ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

முன் தினம் பார்த்தேனே கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 6:-

காவல் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தவன் தன்னிடம் இருந்த சாவியை கொண்டு உள்ளே நுழைந்தான்.

அவள் பார்க்கும் முன்பே குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

ஆங்காங்கே இருந்த ரத்த கரையை போக்கவே மீண்டும் குளிக்கச் சென்றான்.

குளித்துவிட்டு வந்தவன் மனதில் சட்டென குறும்புத்தனம் வந்தது.

குளித்துவிட்டு அறையில் இருந்து வந்தவன் வெற்றுடம்பில் முழங்கால்வரை ஷார்ட்ஸ் அணிந்து இருந்தான்.

கையில் சட்டை எடுத்துக் கொண்டு அவளை நோக்கி வந்தவன். "இந்தா இந்த சட்டைய எனக்கு போட்டுவிடு" என்றான்.

"எதே" என்று அதிர்ந்து இரு அடிகள் பின்னே சென்றாள்.

மீண்டும் "சட்டை போட்டு விடு" என்றான்.
"இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல"

"எனக்குதான் கையில் காயம் பட்டு இருக்கில்ல அப்ப நீ தான் ஹெல்ப் பண்ணனும் உன்னாலதானே ஆச்சு" என்று வேண்டுமென்று கூறினான்.

"அது சரி, குடுங்க" என்று மெல்லிதாக முனகியவள், அவனை நிமிர்ந்தும் பாராமல் அந்த சட்டையை வாங்கினாள்.

"எம்மா காலைல அவனே டிரஸ் பண்ணிக்கிட்டானே மறந்துட்டியா" அவனது மனசாட்சி அவளிடம் கேட்டது.

தன்னவள் தனக்கு உடை அணிவித்துவிட போகிறாள், என்பதிலேயே குஷியானான்.
மேலும் அவளை நெருங்கி நின்றான், அவளோ எதுவுமே உணராதவளாக அடிப்பட்ட கையில் சட்டையை நுழைத்தாள்.

அவளது வாசனை நுகர்ந்தவன் மனம் தள்ளாடியது. சொக்கா உன் திருவிளையாடலை இந்த அப்பாவியிடம் தான் காமிக்கனும்மா, மனதில் நொந்து போனான். அவனது மனசாட்சியோ, அனுபவி நல்லா அனுபவி என்று சிரித்தது.

அவனால் ஒற்றை கையிலே சட்டையை அணிந்து கொள்ள முடியும், ஆனாலும் ஆசை யாரை விட்டது...

அவள் சட்டை பட்டன்களை போட்டு விட இன்னும் அருகில் நெருங்கி வந்தாள். அவளது அந்த நெருக்கம் அவனை இம்சித்தது.

ஹார்மோன்கள் தாறுமாறாக சுரந்தது. குப்பிட் (அதானுங்க அந்த காதல் கடவுள்) ஓவர் டைம் ஆக வேலை செய்கிறார் போலும் அவனுக்கு.
கைகளை இறுக்கி மூடியவாறு நின்றிருந்தான்.

சட்டையை போட்டு முடித்தவள்,"அடுத்து என்ன" என்று வேடுக்கென கேட்டாள்.

"என்னென்னமோ செய்ய தோணுது ஆன முடியல" என்று முணுமுணுத்தபடி, இல்லை என்று இரு புறமும் தலையசைத்தான்.

நல்லவேளையாக அது அவளது காதுகளுக்கு சென்றடையவில்லை.

இல்லையென்றால் பரதநாட்டியம் குச்சிப்புடி கதகளி என்ற அத்தனை நடனத்தையும் அவனை படுக்க போட்டு அவன் மீது ஆடி இருப்பாள் நம் நாயகி.

மீண்டுமாய் அலைபேசி அடித்தது, அவளது தந்தை அவளுக்கு மீண்டும் அழைத்தார்.

அந்தப்பக்கம் என்ன கூறப்பட்டதோ, இவளுக்கு சட்டென கோபம் மூண்டது.

"என் விஷயத்துல தலையிடாதிங்கன்னு எத்தனை தடவை நான் சொல்றது. ப்ளீஸ் என்னை இப்படியே விட்ருங்க" என்று எரிச்சலாக கூறினாள்.

"ஏற்கனவே ராகவன் மாமா எல்லாம் பார்த்துட்டு இருக்காங்க. நீங்க எனக்காக ஒன்னும் செய்ய வேண்டாம்" அழுத்தமாக கூறி போனை வைத்தாள்.

பிரணவ் அவளது கோபத்தை திசை திருப்ப எண்ணி "இவ்ளோ நேரம் என்ன பண்ண" என்று கேட்டான்.

"அதுவா மதியம் சமையலுக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சு வெச்சேன், அப்புறம் இதோ ஹால்ல உங்க போட்டோ நல்லா இருந்துச்சு அதான் பாத்துட்டு இருந்தேன். நீங்க அம்மா அப்பா மூணு பேரும் ரொம்ப அழகான குடும்பம்" என்றாள். அதில் ஏக்கமும் இழையோடியதோ.

"ஆமா நானு அம்மா அப்பா பாட்டி நாங்க நாலு பேர் சின்ன குடும்பம் தான், அப்பா வீரேந்திரன் மிலிட்டரி, சின்ன ஆக்ஸிடன்ட் ஆச்சு இப்போ ஊரில விவசாயம் பார்க்கிறார். அம்மா சாரதா ஸ்கூல் டீச்சர், சின்ன பசங்களுக்கு பாடம் எடுப்பாங்க, பாட்டி அந்த காலத்து பியூசி, என்னோட செல்லம்" என்று கண்கள் மின்ன கூறிக் கொண்டே சென்றான்.

அவன் தனது பாட்டியின் பெயரையும் அவரைப் பற்றியும் சொல்ல வருவதற்கு முன்பு ஆர்வமாக, தனது பாட்டியை பற்றி இவளாக சொன்னாள்.

"எனக்கும் எங்க பாட்டின்னா ரொம்ப பிடிக்கும். என் பாட்டி கிட்ட தான் நான் வளர்ந்தேன். எனக்கும் பாட்டி தான் சொல்லம், நான்தான் அவங்களுக்கும் செல்லம்" என்று கண்கள் பனிக்க கூறினாள்.

"ஆனா அவங்க இப்ப இல்ல" என்று கூறிப் பெருமூச்சு விட்டாள். "ஐ மிஸ் ஹர் எ லோட்" என்று கூறிவிட்டு, "நீங்க அம்மா அப்பா எல்லாம் அழகா இருக்கீங்க" என்று பாராட்டினாள்.

அவனும் கூற மறந்து விட்டான், அந்த வீட்டில் பாட்டியின் புகைப்படமும் இல்லை.

அவளும் அவனது பாட்டியைப் பற்றி மேலும் கேட்கவில்லை.

எங்கே அவனது சிந்தனை முழுவதும் தான் அவளே வியாபித்து இருந்தாளே, இதில் யாரை பற்றி கூற.

கண்கள் மின்ன தன்னிடம் கதை பேசிய அந்த பெண்ணை இன்னும் இன்னும் பிடித்தது அவனுக்கு.

தனது வாழ்நாளை இவளே அழகாக செய்வாள் என்று நம்பினான். எப்படி தனது காதலை கூற என்று தவித்தான்.

அவன் அறியவில்லை அதிரடியாக தனது காதலை சொல்ல போகிறான் என்று.

தன்னை ஒரு தோழனாக அவள் ஏற்றுக் கொண்டதன் அர்த்தமே தனது உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் அவளது செயல் என்று அவன் முழுவதாக உணர்ந்தான்.

அவள் உணர்ந்தாளா இல்லையா என்பது அவளுக்கே வெளிச்சம்.
---------------------------------------------------
தனது மாமியாரை காண அந்த அறைக்குச் சென்றார் ராகா. அப்பொழுதுதான் தூக்கத்திலிருந்து விழித்து, அமர்ந்திருந்தார்.

"அத்தை நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்லை எதுக்கு இப்ப அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க அலைஞ்சுட்டு இருக்கிங்க" என்று படபடவென்று பொரிந்து தள்ளினார்.

"உன்னை கொண்டு வந்து இந்த வீட்ல வச்சு நான் செஞ்ச பாவத்தைப் போக்குவதற்கு தான், அந்த பிள்ளைக்கு ஒரு நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறேன்".

"ஓகோ ஒரு கல்யாணத்தை பண்ணி செஞ்சு வச்ச பாவத்தை போக்க இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க போகிறீர்கள் ஆக்கும்" என்று படு நக்கலாக கூறினார்.

"ஆமா இப்ப அதுக்கு என்ன" என்று கோகிலமும் அதட்டலாகவே கேட்டார்.

"இன்னமும் நீங்கதான் எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்கன்னு நினைப்பு உங்களுக்கு இருக்கோ" மீண்டும் நக்கல் த்வனியே வந்தது.

அவளது கூற்றில் புரியாமல் பார்த்தார் பெரியவர்.

"நான் உங்ககிட்ட வந்து நடிச்சு நான் நினைக்கிறத உங்கள பண்ண வச்சேன்" என்றவர் அன்றைய தினத்தை நினைவு கூறி சில விஷயங்களை கூறினார் ராகா.

அதைக்கேட்டு நெஞ்சில் கை வைத்தபடி அதிர்ந்து பார்த்தார் கோகிலம். இத்தனை நாள் அவர் மீது வைத்திருந்த பிம்பம் மொத்தமும் சுக்கலாக உடைந்தது.

வயதான அந்த பெண்மணிக்கு அவரைப் பார்த்து பயமே வந்தது.

அவரது கண்களில் தெரிந்த பயத்தை இன்னுமே தெனாவட்டாக பார்த்துக் கொண்டிருந்தார் ராகா.

"இப்ப புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன் இது எல்லாமே எனக்காக நான் செஞ்சுகிட்டது யாரும் எனக்காக எதுவும் செய்யல. நானே, நானே எனக்காக செஞ்சு கிட்டது" என்று அந்த நானே என்ற சொல்லில் அழுத்தமாகக் கூறினார்.

ஐயோ என்ன இது எவ்ளோ பெரிய பாவம் கடவுளே என்று உள்ளுக்குள் மருகினார்.

பெரியவரின் கண்களை பார்த்து, "என்ன இதெல்லாம் உங்க பிள்ளை கிட்ட சொல்லி ஏதாவது செய்யணும் தோணுதோ, ஆனால் காலம் தாழ்ந்துருச்சு அதை மனசுல வச்சுக்கோங்க" என்றார் எகத்தாளமாக.

மேலும் "அதும் இல்லாம நீங்க சொன்னா உங்க புள்ள என்ன நம்பவா போறாரு" இன்னுமே தன் கணவர் தன் பிடியில் இருப்பதை எண்ணி கர்வமாகவே கேட்டார் ராகா.

"எடுப்பார் கைப்பிள்ளை சொல்புத்தி அவன சொல்லணும்" என்று மனதுக்குள் நொந்து கொண்டார் கோகிலம்.

கோகிலம் போன்றவர்களுக்கு பிள்ளைகள் தவறே செய்தாலும், அதுவும் தெரிந்தே செய்தாலும், ஏதேனும் வார்த்தைகள் சொல்லி தன்னை தானே சமாதானம் செய்து கொள்வர்.

தவறான ஒரு திருமணத்தை சரி செய்ய, இன்னொரு தவறான திருமணம்.

திருமணம் நடக்குமா நடக்காதா.

இவரது பரிகாரம் பலிக்குமா பலிக்காதா காத்திருப்போம்.

பாடல் இதோ:-

நானும் ஓர் பெண்
என பிறந்த பலனை இன்றே
தான் அடைந்தேன்...

உன்னை நான் பார்த்த பின்
ஆண்கள் வர்கத்தை
நானும் மதித்தேன்...

எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டே இருக்கிறாய்...

எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
ஓடிக்கொண்டே இருக்கிறாய்...

அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்று கொள்ளு...


ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துகொள்ளு...
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 7:-

"பிரணவ் டிக்கெட் இருக்கான்னு பார்க்கணும் ட்ரெயினுக்கு ஈவினிங் இல்ல நைட்டு இருந்தாலும் எனக்கு ஓகே. இதுக்குமேல நான் இங்க ஸ்டே பண்ணி இருக்கிறது நல்லது இல்ல பிரணவ்" என்றவள், மேலும் அங்கு ப்ராஜக்டை பற்றி கூறவேண்டும் என்று சொன்னாள்.

அவன் காதலை எப்படி சொல்ல என்று யோசித்தபடியே அலைபேசியை எடுத்து ட்ரெயின் டிக்கெட் புக் செய்தான்.

ஒரு எண்ணம் தோன்ற ஒரு டிக்கெட்டுக்கு பதிலாக இரண்டு டிக்கெட் புக் செய்தான்.

"நீ இன்னும் குளிக்கலையா" என்று கேட்டான்.

"குளிக்கணும் ஆனா இப்பதான் டிரஸ் வாஷ் பண்ணி போட்டு இருக்கேன் அது காயனும் அதுக்கு அப்புறம் குளிச்சிட்டு உடுத்திக் கொண்டு கிளம்ப வேண்டியது தான்" என்றாள்.

"அதுக்கு ஏன் சாயந்திரம் வரைக்கும் வெயிட் பண்ற எங்க அம்மாவோட சாரி இருக்க வேர் பண்ணிக்கோ"

"எப்படியும் ஜீன்ஸ் பேண்ட் சீக்கிரம் காயும்னு தோணல" என்றான்.

"உங்க அம்மா அவங்க டிரஸ் எனக்கு எப்படி சூட்டாகும் அதுவும் சாரி வேற" என்று தயங்கினாள்.

"என்னோட பேக்லயே லாப்டாப் ட்ரெஸ் எல்லாம் இருக்கு அந்த பாக் கிடைக்காது தானே. திரும்ப நான் புதுசா லாப்டாப் வாங்கனும் தானே" என்று சிறு பிள்ளை போல் கேள்வி கேட்டாள்.

அவளது அந்த கேள்வியில் சின்னதாக சிரித்தான்.

"நல்லா தான் இருக்கும் வேர் பண்ணி பாரு உன்ன மாதிரி தான் இருப்பாங்க எங்க அம்மாவும்" என்றபடி அவன் தனது அன்னையின் ஆடையை எடுத்து வந்து கொடுத்தான்.

அவளும் அதை பெற்றுக்கொண்டு குளிக்கச் சென்றாள்.

பிரணவ் அவள் குளிக்க சென்ற நேரம் எப்படி காதல் சொல்ல என்று வெகுவாக யோசித்துக் கொண்டே இருந்தான்.

எப்படியும் இவள் தான் என்று முடிவாகி விட்டது. இனி என்ன தயக்கம் முதல் நாள் பார்த்த ஒருவன் காதல் சொன்னால் அவள் ஏற்றுக் கொள்வாளா. தனது தந்தையையே வெறுப்பவள், ஆண்களையும் வெறுப்பவள், ஏதோ ஒரு நம்பிக்கையில் என்னுடன் இருக்கிறாள்.

அதைக் கெடுத்துக்கொள்ளவும் அவனுக்கு விருப்பமில்லை. அதே நேரம் அவனது காதல் மனமும் காதலை சொல்ல வேண்டும் என்று கூப்பாடு இட்டது.

வீட்டின் அழைப்பு மணி அவனது கவனத்தை கலைத்தது.

திடீரென்று வீட்டின் கால்லிங் பெல் அடித்தது அவன் திறந்து பார்க்க, அங்கு அவனது நண்பன் நின்று கொண்டிருந்தான்.

"டேய் உள்ள வாடா" என்றபடி அவனை வரவேற்றான்

அதே சமயம் குளித்துவிட்டு வந்து ரக்க்ஷிதாவும் வெளியே வந்தாள்.

வந்த நண்பன், ரக்க்ஷிதாவையும் பிரணவையும் மாறி மாறி பார்த்து விட்டு பாய்ந்து நண்பனை கட்டிக்கொண்டான். "ஹாப்பி பார் யூ மச்சான்"என்று கூவினான்.

புரியாமல் இருவரும் பார்க்க,
"டேய் என்ன டா லிவிங் டூகெதரா, உன்னோட சபதத்தை வின் பன்னிட்டியா மச்சான், வாழ்த்துக்கள் டா, சிஸ்டர் உங்களுக்கும்" என்றான்.

அதில் கொலைவெறி ஆனவள் "பிரணவ் உன் பிரண்டு இப்போ வாய மூடனும் இல்ல" என்றபடி கையை இறுக்கினாள்.

"நீ கொஞ்சம் அமைதியா இரு தாயே", என்று அவளிடம் கூறியவன், "இந்தாடா பென் டிரைவ், எல்லாமே அதுலயே இருக்கும், புரியலன்னா கால் பன்னு" என்றபடி அவனை வழியனுப்பி விட்டு, அவள் புறம் திரும்பினான்.

அங்கு பயங்கரமாக முறைத்துக் கொண்டிருந்தாள் அவள்.

"முறைக்காதம்மா" என்று கெஞ்சினான்.

"பின்ன வேற என்ன செய்வார்களாம் என்ன சொல்லிட்டு போனான் பாத்தீங்களா. ஆமா, இது என்ன சபதம் சொல்றான் என்ன நடக்குது இங்க" கோபமாக கேட்டாள்.

"உட்கார்" என்று எதிர்ப்புறம் இருந்த சோபாவை காட்டினான்.

"சில மாசத்துக்கு முன்னாடி கெட்டுகெதர் இருந்துச்சு எல்லா பசங்களும் கமிட்டடா. நான் மட்டும் சிங்கிளா இருந்தேன். அப்ப எல்லாருமே கலாய்ச்சுட்டாங்க. அந்த கோவத்துல இருங்கடா நானும் ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணி லிவிங் டுகெதர்ல்ல வாழ்ந்து காமிக்கிறேன்னு கடுப்பா சொல்லிட்டு வந்துட்டேன்".

"அதனை புடிச்சுகிட்டு இன்னைக்கு கேள்வி கேட்கிறான் அவ்வளவுதான் மத்தபடி வேற ஏதும் இல்லை" என்று சத்தியம் செய்யாத குறையாக சொன்னான்.

அப்போதும் தெளிவில்லாமல் பார்த்தாள் அவள்.

"நிஜம்மா நம்புமா" என்று பரிதவித்தான்.

"ஓகே ஐ பிலிவ் ன் யூ" என்று மொழிந்தாள்.

அவள் அறியவில்லை அவன் அந்த சபதம் போட்ட சமயத்தில்தான் அவளை இரண்டாவது முறையாக பார்த்தான் என்று.

ஓர விழியால் அவனைப் பார்த்தபடி, "நீங்க தான் லவ் பண்றீங்களே அது அவங்க கிட்ட சொல்ல வேண்டியது தானே" என்றாள்.

"நான் தான் லவ் பண்றேன் அந்த பொண்ணு என்னக்கு ஓகே சொல்லல. இது ஒன் சைடு லவ் ஜெயிக்குமா என்னன்னு தெரியல" என்ன சொன்னான்.

அவனது குரலில் ஒருவித ஏக்கமோ சோகமோ அவளை பேச வைத்தது.

"உங்கள வேணாம்னு யாராவது சொல்லுவாங்களா ஜென்டில்மேன் பிரணவ் நீங்க. யாருக்குதான் பிடிக்காது உங்கள, பாருங்க முன்ன பின்ன தெரியாத என்னையே கேரிங்ஙா பார்த்துக்கரிங்க. ஷி ஈஸ் லக்கி. சீக்கிரம் பொண்ணு ஓகே செல்லும்" என்று இவள் அவனை தேற்றினாள்.

"நீ, நீ தான் டி அந்த லக்கி பொன்னு, ஓகே சொல்லி என்னையும் லக்கியா மாத்து டி" என்று அவனது மனம் கூப்பாடு இட்டது.

அந்த எண்ணத்தின் கனம் தாங்காமல் எழுந்து பால்கனி பக்கம் சென்றான். கைகட்டி வானத்தை வெறித்தவாறு நின்றிருந்தான்.

இவளோ தனது காதலியை நினைத்து சோகமாக இருக்கிறான், என்றென்னியப்படியே அவனது முதுகையே ஆழ்ந்து பார்த்தாள்.

இவளது மனமோ எவ்வளவு ஆழமா லவ் பண்றான் பாரேன், என்ன கல்யாணம் பண்ணிக்க போறவனும் இவனை மாதிரி என்னை லவ் பண்ணுவானா என்று எண்ணமிட்டது.

தன் மனதின் எண்ண போக்கில் ஒரு நிமிடம் அதிர்ந்தவள், தலையை உலுக்கி தன்னை சமன் செய்தாள்.

என்ன இது இப்படி யோசிக்கறேன், இது தெரிஞ்சா பிரணவ் என்ன பத்தி என்ன நினைப்பான் என்று தன்னைத்தானே சாடினாள்.

இருவரது எண்ணமும் காதல் என்ற நேர்கோட்டில் பயணிக்கின்றன.

ஆனால் அது ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலாக எப்போது மாறும்...

அந்த பெண் இவள்தான் என்று தெரியவரும் போது இவளது நிலவரம் கலவரமாகுமோ...

-------------------------------------------------
அங்கு அந்த காவல் நிலையத்தில்...
நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு காவலர் உள்ளே வந்தார்.

வந்தவர் "எங்க அவன் போயிட்டானா" என்று மற்றொரு காவலரிடம் கேட்டார்.

"சார் இப்பதான் வந்துட்டு போனாரு" என்று இவர் உரைத்தார்.

"ம் அவனுக்கு பெரிய இவன்னு நினைப்பு. ஐயா நம்மகிட்டே தப்பு கண்டுபிடிக்கிறான். லஞ்சம் வாங்க கூடாது சொல்றான். எரிச்சலா வருது டா அவனைப் பார்க்கும்போதெல்லாம்" என்று வெறுப்பாக கூறினார்.

"ஹையர் ஆபீசர் அப்படில்லாம் சொல்லாதீங்க" என்று இவர் அவரைத் தேற்றினார்.

"ஆமா நீ தான் மெச்சுக்கணும்" என்று சொன்னவர், அங்கு ரத்த காயத்தில் இருந்தவர்களை பார்த்து "என்ன அவன் வேலை தானே இது" என்று கேட்டார்.

"ஆமாம் ஏதோ பொண்ணு கடத்தால் கேஸு. வேண்டிய பொண்ணு போல அதான் வந்து அடிச்சிட்டு போயிருக்காரு. கேஸ் பைல் பண்ணி இருக்கேன்" என்றபடி இவரும் பைலை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

"பொண்ணு கேஸூனா வேண்டிய போனா தான் இருப்பா ஒருவேளை லவ்வரா இல்லன்னா கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணா இருக்குமோ" தாடையை தடவியவாறு தனக்கு தானே பேசிக் கொண்டார்.

"டேய் இங்க வா" அவர்களில் ஒருவனை அழைத்தார்.

அவரது நேரமோ என்னவோ அந்த கூட்டத்தின் தலைவனாக பட்டவன், அதாவது ராகவின் தம்பி, ஆம் அவன் தான் ரக்க்ஷிதாவை கடத்தினான்.
அவன் இவர் அருகில் வந்தான்.

"உன்னை இவ்வளவு அடிச்சு இருக்கான். உங்க வீட்டுக்கு போன் பண்ணி சொல்கிறாயா, சொல்லி அவன் மேல கேஸ் போடு சரியா" என்று எடுத்துக் கொடுத்தார்.

ஏதாவது ஒரு விதத்தில் பிரணவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே அந்த காவலருக்கு இருந்தது.

உடனே ராகாவின் தம்பியும் அவரது போனை வாங்கியவன், தன் அக்காவிற்கு போன் போட்டேன் நடந்த அத்தனையும் கூறினான்.

மேலும் அந்த காவலர், ராகாவிடம் ஒன்றுக்கு இரண்டாக பேசினார். அனைத்தையும் கேட்ட ராகாவோ கொதிநிலைக்கு போனார்.

ரக்ஷிதாவின் பொருட்டு தனது தம்பி ஜெயில் இருப்பதும், ரத்தக்காயம் பட்டிருப்பதும் அவரால் தாளமுடியவில்லை.

இனி என்ன நேர்ந்திடுமோ...

பாடல் இதோ:-

ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே

ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே

கன்னிப் பெண்ணை கையிலே வயலின் போல ஏந்தியே

வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன்

இன்பராகம் என்னவென்று காட்டுவேன்
சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம் என் காதல் தேவதை

தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம் என் மீது பூமழை
எங்கெங்கோ எண்ணங்கள் ஓர் ஊர்வலம் போக

கண்கொண்ட உள்ளங்கள் ஓர் ஓவியம் ஆக

ஆனந்தம் ஆனந்தமே...
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 8:-

அங்கு வானத்தை வெறித்துக் கொண்டிருந்தவனை, அலைபேசி தனது இருப்பை சொல்லி சத்தமிட்டது.

அதில் தெளிந்தவன் பெருமூச்சுடன் அலைபேசியை எடுத்து பார்த்தான்.

அவனது தந்தை தான் அழைத்து இருந்தார்.

"ஹலோ அப்பா சொல்லுங்க" என்றபடி காதில் வைத்தான்.

"நல்லா இருக்கியாடா, நீ ஊருக்கே வர மாட்டேங்குற நான் பேசினதுல உனக்கு கோவமா" என்று கேட்டார்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா கொஞ்சம் வேலை அதிகம் முடிச்சிட்டு நானே அடுத்த வாரம் வரலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்.வருவேன் அப்பா சீக்கிரமே".

மேலும் அவர் "உன் காதல் ஜெயிச்சா முதல்ல சந்தோஷப்படுவது நான்தாண்டா, ஆசைப்பட்ட பொண்ண கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழறது ஒரு சுகம், நான் அதை அனுபவிச்சுட்டும் இருக்கேன். அப்படி இருக்கும்போது என் மகனுக்கு அந்த சுகம் கிடைக்கனும். அந்த சந்தோஷம் கிடைக்கனும், என்று நான் நினைக்க மாட்டேனா. ஆனால் ஒரு தலை காதல் இது. நீ அந்த பொண்ண ரெண்டு தடவைதான் பார்த்து இருக்கேன்னு சொல்ற. எப்படி இது சாத்தியம் எனக்கு தெரியல, ஒன்னுமே புரியல டா, சராசரி அப்பாவா யோசிக்கிறேன்னான்னு எனக்கு தெரியல" என்று கவலையாக கூறினார்.

அவனோ தனது காதலி தனது வீட்டில் இருப்பதை சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தான்.

அவனது அமைதி அவரை கலங்க செய்தது.

"கண்ணா பிரணவ்" என்று இருமுறை அழைத்தவர், "எதையும் யோசிக்காதடா நல்லதே நடக்கும். என்ன இங்கே உன் பாட்டி தான் பொலம்பிட்டு இருக்காங்க அவங்க உனக்கு ஒரு பொண்ணு பார்த்து வச்சுட்டு, இந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்லிட்டு இருக்காங்க கொஞ்சம் வந்து என்னன்னு பாரு. உனக்கு புடிச்சிருக்கான்னு பாரு இல்ல வந்து பார்த்துட்டு புடிக்கலைன்னு சொன்னாலும் சொல்லு".

"இரு அம்மாட்ட கொடுக்கிறேன். அம்மா கிட்ட பேசு" என்றபடி தனது மனைவியிடம் அலைபேசியை கொடுத்தார், வீரேந்திரன்.

"அம்மா" என்று அழைத்தவன், தனது அன்னையிடம் பேசினான்.

அவரிடம் பேசியதில், அவனுக்கு ஒரு புத்துணர்ச்சி வந்தது.

எப்படியும் அவள் போவதற்கு முன்பே தனது காதலை சொல்லிவிட வேண்டும் என்று உறுதி கொண்டான்.

அலைபேசியை அனைத்து பாக்கெட்டில் போட்டவன் வீட்டினுள் சென்றான்.

அங்கு அவள் சமையலறையில் எதோ செய்து கொண்டிருந்தாள்.

அந்தக் கதவு நிலையில் சாய்ந்தவாறு ஒற்றைக்காலில் சுவற்றில் வைத்து கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டே இருந்தான்.

தன்னவள் தனது வீட்டில் அவ்வளவு அழகாக பொருந்தி இருந்தாள்.அந்த சேலையை எடுத்து சொறுகி, கூந்தலை மொத்தமாக அள்ளி கொண்டையிட்டு, கைகளால் அடுப்பில் எதையோ கிண்டிக் கொண்டு இருந்தாள்.

அதை பார்த்த அவனுக்கு ஏதேதோ எண்ணங்கள் அலை பாய்ந்தது.
சட்டென பின்னே சென்று வெற்றிடையோடு கைகொடுத்து தன்னை நோக்கி இழுத்தான்.

பின்னிருந்த வாரே அணைத்தான்.
எப்பொழுதும் போல அந்த மச்சம் அவனை ஈர்க்க, அந்த மச்சத்தில் தனது முதல் முத்தத்தை பதித்தான்.

ஒரு கை வெற்றிடையில் இருக்க மறு கை கொண்டு அவளது கரண்டிபிடித்த கையோடு சேர்த்து பிடித்தான்.

அந்த முத்தத்திலே கிறங்கி போனவள், "ப்ளீஸ் விடுங்க சமைக்கணும்" என்று முனகினாள்.

"அதேதான் நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன்" என்று இவன் அவளது காது மடல்களில் மெலிதாய் உரைத்தான்.

அதில் "நீங்க ஒன்னும் சமைக்க ஹெல்ப் பண்ண வேண்டாம் நானே பாத்துக்கிறேன் கொஞ்சம் போங்களேன் ப்ளீஸ்" என்று கெஞ்சினாள்.

அது இன்னுமே அவனுக்கு மோகத்தை தூண்டியது. வெற்றிடையில் கைகள் தாராளமாய் விளையாடியது.

"ஹயோ ப்ளீஸ்ஸ்ஸ்" என்று கூச்சத்தில் இழுத்தாள்.

"அதையே தான் நானும் சொல்றேன். லெட்டஸ் ப்ளீஸ் அவர்ஸெல்ப் ப்ளீஸ்ஸ்ஸ் " என்று அவளை போலவே சொன்னவன், அடுப்பை அணைத்து அவளை தன் பக்கம் திருப்பினான்.

நெற்றி, கண்கள், கன்னம் என்று முன்னேறி அவன் இதழை நெருங்கும்போது.

அவன் முன்னே சொடுக்கிடும் சத்தம் கேட்டது.

"உருளைக்கிழங்கு கறி டேஸ்ட் பாருங்களேன்" என்றபடியே அவனின் முன்னே கரண்டியை நீட்டினாள்.

கேவலமாக ஒரு பார்வை பார்த்தான்.

"ஏன் இப்படி பார்க்கிறீங்க. சாப்பிட்டு பாத்துட்டு சொல்லுங்க. நான் நல்லா தான் சமைப்பேன்" என்றாள்.

பாதகத்தி நிஜத்துல தான் ஒன்னும் பண்ண முடியல கனவுல கூட இப்படியா மனதோடு நொந்தே போனான்.

"சாப்பிடலாமா " என்று கேட்டபடி உணவை எடுத்து வந்தாள்.

அவள் அரிசி பருப்பு சாதம் உருளைக்கிழங்கு கறி ரசம் வெள்ளை சாதம் கொஞ்சமும் வடித்திருந்தாள்.

"சூப்பர் நல்லாவே சமைக்கிறே உன்ன கல்யாணம் பண்ணிக்க போறவன் கொடுத்து வச்சவன்" என்று சிரித்தபடியே குறும்பாக பாராட்டினான்.

"இந்த பாராட்டலாம் என் பாட்டிக்கு தான் போய் சேரனும். அவங்கதான் சமையல் கத்துக் கொடுத்தாங்க" என்று இவளும் சிரித்தாள்.

"பாட்டி பாட்டின்னு சொல்றியே பாட்டின்னா அவ்ளோ இஷ்டமா" என்றான்.

"ஆமா அம்மா விட எனக்கு பாட்டு தான் இஷ்டம்".

"எங்க பாட்டிதான் எனக்கு சமையல் சொல்லிக் கொடுத்தாங்க, பைக் ஓட்ட கற்றுக் கொடுத்தார்கள். தற்காப்பு கலைக்கு கராத்தே கத்துக்க சொன்னாங்க. இவின் விவசாயம் கூட கொஞ்சம் கொஞ்சம் தெரியும் எனக்கு. என்னோட பொழுதுபோக்கு கார்டனிங். கம்பெனி முதல்ல, அதுக்கப்புறம் நான் விவசாயம் தான் பார்ப்பேன்".

அவனது மனசாட்சி மாமனாரும் மருமகளும் ஒரே வேவ்லெந்த்ல இருக்காங்களே சூப்பர் என்று மெச்சிக் கொண்டது.

அவள் அவனுக்கு புதிதாக தெரிந்தாள்.

"கேட்கறேன்னு தப்பா நினைச்சுக்காத உங்க பாட்டி எப்போ இறந்து போனாங்க இப்ப சமீபத்திலயா" என்று கேட்டான் பிரணவ்.

இல்லை என்றவள் தனது பாட்டி பற்றி சொல்லவும் செய்தாள் அவனிடம்.

அவள் சொல்ல சொல்ல அவனது முகமோ குழப்ப ரேகைகளை தத்தெடுத்தது.

"நீங்க நல்லா செக் பண்ணி பார்த்தீர்களா" என்று கேட்டான்.

"ஆமா செக் பண்ணிக்கிட்டு இருக்கோம். ஏற்கனவே வந்த மெசேஜ் எல்லாம் அப்படித்தான் இருக்கு. பாட்டி இல்ல, இதுதான் சொல்லிகிட்டே இருக்காங்க" என்று சொல்லி முடித்தாள்.

அவளது குளம் கட்டிய கண்களைப் பார்த்தவனுக்கு, மேற்கொண்டு கேள்வி கேட்க தோன்றவில்லை. ஆயினும் இதில் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்தபடியே இருந்தான்.

அவளோ "ரொம்ப யோசிக்காதீங்க சாப்பிடுங்க. சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் ஊருக்கு கிளம்பனும்" என்று சொன்னாள்.

அதே சமயம் அவளது அலைபேசி அழைத்தது.

அவனோ "என்ன எப்ப பார்த்தாலும் சாப்பிடும்போது உனக்கு போன் வந்துகிட்டே இருக்கு. முதல்ல சாப்பிட்டு முடிச்சிட்டு அதுக்கு அப்புறம் போய் என்னன்னு பாரு" என்று எழுந்தவளின் கையை பற்றி உட்கார வைத்தான்.

அவளும் அவனது பேச்சுக்கு இணங்கி சாப்பிட்டு முடித்தாள்.

அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு வந்து அலைபேசியை எடுத்து பார்த்தாள்.

பார்த்தவள் பார்த்தபடியே நின்று இருந்தாள்.

மீண்டுமாய் அந்த அலைபேசி அடித்தது அதில் தெளிந்தவள், இவங்க எதுக்கு நமக்கு போன் பண்றாங்க என்று முனகிக்கொண்டே கைப்பேசியின் அழைப்பை ஏற்றாள்.

இவள் ஹலோ சொல்லுமுன் அந்தப்பக்கம், "என்னடி என் தம்பிய ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு உன் காதலனோட கூத்து அடிச்சுட்டு இருக்கியா" என்று எடுத்தவுடன் கேட்டார் ராகா.

அவரது கூற்றில் பற்களைக் கடித்தபடி "உங்களுடைய எல்லை எதுவோ அங்கேயே இருங்க. என்னோட பர்சனல் விஷயத்தில் தலையிடாதீர்கள்" என்று அழுத்தமாகச் சொன்னவள், "முதல்ல உங்க தம்பி பன்னின வேலைக்கு ஜெயில்ல புடிச்சி போட்டது சரிதானே" என்றாள்.

அவள் மேலும் பேச வருவதற்கு முன்பு அவரே "என் தம்பிய கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கு என்ன. கல்யாணம் பண்ணிக்கிட்டு என் காலடியிலேயே இருக்க வேண்டிய தானே" என்று அதிகாரமாக வந்தது பதில்.

"ஒரு கம்பெனிய நிர்வாகம் பண்றவ நான். உங்க அந்த தம்பி ஒரு பொறுக்கி என்ன விட பத்து, பன்னிரண்டு வயசுக்கு மேல அதிகம் அவருக்கு. அதுவுமில்லாம ஒரு பொறுக்கியை கல்யாணம் பண்ணிக்க எனக்கு எந்த அவசியமும் இல்லை. என் பாட்டி எனக்காக நல்ல மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்காங்க. நான் அவங்கள தான் கல்யாணம் பண்ணிக்குவேன்" அழுத்தம் திருத்தமாகக் கூறினாள்.

அதற்கு ராகாவோ "நடக்கும், நடக்கும் எப்படி நடக்குது நானும் பாக்குறேன். அங்கிட்டு உன் பாட்டி பார்க்குது, இங்கே என் மாமியார் கெழவி உனக்கு மாப்பிள்ளை பார்க்கணும்னு அவங்க மகன் கிட்ட தூண்டிவிட்டு இருக்கு. அது என்ன திடீர்னு எல்லாரும் பக்கம் சாயிராங்க" ஏதோ தன் கை நழுவிப் போவது போல் ஒரு உணர்வு அந்த இயலாமையை அவளிடம் காட்ட இயலாமல் அவளை காய்ந்தார்.

மேலும், "உன் பாட்டி கிழவியே முதல்ல இல்லை இதுல அது சொன்ன மாப்பிள்ளையாம். ஆமா நீ இன்னமும் ஊரு வந்து சேரலை போல. அவன் கூட தான் இருக்கியா. இப்படி எல்லாம் அலஞ்சிட்டே இருந்தா ஒருத்தனும் கட்டிக்க வர மாட்டான். கடைசியில நீ என் காலடியில் என் தம்பியோட தான் இருக்கணும்" என்று ஆணவமாக சொன்னார்.

"நான் கல்யாணம் பண்ணிக்கிறேன், பண்ணிக்கல. ஆனால் ஒருபோதும் உங்க கால் அடில, உங்க தம்பியோட இருப்பேன்னு மட்டும் நினைக்கவே நினைக்காதீங்க. அப்படி இருக்கிறதுக்கு நான் செத்தே போயிருப்பேன் " பொரிந்து தள்ளினாள்.

"ஆமா இங்க ஒருத்தன் கூட இருக்க காதலன்னு சொல்லிக்கிறாங்க. ஆனா உனக்கு மாப்பிள்ளையும் பாத்துட்டு இருக்காங்க. நீ அவன தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லுற என்ன மாதிரியான பொண்ணு நீ" என்று மேலும் மேலும் குரூரமாகக் கேட்டார்.

தான் ஒரு பெண்ணின் வாழ்வை அபகரித்து வாழ்கிறோம், என்பதை பாவம் மறந்து விட்டார் போலவே.

அவரது நோக்கமே எப்படியேனும் அவளை மனதளவில் காயப்படுத்த வேண்டும் என்பது.

அப்படி காயப்படுத்தினால் தன்னிடம் வந்து சேருவாள் என்று ராகா எண்ணினார் போலும்.

அவள் பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்த பிரணவின் முகமோ இறுகிப் போனது.

அதற்குமேல் அவரிடம் பேச ரக்ஷிதாவிற்கு விருப்பமில்லை.
சட்டென போனை அணைத்து போட்டவள் தலையை பிடித்தபடி அப்படியே பொத்தென அமர்ந்தாள்.

"இது என்ன ஒரு பொண்ண நிம்மதியா இருக்க விட மாட்டேங்குறாங்க ஏதாவது அவங்க சொல்லுறத கேக்கலன்னா உடனே கேரக்டர் அசாசினேஷன் தான் பண்ணுவாங்களா" என்று எண்ணியவள்.

மேலும் உடனே அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

பிரணவை ஏறிட்டு பார்த்தவள், "இதுக்கு மேல நான் இங்க இருக்கற சரி இல்ல. நான் கிளம்புறேன் என்ன ஸ்டேஷன்ல விடுறீங்களா" என்று கேட்டாள்.

"ஏன் என்னாச்சு உனக்கு நைட்டு தான் டிராயின் அது வரைக்கும் இங்கயே இரு. வெளியில சேஃப்டி கிடையாது" என்று எடுத்துச் சொன்னான் பிரணவ்.

அவனை ஒரு பார்வை பார்த்தவள் "ஏன் சொல்லல" என்று கேட்டாள்.

புரியாது பார்த்தவன், என்ன என்றான்.

"அதுதான் அவனுங்கள ஜெயில்ல புடிச்சு போட்டிங்க தானே"

"சொல்லல, தேவையில்லாதது என்று நெனச்சேன்" பதில் வந்தது.

அதில் உச்சுக் கொட்டியவள்,
"அவங்க அக்கா தான் போன்ல" என்றவள் ராகா கூறிய அனைத்தையும் அவனிடம் கூறினாள்.

"ஓ அதுக்காக தான் நீ உடனே கிளம்பினும் சொல்றியா. யார் என்ன சொன்னால் என்ன நீ நீயா இருக்க மாட்டியா" என்று கோபமாக வினவினான்.

"நான் நானா தான் இருக்கேன். அதனாலதான் இங்க இருந்து போகணும் நினைக்கிறேன். எனக்கு கெட்ட பெயர் என்றதுக்காக இல்லை. நாளைக்கு உங்க காதலிக்கு தெரிஞ்சு அவங்க உங்கள பத்தி தப்பா நினைச்சுட்டாங்கன்னா" என்று தயங்கியபடியே சொன்னாள்.

சட்டென முடிவு எடுத்தவன் "நாம கல்யாணம் பண்ணிக்கலாமா" என்று கேட்டு விட்டான்.

அவள் அவனை வெறித்துப் பார்த்தாள்.

வேந்தன் அவனின் கேள்விக்கு கோதையின் பதில் என்னவோ...

அவனுக்கு சம்மதம் சொல்வாளா, இல்லை பாட்டியின் வார்த்தைக்கு மதிப்பளிப்பாளா...

பாடல் இதோ...

அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே...

அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே...

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்...

இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்...

இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்...

என்ன சொல்லப் போகிறாய்...

என்ன சொல்லப் போகிறாய்...
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 9:-

அவன் அவளது கைகளைப் பிடித்து பின்னே முறுக்கி இருந்தான்.

எத்தனை தைரியம் காதல் சொன்னால் அடிபாளோ என்ற கோபமும் வேதனையும் சரிசமமாக இருந்தது.

அவன் மேல் இன்னும் கோபம் தீராமல் கோபமுகமுடன் அவனை ஏறிட்டாள் ரக்ஷிதா.

"ஏன் இப்படி சொன்ன உன்ன பிரண்டா நெனச்சேன் தெரியுமா" என்று கேட்டாள்.

ஆம் கிட்டத்தட்ட நண்பனாகவே அவனை ஏற்க முடிவு எடுத்துவிட்டாள்.

நண்பனாக ஏற்ற ஒருவன் திருமணம் செய்ய கேட்டவுடன் அவளால் அதை ஜீரணிக்க முடியவில்லை.

அந்த கோபத்தில் அவனை அடிக்க கை ஓங்கி விட்டாள் கிட்டத்தட்ட அடிக்க போய்விட்டாள்.

கணநேரத்தில் சுதாரித்து அவளது கையை பின்னே முறுக்கி இருந்தான் அவன்.

அவளது கைகளை பின்னே வைத்து முறுக்கியவன் அவள் கண்களோடு கண்கள் கலந்து "ஐ லவ் யூ நாம கல்யாணம் பண்ணிக்கலாமா" என்று கேட்டான்.

அதை கேட்டு அதிர்ந்து விழித்தவள் "வாட் கல்யாணமா முதல் நாள் பார்த்த ஒரு பொண்ணுகிட்ட எப்படி உன்னால இப்படி ஒரு கேள்வி கேட்க முடியுது. என்னை லாலி பப்புனு வேற கூப்பிடுற, உன் பிரண்டு என்னடான்னா லிவிங் டூகெதரான்னு கேக்குறான், பொண்ணுங்கன்னா டேக் இட் பார் கிரான்டட் தானே உங்களுக்கு" பொரிந்து தள்ளினாள்.

"ஐ ம் நாட் ஜோக்கிங், நான் சீரியசாதான் கேட்கிறேன் நாம கல்யாணம் பண்ணிக்கலாமா"

அவன் கேள்வியில் திருதிருவென விழித்து "ஏன்" என்றாள்.

"பிகாஸ் ஐ லவ் யூ லாலி பப்பு" என்றான்.

"எப்படி "

"அதுக்கு எட்டு மாசத்துக்கு முன்னாடி போகனுமே" என்று அவள் முகத்தில் ஆள்காட்டி விரல் கொண்டு கொசுவர்த்தி சுருள் சுற்றினான். (அதான்பா ப்ளாஷ்பேக்)

அவனது விரல் அசைவில் விழிவிரித்து நோக்கினாள்.

அந்தப் பெரிய விழிகள் விரிந்து, அவனை முத்தமிட அழைத்தன.

இனி தாள முடியாது என்று எண்ணியவன் "வீத் யுவர் பர்மிஷன்" என்றபடி அந்த கண்களில் தனது இதழ்களை ஒற்றி எடுத்தான்.

மீண்டுமாய் ஏனென்று கேட்டாள்.

வார்த்தையே வரவில்லை அவளுக்கு.

அந்த முத்தத்திற்கு வேர்த்து விறுவிறுத்து போனாள் பெண்ணவள்.

அவளது நிலை புரிந்தவன் அவளது கைகளை தனது கரங்களில் பொத்திக் கொண்டான்.

கைகளை பற்றியபடி அழைத்துச் சென்று சோபாவில் அமர்ந்தான்.

ரக்ஷிதா அவனையும் அவளது கைகளையும் மாற்றி மாற்றி பார்த்தாள்.

"என்ன பாக்குற" என்று குறும்பாக சொல்லியவன், அவளது விரல்கள் பிடித்து மெதுவாக சொடக்கு எடுத்து ஒவ்வொரு விரல்களுக்கும் முத்தமிட்டான்.

இவன் என்ன நம்மளை வசியம் பண்றான்.

மெய்மறந்து அமர்ந்திருந்தாள்.

அவளது தோற்றமே ஏதோ மந்திரத்திற்கு உட்பட்டது போல் இருந்தது.

தன்னவளின் நிலையை தெளிவாக உணர்ந்தவன் மெதுவாக "சொல்லவா" என்று கேட்டான்.

சற்றே தெரிந்தவள் "என்ன" என்றாள்.

"அதான் நீ நான் என்னோட காதல் உன்னை எப்படி தெரியும் இது எல்லாம் சொல்லவா" வினவினான்.

அவளது தலை ஆமென்ற ஏன்று அசைந்தது.

எட்டு மாதங்கள் முன்பு...

அந்த ரயில் நிலையத்தில் திருவனந்தபுரம் செல்லும் ரயில் புறப்பட தயாராக இருந்தது.

கூவென சத்தமிட்டபடி ரயில் நகர்ந்தது.

மெல்ல நகர்ந்த அந்த ரயிலை அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்தபடி ஒருவன் ஓடிவந்து கிடைத்த பெட்டியில் ஏறி ஏறிக்கொண்டான்.

ரயிலின் வேகத்தில் சட்டென தடுமாறி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தான் நம் நாயகன் பிரணவ்.

கிடைத்த இடத்தில் ஒருபுறம் அமர்ந்து கொண்டு தனது அலைபேசியை எடுத்து நோட்டம் விட்டான்.

அந்தப் பெட்டி சற்று கூட்டமாக தான் இருந்தது.

அதிலும் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஏழெட்டு பெண்கள் அமர்ந்து பாட்டுக்குப்பாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஒருவர் பாடும் பாடலின் இறுதி வார்த்தையின், இறுதி எழுத்தோ அல்லது முதலெழுத்து கொண்டு பாடுவது பாட்டுக்கு பாட்டு.

அப்படி ஒருவர் பின் ஒருவராக பாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது பூ என்ற வார்த்தையில் பாடல் ஒன்று பாட வேண்டும் என்று கூச்சலிட்டனர் கூட்டத்திலிருந்த ஒருத்தி,

"டீ நம்ம பாட்டு பாடலாம்" என்றவள் "ஆமா நீ பாடு" என்றபடி அங்கிருந்த மற்றோருத்தியை உலுக்கினாள் அவள்.

அவளோ அனைவரையும் பார்த்து முறைத்தாள்.

"என்ன முறைப்பு காலேஜ் பங்க்ஷன்ல எத்தனை பேருக்கு முன்னாடி பாடினோம் இங்கே நாம மட்டும் தானே பாடு" என்று இன்னொருத்தி சொன்னாள்.

"போர் அடிக்குது பாடலாம் ப்ளீஸ்" என்று கெஞ்சினாள்.

"நீ பாடு நாங்க எல்லாரும் கோரஸ் பாடுறோம் சரியா" என்று முறைத்தவளை கேட்டாள் முன்னவள்.

அவளும் அவர்களை முறைத்தபடியே பூப்பூக்கும் ஓசை என்ற ஆரம்பித்தாள்.

அந்த பாடல் சத்தத்தில் பிரணவ் தலையை நிமிர்த்தி பார்த்தான்.

சூப்பரா பாடுறாளே என்று மனசுக்குள் பாராட்டியபடி அவளை கவனித்தான்.

அவள் பாட பின்பாட்டு உடனிருந்தவர்கள் பாடினார்கள்.

அந்த இடமே கலகலத்துப் போனது.

ஒரு சிலர் ரசனையாகவும்,
ஒரு சிலர் எரிச்சலாகவும்,
இன்னும் சிலர் தங்களது கல்லூரி நாட்களை எண்ணிக் கொண்டனர்.

பாடல் முடிந்து அடுத்த வினாடி அவர்களில் ஒருத்தி "இட்ஸ் டைம் பார் பிரேக்" என்று கூவினாள்.

"இவளுக்கு சாப்பிடணும் தோணுச்சுன்னா பிரேக் விட்டுடு வா" என்று கலாய்த்த படி அனைவரும் "டைரி மில்க் சாப்பிட எடுத்தனர்.

"டி பிள்ளைங்களா இப்ப பாருங்க நம்ம மேடம் மட்டும் என்ன செய்றாங்கன்னு" என்று உசுப்பினாள் மற்றவர்களை.

சுவாரசியமாக அவளையே பார்த்து கொண்டு இருந்தான், பிரணவ்.

மற்றவர்கள் நமட்டு சிரிப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவளோ கவனிக்காதது போல் கைப்பையிலிருந்து குச்சி மிட்டாய் எடுத்து அதன் பேப்பரை பிரித்து உண்ண ஆரம்பித்தாள்.

"நம்ம கேங் பேரே டைரி மில்க் இவ என்னடான்னா குச்சி மிட்டாய் சாப்பிட்டு நம்ம கேங் மானத்தை வாங்குகிறா" என்று செல்லமாக அலுத்துக் கொண்டனர்.

அதற்கு அந்த குச்சி மிட்டாய்காரி, "டைரி மில்க் இஸ் அ வேர்ட் குச்சி மிட்டாய் இஸ் அ ஏமோஷன்" என்று கூறி களீரென சிரித்தாள்.

அவளது கூற்றில் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது பிரணவிற்கு.

லாலி பப்புக்கு எவ்வளவு குசும்பு பாரேன் என்று மனதோடு சொல்லிக்கொண்டான்.

அங்கிருந்த ஒருத்தி அவனது எண்ண அலைகளை அப்படியே கூறினாள்.

"கோயம்புத்தூர்காரிக்கு குசும்ப பாத்தியா டைரி மில்க் இஸ் அ வேர்ட் குச்சி மிட்டாய் இஸ் அ எமோஷனாமாம்" கேலியாக சொல்லி விளையாடினாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் அவனது நிறுத்தம் வரவே அவன் எழுந்து கொண்டான்.

ஏதோ மனமில்லாமல் பிரிவது போல திரும்பி திரும்பி பார்த்தபடியே இறங்கிச் சென்றான்.

இது என்ன இப்படி என்று தன்னைத்தானே கடிந்துக்கொண்டான்.

நாட்கள் தன்போக்கில் சென்றது பிரணவிற்கு.

இப்படியாக ஒரு நாளில் டிவி பார்க்கும் போது மின்சார கனவு படம் ஓடியது. பூ பூக்கும் ஓசை அந்த பாடலையும் அவன் பார்த்தான்.

"அந்த பொண்ணு கூட நல்லா பாடிச்சு என்று மனம் அவளை நினைத்துக் கொண்டது.

எவ்வளவு அழகாக குச்சிமிட்டாய் சாப்பிட்டா அவள், அவன் ரசனையாக நினைத்தான்.

கோயம்புத்தூர்னு பேசிக்கிட்டாங்க இல்ல, இன்னும் கொஞ்சம் நேரம் ட்ரெயின்ல டிராவல் பண்ணி இருந்தா ஏதாவது தெரிஞ்சிருக்கும் அவளை பத்தி.

இப்போதும் ஒன்னும் இல்ல ஒரு போலீசா தெரிஞ்சுக்கலாம்.

ஆனால் இது என்ன உணர்வுன்னு நமக்கு தெரியாம அலைபாய கூடாது" என்று தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டான்.

இவ்வாறு அவனது நாட்கள் அவளது நினைவுகளுடன் பட்டும் படாமலும் சென்றது.

இப்படியான ஒரு நாளில் அவனது பாட்டி காமாட்சியிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் அங்கு சொன்ன செய்தி கேட்டு காலில் வேறோடி அதிர்ந்து நின்றான்.

பாடல் இதோ:-

கண்தூங்கும் நேரத்தில்

மௌனத்தின் ஜாமத்தில்

கடிகாரச் சத்தம் சங்கீதம்

கண்காணா தூரத்தில்

சுதிசேரும் தாளத்தில்

ரயில் போகும் ஓசை சங்கீதம்

பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம்

தாலாட்டும் அன்னைக்கெல்லாம்

தங்கள் பிள்ளை மார்பை முட்டி

பாலுண்ணும் சத்தம் சங்கீதம்
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 10:-

அந்த மருத்துவமனை வளாகத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கினான் பிரணவ்.

வேகமாக ரிசப்ஷன் சென்று அங்கு விசாரித்துவிட்டு அவர்கள் சொன்ன அறைக்குச் சென்றான்.

அந்த அறையில் அவனது அன்னை சாரதா படுத்து இருந்தார்.

அவருக்கு ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது.

அவனது பாட்டி காமாட்சி அருகில் அமர்ந்து கவலையாக தனது மருமகளை பார்த்துக் கொண்டிருந்தார்.
உள்ளே நுழைந்தவன் பாட்டி என்று அழைத்தான்.

தனது அண்ணையை பார்த்தவாரே "எப்படி என்ன ஆச்சு" என்று கேட்டான். அதற்கு பாட்டி "அங்க கேம்பிலிருந்து போன் பன்னிருப்பாங்க போலடா, உங்க அப்பாக்கு ஏதோ ஆக்சிடென்டாம் அதைக் கேட்டு மயங்கி விழுந்துட்டா, பிபி அதிகமாயிடுச்சு, நான் உடனே இங்கு கொண்டு வந்து சேர்ந்துட்டேன்"

அப்பாக்கு ஆக்சிடென்ட் என்றால், நினைத்தவன்.

தனது அலைபேசியை எடுத்து பார்த்தால் அதில் புது என்னை பார்த்தவன் தனது அப்பாவை குறித்துதான் ஏதோ செய்தி வந்து இருக்கும் வேலைப்பளுவால் எடுக்க மறந்து இருப்போம் என்று நொந்து கொண்டான்.

மீண்டும் அந்த எண்ணிற்கு அழைத்து தனது தந்தைக்கு என்னவென்று விசாரித்தான்.

அவருக்கு ஆக்ஸிடென்டில் கால் உடைந்து விட்டது என்று செய்தி வந்தது.

பிரணவ் வெகுவாக கவலைப்பட்டான் தனது அன்னை மற்றும் தந்தையின் நிலையை எண்ணி.

ஒரு வாரத்தில் சாரதாவின் உடல்நிலை தேறியது. அவர் தனது கணவருக்கு ஒன்றுமில்லை என்பதிலேயே தன்னை தேற்றி கொண்டார்.

தனது அண்ணையை டிஸ்சார்ஜ் செய்து வீட்டில் விட்டு விட்டு மீண்டும் தனது அலுவலை பார்க்க கிளம்பினான் பிரணவ்.

பிரணவ் தனது தந்தையின் நிலையை தெரிந்து கொள்ள, அவரது மேலிடத்திற்கு தொடர்பு கொண்டான்.

அவருக்கு ஒன்றுமில்லை கால்தான் உடைந்து விட்டது என்று செய்தி வந்தது.

பிரணவ் தனது தந்தையிடம் வெகுவாக பேசி சமாதானம் செய்து இனி ஊருக்கு வந்து ஊரிலேயே இருக்க வேண்டும் என்று சொன்னான்.

அனைத்தையும் செய்து விட்டு சென்னைக்கு தனது இருப்பிடத்திற்கு திரும்பும் போது தான் மீண்டும் ஒரு முறை தன்னவளை பார்த்தான்.

இரு குழந்தைகளுக்கு லாலிபாப் வாங்கி கொடுத்து கொண்டு இருந்தாள்.

இவளுக்கு லாலிபாப் விட்டா வேற எதுவும் தெரியாதா என்ன, என்று நினைத்து கொண்டான்.

நடுத்தரவயது பெண் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

அவளை பார்த்தவாறே நின்றிருந்தான்.

சற்று நேரத்தில் அவளது பேருந்து வரவே அவள் கிளம்பி விட்டாள் அந்த பேருந்தில்.

அவளது முகம் பிரணவின் இதயத்தில் வேரூன்றி இருந்தது.

பிரணவி நாட்கள் எப்போதும் போல இயல்பாக கடந்தது. ஆயினும் பல நேரங்களில் யாரென்றே தெரியாத அந்த பெண்னின் பிம்பம் வந்துபோகும்.

அவனுக்கு கனவிலும் நினைவிலும் அவளது நினைவு அதிகமாக வந்தது.
காதலா இல்லை ஈர்ப்பா என்று தெரியாத நிலை.

ஒரு பெண்ணை அதிகமாக கவனித்து பார்த்துவிட்டதால் வந்த ஈர்ப்பு என்று நினைத்திருந்தான்.

அவனது பாட்டி காமாட்சி அவனுக்கு பெண் பார்த்திருப்பதாக சொல்லும் பொழுது, கேள்வியே இன்றி அந்த லாலிபப்பின் பிம்பம் அவனது மனக்கண்ணில் தோன்றியது அதிர்ந்து போனான்.

முதன் முதலாக இது ஈர்ப்பையும் தாண்டிய ஏதோ ஒன்று என்று புரிந்து கொண்டான்.

காதல் என்ற நிலையை அவன் அடைந்தானா என்று அவனுக்கே தெரியவில்லை.

அதனால்தான் தனது பாட்டி திருமணத்திற்கு கேட்கும்போதெல்லாம் பிடி கொடுக்காமலே பதில் சொல்லிக்கொண்டே இருந்தான்.

இவ்வாறு இருக்கையில் ஒருமுறை அவனது தந்தை வீரேந்திரன், தாய் சாரதா இருவரும் அவனை காண சென்னை வந்திருந்தனர்.

அத்தோடு வீரேந்திரனுக்கும் அங்கு ட்ரீட்மெண்ட் செய்ய வேண்டி இருந்தது.

சில நாட்கள் தனது மகனுடன் தங்கி ட்ரீட்மென்ட் எடுப்பது என்று முடிவு செய்திருந்தனர் பெற்றோர் இருவரும்.

ஒருநாள் தனது மகனின் அறையில் அவன் கைப்பட வரைந்திருந்த அவனது காதலியின் படத்தை பார்த்தார் வீரேந்திரன்.

அதனைப் பார்த்துவிட்டு தனது மகனிடம் திருமணம் செய்து வைக்க மகிழ்வாகவே கேட்டார்.

பிரணவ் உடனே அனைத்தையும் கூறினான்.

வீரேந்திரனுக்கு இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

மகன் இவ்வாறு பெயரே தெரியாத ஒரு பெண்ணை மனதில் நினைத்துக் கொண்டு வாழ்வை கழித்து விடுவானோ என்ற பயம் எழுந்தது அவருக்கு.

அதனாலேயே சீக்கிரமாக ஒரு பெண்ணைப் பார்த்து மண முடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

இன்று அலைபேசியில் அவர் அப்படி பேசியதன் காரணமும் இதுவே.

அனைத்தையும் கூறி முடித்த அவன் அவளது முகத்தை ஏறிட்டான்.

அவளது முகத்தில் ஏதேதோ பாவனைகள் வந்துபோனது.
ஆச்சர்யத்தில் விழிகள் விரிந்து, சந்தோஷத்தில் கண்ணங்கள் குழைந்து, பின் ஏதோ நினைவில் வருத்தம் ஆனாள் பெண்.

தன்னைப் பற்றி தெரிந்தால் அவனது இந்த நேசம் என்னாகுமோ என்ற கவலைதான் அவளுக்கு.

அப்படி என்றால் அவளது மனம் அவனை ஏற்கத் தொடங்கி விட்டதா என்றால் அவளிடம் பதிலில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் அவள் அறியவில்லை அன்று தூக்கத்தில் அவள் உலறி விட்டால், அதை வைத்து அவனுக்கு தன்னை பற்றி தெரிந்து விட்டது என்று.

"நண்பனா என்னை ஏற்கத் தொடங்கிட்ட எனக்கு தெரியுது. ஆனா இதையும் தாண்டி அடுத்த நிலைக்கு நம்மளோட ரிலேஷன்ஷிப் போகணும் எனக்கு அதுதான் வேணும்" என்று மென்மையாக கூறினான் பிரணவ்.

அப்படியே அமர்ந்திருந்தாள் ரக்ஷிதா.

உண்மையில் அவளுக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை.

மீண்டும் பிரணவ் "உன் பாட்டி சொன்ன மாப்பிள்ளை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஏன் பிடிவாதம் பிடிக்கிறாய். உனக்கு பிடிச்ச ஒரு வாழ்க்கை அமைச்சு கிட்டா, உன் பாட்டி நிச்சயமாக சந்தோஷப்படுவாங்க. அது ஏன் நினைக்க மாட்டேங்குற. இத்தனை வருஷம் அவங்க உனக்காகதான் வாழ்ந்திருக்காங்க, அப்படி இருக்கும்போது உன்னோட சந்தோஷமான வாழ்க்கைக்கு அவங்க என்னைக்குமே தடையா இருக்க மாட்டாங்க. அவங்க சொல்ற மாப்பிள்ளை விட நான் உன்ன நல்லா பாத்துப்பேன் நம்பு. நம்மளோட லைஃப் நல்லா இருக்கும் ப்ளீஸ் ஓகே சொல்லு" கிட்டத்தட்ட கெஞ்சினான்.

எந்த பிரதிபலனும் இல்லாமல் தூய்மையான ஒரு அன்பை முதல்முதலாக அனுபவிக்கிறாள்.

திகைப்பில் சந்தோஷத்தில், அவளுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

ஒருமனம் சரி சொல்லி விடு என்றது. ஒரு மனம் உன்னை பற்றி சொன்னால் அவனே வேண்டாம் என்று சொல்லிவிடுவான் என்று சொன்னது. கலங்கிய கண்களுடன் அவனை ஏறிட்டாள்.

அவளைப் பார்த்தவன் என்னம்மா என்று மென்மையாக வினாவினான்.

மேலும், "பயப்படாத என்ன கல்யாணம் பண்ணிக்கோ, என் கூட வாழ்ந்து பாரு, வாழ்ந்து பார்க்கும் போது தான் ஒருத்தருக் கொருத்தர் புரியும். இந்த ஒரு நாள்ல உனக்கு என்ன பத்தி ஓரளவு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனாலும் வாழ்ந்து பார்க்கும் போதுதான் அன்பு அனுபவிக்க முடியும்" என்று தன்மையாகவே கூறினான்.

"என்னை பத்தி உங்களுக்கு எதுவும் தெரியாது. அதனால தான் லவ் அது இதுன்னு சொல்றீங்க. இரண்டு தடவை பார்த்து இருக்கீங்க, இதோ இன்னிக்கு முழுசும் உங்க கூட இருந்திருக்கேன். அதனால் ஏற்பட்ட தாக்கம் தான் இதெல்லாம்" என்று கூறினாள் அவள்.

"அட லூசே இவளோ சொல்றேன் கடைசியில தாக்கம்ன்னு சொல்லுறா, இவள என்ன செய்ய" என்று மனதோடு திட்டினான்.

சலனமின்றி பார்த்தவன், "சரி சொல்லு உன்னை பத்தி தெரிஞ்சுக்கிறேன். ஆனால் உன்னை தெரிஞ்சுக்கிட்ட அப்புறமும் உன்ன தான் புடிக்கும். உன்ன தான் கல்யாணம் பண்ணிக்குவேன் அப்படின்னு நான் சொன்னா, நீ மறுக்கக்கூடாது சரியா" என்று கேட்டான்.

உள்ளுக்குள் ஒரு வேதனை சிரிப்பு வந்து போனது பெண்ணவளுக்கு.

அந்த சிரிப்பின் அர்த்தம் என்னவோ...

பாடல் இதோ:
ஒரு ஆணுக்குள்
இத்தனை காந்தமா நீயும்
ஆனந்த பைரவி ராகமா
இதயம் அலை மேல்
சருகானதே..

ஒரு சந்தன பௌர்ணமி
ஓரத்தில் வந்து மோதிய இரும்பு
மேகமே தேகம் தேயும்
நிலவானதே..

காற்று மலை சேர்ந்து
வந்து அடித்தாலும் கூட
கற்சிலையை போலே
நெஞ்சு அசையாதது
சுண்டு விரலாய் தொட்டு
இழுத்தாய் ஏன் குடை சாய்ந்தது

காதல் சுகமானது..
 
Last edited:
Status
Not open for further replies.
Top