ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

முன் தினம் பார்த்தேனே கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 16 :-

அந்த டைரி அத்துடன் முடிந்திருந்தது.

கண்களில் கண்ணீர் குளம் கட்டி கலங்கி வழிந்தது.

அவளால் பாட்டியை நிமிர்ந்தும் பார்க்க முடியவில்லை.

அவரது வளர்ப்புக்கு துரோகம் செய்தது போல் நினைத்துக் கதறினாள்.

பார்வதி அம்மாள் கண்களை மூடியபடி அமர்ந்திருந்தார்.

விழிகளின் ஓரங்களில் கசிந்து கன்னங்களில் வழிந்தது.

"பாட்டி" என்று கூவி அழைத்தபடி அங்கு கீழே கிடந்த பைகளை தாண்டி தாவி அணைத்துக் கொண்டாள் ரக்ஷிதா.

பதினாறு வயது நிரம்பிய பருவ மங்கை அவள்.

வயதிற்கு ஏற்ப அழகோடு பாட்டியின் வளர்ப்பில் நிமிர்வோடு இருந்தாள்.

"ஏன் பாட்டி ஏன் ஏன் இப்படின்னு. சொல்லவே இல்ல. இல்லன்னா நான் இப்ப அந்த ஆள் கிட்ட போகணும் நினைச்சு கூட இருந்து இருக்க மாட்டேனே" என்று மீண்டும் மீண்டும் கூறி தேம்பி அழுதாள்.

"உங்க அப்பா நல்லவனா இருந்திருந்தா, அந்த வீட்டு மனுஷங்க உன்ன நல்லபடியா பார்த்துப்பாங்க என்று எனக்கு நம்பிக்கை வந்திருந்தா, கண்டிப்பா உன்ன உன்னோட கோகிலம் பாட்டி நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வந்து கேட்டபோதே அனுப்பி இருப்பேன். நானும் காசி ராமேஸ்வரம்ன்னு போயிருப்பேன்" என்றவர் நினைவு நான்கைந்து வருடங்கள் முன்பு சென்றது.

அன்று கோகிலம் பாட்டி ரக்ஷிதாவை பார்க்க வந்திருந்தார்.

இது அவ்வப்போது நிகழ்வதுதான்.
வந்தவர், பேத்தியையும் தன்னோடு அழைத்துச் செல்ல, கூடவே வைத்துக்கொள்ள கேட்டார் பார்வதி பாட்டியிடம்.

பாட்டி முதலில் தன்மையாக மறுத்தவர், பின்பு அழுத்தமாக முடியாது என்றார்.

அதில் எரிச்சலுற்ற கோகிலம் "ஏன் இப்படி அப்பாவும் பெண்ணையும் பிரிக்கிறீங்க. ராகா தன் மகளாக போல பார்த்துப்பா, நானும் நல்லா பார்த்துப்பேன்" என்று கோபமாக கேட்டார்.

அது ஒன்றே போதுமாய் இருந்தது பார்வதியம்மாளுக்கு, "மொதல்ல நிறுத்துங்க" என்று கத்தியவர்.
அத்தனை வருடம் மனதிலிருந்த கோபதாபங்களை கொட்டிவிட்டார்.

அவரது பேச்சு ஆக்ரோஷமாய் ஆரம்பித்து கோபமாக பின் அழுகையாய் வந்து ஆற்றாமையில் முடிந்தது.

"இது என் வாழ்க்கை நான் அமைச்சுக்கிட்டது" என்று அவ்வப்போது குத்தலாக பேசும் ராகாவின் பேச்சு இப்பொழுது புரிந்தது கோகிலத்திற்கு.

இறுதியில் பார்வதியம்மாள் "இனி நீங்க என் பேத்தியோட அப்பா பத்தி பேசாதீங்க என் பேத்தி என் வளர்ப்பு என் கூடவே தான் இருப்பா நீங்க கூட இங்கே வராமல் இருந்தால் நல்லது" என்று முடித்துக் கொண்டார்.

சட்டென வாசலில் நிழலாட இருவரும் திரும்பினர்.

ரக்ஷிதா தான் பள்ளி திரும்பி வந்திருந்தாள்.

பார்வதி பாட்டியை ஒரு பார்வை பார்த்தவள், "வாங்க கோகிலம் பாட்டி" என்று வரவேற்றாள்.

அந்த சிறுமியை பார்த்தவருக்கு அழுகை பொங்கி வந்தது வாயில் கை வைத்து அடக்கியபடி, "என்ன மன்னிச்சிடு மா. உன்னை என்னோட வச்சுக்க எனக்கு எந்த அருகதையும் இல்லை. நீ நல்லா இருக்கணும்" என்று தலையில் கை வைத்து அழுத்தி, ஒரு தலையசைப்புடன் அவ்விடம் விட்டு சென்றார்.

பார்வதியம்மாள் இறுதியில் பேசியதை மட்டும் கேட்ட ரக்ஷிதா, அவ்வப்போது அப்பாவைப் பார்க்கணும், அவர்கிட்ட போகணும், அவரோட இருக்கணும் என்று முரண்டு பிடிப்பாள்.

சிறுமி தானே என்று எண்ணி ஏதேதோ சொல்லி சமாளித்தார்.

இன்று முடியாமல் போக தனது டைரியை கொடுத்து விட்டு தளர்ந்து அமர்ந்துவிட்டார்.

"பாட்டி அம்மா ரொம்ப பாவம்" என்ற சொல்லில், நடைமுறைக்கு வந்த வந்தவர்.

"உங்க அம்மா பாவம் இல்ல. ரொம்ப மென்மையானவை இளகின மனசு, அதுதான் காதலிக்கத் தூண்டுச்சு.
மேலும் உங்க அம்மா காதல் பொய்யில்லை ஆத்மார்த்தமானது ஆனால் அதற்கு தகுதி இல்லாதவன் உங்க அப்பா. அவன் மேல வச்சது தான் அவ செஞ்ச தப்பு. முன்னாடியே சொல்லி இருப்பேன் ஆனால் புரிஞ்சுக்கிற வயசு இல்ல உனக்கு. இப்பவும் சரியா புரிஞ்சுக்கனும் நீ" என்றார்.

"உங்க அம்மாவுக்கு நீதான் உலகம் தன்னை ரட்சிக்க வந்த தேவதை நீன்னு நினைச்சு தான் உனக்கு ரக்ஷிதா என்று பெயர் வச்சா" என்று மேலும் கூறினார்.

"அந்த ஆள் வந்து என்ன ஒரு தடவை கூட பார்த்தது இல்லையே ஏன்னு யோசிச்சி இருக்கேன் பாட்டி. ஆனால் இப்படி ஒரு துரோகம் எங்க அம்மாக்கு பண்ணி இருப்பார் என்று நான் நினைச்சு கூட பாக்கல, இனி அந்த ஆள் முகத்தில் என் வாழ்க்கையை நான் முழிக்க மாட்டேன்" என்று உரைத்தாள் ரக்ஷிதா.

"இன்னும் ஒரு வருஷம் பள்ளி இறுதிப் படிப்பு முடிஞ்சு காலேஜ் போக அப்ளிகேஷன் ஃபார்ம்ல. உங்க அப்பா கிட்ட தான் சைன் வாங்கணும். ஏன்னா உங்க அம்மா உங்க அப்பாவை விவாகரத்து வாங்கல. வாங்கறதுக்கு முன்னாடியே, உங்க அம்மா இறந்துட்டா" என்ற என்றார்.

அதன் பிறகு பாட்டியும் பேத்தியும் இன்னும் நெருக்கமானார்கள்.

சமையல், பாட்டு, பரதம், அத்துடன் கராத்தே, தொழில் நிர்வாகம், விவசாயம், என்று அத்தனையும் படித்தாள் ரக்ஷிதா.

கல்லூரி முடித்தவள் தாத்தாவின் தொழில், தனது நிறுவனம், விவசாயம் என அனைத்தையும் தனது கையில் எடுத்துக் கொண்டாள்.

பாட்டிக்கு சற்று ஓய்வு கொடுத்தாள்.
பார்வதி பாட்டியோ பேத்திக்கு திருமணம் செய்வதில் முனைப்பாக இருந்தார்.

திருமணத்தை இரண்டு ஆண்டு தள்ளி போட்டவள் சூறாவளியாய் சுழன்று அடித்தாள்.

ஆம் அவளது தந்தையின் தொழில் சரிந்தது. எந்த வசதி வாய்ப்புக்காக இத்தனை செய்தார்களோ, கிட்டத்தட்ட அத்தனையும் இழக்கும் தருவாயில் இன்று இருக்கிறார்கள்.

அனைத்தையும் கேட்ட பிரணவ் தான்னவளை பார்த்தான்.

மூடிய இமைகளுக்குள் கருவிழி நர்தணமாடியது.

அலைபாய்ந்த அந்த விழியோரம் கசிந்து வழிந்தது.

அதனைப் பார்க்க பொறுக்காதவன், சட்டென அவள் புறம் சென்று வாரி அணைத்துக் கொண்டான் பிரணவ்.

தாயிடம் தஞ்சம் புகும் சேயாய் அவனுள் புகுந்தாள் அவள்.

விசித்து அழுதவளை ஆற்றுப்படுத்தினான்.

மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினாள் ரக்ஷிதா.

நிமிர்ந்து அமர்ந்தவள் "என் அம்மாவோடு இறப்பிலும் எனக்கு சந்தேகமா இருக்கு பிரணவ். இதுலயும் ராகா அவங்களோட தம்பி பங்கு இருக்குமோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு" என்று சொன்னாள் ரக்ஷிதா.

அவள் சொன்னது அத்தனையும் உண்மையே.

அன்று ராகா தம்பியிடம் புலம்ப அதைக் கேட்ட ராகாவின் தம்பி, ஆள் வைத்து மீனாள் சென்ற வாகனத்தை அடித்து, அதை விபத்து போல செய்துவிட்டான்.

இதைத்தான் அன்று ராகா தனது மாமியாரிடம் சொல்லி இருந்தாள்.

"பாட்டி இத்தனை நாள் பயத்துல என்ன போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க அனுமதிக்கல்ல. ஆனா இப்ப அவங்க இங்க இல்ல. நான் இதுல ஒரு முடிவு எடுக்கனும்னு எனக்கு தோணுது" என்று உரைத்தாள் ரக்ஷிதா.

பிரணவும் "ம் கண்டிப்பா ஏதாவது ஆக்ஷன் எடுப்போம்" என்று சொன்னான்.

"ஓகே அவ்வளவுதானே லெட்ஸ் கெட் மேரிட். பிராப்ளம் சால்வ் அவ்வளவுதான். உன் கூட வாழ்க்கை கடைசிவரைக்கும் எப்போதும் நான் இருப்பேன் என்னை நம்பு. "என்று உறுதி அளித்தான்.

" இல்ல வேண்டாம் நான் உங்களுக்கு பொருத்தம் இல்லை" என்றாள் ரக்ஷிதா.

விழி இடுங்க ஏன் என்று கேட்டான்.

"நா நா நான் என்ன அந்த ராதா ஓட தம்பி" என்று தயங்கியபடி ஏதோ சொல்ல வந்தாள்.

அதை காண சகிக்காத அவன் "எஸ் ஐ நோ இட் ஆல் ரெடி" என்று உரைத்தான்.

அவனது அந்த கூற்றில் விழிகள் தெறித்து விழ அதிர்ந்து பார்த்தாள்.

"நீ நேத்து நைட்டு தூக்கத்துல உளறின அத வச்சு கொஞ்சம், கொஞ்சம் கண்டுபிடிச்சேன். ஆனா உன்ன பத்தி முழுசா எனக்கு தெரியாது. இப்ப நீ சொன்ன அப்புறம் தான் தெரியுது" என்று மேலும் சொன்னான்.

அவளது கண்களில் வெறுமையே இருந்தது.

"ஆனா அதுக்காக எல்லாம் நீ என்னை லவ் பண்ண மாட்டேன், கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னா, கட்டாயப்படுத்தி தாலி கட்டிடுவேன்" என்றான் பிரணவ்.

வன்மையான அந்த அன்பும் இனித்து பெண்ணவளுக்கு, ஆயினும்

"என்ன சார் வாழ்க்கை குடுக்கறீங்களோ" நக்கலாக கேட்டாள்.

"ஏதே வாழ்க்கை கொடுக்கறேனா, அடிச்சேன்னு வச்சுக்க அப்ப தெரியும் சுத்த உளறல், எனக்கு இருக்கிறது ஒரு வாழ்க்கை தான். அதையும் உங்ககிட்ட குடுக்க எனக்கு விருப்பம் இல்லை. உன்னோட சேர்ந்து என் வாழ்க்கைய வாழத்தான் ஆசை. வந்துட்டா சீரியல் ஹீரோயின் மாதிரி உளரிட்டு" என்று கடுகடுத்தான் பிரணவ்.

"இல்ல ப்ரணவ் நான் திருமண வாழ்க்கைக்கு தகுதியில்லாதவ, வேற நல்ல பொண்ணா பாத்து நீ கல்யாணம் பண்ணிக்கோங்க" என்றாள்.

"ஏன் உனக்கு என்ன புடிக்கலையா".

"நோ எனக்கு உங்கள புடிச்சிருக்கு. இன் ஃபேக்ட் ஐ பிலிவ் யூ டோட்டலி பட்" என்று தயங்கினாள்.

ஏன் காரணம் சொல்லு என்று மேலும் மேலும் துருவி துருவி கேட்டான்.

அதில் எரிச்சலுற்றவள் "புடிக்கும், நம்பறேன். ஆனா அதுக்காக காதல் எல்லாம் கிடையாது. ஐ டோண்ட் லவ் யூ" என்று சொன்னாள்.

அதில் நக்கலாக சிரித்தவன், "உன்னோட காதல் உன் கண்ணுல தெரியுது. இவ்ளோ நீ என்கிட்ட பேசின பேச்சு, என்கிட்ட நடந்துகிட்ட விதம், அதுல உன் காதல் அத்தனையும் எனக்கு புரியுது, தெரியுது. ஆனா நீதான் தெரிஞ்சிக்கிட்டியா, புரிஞ்சுகிட்டுயான்னு எனக்கு தெரியல, இல்ல நடிக்கிறியான்னும் எனக்கு தெரியல. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் எது நடந்துச்சுன்னு நினைக்கிறாயோ அது நடக்கல".

அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னா என்றவன்,

"நீ உன்னோட அப்பாகிட்ட அப்ளிகேஷன் பார்ம்ல சைன் வாங்க போன அப்போ, அவன் உன்னிடம் தப்பா நடக்க டிரை பன்னிருக்கான். நீயும் அதிர்ச்சி அடைந்து மயங்கிட்ட, அப்போ கோகிலம் பாட்டி தான் அவனை திட்டி அனுப்பி, உன்னோட டிரஸ் எல்லாம் மாத்தி விட்டுருக்காங்க, அதை தான் உன்னை அவன் கெடுத்துட்டதா நினைச்சுருக்க, போதும்மா. கோகிலம் பாட்டி உனக்கு இந்த வகையில நல்லது தான் செஞ்சுருக்காங்க. அவங்க தான் உங்க அப்பா வையும் திட்டி உனக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும்னு வற்புறுத்துறாங்க, விசாரித்ததுல தெரியும், உன்னை அவன் கடத்தி கல்யாணம் செய்துக்க நினச்சதும் சொத்துக்காக தான்" என்று அனைத்தும் கூறி முடித்தான்.

அன்றைய தினம் கண் முன் விரிந்தது அவளுக்கு. தனது கல்லூரி அப்ளிகேஷனின் பார்மில் சைன் வாங்க ராமநாதனை பார்க்க சென்றாள். அத்துடன் அவளுக்கு ராமநாதன் முன், கம்பீரமாக நீ வேண்டாம் என்று நினைத்த மீனாளின் மகளை பார் என்று காட்ட வேண்டும் போல் இருந்தது.

ராமநாதன் அவளது பார்வையில் முகம் கன்ற கையெழுத்து போட்டு விட்டு வேலை நிமித்தம் சென்று விட்டார். ராகா வீட்டில் இல்லை. கோகிலம் பாட்டி தோட்டத்தில் பூ பறித்து கொண்டு இருந்தார். தனது அறையில் இருந்து வந்த ராகாவின் தம்பிக்கு இவள் வெளியேறுவது தெரிந்தது. சட்டென இவளை அழைத்தவன், "இந்தா பொண்ணு உங்க அம்மா கல்யாண போட்டோ இருக்கு பார்கிறாயா" என்றான். முதலில் மறுத்தவள், அவன் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி சொல்லவே, அவனுடன் சென்றாள்.

அவன் பழையது வைத்து இருந்த அந்த அறைக்கு அவளை அழைத்து சென்று கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயற்சி செய்யவும், சட்டென கத்தி விலகி ஒடினாள். அவளது சத்தத்தில் அங்கு தோட்டத்தில் இருந்த கோகிலம் பாட்டி என்னவோ எதோ என்று ஜன்னல் வழியே பார்த்தார். அதேநேரம் அவன் மீண்டும் இழுத்ததில் சுவரில் மோதி, அதிர்ச்சியில் மயங்கினாள்,. அதனை கண்ட பாட்டி கத்தி தோட்டகாரனை அழைத்து வந்து, கதவை உடைத்து, உள்ளே வந்து அந்த ராகா தம்பியை அடித்து வெளியேற்றினார். அரைமணி நேரத்தில் கிழிந்த உடை மாற்றி, மயக்கம் தெளிந்து அனுப்பி வைத்தார் கோகிலம் பாட்டி.

இதை அறியாதவள், தனக்கு நேர்ந்தது என்ன என்று புரியாமல், தவறான ஏதோ நடந்து விட்டது, என்று உள்ளம் கலங்கி மருகிதவித்தாள். ஆனால் இன்றோ,

பாரம் இறங்கிய உணர்வு பெண்ணவளுக்கு.

எத்தனை இரவுகள் அழுகையில் கரைந்திருக்கும்.

ஒரு கயவனிடம் தோற்றதில் தன்னை தானே வெறுத்திருந்தாள்.

அதன் பின்னர் தான் அத்தனை தற்காப்பு கலையும் கற்றாள் பெண்.

"இப்பவாச்சும் ஓகே சொல்லு" கெஞ்சினான் அவன்.

அது தாளமாட்டாமல் சம்மதம் சொல்ல வாய் எடுத்தவள் அலைபேசி அடித்தது.

பாடல் இதோ:-


மாலை வந்தால் போதும் ஒரு நூற்று பத்தில் தேகம்
செங்காந்தள் போல் காயும்

காற்று வந்து மோதும் உன் கைகள் என்றே தோன்றும்

பின் ஏமாற்றம் தீண்டும்
தவிப்பதை மறைக்கிறேன்

என் பொய்யைப் பூட்டி வைத்துக் கொண்டேன்

கனவிலே விழிக்கிறேன்
என் கையில் சாவி ஒன்றைக் கண்டேன்


என்னைச் சாய்த்தாளே ....
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 17:-

அவள் சம்மதம் சொல்ல நினைத்த நொடி, அவளது மாமா ராகவன் போன் செய்திருந்தார்.

அதனை எடுத்து கேட்டவள் தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டாள்.

"என்ன ஆச்சு" என்று கேட்டான்.

"ஒன்றும் இல்லை" என்று தலையசைத்தவள்,

"ராகவன் மாமா மாப்பிள்ளை போட்டோ அனுப்பி இருக்காங்க. எனக்கு பார்க்கவே பிடிக்கவில்லை. ஆனால் பாட்டியோட ஆசை கிட்டத்தட்ட கடைசி ஆசை என்றும் சொல்லலாம். ஒரே குழப்பமா இருக்கு. லெட்ஸ் பிரேக்கப்" என்றாள்.

"என்னது பிரேக்கப்பா" என்றவன், "எம்மா இன்னும் நீ லவ்வே சொல்லல" என்று நினைவூட்டினான் அவளுக்கு.

"ஆமாம் இல்ல" என்றபடி மீண்டும் யோசனைக்கு சென்றாள்.

அவனுக்கு அவளது குழப்பமான மனநிலை தெளிவாக புரிந்தது.

என்ன செய்வதென்று யோசித்தவனுக்கு தனது அன்னையின் ஞாபகம் வந்தது.

பள்ளியில் பாடம் எடுப்பவர் நிச்சயமாக இவளிடம் பேசி அவளது மனதை அவளுக்கு தெளிவாக உணர்த்த முடியும் என்று நம்பினான்.

மேலும் தனது தந்தையிடம் ரக்ஷிதா பற்றி கூற வேண்டும் என்று தோன்றியது.

அதே நேரம் அவன் அலைபேசி அழைத்தது. அவனது பாட்டி காமாட்சி தான் அழைத்திருந்தார்.

"ஹலோ காமாட்சி பேபி எத்தனை வாட்டி கால் பண்றது நீ ரொம்ப பிசியோ" என்றான் எடுத்தவுடன்.

"ஆமாம், நீ என்னை பார்க்க வரது இல்லை உங்கிட்ட பேச மாட்டேன்டா, போன வை" என்று அந்தப் பக்கம் இருந்து பதில் வந்தது.

அவனது பேபி என்று விழிப்பில் சட்டென நிமிர்ந்து அவனையே பார்த்தாள்.

காமாட்சியா பாட்டி காலத்து பெயர் போல இருக்கே, என்று எண்ணினாள்.
அவள் அறியவில்லை அது அவனது பாட்டி தான் என்று.

அவளது கவனம் தன் மீது இருப்பதை உணர்ந்தவன் வேண்டுமென்றே, "காமு எனக்கு லீவு கிடைக்கல அதனால தான் வரல கோச்சுக்காதீங்க பேபி புரிஞ்சுக்கோ கோச்சுக்க கூடாது சரியா" என்று கொஞ்சினான். அதை கேட்டவள் முகத்தில் ஏதேதோ பாவனைகள்.

அவனது பேச்சை கேட்க பிடிக்காதது போல், ஏற்க முடியாதது போல் ஒரு பாவனை என்ன இப்படி பேசுறான் யாராயிருக்கும் என்ற ஒரு சிந்தனை. ஒருவேளை லவ்வரா இருக்குமோ.
என்று அவளது எண்ண அலைகள் தாறுமாறாக ஓடியது.

அவளது எண்ண அலைகளை கிரகித்தவன், இன்னுமே விளையாட எண்ணினான் "காமு டார்லின் நெக்ஸ்ட் வீக் நான் கண்டிப்பா வருவேன் கோச்சுக்க கூடாது சரியா" என்ற இவனது பேச்சுக்கு

"டேய், டேய்... படவா, படவா டார்லிங் சொல்லாதடா என் ஹஸ்பண்ட் தாண்டா டார்லிங் சொல்லணும் அதுவும் காமு டார்லிங் "

"இதுதானே உன்கிட்ட பிடிக்காதது நல்லா பேசுற, ஆனால் ஹஸ்பண்ட் தான் டார்லிங் சொல்லணும் சொல்றே, எனக்கு இல்லாத உரிமையா நானும் சொல்லுவேன். நீ வேணும்ணா உன் புருஷன் கிட்ட சொல்லிக்கோ" என்று சிரித்தபடியே கூறினான்.

அவனது பேச்சை மேலும் கேட்டவள் வாயில் கைவைத்து அதிர்ந்து நின்று விட்டாள் "அடப்பாவி ஏற்கனவே கல்யாணம் ஆனா பொண்ணுக்கு ரூட் விடுறியா உன்ன போய் நல்லவன்னு நெனச்சனே டா" என்று மைண்ட் வாய்ஸ்சை சத்தமாக கூறிவிட்டாள்.

"டாவா இது கூட அழகா இருக்கு பேபி இப்படியே கூப்பிடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" என்று அவளது கன்னத்தை தட்டிவிட்டு சென்றான்.

மேலும் மேலும் குழம்பிப்போய் அப்படியே சோபாவில் அமர்ந்தாள். "யாராக இருக்கும் ஒண்ணுமே புரியலையே, ஆனா டார்லிங்னு அழகாக கூப்பிட்டானே நம்மள ரக்ஷி டார்லிங்னு கூப்பிட்டா எப்படி இருக்கும்" என்று என்ன அலைகள் ஓட விதிர் விதிர்த்துப் போனாள் பாவையவள்.

அவள் தனது எண்ணம் இப்படி போகும் என்று கனவிலும் நினையாள். ஏன் இப்படி நினைத்தோம் என்று யோசித்தவாறு தலையை தாங்கியபடி அமர்ந்தாள்.

ஒன்று மட்டும் சர்வநிச்சயமாக தோன்றியது அவன் தனது மனதிற்குள் புகுந்து விட்டான் என்பதே அது.

ஆனால் எப்படி, ஏற்கனவே பாட்டி சொல்லி ராகவன் மாமா ஒரு மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்காங்களே...

அவனது பாட்டியை வம்பிழுத்து பேசி வைத்தவனுக்கு, அவனது தந்தை வீரேந்திரன் போண் செய்திருந்தார்.

அதற்குள் ரக்ஷிதா காபி போட்டு கொண்டு வந்திருந்தாள்.

குழப்பமான இந்த மனநிலைக்கு இதமாக இருக்கும் என்று எண்ணினாள் போலும்.

அங்கு போணில் அவனது தந்தை அவனுக்கு பார்த்த பெண்ணின் படத்தை அனுப்பி இருப்பதாக கூறினார்.

இருவருக்கும் அவர்களுக்கான, அவர்களது வீட்டு பெரியவர்கள் பார்த்த வரன்களின் புகைப்படம் அலைபேசியில் வந்திருந்தது.

காபியை பருகாமல் வெறித்தவாறு அமர்ந்து இருந்தவனிடம்.

"என்னாச்சு" என்றாள்.

"பொண்ணு பாத்திருக்காங்க சொன்னேன்னில்ல, போட்டோ அனுப்பி இருக்காங்க அப்பா"

ஓ என்றவள் சட்டென்று மௌனமானாள்.

பிரணவ் "உன்னோட முடிவு என்ன" என்று கேட்டான்.

அவனுக்கு இப்போதே தெரிய வேண்டி இருந்தது.

பெருமூச்சு எடுத்தவள் "எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதம். பாட்டிக்கு என்னோட விருப்பம் தான் திருமண விஷயத்தில் முக்கியம். இங்க வர்றதுக்கு முன்னாடி தான் என்னோட போட்டோவை ராகவன் மாமாக்கு கொடுத்தேன். ரொம்பவும் யோசிச்சு தான் கொடுத்தேன்" என்றாள்.

அவளது கூற்றில் மகிழ்ந்தவன், "தேங்க்யூ, தேங்க்யூ, தேங்க்யூ சோ மச் லாலிபப்" என்று அவளை இறுக்கி அணைத்தான்.

அலைபேசியில் மெசேஜ் வந்த சத்தத்தில் அவளை விட்டு விலகியவன். அதனை எடுத்துப் பார்த்தவன், அதிர்ந்தான்.

"லாலிபப் நீயா!! " வியந்தான்.

மறுபடியுமா என்று நினைத்தாள் ரக்ஷிதா.

அவளையும் அவனது அலைபேசியும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்ன" என்றபடி அவனது அலைபேசியை எட்டிப்பார்த்தால், அவனது அலைபேசியில் அவளது புகைப்படம்.

முதலில் ஒன்றும் புரியவில்லை, பின்பு மூளையில் மின்னல் வெட்டியது.

எழுந்து சென்று தனது அலைபேசியில் ராகவன் மாமா அனுப்பிய புகைப்படத்தை திறந்தாள்.

அவளது அலைபேசியில் அவனது புகைப்படம்.

தனது அலைபேசியை அவனிடம் காட்டினாள்.

அதில் தனது புகைப்படத்தை பார்த்த அவன் மேலும் குழம்பினான்.

"நீங்க செல்வி பாட்டி பேரனா" "செல்வி பாட்டியா" ஒன்றும் புரியாத நிலை அவனுக்கு.

"ஆமாம் உங்க பாட்டி பெயர் செல்வி காமாட்சி தானே"

"ஆமாம்" என்று குழம்பியவாறு கூறினான் பிரணவ்.

"ஒரு நிமிஷம்" என்று அவள் தனது அலைபேசியை செல்வி பாட்டியும் பார்வதி பாட்டியும் இருக்கும் படத்தை காட்டினாள் ரக்ஷிதா.

இப்போதும் குழப்பம் தீர்ந்தபாடில்லை அவனுக்கு.

"ஒன்னுமே புரியல எனக்கு, என்னனு சொல்லு"

மகிழ்ச்சி தாளவில்லை அவளுக்கு வாய் விட்டு சிரித்தாள்.

"ஓய் சொல்லிட்டு சிரி" லேசாக கோபம் கூட எட்டி பார்த்தது.

இன்னும் சிரித்தவளுக்கு கண்களில் கண்ணீர் தளும்பியது மகிழ்ச்சி மிகுதியால்.

"ரொம்ப நாளுக்கு அப்புறம் இப்பதான் இப்படி சந்தோஷமா சிரிக்கிறேன் பிரணவ். அதுவும் பாட்டி போனதுக்கு அப்புறம். அவங்க விஷயம் தெரிஞ்சதுக்கு பிறகு எனக்கு சிரிக்க முடியும் கூட தோனல. ஆனா இப்போ எனக்காக பாட்டி பார்த்த மாப்பிள்ளை நீங்க தான்னு தெரிஞ்ச அப்புறம் ரொம்ப சந்தோஷமா இருக்கு பிரணவ். பாட்டி என் கூட இல்லனாலும் அவங்க ஆசைப்பட்ட மாதிரி அவங்க தோழி செல்வி பாட்டியோட பேரன் எனக்கு மாப்பிள்ளையா வரது இன்னும் இன்னும் சந்தோஷம் பிரணவ். எனக்கு உங்கள கல்யாணம் பண்ணிக்கிறதுல பரிபூரண சம்மதம் பிரணவ்" என்று அவனை இறுக கட்டிகொண்டாள்.

அவளது மகிழ்ச்சி ஒவ்வொரு வார்த்தையிலும் புலப்பட்டது.

பிரணவ், பிரணவ் என்ற அவளது அழைப்பு அவனுக்கு கிறக்கத்தைக் கொடுத்து.

அவளது மகிழ்ச்சி அவனையும் தொற்றிக்கொண்டது.

சட்டென அவளை விலக்கி விட்டவன், டிவியில் பாடல் ஒன்று வைத்து, அவளையும் கைப்பற்றி எழுப்பி ஆடினான்.

"சிக்காத சிட்டொன்று கையில் வந்தால் நிற்காமல் பாட்டு வரும்" பாடல் ஓடியது.

ஆடிக் களைத்து இளைப்பாறி அமர்ந்தனர்.

"இப்ப சொல்லு நம்ம பாட்டிஸ் பற்றி" என்று அவளது கண்ணத்தில் விரலால் கோலம் இட்டவாறே கேட்டான் பிரணவ்.

"சொல்றேன் அதுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி போகணுமே" என்று அவனைப் போலவே அவனது முகத்திற்கு முன்பு ஆள்காட்டி விரலால் கொசுவர்த்தி சுருள் சுற்றினாள்.

அவளது செயலை கண்டு வாய்விட்டு சிரித்தான் பிரணவ்.

பாடல் இதோ:-

உனை அள்ளித்தானே
உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து
உதிராமல் காப்பேன்

அறியாமல் நான் இருக்க
அழகாக நீ திறக்க
காதல் மழை
ஆயுள் வரை தூருமடா

என்னை மறந்தாலும்
உன்னை மறவாத
நெஞ்சோடு நானிருப்பேன்

அன்பூரில் பூத்தவனே
என்னை அடியோடு சாய்த்தவனே
மழையூரின் சாரலிலே

என்னை மார்போடு சேர்த்தவனே
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 18:-

ஆறு மாதத்திற்கு முன்பு,
பார்வதி பாட்டியுடன் மதுரைக்கு ஒரு திருமணத்திற்கு சென்று இருந்தாள் ரக்ஷிதா.

ஒருநாள் முன்னதாகவே சென்று இருந்ததால் மீனாட்சி அம்மனை தரிசித்து விட்டு செல்லலாம் என்று எண்ணி கோவிலுக்கு வந்து இருந்தனர் இருவரும்.

அம்மனை தரிசித்து விட்டு பிரகாரத்தில் அமர்ந்தார்கள் பேத்தியும் பாட்டியும்.

அப்பொழுது அருகில் நிழலாட நிமிர்ந்து பார்த்தார்கள்.

"நீ பார்வதி தானே" என்று எதிரில் என்றவர் கேட்டார்.

"ஆமாம் நீங்க" என்று தயங்கியபடியே கேட்டார் பார்வதி பாட்டி.

"டீ நான் செல்வி காமாட்சி உன்னோட செல்வி" என்று உலுக்கினார் காமாட்சி என்கிற செல்வி காமாட்சி பாட்டி.

" டீ செல்வி நீ நல்லா இருக்கியா, இங்கதான் இருக்கியா, எத்தனை வருஷம் ஆச்சு, கொஞ்சம் மாறிட்ட, மத்தபடி அப்படியே என் செல்வி தான் ரக்ஷிமா நான் சொல்வேன்னில்ல என் தோழி செல்வி இவதான்" என்று ஆர்ப்பரித்தார் சிறுமியாக பார்வதி பாட்டி.

இரு தோழிகளும் கண்கள் கலங்கி அழுது விட்டனர்.

பின்னே எத்தனை வருட நட்பு, எத்தனை வருட ஏக்கம். இறப்பதற்கு முன் ஒரு முறையாவது இருவரும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே கனவல்லவா.

பரஸ்பர விசாரிப்புகளுக்கு பின் அமர்ந்து அத்தனை வருட கதைகளையும் கூறி அழுது, சிரித்து, மகிழ்ந்து, ஆற்றுப்படுத்தி என நேரம் போனதே தெரியவில்லை இருவருக்கும்.

இரண்டாவது முறையாக ராகவன் பெண் அழைப்பு என்று அழைக்கவே, மனமின்றி கிளம்பினர்.

கிளம்பும் தருவாயில், செல்வி பாட்டி, "டீ பாரு என் பேரனுக்கு உன் பேத்தி கட்டிக் குடுக்கிறியா" என்று அங்கேயே பெண் கேட்டார்.

அவருக்கு தனது பேரன் காதலுற்றது தெரியவில்லை. இல்லை என்றால் நிச்சயம் பெண் கேட்டிருக்க மாட்டார்.

இப்பொழுதுமே தெரியவில்லை புகைப்படம் அனுப்பிய வீரேந்திரன் தானே.

பார்வதி பாட்டியும் சட்டென்று யோசிக்காமல், பேத்தி வேண்டாம் என்று ஜாடை காட்டியதை கவனியாமல், சரி என்று விட்டார்.

ஆனால் அதை செல்வி பாட்டி கவனித்து விட்டார், "என் பேரன் போலீஸ், நல்லவன் உன்னை நல்லபடியா பார்த்துக்குவான்" என்று வாக்களித்தார்.

"இல்ல செல்வி பாட்டி எனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்ல அதான்" என்று தயங்கியபடியே கூறினாள்.

அவளது அவளது கூற்றில் சிரித்த செல்வி பாட்டி "இது சரியான வயசு தான் கல்யாணம் செஞ்சுக்கோ" என்றவர்,

"என் பேரன் நல்ல உயரம், மாநிறம் அழகு, என் போன் ரிப்பேர், இல்லனா அவன் படத்த உனக்கு காட்டிருப்பேன். நீ என் நம்பர் வச்சுக்கோ ஊருக்கு போயிட்டு போன் பண்ணுங்க சரியா" என்று கேட்டபடி தனது அலைபேசி எண் குடுத்தார்.

"என்னடா இது" என்று யோசித்தாள், ரக்ஷிதா.

"டீ செல்வி நாங்க நாலஞ்சு நாள்ல கல்யாணம் முடிச்சு ஊருக்கு போயிட்டு அப்புறமா முடிவு சொல்கிறோம்" என்றார் பார்வதி பாட்டி, பேத்தியின் மனநிலையை கருத்தில் கொண்டு சொன்னார்.

பின்னர் அடுத்த நாள் திருமணம் மற்றும் அது சார்ந்த விருந்துகளை முடித்து, ஊருக்கு புறப்படும் நேரத்தில், அந்த குழந்தைகளுடன் பேருந்து நிலையத்தில் அவள் இருக்கும் போது தான் அவளை இரண்டாவது முறை பார்த்து இருந்தான் பிரணவ்.

அனைத்தையும் கூறி முடித்தாள்.
"அன்றைக்கு நீ உன் பாட்டியோட இல்லையே" என்று யோசித்தவாறு கேட்டான்.

"பாட்டி ரெஸ்ட் ரூம் போய் இருந்தாங்க. நான் ராகவன் மாமாவோட வைஃப் அப்புறம் அவங்க மகள் வழி பேத்திங்களோட இருந்தேன்" என்றாள்.

"ஆனால் நீ மட்டும் தனியா பஸ்ல போனியே"

"அதுவா நான் மட்டும்தான் அன்றைக்கு கோயம்புத்தூர் கிளம்பினேன். பாட்டி, ராகவன் மாமா அப்புறம் அவங்க வாய்ப் கூட இன்னும் கோவில் எல்லாம் பார்க்கணும்னு சொல்லி அங்கேயே இருந்துட்டாங்க. நானும் அவங்களுக்காக காரை விட்டுட்டு ஊருக்கு வந்துட்டேன்" என்றாள்.

அவன் "இன்னும் ஒன்று" என்றான்.
என்ன என்பது போல் பார்த்தாள்.

"இல்ல என்னோட பாட்டி நம்பர் இருந்துச்சுல்ல உன்கிட்ட, ஏன் போட்டோ முன்னாடியே தரல" என்றான்.

லேசாக சிரித்தவள், "அது பொதுவாக மேரேஜ்ல இன்ட்ரஸ்ட் இல்ல. அதுவுமில்லாம அந்த ராகாவோட தம்பி அந்த விஷயம் வேற, அதை சொல்லாம எப்படி கல்யாணம் பண்ண, சோ கல்யாணம் பண்ண வேண்டாம்னு ஸ்ட்ராங்கா டிசைட் பண்ணி இருந்தேன், அதனாலதான். அதோட உங்க பாட்டி நம்பர் நான் மட்டும்தான் சேவ் பண்ணி இருந்தேன்".

"அதுவும் கூட மொபைல்ல வைரஸ் வந்து மொத்தமா போயிடுச்சு. சில போட்டோஸ் அப்புறம் ஒரு சில காண்டாக்ட்ஸ் மட்டும்தான் ரெக்கவர் பண்ண முடிஞ்சது. மறுபடியும் செல்வி பாட்டிய எங்களால் தொடர்பு கொள்ள முடியல. கிளம்புற அவசரத்துல அட்ரஸ் வேற வாங்கல. எங்க பாட்டி என்ன நல்லா திட்டிட்டாங்க அதுக்காக. நம்பர் போச்சு அட்ரஸ் வாங்கல நான் தான் என் செல்வியை பார்த்ததுல்ல மூள மயங்கி இருந்தா நீயும் இப்படி இருக்குற என்று சண்டை போட்டாங்க என்கிட்ட" .

"அப்புறம் பாட்டிதான் ராகவன் மாமா கிட்ட உங்க ஃபேமிலி பற்றி சொல்லி விசாரிக்க சொன்னாங்க. ஆனா ராகவன் மாமா வீட்ல எல்லாரும் வெளிநாடு போயிட்டாங்க. அவங்க மருமகள் டெலிவரி. இப்ப பத்து நாளைக்கு முன்னால தான் வந்தாங்க வந்தவுடனே, ஃபேமிலி பற்றி விசாரித்து போட்டோ அனுப்ப சொல்லவும், நானும் ரொம்ப யோசிச்சு இங்க வரதுக்கு முன்னாடி தான் அனுப்பினேன். அதுவும் பாட்டிக்காக தான் " என்று ஒரு நீண்ட விளக்கம் கொடுத்தாள் ரக்ஷிதா.

அவளுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்தவன், தானும் குடித்தான்.

மீண்டும் தண்ணீர் பாட்டிலை அவன் வைத்து விட்டு வர, கீழே காலில் அவனது பர்ஸ் தட்டுப்பட்டது.

எடுத்தவனுக்கு சட்டென்று அது தோன்ற "நீ என்னோட பர்ஸை பார்த்துட்டு ஏன் ஒன்னுமே சொல்லல" என்று கேட்டான்.

"என்ன சொல்ல"

தனது பர்சை திறந்து காட்டினான். என்ன என்று பார்த்து அதிர்ந்தாள்.

அதில் பிரணவ், அவனது அப்பா, அம்மா மற்றும் அவனது பாட்டி என குடும்ப சகிதமாக இருந்தனர்.

"ஐயோ நேத்து ரக்ஷிமான்னு நீங்க கூப்பிட்ட உடனே எனக்கு எதுவும் தோனலை, பாட்டி நினைவு வந்துருச்சு. எவ்வளவு காசு கொடுத்தேன் என்று கூட எனக்கு தெரியல" என்று பரிதாபமாகக் கூறினாள்.

"அது சரி" என்று பெருமூச்சு விட்டான் பிரணவ்.

"இதனையே நேத்தே பார்த்திருந்தால் நேத்து நைட்டு கிளம்பி இருக்கலாம்" கிண்டலாக கூறினான்.

கதவு தட்டும் சத்தம் கேட்டது திறந்தாள் ரக்ஷிதா.

அங்கு அவளது பையுடன் ஒருவர் நின்றிருந்தார்.

"உன்னோடது தான் வாங்கிக்கோ ரக்ஷி" என்றபடி வந்தான் பிரணவ்.

வாங்கியவள் கதவடைத்து திரும்பினாள்.

அவள் திறந்து பார்க்க, "நேரமாச்சு ட்ரெயினுக்கு கிளம்பலாம்" என்றான்.

"நான் துணி மாத்திட்டு வரேன்" என்றபடி நகர்ந்தாள்.

"மே ஐ ஹெல்ப் யூ" என்று விஷமமாக சிரித்தான்.

ரக்ஷிதா திரும்பி நின்று முறைத்தாள் அவனை.

"என்ன முறைக்கிற நீ எனக்கு டிரஸ் பண்ணி விட்டல்ல அது போலத்தான்" என்று சிரித்தான்.

ஒற்றை விரல் காட்டி மிரட்டி சிரித்தவள், உடைமாற்றி வந்தாள்.

அந்த ஹாலில் அவனும் தயாராகி டிராலியுடன் அமர்ந்திருக்க புருவம் சுருக்கி பார்த்தாள்.

"நான் பாட்டி, அம்மா, அப்பா எல்லார்கிட்டயும் பேசிட்டேன் இன்னும் பத்து நாள்ல நமக்கு கல்யாணம்" என்றான்.

விழிகள் தெறித்து விழும் படி பார்த்தாள் ரக்ஷிதா.

"அடேய் கால் மணி நேரத்துல கல்யாணத்தையே முடிவு பண்ணிட்டியே" என்று கிண்டலாக கூறினாள்.

"பின்ன நாங்களாம் பாஸ்டோ பாஸ்ட்" என்று தனது காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.

"நீங்க எங்க கிளம்பிட்டீங்க" என்று அவனது பயணப் பொதிகளை பார்த்து கேட்டாள்.

"அதுவா நாம ரெண்டு பேரும் மதுரைக்கு போறோம்".

"என்னது மதுரைக்கா அப்ப டிக்கெட் கோயம்புத்தூருக்கு போடலையா" என்று அதிர்ந்தாள்.

"இல்ல நீ எனக்கு ஓகே சொல்லலைன்னா என்ன பண்றது, அதனால உன்ன மதுரைக்கு கடத்திட்டு போய், ஃபேமிலி முன்னாடி நிக்க வச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அதனாலதான் மதுரைக்கு டிக்கெட் போட்டேன்" என்றான் சாதாரணமாக.

"ஆத்தி, கொஞ்சம் போலீஸ் மாதிரி நடந்துக்கோங்க" என்று வாயை பிளந்தாள் ரக்ஷிதா.

சிரித்தவன், "சரி போகலாம்" என்றான்.

இருவரும் ரயில் நிலையத்திற்கு சென்று, தங்களது பெட்டியை பார்த்து அமர்ந்து இருந்தனர்.

மற்ற பயணிகள் இன்னும் வந்திருக்கவில்லை. யாருமற்ற அந்த ஏகாந்தம் இனிமையை தந்தது.

"ட்ரெயின் நம்ம லைஃப்ல முக்கியமானதுல்ல" என்று கேட்டாள் ரக்ஷிதா.

"பின்ன என்னோட லாலிபாப்ப ஃபர்ஸ்ட்டா பார்த்தது இந்த மாதிரி ஒரு ட்ரெயின் டிராவல்ல தானே"

"முதல் நாள் பார்த்து ஒருத்தர விரும்புவேன்னு கனவுல கூட நினைக்கல, கல்யாணம் செஞ்சுக்க இப்படி அவர் கூட போவேன்ணும் நான் நெனச்சு பாக்கலை" என்றாள் கண்களில் காதலை சுமந்தபடி.

"நீ இன்னும் லவ்வே சொல்லலையே" என்றான் பிரணவ்.

குரலில் குறும்பு கூத்தாட, "உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா, மருகும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திட வா" என்று பாடினாள்.

"வாவ்" என்று வியந்தவன்,
"ஒத்திகை பார்த்துடலாமா" என்று கண்ணடித்து புருவத்தை ஏற்றி இறக்கினான் பிரணவ்.

"ஐயோ அது சும்மா பாட்டுக்கு" தினறலாய் சொன்னாள் பாவையவள்.

"ஆஹான்" என்றபடி கைகளை மடித்து விட்டு அருகில் வந்தவன், மீசையை நீவி விட்டபடி, அவளது மச்சத்தை பார்த்தான்.

"திஸ் இஸ் டெம்ட்டிங் மீ எ லாட்" என்று ஒற்றை விரல் கொண்டு வருடினான் மச்சத்தை.

கிறங்கியவள் அப்படியே இருக்கையில் சரிந்தாள்.

"ஓய் லாலி பப்பு" காதில் கிசுகிசுத்தான்.
விழிகள் மூடி பேசாமடந்தை ஆனாள் பெண்.

புன்னகைத்தவன், கன்னத்தில் தட்டி "என்ன ஆச்சு" என்று கேட்டான் குறும்பு கண்ணனவன்.

அதில் விழித்தவள் "மானம் போச்சு" என்று முனகியபடி பக்கவாட்டில் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

சத்தமிட்டு சிரித்தவன், அழுத்தமாக இதழ் பதித்தான் அவள் திரும்பியதில் தெரிந்த அந்த கழுத்து மச்சமதில்.

கதவு திறக்கும் ஓசை கேட்டு அவளை விட்டு விலகினான் பிரணவ்.

ட்ரெயின் நகர்ந்தது அவனது ஊரை நோக்கி.

பாடல் இதோ:-

மின்னும் பனிச் சாறு
உள் நெஞ்சில் சேர்ந்தாளே

கண்ணில் உன்னை வைத்து
பெண் தைத்துக் கொண்டாளே

வெண்ணிலா தூவி தன்
காதல் சொன்னாளே

மல்லிகை வாசம் உன்
பேச்சில் கண்டாளே

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா

மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா

சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா

சொல்லா சொல்லும் என்னை

வாட்டும் ரணமும் தேனல்லவா
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 19:-

இதோ மீண்டும் ஒரு பயணம்.
கார் பயணம். அவள் மட்டும் தனியே கண்களில் கனவுகள் சுமந்தபடி.

ஆம் கல்யாண கனவுகள் தான். நாளை மறுநாள் திருமணம் என்ற நிலையில், அவள் ஊருக்கு வந்தாள். பிரணவின் ஊருக்கு தான்.

ஒரு வாரத்திற்கு முன்பு பிரணவுடன் அவன் வீட்டிற்கு சென்றவளை பார்த்து முதலில் அதிர்ந்தனர் அவனது பெற்றோர்கள் இருவரும்.

பின்னே தனது காதலியை அழைத்து வருகிறேன் என்று கூறிய மகன், தாங்கள் பார்த்த பெண்ணையே அழைத்து வந்தால் ஆச்சர்யத்தோடு அதிர்ச்சியும் அடைவார்கள் தானே .

பிரணவ் ரக்ஷிதாவை காதலி என்று சொல்லி தான் அழைத்து வந்திருந்தான்.

அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரவே அப்படி செய்தான்.

சாரதா தான் முதலில் சுதாரித்துக்கொண்டு "வாம்மா"என்று கைப்பற்றி அழைத்தார்.

வீரேந்திரன் தன் மகனைப் பார்த்து "என்னடா, இது எப்படி" என்று ஆச்சரியமாக வினவினார்.

"அதுப்பா"என்று ஆரம்பித்த பிரணவ் அனைத்தையும் கூறி முடித்தான்.
சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

புதிதாகப் பார்ப்பவர்கள் போல்
இல்லாமல் இயல்பாக ஒருவரை ஒருவர் ஏற்று பழகினர்.

செல்வி பாட்டியை மட்டும் காணவில்லை.

"என்ன அத்தை பாட்டியை காணோம்" சாரதாவை கேட்டாள் ரக்ஷிதா.

அதேநேரம் பாட்டியை அழைத்துக் கொண்டு பேரன் வந்தான்.

செல்வி பாட்டியோ எடுத்தவுடன் "பார்வதி எங்கே" என்றுதான் கேட்டார்.

"பாட்டி அது வந்து" என்று தயங்கிய ரக்ஷிதா, பார்வதி பாட்டி பற்றி அனைத்தையும் கூறினாள்.

"கண்கள் கசிந்து வழிவதை கூட பொருட்படுத்தாமல் இருக்கையில் தளர்வாக சாய்ந்து அமர்ந்தார்" செல்வி பாட்டி.

தோழியை பற்றிய செய்தி அவரை வெகுவாக பாதித்தது என்று தான் சொல்ல வேண்டும். சற்றே தளர்ந்து போனார்.

"ஏன் இத்தனை நாளா என்ன பாக்க வரல கடைசியில் என்னை பார்க்காமலே போய்விட்டாளே" என்று அரற்றினார் செல்வி பாட்டி.

"பாட்டி இதுக்கு காரணம் நான்தான். நம்பர் தொலைச்சுட்டேன். அதுவுமில்லாமல் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கல. அப்போதைக்கு உங்க விலாசமும் தெரியல. ஊர் பேர் தெரியும் வந்து தேடி பார்த்து இருக்கலாம் தான், என் தோழியோட பேரனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்ற, நான் எப்படி அவளை பார்ப்பேன்னு சொல்லியே வர மறுத்துட்டாங்க என்னோட பாட்டி" ரக்ஷிதா அழுதாள்.

"பார்வதி என்ன பாக்க சங்கடப்பட்டு இருக்கமாட்டாள். உன்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கத் தான் போராடிட்டு இருந்திருப்பாள்" சரியாக தனது தோழியை கணித்தார் செல்வி பாட்டி.

காலங்கள் கடந்து, கோலங்கள் மாறினாலும் நேசம் கொண்ட நட்பு இதயத்தின் புரிதலில் என்றுமே மாற்றமில்லை.

பின்பு திருமணம் பற்றி திட்டமிடலானார்கள்.

செல்வி பாட்டியை மட்டும் வெகுவாகத் தேற்ற வேண்டி இருந்தது.பார்வதி பாட்டி நினைவுகளில் அவ்வப்போது மறுகுவார்.

ரக்ஷிதாவிற்கும் தனது ஒரே ஒரு சொந்தமான பார்வதி பாட்டி இல்லையே என்ற கவலை, அதுவும் திருமண சமயத்தில் இல்லையே என்ற கவலை வெகுவாக ஆட்டிப்படைத்தது.

ஒரே ஒருநாள் மட்டும் அங்கு தங்கியிருந்துவிட்டு கோயம்புத்தூருக்கு தனது அலுவலை பார்க்க கிளம்பிவிட்டாள்.

இடைப்பட்ட நாட்களில் அலைபேசியில் காதலை வளர்த்தனர் ரக்ஷிதா மற்றும் பிரணவ்.

இதோ இன்று தனக்கென ஏற்பாடு செய்த வீட்டிற்கு வந்து விட்டாள்.

ஒரு குளியலைப் போட்டவள், நன்றாக தூங்கி எழுந்தாள். தனது பக்கம் அனைத்தையும் ராகவன் மாமா பார்த்துக் கொள்வதாக கூறவும் சற்று கவலை இன்றி இருந்தாள் ரக்ஷிதா.

திருமணத்திற்கு முதல்நாள் குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு முடிந்தது.

திருமண நாள் அழகாக விடிந்தது.
பிரணவ் மற்றும் ரக்ஷிதா இருவரும் மிகவும் எதிர்பார்த்து இருந்த நாள்.

சொந்தங்கள் அனைவரும் கூடி இருக்க.

பட்டு வேஷ்டி சட்டை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் கம்பீரமாக அமர்ந்து இருந்தான் பிரணவ்.

அவனருகில் சிகப்பு வண்ண பட்டு சேலையில் சர்வ அலங்காரத்துடன் பேரழகியாக வீற்றிருந்தாள் ரக்ஷிதா.

அவனில் கவரப்பட்டு விழி எடுக்காமல் பார்த்தவளை கண்டு கண் சிமிட்டினான்.

அவளை சற்று நெருங்கியவன் "அநியாயத்துக்கு அழகாக இருக்கடி" என்றான்.

நாணம் கொண்ட பாவை செவ்வானம் ஆனாள்.

அதேநேரம் அங்கு ஆர்ப்பாட்டமாக "டேய் வீரேந்திர எப்படி சரியா வந்தேன் பார்த்தியா. பையனுக்கு திடீர்னு கல்யாணம் வான்னு கூப்பிட்ட நல்லவேளை லீவுல இருந்தேன் இல்லனா வந்திருக்க முடியாது" என்றபடி வந்தார் வீரேந்திர நண்பர்.

அந்த சத்தத்தில் தெளிந்த மனமக்கள் அவரை கவனித்தனர்.

அவர் அருகில் நின்றிருந்த அந்த நபரை கவனித்த ரக்ஷிதா மின் அதிர்வு தாக்கப்பட்டது போல் எழுந்தாள்.

அவள் எழவும் பிரணவும் எழுந்தான்.
வேகமாக அருகில் வந்தவர் "கல்யாணம் நல்லபடியா முடியட்டும்" என்றார் பார்வதி பாட்டி.

வரும்பொழுது அனைத்தையும் கவனித்து இருந்தார் அவர்.

ஆம் வீரேந்திரனின் நண்பர் உடனும்
அவர் மனைவியுடனும் வந்தது பார்வதி பாட்டியே.

செல்வி பாட்டி, பார்வதி பாட்டியின் அருகில் நின்று ஆதரவாக கைப்பற்றிக் கொண்டார்.

தனது பாட்டி இல்லையே என்று இருந்த ஒரே ஒரு மனக்கலக்கமும் மறைந்து, சந்தோஷமாகவே பிரணவின் கைகளால் தாலி வாங்கிக் கொண்டாள் ரக்ஷிதா.

தாலி கட்டுதல், அதன் பின்னான சடங்குகள் முடிந்து, சாமியை தரிசித்து விட்டு அனைவரும் மாப்பிள்ளையின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

வீடு வந்த மணமகள் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

ரக்ஷிதாதா பாட்டியை கட்டிக்கொண்டு அழுதே விட்டாள்.

ஒருமாதமாக ஒரு தகவலும் இல்லாமல் இறந்து விட்டதாக கூட முடிவுக்கு வர முடியாமல் தவித்த தவிப்பு, அவளது கவலை அனைத்தும் தண்ணீராய் கரைந்தது.

இதோ இன்று தனக்கு நடந்த திருமணத்தில் பரிபூரண சம்மதம் இருந்தாலும், சந்தோஷம் என்பது கொஞ்சம் குறைவாகவே இருந்தது தனது பாட்டி இல்லை என்பதால்.

அதனை யாரிடமும் சொல்லாமல் தனக்குள்ளேயே மறைத்திருந்தாள் ரக்ஷிதா.

தனது மனைவியின் நிலையை கண்டு கொண்டு அவளை தேற்றினான் பிரணவ்.

தன் மனைவியை தேற்றிய பிரணவ் தன் அருகிலேயே அமர்த்திக் கொண்டான்.

பாட்டிகள் இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டனர். வீரேந்திரனும் சாரதாவும் வந்தவர்களை உபசரித்து அனுப்பி விட்டு வந்து அமர்ந்தனர்.

மேலும் அங்கு ராகவன் மற்றும் வீரேந்திரனின் நண்பர் அவரது மனைவியும் இருந்தனர்.

பார்வதி பாட்டி சொல்ல ஆரம்பித்தார்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு காசிக்கு யாத்திரையாக ரக்ஷிதாவையும் மீறி கிளம்பி போனார் பார்வதி பாட்டி. குழுவாகத்தான் போனார்கள்.

ரக்ஷிதா அவரது வயதையும் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு முற்றிலுமாக மறுத்தாள்.

ஆனால் பார்வதி பாட்டி, அவள் திருமணம் செய்து கொண்டால் தான் நல்ல முறையாக வீடு திரும்பி வருவேன் இல்லையேல் கங்கையோடு போய்விடுவேன் என்று வார்த்தையை விட்டார்.

அவர் அறியவில்லை அப்பொழுது அது தான் நிகழப்போகிறது என்று.

அனைத்து கோவில்களும் தரிசித்து விட்டு கங்கையில் குளித்த போது, ஆற்றில் திடீரென்று வெள்ளம் பெருக்கெடுக்க, பார்வதி பாட்டியால் நீந்த முடியாமல் அந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

மீட்பு பணியினர் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை பார்வதி பாட்டி.

குழுவில் இருந்த மற்றவர்கள் மேலும் இரண்டு நாட்கள் தேடி பார்த்து விட்டு அங்கு இருந்த காலநிலை ஒத்துக்கொள்ளாமல் ஊர் திரும்பினார்கள்.

ஊருக்கு வந்தவர்கள் ரக்ஷிசிதாவிடம் பாட்டி அன்று ஆற்றோடு போய் விட்டார் என்று தெரிவித்து விட, அவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாத கையறுநிலை.

கடந்த ஒரு வாரத்தில் தான் சற்று இயல்பு நிலைக்கு திரும்பினாள்.

ஆயினும் அவள் உள்ளுணர்வு ஏதோ உணர்த்திக் கொண்டுதான் இருந்தது. அது இப்பொழுது தான் புரிந்தது.

ரக்ஷிதா "எப்படி நீங்க இவங்க கூட" என்று கேள்வியாக வீரேந்திரனின் நண்பரை பார்த்தாள்.

"அது உங்க பாட்டி கரை ஒதுங்கி இருந்த இடத்தில் இருந்து கொஞ்சம் தூரம் தான் எங்க வீடு. நான் சாயந்திரமா வாக்கிங் போனேன் அப்போ தான் உங்க பாட்டிய பார்த்தேன். உடனே ட்ரீட்மெண்ட் கொடுத்தோம் ரெண்டு நாளாச்சு கண் முழிக்க. அப்புறம் ஜண்ணி மாதிரி ஜுரம் கண்டு ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. மயக்கத்துல கூட ரக்ஷிமான்னு உங்க பேரு தான் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. இப்போ ஒரு நாலு நாளா தான் ஓரளவு இயல்பாய் இருக்காங்க" என்றார் வீரேந்திரனின் நண்பர்.

"அவங்க கண்ணு முழிச்சதுல இருந்து உங்ககிட்ட தான் வரணும்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. நான் தான் கண்டிப்பா கூட்டிட்டு போறேன் இன்னும் கொஞ்சம் உடம்பு குணமாகட்டும் என்று சொன்னேன். உங்க நம்பரும் சரியா அவங்களால சொல்ல முடியல, முக்கால்வாசி நேரம் தூக்கத்துல தான் இருந்தாங்க" என்று இப்பொழுது கூறினார் நண்பரின் மனைவி.

பாட்டியோ "இங்க இவங்க நண்பரோட பையனுக்கு கல்யாணம் அதை முடிச்சுட்டு கோயம்புத்தூர் கூட்டிட்டு போறேன்னு சொல்லி கூட்டிட்டு வந்தாங்க. வந்து பார்த்தா என் பேத்தி மனபொண்ணூ முதல்ல அதிர்ச்சி அப்புறம் செல்வி, ராகவன் இவங்கள எல்லாம் பார்த்த உடனே புரிஞ்சுகிட்டேன். காசி விஸ்வநாதர் கிட்ட வேண்டின மாதிரி என் பேத்தியை மணக்கோலத்தில் பார்த்து விட்டேன், இனி செத்தாலும் ஒன்னும் இல்லை" என்று உணர்ச்சி மிகுதியாக கூறினார் பார்வதி.

"என்ன பேச்சு இது" என்று செல்வி பார்ட்டி அணைத்து ஆறுதல் அளித்தார்.

"பாட்டி இப்படி எல்லாம் பேசாதீங்க" என்று கண் கலங்கினாள் ரக்ஷிதா.

பிரணவ் "என்ன பாட்டி நீங்க எங்க புள்ளைங்க எல்லாம் பார்க்கவேண்டாமா வளர்க்க வேண்டாமா" என்று கேட்டவன்
"நானும் ரக்ஷிசிதாவும் நாலு பிள்ளைங்க பெத்துக்க போறோம்"

"என்ன ரக்ஷிதா ஆமாம் தானே" அவள் புறம் திரும்பி கண்ணடித்து, மீண்டும் பாட்டியிடம் திரும்பி

"நீங்க, காமு டார்லிங், எங்க அம்மா, அப்பா எல்லோரும் சேர்ந்து தானே வளர்க்கணும் இப்படி எல்லாம் சொல்லாதீங்க சரியா" என்று சூழ்நிலையை இலகுவாக்கினான்.

அதில் அனைவரும் சிரித்தனர்.

ரக்ஷிதா வீரேந்திரன் நண்பர் மற்றும் அவரது மனைவிக்கு நன்றி உரைத்தாள்.

மாலை மயங்கும் நேரம், அனைவரும் சற்று ஓய்வு எடுத்து முடித்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர்.

இரவு வந்துவிட உணவு தயாரித்து உண்டு முடித்தனர்.

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த அறையில் பூவை அவளும் பூம்பாவையாகவே மிளிர்ந்தாள்.

கதவை திறந்து உள்ளே வந்தான் பிரணவ். ஜன்னலில் வெள்ளி நிலவை பார்த்து கொண்டு இருந்த பாவையவள், கதவு திறந்த சத்தம் கேட்டு திரும்பினாள்.

வெள்ளை வேஷ்டி சட்டையில் கம்பீரமாக வந்தவனை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அருகில் நெருங்க நெருங்க பார்வையைத் தழைத்துக் கொண்டாள் ரக்ஷிதா.

நெருங்கி வந்தவன் ஒற்றை விரலால் முகம் நிமிர்த்திப் லவ் யூ டி லாலிபப் என்று உச்சி முகர்ந்தான்.

மெல்ல இதழ் பிரித்து சிரித்தாள்.

"ஒரு முத்தம் தரலாமே" என்று காதோரம் கோரிக்கை வைத்தான்.

அவனது கையைப் பிடித்தவள், உள்ளங்கையில் அழுத்தமாக இதழ் பதித்தாள்.

அதில் சிலிர்த்தவன் "திஸ் இஸ் நாட் ஃபார், முத்தம் குடுக்க இடமா இல்லை " என்று குறும்பாக சிரித்தான்.

அதில் முறைத்தாள் ரக்ஷிதா.

இன்னும் பெட்டரா கிஸ் பண்ணி இருக்கலாம் என்று கிண்டலடித்தன் பிரணவ்.

"எனக்கு அவ்வளவுதான் தெரியும்" என்று அழகு காட்டினாள்.

"அதுக்குதான் மாமன் இருக்கிறேனே" சிரித்தபடியே அவளை கையில் ஏந்திக் கொண்டான் பிரணவ்.

சட்டென அவ்வாறு செய்வான் என்று என் எதிர்பாராத அவள், அவனை இறுகப் பற்றிக் கொண்டாள்.

இங்கு யார் சொல்லிக் கொடுத்து யார் கற்றுக் கொண்டார்கள் என்று அவர்களுக்கே வெளிச்சம்.

இனி அங்கு அனைத்தும் ரகசிய பரிபாஷைகளே.

அவன் அவளை படித்தான். தனது லாலிபப்பிடம் இன்னும் இன்னும் கிறங்கிப் போனான் பிரணவ்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உணர்வுகளால் காட்டாற்று வெள்ளமாக அடித்துச் செல்லப்பட்டாள் பெண்ணவள்.

ஆர்ப்பரித்த உணர்வுகள் அடங்கலாக இருவரும் இணைந்தே கரை சேர்ந்தனர்.

இருவரது இல்லறமும் நல்லறமாக இனிதே துவங்கியது.

காதலுடன் நட்புமாய் வாழ வாழ்த்துவோம்.

பாடல் இதோ:-

அடிதொட முடிதொட
ஆசை பெருகிட
நேரும் பலவித பரிபாஷை

பொடிபட பொடிபட
நாணம் பொடிபட
கேட்கும் மனதினில் உயிரோசை

முடிதொட முகந்தொட
மோகம் முழுகிட
வேர்க்கும் முதுகினில் இதிகாசம்

உருகிடஉருகிட
ஏக்கம் உருகிட
கூடும் அனலிது குளிர்வீசும்

குலுங்கினேன் உடல் கூசிட
கிறங்கினேன் விரல் நீந்திட

மயங்கினேன் சுகம் சேர்ந்திட
தளும்பினேன் எனை நீ தொட
பாய்ந்திட ஆய்ந்திட

காணுகின்ற காதல் என்னிடம்

நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
எப்பிலாக்:-

ஐந்து மாதங்களுக்குப் பிறகு,

கோயம்புத்தூரில் அந்த வீட்டின், முன் தோட்டத்தில் செல்வி பாட்டியும் பார்வதி பாட்டியும் அமர்ந்து இருந்தனர்.

அவர்களது பொழுது பசுமையான நினைவுகளுடன் இனிதே சென்றது.

தோழிகள் இருவர் இணைந்தால் அங்கு பேசிக்கொள்ள ஓராயிரம் விஷயங்கள் உண்டு அல்லவா.

அப்படிதான் பார்வதி பாட்டியும் செல்வி பாட்டியும் தங்களது பொழுதை இனிதே கழித்தனர்.

கோவிலுக்கு செல்வது, வீட்டிலே செஸ் கேரம் என்று விளையாடுவது, புத்தகங்கள் படிப்பது, தங்களுக்கு பிடித்த பாடல்களைக் கேட்பது என்று தங்களது பொன்னான நேரத்தை செலவிட்டனர்.

பாட்டிகள் இருவரும் பேரன், பேத்திகளுடன் தங்கிகொண்டனர்.

வீரேந்திரன் சாரதா தம்பதியினர் அங்கு மதுரையிலே இருந்து கொண்டனர்.

சாரதாவும் ரக்ஷிதாவும் அலைபேசியில் மணிக்கணக்கில் தங்களது பாசப்பயிரை வளர்த்தனர்.

மாமியார் மருமகள் போல அல்லாமல் தோழிகளாகவே பழகினர்.

நட்புக்கு வயது வித்தியாசம் தேவையில்லை அல்லவா, இங்கு இவர்களும் அப்படியே.

மாமனாரும் மருமகளும் இயற்கை விவசாயத்தைப் பற்றி ஒரு ஆராய்ச்சியே நடத்திக் கொண்டிருந்தனர்.

தங்களது நிலத்திலும் அதை பரிட்சித்து பார்த்தார்கள். வெற்றிகரமாக இருவரும் விவசாயத்தில் புதுப்புது உத்திகளைக் கையாண்டனர்.

வாழ்க்கை அழகாகவே சென்றது ரக்ஷிதா மற்றும் பிரணவ் இருவருக்கும்.
தினம் தினம் புதிது புதிதாக காதல் பாடம் பயின்றனர்.

ரக்ஷிதா அவனை பெரும்பாலும் "டா" போட்டு விளிப்பாள். அது பிரணவிற்கும் பிடிக்கும்.

பகலில் வாங்க போங்க என்று சொல்பவள் இரவில் "டா" என்றே அழைப்பாள். அந்த "டா" அவனுக்கே அவனுக்கான பிரத்தியேகமான அழைப்பாக இருக்கும்.

இருவருக்குமான அந்த நெருக்கமான தருணங்களில் "டா" என்ற அந்த அழைப்பு கொஞ்சலாகவும், சினுங்களாகவும், அதட்டலாகவும் அந்த அறையையே நிறைத்திருக்கும்.

அழகாக தங்களது வாழ்க்கையை
வாழ்ந்தனர் இருவரும்.

அந்த மாலை நேரத்தில்,
செல்வி பாட்டியும் பார்வதி பாட்டியும் அமர்ந்து தேனீர் அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த இரு சக்கர வாகனம் வேகமாக வந்து, நேராக வீட்டின் முன் சட்டென்று நின்றது.

"இவ்வளவு வேகமா வண்டி ஓட்ட வேண்டாம்னு சொன்னா கேட்கிறானா பார்" செல்வி பாட்டி சடைத்துக் கொண்டார்.

"காமு டார்லிங் ஐ லவ் யூ" என்ற பதிலுக்கு கண்ணாடிதான் பேரன்.

அதைப் பார்த்து பார்வதி பாட்டி வாய்விட்டு சிரித்தார்.

பிரணவிற்கு பதவி உயர்வுடன் கூடிய பணிமாற்றம் கிடைத்துள்ளது கோவைக்கு.

பார்வதி பாட்டியிடம் நலம் விசாரித்தான் பிரணவ்.

"முதல்ல உன் பொண்டாட்டிய போய் பாரு. ரெண்டு நாளா சரியில்லை சோர்வா தெரியுறா, உன்ன ரொம்ப தேடுறா போல" என்றார் செல்வி பாட்டி.

"ஆமா தம்பி கொஞ்சம் கோவமா வேற இருக்கா. நேத்தே வரேன்னு சொல்லிட்டு நீங்க வரலைன்னு கொஞ்சம் டென்ஷனா இருக்கிறா" என்றார் பார்வதி பாட்டியும்.

"இதோ" என்று விடை பெற்றவன், வேகமாக மாடி ஏறினான் அவன்.

வண்டியில் வரும்போது கண்டுவிட்டான்.
கோபத்தில் மாடியில் நடைபயின்றுக் கொண்டிருந்த மனையாளை.

"ஹலோ மேடம்" என்று அழைத்து குறும்பாக சிரித்தான்.
முறைத்தாள் அவள்.

"உனக்கு ஒரு சர்ப்ரைஸ்" என்று சொன்னான்.
என்ன என்பது போல் பார்த்தாள்.

"ராகாவுக்கும் அவங்க தம்பிக்கும் இனி சிறைவாசம் தான் உன் அம்மாவோட இறப்புக்கு தண்டனை. கேஸ் முடிஞ்சிடுச்சு" என்றவனை, கண்ணீர் மல்க பார்த்தாள். தனக்காக பார்த்து பார்த்து செய்யும் கணவனை பெருமிதமாக உணர்ந்தாள் அவள்.

"அதான் இரண்டு நாள் அதிகமான வேலை சரியா பேச கூட முடியல"என்று வருத்தமாக கூறினான்.

"ஆமா ஏன் நீ டல்லா தெரியுற. பாட்டி வருத்தப்படுகிறார்கள் பாரு. ஒழுங்கா சாப்பிட்டு இரு இப்படி இருக்காதே" மேலும் வருத்தப்பட்டான்.

அவளோ புன்னகை முகமாக "நாலில் ஒன்று ஓகே" என்றபடி அவனது கையை பற்றி வயிற்றில் அழுத்தினாள்.

"ஹே" என்று குதுகளித்தவன், அவளை கைகளில் ஏந்திக் கொண்டான்.

பாட்டிகள் இருவரும் புது வரவை எண்ணி பூரித்தனர்.

பத்து வருடங்கள் குறைந்தது போல் ஆர்ப்பரித்தனர் இருவரும்.

வீரேந்திரனும் சாரதாவும் மகனையும் மருமகளையும் வந்து பார்த்து சென்றனர்.

ராகாவுக்கும் அவரது தம்பிக்கும் சிறை தண்டனை கிடைத்தது.

அடுத்தவரை அடித்து உலையில் போட்ட வாழவேண்டும் என்று நினைத்தவருக்கு காலம் தக்க தண்டனை தந்தது.

இளமை காலத்தில் கிடைக்கும் தண்டனையை விட வயதான காலத்தில் கிடைக்கும் தண்டனையின் வீரியம் அதிகம் அல்லவா.

ராமநாதன் வாழ்க்கை வெறுத்தவர் எங்கோ வடக்கு பக்கம் சென்று விட்டார்.

ஒரு காலத்தில் பணமும் பேருமாய் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவர், இன்று பரதேசி கோலம் கொண்டு, என்ன செய்வதென்றே புரியாமல் மனம் பிறழ்ச்சியில் புத்தி சுவாதீனம் இல்லாமல் எங்கோ இருக்கிறார்.

வாழ்க்கை அவருக்கும் தக்க பாடம் கற்றுக் கொடுத்து விட்டதோ என்னவோ.

ராகா மற்றும் இராமநாதன் இருவருக்கும் பிறந்த சீமந்த புத்திரன், இருந்த கொஞ்ச நஞ்ச சொத்துக்களையும் விற்று தீர்த்து வெளிநாடு சென்று விட்டான் என்று கேள்வி.

சுயநலமான பெற்றோரின் பிள்ளையும் சுயநலமாக தன்னை மட்டுமே பேணுபவனாகத்தான் இருப்பான்.

கோகிலம் பாட்டி ஒருநாள் தூக்கத்திலேயே மாரடைப்பு வந்து இறந்து விட்டார். அவர் இறந்து இரண்டு மாதங்கள் கழிந்து இருந்தது.

கர்மா, கடவுள் என்பதைவிட அவரவர்களின் செயல்களே பலன்களாக காலம் அவர்களுக்கு அள்ளித்தரும்.

துவண்டு இருந்த காலங்களில் எல்லாம் தோழியின் முகமே, வாழ்க்கையே வாழ்க்கை வாழ பார்வதி பாட்டிக்கு ஒரு உந்துசக்தியாக தெம்பை அளித்தது என்றால் மிகையாகாது.

வாழ்வில் என்றேனும் ஒரு நாள் சந்திப்போம் என்ற நம்பிக்கையே மீண்டும் அவர்களை சந்திக்க வைத்தது.

காலங்கள் கடந்து தோழிகள் இருவரின் நட்பு காவியமாய்.

பாடல் இதோ:-

அன்பாலே அழகாகும்
வீடு ஆனந்தம் அதற்குள்ளே
தேடு

சொந்தங்கள் கை சேரும்
போது வேறொன்றும்
அதற்கில்லை ஈடு

மாறாமல் வாழ்வுமில்லை
தேடாமல் ஏதுமில்லை நம்பிக்கை
விதையாகுமே

கலைகின்ற மேகம்
போலே காயங்கள் ஆறிப்போக
மலரட்டும் எதிர்காலமே

பாசமே கோவில்
என்று வீட்டிலே தீபம்
வைத்தால் கார்த்திகை

தினந்தோறுமே
 
Last edited:
Status
Not open for further replies.
Top