நினைச்சேன் இது தென்றல் குழந்தை என... அசுரன் இவனுக்கு அப்போ அவள் இருக்கும் இடம் தெரிந்து தான் இருக்கு.. ஒருவேளை ரெண்டும் சேர்ந்து தான் ஓடிப் போச்சோ?? குழந்தையே இருக்கு ஆனாலும் சொல்லாமல் இருந்து இருக்காங்க ???
இந்த அருவிக்கு எந்த காலத்தில் தான் பொறுமை வருமோ தெரியலை.. இவ்வளவு பேர் சொல்றாங்க காது குடுத்து என்னனு கேட்டா என்ன? கடுப்பா வருது... இப்போ சொல்றா அசுரன் மேல காதல் இல்லனு ஆனால் அன்னைக்கு தென்றல் அசுரன் பார்த்து அவள் காதல் கருகி போனதா நினைச்சா தானே... அது என்ன கணக்கு என எனக்கு புரியவே இல்லை??? இதில் வெற்றி அவனின் தங்கை அவளுக்காக அவன் இருந்தது ஹ்ம்ம் அவனால் வேற என்ன செய்ய முடியும்.. இவளால் என்ற உணர்வே இவளை ஒதுக்கி தான் வைக்கும்.. இப்போ அவனின் மனம் நிம்மதி அதனால் அவகிட்ட இருக்க காதல் வெளி வருது.. இதுக்கும் இவ தப்பு கண்டு பிடிச்சுட்டு.. கல்யாணமே நடந்து இருக்காது மீசை முருகன் அன்று சொல்லலை என்றால்...