ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பெண்ணியம் பற்றி உங்கள் கருத்து என்ன??

Varsha

New member
பெண்ணியம்...

ஆண் பெண் சமநிலை அறவே மறுக்கப்பட்டு, 'நாம் அடிமையோ' என்னும் எண்ணத்தின் அழுத்தம் அதிகரிக்கும் வேலைதனில் மூச்சடைக்க மேலெழும்பி சுயமரியாதை காக்க வரும் பெண்ணின் நியாயமே, பெண்ணியம்!

பெண்ணியம்ங்கிறது என்னனு பேசற அளவுக்கு நிச்சயம் யாருக்கும் 100% தெளிவு இருக்காது. ஆனாலும் அடிக்கடி பேசணும். பேச பேச தான் தெளிவு கிடைக்கும்.

சோ யாராவது பெண்ணியம் பத்தி பேசுனா, அந்த கருத்து நமக்கு உடன்பாடு இல்லைனாலும், "இதெல்லாம் பெண்ணியமானு கேக்காம கடந்து போய்டணும்". புரிதல் இல்லாம தப்பான விளக்கமே ஆனாலும் அவங்க கருத்துரிமைல தலையிட கூடாதுன்னே நிறைய பேருக்கு புரிய மாட்டிங்குது.

தப்போ, சரியோ இப்பதான் பேசவே ஆரம்பிச்சிருக்கோம், அதுக்குள்ள இது பெண்ணியமா அது பெண்ணியமானு இகழ்ந்து பேசி, அடுத்தது யாரும் பேசவே யோசிக்கும் படி செய்திடக்கூடாது. முக்கியமா பெண்கள்!

பொதுவாவே பலகாலமா அடிமை படுத்தி வச்சிருந்த ஒரு இனம் தனக்கான உரிமை, குரல்னு எழுந்து வந்தாலே ஆதிக்கம் செலுத்தி வந்த இனத்துக்கு பக்குனு தான் இருக்கும். சோ முடிஞ்ச வரை அதை வளர விடாம பண்ணத்தான் யோசிப்பாங்க.

ஆண்கள தப்பு சொல்லமாட்டேன், எல்லா ஆண்களும் அப்டினும் சொல்ல மாட்டேன். ஆனாலும் அப்டியும் இருக்காங்க.

அப்படிப்பட்டவங்க, எதிர்பாலினமா அதை அவங்க செய்றது அவங்க நியாயமாவே இருந்துட்டு போகட்டும், ஆனா பெண்களே பெண்களின் கருத்துக்கு அணை போட கூடாது. அப்றம் நம்ம அடுத்த தலைமுறையும் பெண்ணியம்னா என்னனு கேட்டுட்டு மட்டும் தான் இருக்க முடியும்.

விளக்கமா இத சொல்லல.. சும்மா சொல்லணும்னு தோனுச்சு சொல்லிட்டேன். மத்தபடி நானும் பெண்ணியம் பேசுவேன், என் பையனுக்கும் பெண்ணியம் பத்தி சொல்லி கொடுப்பேன் ❣❣

thank u aishu ma fr made to share my thoughts.
 
Last edited:
பெண்கள் திருமணம் ஆவதற்கு முன்பாக ராணியாகவும். திருமணமான பிறகு ஒரு கேவலமான சந்து வாகவும் வலம் வருவதுதான் பெண்கள்
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
பெண்ணியம் இதுல ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பொருப்பு இருக்கு.

ஆணோ பெண்ணோ தனியா இதுல எதுவும் செய்ய முடியாது.

இது என்னோட கருத்து மட்டும் தான் ?
 
Top