அத்தியாயம் 3 - நீலமலைக்காட்டு ரகசியம்
(ராதிகாவின் பார்வையில் நீலமலைக்காட்டில் நடந்த நிகழ்வுகள்)
ஆகஸ்ட் 21, நீலமலைக்காடு, பிற்பகல் 2.30
கதிரவனின் முழு ஆக்கிரமிப்பிலிருக்கவேண்டிய நேரமது, ஆனால் காரிருள் மெலிதாக வானில் பரவ மனதை சில்லிடச்செய்யும் இளம்குளிர்காற்று சோலையாற்றை சுற்றிப்படர்ந்திருந்தது. அந்த நிசப்தமான ஆற்றிலே காற்றைக்கிழித்துக்கொண்டு வேகமாக ஜெட் வேகத்தில் பறந்தது மோட்டார் விசைப்படகொன்று. சோலையாற்றின் மறுகரையை அடைந்த படகில் இருந்து கீழிறங்கினான் விக்ரம்.
"தோழர்களே உங்கள் அனைவரையும் இந்த உல்லாச உலகிற்கு வரவேற்கின்றேன். இந்த இரண்டு நாட்களும் வெளியுலகை மறந்து உங்கள் கவலைகளைக்களைந்து உங்கள் வாழ்க்கையின் இறுதிப்பயணமாக இதை எண்ணிக்கொண்டாடுங்கள்."
"டேய் என்னடா பில்ட் அப் எல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கு?" என்று கூறிய படியே படகிலிருந்து கீழே குதித்தான் ராகுல்.
"மச்சான் இது காலேஜ் பைனல் இயர். நெக்ஸ்ட் இயர் யாரு எங்க இருப்பான்னே தெரியாது. நானும் ராதிகாவும் யூ எஸ் போற பிளான்ல இருக்கோம். மோஸ்ட்லி இதுதான் நம்ம சேர்ந்து என்ஜாய் பண்ணப்போற லாஸ்ட் பியூ டேஸ்......." என்று விக்ரம் மகிழ்ச்சிக்கடலில் திளைத்துக்கொண்டிருக்க இடையே குறுக்கிட்ட ராதிகா "என்ன விக்ரம், வந்ததிலேருந்து அபசகுணமா பேசிகிட்டு...." என்று கூற, விக்ரம் அப்படியே ராதிகாவை அலேக்காக தூக்கி முத்தமிட்டான்.
சுற்றியிருந்த ராகுலும் மனீஷாவும் அர்ஜுனும் கைகொட்டி சிரித்துக்கொண்டிருக்க படகினுள்ளே இருந்து வெளியே இருந்த இடத்தை ஒருவித மிரட்சியுடன் நோட்டமிட்டுக்கொண்டிருந்தாள் விஷாலி. அந்த நண்பர் குழாமில் வயதில் குறைந்தவள் விஷாலிதான். காலேஜில் முதலாமாண்டு படிப்பவள். ராகுல் நீண்ட நாட்களாக விஷாலி மீது ஒருதலைகாதலில் இருந்தவன், சமீபத்தில்தான் விஷாலியும் தனது சம்மதத்தை தெரிவித்திருந்தாள். ராகுலைத்தவிர மற்றவர்களுக்கு விஷாலியை பெரிதாக தெரிந்திருக்கவில்லை. அதனாலேயே அவர்களுக்கும் விஷாலி அங்கே வந்ததில் பெரிய உடன்பாடு இல்லை. என்றாலும் ராகுலுக்காக விக்ரம் ஒத்துக்கொண்டான்.
விஷாலியினை கண்ணுற்ற ராதிகா விக்ரமின் காதில் எதோ சொல்ல ராதிகாவை கீழே இறக்கிவிட்டு விஷாலியை நோக்கி "விஷாலி உனக்கு இது புதுசா இருக்கலாம். நாங்க இப்பிடித்தான் ஜாலியா என்ஜாய் பண்ணுவம். எல்லார்கிட்டயும் மிங்கில் ஆகிறதுக்கு இத விட நல்ல சான்ஸ் கிடைக்காது. யூஸ் பண்ணிக்க."
"யெஸ், எல்லாருகூடவும் மிங்கில் ஆகிறதுக்கு நான் ரெடியா இருக்கன் அண்ட் உங்களுக்கெல்லாம் மறக்க முடியாத ஹாலிடேயா இத நான் மாத்தி காட்டுவன் விக்ரம் பிரதர்." என்று மெல்லிய புன்னகையுடன் கூறினாள் விஷாலி.
எல்லோரும் அரட்டை அடித்துக்கொண்டே லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு கெஸ்ட் ஹவுஸ் நோக்கி நடந்தார்கள்.
"என்னடி ஒரு மாதிரி இருக்கே? எனி ப்ரொப்ளம்?" மனீஷாவின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அவதானித்த ராதிகா விசாரித்தாள்.
"இல்லடி அவ மூஞ்சிய பார்த்தாலே பிடிக்கல, நாங்க பிரெண்ட்ஸ் எல்லாரும் ஒண்ணா வந்திருக்கோம், சிவ பூஜைல கரடி புகுந்த மாதிரி.... அவளுக்கே ஒரு இங்கிதம் தெரிய வேணாமா?"
"சரி சரி என்னடி பண்ணுற, எனக்கும் பிடிக்கலத்தான், பட் ராகுலுக்கு என்ன சொல்ற?"
"ஏதோ சொல்லு, அந்த அர்ஜுன் மாதிரி ஆட்களை எல்லாம் பிரெண்டா சேர்த்தா இப்பிடித்தான் நடக்கும்."
மனீஷாவிற்கு எப்போதுமே அர்ஜுனைப்பிடித்ததில்லை. அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாக இரண்டு வருடங்களுக்கு முன்னே மனீஷா கூறி அது பெரிய பிரச்சனையாகியிருந்தது. விக்ரமும் ராதிகாவும்தான் ஒரு வழியாக அப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார்கள். விக்ரமும் ராதிகாவும் மனீஷாவை சமாதானப்படுத்தினார்களே தவிர மனீஷாவை நம்பவில்லை, ஏனெனில் மனீஷா தன்னுடைய அந்தஸ்த்திற்கு குறைவானவர்களை எப்போதும் மதிப்பதில்லை. அன்றிலிருந்து அர்ஜுனை எப்படியாவது அவர்களது குழுவிலிருந்து பிரித்துவிட துடிக்கிறாள் மனீஷா.
"ஹேய் மனீஷா, என்னடி சம்பந்தமே இல்லாம அர்ஜூன்ல பாயுற?” வாய்க்கு வந்தபடி எதுவும் கதைக்காத. அர்ஜுன எப்பவும் நம்மகூடத்தான் வச்சிருக்கணும். கோபத்துல எதையும் மறந்துடக்கூடாது."
“நான் ஒண்ணும் சும்மா சொல்லல.”
"அப்பிடீன்னா......"
"போட்ல வரும்போது அர்ஜுன் அவளையேதான் பார்த்திட்டிருந்தான்"
"உன்னோட கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா?"
"சரி சரி, நீ விட்டு கொடுக்க மாட்டியே"
"சரிடி அவளுக்காக நாம எதுக்கு சண்டை போடணும், அவ என்னவும் பண்ணட்டும். லெட்ஸ் ஹாவ் பஃன் டியர்" பேசிக்கொண்டே கெஸ்ட் ஹவுஸை வந்தடைந்தனர்.
அந்த பங்களாவின் கீழ்த்தளத்தில் உள்ள அறைகளில் ராகுலும் அர்ஜுனும் மனீஷாவும் நுழைய விக்ரமும் ராதிகாவும் மேலே உள்ள ஆடம்பரமான அறையினுள் தஞ்சமடைந்தனர். அது விக்ரமின் பிரேத்தியேக அறை. அங்கு பொதுவாக ராதிகாவினைத்தவிர வேறு எவரையும் விக்ரம் அனுமதிப்பதில்லை.
"விக்கி வீடு ரொம்ப கிளீனா இருக்கு, எங்கயிருந்து அந்த சர்வன்ட பிடிச்ச?"
"யெஸ் டியர், நானும் நோட் பண்ணினன். ரொம்ப கிளீனாதான் இருக்கு. அது யாரோ அர்ஜுனோட தூரத்து சொந்தக்காரராம். அர்ஜுன்தான் அரேஞ் பண்ணிவிட்டான். நான் ஒர்க் எப்பிடின்னு பார்த்திட்டு பெர்மனண்டா இங்க வச்சுக்கிறேன்னு சொல்லிட்டேன்."
"ஓகே, இங்க வேலைக்கு வைக்கிறதுக்கு முதல் கொஞ்சம் யோசிக்கணும்டா"
"ம்.... ஐ நோ........ சரி என்ன மனீஷா புலம்பிட்டே வந்தாள்?"
"எல்லாம் பழைய புராணம்தான்..... விஷாலி வந்ததுக்கும் அர்ஜூன்ல தான் பழி போடுறாள்"
"இதுக்குமா?"
"ஆமா, அர்ஜுன் விஷாலிய பார்த்துட்டே இருந்தானாம்." என்று சொல்லிவிட்டு சிரித்தாள் ராதிகா.
விக்ரமும் சிரித்துக்கொண்டே "ஹ்ம்ம்.... ராதிகா ரெண்டு பேருக்கும் பிரச்சனை வராம இருந்தா சரிதான். நமக்கு ரெண்டு பெரும் முக்கியம்."
"அத நான் பார்த்துக்கிறேன் விக்கி. யூ டோன்ட் வொரி"
பயணம் செய்த களைப்பில் சிறிது ஓய்வெடுத்துவிட்டு அனைவரும் மீண்டும் நீச்சல் தடாகமருகே சந்திக்கும் போது மணி ஏழாகியிருந்தது. அங்கு அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் இரவுப்பார்ட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விதவிதமான மதுகுடுவைகள் விதவிதமான பைட்ஸ் கூடவே அவர்கள் உபயோகிக்கும் போதைப்பொருட்களும் இருந்தன. நீச்சல் தடாகத்தை சுற்றி ஒளிர்ந்த பல வண்ண மின்குமிழ்கள் அவ்விடத்தினை பைவ் ஸ்டார் ஹோட்டல் ஸ்விம்மிங் பூல் பார்ட்டி போல மாற்றியிருந்தது. இவையனைத்தையும் விஷாலிதான் ஏற்பாடு செய்திருக்கிறாள் என்பதும் எல்லோருக்கும் புரிந்தது. ராதிகாவினதும் மனீஷாவினதும் வயிற்றிலிருந்து கருகிய வாசனையும் வெளிப்பட்டது.
"வாவ் விஷாலி, எக்ஸலண்ட்..... பர்ஸ்ட் இம்ப்ரெஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரெஸன்..... திஸ் இஸ் கூல் டியர்" என்று விக்ரம் விஷாலியின் கைவண்ணத்திற்கு அடிபணிந்தான்.
ஏற்கனவே வயிற்றெரிச்சலில் குமுறிய ராதிகாவுக்கு விக்ரமின் பாராட்டு மேலும் கோபத்தை வரவழைத்தது.
"தாங்க்ஸ் விக்கி" என்று செல்லமாக மறுமொழி சொன்னாள் விஷாலி.
அதைத்தொடர்ந்து ராகுலும் அர்ஜுனும் விசாலியைப்பாராட்டிவிட்டு விக்ரமுடன் சேர்ந்து குடிக்க தொடங்கினர். அவ்விடத்தில் விஷாலியை பாராட்டாமல் சென்றால் தமது எரிச்சல் மற்றவர்களுக்கு புரிந்துவிடும் என்று தெரிந்த ராதிகாவும் மனீஷாவும் வேண்டாவெறுப்பாக "நல்லாயிருக்கு, பட் நாங்க இத விட பெட்டரா செய்திருக்கம்" என்று கூறி விட்டு நீச்சல் தடாகத்திற்குள் இறங்க சென்றனர்.
"ராதிகா கேட்டியா? விக்கியாம்...... ஏதோ நிறைய நாள் பழக்கம் போல கதைக்கிறாள். விக்ரமும் இழிச்சிட்டு நிக்கிறான். இந்த பசங்கள நம்பவே ஏலாது. உஷாரா இருந்துக்கோ." என்று மனீஷா பற்ற வைத்தாள்.
"யெஸ், நானும் நோட் பண்ணினன். என்னதான் செய்றாள்னு பார்ப்பமே."
ராதிகாவும் மனீஷாவும் நீச்சல் தடாகத்தில் நீச்சலடித்துக்கொண்டிருக்க உள்ளே சென்ற விஷாலி சில நிமிடங்களில் திரும்ப அங்கே வந்தாள். இம்முறை நீச்சலுடையுடன் வெளிவந்தவள் நீச்சல் தடாகமே சூடாகிப்போகும் அளவிற்கு கவர்ச்சியை வாரி இறைத்தாள். மது போதைக்கு அடிமையாக தொடங்கியவர்கள் விஷாலி எனும் மாதுவிற்கு முழுவதும் அடிமையாகிவிட்டார்கள். விக்ரம் கூட தனது காதலி அருகில் இருக்கிறாள் என்பதை மறந்து விஷாலியின் அழகை ரசித்துக்கொண்டிருந்தான். ராகுல் ஒருபடி மேலே போய் தானும் நீச்சல் தடாகத்தினுள் இறங்கிவிட்டான்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ராதிகாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இப்போது தான் கோபப்பட்டால் விக்ரம் ஒரேயடியாக விஷாலியின் வலையில் வீழ்ந்து விடுவான் என்ற பயம் அவளுக்கிருந்தது. அவர்களது கலாச்சாரத்தில் ஒருத்தனுக்கு ஒருத்தி என்பது மலையேறிப்போயிருந்தது. ராகுலும் கூடவே இருந்தபடியால் பொறுத்துக்கொண்டாள் புதுமைப்பெண் ராதிகா.
ஒருவாறாக விஷாலியின் பிடியிலிருந்து விக்ரம்மைக்காப்பாற்றி கரை சேர்த்து தானும் ஒரு பீர் டின்னை காலி செய்துவிட்டு விக்ரமை அழைத்துக்கொண்டு மேலுள்ள அறைக்கு வந்து சேரும்போது மணி பன்னிரெண்டாகியிருந்தது.
‘விஷாலி ஏன் இவ்வாறு செய்கிறாள்? அவள் நோக்கம்தான் என்ன? விக்ரமை வளைத்து போட முயற்சி செய்கிறாளா? யார் அவள்?’ என்று பல கேள்விகள் ராதிகாவின் மனதில் ஓடிக்கொண்டிருக்க அப்படியே தூங்கி விட்டாள் ராதிகா.
“விஷாலி, எனக்கு உன்ன பார்த்ததுமே பிடிச்சிடிச்சு. நான் இத்தனை நாள் காத்துக்கிட்டு இருந்தது உனக்காகத்தான். நானும் ராதிகாவும் ஒருத்தர ஒருத்தர் காதலிக்கிறம், ராதிகாதான் என்னோட லைஃப்னு தப்பா புரிஞ்சுக்காத. ராதிகா ஜஸ்ட் ஒரு பிரெண்ட்தான். மேபீ அவளுக்கு அப்பிடி ஒரு ஆசை இருக்கலாம். பட் நான் விரும்புறது உன்னைத்தான்........ ஐ லவ் யூ விஷாலி......." என்று விக்ரம் கூற எதிரிலிருந்த விஷாலியும் ஓடி வந்து விக்ரமை கட்டியணைக்க திடுக்கிட்டு கண் விழித்தாள் ராதிகா.
பதற்றத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தவள் அருகில் விக்ரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை கண்ட பின்பே தான் கண்டது கேட்டது எல்லாம் கனவு என உணர்ந்தாள். இருந்தாலும் அவள் கண்ட கனவு அவளுக்கு பெரும் நெருடலாகவே இருந்தது. விக்ரம் ஒன்றும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழும் ராமன் கிடையாது என்பது ராதிகாவுக்கு தெரியாமலில்லை, ஆனாலும் விக்ரமின் பார்வை வேறு பெண்கள் மீது விழவிடாமல் பார்த்துக்கொண்டது ராதிகாவின் சாமர்த்தியம்தான். எனவே ராதிகாவிற்கு தற்போது ஏற்பட்ட நெருடலும் நியாயமானதுதான். சிறிது நேரம் ஏதோ யோசித்து கொண்டிருந்தவள் நேரம் என்ன என்று அறிவதற்காக தனது கைபேசியை நோக்கி கையை கொண்டு சென்றாள்.
போனை கையிலெடுத்து நேரத்தை அதிகாலை நாலு மணி என அறிந்தவளுக்கு வெளியே ஏதோ சலசலப்பு சத்தம் கேட்டது. மெதுவாக எழுந்து சென்று ஜன்னல் திரையை விலக்கி கீழே பார்த்தவளுக்கு ஒரு நிமிடம் இதயமே நின்று விட்டது.
கீழே ஒரு உருவம் காட்டுப்பகுதியை நோக்கி மெதுவாக சென்று கொண்டிருந்தது. ராதிகாவுக்கோ நெஞ்சம் படபடக்க, உடலும் நடுநடுங்க மூர்ச்சையாகிப்போனாள். சில கணப்பொழுதில் தன்னிலை உணர்ந்தவளாய் கடுகளவு தைரியத்தை கடனாக பெற்றுக்கொண்டு அந்த உருவத்தினை நோட்டமிடத்தொடங்கினாள்.
கருப்பு நிற ஓவர்கோட் போட்டிருந்த அவ்வுருவம் சுற்றும் முற்றும் நோட்டமிட்டபடி மரங்கள் அடர்ந்த பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. விஷாலி மீது ஏற்கனவே சந்தேகம் கொண்டிருந்த ராதிகாவுக்கு அவ்வுருவம் நிச்சயமாக விஷாலியாய் இருக்காது என்றே தோன்றியது. அதற்கு காரணமும் இல்லாமலில்லை, ஏனெனில் அவ்வுருவத்தின் உயரமும் நடையும் அது ஒரு ஆண் என்பதை ராதிகாவிற்கு தெளிவுபடுத்தியது. இவ்வாறு அது யாராக இருக்கும் என்று ராதிகா குழம்பிக்கொண்டிருந்த வேளையில் திடீரென அவ்வுருவம் அங்கிருந்த ஒரு பெரிய ஆல மரத்தின் அருகில் நின்றபடி சுற்றி எல்லாத்திசையிலும் மறுபடியும் நோட்டமிட்டது, அதிலும் குறிப்பாக கெஸ்ட் ஹவுஸினை நோக்கி சில நிமிடங்கள் தன் பார்வையை செலுத்தியது. ராதிகா இருந்த மேல் அறையினுள் எவ்வித ஒளியும் இல்லை என்பதால் தன்னை அவன் காண்பதற்கு வாய்ப்பில்லை என அறிந்த ராதிகா தற்காப்பிற்காக சில நிமிடங்கள் ஜன்னல் கட்டிற்கு கீழே ஒளித்துக்கொண்டாள். சிறிது நேரத்தில் மெதுவாக தலையை உயர்த்தி வெளியே நோட்டமிட்டவள் அவ்வுருவம் இன்னும் அதே இடத்தில் தான் நிற்கிறது என்பதை தெரிந்து கொண்டாள். நேரமும் ஓடியது, ராதிகாவும் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள். விக்ரமை எழுப்பலாம் என்றால், கட்டிலிற்கு அருகில் சென்று எழுப்ப வேண்டும், அதற்கிடையில் உருவம் எங்காவது சென்று மறைந்துவிட்டால்?.... என்ன நடந்தாலும் அதை யார் என்று கண்டுபிடித்தே தீர வேண்டும் என உறுதியோடு இருந்தாள் ராதிகா.
யாருக்காகவோ அந்த உருவம் அங்கே காத்து கொண்டிருக்கிறது என்ற ராதிகாவின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவது போல அந்த மரத்திற்கு அந்தப்பக்கம் இன்னொரு உருவமும் வந்து நின்றது. சில நிமிடங்கள் பார்வையை துல்லியமாகியதன் விளைவாக மரத்திற்கு பின்புறம் மறைவாக நின்றிருந்தது ஒரு பெண்தான் என ராதிகா கண்டு பிடித்தாள். அத்துடன் அங்கே இருக்கும் இருவருக்குமிடையில் எதோ வாக்குவாதம் நடைபெறுவது போலவும் அவளுக்கு தெரிந்தது.
'யாராக இருக்கும்? நிச்சயமாக விஷாலியாகத்தான் இருக்கமுடியும். அப்படியானால் மற்றையது யார்? ராகுலா? ராகுல் ஏன் இவளை மறைவாக இந்த வேளை சந்திக்க வேண்டும்? இருவரும் ஒன்றாகத்தானே இருக்கிறார்கள்? ராகுல் இல்லையென்றால் யார்? அர்ஜுனா?????' இப்படியாக தனது எண்ண அலைகளில் லயித்துப்போன போதுதான் தான் அவர்களை கவனிக்க தவறியதை உணர்ந்தாள் ராதிகா. சட்டென அவர்கள் நின்ற மரத்தை நோக்கி கவனத்தை திருப்பியவளுக்கு வெறும் ஆல மரம் மாத்திரமே கண்ணுக்கு புலப்பட்டது.
‘எங்கே அவர்கள்? ஐயோ என்ன முட்டாள்தனம் செய்துவிட்டேன்?’ என்று தன்னை கடிந்து கொண்டிருக்கும் போது ராதிகாவுக்கு அந்தக்குளிரிலும் வியர்த்து கொட்டியது.
கணப்பொழுதில் சுதாகரித்துக்கொண்ட ராதிகா வேகமாக சென்று கும்பகர்ணன் போல தூங்கிக்கொண்டிருந்த விக்ரமின் தூக்கத்தை கலைத்தாள்.
"விக்கி விக்கி எந்திரிடா........."
"நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறன்டி......."
இன்னும் கொஞ்சம் வேகமாக விக்ரமை உலுப்பிவிட திடுக்கிட்டபடி எழுந்தான் விக்ரம்.
எழுந்தவனுக்கு ராதிகாவின் பயத்தினால் உறைந்து போன முகம் பதற்றத்தை அவனுக்குள்ளும் கடத்தியது.
"என்ன ராதிகா? என்னாச்சு? ஏன் இப்பிடி பயந்து போயிருக்க?"
"விக்கி யாரோ ரெண்டு பேர் பின்னால இருக்கிற ஆல மரத்துக்கு பக்கத்தில பேசிக்கிட்டிருந்தாங்க!"
"இந்த நேரத்திலயா? வெளியாட்கள் யாருமா?" இப்போது ராதிகாவிற்கு ஏற்பட்ட பயம் விக்ரமுக்கும் முழுமையாக பற்றிக்கொண்டது.
"ஆமா விக்கி, வெளியாட்கள் இங்க எப்பிடி? அங்க நின்னதுல ஒருத்தி பொண்ணு. அது நிச்சயமா விஷாலியாத்தான் இருக்கும்."
"அதானே பார்த்தன், திரும்ப உன்னோட வேலைய தொடங்கிட்டியா?"
"இல்ல விக்கி, நிஜமா நடந்தத தான் சொல்றன். என்ன நம்பு"
விக்ரமின் பார்வை வேறு பெண்கள் மீது விழும் பொது இப்படி அவர்கள் மேல் ஏதாவது பழி போடுவது ராதிகாவிற்கு வாடிக்கை, இது விக்ரமுக்கும் தெரியும். இன்றும் அதே போலதான் விஷாலி மீது வீண் பழி போடுகிறாள் என நினைத்தான் விக்ரம்.
"ராதிகா நான் அப்பிடில்லாம் அவள நினைக்கல, நீ நிம்மதியா தூங்கு"
"ஐயோ விக்கி, நான் சொல்றது உண்மை, நம்பலன்னா அவளோட ரூம்க்கு போய் பார்ப்பம்.அங்க அவள் இருக்கமாட்டாள்."
"சரி இல்லைன்னா........"
"ஆ............................"
தூரத்திலிருந்து வந்த அலறல் சத்தம் கேட்டு இருவருக்குமே ஒருகணம் இதயம் நின்றுதான் போனது.

- தொடரும்-