ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 70

CRVS2797

Member
உருகும் நிலவே விலகும் ஒளியே !
ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 70)


அச்சோ...! அர்ஜூன் ரொம்பவே பாவம். டேய் அர்ஜூன்...! கஜன் மட்டுமில்லை. நானும் தான் உன்னை நம்பினேன்... ஞாபகம் வைச்சுக்க. இந்த ஜீவிதன் தானே ரெண்டாவதா சந்தேகப் பட்டான். இப்ப பெரிய டுபுக்கு மாதிரி உருகுறான். (ஐய்.. லேசா கதையோட டைட்டில் அர்ஜூன் ராகவிக்கு டச்சாகுதோ..?) முதல்ல ராகவி தான் சந்தேகப்பட்டா.


ம்... அம்மா, அப்பா, மனைவி, அக்கா யாரை நொந்து என்ன பயன்..? விதி வலியது. நாம செய்த சின்ன சின்ன விளைவுகளே , பெரிய விளைவுகள்ல கொண்டு போய் விட்டுடுமாம். ராகவியை பண்ண டார்ச்சரெல்லாம் வெளியே சொல்ல விடாம அவளை மிரட்டலாலேயே கட்டிப் போட்டான். இப்ப பாருங்க வந்தனாவுக்காக செய்யாத குற்றத்துக்கு, அர்ஜூனோட ஒட்டு மொத்த உறவுகளே கையை நீட்டி... நீ தான் குற்றவாளின்னு கை காட்டிடுச்சா...! இதான் முற்பகல் செய்யின், பிற்பகல் தானே விளையும்ங்கறது.


ஏன், வந்தனா மீண்டு எழுந்து வரவரைக்கும் காத்திருக்கலை இவங்க எல்லாரும். கிடைச்ச ஆதாரங்களை வைச்சு இவன் தான் குற்றவாளின்னு எப்படி முத்திரை குத்தினாங்க...? வந்தனா தானே மெயின் விட்னஸ். அவளை யும் ஒரு வார்த்தை கேட்ட பிறகுத்தானே ப்ளேம் பண்ணனும். மத்ததை வைச்சு எப்படி ப்ளேம் பண்ணலாம்..? ஏன் க்ரிட்டிசைஸ் பண்ணனும் ? ஏன் குற்றவாளியா நினைக்கனும்..?
கண்ணால் காண்பதும் பொய்..
காதால் கேட்பதும் பொய்..
தீர விசாரிப்பதே மெய்ங்கிறது...
கூடவா தெரியாது.


விஜயோட நிலைமை இன்னும் பாவம். இவனால இப்ப கஜன்
ஜெயிலுக்கு போயிடுவானோன்னு கலக்கமா இருக்கும். இவன் போகத் தயார இருந்தாலும் வந்தனா பாதிக்கப்
பட்டுடுவாளோன்னு அது வேற இன்னொரு கலக்கம். இப்ப ஓடி வருவாங்களே வந்தனாவோட அம்மாவும் அப்பாவும்...
பொண்ணுக்கு வாழ்க்கை கொடுன்னு.... ! ஆனா, வந்தனாவை மாத்தறது தான்
ரொம்பவே கஷ்டம்.


எப்படியோ இந்த ஜீவிதன், அர்ஜூனை சந்தேகப்பட்டதற்கு
கஜனுக்கு நல்லது பண்ணி, விஜயையும் எதுவும் செய்யாம விட்டுட்டான். டேய்... ஜீவிதா !
ஏற்கனவே நீ நல்லவன் தான் டா
ஆனா, இத்தனை நல்லவனா
இருக்காதே...! நேத்ரா மாதிரி
ஆளுங்க உன்னை ஏச்சுப் பூடுவாங்க, உன் தலையில மிளகாய் அரைச்சிடுவாங்க
பீ கேர்ஃபுல்...!


ஜீவிதன் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை. நிராகரிக்கப் பட்டவங்களுக்குத் தானே தெரியும், அதோடு வலியும் வேதனையும். ம்... இப்ப வருத்தப்பட்டு என்ன பயன் நேத்ரா...? திங்க் பி ஃபோர் யூ டூ ஸ்பீக்...!
😆😆😆
CRVS (or) CRVS 2797
 
Top