அத்தியாயம் 4:-
பொழுது சுகமாக புலர்ந்தது. மெல்ல கண்விழித்தாள் சுந்தரி.
அவள் விழித்த அதே நேரம், உதயச்சந்திரன் அவளுக்கு அழைத்தான், "குட் மார்னிங் சந்துரு" என்று உற்சாகமாக கூறினாள். "ஹாப்பி மார்னிங் பேபி" என்று கூறியவன், "இப்பதான் எழுந்திரிக்கிறயா பேபி ரெஃப்ரெஷ் ஆகிக்கோ டிபன் வரும் ஸ்ரீ இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவா உன் கூடவே இருப்பா சரியா" என்று சொல்ல "சரிங்க" என்று மறுமொழி கூறினாள் சுந்தரி.
ஒரு சிறு அமைதிக்கு பின் "சுந்தரி உனக்கு ஏதாவது என்கிட்ட சொல்லனுமா" என்றான் கனிவாகவே.
"அது...அது..." என்று தடுமாறியவள் "ஒன்னுமில்லையே" என்று அவசரமாக முடித்தாள்.
ஆழ்ந்து மூச்சு எடுத்தவன், "ஓகே பைன் சுந்தரி தாலி கட்டும்போது பார்க்கலாம்" என்றபடி அலைபேசியை வைத்தவன், முகமோ இறுகி இருந்தது.
'இவ எப்ப எல்லாத்தையும் சொல்லுவா என் மடி சாய்வா' என்று ஏங்கினான் என்றே சொல்லலாம். தனது மனைவிக்கு தானே எல்லாமுமாக இருக்க வேண்டும் என்ற துடிப்பு அவனிடம்.
அவளுக்கோ ஏற்கனவே கல்லூரியில் தோழி என்று ஏற்றிருந்த ஒருத்தியிடம் தன்னை பற்றி கூறி அவமானம் அடைந்து கூனி குறுகி நின்று பாடம் கற்றது இறக்கும் தறுவாயிலும் மறக்காதே.
அதை நினைத்து பார்த்தவளுக்கு கசந்த புன்னகையை மிஞ்சியது. ஒருவரை அவமானப்படுத்தி பார்ப்பதில் எத்தனை ஆனந்தம் கொள்கிறார்கள் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்புதான் அந்த புன்னகை.
கதவு தட்டப்பட தனது சிந்தனையிலிருந்து வெளிவந்தவள் கதவை திறந்தாள்.
ஸ்ரீமதி தான் நின்று இருந்தாள் "ஹாய் அண்ணி" என்று உற்சாகமாக உள்ளே நுழைந்தவள், "இப்பதான் எழுந்தீங்களா காலைல எழுந்திருக்கும் போது கூட எப்படி இவளோ அழகா இருக்கீங்க" என்று அப்பட்டமாக ஐஸ் வைத்தாள் பெண். அவளது கூற்றில் சிரித்தாள் சுந்தரி.
"அண்ணி ஃப்ரஷ் ஆயிட்டு வாங்க அம்மா உங்களை பார்க்க வரேன்னாங்க" என்று சொல்லியவள், காலை உணவு எடுத்து வர சென்றாள்.
அவள் செல்லவே தனது எண்ணங்கள் அத்தனையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள்.
குளியல் அறையிலிருந்து வந்தவளுக்கு சூடாக காப்பியும் இட்லியும் தயாராக இருந்தது ஸ்ரீமதியின் வரவால்.
"அண்ணி சாப்பிட்டதுக்கு அப்புறம் பார்லர்ல இருந்து வந்துருவாங்க நாம ரெடியாகலாம்" என்றாள்.
இருவரும் சேர்ந்தே உணவு உண்டனர். கைகளை கழுவியபடி திரிபுரசுந்தரி, "உங்க அண்ணன் சாப்பிட்டாங்களா" என்று மெல்ல கேட்டாள்.
"பார்ரா" என்ற கேலி செய்தவள் "அண்ணன் கிட்டயே கேளுங்க" என்றபடி தனது அலைபேசியில் உதய்க்கு அழைத்தாள் ஸ்ரீமதி.
அவள் மறுக்கும் முன்பே அலைபேசி அவளிடம் நீட்டப்பட்டது. இதற்குப் பிறகு மறுத்தால் அது நன்றாக இருக்காது என்று நினைத்தவள்.
"ஹலோ சாப்பிட்டீங்களா சந்துரு" என்று கேட்கவே "ஓ சுந்தரி நீயா ஸ்ரீமதின்னு நினைச்சேன் சாப்பிட்டேன்மா நீ சாப்டியா" என்று பதிலுக்கு கேட்டான். "ஆச்சுங்க" என்றவளிடம் மேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு வைத்தான் உதய்.
சற்று நேரத்திற்கு எல்லாம் பெண்கள் வந்தனர். திரிபுரசுந்தரி மற்றும் ஸ்ரீமதிக்கு அலங்காரம் செய்தார்கள்.
அந்த நேரத்தில் "ஸ்ரீமதி, ஸ்ரீமதி" என்று அழைத்தபடி மத்திய வயது மதிக்கத்தக்க இரு பெண்கள் வந்தனர்.
அவர்களைப் பார்த்தவுடன் உதயின் சொந்தம் என்று தெரிந்தது திரிபுரசுந்தரிக்கு.
மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றாள் அவள்.
"பரவாயில்லையே அனாதை ஆசிரமத்தில் மரியாதை கொடுக்கலாம் சொல்லிக் கொடுத்திருக்காங்க போல" என்று ஏளனமாக கேட்டார் வந்தவர்களில் ஒருவர்.
என்ன இப்படி பேசுறாங்க என்று எண்ணியவாறு அதிர்ந்து விழித்தாள் சுந்தரி.
"வாங்க அத்தை, வாங்க பெரியம்மா" என்று வரவேற்ற ஸ்ரீமதி, சுந்தரியின் புறம் திரும்பியவள், "அண்ணி இவங்க என்னோட அத்தை, அப்பா அப்புறம் பெரியப்பாவுக்கு தங்கச்சி. இவங்க பேரு மேகலா. இவங்க பெரியம்மா, பெரியப்பா வொய்ப் பேரு சாவித்திரி" என்று முறையாக அறிமுகப்படுத்தினாள்.
ஸ்ரீமதி அறிமுகம் செய்யவே நக்கலாக பார்த்த சாவித்திரி "அப்படித்தான் நல்லா உறவு முறை சொல்லிக் கொடு. பின்ன அனாதைக்கு உறவு யாரு. சொன்னாலும் புரியுமா என்னவோ நம்ம உதய்க்கு இவன் மேல ஆசை வந்திருக்கக் கூடாது" என்று அவளை மேலும் காயப்படுத்தினார்.
புருவம் சுருக்கி சுந்தரியை பார்த்த மேகலா "எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு இவள ஆனா ஒண்ணும் புரியலையே" என்று முனமுனுத்தார்.
இவர்களது பேச்சை மாற்ற வேண்டி "சௌந்தர்யா வரலையா அத்தை"என்று விடை தெரிந்த கேள்வியை வினாவினால் ஸ்ரீமதி. ஆனால் அதுவே தவறாகி போனது.
"அவ எதுக்கு இங்க வரப்போறா. ரெண்டு பேரும் அண்ணி, அண்ணின்னு கொஞ்சிக்கிவிங்களே. இப்போ இவள அண்ணியா கொண்டு வந்திருக்கான் உங்க அண்ணன். உன் கூட தானே படிச்சா என் பொண்ணு உங்க வீட்ல, உங்க அம்மாவுக்கும் என் பொண்ணு தான் மருமகளா வரணும்னு விருப்பம். ஆனா பாரு விதி இவ ரூபத்துல விளையாடுது. இப்படி இருக்கும்போது அவை எப்படி வருவா, இல்ல எதுக்கு இங்க வரனும்" என்று சாவித்திரி பற்ற வைத்த தீயில் எண்ணெய் வார்த்தார் மேகலா.
கண்கள் வெகுவாக கலங்கி போனது சுந்தரிக்கு. இமை சிமிட்டி விழி நீரை வெளிவிடவில்லை.
இன்னும் சிறிது நேரத்தில் திருமணம் ஆக போகும் பெண்ணை இப்படியெல்லாமா பேசுவார்கள் என்று வியந்தனர் பார்லர் பெண்கள். ஆம் அவர்கள் முன் தான் இத்தனை சம்பாசனையும் நடந்தது.
பார்லர் பெண்கள் சுந்தரியை தான் திரும்பி பார்த்தனர்.அவர்களது பார்வையில் என்ன இருந்ததோ சுந்தரியின் முகம் வெளிறி இறுகிப் போனாள்.
தனது அண்ணியை பரிதாபமாக நோக்கினாள் ஸ்ரீமதி. ஸ்ரீமதியின் பார்வையில் மண்ணுக்குள் புதைந்து விட மாட்டோமோ என்று சித்தம் கலங்கி நின்றால் சுந்தரி ஒரு நொடி.
ஆம் ஒரே ஒரு நொடிதான் பின் நிதானமாக நிமிர்ந்தவள், மேகலாவையும் சாவித்திரியையும் பார்த்து "வணக்கம்" என்று கரம் குவித்து வரவேற்று, "ஸ்ரீ பெரியம்மாவும் பெரியத்தையும்" என்று சொல்லி நிறுத்தியவள் சாவித்திரியின் பக்கம் திரும்பி "பெரியத்தை அதானே உறவுமுறை சரிதானே" என்று வினவி மீண்டும் ஸ்ரீமதியின் புறம் திரும்பி "சாப்பிட அழைச்சிட்டு போங்க ஸ்ரீ" என்று சொன்னாள்.
பின் பார்லர் பெண்கள் புறம் திரும்பியவள், "நாம கண்டினியூ பண்ணலாம்" என்றபடி கண்ணாடியின் முன் அமர்ந்தாள்.
மேகலாவும் சாவித்திரியும் திகைத்து நின்றார்கள்.
அதே நேரம் "பொண்ணு அழிச்சிட்டு வர சொன்னாங்க ஸ்ரீ அண்ணிய கூட்டிட்டு போ" என்றபடி வந்தார் கௌரி.
கௌரியின் கால்களில் பணிந்து எழுந்தாள் திரிபுரசுந்தரி. "நல்லா இரு மா தீர்க்க சுமங்கலியா இரு" என்று ஆசீர்வாதம் செய்த கௌரி "அண்ணிய அழைச்சிட்டு போ" என்றார்.
"இதோம்மா வாங்க அண்ணி" என்று சுந்தரியின் கைபிடித்து அழைத்துச் சென்றாள்.
"அண்ணி வேண்டாம் சுந்தரி சொல்லுங்க" விரக்தியில் புண்ணகைத்தபடி அதே சமயம் அழுத்தமாக சொன்னாள் சுந்தரி.
"அண்ணி நீங்க" என்ற கூற வந்தவள், சுந்தரி பார்த்த பார்வையில், "நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க" என்று சொன்னாள் ஸ்ரீ.
ஒன்றுமே சொல்லவில்லை சுந்தரி அமைதியாக நடந்தாள்.
ஸ்ரீமதி பெருமூச்சுடன் தன்னையே நொந்தவாறு 'அண்ணாக்கு தெரிஞ்சா என்ன ஆகுமோ இவங்க அண்ணா கூட எப்படி வாழ்வாங்களோ' என்று கலக்கமே மேலோங்கியது.
சுந்தரியின் செய்கையினால் மனதில் கூட அண்ணி என்று சொல்லிக் கொள்ள யோசித்தாள். ஏனெனில் சுந்தரி பார்த்த பார்வையில் கோபமோ, விரக்தியோ, இயலாமையோ, வேண்டாம் என்ற எச்சரிக்கையோ, ஏதோ ஒன்று இருந்தது.
எவ்வளவு மெதுவாக நடந்த போதும் திருமண மண்டபம் வந்துவிட்டது.
மண்டபத்தின் நுழைவு வாயிலில் நுழைந்தவள் பிரமித்து தான் போனாள்.
அதுவரை இருந்த கலக்கம் மறைந்து ரசனை தலை தூக்கியது.
அடர் சிவப்பு நிற தீம்மில் நுழைவு வாயில் சிவப்பு நிற பூக்களாலும் பலூன்களாலும் ஆர்ச் போன்ற அமைப்பு செய்யப்பட்டது. கீழே சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.
அவள் நுழையவே இருபுறமும் விளக்குகள் ஏந்திய படி வந்தனர் உறவுக்கார பெண்கள்.
சிவப்பு நிற காஞ்சி பட்டில் தங்க இழையிட்ட ஜரிகை வைத்து உடல் முழுவதும் தங்க நிற பூக்களால் நெய்து முந்தானை முழுவதும் தங்கச்சரிகையுமாக பவளமாய் ஜொலித்தாள் திரிபுரசுந்தரி.
மேடையோ சிவப்பு நிற பின்னணியில் நான்கு தூண்களிலும் வாழைக் குருத்து கட்டி, சுவர் முழுவதும் மல்லிகை சரங்கள் தோரணமாக, மேற்கூறையாக சம்பங்கி பூக்கள் கட்டப்பட்டு நடுநடுவே அடர் சிவப்பு நிற ரோஜா தோரணம் தொங்கியது.
மேடையில் நடுநாயகமாக விழாவின் நாயகன் உதய சந்திரன் அமர்ந்து சாஸ்திரிகள் சொன்ன சம்பிதாயத்தை செய்து கொண்டிருந்தான். சந்தன நேர பட்டு வேட்டியில் வேட்டி சட்டையில் அவ்வளவு அமரிக்கையாய் கம்பீரமாய் இருந்தான்.
அவனையே பார்த்துக் கொண்டு நடந்து வந்தவள் மனதில், ஒரே ஒரு கேள்விதான் எழுந்தது.
தன்னருகில் அமர்ந்தவளை ஏறிட்டு பார்த்து புன்னகை தான் உதயசந்திரன்.
"ரொம்ப அழகா இருக்க பேபி" என்று அவள் புறம் லேசாக சரிந்து முனமுனுத்தான்.
அவள் நிமிர்ந்தும் பார்த்தாளில்லை. ஆனால் சாஸ்திரிகள் சொன்ன சம்பிரதாயத்தை செய்து கொண்டிருந்தாள்.
"மாங்கல்ய தானம் பண்ணுங்க" என்ற குரலில் கைகளில் தாலியை வாங்கியவன், "சுந்தரி என்ன பாரு" ஆழ்ந்த குரலில் சொன்னான்.
தலை நிமிர்த்தாள் பெண். கண்ணோடு கண்கள் கலக்க விட்டு அவளது கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன் சரிபாதியாக்கி கொண்டான் அவளது சந்துரு.
ஒரு நிமிடம் கண்களை மூடி தன் அண்ணையை மனதில் நிறுத்தி வேண்டியவள்.
அவனது கண்களைப் பார்த்தவாரே அந்த கேள்வியை கேட்டாள். அவளது கேள்வியில் திகைத்தே போனான் உதய்.
காலையில் உற்சாகமாக பேசியவள், இப்போது அதுவும் தாலி ஏறிய வேளையில், இப்படி கேட்பாள் என்று எள்ளளவும் நினைத்திருக்கவில்லையே.