ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகும் சூரியன் நானடி-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
பனியில் உருகும் சூரியன் நானடி-கதை திரி
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
#T24
#Template_29
#Trending_template
#பனியில்_உருகும்_சூரியன்_நானடி

#Anti_hero_story

Hi Hello Friends 🙋🙋🙋

பனியில் உருகும் சூரியன் நானடி
கதை எண் 29

ஆன்டி ஹீரோ கதை எழுத வந்திருக்கேன்

அதுவும் ஆன்டி ஹீரோக்கு பொங்கல் வைக்கும் என்னை ஆன்டி ஹீரோ கதை எழுத வச்சிட்டாங்க

முதல் முறை ஆன்டி ஹீரோ கதை எழுத போறேன்.

ஆனால் எப்ப வரும் எப்படி வரும் என்று தெரியாது. வரவேண்டிய நேரத்துக்கு சரியா வருமா என்று கேட்டால் அதற்கும் பதில் தெரியாது.

ரொம்ப குழப்புறேன் என்று எனக்கே தெரியுது என்ன பண்ணுறது கதைக்கு பேர் மட்டுமே வச்சு இருக்கேன்.

இன்னும் ஹீரோ ஹீரோயின் பேர் கூட செலக்ட் பண்ணல கொஞ்சம் பிஸி எல்லாரும் போஸ்ட் போடுறாங்க நம்மாலும் போடலாம் என்று போட்டேனுங்க

டெரர் ஹீரோ😎 துரு துரு ஹீரோயின் 💃

சீக்கிரம் கதையோட வரேன்னுக 🙏🙏🙏
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 1



"உன்னைப் பார்த்த
பின்பு நான்
நானாக இல்லையே"

"என் நினைவு
தெரிந்து நான்
இதுபோல இல்லையே"

"எவனோ எவனோ
என்று
நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்"

"இவனே இவனே என்று
இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்"

" கொள்ளை கொண்ட
அந்த சூரியன்"

" என்னைக் கொன்று
கொன்று தின்றதே"

" இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும்
வேண்டும் என்றதே"


" அடியேய் இப்ப பாடுறதை நிறுத்தப்போகிறாயா இல்லையா?.... ஏன்டி காலங்காத்தால தூங்கவிடாமல் இப்படி கழுத மாதிரி கத்திட்டு இருக்க

அதுவும் எவ்வளவு அழகான பாட்டை இப்படி தப்பு தப்பாக பாடுற என்று கூறிவிட்டு போர்வையை இழுத்து தலைவரை போர்த்திக்கொண்டாள் தமிழ்செல்வி.

ஆனால் அதை காதில் வாங்காமல் மீண்டும்


"ஏன் பிறத்தேன் என்று
நான் இருந்தேன்
உன்னை பார்த்தவுடன்
உண்மை நான் அறிந்தேன்"

" என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில்
நான் கண்டு கொண்டேன்"

"எத்தனை ஆண்களைக்
கடந்திருப்பேன்
இப்படி என் மனம்
துடித்ததில்லை"

" இமைகள் இரண்டையும்
திருடிக் கொண்டு"

" உறங்கச் சொல்வதில்
நியாயமில்லை"

" நீ வருவாயோ
இல்லை மறைவாயோ"

" ஏ ஏ ஏ ஏ ஏ"

" தன்னைத் தருவாயோ
இல்லை கரைவாயோ"



" அடியேய் இப்ப பாடுறதை நிறுத்தலை என்றால் மாடியில் இருந்து குதித்து விடுவேன்" என்றாள் தமிழ்ச்செல்வி.

நீ தானே குதிக்கபோகிறாய் குதித்துக்கோ என்னும் அலட்சிய பாவனையில் மீண்டும் பாடினாள்.


"நீ நெருப்பு
என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத்
துணிந்தேன்
என்ன துணிச்சலடா"


"ஏன்டி இப்படி தப்பு தப்பா பாடுற தல ரசிகர்கள் யாராவது கேட்டா உன்னை கட்டிப்போட்டு அடிக்கப்போறாங்க" என்றாள் தமிழ்ச்செல்வி.

"என்னை ஏன்டி அடிக்கப்போறாங்க தல ரசிகர்கள் நான் பாடுறதை கேட்டா நான் ஏன் அப்படி பாடுறேன் என்று புரிந்துப்பாங்க" என்றாள் அவள்.

" நானும் தல ரசிகை தான் ஆனா எனக்கு புரியலையே?... " என்றாள் தமிழ்ச்செல்வி.

" அப்படியா தல ஹீரோவாக தமிழில் நடித்த முதல் படம் எது சொல்லு" என்றாள் அவள்.

" ஹாஹா ஹாஹா இது கூடத்தெரியாதா தல முதல் படம் ஆசை" என்றாள் தமிழ்ச்செல்வி.

அவளின் முதுகில் ஓங்கி அடித்தவள் " நீயெல்லாம் தல ரசிகை என்று இன்னொரு வாட்டி சொன்ன நானே உன்னை மாடியில் இருந்து தள்ளி விட்டுடுவேன்டி" என்றாள்.

அவள் அடித்த அடியில் போர்வை இல்லையென்றால் முதுகு வீங்கியிருக்குமோ என்னவோ போர்வை இருந்ததால் தப்பித்தோம் என்று மனதுக்குள் நினைத்தவள் வலிப்பது போல் "அம்மே...." என்று முதுகை தேய்த்துக்கொண்டே போர்வையை விலக்காமல் இழுத்து நன்றாக தன்மீது போர்த்திக்கொண்டே எழுந்தமர்ந்தாள் தமிழ்.

போர்வையை விலக்கிட்ட அவள் அடிக்கும் அடிகளை யார் தாங்குவது என்ற சேப்டி தானுங்க காரணம்.

"ஏய் நீ தல ரசிகை மட்டும் தான் ஆனால் நான் அப்படி இல்லையே தளபதி ரசிகை, விக்ரம் ரசிகை அவர் பையன் துருவ் விக்ரம் ரசிகை, அதர்வா ரசிகை, துல்கர் சல்மான் ரசிகை அப்புறம் அப்புறம்.... " என்று யோசித்தவளுக்கு எடுத்து கொடுத்தாள்.

"கவுண்டமணி செந்தில் வடிவேலு" என்று அவள் சொல்ல

" ஆமாம் ஆமாம் அவங்க எல்லாம் என் லிஸ்ட்டில் வருவாங்க முதலில் ஹீரோ பெயரை சொல்லி முடித்து விட்டு பிறகு அவங்க பெயர் சொல்லுவேன்" என்று சொன்னவளுக்கு தலையணையால் அடி கிடைத்தது.

"நான் போர்வையை விலக்காமல் இருந்ததற்கான காரணத்தை அப்பவே சொன்னேன் இல்லையா ஏன்னா அவ்வளவு அனுபவம் பட்டு இருக்கேன். இவள் கூட ஏழு வருசமாக குப்பை கொட்டுறேன் என்னங்க புரியலையா விளக்கமாகவே சொல்லுறேன் ஏழு வருடமாக இவகூட படிக்கிறேன் அதைத்தான் அப்படி சொன்னேன் புரிந்திடுச்சா வாங்க திரும்ப கதைக்குள் போகலாம் என்னை ஒருத்தி தலையணையால் அடிச்சிட்டு இருக்கா அவளிடம் அடியை வாங்கிட்டே உங்களுக்கு விளக்கம் சொல்லிட்டு இருக்கேன் நான் எவ்வளவு அப்பாவி பெண்ணு பார்த்திங்களா?...."

" வலி தாங்கமுடியலைங்க அதனால் நான் கதைக்குள்ள போறேன் நீங்களும் வாங்க. "

" அடியேய் நிறுத்துடி நிறுத்து இப்ப எதுக்கு அடிக்கிற உன்னை மாதிரி ஒரு நடிகரை மட்டும் ரசிக்காமல் எல்லா நடிகரையும் ரசிக்கிறது தப்பா?... அப்படி நான் ரசிக்கிறதால்தான் தியேட்டரில் படம் ஓடுது இல்லைனா ஒரு படம் கூட ஓடாது எல்லா நடிகரும் சொந்த ஊருக்கு மூட்டை கட்டிட்டு போய் வேற வேலை தான் செய்யனும்."

"என்னை போல் நடிப்பை ரசிக்கறவங்க இருக்கிறதால்தான் இன்னைக்கு சினிமா உலகமே வாழ்ந்திட்டு இருக்கு"

"எப்பா மூச்சு வாங்குது எவ்வளவு லென்தா பேசியிருக்கடி நீ வருங்காலத்தில் பெரிய ஆளா வருவாய் தமிழ்" என்று தன்னையே தட்டிக்கொண்டவள்.

"எங்க சோடா எங்க சோடா" என்று எதிரில் இடுப்பில் கை வைத்து முறைத்துக்கொண்டு இருந்த அவளை பார்த்து கேட்டாள் தமிழ்ச்செல்வி.

"ஆங்.... இப்ப தான் சோடா கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்து இருக்கேன் வர லேட் ஆகும் அதனால் தாகமாக இருந்தால் இப்போதைக்கு அதை வேண்டும் என்றால் குடிச்சு தாகத்தை தணிச்சுக்கே" என்று கூறியவளின் கை நீண்டு இருந்த பக்கம் ஆவலாக பார்த்த தமிழ்

இப்போது தலையணையால் தமிழிடம் அடிவாங்குவது அவளாகியது.

"எவ்வளவு கொழுப்புடி உனக்கு என்னைப்போய் அதை குடிக்கச்சொல்லுவ" என்று அடித்துக்கொண்டுயிருக்க

அவளே அடியை வாக்கிக்கொண்டு பகபகவென்று சிரித்து கொண்டு இருந்தாள்.

அடிப்பதை நிறுத்திய தமிழ் "ஏய் எதுக்குடி இப்படி பைத்தியம் மாதிரி சிரிச்சுட்டு இருக்க என்னவென்று சொல்லி விட்டாவது சிரிடி" என்றாள்.

" ஹா ஹா ஹா" என்று சிரித்துக்கொண்டே "அது.. அது.. நீ அதை குடிச்சா எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணேனா அதான்" என்று மீண்டும் சிரிக்க

"அவளை முறைத்த தமிழ் அதை குடிச்சுட்டு நான் சாகறது உனக்கு சிரிப்பாய் இருக்கா உன்னை" என்று அவளை மீண்டும் அடிக்க

தமிழின் கையில் இருந்த தலையணையை பிடுங்கி தன் கையில் வைத்துக்கொண்டு.

" ச்சேசே... அப்படி எல்லாம் செத்து போகமாட்ட பாத்ரூம் கிளின் ஆகிற மாதிரி உன் உடம்பில் இருக்கிற அழுக்கு எல்லாம் கிளின் ஆகி இப்படி குண்டு பூசணிக்காய் போல இருக்கிற உன் உடம்பு என்னை மாதிரி ஸ்லிம் ஆகிவிடும்" என்றாள் அவள்.

சுற்றும் முற்றும் எதையோ தேடினாள் தமிழ்.

" என்னடி தேடுற பினாயில் பாட்டில் தான் உன் எதிரிலேயே இருக்கே எடுத்து குடி" என்றாள் அவள்.

" உன் மண்டையை பிளக்க என்ன இருக்கு என்று தேடினால் பினாயிலை காட்டுறியா" என்று அவளை கட்டிலில் தள்ளி அவளின் மீது பாய்ந்தாள் தமிழ்.

"அடியேய் எழுந்திருடி எழுந்திரு என் உடம்பில் இருக்கிற எலும்பு எல்லாம் உடையற சத்தம் உனக்கு கேட்கவில்லையா?..."

"ஹெல்ப் ஹெல்ப்" என்று கத்தினாள் அவள்.

அறையை விட்டு வெளியே சத்தம் கேட்ட போதும் யாரும் உதவிக்கு வரவில்லை.

சத்தத்தை கேட்டவர்களே இதுங்களுக்கு வேற வேலையே இல்லை என்று தலையில் அடித்துக்கொண்டு சிலரும் இதுங்களால் லீவு நாளில் கூட நிம்மதியாக தூங்கமுடியவில்லை என்று சிலரும் அப்படி உள்ள என்னதான் நடக்குது என்று ஆவலில் கதவின் முன் சிலரும் ஆவலாக நின்று இருந்தனர்.

இருவரும் உருண்டு புரண்டு கொண்டு இருக்க வெளியில் கதவு தட்டும் ஓசை கேட்டது அது காதில் விழுந்த போதும் தங்கள் சண்டையை நிறுத்தவில்லை.

மீண்டும் கதவை தட்டிவிட்டு "இப்ப கதவை திறக்கலை என்றால் உங்க ரெண்டு பேர் வீட்டுக்கும் போன் போட்டு உங்க பேரன்ட்ஸ் வரச்சொல்லுவேன்" என்ற அடுத்த வினாடி கதவு திறக்கப்பட்டது.

அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் அனைவரும் கொள்ளென சிரித்தனர். வார்டன் திரும்பி பார்த்து முறைத்ததும் கப்பென்று வாயைமூடிக்கொண்டனர்.

மீண்டும் திரும்பிய வார்டன் இருவரையும் பார்த்து " இங்க என்ன நடக்குது?..." என்றார்.

"இங்க நீங்க நிக்கறீங்க அவங்கெல்லாம் நிக்கிறாங்க நாங்களும் நிக்கிறோம் யாரும் நடக்கலையே மேடம்" என்றாள் அவள் அப்பாவியாக

பின்னியிருந்தவர்கள் வாய்ப்பொத்தி சத்தம் வராமல் சிரித்துக்கொண்டு இருந்தனர்.

"பனிமலர்" என்று அதட்டலாக வார்டன் கூறவும்

"மேடம் அவள் பேர் பனிமலர் சித்ரா" என்றாள் தமிழ்ச்செல்வி.

தமிழை வார்டன் முறைக்கவும்

"அதான் மேடம் அவள் முழுப்பெயர் அவளுக்கு அப்படி சொன்னாதான் பிடிக்கும் ஏன்னா சித்ரா அவங்க பாட்டி பேராம்" என்று பேசிக்கொண்டு இருந்தவளின் காலில் ஒரு உதை கிடைக்கவும் "அம்மே..." என்று கத்தியவள் நண்பியை முறைக்க அவளும் இவளைத்தான் முறைத்துக்கொண்டு இருந்தாள்.

வார்டன் தன் கையில் இருந்த குச்சியால் கதவை தட்டவும் மீண்டும் அமைதியாக நின்றனர் இருவரும்.

" எதுக்கு அவ்வளவு சத்தம் வந்தது என்ன பண்ணிட்டு இருந்திங்க?..." என்று வார்டன் கேட்க

"சத்தமா?... என்ன சத்தம் மேடம் எனக்கு எதுவும் கேட்கலையே?..." என்றாள் தமிழ்.

"ஆமாம் மேடம் என்ன சத்தம் வந்தது எனக்கு கூட கேட்கலையே நாங்க ரெண்டு பேரும் நைட் படிச்சிட்டு படுக்கவே லேட் ஆகிடுச்சு அதான் நல்லா தூங்கிட்டு இருந்தோம் இதே பாருங்க" என்று தன் மீது இருந்த போர்வையை காட்டியவள் "உங்க குரல் கேட்டதும் போர்வையை கூட விலக்காமல் அப்படியே எழுந்து வந்து இருக்கோம் எங்களைப்போய் என்ன நடந்தது என்ன சத்தம் என்று கேட்டா எங்களுக்கு எப்படி தெரியும் மேடம்" என்று அப்பாவியாக பனிமலர் சித்ரா கேட்டாள்.

இப்படி அப்பாவியாக நிற்பவர்களை புதிதாக பார்ப்பவர்கள் எல்லாம் இப்படி ஒன்று தெரியாத பச்சபுள்ளைகளைப்போய் கேள்வி கேட்டுட்டு இருக்காங்களே என்று நினைப்பர் ஆனால் அங்கு இருப்பவர்களுக்கு உலகநாயகனையே மிஞ்சும் நடிப்பு இவர்களுடையது என்று தெரியுமே.

"இன்னொரு முறை சத்தம் வந்தது காலேஜ் கிரவுண்ட் புல்லா கிளீன் பண்ண வச்சிடுவேன்" என்று கூறிச்சென்றார் வார்டன்.

பனிமலர்கொடி சித்ரா, தமிழ்ச்செல்வி இருவரும் படிப்பது M.Sc ஆடைவடிவமைப்பு & ஃபேஷன், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி ( NIFT),
தரமணி, சென்னை.

அந்த காலேஜில் உள்ள ஹாஸ்டலில் தங்கி இறுதி ஆண்டு படித்துக்கொண்டு இருக்கின்றனர்.


"ஏன்டி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கறது என்று சொல்லுவாங்க ஆனால் நீங்கள் முழு ஊரையே மறைச்சிடுவீங்க போல" என்றாள் அடுத்த அறையில் இருக்கும் கிரிஜா.

"எப்படி டி இந்த வார்டன் கிட்ட இருந்து ஈஸியா தப்பிக்கறீங்க" என்றாள் நதியா இன்னொரு தோழி.

கிரிஜா, நதியா இருவரும் உடன் படிக்கும் தோழிகள் தான்.

" அது சீக்ரெட்" என்றாள் தமிழ்.

" சரி வாங்கடி உள்ளே" என்றாள் பனிமலர்.

கிரிஜா நதியா இருவரும் ஒரே மாதிரி கைகூப்பி " அம்மா தாயிங்களே வேண்டாம் அப்புறம் கிரவுண்ட் க்ளீன் பண்ணுற வேலை எங்களுக்கு தான் வரும். இன்னும் நாங்க அசைன்மென்ட் எழுதவே ஆரம்பிக்கலை அதை முடிக்கனும் அப்புறம் வந்து உங்க ஜோதியில் கலந்துக்கறோம்" என்று கூறி சென்றனர்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 2

மீண்டும் அறைக்கு வந்தவர்கள் கட்டிலில் படுத்து கொண்டு விட்ட இடத்தில் ஆரம்பித்தனர்.

" ஏன்டி என்கிட்ட தல முதல் படம் எது என்று கேட்டியே பதில் உனக்கு தெரியுமா சொல்லு" என்றாள் தமிழ்.


" தல ஹீரோவா தமிழில் நடித்த முதல் படம் அமராவதி 1993 ம் வருடம் வந்தது" என்று கூறியவள் மீண்டும் பாட்டை பாடினாள் பனிமலர்.

அதை தடுத்த தமிழ் "ஏன்டி எழுந்ததில் இருந்து இந்த பாட்டை பாடுறீயே எதுக்குடி" என்றாள் தமிழ்.

" நம்ப காதல் மன்னன் இந்த பாட்டை என்ன சுச்வேஷனில் பாடிவார் என்று சொல்லு பார்க்கலாம்" என்றாள் அவள்.

"அதுவா ஹீரோயினை பார்த்திட்டு வந்து இந்த பாட்டை பாடுவார்" என்றாள் தமிழ்ச்செல்வி.

" அவரு இந்த பாட்டை ஹீரோயினை பார்த்துட்டு வந்து பாடுவார் அதுபோல நான் என் ஹீரோவை பார்த்துட்டு வந்து பாடிட்டு இருக்கேன்" என்றாள் அவள்.

" ஏய்ய்.... நீ நேற்று உன் அக்கா நிச்சயதார்த்த விழாவுக்கு தானே போனாய் அங்க வந்தவங்களில் யாராவது உனக்கு பிடிச்சு போச்சா?..." என்று கேட்டு சந்தோஷத்தில் எழுந்து அமர்ந்தாள் தமிழ்ச்செல்வி


அதற்கு பதில் அளிக்காமல் மீண்டும் பாடினாள் அவள்.

"மணமகனாய்
உன்னைப் பார்த்த பின்னும்"

" உன்னைச் சிறையெடுக்க
மனம் துடிக்குதடா"

" மரபு வேலிக்குள்
நான் இருக்க"

"மறக்க நினைக்கிறேன்
முடியவில்லை"

"இமயமலை என்று
தெரிந்த பின்னும்"

"எறும்பின் ஆசையோ
அடங்கவில்லை"

" நீ வருவாயோ
இல்லை மறைவாயோ"

" ஏ ஏ ஏ ஏ ஏ"

" தன்னை தருவாயோ
இல்லை கரைவாயோ"

என்று பாடிக்கொண்டு இருந்தவளை அதிர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தாள் தமிழ்ச்செல்வி.

அவள் பாடிய வரிகள் மனதில் வந்தது தமிழ்ச்செல்விக்கு


" மணமகனாய்
உன்னைப் பார்த்த பின்னும்"

"உன்னைச் சிறையெடுக்க
மனம் துடிக்குதடா"


அப்படி என்றால் அவள் சொல்லும் ஆள் அவளின் அக்காவிற்கு நிச்சயம் பண்ணிய மாப்பிள்ளையா?... என்று அதிர்ந்தவள் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அவளிடமே கேட்கலாம் என்று நண்பியை கை பிடித்து எழுப்பி அமரவைத்தவள் பாடலை நிறுத்தாமல் பாடிக்கொண்டு இருந்தவளை முதுகில் ஓங்கி அடிக்க பாடிக்கொண்டு இருந்தவள் பாட்டை நிறுத்தி


"அம்மா...." என்று முதுகை தடவிக்கொண்டு

"ஏன்டி எருமை எதுக்கு அடிச்ச" என்றாள் அவள்.

"இப்ப என்னவே பாடினியே"

"மணமகனாய் உன்னை பார்த்த பின்னும்"

"அதற்கு என்ன அர்த்தம்?..." என்றவளின் குரலில் இப்போது கேலி கிண்டல் இல்லை சற்று கோபமே இருந்தது.

"நீ என்ன அர்த்தத்தில் கேட்கிறியோ அதே அர்த்தம் தான்" புன்னகையுடன் கூறினாள் பனிமலர்.

இரண்டு கொட்டுக்களை பனிமலரின் தலையில் வைத்தவள் "இதிலெல்லாமா உன் விளையாட்டை காட்டுவது ஒழுங்கா சொல்லுடி" என்றாள் தமிழ்.

"ஏய் நிஜமாகத்தான்டி சொல்லுறேன்" என்றாள் பனிமலர் சித்ரா.

" மலர் என்ன பேசுற அவரை உன் அக்காக்கு நிச்சயம் பண்ணியிருக்காங்க" என்றாள் தமிழ்.

"கல்யாணம் முடியலையே நிச்சயம் தானே பண்ணியிருக்காங்க?... " என்றாள் பனிமலர்.

" ஏய் பைத்தியமாடி உன் அக்காக்கு நிச்சயம் பண்ணவரை அக்கா தானே கல்யாணம் பண்ணுவாங்க" என்றாள்.

" நிச்சயம் அக்கா கூட நடந்தா கல்யாணம் தங்கச்சிக்கூட நடக்காதா என்ன?.." என்று கேள்வியை கேட்டவளை கொலை வெறியில் பார்த்தாள் தமிழ்.

இதற்கு மேல் நண்பியை குழப்பினாள் தன்னை கொலைக்கூட செய்ய வாய்ப்பிருக்கு என்று நினைத்தவள்.

" அடியேய் என் அக்கா அவள் கூட வேலை செய்யுற அரவிந்த்தை லவ் பண்ணுறது உனக்கு தெரியும் இல்ல?... " என்றாள்.

தமிழ் ஆம் என்று தலையாட்ட

"அதுவும் எவ்வளவு டீப்பான லவ் என்று எத்தனை முறை பார்த்து இருக்கோம்" என்றதும்

அவர்கள் பார்த்த சில காட்சிகள் நினைவில் வந்ததும் "ஆமாம் ஆமாம்" என்றாள் தமிழ்.

" அப்படி ஒரே ஜுஸ் வாங்கி சுற்றுப்புறம் மறந்து ஒரு மணி நேரம் குடிச்சுட்டு இப்ப வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிப்பாளா எழில்நிலா?... "என்று நண்பியிடம் கேள்வி கேட்க

"ஆமாம் இல்ல உன் அக்கா உன்னைப்போல் இல்லை. அவங்க எல்லாத்திலும் சின்சியரானவங்க அவங்க போய் ஒருத்தரை லவ் பண்ணிட்டு இன்னொருத்தரை கல்யாணம் கண்டிப்பாக பண்ணிக்க மாட்டாங்க" என்றாள் தமிழ்.

" அதே அதே" என்றாள் புன்னகையுடன் பனிமலர்.

"ஆனால் அவங்க நிச்சயம் பண்ண எப்படி சம்மதம் சொன்னாங்க வீட்டில் லவ் பத்தி சொல்லி இருந்து இருக்கலாம் இல்ல ஏன் சொல்லலை?... " என்றாள் தமிழ்.

" பயம் தான் காரணம் அவளை பத்தி தெரியும் இல்ல டாடிக்கிட்ட பேசனும் என்றாலும் நான் கூட பேகனும் இல்லையா?... இந்த நிச்சயம் இரண்டே நாளில் முடிவு பண்ணியிருக்காங்க."

" போன வாரம் ஒரு ரிலேடிவ் கல்யாணத்திற்கு என்னை கூப்பிட்டாங்க இல்ல மம்மி. நான் கூட பேகலையே அந்த கல்யாணத்தில் தான் பழைய பிரண்டை என் பாட்டி பார்த்து இருக்காங்க. அவங்க கிட்ட பேசும்போது அவங்க வீட்டில் பேரனுக்கு பெண் பார்க்கிறோம் உங்க வீட்டில் பெண் இருக்கே பார்க்கலாமா என்று கேட்டு இருக்காங்க."

"உடனே என் பாட்டி தலையாட்டி டாடி போனில் இருந்த நிலா ஜாதகம் போட்டோ எல்லாம் கொடுத்து இருக்கு அவங்களும் அதே மாதிரி கொடுத்து இருக்காங்க."

"அப்புறம் என்ன அன்னைக்கே ஜாதகம் பார்த்து மறுநாள் வீட்டுக்கே வந்து பேசி முடித்து விட்டு போயிருக்காங்க. வேலையில் இருந்து வந்த நிலாவுக்கே பிறகு தான் சொல்லி இருக்காங்க. அவளால் சிந்திக்கக்கூட முடியாமல் சீக்கிரம் நிச்சயதார்த்தமும் வச்சிட்டாங்க."

"இனிமே தான் அவள் யோசித்து ஓடி போகுறதா இல்லை கல்யாணம் பண்ணிட்டு போய் நிக்கறதா இல்லை லவ் பண்ணுறவரை கூட்டிட்டு போய் டாடி முன்னாடி நிக்க வைக்கிறதா என்று இரண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணிட்டு இருப்பாங்க."

" ஆக மொத்தத்தில் கல்யாணம் நிக்கும் இல்லையா?... உங்க அடுத்த பெண்ணை குடுங்க என்று வந்து நிப்பாங்க அப்ப கண்டிப்பா என் டாடி என் கிட்ட சம்மதம் கேட்பார் நானும் உங்க விருப்பம் டாடி என்று சொல்லிட்டா"

" அடுத்து என்ன டும் டும் தான்" என்றாள்.

" நினைப்பது எல்லாம் நடந்து விடுமா????...... அது அவன் கையில் தானே இருக்கு. கடவுளை சொல்லலிங்க மாப்பிள்ளையாக முடிவு செய்து இருக்காங்களே அவனை சொல்லுறேன். "

" அப்படி இல்லாமல் அவங்க உங்க டாடிக்கிட்ட சண்டை போட்டுட்டு உங்க சம்பந்தம் வேண்டாம் என்று சொன்னாங்கனா என்ன பண்ணுவிங்க மேடம்" என்றாள் தமிழ்.

" இவ்வளவு யோசித்த எனக்கு இந்த விஷயத்தை யோசிக்க மாட்டோனா அவங்க வீட்டுக்கே போய் உங்க பையனை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லுவேன் இல்லை அத்துகிட்ட நானே நேரில் போய் பேசுவேன்."என்றாள்.

" அது யாருடி அத்து?... " என்று தமிழ் கேட்டாள்.

"அது கூட உனக்கு தெரியாதா அத்தானை தான் அத்து என்று சொன்னேன்." என்றாள்.

" அத்தான் யாரு?... " என்றாள் மீண்டும் தமிழ்.

அவளை முறைத்த பனிமலர் " என் ஆளைத்தான் அத்தான் என்று சொன்னேன்" என்றாள்.

"ஓஓஹோ உன் அவரு தான் அத்தானா அந்த சுவரை கொஞ்சம் காட்டு எப்படி இருக்கார் என்று பார்க்கலாம்" என்றாள் தமிழ்.

பனிமலர் தமிழை முறைக்கவும் அதை சட்டை செய்யாதவள் "நீ காட்டுனாத்தானே அவரு உனக்கு ஏத்த அவரா இல்லை சுவரா என்று சொல்லமுடியும்" என்றாள் தமிழ்.

தன் போனில் அவனுடன் எடுத்த செல்ஃபியை எடுத்தவள் பீறிட்ட சிரிப்பை தன் உதட்டை கடித்து அடக்கியவள் தமிழ் முகத்தில் வரப்போகும் ரியாக்ஷன் என்ன என்று தெரிந்திருந்தும் அவளின் முகத்தை பார்த்துக்கொண்டே அவள் முன் நீட்டி இருக்க அடுத்த வினாடி அந்த அறையின் மூலையில் இரு கன்னத்தையும் கைகளால் மறைத்துக்கொண்டு நின்று இருந்தாள் தமிழ்.

"ஏய் என்னடி அவரா சுவரா என்று பார்க்கனும் சொல்லிட்டு இப்ப நீ போய் சுவரை ஒட்டிட்டு இருக்க" என்று சிரிப்புடன் கேட்டாள் பனிமலர்.

" ஏய்... அது. து... அ..வ..ன் அவ... ன் தானே?..." என்று திக்கினாள் தமிழ்.

"அவன் தானே என்றாள் யாரு தமிழ்?..." என்று ஒன்றும் தெரியாதவள் போல் கேட்க

" அதான்.. அன்னைக்கு... மாலில்.. ஐஸ்க்ரீம்.. அவன் மேலே தெரியாமல் கெட்டியதற்கு என்னை அடிச்சானே அவன் தானே?... " என்று வார்த்தைகள் கோர்வையாக வராமல் விட்டு விட்டு வந்தது.

ஏனெனில் வாங்கிய அடி அப்படி மூன்று மாதங்கள் முடிந்த பிறகும் அப்போது வாங்கிய அடி இப்போதும் வலிப்பது போல் உணர்ந்தாள் தமிழ்ச்செல்வி.

இதுவரை அவளின் வீட்டினர் கூட அவளை கண்டிப்பார்களே தவிர ஒரு அடி கூட அடித்ததில்லை அவளின் தந்தைக்கும் மூன்று அண்ணன்களுக்கும் அவள் ஒரு இளவரசி. தாய் இல்லாதவள் என்று அவளை ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவைத்தது இல்லை அவளின் இரண்டு அண்ணிமார்களும் அப்படித்தான்.

அப்படிப்பட்டவளை அடித்து கண்ணீர் விட வைத்தவன் பனிமலர் காட்டிய போட்டோவில் முறைத்துக்கொண்டு இருந்தால் அதை பார்த்தவள் பயந்து ஓடத்தானே செய்வாள்.


அடுத்து நண்பி கூறியதை கேட்டவள் நிஜமாகவே ஒடப்பார்த்தாள்.

"ஆமாம்டி அவரே தான் சூரிய பிரகாஷ் என்னுடைய சூரியன்" என்று முகத்தில் வெட்கத்துடன் கூறினாள் பனிமலர்.

அதை கேட்ட தமிழ் கதவை திறந்து வெளியே போக பின்னிருந்து அவளை பிடித்து இருந்தாள் பனிமலர்.

"ஏய் விடுடி" என்றாள் தமிழ்.

"எங்க போற என்று சொல்லு விடுறேன்" என்றாள்.

" மெண்டல் கூட எல்லாம் என்னால் இனி இருக்க முடியாது அதான் வார்டன் மேடம் கிட்ட சொல்லி வேற ரூம் மாத்த போறேன்" என்றாள் தமிழ்.

அவளை இழுத்து அறைக்குள் விட்டவள் கதவை தாழ்போட்டு விட்டு கை கட்டி அதன் மீதே சாய்ந்து நின்றவள்

" இப்ப சொல்லு ஏன் நான் அவரை கல்யாணம் பண்ணக்கூடாது என்று நினைக்கிற" என்று கேட்டாள்.

" ஏய் மனுஷனை கல்யாணம் பண்ணிக்கலாம் ராட்சசனை கல்யாணம் பண்ணிக்க முடியுமா?..."

நண்பியின் மனதில் இருப்பது வெளியே வரட்டும் என்று அமைதியாகவே இருந்தாள் பனிமலர்.

" தெரியாமல் அவன் மேல் ஐஸ்க்ரீம் பட்டதற்கு பெண் என்று பார்க்காமல் என்னை அடித்தான் என்றால் நியாயம் கேட்ட உன்னையும் கீழே தள்ளிவிட்டு போனான் அப்படிபட்ட ராட்சசனை போய் லவ் பண்ணுறேன் சொன்னா அப்ப உனக்கு பைத்தியம் தானே" என்றவள்.

"ஆள் அழகாக இருந்தா மட்டும் போதுமா மனசில் கொஞ்சம் கூட ஈரம் இல்லாதவனை எதை பார்த்து லவ் பண்றேன் சொல்லுற. அழகை பார்த்து என்று நீசொன்னாலும் நான் நம்ப மாட்டேன்."

" அவனை விட அழகானவங்க எவ்வளவு பேர் பிரபேஸ் பண்ணப்பக்கூட மறுத்து இருக்க" என்று தன் நண்பியை பற்றி தெரிந்தவள் அவளாக பேசிக்கொண்டு இருக்க அதை புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருந்தாள் பனிமலர்.

" ஏய் அப்படி என்ன தான் அந்த ராட்சசன் கிட்ட இருக்கு என்று அவனை கல்யாணம் பண்ணனும் என்று பிளான் பண்ணிட்டு இருக்க?..." என்று ஆற்றாமையுடன் கேட்டாள் தமிழ்.

"ஹா ஹா ஹா" என்று சிரித்தவள் "எதுக்கு அவனை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன் தெரியுமா?..." என்று பனிமலர் கேள்வியோடு நண்பியை நோக்க

அவளின் பதிலுக்காக ஆவலாக நண்பியை தமிழ் பார்க்க

" பணம் அவனிடம் இருக்கும் பணம்" என்றாள் புன்னகையுடன் பனிமலர்.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 3



நண்பியின் பதிலுக்காக காத்திருந்த தமிழ் அவளின் பதிலில் கோபம் அதிகமாக பனிமலரின் கை பிடித்து இழுத்து அவளின் முதுகில் அடிக்க ஆரம்பித்தாள் அவளின் ஒவ்வொரு அடியும் வலியை கொடுக்க

" ஏய் வலிக்குதுடி தமிழ் விடுடி" என்று அவளின் அடியில் இருந்து தப்ப நினைத்தாலும் முடியாம‌ல் அடிவாங்கிக்கொண்டு இருந்தவள் கத்த அதை காதில் வாங்காமல் அடித்துக்கொண்டே இருந்தாள் தமிழ்.

இதற்கு மேல் அடிவாங்க முடியாது என்று நினைத்த பனிமலர்.

"ஏய் நான் சொன்னது தப்பு தான் பணத்துக்காக கல்யாணம் பண்ண நினைக்கவில்லை" என்றாள் பனிமலர்.

அதன் பிறகு அடிப்பதை நிறுத்தியவள் அமைதியாக கட்டிலில் அமர்ந்தாள் தமிழ்.

அவளின் அருகில் உட்கார்ந்தவள் அவளின் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவள் "சாரிடி தமிழ்" என்றாள்.

அவளின் கண்கள் கலங்கி இருப்பதை கண்ட பனிமலர்

" ஏய் என்னடி தமிழ் இது?..." என்று அவளின் கண்களை துடைத்துவிட்டவளின் கைகளை தட்டிவிட்டவள்

"எப்படி டி அப்படி ஒரு வார்த்தை உன் வாயில் வந்தது. உன் பேரில் இருந்த பணத்தை ஒத்த ரூபாய் இல்லாமல் வழித்து கொடுத்தவள், நீ போய் பணத்துக்கு ஆசைபடுபவளா?... உன் அப்பா அம்மா" என்று பேசியவளின் வாயை கை வைத்து மூடிய பனிமலர்

"ப்ளீஸ் தமிழ் அதை பத்தி பேசவேண்டாம் இப்ப உனக்கு அவரை கல்யாணம் பண்ணிக்க நினைக்கறதுக்கு காரணம் தெரியனும் அவ்வளவு தானே சொல்லுறேன் கேட்டுக்கோ" என்று சொல்ல ஆரம்பித்தாள்.


அதே நேரத்தில் தமிழால் ராட்சசன் என்று கூறியவன் ராட்சசனாகத்தான் அமர்ந்து இருந்தான். எதிரில் இருந்தவனின் உடல் முழுவதும் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியில் இருந்தான் அவன்.


ஏற்கனவே அங்கு இருந்த தடியர்களின் அடியில் உடல் முழுவதும் இரத்த காயங்களுடன் அமர்ந்து இருந்தவனின் எதிரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கண்கள் ரத்தமென சிவந்து இருக்க அவனையே ஊடுருவி பார்த்துக்கொண்டு இருந்தான் சூர்யபிரகாஷ்.

பிரகாஷ் கார்மெண்ட் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் சிவபிரகாஷம் அவர்களின் இரண்டாவது பேரன் சூர்யபிரகாஷ்.

சிவபிரகாஷம், பத்மாவதி தம்பதியரின் ஒரே மகன் அருளானந்தம் அவரின் மனைவி அம்பிகா இருமகன்கள் சந்திரபிரகாஷ், சூர்யபிரகாஷ்.

சிவபிரகாஷம் சிறிய அளவில் ஆரம்பித்த கார்மெண்ட்ஸ் மகன் தலையெடுத்ததும் சென்னையில் பெயர் சொல்லும் அளவுக்கு வளர்த்தார் அருளானந்தம். அவரின் கையில் பொறுப்பு வந்ததும் ஒன்றாக இருந்த கார்மெண்ட் இரண்டாக விரிவு செய்யப்பட்டது.

படிப்பை முடித்து வந்த சந்திரபிரகாஷ் கம்பெனியை இன்னும் விரிவாக்கம் செய்து நிறைய ஆர்டர்கள் பிடித்து நல்ல லாபத்தில் சென்று கொண்டு இருந்தது. தங்கள் மூன்றாவது கம்பெனி நிறுவும் வேலைகள் நடந்து கொண்டு இருந்த நேரத்தில் தனது ME கம்யூட்டர் படிப்பை முடித்து 23 வயதில் இருந்த சூர்யபிரகாஷ்

தன் தாத்தா தந்தை இடம் புதிதாக திறக்கும் கம்பெனியை தன்னிடம் கொடுக்கமாறு கேட்கவும் அதிர்ந்தனர் குடும்பத்தினர்.

பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் படிக்க சொன்னபோது கம்யூட்டர் சயின்ஸ் படித்து வெளிநாடு சொல்ல விருப்பம் என்று தெரிவித்தவன், தனக்கு குடும்ப தொழிலில் விருப்பம் இல்லை என்று சொன்னவன் இன்று வந்து தன்னிடம் கம்பெனி கொடுக்கச்சொன்னால் அதிர்ச்சி வரத்தானே செய்யும்.

அதுவும் தொழிலைப்பற்றி எதுவும் தெரியாதவன் வந்து கேட்கவும் தயங்கினர்.

ஆனால் என் மீது நம்பிக்கை இருந்தால் ஒரு வருடம் என்னிடம் கம்பெனி பொறுப்பு முழுவதும் கொடுங்கள் யாருடைய தலையிடும் இருக்கக்கூடாது என்பதையும் சேர்த்து சொல்லியிருந்தான்.

அவனின் பிடிவாத குணம் தெரிந்த குடும்பத்தினர் அவனிடம் அந்த புதிய கம்பெனியை ஒப்படைக்க அடுத்த ஒரு வருடத்தில் அவனின் குடும்பத்தினரே ஆச்சரியம் கொள்ளும் அளவுக்கு உயர்ந்து இருந்தான்.

அடுத்த ஆண்டு மற்ற இரு கம்பெனியும் இவனிடமே கொடுக்க அதை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் முக்கிய இருபது இடங்களில் இவர்களின் கார்மெண்ட்ஸ் மிகப்பெரிய அளவில் நடந்ததோடு இல்லாமல்

இவர்களின் தயாரிப்புகள் பிரகாஷ் என்பதை குறிக்கும் விதமாக P என்னும் குறியீடுடன் பிரான்ட் உடைகளாக வெளிவந்தன சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அணியும் உடைகளில் இவர்கள் உடை முன்னிலை வகிக்கின்றன.

இவர்கள் உடைகள் இல்லாத கடைகளே இல்லை என்று நிலையில் உயர்ந்து இருந்தனர். பல வெளிநாடுகளுக்கும் இவர்களின் உடை ஏற்றுமதி செய்கின்றனர்.

புதிய உடைகள் அறிமுக செய்ய சினிமா நட்சத்திரங்கள் இவனை தேடி வருவார்கள். அந்த அளவுக்கு உச்சத்தை தொட்டு இருந்தான்.

இவனின் அசுர வளர்ச்சியை கண்டவர்கள் இவனை வீழ்த்த பல சதிவேலைகள் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். அதில் இருந்து தன்னை காத்துக்கொண்டு தான் இருக்கிறான்.

இவனாக யாரிடமும் பகை வளர்த்தது இல்லை ஆனால் அவர்களாக வருபவர்களை இவன் விட்டதும் இல்லை.

இன்றும் அப்படித்தான் காலை ஓட்டத்திற்காக கடற்கரை வந்தவன் தன் பாதுகாவலர்களை தன் பின்னால் வரவேண்டாம் என்று கூறிவிட்டு ஓடிக்கொண்டு இருந்தவனின் முன்னாள் ஒருவன் பின்னால் நாய் துரத்த ஓடிவந்து கொண்டு இருந்தான்.

அவனின் ஓட்டம் இவனை நோக்கி மட்டுமே வந்து கொண்டு இருக்க வருபவனின் நோக்கம் என்ன என்று புரிந்தவன் திரும்பி தன் பாதுகாவலர் பக்கம் ஒரு பார்வை பார்த்து விட்டு அவனை நோக்கி இவனும் ஓடினான்.

அருகில் ஓடி வந்தவன் தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து சூர்யபிரகாஷ்சை குத்தும் முன்பே அவன் கையை வளைத்து திருப்பி இருந்தான் சூர்யா .

சூர்யாவின் பாதுகாவலர்கள் அருகில் வந்ததும் அவர்கள் இடம் அவனை விட்டு விட்டு அவனின் ஓட்டத்தை தொடர்ந்தான். அடுத்த அரை மணி நேரத்திற்கு பிறகு அவன் வந்த போது இரத்தம் வழிய கட்டிப்போட்டு வைக்கப்பட்டு இருந்தான்.

அவனைத்தான் இப்போது கண்கள் சிவக்க பார்த்து கொண்டு இருக்கிறான்.

"சார்... சார்... நான்.... உண்மையை.. சொல்லிடுறேன்" என்று வார்த்தைகள் திக்கி பேசினான் அடிவாங்கியவன்.

அப்போதும் சூர்யாவின் கண்கள் எதிரில் இருந்தவனின் இரத்தம் வடியும் முகத்திலேயே இருக்க

"சார்... PMC கார்மென்ட் ஓனர் ஆகாஷ் தான்" என்று அவன் சொல்லி முடிக்கும் முன் அவன் நெற்றியில் துப்பாக்கியை வைத்து இருந்தான் சூர்யா.

நீ சொன்னதை நான் நம்பவில்லை என்ற பாவனை அவனிடம் இருந்தது.

"சார்... சார்... அவர் தான் போனமாதம் அவருக்கு கிடைக்க வேண்டிய ஆர்டர் நீங்க தட்டி பரிச்சிட்டிங்க என்று உங்களை பயமுறுத்த சென்னார்" என்றான் உதறலுடன்

இப்போது சூர்யாவின் முகத்தில் உக்கிரம் அதிகமாக துப்பாக்கியால் எதிரில் இருந்தவனின் காலை பதம்பார்த்து இருந்தான்.

" ஆஆஆஆ..." என வலியில் துடித்தவனின் காலில் இருந்து இரத்தம் பீரிட்டது அதை எந்த சலனமும் இல்லாமல் பார்த்தவன் அடுத்த காலுக்கு குறி வைக்க

"ஆஆ... அம்மா.." என்று வலியில் துடித்துக்கொண்டே " சார்... சார்... சொல்லிடுறேன் என்னை சுட்டுடாதிங்க" என்றவன்

" மும்பை RM பேஷன் & எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஓனர் ராகேஷ், முகேஷ் பிரதர்ஸ் தான் உங்களை பயமுறுத்த மட்டுமே செய்ய சொன்னாங்க" என்றான்.

அவனை காலால் எட்டி உதைக்க அருகில் நின்று இருந்த பாதுகாவலர்கள் அவனை தூக்கிச்சென்றனர்.

அங்கிருந்த தன் பிஏ மாதவனை பார்க்க அதுவரை சற்று தள்ளி இருந்தவன் வேகமாக வந்து தன் லேப்டாப்பில் அந்த கம்பெனி பெயரை தட்டியவன்.

" சார் ராகேஷ், முகேஷ் ரெண்டு பேரும் அவங்க அப்பா செய்திட்டு இருந்த பிஸ்னஸை கடந்த ஐந்து ஆண்டுகளாக எடுத்து நடத்திட்டு வராங்க இவங்களின் பிராண்ட் நேம் RM"

" நிறைய பாரின் ஆர்டர்ஸ் பண்ணாலும் முக்கியமான ஆர்டர் இலண்டன் ஆர்டர் தான் கடந்த பத்து வருசமாக அந்த கம்பெனிக்கு வருஷம் ஆயிரம் கோடி ஆர்டர்ஸ் கொடுக்கிறாங்க."

"இப்ப ஐம்பது கோடி ஆர்டர் சரக்கு நாளைக்கு கப்பல் கொண்டு போக ரெடியாக இருக்கு" என்றதும் சூர்யா அவனை ஒரு பார்வை பார்க்க அதன் அர்த்தம் புரிந்தவன் தன்னிடம் இருந்த வேறு ஒரு போனை எடுத்து யாருக்கே அழைத்தவன் " பொருள் நாளைக்கு கப்பல் ஏற்கக்கூடாது" என்று மட்டும் கூறி வைத்தான் மாதவன்.

அடுத்து தன்னிடம் இருந்த லேப்டாப்பை சூர்யா முன் வைத்து லண்டன் கம்பெனி பற்றிய குறிப்புகளை காட்டினான் மாதவன்.

அனைத்தும் பார்த்தவன் "அடுத்த வாரம் இலண்டன் போக டிக்கெட் போட்டுடு" என்றான் சூர்யா.

" ஓகே சார்" என்னும் முன்னே சூர்யா அந்த இடத்தை விட்டு சென்று இருந்தான்.

சும்மா இருந்த சிங்கத்தை சீண்டி விட்டானுங்க இப்ப அந்த கம்பெனி இருந்த இடமே இல்லாமல் போகப்போகிறது என்று நினைத்துக்கொண்டே அடுத்த வேலை பார்க்க சென்றான் மாதவன்.


இந்த ஐந்து வருடங்களில் தொழிலை மட்டும் கற்காமல் அதில் உள்ள நெளிவு சுளிவுகளையும் கற்றிருந்தான் சூரியபிரகாஷ். அவனின் பணிக்கு சிறு இடைஞ்சல் கொடுப்பவர்களையும் அவர்கள் வழிமுறையிலே அவர்கள் தொழிலை இல்லாமல் செய்பவன்.

அவனின் இந்த செயலை குடும்பத்தினர் கண்டித்த போது அவர்களிடம் இருந்து தன்னை விலக்கி கொண்டான் சூர்யபிரகாஷ். ஒரே வீட்டில் இருந்த போதும் தேவைக்கு மட்டுமே பேசினான். தந்தை அண்ணனிடம் சில கம்பெனி பொறுப்புகள் இருந்ததால் தொழில் முறை பேச்சுக்கள் மட்டுமே அவர்களிடம் இருந்தது.

வீட்டில் பாட்டி, தாய் இடம் மட்டுமே சில வார்த்தைகள் பேசுவான். அடுத்து அவன் பேசுவது அவனின் அண்ணன் மகள் ஆறு வயது மகள் காருண்யாவிடம் தான்.

அண்ணி சாருமதி இவனிடம் எதாவது பேசினால் கூட ஆம் இல்லை என்ற ஒற்றை பதில் தான் கொடுப்பான். மற்ற வீடுகளில் உள்ளது போல் தன்னிடம் நட்பாக தன் மைத்துனர் இருக்கவேண்டும் என்று நினைப்பவள் சாருமதி. அவள் கொஞ்சம் கலகலப்பாக இருப்பவள் அவளாக அவனிடம் பேச்சை வளர்க்க நினைத்தாள் அவளுக்கு முறைப்பை கொடுத்து விட்டு சென்று விடுவான் சூர்யா.

இதற்கும் அவள் உறவு முறையில் அத்தை பெண்தான் சிறிய வயதில் இருந்தே தெரியும். அப்போது எல்லாம் நன்றாக கேலி கிண்டல் செய்பவன் தான் வீட்டினருடனும் ஜாலியாக பேசி இருந்தவன் தான், தொழிலில் என்று இறங்கினானோ அன்று முதல் அவனுக்குள் இறுக்கம் வந்திருந்தது.

சந்திரபிரகாஷ்க்கு இருபத்தி ஐந்து வயது முடிந்த போது திருமணம் முடித்துவிட்டனர். இப்போது ஆறுவயதில் காருண்யா இருக்கிறாள்.

சாருமதி குழந்தை பெற்ற போது பட்ட வலியை கண்ட சந்திரபிரகாஷ் ஒரு குழந்தை போதும் என்று சாருமதியிடம் சொல்லிவிட்டான்.

தாய், பாட்டி இன்னொரு குழந்தை பற்றி கேட்டபோது மறுத்தவன் தம்பிக்கு திருமணம் செய்து வையுங்கள் அவன் குழந்தை வந்தால் காருண்யாவுக்கு தம்பியே தங்கையே வரும் என்று கூறிச்சென்றுவிட்டான்.

அடுத்து சூர்யாவிடம் சென்று திருமணம் பற்றி பேசிய போது அவன் அவர்களுக்கு பதில் கூட சொல்லாமல் சென்று கொண்டு இருந்தான்.

நான்கு வருடங்களாக அவனிடம் கெஞ்சியவர்களுக்கு இப்போது அவனின் இருபத்தி ஒன்பதாவது வயதில் தான் சம்மதம் கூறினான். அடுத்த ஒரு வாரத்திலேயே பெண் புகைப்படம் அவன் முன் நீட்டப்பட்டது.

மறுநாள் சொல்வதாக போட்டோவை வாங்கியவன் மறுநாள் மதியம் பாட்டிக்கு சம்மதம் சொல்லியிருக்க உடனே கிளம்பி சென்று நிச்சய தேதியை குறித்து வந்து இருந்தனர்.

அதற்கும் அவனிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை யாருக்கோ என்னும் பாவனையில் சென்றுவிட்டான்.

நிச்சயதார்த்தமும் முடிந்து அடுத்த இரு மாதங்களில் திருமணம் என்று இருவீட்டாரும் முடிவு செய்துள்ளனர்.

 
Status
Not open for further replies.
Top