ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

முன் தினம் பார்த்தேனே கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 1:-

அந்த அறையே ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு நிசப்தமாக இருந்தது அங்கே இருந்த இருக்கையில் கைகள் கட்டப்பட்டு இருந்த பெண்ணும் சட்டென மயக்கத்திலிருந்து கண் விழித்துக்கொண்டாள்.

மயக்கத்திலிருந்து கண்விழித்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள் அந்த அறையே இருள் சூழ்ந்து இருந்தது. கைகள் கட்டப்பட்டு இருக்க ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ரௌத்திரம் ஆனாள்.

தன்னால் ஆனமட்டும் போராடிப் பார்த்து இறுதியில் தோல்வியினால் சோர்வு உண்டானது. அந்த அறையில் அவளை தவிர யாருமே இல்லை என்று உணர்ந்தாள். தனக்கு இப்படி ஒரு நிலை வரும் என கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. தனது அஜாக்கிரதை தான் இதற்கு காரணம் என நினைத்து வெதும்பினாள்.

பெண்ணாக இருந்தாலும் நம்பி இருக்கக் கூடாது என புரிந்தது. சுயபச்சாதாபமும் இந்த கோபமும் தன்னை இங்கிருந்து தப்பிக்க வழி வகுக்க போவதில்லை என்பதை உணர்ந்து அதனை ஒதுக்கி சிந்திக்க முயன்றாள்.

அறையின் கும்மிருட்டுக்கு ஒருவாறு தன்னை பழக்கப்படுத்தி காதுகளை கூர்தீட்டினாள். சுற்றிலும் நோட்டம் பார்த்தாள் நேரம் செல்ல செல்ல என்ன செய்வதென்றே தெரியவில்லை அவளுக்கு.

எவ்வளவு நேரம் தான் இப்படியே இருப்பது யார் வருவார் என்று யோசித்தபோது உடல் சிலிர்த்து கோபமே எழுந்தது.

வெளியில் ஆள் அரவம் கேட்டது கூர்ந்து கவனித்தாள். அங்கு இருவர் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது.
"டேய் அந்த சவுக்கு மரம் தானே டா"என்றான் ஒருவன்.

"ஆமாண்டா மாரி" என்றவன் "எல்லாத்தையும் வண்டியில ஏத்தி அனுப்பிட்டா வேலை முடிஞ்சுது" என்று பதில் சொன்னான்.
இருவரும் சவுக்கு மரங்களை அடுத்தடுத்து நான்கைந்து தடவையாக தூக்கி சென்றார்கள்.

அப்படி ஒரு முறை செல்லும்போதும் கத்தி கூச்சலிட்டு உதவி கேட்கலாமா என்று கூட நினைத்தாள்.
"இந்த மரங்கள் எல்லாம் ஏத்தி விட்டு சரக்கு அடிக்க போகணும் டா"
" ஆமாண்டா ரெண்டு நாளாச்சு அடிச்சு" என்று அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.

அதேவேளை மாரி என்றவன் "டேய் இது என்ன குடோனா டா" என்ற அவனது பேச்சுக்கு "ஆமாண்டா பழசுப்பட்ட கிடக்கும் குடோன்"என்று பதில் வந்தது.

அடுத்த முறை அவர்கள் மரங்களை இங்கிருந்து எடுத்து செல்லும் போது அங்கே இருந்த ஜன்னலை இடித்துவிட ஏற்கனவே வரிசல் விட்டிருந்த அந்த ஜன்னல் உடைந்து சிதறியது. அது தெரிந்தாலும் கண்டுகொள்ளாமல் சென்றார்கள்.

சட்டென அறையில் ஊடுருவிய வெளிச்சத்தில் கண்களை தேய்த்துக் கொள்ள முடியாதவள் இமைகளை மூடி மூடி திறந்து ஒரு வாறு சமாளித்தாள். சூரிய அஸ்தமன கதிர்கள் அவள் கண்களை கூசியது.

வெளியில் பார்த்தால் அங்கு வந்த அந்த இருவரும் மரங்களை எடுத்துச் சென்று விட்டார்கள் என்று புரிந்தது. கையை லேசாக திருப்பி மணியை பார்த்தால் அது மாலை ஐந்தரை என்று காட்டியது.

தான் அங்கு வந்து நான்கு மணி நேரங்கள் கடந்தது விட்டதை உணர்ந்தாள். இயற்கை அழைப்பு வேறு அவஸ்தையுடன் நெளிந்தாள். இன்னும் சற்று நேரத்தில் இருட்டி விடும் என்ன செய்ய யோசித்தாள் நேரம் வேறு சென்று கொண்டிருந்தது. லேசாக பயம் எட்டிப்பார்த்தது.

உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியில் கண்களை சுழற்றினார் கண்ணுக்கெட்டிய தூரம் ஆள் அரவம் தெரியவில்லை. சற்று தூரத்தில் ஒரு மரம் தெரிந்தது. அதன் அருகில் பழைய சாமான்கள் கிடந்தது. அந்த மரத்திலிருந்து சிறிது அடி தொலைவில் பாம்பு புற்று தெரிந்தது. இவை அனைத்தும் மங்கலாகவே புலப்பட்டது அவளுக்கு.

கண்களை மூடி யோசித்து பார்த்தாள். தன்னை கடத்தியது யாரென்று விளங்கியது அவளுக்கு. அவனின் பிம்பம் கண்முன் விரிய, கொலை வெறியானாள். அவன் தனது அக்காவுக்காக, அவளின் பேச்சு கேட்டு இப்படி செய்திருப்பான். எத்தனையோ துன்பங்கள் அவர்களால் அவளுக்கு ஆனால் இது உச்சபட்ச செயல், என்று எண்ணியவளின் கண்முன் சில காட்சிகள் விரியலானது. அது அவளுக்கு வேதனையை தந்தது, அவளது இழப்பை நினைவு படுத்தியது. ஏதோ சத்தத்தில் நினைவலைகள் அறுந்து விழ, கவணமானாள்.

சற்று தூரத்தில் விசில் சத்தம் கேட்டது. சுற்றி பார்த்தால் யாரோ மரத்தின் மறைவில் ஒதுங்கியது அவளுக்கு புரிந்தது. சட்டென முடிவெடுத்தவள் அவளும் விசிலடித்து பார்த்தாள். அவள் நண்பர்களுடன் தியேட்டரில் விசில் அடித்து படம் பார்த்து பழகியது இன்று கைகொடுத்தது.

தனது விசில் சத்தத்திற்கு யார் அது பதில் கொடுப்பது என்று யோசித்தவாறு வெளியில் வந்து கண்களை சுழற்றினான். இன்னும் பலமாக சக்தி எல்லாம் திரட்டி விசில் அடித்தாள். வாயில் கைவைத்து விசிலடித்தால் இன்னும் கொஞ்சம் சத்தம் அதிகம் வருமே என்று கூட யோசித்தாள். ஆனால் முடியாதே.

அந்த மரத்திற்கு பின் இருந்தவன், சுற்றும் முற்றும் பார்த்தான். அந்த குடோனில் இருந்து தான் சத்தம் வருகிறது என்று புரிந்து, அருகில் சென்றான். உள்ளே ஒரு பெண் இருப்பது புரிந்தது.

அவன் அருகில் வந்ததை உணர்ந்து ஹெல்ப் மீ காப்பாத்துங்க, ஹெல்ப் மீ காப்பாத்துங்க என்று சத்தம் இட்டாள்.

"வெய்ட் வெய்ட் என்னன்னு நான் பார்க்கறேன்" என்றபடி அந்த கட்டிடத்தின், முன் புறம் சென்றவன் அது வெளியில் பூட்டி இருப்பதை கண்டான்.

மீண்டும் சுற்றி அவளருகே வந்தவன் "வெளியில் பூட்டி இருக்கு சோ பூட்டை உடைக்க வேண்டும், உடச்சுட்டு வரேன்" என்றபடி சுற்றும் தேடி கல் ஒன்றை எடுத்து பூட்டை உடைக்க முயன்றான்.

நான்கைந்து அடிகளில் அந்த துருப்பிடித்த பூட்டு உடைந்து கொள்ள உள்ளே சென்றான். இப்போது ஓரளவு நன்றாகவே இருட்டி இருள் பரவ தொடங்கியது. ஒருவரின் முகம் மற்றவர்களுக்கு சரியாக தெரியவில்லை.

"வாங்க போகலாம்" என்றபடிக் கட்டுகளை அவிழ்த்தான். கைகால்கள் விடுபட்ட உடன், மரத்துப்போன கால்களை மெல்ல மெல்ல அசைத்து எழுந்து உதறினாள். மணிகட்டை தேய்த்து விட்டாள்.

"ம் போகலாம்" என்றபடி இருவரும் வெளியில் வர நான்கைந்து ஆட்கள் அவர்களைப் பார்த்தபடி இருந்தனர்.
"ஐயோ" என்று அலறினாள்.

"டேய் தப்பிக்க பாக்குறாங்க புடிங்கடா" என்று அவர்கள் சுற்றி வளைக்க. அந்த பெரிய காம்பவுண்டுக்குள் இருந்த இந்தக் குடவுன் ஒருபுறம் இருக்க மறுபுறம் பெரிய கேட் தெரிந்தது.

அதன் வழியில் தான் செல்ல வேண்டும் போல என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் அவர்களை கடந்து தான் அந்த கேட்டை அடைய வேண்டும். கொஞ்ச தூரம் தான் ஆது.

"ஓ இப்ப ஃபைட் வேற பண்ணனுமா மில்டரிகாரரே நீர் சொல்லிக் கொடுத்த வித்தையை இன்னைக்கு தான் யூஸ் பண்ண போறேன்" என்றபடி சண்டையிட ஆரம்பித்தான். அவனால் ஓரளவு நன்கு சமாளிக்க முடிந்தது.

அதே சமயம் அவளும் தனது கராத்தையை, அவளது பாட்டி தற்காப்பிற்காக பயிற்றுவித்தது உபயோகித்தாள்.

இறுதியில் கீழே கிடந்த இரும்பை எடுத்து அனைவருக்கும் அடி கொடுத்த கொடுத்தவன், "வாங்க போதும், சீக்கிரம் போகலாம்" என்றான்.

அவளோ "என்னோட ஹேண்ட் பேக்லாம் எங்கடா" என்று கீழே விழுந்து கிடந்த ஒருவனிம் கேட்டாள்.

"அது வண்டியிலே இருக்குக்கா வண்டி அண்ணன் தாலி வாங்க எடுத்துட்டு போய் இருக்கு" அவன் பதிலளித்தான்.

"ஆமாம் அது ஒன்னு தான் அவனுக்கு கேடு" என்றவாறு பல்லைக் கடித்தாள் . மேலும் அவனை காலால் உதைத்தாள்.

"ஹலோ போதுங்க இப்படியே அடிச்சுக்கிட்டே இருந்த தாலி வாங்க போனவன் வந்துடுவான் பரவாயில்லையா" என்று கேட்டான்.

"ஐயோ சாரி வாங்க போலாம்" என்று அந்த கேட்டை நோக்கி சென்றாள்.

"இந்தப் பக்கம் வாங்க வழி இருக்கு இது சார்ட்கட் இங்க தான் பைக்கை நிறுத்தி இருக்கேன்"

'இருட்டில ஒண்ணுமே புரியலையே, கடவுளே காப்பாத்து இவனை நம்பி போறேன்' என்று வேண்டிக் கொண்டாள்.

அந்த இடத்தில் இருந்து வெளிவந்தவன், தனது பைக்கை இருக்கும் இடத்திற்கு அவளை அழைத்து சென்றான்.

அந்த மரத்திற்குப் பின்னால் தான் தனது வண்டியை விட்டிருந்தான். "பார்த்து வாங்க பாம்பு புத்து இருக்கு" என்றபடி மொபைல் டார்ச்சை எடுத்து உபயோகித்தான்.

அங்கிருந்து பைக்கில் அருகில் வந்தவன், சற்று தூக்கி அவள் முகம் பார்த்தான்.

"லாலிபப் நீ யா" என்று வியந்து தான் போனான்.

சற்று முன் முதன் முதலாக பார்த்த ஒருத்தியை லாலிபப் என்று அழைக்கிறானே.

உயிரில் பூப்பறித்த
காதலியும் நீ தான்...
உள்ளம் தேடும் ஒரு

தேவதையும் நீதான்...
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 2:-

"லாலிபாப் நீயா" என்று மெலிதாக கூவினான். அவனுக்கு ஜிவ்வென்று இருந்தது. பரவசமாக அவளை பார்த்துக்கொண்டே இருந்தான்.

அவளோ இந்த லூசு என்ன இப்படி பார்க்குது என்று நினைத்துக் கொண்டாள்.

" எதே லாலிபப்பா, பார்த்து கொஞ்ச நேரம் தான் ஆகுது பட்ட பேரா" என்றபடி மணிகட்டை சுழற்றினாள்.

"தாயே, கைய கீழ இறக்குமா, இப்போ தான் பைட் சீக்குவன்ஸ் முடிஞ்சிறுக்கு, நான் ரொம்ப டயர்டு" என்றான்.

மேலும் அவளது சோர்வை உணர்ந்தவன்போல் "வாங்க டீ குடிச்சிட்டு ஏதாவது சாப்பிட இருக்கான்னு பார்க்கலாம்" என்றபடி சற்று தொலைவில் இருந்த அந்த டீக்கடைக்கு அவளை அழைத்துச் சென்றான்.

அந்தக் கடையின் அருகில் வண்டியை நிறுத்தி அவன் "வாங்க டீ குடிக்கலாம்" என்றான். ம் என்றபடியே அவளும் இறங்கினாள்.

கடைக்காரரை பார்த்து "அண்ணா ரெண்டு டீ" என்றவன் " வேற ஏதாவது சாப்பிட இருக்கான்னா" என்றும் கேட்டான்.

அவரோ "இல்ல தம்பி கடையை எடுத்து வச்சாச்சு பொண்டாட்டி பிரசவத்துக்கு ஊருக்கு போயிருக்கா நானும் கிளம்பிட்டேன், அதனால கடை எடுத்து வச்சாச்சு டீயும் பன்னும் தான் இருக்கும் சாப்பிடுறீங்களா"என்று கேட்டார்.

"சரிங்கண்ணா குடுங்க" என்று இவன் பதிலளித்தான்.

பின்பு அவளை திரும்பி பார்த்தவன் "அங்க தண்ணீ இருக்கு குடிச்சிட்டு முகம் கழுவிக்கோங்க போங்க" என்றான்.

அவளது முகத்தில் ஒரு அசூசையான பாவனை வந்து போனது.

அவளது முகபாவனைகளை கண்டவன் "கூச்சபடாதே மா" என்று மென்மையாக கூறினான். "இல்லை கூச்சமெல்லாம் இல்லை" என்று இவளும் சொன்னாள்.

அப்போ "முகம் கழுவி கோங்க" என்று மீண்டும் ஒரு முறை சற்றே வற்புறுத்தினான் அவளை.

அவளது தெளிவில்லாத முக பாவனை அவ்வாறு கூற செய்தது. "எனக்கும் முகமெல்லாம் கழுவனும் தான் ஆனா..." என்றபடி சோர்வாக இழுத்தாள்.

அவளது பதிலில் புருவமத்தியில் முடிச்சிட யோசித்தவன் கண்கள் சட்டென விரிந்தது. "ஓ காட் "என்று தனக்கு தானே கூறியவன் கடைக்காரரிடம் சென்று ஏதோ பேசினான்.

இவற்றையெல்லாம் கவனிக்காதவள் சுற்றி நோட்டமிட்டாள், அவள் அருகில் நெருங்கி, மென் குரலில் "கடைக்கு பின்னால் ரெஸ்ட் ரூம் இருக்கு யூஸ் பண்ணிக்கோங்க" என்றான்.

அவள் சற்று சங்கடமாக அவனைப் பார்த்தாள் அவன் கண்களை மூடி திறந்து ஆறுதல் அளித்தான்.

கடைக்காரரும் தம்பி இந்தாங்க டீ என்றபடி இருவருக்கும் டீயோடு ஆளுக்கு இரு பண்ணும் கொடுத்தார்.

திரும்பி வந்தவள் முகம் கழுவி தண்ணீர் குடித்துவிட்டு டீயையும் பண்ணையும் உண்டாள்.

"அவனுங்க வந்தாலும் வருவான் வாங்க சீக்கிரம் போகலாம். அந்த தாலி வாங்க போன நாய் வந்தாலும் வந்துருக்கும்" என்று படபடப்புடன் கூறினாள்.

தாலி என்ற சொல்லில் அவனது முகம் ஒரு நொடி கோபத்தை தத்தெடுத்தது, அவள் கவனிக்கும் முன்பு அதை மாற்றி தனது போனை பார்த்தவாறு "என்ன லவ்வா"என்று கேள்வி கேட்டான்.

"சீ லவ்வா அதுவும் அவனையா" என்று அருவருப்புடன் முகம் சுளித்தவள்,
"அவன மட்டுமில்ல யார் மேலேயும் லவ்வில்லை வரவும் வராது" என்று நிமிர்ந்து உறுதி அளித்தாள்.

அவளது முக முதல்பாதி பதிலில் மகிழ்ந்தவன் மீதி பதிலில் ஜர்க்கானான். 'லவ்வராதாம்டா டேய் நீ ஹெவியா பர்பாமன்ஸ் பன்னி புரிய வைக்கணும் போலவே' என்று சொன்ன மனசாட்சியை அடக்கி வைத்தான்.

போலாமா என்று அழைத்தாள். இதோ ஒரு போன் பேசிட்டு வரேன் என்று இழுத்தவன், "ஆமா உன் பேர் என்ன" என்று வினவினான்.

"ரக்ஷிதா" என்றாள்.

"ரக்ஷிமா இந்த காச கடையில குடு நான் போன் பேசிட்டு வரேன் என்று அங்கிருந்து தள்ளி சென்றான்".

அவனது ரக்க்ஷிமா என்ற அழைப்பில் அப்படியே நின்று விட்டாள். அவளுக்கு தன் மீது அன்பு வைத்திருந்த ஒரு ஜீவன் கண் முன் வந்து போனார். சட்டென கண்கள் கலங்கியது.

அவளுக்கு அவன் தனது வேலட்டை அப்படியே கொடுத்திருந்தான். அவளுக்கு இருந்த மனநிலையில் இயந்திர தனமாக பணம் கொடுத்து விட்டு வைத்தாள். அதில் இருந்த அவனது குடும்ப படத்தை கவனத்தில் கொள்ளவில்லை.

பத்து நிமிடங்கள் தீவிரமாகப் அலைபேசியில் பேசி அவன் திரும்பிப் பார்த்தான் அவள் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். போகலாம் என்றபடி அருகில் சென்றான்.

அவன் பைக்கில் ஏற சென்ற நேரத்தில்தான், அவனது கை காயத்தை கவனித்தாள் புறங்கையில் காயமாக இருந்தது, அது சற்று நீளமாகவும் ஆழமாகவும் இருந்தது. தையல் போட வேண்டும் போல என்று தோன்றியது அவளுக்கு.

முன்பே ரத்தம் வழிந்ததை கழுவியவன் அப்படியே விட்டிருந்தான்.

அதனை பார்த்தவள் "சாரி என்னால் தானே" என்றால் மன்றாடும் குரலில்.

"சின்ன காயம் தானே சீக்கிரம் சரியாகிவிடும் ஸாரிலாம் வேண்டாம்" என்றபடி சிரித்தான்.

"இல்ல வலிக்குமில்ல ப்ளட் லாஸ் எல்லாம் வேற அகிருக்குல்ல அச்சோ" என்று பரிதவித்தாள்.

"விடு ஒன்னும் பிரச்சனை இல்லை, வேணும்னா தையல் போட்டு, ஒரு டிடி போட்டுக் கலாம்" என்று இலகுவாக்கினான் அவளை.

சற்று தயங்கியவள் "நான் வண்டி ஓட்டவா" என்று கேட்டே விட்டாள்.
"வாட் நீயா, அதுவும் என்ன வச்சா" என்று விழிவிரித்தான்.

அவனது பாவனையில்,"ஏன் எனக்கு ஓட்ட தெரியும் லைசென்ஸ் இருக்கு" என்றாள் வேகமாக.

"லைசென்ஸ் ஓகே..."என்று வெகுவாக தயங்கினான்.

அது ராயல் என்ஃபீல்டு வகை வண்டி அவள் எப்படி ஓட்டுவாள் என்று எண்ணியபடி அவளை ஆராய்ந்தான்.
நல்ல சிவப்பு நிற காட்டன் டாப்ஸ் அவளது நிறத்தை எடுத்து காட்டியது, வெளிர் நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து இருந்தாள். முகம் கழுவியதில் பொட்டு இல்லை.

கண்ணங்களில் ஆங்காங்கே ஒன்றிரண்டு பரு இருந்தது, அதுவும் அவளுக்கு அழகை கூட்டியது.
கழுத்தில் நங்கூரமிட்ட டாலர் செயின் ஒன்று அணிந்திருந்தாள்.

காதுகளில் வளையங்கள் இடம் பிடித்திருந்தன. அந்த சங்கு கழுத்தில் மிளகு அளவில் மச்சம் ஒன்று இருந்தது, அது மிச்சமின்றி அவனை எடுத்துக் கொள்ள தூண்டியது.

மொத்த கூந்தலையும் அள்ளி தூக்கி போனி டெயில் போட்டிருந்தாள். இடது கையில் பெரிய வாட்ச்ம் வலது கையில் தங்க பிரேசிலெடும் இடம் பிடித்திருந்தது.சற்று ஒல்லியான உடல் வாகு, அது உயரமாகவே காட்டியது அவளை.

அவன் பார்வையில் "என்ன சார் ஆராய்ச்சி பண்ணி முடிச்சிட்டீங்களா நம்பி பைக்கை கொடுங்க சேதாரம் ஆகாது" என்று சிரித்தாள்.

"ம் சரி"அரைகுறையாக ஒத்துக்கொண்டான்.

"டோன்ட் ஃபீல் கீழே போட்ற மாட்டேன் உங்களை கீழே போட்டால் நானும் சேர்ந்து தான் விழனும் என பாத்துக்க நான் தான் இருக்கேன் சோ ஐ வில் நாட் டமேஜ் மைசெல்ப்" என்று நிமிர்வாகவே கூறினாள்.

தனக்கு யாரும் இல்லை என்று அவள் கூறியது அவளுக்கு வலித்ததோ இல்லையோ ஆனால் அவனுக்கு வலித்து காயம்பட்டு போனான் மனதளவில்.

நான் இருக்கிறேன் என்றும், என்றுமே இருப்பேன் என்றும் அனணத்து ஆறுதல் சொல்ல ஆசை தான் அவனுக்கு. அந்த என்னத்தை கட்டுப்படுத்தி லேசாக மூச்சு எடுத்து தலை கோதியவன், "சார் இல்ல என் பேரு பிரணவ்"

"கால் மீ பிரணவ்" என்று சொன்னான்.

பிரணவ் என்று ஒரு முறை உச்சரித்தவள், அந்த வண்டியில் அனாயசமாக காலை எடுத்து போட்டு உட்கார்ந்தாள்.

அவளது உச்சரிப்பில் தனது பெயருக்கு புது ஒலி வடிவம் கிடைத்ததை போல் உணர்ந்தான்.

அவனது தலைக்கவசத்தை அணிந்து பின்னே ஏறுமாறு கண்களால் சைகை செய்தாள். அந்த கண்கள் பம்பரம் போல் சோழியாக சுழன்றது...

அவன் ஏறி அமர வண்டியை எடுத்தாள் அவள். அந்த ஏகாந்த இரவில் தன்னவளோடான அந்தப் பயணத்தை நிரம்பவே ரசித்தான்.

அவளது கூந்தல் முகத்தில் மோத, அது தந்த மோன உணர்வுகளை கட்டுப்படுத்தியவாறு பாடல் ஒன்றை மெலிதாக விசிலடித்தான்.

அதே நேரம் அங்கு குடவுனில்..,

"அண்ணே அவ தப்பிச்சுட்டா", என்றபடி அவர்கள் அடி வாங்கிய கதையை சொன்னான்.

"டேய் என்னங்கடா இப்படி கோட்டை விட்டுட்டீங்களேடா உங்கள நம்பி காரியத்தில் இறங்கினேன் பாரு என்ன சொல்லணும், என் புத்திய... "

"அண்ணே ரெண்டு பேரும் சேர்ந்தே அடிச்சாங்க அவன விட அந்த பொண்ணு ரொம்ப அடிச்சிடுச்சு அண்ணே" என்ற அழுதே விட்டான்.

"ஆமா பொம்பள புள்ள கையில அடி வாங்கிட்டு வக்கணையா பேசுடா" என்று எட்டி உதைத்தான் அவனை.

"இப்ப நான் எங்க அக்காவுக்கு எப்படி பதில் சொல்வேன் இப்படி தப்பிக்க விட்டுவிட்டு இருக்கீங்களே டா இது மட்டும் தெரிஞ்சுது எங்க அக்கா ரொம்ப வருத்தப்படும் டா".

"உங்கள சோறு திங்க அனுப்பிய அனுப்பினதுக்கு, நல்லா மூக்கு முட்ட சாப்பிட்டு இப்படி கோட்டை விட்டுட்டீங்க சரக்கு வேற நிதானத்தில இல்லாம ரெண்டு பேரும் நல்லா அடிச்சு போட்டு கிளம்பிட்டாங்க".

"காப்பாற்றிவிட்டது யாருன்னு ஒன்னும் தெரியல இன்னும் என்ன என்ன நடக்கப் போகுதுன்னு புரியல போங்கடா டேய்" என்று உச்சஸ்தாயில் கத்தியவன், பையில் வைத்திருந்த சரக்கு பாட்டிலை அப்படியே வாயில் கவிழ்த்தான்.

அதே நேரம் அவனுக்கு தொலைபேசி அடித்தது எடுத்துப் பார்த்தவன் குரலில் மென்மையாக,
"அக்கா"என்று பாசமாக கூப்பிட்டான்.

அந்தப் பக்கம் கேட்ட கேள்விகளுக்கு,
"சாரிக்கா அவ தப்பிச்சு போயிட்டா... ஒன்னும் பண்ண முடியல அக்கா எவன்னும் ஒன்னும் தெரியல...
நீ வருத்தப்படாத...
அடுத்து என்ன பண்றது யோசிக்கலாம்..."
என்று ஏதேதோ சொல்லி வெகுவாக அவளை சமாதானம் செய்துவிட்டே போனை வைத்தான்".

"பாருங்கடா எங்க அக்கா தாண்டா உங்களால நான் பேச்சு வாங்க வேண்டியிருக்கு நான் இங்கேயே உட்கார்ந்து இருக்கனும், எல்லாம் என் தப்புதான்" என்று புலம்பினான்.

சற்று நேரத்திற்கெல்லாம் என்ன நேர்ந்தது என்று கிரகிக்கும் முன்னே அவர்களை போலீசார் அவர்களை கைது செய்து இருந்தனர். மூளை மரத்து போனது போலானது யார், என்ன, எப்படி என்று ஆயிரம் கேள்விகள் முளைத்தது அந்த கடத்தல் காரனுக்கு.

இதற்கு பின்னர் யார், என்ன என்று, தெரிந்து கொள்ள சேர்ந்தே பயணிக்கலாம்...

பாடல் இதோ,

விசிலடிக்கும் வதனா வதனா
ரசவாத மதனா மதனா
சடுகுடு ஆடும் கண்கள்
காதல் பம்பரமா...


அவளது பெரிய விழிகளில் அவனுக்கான காதலை கான்பானா?...
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 3:-

ரக்ஷிதா அந்த மருத்துவமனை முன்னே வண்டியை நிறுத்தினாள்.

"வாங்க டாக்டர்கிட்ட காமிச்சிட்டு போகலாம்" என்றபடி இறங்கினாள்.
வேண்டாம் சமாளிச்சுக்கலாம் என்று சொல்ல வந்தவன், அவளது முகத்தை பார்த்து" சரி டாக்டரை பார்க்கலாம்" என்றபடி உள்ளே நுழைய போனான்.

"நீங்க போய் ரிசப்ஷன் ல கேளுங்க நான் வண்டியை பார்க் பண்ணிட்டு வரேன்" என்றபடி பார்க்கிங் இடத்திற்கு சென்றாள்.

அவள் திரும்பி வரும் பொழுது, பிரனவ் யாரோ போலீஸ் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தான். அவன் அவளுக்கு முதுகு காட்டியபடி பேச்சு நின்று பேசிக்கொண்டிருந்தான். அவள் நெருங்கும் சமயத்தில் பேசி முடித்து அவரை அனுப்பி விட்டான்.

"என்ன விஷயம், ஏதோ பேசிட்டு இருந்தீங்க" என்றபடி அவனை நெருங்கினாள்.

அதுவா "சும்மா ரெஸ்ட் ரூம் கேட்டார் எனக்கு தெரியலன்னு சொல்லிட்டு இருந்தேன்" என்றவன், "டாக்டர் ரூம் ரைட் சைடு சொன்னாங்க போய் பார்த்துட்டு வரலாம்" என்று சொல்ல மருத்துவரின் அறையை நோக்கி சென்றார்கள்.

கையில் கட்டுப்போட்டு விட்டு ஊசியும் போட்டு வெளியில் வந்தார்கள். அங்கு உணவகம் இருந்ததை பார்த்து விட்டு, சாப்பிட்டு போகலாமே என்றான். ம் போகலாம் என்றபடி சாப்பிட சென்றார்கள்.

உணவுக்கு சொல்லிவிட்டு கை கழுவிவிட்டு வந்து அமர்ந்தவளுக்கு விடாது போன் அடித்துக்கொண்டே இருந்தது. ஆம் அவள் அவளது போனை பாக்கெட்டில் வைத்திருந்தாள்.

அது அவளது வழக்கமும் கூட. "போன் வச்சுருக்கியா"என்று கேட்டவன், "உன்னை கடத்தினவங்க லூசு தான் போல ஏன்னா வழக்கமா இந்த மாதிரி கடத்தும் போது போன்லாம் கைப்பற்றிருவாங்களே". என்று வேறு கேட்டு வைத்தான்.

"ஆமா எப்பொழுது குர்த்தா இல்லாட்டியும் ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்து இருப்பேன்" என்றபடி போனை எடுத்துப் பார்த்தாள்.

அதில் தெரிந்த என்னை பார்த்து சலிப்பாக உச்கொட்டினாள்.

அதேசமயம் உணவு வந்துவிட உணவில் கைவைத்தவளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்தது அந்த அலைபேசி.

இப்போது வெளிப்படையாக தலையில் கை வைத்தபடி போனை எடுத்து காதில் வைத்தாள், ஏதேதோ பேசி அவள் போனை அணைத்து போட்டாள்.

அவளது முக பாவனையும் ஓய்ந்து போன தோற்றத்தையும் பார்த்தவன்,
"இது என்ன போன் மேல போன் சாப்பிட்டு பேச வேண்டியதுதானே" கனிவாக கேட்டான்.

"உடனே பேசலனா எப்படியும் திரும்பவும் கால் பண்ணிட்டு தொந்தரவு பண்ணுவாங்க அதுதான் இப்பவே பேசிட்டேன் என்ன பெத்த வரும் அவர பெத்தவங்களும் தான் மாத்தி மாத்தி போன் பண்ணிட்டு இருக்காங்க, மாப்பிள்ளை பார்க்கிறாங்களாமா எப்படி என்னனு ஒப்பீனியன் கேக்குறாங்க".

அவள் தனது தந்தையை அப்பா என்று செல்லாததை மனதில் குறித்து வைத்து கொண்டான்.

தன்னைப்பற்றி தன்னை அறியாமலேயே அவனிடம் சரளமாக கூறுவதை உணரவில்லை அவள்.

ஆனால் அவன் அதை உணர்ந்திருந்தான் தன் மீது கொண்ட நம்பிக்கை தான் காரணம் என்பதை அவன் கண்டுகொண்டான். கோதை அவள் அதை கண்டு கொள்வாளா.

அவளது மாப்பிள்ளை என்ற சொல்லில் "உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும் எனி ஐடியா இருக்கா",
"ஏன் கேக்கறீங்க" என்ற மாதிரி ஒரு பார்வை பார்த்தாள், ஆத்தீ புள்ள உஷார் ஆகுது டா என்று எண்ணியவன், "சும்மா போர் அடிக்குதுல அதான் ஒரு ஐடியாக்கு தெரிஞ்சுக்கலாம்னு தான் நீங்க எப்படி மாப்பிள்ளை எதிர் பார்க்கிறீங்களோ, தெரிஞ்சா நான் ரெடியாகுவேன் இல்ல அதுக்கு தான்", என்று இலகுவாக பதில் சொன்னான்.

அவன் தன்னை குறிப்பிட்டு சொன்னதை உணரவில்லை அவள்.
அவனுக்கு அவளை பேசவைத்து ஆகவேண்டும், அவளது எண்ண அலைகளை புரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை. அதற்காகவே அவ்வாறு செய்தான்.

"பெருசா எந்த விருப்பமும் இல்லங்க ஏற்கனவே ராகவன் மாமா ஒரு மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்காங்க அது என்ன ஏதுன்னு எனக்கு இன்னும் தெரியல நெக்ஸ்ட் வீக்ல அத பத்தி தெரியும். சோ நோ எக்பெக்டேஷன்ஸ் அண்ட் நோ ஒர்ரீஸ்" என்று தோளைக் குலுக்கியபடி பதில் சொன்னாள்.

ஒருத்திக்கு எத்தனை பேர் தான்டா மாப்பிள்ளை பார்ப்பிங்க என்று நொந்தபடி, "அந்த மாப்பிள்ளை பிடிக்கலனா" என்று தட்டில் கைகளை அலையவிட்டு கேள்வி கேட்டான்.

அவளுக்கும் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை, இருந்தும் "அந்த மாப்பிள்ளைக்கு என்ன பிடிச்சிருந்தால் நிச்சயம் இந்த கல்யாணம் நடக்கும் அவ்வளவுதான் வேற எதுவும் எனக்கு சொல்ல தெரியல" என்றபடி பேச்சை நிறுத்தினாள்.

கண்களுக்கு தெரியாத அந்த மாப்பிள்ளை மேல் கோபம் மூண்டது. அதன்பின் அங்கு மௌனமே ஆட்சி புரிந்தது. சத்தமின்றி இருவரும் தத்தமது உணவில் கவனம் செலுத்தினர்.

உணவு முடித்து கிளம்பும் தறுவாயில், பிரனவ் அவளை தனது வீட்டில் வந்து தங்குமாறு அழைத்தான்.

"மணி ஆயிடுச்சு நீ இனி ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்குறது கஷ்டம், பேச்சுலர் வீடு தான் ஆனால் ஹோம்லி பீல் இருக்கும் "

அவள் தீர்க்கமாக மறுத்தாள். அதற்கு அவன் "இந்த நேரத்தில ரூம் கிடையாது, ஆல்சோ ஐடி ப்ரூப் கேட்பாங்க, உன் கிட்ட இருந்தாலும் ஒரு வேளை கடத்தல் காரணுங்க வந்தா எப்படி" என்று ஏதேதோ சொல்லி கேட்டு அவளை தன்னுடன் தங்க வைக்க போராடினான்.

ஒரு நொடி போதும் அவனுக்கு தனது அடையாளம் காட்டி, அவளை தன்னுடன் வைத்துக் கொள்ள, ஆனால் அவள் விஷயத்தில் மட்டும் அதை செய்ய மனம் வரவில்லை.

இல்லையெனில் எப்போதோ அவளை பற்றிய விவரங்கள் அத்தனையும் அவன் விரல் நுனியில் வந்திருக்கும்.
என்ன சொல்லியும் கேட்காதவளிடம், தன்னை நம்பாதவளிடம் கோபமாக வந்தது.

இறுதியில் "இதோ பாரு எனக்குனு ஒருத்தி ஏற்கனவே இருக்கா, அப்படி ஒன்னும் உன்மேல லவ் வந்து விழுந்திட மாட்டேன்" என்று காட்டமாக கூறியவன் மேலும், "உனக்கு தான் தற்காப்பு கலை தெரியுமே ஏன் பயப்படுற பொண்ணுங்கிறதாலயா" என்று சீன்டினான்.

அது நன்றாக வேலை செய்தது, ஒருவாறு அவனுடன் தங்க அவனது வீட்டிற்கு பயனப்பட்டாள், ரக்க்ஷிதா.
---------------------------------------------------

அங்கு அந்த பெரிய வீட்டில்,

"நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்லை" என்றபடி தனது பெரிய உடலை தூக்கி சுமந்து வந்தார் அவர்.

"ராகா நான் என்ன செய்யட்டும் இது எங்க அம்மாவோட முடிவு" என்றார் சலித்தபடி.

எத்தனை முறை எடுத்துச் சொல்லியும் மீண்டும் மீண்டும் இதே பல்லவியைப் பாடுபவளை, பார்த்து சலித்து தான் போனது அவருக்கு.

"நீங்க என்ன சொல்லி என்ன கல்யாணம் பண்ணிக்கிடிங்க" என்று ஆரம்பித்த இடத்திற்கே வந்தார் ராதா.

அதில் இன்னுமே கடுப்பானார் "நீ கேட்கறது சாரிதான் இத்தனை வருஷம் ஆச்சு உன் குனத்தை கொஞ்சம் மாத்திக்கலாமில்ல" அவருக்கு யாரும் இல்லாமல் நிற்கும் பெண்ணிற்கு உதவியாக கூட நினைக்க மாட்டேன் என்கிறாளே என்ற கோபம்.

தானுமே தனது ரத்தத்திற்கு இதுவரை ஒன்றுமே செய்து விடவில்லை என்பதை வாகாக மறந்துவிட்டார் ராமநாதன்.

அதையும் ராகா சொல்லத்தான் செய்தார் "இத்தனை நாள் இல்லாத பாசம் இப்ப என்ன திடீர்ன்னு உங்களுக்கும் உங்க அம்மாவுக்கும்" என்பதை வெளியிலும், "சாகப்போற கிழவி அமைதியா போய் சேராமல் என்ன இது" என்று மனதிற்குள்ளும் தாளித்தார்.

சட்டென ஒரு பேரமைதி அவரிடம் தனது வாழ்க்கை முறையை எண்ணி உள்ளுக்குள் வெட்கி போனார்.

ராகா வெளிப்படையாக கேட்டதை மனசாட்சி உள்ளுக்குள் சில நாட்களாகவே கேட்டது.

விதியோ எந்த போதி மரத்தின் கீழ் இவனுக்கு ஞானம் வந்தது என எள்ளி நகையாடியது.

ஆனால் ராகா ஒன்றும் லேசுப்பட்டவர் இல்லையே, இல்லையெனில் இப்படி ஒரு வாழ்வு தனக்கு அவரால் அமைத்துக்கொள்ள முடிந்திருக்குமா என்ன.

அதில் அவர் தனது சாமர்த்தியத்தையும் புத்திக்கூர்மையை இருப்பதாக எண்ணி அவ்வப்போது அகமகிழ்ந்து போவார்.

25 ஆண்டுகளுக்கு முன்பே முடித்திருக்க வேண்டும் ஆனால் என்று பெருமூச்சு விட்டார்.

பாடல் இதோ...

முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை ?
முதலில் யார் எய்வது யார் எய்வதம்பை ?
மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல ..
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல..
கனவுகள் வருதே கண்ணின் வழியே..
என் தோள் மீது நீ..

நான் குளிர் காய்கின்ற தீ..
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 4:-

ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தார்கள். வண்டியை நிறுத்தி விட்டு கதவை திறந்து உள்ளே நுழைந்தவள், "உங்க வீடு இங்க இருக்கு நீங்க எப்படி அங்க" என்று கேட்டாள்.

"அதுவா பிரண்டு ஒருத்தனை பார்க்கிறதுக்காக போனேன் கூகுள் மேப்பில் வழி தேடி போனா, அது அந்த முட்டு சந்துல கொண்டது நிறுத்திவிட்டிருச்சு".

அவனது கூற்றில் சத்தியமாக வியந்து போய் பார்த்தாள்.

"அட ஆமா நெஜமாத்தான்மா சொல்றேன். அது ஒன்னு சொல்ல நான் ஒன்னு செய்யன்னு கடைசியில் அங்க வந்து நின்னேன்" என்று சொல்லி முடித்தான்.

"சரி நான் கூட கேட்கும் நினைச்சேன் பைட் பண்ணுற, பைக்குலாம் ஓட்டுற போல்டா இருக்க எப்படி இந்த பசங்க கிட்ட மாட்டின" என்று தன்னுள் உறுத்திய கேள்வியைக் கேட்டு விட்டான்.

ஒரு நிமிடம் அவளது முகம் கோபத்தை தத்தெடுத்து,

"அதுவா சொன்னா சிரிக்க கூடாது" என்று நிபந்தனை இட்டவள், "ஒரு பொண்ணு அட்ரஸ் கேட்டுச்சு எனக்கு தெரிஞ்ச ஏதோ ஒன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன் அதுக்குள்ள பின்னாடி யாரோ வந்த மாதிரி இருந்துச்சு நான் சுதாரிப்பதற்குள் மயக்கமருந்து வச்சு கடத்திட்டானுங்க" என்று பல்லைக் கடித்தவாறு சொல்லி முடித்தாள்.

ஒரு நிமிடம் அவனுக்கு உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை, பின்பு புரிந்தவுடன் வயிற்றை பிடித்து அப்படி ஒரு சிரிப்பு சிரித்தான் "சாரி நீ சிரிக்க கூடாது சொல்லி இருக்கே, ஆனா என்னால முடியல" என்றபடி இன்னுமே சத்தமிட்டுச் சிரித்தான்.

இந்த நிமிடம் வரை தனது அந்த அஜாக்கிரதையால் கோபமே கொண்டிருந்தவள், அவனது சிரிப்பை பார்த்து அவளும் மெலிதாக சிரித்தாள்.

"எங்க பாட்டி காலத்து பிளாணை போட்டு கடத்தியிருக்கிறார்கள்" அவனது உதடுகள் மெலிதாக சிரித்து ஓய்ந்தது.

பாட்டி என்ற சொல்லில் அவளுக்கு தனது பாட்டி நினைவு வரவே, அவரது போதனைகளும் நினைவுக்கு வர அமைதியானாள்.

அவளது அமைதியை பார்த்தவன் "ஆமா நீ கோயம்புத்தூர் தானே இங்க எப்படி வந்த" என்று அவளை திசை திருப்பினான்.

அதற்கு அவள் "என் கம்பெனி ப்ராஜெக்ட் விசயமா நான் இங்கே வந்தேன் வந்த இடத்தில இப்படி ஆயிடுச்சு" என்று சின்ன குரலில் கூறினாள்.

நல்லவேளை அவன் அவளது ஊர் கோயம்புத்தூர் என்று குறிப்பிட்டு சொன்னதை அவள் கவனிக்கவில்லை.

அங்கு குப்பிட்டோ (cupid) "இவங்க ரெண்டு பேத்தையும் மீட் பண்ண வைக்கிறது குள்ள எவ்ளோ வேலை டா சாமி" என்று நினைத்து பெருமூச்சு விட்டது.

பிரணவ் தனது டீசர்ட் அண்ட் டிராக் பேன்ட் ஒன்றை கொடுத்து அணிந்து கொள்ள சொன்னான்.

அவள் வேண்டாம் என்று மறுக்கவே "இந்த டிரஸ்ஸோட எப்படி தூங்குவ குளிச்சிட்டு மாத்திக்கோ இது புதுசுதான் யாரும் யூஸ் பண்ணல பாரேன்" என்று காட்டினான்.

அவளுக்கும் அன்றைய அலைச்சலில், வியர்வையோடு துயில் கொள்ள மனமில்லை தான், ஆயினும் தயங்கினாள்.

அவன் உடனே "நீ ஒன்னும் இந்த டிரஸ் திருப்பித் தரவேண்டாம் வச்சுக்கோ காசு வேணும்னா வாங்கிக்கிறேன்" என்று எடுத்துக் கூறினான்.

அது அவளுக்கு சரியாக தோன்றியது இருந்தாலும் "ஆண்கள் உடையை வைத்து என்ன செய்வது" என்று அவனிடமே கேட்டாள்.

"என் ஞாபகம் வச்சுக்கோ பின்னால நான் உன் வீட்டுக்கு வரும்போது எனக்கு பயன்படும்" என்று கூற விழைந்த நாவை கட்டி அமரவைத்து,

"நீ போட்டிருந்த டிரஸ் நான் எப்படி வச்சுக்க" என்று பதில் கேள்வி கேட்டான்.

அவனது மனசாட்சி "அட போக்கத்தவனே அதுவும் நல்லா தான் இருக்கும்" என்று மண்டையில் குட்டியது.

ஒருவாராக இருவரும் குளித்து விட்டு ஹாலுக்கு வந்தனர்.

அப்பொழுது ஹாலில் இருந்த டீவியை போட்டான் பிரணவ்.

ஏதோ ஒரு சேனலில் ரோஜா படத்தில் அரவிந்சாமி வந்து மதுபாலாவிடம் தனது ஸ்வெட்டரை திருப்பிக் கேட்கும் காட்சி ஓடியது.

அதில் இருவரும் அதிர்ந்து ஒருவருக்கொருவர் விழித்துப் பார்த்துக் கொண்டனர். அவள் உடையை இறுக்கிப் பிடித்தவாறு அவனை முறைத்தாள்.

அதில் தெளிந்தவன் "இந்த சீனுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை" என்று கூறி கத்தி ஒன்றை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தவன் "என் மேல நம்பிக்கை இல்லன்னா உன்னோட பாதுகாப்புக்கு வச்சுக்கோ" என்று கூறினான். அது எப்படி தன்னை அவ்வாறு நினைக்கலாம் என்று கோபம்.

அவள் அந்த கத்தியையும் அவனையும் ஒரு முறை பார்த்துவிட்டு கத்தியை இருந்த இடத்தில் வைத்துவிட்டு வந்து அமர்ந்தாள்.

"சரி தூங்கலாமா" என்றான்.

எங்கே என்பது போல் பார்த்தாள்.

"இது சிங்கிள் பெட்ரூம் ஹவுஸ் நீ அந்த ரூமை யூஸ் பண்ணிக்கோ" என்றான்.
அது அவனது அறை தான்.

அவளுக்கு அதில் விருப்பம் இல்லை அதனால், "இல்ல நான் ஹாலில் படுத்துகிறேன் ஐம் கம்போர்ட் வித் இட்" என்றாள்.

அவளை மேலும் வற்புறுத்த மனமின்றி "ஓகே அப்போ நீ திவான்ல படுத்துக்கோ நான் ரூம்ல படுத்துகிறேன்" என்றான்.

"குட் நைட் " கூறிக்கொண்டனர்.

சிறிது நேரத்தில் எதேச்சையாக வெளியே வந்தவன், காதுகளில் முனகல் சத்தம் கேட்டாது.

அது அவளின் குரல் தான் என்று உணர்ந்து அவளது அருகில் சென்று உற்று கவனித்தான்.

ஆம் தூக்கத்தில் உளறுகிறாள் பெண்ணவள்.

மௌனமாக அவளது முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அவள் சொன்ன வார்த்தைகள் கோர்வையாக இல்லாமல் ஒன்றிரண்டாக உதிர்ந்தது.

உதிர்ந்த வார்த்தைகள் எல்லாம் திரட்டி அர்த்தம் செய்து பார்த்தான், அந்த வார்த்தைகளின் அர்த்தங்கள் எல்லாம் அவனுக்கு ஆத்திரத்தையே கொடுத்தது. அவளின்பால் இரக்கம் வந்தது.

ஏதோ ஒன்றிரண்டு வார்த்தைகளில் தன்னவளின் மறுபக்கத்தை ஓரளவுக்கு கனித்தவன் முழுவதும் தெரிந்து கொள்ளும்போது, என்ன நினைப்பானோ.

பேதை அவளை போற்றி பாதுகாப்பானா...
---------------------------------------------------
அந்த அறையில் அவர் நுழைகையில் இருமல் சத்தம் கேட்டது. அவர் வேகமாக சென்று தண்ணீரை எடுத்து
இருமியவருக்கு கொடுத்தார்.

அவருக்கு பக்கவாதம், கைகால்கள் செயலிழந்து விட்டது. ஆனால் குரல் ஓரளவு நன்றாக இருந்தது.

"எங்க அந்த பொன்னம்மா உங்களை கவனிச்சிக்காம எங்க போயிட்டாங்க இந்த நேரத்துல" என்று கோபமாக கேட்டார்.

"இராமநாதா கொஞ்ச நேரம் அமைதியா இருடா நான் தான் அனுப்பி இருக்கேன் வெளியே" என்றவர் மேலும்,

"ராமநாதா ராமநாதா நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு, அந்தப் பிள்ளைக்கு போன் பண்ணி கேட்டியா என்ன சொல்லுது சீக்கிரமா முடிச்சு முடிச்சுவிடனுண்டா" என்று கூறிவர் தனது கண்களை இறுக மூடிக்கொண்டார் கோகிலம்.

அவரது காதுகளில் இன்னமும் அந்த புலம்பலும் அழுகையும் ஆக்ரோஷமான பேச்சும் கேட்டது.

நான் உடந்தையாக இருந்த ஒரு செயல் அது தந்த பாவத்தை தான் இப்பொழுது அனுபவிப்பதாக அவருக்கு தோன்றியது.

அதன் பொருட்டே தன் மகனை கேட்டுக்கொண்டிருக்கிறார் கோகிலம்.
இன்னமும் அந்த பேச்சு அவரது காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது.

அதற்கான பரிகாரமாக தான் இதை செய்ய விழைகிறார். பரிகாரம் பலிக்குமா பலிக்காதா பார்க்கலாம்...

பாடல் இதோ....

பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல
ஓ யே....

பூ போன்ற கன்னி தேன்
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்
அது ஏன் என்று யோசித்தேன்

அடடா நான் எங்கு சுவாசித்தேன்....
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 5:-

விடியலில் துயில் கலைந்தவள், எழுந்தமர்ந்து ஒரு நிமிடம் தனது இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொண்டாள்.
இதுவும் அவளது பாட்டி பயிற்றுவித்தது தான்.

காலை கடன்களை முடித்து சமயலறை சென்று பார்த்தாள். அங்கு இருந்தவற்றை கொண்டு டீயும் பிரட் ஆம்லேட் செய்தவள், நேரத்தைப் பார்த்தாள்.

அது 8:30 மணியை காட்டியது சற்றுப் பொறுத்து பிரணவின் அறையை எட்டிப் பார்த்தாள்.

அவன் இன்னுமே தூங்கி கொண்டுதான் இருந்தான் என்ன இது இப்படி தூங்குறான் என்று நினைத்துக்கொண்டே பார்த்திருந்தாள்.

அவள் அறியவில்லை அவன் இரவில் வெகு நேரம் விழித்திருந்து, அவளைப் பற்றிய ஒரு முடிவுக்கு வந்து விட்ட பின்பே உறங்கச் சென்று இருந்தது.

எழுப்பலாமா என்று யோசிக்கையில் போனில் அலாரம் அடித்தது. அந்த சத்தத்தில் புரண்டு படுத்தவன், அவளது இருப்பை உணர்ந்து தலை நிமிர்ந்து பார்த்தான்.

"குட்மார்னிங்" சின்ன சிரிப்புடன் முனகலாக வந்தது.

இவளும் பதிலுக்கு காலை வணக்கம் சொன்னவள், டீ சாப்பிடலாம் வாங்க என்று சொல்லிவிட்டு வெளியேறினாள்.

சற்றுநேரம் பொறுத்து வந்தவன். அவள் கொடுத்த டீயை வாங்கிக் கொண்டு அமர்ந்தான்.

காலை உணவிற்கு கடைக்கு போகலாம் என்று சொன்னவனிடம், "இல்ல நானே பிரெட் ஆம்லெட் செஞ்சுட்டேன்" என்று தயங்கியவாறு சொன்னாள்.

புருவம் உயர்த்தி வியப்பாகப் பார்த்தான் "உனக்கு சமைக்க தெரியுமா" என்று ஆசையாக வினவினான். "என்ன இது இப்படி ஒரு கேள்வி" என்றபடி பார்த்தாள்.

"இல்ல இப்ப தான் டாடிஸ் லிட்டில் பிரின்சஸ்ன்னா பிரபலமில்ல அதனாலதான் கேட்டேன்" என்று குறும்பாக சிரித்தான்.

அவனது சிரிப்பு அவளையும் தொற்றிக் கொண்டது, ஆயினும் போலியாக முறைத்தாள்.

"டாடியே இல்லையாம்மா இதுல லிட்டில் பிரின்சஸ்ஸாம்மா" என்று முனகினாள்.

அவளது முனகல் அவனுக்கு தெளிவாக கேட்டது ஆயினும், அதை ஒதுக்கித் தள்ளியவன், "உனக்கு நல்லா சமைக்க தெரியுமா" என்று அவளை பேச வைக்கவே கேட்டான்.

"எங்க பாட்டி சொல்லிக் கொடுத்திருக்காங்க. நான் பாட்டியோட சேர்ந்து கிச்சன்ல நல்லா சமைப்பேன் ரெண்டு பேரும் பேசிக்கிட்டே செய்வோம்" என்று கனிவாகவே பதில் சொன்னாள்.

ஒருநிமிடம் அவனிடம் அதிகமாக பேசிவட்டோமோ என்ற எண்ணம் தலைதூக்கியது சட்டென அமைதியானாள்.

அவளது அமைதியை பார்த்தவன் "ஆமா பைக் ஓட்டுற பைட் பண்ற சமையல் செய்ற சூப்பர் தான் நீ" என்று வெளிப்படையாகவே பாராட்டினான்.

"பொண்ணுங்க இதெல்லாம் செய்யக்கூடாது ஏதாவது இருக்கா என்ன" என்று பதில் கேள்வி கேட்டாள்.

"இல்லம்மா அப்படி எல்லாம் இல்ல எங்க அம்மா ரொம்ப சாப்ட் கொஞ்சம் பயந்த சுபாவமும் கூட. எங்க பாட்டியும், எங்க அப்பாவும் அவங்கள ரொம்ப பாதுகாப்பாங்க. அம்மா அவங்க ஞாபகத்துல நான் உன்னை அப்படி கேட்டேன் மத்தபடி வேற எதுவும் இல்லை"

"ஏன் நான் இப்படி இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா" என்று தன்னையே அறியாமல் கேட்டுவிட்டாள்.

கேட்ட பிறகு அந்த கேள்வி அதிகப் பிரசங்கித் தனமாக தோன்ற தலைகுனிந்தாள்.

என்ன இது என்று தன்னை தானே கடிந்துக்கொண்டாள். என்ன நினைப்பானோ என்ற அச்சத்தில் தலை நிமிரவே பயமாக இருந்தது.

சில நொடிகளின் அமைதிக்கு பின், "யார் பிடிக்கலன்னு சொன்னா. பொண்ணுங்க இந்த மாதிரி தான் இருக்கனும். இந்த தலைமுறை இப்படி தான் இருக்கனும் எல்லாமே தெரிஞ்சுறுக்கணும். மொத்தத்துல ஆல் இன் ஆல் அழகு ராணியா இருக்கணும் அவ்வளவுதான்" என்று சின்ன சிரிப்பு சிரித்தான்.

கேலி செய்கிறானோ என்று நினைத்து நிமிர்ந்து பார்த்தவள். அவனது முகத்தில் தெரிந்த பாவனையில் அவளும் சிரித்தாள்.

அதே சமயம், 'அத்தான் வருவாக ஒரு முத்தம் தருவாக' என்று அவனது கைபேசி ஒலிக்க, அய்ய என்ன இது, என நினைத்து முகம் சுளிக்க, அவளை பார்த்தபடியே கைபேசியில் பேசி முடித்தான்.

"ஓய் என்ன இப்படி பார்க்குற" என்றான்.

"யாராவது இப்படி ஒரு பாட்டை ரிங்டோனா வைப்பாங்களா" என்று கேட்டாள்.

"ம்ம்ம் நான் வைப்பேன்" என்றவன், மேலும் "எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்" என்று வேறு சொன்னான்".

"பிடிக்குமா" என்று இன்னும் வியந்தவள், "இந்த பாட்டையா"என்று கேட்டாள். "அது சரி ஏடாகூடமா இருக்கு பாட்டு".

"இதுல ஏடாகூடமா என்ன இருக்கு சொல்லு. எவ்வளவு அழகான லிரிக்ஸ் தெரியுமா. அத்தான் வருவாக ஒரு முத்தம் தருவாக என அச்சம் வெட்கம் கூச்சம் அதை அள்ளி ருசிப்பாக" என்ற பாடலையே பாடிவிட்டான்.

அவன் தன் மென்மையான குரலில் அழகாகவே பாடினான்.

"பாட்டு நல்லா தான் இருக்கு" என்று இழுத்தாள்.

" தென் ரசிக்கலாமே".

"யூஸ்வலா எல்லாம் இந்த மாதிரி சாங்ஸ் ரிங்டோன் வைக்க மாட்டாங்களா, அதான் என்ன ரீசன்"

"அதுவா எனக்கு ஜோதிகா ரொம்ப பிடிக்கும் அதான்"

"ஜோதிகா பிடித்துபோய் இந்த பாட்டா, இதே படத்திலே வேற மெலடிஸ்லாம் இருக்கே" என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மேலும் கேட்டாள்.

அவளது கேள்வி கணைகள் அவனுக்கு புன்னகையை வரவழைத்தது.

"சரி மொத்த மா சொல்லிடுறேன்" என்றபடி சோபாவில் சம்மனமிட்டு, அவளை பார்த்தபடி அமர்ந்தான்.

"அது இந்த படத்துல மாதவன் இருக்காருல்ல அவர் சொல்லுவார் இல்ல ஒரு டயலாக் ஒரு பொண்ணு பார்க்கணும், அந்த பொண்ணு மேல பைத்தியமா இருக்கணும், அந்த பெண்ணை துரத்தி, துரத்தி லவ் பண்ணும், அந்த பொண்ணு தான் உலகம் இருக்கணும்னு, இப்படி இதே மாதிரி எனக்கும் லவ் பண்ணி கல்யாணம் பண்ண ஆசை. எங்க அம்மாவும் அப்பாவும் லவ் மேரேஜ் தான் ரொம்ப அந்நியோன்யமான கப்புல்ஸ். அப்பா பாதிநாள் மிலிட்டரி கேம்புல இருப்பாங்க, ஆனாலும் அவங்களுக்குள்ள இருக்கிற அந்த அண்டர்ஸ்டாண்டிங், கம்படிபிலிடி அதே மாதிரி நானும் ஒருத்தியா லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு ஆசை, லவ் பண்ணிட்டு இருக்கேன், என் லவ் சக்ஸஸ் ஆகுமா நீ தான் சொல்லணும்" என்று அவளது கண்களை கூர்ந்து பார்த்த படியே கேட்டான். அவனது விழி வீச்சில் கட்டுண்டவள் தலை தானாக ஆமென்று அசைந்தது.

குக்கரின் சத்தத்தில் தெளிந்தவள், தனது தாய் தந்தையை எண்ணி மனம் கசந்து போனாள்.

ஒரு சின்ன வேலை வெளியில போய்ட்டு வரேன், பத்திரமா இரு, என்றபடி தனது பைக்கை எடுத்து கிளம்பினான்.

அங்கு அந்த காவல் நிலையத்தில்,
பைக்கை நிறுத்திவிட்டு வேகமாக உள்ளே நுழைந்தான் பிரணவ்.

"எங்க அவனுங்க"என்று கர்ஜித்தான்.

"அங்க சார்" என்று கை காட்டினார் அங்கிருந்த காவலர்.

அவனுங்கள என்றபடி உள்ளே நுழைந்தவன், அங்கிருந்தவர்களை எவ்வளவு அடிக்க முடியுமோ அவ்வளவு அடித்து உதைத்தான்.

அதுவும் அந்த கடத்தலுக்கு தலைவன் போல இருந்தவனை உயிர் போகுமளவிற்கு அடித்தான்.

"பிரச்சினையா போயிடும் விடுங்க சார்" என்று அந்த காவலர் வந்து கெஞ்சிய பிறகே விட்டான்.

ஆயினும் அவனுக்கு சீற்றம் அடங்கவில்லை தன்னவளை துன்புறுத்தியவர்களை ஏதேனும் செய்ய வேண்டும் என்று மனம் அடித்துக்கொண்டது.

"அந்த நாற்காலியில் சென்று அமர்ந்தவன் தாடையை தேய்த்தவாறு என்ன கேஸ்ஸெல்லாம் போடமுடியுமோ அத்தனையும் போடுங்க இவனுங்க மேல குறைந்தபட்சம் நாலஞ்சு வருஷத்துக்கு வெளியில் வரக்கூடாது" என்று பல்லைக் கடித்தவாறு உரைத்தான்.

"சரிங்க சார்" என்றார் அந்த காவலர்.

மீண்டும் வீட்டுக்கு திரும்பினான் வழியெல்லாம் அவனுக்கு அவளது நினைவே.

ரக்ஷிதாவின் மனம் அவன்பால் ஈர்க்கப்படுகிறது என்பதை அவன் உணர்கிறான் அவள் உணர்வாளா...

பாடல் இதோ:

அவுக வந்து நின்னாலே
சரியா காது கேட்காது
முழுசா பார்வை தெரியாது
ஒழுங்கா பேச முடியாது...

ஆக மொத்தம்
காதல் என்றால் குதூகல
குத்தம் தான்,

குதூகல குத்தத்தில
கொழம்புது
சித்தம் தான்...

ஒரு அழகன்
எனக்காக எனக்கு

முன்னே இருப்பானே...
 
Last edited:
Status
Not open for further replies.
Top