அவள் நண்பர்களிடம் இவனை திட்டி சாபம் கொடுத்துக் கொண்டு இருப்பாள்.

ஆனாலும் அவன் மீது அவளுக்கு மரியாதை இருக்கிறது அவளுக்கே தெரியாமல்.

வெளியே வந்த சத்யா அவள் பின்னால் நந்தினி வருவதை பார்த்து நீயும் வந்துட்டியா என்ற பார்வை பார்க்க

"இது எப்போவும் நடக்கறது தான டி "என்றாள் சிரிப்புடன்.

"எனக்கு ஒன்னு மட்டும் தான் டி புரியவே மாட்டேங்குது இவரு பாடத்துல நா நல்ல தான் மார்க் வாங்குறேன் அப்புறம் ஏன் டி இவருக்கு என்ன பிடிக்க மாட்டேங்குது "என்று
யோசனையுடன் சத்யா கேட்க

"உன்னை ஏன் அவருக்கு பிடிக்கணும் அவரு என்ன உன்ன கல்யாணமா பண்ணிக்க போறாராரு "என்க

அவளின் வாயில் அடித்தவள் வாய கழுவு அப்படி மட்டும் நடந்துரவே கூடாது என் வாழ்க்கை என்ன ஆகறது எனக்கு போற வீட்லயாவது சந்தோஷம் கிடைக்கணும் என்று சொல்ல

அதை கேட்ட நந்தினி அவளை அணைத்துக் கொண்டு கண்டிப்பா "உனக்கு நல்ல வாழ்க்கை அமையும் டி "என்று உணர்ச்சிவசமாக பேச

"வாழ்க்கை அப்புறம் பாத்துக்கலாம் முதல வாழைக்காய் பஜ்ஜி வாங்கி கொடு "என்க

அதை கேட்ட நந்தினி "உன்னால
மட்டும் எப்படி தான் இப்படி இருக்க முடியுதோ "என்க

"நாங்க எல்லாம் ஸ்பெஷல் பீஸ் டி "என்று அவளை பெருமை படுத்திக் கொள்ள

தலையில் அடித்துக் கொண்ட நந்தினி அவளை கேன்டீன்க்கு அழைத்து சென்றாள்.

இவர்கள் சாப்பிட்டுக்குக் கொண்டு இருக்க அவர்களை தேடி வந்தவர்கள் இருவரையும் பார்த்து "நா அப்போவே சொன்னேன்ல இதுக இதை தான் பண்ணிக்கிட்டு இருக்கும்னு "என்று சரண் சொல்ல

"பாருடா நமக்கு பங்கு வைக்காம தின்னுதுங்க "என்று நவீன் அவர்கள் சாப்பிடுவதை பார்த்து சொல்ல

"சும்மா இருங்கடா புள்ளைங்கள கண்ணு வைக்காதிங்க "என பிரசன்னா சொல்லிவிட்டு அவர்கள் முன் அமர்ந்தான்.

அவனை நிமிர்ந்து பார்த்த சத்யா "நோட்ஸ் எல்லாம் எடுத்து வைச்சிட்டியா டா "என்று சாப்பிட்டுக் கொண்டே கேட்க

"அதெல்லாம் எடுத்தாச்சு கொஞ்சம் பிளேடை கொஞ்சம் இந்த பக்கம் நாகுத்து "என்று தட்டின் மேல் நவீன் கை வைக்க

"நீ போய் வாங்கி சாப்பிடு டா "என்க

அதை கேட்ட அவன் நெஞ்சில் கை வைத்து "நாம அப்படியா பழகி இருக்கோம் நம்ம நட்பு அப்படி பட்டதா அய்யகோ "என்று சிவாஜி கணேஷன் போல் நடிக்க

அதை பார்த்த நந்தினி "உங்க கடைய சாத்தி ரொம்ப நேரம் ஆச்சு "என்க

"அவமானம் வெட்கம் "என்று நம்பியார் போல் கையசைக்க

அதை பார்த்த சரண் "அதுக தட்டை காலி பண்ணி ரொம்ப நேரம் ஆச்சு டா இன்னும் எதுக்கு நடிச்சுகிட்டு இருக்க "என்க

அவன் சொன்ன பின் தட்டை பார்க்க
அது கழுவி வைத்த மாதிரி இருக்க
நிமிர்ந்து சத்யாவை பாவமாக பார்க்க அவனுக்கென்று மறைத்து வைத்து இருந்த சமோசாவை காட்ட பல்லை காட்டி வாங்கிக் கொண்டவன் நிமிடத்தில் காலி செய்தான்.

இவர்கள் பேசிக் கொண்டு இருக்க அந்த பக்கமாக வந்த மகிழன் இவர்கள் ஒன்றாக இருப்பதை பார்த்து "இதெல்லாம் எப்போ தான் உருப்பட போகுதோ இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு எவன் அழுக போறானோ என்று பரிதாபப்பட்டான் அது அவன் தான் என்று தெரியாமல்.

நிமிர்வாள்...
 
Last edited:

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் -3

"வெளியில் வந்தா சந்தோஷம் வீட்டுக்குள்ளே சந்தேகம்..
எங்க பாடு பெரும்பாடு…
மேகம் தாண்டி போகலாம்.. வானம் தாண்ட முடியுமா
தெரியும் எங்கள் எல்லைக்கோடு…
கண்டாங்கி கண்டாங்கி salwarஆகி போனாலும்..
தென்காசி தென்காசியில் தமிழ் பண்பு மாறாது
sticker உலகம் தோன்றியபின்னும் குங்குமம் இருக்கு
ஐஸ்வர்யா ராய் அழகை வாங்கு…
ஜான்சி ராணி வீரம் வாங்கு..
சானியா மிர்சா இளமை வாங்கு
மூன்றும் சேர்த்து உலகை வாங்கு…"



அடுத்து அடுத்து கிளாஸ் நடக்க மும்முரமாக நோட்ஸ் எடுத்துக் கொண்டு இருந்தனர்.

கிளாஸ் முடிந்தது வீட்டுக்கு செல்ல புறப்பட பிரசன்னா கிளம்புவதையே ஆர்த்தி பார்த்துக் கொண்டு இருக்க
அவனோ அப்படி ஒருவள் இருக்கிறாள் என்று கூட வெளியே சென்றான்.

அவனை பார்த்து எப்போதும் இது நடப்பது தானே என்று மனதை தேற்றிக் கொண்டு கிளம்ப
போகும் ஆர்த்தியை பாவமாக பார்த்தால் சத்யா
"இந்த பிரசன்னா கொஞ்சம் திரும்பி இவ பார்த்துட்டு போன தான் என்னவாம் பாவம் இவளும் அவனை ரெண்டு வருஷமா பார்த்துகிட்டே இருக்காள் இவன் இவளை கண்டுக்க கூட மாட்டேங்கறான்"என்று ஆர்த்திகாக வருத்தப்பட

"ரொம்ப பீல் பண்ணாத அவனுக்கு பிடிச்சிருந்த அவனும் பார்ப்பான் "என்று சரண் சொல்ல

இவன் சொல்வது சரிதான் என்று நினைத்துக் கொண்டு கிளம்பினாள்.

நந்தினி சத்யாகூட அவள் வீடு தெரு வரைக்கு வந்து விட்டு செல்ல
அவளை பார்த்து சிரித்துவிட்டு நந்தினியை கிளம்ப சொன்னாள்.

வீட்டை நோக்கி நடந்துக் கொண்டு இருந்தா சத்யா வழியில் ஒரு அப்பா தன் பெண்ணை செல்லம் கொஞ்சுவதை ஏக்கமாக பார்த்து விட்டு பின் பெருமூச்சு விட்டுவிட்டு வீட்டுக்கு சென்றாள்.

வாசலில் அமர்ந்து இருந்த மரகதம் இவளை பார்த்தவுடன் "வந்துட்ட மினிக்கி ஊர் சுத்திகிட்டு "என்று கடவாயை தோளில் இடித்துக் கொண்டு சொல்ல

அவள் அவரின் பேச்சை கேட்டுக் கொண்டு அமைதியாக செல்ல
அவர் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்.

உள்ளே சென்று முகம் கழுவிக் கொண்டு வந்தவள் பின் செல்விக்கு நைட் சமையல் செய்ய உதவி செய்து கொண்டு இருந்தாள்.

இரவு எட்டு மணிக்கு ரோஷினி உள்ளே வர அவளை பார்த்து மரகதம் "என்ன டா ரொம்ப களைப்பா இருக்க "என்று கேட்டுவிட்டு

செல்வியை ஜூஸ் எடுத்துக் கொண்டு வர சொல்ல
ரோஷினியையும் அவரின் மாமியாரையும் மனதுக்குள் திட்டிக் கொண்டு ஜூஸ் கொடுத்துவிட்டு வந்தார்.

சமையல் முடித்து எடுத்து வைக்க சிறிது நேரத்தில் கணேஷன் வந்து விட

ரோஷினி மரகத்தை பார்த்து கண்ணசைக்க அவரும் அவளிடம் சைகை செய்து விட்டு
"ப்பா இது என்ன வீட்ட இல்ல சத்திரமா "என்று அவரின் புலம்பலை தொடங்க

களைப்புடன் வந்தவர் செல்வி கொடுத்ததை வாங்காமல் "என்னமா சொல்றிங்க "என்க

"எல்லாம் இந்த வீட்ல ஒரு சனியன் இருக்கு பாரு அத சொல்றேன் எல்லாம் இவ குடுக்கற இடம் "என்று செல்வியை பார்த்து முறைத்து விட்டு "அந்த சிறுக்கி ஊர சுத்திட்டு ராத்திரி எட்டு மணிக்கு தான் வர இப்படி இருந்த அக்கம் பக்கத்துல என்ன நினைப்பாங்க "என்று வாய் கூசாமல் பொய் சொல்ல

அதுவரை கேட்டுக் கொண்டு இருந்த சத்யாவுக்கும் செல்விக்கும் அதிர்ச்சியாக இருந்தது "ரோஷினி லேட்டாக வந்ததை மறைக்க ஒன்றும் செய்யாத சத்யா மீது பழிப் போட்டனர்.

மரகதம் சொல்லும் போதே கோவம் வந்தது கணேஷனுக்கு அதுக்கு அக்கம் பக்கம் என்ற வார்த்தையை கேட்டு மானம் போய்விடுமோ என்று
"சே வீட்டுக்கு வந்த கொஞ்சமாவது நிம்மதி இருக்க இது எப்போ பொறந்து தொலைச்சிதோ அப்போ இருந்து இந்த வீட்ல நல்லாத ஏதாவது நடக்குதா "என்று கத்தியவர்

செல்வியை பார்த்து "ஒழுங்கா இருக்க முடியும்னா மட்டும் இருக்க சொல்லு அப்படி இருக்க முடியாதுனா எங்கையாவது போக சொல்லிரு இதுனால எனக்கு தான் அவமானம் எப்போ யார கூட்டிகிட்டு ஓடி போகுமோ " என்று விஷத்தை கக்க

சத்யா அவரின் வார்த்தையை கேட்டு உயிருடன் மறித்து போனது போல இருந்தது.

செல்வி அவசரத்துடன் "இல்லங்க ரோஷினி தான் லேட்டா வந்த சத்யா எதுவும் பண்ணல "என்று கூற

உடனே மரகதம் "பாத்தியா பா உன் பொண்டாட்டி நா பொய் சொல்றேனு சொல்ற இது எனக்கு தேவையா என் புருஷன் போன அப்போவே நானும் போயிருக்க கூடாத இந்த சிறுக்கி எல்லாம் என்மேல பல்ல போட்டு பேசறாளே "என்று ஒப்பாரி வைத்தவர் பின் மூக்கை துடைத்துக் கொண்டு "ஏன்யா உன் பொண்டாட்டி நா இங்க இருக்கறது புடிக்கலயா அதுனால தான் இப்படி அந்த சனியனுக்கு வக்காலத்து வாங்குறால நா போன்றேன் அப்பு செத்து போறேன் "என்று நாடகத்தை போட

மரகதம் அழுக தொடங்கும் போதே செல்வி மீது கோவமாக இருந்தவர் அவர் செத்து போறேன் என்று சொல்ல

பளார் என்று செல்வின் கன்னம் சிவக்கும் அளவுக்கு அடித்தவர் "எங்க அம்மாவையே எதிர்த்து பேசறிய அம்மாக்கு அடங்கி போறதா இருந்த இரு இல்லனா இப்போவே வீட்ட விட்டு நீயும் இதுக்குட போயிரு "என்று கோவமாக பேசிவிட்டு போக
மரகதமும் ரோஷினியும் சிரித்துவிட்டு போக

சத்யா செல்வியின் அருகில் அமர்ந்து "அம்மா எனக்காக பேசி ஏன் அடிவாங்கறீங்க " என்று அவரின் சிவந்து போன கன்னத்தை தொட
அவளின் கையை பிடித்தவர் "எப்படி அநியாயமா பொய் சொல்றாங்க "என்றவர்

சத்யாவை பார்த்து "இதுக்கு நீ எனக்கு பொறக்கமா வேற யாருக்காவது பொறந்து இருக்கலாம் சந்தோசமா இருந்திருப்ப இப்போ இங்க எவ்ளோ கஷ்ட படற "என்று கண்ணீருடன் கேட்ட

"அம்மா "என்று அவரை அணைத்துக் கொண்டு அழுதாள்.
அங்கே வந்த மரகதம் "சீக்கரம் வந்த சாப்பாட போடு உனக்காக நாங்க பட்டினியா இருக்கணுமா"என்று செல்வியை இளக்கராமாக கேட்க

செல்வி கண்ணை துடைத்துக் கொண்டு உணவு பரிமாற மூவரும் சாப்பிட்டு சென்றவர்கள் இவர்களின் பசியை கண்டுக் கொள்ள வில்லை.

இவர்களுக்கும் சாப்பிட தோணாததால் அப்படியே சென்று படுத்தனர்.

கட்டிலில் படுத்த சத்யப்ரியாவுக்கு அழுகையை அடக்க முடியவில்லை என்ன தான் அவளை குறும்பு பெண்ணாக காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் அப்பாவின் பாசத்துக்காக மிகவும் ஏங்கி போயிருந்தாள்.

அப்பாவுக்கு பிடிக்காத மாதிரி ஏன் பிறந்தேன் என்று சில சமயம் அவளே நினைத்து பார்த்தது உண்டு.

அழுதுக் கொண்டு இருந்தவள் எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாது.

காலையில் எப்போதும் போல அவளுக்கு முழிப்பு வந்து விட கோவில் கோபுரத்தை பார்த்து வேண்டியவள் காலேஜ்க்கு ரெடி ஆகி கீழே வர செல்வி எப்போதும் போல அவள் வேலை செய்து கொண்டு இருக்க மரகதம் வெளியில் யாருடனோ பேசிக் கொண்டு இருந்தார்.

உள்ளே வந்த சத்யா வேலை செய்ய அவள் முகத்தை பார்த்த செல்விக்கு புரிந்து போனது இரவெல்லாம் அழுது இருக்கிறாள் என்று.

அவளை பார்த்த அவருக்கு வேதனையாக இருந்தது இரண்டும் அவர் பெத்த பிள்ளைகள் தான் ஆனாள் ஒன்று மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை.

கணேஷன் கண்ணில் படாமல் நேரமாக பஸ் நிற்கும் இடத்திற்கு வந்து காலேஜ் சென்றாள்.

எப்போதும் காலேஜ்குள் வந்தால் வீட்டில் நடந்ததை மறந்து மகிழ்ச்சியாக இருப்பவள் இன்று ஏனோ மனம் சோர்த்து போய் இருக்க நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றாள்.

எப்போதும் ஆர்ப்பாட்டமாக வருபவள் இன்று சோர்த்து வருவதை பார்த்தவுடனே தெரிந்துக் கொண்டார்கள் அவள் மனம் காயப்பட்டு இருக்கிறது என்று.

அமைதியாக நின்ற சத்யாவின் மேல் நந்தினி கை வைக்கவும் ஆறுதல் தேடி அவளை அணைத்துக் கொண்டு அழுக
எப்போதும் எது வந்தாலும் சமாளித்துக் கொண்டு சிரிப்பவள் இன்று அழுகவும் பதறி போய் "என்ன ஆச்சு டி ஏன் அழுகுற "என்க

அவளோ எதுவும் பேசாமல் அழுக சிறிது நேரம் அவளை அழுக விட
அழுகை தேம்பலாக மாறிய பின் பிரசன்னா அவள் தோளை தொட்டு முகம் திருப்பி "என்ன ஆச்சு "என்க

"எப்போவும் போல நடக்கறது தான் "என்க

"எப்போவும் போல நடந்து இருந்த நீ இப்படி அழுக மாட்டியே என்ன ஆச்சுன்னு சொல்லு "என்று சரண் கேட்க

அப்போதும் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருக்க
"எங்க கிட்ட சொல்ற அளவுக்கு நீ பழகுலையா…"என்று வேதனையுடன் நவீன் கேட்க
அவனின் வேதனையை தாங்காதவள் நடந்ததை சொல்லிவள் "ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது இதுவரைக்கும் அப்பாக்கு என்மேல பாசம் தான் இல்லனு நினைச்சுகிட்டு இருந்தேன் ஆனா அவருக்கு என்மேல நம்பிக்கை கூட இல்லடா நா யாருக்குடையாவது போயிருவேனா நா அப்படி பண்ணுவேனா?"என்று கேட்டுக் கொண்டு இருக்க

அவளின் வேதனையை தாங்க முடியாதவர்கள் அவளுக்காக கண்கலங்க

பிரசன்னா அவளை தன் தோளில் சாய்த்து அணைத்துக் கொண்டான்.
"எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது டா எனக்கும் எல்லார் மாதிரியும் அப்பா கூட பேசணும் சிரிக்கணும் எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கணும்னு ஆசையா இருக்கு ஆனா அவருக்கு என் முகத்தை பார்க்க கூட பிடிக்கல டா நா ஏன் டா இப்படி பிறந்தேன் "என்று கேட்டுக் கொண்டே அவள் துக்கத்தை அழுகையில் கரைக்க

சத்யா பேச பேச நந்தினிக்கு அழுகையாக வந்தது அவளின் ஏக்கத்தை நினைத்து.

சத்யாவை சமாதானம் செய்த பிரசன்னா அவள் முகத்தை நிமிர்த்தி அவனை பார்க்க செய்து "நா உனக்கு அப்பா இல்லையா "என்க

அவளோ அவனை கண்ணீருடன் பார்க்க "இவ்ளோ நாள் நா உன்னை என் குழந்தை மாதிரி தான் பாக்கறேன் நீ என்ன அப்பா மாதிரி பார்க்கலயா "என்க

அவனை அணைத்துக் கொண்டு "நீ எனக்கு அப்பா தான் டா "என்க
அவர்களை பார்த்துக் கொண்டு இருந்த மூவருக்கும் கண்ணீர் வந்தது அவர்களின் பந்ததை நினைத்து.

இவர்களை கடந்து போன மகிழன் பிரசன்னாவும் சத்யாவும் அணைத்துக் கொண்டு நிற்பதை பார்த்து "சே இது காலேஜ் தான லவ் பண்றதுனா வேற எங்கையாவது போக வேண்டியது தான இப்படி எல்லார் முன்னாடி எப்படி தான் கூச்சம் இல்லாம நிக்கறாங்களோ "என்று வெறுப்புடன் பார்த்துவிட்டு சென்றான்.

ஆர்த்தியும் தூரத்தில் இருந்து இவர்களை பார்த்துக் கொண்டு இருந்தவள் சந்தோசமாக சிரித்துக் கொண்டாள்.

சத்யாவை சமாதானம் செய்து கிளாஸ்க்கு அழைத்து வர ஆர்த்தி சத்யாவை அணைத்துக் கொண்டாள்.
சத்யா அவளை கேள்வியாக பார்க்க "ஏன் அம்மா கட்டிப்பிடிச்சுக்க கூடாதா "என்க

அவளின் புரிதலில் சிரித்துக் கொண்டு அவளை அணைத்துக் கொண்டாள்.

அதை பார்த்துக் கொண்டு இருந்த நந்தினி "ஆனா சத்யா உனக்கு இவ்ளோ சின்ன வயசுல அம்மா அப்பா இப்போதான் பார்க்கறேன் "என்று கேலி செய்ய

"உனக்கு பொறாமை டி "என்க

"எனக்கு யாரும் கிடைக்க மாட்டேங்கறாங்க "என்று போலி வருத்தத்துடன் சொல்ல

அவள் அருகே வந்த நவீன் "நான் இருக்கேன் உனக்கு "என்க

"எதுக்கு என்னோட சமோசாவை எல்லாம் பிடுங்கி திங்கறதுக்க "என்று அசிங்கப்படுத்த

"சைக்கிள் கேப்ல கூட என்ன ஹீரோ ஆக விட மாட்டேங்கறாங்க "என்று தலையில் கை வைக்க

அதை பார்த்து சத்யா சத்தமாக சிரிக்க

அவள் சிரிப்பதை பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு அவள் எப்போதும் இப்படி சிரிச்சுகிட்டே இருக்கனும் என்று நினைக்க

சத்யா சிரிப்பதை வெறுப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தான் மகிழன்.

இந்த உலகத்துல ஆணும் பெண்ணும் பழகுனா அது காதல்னு அர்த்தம் இல்ல பரிண்ட்ஆ கூட இருக்கலாம் ஆனா பாக்குறவங்க பார்வை அவங்கள எப்பவுமே தப்பவே பார்க்குது..

நிமிர்வாள்..
 

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 4



கிளாஸ் உள் வந்த மகிழனை பார்த்து அமைதியாக அவர்களின் இடத்தில் போய் அமர்ந்துக் கொண்டனர்.

கிளாஸ் எடுத்து முடித்த மகிழன் சத்யாவை வெளியில் அனுப்பாமல் இருக்க அதை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம் தான்.

"ஓகே ஸ்டுடென்ட்ஸ் உங்க கிளாஸ் இன்ச்சார்ஜ் சுரேஷ் சார் ஒன் மன்த் மெடிக்கல் லீவ் எடுத்ததுனால இன்னைல இருந்து நா தான் உங்களுக்கு கிளாஸ் இன்ச்சார்ஜ் யாரு லீவ் போடறத இருந்தாலும் என்கிட்ட inform பண்ணனும் "என்று சொல்லிவிட்டு வெளியே செல்ல

அவன் சொல்லியதை கேட்ட சத்யா இந்த ஒரு மாசம் நா அவ்ளோ தான் என்று புலம்ப

"ஐ ஜாலி அப்போ டெய்லி நாம கேன்டீன்லையே இருக்கலாம் "என்று நவீன் சொன்னதும்

பக்கத்தில் இருந்த நோட்டை தூக்கி அவன் மீது எரிந்தாள் நந்தினி.
அதை பார்த்து எல்லாரும் சிரிக்க நவீன் அவளை முறைத்து பார்த்தான்.

அன்று நாள் அப்படியே செல்ல மாலை நந்தினி சத்யாவை வீட்டின் அருகில் விட்டு சென்றாள்.
சத்யா மரகத்தை நிமிர்ந்து பார்க்காமல் உள்ளே செல்ல

நல்லவேளை யாருடனோ போனில் பேசிக் கொண்டு இருந்தவர் சத்யா வந்ததை கவனிக்கவில்லை.

அன்று அதிசயமாக கணேஷன் ஏழு மணிக்கு வந்து விட அவரை பார்த்த மரகததுக்கு தான் பயமாக இருந்தது.

எப்போதும் வீட்டுக்கு லேட்டாக வரும் ரோஷினி இன்று வரவில்லை

செல்வி குடுத்தா தண்ணீரை வாங்கி குடித்தவர் "என்னமா ரோஷினிய காணோம் "என்க

"பிரின்ட்ஸ் பார்க்க போயிருக்காள் "என்றார்

அவரும் அதை கேட்டு அமைதியாக இருந்தவர் மணி எட்டாக "என்னமா இன்னும் வரல இப்படி தான் பண்ணிக்கிட்டு இருக்காளா அவ "என்று கணேஷன் கேட்டதும்

"வருவா டா அவளுக்கு என்ன வேலையோ வந்துருவ "என்க

அதை கேட்டுக் கொண்டு இருந்த செல்வி விரக்தியாக சிரித்துக் கொண்டவர்
"நேற்று சத்யாவின் மேல் பழி போட்டு செய்தது என்ன இன்று அவரின் செல்ல பேத்தியை காப்பாத்துவது என்ன "என்று நினைத்துக் கொண்டார்

சிறிது நேரத்தில் ஆட்டம் போட்டு கொண்டு வந்த ரோஷினி அங்கு அமர்ந்து இருந்த கணேஷனை எதிர்ப்பார்க்க வில்லை
"ஏன் இவ்ளோ லேட் "என்று கணேஷன் கேள்வி கேட்க

"களைப்பா வந்த புள்ளைய ஏன் வந்தவுடனே கேள்வி கேட்கற "என்று ரோஷினி சப்போர்ட் செய்தவர்

செல்வியை பார்த்து புள்ள வந்து தெரிஞ்சும் அவளுக்கு ஜூஸ் எடுத்து வராம கல்லு மாதிரி நிக்கற "என்று சத்தம் போட

செல்வி உள்ளே சென்று அவளுக்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுத்து சென்றார்.

நைட் சாப்பிடும் போதும் மரகதம் ரோஷினியை ஏதும் கேள்வி கேட்காதவாறு பார்த்துக் கொண்டார்.

அடுத்த நாள் காலையில் எப்போதும் போல தொடங்க காலேஜ் செல்ல போன சத்யாவை தடுத்த கணேஷன் " யாரும் எங்கையும் போக வேணாம் இன்னைக்கு ரோஷினியை பொண்ணு பார்க்க வராங்க அப்போ நம்ம குடும்பத்துல இருக்க எல்லாரும் இருக்கனும் "என்று செல்வியிடம் சொல்லி விட்டு போக

அதை கேட்ட சத்யா சந்தோஷத்துடன் "அப்பா என்ன பார்த்து நம்ம குடும்பம்னு சொல்லிட்டாங்க மா "என்று செல்வியின் கையை பிடித்து குதுகலித்துக் கொண்டு இருந்தாள்.

அவளின் சந்தோசத்தை பார்த்த செல்வி உள்ளுக்குள் வேதனை பட்டார் சிறு வார்த்தைக்கே இவ்வளவு சந்தோஷம் கொள்பவள் உள்ளுக்குள் எவ்வளவு ஏக்கம் வைத்து இருப்பாள் என்று.

செல்வி வருபவர்களுக்காக சமைக்க

அப்போது தான் மகிழன் நேற்று சொன்னது நியாபகம் வந்து அவனுக்கு கால் செய்ய
அப்போது தான் கண்ணாடி முன் ரெடி ஆகிக் கொண்டு இருந்த மகிழன் கால் வரவும் எடுத்தவன் "ஹலோ யாரு?"என்க

அவன் குரலை கேட்டவள் "சார் நா சத்யப்ரியா "என்க

"நீ எனக்கு எதுக்கு போன் பண்ற "என்று எரிந்து விழவும்

"நீங்க தான சார் சொன்னிங்க லீவ் எடுக்கற மாதிரி இருந்த உங்ககிட்ட inform பண்ணனும்னு நா இன்னைக்கு லீவ் சார் அத சொல்ல தான் கால் பண்ணேன் "என்று மெதுவாக சொல்ல

"எதுக்கு லீவ் போடற "என்று கேட்க
அக்காவ பொண்ணு பார்க்க வரங்கனு சொன்ன அதுக்கு நீ எதுக்கு லீவ் எடுக்கறன்னு கேட்பாரு பேசாம பொய் சொல்லிடலாம் என்று நினைத்தவள்

"எங்க பாட்டிக்கு சீரியஸ் சார் அப்போவோ இப்பவோனு முடியாம இருகாங்க "என்று பாவமாக சொல்லவும் அவளின் பொய்யை நம்பியவன் அவள் லீவ் எடுக்க பெர்மிஸ்ஸின் கொடுத்தான்.

போனை கட் செய்த சத்யா ஒரே ஆட்டம் தான் அவனை ஏமாற்றிவிட்டோம் என்று பாவம் அவனிடம் மாட்ட போவது தெரியாமல்

மகிழன் போன் கட் பண்ணியவுடன்
அங்கு வந்த அவனின் அம்மா மல்லிகா "இன்னுமா டா ரெடி ஆகுற சீக்கரம் டா லேட் ஆக போகுது அங்க நமக்காக எல்லாரும் வெயிட் பண்றங்க "என்க

"அவ்ளோ தான் மா ரெடி ஆகிட்டேன் "என்று வெளியே வர

அவனை பார்த்த மல்லிகாவுக்கு அவ்வளவு பெருமையாக இருந்தது அவரின் மகனை நினைத்து "என் கண்ணே பட்டுடும் போல இருக்கு டா "என்க

அவரை அணைத்துக் கொண்டு சிரித்தான்.

அவனின் அருகில் வந்த அவனின் அப்பா மணிவண்ணம் "டேய் போதும் டா என் பொண்டாட்டி மேல் இருந்து கைய எடு இப்போ தான் உனக்குன்னு ஒருத்தி வர போறாள "என்க

"யாரு வந்தாலும் எனக்கு என் அம்மா தான் எப்போவுமே first "என்று சொல்லி சிரித்தான்.

நேரமாகி விட காரில் ஏறியவர்கள் அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு செல்ல
செல்வி அனைத்தையும் சரி பார்த்துக் கொண்டு இருக்க சத்யா அவருக்கு உதவி செய்துக் கொண்டு இருந்தாள்.

ரூமில் ரெடி ஆகிக் கொண்டிருந்த ரோஷினி "எதுக்கு பாட்டி இப்போ இதெல்லாம் "என்க

"இப்போ பண்ணாம வேற எப்போ பண்றது என் ராசாத்தி கல்யாணத்தை கண்குளிர பார்க்கணும்னு தான் இன்னும் என் உயிரை கையில பிடிச்சிருக்கேன் "என்க

வேறு எதுவும் பேசாமல் ரெடி ஆனவள் நகை எடுத்து போட அவளை பார்த்த மரகதம் "என் ராசாத்தி அம்புட்டு அழகா இருக்க "என்க
ரோஷினி சிரித்துக் கொண்டாள்.

ரோஷினி ரெடி ஆகி விட்டாளா என்று பார்க்க வந்த கணேஷன் ரோஷினியை பார்த்து "அழகா இருக்க கண்ணம்மா "என்று நெற்றியில் முத்தமிட்டு சென்றார்.

சிறிது நேரத்தில் அனைவரும் வந்து விட மல்லிகாவும் மணிவண்ணனும் உள்ளே செல்ல மகிழன் ஒரு முறை தன்னை கார் கண்ணாடியில் பார்த்து விட்டு உள்ளே வர

சரியாக அந்த நேரம் பக்கத்து வீட்டில் இருந்து பூ பறிக்க சென்ற சத்யா மகிழன் மேல் மோதிவிட்டாள்.

நிமிர்ந்துதவள் யார்யென்று பார்க்க சத்தியமாக மகிழனை அங்கு எதிர்ப்பார்க்க வில்லை
"சார் நீங்க இங்க "என்று சொல்ல வந்தவள்

உள்ளே சென்ற மல்லிகா மகிழன் இன்னும் வராததை பார்த்து வெளியில் நின்றுக் கொண்டு இருந்த மகிழனிடன் "உள்ள வா டா "என்க

மல்லிகா சொல்லியதை வைத்து இவன் தான் ரோஷினிக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளை என்று உணர்ந்துவள் "நீங்களா சார் "என்று அதிர்ச்சியாக கேட்க

அவனோ இவளை புரியாமல் பார்த்தவன் உள்ளே சென்றான்.

அவன் சென்றதை பார்த்து"ஐயோ இவர போச்சு போச்சு எல்லாம் போச்சு சும்மாவே இவருக்கு என்ன பிடிக்காது இப்போ ஒரே குடும்பமா வேற ஆக போறாரு "என்று புலம்பிக் கொண்டே பூ பறிக்க சென்றாள்.

உள்ளே சென்ற மகிழனுக்கு குழப்பமாக இருந்தது அவன் சத்யாவை இங்கு எதிர்ப்பார்க்க வில்லை

ஒரு வேளை அவள் தான் பார்க்க வந்து இருக்கும் பெண்ணோ என்று நிமிடம் நினைத்தவன் பின் சே என்ன நினைப்பு இவ பொண்ணா இருந்த எனக்கு கல்யாணமே வேணாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தான்.

சத்யா வந்து விட கணேஷன் மகிழன் குடும்பத்துக்கு அவரின் குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

கணேஷன் மரகதம் பற்றி சொல்ல "பாட்டி உங்களுக்கு உடம்பு நல்ல இருக்கு தானே "என்று சத்யாவை பார்த்துக் கொண்டே கேட்க

அவளுக்கோ அப்போது தான் அவள் லீவ் எடுக்க பொய் சொன்னது நியாபகம் வர தலையை குனிந்துக் கொண்டாள்.

மரகதம் மகிழன் அவரை நலம் விசாரிக்கிறான் என்று நினைத்து "நா நல்ல இருப்பேன் பா "என்று பாசத்துடன் சொன்னார்.
அதை பார்த்த சத்யா "இவரு எதுவும் என்ன பத்தி சொல்லுவாரோ "என்று பயத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க

அவன் இவள் பக்கம் திரும்பவே இல்லை.

வந்ததில் இருந்து மல்லிகா சத்யாவையே பார்த்துக் கொண்டு இருந்தார்
அவருக்கு அவளை மிகவும் பிடித்து இருந்தது அவள் என்னதான் அவளை அமைதியாக காட்டிக் கொண்டாலும் அவளின் துரு துரு கண்கள் அவளை வாலு என்று காட்டிக் கொடுத்து விட அவளை சுவாரசியமாக பார்த்துக் கொண்டு இருந்தார்.

சத்யா மல்லிகாவை பார்க்க அவர் இவளை பார்த்து சிரிக்க இவளும் புன்னகைதாள்.

அவளின் புன்னகை அவ்வளவு அழகாக இருக்க மல்லிகா "எனக்கு இன்னொரு பையன் இருந்த இந்த பெண்ணை கட்டி வைச்சு இருப்பேன் "என்று எண்ணும் அளவுக்கு சத்யாவை பிடித்து இருந்தது.

மல்லிகா சத்யாவையே பார்த்து கொண்டு இருப்பதை கவனித்த மணிவண்ணன் "உன் பையனுக்கு தான் பொண்ணு பார்க்க வந்து இருக்கோம் நீ என்னடானா வந்ததுல இருந்தே இந்த பொண்ணையே பார்த்துகிட்டு இருக்க இது பார்க்க வந்த பொண்ணு இல்ல இவளோட அக்காவ தான் பார்க்க வந்து இருக்கோம்."என்று யாருக்கும் கேட்காத குரலில் பேச

"எனக்கு தெரியாத யார் பொண்ணுனு "என்றவர் "இந்த பொண்ணு எவ்ளோ அழகா இருக்காளங்க "என்க

"உன் பையன் பண்ண வேண்டியதை நீ பண்ற "என்க
மல்லிகா அவரை முறைத்து விட்டு திரும்பிக் கொண்டார்

சிறிது நேரத்தில் கையில் காபியுடன் ரோஷினி வர
அவளை பார்த்த மகிழன் "அமைதியா தான் தெரியற நல்ல வேளை இவ தங்கச்சி மாதிரி இவ இல்ல. பசங்க கூட பேச மாட்டேன்னு நினைக்கறேன் அவ்ளோ அமைதியா தெரியற "என்று நினைத்து காபி எடுத்துக் கொண்டான்.

ரோஷினி நிமிர்ந்து மகிழனை பார்க்க அவள் என்ன நினைக்கிறாள் என்று தெரியவில்லை.

பெரியவர்கள் சம்பிராதாயம் படி பேசிக் கொண்டு இருக்க "நீங்களே பேசிகிட்டு இருந்த எப்படி பொண்ணுக்கும் பையனுக்கும் பேசணும்னு ஆசை இருக்கும் தானே "என்று மரகதம் சொல்ல
பெரியவர்களுக்கு அது சரியென்று பட

"இல்ல அதலாம் வேண்டாம் எனக்கு பொண்ணு பிடிச்சு இருக்கு "என்று மகிழன் சொல்ல

அதை கேட்ட மரகததுக்கும் கணேஷனுக்கும் சந்தோஷம்
ரோஷினியின் விருப்பத்தை கேட்க அவளும் பிடித்து இருக்கிறது என்க
நிச்சய தேதியை பற்றி பேச ஆரம்பித்தனர்.

சத்யா தான் "இனி என்ன நடக்க போகுதோ காலேஜ்லயே அந்த திட்டு திட்டுவரு இப்போ ஒரே குடும்பம் வேற "என்று நினைத்துக் கொண்டாள்.



நிமிர்வாள்...
 
Status
Not open for further replies.
Top