ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மனைவியின்...காதலன்! - கதை திரி

Status
Not open for further replies.

Bindusara

Well-known member
Wonderland writer
1 காதலன்

கிருஷ்ணன் லெதர் எக்ஸ்போர்ட்ஸ்ஸில் குறுகிய காலத்தில் வளர்ந்துவரும் தொழில் அதிபர். அப்பா ஆரம்பித்த தொழிலாக இருந்தாலும் தனக்கான தனி பெயரை தொழில் சாம்பிராஜயத்தில் பொறித்திருந்தான்.

கடுமையான முகம் கொண்டவன், அதற்க்காக அனைவரிடமும் எரிந்து விழும் ரகம் இல்லை அவன்.

அவனது பார்வையின் ஒரு முறைப்பு போதும் அவனின் கீழிருக்கும் வேலையாட்களை மிரட்ட.

“இன்று அனுப்ப வேண்டிய லோட் அனுப்பியாச்சா?”

“வண்டியில் ஏத்திட்டு இருக்காங்க சார்”

அவனது வேகத்துக்கு நடக்க முடியாமல், ஐந்தடியில் அவனுக்கு இணையாக ஓடித்தான் வர முடிந்தது, அவனது அசிஸ்டன்ட் அனுவால்.

அவளுக்கு வேலை செய்து தான் வாழவேண்டும் என்ற நிலை இல்லாவிட்டாலும், அனுவின் தந்தை கண்டிப்பானவர். பெண் பிள்ளையை தன் காலில் நின்றால் தான் சமூகம் மதிக்கும், அவளுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும் என்ற தொலைநோக்கு சிந்தனை உடையவர்.

தன் நண்பனின் மகனிடம் தொழில் நிர்வாகம் கத்துக்க அனுப்பிவிட்டு மனைவியுடன் கோயில் குளம் என்று சுத்தப்போயாச்சி.

அனு பேய்யிங் கெஷ்டாக கிருஷ்ணா வீட்டின் மேல் தளத்தில்தான் தனியாக சமைத்து துவைத்து தனக்கான வேலையை கற்றுக்கொள்கிறாள்.

இவளை தனியாக வைத்தது அனைத்தும் அனு அப்பாவின் மாஸ்டர் பிளானில் அடங்கும்.

மனைவி செல்லம் கொடுத்து கெடுத்த தன் பெண்ணை திருத்தவே இந்த முயற்சி. பார்ப்போம் இருவரில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று வேலைக்கு சேர்ப்பதை பற்றி அனுவின் தந்தை சொல்லும்போது, ‘அவனை படுத்தும் பாட்டில் என்னை விரட்டிவிடுவான்’ என்று நினைத்தவளின் நிலை தலை கீழாக மாறப்போவது அவளுக்கு தெரியவும்யில்லை.

அனு யாருக்கும் பயப்பட மாட்டாள், வாய் ஜாஸ்சி, ஆனால் கிருஷ்ணாவிடம் அடங்கி போவாள் அவனது உருவம் அத்தகையது.

பார்க்க பயில்வான் போல இருப்பவனை முதலில் பார்த்தவள், ‘ஒரு அடி கூட நம்மால் தாங்க முடியாது. அடங்கி போக வேண்டியது தான்’ என்று முதல் சந்திப்பிலேயே முடிவு எடுத்துவிட்டாள்.

கிருஷ்ணா பத்து நிமிசத்தில் வேலை முடிக்க சொன்னால் 9.59 க்கு வேலை முடித்துவிடுவாள், அவ்வளவு பயம்.

அனுக்கு மட்டுமில்லை அங்கு வேலைசெய்யும் ஆட்கள் தொடங்கி உறவினர்கள் வரை, இவனை நெருங்கவும் குரல் உயர்த்தி பேசவும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசிப்பார்கள்.


அப்படிப்பட்டவன், ஊரே இவனை பார்த்து பத்து அடி தள்ளி நிற்க்கும், இவனை ஆட்டி வைப்பவள் ராதா ஒருவளே. அத்தை பெத்த ரத்தினம்

அவனது தந்தை மீது பயபக்தி கொண்டவன். அவர் கோடு போட்டால் தாண்டமாட்டான், அவ்வளவு மரியாதை கலந்த பயம்.

இருவரும் சிறுவயதில் அடித்து விளையாடும் போது கிருஷ்ணன் ராதாவை கீழே தள்ளிவிட.

அடங்காத ராட்சசி அந்த வயதிலேயை அவனின் தந்தை முன் விசும்பி அழுது அனுதாபத்தை பெற்றவள்.

“மாமா… கிருஷ்ணா அடிச்சி… அடிச்சி... ரத்தம் வந்து...” அவளது அடிப்பட்ட கையையும் காலையும் மாமாவிடம் காட்டி.

“அச்சோ ! என் தங்க கட்டிக்கு வலிக்குதா”

ராதா ரட்டை ஜடையில் தலையை அசைத்து “ஆமா… கிருஷ்ணா அடி மாமா” மாமாவை கிருஷ்ணாக்கு எதிராக திருப்பும் வேலையை அன்றே துடங்கிவிட்டாள்.

பேச தெரியாத வயதிலேயே அவனது உச்சி மண்டையில் ஏறி உட்கார்ந்தாள், மாமாவின் உதவியோடு.

“இங்க பாரு கிருஷ்ணா. இந்த பாப்பா உன்ட எது கோட்டாலும் கொடுத்திடனும். இவ கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும், நான் செத்ததுக்கு அப்புறம் என் ஆத்மா கூட சாந்தி அடையாது” அன்று ஆரம்பித்தது இவளின் அட்டகாசம்.

மாமா பேரை சொல்லி சொல்லி அவளுக்கு வேண்டிய காரியங்களை சாதித்து விடுவாள்.

கிருஷ்ணாவின் அப்பா ரகுவரன், பெயருக்கு ஏற்ப டெரர் பீஸ்தான், பெற்ற மகன் அவரிடம் பேசவே அனுமதி வாங்கவேண்டும். ஆனால் ராதாக்கு அப்படி இல்லை, ”மாமா…” இந்த ஒரு வார்த்தை போதும் கோடிகணக்கில் டீலிங் போய்ட்டிருந்தாலும், கூப்பிட்ட குரலுக்கு பாதியில் எழுந்து ஓடிவந்திடுவார்.

கிருஷ்ணாக்கு ராதா மேல் கோபம் இருந்தாலும் காட்டிக்கொள்ள மாட்டான், காட்டினால் ரகுவரனின் பெல்ட்தான் பேசும்.

அவள் கேட்டாள் என்பதற்காக அவன் செய்யாத காரியமில்லை. சிறுவயதில் பொம்மையை விட்டுக் கொடுப்பதில் தொடங்கி ஸ்கூல் படிக்கும் வரை சாதாரணமாக தான் அவனது சுதந்திரத்தை பறிப்பாள்.

ஒரு முழு நேர சேவகனாகவே தன்னுடன் வைத்திருந்தாள்.

கல்லூரி முடிக்கும் போது அவள் பள்ளி இறுதி கட்டத்தில் இருந்தாள்.

“மாமா…ஆஆஆஆ, மாமா…ஆஆஆ”

இந்த சத்தம் கிருஷ்ணாவுக்கு அபாய ஒலி ஆகும்.

‘ஐயோ இவளா! கிருஷ்ணா காது கேட்காதது போல ஓடிடு’வாசலை நோக்கி விறைந்து போனான்.

“என்ன எஸ்கேப் ஆகலாம்’ன்னு பார்க்குறையா.. மாமாட்ட மாட்டிவிடட்டா” அவன் முன் அவனைவிட வேகமாக வந்து நின்றாள்.

'கிருஷ்ணா விடமாட்டா போலயே'

“என்ன சொல்லு” வேண்டா வெறுப்பாக கேட்டான்.

“என்ன மிரட்டரது போல கேட்கற? சிரிச்சிட்டே என்ன’ன்னு கேளு பார்ப்போம்”

“ஈஈஈஈ… மகாராணிக்கு என்ன வேணும் சொல்லுங்க” வராத சிரிப்பை வரவைத்து கிருஷ்ணன் சிரிக்க. பார்க்க அவ்வளவு கொடுறமாக இருந்தது அவனது முகம்.

“ப்பா.. பயங்கரமா இருக்கு தயவு செய்து இனி சிரிக்காத”

‘சேட்டை அதிகமா ஆகிடுச்சி சீக்கிரம் காலேஜ் முடி உனக்கு கல்யாணம் பண்ணி எப்போ இந்த வீட்டைவிட்டு துரத்தரனோ, அப்போதான் எனக்கு சுதந்திரம் கிடைக்கும்’ அப்படி நினைத்த அவனுக்கு தெரிய வாய்பில்லை.. இவனது சுதந்திரம் எப்போதும் கிடைக்க போவதில்லை என்று.


“சரக்கு எனக்கு அடிக்க ஆசையாக இருக்கு வாங்கிட்டு வா…”என்று கேட்டாள்.

“அடிப்பாவி!!!! இன்னும் ஸ்கூல்கூட முடிக்கலை அதுக்குள்ள”

“ஸ்கூல் முடிக்கலைனா என்ன அதான் 18 வயசு முடிஞ்சிடுச்சி இல்ல”

“நல்ல விவரம் தான்”

“சரி போய் வாங்கிட்டுவா ஒரே டைம் டேஸ்ட் செஞ்சிட்டு விட்டுடுவேன்”

“இரு அப்பாகிட்ட சொல்லுறேன்” கிருஷ்ணா அப்பா பக்கம் போக கால் எடுத்துவைக்க.

“சரி மாமாக்கிட்ட தானே சரி தாராலமா போய் சொல்லு அதுக்கு முன்னாடி இதை பார்த்துட்டு போ”

ஒரு வீடியோ ஓடியது.

கிருஷ்ணாவும் அவன் கூட படிக்கும் ஒரு பெண்ணும் பார்க்கில் உட்கார்ந்து பேசுவது போல.

கிருஷ்ணா வேகமாக போனை பிடிங்கி டெலிட் செய்தவன்.

“இப்போ என்ன செய்யுவ..” என்றவன் வீர நடையுடன் ரகுவரனின் அறையை நோக்கி போனவனை தடுத்தது. மீண்டும் அந்த வீடியோவின் சத்தம்.

“ஹாலோ பாஸ் நீ இப்படி எதாவது செய்வன்னு தெரியும்யும் அதான்… என் பிரண்ட் அனுக்கிட்ட ஒரு காப்பி கொடுத்துவச்சிருக்கேன். மகனே என்கிட்ட உன்னால எஸ்கேப் ஆக முடியாது புரியுதா”

‘அது புள்ளபூச்சி கணக்கா இருந்தது, இவ கூட சேர்ந்து அந்த பிள்ளையையும் கெடுத்துவச்சிருக்கா. எதாவது பிளான் செய்து இரண்டு பேரையும் வேறுவேறு காலேஜில் சேர்க்கனும்’

“என்ன சத்தத்தை காணோம்”

“ஏய் உனக்கு எப்படி இது கிடச்சது, வெறும் பிரண்ட் தான் நீ நினைக்கற போல இல்லை”

“ஓ… ஃபிரண்ட் கிளாஸ்ல பேசுறது, எதுக்கு பார்க்குக்கு போனும்”

“அவ சப்ஜக்டில் டவுட் கேட்டா அதான்”

“நீ சொல்லுறது சரிதான் மாமா, ஆனா பாரு மாமா அத சொன்னா நம்புவாரா?”

அவனுக்கு தெரியும் கண்டிப்பா நம்பமாட்டார்.

“ராதா இப்படி செய்யாத நான் பாவம்”

“அப்போ நான் சொன்னதை செய், கூட சைட்டிஸ் மறந்துடாத பெப்பர் சிக்கன், டாஸ்மார்க் பக்கத்துல இருக்கிற அக்காகிட்ட வாங்கு, அங்க தான் டேஸ்ட் நல்லா இருக்கும்’ன்னு சொன்னாங்க”

கிருஷ்ணா வசமாக மாட்டிக்கிட்டான் அவனுக்கு வேறு வழியும் தெரியவில்லை.

“சரி போய் தொலையிறேன் சும்மா டேஸ்ட் தான் பண்ணனும் புரியுதா”

“சரி.. சீக்காரம் போ எனக்கு ஆர்வத்தை அடக்க முடியலை”

‘என்னைக்காவது படிக்கறதுல இந்த ஆர்வத்தை காட்டி இருப்பாளா?’

“போதும் மனதில் தாளித்தது, முதலில் கிளம்பி போய் வாங்கிட்டு வா”

கிருஷ்ணாவுக்கும்.. முதலில் தயக்கமாக இருந்தாலும் அவள் சொன்ன பெப்பர் சிக்கனை ருசி பார்க்க ஆசையாகத்தான் இருந்தது. மற்ற விஷயங்கள் வேண்டா வெறுப்பாக செய்தாலும் இந்த டீலிங் கிருஷ்ணாக்கு பிடித்தது.

டாஸ்மார்க்குக்கு முன் போய் நின்றவனுக்கு சுற்றிலும் அவனை பார்ப்பது போல இருந்தது. சங்கடமாக நெலிய, முகத்தில் கர்ச்சிப்பை கட்டியவன் கம்பி கட்டிய இடத்தில் நின்றவன்.

“தம்பி என்னவேணும்” கிருஷ்ணாக்கு என்ன கேட்பது என்று கூட தெரியவில்லை.

“என்ன தம்பி புதுசா“ கிருஷ்ணா எல்லா பக்கமும் தலையை ஆட்டினான்.

“இந்தா இது குடி” என்று ஒரு பீர் பாட்டிலை எடுத்து கொடுத்தார். அந்த கடைகாரர்.

அந்த அப்பாவி குழந்தைக்கு அதன் பெயர் கூட தெரியவில்லை. அந்தோ பாவம் என்ற நிலையில் வாங்கி வந்தவன் மூக்கில் பெப்பர் சிக்கன் மனம் அடைத்தது.

‘இதை இன்று சாப்பிட்டால் பிறவி பலனை அடைந்துவிடலாம்‘ அவள் சொன்னதை எல்லாம் வாங்கிவிட்டு ஒரு தெரு தள்ளி வந்ததும் தான் மூச்சே வந்தது அவனுக்கு.

ஒழிந்து ஒழிந்து வாங்கி வந்ததோடு பின்வாசலில் பதுங்கி வந்தவனை வசமாக மாட்டிவிட்டாள் ராதா.

பெரிய கம்போடு அப்பா நின்றிருக்க, ‘கிருஷ்ணா இவளை நம்பி போனதுக்கு, உனக்கு இதும் வேணும் இன்னும் வேணும்’ அந்த நேரத்தில் வீட்டைவிட்டு ஓடி விடலாமா என்று எல்லாம் நினைத்தான் கிருஷ்ணன்.

எவ்வளவு வேகமாக ஓடினாலும் துரத்தி வந்து அடிப்பார் என்று தெரியும் அவனுக்கு.. இருந்தது ஒரே பிளான், அதையும் விட்டுட்டான்.

ரகுவரனிடமிருந்து இரண்டு அடி விழும்வரை பெருமையாக இருந்த ராதா.

“ஐயோ மாமா.. கிருஷ்ணா பாவம், ஏதோ தெரியாம செஞ்சிட்டான் இனி செய்யமாட்டான் விடுங்க” ஏதோ கிருஷ்ணாவை ரச்சிக்க வந்த கடவுள் போல கோர்வையாக வசனம் பேசி மாமாவின் கையிலிருந்த கம்பை பிடுங்கினாள்.

ரகுவரனால் கிருஷ்ணா இப்படி செய்வான் என்று ஏற்றுக்கொள்ளவே முடியலை. கம்பு போனால் என்ன கையில் நாலு சாத்து சாத்தினார்.
வலி தாங்காமல் எழுந்து அமர்ந்தவனுக்கு அது கனவு என மூலைக்கு உறைக்கவே சில நிமிடம் பிடித்தது.

“ச்சே.. வாங்கன அடி ஏதோ ஒருநாள் தான் ஆனா அடிக்கடி கனவு வேற வந்து உயிரை வாங்குது. காலையிலையே தலைவலி பிடிச்சிக்கிச்சி சூடா காபி குடித்தால் தான் சரியா போகும்”

காலையில் தன் கையால், சுடச்சுட காப்பி போட்டு குடித்தவன் முன் வந்து நின்ற ராதா, ஒரு வாரம் முன் அவன் கையால் தாலி கட்டி வந்த அருமை மனைவி.

அவன் கையிலிருந்த நியூஸ் பேப்பரை, பிடிங்கி தூர எறிந்தாள்.

‘காலையிலையே ஆரம்பிச்சிட்டா பிசாசு வேலையை’ கிருஷ்ணாவால் மனதில் மட்டும் தான் நினைக்க முடிந்தது. வாயில் சொல்லி காலையிலேயே இவளிடம் வசை பாட்டை வாங்க விருப்பமில்லை.

சலிப்பாக நின்றிருப்பவளை பார்க்க.

“மாமா…”

கிருஷ்ணா இதயத்தில் ஒரு வெடி சத்தம் கேட்டது, ‘எதே! மாமா வா! அப்படி கூப்பிடும் ரகம் இல்லையே இவ!!!’

“டேய் கூப்பிட்டது காதுக்கு கேட்கலையா?”

“அதானே பார்த்தேன், இவளாவது மாமா’ன்னு கூப்பிட்டா மழை பிச்சிக்கும்” இந்த முறை வாய்விட்டே புலம்ப.

“நீ சொன்னதை கேட்டு உன்னை கல்யாணம் செஞ்சிக்கிட்டேனில்ல”

“அதுக்கு இப்போ என்ன செய்யலாம்” அலட்சியமாக பதில் தான் வந்தது அவனிடமிருந்து.

“அதுவா… எனக்கு ஒரு ஆசை இருக்கு நிறைவேற்றனும்”

‘ஐயோ! ஆசையா எதாவது வில்லங்கமாயில்ல கேட்பா’

“சொல்லித் தொலையும்…”

“எனக்கு லவ் பிரேக் அப் ஆச்சில்ல”

“அதான் ஊருக்கே தெரியுமே, மேல சொல்லு”

“எனக்கு நிறைவேறாத ஆசை இருக்கு, உன் கூட வாழனும்னா, அதை நீ செய்யனும்”

கிருஷ்ணாவோ பொறுமையாக டீயை குடித்துக்கொண்டே “மேல சொல்லு” என்றான்.

“எனக்கு அவன் கூட டைம் ஸ்பென்ட் செய்யனும்” மனதில் கோப மழை கொழுந்துவிட்டு எறிந்தாலும், தன்னை அடக்கிக்கொண்டு.

“எவன் கூட”

“அதான் என் எக்ஸ் கூட”

“வீட்டுக்கு வர சொல்லு.. ஒரு நாள் உட்கார வச்சி பேசு யார் வேண்டாம்னு சொன்னது”

“எது ஒரு நாளா! எனக்கு ஒரு மாசத்துக்கு அவன் கூட இருக்கணும்”

“இவளை…" பல்லை கொறித்தவன்.

மனதில் பேக்கிரவுன்ட் சாங் ஓடியது கிருஷ்ணாவுக்கு.

சட்டை கிழிந்திருந்தா வச்சி தெச்சி முடிச்சிடலாம்… நெஞ்சு கிழிஞ்சிருக்கு எங்க முறையிடலாம்..

“எந்த புருஷனுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது டா" தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான்.

“மாமா இப்படி உட்காராத, காமெடியா இருக்கு, தப்பா எல்லாம் எண்ணமில்ல மாமா, நான் உனக்கு தான் கவலை படாதே”

“இதுக்கு மேல கவலை பட என்ன இருக்கு, ஒரு தாலி டோட்டல் லைப் காலி…”

“ராதா என்னை கோபப்படுத்தாத போ” என்றவன் தயாராகி அலுவலகத்துக்கு வந்தவன் ராதாமீது இருந்த மொத்த கோபத்தையும் பார்ப்பவர் அனைவரிடமும் காட்டிக்கொண்டிருந்தான்.

மாலை வந்தவன் முன் வந்து நின்ற ராதா.

“மாமா…ஆஆஆஆ” அவள் தெடங்கும் போதே அவளை கைநீட்டி தடுத்தவன்.

“ஏதோ பண்ணி தொலை என் உயிரை வாங்காத”

ராதா அவனது போனை நைசாக உருவியவள் தனது அறைக்குள் புகுந்துகொண்டாள்.

கருத்து திரி

 

Bindusara

Well-known member
Wonderland writer
2...காதலன்


மீண்டும் அறைக்குள் வந்த ராதாவை பார்த்த கிருஷ்ணன்.

"உன் கஷ்டம் இதுல என் மண்டையை உருட்டாத, ஏதோ உன் மேல இருக்க கொஞ்ச நஞ்ச நம்பிக்கையில் உன்னை விடுறேன் எதாவது குடும்ப மானத்தை வாங்கிடாத.

"உன்மேல் சத்தியமா உன் பெயர் கலங்க படுத்தமாட்டேன் மாமா" எப்போதும் அவளை நம்பாத பார்வை பார்க்கும் கிருஷ்ணன் இந்த விஷயத்தில் முழுதாக நம்பினான்.

அவனுக்கு தெரியும் அவளை பற்றி சிறுவயதிலிருந்தே அவளது ஒவ்வொரு அசைவும் அவனுக்கு அத்துப்படி.

'எதுக்கு ராதா இப்படி' வாய்வரை வந்ததை அடக்கிக் கொண்டான் கேட்டாலும் அவளிடமிருந்து பதில் வராது.

'கிருஷ்ணா உன்னை வெறுப்பேற்ற செய்யறா போல' அவனுக்கு தோன்றியது, அத்தோடு விட்டவனுக்கு அங்கிருக்க கொஞ்சமும் பிடிக்கலை.

கிருஷ்ணாக்கு கொஞ்சம் தனிமை தேவைப்பட்டது.

வீட்டில் இருந்தால் மண்டை வெடித்து சாவது நிச்சயம் என்று தெரிந்துகொண்ட கிருஷ்ணா.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாமதமாக வீட்டுக்கு வந்தான்.

"இவன் கிட்ட ஒண்ணு சொன்னா காதில் வாங்குரானா? இன்னைக்கு எவ்வளவு லேட்டா வந்தாலும் வச்சி செஞ்சிட வேண்டியது தான்" அடுத்த கட்ட நடவடிக்கையை செயல் படுத்த வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள் ராதா.

ஊர் முழுவதும் சுற்றி முடித்து வந்தவனுக்கு கண்கள் இறுகியது. சூடாக எதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும் என்று தோன்றியது.

ஆனா டயார்டா இருக்கே யார் எழுவது என்ற சோம்பேரித்தனத்தால் காலை அங்கொன்றும் இங்கொன்றும் சோப்பாவில் பரப்பிட்டு படுத்து கிடந்தான்.

'எருமை எப்படி படுத்து கிடக்குது பாரு வயசு பொண்ணு இருக்கும் இடத்தில்' மனதில் ராதா அவனை அர்ச்சித்தாலும் இந்த முறை வாய்விட்டு திட்டவில்லை.

அவனால் ஆக வேண்டிய காரணம் இருந்ததால் அமைதி காத்தாள்.

"மாமா...ஆஆஆ மாமா...ஆஆஆ"

'கிருஷ்ணன் அபாய ஒலி ஒலிக்குது. இப்போ இவளுக்கு என்ன வேணும்'ன்னு தெரியலையே, ஆவூன்னா... மாமா ஓமான்னு வந்து நின்னுடுறா'

கிருஷ்ணா காது கேட்காதது போல படுத்திருக்க, மீண்டும் அதே ராகத்தோடு, கிருஷ்ணா காதுக்கு அருகில் வந்து கத்தினாள் "மாமா....ஆஆஆ, மாமா..ஆஆஆ"

"ஆஆஆஆஆ....! காது போச்சி இப்போ என்ன வேணும்"

"டயார்டா இருக்கிங்க இந்தாங்க காபி"

'எதே!!!!! காபியா? இவளுக்கு காபி எல்லாம் போடத்தெரியுமா?'

சூடச்சுட காப்பியை பார்த்தவனுக்கு பாதி களைப்பு நீங்கியது போல இருந்தது. அவள் கொடுப்பதை மறுக்காமல் வாங்கியவன் சிறு பயம் இருக்கத்தான் செய்தது. அது காபியா இருக்குமா? இல்லை மிளகாப்பொடியா இருக்குமா' யோசனையில் குடித்தவன் மெச்சும் அளவுக்கு இல்லாவிட்டாலும் அவசரத்துக்கு இந்த காபியை குடிக்கலாம் என்ற அளவுக்கு இருந்தது.

"காபி நல்லா இருக்கு" முடித்துக்கொண்டான், எங்கே பேச்சை வளர்த்தால், எதாவது எடக்குமுடக்காக கேட்டு வைப்பாள் என்று அமைதியாக சோபாவில் சாய்ந்து அமர்ந்தவாறே தூங்கிட்டான்.

சிறிது நேரம் கழித்து வந்த ராதா.

"ஏங்க எந்திரிங்க டைம் ஆச்சி"

"அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா" அவதியாக நேரத்தை பார்க்க மணி 12 காட்டியது.

"எதுக்கு இப்படி பேய் மாதிரி எழுப்புற" மீண்டும் சோபாவில் முடங்கி படுத்த பார்த்தவனின் சட்டையை இழுத்து அமர வைத்தவள்.

"நைட்டு சாப்பிடாம படுத்துட்டிங்க எழுந்து சாப்பிடுங்க"

'இவ பேச்சே தினுசா தெரியுதே' பசித்த காரணத்தால் கிருஷ்ணாவும் அவளது போக்கை கவனிக்காமல் சாப்பிடும் இடத்தில் அமர்ந்து சாப்பிடத் துவங்கும் போது உண்மையிலேயே அதிர்ந்து தான் போனான்.

தட்டில் இருப்பது இட்லியா? இல்லை மல்லிப்பூவா? என்று பிரித்து காணாத வகையில் இருந்தது இட்லியின் மென்மை.

'இறைவா இன்னும் எத்தனை சோதனை எனக்கு தருவதாக இருக்க இவளுக்கு சமைக்க கூட தெரியுமா. நடு ராத்திரியில் சுடச்சுட இட்டிலி' இங்கு நடப்பதை பார்க்க ராதிகா ரஜினி காமெடிதான் நினைவுக்கு வந்தது, என்ன ராதிகா.. அந்த காலத்து பேய் போல இருப்பாங்க இவ மாடர்ன் பேய் போல இருக்கா'

சாப்பிட்டு முடித்து கைகழுவும் போது மணி மூன்றை தொட்டிருந்தது.

கிருஷ்ணா கையில் ஒரு பெரிய பேகை கொடுத்தாள் ராதா.

"என்ன இது?"

"கண்ணு தெரியலையா பேக்"

'கடுப்பு அடிக்குறா', "அது தெரியுது இது எதுக்கு என்ட கொடுக்கற"

"அதுவா.. என் எக்ஸ்'யை கண்டு பிடிக்கனும்"

"அவன் என்ன தொலைந்த குழந்தையா கண்டுபிடிக்க"

"அப்படியும் வச்சிக்கலாம், நான் பேபி'ன்னு தான் அவனை கூப்பிடுவேன்"

"அதுக்கு!"

"போய் கண்டுபிடிச்சி கூட்டிட்டுவாங்க ஒருமாசம் கழித்து அனுப்பிடலாம்"

"ஏதோ என்னை வெறுப்பேற்ற சொல்லுற'ன்னு நினைச்சா உண்மையா சொல்லிட்டிருந்தியா"

"ஆமா, பேசி டைம் வேஸ்ட் செய்யாதீங்க கிளம்புங்க"

"ராதா இது எல்லாம் சரியில்லை"

"என்ன மாமா வாக்கு மாறுறிங்க.. உங்க அப்பா உங்களை போல இல்லை பாரியின் பேரன்"

"போதும்... பழைய புராணத்தை கிளராத கடுப்பா இருக்கு"

"சரி அப்போ கிளம்புங்க"

"ராதா நீ லூசா, உன் எக்ஸ்க்கு போன் செஞ்சி வரசொல்லு"

"செஞ்சென், இந்த ஒரு மாசம் டீலிங்க் பத்தி பேச, என் குரலை கேட்டதும் நெம்பர் பிளாக் செஞ்சிட்டான் கடன்காரன்"

"நெம்பர் கொடு நானே கூப்பிடுறேன்"

"மாமா பிளாக் செஞ்சதே உங்க நெம்பரில் இருந்து கூப்பிட்டதால தான்"

'ஆஆஆஆ! நான் மென்டல் ஆஸ்பிட்டலுக்கு போரது உறுதி'

"சரி உன் போனில் இருந்து போடலாம் போன் கொடு"

"என்னை அவன் பிளாக் செய்து ஒருவருசம் ஆகுது. அதுக்கு தான் உன் நெம்பரிலிந்து கூப்பிட்டேன், அகெய்ன் பிளாக்" ராதா சோகமாக சொல்ல.

"ராதா போனாங்கனா விட்டரனும் சும்மா தொந்தரவு செஞ்சிட்டு இருக்க கூடாது"

"முடியாது, இப்போ நீ போய் கூட்டிட்டு வரலை நான் எங்க அம்மா அப்பா கிட்ட"

"போதும்.. போய் தொலையறேன். கழுதையை கட்டிக்கிட்டா ஒதை வாங்கத்தானே வேணும்"

"மாமா இதா போட்டோ.. அட்ரஸ் பின்னாடி எழுதி இருக்கேன்" அந்த போட்டோவில் தன் புது மனைவி வேறுவொருவனுடன் பல்லை காட்டி சிரித்திருப்பதை பார்த்த கிருஷ்ணாவுக்கு கட்டிங் பிளேடை வைத்து, ராதாவின் ஒரு ஒரு பல்லையும் பிடிங்கி எடுக்கும் ஆத்திரம் பொங்கியது.

விடியல் காலையில் அனுக்கு போன் போட்டு சுருக்கமாக அவள் தோழி செய்யும் சேட்டையை சொல்ல.

"அட கேட்குவது செய்து கொடுப்பது தானே சார் புருஷன் லட்சனம்"

"அவ கூட சேர்ந்த நீ மட்டும் எப்படி என்னை புரிஞ்சிக்க முடியும். சரி கிளம்பு அங்க ஒரு பிசினஸ் மீட் அரேஞ்ஜ் செஞ்சி கிளம்பு"

"சார் சம்மர் லீவ் கேட்டு இருந்தனே,"

"நோ லீவ் ஒன்லி டிரிப், அந்த வீனாப்போனவனை வேற கண்டு பிடிக்கனுமாம்"

"சரி சார்" சோர்வாக சொன்ன அனு தயாராகினாள், மாதவ கண்ணனை தேட.

ராதாவை ஒருவார்த்தை பேசவிடலை கிருஷ்ணா.

"நீ ஒன்னும் பேசாத தாயே அட்ரஸ் வச்சி நானே பாத்துக்கறேன்" கும்பிடு போடாத வகையா அவளை அடக்கினான்.

'எப்படி இருந்தாலும், நீயா போன் போடுவ அப்போ பாத்துக்கிறேன்' மனதில் நினைத்தாள்.

"அனு பத்திரமா போய்யிட்டு வா.. சொன்னது எல்லாம் மறந்திடாத"

"சரி ராதா.. பாய். இரண்டு பேரும் சேர்ந்து என் சம்மர் லீவுக்கு சூனியம் வச்சிட்டிங்க"

"போய்யிட்டு வா நிறைய லீவ் கொடுக்க சொல்லுறேன்" என்றாள் ராதா.

"அப்போ சரி... டா டா"

முன் சீட்டில் கிருஷ்ணன் ஏறிக்கொள்ள அனு பின் சீட்டில் காலையில் விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள்.

சிட்டியை தாண்டும்போது, "சார் எங்க போறோம்?"

"இருங்க பார்க்கறேன்"

பேக்கட்டில் இருந்த போட்டோவை எடுத்து முறைத்தவன் திருப்பி பார்த்தால் அட்ரஸ் அருமையாக இருந்தது.

படத்தில் துபாய் வடிவேலே கொஞ்சம் தெளிவாக அட்ரஸ் சொல்லி இருப்பார்.

மொட்டையாக... ஆக்ரா, தாஜ் மஹால் அருகில் என்று போட்டிருந்தது.

"ஆஆஆஆஆ.... அண்ணா வண்டியை நிறுத்துங்க" என்று கத்தியவன்.

கீழே சிறிது தொலைவில் தள்ளி நின்றவன் ராதாக்கு போன் போட்டான்.

"ஏய்... என்னடி அட்ரஸ் இது மொட்டையா"

"எனக்கே அவ்வளவு தான் தெரியும்"

"சரி அதை விடு... காரில் எப்படி டெல்லிக்கு போவது அதை சொல்லு"

"அதுதான் சொல்ல வருவதற்க்குள் மூஞ்சை தூக்கி வச்சிக்கிட்ட. உங்க பேகில் டிக்கட் முதற்கொண்டு தேவையானது இருக்கு."

"சரி போனை வை" அவன் சொல்ல துவங்கும்போதே வேலை முடிந்தது என்று போனை வச்சிட்டா ராதா.

"இவளை பல்லை கொறித்தவன்"

"ஏர்போர்ட்டுக்கு போங்க அண்ணா" கருஷ்ணாவின் தேடுதல் பயணம் தொடர்ந்தது.

அனுவோ, சார் எங்கே பக்கத்து ஊருக்கு கூப்பிட்டிங்கன்னு வந்தா டெல்லிக்கு கூட்டிபோறேன்னு சொல்லுறிங்க" சோர்வாக சொன்ன அனுவை பார்த்து.

"எனக்கே இப்போ தான் அனு தெரியும் உன் பிரண்டு என்னை எப்படி அழைய விடுறா பாரு. என்னால முடியலை அவளுக்கு உதவி செய்ய போய் இப்போ நான் நடு ரோட்டில் பைத்தியம் போல அலசஞ்சிட்டு இருக்கேன்"

"சரி விடுங்க சார் வாழ்க்கையில் இஷ்டம் வருவது சகஜம் தானே"

"கஷ்டம் வாழ்க்கையில் வரலாம்.. இவளாள வாழ்க்கையே கஷ்டமா போச்சி. இப்போ எதுக்கு இந்த தேவையில்லாத வேலை பார்க்கறான்னு தான் புரியலை"

"சரியா போய்யிடும் சார். காரணம் இல்லாம எதும் அவ செய்ய மாட்டா"

"அந்த நம்பிக்கையில் தான் அனு இருக்கேன்"

வெற்றிகரமாக வந்து தரை இரங்கியவர்கள்.

ஊர் பெயர் புகைப்படம் மட்டும் வைத்து, நடு ரோட்டில் நாயாக திரிந்தான் அவனது அசிஸ்டன்ட் அனுவோடு.

ஆபிசில் பயபக்தியாக வேலை செய்யும் அனு.. வெளி ஊருக்கு வந்ததும் ராதாவைவிட மோசம். எதாவது கடை பார்த்தா அப்படியே நின்னுடறா. அவள் கைக்காட்டியதை வாங்கி கொடுத்தால் தான் அடுத்த அடி எடுத்து வைக்கிறா.

வழிமுழுவதும் சரியான இம்சை திட்டிக்கொண்டே வந்தான்.

ராதா அருகில் இல்லாத குறையை சிறப்பாக நிரப்பினாள் இந்த அனு.

"இவளை கட்டிக்கிட்டதுக்கு ஒரு கழுதையை கட்டி இருக்கலாம். பிச்சைக்காரன் போல, இந்த நாயை தேடி அழஞ்சிட்டிருக்கேன், பெயரை பாரு கண்ணன். வாழ்க்கைக்கு போட்டியாக வந்தது பத்தாது'ன்னு பெயரில் கூட போட்டிக்கு வந்து நிக்கிறான்"

கையிலிருந்த போட்டோவில் ராதாவும், முன்னால் காதலனுமான மாதவ கண்ணனுடன் சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்தால் எரிச்சலாக வந்தது கிருஷ்ணாவுக்கு.

இன்றோடு ஒருவாரம் ஆச்சி... அவனை தேடவும் அனுப்பிட்டு. அந்த ஊரில் எது ஸ்பெஷல் என்று நெட், ஃபேஸ் புக், இன்ஸ்டா என அலசி தேடி கண்டு பிடித்து.

"ஹாலோ மாமா... இது வேணும் அது வேணும்" என்று ஒருபக்கம் ராதா வைத்து செய்தாள்.

அவள் செய்யும் சேட்டைக்கு நடுவில் இந்த டுபாக்கூர் மாதவகண்ணனை வேறு தேடனும்.

மாதவ கண்ணனை கிருஷ்ணா கண்டுபிடிப்பானா? இல்லை ராதாவிடம் மிதி வாங்குவானா? பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Last edited:

Bindusara

Well-known member
Wonderland writer
3… காதலன்


“என்ன சார் இரண்டு வாரம் ஆகப்போகுது இப்படி நடு ரோட்டில் வந்து உட்கார்ந்துட்டிருக்கோம்”


“உனக்கு சம்மர் செலபிரேட் செய்யலையே’ன்னு கவலை, எனக்கு என் வாழ்க்கை எஞ்சாய் செய்ய முடியலை’ன்னு கவலை”


“ஏன் சார், என் பிரண்ட் உங்களை நல்லா பாத்துக்கறது இல்லையா”


“செமையா பாத்துக்கறா, அதான் இரண்டு வாரமா பாத்திட்டு இருக்க இல்ல” சளிப்பாக சொன்னான்.


“ஹா ஹா விடுங்க பாஸ் அவதான் விளையாட்டு பிள்ளைன்னு தெரியுமில்ல”


“நல்ல விளையாட்டு பிள்ளை தான்”

“ஆமா ரொம்ப விளையாட்டுபிள்ளை” அருகிலிருந்த தள்ளு வண்டியிலிருக்கும் ஜிலேபியை வாங்கிக்கொண்டு இருவரும் உட்கார.


“அனு அது மாதவகண்ணன் போல இருக்கு”


“என்ன சார் சொல்லுரிங்க, அப்போ என் சம்மர் லீவ் கண்பார்ம்” சந்தோஷத்தில் வாயில் இரண்டு இனிப்பு சேர்த்து அழுத்தினாள் அனு.


“சரி வா பாலோ செஞ்சிட்டு போவோம்”


“நீங்க முன்னாடி போங்க சார் உங்களை பின் தொடர்ந்து வந்திடுறேன்” சாப்பிடுவதிலேயே குறியாக இருந்தாள்.


ஒருவழியாக நாயா பேயா இரண்டு அப்பாவி ஜீவன்களும் அலைந்து திரிந்து கண்டுபிடிக்க.


இடையில் மீண்டும் அந்த மாதவக்கண்ணனை தொலைத்துவிட்டனர், அந்த ஜன நெரிசலில்.


மாதவன் ஒரு கடையில் இருந்து வெளியே வருவதை பார்த்த கிருஷ்ணா.


“அனு தேடி வந்தவன் கிடைச்சிட்டான்”


கிருஷ்ணா சொல்வதை எல்லாம் காதில் வாங்கும் நிலையில் இல்லை அனு.. ஜிலேபியை தின்றுகொண்டே கிருஷ்ணாவை பின் தொடர்ந்தாள்.


“பாஸ் நீங்க போங்க.. உங்களை பின்தொடர்ந்து வரேன்”


கடையில் சாப்பாடு வாங்கி உள்ளே நுழைந்த மாதவன் திரும்ப வரும்போது இருவர் முகத்தையும் பார்த்தான்.


‘ஏன் இவங்க இரண்டு பேரும் அங்கங்கே கண்ணில் படுராங்க, ஒருவேலை பாலோ செய்யுறாங்களா?‘


‘ஐயோ! பின் தொடர்வது தெரிஞ்சிடுச்சி போல’ இருவரும் யூ டர்ன் அடித்து வந்த வழியில் செல்ல.

மாதவன் விடாது இவர்கள் அருகில் வர “சார் அவனை பாலோ செய்யாம நம்ம எதுக்கு திரும்பி நடக்கிறோம் “

"நம்ம மேல டவுட் வந்திடுச்சி அவனுக்கு”


“சார் இவனை எங்கயோ பார்த்த நியாபகம்”


“கேட்குற கேள்வியை பாரு.. இரண்டு வாரமா இவன் போட்டோ கூடத்தானே இரண்டு பேரும் குடும்பம் நடத்திட்டிருக்கோம்”


“அட ஆமா சார்.. பாருங்க ஜிலேபியோட டேஸ்டில் எல்லாம் மறந்தே போயிட்டேன். இருந்தாலும் இவனை எங்கயோ பார்த்து இருக்கேன்” ஜிலேபியை வாயில் அடக்கிக்கொண்டே சொல்ல.


“திங்குறதிலையே இரு.. வந்த வேலையை விட்டுடு, அனு அவன் நெருங்கி வரான். இந்த இடத்தை விட்டு முதலில் கிளம்பனும்” இருவரும் நகரும் போது.


‘எனக்கு’ன்னு எங்க இருந்து தான் கிளம்பி வராங்களோ தெரியலை. எல்லாம் என் அப்பா ரகுவரன் ஆரம்பிச்சி வைத்த சதி, எனக்காக ஒரு நாள் கூட வாழலை… ச்சே’

கிருஷ்ணா அனு கையை பிடித்துக்கொண்டு வேகமாக நடக்க,

மாதவன் இவர்களை விடுவதாக இல்லை ஓடிவந்து இருவர் முன் நின்றான்.


“சாந்தி அத்தையோட பொண்ணு அனு தானே நீ”


“ஆமா நீங்க?”


“நான் தான் உன் அத்தை பையன்.. மாதவன்”


“அட மாதவா எப்படி இருக்க அடையாலமே தெரியலை, சின்ன வயசில் பார்த்தது மூஞ்சி மறந்துடுச்சி” ஈஈஈ... என சிரித்து வைத்தாள்.


“என்ன அனு பேச எல்லாம் கத்துக்கிட்ட போல எப்போ பாரு மூக்கை உறிஞ்சிட்டு இருப்ப பராவாயில்ல நல்ல முன்னேற்றம் தான்”


கிருஷ்ணன் அனு காதில், “நம்ம எதுக்கு வந்திருக்கோம்’ன்னு சொல்லிடாதே”


இருவரையும் வினோதமாக பார்த்த மாதவன்.


“சார் என்ன காதில் சொல்லுறாரு” அனுவிடம் கேட்க.


“அவருக்கு என் மேல ரொம்ப பாசம். இன்னும் ஜிலேபி சாப்பிடுறியா’ன்னு கேட்குறார். இன்னும் வாங்கிட்டு வர போலையா? இங்க என்ன எங்க வாயை பார்த்துட்டு சுட சுட வாங்கிட்டு வாங்க மூணுபேரும் சேர்ந்து சாப்பிடலாம்”


‘அடிப்பாவி.. சரியான கேடி. சைடு கேப்பில் இந்த பாஸை சர்வன்ட் ஆக்கிட்டா. எனக்குன்னு வந்து வாய்க்கறதுக்கு.. என்னை வேலைக்காரனா யூஸ் செஞ்சிக்கறதுலையே இருக்குங்க எல்லா ஜந்துகளும்’ அனுவை பார்த்துக்கொண்டு மைன்ட் வாய்சில் பேசிக்கொண்டிருக்க.


அனு கிருஷ்ணன் முகத்துக்கு நேராக சொடக்கு போட்டவள் “இன்னும் போலையா? ஒரு பெண்ணு அழகா இருக்க கூடாதே உடனே கண்கொட்டாம பார்க்க வேண்டியது”


‘எதே இவளை ரசித்தேனா? விளங்கும், இந்த பூசனிக்காக்கு திமிரை பாறேன்’


“போய் தொலையுறேன்” கிருஷ்ணண் முணுமுணுத்துக் கொண்டே ஜிலேபி கடையை நோக்கி போனான்.


“இவரு யாரு” கிருஷ்ணன் நகர்ந்ததும் மாதவன் அனு கிட்ட கேட்க, அனு அமைதியா இருக்கவும்.


“கல்யாணம் செஞ்சிக்க போறவரா? பார்க்க நல்ல டைப்பா இருக்கார்”


‘எதே கல்யாணமா! இவரோட பொண்டாட்டி காதில் விழுந்தது நான் அவ்வளவு தான். அவ ஜாக்கிசானோட தங்கச்சி. என் எழும்பை சல்லி சல்லியாக நொறுக்கி கோர்த்து மாலையா போட்டுப்பா’


அனு அவன் சொல்வது அனைத்துக்கும் ஆமாம் சாமி போட்டாள். எங்கே வாயை திறந்து உண்மையை உளறிட்டா என்ன செய்றது என்று.


சுடச்சுட ஜிலேபியோடு கிருஷ்ணா வரவும் மாதவன் தனக்கான ஒன்றை எடுத்து ஒரு கடிகடித்ததும் அதனின் பாகு அவனது தாடியில் படிந்தது. அதனை துடைந்துக்கொண்டு,


”அனு உங்களுங்கு எப்போ கல்யாணம்”


‘எதே! அனுக்கு கல்யாணமா, இந்த புள்ளை பாரேன் நம்மக்கிட்ட சொல்லல’


அனு கிருஷிணன் காதை கடித்தாள், “சார் இவன் நீங்களும் நானும் மிங்கில்’ன்னு நினைச்சிட்டான். தப்பி தவறி கூட ராதா பெயரை சொல்லிடாதிங்க ஓடிடுவான். அப்புறம் இவனை எங்க தேடினாலும் கிடைக்க மாட்டான் பாத்து பேசுங்க”


“இரண்டு நிமிசம் கூட தனியா விடலை குட்டையை நல்லா குழப்பி விட்டிருக்க. அதுவும் சரி தான் உனக்கும் எனக்கும் கல்யாணம் சொல்லி இவனை தூக்கிட்டு போய்டலாம்”


“நல்ல ஐடியா சார்” இருவரும் ரகசியம் பேச.


“அட என்னப்பா நீங்க ரகசியமா பேசிட்டு இருக்கிங்க நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலையே”


“அதுவா சார்.. இன்னும் இரண்டு நாளில் எங்களுக்கு எங்கேஜிமென்ட்” கிருஷ்ணன் சமாளித்தவாறு கூற.


“இருவருக்கும் வாழ்த்துக்கள், சந்தோஷமா வாழுங்க கல்யாணம் எல்லாம் சிலருக்கு கனவாக இருக்கும் போது, அதை சிறப்பா வாழ உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கு விட்டுடாதிங்க”


அவனது பேச்சை கேட்டு குழம்பிதான் போனான் கிருஷ்ணன். அறுபது வயதுக்குறியவர்கள் வாழ்ந்து முடித்தது போல பேசினான்.


“சரி வாங்க சாப்பிட்டுட்டே பேசலாம்…”


கிருஷ்ணா மெதுவாக மாதவனிடம் பேச்சை வளர்த்தான்.


“மாதவன் இங்கே என்ன வேலை செய்யுறிங்க”


“இங்க உள்ள கட்டிடங்களை ரிசர்ச் செஞ்சி ரிப்போர்ட் கொடுக்கும் வேலை”


“ஏன் நம்ம ஊரில் இல்லாத கட்டிடங்களா.. இவ்வளவு தூரம் வந்து இருக்கிங்க”


“மனசு கொஞ்சம் சரி இல்லை சார். கொஞ்ச சேஞ்சிக்கு இங்கே வந்தேன்”


“நான் கூட உங்களுக்கு உடம்பு சரியில்லை அதனால டிரிட்மென்ட்க்கு வந்து இருக்கிங்க’ன்னு நினைச்சேன்” அவன் மருத்துவமனை அருகில் பார்த்ததை வைத்து கிருஷ்ணன் சொல்ல.


“ஹாஸ்பிட்டல் பக்கத்தில் பார்த்ததால அப்படி நினச்சிட்டிங்களா? அது என்கூட வேலை செய்யும் ஒருவருக்கு கையில் பிராக்சர் அவரை அட்மிட் செஞ்சி இருக்கோம் பார்க்க வந்தோம்”


“சரி… இங்கே எங்களை பார்த்ததை அனு வீட்டில் சொல்லிடாதிங்க”


“ஏன் அதான் எங்கேஜ்மென்ட் சொன்னிங்க, வீட்டுக்கு தெரியாம எப்படி”


“அது… அது லவ் பண்றோம், வீட்டில் ஏத்துக்கலை. அவங்க கோவில் டிரிப் போன சமயத்தில் கல்யாணம் முடிச்சிடலாம்’ன்னு இருக்கோம். தனியா கல்யாணம் பண்ண ஒரு போல இருக்கு. இஃப் யூ டோன்ட் மைன்ட் எங்க கல்யாணத்துக்கு வரிங்கலா” கிருஷ்ணன் முகத்தில் ஆர்வத்தோடு கேட்க.


மாதவன் கொஞ்சம் தயங்கி நிற்க.


“சாரிங்க, அனு ரொம்ப வருத்தம் அவங்க வீட்டில் ஒருத்தர் கூட கல்யாணத்துக்கு வரமாட்டாங்க’ன்னு அதான். உங்களை பார்த்தும் பட்டுன்னு கேட்டுட்டேன். தப்பா நச்சிக்காதிங்க”


“அட அது எல்லாம் ஒன்னுமில்லை கிருஷ்ணா அங்கே வந்தா மறக்க நினைத்தது நினைவுக்கு வரும் அதான் யோசிக்கிறேன்”


“சரிங்க சார் டேக் கேர், எங்களுக்கு கொஞ்சம் கல்யாணத்துக்கு சில டிரஸ் வாங்கனும் கிளம்பறோம்” கிருஷ்ணா இருந்த வெளிச்சம் குறைந்தது போல இருந்தது.


“சரி மாதவா, ஊருக்கு வந்தா சொல்லு மீட் செய்யலாம். உன்னோட ஃபோன் நம்பர் இல்லை கொடு”


அனு மாதவனிடம் நெம்பரை வாங்கிக்கொண்டு இருவரும் கிளம்பினார்கள்.


‘ச்சே என்ன இப்படி ஆகிடுச்சி, என் சம்மர் லீவ் போச்சா’ மனம் கனத்தது அனுக்கு.


கிருஷ்ணாவின் வாடிய முகத்தை பார்த்த மாதவனுக்குதான் சங்கடமாக போய்விட்டது.


ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்ட மாதவனுக்கும் ஊர்ப்பக்கம் போகவேண்டும் என்ற எண்ணம் தோன்ற. இவர்கள் திருமணத்தை முடித்துவிட்டு, அவனது பெற்றோரை பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்தவன் எழுந்து அவர்களை கூப்பிட நடந்தான்.

இருவரும் அந்த ஹோட்டல் வாசலை தாண்டும் போது அனுவுக்கு வந்த ஆத்திரத்தை காட்ட துவங்கினாள்.


“பாஸ் நீங்க லூசா இன்னும் கொஞ்சம் பேசி இருந்தா கையோட கூட்டிட்டு போய் இருப்போம்”


“அப்படி செஞ்சா சந்தேகம் வந்து இருக்கும், அவனே வருவான் கொஞ்ச பொறுமையா இரு முந்திரிக்கொட்டை”


“கிழிப்பான்..” இருவரும் அந்த பிரதான சாலையை கடக்கும் போது.


“கிருஷ்ணா அனு நில்லுங்க”


அனைந்து போன அனுவின் முகம் மின்னியது மாதவன் குரல் கேட்டு.


“சொல்லுங்க மாதவன்” எதார்த்தமாக கிருஷ்ணன் கேட்க.


‘அடப்பாவி பாஸ் என்னமா நடிக்கிறிங்க, குடும்ப ரத்தம் ராதாக்கு கொஞ்சமும் சளைத்தவர் இல்லை’ன்னு நிருபிச்சிட்டார் சூப்பர் பாஸ்’ மனதில் தனது பாஸை மெச்சினாள்.


“இன்னைக்கு கொஞ்சம் சாப்பிங் செஞ்சிட்டு கிளம்பளாமா?” கிருஷ்ணன் அவசரமாக பிளான் போட்டான், எங்கே மாதவன் மனம் மாறிவிடும் என்ற பயம் தான்.


அன்று பிளைட் டிக்கட் கிடைக்காத காரணத்தால் அடுத்த நாளுக்கு டிக்கட் போட்டு கிளம்பினார்கள்.


குறுகிய நேரத்தில் மூவரும் நெருங்கிய தோழர்களாக ஆகினார்கள்.


பிளைட்டில் அருகருகே அமர்ந்தவர்கள், உள்ளே இருப்பவர்கள் திட்டும் அளவுக்கு தொந்தரவு செய்துகொண்டே வந்தார்கள்.


ஒருவழியாக அனைவரையும் ஒருவழி படுத்திவிட்டு விமானத்தில் இருந்து இறங்கியவர்கள்.. பேகை எடுக்க நின்றிருக்கும் போது.


சரியாக ராதா கால் செய்ய பத்தாத குறைக்கு அவளது புகைப்பம் ஸ்கீரினில் தெரிய.


‘இவளா’ பையை அவசரமாக எடுத்து கொணீடு மாதவன் ஒரே ஓட்டமாக ஓடினான்.


“ஐயோ இப்படி இந்த கால் சொதப்பிடுச்சே”


ஃபோனை எடுத்தவன், ”சொல்லு என்னா?”


“பிளைட்டைவிட்டு இறங்கிட்டிங்களா?”


“இறங்கிட்டோம்… ஆனா” ஃபோன் கட்.


“ஏய் ஏய்… அவன் ஓடிட்டான் விஷயம் தெரிஞ்சிடுச்சி”

‘என்ன சத்தத்தைக் காணேம்?’


“ராட்சசி போனை வச்சிட்டா.. போச்சி அவ கிட்ட என்ன பதில் சொல்லுறது” கிருஷ்ணன் பையை எடுத்தவன் தலையில் கை வைத்து அமர்ந்தாச்சி.


இவன் நிலைமை என்ன ஆகப்போதோ . அவளை எப்படி சமாளிப்பனோ?
 

Bindusara

Well-known member
Wonderland writer
4..காதல்

‘என்ன பையை எடுக்க இவ்வளவு நேரமா’ தேடிவந்த கண்ணில் கிடைத்தது கன்னத்தை தாங்கிபிடித்திருந்த கிருஷ்ணா தான்.

அனுக்கே பாவமாக இருந்தது கிருஷ்ணாவை பார்க்க.

‘பாஸ் எவ்வளவு கெத்தா இருப்பாரு. இந்த ராதா வச்சி செய்ததில் இப்படி ஆகிட்டார். இனி நாமும் அவரை கிண்டல் எதும் செய்யக்கூடாது’ இவள் வருந்தி என்ன பிரயோஜனம். வருந்த வேண்டியவள் வருந்தினாள் தானே.

“பாஸ் என்னாச்சி?”

“அவன் ஓடிட்டான்”

“பாஸ் என்ன சொல்லுறிங்க”

“என்ன சொல்ல? ஒன்னும் சொல்லுறதுக்கில்லை”


மாதவனன் ராதா பெயருடன் கூடிய புகைப்படத்தை பார்த்து சிட்டாக பறந்துவிட்டான் விமான நிலையத்திலிருந்து.

‘மாதவா.. மயிரிலையில் உயிர் தப்பித்து பல கிலோ மீட்டர் தள்ளி ஓடிவிட்டான். ஓடி கலைத்தவன் லிப்ட் கேட்டு ஊருப்பக்கம் ஓடிடனும், வழியில் சிக்கிய காரின் உதவியோடு.

“என அனு இப்படி ஆகிடுச்சி”

“போங்க சார் நாம பட்ட கஷ்டம் எல்லாம் போய்யிடுச்சி. ஆனா எனக்கு ஒரு சந்தேகம் சார், இவன் இப்படி தெரித்து ஓடும் அளவுக்கு இவ என்ன செஞ்சி இருப்பா”

அனுவை முறைத்த, “உன் பிரண்ட் பத்தி உனக்கு தெரியாது பாரு, அவனை வச்சி செஞ்சிருப்பா. கிட்டத்தட்ட அடிமையா வச்சி இருப்பா முதலில் காதல் மோகத்தில் இருந்தவனுக்கு போக போக வெறுத்து போய் வடநாட்டுக்கு ஓடிட்டான்”

“சார் இருங்க அவகிட்ட மாட்டி விடுறேன். தெய்வமே அப்படி எதும் செஞ்சி வச்சிடாத, அவகிட்ட என்னால ஓரியாட முடியாது”

“அந்த பயம் இருக்கட்டும்”

“இப்போ அவனில்லாம வீட்டுக்கு எப்படி போவது, அந்த ராட்சசி என் ரத்தத்தை குடிக்க கூட தயங்க மாட்டா”

“இருங்க அவளுக்கு போன் போடுறேன்”

“லவுட் ஸ்பீக்கர்ஸ் போடு”

கண்ணா மூச்சி ஏனடா என் கண்ணா…காலர் டியுன் கேட்டதும் கிருஷ்ணாவுக்கு பத்திக்கொண்டு வந்தது.

அனு கிருஷ்ணா முகம் போனதை பார்த்து, “என்ன சார் ஜலஸ்சா”

“ஆமா… வயிறு பத்திக்கிட்டு எறியுது”

“ஹாஹா…” அனு சிரிப்பு சத்தம் கிருஷ்ணன் காதுகளில் நிரம்பியது.

“ஏய் குட்டச்சி வாயை மூடு”

“அவ போன் எடுக்கலை பாஸ்”

“சரி வா வீட்டுக்கே போய் சொல்லலாம்”

இருவரும் ஒரு வித பயமும் கலக்கமும் கலந்தது போல வீட்டை அடைந்தார்கள் ஒரு நாள் கழித்து.

தர்மபுரி உங்களை அன்போடு வரவேற்க்கிறது.

அங்கிருந்து சிறிது நேர பயணத்தில்,

வாசலில் காரை நிறுத்திவிட்டு வரவும்.

“சார் அவ முதல்ல என்னை அடிப்பாலா இல்லை உங்களை அடிப்பாலா”

“இந்த டிஸ்கசன் ரொம்ப தேவையா, வாயை மூடிக்கிட்டு வா”

இருவரும் பதுங்கிக்கொண்டே உள்ளே வர.

ராதா வாசலையும் காரையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஹாய் வந்துட்டிங்களா… எவ்வளவு நேரம் உங்களுக்காக காத்துட்டு இருக்கறது”

“என்ன அனு இவளுக்கு முன்னவே விஷயம் தெரிஞ்சிடுச்சா? போச்சி” இருவரும் அசட்டு சிரிப்போடு அருகில் வர.

“ஏய் சீக்கரமா வாங்க.. இங்க தடிமாடை உள்ளே தூக்கி போடனும்”

“யாரை தூக்கி போடனும் எதாவது கொலை செஞ்சிட்டியா”

“யோவ் மாமா வளவள’ன்னு பேசிட்டு இருக்காத வந்து தூக்கு, ஒருத்தனை அள்ளிட்டு வர தெரியாம விட்டுட்டு வந்த அறிவாளிங்களுக்கு வாய் மட்டும் நீளம்”

‘அப்பாடா விஷயம் தெரிஞ்சிடுச்சி, எப்படி சொல்லுரது’ன்னு தயங்கிட்டு இருந்தேன். ஒரு வேலை மாதவனை தூக்கிட்டுப்பாளா? இல்லையே வாய்ப்பு இல்லையே’ குழப்பத்தில் காரில் எட்டி பார்க்க.. மாதவகண்ணன் மயங்கிய நிலையில் இருக்கவும்.

“இவனை எங்கே பிடிச்ச”

“எப்படியும் என் கால் பாத்து ஓடுவான்னு தெரியும் அதான் உங்களுக்கு முன்னாடி ஏர்ப்போட்டுக்கு வந்துட்டேன். பாய் கெட்டப்பில் ஏர்ப்போட்டுக்கு கொஞ்சம் தள்ளி நின்னுட்டு இருந்தேன். லூசு பையன் என்கிட்ட தப்பிக்க, என்கிட்டையே ஹெல்ப் கேட்டான்”

“அது சரி என்ன செஞ்ச மயக்கமா இருக்கானா இல்லை போட்டு தள்ளிட்டியா?” கிருஷ்ணன் மூச்சி இருக்கா என்று சோதனை செய்ய.

‘அப்பா உயிர் இருக்கு’ கிருஷ்ணன்க்கு இப்போ தான் உயிரே வந்தது.

“போட்டு எல்லாம் தள்ளலை லைட்டா இந்த ஸ்பிரே அடிச்சேன்”

அனு அந்த ஸ்ப்ரேவை கையில் எடுத்தவள் வியந்து பார்த்தாள்.

“அடியே! இது எல்லாம் நான் படத்தில் தான் பார்த்திருக்கேன். இதை எப்படி யூஸ் செய்யனும்” எடக்கு முடக்காக அனு அவசரப்பட்டு அடிக்க தன் முகத்திலே அடித்துக்கொண்டு.

“என்னடி இதுல பவர் இல்லை… போல” சொல்லிக்கொண்டே ராதா மேல் மயங்கி சரிந்தாள்.

“இவ வேர நேரம்கெட்ட நேரத்திலே, மாமா நீ இவனை அள்ளிப்போட்டு தூக்கிட்டு வா”

ராதா சாதாரணமாக அனுவை தூக்கிக்கொண்டு போக.

“பாக்கத்தான் நோஞ்சான் மாதிரி இருக்கா அசால்ட்டா ஆறுவத்தஞ்சி கிலோ தூக்குறா”

காரில் மயங்கி கிடக்கும் மாதவகண்ணனை பார்த்து.

“யாரு பெத்த புள்ளையோ இங்க வந்து மாட்டிக்கிச்சி. இனி ஒரு மாசத்துக்கு ஒன்னும் செய்ய முடியாது” அவனை தூக்கிவந்து ஹாலில் போட.

ராதா மாதவகண்ணன் கையை கட்ட கயிறு தயாராக இருந்தது.

“ஏய் ராதா என்ன செய்யற?”

“லூசா மாமா இப்படியே விட்டா ஓடிடுவான், நீ கையை கட்டு நான் காலை கட்டுறேன்”

‘இவ கூட சேர்ந்தா நானும் கொள்ளக்கூட்டத்தில் இருப்பவர்கள் செய்வது அனைத்தும் செய்ய வேண்டியதுதான்’

ராதா வேகவேகமாக சமையல் கட்டுக்குள் ஏதோ உருட்டிக்கொண்டிருந்தாள்.

“இத்தனை வருசம் இவ கூட இருக்கோம் ஒரு நாளாவது ஒரு சுடுத்தண்ணீ வச்சி கொடுத்திருப்பாளா? அதுக்கூட வேண்டாம், விக்கிட்டு சாகக்கிடக்கும் போது பச்சைத்தண்ணியாவது எடுத்து கொடுத்திருப்பாளா சரியான ஆளு”

வேகவேகமாக சப்பாத்தியை சுட்டாள், அந்த சுட்ட சப்பாத்தியை உருட்டி நீள நீளமாக நூடுல்ஸ் போல வெட்டி ஒதுக்கி வைத்தவள்.

வெங்காயம்.. தக்காளி பச்சமிளகாய் எல்லாத்தையும் அறிந்து வைத்தவள்.

காலையில் இருந்து சிக்கனுக்கு 65 ஊரிக்கொண்டிருந்த கோழிக் கறியை எடுத்து, சிக்கன் 65 போட்டவள்.

வெங்காயம் தக்காளி வதக்கி, சிறிது தண்ணீரில் வேகவிட்டவள் உப்பு மிளகா பொடி மஞ்சள் தூள், கரம்மசாலா, ஏற்கனவே பலவகை பருப்பை வருத்து அறைத்து வைத்த பருப்புப்பொடி போட்டு ஒரு மசாலா தயாரித்தவள்.

கடைசியாக சிக்கன் 65 போட்டு ஒரு பிரட்டு பிரட்டி சப்பாத்தி நூடுல்ஸ் கொட்டி கிண்டியவள்.. கடைசியாக கொத்தமல்லி புதினா போட்டு இறக்கிவைத்தாள்.

கமகம வாசனை கிருஷ்ணாவை இழுத்தது.

“ராதா… பசிக்குது சாப்பாடு போட்டுட்டு வா”

“உனக்கு யார் செஞ்சது.. எல்லாம் கண்ணனுக்கு செஞ்சது”

“நீ எனக்கு சோறு தரலைனா பரவாயில்லை. அந்த பேர் சொல்லி அவனை கூப்பிடாத”

“சரி சரி டென்ஷன் ஆகாத.. எக்ஸ்’ன்னு கூப்பிட வா?”

கிருஷ்ணன் முறைத்த முறையில் வாயை மூடிக்கொண்டாள்.

“சரி மாதவா’ன்னு கூப்பிடட்டா”

“சரி…” இருவர் பேசிக்கொணாடிருக்கும் போதே மாதவகண்ணன் எழுந்தவன்.

“ஏய் எதுக்கு மூனுப்பேரும் என்னை கடத்தி வச்சி இருக்கிங்க”

“நாங்க இல்லை. இங்க இருக்கலே இந்த பக்கி தான் எங்களை கூட்டு சேர்காதிங்க மாதவன்”

“அப்போ எதுக்கு அனுக்கும் உங்களுக்கும் எங்கேஜிமென்ட் சொல்லி பொய் சொன்னிங்க. இவளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?” மாதவன் கிட்டத்தட்ட தொண்டை கிழியும் வரை கத்தினான்.

ராதா மாதவனை சலனமற்ற பார்வை பார்த்து வைத்தாள்.

“மாமா இவங்க கூட பேச்சு வளர்க்கவே கொஞ்சி, கொஞ்சி என் காதலை ஏற்றுக் கொள்ளவே இல்லை… எந்த நோக்கமும் இல்லை. ஒருமாசம் நம்ம கூட ஒரு பிரண்டா இருந்தா போதும், இவன் பேசக்கூட தேவையில்லை”

கிருஷ்ணன்க்கு தலையும் புரியலை வாலும் புரியலை.

“மாமா நான் உன் ரூமிர்க்கு சிப்ட் ஆகிடுறேன். என் ரூம் அவங்க உபயோகிக்கட்டும் பைதவே மிஸ்டர் மாதவகண்ணன்.. இவரு என்னோட புருஷன்”

முதலில் மாதவன் அதிர்ந்தாலும், “வாழ்த்துக்கள்… தெரிஞ்சிருந்தா நான் எதாவது கிப்ட் வாங்கி வந்திருப்பேன்”

“எங்களுக்கு கிப்ட் எதும் வேண்டாம். ஒரு மாசம் இங்க கெஸ்ட்டா இருங்க போதும்” ராதா மாதவனை பார்த்து சொல்ல.

“கிருஷ்ணா கட்டை கழட்டி விடுங்க” கிருஷ்ணா பார்த்து மாதவன் கேட்க.

அவனோ தயங்கி ராதாவை பார்க்க.

“அட கழட்டி விடுங்க சார் ஓடிட மாட்டேன்”

கிருஷ்ணா.. ராதா இருவருக்கும் தான் செய்து வைத்த சப்பாத்தி நூடுல்ஸ் போட்டு வந்து கொடுக்க.

மாதவன் அதிர்ச்சியாக ராதாவை பார்த்தான்.

“உங்களுக்கு பிடிச்சது தான் சாப்பிடுங்க” வருத்துவைத்த சிக்கனை இரண்டு பிளேட்டில் எடுத்து வந்து கொடுக்க.

இருவரும் வயிரார சாப்பிட்டார்கள்.

ராதா தனக்கு தேவையான சில பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு கிருஷ்ணன் அறையில் புகுந்துகொண்டாள்.

இடையில் அனு எந்திரிக்கவும், அவளும் ராதாவும் சாப்பிட்டு முடிக்க.

ஒருவர் மூஞ்சி ஒருவர் பார்க்க சங்கடமாகதான் இருந்தது.

“சரி எங்காவது வெளியே போலாமா?” அனு ஆரம்பிக்க.

“நம்ம பக்கத்து ஊரில் திருவிழா போட்டு இருக்காங்க போலாமா.

நான்கு பேரும் வெளியே எங்காவது போலாம் என்று முடிவு எடுத்தவர்கள்.. அவர்களது ஊர் திருவிழாக்கு கிளம்பினார்கள்.

கிருஷ்ணா, மாதவன் பட்டுச்சட்டையிலும் அனு, ராதா பட்டு புடவையில் தேவதையாக வந்தார்கள்.

மாதவன் ராதாவை ஒரு பொருட்டாகவே கண்டுக்காமல்.

“அனு புடவை உனக்கு நல்லா இருக்கு வித்தியாசமா இருக்க”

‘திமிரு இன்னும் குறையில்லை… முன்ன எல்லாம் என்னை தேவதையாக புகழ்ந்தது எல்லாம் மறந்துட்டான். மகனே உன்னை இன்னைக்கு திருவிழாவில் அலரவிடுறேன் இருடா.’


திருவிழாவுக்கு நாள்வரும் தயாராகி வர… அந்த ஊரின் எல்லை போர்ட் அவர்களை அழகாக வரவேற்த்தது.

அதியமான் கோட்டை உங்களை அன்புடன் வரவேற்க்கிறது தகடூர் அதியமான் வாழ்ந்த ஊர்… அவர் வாழ்ந்தர்க்கான அரண்மனையின் தடம் இல்லாவிட்டாளும். அவரால் கட்டப்பட்ட சில அதிசயம் நிறைந்த ஊருக்கு தான் போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

திருவிழா முடித்ததும் ஒரு ஒரு சிறப்பு இடத்துக்கும் சுற்றிப்பார்க்க போகும் போதே திட்டம் போட்டார்கள்.

திருவிழாவின் கூட்டம் அலைமோதியது இப்போதுவரை கிருஷ்ணாவை மட்டும் தனியாக வைத்து செய்த ராதா.

இனி மாதவனையும் வைத்து செய்ய பல திட்டம் போட்டாள்.

இருவரின் நிலை என்னவோ? கடவுளே இவர்களை காப்பாத்து என அனுவாள் கடவுளிடம் அப்ளிகேஷன் மட்டும் தான் போட முடியும்.

அங்கிருக்கும் காளியம்மன் கோவிலில் உள்ள சாமியை வணங்கியவர் வெளியே வருவதற்க்குள் அருவியில் குளித்து வந்தது போல நனைந்திருந்தார்கள்.

அப்படி ஒரு கூட்டம் நால்வரும் காற்றாட ஒரு மரத்தடியில் உட்கார்ந்தார்கள்.

அங்கிருந்த ஒரு பாட்டி சொம்பில் கூல் கொண்டுவந்து கொடுக்க.

மூவரும் வாங்கிக்கொண்டார்கள். மாதவன் மட்டும் வேண்டாம் என்று மறுத்தான், மற்றவர்கள் வாங்கிக்கொண்டார்கள்.

‘கழுவனாங்களா என்னன்னு கூட தெரியலை ஆளு வளர்ந்த அளவுக்கு மூனு பேருக்கும் அறிவு வளரலை’ மனதால் தான் சொல்ல முடிந்தது. முன்பிருந்த மாதவனாக இருந்தால் மூவரையும் கலாய்த்து தள்ளி இருப்பான். இப்போது இருப்பவன் முற்றிலும் மாறுபட்டவன்.

என்ன தான் கிராமத்தில் வளர்ந்திருந்தாலும் சரியான ஆச்சாரம் பார்க்கும் ஆசாமி அவன்.

‘ராதா முதல் பிளான் சிக்கிடுச்சி.. ஸ்ரீதிவ்யாவுக்கு விசம் ஊத்துவது போல வாயில் ஊத்திட வேண்டியது தான்’ நினைத்தவள் மாதவனை முறைத்து பார்த்தாள்.
 

Bindusara

Well-known member
Wonderland writer
5…காதல்

‘ஓ நீ அவ்வளவு ஹய் ஜீனா.. இருக்க கூடாது, அப்படியே இருந்தாலும் விடமாட்டேன்’

ராதா வில்லத்தனமாக எழுந்தவள் இருவருக்கும் சைகை காட்டிவிட்டாள். மாதவனை பிடித்துக்கொண்டனர் இருவரும்.

“ஏய் என்ன செய்றிங்க விடுங்க.. கையில் கூழ் சொம்போடு வந்த ராதாவை பார்த்து.

“ஏய் ராதா, வேண்டாம் எனக்கு பிடிக்காது”

“டேய் பட்டிக்காட்டில் பிறந்துட்டு ஏதோ பாரினர் போல சீன் போடுர” அவனது வாயை பிடித்துக்கொண்டு ஒரு சொம்பு கூழை தொண்டையில் ஊத்திவிட்டு தான் நகர்ந்தாள்.

அவனது தாடி சட்டை என அனைத்து இடங்களிலும் கூழ் சிதறியிருந்தது.

“எங்க ஊரு கூழ் டேஸ்ட் எப்படி இருக்கு?” ராதாவும் அனுவும் கேட்க.

“நல்லா தான் இருக்கு, அதுக்கு இப்படி தான் மூஞ்சி சட்டை எல்லாம் நாஸ்தி செய்வீங்களா” மூன்று பேரையும் முறைத்தான்.

“நாங்க அப்படிதான்” மூவரும் கையில் ஹைபை அடித்துக்கொள்ள.

கைக்குட்டையை எடுத்து சட்டையை துடைத்தான் அப்போதும் கூழை முழுவதுமாக துடைக்க முடியவில்லை.

“நீங்க ஹைபை செஞ்சது போதும் சுத்தம் செய்யனும் தண்ணீர் எங்க இருக்கு”

“இந்த கோவில் பின்னாடி இருக்கும்” கிருஷ்ணன் சொல்ல.

மாதவன் பின்னாடி சட்டையை கழுவி வர சென்றான். பாவம் அவன் கண்களுக்கு ஒரு குழாயும் தெரியவில்லை.

“கிருஷ்ணா... இங்கே எந்த தண்ணீயும் இல்லை” கோவில் பின்னிருந்து சைகை காட்ட, கிருஷ்ணாவும் அனுவும் டீப் டிஸ்கசனில் இருந்தவர்கள் கவனிக்கவே இல்லை.

“டேய் மாதவன் கூப்பிடரான் போ”

“நான் பிசியா இருக்கேன்” கிருஷ்ணா திரும்பிக்கூட பார்க்காமல் பதில் சொன்னான்.

“அனு உன் அத்தை பையன் கூப்பிடுறான் பாரு”

“நானும் பிசியா தான் இருக்கேன். நீ போ உன் எக்ஸ் தானே” வாயில் வந்த எக்ஸை விழுங்கியவள், "உன் பிரிண்ட் தானே போ”

“இரண்டு பேருக்கும் திமிரு கூடிப்போச்சி”

ராதாதான் சற்று தயங்கிக்கொண்டே மாதவனை நோக்கி போனாள்.

“என்னாச்சி மாதவன்”

‘நான் உனக்கு மாதவனா ராதை உன் ஆசை கண்ணன் இல்லையா? நான்’ மனம் போன போக்கை நினைத்து அதிர்ந்தான் மாதவன்.

‘மாதவா.. அவள் மாற்றான் தோட்டத்து மல்லிகை. ரசிப்பது கூட தவறு, இறந்தகாலத்தை மீட்டெடுக்காதே’ தன் மனதை அடக்கியவன்.

“தண்ணீ வரலை மா”

‘எதே மா.. வா, ஓ உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை’ன்னு சொல்ல வர அப்படி தானே, சரி இருக்கட்டும். உன் ராதை என்ற அழைப்பை கூடவா மறந்துவிட்டாய்’

“இங்கே ஒரு டேப் இருக்குமே, எங்க போச்சி” ராதா சுற்றி தேடி ஒரு வழியாக பைப்பை கண்டுபிடிக்க.

“மாதவன் இங்கே இருக்கு பாருங்க, சீக்கரம் கழுவிட்டு வாங்க”

பைப்பை திறந்தவனுக்கு தண்ணீர் வருவதர்க்கு பதிலாக காத்து தான் வந்தது.

“ராதா தண்ணி வரலை” வழக்கமாக வசீகரிக்கும் அவனது உதட்டை பிதுக்கி சொல்ல. ஆறடி உருவம் சிறு குழந்தையின் முகம் போல தோன்றியது ராதாக்கு.

ராதாக்கு அவளது கையை அடக்குவது தான் பெரும்பாடாக போனது.

‘சோ கியூட்’

வழக்கமாக அவன் அவ்வாறு செய்யும் போது இரு விரல்கள் கொண்டு அவனது உதட்டை பிடித்து இழுத்துடுவா வழிக்கும் அளவுக்கு. பழைய நினைவுகள் இருவருக்கும் அலைமோதியது.

“வேறு எங்காவது இருக்கா பார்க்கலாம் வா” ராதா முன் செல்ல மாதவன் பின் தொடர்ந்தான்.

அவளது நீண்ட கூந்தலை பார்த்து அதிர்ந்தான்., ராதாக்கு வேகமாக முடி வளர்ந்துவிடும். அதை வளர்க்க பராமரிக்க அவ்வளவு சங்கடம் அவளுக்கு இடுப்பு வரை அளவாக வைப்பதிலேயே குறியாக இருப்பாள்.

ஒருவருடம் முன்…

“ராதை… எனக்காக ஒரு முறை முடி வளர்த்து காட்டேன், நீண்ட முடி என்றால் எனக்கு இஷ்டம்”

“உனக்கு பிடிச்சா நீ வளர்த்துக்கோ நான் ஏன் வளர்க்கனும்” விதண்டாவாதம் பேசுவாள் ராதா.

அவளின் துள்ளல் நடைக்கு ஏற்றார்போல அவளது நீண்ட ஜடை அசைந்தாட. மனதை கட்டுப்படுத்ததான் பெரும்பாடாக ஆனது மாதவனுக்கு.

இரண்டு எட்டில் அவளுக்கு இணையாக நடந்து வந்தான். ‘ப்பா என்ன முடி பிரவௌனும் பிளாக்கும் கலந்து கட்டையா. உனக்கு நீண்ட முடி அழகா இருக்கு ராதை’ மனதால் பேசும் அளவுக்குதான் இருந்தது இருவரின் உறவும்.

இருவரிடத்திலும் ஒரு அமைதி நிலவியது.

முதலில் யார் பேசுவது என்று ஒரு பெரிய பட்டிமன்றமே நடந்தது.

இந்த அமைதி மாதவன் ஏற்கமுடியாமல், மௌனத்தை முதலில் உடைத்தான்.

“ராதா லைப் எப்படி போது எவ்ரித்திங் ஓகே”

“எஸ் மாதவன் லைப் செட்டில் எதைபத்தியும் கவலை இல்லை, என்னை தாங்கும் கணவன். நீயே பாத்த இல்ல நான் கேட்டதை எல்லாம் செஞ்சி கொடுக்கிறார். வேற புருசனா இருந்தா என்னை துரத்தி விட்டு இருப்பார். இல்லை அடித்து மூலையில் உட்கார வச்சிருப்பார். ஆனா இவர் என் ஆசைக்கு மதிப்பு கொடுத்து உன்னை கூட்டி வந்திருக்கார். அவர் கிரேட்ல?” மாதவனிடமே பதில் கேட்டாள் கிருஷ்ணா பத்தி.

“நீ மட்டும் கொடுத்து வச்சவ இல்லை, அவரும் உன்னை போல ஒரு பெண் கிடைக்க கொடுத்து வச்சவர் தான்”

ராதா முகம் மாறியது, ‘எப்படி தான் நீ உதிர்த்த வார்த்தைகள் உனக்கே மறந்துப்போகும் கண்ணா’

“ஏன் மாதவன் பொய் சொல்லூரிங்க. நீங்க பேசியது எல்லாம் மறந்துப்போச்சா?“ மாதவனின் முகமும் இருண்டது.

சொல்லி முடித்ததும் தான் ராதா செய்த முட்டாள் தனத்தை நினைத்து வருந்தினாள், ‘ராதா அவசரப்பட்டுட்டியே’

“அது கோபத்தில் ஏதோ..” மாதவன் மீதி வார்த்தையை விழுங்கினான்.

“விடுங்க மாதவன்… முடிஞ்சி போனதை பத்தி பேச என்ன இருக்கு, வாங்க”
சுற்றியும் பார்த்தவள் கண்ணில் தண்ணீர் இருக்குமிடம் தெரிந்தது.

“அங்க ஒரு போரிங் இருக்கு அங்கே போலாம்”

கோவிலுக்கு சற்று தொலைவில் இருந்ததை நோக்கி போனார்கள். முன்பு போல ஒரு இருக்கம் இருவருக்கும் இல்லை. நண்பர்களாக இந்த ஒரு மாதத்தை சிறப்பாக செலவளிக்க இருவர் மனதிலும் ஒரே எண்ண ஓட்டம் தான் ஓடியது.

ராதா போரிங் அடிக்க.. மாதவன் அவனது முகம் சட்டையை கழுவியவன்.

“உன் இந்த தாடி எல்லாம்”

“எனக்கு தாடி வைக்க பிடிக்கும்”

“ஓ… ஐ சீ. பாருங்களேன் எனக்கு இந்த விஷயம் தெரியாம போச்சி”

“என்னை பத்தி உனக்கு எதும் தெரியாது ராதா மா”

“ஆமா.. அதனாலத்தானே இன்று நான் வேறு ஒருவரின் மனைவியாக இருக்கேன்”

மாதவனிடமிருந்து அமைதிதான் பதிலாக வந்தது.

அருகில் இருந்த ரயில்வே ரோட்டை பார்த்தவன்.

“அதுக்கு மேல கொஞ்சம் நடக்கலாமா?”

“சரி..” இருவரும் சிறிது தூர நடந்தவர்கள்.

மீண்டும் அமைதி… இந்த முறை அமைதியை கலைத்தது ராதா தான்.

“கூழ் எப்படி இருந்தது”

“நல்லா இருந்தது மா. இனி எங்க பாத்தாலும் முதல் ஆளா நான் தான் போய் குடிப்பேன்”

“ஹா ஹா…” ராதா மாதவனிடம் அளவாக தான் வைத்துக்கொண்டாள்.


இருவரும் சிறிது தூரம் நடந்து சென்றவர்கள். அந்த தனிமை இருவருக்கும் நரகமாக இருந்தது.

இருவரும் வாழ்வில் ஒன்றாக சேர்ந்த பின் நடக்க வேண்டியது அனைத்தும் திட்டம் போட்டது போல நடந்தது. ஆனால் இப்போது இந்த கண்ணனின் ராதை இல்லை இவள். கிருஷ்ணனின் மனைவி ராதா உடன் அனைத்தும் சிறப்பாக நடந்தது.

எதிர் காத்து இருவர் முகத்திலும் அடிக்க.. முன் முடியை ஒதுக்கிவிட்டவர்களுக்கு இப்போதுதான் இரண்டு ஜீவனை விட்டு வந்தது நினைவுக்கு வர.

வேகமாக அவர்களை நோக்கி போக அந்த இருவரும் ஆபிஸ் பத்திதான் பேசிக்கொண்டே போனார்கள்.

“அடேய் மாமா… போதும் பேசுனது. எனக்கு பொம்மை வாங்கித்தா”

“போடி நீ என்ன குழந்தையா பொம்மை வாங்கித்தர”

விதவிதமாக கடைகள் கோவிலை சுற்றி இருந்தது.

“ராதா.. இந்த கோவிலுக்கு என்ன ஸ்பெஷல்” அனுக்கு இதுவே முதல் முறை அதனால் கேட்டாள்.

தர்மபுரியில் உள்ள அனைத்து ஊரிலும் திருவிழாக்கள் சாதாரணமாக நடக்கும் தான். ஆனா இங்க நடக்கும் திருவிழா ரொம்ப ஸ்பெஷல்”

“அப்படி என்ன ஸ்பெஷல்”

“கிட்டத்தட்ட 20 நாள் முதல் ஒரு மாதம் வரை நடக்கும்”

“இவ்வளவு நாளா? பொதுவா இரண்டு மூனு நாள் தானே நடக்கும், மிஞ்சி போனால் ஒரு வாரம் நடக்கும்” அனு வாயை பிளக்க.

“ஆமா… சினிமாவில் எல்லாம் சொல்லுவாங்க இல்ல. இந்த சுத்துப்பட்டி அப்படி இப்படி’ன்னு அதுபோல சுத்தி இருக்கும் பதினெட்டுப்பட்டிக்கும் சேர்த்து நடக்கும் திருவிழா. அனைத்து ஊருக்கும் பொதுவான கோவில் இது. முதல் நாள் தேர் இழுப்பது முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை குறையவே குறையாது. வெள்ளம் போல கூட்டம் கூட்டமா இருக்கும். பக்கத்தில் கவர்மெண்ட் ஸ்கூல் வேற சொல்லவா வேணும். யூனிபார்ம் போட்ட கூட்டம் ஒரு புறம் வலம் வரும். அதிலும் அந்த 10, 12 படிக்கும் பசங்க சேட்டை தாங்காது” ராதா பழைய நினைவுகளில் முழ்க.


“அப்படி என்ன செய்வாங்க” அனு ஆர்வமாக கேட்கும் போதே. அங்கு ஒரு இளைஞர் பட்டாளம்.. விதவிதமாக ஒளி எழுப்பும் பீப்பி‍, கூட்டமாக ஊதிக்கொண்டு கோவிலை சுற்றி சுற்றி வந்தார்கள்.

“இப்போ தெரிஞ்சதா அனு”

“செம்மையா இருக்கு இந்த கோவில் திருவிழா, இனி வருடா வருடம் வரனும்”

பேசிக்கொண்டே கரும்பு ஜூஸ் அனைவரும் குடிக்க பக்கத்தில் இருக்கும் ஒரு கட்டிடத்தை சுட்டி காட்டினாள் அனு.

“அது என்ன பில்டிங்.. அதியமான் பேலஸ்சா?”

“இல்லைடா… பேலஸ் எதும் இங்கே இல்லை”

“அதியமான் வாழ்ந்த இடத்தில் பேலஸ் இல்லையா!”

“ஆமா இரண்டு கரை மட்டும் இருக்குன்னு சொல்லி இருக்காங்க. ஒன்னு ஏறிப்பக்கம்.. இன்னொன்னு சுடுகாட்டு பக்கம்”

“அதென்ன கரை?”

“அது ஒன்னுமில்ல, அதியமான் குறுநில மன்னன் தானே.. பெரியதா பிரம்மாண்டமான கோட்டை எல்லாம் கட்டலை. மன் கோட்டை தான் கட்டி இருந்தார். அவரது வீழ்ச்சிக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பராமறிப்பு இல்லாம அழிந்துவிட்டது. கோட்டையின் எல்லையைதான் கரை சொல்லுறாங்க’ன்னு நினைக்கிறேன்”

“அப்போ இது எதுக்கு கட்டி இருக்காங்க” அனு அந்த அதியமான் கோட்டம் பார்த்து கேட்க.

“அதுவா.. உன்னை போல ஆளுக்கு அதியமான் அரண்மனை எங்கன்னு கேட்டு கேட்டு டார்ச்சர் செஞ்சி இருப்பாங்க. ஒரு ஹால் போல கட்டி முன்னாடி அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி தருவது போல ஒரு சிலை முன் வைத்து அதியமான் கோட்டம்’ன்னு பேர் வச்சிட்டாங்க”

“பாருடா… ராதாக்கு நிறைய விஷயம் தெரிந்து இருக்கு”

“எல்லாம் எங்க மாமா சொல்லித்தந்தது”

“எங்க நைநா எனக்கு ஒன்னுமே சொல்லித்தரலை பாரேன்”

“நீ வெத்து வேட்டு’ன்னு எங்க மாமாக்கு தெரிந்திருக்கு என்ன செய்ய”

ராதாவின் பதில் கேட்ட கிருஷ்ணா செல்லமாக கொட்டிவிட்டு அந்த கோட்டம் நோக்கி நடந்தார்கள் அனைவரும்.

மாதவன் மனதில் இருவரது சேட்டையை ரசித்தாளும் அவனது மனதில் ஒரு ஏக்கம் இருக்கதான் செய்தது
 
Last edited:
Status
Not open for further replies.
Top